அனுசுபா பாரதியின் சிறுகதைகள்

அனுசுபா பாரதியின் சிறுகதைகள்
0

என்னுள் உன் நினைவுகளோடு

ழகான நொடிகள் அவளுடன் நான் பயணித்தது அவளைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்து போனது எப்படியோ அவளிடம் பழகவும் ஆரம்பித்துவிட்டேன் அவள் என்னை அழைக்கும் போதெல்லாம் நான் தொலைந்துவிடுவேன் அவ்வளவு ப்ரியம் சொல்லி முடிப்பதற்குள் என்னை புரிந்து கொண்டவள் மலரும் நினைவுகள் ஹரிரிரி சொல்லும்மா என்ன பண்ற சும்மாதான் …சொல்லுடாமா என்ன விஷயம்…

இல்லமா சும்மாதான் பேசணும்போல இருந்தது…

சரி சரி சாப்பிட்டாயா

ம்ம்ம்

அப்புறம்

காலையில பார்ப்போம்

அவளுக்காக காலையில் காத்திருந்தான் அவள் தினமும் அவனைப் பார்த்தவுடன் கன்னத்தில் முத்தமிட என்னுவாள் ஆனால் தருணம் அவ்வாறு அமைந்ததே இல்லை…

ஒவ்வொரு நாளும் ஒயாமல் பேசி விடுவாள் ஆனால் எதுவும் பேசியதில்லை என்பதாய் உணர்வாள் அவன் பேசுவது மிகவும் பிடிக்கும் அது அந்தரங்கம்ஆரமித்து அரசியல் வரை அதனால் பல நேரம் வம்பிழுப்பாள் அவனிடம்…

இப்படியாய் நகர்கிறது நாட்கள்…

நெருக்கங்கள் அதிகமாக அன்பும் அதிகமாகிறது

ஒருநாள் சுபாவின் தோழின் தோழி அவளை சந்திக்க வருகிறாள் அவன் மேல்துளியும் சந்தேகமோ பயமோ இல்லை அழகான பெண்ணைப் பார்த்தவுடன் போய்விடுவானா என்ற பயமோ இல்லை ஆனால் என்னைதவிர அவனை யாரிடம் பேசினாலும் பொறுப்பதில்லை … இவன் இராமன் இல்லை ஆனால் இராமனுக்கும் அவனுக்கும் தூரமில்லை

சுபாவின் தோழி மீராவின் தோழி ராதிகாதான் வந்திருந்தாள் அவளுடன் பேசுவது துளியும் பிடிக்கவில்லை…

ஆனால் எப்படியோ சிரித்து மறைத்துவிட்டாள்…

பிறகு ஒருவாரம் கழித்து இரவில் ராதிகா ஹரிக்கு வாட்சப்பில் மெசேஷ் அனுப்பி பேசிக் கொண்டு இருந்தாள் ஹரி அவளிடம் சொல்லவேஇல்லைஆனால் இதை ராதிகா சொல்லிவிட ஹரிக்கும் சுபாவுக்கும் சண்டை

சொல்லு ஹரி ஏன் பேசினேன்னு கேட்கல ஏன் சொல்லைன்னுதான் கேட்குறேன் இல்லடி இது பெரிசாவே தெரியல அதான் எதுதான் பெரிசாய் தெரியுது உனக்கு சொல்லு அப்போ என் மேல இஷ்டம் இல்லையா

இல்லையா…

ஆனால் அவனிடம் எந்த உரிமையும் இல்லை சுபா திருமணமானவள் கணவனைவிட்டு பிரிந்து வாழ்கிறாள் ஹரியின் மிகுந்த அன்பு அவனும் அப்படித்தான் அந்த உரிமை மட்டுமே…

ஆனால் …

சொல்லு ஹரி முதல்ல புரிஞ்சுக்கோ நீ எனக்கு மட்டும்தான்

இந்த சண்டை தேவையா என்பதே தேவையில்லை ஆனால் அவன் அவளுக்கு மட்டும் என்ற உரிமையில்… அவனிடம் சண்டையிடுகிறாள்

ஹரியின் சின்ன சின்ன இடைவெளியில்கூட அவளை நிரப்பி விடுவாள்

அவன் சிரிப்பில் அடிக்கடி துலைந்து போகிறாள் ஆனால் அவளின் அன்பு ஹரிக்கு புரியுமா என்பதே சுபாவின் பல நேரம் கவலை

சின்ன சின்ன விஷயங்கள்கூட பெரிதாய் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றே நினைப்பாள்

