கவிதையே சொல்லடி – 1

0

பாகம்  1 

சிட்னியில் அது பரபரப்பான காலை நேரம், ஜூன் மாதத்தின் முதல் திங்கள் கிழமை ரவி கிளம்பிக் கொண்டே ஆதியை அழைத்தார்

ஆதி இன்னும் கிளம்பலஎன்று சொல்லிக் கொண்டே வந்தார் ஜோதி

இன்னுமா கிளம்பாம இருக்கான்? இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, சீக்கிரம் வரச் சொல்லுமாஎன்று சொல்லிக் கொண்டே கிளம்பினார்

ஆதி.. ஆதி லேட் பண்ணாமல் சீக்கிரம் வாஅப்பா கிளம்பியாச்சு உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கார்என அழைக்க 

அதற்கு ஆதி, “இருபது நிமிஷம்மாஎன்றான்.

என்ன இன்னும் இருபது நிமிஷமா? உன் பையனைப் பொறுமையா வர சொல்லு நான் கிளம்புறேன்என்று கூறி விட்டு ரவி சென்று விட்டார்

ஆம் ஆதித்யா நம் கதையின் நாயகன். ஆதி 26 வயது, சிட்னியில் பிறந்து வளர்ந்த தமிழ் பையன். ரவிச்சந்திரன்ஜோதியின் காதலுக்கு இரு இல்லத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அவர்களைப் பிரிந்து, நண்பனின் உதவியோடு வெளிநாடு வந்து வேலை செய்து, பின் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்கி இங்கேயே அவர்களின் குடியுரிமையும் பெற்று இருந்தனர். ஆதித்யா இவர்களின் ஒரே மகன்.

ஆதி அறிவும் அன்பும் அழகும் சேர்ந்து செய்த கலவை, கட்டான உடம்பு, இதழ் ஓரம் எப்போதும் இருக்கும் குறும்பு சிரிப்பு, அத்தனை உணர்வுகளையும் காட்டும் கண், தாடி இல்லாத முகத்தில் டிரிம் செய்யப்பட்ட மீசை, வெள்ளாவி வைத்து வெளுத்தது போல வெள்ளை நிறம்..

தன் கட்டுமான தொழிலுக்கு உதவியாய் இருக்க வேண்டும் என ஆசை கொண்டு இருந்த ரவியின் ஆசைக்கு எதிராய் இருந்தது ஆதியின் எண்ணம். ஆம், அவன் வேலைக்குச் செல்ல வேண்டும் தனக்கான தனி அடையாளம் வேண்டும் என வேறு நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க, ரவி அவரது நிறுவனத்தில் ஆதிக்கு புராஜக்ட் மேனேஜர் (project Manager) என்ற பொறுப்பைத் தர, முதலில் மறுத்தாலும் பின் தந்தையின் நற்பெயரைக் காப்பாற்ற அந்த வேலையை ஏற்றுக் கொண்டான். ஆதியைப் பொறுத்த வரை அவனும் நிறுவனத்தில் ஒரு வேலை ஆள் தான். ஆனால் ரவியோ ஒரு நாள் மகன் இதை முழுவதும் அவன் பொறுப்பேற்று கொள்வான் என நம்பி அவனின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்.

ஆதியும் ரவியும் தினமும் ஒன்றாக அலுவலகம் செல்வது வழக்கம், இன்று அவர்கள் நீண்ட நாட்களாகக் காத்து இருந்தட்ரீம் புராஜக்ட்மீட்டிங். அதற்குத் தான் வேகமாகக் கிளம்பிக் கொண்டு இருக்கிறான் ஆதி

அறையை விட்டு வெளியே வந்த அவனை ஜோதி சாப்பிட அழைத்தார், அவன் சாப்பாடு வேண்டாம் எனக் கூறி விட்டுக் கிளம்பினான். அவன் நிறுவனத்தின் உள்ளே வரவும், அங்கே மீட்டிங்க்கிற்காக அனைவரும் அறைக்குள் நுழைந்து கொண்டு இருந்தனர், ஆதி வேகமாக அவன் அறையின் உள்ளே சென்று தேவையான கோப்புகளை எடுத்துக் கொண்டு இருந்தான்

அவன் பின்னே வந்து என்ன டா ஆபீஸுக்கு சீக்கிரம் வந்து இருக்க? ” என்று நக்கலாகக் கேட்டான் ஜெய்.

