அரக்கனோ அழகனோ 05

அரக்கனோ அழகனோ 05
0

அழகன் 5

எதிலும் நிலையான முடிவில்
இருப்பவனை
நிலை தடுமாற செய்கிறது
உன் நினைவுகள் …

கோபமாய் வீட்டினுள் நுழைந்தவனை புன்னகையுடன் எதிர்கொண்ட அதிகா “கரண் என்ன இன்று இவ்வளவு நேரம் ஏன் முகமெல்லாம் வாடி உள்ளது, சூடாய் குடிக்க டீ கொண்டு வரவா” என்றவளை, என் அறைக்கு கொண்டு வா என்று உத்தரவிட்டு தன் அறைக்கு சென்றான் அகரன்.

அகரன் கூறி சென்றதும் நேராய் தன் தாயை தேடி ஓடினாள் அதிகா, மகள் தலைதெறிக்க ஓடி வருவதை கண்ட கலையரசி, என்ன வழக்கம் போல எனக்கு என் அம்மா செய்வார்கள் ஆட்டுக்குட்டி செய்வார்கள்” என்றான் அது தானே, என்று இதை தவிர ஒன்றும் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த முக பாவனையில் கலையரசி கூறவும், அதுதான் இல்லை அம்மா என்னை அவன் அறைக்கு கொண்டுவர சொன்னான் என்று கூறிய அதிகாவை விசித்திரமாய் பார்த்தார், அவள் அன்னை. “சூரியனே திசை மாறி உதித்தது போல் அவனே கொண்டுவர சொன்ன பிறகு, நீ இங்கு வந்து என்னிடம் வெட்டியாய் பேசிக் கொண்டு இருக்கின்றாய்” என்ன பிள்ளையோ இதோ பிடி கொண்டுபோய் கொடு என்று டீ கப்பை கையில் கொடுத்தார் கலையரசி.

மகள் தயங்கி நிற்பதை கண்டு இன்னும் என்ன என்று கடுகடுத்தார், “ அம்மா உனக்கே கரண் குணம் தெரியும், எப்போது நன்றாக பேசுவான் எப்போது முகம் காட்டுவான் என்றே தெரியாது” அன்று கூட எப்படி பேசினான் என்று பார்த்தீர்கள் தானே, எனக்கு பயமாய் இருக்கிறது, நான் போகவில்லை, நீங்களே கொடுத்து வாருங்கள் எனவும் மகளை எரித்துவிடுவது போல் பார்த்தால் கலையரசி.

அதிகா பயத்தில் கண்களில் கண்ணீருடன் நிற்கவும், கொஞ்சம் சமாதனம் ஆனவர் அதி அம்மாவை பார், “மாப்பிள்ளைக்கு உன்னை உண்மையில் பிடிக்கும், இந்த யமுனா செய்யும் சதி வேலைகள் தான் அவர் உன்னை நெருங்காமல் இருப்பது” நேற்று கூட உன்னை அழைத்து செல்லச்சொன்னதும் சந்தோசமாய் சரி என்று கிளம்பினர், ஆனால் அதற்குள் அவன் அம்மா வந்து அவனுக்கு வேறு நிறைய வேலை உள்ளது என்று கூறி அனுப்பிவைத்துவிட்டாள், அவன் அம்மாவிற்காக தான் உன்மீது இருக்கும் அன்பை வெளிக்காட்டாமல் இருக்கிறான், என்று வாய்நிறைய பொய்யள்ளி தெளித்து, தன் மகளின் மனதை மாற்றினார், கலையரசி. “உண்மையில் கரனுக்கு என்னை பிடிக்குமா?” அப்படியென்றால் சரி என்று சொல்லிச் சென்ற மகளை, இன்னும் மனிதர்கள் எப்படி அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புரியாமல் இருக்கின்றாளே எல்லாமே நாம் தான் சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது, என் காலத்திற்கு பிறகு இவள் நிலை என்ன ஆகுமோ, இப்போதும் அகரன் மனம் கோணாமல் நடந்து கொள்வாளோ, என்று கவலை படிந்த முகத்துடன் அவள் அறியாமல் பின் தொடர்ந்தார், கலையரசி.