சண்டை வெகுவாக போய்க்கொண்டு இருக்கிறது

அழுது ஆர்பாட்டம் செய்தவளை சமாதானப்படுத்தவே விரும்புவான் அவள் அழுவதை ஒருபோதும் விரும்பாதவன்

சரி சுபா இப்போ என்ன ப்ரச்சனை சொல்லு நீ எனக்கு மட்டும்தான் ஹரி

சரிமா ஆனா யோசி அது எப்படி முடியும் …

தெரியாது ஆனா நீ எனக்கு வேணும்… அவளின் அன்பு மட்டுமே பெரிதாய் தோன்றியது…

எப்படி ஹரி புரிய வைக்க …

சரிமா எனக்கும் நிறைய ஆசை இருக்குடா

உன்கூட வாழணும் ஆனா தெரியல நடக்குமான்னு தெரியல ஆனா உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியல …

சரி நான் வேற யாராவதை கல்யாணம் பண்ணிட்டா அதை சொல்லாத உயிரே போய்டும் கண்கள் ததும்ப சொல்லி தீர்த்தாள் அவனின் சூழ்நிலை அறியாதவள் இல்லை ஆனால் அவளின் உள்ளுணர்வு கடைசி தருணத்திலாவது அவனுடன் வாழ வேண்டுமென்பதே நீ வேற மேரேஸ் பண்ணிட்டா அப்படி ஒரு சூழ்நிலை கிடைக்காமலே போயுடும் அதாவது குடும்ப வேணுங்கிறது காரணமே கடைசிக்காலத்தில தனிமைப்பட்டுடக்

கூடாதுன்னுதான் அந்த தனிமையில்தான் நிறைய அன்பான தருணம் உண்டு அது உன்கூட இருக்கணும் ஹரி அதான் ஆசை

இப்போ என்னடாமா மேரேஷ் ஆனா பொண்ணு அது இது பேச்சு வரும் ஆனா அதுவும் நடக்க நிறைய இருக்கு ஆனா உன்னை அவ்வளோ கஷ்டபடுத்தல

நீ அன்பு அரவணைப்பு வேணும்கிற தருணம் நான் உன்கூட இருக்கணும்

நீ இல்லாத பல நேரம் நான் தனியா இருப்பதா உணர்ந்ததே இல்லை உன்கிட்ட பேசுற மாதிரி சிரிக்கிற மாதிரி விளையாடுற மாதிரி அழுறமாதிரி உன்னை அருகிலேயே வச்சுப்பேன் நினைவால்

ஆனா மறக்கலாம்

மறந்திடலாம் அப்படின்னு நீ சொன்னா அது என்னால முடியல…

அதை புரிஞ்சுக்கோடாமா

இல்ல சுபா புரிஞ்சுக்கோ உன்னைவிட்டு நான் விலகி இருந்த நீ மறந்துருவ காலப்போக்கில் மாறும்…

ஒரு காதல் திருமணம் செய்யறாங்க ஹரி அம்மா அப்பா விட்டுட்டுதான் அதுக்காக அவங்கள மறந்துறாங்களா இல்ல அவங்க நியாபகம் வராதா எனக்கு நீ எல்லாமா இருக்கணும்ஒரு ப்ரெண்ட் லவ்வர் அம்மா அப்பா அக்கா தங்கை அண்ணா தம்பி குழந்தை அப்படி …

எல்லாரையும் அந்த இடத்தில் வைக்க முடியாதில்லையா…

சொல்லு ஹரி …

நான் என்னடி சொல்ல சரி நடக்கட்டும் பார்ப்போம் ஆனா அதிகம் யோசிக்காதாமா …

உன்னோட அன்புக்கு நான் கொடுத்து வைக்கல…

அழ வைக்காதே ஹரி…

அழுதுக் கொண்டே களம்புகிறாள் இரவு உறக்கம்மில்லை நெஞ்சமெல்லாம் வலி…

வலிக்கூட தெரியாமல் அழுதுக்கொண்டே வீட்டை அடைகிறாள்…

உறக்கமில்லை மனக்குழப்பம் வாட்டி எடுக்கு பித்துப்போல் தன்னைசுற்றி

நடப்பதையே மறந்தால் காலை எழுந்ததும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறாள் அவனுக்கு திருமணவரன் அமையவே கூடாது என நான்மட்டும் போதுமென…

