அரக்கனோ அழகனோ 10

அரக்கனோ அழகனோ 10
0

அழகன்10

வேங்கை நீயென்றால்
உன்னை வீழ்த்தும்
வேடன் நானென்று
மமதையில் திரிந்தேனடி…
உன் வேல்விழியில்
சிக்கிக்கொண்டு
காதல் வேட்கையில்
அலைகிறேன் ஏனடி…

உன் கண்களை
கண்ட நொடி
என்னை மறந்தேனடி…
உன் காதலில் கலந்திட
என் கர்வம் களைந்து
உன்னில் தொலைந்தேனடி…

சுஹீராவை அவள் வீட்டில் விட்டுவிட்டு தன் வீடு வந்து சேர்ந்தவன் காரை விட்டு இறங்கியதும் சுஹீராவை தொடர்புகொண்டான் “பிறகு அழைக்கிறேன்” என்று செய்தி மட்டும் பதிலாய் வர சரி இதுவாவது சொல்லத்தோன்றியதே என்று நினைத்துக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றான் அகரன்.

அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க அகரனை கண்டதும், எழுந்து வந்த கலையரசி வாங்க மாப்பிள்ளை என்று வாய் நிறைய அழைத்து, ஒரே அலைச்சல் போல அதான் அப்போது கோபத்தில் பேசிவிட்டீர்கள் அதையெல்லாம் “நான் தவறாகவே எடுத்து கொள்ளவில்லை“அப்பா உங்களிடம் பேச வேண்டும் என்கின்றார், என்று பவ்வியமாய் கூறினர் கலையரசி.

சில மணி நேரத்திற்கு முன் இந்த மாப்பிள்ளை பட்டம் பறந்து வாபோ என்று ஏக வசனத்தில் அழைத்தவர், இப்போது மீண்டும் மாப்பிள்ளை என்று அழைப்பதை எண்ணி தனக்குள் ஏளனமாய் சிரித்தபடி தனது தந்தை முன் சென்று அமர்ந்தான் அகரன்.

எப்படி துவங்குவது என்று யோசனையில் ஈஸ்வர் அமைதியாயிருக்க ஏதோ பேசவேண்டும் என்று சொல்லிவிட்டு இப்படி அமைதியாய் இருந்தால் எப்படி என்றான் அகரன், தன்னை நிலைப்படுத்தி கொண்டு “உனக்கும் அதிகாவிற்கும் திருமணம் செய்யலாம் என்று பெரியவர்கள் நாங்கள் முடிவு எடுத்து உள்ளோம்” என்று ஈஸ்வர் கூறி முடிக்க, உங்கள் முடிவு மட்டும் போதுமா “மாலையே என் முடிவு என்ன என்று தெளிவாய் சொல்லிவிட்டேன்” இதற்கு மேல் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் “என் வாழ்வை முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை” என்று தீர்மானக் குரலில் கூறினான் அகரன்.

ஒரு முடிவு எடுத்தால் எளிதில் மாறாத மகன் குணம் அறிந்தவர் “சரி இதற்கு மேல் உன் விருப்பம்” என்று விட்டு கொடுத்தார், ஈஸ்வர். கலையரசிக்கு அவ்வளவு எளிதில்விட மனமின்றி அகரனுக்கு இருக்கும் தாத்தா பாசத்தை வைத்து காரியம் சாதிக்க நினைத்தார் அதுவே அவருக்கு வினையாக போகின்றது என்று தெரியாமல், பேச துவங்கினார் கலையரசி.
“தாத்தாவின் ஆசைகூட இதுவாக தான் இருந்திருக்கும் அவர் மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நீ எடுத்துதெறிந்து பேச அனுமதித்து இருக்க மாட்டார், அவரே உங்கள் திருமணத்தை முன் நின்று நடத்திவைப்பார்” என்று கண்ணீர் சிந்தினார் கலையரசி.

அவரின் திட்டம் என்ன என்று அறியப்பெற்ற அகரன் தாத்தா விருப்பம் ஆசை என்ன என்று எனக்கு நன்கு தெரியும் “எல்லாம் நடந்த போது நான் ஒன்றும் கைக்குழந்தை இல்லை ஓரளவு விவரம் தெரிந்த பையன் என்னை சுற்றி என்ன நடந்தது என்று தெளிவாய் மனதில் பதியும் வயது” அன்று நடந்த ஒவ்வொரு விசயமும் எனக்கு நினைவு உள்ளது. தாத்தா மட்டும் இப்போது இங்கிருந்திருந்தால் இப்படி வீட்டின் உள்ளே நின்று அதிகாரமாய் பேசி கொண்டு இருந்திருக்கமாட்டீர்கள் “நடந்தது எதையும் நான் மறக்கவில்லை மறக்க போவதும் இல்லை அப்பாவும் அம்மவும் பெருந்தன்மையாக உங்களை மன்னித்தார்கள் ஆனால் என்னிடம் அதை எதிர் பார்க்காதீர்கள்” என்று கடுமையாய் பேசிவிட்டு எனக்கு உணவு என் அறைக்கு அனுப்பிவையுங்கள் என்று உத்தரவிட்டு சென்றான் அகரன்.

பார்த்தாயா அண்ணா “உன் மகன் பேசும் அழகை உன் முன்பே எப்படி எடுத்துத்எறிந்து பேசுகின்றான் எல்லாம் உன் மனைவி வளர்ப்பு நம்மை போல் கௌரவமான குடும்பத்தில் பெண் எடுத்திருந்தால் இதுபோல் நடந்து இருக்குமா அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாமல் வாழ்ந்த குடும்பம் தானே” அதான் அதன் புத்தியை காட்டுகின்றது, “உன் பிள்ளை உன்னை போல் பெருந்தன்மையானவன் இல்லை அண்ணா உன் மனைவியை போல, குறுகிய மனம் கொண்டவன்”, அவர்கள் தான் எங்கு என் மகளை அகரன் கட்டிக்கொண்டால் இந்த வீட்டின் சரிபாதி உரிமை எனக்கு கிடைத்துவிடும் என்ற கெட்ட எண்ணத்தில் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மாப்பிள்ளை மனதை மாற்றிவிட்டார் அதானல் தான் இப்படி எடுத்தெறிந்து பேசுகின்றான் என்று கலையரசி யமுனைவின் மீது குற்றத்தை சுமத்த துவங்கினர்.

