அரக்கனோ அழகனோ 09

அரக்கனோ அழகனோ 09
0

அழகன் 9

விரலும் படாமல்
விலகி நிற்க நினைக்கிறேன்
உன்னை கண்டதும் நினைத்த
அனைத்தும் மறந்து
உன்னை அணைத்திட
துடிக்கிறேன்…

வார்த்தைகளால்
காயம் தந்த உன்
இதழுக்கு
என் இதழ் சிறையில்
அடைத்து
இதமாய் தண்டனை
தருகிறேன்…

தனக்குள் காதல் மலர்ந்தது எந்த நொடி என்று அறியாத அகரன் தன் காதலை உணர்ந்த நொடியில் புதிதாய் பிறந்தது போல் உணர்ந்தான். தனக்கு “காதல் பாடம் கற்றுத்தந்தவளுடன் பேச இதழ் துடித்தது, அவளைக் காண கண்கள் தவித்தது”, என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு மூளை மரத்துப்போனது போல வேலை செய்யமறுத்தது. சுஹீராவை தவிர வேறு சிந்தனை செய்ய விடாமல் சித்திரவதை செய்தது , என்றும் உணராத புது வித காதல் போதையில் தடுமாறி கொண்டிந்தான் அகரன்.

சுஹீராவிடம் பேச நினைத்து, அவள் எண்ணிற்கு மீண்டும் மீண்டும் அழைக்கபட்டும் பதில் இல்லாமல் போக இன்னும் என் மீது கோபத்தில் இருக்கின்றாள் போல என்று நினைத்தவன், “உன்னுடன் பேச வேண்டும்” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவளின் பதிலுக்காக காத்திருந்தான், அகரன்.

அகரன் நடந்து கொண்ட முறையில் இனி அவனை சந்திக்கவேகூடாது என்று முடிவில்  இருந்தவள் வேண்டும் என்றே அவன் அழைப்பை தவிர்த்தவள்,  “இவன் பெரிய மகாராஜா இவன் அழைப்பு  விடுத்ததும் அடிமை போல் இவன் முன் சென்று நிற்க வேண்டுமா” என்று எண்ணம் வர  பதிலும் அனுப்பாமல் அலட்சியம் செய்தாள்.

என்னவோ “ரொம்ப பேசினான் இப்போது என்ன செய்வான்” என்று அகரனை தவிர்த்ததையே தனது முதல் வெற்றியாய் எண்ணி சந்தோச களிப்பில் இருந்தாள் சுஹீரா. வெகு நேரம் கடந்தும் சுஹீராவிடமிருந்து எந்த பதிலும் வராமலிருக்க தனது லீகல் அட்வைஸரை அழைத்து சில விபரம் பேசிவிட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் நீயே என்னை அழைப்பாய் சுஹீ என்று இதழில் வெற்றி புன்னகையுடன் காத்திருந்தான், அகரன்.

மாலை தந்தைக்கு முன் வீடு வந்து சேர்ந்த சுகந்தன் முகம் சோர்வாய் இருந்தது வழக்கம் போல தன் அண்ணனுக்கு மாலை சிற்றுண்டி எடுத்து வந்த சுஹீரா அவன் முகத்தில் இருந்த கவலை கண்டு அகரன் தான் “உன் அண்ணனுக்கு எந்த பிரச்சனையும் தரமாட்டேன் என்று சொன்னான் பிறகு இன்னும் ஏன் அண்னன் கவலையாய் இருக்கின்றான்” என்று குழம்பி போனாள். “எதுவும் வேண்டாம்” என்று தவிர்த்து, தன் அறைக்கு சென்று வெகு நேரம் யாருக்கோ போன் பேச முயன்று கொண்டிருத்தான் சுகந்தன்.

சுஹீரா சுகந்தன் அறைக்கு சென்று “என்ன சுகன் இன்னும் என்ன பிரச்சனை அதான் அந்த அரக்கனோ அகரனோ ஏதே ஒன்று உனக்கு எப்போது முடியுமோ அப்போது பணத்தை திருப்பி தந்தால் போதும் என்றான் இல்லையா” இன்னும் என்ன மீண்டும் உண்னை மிரட்டுகின்றானா என்று வினவினாள் சுஹீரா.

