அரக்கனோ அழகனோ 12

அரக்கனோ அழகனோ 12
0

அழகன் 12

என்னை வேண்டாம் என்று
விலகி செல்ல நீ துடித்தாலும்
நீ தான் வேண்டும் என்றும்
துடிக்குறது என் இதயம்…

அலுவலகத்தின் உள்ளே நுழைந்த அகரனை அனைவரும் புதிதாய் பார்ப்பது போல் வியப்பாய் பார்த்தனர், “இருக்காதா பின்னே எப்போதும் கடுமையாகயிருக்கும் முகம் காலை வணக்கம் சொன்னாலும் அலட்சியமாய் கண்டும் காணாமல் கடந்து செல்பவன்” இன்று கவர்ச்சியாய் புன்னகை புரிந்தபடி காலை வணக்கம் சொன்னதும் பதிலுக்கு தலையாட்டி ஏற்றுக்கொண்டு சிரித்தவனை பார்த்தால் வியப்பாய் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்.

அகரன் தனது அறைக்கு சென்று அமர்ந்ததும் அனைவரும் கூட்டம்கூட்டி விவாதிக்க துவங்கினர் “பெரிய ப்ராஜெக்ட்டீல் கிடைத்து இருக்கும் “ என்று சிலர் கூற, “அது எல்லாம் சாருக்கு ஜுஜுபி மேட்டர, அகரன் சாருக்கு திருமணம் முடிவாகியிருக்கும்” அதனால் தான் இவ்வளவு சந்தோசமாய் இருக்கின்றார் என்று ஒருவன் கூற “திருமணம் முடிவானதும் தன் சுதந்திரம் பறிபோன தூக்கத்தில் சிரிப்பு வேறுவருமா என்ன” என்று ஒருவன் சலித்துக்கொள்ள அவன் காதலி அருகில் இருப்பதை மறந்துகூறியவன், காதலியின் அனல் பார்வையை எதிர்கொள்ள சக்தியாற்று அமைதியானன். “அது எல்லாம் இல்லை இது காதலின் மகிமை” அன்று நம் அலுவலகத்திற்கு ஒரு பெண் வந்தார்கள் நினைவிருக்கின்றதா வழக்கமாய் தன்னை பார்க்க பெண்கள் வந்தால் சார் என்ன செய்வார் என்று கேள்விகேட்டவள், இது என்ன புதிதாய் கேட்கிறாய்சந்திக்க முடியாது என்று முகத்தில் அடித்தது போல் பதில் தந்து அவர்களை தவிர்ப்பவர் என்பது அனைவரின் ஒட்டு மொத்த பதிலாய் இருக்க, தனக்கு மட்டுமே அறிந்த ரகசியத்தை பகிரும் மகிழ்வுடன் ஆனால் “அன்று என்ன நடந்தது தெரியுமா? “, அந்த பெண் வந்ததும், “யார் அவர்கள் யாரை பார்க்கவேண்டும்” என்று விபரம் நான் விசாரிக்கும் முன் வரவேற்பிற்கு சாரே நேரடியாக போனில் அழைத்து “இப்போது உன் முன் நிற்கும் பெண்னை மீட்டிங் ஹாலில் உட்கார வை முதலில் அவளிடம் மரியாதையாக நடந்து கொள் ஏதும் குடிக்க வேண்டுமா என்று விசாரித்து கொடு “ என்றார் அன்று அவர் குரலில் இருந்த மென்மையை கேட்டிருக்கவேண்டும், இது வரை இப்படி ஒரு சந்தோசத்தை அவர் குரலில் நான் கண்டது இல்லை அது மட்டும் இல்லை “வெகுநேரம் அவர்கள் தனிமையில் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்” என்று வரவேற்பு பெண் தனக்கு தெரிந்ததை கூறி அவர்கள் பெயர் கூட என்னவோ சொன்னார் என்று யோசித்த படி இருந்தவள் , பாஸ்… வந்து உன் யோசனைக்கு பதில் தருவார் வாங்கிக்கொள்கின்றாயா? “உன் வேலை வரவேற்பில் அதை செய்யாமல் இங்குவந்து வம்பளந்து கொண்டு இருக்கின்றாயா?” என்று குகன் குரல் கேட்டதும் அவரவர் தன் இடம் நோக்கி சென்றனர்.

ஒருவன் மட்டும் முன் வந்து “சாரின் மாற்றத்தின் காரணம் திருமணம் முடிவானது தானே குகன் உனக்கு அவர்களின் பெயர் தெரியும் தானே?” ஆர்வமாய் கேட்க மற்றவரின் கவனமும் இவர்களின் உரையாடலில் இருந்தது, சுற்றி ஒரு பார்வை பார்த்தவன் “பாஸ் கூப்பிடுகின்றார் அவரிடமே நேரடியாக சென்று விளக்கம் கேட்டுக்கொள்” என்று குகன் பதில் தர அமைதியாய் சென்று அமர்ந்தான் வம்பு பேசியவன்.

இந்த அளவிற்கு எல்லோரும் கவனிக்கும்படி “பாஸ்… அப்படி என்ன செய்து இருப்பார் என்று குழப்பத்துடன் அகரன் அறைக்குள் சென்றான் குகன். குகனை கண்டதும் முகம் மலர “காலை வணக்கம் குகா என்ன இன்று இவ்வளவு நேரம் வழக்கமாய் எனக்கு முன் வந்து என்னை கேள்வி கேட்டு கொண்டு இருப்பாய்” என்று அகரன் வினவ, குகனுக்கே ஆச்சர்யமாகி போனது “பத்து கேள்வி கேட்டால் பந்தாவாக ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தந்து மற்றதை கண்ணாலேயே தவிர்க்கும் அகரன் இன்று நிறுத்தாமல் பேசிக்கொண்டே போக”, அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி புன்னகை தொற்றுஉணர்வாய் குகனையும் தொற்றி கொண்டது, “சிரிக்கவே தெரியாத கற்சிலை ஒன்று ஒட்டு மொத்த புன்னகையையும் விலைக்கு வாங்கி சிரித்தால் சந்தேகம் வராமல்” என்ன செய்யும் என்று நினைத்தவன், “என்ன பாஸ் அண்ணி காலையிலேயே பவர் சப்ளை செய்து விட்டார்கள், போல முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பளிச்சென்று எரிகின்றது” என்று குகன் விசயம் அறிய வினவவும், அகரன் முகம் மாற “என்ன கேட்டாய் என்னிடம் இப்படி பேச உனக்கு எவ்வளவு தைரியம், இனி என் முன் நிற்காதே” என்றான் அகரன்.

பாஸ்… “என்ன கேட்டுவிட்டேன் என்று இப்படி கோபப்படுகிண்றீர்களே” என்று சமாதானம் குகன் செய்யும் முயலும் போதே, அகரன் வாய்விட்டு சிரித்து “என்ன பயந்து விட்டாயா “, சும்மா விளையாடினேன் எனக்கு ஆயிரம் வாட்ஸ் ஓகே உன் முகம் இப்போது எப்படி இருக்கின்றது என்று தெரியுமா “பேய் அறைந்த மாதிரி இல்லை உன் ஸ்டைலியில் சொல்ல வேண்டும் என்றால் பியூஸ்போன பல்ப் மாதிரி “ என்று மேலும் அகரன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து கொண்டே இருந்தான்.