“போதும் கலையரசி பாவம் ஒரு பக்கம் பழி ஒருப்பக்கமா அகரன் யார் வளர்ப்பு யாரின் குணம் என்று உனக்கும் நன்றாக தெரியும் “ தேவையில்லாமல் இதில் யமுனவை இழுக்காதே , அகரனை எதிர்த்து பேசவே பயப்படுபவள் இவள் சொல்லி கொடுத்து கேட்டு நடப்பவனா அகரன் , “அவனுக்கு சரி என்பதை மட்டும் தான் செய்வான் அவனுக்கு விருப்பம் இல்லை என்று தெளிவாய் சொன்ன பின் கட்டாய படுத்த முடியாது அப்படி கட்டாயப்படுத்தினால் பின் அவன் கோபத்தையும் வெறுப்பையும் தாங்க முடியாது” இதற்கு மேல் இவர்கள் இருவரின் திருமணம் பற்றி பேசதே, “அதிகாவிற்கு வேறு நல்ல இடம் பார்த்து திருமணத்தை முன் நின்று எந்த குறையுமில்லாமல் நானே நடத்திவைக்கிறேன்” என்று இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்று ஈஸ்வர் பேச்சை முடித்துவைத்தார்.

கோபமாய் தன் மகளை இழுத்துச்சென்ற கலையரசியை வெற்று பார்வை பார்த்தவர் யமுனா “என் தங்கை மீது இருந்த பாசத்தில் உனக்கு தான் மீண்டும் தொந்தரவு கொடுத்துவிட்டேன்” , பல கஷ்டங்களை பார்த்த பின் கலை குணம் கொஞ்சமாவது மாறி இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் என் எண்ணம் தவறு அப்பா கணிப்பு மட்டுமே சரியாய் இருந்துள்ளது என்று மன்னிப்பு வேண்டும் குரலில் ஈஸ்வர் மனைவியிடம் வேண்டிட, “கலை குணம் எனக்கு தெரியாத என்ன? நான் எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை” என்று மாறாத புன்னகையுடன் அகரனுக்கு உணவு அனுப்பும்படி கூற சமையல் அறைக்கு சென்றார் யமுனா.
கலையரசி முன் சிந்தனை படிந்த முகத்துடன் அமர்ந்து இருந்தாள் அதிகா இன்று அகரன் பேசியதை வைத்து பார்க்கும் போது தாத்தா கோபத்திற்கு அம்மாவின் காதல் திருமணம் மட்டும் காரணம் இல்லையோ என்று தோன்ற துவங்கியது, மாமாவும் அத்தையும் கூட கரனை எதிர்த்து அம்மாவிற்கு சாதகமாய் பேசாமல் இருப்பதை பார்த்தால், தவறு அம்மா மீது என்று தெளிவாய் புரிந்தது என்ன நடந்து இருக்கும் யாரிடம் கேட்கலாம் , மாமாவும் அத்தையும் இதை பற்றி கூற மாட்டார்கள் கரண் பக்கத்தில் கூட செல்லமுடியாது இதற்கு ஒரே வழி அம்மாவே அவர்கள் வாய் திறந்து அவர்களின் திருவிளையாடலை கூறினாள் மட்டுமே முடியும் என்று புரிய, அம்மாவிடம் இருந்து அவ்வளவு எளிதில் எதையும் கறக்கமுடியாது அதற்கு அவர்கள் வழியில் சென்றே அவர்களை மடக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள் அதிகா.

“இந்த கரனுக்கு என்ன திமிர் பார்த்தீர்களா அம்மா நீங்கள் ஏன் என்னை அவசரப்பட்டு அழைத்து வந்தீர்கள் நாளு கேள்வி அந்த கரணை பார்த்து கேட்டால் தான் என் மனம் ஆறும்” நீங்கள் அப்படி என்ன கொலைக் குற்றமா செய்தீர்கள் காதல் திருமணம் அதற்கு போய் இப்படியா நடத்துவது இந்த காலத்தில் யார் தான் செய்யவில்லை காதல் பெரிதாய் பேச வந்து விட்டான், “நீங்கள் அவனை சும்மா விட்டு இருக்க கூடாது அம்மா சரியான பாடம் கற்பித்தே ஆகவேண்டும் உனக்கு பிழைக்கவே தெரியவில்லை” என்னிடம் மட்டும் இந்த குடும்பம் மாட்டியிருந்தால், இவர்களை என் கண் பார்வையிலேயே மிரளவைத்திருப்பேன் என்று கலையரசியை திட்டித்தீர்த்தாள் அதிகா.

மகள் தன் திறமையை குறைத்து எடை போடுவது தாங்கிக்கொள்ள முடியாமல் தான் செய்த வீரதீர செயல்களை பறைசாற்ற துவங்கினர் கலையரசி. இந்த வீட்டின் இளவரசி போல வாழ்ந்தவள் நான், “என்னை கண்டாலே வீட்டின் வேலையாட்கள் முதற்கொண்டு அனைவரும் பயப்படுவார்” என் முன் நின்று பேசவும் தயங்குவர் என் அண்ணனை கட்டுப்பாடுடன் வளர்த்தவர் அதற்கு நேர்எதிராய் எல்லா சுதந்திரமும் எனக்கு கொடுத்து செல்லமாய் வளர்த்தார் உன் தாத்தா, இங்கு நான் வைத்தது தான் சட்டம் இப்படி இருக்கும் போது தான், உன் மாமாவிற்கு பெண் பார்க்க துவங்கினர் எல்லா வசதியான இடத்திலிருந்தும் நான் நீ என போட்டிக்போட்டு கொண்டு வந்தனர், ஏனோ என் நடவடிக்கையில் என் பிடிவாதத்தில் விருப்பம் இல்லாமலிருந்த உன் பாட்டி வசதியான குடும்ப பெண் வேண்டாம்” என்று குடும்பத்திற்கு அடக்க ஒடுக்கமாய் இருந்தால் போதும் என்று அடுத்த வேலை சோற்றுக்கு வகையாற்றுயிருந்த தனது துரத்து சொந்தமான இந்த யமுனவை அண்ணனுக்கு கட்டி வைத்தார்.