அகரன் சார் நல்லவர் குட்டிமா அவர் ஏதும் பிரச்சனை செய்யவில்லை அவர் கம்பெனி லீகல் அட்வைஸர் அழைத்தார் “அகரன் சார் அப்பா ஊரில் இருந்து திரும்பி வந்து உள்ளார்” போல இவ்வளவு பணம் கடனாய் கொடுக்க பட்ட விபரம் அறிந்து “இன்னும் ஒரு வாரத்தில் பணத்தை கொடுத்துபத்திரத்தை மீட்கும்படி அறிவுருதினார், என்றார். நான் என் நண்பர்களிடம் கேட்டு உள்ளேன் எப்படியும் ஒருமாதத்தில் முழு பணத்தையும் கொடுத்துவிடலாம் ஒரு வாரத்தில் முடியாது அகரன் சார் சொன்னால் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் அதனால் தான் அவருக்கு முயன்று கொண்டு இருக்கிறேன் எடுக்கவில்லை மீட்டிங் ஏதும் போய் இருப்பார் போல என்று சுகந்தன் கவலையாய் கூறினான் சுகந்தன்.

சுஹீராவிற்கு இது அகரன் வேலை என்று தெளிவாய் தெரிந்தது அவன் அழைப்பை தவிர்த்ததால் இப்படி செய்கிறான் என்று புரிய சற்று முன்பிருந்த சந்தோசம் மறைய சோகத்தை சுமந்தது மனம், “நீ கவலை படாதே நீ இத்தனை முறை அழைத்து இருப்பதை பார்த்து அவர் வேலை முடிந்ததும் அவரே உன்னை மீண்டும் அழைப்பார்” என்று ஆறுதல் கூறிவிட்டு தன் அறைக்கு வந்து அகரனை தொடர்பு கொண்டாள் சுஹீரா.

இரண்டு மூன்று முறை முயன்று அவன் எடுக்காமல் இருக்க உங்களிடம் பேச வேண்டும் என்று செய்தி அனுப்பி வைத்தாள் வேண்டும் , என்றே செய்கிறான் என்று தெரிந்தும் தன் சூழ்நிலை உணர்ந்து அமைதியாய் இருந்தாள் சுஹீரா. சிறிது நேரம் கடந்து, “நான் ரொம்ப பிஸியாக பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறேன்” அதனால் உன்னுடன் பேச நேரம் இல்லை என்று பதில் செய்தி வர சுஹீரா கோபத்தில் கொந்தளித்தாள் “அரக்கன் அரக்கன் என் அண்ணன் பிடி மட்டும் உன் கையில் இல்லையென்றால் என் கையாலேயே உன்னை கொன்று என் கோபத்தை தீர்த்திருப்பேன்” என்று சினம் அடங்காமல் அவன் அனுப்பிய செய்தியை பார்த்து சீறி கொண்டு இருந்தாள், சுஹீரா.

பொறுமை காற்றில் பறக்கமீண்டும் அவன் எண்ணிற்கு அழைத்தாள் இம்முறை எடுத்தவன் “என்ன சுஹீ என்னிடம் பேசாமல் இருக்கமுடியவில்லை போல் நான் பிஸி என்று கூறியும் இப்படி தொந்தரவு செய்கின்றாய்” என்று கூறியவன் குரலில் கேலி நிறைந்து இருந்தது. தனது கோபத்தை முயன்ற அளவு மறைத்து கொண்டு, “உங்களிடம் பேச வேண்டும்” என்றவளிடம் , “ சரி நேரில் வா பேசலாம்” என்றவன் அலட்சியத்தில், மறைத்து வைத்துயிருந்த கோபம் வெளியே வர “நீ வா என்றதும் வருவதற்கும் போ என்றதும், செல்வதற்கு வேறு மாதிரி பெண்னை பார் என்னிடம் உன் வேலையை காட்டினால்” என்று கோபமாய் கூறிக்கொண்டு இருந்தாள் சுஹீரா.