“என்ன விளையடினீர்களா என்னது இது சின்னப்பிள்ளை தனமா இருக்கு” காதல் ஒருவரை மாற்றும் என்று தெரியும் ஆனால் இந்த அளவிற்கு முற்றும்படி மாற்றும் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டதே, பாஸ் என்று குகன் கேலி செய்ய, “பத்திரம் என்று சுட்டு விரல் காட்டி மிரட்டியவன் போய் பாடலைப்போடு இதமாய் இசையிடன் என்னவளின் நினைவுடன் இனிதாய் பணியை செய்கிறேன்” என்று ஒற்றை கண்ணடித்து கூறினான் அகரன்.

“அண்ணியை பார்த்ததில் இருந்து நீங்கள் சரியில்லை” என்று கூறி கொண்டே அகரன் சொன்னதை செய்தான் குகன். கண்மூடி பாடல் வரிகளை ரசித்து கொண்டு இருந்தவன் மனதில் சுஹீரா நினைவு படர அவள் இதழ் முத்தம் பருகிய நினைவில் மெல்ல அந்த வரிகளை உடன் சேர்ந்து பாடத்துவங்கினான் அகரன்

This magic moment, so different and so new, Was like any other until I kissed you, And then it , appened,it took me by surprise, I knew that you felt it too,by the look in your eyes, Sweeter than wine,Softer than the summer night, Everything I want, I have, Whenever I hold you tight, This magic moment, while your lips are close to mine, Will last forever,forever till the end of time…

இது அகரன் வழக்கமாய் செய்வது தான், நல்ல மனநிலையில் இருக்கும் போது தனக்குப்பிடித்த பாடல்களை கேட்பான் ரொம்ப சந்தோசம் என்றால் உடன் சேர்ந்து பாடவும் துவங்கிவிடுவான் “என்ன அதிகம் கேட்பது ஆங்கில பாடலாய் இருக்கும்” இன்றும் அது போல் பாடிக்கொண்டு இருந்தவன் அந்த வரிகளை மென்மையாய் ரசித்து உச்சரித்த விதத்தில் இருந்த வித்தியாசம் என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது குகனுக்கு. “பாஸ் … நான் நினைத்ததை விட ரொம்ப வேகமாய் தான் போகின்றார் போல அண்ணிக்கு விருப்பம் இல்லாமல்யிருக்கும்போதே இந்த லெவல் என்றால் அண்ணியும் ஓகே சொல்லிவிட்டால் கையில் குழந்தையுடன் தான் திருமணம் செய்வார்கள் போல” சரியான கேடி உங்களை பற்றி தெரிந்ததால் தான் அண்ணி பிடிகொடுக்காமல் இருக்கின்றார்கள் போல. என்று அகரன் மாற்றத்தையும் மனநிலையையும் கேலி செய்து தனக்குள் சிரித்து கொண்டவன் பாடலை நிறுத்திவிட்டு வேறு பாடல் போட சிடி தேடிக்கொண்டு இருந்தான் குகன்.

கண்கள் மூடி ரசித்து கேட்டு கொண்டு இருந்தவன் தீடீரென பாடல் நிறுத்த படவும் “என்ன குகா என்ன செய்கின்றாய் நான் கேட்டு கொண்டியிருப்பது தெரியவில்லை” என்று சிடுசிடுத்தான் அகரன். அகரன் பேசிக்கொண்டு இருக்கும் போதே தேடிய சிடி கிடைத்து விட அதை மாற்றி வேறு பாடல் ஒலிக்க வைத்தான் குகன். “நான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன், நீ என்ன செய்கின்றாய் ஏன் பாட்டை மாற்றினாய்” என்று அகரன் கோபம் தனியாமல் வினவினான்.

“இப்போது நீங்கள் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் வரும் இதை கேட்டு விட்டு பின் பேசுங்கள்” என்று குகன் கூற பாடல் மெலிதாய் ஒலிக்க துவங்கியது…
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய்யென்றால் காதலை தேடி கொல்வேனே
ஒவ்வொரு வரிகளும் தனக்கென தனிப்பட்டு எழுத பட்டது போல உணர்ந்தான் அகரன், “எப்படி குகா இந்த பாடலை இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கின்றேன் அப்போதெல்லாம் இப்படி உணர்ந்தது இல்லை” என்று வியப்பாய் கூறினான் அகரன். “அப்போது நீங்கள் அண்ணியை பார்க்கவில்லையே” பாஸ்… நான் பார்க்கும் போது எல்லாம் ஆங்கில பாடல்கள் தான் கேட்கின்றீர்கள் பாடிக்கொண்டு இருக்கின்றீர்கள், “பாட்டிலேயே லவ் என்று வார்த்தை சொல்ல இந்த இழு இழுகின்றான் இவன் எப்போது நேரில் சொல்ல போகின்றான்” நம்ம ஊர் பெண்களுக்கு எல்லாம் இந்த பீட்டர் பாடல் எல்லாம் பிடிக்காது பாஸ் இளையராஜா ஏ.ஆர்.ஆர் சார் பாடல் தான், “அனுபவப் பட்டவன் சொல்கிறேன் கேட்டு கொள்ளுங்கள் காதல் வந்து விட்டால், நம் தமிழ்ப்பாடல்களை ரசிக்கும் சுகம் வேறு எதிலும் இருக்காது எந்த பாடல் கேட்டாலும் தனக்கென எழுத பட்ட கவிதைவரிகளாய் தெரியும், சோகத்தில் கேட்கும் போது நமக்கு ஆறுதல் தருவது போல் இதமாய் இருக்கும் “ என்று குகன் எல்லாம் அறிந்தவன் போல கூறினான்.

“அது சரி என்னவோ பெரிய இவன் போல் பேசுகின்றாய் ஆங்கில பாடலிலும் இது போல் உணரமுடியும் தமிழில் மட்டும் அது என்ன புதியதாய் இருப்பது போல பில்ட்அப் தருக்கின்றாய்” என்று குகனுக்கு விட்டு கொடுக்காமல் பதில் தந்தான் அகரன் . “பாஸ் சத்தம் போட்டு சொல்லாதீர்கள் உங்களை ஆன்டிதமிழன் என்றிடுவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்தவன் உங்களுக்கு தெரியாதது இல்லை “தமிழ் ஒன்றும் புதிது இல்லை பாஸ் அது தான் பேசப்படும் மொழிகளில் மிகவும் பழமையானது, யாம் அறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதானதை எங்கும் காணோம் என்றார் பாரதியார் நம் எண்ணத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பது தான் நம் மொழி நன்றி, மன்னிக்கவும் என்ற வார்த்தைகளில் உள்ள முழுமையான நிறைவு தேங்க்ஸ், சாரியில் இருப்பது இல்லை பாஸ் தமிழில் சொல்லும் போது உண்மையில் உள்ளத்தில் இருந்து உணர்வுப்பூர்வமாய் சொல்வது போல் நிறைவாய் இருக்கும்” “வெறும் 26 எழுத்துக்களை மட்டும் வைத்து கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் ஆங்கிலத்திற்கே இந்த கெத்து இருந்தால் தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும், 216 உயிர்மெய் எழுத்துகளும், ஓர் ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துகள் கொண்ட என் தமிழ் தலை நிமிர்ந்து கர்வமாய் நிற்பதில் என்ன தவறு” அகரன் முகத்தில் புன்னகையுடன் கேட்டு கொண்டு இருக்க சும்மா என்னை வம்பு செய்து பார்த்தீர்களா? வர வர உங்களுக்கு சேட்டை கூடி விட்டது பாஸ், என்று அசடு வழிந்தபடி சிரித்தான் குகன்.

