அரக்கனோ அழகனோ 04

அரக்கனோ அழகனோ 04
0

அழகன் 4

உன்னை காணவேண்டி
வந்தேன் நானடி …
கண்டும் காணாமல் என்னை
தவிர்த்தாய் ஏனடி …

காலை எழுந்ததும் தன் காலை கடமைகளை முடித்துக்கொண்டு ட்ராக் பாண்ட் ஒரு ட்.ஷர்ட் அணிந்து ஜாக்கிங் கிளம்ப தயாரானவன், அலுவலகத்தில் இருந்து கொண்டு வந்த சுஹீரா புகைப்படத்தை தேடி எடுத்து அவள் கண்களை ஒரு நொடி இமைக்காது பார்த்தவன் ஒரு முடிவிற்கு வந்தவன் போல், புன்னகையுடன் கிளம்பி சென்றான், காரில் இசைந்து கொண்டு இருந்த ஆங்கில பாடல் வரிகளை முணுமுணுத்த படி, அவள் வருகைக்காக காத்து இருந்தான் அகரன்.

மேகத்தை கிழித்து கொண்டு வரும் மின்னலை போல் காற்றை கிழித்து கொண்டு அந்த கன்னிகை தன் மிதிவண்டியை மிதித்து வேகமாய் வந்து கொண்டு இருந்தாள், பின் புறம் திரும்பி பார்த்து கொண்டே வர, அவள் அறியாமல் எதிரில் நின்றவன் மீது மோதி கீழே விழப்போனவளை ஒரு கையால் இடையோடு சேர்த்து அணைத்து பிடித்தவன் மறுகையால் சைக்கிளையும் தாங்கி பிடித்தபடி , நின்றான்.

எங்கு கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் இமை மூடி இருந்தவள் “உனக்கு ஏதும் காயம் இல்லையே” என்ற குரலில் யார் மீது மோதினோமோ அவனை தன்னை தாங்கி பிடித்து நிற்பது புரிய, “அதை நான் உங்களிடம் கேட்க வேண்டும், பின்னால் பார்த்து கொண்டு வந்ததில் உங்களை கவனிக்கவில்லை”, சாரி என்று அவன் பிடியில் இருந்து விலகி, நின்று அவன் முகம் பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள், சுஹீரா.

“பூ வந்து மோதினால் காயம் படுமா என்ன எனக்கு ஒன்றும் இல்லை” இப்படி பலத்த இடி கிடைத்த கையோடு ஒரு பூவும் என் கை அணைவில் வந்து சேரும் என்றால் எத்தனை இடி வாங்கவும் நான் தயார் தான், என்று அழகாய் சிரித்தான் அகரன். அவனை அடையாளம் கண்டு கொண்டவள் நேற்று வரை பஜாரியாய் தெரிந்தவள் இன்று மட்டும் என்ன திடீரென்று பூ போல் தெரிக்கின்றேனாம் பொறுக்கி, என்று மனதில் தன் இஷ்ட படி வசை பாடியவள், “உங்கள் கண் என்ன பிடனியில் உள்ளதா முன் ஆள் வருவது தெரியவில்லை”, என்று முறைத்து கொண்டே அவன் கைப்பட்ட இடமே அசுத்தம் அடைந்தது போல் தன் கைக்குட்டை கொண்டு துடைத்து கொண்டே “எப்போது வாய்ப்பு கிடைக்கும் தொடலாம் என்று இதற்கென்றே அலையும் ஜென்மம்” என்று அவன் காதுபடவே முணுமுணுத்தாள், சுஹீரா.

தன்னை கவர்ந்த கோப பார்வையை மனதில் சேகரித்த படி இருந்தவன், “யாரோ என்று எண்ணி மன்னிப்பு கேட்டவள், தான் என்று தெரிந்ததும் தீண்டத் தகாதவன் கைப்பட்டது போல் துடைகின்றாள் இதில் வாய்க்குலேயே முணுமுணுப்பு வேறு என்று நினைத்தவனுக்கு தன்னை அப்படி நினைத்தவள் மீது மட்டும் கோபம் கொள்ள முடியவில்லை” மேலும் அவள் செய்கையை ரசிக்க தான் தோன்றியது, அவளின் செயலில், தன்னுடன் சண்டையிட்டவன் உடமை கூட தன் மீது படக்கூடாது என்று பார்த்துபார்த்து ஒதுங்கி செல்லும் சிறுபிள்ளை தனம் தெரிய தன்னை மறந்து அவள் செயலை ரசித்து கொண்டு இருந்தான் அகரன்.