அகரன் கோபமாய் நிறுத்து உன் உளறலை என்னிடம் பேசும் முன் யோசித்து பேசு சுஹீ “நான் நல்லவனோ பொறுமைசாலியோ இல்லை எப்போதும் என் கோபத்தை அடக்கிக்கொண்டு இருப்பேன்” என்று எதிர்பார்க்காதே இப்போதே நீ என்னை சந்திக்க வரவேண்டும், என்றவன் இடத்தை கூறி அழைப்பை துண்டித்தான் அகரன்.
இவனிடம் கோபம் காட்டினாலும் அது தனக்கு தான் இன்னலில் முடிகின்றது என்று புரிந்தும் இவன் செயலில் கோபம் வரத்தான் செய்கின்றது, சரியான அழுத்தக்காரன் அரக்கன் என்று மனதில் அர்ச்சனை செய்து கொண்டு வேறு வழியின்றி அவனை சந்திக்க கிளம்பினாள்.

வெளியே கிளம்ப தயாராகி வந்தவளை கண்டு “என்ன எங்கு கிளம்பிவிட்டாய் “ என்றார் சுபத்ரா. என் தோழிகளை பார்க்க அம்மா என்று சுஹீரா கூறவும் இன்று காலை தானே சந்தித்தாய் அதற்குள் என்ன ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது இருட்ட துவங்கிவிட்டது வெளியில் எங்கும் செல்லக்கூடாது, அப்படி பார்த்தே ஆக வேண்டும் என்றால் காலையில் உன் கல்லூரியில் சென்று பார்த்துக்கொள் என்று கட்டளை பிறப்பித்தார் சுபத்ரா.

“நான் மட்டும் அவனைக் காண ஆசையாகவா? செல்கிறேன், வேறுவழி தெரியாமல் நானே தத்தளித்து கொண்டு இருக்கின்றேன், இந்த அம்மா வேற நேரம் காலம் தெரியாமல் ராஜமாதா போல் கட்டளையிட்டு கொண்டு என்று கடுப்பில் முணுமுணுத்தவள், என்ன என்று கொஞ்சம் சத்தமாய் தான் சொல்லேன் நானும் கேட்டுக்கொள்கிறேன் என்று சுபத்ரா வினவ, சத்தமாய் தானே இதோ கேட்டு கொள் என்று “பாரதி பிறந்த மண் இது இன்னும் பெண்கள் ஆறு மணி கடந்தால் வீட்டு வாசல் கடக்கக்கூடாது, வீதியில் நிற்கக்கூடாது” என்று கட்டளையிடும் உன் போன்ற ஆட்களுக்காகவே பாரதி அந்த காலத்திலேயே எழுதி வைத்த பாடல் இது என்று, பாடல் வரிகளை கம்பீரத்துடன் உச்சரித்தாள் சுஹீரா.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.
கற்பு நிலை யென்று சொல்ல வந்தார் இரு
கக்ஷிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்கள்
இளைப்பில்லை காண்…”

இப்போது “பெண்கள் எதை கண்டு அஞ்சுவது இல்லை” என்று கர்வமாய் கூறிக்கொண்டு இருந்தாள், சுஹீரா. “சரியாய் சொன்னாய் குட்டிமா என்ன வரிகள் பாரதி சொன்ன போது தோன்றாத தித்திப்பு நீ உச்சரிக்கும் போது வருகின்றது” என்று மகேஸ்வரன் பெருமையுடன் கூற, “எல்லாம் நீங்கள் கொடுக்கும் இடம் தான் இந்த ஆட்டம் போடுகின்றாள்” இன்னேரம் என்ன தோழியை பார்க்க செல்வது என்று தன் கணவரிடம் முறையிட்டார் சுபத்ரா.

