அரக்கனோ அழகனோ 13

அரக்கனோ அழகனோ 13
0

அழகன் 13

என்னிடம் இருந்து
எதை வேண்டும்
என்றாலும் கேள் தருகிறேன்
உன்னிடம் இருந்து
உயிர் காதலை மட்டும்
எனக்கே எனக்காய்
கொடுத்துவிடு…

“அண்ணா நீங்கள் செய்வது கொஞ்சம் கூடசரியில்லை என் மகளுக்கு நல்ல வாழ்வு அமைத்து தருவது உங்கள் பொறுப்பு என்று எனக்கு வாக்கு தந்தீர்கள்” ஆனால் அதை மறந்து உங்கள் மகனுக்கு சாதகமாக நடந்துகொள்வது என்ன நியாயம் என்று கலையரசி வாதிட்டு கொண்டு இருந்தார். “நான் யாருக்கும் சாதகமாய் பேசவில்லை கலை கல்யாணம் செய்து வாழப்போகின்றவர்கள் அவர்கள் விருப்பமும் முக்கியம் என்று தான் சொல்கிறேன், “ நல்ல வாழ்வு அமைத்து தருவேன் என்று சொன்னேனே தவிர அந்த நல்ல வாழ்வு என் மகனுடன் அமைத்து வைப்பேன் என்று சொல்லவில்லை” என்று தன் தங்கைக்கு நிலமையை புரியவைக்க முயன்று கொண்டு இருந்தார் ஈஸ்வர். “எல்லோரும் சேர்ந்து எனக்கு அநியாயம் செய்கின்றீர்கள் அப்பா எனக்கு தரவேண்டிய உரிமையை மறுத்தார் நீங்கள் கொடுத்த வாக்கை மறுக்கின்றீர்கள்” என்று கண்ணீர் சிந்தினார் கலையரசி.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா அம்மா நம் எண்ணம் போல தான் நம் வாழ்க்கையும் இருக்கும்” என்று கலையரசியை சமாதானம் செய்வது போல அவர் செய்த தவறை நினைவு படுத்த முயன்றாள் அதிகா. மகள் தனக்கு சாதகமாக பேசவில்லை தன் தவறை சுட்டி காட்டுகின்றாள் என்று புரிந்தும் அதிகா கையை இறுகப்பற்றி “இதற்கு மேல் எதுவம் பேசாதே” என்று அவள் காதில் ரகசியமாய் எச்சரித்து விட்டு பாருங்கள் எவ்வளவு பொறுப்பான பெண் நீங்கள் எங்களுக்கு இவ்வளவு கெடுதல் செய்தும் உங்களுக்காக பெற்ற தாயையே எதிர்த்துநிற்கின்றாள், இவள் மனைவியாய் அமைய உங்கள் மகன் தான் கொடுத்து வைக்கவில்லை, என்று மேலும் தனது நாடகத்தை தொடர்ந்தார் கலையரசி.

“போதும் அம்மா என்று கலையரசி கையை விலக்கிவிட்டவள் யாரும் யார் வாழ்க்கையையும் கெடுக்கவில்லை “ என்று ஈஸ்வர் முன் சென்று நின்றவள் “கரணே என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாலும் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் மாமா , கரண் மீது எனக்கு அதுபோல எண்ணம் இல்லை”, அது மட்டும் இல்லை இவ்வாறு உறவுகளுக்குள் திருமணம் செய்வதன் மூலம் பரம்பரையாக வியாதிகள் சந்ததிகளுக்குள் கடத்தப்படுவதோடு புதிது புதிதாக நோய்கள் ஏற்படுகின்றனவாம், ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் அவர்களின் சந்ததியினர் குறைபாடுடைய மரபணுக்களோடு பிறக்க வாய்ப்புண்டு என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள், “என் தாத்தா திருவாளர் தேவேந்திரமூர்த்தி வம்சத்து வாரிசு குறையுடன் பிறப்பதா? அதற்கு நாம் இடம் கொடுப்பதா?” என்ன அம்மா நான் சொல்வது சரிதானே என்றாள் அதிகா.

மனதில் இருந்த சிறு உறுத்தலும் மறைய “புத்திசாலி பெண் என்று அவள் தலையில் கைவைத்து, உன் குணத்திற்கு எந்த குறையும் வாராது அதிகா நல்ல பையனை பார்த்து எந்த குறையுமில்லாமல் தாய் மாமன் முறையில் அனைத்து சீரும் செய்து எல்லாரும், பெருமையாய் பேசும்படி சீரும் சிறப்புமாய் உன் திருமணத்தை நடத்தி வைப்பேன்” என்று ஈஸ்வர் கூறி கொண்டு இருக்கும் போதே, “அப்படியே தாய் மாமன் சீரோடு, தாய்யையும் சீராய் மகளோடு அனுப்பி வைத்துவிடலாம்” என்று அகரன் குரல் கேட்டு திரும்பிய அதிகா, “நிச்சயம் கரண் என் அம்மா இல்லாமல் எனக்கு கையுடைந்தது போல் இருக்கும் அதனால் நீங்களே உங்கள் அத்தையை அனுப்ப முடியாது என்று தலைகீழாய் நின்றாலும் நான் என் அம்மாவை விட்டுதரமாட்டேன்” என்று கலையரசி தோள் மீது போட்ட மகள் கையை தட்டிவிட்ட கலையரசி. “உன் தலையில் நீயே மண்ணை அள்ளி போட்டு கொள்ளாதே நீ கொஞ்சம் அமைதியாய் இரு நான் பக்குவமாய் பேசி மாப்பிள்ளைக்கு புரியவைத்து இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறேன்” என்று கண்ணாலேயே ஜாடை செய்து எச்சரிக்கை செய்தார் கலையரசி.

“நீங்கள் செய்த வரைக்கும் போதும் “இது என் வாழ்கை என்னை கொஞ்சம் முடிவெடுக்க விடுங்கள்” என்று அகரன் அருகில் சென்று நின்றவள் ஏன் அம்மா “இந்த கரண் பெரிய மகாராஜா இவர் வேண்டாம் என்றதும் என்னை யாரும் கல்யாணம் செய்யமாட்டார்களா என்ன?” என்று கேலியாய் பார்க்க.

அவளை ஏளனமாய் பார்த்து ஒட்டறை புருவம் உயர்த்தி “பார்க்கும் பெண்களுக்கு எல்லாம் ராஜாவாக இருக்க எனக்கு விருப்பம் இல்லை என் மனைவிக்கு சரியான கணவனாய் இருந்து அவளை ராணி போல் பார்த்து கொள்வதே என் விருப்பம் நான் ராஜாவா மந்திரியா என்று உன்னிடம் அபிப்பிராயம் கேட்கவில்லை” என்ன என்று அகரன் சூடாய் பதில் தந்தான், அகரன்.

“உன்னை போல தான் எனக்கும் உனக்கெல்லாம் என்னை பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என் புருஷனாய் வரப்போகும் மனுசனுக்கு என்னை பிடித்தால் போதும்” என்று பதிலுக்கு பதில் தந்தாள் அதிகா.