திருமணம் ஆன புதிதில் எலும்பும் தோலுமாய் இருந்தவள் கொஞ்ச நாட்களிலேயே பளபள என மின்ன துவங்கினாள் நகையும் பட்டும் என்று இந்த வீட்டின் எஜமானி போல் ஜொலிக்க துவங்கிவிட்டாள் “என்னிடம் இல்லாத பொறுமையும் அடக்கமும் அவளிடம் இருப்பதாய்” என் கண்முன்பே இந்த பஞ்சம் பிழைக்க வந்தவளை புகழத்துவங்கிவிட்டார், உன் பாட்டி. நான் விடுவேனா யாரும் அறியாமல் யமுனவை என் வார்த்தைகளால் குத்திகுதறி எடுத்துவிடுவேன் இந்த வீட்டின் செல்ல மகளான என்னை எதிர்க்கவும் தைரியமின்றி வாய்யில்லா பூச்சியாய் மாறிப் போனாள் யமுனா.

இந்த அகரன் வயிற்றில் வந்ததும் அவளை தலை மேல் தூக்கிவைத்து கொண்டாட துவங்கிவிட்டனர் நான் இளவரசியாக இடத்தில் இன்னூறுத்தியை கொண்டாடுவதை என்னால் தாங்கமுடியவில்லை “ஒருமுறை மாடி படியில் இருந்து கூட தள்ளிவிட முயன்றேன் தப்பித்து விட்டாள், நான் செய்யும் கொடுமைகளை யாரிடமும் மூச்சுக்கூட விடாமல் இருந்தாள் அந்த அளவிற்கு அவளுக்கு என் மீது பயம்”, அகரனும் பிறந்தான் மூத்த வாரிசு என்று தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர் ஆனால் எனக்கு வெறுப்பாய் இருந்தது. “இந்த அகரன் வேறு எல்லா செயலிலும் அப்படியே உன் தாத்தாவை உரித்துவைத்திருந்தான்” அதனால் அவனுக்கு செல்லம் கூடியது என்னால் தாங்க முடியவில்லை மறைமுகமாய் யமுனைவிற்கும் அகரனுக்கு தொந்தரவு கொடுத்தேன் பஞ்சப்பரதேசி வீட்டு வாரிசா என்று அவனை மட்டம் தட்டினேன். ஒரு நாள் அகரன் நடவடிக்கை வைத்து உன் பாட்டி என்னை கண்டுபிடித்து விட்டார் இனி நான் இங்கு இருந்தால் ஆபத்து என்று புரிந்து கொண்டவர், அவசரவசரமாய் எனது திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர் ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்போது தான் “உன் அப்பா நம் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார் நன்கு படித்தவர் பார்க்க அழகாகவும் இருப்பார் எனக்கு அவரை பிடித்துவிட்டது” பின் உன் தாத்தா எனக்கு ஏற்பாடு செய்த திருமணத்தை என் சதி திட்டத்தால் நிறுத்தினேன் அதன் பின் உன் அப்பாவை பிடித்து உள்ளதாக கூறவும் அவரையே திருமணம் செய்து வைத்து வீட்டோடு மாப்பிள்ளையாக அவரும் இருந்தார்.

எல்லாம் நல்ல படியாக தான் போய்க்கொண்டு இருந்தது ஆனால் நீ எனக்கு கிடைக்க மூன்று வருடங்கள் ஆனது எனக்கு ஒன்றும் இல்லாமல் இருக்க மீண்டும் யமுனா கற்பமானாள் “இந்த முறை என் முயற்சி தோல்வி அடையாமல் சரியாய் நடந்தது” யமுனா கரு கலைந்தது இனி கருவுற வாய்ப்பே இல்லை என்று ஆனது. எனக்கு நீ பிறந்தாய் இருந்தும் உன்னைவிட அகரனுக்கே முன்னுரிமை கிடைத்தது உன் தாத்தாவிற்கு அகரன் மீது பாச பைத்தியம் அதிகமானது சொத்தை எல்லாம் அவன் பெயருக்கு மாற்றத்துவங்கிவிட்டார் . அகரனை வெறுத்தேன் போக போக என் குணமும் எண்ணமும் உன் தாத்தாவிற்கும் புரிய துவங்கியது , என் மீது இருந்த பாசத்தில் எதையும் கண்டும் காணாமல் இருப்பது போல் ஒதுங்கி இருந்து கொண்டார் உன் தாத்தா.