அவர்களுக்குள் பேசிக்கொள்ள எவ்வளவோ இருக்கும், அதை எல்லாம் உன்னிடம் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா “காலத்திற்கு ஏற்றது போல் உன்னை மாற்றிக்கொள்” என்று கடிந்து கொண்டவர், “நீ சென்று வா குட்டிமா பத்திரமாய் மட்டும் பார்த்து போ” என்று மகளுக்கு அனுமதி தந்தார், மகேஸ்வரன்.
தன்னை முறைத்து நின்று கொண்டிருந்த மனைவி புரம் திரும்பி “ரொம்ப அடக்கி வைத்ததால் தான் அத்துமீற தோன்றும் சுதந்திரம் கொடுத்து பார் இதை செய்யவா என்று உன்னிடம் உரிமையாய் வந்து நிற்பாள்”, எல்லாவற்றிற்கும் கட்டளையிட்டு கொண்டிருந்தால் , என்ன கேட்டாலும் மறுக்க தான் செய்வார்கள் என்று “தன் உரிமை மறுக்கப்படும் எண்ணம் வரவும் எல்லாவற்றையும் மறைக்க துவங்கிவிடுவார்கள்” என்று அறிவுரை கூறி சமாதானம் செய்தார் மகேஸ்வரன்.

சுஹீரா வீட்டைக்கடந்து தெரு முனைதாண்டும் போது சைடு மிரர் வழி அவளை கண்டவன், ஹாரனை அழுத்தினான், பலமாய் கார் ஹாரன் சத்தம் கேட்டு சுற்றும் முற்றும் பார்க்க ஒரு கார் நிற்க கண்டு அதன் அருகில் செல்லும்போதே “இந்த கார் இதே ஹாரன் சத்தம் அன்று வருனுடன் பேசும்போது” என்று யோசித்து கொண்டே வந்தவள் கார் அருகில் வரவும் முன் பக்க கதவை திறந்து அவளை ஏறும் படி செய்கை செய்தான் அகரன்.

இது இவன் கார் என்றால் அன்று வேண்டும் என்றே தான் ஹாரன் அடித்து கொண்டே இருந்தான் போல இப்படி எத்தனை நாள் என்னை கண்காணித்து கொண்டே இருந்தானோ என்று தோன்ற சந்தேகமாய் அவன் முகம் நோக்கினாள், சுஹீரா முகத்தில் இருந்த யோசனையை கண்டவன் அதன் காரணத்தை தவறாய் புரிந்து கொண்டு “என்ன வேறு இடத்திற்கு வரச்சொல்லி விட்டு இப்போது இங்கு வந்து நிற்கிறேன்” என்று யோசிக்கின்றாயா, எல்லாம் உன்னை பார்க்கும் ஆவல் தான் என்று சிரித்தான் அகரன்.

அதை ரசிக்க மனமில்லாமல் வெறித்து நோக்கிக்கொண்டு இருந்தாள் சுஹீரா, ஒரு கையால் காரை இயக்கி கொண்டு மறுகையால் சுஹீராவின் விரல் கோர்த்து கொண்டவன், அந்த இதம் தந்த சந்தோஷத்தில் மனதிற்கு பிடித்த பாடல் வரிகளை ரசித்து பாடிக்கொண்டே ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன் காரை நிறுத்தி காரை பார்க் செய்யும்படி சாவியை கொடுத்துவிட்டு தன் கை பிடியிலேயே உள்ளே அழைத்து சென்றான் அகரன்.

தனி அறை போல் இருந்த டேபிள் புக் செய்திருந்தான் அவ்விடம் முழுவதும் இருள் படர்ந்து இருக்க அவர்கள் முன் மட்டும் மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தது பின்னனியில் மெலிதாய் இசை முழங்க அந்த இடமே ஒருவித அமைதியில் இருந்தது, அந்த அமைதி சுஹீராவிற்கு மயான அமைதி உணர்வினை தர உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தது. திடீர்ரென்று ஒரு கை தன் இடையில் படர பதறி எழுந்தவள் அகரன் இழுக்கவும் அவன் மீதே சரிந்து விழுந்தாள்.” என்னை விடு அரக்கா” என்று விடுபட முயன்று முடியாமல் போக “என் அண்ணனை இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என்றாய், ஆனால் நீ உன் வாக்கை மீறி நடந்து கொண்டதும் இல்லாமல் என்னிடம் வேறு அத்துமீறப் பார்க்கின்றாயா” என்று கோபமாய் கூறியவள் வேகமாய் தன்னிடம் இருந்து அவனை விலக்க முயன்றாள்.

