அரக்கனோ அழகனோ 07

அரக்கனோ அழகனோ 07
0

அழகன் 7

உன்னை காதலிக்கவில்லை
என்று பலமுறை எனக்குள்
சொல்லிக்கொண்டே…
உனக்குள் தொலைந்து
அளவில்லா காதலில்
உன்னை அள்ளிக்கொண்டேன்…

சுகந்தனுடன் வீடு வந்து சேர்ந்த சுஹீராவை விசித்திரமாய் பார்த்தார் சுபத்ரா.
“இது உனக்கு கல்லூரி நேரம் ஆயிற்றே நீ என்ன சுகனோடு வருகின்றாய் உண்மையை சொல் கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டாயா? நீ செய்யும் திருட்டு தனத்தில் இதுவும் ஒன்றா?”, நீயும் இவளுக்கு உடந்தையா சுகன் அதனால்தான் அப்பா அழைத்தும் நீ போனை எடுக்கவில்லையா! எப்போதும் சரியான நேரத்தில் அலுவலகத்தில் இருக்கும் பையனை இன்னும் காணவில்லை என்று காலையிலிருந்து அவர் பதறிக்கொண்டு இருக்கின்றார் நீங்கள் இருவரும் ஊர் சுற்றி கொண்டு இருக்கின்ரீர்களா என்று கோபமாய் பேசிக்கொண்டே போனவர், பிள்ளைகளின் முகத்திலிருந்த சோர்வு என்னவோ செய்ய உங்கள் இருவருக்கும் என்னாயிற்று ஏன் முகம் சோர்ந்து தெரிகின்றது, என்று கவலைப்பட துவங்கினார்.

“அது ஒன்றும் இல்லை அம்மா காலையில் இருந்து வெயிலில் சுற்றிக்கொண்டிருந்ததில் அப்படியிருக்கும்” என்று மகள் பதில் தர மகன் அமைதியாய் அமர்ந்திருக்க ஏதோ தவறு என்று அவர்களின் முகத்தை வைத்தேகண்டு கொண்ட சுபத்ரா, “உன்மையை சொல் என்று மகனை பார்த்துக்கேட்டார், “அது வந்து” என்று திக்கிதிணறி சுகன் உண்மையை உளற துவங்கும் முன் அவன் கை பற்றி தடுத்துவிட்டு நீ என்ன சொல்வது என்னால் தானே நீ அலுவலகம் செல்லமுடியவில்லை காரணம் நானே சொல்கிறேன் என்று அவனை முந்திக்கொண்டு அவனுக்கும் சேர்த்து பதில் பேச துவங்கினாள் சுஹீரா.

“அது வந்து அம்மா இன்று கல்லூரியில் ஒரு விழா அதனால் யாருக்கும் வகுப்பு நடக்கவில்லை” ரொம்ப போர் அடித்தது, சுகன் தான் காலையில் சொன்னன் இல்லையா? இங்கிருக்கும்போதே நல்லா சுதந்திரமா சந்தோசமாக இருக்கட்டும் என்று அதானல் இவனை அழைத்து கொண்டே சுற்றகிளம்பிவிட்டேன், “பீச் பாணி பூரி எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு எங்களுக்கு போதும் என்று தோன்றவும் கிளம்பிவந்தோம்” என்று ஒரு கதை சொல்லி சுஹீரா சமாளிக்க, அம்மா சமாதானம் அடைந்து விடுவார் என்று நம்பினாள் சுஹீரா, ஆனால் அது இரு மடங்கு கோபமாக மாறியிருந்தது, “நான் உன்னிடம் கேட்க வில்லை நீ பேசதே வாயைத்திறந்தாலே எதையாவது சொல்லி சமாளித்து விடுவது”, உன்னோடு சேர்ந்து இவனும் மாறிக்கொண்டே வருகிறான் முதலில் நீ உன் அறைக்கு செல் என்று கட்டளையிட்டு அவள் சென்றதும் சுகந்தனிடம் தொடர்ந்தார் சுபத்ரா.

அப்பாவிற்கு முன்பு போல் உடல்நிலை இல்லை என்று தெரியும் தானே முன்பு எல்லாம் காய்ச்சல் வந்தால் கூட மருத்துவமனை செல்லாதவர் வற்புறுத்தி அழைத்தாலும் அது எல்லாம் “வயதானவர்கள் செல்லும் இடம் என்னை அழைக்காதே” என்று கேலி செய்தவர் இப்போது எல்லாம் மாதம் ஒருமுறை செக்அப் செல்கின்றார் இது உனக்கு நன்றாகவே தெரியும், தானே, “அவள் தான் சிறுபிள்ளை போல் விளையாட்டு தனமாய் இருக்கின்றாள்” என்றால் நீயும் அவளுடன் சேர்ந்து கொண்டு சூழ்நிலை புரியாமல் நடந்து கொள்வது எனக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கிறது, சுகன். “வீட்டில் அவள் ஒருத்தி மட்டுமாவது என்ன நடக்கின்றது என்று தெரியாமல் சந்தோசமாய் இருக்கட்டும்” என்று அவளிடம் மறைத்தது தான் தவறுபோல அவளுக்கும் கல்யாண வயது வந்துவிட்டது இன்னும் குடும்ப நிலை பற்றி மறைக்காமல் அவளிடம் சொன்னால் தான் அவளும் சூழ்நிலை அறிந்து நடந்து கொள்வாள், இப்போதே சொல்கிறேன் என்று சுபத்ரா மகள் அறை பக்கம் திரும்பினர். வேண்டாம் அம்மா அதற்கு அவசியமில்லை நம் குட்டிமா சொல்லாமலேயே புரிந்து நடந்து கொள்ளும் புத்திசாலி அம்மா அவளுக்கு நீங்கள் எதையும் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை என்று அவரை தடுத்தான் சுகந்தன்,

“அப்பாவிற்கு துணையாக இருப்பேன், என்று நீ அவருக்கு தொழிலில் துணையாய் இருப்பதும் பணம் தேவைப்பட்ட போது உன் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்து அவருக்கு பக்கப்பலமாய் இருந்ததும்” இனி கவலை இல்லை என் பையன் வளர்ந்து விட்டான் எனக்கு தோள் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டான் என்று உன்னை பற்றி பெருமை பேசிக்கொண்டு இருக்கின்றார், எது அவர் கை மீறி போனாலும் தாங்கிகொள்பவர் தன் பிள்ளைகள் தவறை மட்டும் பொறுத்து கொள்ளமாட்டார், “இன்று நீ ஏதோ குழப்பத்தில் உள்ளது போலவும் எதையோ என்னிடம் மறைப்பது போலவும் தோன்றுகின்றது உண்மையை சொல் சுகன் எந்த பிரச்சனையுமில்லை” தானே என்று கன்னம் தொட்டு வினவ அவன் என்ன சொல்லுவது என்று தடுமாறிக்கொண்டிருந்த நேரம் அவன் கைபேசி அழைக்க எடுத்து யார் என்று பார்த்தவன் அவசரமாய் தன அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டு பேச துவங்கினான் சுகந்தன்.