கேப்டெரியாவில் பேசி ஓய்ந்து அலுவலகத்தின் கடைசி நேரத்தில் இருக்கைக்கு வரும் பழக்கம் உள்ளவர்கள் இந்த மூவரும். அதனால் பல முறை ஆதி, குரு, ஜெய்க்கும் ரவி பாடம் எடுப்பது போல் பல அறிவுரைகள் சொல்லி இருக்கிறார். எனவே தான் ஜெய் இப்படிக் கேட்டுக்கொண்டு இருக்கிறான்.

ஆதி: “எல்லாம் என் நேரம் டா, இன்னிக்கு நீ என்ன கிண்டல் பண்ற.. சார் எப்போ வந்தீங்க?”

ஜெய்: “நாங்க சீக்கிரமா வந்துட்டோம், நீ இன்னிக்கு சீக்கிரம் வர மாட்டனு நினைச்சேன், ஆன கிரேட் எஸ்கேப் டா,” 

குரு: “என்ன நாங்க ஆசையா எதிர் பார்த்த மாதிரி சீன் எல்லாம் இன்னிக்கு நடக்கபோறது இல்ல அதான் சோகமா இருக்கு

அதி : “என்ன சீன் ” 

குரு: சிரித்துக்கொண்டேஉனக்கு உங்க அப்பாக்கிட்ட கிளாஸ் இருக்கும் நினைச்சோம்” 

அவனின் பதிலை கேட்டு ஆதி,

ஆதி : ! சூப்பர் சூப்பர் என்ன பாசம் என்மேல உனக்கு என்று கூறி விட்டு ஆதி குருவின் முதுகில் ஒரு அடி வைத்தான்.

யாரு இவங்க சொல்லத் தேவையே இல்ல.. கடவுள் ஒருத்தன் உருப்பட கூடாதுன்னு நம்ம எல்லாருக்கும் சிறப்பா டிசைன் பண்ணி அனுப்பி வைத்த பிறவிகள், நட்பு. நாமளும் உருப்பட மாட்டோம் அவனையும் உருப்பட விடுவோமா?? ஜெய், குரு ஆதியோட நட்புகள். ஸ்கூல் இருந்து ஆபீஸ் வர விடாது கருப்பு போலக் கூடவே இருக்கும் நண்பன் குரு.

(குருவின் தந்தை கிருஷ்ணனும், ஆதியின் தந்தை ரவியும் கல்லூரி நண்பர்கள், கிருஷ்ணனின் உதவியில் தான் ரவி வெளிநாடு வந்து வேலை செய்ததும், பின் இங்குத் தொழில் தொடங்கியதும்.)

குரு மும்பை மண்ணுக்கும் (அப்பா) தமிழ் மண்ணுக்கும் (அம்மா) சொந்தக்காரன் குருவோட அம்மா (கீதா) டாக்டர், குருவின் தந்தையான கிருஷ்ணன் ஒரு விபத்தில் இறந்து விட, தனியாக விடப்பட்ட நண்பனின் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடிவு செய்து இருவரையும் ஆஸ்திரேலியா அழைத்து வந்து விட்டார், சம வயது பிள்ளைகளான குருவும் ஆதியும் நண்பர்கள் ஆகி விட, கீதாவுக்கு சிட்னியில் டாக்டர் வேலையும் அமைய அவரை பக்கத்து வீட்டிலேயே தாங்க வைத்துக் கொண்டார்கள் ரவியும் ஜோதியும், ஜோதியும் கீதாவும் உயிர்த் தோழிகள் ஆக, ஜோதியின் இன்னொரு மகனாக குரு அவர்கள் வீட்டில் வளர்ந்தான். இன்றும் அந்த நட்பும் பாசமும் மாறாது இருக்க, குருவே ஆதியின் உயிர் நண்பன் ஆனான்.