“உன் அண்ணனை தொந்தரவு செய்யமாட்டேன்” என்று சொன்னேன் ஆனால் நீ என்னுடன் இருக்கும் வரை என்றேன் அதை மறந்துவிடாதே உன்னிடம் அத்துமீற வில்லை “என் உரிமை என்னவென்று உனக்கு உணர்த்திக்கொண்டு இருக்கிறேன் என் உணர்வலைகளை உன் நெருக்கத்தில் அடக்க முயன்றுக்கொண்டு இருக்கிறேன்” என்று அவள் இதழில் தன் காதல் தேன் பருக துவங்கினான், அகரன்.

இனி இவனை சந்திக்கவே கூடாது என்று நினைத்தது மாறி இன்றே இருமுறை இவன் ஆசைக்கு இரையாகிக் கொண்டிருக்கும் தன் நிலை கண்டே கோபம் வர அவனிடம் இருந்து விடுபட போராடிக்கொண்டுயிருந்த கைகளை அகற்றிவிட்டு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியினை இறுக பற்றினாள் சுஹீரா.
திடுமென அறையில் இருள் அதிகம் உணர்ந்தவன் வலியில் அவள் முனங்கள் சத்தத்தில் சுஹீராவை விடுவித்து என்ன என்று கவனித்தான் சுஹீரா வலது உள்ளங்கையில் மெழுகுவர்த்தினால் சூடு பட்டிருந்தது, “தனக்கே ஏற்பட்ட வலியாய் உணர்ந்து துடித்தவன்” அந்த டேபிள் ஓரமாய் இருந்த ரிமோட் எடுத்து அறையின் விளக்குகளை ஒளிர செய்தான் அகரன்.

“உனக்கென்ன பைத்தியமா சுஹீ” என்று கடுமையாய் பேசியவன் அதற்கு நேர்எதிராய் மென்மையாய் அவள் கரம் பற்றி காயம்பட்டிருந்த இடத்தை நீரால் துடைத்து தன் கைகுட்டையை ஈரம் செய்து கையை சுற்றி க்கட்டிவிட்டான், வலியில் முகம் சுருங்க தன் வேதனை மறைக்க அவள் முயல்வது தாங்காமல் நெருங்கி அமர்ந்து கொண்டு “ரொம்ப எரிகின்றதா” என்று பற்றிய கையை விடாமல் வருத்தமாய் வினவினான் அகரன்.

இந்த எரிச்சலை விட “உன் நெருக்கம் தரும் எரிச்சல் தான் அதிகமாய் இருக்கிறது, என் குடும்பத்திற்காக உன் ஆசைக்கு இரையாவதை விட நிம்மதியாய் இந்த தீயில் எரிந்து விடுவேன்” என்று மரத்த குரலில் கூறினாள் சுஹீரா.

அகரன் கண்களில் கோபக்கனலும் கண்ணீர்த்துளியும் போட்டிப்போட்டுக்கொண்டு ஜொலித்தன, பற்றி இருந்த சுஹீரா கரத்திணை இறுகப்பற்றி தனது கோபத்தை வெளிப்படுத்தியவன், மறுகணம் இறுக அணைத்து தனது அன்பினை புரிய வைக்க முயன்றான்.