ஜன்னல் வழி வெளியே வெறித்து கொண்டு இருந்த அகரன், அதிகா வருவதை கண்டு அவளிடம் நெருங்கி, கையில் இருந்த டீகப்பை வாங்கி கீழே வைத்தவன், அவள் கரம் பற்றி அவனின் வழக்கமான ஆளை மயக்கும் புன்னகை ஒன்றை செய்து மெதுவாய் அவள் கன்னம் தீண்டினான், முதலில் நடப்பது விளங்காமல் நின்றவள், அவன் தீண்டலில் அந்நியத்தன்மை உணர்ந்து, இது சரியில்லை என்று மனம் உரைக்க குழப்பமாய் அவன் முகம் நோக்கினாள், அவன் கவனமும் எங்கோயிருக்கக்கண்டு மேலும் குழம்பியவளாய், கரண் என்று அவன் பெயரை அழுத்தமாய் உச்சரித்தாள், அதிகா. அடுத்த நொடி அவளிடம் இருந்து விலகியவன் “டீ கொடுக்க தானே வந்தாய் இன்னும் என்ன இங்கு வேலை கிளம்பு என்று அதட்டவும்”, நடப்பது விளங்காமல் வெளியே வந்தாள் அதிகா.

அங்கு நடந்தவற்றை அறை வாசல் வழி ஒழிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த கலையரசி, அகரன் சொன்னதும் வெளியேறிய மகளின் புத்திசாலி தனத்தை நினைத்து தலையில் அடித்து கொண்டார். குழப்பத்துடன் வெளியே வந்தவளை கை பற்றி தனியே அழைத்து சென்று “ஏண்டி அவன் தான் போகச்சொன்னால் நீயும் உடனே கிளம்பி வந்து விடுவதா, இன்னும் கொஞ்ச நேரம் பேச்சு கொடுத்து உங்கள் திருமணத்தை உறுதி செய்து இருக்க வேண்டாம்”, என்று கடிந்து கொண்டார், கலையரசி. “கரண் போகச் சொன்னதற்கு பிறகும் அங்கு நின்றுகொண்டு அவனிடம் வாங்கி கட்டிக்கொள்ள செல்கிண்றீர்களா? “, அன்று அவனிடம் வாங்கிய திட்டுகளால் இன்னும் தூக்கம் வராமல் அலைந்து கொண்டிருக்கிறேன் என்று அதிகா புலம்ப, “அவன் திட்டியதை மட்டும் சொல்லிக்கொண்டேயிரு “, நான் சொன்னது உண்மை தானே, மாப்பிள்ளைக்கு உன்னை பிடித்து உள்ளது தானே என்று கலையரசி ஆர்வமாய் கேட்க, “அது தான் எனக்கும் குழப்பமாய் இருக்கிறது, என்றும் இல்லாமல் இன்று பக்கத்தில் வந்தான், திடீரென்று வெளியே போக சொல்லி கத்துகிறான், இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை” என்று மீண்டும் அதிகா தன் புலம்பலை துவங்கினாள்.