நாட்கள் நகர்கிறது அன்பு என்பது துளியும் குறைந்ததாய் இல்லை இருவரும்வெளியில் செல்கிறார் இரவு தங்க நேர்கிறது அவன் அருகில் தன்னை மறந்தால் தன்னைஇழந்தால் …

ஹரியுடன் நெஞ்சில் ஏதோ ரம்மியமாய்உறங்கினால் வாழ்ந்துமுடித்ததுப்போல…

இருவரும் காலை எழுந்து களம்பிவர ஊர்வரும் வரை அவன் தோளில் முகம் புதைத்தால் அவனால் அவளிடம் அவள்அன்பை நிராகரிக்க முடியவில்லை எந்த நிலையிலும்…

யோசித்தவன் வீடு வந்தான் எப்படி பேச என்பதே தெரியவில்லை…

அவனும் அவளிடம் அன்பை அதிகம் வெளிப்படையாக காட்ட நேர்ந்தது நடப்பது நடக்கட்டும் என்று நாட்கள் ஓடின…

வெகுவேகமாக ஒரு முன்னேற்றம் இருவரிடத்திலும் …

அவன் வரும் வரன்களை தட்டிகளித்தல் ஆனான்…

புதிதாய் ஒரு வீடுக்கட்டி முடிக்கப்பட்டது இப்போது அவனைச் சுற்றி அனைத்தும் உண்டு மனைவி என்பவளை தவிர…

அதான் சுபாவாக இருந்தால் போதும் என யோசிக்க ஆரம்பித்து விட்டான் …

இருவரும் அதிகம் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு குறைவானது ஆனாலும் எப்படி சுபா அவனை ஒருமுறையேனும் பார்க்க வந்துவிடுவாள் ஒன்றாயே இருந்த நாட்கள் கண்முன்னே இருக்கும் உணவருந்தியது ஊட்டிவிட்டது சண்டையிட்டது அழுதது புலம்பியது சிரித்தது அவள் நியாபகம் …

இப்படி அவளுடன் பேசி பழகி இரண்டு வருடங்கள் முடிந்தது …

வீட்டில் ஒரு வரன் பேசிக் கொண்டு இருந்தனர் ஹரி குறுக்கிட்டு சுபாவைப்பற்றி சொல்ல ஆரம்பித்தான்…

என்னடா ஏதோ நம்ம சொந்த இல்லையினாலும் பராவயில்லைனும் இருந்தோம் ஆனா இப்ப எனனடா இப்படி வந்து நிக்கற இதுக்கு நீ சும்மாவே இருந்துக்கலாம் …

அப்படி இல்ல நாளுபேர் என்ன சொல்லுவாங்க சொல்லுடா எப்படி பதில் சொல்லுறது கல்யாணம் ஆனப்பொண்ணு…

அப்படியேன் நினைக்கிற நம்ம வீட்டுல ஒரு பொண்ணு வாழ்க்கை தொலைச்சுட்டு நின்னா என்ன செய்வோம்அதை எப்படி ஒரு வாழ்க்கை அமைப்போம் இல்ல அப்படிதான் அவ வாழ்க்கை இழந்து நிக்கிறா என் வாழ்க்கையே அவதான் …

எப்படியோ அரை மனதில் பேசி முடித்துவிட்டான் இப்படி ஒரு தைரியம் அவனுக்கு வந்தது சந்தேகம்தான் சரி சுபாவிடம் சொல்லலாம் என அழைக்க அலைபேசி பார்த்தான் சுபாவின் கால்தான் அட்டன் செய்து சொல்லுடி பொண்டாட்டி என்றான் உரிமையுடன்…

ஆனால் எதிர்முனையில் பேசியது அவள் தோழி மீரா எங்க இருக்கீங்க சுபா என்னைப்பார்க்க வந்தா தீடீர்ன்னு கீழே விழுந்துட்டா நான் ஹாஸ்பிட்டல் கொண்டு போயி இருக்கோம் அவங்க வீட்டுல சொல்லிட்டேன் நீங்க வாங்களேன் பயமா இருக்கு இப்போ சுபா எப்படி இருக்கா ஐசியூக் கொண்டு போய் இருக்காங்க…

அவன் கண்கள் குளமானது வேகமாய் போய் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டும் வண்டியை எடுத்து வேகமாய் செலுத்தினான் ஆனால் வண்டிச் சென்றபாடில்லை தூரம் அதிகமானதுப்