“கட்டிகொள்ளும் முன்பே இந்த மரியாதையா! நல்லவேளை நான் தப்பித்தேன்” என்று அகரன் பெருமூச்சு விட, “நல்லவேளை கடவுளே இந்த கடுவன் பூனையிடம் இருந்தது என்னை காப்பற்றினாய்” என்று தலைக்கு மேல் கை தூக்கி கும்பிடு போட்டாள் அதிகா. இதுவரை இருவரும் இப்படி வாயாடி பழக்கமில்லாதால் ஒருவரை ஒருவர் விசித்திரமாய் பார்த்து சிரிக்க, மற்றவர்கள் அவர்களை அதிசயமாய் பார்த்து நின்றனர்.

“அகரன் அலுவலகம் கிளம்ப ஈஸ்வரும் உடன் சேர்ந்து கிளம்பினார் யமுனா உணவு வேலை கவனிக்க சென்றிட, “என்ன செய்து கொண்டு இருக்கின்றாய் என்று புரிந்து தான் செய்கின்றாயா வேண்டாததையும் செய்து என்னிடம் வாங்கி கட்டிக்கொள்ளாதே என்னிடம் அடி வாங்கி பல நாள் ஆகிவிட்டதால் குளிர்விட்டு போனதா என்ன மரியாதையாய் நான் சொல்வதை செய் இல்லை மகள் என்றும் பார்க்கமாட்டேன்” என்று அடக்கிய குரலில் அதிகாவை மிரட்டினார் கலையரசி.

“நீ செய்த அனைத்துக்கும் உன் பக்கம் நியாயம் இருந்தது என்று நினைத்து நீ செய்து கொண்டிருந்த கீழ் தனமான வேலைகளுக்கு உடந்தையாய் இருந்தேன் இப்போது யார் சரி யார் தவறு என்று தெளிவாய் நீயே விலக்கிவிட்டாய் இனியும் அத்தை, மாமாவிற்கு நீ செய்யும் நம்பிக்கை துரோகத்தை பொறுமையாய் கைகட்டி பார்த்து கொண்டு இருப்பேன் என்று கனவிலும் நினைக்காதே”, இனி நீ என்ன சதித்திட்டம் தீட்டி யமுனா அத்தையை காயப்படுத்த நினைத்தாலும் என்னை மீறி தான் செய்யவேண்டும், “என் பேச்சை கேட்டு தான் நடக்க வேண்டும் புரிகின்றதா?” என்று கோபமாய் பதில் தந்தாள் அதிகா.

“நம்மை நாதியற்று அனாதை ஆசிரமத்தில் விட்டதை மறந்துவிடாதே அதற்கு முக்கிய காரணமே இந்த யமுனா தான்” என்று கலையரசி கூற , “நாம் பட்ட கஷ்டத்தின் முக்கிய காரணம் உன்கெட்ட எண்ணங்கள் தான் பாவம் பார்த்து நம் மீது இரக்க பட்டு வீட்டிற்குள் விட்டதே அத்தை தான் அவர்கள் குணத்தை கொஞ்சம் புரிந்து அதற்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு கெடுதல் செய்யாமல்யிரு” என்று அறிவுரை கூறினாள் அதிகா.

“என்ன புத்திசாலித்தனமாய் பேசுவதாய் நினைப்பா உன் அப்பாவும் இப்படித்தான் அடுத்தவர்களுக்கு பார்த்து பார்த்து என்னையும் உன்னையும் மறந்தார். நீயும் நியாயம் பார்த்து கிடைக்கும் வாழ்வை கெடுத்து கொள்ளாதே” என்று கோபமாய் பேச “அடுத்தவர்களுக்கா யோசித்து வாழ்வதும் ஒரு சுகம் தான் அம்மா நீ உன்னை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு இருப்பதால் உனக்கு அந்த சுகம் புரியவில்லை” என் உடம்பில் அப்பா இரத்தம் மட்டும் இல்லை உன் இரத்தமும் தான் ஓடுகின்றது இனியும் ஏதும் வில்லத்தனம் செய்தாய் என்றால் அம்மா என்றும் பார்க்க மாட்டேன் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விட்டுவிடுவேன் பின் கடைசி காலம் முழுவதும் உறவுகள் இன்றி தனிமையில் தவிக்க வேண்டும் என்று பதிலுக்கு எச்சரித்தாள் இல்லை தெளிவாய் மிரட்டினாள் அதிகா.

தன் மகளே தனக்கு எதிராய் இருக்க என்ன செய்வது என்று புரியாமல் அப்போதைக்கு தன்னால் முடிந்த அளவு மகளை முறைத்துவிட்டு நகர்ந்தார் கலையரசி. யமுனவை தேடி சென்ற அதிகா அத்தை “என் அம்மா செய்த, செய்துகொண்டு இருக்கும் தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் அத்தை எனக்கு நடந்தது எதுவும் தெரியாது இத்தனை நாட்களாக அவர்கள் சொன்னதைவைத்து உங்களை தவறாக புரிந்து கொண்டு, தவறாய் நடந்து கொண்டதற்கு என்னை மன்னித்து விடுங்கள்” அத்தை எனவும். “எனக்கு உன் மீதோ கலை அண்ணி மீதோ எந்த கோபமும் இல்லை அதிகா அவர்கள் சூழ்நிலை என்னை புரிந்துகொள்ள வாய்ப்பே கிடைக்கவில்லை” ஆனால் உனக்கு கிடைத்ததே என்று மிகவும் சந்தோசமாய் இருக்கிறது “நான் என்றுமே உன்னையோ அகரனையோ வித்தியாசமாக பார்த்தது இல்லை நீயும் எனக்கு மகள் போல தான் அதிமா அகரன் மனதில் வேறு ஒரு பெண்ணை நினைத்து க் கொண்டு இருக்கின்றான் அதனால் தான் உன்னை மறுத்துவிட்டான் நீ ஏதும் கவலை கொள்ளாதே உன் மாமா சொன்னது போல் உனக்கு வேண்டிய அனைத்து நல்லதும் அத்தையாய் இல்லாமல் உன் அம்மாவாய் முன் நின்று நடத்திவைப்பேன்” என்றார் யமுனா அழகாய் ஒரு பந்தம் மலர்ந்த சந்தோஷத்தில் இருவரும் கட்டியணைத்து கொண்டனர்.

அலுவலகம் வந்த அகரன் குகனை அழைத்து “தனது திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடு செய்யத்துவங்கிவிட்டாயா” எனவும் குகன் அமைதியாய் இருப்பதை கண்டு என்ன சும்மா அந்த நேரத்தில் தோன்றியதை சொல்லிவிட்டு பின் மனம் மாறிவிடுவேன் என்று நினைத்தாயா குகா “என் முடிவுகள் யாவும் மறுபரிசீலனைக்கு இடமின்றி எடுக்கப்படுபவை புரிந்ததா இனியும் காலம் தாழ்த்தாமல் சொன்னதை செய்” என்று கட்டளையிட்டான் அகரன்.

பாஸ்… “இன்னும் ஒருமுறை யோசித்து கொள்ளுங்கள் அண்ணியும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் இல்லையா?” அவர்களுக்கும் அப்பா அம்மா முன் தன் திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசை இருக்கும் தானே, அது மட்டும் இல்லை அவர்களின் முழு சம்மதம் பெற்று திருமணம் செய்தால் தான் நல்லது என்று என் அபிப்பிராயம் என்றான் குகன்.