அகரனோ அவள் வலியை தன் வலியாய் உணர்ந்து துடித்துக்கொண்டு இருக்க யாருக்காக துடிக்கின்றானோ அவளோ வெற்று பார்வையில் வெறித்து கொண்டு இருந்தாள், தன் முன் சிலை போல் அமர்ந்து இருந்த தன் காதல் தேவதையை கண்ட அகரன் மனது தடுமாற தன் நிலை மறந்து அவள் கைகோர்த்து தன்புறம் நகர்த்தி கொண்டவன், சுஹீ உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் எப்படி சொல்வது என்று தெரியவில்லை ஆனால் சொல்ல வேண்டிய கட்டாயம் இப்போது வந்துவிட்டது, இப்போதும் உன்னிடம் சொல்லாமல் மறைத்தால்,
“நீ என்னை தவறாய் புரிந்து கொண்டு, உன்னை நீயே காயப்படுத்தி கொள்வாய்”, அதை என்னால் பார்க்க முடியாது, என்று தன் மனதின் எண்ணத்தை கூற துவங்கினான் அகரன்.

“எனக்கு நீ வேண்டும் சுஹீ! எப்போதும் வேண்டும், என்னுடன் எனக்கு மட்டுமே சொந்தமாய் கடைசிவரை வேண்டும், இப்படியே என்னை முறைத்து கொண்டு என்றாலும் எனக்கு சம்மதம் தான்” ஆனால் உன் அருகாமையில் அணைப்பில் என்று தன்னோடு சேர்த்து அணைத்தபடி தன் காதலை தனது ஆசைகளை உளறிகொண்டிருந்தான் அகரன்.

அவன் செயலில் மெல்ல மெல்ல சிலைக்கு உயிர்வர அவன் வார்த்தையின் பொருள் தவறாய் புரிந்து கொண்டவள் “உன்னுடன் உன் விருப்பபடி நடந்து கொண்டாள், என் அண்ணனை விட்டுவிடுவாய் அப்படித்தானே” என்று நிதானமாய் வினவியவள் “என்னையே அழித்துக்கொண்டு மரணத்தையும் துணிவுடன் ஏற்பேன் ஆனால் உனக்கு அடிபணிந்து என்றுமே நடக்கமாட்டேன்”, “உன் எண்ணம் கனவிலும் நிறைவேறாது என்னை நெருங்க நினைக்காதே” இப்போது காயம் கைகளில் மட்டும் தான் ஆனால் நீ மேலும் இது போல் முயன்றால் என்று பார்வையால் மிரட்டினாள், சுஹீரா.

கையில் பட்ட காயத்திற்கே இந்த துடுத்துடிப்பவன் தன் மிரட்டலுக்கு நிச்சயம் பயப்படுவான் இனி தன்னை நெருங்கவும் தயங்குவான் என்ற எண்ணத்தில் கூறியவள் இனி உன் விருப்பம் என்பது போல் அமைதியாய் அமர்ந்து இருக்க, அகரனோ சிறிதும் அசைந்து கொடுக்காமல், தன் கால் மேல் கால் போட்டு கொண்டு ஒற்றை புருவம் உயர்த்தி “என்னை விட்டு விலகுவது அவ்வளவு எளிது அல்ல, சுஹீ உன்னிடம் எத்தனை முறை சொல்வது யாருக்காகவும் உன்னை விட்டு தரமாட்டேன் என்னை எதிர்ப்பது நீயே என்றாலும் உன்னை வென்று உன்னை அடைவேன்” . எனக்கு வலிக்க வேண்டும் என்று “உன்னை நீயே காயப்படுத்தி இப்போது சொன்னது போல் முட்டாள் தனமாய் ஏதும் முயன்றால் எனக்கு வலிக்கும் தான் அந்த வலியை உனக்கு திருப்பி கொடுக்க உன் குடும்பத்தை காயப்படுத்துவேன் நான்” இனி உன் மீது துரும்பு விழுந்தாலும் அதற்கான தண்டனை உன் பாசமலர் அண்ணனுக்கும் அன்பான அப்பாவிற்கும் தான் கிடைக்கும். “உன் உயிர் பிரிந்தாலும் உன் உயிருக்கு உயிரான குடும்பம் இரு மடங்கு தண்டனை அனுபவிக்கும்” என்று எச்சரித்தான் அகரன்.