“என் சேட்டை இருக்கட்டும் அனுபவசாலி என்றாயே அப்படி எத்தனை அனுபவம் உள்ளது உனக்கு” என்று ஆர்வமாய் அகரன் வினவ, “அது நிறைய இருக்கு பாஸ் பள்ளி பருவத்தில் பார்வையாலேயே தொடர்ந்தது, கல்லூரியில் என்னை கடந்து சென்றவளிடம் முளைத்தது, திருவிழாவில் திருட்டு தனமாய் ரசித்ததில் ரகசியமாய் ஒன்று” என்று குகன் பட்டியலிட “உண்மையில் காதல் மன்னன் நீதான் போல அது சரி இதில் எது உனக்கு செட்டானது “ என்றான் அகரன்.

“எதுவும் இல்லை பாஸ் எல்லாம் ஒரு ஈர்ப்பு மட்டுமே தன் முடிவை தெளிவாய் எடுக்க தெரிந்த வயதில் வருவது தான் நிரந்தரமாய் நிலைத்திருக்கும், காதல் என்று நான் நம்புகிறேன் அதை விட்டு படிக்கும் போதே காதல் கத்திரிக்காய் என்று காலத்தை விரயமாக்கி கொண்டு உயிரை பலி கொடுத்து” என்று குகன் வேதனையாய் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே , எழுந்து குகன் அருகில் வந்து நின்று அவன் தோள்களில் கைப்போட்டு கொண்ட அகரன், ஆறுதலாய் தட்டிக்கொடுக்க, எல்லாவற்றையும் மறந்து விடு உனக்கு நான் இருக்கின்றேன் என்று சொல்லாமல் சொல்லி ஆறுதல் தந்தான் அகரன்.

“தன்நிலை உணர்ந்து உடனே தன்னை தேற்றி கொண்டவன் “அதை விடுங்கள் பாஸ் இது உங்களுக்கு எத்தனையாவது” என்று ஆர்வமாய் வினவினான் குகன். தன் தாடையை தடவியபடி யோசித்தவன் குகன் மனநிலையை மாற்றும் விதமாய் “என்ன இது ஒரு ஆயிரத்து முன்னூறு என்று நினைக்கிறேன்” என்ற அகரனின் பதிலில் முதலில் அதிர்ந்தவன் பின் பாஸ் விளையாடாதீர்கள் எனக்கு தெரியாதா உங்களை பற்றி என்று குகன் கூற தெரிந்துகொண்டே இது என்ன கேள்வி என்றான் அகரன்.

“அது இல்லை பல பெண்கள் உங்களுடன் பழக முயன்றார்கள் நீங்களும் அவர்களை விலக்கி நிறுத்தியதில்லை, அதனாலேயே உங்களை பல பெண்களுடன் பழகுபவர் போல பத்திரிகையில் பலவிதாமாய் எழுதியும் உள்ளார்கள் அப்படி பழகிய போது எந்த பெண்னையும் பிடிக்க” என்று குகன் கேள்வி கேட்டு முடிக்கும் முன் “இதுவரை எந்த பெண்ணிடமும் ஏற்படாத உணர்வு சுஹீயிடம் உணர்ந்ததால் தான் இப்படி பைத்தியம் போல அவள் பின் சுற்றித்திரிகிறேன் உன் கேள்விகள் எல்லாம் முடித்துவிட்டால் கொஞ்சம் வேலையை பார்ப்போமா என்று அரட்டை பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான் அகரன்.

அதன் பின் வீண் பேச்சின்றி வேலை மட்டுமே அங்கு மும்மரமாய் நடந்தது, மாலை நெருங்க சுஹீயை சந்திக்கும் எண்ணம் வந்ததும், மற்றது எல்லாம் மற்றதை பின் தள்ளி தன்னவளின் எண்ணம் மட்டும் அவனை நிறைக்க உடனே கிளம்பிவிட்டான் அகரன். “என்ன பாஸ் நீங்கள் உங்கள் வேலையை சீராய் செய்தாலும் காதல் அதன் பணியை சிறப்பாய் செய்கின்றது போல அண்ணியின் நினைவு உங்களை அழைக்கழிக்கின்றதா” என்று குகன் கேலி செய்ய எதையும் பெருப்படுத்தாமல் மழுப்பாளாய் புன்னகை மட்டும் சிந்திவிட்டு வேகமாய் கிளம்பி சென்றான் அகரன்.
தனது மொபைல் அடிக்க அதை எடுத்து யார் என்று பார்த்தவள் முகத்தில் கோபமும் தயக்கமும் போட்டிப்போட அதை தாண்டி எதற்கு அழைத்து இருப்பான் என்ற சிறு ஆவலும் எட்டிப்பார்த்தது அருகில் தோழிகள்யிருக்க அவர்கள் முன் எப்படி பேசுவது என்று அழைப்பினை ஏற்காமல் தவிர்த்தாள் . சுஹீராவின் முக மாறுதலை கவனித்த மது “என்ன சுஹீரா காலையில் இருந்து நீ சரி இல்லையே உதட்டில் என்ன காயம் என்றால் கீழே விழுந்து அடிபட்டது என்கின்றாய் கிளாஸ் நடக்கும் போதும் கவனிக்காமல் விட்டதை வெறித்துக்கொண்டு இருக்கின்றாய் தப்பாச்சே யாரடி அது அன்று ஒருவன் வந்தான் அவனா?” என்று அனைவரும் சேர்ந்து கொண்டு ஆர்வமாய் கேட்க அகரனை சொல்கிறார்கள் என்று யாரு அந்த பகடா இல்லவே இல்லை அவன் கோபமும் பேச்சும் பார்த்தாலே பிடிக்கவில்லை என்று பதில் தந்தாள் சுஹீரா.