“ஒரு முறை எடுத்த முடிவை சரிதானா என்று மறுமுறை யோசிக்கின்றோம் என்றால் அது தீர்மானமான முடிவு இல்லை குழப்பம் உள்ளது என்று அர்த்தம் “ என் சுஹீ விசயத்தில் எடுக்கும் எந்த முடிவும் மாற்று கருத்தில்லாமல் தெளிவாய் எடுக்கப்படுவது தான் “திடீரனென திருமணம் செய்து மகேஸ்வரன் முன் சென்று நிற்கும் போது அவர் கர்வத்திற்கும் ஆனவதற்கும் சரியான அடியாய் இருக்கும் தானே “என்று கடினமாய் கூற, “என்ன இப்படி மாற்றி மாற்றி பேசுகின்ரீர்கள் பாஸ் அவரை பழிவாங்க போவது இல்லையென்று அன்று சொன்னீர்களே இன்று உங்கள் முடிவை பார்த்தால் அப்படி நினைக்க தோன்றவில்லையே!” “எனக்கு இருப்பதே கொஞ்சம் மூளை அதையும் இந்த குழப்பு குழப்பினால் பாவம் அது என்ன செய்யும் “ என்று குகன் சோகமாய் வினவ, “அவரை பழிவாங்க மாட்டேன் என்று தான் சொன்னேன் தவிர அவர் பேசியதற்கு பதிலடி தரமாட்டேன் என்று சொல்லவில்லையே” என்று குகனின் குழப்பத்தை மேலும் அதிக படுத்துவது போல் பதில் தந்தான் அகரன்.

“ஒன்றும் புரியாமல் தலையில் கைவைத்து கொண்டு அது என்ன பதிலடிக்கும் பழிவாங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் உங்கள் திருவாயாலேயே குறிப்பிட்டு விடுங்கள் பாஸ் அப்போதாவது இந்த மரமண்டை மூளைக்கு புரிகின்றதா” என்று பார்ப்போம், என்றான் குகன்.

நான் செய்யாத ஒன்றை சொல்லி என்னை தரக்குறைவாய் பேசியதற்கு பதில் நான் ஏதும் செய்யாமல் இருந்தால் அவர் சொன்னது சரி அதை நான் ஒத்துக்கொண்டேன் என்று அர்த்தம் ஆகிவிடாதா? “பழிவாங்குதல் என்றால் அவர்களை கஷ்டப்படுத்தி அதில் சந்தோசம் காண்பது”, முதலில் அவர்கள் கஷ்டத்தில் மகிழ்ந்திடத்தான் திட்டம் தீட்டினேன் ஆனால் இப்போது அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் என் சுஹீக்கு வேதனை சுஹீ கலங்குவதை என்னால் தாங்க முடியாது அதானல் குறைந்த் பட்ச தண்டனையாக அவர்களின் வேண்டாத மருமாகனாகி காலம் முழுவதும் உறுத்தலை கொடுத்துக்கொண்டே இருப்பேன், “என் சுஹீக்காக பல விசயங்கள் மாற்றிக்கொண்டேன் ஆனால் இப்போது செய்ய நினைப்பது அவர் சொன்ன அளவிற்கு கெட்டவன் இல்லை என்று நிரூபிப்பதற்கு என்று அகரன் கூறி முடிக்க.

“அவர் சொன்ன அளவிற்கு இல்லை ஆனால் கெட்டவன் தான் என்று ஒத்துகொள்கின்றீர்களா? பாஸ் என்று குகன் கேலியாய் வினவ. அகரன் மனதில் இதுவரை அடக்கிவைத்திருந்த ஆதங்கம் வெளியே வந்தது “எந்த பெண்ணிடம் நான் எல்லை மீறி நடந்து கொண்டேன், சிலர் உண்மை நட்புடன் பழகினார் சிலர், என்னிடம் உள்ள பணத்தை பார்த்து போலியாக பழகினார், என் மேல் வந்து உரசும் அது போன்ற ஜென்மங்களுக்காக நான் சிலுவையை சுமந்து கொண்டு இருக்கிறேன்” பணக்கார பையன் என்றால் இப்படி தான் இருப்பான் வெளிநாட்டிலும் இதை தான் செய்து இருப்பான் என்று என்னை பற்றி அவரே ஒரு கருப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு என்னை கணிப்பது தவறுதானே? “இது வரை எந்த பெண்ணையாவது தப்பான எண்ணத்தில் பார்த்திருப்பேனா இல்லை தொட்டுயிருப்பேனா என் சிந்தனையில் இல்லாத அசிங்கத்தை என் மீது பூசிவிட்டு குற்ற உணர்வே இல்லாமல் நிம்மதியாய் இருக்கலாமா?” என்று பொரிந்து தள்ளினான், அகரன்.

“அவராகவா சொன்னார் பத்திரிகையில் படித்ததை வைத்து சொல்லியிருப்பார் உங்களை பற்றி உடன் இருக்கும் எனக்கே சில நேரங்களில் புரியாமலிருக்க புதிதாய் பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும்? என்று மஹேஸ்வரனுக்காக வாதடினான் குகன்.

என்னை பற்றி எதுவும் தெரியாது என்றால் அமைதியாய் ஒதுங்கி இருந்திக்கலாம் அதை விட்டு அவர் நண்பருக்காக என்னை அவமானப்படுத்தலாமா? “கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் பத்திரிகையில் எழுதுவதை வைத்து என்னை தவறாய் கணித்தது அவர் பிழை தானே அதற்க்கு பதில் சொல்ல போகிறேன்”, நான் நீங்கள் நினைத்தது போல் இல்லை என் மனைவி சுஹீயை தவிர வேறு எந்த பெண்ணையும் தொட்டதும் இல்லை இனி தொடப்போவதும் இல்லை என்று அவர் முன்பே வாழ்ந்து காட்டி சரியான பதில் தரப்போகிறேன் என்று தீரமானமாய் கூறினான் அகரன்.

இந்த சபதம் சூப்பர் பாஸ்… “நான் கெட்டவன் இல்லை என்று அவர் குடும்பத்தில் ஓருவனாய் மாறி உணர்த்த போகின்றீர்கள்” அது எல்லாம் சரி அண்ணிக்காக இவ்வளவு யோசிக்கும் நீங்கள் அவர்கள் மனம் மாறி உங்களை முழுமனதாய் ஏற்கும் வரை காத்திருக்கலாம் இல்லையா? உங்கள் முதல் திட்டத்தில் சொன்னது போல் அவர்களே நீங்கள் தான் வேண்டும் என்று அவர்களின் அப்பாவை எதிர்த்து நிற்கும் படி செய்யலாம் இல்லையா? என்று புரியாமல் வினவினான் குகன்.