“நான் தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா அவன் அம்மாவிற்காக பார்க்கிறான் மாப்பிள்ளைக்கும் உன்னை பிடித்துள்ளது தெளிவாய் தெரிந்து விட்டது” இனியும் காலம் தாழ்த்தாமல், உன் மாமாவிடம் பேசி உங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது தான் என்று கலையரசி கூற, “எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என் படிப்பு முடியவும் மற்றதை பற்றி பேசிக்கொள்ளலாம் “ என்று அதிகா மறுக்க, “போடி முட்டாள் உன் காலம் முழுவதும் செல்வாக்குடன், குறையாத செல்வத்துடனும் வாழவழி சொல்லிக்கொண்டு இருக்கிறேன் நீ என்னவென்றால் , ஒன்றுக்கும் ஆகாத படிப்பை பிடித்து தொங்கி கொண்டு இருக்கின்றாய்” எனவும் அதிகாவிற்கு கோபம் வந்தது, “இந்த காலத்தில் படிப்புயில்லாதவர்கள் மதிப்புயில்லாதவர்களுக்கு சமம்”, ஒருவரை முதலில் சந்தித்ததும் எல்லாரும் கேட்கும் பொதுவாய் கேட்கும் முதல் கேள்வி, என்ன படித்து இருக்கின்றீர்கள் என்று தான், நீங்களும் தாத்தா படிக்க வைக்கும் போதே காதல் கத்திரிக்கா என்று படிப்பை கோட்டைவிடாமல் இருந்திருந்தால் அப்பா காலத்திற்கு பிறகு யார் கையையும் எதிர்பார்க்காமல், சுயமாய் கௌரமாய் வாழ்ந்திருக்கலாம் இப்படி அடுத்தவரிடம் கையேந்தி நிற்க்கும் நிலை நமக்கு வந்து இருக்காது என்று உண்மையை கூறினாள், அதிகா. மகளே என்றாலும் தன்னை எதிர்த்து தன் நிலையை கேலி செய்தது பொறுக்காமல் தன் கோபத்தின் வெளிப்பாடாக அவள் கன்னத்தில் அறையாய் இறக்கியவர் என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரிகின்றது, “இந்த வீட்டில் இளவரசியாக வளம்வந்தவள் இன்று வாழ வகையாற்று, கையேந்தி நிற்க காரணமே உன் மாமாவும் அவர் மனைவியும் மகனும் தான்” படிப்பின் சிறப்பை பற்றி எனக்கு பாடம் எடுத்தது போதும், நான் சொல்வதை கேட்டு மட்டும் நீ நடந்து கொள் “உங்கள் திருமணம் மூலம் தான் நான் இழந்த அனைத்தையும் பெற முடியும்” கூடிய சீக்கிரம் உன் மாமாவிடம் பேச வேண்டிய விதமாக பேசி உங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன், எதையும் சொதப்பாமல் வழக்கம் போல் தலையாட்டுகின்றாய் புரிகின்றதா, என்று எச்சரித்து விட்டு சென்றார் கலையரசி.

கரணும் என்னை விரும்புவதாய் நீங்கள் நினைக்கின்ரீர்கள் ஆனால் அது எந்த.அளவிற்கு உண்மை என்று எனக்கு புரியவில்லை, உங்கள் விருப்பப்படி இந்த திருமணம் நடந்தால், அது உங்கள் கனவை நிறைவேற்ற வழியாய் இருக்குமே தவிர நீங்கள் எதிர்பார்ப்பது போல் என் வாழ்வு நிம்மதியாய் இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை , “கரண் மனதில் எனக்கு இடம் இல்லை என்பது எனக்கு புரிந்து விட்டது, கரண் கண்களில் நான் கண்டது காதல் இல்லை ஏதோ ஒன்றை அறிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே” அவரின் குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கவும் என்னை துரத்துகின்றார், என்று அகரனின் எண்ணம் என்ன என்று சரியாய் யூகித்தவள், தன் அன்னையின் குணமறிந்து தன் யூகங்களை தன் மனதோடு மறைத்து கொண்டாள் அதிகா.