“நீ யாரை சொல்கின்றாய் அன்று உன் அண்ணனின் தோழன் என்று ஒருவன் வந்தான் பெயர் கூட என்னவோ” என்று மது வினவ “சிச்சீ அந்த தயிர்சாதமா அதற்கு இந்த அரக்கனை கூட காதலித்து விடுவேன்” என்று மறுத்தாள் சுஹீரா. “ஏய் நீ அந்த தயிர்சாதத்தை சொல்லவில்லை என்றால் இந்த அரக்கன் யார்” என்று துருவி கேட்க துவங்கினர், மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டேயிருக்க “சுஹீரா உன் போன் தான் திரும்ப திரும்ப உன்னை அழைத்துக்கொண்டேயிருக்கின்றது பார், உன் உதட்டில் காயம் தந்து உனக்குள் மாயம் செய்யும் உன் செல்ல அரக்கனாக கூட இருக்கலாம்” என்று தோழிகள் வம்பு செய்ய, “சும்மா இல்லாததையும் கற்பனை செய்து உளராதே கம்பெனி கால் தான், இந்த லோன் அந்த லோன் என்று இம்சை செய்பவர்கள்” என்று மழுப்பிவிட்டு ஸ்விச் ஆப் செய்து விடலாம் என்று செய்யப்போனவள் திடீரென நினைவு வந்தவளாக “இந்த வானரத்தை நம்பமுடியாது போன் எடுக்கவில்லை என்று நேரில் வந்து குதித்தாலும் குதித்துவிடும், பேசமல் தவிர்ப்பதை விட ஒரு முறை எடுத்து கிளாஸ் இன்னும் முடியவில்லை என்று பொய் சொல்லிவிடலாம்” என்று மீண்டும் அவன் அழைக்க காத்திருந்தவள் அழைப்பு வந்ததும் தோழிகளை விட்டு தனியாக தள்ளி சென்றவள் அருகில் நின்றிருந்த காரை ஒட்டி நின்று அவன் எண்ணை பார்த்து அவனே நேரில் இருப்பதை போல் திட்டி தீர்ந்தாள், “ஒரு முறை எடுக்கவில்லை என்றால் புரிந்து கொள்ளத்தெரியாதா மட்டி காதல் உன் கண்ணை கட்டிவிட்டதா இல்லை உன் மூளையை கட்டிவிட்டதா” என்று தெரியவில்லை, பகடு என்று கூறிக்கொண்டே அட்டன் செய்து காதில் வைத்தவள் கிளாஸ் இன்னும் முடியவில்லை பிறகு பேசுகிறேன் என்றாள்.

“உன் கிளாஸ் என்ன நடுரோட்டிலா உள்ளது வண்டி சத்தம் கேட்கின்றது” என்றான் அகரன். இவனுக்கு சரியான பாம்பு காது “அது கிளாஸ் ரூம் ஜன்னல் ஓரம் அதானல் என்றவள் கடவுளே இவன் நம்பி தொலைக்கவேண்டுமே” என்று தன் நெஞ்சில் கைவைத்து மனதினுள் வேண்டிக்கொண்டாள் சுஹீரா, ஆனால் அவள் வேண்டுதலை கடவுள் கேட்கமால் அகரன் கேட்டது தான் கொடுமையிலும் கொடுமையாகிப் போனது.

“அதே உன் கிளாஸ் ஜன்னல் ஓரம் தான் நானும் இருக்கிறேன் அப்படியே கொஞ்சம் திரும்பி ஜன்னல் வழி என்னை பார்” என்று அகரன் கேலியாய் கூறவும் சுஹீரா மிரண்டு போனாள் . சுற்றும் முற்றும் கண்களால் தேடியவள் “சும்மா போட்டு வாங்குகிறான் போல” என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி இருக்க “நீ சாய்ந்து இருக்கும் காருக்குள் பார் கண்ணம்மா” என்றான் அகரன். தன் தலையில் தானே அடித்து கொள்ளலாம் போல இருந்தது சுஹீராவிற்கு மெதுவாய் குனிந்து அசட்டு சிரிப்பு சிரித்தவள், “அது வந்து” என்று என்ன காரணம் சொல்வது என்று புரியாமல் நிற்க , அசடு வழிந்தது போதும் வந்து காரில் ஏறு என்றான் அகரன், “இது யார் கார் காலையில் வேறு காரில் வந்தாய்” என்று விளங்காமல் வினவினாள், “அது சர்விஸ் போய் உள்ளது அதானல் வேறு கார் எடுத்துக்கொண்டு வந்தேன் அதானல் தான் உன் திருட்டு தனத்தை கண்டு பிடிக்க முடிந்தது” என்று அர்த்தமாய் சிரித்தான் அகரன்.

தவறு செய்து சமாளிக்கும் குழந்தைபோல் திருதிருவென விழித்தவளை கண்டு மயங்கிப்போனவன் ஒருவித கிறக்கத்துடனே, “எல்லாம் சரி முதலில் காரில் ஏறு நானே உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன்” என்றான் அகரன். அகரன் பார்வையும் குரலும் சுஹீராவிற்கு அவன் எண்ணத்தை விளக்கிட தனது உதடுகளை கைகளால் மறைத்து கொண்டு வேகமாய் மறுப்பாக தலை அசைத்தவள் “வேண்டாம் நான் வழக்கம் போல பஸ்ஸில் போய்க்கொள்கிறேன் என் தோழிகள் எனக்காக தான் காத்திருகின்றார்கள்” என்று விலகி நடக்க துவங்கினாள் சுஹீரா.

காரைவிட்டு இறங்கி அவளை பின் தொடர்ந்து வந்தவன் “ஹாய் நான் அகரன் சுஹீரா அண்ணன் சுகந்தன் தோழன் சாரி உங்கள் தோழியை நான் அழைத்து செல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் அவள் தயங்குகின்றாள், அதானல் நீங்கள் எனக்காக கொஞ்சம் அவளிடம் பேசி சம்மதிக்க வையுங்கள்” என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு அகரன் கேட்க, மற்றவர்கள் முகத்தில் அப்பட்டமாய் அதிர்ச்சி தெரிந்தது அன்று சுஹீராவை “உங்களுக்கு தெரிந்தது போலவே காட்டிகொள்ளவே இல்லையே” என்றாள் பானு. “அன்று இவள் சுகந்தன் தங்கை என்று தெரியாது அடுத்து ஒருநாள் சுகந்தனுடன் பார்த்ததும் தான் தெரிந்தது விளக்கம் போதுமா வா சுஹீ” என்று அகரன் உரிமையாய் அழைக்க, பானு முகம் வாடிக்கருத்துப்போனது.

எல்லோரும் என்ன நடக்கின்றது இங்கே என்பது போல ஒன்று சேர்ந்து சுஹீராவை பார்க்க அவளோ தரையை பார்த்து நின்றுகொண்டிருந்தாள் அவள் காதில் மெதுவாய் “நீ சொன்ன அரக்கன் இவர் தானா?” எனக்கு அன்றே தெரியும் இது இப்படி தான் வந்து முடியும் என்று என்ன சொன்னாய் , எப்படியேப்படி இந்த உலகத்தில் உள்ள கடைசி ஆண் அவன் தான் என்றாலும் இவனை திரும்பி கூடப் பார்க்கமாட்டேன் என்றாய்” இதற்கு நான் அவரை காதலிக்கிறேன் நீ விலகிக்கொள் என்றால் அதோடு பிரச்சனை முடிந்து விடப்போகின்றது அதற்குள் “அவன் பொறுக்கி பெண்களை மதிக்க தெரியாதவன் அரக்கன்” என்று உன்னை நல்லவளாய் காட்டிக்கொள்ள எதற்கு இத்தனை நாடகம் என்று ஏளனமாய் கேட்டாள் பானு. சுஹீராவிற்கு அவமானத்தில் முகம் சுருங்கி போனது, “சுஹீ உன் தோழிகளிடம் அனுமதி வாங்கிவிட்டேன் வா போகலாம்” என்று அவள் கரம் பற்றி அழைத்து சென்றான் அகரன். பதில் பேசாமல் யார் முகத்தையும் பார்க்காமல் அவனுடன் சென்றாள் சுஹீரா.