அவளை காதலிக்க வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் திட்டம் போட்டு வந்தது எல்லாம் மறந்து, தன் மனம் கவர்ந்த பார்வையை மீண்டும் ரசிக்க அவளை சீண்டும் எண்ணம் தோன்றியது, “ஹலோ உன் திமிரை என்னிடம் காட்டாதே, இது ஜாக்கிங் செல்லும் வழி இங்கு நீ சைக்கிள் ஓட்டி வந்ததே தவறு இதில் வேகமாக வந்து என் கால்களை பதம் பார்த்துவிட்டு பேச்சு வேறு” என்று அகரனும் பொய் கோபம் காட்டிட. அவன் எதிர்பார்த்தது போல் அவளும் கோபமாய் முறைத்து, அவன் தன்னை ஒருமையில் அழைத்து உரைக்க, இவனுக்கு என்ன மரியாதை கொடுத்து கொண்டு அவளும் ஒருமையில் பேச துவங்கினாள், “என்ன திமிரா அன்று டான் பஜாரி என்று மோசமாய் பேசினாய், இன்று என்னவோ திமிர் பிடித்தவள் என்கின்றாய்” நான் யார் என்று தெரியுமா? என்று சுஹீரா கோபமாய் பேசிட. “ஏன் உனக்கே நீ யாரென்று தெரியவில்லையா? மறந்து விட்டதா” என்று அகரன் அதையும் கேலி செய்தான்.

“அடடா என்ன ஒரு நகைச்சுவை உணர்வு சிரித்துசிரித்து வாய் வலிகின்றது” என்று உதட்டை சுளித்து பதில் தந்தாள் சுஹீரா. “காலை குளிருக்கு பணியில் நனைத்த ரோஜாவை போல் கொஞ்சம் சிவந்தும் இதழ் ஈரம் காய்ந்து கொஞ்சம் வரண்டும் இருந்த இதழ் அவனுக்கு என்னென்னவோ எண்ணத்தை தர”, அந்த வரண்ட இதழை தன் இதழ் கொண்டு நனைக்க துடித்த மனதை பெரும்பாடு பட்டு அடக்கி கொண்டான். “என்னிடம் இன்னும் நிறைய உணர்வுகள் இருக்கின்றது பார்கின்றாயா” என்று அவள் இதழில் இருந்து பார்வையை விலக்கமால் கூறினான் அகரன்.

என்ன என்ன என்று கோபத்தில் வார்த்தை வராமல் தடுமாறியவள் துடிக்கும் உதடுகளை பற்களால் அழுத்தி அதன் நடுக்கத்தை குறைத்து கொண்டு, முகம் சிவக்க நின்றாள் சுஹீரா. அவள் வார்த்தை இன்றி தினறுவது கூட அழகாய் தோன்ற அவள் புறம் ஒரு எட்டு வைத்து கன்னத்தை மென்மையாய் வருடியவன், “வார்த்தை வரவில்லை என்றால் விட்டுவிடு, அதற்கு எதற்கு இந்த அழகனா உதட்டிற்க்கு தண்டனை ஏன் தருக்கின்றாய்”, என்று அவள் பற்களிடம் இருந்து உதடுகளுக்கு விடுதலை பெற்று தந்தான், ஏற்கனவே வரண்டு இருந்தது பற்களில் கடிபடவும் காயம் பட்டு ஒரு சொட்டு இரத்தம் துளிர்த்தது, தன் கைக்குட்டை கொண்டு மெதுவாய் துடைத்தவன், அவள் அமைதியாய் இருப்பதை சாதகமாய் நினைத்து, இன்னும் அவள் புறம் நெருங்கி,

ஈரம் இல்லாமல் தவிக்கும்
உன் இதழுக்கு
என் இதழ் முத்தமிட்டு
நனைத்திட ஆணையிட்டு
இரக்கமே இல்லாமல்
நச்சரிகின்றது என் இதயம்