ஹலோ சார் என்று சுகந்தன் குரல் கேட்டதும் எதிர்முனையில் என்ன கூற பட்டதோ முகம் மலர்ந்து “இல்லை சார் நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை நிச்சயம் கொஞ்சம் கொஞ்சமாய் பணத்தை கட்டிவிடுவேன்” என்று மகிழ்வுடன் கூறி அழைப்பை துண்டித்து விட்டு தன் தங்கையை தேடி சென்றான் சுகந்தன். ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தவள் சுகந்தன் சந்தோசமாய் வருவதை கண்டு உதட்டளவில் மட்டும் புன்னகை பூசிக்கொண்டு “என்ன அண்ணா ஏதும் ஜாக்பாட் அடித்து விட்டதா” இவ்வளவு சந்தோசமாய் இருக்கிறாய் என்றாள் சுஹீரா. அது எல்லாம் ஒன்றும் இல்லை. அந்த சார் பேசினார் என்றவனை புரியாமல் பார்த்து “எந்த சார் என்று கொஞ்சம் தெளிவாக சொல்” என்றாள் சுஹீரா.

“அவர் தான் எனக்கு பணம் தந்து உதவி செய்தவர் நீ கூட இன்று நேரில போய் சந்தித்து வந்தாய்”, இல்லையா அவரே தான் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டார் அவருக்கே தெரியாமல் அவரின் லீகல் ஆஃபீஸ்ர் இதை செய்து விட்டார் போல, நீ கூறியதும் உண்மை அறிந்து என்னை உடனே விடச்சொன்னவர் எனக்கே போன் செய்து நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தார் தெரியுமா? “எவ்வளவு நல்லவர் பார் நடந்த எதிலும் அவருக்கு சம்மந்தமேயில்லை என்றாலும் எப்படி பெருந்தன்மையாய் நடந்து கொள்கின்றார் பார் இவ்வளவு பணம் பெயர் புகழ் இருந்தும் எவ்வளவு அடக்கமாய் நடந்துகொள்கின்றார் பார் கொஞ்சம் கொஞ்சமாய் பணத்தை திருப்பினால் போதும்” என்றார், என்று இடைவிடாமல் அவனின் பெருமை பேசினான் சுகந்தன்

சுஹீராவிற்கு அவனின் இரட்டை வேடம் புரியவில்லை அவன் தன்னிடம் நடந்துகொண்ட முறையில் கொஞ்சமும் நல்ல விதம் இல்லாமலிருக்க அண்ணனிடம் மட்டும் ஏன் நல்லவன் வேடம் போடவேண்டும் என்று புரியாமல் குழம்பினாள் சுஹீரா. “அப்பாவின் எண்ணம் சரியே அவன் நல்லவன் இல்லை”, ஏதோ திட்டத்துடன் தான் இதை எல்லாம் செய்கின்றான் இருந்தும் ஒருவன் நடிப்பதற்கு உண்மையாய் வருந்துவதற்கும் வித்தியாசம் தெரியாமல் சந்தோசபடும் தன் அண்ணனை நினைத்து கவலை கொண்டாள், சுஹீரா. “அண்ணா நீ நினைக்கும் அளவிற்கு அவன் ஒன்றும் நல்லவனாய் தெரியவில்லை அப்பா எண்ணம் தான் சரி” என்று எனக்கு தோன்றுகின்றது
அவன் மனம் மாறி மீண்டும் இதுபோல் ஏதும் செய்யும் முன் அவனிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கும் வழியை பார்ப்போம் என்று தன் கருத்தை கூறினாள் சுஹீரா.

“பணம் செலுத்த இன்னும் நமக்கு பத்து மாதங்களுக்கும் மேல் அவகாசம் உள்ளது” குட்டிமா, இருந்தும் நீ சொல்வது போல் அவர் பணத்தை விரைவாக திரும்ப கொடுக்கும் வழியை கவனிக்கவேண்டும் அதுவும் அப்பாவிற்கு தெரியாமல் அப்பாவிற்கு தெரிந்தால் மிகவும் கவலைப்படுவார் , அது அவர் உடல் நிலைக்கு சரியில்லை என்று சுஹீராவின் எண்ணத்தை ஏற்றுக்கொண்டான் சுகந்தன். “என்ன இன்னும் பத்து மாதங்களா”, என்ன சொல்கின்றாய் சுகன் பணம் செலுத்த கொடுத்த அவகாசம் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டதே என்று அதிர்ச்சியாய் சுஹீரா, வினவ. “என்ன குட்டிமா நீயும் அப்பாவை போல விபரம் தெரியாதவன் என்று நினைக்கின்றாயா?” என்று முகம் சுருங்கியவன் இவ்வளவு பெரிய தொகையை எப்படி ஒருமாதத்தில் திருப்பித்தர முடியும் அப்படி முடியும் என்றால் அந்த பார்டிகளிடமே ஒருமாதம் டைம் கேட்டு இருப்பேன் இல்லையா.என்று சாதாரணமாய் கூறினான் சுகந்தன்.

சுஹீராவின் குழப்பம் மேலும் அதிகரித்தது அப்படியென்றால் அந்த பத்திரமும் போலியா இவனை “எந்தவிதத்தில் நம்பி அவன் நிபந்தனைக்கு ஒத்துக்கொள்வது” அதில் ஏதும் சூழ்ச்சி செய்தான் என்றால், என்று சுஹீரா யோசித்து கொண்டு இருக்கும்போதே அவள் செல்போன் அழைக்க புது எண் என்று எடுக்காமல் தவிர்த்தாள் சுஹீரா. “சரி நீ ஓய்வு எடு காலையில் இருந்து எனக்காக அங்கும் இங்கும் அலைந்து களைத்து போய் இருக்கின்றாய்”, எனக்கு இப்போது தான் நிம்மதியாய் இருக்கிறது நான் அலுவலகம் கிளம்புகிறேன் அப்பா தனியாக இருப்பார் என்று சுகந்தன் விடை பெற்று கிளம்பினான்.