உனக்கும் அகரனுக்கும் தான் திருமணம் என்று எல்லோர் காது படவும் பேச துவங்கினேன் அதை மறைமுகமாக யமுனா எதிர்க்க உன் தாத்தா அதற்கு வாய்ப்பேஇல்லை என்று என் திட்டத்தில் மண்ணை அள்ளி போட்டார். “ஒரு நாள் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்த யமுனா எங்கள் குடும்ப சொத்தான வைர நகைகளை அணிந்து சென்று இருந்தாள், அதில் அவ்வளவு அழகாக இருந்தாள், நகைகள் எல்லாம் அவளுக்கே செய்தது போல் பொருத்தமாய் இருந்தது. “நாதியற்றவளுக்கு வந்த வாழ்வை பார் என்று என் வயிறு எரிந்தது” இப்படியே விட்டால் எனக்கு ஒன்றும் இல்லாமல் போய் விடும் என்று அதற்கும் ஒரு திட்டம் தீட்டி அவளை இந்த வீட்டை விட்டே வெளியே செல்ல வழி செய்தேன், நகைகளை கழட்டி வைத்துவிட்டு அவள் குளிக்கச்சென்று வருவதற்குள் எல்லாவற்றையும் யாருக்கும் தெரியாமல் கொண்டுவந்துவிட்டேன் நகை காணாமல் போன பழியை யமுனா மீதே சுமத்தினேன். டஉன் தாத்தாவும் என் பேச்சை நம்பி அவளை வீட்டை விட்டே வெளியேற்றினர் இது தான் தருணம் என்று அகரனையும் சேர்த்து துரத்திவிட்டேன் “. எல்லாம் நல்லபடியாக தான் நடந்தது உன் அப்பா கையில் அந்த நகைகள் கிடைக்கும் வரை, நகையை கண்டவர் நடந்ததை ஓரளவிற்கு யூகித்து உன் தாத்தாவிடம் போய் உண்மையை உளறி நகையை ஒப்படைத்து விட்டார். “அதன் பின் என்ன உன் தாத்தா கோபம் தான் தெரியுமே, இந்த அகரன் போல தான் கண்மண்தெரியமல் வரும், உன் பாட்டியும் பெற்ற மகளுக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கின்றது என்று வருத்தம் சிறிதுமில்லாமல், யமுனைவிற்கும் அகரனுக்கும் செய்ததை அவர் அறிந்தவரை மட்டும் கூறி இன்னும் உன் தாத்தாவின் கோபத்தை அதிகரிக்க வைத்துவிட்டார்”. நம்மை வீட்டை விட்டு வெளியேற்றினார் அவர்களை மீண்டும் அழைத்து வந்து வீட்டில் சேர்த்து கொண்டார்.

நான் அப்படியே விடுவேனா சொத்தில் சரி பங்கு வேண்டும் என்று சண்டை போட்டேன் ஆனால் உன் அப்பா அதையும் கெடுத்துவிட்டார், அடுத்தவர் சொத்து எங்களுக்கு வேண்டாம் என்று உத்தமானாய் வாழ்ந்து உத்தமராகவே போய் சேர்ந்தார். “நாதியற்று இங்கு வந்து நின்றேன் அப்போதும் என்னை மன்னிக்காமல் துரத்தினார் பாம்பிற்கு பாலை வார்த்தாலும் அது பதிலுக்கு விஷத்தைத்தான் கொடுக்கும் இவள் குணம் என்றும் மாறாது என்றுமே என்னை இந்த வீட்டின் உள்ளே சேர்க்க கூடாது” என்று உத்தரவிட்டார் யமுனாவும் நான் செய்ததை எல்லாம் மனதில் வைத்து அமைதியாயிருந்து காரியம் சாதித்து கொண்டாள். “பின் ஒரு ஆதரவு அற்ற இல்லத்தில் உன்னையும் அழைத்து கொண்டுப்போய் சேர்ந்தேன்” அதன் பின் உன் பாட்டி தாத்தா இறக்கவும் நம்மை தேடிவந்தனர். எதையும் நான் மறக்கவில்லை “நான் பட்ட கஷ்டத்திற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று நடந்தவற்றை மறைக்காமல் ஆவேசமாய் கூறி முடித்தார் கலையரசி.

இதுவரை தன்னிடம் காதல் திருமணம் செய்ததால் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தனர் என்று மட்டுமே கதை சொல்லிக்கொண்டு இருந்த அன்னையின் சுயரூபம் தெரியவர அதிர்ந்து போனாள் அதிகா. இவ்வளவு தவறு செய்தும் மன்னித்து பெருந்தன்மையாய் சொத்தையும் எழுதிவைத்த மாமாவை கூட செய்தபாவத்தை தீர்த்து கொள்ள நடிப்பதாக கூறிய தாயின் முகம் காணக்கூட கூசியது, தன் சொந்த அண்ணன் குடும்பத்திற்கே இவ்வளவு பெரிய துரோகம் செய்து விட்டு மன்னித்து இரக்கம் காட்டும் அந்த அன்பானவர்களுக்கு இன்னும் கெடுதல் நினைக்கும் கலையரசியை கோபமாய் பார்த்தாள் அதிகா.

உன் மகள் என்று சொல்லுவதற்கு கூட அசிங்கமாய் உள்ளது இதுவரை “நீ சொன்ன பொய்களை நம்பி தேவையில்லாமல் அன்பான என் அத்தை மாமா பாசத்தை இழந்துவிட்டேன் “ இனியும் இந்த தவறு செய்ய மாட்டேன் எனக்கும் கரனுக்கு திருமணம் செய்து வைத்து இன்னும் அவர்களின் குடும்பத்திற்கு கெடுதல் செய்யப்பார்கின்றாயா, “அதற்கு நான் அனுமதிக்கமாட்டேன் கரணே மனம் மாறி என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால் கூட நான் அதற்கு ஒத்துக்கொள்ளமாட்டேன்” உன் திட்டத்தை ஜெயிக்க விடமாட்டேன், “நான் என் அப்பா வாரிசு அடுத்தவர் சொத்து எனக்கு தேவையில்லை” இனியும் என் அத்தை மாமா குடும்பத்திற்கு கெடுதல் செய்யநினைத்தால் உன் வாரிசு என்று நிரூபிக்க உனக்கே எமனாகி விடுவேன் என்று தன் முன் முதன்முறை குரலை உயர்த்தி பேசிய தனது மகளை மிரட்சியுடன் பார்த்து கொண்டு இருந்தார் கலையரசி.

பிறகு அழைக்கிறேன் என்ற சுஹீ மீண்டும் அழைக்காமல் இருக்க சுஹீயின் நினைவிலேயேயிருந்தவன் தனது போன் அடித்ததும் யாரென்றும் பாராமல் அட்டன் செய்தவன் “உனக்கு கை வலிக்கின்றதா? இன்ஜக்க்ஷன் போட்டது வலிக்கின்றதா? மறக்காமல் மருந்து போட்டுக்கொள், சாப்பிட்ட பின் தான் மாத்திரை போட வேண்டும் மறந்திடாதே” என்று எதிரில் இருப்பவர் பேச இடம் தராமல் பேசிக்கொண்டே இருந்தான் அகரன்.