என்று அகரன் கூறவும், இவனிடம் அமைதியாய் இருப்பதே தவறு என்று புரிந்திட, “என் அப்பா யார் என்று தெரிந்தால் என்னிடம் இப்படி வம்பு செய்து கொண்டு இருக்க மாட்டாய், என் அப்பா போலீஸ் கமிஷனர், என் அண்ணன் அசிஸ்டண்ட் கமிஷனர்”, என்னிடம் இப்படி பேசியது தெரிந்தால், உன்னை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி விடுவார்கள், உயிர் மீது ஆசை இருந்தால் திரும்பி பார்க்காமல் ஓடிவிடு என்று சுஹீரா மிரட்ட. அவள் தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்தவன் “உன்னை பற்றி எல்லா விபரமும் தெரிந்த பின்பு தான் உன்னிடம் நெருங்கவே செய்கிறேன்”, என்னிடமே உன் வேலையை காட்டுகின்றாயா அவள் சொன்ன பொய்களும் எங்கு அது தெரிந்து விடுமோ என்று அவள் விரைப்பாய் நின்ற தோரணையும் கண்ட அகரனுக்கு சிரிப்பினை அடக்குவது பெரும் பாடாய் போனது இதற்கு மேலும் முடியாது என்று தோன்ற வாய்விட்டு சிரிக்க துவங்கினான்.

அகரன் பார்வையில் உடல் குறுகுறுக்க, அதை மறைக்க விரைப்பாய் நின்றவள் அவன் சிரிக்கவும் கோபம் தலைக்கேறியது, “என்ன பயத்தில் பைத்தியம் பிடித்துவிட்டதா உன்னிடம் தான் சொல்கிறேன் புரிகின்றதா, பாவம் பிழைத்து போகட்டும் என்று இரக்கம் காட்டினால் உனக்கு கேலியாய் தெரிகின்றதா” என்று சுஹீராவும் கோபமாய் பேச, அங்கும் இங்குமாய் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் அருகில் வந்து அகரனை முற்றுகையிட்டனர்.

ரோட்டில் ஒரு பெண் தனியாக செல்ல கூடாதே வம்பு செய்ய வந்து விடுவீர்கள் என்று அகரனை கோபமாய் நெருங்க, சுஹீராவிற்கு கழிவிரக்கம் ஏற்பட்டது வேகமாய் வந்து மோதியதும் இல்லாமல், அவன் மீது இருந்த பழைய கோபத்தில் கத்தி கூட்டத்தை கூட்டியது தவறு, அதைவிட இன்றும் ஏதும் வம்பு செய்து கொண்டு வந்தால் அம்மா சும்மா விடமாட்டார்கள் அதற்காகவாவது இவனை காப்பாற்ற வேண்டும் என்று தோன்ற, அகரன் முன் சென்று அவனை யாரும் நெருங்காமல் மறைத்து நின்றவள், “ இவர் எனக்கு தெரிந்த ஆள் தான், எனக்கு உதவ முன் வந்ததற்கு ரொம்ப நன்றி” என்று கூறவும் .

இந்த காலத்து பெண்களிடம் இது ஒரு பிரச்சனை தன்னிடம் வம்பு செய்பவனுக்கும் இரக்கம் கட்டிக்கொண்டு என்று, தங்களுக்குள் முணுமுணுத்த படி கூட்டம் களைந்து சென்றது.
“உனக்கு தெரிந்த ஆளா இல்லை உன் ஆளா என்பதை தெளிவாய் சொல்லி இருந்தால் எனக்கு இன்னும் நிம்மதியாய் இருக்கும்” என்று அகரன் குரல் மிக அருகில் கேட்க சட்டென்று திரும்பியவள் முகம் அருகே நெருக்கமாய் குனிந்து நின்றவன் கண்களில் வெற்றி புன்னகை இருந்தது, அவனிடம் இருந்து தூரம் விலகி சென்றாள் சுஹீரா. “என்ன உளருக்கின்றாய் பாவம் பார்த்து அவர்களிடம் இருந்து காப்பாற்றியது என் தவறு, உனக்கு வாய் கொழுப்பு ரொம்ப அதிகம் போல உனக்கெல்லாம் காலில் அடிபட்டு இருக்க கூடாது, வாயிலே நான்கு கொடுத்து வாய் கொழுப்பை குறைத்து இருக்க வேண்டும்” என்று கூறி அவன் பிடியில் இருந்து தன் சைக்கிளை விடுவித்து கொள்ள முயன்றாள், சுஹீரா.