அதிகாவின் எண்ணம் சரியே, அகரன் ஒன்றை தெளிவு படுத்தி கொள்ளவே அவளை பயன்படுத்தி கொண்டான், அதற்கான விடை தெரியவும் அவளை வெளியேற்றி மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான், “தன் நெருக்கம் பெண்களுக்கு சலனத்தை ஏற்படுத்துமா என்று அகரன் அறிய விரும்பினான், அதற்கு விடை ஆம் என்று கிடைக்க, ஒருவேளை அவளுடன் ஏற்பட்ட முதல் மோதலின் காரணமாக வெறுகின்றாளா?” அப்படியென்றால் இந்த அதிகாவை பல முறை இதை விட மோசமாக திட்டியுள்ளேன் இருந்தும் நான் நெருங்கியதும் அவள் சலனப்படதானே செய்தாள், ஆனால் இந்த சுஹீ மட்டும் ஏன் என்னை விட்டு விலகி நிற்கின்றாள், என்று விடை தெரியாமல் குழம்பி போனான், அகரன். டஇது வரை எந்த பெண்ணிடமும் தானாக நெருங்கியது இல்லை, எந்த பெண்ணின் நெருக்கத்திலும் இருக்குமிடம் சூழ்நிலை மறந்து, என்னை மறந்து தடுமாறியதுமில்லை”, அவளை நெருங்கும் போது என்னையே மறந்துவிடுகிறேன், என்னை மறந்து நிற்கும் எனக்கு அவள் வார்த்தைகளால், என் தடுமாற்றத்தை உணர்த்தி நான் செய்ய துடிக்கும் காரியத்தை நினைவு படுத்துகின்றாள், அதற்கு அவளுக்கு நன்றி சொல்லத்தான்வேண்டும், அதற்காக அவளின் மோசமான வார்த்தைகளுக்கான தண்டனையும் தராமல் விடமாட்டேன், வெகு நேரம் அவளின் சிந்தனையில் இருந்தவன் அவள் நெருக்கம் தந்த இதத்தில் அவன் உடையில் அவள் மணம் நுகர்ந்து, மீண்டும் மீண்டும் அவள் அருகாமை வேண்டும் என்று மனம் விரும்ப! தன் எண்ணத்தின் தீவிரத்தை கண்டவனுக்கு தன் மீதே கோபம் வரத்துவங்கியது.

“ஒரு புறம் பழிவாங்க துடிக்கும் மனது, மறுபுறம் அவள் முகம் காண தவிக்கும் மனது” இரண்டின் நடுவில் சிக்கிக்கொண்டு தவித்தான் அகரன். ஷவரில் நின்று வெகு நேரம் யோசித்தும் விடை தெரியாமல், தன் உணர்வுகளையும், கோபத்தையும் ஆற்றமையையும் தன்னை நனைத்து செல்லும் நீருடன் கரைத்து விட முயன்று முடியாமல் போக, “ஒன்று முழுதாய் பழிவாங்க வேண்டும் இல்லை, பகை மறந்து அவர்களை மன்னித்து விலகிவிட வேண்டும் இது தான் அவள் நினைவு தனக்கு வராமல் இருக்க ஒரே வழி” என்று புரிய, அவளிடம் ஈர்க்க பட்ட இதயம் ஒரு பக்கம் அவன் இயல்பாய் கொண்ட ஆணவம், கோபம், கர்வம், எல்லாம் ஒருபக்கம் இருக்க, அதிகத்தின் பக்கம் தீர்ப்பு வர, ஒரு முடிவுடன் அலுவலகம் கிளம்பினான், அகரன். உள்ளே நுழையும் போதே குகன் எங்கே என் அறைக்கு வர சொல்லுங்கள் என்ற கட்டளையுடன் கர்ஜித்து சென்றவனை, பயத்துடன் பார்த்து கொண்டு இருந்தவர்கள், இன்று என்ன காலையிலேயே இவ்வளவு கோபமாய் இருக்கின்றார், குகனால் மட்டும் தான் இவரை சமாளிக்கமுடியும் என்று அவனை தேடினால், அவனோ அப்போதுதான் அலுவலகம் உள்ளே நுழைந்து கொண்டு இருந்தான், எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நிற்க ஒருவன் மட்டும் முன் வந்து அகரன் அழைத்ததை கூறவும், இவ்வளவு தானே ஏன் இப்படி மிரண்டு போய் இருக்கின்ரீர்கள், அவர் கோபம் என்ன புதிதா என்று மாறாத புன்னகையுடன் கூற, “இல்லை குகா இன்று செம கடுப்பில் இருப்பார் போல” குரலே பயங்கரமாய் இருந்தது என்று அவனையும் பயமுறுத்த முயன்றனர்.