“பார்த்தாயா இவள் உண்மை முகத்தை நம்மிடம் எப்படி நாடகம் ஆடி நல்லவள் போல் கட்டி கொண்டாள்” என்று பானு கோபம் தனியாமல் கூற, “உன் வாய்க்கு வந்ததை உளராதே சுஹீரா முகத்தை பார்க்கும் போது ஏதோ சரியில்லை என்று தெளிவாய் தெரிகின்றது இது தான் உண்மை என்றால் அதை மறைக்காமல் ஒத்துக்கொள்ள கூடியவள் சுஹீரா”, அகரன் அவள் கைபிடித்து அழைத்து செல்வதையும் சுஹீரா முக வாட்டதை பார்க்கும்போதே தெரிகின்றது ஏதோ தவறு என்று கவலையாய் கூறினாள்,மது. மற்றவர்கள் மதுவின் வார்த்தையை ஏற்று கொள்ள பானு மட்டும் அதை ஏற்காமல் சுஹீராவை மனதினுள் திட்ட துவங்கினாள்.

அவள் முக வாட்டதை கவனித்துக்கொண்டே வந்தவன் காரை கிளப்பிக்கொண்டு யாரும் இல்லா தனியிடம் சென்று ஓரமாய் நிறுத்தியவன் , சுஹீரா கரம் பற்றி “இப்போது இல்லை என்றாலும் நம் திருமணத்திற்கு பின் அவர்களுக்கு தெரிய தானே போகின்றது இதற்கு போய் இவ்வளவு கவலை அவசியமா என்ன கொஞ்சம் சிரி” என்று அவள் கன்னம் தட்டி சாதாரணமாய் கூறினான் அகரன்.

“யார் திருமணத்தை பற்றி கூறுகின்றாய் அரக்கா” உன் கனவில் வரும் கற்பனை கதைக்கு எல்லாம் என்னையும் உடன் சேர்க்காதே, என்று கோபம் குறையாமல் கூறினாள் சுஹீரா. இன்று காலையில் சுஹீரா முகத்திலிருந்த மாற்றம் அவளும் காதலை உணர துவங்கி விட்டாள் என்பதை காட்ட இனி எல்லாம் மாறிவிடும் தன் காதல் நிறைவேறிவிடும் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியில் இருந்தவன், சுஹீரா சொன்னதை கேட்டு அந்த மகிழ்ச்சி மறைய கோபம் பிறந்தது “இன்னும் என்ன செய்து என் காதலை நிரூபிக்க சொல்கின்றாய், என்ன செய்தால் என் மீது நம்பிக்கை வரும்” என்று ஆற்றமையுடன் கேட்டான் அகரன்.

“உன் தெய்வீக காதலுக்காக, அந்த காதலை அடைவதற்காக என் கழுத்தில் கத்தியாய் என்னை கட்டுப்படுத்த வைத்திருக்கும் உன் ஆயுதமான என் அண்ணன் அப்பா கையெழுத்துதிட்ட பத்திரங்களை எரித்துவிடு அப்படியே என்னை விட்டு வெகு தூரம் விலகி சென்றுவிடு, உன் நினைவிலிருந்து மொத்தமாய் என்னை அழித்து விடு”, இதை செய்ய முடியுமா உன்னால் “இதை நீ செய்தால் நீ செய்யும் இந்த வெறி தனத்திற்கு காதல் என்று பெயர்சூட்டி கொள்கிறேன் உன்னால் முடியுமா” என்று இளக்காரமாய் கேட்டாள் சுஹீரா.

சுஹீராவின் வார்த்தையில் கோபம் அடைந்தவன் அதை அவளிடம் காட்டினால் தாங்கமாட்டாள் என்று மனம் உரைக்க, காரின் ஸ்டேரின் வீலை இறுக பற்றி தனது கோபத்தை குறைக்கும் முயற்சியில் இறங்கினான் அகரன். கோபம் கொஞ்சம் மட்டுபடவும் குரலை தனித்து, “எதற்காகவும் உன்னை விட்டு கொடுக்கமாட்டேன் விலகவும்மாட்டேன் சுஹீ” உன்னை சந்திக்கும் வரை என் எண்ணம் வேறு உன்னை சந்தித்து உன்மீது கொண்ட காதலை உணர்ந்ததிலிருந்து நான் என்னையே முழுதாய் மாற்றிக்கொண்டு உன் முன் என் காதலுக்காக கெஞ்சிக்கொண்டு இருக்கின்றேன். “நான் உன்னிடம் கொண்ட அன்பை,காதலை என் பலவீனமாய் நினைத்து அதையே காரணம் காட்டி என்னை விலகிச்செல்ல நினைக்காதே, என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்னை விட்டு விலகயெண்ணாதே உன் வெறுப்பை என்னிடம் காட்டாதே , நான் என் முழு கோபத்தை உன்னிடம் காட்டத்துவங்கினால் உன்னால் தாங்க முடியாது அதன் பின் நீ காணும் அகரன் வேறாக இருப்பான் நான் மனிதனாய் இருப்பதும் அரக்கனாய் மாறுவதற்கும் நடுவில் இருப்பது உன் காதல் மட்டும் தான் அதை மறந்து விடாதே” என்று கோபத்தை அடக்கிய குரலில் எச்சரித்தான் அகரன்.

அகரனின் குரலே அவன் கோபத்தின் அளவை எடுத்து ச்சொல்ல ஏனோ அகரனின் கோபம் சுஹீராவால் தாங்கமுடியவில்லை, நெஞ்சில் பாரமாய் அழுத்த இது என்ன இவன் கோபம் என்னை எதற்கு பாதிக்க வேண்டும் என்று புரியாமல் “உனக்கு என்ன தான் வேண்டும் ஏன் என்னை விடாமல் தொந்தரவு செய்கின்றாய் “ காலையில் தானே சொல்லி சென்றேன், வேறு இடத்தில் சந்திக்கலாம் என்று அதற்குள் இப்படி வந்து நின்று தொந்தரவு செய்தால் என்ன அர்த்தம் என்று கண்களில் வலியுடன் வினவினாள் சுஹீரா.

“நீ சொன்னது நினைவிருக்கின்றது ஆனால் உன் நினைவு வந்துவிட்டால் அதன் பின் என்னை கட்டுப்படுத்த இயலவில்லை உன் குரலை கேட்கவேண்டும், உன்னை பார்க்கவேண்டும், அணைக்கவேண்டும் என்று ஆசை என்னை உன் முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது” என்றவன் குரலில் கோபம் குறைந்து இருந்தது. “பானு உன்னை காதலிக்கிறாள் நீ ஏன் அவளை காதலிக்ககூடாது” என்று யோசனை சொன்னவளை என்ன என்று விளங்காமல் பார்த்தான் அகரன் .
“அன்று நீ அவளுக்காக பரிந்து பேசினாய் பார், அன்றிலுருந்து அவள் உன்னை காதலிக்கின்றாள், நீ காதலிக்கவும் உன்னை காதலிக்கவும் ஒரு பெண் வேண்டும் அவ்வளவு தானே, அது ஏன் பானுவாய் இருக்க கூடாது” என்று புத்திசாலி தனமாய் பேசிவதாய் நினைத்து முட்டாள் போல் உளறிக்கொண்டு இருந்தாள். அவளை பொறுத்த வரை அகரன் என்னும் புயல் தன்னை கடந்து எந்த திசை சென்றாலும் பரவாயில்லை என்று தோன்றியது.