அவள் வார்த்தையில் இதுவரை அவளை ரகசியமாய் ரசித்து கொண்டு இருந்த கண்கள் மெதுவாய் கோபத்தை காட்ட அகரனின் இயல்பு குணம் வெளிப்பட துவங்கியது, அவ்வளவு எளிதில் அவளை விட்டுவிட மனம்யின்றி சைக்கிளை இறுக பற்றி கொண்டான், உதட்டில் பொய்யாய் புன்னகை பூசிக்கொண்டு “வாயிலேயே என்ன தரப்போகின்றாய் “ என்று ஏளனமாய் ஒற்றை புருவம் உயர்த்தி அகரன் வினவ, அவன் கேட்ட கேள்வியும் ஏளன பார்வையும் அவன் எண்ணத்தை பிரதிபலிக்க சுஹீரா கொதிநிலைக்கே சென்றுவிட்டாள். இம்முறை நேரடியாய் திட்ட துவங்கினாள், “பொறுக்கி என்ன திமிராய் பேசுகின்றாய், அன்று அவனுக்கு கொடுத்த அடியை பார்த்து கொண்டு தானே இருந்தாய், மறந்துவிட்டதா இல்லை என் முறையில் நியாபாக படுத்த வேண்டுமா” என்று கை ஓங்கியவளின் கரம் பற்றி தடுத்தவன்.

“நான் என்ன அவனை போல் நீ அடிக்க கன்னத்தை காட்டிக்கொண்டு இருப்பேன் என்று நினைத்தாயா? நீ என்ன கொடுத்தாலும் அதை இரு மடங்கு திருப்பி தர எனக்கு தெரியும்”, என்று அவன் பற்றி இருந்த தளிர் கரங்களை ஒருமுறை அழுத்தி பற்றி பின்பு விடுவித்தான் அகரன். குட்டிமா என்று குரல் கேட்டு திருப்பியவள் அங்கு தந்தையும், தமையனும் நிற்க கண்டு அவர்களை நெருங்கி சென்று இவ்வளவு நேரம் எங்கு போனீர்கள் “இதோ இவன் தான் அன்று என்னை” என்று சுஹீரா கூறி முடிக்கும் முன் எவன், எங்கு என்று என சுகந்தன் கேலி செய்யவும் திரும்பி பார்த்தாள் அங்கு அவன் இல்லை. அப்பா அண்ணனை பார்த்ததும் பயந்து ஓடிவிட்டான் போல அவர்களை போலீஸ் என்று சொன்ன பொய்யை நம்பிவிட்டான் பயந்தாங்கோழி இனி நான் இருக்கும் திசைக்கே வர மாட்டான் என்று அகரனை தவறாய் கனித்தவள், போய்த் தொலைகிறான் என்று அதோடு அவன் நினைவை விட்டுத் தள்ளி, தன் அண்ணன் புறம் திரும்பினாள், சுஹீரா. “உன்னுடன் எல்லாம் போட்டிக்கு வந்தேன் பார் என்னை சொல்லவேண்டும், சோம்பேறி நான் ஒருத்தியாய் ஒத்தையாய் பைத்தியம் போல ரோட்டில் சுற்றி கொண்டு இருக்கிறேன் நீ என்னவென்றால் ஆடி அசைந்து தேர் போல வருகின்றாய், உனக்கு எல்லாம் ஒரு கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்தால் அவர்களுக்கு பிள்ளை பிறந்து அந்த பிள்ளையின் காதுகுத்துக்கு தான் போவாய் போல”, அப்பா ப்ளீஸ் இவனுக்கு திருமண ஏற்பாடு செய்யும் போது ஒரு வாரத்திற்கு முன்பே இவனை மண்டபத்தில் வைத்து பூட்டி வையுங்கள், இல்லை இவன் கிளம்பி வருவதற்குள் அண்ணி அரைக்கிழவி ஆகிவிடுவார்கள் அப்புறம் அறுபதாம் கல்யாணம் தான் செய்ய வேண்டும் என்று சுஹீரா கூற. “ஏய் வாயாடி என்ன விட்டால் ஓவராய் பேசுகின்றாய், நானும் உன் பின் தான் வந்து கொண்டு இருந்தேன் கொஞ்சம் ஸ்லோவாய் வந்தேன்”, அப்பா தனியாய் வருவார் இல்லையா? என்று அக்கறையாய் கூறி சுகந்தன் மழுப்பினான்.