பாஸ்… “எனக்கு கைவலி என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது”, பாஸ் நான் உங்களிடம் சொல்லவே இல்லையே உங்களுக்கும் எனக்கும் என்ன ஒரு பாசப்பிணைப்பு என்று பார்த்தீர்களா நீங்கள் பயப்படும் அளவிற்கு பெரிய அடி இல்லை பாஸ்… “இன்று மீட்டிங் ஏற்பாடு செய்யும் போது கையில் லேசாய் அடி சேர் தூக்கிக்சென்றவன் கையில் இடித்துவிட்டான்” அவன் மீது தவறு இல்லை நான் தான் கவனிக்காமல் சென்றுவிட்டேன் என் மீது உள்ள அளவில்லா பாசத்தில் அவனுக்கும் ஸ்கெட்ச் போட்டு வேலையைவிட்டு தூக்கிவிடாதீர்கள்… “நானே மறப்போம் மன்னிப்போம் என்று பெருந்தன்மையாய் மன்னித்து விட்டேன்” என்னை நினைத்து கவலைப்பட்டு இரவு முழுவதும் தூங்காமல் உங்கள் உடலை கெடுத்து கொள்ளாதீர்கள் பாஸ் என்னால் அதை தாங்கவே முடியாது என்று குகன் கூறிக்கொண்டே சென்றான்.

சுஹீரா என்று நினைத்து பேசியவனுக்கு குகன் குரல் கேட்டதும் நடந்த தவறு புரிய இவனை எப்படி சமாளிப்பது என்று சிந்தனையில் இறங்கினான் அகரன், “என்ன பாஸ் அமைதியாகி விட்டீர்களே இன்னும் வருத்தப்படுகின்றீர்களா” என்று குகன் கேட்கவும் குகன் இன்னும் தன்னை கண்டுபிடிக்கவில்லை என்று அகரனுக்கு புரிந்தது. “அது வந்து நான் அவன் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறேன் “ அவன் யார் என்று மட்டும் சொல் போதும் எவ்வளவு தைரியம் உன்னையே இடித்து காயப்படுத்தி இருப்பான், “இதை மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன் நீ ஒன்று செய் காலை வந்ததும் எனக்கு நியாபாகபடுத்து அவனை அழைத்து கண்டித்து வைக்கிறேன் “ என்றான் அகரன்.

“என்ன பாஸ் மறக்கமாட்டேன் என்று கூறிவிட்டு நியாபாகபடுத்த வேறு சொல்கின்றீர்களே ரொம்ப குழம்பிப்போய் இருக்கின்றீர்கள் போல” என்று கேலி செய்து குகன் வாய்விட்டு சிரிக்க துவங்கினான். “சும்மா வாய்க்கு வந்ததை உளரதே, உனக்கு கையில் அடிபடாமல் வாயில் அடிபட்டியிருந்தால் எனக்கு நிம்மதியாக இருந்திருக்கும்” இப்போது எதற்கு அழைத்தாய் உனக்கு பொழுது போகவில்லை என்று என் உயிரை எடுகின்றாயா என் நேரத்தை வீணாக்காமல் போனைவை முக்கியமான ஒருத்தர் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என்று சிடுசிடுத்தான் அகரன் .

இத்தனை வருடம் அகரனுடனே இருந்தவன் அவன் கண் அசைவிற்கும் காரணம் கண்டுபிடிக்கும் குகனுக்கு அகரன் தடுமாற்றம் புரியாமல் போகுமா காலையில் என்னிடம் காதலே இல்லை என்று மறுத்துவிட்டு இப்போது அப்படி இருக்குமோ என்று யோசிக்கின்றாரா இல்லை காதல் தான் என்று முடிவு எடுத்து மேடமை எண்ணி தவிக்கின்றாரா என்று தனக்குள் எண்ணிக்கொண்ட குகன் யார் அந்த முக்கியமான ஆள் பாஸ் என்று வினவினான் குகன். “அது யாராய் இருந்தால் உனக்கு என்ன நான் தான் உனக்கு பாஸ் நீ என்ன என்னை கேள்வி கேட்பது சொல்ல வேண்டியதை சொல்லி முடி” என்று உத்தரவு பிறப்பித்தான் அகரன்.

“அப்பப்ப இந்த கேள்வியை வேறு கேட்டுகொள்ளுங்கள் “ என்று சலித்து கொண்டு அது ஒன்றும் இல்லை, நீங்கள் சுகந்தன் பத்திரவிஷயமாக பேசியதாக நம் கம்பெனி வக்கீல் தமிழ் சொன்னார் கொடுத்த விளக்கம் போதுமா, இன்னும் அது சம்பந்தமான விபரம் அனுப்பி வைக்கட்டுமா, இல்லை சுகந்தன் மீது புகார் செய்ய வேண்டுமா, என்று உங்களிடம் கேட்க சொன்னார் என்று குகன் தான் அழைத்ததன் காரணம் சொன்னான்.

“ஏதும் செய்ய தேவை இல்லை என்று சொல்லிவிடு அவர்களுக்கு எதிராய் தயார் செய்த பத்திரத்தை கிழித்துஎரிய சொல் இனி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது” என்றான் அகரன். பாஸ்… “பத்திரத்தை கிழித்து எரிந்துவிட்டால் அப்புறம் அவர்களை எப்படி பழிவாங்குவது, உங்கள் திட்டம் என்னாவது” என்று பதட்டம் போல் குகன் வினவ, “பழிவாங்குவாதால் என்ன கிடைக்க போகின்றது சொல் அற்ப சந்தோசம் அதை தாண்டி உலகத்தில் எவ்வளவு நல்ல விஷயம் அதில் மனதை செலுத்துவோம்” என்று சுஹீரா நினைவில் கண்மூடி கூறிக்கொண்டிருந்தான் அகரன்.