“உனக்கு சுஹீ குணம் தெரியாது சரியான அழுத்தகாரி அவ்வளவு எளிதில் அவள் மனதில் உள்ளதை வெளிக்காட்டமாட்டாள், அவள் குடும்பத்தை எதிர்த்து என்றுமே என்னை மனதார ஏற்கமாட்டாள், இப்போது என் மீது முளைத்து இருக்கும் காதலை கூட எனக்கு தெரியாமல் மறைக்க நினைக்கின்றாள்” அவள் அப்பா அம்மா சம்மதத்துடன் திருமணம் என்றால் என் மாமனாருக்கு என் மீது உள்ள அபிப்பிராயத்தை பார்த்தால் காலம் முழுவதும் சுஹீக்கா நான் காத்திருக்க வேண்டிவரும் அது மட்டுமில்லை “சுஹீக்கும் அவள் அப்பாவை பழிவாங்க தான் அவளை பயன்படுத்த நினைத்தேன் என்று தெரியவந்தால் என்னை என்றுமே மன்னிக்க மாட்டாள் என்னால் என் சுஹீயை இழக்க முடியாது அவள் இல்லாமல் வாழ முடியாது” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறிக்கொண்டு இருந்தான் அகரன்

குகன் கண்களில் நீர் திரையிட “காதல் போனால் அதற்காக உயிரைவிடுவது கோழைத்தனம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள் நீங்களே இப்போது அவர்கள் இல்லாமல் வாழ மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்” என்று கோபமாய் கேள்விகேட்க, “அவள் இல்லாமல் செத்துவிடுவேன் என்று சொல்லவில்லை, என் வாழ்வில் அர்த்தம் இருக்காது என்றேன்” அவள் இடத்தில வேறு ஒருவருக்கு இடம் இல்லை. “என் சந்தோசம் நிம்மதி எல்லாம் இழந்து ஒரு ஜடமாய் தான் இருப்பேன்” என்று வேதனை குரலில் கூறினான் அகரன்.

“நீங்கள் திருமணத்திற்கு மட்டும் தயாராகுங்கள் மற்ற வேலையை நான் கவனித்து கொள்கிறேன் எப்படியும் ஒரு வாரம் ஆகும் என்கிறார்கள், நான் பணத்தால் பேசி சீக்கிரம் முடிக்க பார்க்கிறேன்” என்று அகரன் அருகில் வந்தவன் அவனை அனைத்துக்கொண்டு “நீங்கள் அண்ணியை இந்த அளவிற்கு நேசிக்கின்ரீர்கள் என்று உணராமல் இருந்தது என் தவறு தான் உங்கள் காதல் நிச்சயம் அண்ணியையும் மாற்றும் என்றவன்” வேறு பதில் பேசாமல் வெளியேறி சென்றான் குகன்.

குகன் சென்றதும் சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்து இருந்தவன் நினைவில் குகன் கண்ணீரின் காரணம் மட்டும் நிறைந்து இருந்தது வலி மிகுந்த நினைவுகள்…

அகரன் கல்லூரி படிப்பை இங்கு தான் ஆரம்பித்தான் “பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே படிக்கயிடம் அளித்த படிப்பை வியாபாரமாய் மட்டும் பார்க்கும், ஒரு பகட்டான கல்லூரி அது”. அரசின் வற்புறுதலினால் அவ்வப்போது, கண்துடைப்புக்காக ஏழை மாணவர்களுக்கும் படிக்க பணம் இல்லாமல் சிரமபடும் ஒரு சில மாணவர்களுக்கும் படிக்க இடம் அளித்து பெரிய புண்ணிய காரியம் செய்த நிறைவில் திரியும் மேல்தட்டு ஆட்கள் நிறைந்த அந்த கல்லூரியில், கிராமத்து வாசம் மாறாமல் வெயிலில் உழைத்து உடல்கருத்திருந்தாலும் வெகுளியாய் வெள்ளை உள்ளம் கொண்ட நளன் அந்த ஆண்டின் அவர்களின் கரிசன பார்வையை பெற்றவன்.

“ நளன்!, நளன் இது என்ன பெயர், நீ நளன் என்றால் உன் தமயந்தி யார்” என்று சீனியர் ராக்கிங் செய்ய “நான் அந்த நளன் இல்லை அண்ணா இராமாயணத்தில் வரும் நளன் பொறியியல் அறிந்த வானர வீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன் என்று தனது பெயருக்கான விளக்கத்தை வெள்ளந்தியாய் கூறிக்கொண்டு இருந்தான் நளன்.

“வானரம்” என்றால் என்று சிலர் யோசிக்க “வானரம் என்றால் குரங்கு” என்று அர்த்தம்டா என்று ஒருவன் விளக்கம் சொல்ல குரங்கா சரியான பெயர் தான் நீயும் வாழைப்பழம் தான் விரும்பி சாப்பிடுவாயா என்றதும் அங்கு பெரும் சிரிப்பலை எழுந்தது, தன்னை கேலி செய்கின்றார்கள் என்றுகூட அறியாமல் “ஆமாம் அண்ணா எனக்கு வாழைப்பழங்கள் ரொம்ப பிடிக்கும்” என்று நளன் கூற மீண்டும் அங்கு ஒரு சிரிப்பலை எழுந்தது.

“வாழைப்பழத்தில் உள்ள நன்மை தெரிந்தால் நீயும் தினம் இரண்டு உண்பாய்” என்று குரல் கேட்டு அனைவரும் திரும்ப, மேலும் பேச துவங்கினான் அவன். “நாம் செய்கின்ற பெரிய முட்டாள் தனம் என்ன? என்று தெரியுமா ஒன்றை பற்றி முழுதாய் தெரிந்துகொள்ளாமல் இது இப்படித்தான் என்று தவறாக கணித்து கேலி செய்து பிறரையும் தவறாக வழிநடத்துவது”, ஒருவரின் வெளி தோற்றத்தை வைத்து எதையும் எடை போடக்கூடாது
“That man may look very small and insignificant, but don’t judge a book by its cover – he’s a very powerful man in his circle”. என்ன புரிகின்றதா?, நீ விழிப்பதை பார்த்தால் புரியவில்லை என்று எனக்கு நன்றாக புரிகின்றது. “நீ ஏளனமாய் கேலி செய்யும் இவன் அவன் ஊரில் படிப்பில், தொழிலில் சிறந்தவனாக இருக்கலாம்! ஏன் உன் போல் வம்பு பேசுபவன் வாய்யை உடைப்பதில் வல்லவனாக இருக்கலாம் என்று அவர்களுக்கு எதிரில் இருந்த மர பெஞ்சில் அமர்ந்தவன், “பார்டா ஒரு வானரத்தை சொன்னால் இன்னோரு வானரத்திற்கு கோபம் வருகின்றது” இது தான் இனப்பற்று என்பதா என்று கேலி செய்ய மற்றவர்கள் சேர்ந்து சிரிக்க துவங்கினார்.

“நீ ஏளனம் செய்யும் வானரம் தான் நம் மூதாதையர்கள் அது தெரியுமா உனக்கு?” என்று துவங்கியவன். நீ ஏன் நிற்கின்றாய் நண்பா இந்த மூளையற்ற ஜென்மங்களுக்கு பெரிய பாடம் நடத்த வேண்டி உள்ளது வா என்று நளனையும் உடன் அமர்த்தி கொண்டு எதை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் வாழைப்பழம் சரியா என்று தனது குரலை சீர் செய்து கொண்டவன்.

முக்கனிகளில் ஒன்று எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் உலக மக்களினால் அதிகமாக உண்ணப்படும் பழங்களில் இது ஒன்று, இதில் 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன, அது உனக்கு தெரியுமா? மந்தி, என்று கேலிசெய்தவனை பார்த்துக்கேட்டவன், தொடர்ந்து வாழைப்பழத்தின் சிறப்புகளை அடுக்கினான்.

நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அடுத்த 15 நிமிடங்களுக்குள் ஜிவ்வென்று (35%) அதிகரிப்பதால் உடலும் மனமும் சுறுசுறுப்பாகி விடுகின்றன, மற்ற உணவு என்றால் இன்னும் அதிக நேரம் ஆகும். இந்தச் சக்தி அடுத்த 40 நிமிடங்கள் வரை உடலில் இருக்கும். பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம்.இன்று, விஞ்ஞானிகளும், சத்துணவு நிபுணர்களும், உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். நரம்புகள் தளராமல் இளமை நீடிக்க கால்சியம், இரத்த சோகையைத் தடுக்கும் இரும்புச்சத்து, இதயம் சீராய்ச் சுருங்கி விரிவடைய மக்னீஷியம், பாக்டீரியாக்களை அழிக்கும் ஹைடிரோ அமிலம், சோடியம் உப்பு, இரத்தத்தைத் திரவ நிலையில் இருக்க உதவும் பொட்டாசியம், மூளை வளர்ச்சிக்கும், பார்வைத் திறனுக்கும் பாஸ்பரஸ், A, B, C என மூன்று வைட்டமின்களும் வாழைப்பழத்தில் உள்ளன. விளையாட்டு வீரர்களுக்கும், தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம் வாழைப்பழம்தான் என்கிறார் பிரிட்டிஷ் சத்துணவு நிபுணர் ஜேன்கிரிஃப்பின். வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும், இது பொட்டாசியம் குறைவால் வருகிறது, தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம். பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், அ‌ல்ச‌ர் உடையவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது, வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும், எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது. அஸ் யூஸ் வெல் எல்லோரும் அறிந்த ஒன்று, நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

இன்னும் நிறைய பயன்கள் உள்ளது வானரமே “ஐ மீன்” வானரங்கள் இதை உண்டு தான் வளமான வாழ்வை வாழ்கின்றன, “உன்னை போல் பீசா பர்கர் சாப்பிட்டு உடல் எடையை விட, இருமடங்கு கொழுப்பை சுமந்து கொண்டு இருப்பவர்களுக்கு அதன் அருமை தெரிவது கடினம் தான் என்றவன், நளன் கைகுலுக்க. “உன்னை கேலி செய்வது கூட தெரியாமல் பதில் தந்து கொண்டு இருக்கின்றாய்?” இனி உன்னை எவனும் கேலி செய்தால் முகத்திலேயே ஒரு “பஞ்ச்க்கொடு” எவன் வந்து கேட்டாலும் என் பெயரை சொல்லு என்றான் இயல்பான திமிர் கலந்த பாவனையில், “ஏய் நீயராட ரொம்ப ஓவராய் பேசுகின்றாய்” என்று அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப “அகரன் நானும் முதலாம் ஆண்டு” தான் முடிந்தால் என்னை தொட்டுபார் என்று சட்டை கையை மடக்கி விட சீனியர் கூட்டத்து தலைவன் போல இருந்தவன் இறங்கி வந்து அகரன் மேல் கைவைக்க அடுத்த நொடி, முகத்தில் குத்து பெற்றவன் மூக்கின் மீது கைவைத்து கீழே சரிந்தான்.

“இன்னும் யாருக்கு வேண்டும்?” என்று கேட்டு அகரன் முன்னேற மற்றவர் பின்வாங்கினர் அகரன் செயலை கண்டிக்கும் தைரியம் இல்லாமல் அவன் மீது என்ன புகார் செய்வது அப்படி செய்தால் ராக்கிங் செய்ததற்காக தாங்களும் மாட்டிக்கொள்வோம் என்று அமைதியாய் ஒதுங்கி கொண்டனர்.

அகரன் மீது உண்டான மரியாதை கலந்த நட்பால் “தனக்கு கிடைத்த விருப்பமான பாடப்பிரிவை விடுத்து அகரன் சேர்ந்த அதே பிரிவில் மாற்றலாகி வந்தான் நளன்” அதன் பின் அகரனுக்கும் நளனுக்கும் நடுவில் ஆழமான நட்பு படர்ந்தது நளனுக்கு விடுதியில் தங்கும் அளவு வசதி இல்லாததால் தனியாய் அறை எடுத்து தங்கியிருந்தான். அவனுக்கு என்று சமைத்து வருவதை அகரன் விரும்பி சாப்பிடுவது அறிந்து அவனுக்கும் சேர்த்து கொண்டுவர துவங்கினான் நளன். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாய் இருக்க பார்ப்பவர்களும் அவர்களை இரட்டையர் என்றே அழைக்க துவங்கினர்.

எல்லாம் சரியாய் தான் போய்க்கொண்டு இருந்தது திடீரென நளன் தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி அறிந்து நளன் அறைக்கு சென்றவன் நளனின் தற்கொலைக்கு காரணம் அறிந்து மேலும் அதிர்ந்தான்.

நளன் ஒரு பெண்னை உயிருக்கு உயிராய் காதலித்துக் கொண்டு இருந்தான் அது அகரனும் அறிந்த ஒன்றே! இதை பற்றி பலமுறை பேசி இருக்கின்றான் அகரன் உன் ஊர் பக்கம் இருப்பதை போல் இங்கு ஆழமான காதல் கிடைக்கும் என்று எண்ணாதே இங்கு தொட்டு பேசுவது, ஒன்றாய் சுற்றுவது எல்லாம் சகஜம் என்று அறிவுரையும் கொடுத்தும் உள்ளான் இருந்தும் அவன் பேச்சை மீறி அந்த பெண்னை உண்மையாய் நேசித்து கொண்டிருந்தவன், திடீரென அவள் மறுக்கவும் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டான் தனது தற்கொலைக்கு தான் மட்டுமே பொறுப்பு இதற்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதிவைத்து இருந்ததால் அதற்கு மேல் கேஸ் பைலை மூடிவிட்டனர் காவல் அதிகாரிகள் ஆனால் அகரனுக்கு அப்படியே விட மனமின்றி, நளன் காதலித்த பெண்னை தேடி சென்ற அகரன், “உன்னால் போன உயிருக்கு அவன் குடும்பத்திற்கு என்ன பதில் சொல்ல போகின்றாய்” என்று நியாயம் கேட்க. “அந்த பட்டிக்காட்டுக்கு என் மீது காதலா நல்ல கதை உன்னிடம் பழகவும் உன்னை பற்றி தெரிந்து கொள்ளவும் தான் அவனுடன் நெருக்கமாய் பழகினேன் அதை காதல் என்று தவறாய் எடுத்து கொண்ட முட்டாள் இப்படி முடிவு எடுத்தால் அதற்கு நானா பொறுப்பு ?” எனக்கு ஆரம்பத்தில் இருந்து உன் மீது மட்டும் தான் காதல் என்று சொன்னவளை கோபம் கட்டுக்கடங்காமல் ஓங்கி அறை கொடுத்தவன் அவள் குடும்ப ஆட்கள் வந்து தடுத்து பிடிக்கவும், உங்கள் பெண் செய்த காரியத்தால் ஒரு உயிர் போய்விட்டது இப்போது நான் செய்ததை சரியான நேரத்தில் நீங்கள் செய்ய தவறியதால் வந்த வினை இது அவர்கள் பிடியிலிருந்து விலகியவன்.