இந்த பில்ட்அப் க்கு பயப்பட வேறு ஆளை பாரு என்று அசட்டையாக பதில் தந்து விட்டு அகரன் முன் சென்று நின்றான் குகன்.

“காலை வணக்கம் பாஸ் என்னை வர சொன்னீர்களே” என்று வினவினான் குகன், குகனை கண்டதும் ஏன் இவ்வளவு நேரம் என்று மீண்டும் குரலை உயர்த்த, இன்று வெள்ளிக்கிழமை பாஸ் கோவிலுக்கு போகவில்லை என்று மட்டும் என் அம்மாவிற்கு தெரிந்தால் பணம் போனால் போகிறதென்று பஸ் ஏறிவந்து என் முதுகில் தோசை சுட்டுவிடுவார்கள் என்று குகன் கூறி முடிக்கும் முன் அகரன் முகத்தில் மெலிதாய் புன்னகை எட்டிப்பார்த்தது, அதை கண்ட குகனோ “ம் இப்படி சிரித்து கொண்டு இருக்கும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறது அதை விட்டு கண்ணில் படுபவரை எல்லாம் வல்லுவல்லு என்று மிரட்டி கொண்டு” எனவும், மெலிதாய் தோன்றிய புன்னகை முழுதாய் மறைய, உனக்கும் என்னை பார்த்தால் நாய் போல் தெரிகின்றதா, உனக்கு எந்த வகை நாய் போல் தெரிக்கிறேன் என்று அகரன் மீண்டும் கோபத்தை கையில் எடுக்க, “உனக்குமா என்றால், நமக்கு முன்னாடியே எவனோ சொல்லி வாங்கி கட்டிகொண்டான் போல, அங்கு காட்டியது போக மிச்சம் மீதி இருப்பதை என்னிடம் கொட்ட போகின்றாரா இல்லை அங்கு காட்ட முடியாததை சேர்த்து மொத்தமாய் நமக்கு படம் காட்ட போகின்றாரா”, அதற்கு முன் நாமே முந்தி கொண்டு ஒரு படத்தை ஓட்டி விடவேண்டியது தான் என்று மனதில் நினைத்தவன், அகரன் பேச துவங்கும் முன் முந்தி கொண்டு “எங்க எங்க, எடுங்கள் அந்த கட்டையை இன்று நான் அடிக்கும் அடியில், இனி நாயை கூட நாய் என்று சொல்ல வாய் வரக்கூடாது”, என்று கோபமாய் வசனம் பேசினான் குகன்.

குகன் கூறிய விதத்தில் அகரனுக்கு தன்னை மீறி சிரிப்பு வந்தது, உன்னிடம் பேசி கொண்டு இருந்தால், நான் என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்து விடுகிறேன், முதலில் உட்கார் என்று அகரன் கூறவும், ”என்னை விடுங்கள் சிங்கம் கோபமாய் நிற்கும் போது அதன் முன் நிற்பது நல்லது இல்லை எவ்வளவு தைரியம் இருந்தால், என் பாஸ்சை பார்த்து அந்த வார்த்தை சொல்லி இருப்பார்கள்” நீங்கள் சும்மாவா விட்டு வந்தீர்கள், போங்க பாஸ் இன்னும் பச்சை பிள்ளையாகவே இருக்கின்றீர்களே, அந்த இடத்திலேயே அவர்களை ஒரு கை பார்த்து கைமா பண்ணிருக்க கூடாது? இப்போது ஒன்றும் கெட்டு போகவில்லை ஆள் யார் என்று மட்டும் காட்டுங்கள், நமக்கு தெரிந்த ரவுடி ஒருத்தன் இருக்கின்றான், அவனை விட்டு ஆளையே தூக்கிவிடலாம், என்று குகன் கூற, “அவளே பெரிய ரௌடி, கேடி தான் அவளிடம் இது எல்லாம் செல்லாது, அவளை அடக்க வேறு வழி வைத்து உள்ளேன்” என்றான் அகரன்.