சுஹீரா யோசி யோசி என்ன செய்வது “இது ஏதோ சதி வலை போலயிருக்கின்றது யாரை சிக்க வைக்க இந்த திட்டம்”, ஒரு வேலை அவன் அண்ணனுக்கு உண்மையில் உதவி செய்து இருப்பானோ நான் அவனை அவமான படுத்தியதை மனதில்வைத்து என்னை பழிவாங்க இதுபோல் செய்கின்றனா இதை அவனிடம் நேரடியாக கேட்ட போது கூட மறுப்பாய் ஏதும் சொல்லவில்லையே கோபம் தான் கொண்டான் அவன் உண்மையை கண்டுகொண்ட கோபமா அது என்று காரணம் கண்டுகொண்ட உணர்வில் மேலும் இந்த சதியில் இருந்து எப்படி தப்பிப்பது என்று சிந்திக்க துவங்கினாள், அப்படியென்றால் அண்ணனின் இந்த நிலைக்கு நான் தான் காரணம் என்று கழிவிரக்கம் கொண்டாள் சுஹீரா. “அவன் நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் எதுவும் செய்யத்துணிவான் போல” என்று மனதில் சிறிது நடுக்கம் பிறக்க ஓயாமல் அடித்து கொண்டு இருந்த தன் மொபைல் போனை எடுத்து பார்த்தாள் அதே புது எண் ஆனால் திரும்ப திரும்ப அழைத்து இருப்பது தெரிந்து அதனை அட்டன் செய்தாள் சுஹீரா.

“ஹல்லோ சுஹீ” என்று குரல் உரிமையாய் அழைக்க “யார் நீங்கள் என் பெயர் எப்படி தெரியும்” என்று சுஹீரா கேள்வியாய் வினவ, “உன் பெயர் மட்டும் இல்லை உன் ஜாதகம் முதல் அனைத்தும் தெரியும்” என்று பதில் தந்தான் அவன். அந்த ஆணவ குரல் காலையில் பார்த்தவன் முகத்தை நினைவுபடுத்த அவன் எதற்கு நம்மை அழைக்க போகின்றான் என்று தோன்றியது, ஒருவேலை அவனாகவே இருந்தாலும் இவனுக்கு என்ன பயந்து பதில்தருவது என்று என் ஜாதகம் தெரியும் என்றால், “ஓ ஜோசியரா இப்போதைக்கு இங்கு யாருக்கும் ஜாதகம் பார்க்க தேவை இல்லை”, தேவையிருந்தால் அழைக்கின்றோம் என்று ஏளனமாய் பதில் தந்து தொடர்பை துண்டித்தாள், சுஹீரா. மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வர இந்த அசிங்கத்திற்க்கெல்லாம் இவன் அடங்கமாட்டான் போல இன்னும் கொடுக்கின்றேன் என்று அட்டன் செய்து “என்ன ஜோசியரே ஒருமுறை சொன்னால் புரியாது உங்கள் தேவை இங்கு தேவையில்லை” என்று சுஹீரா ஏளனமாய் கூறிக் கொண்டு இருக்கும் போதே இடையிட்டு அவன் பேசினான், “இருக்கு பெண்ணே என் தேவை உனக்கு அதிகம் தேவைப்படுகின்றது, நான் யார் என்று தெரிந்துதான் இப்படி பேசுகின்றாய்”, என்று எனக்கு தெரியும் இந்த திமிர் தான் உன் இந்த அடங்காத்திமிரை அடக்கத்தான் உன்னை இந்தநிலைக்கு கொண்டு வந்தேன் இருந்தும் உன் திமிர் குறைந்த பாடுயில்லையே என்று அவனும் பதில் தர.

நம்மை கண்டு கொண்டானே என்று கோபம் ஒரு புறம் என் திமிரை அடக்க இவன் யார் என்று எண்ணம் ஒரு புறம் சேர்ந்துகொள்ள “உங்கள் நிபந்தனைக்கு நான் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என் முடிவை நாளை சொல்கிறேன்”, என்றதாய் தான் எனக்கு நினைவு, அது உங்களுக்கும் நினைவில் இருந்தால் இப்படி திரும்பதிரும்ப போன் செய்து தொந்தரவு செய்யமாட்டீர்கள். “என்ன செய்ய அடிக்கடி சதி செய்து செய்தே மழுங்கிப்போன மூளையிடம் இதை எதிர்பார்த்தது என் தவறு தான்” என்று போலியாய் அலுத்துக்கொண்டாள் சுஹீரா.

சிறிது நேரம் எதிர்முனையில் அமைதி நிலவியது “ஹலோ என்ன சத்தமேயில்லை சுரணை வந்து திருந்தி விட்டாயா” எனவும் நாளை என்னை சந்திக்கும் இடம் நேரம் என்று விபரம் மட்டும் கூறி விட்டு அழைப்பை துண்டித்தான். “அதானேபார்த்தேன் இவனாவது திருந்துவதாவது” அதற்குள் வைத்து விட்டானே “பத்திரத்தில் தேதி மாற்றியது பற்றியும் இன்னும் நாலு கேள்வி சேர்த்துக்கேட்டிருக்க வேண்டும் “ என்று கடுப்புடன் இருந்தவளுக்கு அவன் நிபந்தனை நினைவு வந்தது, இது என்ன புதுவித நிபந்தனை பைத்தியக்கார தனமாய் இருக்கின்றது, “அது சரி பகடு புத்தி வேறு எப்படி யோசிக்கும்” என்று ஏளனமாய் நினைத்தவள் அவன் நிபந்தனை பற்றிய எண்ணத்தில் மூழ்கினாள், “இவன் சொல்லும் வரை இவனின் காதலி போல் நடிக்க வேண்டுமாம் ஒருவருக்கும் சந்தேகம் வரக்கூடாதாம் , அப்படி யாருக்கு என்ன நிரூபிக்க நினைக்கிறான் இவன் ஒன்றும் புரியவில்லை”, அதற்கு எதற்கு இவனை வெறுக்கும் என்னை கட்டாயபடுத்தவேண்டும், பார்க்க சுமாராய் இருகின்றான், பணக்காரனாகவும் தெரிகின்றான், இவனுக்கு என்னிடம் என்ன வேண்டும், அந்த பகடு எண்ணம் என்ன என்று புரியவில்லையே“, இவன் சொன்னது போல் இல்லாமல் யாருக்கேனும் சந்தேகம் வந்தால்” என்ன செய்வான், “மீண்டும் அண்ணனை கைது செய்யவைப்பானா” என்று எண்ணம் வரவும் இனி இது போல் ஒரு சூழ்நிலையில் சுகந்தனை சிக்கவைக்ககூடாது என்ற எண்ணம் அவன் நிபந்தனைக்கு சம்மதிக்க வைத்தது, “காதலிப்பது போல் நடிக்கத்தானே சொல்கின்றான் காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லையே”, அதுவரை நிம்மதி தான், தன் குடும்பத்தின் நிம்மதிக்காக இதை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்தாள் சுஹீரா.