இனி இது போல் நடித்து ஏமாற்றும் முன் இந்த அறை உனக்கு நினைவிற்கு வர வேண்டும் இனி என் கண் முன் நீ வந்தால் உன்னை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்று கடுமையாய் எச்சரித்தான் அகரன். வெறும் மிரட்டலோடு அவளை விட்டுவிட மனமின்றி, அவளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டுமென்று தனது வக்கீலுடன் கலந்து ஆலோசித்தான், ஆதாரம் இல்லாத குற்றம், தண்டை கிடைக்காது என்று வக்கீல் கூறிட, என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது, அவள் செய்த தவறு காலம் முழுவதும் அவள் நினைவில் உறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று அகரன் வலியுறுத்திட, ஒன்று செய்யலாம் அகரன், அவள் காதலித்து ஏமாற்றினால் என்று வழக்கு தொடராமல் அவள் ராக்கிங் செய்ததால் என்று வழக்கு தொடர்வோம், அதை நேரில் பார்த்த சாட்சியாக, இருவர் கையெழுத்திட்டால் போதும், அந்த கல்லுரியில் அவள் படிக்க முடியாது, இதுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்காது என்றாலும், அவள் ஒழுக்கத்தின் மீது கரும்புள்ளி விழுந்தது போல என்று வைத்துக்கொள்ளுங்களேன் என்று யோசனை கூறிட, எதுவுமே செய்யாமல் இருபதற்கு இது மேல் என்று அதற்கான வேலையில் இறங்கினான் அகரன். அவன் திட்டப்படி அந்த கல்லுரி மாணவர்களையே சாட்சி சொல்வைத்தான், அதில் அங்கு பணிபுரிந்த வாத்தியார்களும் அடக்கம், எல்லாம் அகரன் எண்ணப்படி நடந்து, நளன் மரணத்திற்கு காரணமாய் இருந்தவள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டாள், தற்கொலைக்கு துண்டினால் என்று சில வாரங்கள் கம்பி எண்ணி, பணத்தின் பலத்தில் விடுதலையாகி வந்தாள், அதன் பின் அவளை அந்த ஊரில் யாருமே கண்டதில்லை, அவமானம் தங்காமல் எங்கோ வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றதாய் சொல்லிகொண்டர்கள்.

நளனுக்கும் அப்பா இல்லை சிறு வயதிலேயே இறந்து விட்டார் தங்களிடம் இருக்கும் நிலத்தில் முடிந்ததை விவசாயம் செய்து கஷ்டப்பட்டு படிக்க வைத்த தனது அம்மா, தன்னை நம்பி வாழும் தம்பி, தங்கையை மறந்து ஏமாற்றிய பெண்ணிற்காக உயிரைவிட்ட, தன் நண்பன் கோழை தனத்தை எண்ணி கோபம் வந்தது அதை விட , “அதற்கு ஒருவிதத்தில் காரணமாய் இருந்த தன் மீதே கோபமும் வெறுப்பும் வந்தது தான் மட்டும் அவன் நண்பனாய் இல்லாமல் இருந்திருந்தால் அந்த பெண் அவனை நெருங்கியிருக்க மாட்டாள் இவனும் உயிரோடு இருந்திருப்பான்” என்ற குற்ற உணர்வு அகரனை வதைக்க, நளன் உன்னை சரியாக கவனித்து உன் தடுமாற்றத்தை களைத்து உன்னை காத்திருக்க வேண்டும் அதை நான் செய்ய தவறிவிட்டேன் உன்னைத்தான் காப்பாற்ற முடியவில்லை உன் குடும்பத்தை இனி அது போல் கைவிட மாட்டேன் இனி அவர்கள் என் பொறுப்பு என்று மனதில் நளனுக்கு வாக்கு கொடுத்தவன்
தன்னால் இயன்ற உதவியாய் தனது தவறுக்கு பிராயசித்தமாய் நளன் இடத்தில் இருந்தது அவன் குடும்பத்திற்கு வேண்டியதை செய்து கொடுக்க துவங்கினான் அகரன்.
அகரன் உதவியை பெற்று கொண்ட குகன் பெற்ற உதவிக்கு நன்றி கடனாய் படித்து முடித்ததும், அகரனிடம் வேலை செய்ய விருப்பம் தெரிவித்த போது அகரன் அதை மறுத்தான் அவனுக்கு குகனை பார்க்கும் போது எல்லாம் நளன் நினைவு வர தன் தவறும் சேர்ந்து நினைவு வந்து வாட்டியது, அகரன் மறுத்தும் கேட்கமால் வீம்பு செய்து இந்த வேலையை பெற்று கொண்டான் குகன். “மற்றவர்களிடம் கடுமையாய் பேசும் அகரனால் குகனிடம் என்றுமே கடுமை காட்டமுடியவில்லை தனக்கு ஒரு தம்பியை போல் உரிமை கொடுத்து அவன் அண்ணன் என்ற உரிமை எடுத்து பழக துவங்கினான் அகரன்.

பழைய நினைவில் இருந்து மீண்டவன் தனது அண்ணனின் நிலை அகரனுக்கும் நேருமோ என்று பாய்ந்து அவனுக்கு விருப்பமில்லை என்றாலும் அகரன் விருபத்திற்காக பலதும் செய்யும் குகனை எண்ணி பெருமை பொங்கியது அகரனுக்கு. “ தன் உடன் பிறந்த தம்பியாய் இருந்தாலும் தனக்காக இவ்வளவு செய்வானா” என்பது சந்தேகம் தான் என்று குகன் மீதான அன்பை இன்னும் அதிகமாய் பெருக்கிகொண்டான் அகரன்.

அகரன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்க இங்கு சுஹீராவோ நடப்பது அறியாமல் அகரனை வசைமழையில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தாள். “என்னாயிற்று இந்த பகடுவிற்கு ஒரு வேலை நான் திட்டியதால் திருந்திவிடானா? இல்லை திருமணம் செய்து கொள் என்றதும் மிரண்டு ஓடிவிடடானா?” நான்கு நாட்களாக பார்க்கவும் இல்லை ஒரு போனும் இல்லை ஒருவேலை வெளியூர் சென்று இருப்பானா எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்வதற்கு என்ன விசர், என்று தீர்த்தாள். “என்ன இது சுஹீரா அவனை விசர் என்றுவிட்டு நீ தான் விசர் போல் தனிமையில் புலம்பி கொண்டு இருக்கின்றாய்” “அவன் தொந்தரவு செய்தாலும் கடுப்பாயிருக்கிறது பேசாமல் விலகியிருந்தாலும் தவிப்பாய் இருக்கிறது “ அவன் கார் வேகமாக ஓட்டுவானே ஒரு வேலை விபத்து ஏதும் நடந்து இருக்குமா என்று எண்ணம் தோன்றியதும் மனம் படபடக்க தனது கைபேசியை எடுத்து அரக்கன் என்று பதிந்து வைத்திருந்த அகரன் எண்னிற்கு அழைக்க முயன்றாள். “பின் கொஞ்சம் தெளிந்து இது ஒருவேலை அவன் திட்டமாய் கூட இருக்கலாம் விலகியிருந்தால் காதல் மலர்ந்து விடும் என்று முட்டாள் தனமாய் என்னை தவிர்த்து பார்க்கிறான் அப்போது தானே நானே அவனை அழைப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருப்பான் பகடு நான் உன்னிடம் தோற்பதா?” என்று அழகாய் ஒரு தலை சிலுப்பளுடன் தன் எண்ணத்தை கைவிட்டாள் சுஹீரா.