“என் காதல் போதை உன் மனதிற்குள் நுழைவதை விடுத்து தலைக்கேறிவிட்டது என்று நினைக்கின்றேன்” அதனால் தான் இப்படி பிதற்றுகின்றாய் என்றான் அகரன். “நான் என்ன சொல்லி கொண்டு இருக்கிறேன் , நீ என்று கோபமாய் முறைத்து கொண்டி இருந்தாள் சுஹீரா.

“பின் என்ன ஒருவன் நீ தான் வேண்டும் நீ தான் வேண்டும் என்று காட்டுக்கத்தல் கத்திக்கொண்டு இருக்கிறேன், நீ என்வென்றால் எனக்கு பதில் அவளை காதலித்து கொள் என்று பிதற்றினால் வேறு என்ன நினைப்பது இது என்ன பண்டம் மாற்றுமுறையா”, என்றவன் காலையில் கூட நான் சொல்வதை எல்லாம் அமைதியாய் சமத்து பெண்ணாய் கேட்டு கொண்டிருந்தவள், இப்போது மட்டும் என்ன என்று அவள் கன்னம் தொட்டு தன்புறம் திருப்பினான் அகரன்.

“சுஹீ இதை உன்னிடம் பலமுறை கூறிவிட்டேன்” இன்னும் எத்தனை முறை வேண்டும் என்றாலும் கூறுவேன் , “ எனக்கு நீ மட்டும் தான் உனக்கு நான் மட்டும் தான் நமக்கு இடையில் யாரும் வர முடியாது வரவும் விட மாட்டேன்”, இன்னோரு விசயம் உனக்கு தெளிவு படித்த நினைக்கிறேன் “காதல் என்ற பெயரில் என் ஆசையை தீர்த்துக்கொள்ள, ஒரு பெண் வேண்டும் என்று உன்னை நாடவில்லை வாழ்நாள் முழுவதும் என் சோகத்தில் என்னை தாங்கும் தாயாய் , என் சந்தோசத்தை இருமடங்காக மாற்றும் தோழியாய், எப்போதும் என்னை விட்டு நீங்காத ஒரு துணையை தான் தேடுகிறேன் என் காதலாய் நீ மட்டுமே வேண்டும் சுஹீ என்றுமே நீ மட்டும் தான் வேண்டும்” என்று தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டான் அகரன். முதன் முறை அவன் அணைப்பை விட்டு விலக எண்ணாமல் அமைதியாய் இருந்தாள் சுஹீரா.

“நான் முரடன் பிடிவாதக்காரன், அரக்கன் என்று நீ என்னை என்ன நினைத்தாலும் பரவாயில்லை ஆனால் உன் காதல் கொண்டு என்னை புனிதனாய் மாற்றி விடு சுஹீ” என்றவன் அவள் இதழ் நாடி இதம் தேட நினைத்தான், அவன் வார்த்தைகளில் உலகம் மறந்து இருந்தவள் இதழ் கொண்டு இதழ் உரச துவங்கியதும் ஏற்கனவே இருந்த காயம் வலி தர அவனிடம் இருந்து விலகி அமர்ந்து கொண்டு “உனக்கு எப்படி புரியவைப்பது நீ எதிர்பார்க்கும் காதலை என்னால் தர முடியாது உனக்கு ஏற்றவள் பானு தான்” என்று மீண்டும் துவங்க பொறுமை இழந்த அகரன் போதும் சுஹீ “என் விசயத்தில் என்னை தவிர யார் முடிவு எடுத்தாலும் எனக்கு பிடிக்காது” என்று சற்று குரலை உயர்த்தி கூறினான் அகரன்.

“அதை தான் நான் உனக்கு புரிய வைக்க முயன்று கொண்டு இருக்கிறேன் எனக்கும் உனக்கும் எந்த உறவும் இல்லை என் சம்பந்தப்பட்ட முடிவு எடுக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை உனக்கு புரிகின்றதா” என்றாள் சுஹீரா.

“ஓ… நமக்குள் எந்த உறவுமில்லை இது தான் உன் பிரச்சனையா நாளையே நாம் திருமணம் செய்து கொள்வோம் அதன் பின் நமக்குள் இருக்கும் இடைவெளி குறைந்து விடும் தானே “ என்று யோசனை சொன்னான் அகரன்.
“இப்போது பிதற்றுவது உன் முறையா பகடு காதல் போதையில் உன் மூளை குழம்பிவிட்டது போல இப்படி உளறிக்கொண்டு இருக்கின்றாய் உனக்கென்ன பைத்தியமா? நாளையே திருமணமா சும்மா உளராமல் காரை எடு” என்று சிரித்தாள் சுஹீ.

“உனக்கு சம்மதமா என்று மட்டும் சொல் நாளையே நம் திருமணத்திற்கு தேவையான வேலையை துவங்கி விடுகிறேன், நம் திருமணத்திற்கு பின் நீ என்னுடனே இருப்பாய் எனக்கும் உன்னிடம் எல்லா உரிமையும் கிடைக்கும்”, எல்லா உரிமையும் என்று அவன் பார்வை சென்றவிதம் சுஹீராவிற்கு அந்த ஏ. சி காரிலும் வேர்த்து விதிர்விதிர்க்க வைத்தது ஏய் “ஏன் அப்படி பார்க்கிறாய் கண்ணை நோண்டி விடுவேன் ஒழுங்காய் காரைஎடு இல்லை கதவைத்திற நானே என் வீட்டிற்கு போய் கொள்வேன்” என்று திக்கிதிணறி மிரட்டினாள் சுஹீரா.

அவள் தடுமாற்றம் தந்த கிறக்கத்தில் அவளை நெருங்கி “நம் திருமணம் வரை உன் இதழ் தவிர வேறு இடம் தொடமாட்டேன் பயப்படாதே சுஹீ “ என்றவன் தன் ஒருவிரல் கொண்டு மெதுவாய் வருடியவன் , அதில் காயம் இருப்பதை கவனித்து காலையில் “ரொம்ப முரட்டுத்தனமாய் நடந்து கொண்டேனா வலிக்கின்றதா கண்ணம்மா உன் வலிக்கு மருந்திடவா” என்று மென்மையாய் இதழ் ஒற்றின்னான், அகரன்.

“ தள்ளி போ என்னை நெருங்காதே என்று எத்தனை முறை சொல்வது பகடு என்று கோபமாய் கத்தினால் சுஹீரா. “அது என்ன புதிதாய் பகடு வழக்கமாய் அரக்கன் என்று தானே சொல்வாய்” என்று கேள்வியாய் நிறுத்த “இது இது வந்து பகடு” என்றால் நமக்கு பிடித்தவர்களை செல்லமாய் அழைக்கும் வார்தை என்று அசட்டு சிரிப்பு சிரித்தாள் சுஹீரா. அவள் சிரிப்பே அவளின் பொய்யைக்காட்டி கொடுக்க “இது என்ன மொழி” என்று ஒற்றை புருவம் உயர்த்தி வினவியவன் “கண்களில் என்னை ஏய்க்க நினைக்காதே” என்று எச்சரிக்கை இருக்க “ தயக்கத்துடன் இது வந்து படுக மொழி நீலகிரி பக்கம் ஒரு பிரிவினர் பேசுவர்” என்று சுஹீரா பதில் தந்தாள்.