ஆனால் பாஸ் “அந்த மகேஸ்வரன் உங்களை என்னவெல்லாம் பேசினார் அதற்கு மற்றவர்களின் ஏளனசிரிப்பு இதை எல்லாம் நினைத்து நிம்மதியில்லாமல் இருந்தீர்கள் அவர்களுக்கு அகரன் யார் என்று காட்டுங்கள் அப்போது தான் உங்கள் வழியில் குறுக்கிடமாட்டார்கள்” என்றான் குகன். “அவர் என்னை பற்றி பேசியது தவறு தான் அதற்க்காக நானும் அவரை போல் பழிவாங்க கிளம்பிவிட்டால் எனக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்”, வள்ளுவர் என்ன சொல்லி இருக்கின்றார் தெரியுமா என்று அகரன் கேள்விக்கு இவ்வளவு சொன்ன நீங்களே அதையும் சொல்லிவிடுங்கள் என்று பதில் தந்தான் குகன்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயும் செய்து விடல்” என்று வள்ளுவர் சொல்லி இருப்பதன் அர்த்தம் தெரியுமா உனக்கு?, “நமக்கு கெடுதல் செய்தவருக்கும் நன்மை செய்து அவர் செய்த தவறை அவரே உணர்ந்து வெட்கும் படி செய்யவேண்டும் “ என்ன புரிகின்றதா என்றுஅகரன் விளக்கம் தர, “உங்களின் அந்த நல்ல விசயம்” என்ன என்று நான் அறிவேன் பாஸ்… என்று தனக்குள் சிரித்து கொண்டு, “நீங்கள் செய்ய போகும் நல்லது அவர் மகளை மணப்பது தானே” என்று குகன் வாய்விட்டே கூறிவிட, “நான் பழிவாங்க நினைத்த போது பெண் பாவம் அது இது என்றாய் நானே மனம் மாறி அவர்களை மன்னிக்க நினைக்கும் போது பழிவாங்க சொல்கின்றாய்”, இப்போது மட்டும் எனக்கு பாவம் வந்து சேராத குகன் என்று கேலியாய் வினவினான் அகரன்.

“ஆஹா நான் சொன்னது எனக்கே திரும்புகின்றதா எந்த பக்கம் பால் போட்டாலும் சரியாய் சிக்ஸர் அடிக்கின்றாரே இவரை எப்படி அவர் வாயாலேயே உண்மையை ஒத்துக்கொள்ள வைப்பது” என்று தீவிராமாய் யோசித்தான் குகன். “அப்படியென்றால் இனி சுஹீரா இருக்கும் பக்கமே போகமாடீர்கள், என்று சொல்லுங்கள் அது தான் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டீர்களே இனி எப்படி போவீர்கள்”, இனி அவர்கள் நிம்மதியாய் அந்த “சைனா பொம்மை மைதாமாவையே திருமணம் செய்து குட்டி குட்டி சைனா” என்று குகன் கூறி முடிக்கும் முன், “என் சுஹீக்கு அந்த பவுடர் டப்பா ஜோடியா என்னிடமே இதை சொல்ல உனக்கு என்ன தைரியம்” தன்னை கட்டுப்படுத்திய குரலில் கூறினான் அகரன். “ உங்கள் அருகில் இல்லை என்ற தைரியம் தான்” பாஸ் என்று சிரித்தான் குகன்.

சிரிக்காததே “என் சுஹீயை என்னிடம் இருந்து பிரிக்கமுடியாது அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்”, சுஹீயை வேறு ஒருவன் கரம் பற்றும் வரை நான் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பேன்” என்று நினைத்தாயா என்று கோபமாய் பேசிக்கொண்டே சென்றான் அகரன். “அப்படி வாருங்கள் வழிக்கு இப்போது உண்மையை ஒத்துகொண்டீர்களா எப்படி என் ஐடியா உங்களிடம் இருந்து அண்ணியை யாரும் பிரிக்க நினைத்தால் அனுமனாய் இருந்து உங்கள் இருவரையும் சேர்த்து வைப்பேன்” பாஸ்… என்று குகன் பெருமைக்குரலில் கூறினான் .

அண்ணியிடம் உங்கள் காதலை சொல்லிவிட்டீர்களா பாஸ்… “அண்ணி ஓகே சொல்லி விட்டார்களா” என்று ஆர்வமாய் கேட்டான் குகன். “ஆமாம் அவள் சம்மதம் சொல்லிவிட்டு தான் மறுவேலை பார்ப்பாள்”, என்னை பார்த்தாலே ஏதோ அரக்கனை பார்த்தது போல அரண்டு போகின்றாள், இன்று தான் என் மனதை சொன்னேன் புரிந்து கொண்டாளா என்று தெரியவில்லை அதை தெரிந்து கொள்ளத்தான் அவள் போன் அழைப்பிற்கு காத்திருந்தேன். ஒரு நந்தி தன்னை அனுமன் என்று சொல்லிக்கொண்டு இடையூறு செய்து கொண்டிருக்கிறது என்றான் அகரன். “எனக்கு புரிந்து விட்டது நான் கிளம்புகின்றேன் நீங்கள் கலக்குங்கள்” என்று கூறி குகன் அழைப்பை துண்டிக்கும் முன் அகரன் குகனை அவசரமாய் அழைத்து உன் கைகளுக்கு மருந்திட்டுகொள் என்று அக்கறையாய் கூறினான்.

குகனிடம் பேசி முடிக்கும் வரை தன்னை சுஹீரா அழைக்காமல் இருக்க மீண்டும் அவனே அவளை தொடர்புகொண்டான் அகரன். “இது தான் உங்கள் ஊரில் பிறகு அழைப்பதா” என்று நக்கலாய் கேட்டவன் இப்போது “உன் கைகள் எப்படி உள்ளது மருந்து போட்டு கொண்டாயா உணவிற்கு பிறகு தான் மாத்திரைகள் போட வேண்டும் மறந்து விடாதே “ என்று அக்கறையாய் கேட்டான் அகரன். “எல்லாம் எனக்கு தெரியும் நான் ஒன்றும் சிறுகுழந்தை இல்லை அரக்கா ஓவ்ஒன்றும் நீ எனக்கு கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை” என்று வெடுக்கென்று பதில் தந்தாள் சுஹீரா. “சுஹீ” என்று அழைத்த அகரன் குரலில் அழுத்தம் இருக்க அப்பா ஊட்டிவிட்டார் சாப்பிட்டு முடித்து மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டேன், தூக்கம் வருகின்றது, தூங்க போகின்றேன் வைகட்டுமா அமைதியாய் அனுமதி கேட்டாள், சுஹீரா.