ஆனாலும் அவன் நோக்கம் என்ன என்று பல கோணங்களில் தீவிரமாய் சிந்திக்க துவங்கினாள், “பெண்பித்தன் என்றால் வேறு வகையில் முயல்வான் ஒருவேலை நேரடியாக அவன் எண்ணத்தை சொன்னால் நான் கோபப்படுவேன் ஒத்துக்கொள்ள மாட்டேன்”, என்று இது போல் முட்டாள் தனமான நிபந்தனையில் அவன் எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாய் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கின்றானா, அப்படி மட்டும் என்னிடம் ஏதாவது முயன்று பார்க்கட்டும் இந்த சுஹீராவிற்குள் இருக்கும் காளி ரூபத்தை அவன் பார்ப்பான், “என்னை தொட துணிந்த கைகளையும் என்னை தவறாய் பார்த்த கண்களையும் நோண்டி எடுத்து விடுவேன்” என்று தன் கையில் சிக்கியிருந்த தலையணை மீது முழு கோபத்தையும் காட்டினாள் கோபம் கொஞ்சம் குறையவும் நிதானமாய் சிந்திக்க துவங்கினாள் “இல்லை அவன் எண்ணம் தவறாய் நடப்பது இல்லை” அவன் எண்ணம் அது தான் என்றால் இன்றே அதை செய்து இருப்பான் அவனே சொன்னான் இல்லையா அவன் எண்ணம் அது இல்லை என்று இதற்கு வேறு காரணம் உள்ளது அது என்ன என்று மீண்டும் தீவிர சிந்தனையில் இறங்கினாள், “ஒருவேலை அவன் சொன்னது என் வார்த்தை அவனை காயப்படுத்தியதால் அந்த கோபத்தில் என்னை பழிவாங்க இப்படி செய்கின்றனா” என் மீது கோபம், வெறுப்பு என்றால் அதையும் வேறு வகையில் காட்டியிருக்கலாம் ஆனால் அவன் கண்களில் என் மீது வெறுப்புயில்லையே அது அது “ஏதோ என்னை சில நேரங்களில் கேலி செய்வதும் சில நேரங்களில் ரசிப்பது போல் அல்வா உள்ளது” பீச்யில் கூட கவிதை எல்லாம் சொன்னன். அவள் எண்ணத்தின் போக்கை எண்ணி உடல் விறைத்தது. “ஒருவேலை தோழிகள் எல்லாம் சொன்னது போல் அவனுக்கு என் மீது காதல் வந்து விட்டதா, அதனை எனக்கு புரியவைக்க நினைக்கின்றானா” என்று எண்ணம் வந்ததும் ஒருநொடி மூச்சுவிடவும் முடியாமல் நெஞ்சை அடைத்தது இது என்ன இப்படி படப்பட என்கின்றது அவன் காதல் கீதல் என்று உளறினாள் என்ன பதில் சொல்லுவேன் என்று தடுமாறிப்போனாள் சுஹீரா.

“என்ன பதில் சொல்லுவது என்று என்ன தயக்கம் பிடிக்கவில்லை என்று முகத்திற்கு நேராய் சொல்லி விடவேண்டியது தான்” என்று முடிவு எடுத்த பின் தான் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. வெகு நேரம் சிந்தித்தும் சரியான காரணம் தெரியாமல் இதற்கு எல்லாம் அவன் விளக்கம் தந்தால் மட்டுமே என்று புரியும், நாளை தெளிவாய் கேட்க வேண்டும்என்று மனதில் குறித்து கொண்டவள் அவனிடம் விலகியேயிருக்க என்றும் என்ற தீர்மானமும் எடுத்து கொண்டாள், சுஹீரா.

“விலகியிருக்க இவள் முடிவு எடுத்தால் விடுபவனா அகரன் அவன் குணம் அறியாமல் தனக்குள் பல தீர்மானங்கள் எடுத்தப்படி அந்த நாளை நகர்த்தினாள், சுஹீரா. முதல் நாள் கல்லூரி விழா நடந்ததால் அடுத்த நாள் விடுமுறை விடப்பட்டுயிருந்தது எனவே வெளியே செல்ல என்ன காரணம் சொல்லுவது என்று யோசித்தபடி கிளம்பி வந்தாள், சுஹீரா. அவள் எண்ணியது சரியே என்பதை போல் “இன்று விடுமுறை என்று தானே சொன்னாய் அதற்குள் எங்கு கிளம்பி கொண்டு இருக்கின்றாய்” என்று சுபத்ரா கேள்வி எழுப்பினார், கிடைக்கும் ஒரு நாளிலும் எங்காவது சுற்றக்கிளம்புவது பெண்ணாய் லட்சணமாய் வீட்டிலிருந்து சமையலை கற்றுக்கொள்வோம் என்று தோன்றுகின்றதா என்று சிடுசிடுத்தார், சுபத்ரா.

