அப்பா

அப்பா
0

image

நெஞ்சில் நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் கடவுள், நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே இருக்கும். ஆனால், சுயநலன் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.

அவரை பற்றிய கவிதை துளிகள் இங்கே :family_man_boy::family_man_boy_boy::family_man_girl::family_man_girl_boy::family_man_girl_boy::family_man_girl_girl:

1 Like

உயிரணுவின் நீட்சியென
இவ்வுலகில் வந்துவிட
பெற்றவளும் என் பசிக்கு
நெஞ்சுணவு கொடுத்துவிட
எனை சுற்றியே சொந்தங்கள்
பலரும் வட்டமிட
ஓருயிர் ஓடியது எந்தன்
எதிர்காலம் நோக்கியே…

 அப்பா
2 Likes

சிறு குழந்தையாய்
இருந்த போது நீ
இல்லாமல் உறங்கியதில்லை
என்று தாய் சொன்னதுண்டு…

எந்த நேரமும்
நான் சொல்லிய
வார்த்தை அப்பா…

பருவ வயதில்
உன்னிடம் அதிகம்
பேசவில்லை தான்,
ஆனால் நான் உன்
மீது கொண்ட பாசம்
நான் மரணிக்கும்
தருவாயிலும்
மாறாது அப்பா…

சிறு முகசுளிப்பு உன்னிடம்
கண்டாலும் என் மனம் தாளாது
அப்பா…

தனக்கென்று யோசிக்க
தெரியாத
ஒரே உள்ளம் இந்த புவியில்
அப்பா…

-சஹானா

3 Likes

புதிய அத்தியாயம்!..

(பணி ஓய்வு பெறும் தந்தைக்கு மகள் எழுதும் மடல்)

அப்பா!
உங்களிடம் சற்று மனம் விட்டுப் பேச
அழைக்கிறேன் இங்கே…

தங்கள் உழைப்பிற்கு ஓய்வு அளிக்கும் தினமாம் இன்று!..
இந்த முப்பத்தியோரு வருட உழைப்பு
உங்களுக்கு நன்மதிப்பையும் நற்பெயரையும்
பெற்றுத் தந்திருக்கிறது!
மறுப்பதற்கில்லை…

கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும்
“ஓடிக்கொண்டே இருந்தேனே…
இனி நான் தேவையற்ற பொருட்களில்
ஒன்றாய் முடங்கிப் போவேனோ?!” – என
மனதின் ஓரத்தில் லேசான பயம் எட்டிப் பார்க்கிறதா?

உங்களுக்கு மட்டுமல்ல
உங்கள் வயதை யொத்த
அப்பாக்களுக்கெல்லாம் நான்
சொல்லிக் கொள்ள விரும்புவது…

பணிநிறைவு என்பது…
வேலை செய்யும் வயது வரம்பைத் தாண்டிவிட்டதால்
வீட்டில் சென்று இளைப்பாறுவதற்கான
ஓய்வுக்காலம் அல்ல!..

இதுவரை தாங்கள் செய்ய விரும்பியும்
செய்ய இயலாதவற்றை…
நீங்கள் மிகவும் விரும்பியவற்றைச்
செய்வதற்கான சுதந்திரம்!..
தடைக்கற்கள் தாமாகவே வழிவிடும் தருணம்!

இனிவரும் காலம்…
நீங்கள் சோர்ந்து செயலற்று ஓரிடத்தில்
முடங்கிப் போவதற்கல்ல…
நீங்கள் தொலைத்துவிட்ட உங்கள் கனவுகளை
இனித் தேடித் தொடருவதற்காக…

வீட்டில் இருந்தவர்களின் பேச்சுக்குரலை விட
உங்கள் கடிகாரத்தின் அலாரம் ஒலி
இதுவரை உங்கள் நெருங்கிய நண்பனாய் இருந்திருக்கலாம்…
உணவு இடைவேளைகள் ஒத்திவைக்கப்பட்டு…
ஓயாது ஓடிய கால்களுக்கும்
உணவளிக்க மறந்த தேகத்துக்கும்
இனி கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்!

உங்கள் பணிஸ்தலத்தைப் பொருத்தவரையில்…
உங்களது பகுதி ஒரு வெற்றிடமாகவோ
முடிவாகவோ இருக்கலாம்…
ஆனால் இருகரம் நீட்டி அழைக்கும்
உங்கள் இளமைக் கால லட்சியங்களுக்கு
இது ஒரு தொடக்கப்புள்ளி!

குடும்பத்தோடு குதூகலிக்க நினைத்தும்
விடுப்பு கிடைக்காது தவறவிட்ட நாட்கள்
இனி வரப்போவதில்லை!..
சாதிக்க நினைத்துத் தவறவிட்ட
அனைத்தையும் பட்டியலிடுங்கள்…
இப்போதும் வெற்றியின் வாசல்கள்
உங்களுக்காகத் திறந்தே இருக்கின்றன!..

அப்பா!
இதுவரைத் தங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும்
நம் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தது
என்பது நிதர்சனமான உண்மை…

ஆனால் பல சமயங்களில் நான்
பெற முயன்று தோற்றுப்போன
உங்களது அருகாமை இனி எப்போதும்
எனக்குக் கிடைத்திடுமே!..
விடுமுறை தினங்களைக் கூடத் தனியே
கழித்திட்ட எனக்கு…
இனி ஒவ்வொரு நாளும் திருவிழா தான்!

_ஏஞ்சலின் டயானா “அஞ்சலி”

2 Likes

தந்தையல்ல… தாயுமானவன்!..

தாங்க முடியாத பாரம்
இது சுகம் அல்ல
சுமை மட்டுமே_என்றும்!..

கண்டிப்புடன் கம்பீரமாய் பார்த்த உன்னை…
இன்று சிறு குழந்தையாய் கலங்குவதைப் பார்க்கிறேன்…

மீண்டும் உன் விரல்பிடித்து நடை பழக ஆசை…
என் வாழ்வை ஒருமுறை வாழ்ந்து பார்க்க ஆசை _உன் மகளாய் மட்டுமே!

என் தாயுமானவனே!
ஏன் இந்த இடைவெளி?
எதற்காக தியாகம் செய்தாய்
உன் உரிமைகளை?!
இதைத்தான் வாழ்வின் அடுத்த கட்டம் என்றாயா?!

நிஜம் இங்கு புரிகிறது…
மனைவியாய் தாயாய் புகுந்த வீட்டுப் பெண்ணாய் எனக்குத்தான் எத்தனை பரிணாமங்கள்!
ஆனால் நினைவுகளில் நீயே என் நிழலாய் தொடர்கிறாய்…

உனக்காக கடந்து செல்கிறேன் என் கண்ணீரை…
மறந்து செல்கிறேன் என் வலியை…
உன்னைப் பிரதிபலிக்கவே எனது பயணத்தில்!..

_ஏஞ்சலின் டயானா “அஞ்சலி”

2 Likes