உண்மை தானே என்று அகரன் சந்தேகமாய் கேட்க ஆமாம் என்று வேகமாய் தலையாட்டினாள் சுஹீரா. “நீ சொன்னது மட்டும் பொய் என்று தெரிந்தால் என் தண்டனை என்னவென்று தெரியும் தானே” என்று தன் இதழை குவித்து முத்தமிடும் செய்கை காட்டினான் அகரன்.

“இல்லை உண்மை தான்” என்று சுஹீரா தன் இதழை மறைத்து கொள்ள “நீ சொன்னால் சரிதான்” என்று காரை கிளம்பினான் அகரன். “அப்பாடா நம்பிட்டான்” என்று பெருமுச்சு விட்டவளை ஒரு பார்வை பார்த்து விட்டு தனது மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டினான், அகரன். “வண்டி ஓட்டும் போது மொபைல் யூஸ் பண்ணக்கூடாது என்று உனக்கு தெரியாதா என்ன விசர் வழியை பார்த்து ஓட்டு” என்றிட “இதுவும் பகடு போல் செல்ல அழைப்பா”, சுஹீ என்று ஒருவித குரலில் வினவியவன் மீண்டும் தன் மொபைலில் முழ்கினான் “சொல்வது புரியவில்லை” என்று கோபமாய் அவனிடம் இருந்து போனை பிடிங்கியவள், ஏய் என்ன என்று அகரன் சுஹீராவை பார்க்க அதை ஓரமாய் வைத்து விட்டு ரோட்டின் புறம் கைக்காட்டி வழி அங்கு என் முகத்தில் இல்லை என்று நேராய் திரும்பி அமர்ந்தாள் சுஹீரா.

வழக்கமாய் இறக்கும் இடத்தில் காரை நிறுத்தியவன் அவள் இறங்க முயல கரம் பற்றி தடுத்தவன் “படுக மொழியில் பகடு என்றால் என்ன அர்த்தம்” என்றான் அகரன். பதில் சொல்லாவிட்டால் காரின் கதவை திறக்க மாட்டான் என்பது புரிய “அர்த்தம் தெரியாது” என் கல்லூரி தோழி சொல்லிக்கொடுத்தால் “நீ முதலில் கதவை திறந்து விடு” என்று பதட்டத்துடன் கூறினாள் சுஹீரா.

“பகடு நீ சொன்னது போல் படுக மொழயில்லை தூய தமிழ் தான் பகடு என்றால் எருமை கடா என்று பொருள் விசர் என்றால் இலங்கை தமிழில் பைத்தியம் என்று பொருள் அதுவும் சாதாரண பைத்தியம் இல்லை வெறி பிடித்த பைத்தியம்” என்ன நான் சொன்னது சரிதானே என்னிடம் பொய் சொன்ன வாய்க்கு தண்டனை தர வேண்டாமா? என்று இறுக பற்றி இதழ் முத்த யுத்தம் துவங்கினான், அகரன்.

தனது பலம் முழுவதும் திரட்டி அகரன் செய்த யுத்தத்தில் புறமுதுகு காட்டி தப்பித்தவள் என்னை தொடாதே திருமணத்திற்கு முன் இது தவறு என்று உன்னிடம் சொல்லியிருக்கிறேன் என்று கோபமாய் முறைத்து மிரட்டினாள் சுஹீரா.

“சரி நான் நம் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து விடுகிறேன் இனி நம் திருமணம் முடிந்த பின்பு தான் உன்னை தொடுவேன் போதுமா” என்றவன் அவள் இறங்கி சென்றதும் வழக்கம் போல் அவள் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழையும் வரை பார்த்திருந்து கிளம்பி சென்றான், அகரன்.

“பைத்தியம் முற்றிவிட்டது போல இனி சங்கிலியால் கட்டித்தான் வைக்க வேண்டும் இல்லை” இப்படித்தான் அடிக்கடி பாய்ந்து பிரண்டும் என்று உதட்டினை தடவிக்கொண்டே வர “ஏய் என்ன காயம்” என்று சுபத்ரா பதட்டத்துடன் வினவினார்.

“அது ஒன்றும் இல்லை ஒரு வெறி நாய் துரத்தியது அதனிடம் இருந்து தப்பிக்க ஓடியதில் ஏற்பட்ட வீரத்தழும்பு” என்று சிரித்தவளை சந்தேகமாய் பார்த்தவர் “உண்மையை சொல் எப்படி அடிபட்டது” என்றார் சுபத்ரா . “என்னடா இது இன்று சத்யத்திற்கு வந்த சோதனை என் நேரமே சரியில்லை போல எல்லோரிடமும் வசமாய்மாட்டிக்கொள்கிறேன்” என்று சலித்து கொண்டு “உன் சிபிஐ சிஐடி மூளையிடம் இருந்து தப்பிக்க முடியுமா உண்மையாக தான் சொல்கிறேன் இது ஒரு வெறி நாயின் வேலை தான்” என்றாள் சுஹீரா.

“ம்… பள்ளியில் படிக்கும் போது உன்னுடன் வம்பு செய்தான் என்று ஒருவனுடன் சண்டை போட்டு வந்தாய் பார் அதை போல இப்போதும் யாருடனும் வம்பு செய்து விட்டு வந்தாயா?” என்றார் சுபத்ரா. “அம்மா என்றுமே என்னை நல்ல விதமாய் நினைக்கவே மாட்டாயா அது போன மாசம் மா … அது குழந்தை மனசு அறியாத வயசு ஆனால் இப்போதும் அப்படியே என்னை நினைத்தால் எப்படி நான் படித்த பெண் அம்மா பக்குவமாய் நடக்க தெரியும்” என்று தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள் சுஹீரா . அதன் பின் சுபத்ரா எத்தனை முறை அழைத்தும் பதில் தராமல் அகரன் நினைவில் மூழ்கினாள் சுஹீரா. மாலை வீடு வந்த மஹேஸ்வரன் இரவு உணவு வேளையிலும் மகள் வெளியில் வராமல் அறைக்குலேயே அடைந்துகிடக்க அவளுக்கான உணவினை எடுத்துக்கொண்டு மகளைத்தேடி சென்றார். “என்ன குட்டிமா இன்று மாலை வந்து அப்பாவை வரவேற்கவில்லை இன்னும் காயம் வலிக்கின்றதா ஏதோ நாய் துரத்தியது என்றாயாமே” என்று கேள்வி மேல் கேள்வி கேட்கொண்டே சென்றார்.

“என்ன அப்பா நான் பேசவும் கொஞ்சம் இடம் கொடுங்கள் என்றவள் அந்த நாய்க்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டேன் இனி என் பக்கமே திரும்பிப்பார்க்காது” என்று பெருமை பேசியவள் பசிக்கவில்லை அப்பா அதான் வரவில்லை என்று சேர்த்து சொன்னாள்.