அகரனை பற்றி அண்ணனிடம் கேட்டு பார்க்கலாமா? என்று எண்ணம் தோன்றியது சுகந்தன் வரும் வரை காத்துத்திருந்து வழக்கம் போல் மாலை சிற்றுண்டி கொடுத்து உபசரித்தவள், மெதுமாய் “ஏன் சுகன் நீ பணம் கொடுக்க வேண்டிய ஆள் ஊருக்கு போய்விட்டானா என்ன?” என்று வினவவும். “யார் அகரன் சாரை கேட்கின்றாயா? இல்லையே இரு தினங்களுக்கு முன்பு கூட இன்வெஸ்டர்ஸ் மீட்டிங்கில் பார்த்தேன், பேசினேன்” என்றான் சுகந்தன்

என்ன ஊருக்கு போகவில்லையா? என்று சோகமாய் இருந்த சுஹீரா குரலில் எதை உணர்ந்தனோ சுகந்தன் “ஏன் குட்டிமா என்னாயிற்று” என்று சுகன் வினவ, அது ஒன்றும் இல்லை “அவர் உன்னிடம் என்னைப்பற்றி ஏதும் கேட்டாரா? எனவும் இல்லையே உன்னைப்பற்றி என்ன பேச போகின்றார் என்று சாதாரணமாய் கூறிவிட்டு சுஹீரா முகம் வாடவும், என்னடா ஏதும் பிரச்சனையா என்னிடம் சொல் என்றான் சுகந்தன் அக்கறையாய்.

“என்னவென்று சொல்லுவேன் கொஞ்ச நாட்களாக உன்னை வைத்து மிரட்டிக்கொண்டு அடிக்கடி பார்த்து காதல் மொழியில் இம்சித்து கொடுத்து கொண்டு இருந்தவன் இந்த நான்கு நாட்களாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு தவிக்க விடுகிறான் “ என்று உன்னிடம் எப்படி சொல்லுவேன் அவன் வேண்டாம் என்றும் விலகவும் முடியாமல் வேண்டும் என்று நெருங்கவும் முடியாமல் தவிக்கும் என் வேதனையை உன்னிடம் எப்படி கூறுவேன்? நான் சொன்னாலும் நீ எப்படி புரிந்து கொள்வாய் எனக்கே புரியாமல் இருக்கும் ஒன்றை உனக்கு எப்படி புரியவைப்பேன் என்று தனக்குள் புலம்பிகொண்டாள் சுஹீரா.

தங்கை முகம் பல பாவங்களை காட்ட அவள் கன்னம் தட்டி சுயநினைவிற்கு கொண்டு வந்தவன் என்ன விழித்து கொண்டே தூங்கி விட்டாயா? என்று கேலிசெய்து சிரிக்க அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி தன் அறைக்கு சென்று தன் சிந்தனையை தொடர்ந்தாள் சுஹீரா.

அப்படியென்றால் என்னை வேண்டும் என்றேதான் தவிர்கிறானா அதுவும் நல்லது தான் இப்போதாவது புத்திவந்ததே அந்த அரகனுக்கு என்று நிம்மதியாய் அமர்ந்தாள், கொஞ்ச நேரத்தில் மனம் மீண்டும் முரண்டு பண்ணத்துவங்கியது , “ அவன் பேசிய காதலாய் பார்த்தது தீண்டியது, கிறுக்கன் போல கவிதை உளறியது, இந்த காயம் என்று இன்னும் இதழில் ஒருபுறம் இருந்த வடுவை தொட்டு பார்த்தவள், எவ்வளவு திமிர் இவன் காதல் நாடகம் நடித்து விளையாட நான் தான் கிடைத்தேனா?” இருக்கட்டும் என்னிடம் என்றாவது மாட்டாமலாயிருப்பாய் அன்று உனக்கு கிடைக்கும் அடியில் இனி என் பக்கம் வரவேக்கூடாது என்று கோபமும், எரிச்சலும், போட்டி போட நடுவில அவ்வப்போது ஏமாற்றமும் சிறு கண்ணீரும் தலை காட்டி சென்றது.

இரவு உணவு முடிந்து அறைக்குள் வந்து பார்க்க அகரனிடமிருந்த அடுத்தடுத்து அழைப்பு வந்திருக்க “இதுவரை வெளியில் ஒன்றும் இல்லை என்பது போல் காட்டி நடித்துக்கொண்டு இருந்தவள் கண்களில் நீர் திரையிட அரக்கா இப்போது தான் என் நியாபகம் வந்ததா?” “கொஞ்ச நேரம் அவஸ்தையை அனுபவி” என்று வேண்டுமென்றே அழைப்பை ஏற்காமல் தவிர்த்து கொண்டு இருந்தாள் சுஹீரா. வெகு நேரம் முயன்றும் சுஹீராவிடம் இருந்து பதில் இல்லாமல் போக…

கனல் பார்வை விடுத்து
காதல் பார்வை பார்த்திடு
காலம் முழுவதும்
கைகோர்த்து நான் இருப்பேன்…
இப்படிக்கு…
உன் இதயத்தின் அரக்கன்…
என்று குறுங்செய்தி அனுப்பிவைத்து பதிலுக்காக காத்திருந்தான் அகரன், “யார் நீங்கள்?”என்று பதில் வர “சரியான ரோஷக்காரி என்று செல்லமாய் திட்டிவிட்டு” மீண்டும் போன் செய்ய அழைப்பு துண்டிக்க பட்டது.

உன் இதழ் தேன்

பருகிய எனக்கு

மலரின் தேன்

இனிக்கவில்லை ஏனடி .

இப்படிக்கு…

உன் செல்ல பகடு…

மீண்டும் கவிதையாய் அகரன் அனுப்பிவைக்க, “நான் எந்த பகடும் வளர்க்கவில்லை” என்று சுஹீராவிடம் இருந்து பதில் வந்தது.

நாம் இடும் முத்தச் சண்டையில்

நீ வென்றால்

என்னை உன் உடையென

உடுத்திகொள்…

நான் வென்றால்

என்னவளாய் உன்னை முழுதாய்

அள்ளி எடுத்து கொள்கிறேன்…

“இந்த டீல் ஓகே வா என் விசர்” என்று அகரன் அனுப்பி வைக்க. அடுத்து அவன் அழைத்ததும் அட்டன் செய்தாள் சுஹீரா. “பாரடா டீல் ஓகே போல உடனே சம்மதமாய் எடுத்துவிட்டாய்” என்று கொஞ்சம் வெறுப்பேற்றி பார்த்தான் அகரன்.