அன்னையிடம் காரியம் நடக்காது என்று புரிந்து தன் தந்தையை அணுகினாள் அவர் சம்மதம் தர கிளம்பும் நேரம் சுகந்தன் வந்து வழக்கம் போல் நானே உன்னை இறக்கிவிட்டு அலுவலகம் செல்கிறேன் என்று வந்து நின்றான். அடுத்து இவனை வேறு சமாளிக்க வேண்டுமா? என்று தனக்குள் புலம்பிக்கொண்டே “அது எல்லாம் வேண்டாம் என் தோழிகள் கேலி செய்வார்கள்” என்று கூறி சுகந்தனை தவிர்த்தாள், “அண்ணனுடன் செல்லவில்லை என்றால் எங்குமே செல்ல வேண்டாம்” என்று சுபத்ரா கூறவும் வேறு வழியின்றி சுகந்தனுடன் கிளம்பினாள். அவன் போனில் சொன்ன இடத்திற்கு முன்பே இறங்கிக்கொண்டவள் நீ அலுவலகம் கிளம்பு அவர்கள் வரவும் நான் போய்க்கொள்வேன் என்று சுகந்தனை கிளப்புவதிலேயே குறியாய் இருந்தாள், சுஹீரா. “உன் தோழிகள் வந்ததும் செல்கிறேன்” என்று சுகந்தன் நிற்க என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள், சுஹீரா போன் அடிக்க அது அவனின் எண் என்று எடுக்காமல் தவிர்த்தாள், “எடுத்து பேசு உன் தோழியாய் இருந்தால் ஒரு வேலை அவளுக்கு வர முடியவில்லை என்றால் நானே உன்னை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு செல்வேன்” எனவும், இல்லை இது புது எண் என்று தடுமாறினாள் இதுவரையில்லாத திருட்டு தனங்களும் சொல்லி அறியாத பொய்களும் அவளை நிலைகுலைய செய்தன, பேச வார்த்தைகளின்றி கலங்கிக்கொண்டுயிருக்கும் போதே, என்ன இவ்வளவு நேரம் ஆகின்றது உன் தோழிகள் மேக்கப் செய்து வர இன்னும் நேரம் ஆகும் போல, எனக்கு அலுவலகத்திற்கு நேரம் ஆயிற்று உன் தோழிகள் வருக்கின்றார்களா பார் இல்லை ஒரு ஆட்டோ பிடித்து வீடு சென்று வீடு என்று கையில் கொஞ்சம் பணத்தை திணித்து விட்டு சென்றான் சுகந்தன்.

சுகந்தன் கிளம்பியதும் நிம்மதியாய் மூச்சு விட்டவள் அக்கம் பக்கத்தில் அவன் இருக்கின்றானா என்று கண்களால் தேடத்துவங்கினாள். வேண்டும் என்றே அவன் வர சொன்ன நேரத்தை கடந்து தாமதமாக வந்திருந்தாள் சுஹீரா . அதன் பிறகும் அவன் வராமலிருக்க டைம் கீப்அப் என்பது இவனுக்கு இருக்கவேயிருக்காது போல சரியான பகடு என்று முணுமுணுத்துக்கு கொண்டாள்.

“எங்கு சென்றாலும் உன் பாடிகார்ட் அண்ணன் இல்லாமல் வர மாட்டாயா? நாளையில் இருந்து தனியாக வர வேண்டும் சொன்ன நேரத்திற்கு நேரம் தவறாமல் வர வேண்டும் எனக்கு நேரம் மிகவும் முக்கியம்” என்று குரல் அருகில் கேட்க மிரண்டு போய் திரும்பியவள் விலகிசெல்ல நகரும்போதே, வெகுசாதாரணமாய் அவள் தோள் மீது கைபோட்டு அவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளியை குறைத்து கொண்டவன் நெருக்கத்தை உருவாக்கி அவள் முகம் அருகில் குனிந்து “ரொம்பவும் பயம் காட்டிவிட்டேன் போல” என்று அவளின் மூக்கின் நுனியில் ஒரு விரல் கொண்டு தீண்டியவன். தன் கை வளையத்திற்குள் வைத்தபடியே நடத்திச்சென்று தான் வந்த காரின் கதவை திறந்து ஏறும் படி செய்கை செய்தான் அகரன்.

நேற்றில் இருந்து நடந்த மனப்போராட்டம் காலையிலிருந்து வந்த தடுமாற்றம் திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சி என்றிருந்தவள் முதலில் அவன் தொடுகையை உணராமல் இருந்தாள் காரில் அமர்ந்ததும் கொஞ்சம் சுயநினைவு பெற காரை சுற்றிக்கொண்டு மறுபுறம் வந்து டிரைவர் இருக்கையில் அமரும் வரை காத்திருந்தவள் , “காதலிப்பது போல நடிப்பது தான் உன் நிபந்தனை இதை காரணம் காட்டி என்னை தொடும் வேலை வைத்துக்கொள்ளாதே பின் உனக்கு என்னிடமிருந்து கிடைக்கும் தர்மஅடிக்கு நான் பொறுப்பு அல்ல” என்று கோபமாய் பேசியவளை மெலிதாய் புன்னகை செய்து ரசித்து கொண்டு இருந்தான், அகரன்.

இவ்வளவு நேரம் கத்திக்கொண்டு இருக்கின்றேன் இவன் “ஈ…” என்று இளித்து கொண்டிருக்கின்றான் என்று மேலும் கடுப்பானவள் சிரிக்காதே, “நீயாகவே அந்த பத்திரத்தில் தேதி மாற்றிக்கொண்டாய்”, அப்படி தானே ஒரு வருடம் கழித்திருந்த தேதியில் ஆண்டின் இறுதி எண் மட்டும் மாற்றி வேண்டும் என்றே என் அண்ணனை போலீஸிடம் மாட்டவைத்தாய் இதில் “உனக்கு என்ன லாபம் இப்படி ஒரு நிபந்தனையால் உனக்கு என்ன கிடைக்க போகின்றது” என்று மனதில் அடைத்து வைத்திருந்த கேள்வியை வரிசையாய் கேட்டாள் சுஹீரா.

இமை விலகாது அவளின் கோபக் கொந்தளித்த கண்களையே பார்த்துக்கொண்டு இருந்தவன், இதழில் மெல்லிய புன்னகையை படரவிட்டு “எனக்கு என்ன லாபம் உன்னோடு செலவிடப்போகும் அழகனா நிமிடங்கள் கிடைக்கபோவது, என்னை அவமான படுத்தியவர்களை வென்றுவிட்ட நிம்மதி” என்று காரை கிளப்பிக்கொண்டே பதில் தந்தான் அகரன். “இப்போது எங்கு என்னை அழைத்து செல்கின்றாய் நான் உன்னிடம் பேச வேண்டும்” என்று சுஹீரா மறுக்க, “சுஹீ உனக்கு என்ன பேச வேண்டுமோ பேசு நான் கேட்கிறேன் என்று அருகில் அமர்ந்து இருந்தவளின் கரத்திணை தன் கரத்தினுள் அடக்கி கொண்டு மென்மையாய் கூறினான், அகரன்.