இப்போது தானே பேச துவங்கினோம் அதற்குள் வைக்கிறேன் என்றால் எப்படி, இன்னும் கொஞ்சநேரம் பேசலாம் என்றவன், “என்ன அப்பா ஊட்டி விட்டாரா இப்போது தான் சிறுகுழந்தை இல்லை என்றாய்” என்று அகரன் சிரிக்க, “ என் வலது கையில் அடிபட்டு உள்ளது உனக்கு மறந்துவிட்டதா என்றவள் அப்படியே என்னையும் மறந்துவிட்டால் நன்றாக இருக்கும்” என்று வாய்க்குள் முணுமுணுக்க அதையும் துல்லியமாய் கவனித்து கேட்டவன் “உன்னை மறக்க வைக்கும் வித்தை என் மரணத்திற்கு கூட தெரியாது சுஹீ” என்று உருக்கமாய் கூறினான் அகரன்.

“எனக்கு ஒரு உண்மை மட்டும் சொல்லு நீ என்னை காதலிக்கின்றாயா அப்படியென்றால் அதை முதலிலேயே சொல்லி இருக்கலாம் இல்லையா அதை விடுத்து தேவையில்லாமல் காதலி போல் நடிக்கவேண்டும் என்ற நிபந்தனை எதற்கு” என்று புரியாமல் கேட்டாள் , சுஹீரா. “காதல் என்று உன் பின் சுற்றி காலம்கடத்தாமல் எளிதாய் உன்னை அடைவதற்கு” என்று சாதாரணமாய் பதில் தந்தான், அகரன்.

“உன்னை திருத்தவே முடியாது” என்று சுஹீரா சலித்துகொள்ள அதற்கு முயற்சியும் செய்யாதே நாளை காலை உன் வீட்டின் தெரு முனையில் காத்திருப்பேன் வழக்கத்திற்கு அரைமணி நேரம் முன்பே கிளம்பிவிடு நானே உன்னை கல்லூரியில் விட்டுவிடுகிறேன் என்று அகரன் கூற, “இல்லை முடியாது நான் என் அண்ணனுடன்” தான் என்று மறுத்தால் சுஹீரா “சரி பிறகு உன் இஷ்டம்” இப்போது தான் உன்னை அழைக்கும் முன் என் வக்கீல் மாலை கூட அவரிடம் பேசினேன் இல்லையா?, அவரே தான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன் “உன் அண்ணன் கேஸ் விஷயமாகத்தான் “ என்ன செய்ய என்று கேட்டு கொண்டு இருந்தார் “நான் யோசித்து சொல்வதாய் சொன்னேன் என் முடுவு நீ எடுக்கும் முடிவில் உள்ளது” என்று சிரியாமல் பொய் சொல்லி, தன் எண்ணத்திற்கு சுஹீராவை சம்மதிக்க வைத்தான் அகரன்.

“என் மரணம் கூட உன்னிடமிருந்து என் குடும்பத்திற்கு விடுதலை பெற்று தராது எனும் போது எனக்கு வேறு வழியேது வருகிறேன்” என்று மரத்த குரலில் சம்மதம் சொன்னாள் சுஹீரா. தன்னவள் குரலிலிருந்த வெறுமை அகரனை ஏதோ செய்தது “என்னை சந்திப்பதில் அவ்வளவு கஷ்டமா உனக்கு என் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என்னை ஏன் உனக்கு பிடிக்கவில்லை” காரணம் இன்றி என்னை வெறுக்க முயற்சிக்காதே உன் பிடிவாதத்தை விடுத்து என்னை புரிந்து கொள்ள முயற்சிசெய் சுஹீ, அது தான் உனக்கும் உன் குடும்பத்திற்கும் நல்லது என்று சிறு மிரட்டலுடன் கூறினான் அகரன்.

“நீயே சொல்லிவிட்டாய் உன்னை பிடிக்காததற்கு காரணம் என்னவென்று கட்டாயத்தால் வருவது காதலில்லை அரக்கா என்னை அடைய என் குடும்பத்தை சித்திரவதை செய்யும் உன்மீது எங்கிருந்து எனக்கு அன்பு வரும் உயிர் காதல் என்பது உடம்பை மட்டும் அல்ல உள்ளதையும் நெருங்கும்” உன்னை போல் அரக்கர்களுக்கு அது புரியாது எனக்கு உறக்கம் வருகின்றது என்று அகரன் பதிலை கூட எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்தாள் சுஹீரா.

கல்லென இறுகி இருக்கும் தன்னவள் கர்வத்தை உடைத்து அவள் இதயத்தில் நுழைந்திடும் வழி அறியாமல் விழித்து நின்றான் அகரன். தனது உணவை அறைக்கே கொண்டு வரச்சொன்னதும் அவனுக்கு பிடித்த உணவு வகைகளை தட்டுகளில் அடுக்கிக்கொண்டு வந்தவர், மகன் முகம் இறுகி ஏதோ சிந்தனையில் இருப்பதை கண்டு என்ன அகர் இன்னும் அத்தை பேசியதை நினைத்துக்கொண்டு இருக்கின்றாயா என்றார் யமுனா.

“இல்லை அம்மா இது வேற விஷயம் நீங்களும் சரி அப்பாவும் சரி என்னை போல் கோபக்காரர்கள் இல்லையே பின் ஏன் நான் மட்டும் இப்படி இருக்கின்றேன் யாரும் புரிந்து கொள்ள முடியாத புதிர் போல் மனதின் உணர்வுகளை வெளிப்படையாக காட்ட தெரியாத அரக்கன் போல” என்று வருத்தமான குரலில் தன் குணத்திற்காண காரணத்தை கேட்டு கொண்டு இருந்தான் அகரன்.