அவளா? ஒரு வேலை இந்த அவள் பாஸின் அவர்களாக இருக்குமோ ? எதற்க்கு வீணாய் யோசித்து கொண்டு, அவரிடமே பிட்டை போட்டு பார்ப்போம் என்ற முடிவுடன், “அண்ணியை எங்கு பார்த்தீர்கள் பாஸ்” என்றவனை அனல் பார்வை பார்த்த படி, என்ன சொன்னாய் அண்ணியா என்று அகரன் வினவ, அகரன் பார்வையில் இருந்த அனல், குகனுக்குள் எச்சரிக்கை மணியடிக்க செய்தது, “நான் அந்த கன்னியை என்று சொன்னது உங்கள் காதில் அண்ணி என்று கேட்டு இருக்கும் பாஸ்”, என்று ஒருவழியாய் சமாளித்து மேடமை எங்கு பார்த்தீர்கள் என்று இன்னும் சொல்லவே இல்லையே, என்று அகரன் பேச இடம் இன்றி தன் கேள்விகளை கேட்டு, அகரன் பதிலுக்கு காத்திருந்தான் குகன்.

காலையில் ஜாக்கின் போகும் போது பார்த்தேன் என்று அகரன், பதில் தர “ஓநீங்கள் வழக்கமாய் செல்லும் வழியில் அவர்களும் ஜாக்கின் வந்து உள்ளாராகள்” அப்படித்தானே பாஸ் அவர்களை திடீரென்று உங்கள் வழியில் பார்த்ததும் உங்களுக்கு எவ்வளவு ஷாக்காகியிருக்கும் என்று எனக்கு புரிகின்றது பாஸ் என்று குரலில் எதையும் காட்டாமல் குகன் கூறிட, கையில் இருந்த பைலை கவனமாய் கவனிப்பது போல், அதை விட்டு பார்வையை விலக்காமலே, “வழக்கமாய் செல்லும் வழி இல்லை இன்று என்னவோ எனக்கு பீச் பக்கம் போக வேண்டும் என்று தோன்றியது, அதானல் போனேன் எதேச்சையாக பார்த்தேன், அவளை பார்த்ததில் எனக்கு எதற்கு ஷாக் அடிக்க வேண்டும்”, நீ மொக்கை போடாமல் கொஞ்சம் அலுவல் வேலையையும் பார் என்று அசட்டையாக பதில் தந்து விட்டு, அமைதியாய் இருந்தான் அகரன்.

அகரனின் அமைதியான பதிலே அவன் உரைத்த பொய்யை உணர்த்த “போகணும் போல இருந்ததா இல்லை அவர்களை பார்க்கணும் போல இருந்ததா யாருக்கு தெரியும்” என்று மனதில் சிரித்துக் கொண்டு, அப்புறம் பாஸ்… உங்களை பார்த்ததும் என்ன செய்தார்கள் ஓடி வந்து உங்களிடம் பேசினராகள் தானே, என்று அது நிச்சயம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று புரிந்தும், அகரன் வாயாலேயே நடந்ததை அறிய, பொய்யாய் கேள்வி எழுப்பினான் குகன்.

குகன் கேள்வி காலையில் நடந்தது எல்லாம் மீண்டும் நினைவில் வர “அவளை அணைத்தது இதழை ரசித்து கவிதை சொன்னது எல்லாம் வரிசையாய் தோன்ற” அவளின் கடைசி வரியும் தெளிவாய் நினைவில் வந்து நின்றது. அகரனின் முக பாவனையை கவனித்து கொண்டு இருந்தவன் முதலில் மகிழ்ச்சியில் முகம் மலர போக போக அது கருத்து சிறுப்பதை கண்டு ஏதோ தவறாய் நடந்திருப்பது புரிய விடுங்கள் பாஸ் உங்கள் முதல் நாள் மோதலால் ஏதும் கோபமாய் நடந்து இருப்பார்கள், அவர்கள் மனம் மாறும் வரை காத்திருங்கள் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ஆறுதலாய் பேச துவங்கினான் குகன்.