அவன் குரலிலிருந்த மென்மையை அவளால் ரசிக்க முடியவில்லை இதுவும் வேஷம் என்றே தோன்றியது, அவன் கைகளை விலக்கி “உன் நிபந்தனை நான் உன்னை காதலிப்பது போல் நடிக்கவேண்டும் அதற்கு நான் சம்மதிக்கிறேன் ஆனால் என்னை நீ தொடக்கூடாது அது எனக்கு பிடிக்கவில்லை நீ நினைத்த நேரத்தில் எல்லாம் என்னை அழைக்ககூடாது எனக்கு நேரம் கிடைக்கும் போது மட்டும் தான் வருவேன்”, இன்று எனக்கு விடுமுறை அதனால் நீ சொன்ன நேரத்திற்கு வந்தேன் கல்லூரிநாட்களில் இதை எதிர்பார்க்காதே, என்று தன் நிபந்தனைகளை அடுக்கிகொண்டே சென்றவள் அதன் பின் தனது சந்தேகங்களை கேட்க துவங்கினாள்.

யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்றாய் “ யாராருக்கு முன் நடிக்க வேண்டும் இப்படி போலியாக ஒரு காதலியை ரெடி செய்து ஏமாற்ற என்ன காரணம் இந்த எல்லா கேள்விகளுக்கும் எனக்கு காரணம் வேண்டும் என்று தெளிவாய் கூறிவிட்டு அவன் பதிலுக்காக காத்திருந்தாள், சுஹீரா. அவள் சொன்ன தோரணையையும் குரலிலிருந்த மிடுக்கையும் தனக்குள் ரசித்து சிரித்துக்கொண்டு இருந்தவன் , அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல துவங்கினான் , “ஏன் எதற்கு எப்படி என்று உனக்கு காரண காரியம் விளக்கும் அவசியம் எனக்கில்லை”, உன் கட்டளைப்படி நடக்க கையேந்தும் நிலையில் நான் இல்லை, நீ தான் என்னிடம் உன் அண்ணனுக்காக கையேந்திக்கொண்டு இருக்கின்றாய் அதை மறந்துவிடாதே”, என் விருப்ப படி என் நேரப்படி தான் நீ நடந்து கொள்ள வேண்டும், இல்லை முடியாது என்று மறுத்து கொண்டிருந்தால் பின்விளைவுகள் மோசமாய் இருக்கும் என்று ஒருவித மிரட்டலுடன் கூறிக்கொண்டு இருந்தவன் ஒரு நொடி நிறுத்தி பின் தொடர்ந்தான், “வேறு என்ன சொன்னாய்” என்று கண்களில் சிரிப்புடன் தொடர்ந்தான், உன்னை தொடாமல் இருப்பது என்பது கஷ்டமான விஷயம் அது என்னால் முடியாது, “தொடவேமாட்டேன் என்று பொய் உரைக்கமாட்டேன் நீ என்னை கவரும் விதமாய் ஏதும் செய்தால் நிச்சயம் இறுகிய அணைப்பு கிடைக்கும் அது இதழ் அணைப்பாகவும் இருக்கலாம் அது சூழ்நிலை பொறுத்து” என்று அவள் முகம் நோக்கியவன் அது கோபத்தில் சிவந்திருக்க அவள் கன்னம் தொட்டு தன் இதழ்களில் ஒற்றிக்கொண்டவன் “இது போல் அழகாய் கோபப்படும் போது நிச்சயம் முத்தம் கிடைக்கும்” என்று அகரன் சிரிக்க, என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிபோனாள் சுஹீரா.

உன் நிபந்தனை நான் ஏற்கவில்லையென்றால் என்ன செய்வாய் என்று மிரட்சியுடன் வினவினாள் சுஹீரா. வர வேண்டிய இடம் வரவும் காரை ஓரமாய் நிறுத்தியவன் அசட்டையாக “வெரி சிம்பிள் உன் அண்ணன் சிறையில் களி தின்று கொண்டிருப்பான்” எனவும் கண்களில் நீர் திரையிட அதுபோல் செய்யாதே நீ செய்வது பாவம் அதற்கு உனக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று சிறு குழந்தை போல் கலங்கிய குரலில் கூறினாள் சுஹீரா.

அவளின் குழந்தை தனமான வார்த்தையில் ஈர்க்கப்பட்டவன் “அப்படி செய்தால் உன் சாமி என் கண்ணை குத்தமா சுஹீ” என்று அவளை போலவே பேசிக்காட்டி கேலிசெய்தான் அகரன். அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைக் கண்டு பொறுக்கமுடியாமல் “சுஹீ உன் அண்ணனை எதுவும் செய்ய மாட்டேன் நீ என் நிபந்தனைக்கு சம்மதித்து என்னுடன் இருக்கும் வரை” என்று சேர்த்து சொன்னான், அகரன்.

அவன் தன்னை பெயர்ச்சொல்லி அழைக்கின்றான் ஆனால் இது வரை தனக்கு அவன் பெயர் தெரியாதே என்று உறுத்திட “உன் பெயர் என்ன” என்றாள் சுஹீரா. ஒற்றை புருவம் ஏறியிறங்க, “உனக்கு இன்னும் என் பெயர் தெரியாதா உன் அண்ணனிடம் கேட்கவில்லையா அன்று என் அலுவலகம் வந்தாயே அன்று கூட என் பெயர் கூறி விசாரிக்க வில்லையா” என்று எவ்வளவு மறைக்க முயன்றும் முடியாமல் குரலில் ஏமாற்றம் கலந்திட வினவினான் அகரன். அவன் குரலில் இருந்த தடுமாற்றம் அவளுக்குள் இருந்த சுஹீராவை வெளிக்கொண்டு வர “உன் பெயரை தெரிந்து வைத்துக்கொள்ளாது அவ்வளவு பெரிய குற்றமா என்ன நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா, எனக்கு அது தெரியாமல் போனதே” என்று உதட்டை சுளித்து கேலி செய்தாள்.