“நீ உன் தாத்தா போல் அகர்” நீ பிறந்ததும், குடும்பத்திற்கு தலை வாரிசு என்று ஆசையாசையாய் அகரன் என்று பெயரிட்டு செல்லமாய் உன்னை வளர்த்தது எல்லாம் உன் பாட்டியும் தாத்தாவும் தான் உனக்கு அப்படியே உன் தாத்தா குணம் அவரும் அப்படித்தான் கோபத்தை காட்டும் அளவிற்கு பாசத்தை காட்ட தெரியாது ஆனால் உன்னிடம் மட்டும் விதிவிலக்கு உன்னிடம் என்றுமே கோபமோ வருத்தமோ காட்டியது இல்லை நீ தான் அவருக்கு உயிர் நீயும் அவரிடமே அதிகம் இருந்ததால் இயல்பாய் அவர் குணம் வந்து விட்டது, “ உன் தாத்தா முன் நின்று பேசவே பலரும் அஞ்சுவர் அவர் கோபம் அப்படி இப்போது உன்னிடம் விலகியிருப்பது போல” என்று தட்டுகளில் எடுத்து உணவு பரிமாறிக்கொண்டு இருந்தவர் கை பிடித்து தன் அருகில் அமரவைத்து, அவர் மடி மீது தலை வைத்து படுத்தவன் “என் குணமே என் அம்மாவை கூட என்னிடம் இருந்து விலக்கி வைத்துவிட்டது இத்தனை நாள் இதை கூட உணராமல் இது தான் நான் என்று கர்வமாய் இருந்து உங்கள் மனதை காயப்படுத்திவிட்டேன் இல்லையா” என்று வருத்தம் தெரிவித்தான் அகரன்.

“பிறந்த பின் பசிக்கு மட்டுமே தாயை தேடியவன்” மற்றநேரம் முழுவதும் தாத்தாவின் தோள்களில் வளர்ந்தவன் அகரன் தன் மகன் என்று சொல்லிக்கொள்ள உரிமை பெற்ற யமுனைவிற்கு அதற்குமேல் உரிமை எடுத்து கொள்ள அங்கு அதிகாரம் இல்லை விபரம் அறியும் வரை விலகலில் இருந்து பழகிய அகரனை அதற்கு பிறகு நெருங்கவும் முயலவில்லை முதன்முறை மடி மீது தலைவைத்து படுத்திருந்த தனது வளர்ந்த குழந்தை தலை கோதியாவர், “உன்னை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டும் தான் உன் கோபவார்த்தையில் உள்ள அன்பு புரியும் உன் முரட்டு தனத்தில் உள்ள குழந்தை தனத்தை உணர முடியும் உன் பிடிவாதத்தில் உள்ள உன் அளவில்லா பிரியம் புரியும்” என்று மெதுமாய் கூறினார்.

“ஒரு வேலை எனக்கு ரொம்ப பிடித்தவர்களுக்கு என்னை புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது அம்மா என் குணத்தை எப்படி மாற்றுவது” என்று புரியாத குழந்தைபோல விளக்கம் கேட்ட மகனை கண்டு அவன் சிறுவயதில் கிடைக்காத நெருக்கம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இருந்தார் யமுனா. “ எந்த உண்மையான அன்பும் புரியாமல் போக வாய்ப்பில்லை என்ன கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளும்” நம்மை போல என்று அடக்கமாய் சிரித்தார் யமுனா.

“நீ எப்படியோ அப்படியே உன்னை ஏற்பது தான் உண்மையான அன்பு ஒருவரின் இயல்பு குணம் மாறாது அகர் அப்படி மாற்றி கொண்டதாய் நினைத்தாலும் அது நிலைக்காது”, பிடித்தவர்களுக்காக நீ மாற முயற்சிக்கும்போது உன் இயல்பை இழப்பாய் தனது சுயத்தை இழந்தவன் நெடு நாள் நிம்மதியாய் இருக்கமுடியாது, நீ உன்னை மாற்றிக்கொள்ள தேவை இல்லை அவர்கள் உன்னை புரிந்து கொள்ளச்செய் அதற்கு தேவையான இடம் கொடு , உன்னை மாற்றி கொள்ளாமலே அவர்களுக்கு பிடித்ததை நீ ஏற்றுக்கொள் உன் கோபம் பிடிவாதம் மட்டும் குறைத்து கொள் “அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடு உன் விருப்பத்தை மட்டும் திணிக்காதே அவர்களின் விருப்பத்தையும் காது கொடுத்துக்கேள்” தானாய் உன்மீது அன்பு பிறந்துவிடும் என்று கூறிய யமுனா கரம் பற்றி கொண்டவன் எனக்கு ஊட்டிவிடுகிண்றீர்களா அம்மா என்றான் அகரன்.

கண்களில் நீர் திரையிட சந்தோசமாய் தனது மகனுக்கு நெடுநாள் ஆசையில் ஒன்றான தன் கையாலே ஊட்டிவிட்டார் யமுனா. உண்டு முடித்து கிளம்பும் நேரம் உங்களுக்கு மருமகள் வேண்டும் அது தானே உங்கள் நெடுநாள் ஆசை அம்மா, “உங்கள் மருமகள் பெயர் சுஹீரா” சீக்கிரம் நீங்கள் அவளை சந்திப்பீர்கள் என்று கூறிட யமுனா மனதில்யிருந்த பாரம் இறங்கியது மகிழ்ச்சியாய் மகன் முகம் வருடியவர் உன் ஆசைப்படி எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என்று சந்தோசமாய் கூறி வெளிவெறினார் யமுனா. யமுனா பேசி சென்றதும் அகரன் மனதில் தெளிவு பிறந்தது மனம் மகிழ்வுடன் சுஹீரா மனம் மாறி தன்னை ஏற்று அவளுடன் வாழப்போகும் இனிமையான தருணங்களை கற்பனை செய்து மகிழ்ந்தான் அகரன்.

நீ என்னை
நெருங்க மறுக்கையில்
என்னுள் நான்
நொறுங்கி போகிறேன்
உன் விலகளை விலக்கி
தயக்கத்தை தள்ளிவிட்டு
உன் மீது மயக்கத்தில்
இருக்கும் என் மடி சேர்வாயா
கண்மணியே…