எப்படி என்று பார்கின்றாயா “ஒரு சாம்பிள் காட்டட்டுமா “ என்று தன்  போனில் யாரையோ அழைத்து ஸ்பீக்கர் ஆன் செய்தவன் எதிர் பக்கம்  ஒருவர் வணக்கம் அகரன் சார் என்ன இந்த நேரம் எந்த பிரச்சனையும் இல்லையே என்று வினவ, “ஒன்றும் இல்லை சிறு விபரம் கேட்கவேண்டும் சுகந்தன் என்பர் கடன் விபரம் சொல்லியிருந்தேன் இல்லையா!” அது பற்றி இன்னும் சில விளக்கம் வேண்டும் எனவும், “மிஸ்டர் சுகந்தன் ஒரு  மாதத்தில் திருப்புவதாய் வாங்கிய பணத்தை திரும்பத்தராத காரணத்தால்”, மோசடி வழக்கு பதிய முடியும் மேலும் இரு வழக்குகள் பதியலாம் அதன் பின் அவருக்கு   ஜாமீன் கையெழுத்துப்போட்டு உள்ள மிஸ்டர் மகேஸ்வரனும் உடந்தை என்று இருவரையும் சில வருடங்கள் உள்ளே தள்ளி விடலாம் என்று கூறினார் போனில் பேசிய நபர். 

நன்றி தமிழ் உங்கள் விளக்கம் நிச்சயம் உபயோகமாய் இருக்கும் என்று அழைப்பை துண்டித்துவிட்டு அரண்டிருந்த சுஹீரா முகத்தை இரக்கமாய் பார்த்தவன், “உன் மரணம் கூட உன்னை நெருங்கும் முன் என்னிடம் போரிட வேண்டும் சுஹீ, என்னை வென்று கொன்ற பின்பு தான் உன்னிடமே நெருங்க முடியும்” என்று தீர்க்கமாய் கூறினான் அகரன்.

விடுதலை இல்லா சிறையில் சிக்கிக்கொண்டு பேச வழியின்றி கண்ணீரில் கரைந்தாள் சுஹீரா, அவள் கண்ணீரை மெதுவாய் துடைத்து விட்டவன் “எனக்கு நீ உனக்கு நான் இதை மாற்ற முயலாதே” சுஹீ என்றவன், “வா ஹாஸ்பிடல் போகலாம்” என்று டேபிளில் சில ஆயிரங்கள் வைத்து விட்டு தன்னவள் கரம் பற்றி அழைத்து சென்றான் அகரன்.

செல்லும் வழியில் இருந்த ஒரு மருத்துவமனை முன்பு காரை நிறுத்தி உள்ளே அழைத்து சென்று காயத்திற்கு மருந்திட்டு வலி தெரியாமலிருக்க ஒரு இன்ஜக்க்ஷன் போட வேண்டும் எனவும் அவளுக்கு வலிக்கும் வேண்டாம் என்று அகரன் மறுத்தான். “இன்ஜக்க்ஷன் போடவில்லை என்றால் காயத்தின் வலி அதிகமாய் இருக்கும்” எனவும் சரி என்று ஒத்து கொண்டவன், “சுஹீராவை இறுக பிடித்துக் கொண்டு மறுபுறம் திரும்பி தன் வேதனையை மறைத்து கொண்டான் “ அகரன்.

அவன் செயலை கண்டவளுக்கு குழப்பம் அதிகமானது “இது என்ன மாதிரி அன்பு காதல் என்பது மென்மையானது என்று தானே சொல்வார்கள், இது காதலின் வேறு வகையா”, நான் வேண்டும் என் குடும்பம் வேண்டாம்” எனக்கு வலி இவன் கொடுக்கலாம் வேறு யாரும் கொடுக்கக்கூடாது” என்று நினைக்கிறான் , இவனை புரிந்து கொள்ள முடியவில்லையே என்று தனக்குள் புலம்பி தவித்தாள் சுஹீரா.

வீட்டு தெருமுனை தாண்டி கார் செல்ல இங்கேயே இறக்கிவிடு என்று கூறி காரை நிறுத்த சொன்னவள் இறங்காமலிருக்க இன்னும் என்னடா என்றான் அகரன். “நீ இன்னும் சுகனிடம் பேசவில்லையே” அவன் கவலையாய் இருப்பான் எனவும் வாய்விட்டு சிரித்தவன் “உன் காரியத்தில் மட்டும் கவனமாய் இரு” என்று அவள் இடையை சுற்றி கைபோட்டு கொண்டு சுகந்தனை அழைத்தான்.