என்ன புதிதாய் கதை விடுகிறாய் நாம் வழக்கமாய் வைக்கும் ரேஸ் தானே அப்போது எல்லாம் வராத அக்கறை இன்று என்ன? அதுமட்டும் இல்லை நீ வந்த வேகத்தை ஸ்லோ என்று சொல்ல மாட்டார்கள் என் அன்பு அண்ணா ஆமை வேகம் என்று சொல்லுவார்கள், அந்த ஆமையாவது முயலை வென்றதாய் கதையேனும் உண்டு, ஆனால் இந்த ஆமை அண்ணன் இந்த முயல் தங்கையை வென்றதாய் சரித்திரமே இல்லை என்று கேலி செய்ய, “என்ன பாவம் சிறு பெண் என்று பாவம் பார்த்து விட்டால் ஓவராய் பேசுகின்றாய்” இன்று அப்பா மட்டும் தடுக்கவில்லை என்றால் உன்னை ஜெயித்து இருப்பேன் என்று ஜம்பம் காட்டினான், சுகந்தன்.

ஆமாம் ஆமாம் ஜெயித்து இருப்பாய் உன் கனவில் “நான் கூட சைக்கிள் ரேஸ் என்று சொன்னதை ஸ்லோ ரேஸ் என்று நினைத்து கொண்டு நின்ற இடத்திலேயே ஒட்டிக்கொண்டு இருக்கின்றயோ? “ என்று நினைத்து விட்டேன். “நீ அசடு என்று தெரியும் ஆனால் இந்த அளவிற்கு வடிகட்டின அசடு என்று தெரியாதே”, இனி உன்னை வைத்து என்ன செய்வது என்று தவித்து போனேன் என்று விடாமல் தன் அண்ணனை ஓட்ட, சுகந்தனோ துணைக்கு தந்தையை அழைத்தான். “என்னாயிற்று என் குட்டிமாக்கு இன்று இந்த காட்டு காட்டுகின்றாள், யார் மீது இவ்வளவு கோபம்”, பாவம் அண்ணன் விட்டு விடுடா என்று சமாதான தூது வந்தார் மகேஸ்வரன். “நான் தான் கொஞ்சம் வியாபார விஷயம் பேச வேண்டும்” என்று நிறுத்தி வைத்துவிட்டேன் என்று சமாதனம் பேசி தன் காதில் கை வைத்து மன்னிப்பு வேண்டினார், அவர்.

இதில் நீங்களும் கூட்டா, என்னிடம் பேசாதீர்கள் அதை நான் பந்தயத்தை துவங்கும் போதே சொல்லியிருக்கலாம் இல்லையா?”, நானும் சென்று இருக்க மாட்டேன், பின்னாடியே இந்த மக்கு வருவான் என்று மட்டி போல வேகமாய் சென்று கொண்டு இருந்தேன், இதில் இவன் வருகின்றானா என்று பின் புறம் பார்த்து கொண்டே வந்ததில் ஒரு நாய் மீது மோதிவிட்டேன் எனவும் மகேஸ்வரன் துடித்துதுடித்து போனார்.

“என்னாடாமா சொல்கின்றாய் உனக்கு ஒன்றும் காயம் இல்லையே” என்றவர், அவள் எனக்கு ஒன்றும் இல்லை அப்பா. என்ற அவள் பதிலில் திருப்தி அடையாமல் தன் மகளின் தலை முதல் கால் வரை ஆராய்ச்சி பார்வை பார்த்து, பின்பே நிம்மதி அடைந்தார், மகேஸ்வரன். “இவளுக்கு என்ன வந்துவிட போகின்றது அந்த நாயின் நிலைதான் பாவம்” என்று பாவமாய் உச்சு கொட்டி தலையில் கொட்டு வாங்கி கொண்டான் சுகந்தன்.