போலவே உணர்ந்தான்…

ஹாஸ்பிட்டலை அடைந்தான் அவள் வீட்டார்கள் சுற்றியும்…

என்ன ஆச்சு …

தீடீர் முகமெல்லாம் வேர்த்துக் கொட்டுச்சு கீழ விழுந்துட்டா இப்ப என்னசொல்றாங்க …

சீவியர் பெயினாம் இது இரண்டாவது அட்டாக் ஆம் …

அய்யோ என்னம்மா சொல்லுற இப்போ ஒரு இன்ஜக்ஸ்ன் ட்ரை பண்றாங்கன்னா அது அக்சப்ட்ன்னா நோ ப்ராளம் இல்லைன்னா…

அவ சரியா சாப்பிடறதே இல்ல எப்பவும் ஓயாமல் உங்கள் நியாபகம்தான் …

ஒருவருடம் முன்னே அன்னைக்கு நைட் அழுதுட்டு போனாலே அப்போ சொன்னா நெஞ்சு ரொம்ப படபடப்பா இருக்குன்னு ஆனா அவ மறுபடியும் அதை யோசிக்கல…

டாக்டர் வந்து பார்க்கறவங்க பாருங்க அடுத்து ட்ரிட்மெண்ட் முன்னாடி ஏன்னா …

அதன் பிறகு …

சரி என்று ஒவ்வொருவராய் பார்த்து வந்தனர் வெளியில் ஒரே கதறல் அவனால் என்ன செய்வதுன்னே தெரியல …

உள்ளே போனால் அவள் முகத்தில் பிரகாசம் வா ஹரி இப்போ சந்தோசமா இருப்பியே நான் இல்லாமல்…

ஏன்டி கொல்ற…

சும்மா தான் உன்னை சீண்டி பார்க்க பிடிக்கும்…

இவளிடம் எப்படி சொல்வது வீட்டில் பேசியதை இவளின் மிகப்பெரிய சந்தோசம் ஆயிற்றே…

சரி இப்போ அதை தாங்கும் நிலையில்அவள் இதயம் இல்லை…

கை பிடிச்சுட்டான் தலைய மடியில வையேன் ப்ளீஸ்…

ம்ம்ம்…

சொல்லு பாருடா நீ அழறயா…

எனக்கு சிரிப்புதான் ஹரி வருது…

இல்லடி சொல்லு ஹரிரிரிரி…

ம்ம்ம் சொல்லும்மா…

என்னை ஏமாத்துற…

அவன் கண்ணீருடன் சிரித்தான்…

நான் என்னடி ஏமாத்துறேன்…

அவள் கைகள் இருக்கமானது பிடிப்பு இருக்கியது …

ஹரிரிரி…

ம்ம்ம்…

நீ எனக்கு மட்டும்தான்…

ம்ம்ம்… ஆமா உனக்குமட்டும்தான்…

முதல்முறை அவன் வார்த்தை அவளுக்காக வெளிப்பட்டது

அவள் கண்கள் அவனை முழுவதும் பரப்பிக்கொண்டது …

கடைசி ஒருதுளி கண்ணின் ஒரமாய் அவனுக்காக உயிரை பிடித்து வைத்து இருப்பால் போலும் மௌனமாய் அடங்கி போனது அவள் உயிர் அவன் மடியில்…

கதறுகிறான் சுபா இதுக்காகவாடி உருகி உருகி உயிரை வச்ச

சீக்கிரம் டெவலப் ஆகு ஆகுன்னு சொன்ன இப்படி விட்டுட்டு போகவா …

சம்மதம் வாங்கிட்டேன்னு சொல்லக்கூட கேட்கலையே

ஏண்டி உனக்கு எல்லாமே அவசரம்தானா…

எனக்கு கொடுத்து வைக்கல வைக்கலன்னு சொல்லுவேனே இப்போ நிஜமாவே கொடுத்து வைக்கலையேடி ஏண்டி எனக்கு நீ இல்லைன்னா உன்னை கொன்னுருவேன்னு சொல்லுவியே ஏண்டி இப்ப என்ன விட்டுட்டு போய்ட்டீயே

கண்ணீர் கடலானது …

ரணமானாது அவள் அவனின் உயிரில்…

இன்றுவரை அவன் அவளுக்கு மட்டுமே சொந்தமானான்… வேறொருவளை எப்படி நினைப்பாய் என்பாள் அவள் இல்லாத போதே உணர்ந்தேன்…

அவளுக்கானவள் மட்டுமே நான் …

அவள் நினைவில் வாழ்ந்து வந்தேன்…

இன்னமும் அவள் நியாபகம் மலரும் நினைவாக ஏழுபது வருடத்தை கடந்த போதும்…

முற்றும்…