அகரன் வருடலில் கூச்சம் பிறக்க உடல் நெளிந்தவளை ஸ்ஷ்… என்று செய்கை செய்து விட்டு “என்ன மிஸ்டர் சுகந்தன் பலமுறை அழைத்து இருந்தீர்கள்” என்று தெரியாதது போல் வினவினான் அகரன். சுகந்தன் காரணம் கூறி முடிக்க நான் அப்பாவிடம் பேசி கொள்கிறேன் “இனி இந்த தவறு நேராது என்று சுஹீராவை பார்த்தவன்” “நேராது” என்று அழுத்தம் கொடுத்து மீண்டும் உச்சரிக்க இது தனக்காக கேட்கபட்டது என்று புரிய ஆமாம் என்று தலையாட்டியவள், கரம் பற்றி இதழ் ஒற்றினான், அகரன் சுகந்தனிடம் பேசி முடித்ததும் விடை பெற்று கிளம்பினாள் சுஹீரா.

அவள் வீட்டின் உள்ளே செல்லும் வரை பார்த்து இருந்தவன் அவள் உருவம் மறையவும் காரை கிளப்பிகொண்டு சென்றான் அகரன். வீட்டின் உள்ளே நுழைந்ததும் சந்தோசமாய் வந்த சுகன் நீ சொன்னது போல் அகரன் சார் மீண்டும் போன் செய்தார் இனி பிரச்சனை இல்லை என்று சுஹீரா காதுக்குள் முணுமுணுத்தவன் அவள் கையில் இருந்த கட்டினை கண்டு “என்ன குட்டிமா எப்படி அடி பட்டது” என்று பதறினான் சுகந்தன் குரல் கேட்டு மகேஸ்வரனும், சுபத்ராவும் கவனிக்க அவர்களின் அளவில்லா பாசத்தால் திட்டுகளையும் வாங்கிக்கொண்டு அக்கறையையும் அனுபவித்தாள் சுஹீரா.

மகேஸ்வரன் உணவு ஊட்டி விட ஏதும் சொல்லாமல் உண்டு முடித்து தன் அறைக்குள் சென்று முடங்கினாள் சுஹீரா. அகரனிடம் இருந்து விடுதலை பெறுவது சாதாரண காரியமில்லை “முள் மீது விழுந்த சேலையை போல் பொறுமையாய் தான் விலக்கவேண்டும்” அவசரபட்டால் தங்களுக்கு தான் நஷ்டமென்று சிந்தித்தவள் அவன் கொண்டது காதலா இல்லை அவனிடம் அடங்க மறுப்பதால் வந்த பிடிவாதமா என்று புரியவில்லை, “இனி யாரும் இல்லா தனிமையில் சந்திக்ககூடாது ஆள் நடமாட்டம் உள்ள பொது இடத்தில வைத்து சந்திக்க வேண்டும் சில காலம் முயன்று பார்த்துவிட்டு பின் சலித்துப்போய் அவனே விலகிவிடுவான் என்று பிடிவாதக்காரன் அகரனின் காதல் அறியாமல் தனக்குத்தானே ஒரு முடிவிற்கு வந்தாள் சுஹீரா.

சுஹீராவிடம் தன் காதலையும் தனக்கு அவள் எந்த அளவிற்கு முக்கியம் தன்னை பிரியநினைத்தால் என்ன நேரும் என்றும் தெளிவாய் சொல்லிவிட்ட நிம்மதியில் இனி சுஹீ என்னை விலகமாட்டாள் என்று மகிழ்ச்சியில் இருந்தான் அகரன்.

பணம் இருந்தால் போதும்
எதையும் சாதித்து விடலாம்
என்ற என் கர்வத்தை
நீ தர மறுக்கும் காதல்
வேரோடு சாய்க்குதடி…