“கையின் காயம் ஆறவேண்டுமே சாப்பிட்டால் தானே மாத்திரைப்போட முடியும் மாத்திரைப்போட்டால் தானே காயம் ஆறும் என்று கொண்டு வந்த உணவை ஊட்டிவிடத்துவங்கினானர், காலையில் அகரன் ஊட்டிவிட்டது நினைவு வர “இந்த உலகத்தில் என் மீது அதிக பாசம் கொண்டவர்கள் உங்களை தவிர யாரும் இல்லவே இல்லை தானே உங்களுக்கும் என்னை தானே ரொம்ப பிடிக்கும்” என்று கேட்டு தன் சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்ள நினைத்தாள் சுஹீரா.

“அதில் என்னடா சந்தேகம் அப்பாவிற்கு எப்பவும் நீ தான் செல்லம் உனக்கு அடுத்து தான் மற்றது” என்று பெருமையாய் கூற, அதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்த சுபத்ரா “நல்லா இருக்கிறது நீங்கள் உங்கள் மகளுக்கு கொடுக்கும் செல்லம்” என்று கடிந்து கொள்ள “இந்த அம்மாவிற்கு என் மீது பொறாமை அதான் இப்படி பேசுகின்றார் நீங்கள் உண்மையை சொல்லுங்கள் உங்களுக்கு அம்மாவை விட என்னை தானே அதிகம் பிடிக்கும்” என்று தன் அன்னையை வெறுப்பேற்ற நினைத்தாள் சுஹீரா.

“உண்மையை கேட்பதால் சொல்கிறேன் உனக்கு முன் எனக்கு அறிமுகமானவள் உன் அம்மா அவள் மூலம் தான் நீயே எனக்கு அறிமுகம் ஆனாய் , நாளையே உனக்கு திருமணம் முடிந்தால் நீ உன் கணவனுடன் சென்றுவிடுவாய் என் காலம் முழவதும் என்னுடன் இருக்கும் ஒரே பத்தம் அவள் மட்டும் தான் அதானல் உன்னை விட ஒரே ஒரு சதிவீதம் அதிகமாய் உன் அம்மாவை பிடிக்கும் ஒரே ஒரு சதவீதம் தான் குட்டிமா பெரிய வித்தியாசம் இல்லை” என்றவர் மகள் உண்டு முடிக்கவும் மாத்திரை எடுத்துக்கொடுத்து அவள் குடித்தும் வெளியேறி சென்றார் மகேஸ்வரன்.

“தந்தை சென்றதும் படுக்கையில் விழுந்தவளுக்கு விழி மூட மட்டும் மனம் இல்லை “நான் உன் மீதான அன்பினை யாருடனும் பங்கு போடவிரும்பவில்லை என் அன்பின் அளவை அளந்து சொல்ல வானின் நீளம் கூட போதாது கண்மணி” என்றவன் குரல் காதில் ஒலிக்க குரலுக்கு சொந்தக்காரன் நினைவில் நிறைந்து கள்ளசிரிப்பு சிரித்தான். “காலையில் இருந்து அகரன் பேசியது அணைத்தது எல்லாம் என்னவோ செய்ய அவன் தொட்ட இடம் குறுகுறுக்க” இதுவரை உணராத புது வித போதையில் தடுமாறி இருந்தாள் சுஹீரா .

அகரன் நினைவில் தன்னை மறந்து மூழ்கிபோனாள் சுஹீரா. அகரன் சொன்ன காதல் மொழிகளே மீண்டும் மீண்டும் காதில் கேட்டு கொண்டே இருக்க, “ இது என்ன இவன் இப்படி இம்சை செய்கிறான்” என்று அதற்கான காரணம் விளங்காமல் தடுமாறி கொண்டு இருந்தவள், அகரன் கோபமாய் கத்தினால் கூட அதை பொருட்படுத்தாத சுஹீராவால் அவன் காதல் மொழிகளுக்கு தடுமாறாமல் இருப்பது போல் நடிப்பது சிரமமாய் இருந்தது கடைசியாய் திருமணம் பற்றி பேசியதும் மிரண்டு ஓடிவிடுவான் என்று நினைத்தால் நீ சம்மதம் சொல் நாளையே திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்றானே சரியான விசர் என்று தனக்குள் பேசி சிரித்து கொண்டாள், சுஹீரா.

“திருமண பந்தம் மட்டும் தான் சுஹீராவை தன்னோடு நிரந்தரமாய் பிணைத்து வைக்க கூடிய ஒரே வழி என்று எண்ணிய அகரன் குகனை அழைத்து அதற்கான ஏற்பட்டினை செய்ய சொன்னான்”. “பாஸ் என்ன திடீர்ரென திருமணம் செய்ய ஏற்பாடு செய் என்கின்றீர்கள் அது என்ன அவ்வளவு சுலபமான காரியமா பெற்றோர் சம்மதித்து நாள் குறித்து, மண்டபம் பார்த்து சொந்த பந்தங்களுக்கு, சொல்லி எத்தனை வேலை உள்ளது நீங்கள் என்னவென்றால் சாதாரணமாய் சொல்கின்றீர்கள்” என்று அதிர்ச்சி விலகாமல் வினவினான் குகன்.

“என் சுஹீ என்னுடனே வைத்துக்கொள்ள இது தான் வழி பணம் இருந்தால் இந்த உலகத்தில் எல்லாம் சுலபம் தான் நீ நான் சொல்வது படி செய்து ரெஜிஸ்டர் செய்யவும் ஏற்பாடு செய்” என்று கட்டளையிட்டான் அகரன்.

“இவர் என்ன எனக்கு பாஸ்ஸா இல்லை லூசா , வேறு யார் சம்மதம் வேண்டாம் கல்யாண பெண்ணின் சம்மதம் வேண்டாமா, இதை கேட்டால் என்னை பைத்தியக்காரன் என்பார்” ஆனால் ஏதாவது தில்லுமுல்லு செய்து அண்ணியை சம்மதிக்க வைத்துவிடுவார் அது மட்டும் உறுதி. “கடவுளே இருவரையும் சேர்த்துவை என்றேன் அதற்காக இப்படியா வில்லாதனமாகவா நடந்து கொள்வாய், என் பாஸ் கேடி என்றால் அவருக்கு இதுபோல் யோசிக்கும் மூளை கொடுத்த நீ டாபிள் கேடி” என்று வித்தியாசமாய் திட்டுகளால் கடவுளுக்கு அர்ச்சனை செய்தான் குகன்.

தான் சொன்ன விசயம் தனக்கே பாதகமாய் வரும் என்று அறியாத சுஹீரா அகரன் பார்வை யுத்தமும் இதழ் முத்தமும் தரும் இம்சையில் இருந்து தப்பிக்க வழி தெரியமல் தவித்து கொண்டு இருந்தாள் சுஹீரா.

என் நினைவில்
நீ நிறைந்து இருக்க
உன் மனதில்
நான் மறைந்து இருக்க
காலம் முழுவதும்
காதல் புரிய நீங்காமல் வருவாயா??