குகன் வரிகளில் அகரன் எதை உணர்ந்தனோ கோபமாய் அவன் புறம் திரும்பி “அவளுக்காக காத்திருக்க நான் ஒன்றும் அவளை காதலிக்க வில்லை! மனம் மாற வாய்ப்பு தருவதற்கு அவளுடன் வாழப் போவதும் இல்லை!” என்னை திட்டியவள் முன் நின்று நீ மாறும் வரை உனக்காக காத்திருப்பேன் என்று வசனம் பேச மடையனும் இல்லை என்னை தேடி வந்து என் காலில் விழவைக்கிறேன் பார் என்று தீர்மான குரலில் அதற்கான திட்டத்தை கூறினான் அகரன்.

அகரன் திட்டத்தை முழுதாய் கேட்கும் முன்பே குகனுக்கு மூச்சு திணறி போனது பாவம் பாஸ்… இப்போது செய்து இருப்பதே போதும் இன்னும் அவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள். ஒருவரின் பலத்துடன் மோத வேண்டும் பலவீனதுடன் இல்லை தயவு செய்து உங்கள் மனதை மாற்றி கொள்ளுங்கள் என்று வேண்டுதலுடன் கேட்டுக்கொண்டான் குகன்.

“அவளின் பலமும் அவள் குடும்பம் தான் பலவீனமும் அவள் குடும்பம் தான். எனவே அவள் பலவீனத்தோடு சேர்ந்து பிணைந்து உள்ள பலத்துடன் தான் மோத போகிறேன்” பாவம் பார்க்க எனக்கு யார் அவள் எந்த உறவும் இல்லை நான் அவளை பழிவாங்க மட்டுமே பயன்படுத்த போகிறேன், பாவபுண்ணியம் பார்க்க நான் கடவுள் இல்லை என்று இரக்கமாற்று அகரன் பதில் தந்தான். “உங்களின் பழிவாங்கும் படலம் எல்லாம் முடிந்த பின் எனக்கு ஒரு வாரம் இல்லை பத்து நாட்கள் விடுமுறை தாருங்கள்” என்று குகன் கேட்க ஏன் அவ்வளவு வேலை செய்து அலுத்துவிட்டதா என்று அகரன் கேலியாய் சிரித்தான்.

இல்லை “ஒரு குடும்பத்திற்கும் அப்பாவி பெண்ணிற்கும் நடக்கும் அநியாயத்திற்கு உடந்தையாக இருப்பதால் என்னை மன்னித்து என் பாவங்களை போக்கும் படி என் குல தெய்வத்திடமும் ஊரில் உள்ள கோவில்களில் எல்லாம் பரிகாரம் செய்ய போகிறேன்” என் குடும்பம் நம்பி இருப்பது என்னை மட்டும் தான் இந்த பாவத்தினால் எனக்கும் ஏதாவது வந்தால் அவர்கள் பாவம் என்ன செய்வார்கள் என்று குகன் கேள்வியாய் நிறுத்த குகன் வார்த்தையில் ஒரு நொடி கண்கள் சிவக்க விறைத்து நின்றவன். மறுநொடி சுதாரித்து என்ன குகா செண்டிமெண்டா பேசி என் மனதை காயப்படுத்த நினைக்கின்றாயா? அதை வேறு எங்காவது வைத்துக்கொள் என்னிடம் நடக்காது, “உன்னை யாரும் இந்த பாவத்தில் பங்கு எடுத்துக்கொள்ள சொல்லவில்லை இங்கிருந்து வேலை பார்க்கவும் சொல்லவில்லை நீயாய் வந்து இங்கு தான் வேலை பார்ப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றாய் எல்லாம் மறந்துவிட்டதா!” உன்னை யாரும் கட்டாய படுத்தவில்லை தாராளமாய் உன் வேலையை விட்டுவிலகி செல்லலாம், என்று கூறி குகன் முகம் காணாது வேறுபுறம் திரும்பி நின்றான் அகரன்.