ஜெய், இவர்களோடு எட்டு மாதமாக நட்பு வட்டத்திற்குள் இருக்கிறான். ஜெய்யும் தமிழ் பையன் தான், அதனின் ஈர்ப்பு தான் போல ஆறு மாதத்திற்குள் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி இருந்தனர். த்ரீ இடியட்ஸ்

குருவை ஆதி அடிப்பதைக் கண்ட ஜெய் அடுத்து தனக்குத் தான் அந்த அடி என உணர்ந்து, “அப்புறம் வந்து விளையாடலாம், இப்போ மீட்டிங் போவோம்என்று கூறி சிரித்து விட்டு ஜெய் தப்பிக்க,

உனக்கு மீட்டிங் முடிந்து இருக்கு டாஎன்றான் ஆதி, பேசிக் கொண்டே அவர்கள் அறைக்குள் சென்றனர்.

அதன் முன்பே அந்த மீட்டிங் அறையில் சிலர் உள்ளே இருந்தனர். சிரித்த முகத்துடன் உள்ளே வந்த ஆதியின் முகம் இப்போது சுருங்கியது. அதைப் பார்த்த ஜெய்வந்துருவா டா, உக்காருஎன்றான்.. அனைவரும் வர, மீட்டிங்க்கான நேரம் நெருங்க ஆதி அறைக் கதவைப் பார்த்துத் தவிப்போடு காத்துக் கொண்டு இருந்தான். ஆம் ! உங்கள் யூகம் சரியே நம் கதையின் நாயகி, அவனின் காதலிக்காகத் தான் காத்துக்கொண்டு இருக்கிறான்.

ஷிவானி, கோவை மண்ணுக்குச் சொந்தக்காரி, அவளின் துறு துறு கண்களும், சிரிப்பும் அவளின் தனி அழகு, புத்திசாலி, வாயாடி, அலங்காரம் இல்லாத பேரழகி, அலங்காரம் செய்தால்? நீங்கள் அவளைத் திரும்பிப் பார்த்து ரசிப்பதை உங்களால் தடுக்க இயலாது. ஷிவானி, ஆதியின் நிறுவனத்தில் உள்துறை வடிவமைப்பாளர் (இன்டீரியர் டிசைனர்) ஜெய் உடன் வேலையில் சேர்ந்தவள். அவளைக் கண்ட நொடியே ஆதி காதலில் விழ அதை அவளிடமும் கூறி விட்டு அவளின் பதிலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறான்.

ஷிவானி வேகமாக உள்ளே வந்தாள், வந்தவள் அவளின் நீண்ட பெருமூச்சையும் , அவள் வசம் பிடித்து வைத்து இருந்த ஆதியின் உயிரையும் விட்டாள். பழைய சிரிப்பு ஆதியின் முகத்தில் அப்ளை ஆனது.. குரு பல்பு எரியுது என்று ஜெய்யிடம் கூறி கிண்டல் செய்து கொண்டு இருந்தான்.. ஷிவானி ஆதி அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லி அவள் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள்.

ரவி, எட்வர்ட், மற்றும் பிராஜக்டின் உரிமையாளர் என பெரும் குழுவுடன் உடன் உள்ளே வர அறிமுகத்திற்குப் பின் மீட்டிங் ஆரம்பம் ஆனது. இது நிறுவனத்தின் கனவு புராஜக்ட். ஆம், இது ஆஸ்திரேலியாவின் முதல் கேசினோ, பல கோடி ரூபாய் செலவில், மிகப் பிரம்மாண்டமாக வரப் போகும் பெரிய உயர்ரக கேசினோ, ஆஸ்திரேலியாவின் முதல் கேசினோ இது தான், அதை வடிவமைத்துக் கொடுத்துக் கட்டிய பெருமை ரவியின் நிறுவனமான AGA வை வந்து சேரும். இதற்காகத் தான் நான்கு மாதமாக ஆதியும் அவனது குழுவும் திட்ட வரைபடம் வரைந்து உள்ளனர்.

பல தடைகளுக்குப் பிறகு எட்வர்ட்டின் பெறும் முயற்சியும், ஆதியின் புராஜக்ட் டிசைன்னும் ஒருசேர உதவி இப்போது தான் அவர்களுது வடிவமைப்பைப் பற்றிக் காண வந்து உள்ளனர். அதற்கான கலந்தாய்வு என்பதால் அனைவருக்கும் நேரம் போனது தெரியாத அளவுக்கு அந்த சந்திப்பு நடை பெற்றது. ஆதியின் வடிவமைப்பு பிடித்து இருப்பதாகவும், இன்னும் இரு தினங்களில் இதன் முடிவைக் கூறுவதாகவும் நிர்வாகிகள் கூறி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here