அதற்கு ஒன்றும் இல்லை “நீ கண்ட நாய்க்கும் கருணை காட்டாதே அது அடிவாங்க வேண்டிய வெறி நாய் தான்” அலட்சியமாய் தோள் குலுக்கி கண் மறைத்த கூந்தல் முடியை ஒருவிரல் கொண்டு ஒதுக்கியபடி சலுகையாய் தந்தை தோள் சாய்ந்து கொண்டவளை, ஒரு ஜோடி விழிகள் வெறியுடன் வெறித்து கொண்டு இருந்தது, மகேஸ்வரன், வருவதை கண்ட அகரன் அவர் கவனிக்கும் முன் தன் காரில் சென்று அமர்ந்துகொண்டு , அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க துவங்கினான்.

சுஹீராவை கண்டு மனதில் ஏற்படும் சிறு சலனமும். மகேஸ்வரன் புன்னகையில் மறைய பகை மட்டும் மனதை நிறைத்து இருந்தது, சுஹீராவிற்கு ஒன்று என்றால் அவளை விட இரு மடங்கு வலியில் துடித்த மகேஸ்வரனை கண்டு, தன் திட்டம் எந்த அளவிற்கு வெற்றி பெரும் என்று தெளிவாய் புரிந்தது. “இந்த வழியில் மட்டுமே தான் அனுபவித்த வலியை விட இரு மடங்கு வலியை திருப்பி கொடுக்க முடியும் எந்த சூழ்நிலையிலும் இந்த திட்டத்தை கைவிட கூடாது” என்று முடிவு எடுத்தான் அகரன். சுஹீரா தன்னை நாய் என்று குறிப்பிட வந்த கோபத்தை தன் முன் இருந்த ஸ்ட்ரிங் வீலை இறுக பற்றி அடக்க முயன்றவன் அடுத்து அவள் கூறிய வெறி நாய் என்ற வார்த்தையில் உண்மையில் வெறி பிடித்த மனித மிருகமாய் மாறி போனான்.

உன் அப்பா செய்த தவறுக்கு ஏதும் அறியாத உன் வாழ்வை பனையம் வைக்கின்றேன் என் திட்டத்தில் நீயும் அதிகம் பாதிக்கப்படுவாய் என்று சிறு நெருடல் இருந்தது, சுஹீ. இன்று உன் பேச்சில் நீ மகேஸ்வரன் வாரிசு என்று தெளிவாய் நிரூபித்து விட்டாய், இனி எந்த நெருடலும் இல்லாமல் என் வேலையை காட்டுகின்றேன், “இந்த வெறிபிடித்த மனிதன் வெறிபிடித்த நாயை விட மோசமானவன், உன் வாழ்க்கையையே ஒன்றும் இல்லாமல் குதறி எடுக்க போகின்றேன்” பொறுத்திருந்து பார். உன் அப்பாவிற்கு மட்டும் இல்லை உன் ஆணவத்திற்கும் சேர்த்து அடி கொடுக்க போகிறேன், உன்னை என் காலடியில் அடிமையாய் வைத்து காட்டுகின்றேன் என்று தனக்குள் தீர்மானம் எடுத்து கொண்டான் அகரன்.

“ஒருவன் கோபத்தில் எடுக்கும் முடிவு என்றும் சரியானதாக இருக்க வாய்ப்பு இல்லை, கோபம் நம் மூளையை மறைக்கும் போது நம் மனம் சொல்வது கூட மூளை கேட்காது, தன் எண்ணம் மட்டுமே சரியென்று ஒரு தலையாய் முடிவு எடுக்கும்” என்ன படித்து எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், ஒருவனுக்கு தன் கோபத்தை கட்டுபடுத்த தெரிய வில்லை என்றால் அவன் முடிவு தவறாய் தான் போகும் என்று அகரன் இன்னும் உணர வில்லை.

ஆணவத்தில்
அலைந்தேன் நானடி…
உன் அரை நொடி
பார்வையில்சறுக்கி
விழுந்தேன் ஏனடி …