தன் கோபம் அகரன் மனதை மாற்றும் என்ற நம்பிக்கையில் பேசியவன் அவன் விலகி செல் என்றதும் தாங்க முடியாமல் அகரனிடம் நெருங்கி சென்று அவன் கைகளை பற்றிக்கொண்டு “நன்றி மறப்பவன் நான் இல்லை உங்களுக்காக எதையும் செய்வேன் இதையும் செய்வேன்” என்று அகரன் சொன்ன வேலையை செய்ய ஒப்புதல் தந்தான் குகன்.

குகன் முகத்தில் இருந்த விரக்தியை கண்டவன் தன் எண்ணம் தவறென்று தனக்கே புரிய முகம் வாட மனதில் இருந்த வலியை வார்த்தையால் கூறினான் அகரன். “எனக்கு மட்டும் அவளை காயப்படுத்த வேண்டும் கஷ்டம் கொடுக்க வேண்டும் என்று ஆசையா! என்ன காலையில் அவளை பார்த்ததும் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சகஜமாய் பேசிட தான் நினைத்தேன்”, எனக்கு பழக்கமே இல்லாத காதல் மொழியில் பேசி கவிதை சொல்லி எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா இருந்தும் அவள் என்னை நாய் என்று அவமான படுத்தினாள், அவளுக்கு பாவம் பார்த்து அன்பாய் பேசிய எனக்கு கிடைத்த பட்டம் வெறி நாய் அவள் பார்வையில் அப்படியே இருந்துவிட்டு போகிறேன், அவள் என்னை எப்படி நினைத்தால் எனக்கு என்ன என்று அவனை மீறியும் குரலில் வருத்தம் தெரிய அதனை கவனமாய் மறைத்துக்கொண்டு “எனக்கு அந்த மகேஸ்வரனை பழிவாங்க வேண்டும்” அவ்வளவே என்று அகரன் முடிக்க.

குகனுக்கு தலையில் அடித்து கொள்ளாம் போல இருந்தது “சும்மா பழிவாங்குவேன் பாப்கார்ன் சாப்பிடுவேன்” என்று எப்போதும் ஒரே வசனத்தை சொல்லிக்கொண்டு ஒருவேளை திரும்ப திரும்ப சொல்லி தனக்கே நியாபாகப்படுத்தி கொள்கின்றாரோ மகேஸ்வரனை பழிவாங்க முடிவு எடுத்த போது வராத தடுமாற்றமும் கலக்கமும் அவர் மகளின் விஷயத்தில் வரும்வது ஏன் என்று இன்னுமா உங்களுக்கு புரிய வில்லை, “இதற்கு பெயர் தான் காதல் உங்கள் மனதில் காதல் வந்து பலமணிநேரம் ஆகிவிட்டது சுஹீயிடம் பேசிய வசனம் எல்லாம் கஷ்டப்பட்டு பேசியது இல்லை உங்கள் மனதால் இஷ்டப்பட்டு பேசியது, அதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் உங்களை காயப்படுத்தியதால் வந்த கோபம் தான் இதென்று இன்னும் ஏன் உங்களுக்கு புரியவில்லை பாஸ்… ஆனால் நீங்கள் இப்போது செய்ய போகும் காரியத்தில் அவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் கொஞ்ச நஞ்சம் நல்ல அபிப்பிராயமும் மொத்தமாய் அழிந்துவிடும் .அதன் பின் காதல் மட்டும் எங்கிருந்து வரும் இதை உங்களுக்கு எப்படி புரியவைப்பேன்” என்று தனக்குள் புலம்பிக் கொண்டான் குகன். “பணம் இருந்தால் போதும் தான் செய்வது தான் சரி” என்ற மனநிலையில் இருந்தான் அகரன். தனக்காக பின்னப்படும் சதி வலை பற்றி அறியாமல் தன் பணிகளை செய்து கொண்டு இருந்தால் சுஹீரா.

காதல் என்னை
தீண்டும் என்று கனவிலும்
கருதவில்லை
என் கனவிலும் நினைவிலும்
நீயே கலந்திட
இது காதல் தானா என்று
குழம்பி தவிக்கிறேன் ஏனடி…