சுளித்த இதழ்களில் தன் மனம் சிக்கிக்கொள்ள இதழில் இருந்து பார்வையை விலக்காமலேயே “அகரன்” என்று தன் பெயரை கூறினான். கண்களில் மின்னல் மின்ன “உனக்கு பொருத்தமான பெயர் யார் வைத்தது அவர்களுக்கு அப்போதே உன் குணம் தெரிந்து உள்ளது பார்த்தாயா அவர்கள் மிகப்பெரிய ஆள் தான்” என்று போலியான புகழாரம் சூட்டி சிரித்தாள் சுஹீரா. அதன் பின்பே எங்கு அழைத்து வந்துள்ளான் என்று சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு “ஹேய் இது என்ன சினிமா தியேட்டர் என்னால் உள்ளே வர முடியாது எனக்கு படம் பார்க்கும் மனநிலையுமில்லை நீ மட்டும் போய் வா நான் வீட்டிற்கு கிளம்புகிறேன்” என்று சுஹீரா கார் கதவை திறக்ககைவைக்க அது ஆட்டோமேடிக் லாக் சிஸ்டம் என்று காலம் கடந்து நினைவு வந்து அரக்கா கதவைத்திற என்றாள் சுஹீரா. “என்ன சொன்னாய் அரக்கனா என் பெயர் அகரன்” என்று தெளிவாய் உச்சரித்து அவளின் தவறை திருத்தினான்.

“அகரன் தான் உன் பெயரா நான் கூட அரக்கன் என்று நினைத்தேன் உன் குணத்திற்கு பொருத்தமான பெயர்” என்று தேவையில்லாமல் பெயர் வைத்தவர்களை வேறு புகழ்ந்து தள்ளினேன், “சரி விடு அகரனுக்கு அரக்கனும் பெரிய வித்தியாசம் இல்லை “ர”வும்’க”வும் சற்று இடம் மாறி இருக்க இடை சொருகாலாய் “க்” சேர்ந்து கொண்டது அவ்வளவே தான் உனக்கு அரக்கன் பெயர் தான் மிக பொருத்தம்” என்று மீண்டும் இதழ் சுளித்து சிரித்தாள் சுஹீரா. இம்முறை அதை ரசிக்க மனமின்றி “என்ன சொன்னாய்:, என்று கோபமாய் கர்ஜித்தான், அகரன்.

“ஒரு பெண்னை மிரட்டி காதலிக்கவைக்கும் உன்னை போன்ற ஒருவனை அரக்கன் என்று சொல்லாமல் கடவுள் என்றா பூஜிக்க முடியும்” என்றவள் கரம் பற்றி, “என்னிடம் பேசும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசு சுஹீரா இல்லை நீ செய்யும் தவறுக்கு எல்லாம் உன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் தண்டனை கிடைக்கும் உன்னை போன்ற திமிர்பிடித்த பெண்னிற்கு எல்லாம் நான் அரக்கனாய் இருந்தால் தான் சரி”, இப்போது நீ என்னுடன் படம் பார்க்கவருகின்றாய் என்று வம்படியாய் அவள் கை பற்றி இழுத்துச்சென்றான் அகரன்.

வேகமாய் இழுத்தவன் கைபிடியில் புயல் காற்றில் சரிந்த கொடி போல துவண்டு போனவள், அவன் மீதே சரிந்தாள், மெல்லிய பஞ்சு மேகம் போல தன்னை தழுவி நின்றவள் நெருக்கத்தில் கிறங்கிப்போனவன், சுஹீ என்று கிறக்கமாய், அழைத்திட, அவன் குரலில் மாற்றம் கண்டு, “ச்சீ, என்னை தொடதே நானே வருகின்றேன்” என்று விலகி நடந்தாள், சுஹீரா. டிக்கெட் எடுத்து தன் இடம் தேடி கண்டுபிடித்து இருவரும் அமர்ந்தனர் பகல் நேரம் விடுமுறை இல்லாத நாள் பேய் படம் வேறு ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாயிருந்தனர் அதுவும் ஜோடி ஜோடியாய் அமர்ந்து படம் துவங்கும் முன்பே அவர்கள் லீலைகளை துவங்கி இருந்தனர், “பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று விவஸ்தை இல்லாத ஜென்மங்கள் மிருக ஜாதிகள்” என்று எண்ணெண்ணெ வார்த்தை வருகின்றதோ அத்தனையும் சொல்லி திட்டி தீர்த்தவள் இது போல் சில்லறை தனமாக நடந்து கொள்வார்கள் என்று தான் படம் பார்க்கவே வருவதில்லை என்று கூறி அதன் பின்னே தன் அருகில் இருந்தவன் நினைவு வர அவனை திரும்பி பார்த்தாள், சுஹீரா. கண்களில் கிறக்கத்துடன் உதட்டில் ஒருவித இளிப்புமாய் அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான் “பேய் வரும் காட்சி பயமாய் இருந்தால் என் கைகளை பற்றிக்கொள்” என்று அவள் புறம் சாய்ந்து தன் கையை நீட்டினான் அகரன், “இது ரொம்ப திகிலாய் இருக்கும் சரியான துணை, அரவணைப்புயில்லாமல் தனியாய் பார்க்க முடியாது அதனால் தான் சொன்னேன்” , என்று விளக்கம் வேறு தந்தான், அகரன்.

“அரக்கன் உன்னையே இவ்வளவு அருகில் பார்த்துவிட்டேன் இந்த பேய்கள் எல்லாம் எம்மாத்திரம்” என்று அசட்டையாக விலகி அமர்ந்து கொண்டாள் சுஹீரா. போகப்போக திகில் காட்சிகள் வர தன் துப்பட்டாவை கொண்டே முகம் மூடிகொண்டவள் பாதி கண் திறந்தும் மூடியும் பயத்துடன் பார்த்துகொண்டிருந்தாள் “பேய் வரும் காட்சியை விட அதன் இசை dts சவுண்ட் காதைக்கிழிக்க அலறியது தான் இன்னும் பயத்தை கூட்டியது பயத்தில் அவள் உடல் நடுங்க அமர்ந்து இருக்க”, அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் அவளை தன் பக்கம் இழுத்து தோளோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான், ஒவ்வொரு அதிர்விற்கும் ஆதரவாய் இறுக்கம் கொடுத்து அழுத்தியவன் படம் முடிய, வெளியேறி காரை வந்து சேரும் வரை அவன் பிடியை விலக்கவில்லை சிலமுறை அவனிடம் விலக முயன்றவள், அவள் முயற்சிக்கு இறுக்கம் அதிகமானதே தவிர குறைந்தபாடியில்லை, காரினுள் வந்ததும் “இப்படியா பேய் படம் பார்க்கவைத்து மிரட்டுவாய், இன்று இரவு எல்லாம் அந்த பேய்தான் கனவில் வந்து மிரட்டும்” என்று கூறி சுஹீரா வாய் மூடும் முன், தன் இதழ் கொண்டு இதழ் அனைத்து சுவைக்க துவங்கினான் அகரன்.

அவளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தன்னை விலக்கித் தள்ளிய கைகளை தன் கைகளால் சிறை செய்து தன்னவளின் முதல் முத்த சுவையை கண்களை மூடி அனுபவித்து கொண்டு இருந்தான் அகரன். கொஞ்ச நேரத்திற்கு முன்பு தன்னை தொடவேக்கூடாது என்ற போது அவன் மறுத்து உரைத்ததையே பொறுக்கமுடியமால் இருந்தவள் அவன் பிடிவாத அணைப்பில் தன்னை கட்டுபடுத்த முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, பற்றிருந்த கன்னத்தில் ஈரம் உணர்ந்து அவளை விடுவித்தான் அகரன்.

இதழ் சிறையில் இருந்து விடுதலை கிடைத்ததும், தன் பலம் அனைத்தையும் திரட்டி “உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் என்னை தொடுவாய்” என்று அவன் உடல் எங்கும் வேகம் கொண்டு அடித்தாள், சுஹீரா. அவள் கொடுத்த அடியையும் சளைக்காமல் புன்னகையுடன் ஏற்று கொண்டிருந்தவன் அவள் கோபம் தணியும் நேரம் வரை காத்திருந்து அவள் கரம் பற்றி “உன் பிஞ்சு கைகள் தான் நோகும் கண்ணம்மா” என்று விரல்களில் இதழ் பதித்தான், அகரன்.

இவ்வளவு சொல்லியும் அடித்தும் கேட்கமால் மீண்டும் தெடுகின்றானே என்று தோன்ற என்ன செய்தால் இவன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்று யோசித்தவள் வேறு வழி தெரியாமல் பெண்கள் கண்ணீருக்கு பேயும் இறங்கும் என்பார்கள் இந்த அரக்கன் மனம் இறங்காதா! என என்று தனது குணத்திற்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத கண்ணீரில் காரியம் சாதிக்க நினைத்தவள், தன் கைகொண்டு முகம் மூடி அமர்ந்துகொண்டு உடல் குலுங்க கண்ணீரில் கரைந்திட துவங்கினாள். அவள் அழுவது புரிந்து “இங்கே பார் சுஹீ இதில் ஒன்றும் தவறு இல்லை நீ பேய் பயமிருக்கும் என்றாய் அல்லவா இனி அந்த பயம் இருக்காது இரவு எல்லாம் இந்த இதம் மட்டுமே இருக்கும் என்னை பார் சுஹீ” என்று அவளை சமாதான படுத்த முயன்றான் அகரன்.

தன் எண்ணம் ஈடேறி அகன் பணிந்து வருவது புரிந்து மேலும் தனது செயலை தொடர்ந்தாள், “என்னை பொறுத்தவரை திருமணத்திற்கு முன்பு இது தவறு பெரும் தவறு” என்றபடி மீண்டும் கண்ணீர் சிந்தினாள் தயவு செய்து “உன்னிடம் ஒரு உதவி கேட்கிறேன் இனி என்னை தொடாதே” என்று இரைஞ்சும் குரலில் கேட்டு கொண்டவள், தன் கண்ணீரை பார்த்து மனம் மாறி சரியென மாட்டானா என்று ஏக்கமாய் பார்த்தாள் சுஹீரா.

மறுப்பாய் தலையசைத்து “அது என்னால் நிச்சயம் முடியாது சுஹீ உன்னை நீ மாற்றிக்கொள் என்னால் உன்னை விலகி இருக்க முடியாது எனக்கு நீ வேண்டும் உன் அருகாமை வேண்டும் உன் அணைப்பு வேண்டும்”, ” பொய்யாய் விலகி இருக்கிறேன் என்று வாக்கு தந்து பின் அதை மீற எனக்கு விருப்பமில்லை“ உன் நெருக்கம் தரும் கிறக்கத்தில் என்னை மறந்து உன்னிடம் நெருங்குகின்றேன் நீ விலகிப்போனால் என்னால் தாங்க முடியாது, “உன்னை என் அருகிலேயே வைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் போவேன் நீ எனக்கு மட்டுமே சொந்தம் உன்னை யாருக்கும் விட்டு தரமாட்டேன்” என்று உணர்ச்சி வேகத்தில் தன்னை மறந்து தன் மனதின் வார்த்தை கூறிக்கொண்டிருந்தான் அகரன்.

சுஹீராவிற்கு ஒரு நொடி என்ன நடக்கின்றதென்றே புரியவில்லை “இவன் என்னை காதலிக்கின்றானா! இருவரும் சந்தித்து முழுதாய் ஒரு வாரம் கூட ஆகவில்லை” மூன்று முறை சந்தித்து உள்ளோம் அதிலும் காதல் வயப்படும் படி ஒரு மண்ணும் நடக்க வில்லை. “இதில் எங்கிருந்து இவனுக்கு மட்டும் காதல் வரும் நான் நினைத்தது போல் இவன் எண்ணம் தவறு தான் அதை நேரடியாக சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்று காதல் என்று கதை கட்டி அவன் எண்ணத்தை சாதித்துக்கொள்ள நினைக்கின்றான்” என்ற முடிவிற்கு வந்தாள் சுஹீரா இனி இவனை சந்திக்க வரவேக்கூடாது என்று தீர்க்கமாய் முடிவு எடுத்தாள், சுஹீரா.

“என்னை விட்டு நீயே விலக நினைத்தாலும் அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் உன் அப்பாவிற்கு தண்டனையும் தந்து உன்னையும் அடைந்தே தீருவேன்” என்று தனக்குள் சபதம் எடுத்தான் அகரன்.

உன் திமிர் பேச்சிலும்
ஏளன பார்வையிலும்
பகையெனும் கோட்டையை.
கட்டி வைத்தேன் நானடி
உன் இறைஞ்சும் பார்வையில்
இரக்கம் இன்றி
தகர்த்து எரிந்தாய் நீயடி!!!