“என்ன திமிரா அன்று நான் கொடுத்த கொடுவில் திருந்தி என் பக்கம் வராமல் இருக்கின்றாய் என்று நான் நிம்மதியாய் இருக்கிறேன் என் நிம்மதியை கெடுக்க மீண்டும் வந்துவிட்டாயா? என்று கோபமாய் பதில் தந்தாள் சுஹீரா. எனக்கு ஒன்றும் நீ நிம்மதியாய் இருப்பது போல் தெரியவில்லையே கண்ணம்மா “காலையும் மாலையும் என்னை ஒரு முறையேனும் கண்டுவிடமாட்டோமா? என்று கண்கள் தவிக்க மனது துடிக்க உன் அழகான மான் விழிகள் மையலுடன் என்னை தேடுவதை நான் உன் அருகிலிருந்து ரசித்து கொண்டுதானே இருந்தேன்”. ஜாக்கின் செல்லும் போது கூட உன்னை ஒருவன் இடித்து விட்டான் பகடு என்று திட்டிவிட்டு என் நினைவில் இரு துளி கண்ணீர் சிந்தினாயே! அன்றே உன் முன் வந்து உன்னை கண்ணீரை துடைத்து கட்டியணைத்து கொள்ள துடித்தேன் சுஹீ. ஆனால் நீ தான் திருமணத்திற்கு முன் உண்னைதொடக்கூடாது உனக்கு பிடிக்காது என்றாய் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாய் விலகி போனேன் என்றான் அகரன்.

“என்ன நீ எப்போது என்னை பார்த்தாய்” என்று ஆச்சர்யமாய் சுஹீரா வினவ, இந்த நான்கு நாட்களாக நீ தான் என்னை பார்க்கவில்லை சுஹீ நான் உன்னை பார்த்துக்கொண்டு தான் இருந்தேன் காலையில் நீ ஜாக்கின் செல்லும் போது, கல்லூரிக்கு உன் அண்ணனுடன் வண்டியில் செல்லும் போது, மாலை பஸ் ஸ்டாப்பில் என்றதும் சில தினங்களாக ஹெல்மட் அணிந்தபடி ஒருவனை அடிக்கடி கண்டது நினைவு வர. அந்த “ஹெல்மெட் மண்டையன் நீ தானா பகடு” என்றாள் சுஹீரா ஆச்சரியம் விலகாமல், சாட்சாத் நானே தான் எனவும் “ஏன் இப்படி செய்தாய் விலகியிருந்தால் காதல் முளைத்துவிடும்” என்று உன் முட்டாள் நண்பன் அறிவுரை சொன்னானா? அது மட்டும் நடக்காது உன் கற்பனையை மூட்டைகட்டி கடலில் போட்டுவிடு நான் இந்த கண்கட்டி வித்தைக்கு எல்லாம் மயங்க மாட்டேன், என்பதை இப்போதாவது புரிந்துகொள் “நான் உன்னை நினைக்கவுமில்லை தேடவுமில்லை” என்று தன் மனம் அறிந்த உண்மையை அகரனிடம் இருந்து மறைந்தாள் சுஹீரா.

“இன்னும் உன் வீம்பு குறையைவில்லையே ஒத்துக்கொள்ள மனமில்லை என்று உண்மையை சொல்லு சுஹீ” நீ என்னை தேடவில்லை என்றால் வேற யாரை ஆவலாய் எதிர்பார்த்தாய் என்று அகரன் விடாமல் கேள்வி கேட்க, “எரிச்சலை அடக்க முடியாமல் ஒரு நாய் கொஞ்ச நாட்களாக என் பின்னாடியே சுற்றி திரிந்தது அதை தான் என்றாள் கோபமாக, “மறுமுனை அமைதியாயிருக்க அவன் கோபத்தை அடக்கி கொண்டு இருப்பது புரிந்தது” கோபத்தை அடக்கும் போது கை முஷ்டி இறுக தாடை விடைக்க உதடுகளை அழுத்தமாய் மூடி அமர்ந்திருக்கும் அகரன் முகம் நினைவில் வர தன்னை மறந்து இதழில் சிறு நகை பூக்க என்ன பகடு கோபத்தை அடக்கிக்கொண்டு இருக்கின்றாயா ?” என்று கேலியாய் வினவினாள் சுஹீரா.

“நாளை காலை வழக்கம் போல் உன்னை அழைத்து செல்ல வருகிறேன் நீ புடவையுடன் வந்துவிடு” என்றான் அகரன் இன்னும் கோபம் குறையாமல், “புடவையா எதற்கு வழக்கமாய் நான் கல்லூரிக்கு சுடிதாரில் தான் செல்வேன் அது மட்டுமில்லை எனக்கு உன்னை சந்திக்க விருப்பமில்லை என்றாள் சுஹீரா.

இனி “நம் திருமணத்திற்கு பின்புதான் உன்னை தொடுவேன் என்று சொன்னது மறந்துவிட்டதா ?” எங்கு உன் குரலை கேட்டாளோ உன்னை நெருங்கி வந்தாலோ என் வாக்கினை மீறி ஏதும் செய்து விடுவேன் என்று தான் உன்னிடம் பேசாமல் இருந்தேன் அருகில் வராமல் தொலைவிலிருந்து உன்னை ரசித்து என்னை கட்டுப்படுத்தி கொண்டிருந்தேன், உன்னிடம் சொன்னது போல நாளை நம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டேன் புடவை அணிந்துவா என்று கட்டளையிட்டான் அகரன். உனக்கு இன்னும் இந்த பைத்தியம் தெளியவில்லையா? போதும் உன் விளையாட்டை நிறுத்து என்னால் வரமுடியாது என்று முடிவாய் சொன்னாள் சுஹீரா.

“உன்னை பார்த்த நாளிலிருந்து பிடிக்க துவங்கிய பைத்தியம் நாளாகநாளாக அதிகரித்து கொண்டே செல்கின்றது” பைத்தியத்தின் மருந்தாய் உன்னை கேட்கின்றது மனம் அதற்கான தீர்வு தான் நம் திருமணம். நீ வந்து தான் ஆகவேண்டும் இல்லை என் முடிவு என்னவென்று உனக்கே தெரியும் என்று கூறி அகரன் அழைப்பை துண்டித்தான்.

நாளையே திருமணம்மாம் யார் காதில் பூவை சுற்றுகின்றான் என்று நினைத்தவள் அவன் அனுப்பிய காதல் வரிகளை மீண்டும் மீண்டும் படித்து அந்த வரிகளில் வழிந்த காதலில் தனது கோபத்தையும் கரைத்துவிட்டு அவன் சொன்னது போலச்சென்று தான் பார்ப்போமே ? அப்படி என்ன கையை காலைக்கட்டிப்போட்டு கட்டாய திருமணமா செய்து விடுவான் அப்படியே செய்தாலும் அடுத்த நொடி அவன் கட்டிய தாலியை கழட்டி அவன் கைகளில் கொடுத்துவிட வேண்டியது தான் என்று தைரியமாய் முடிவு எடுத்தாள் சுஹீரா.

காலையில் அவன் சொன்னது போல் புடவை கட்டி தன்னை கண்ணாடியில் அழகு பார்த்து கொண்டவள் “ஒருவேலை இப்படி இருக்குமோ நான்கு நாள் கண்டு கொள்ளாமல் இருந்தால் காதல் வந்து விடும் என்று கற்பனை கோட்டை காட்டியவன் அது இல்லை என்று தெரிந்ததும் இப்படி மிரட்டி பார்கின்றனா?” என்று மீண்டும் மனம் குழம்ப துவங்கியது. நல்லவேளை அம்மா வீட்டில் இல்லை, இருந்திருந்தால் அவர்களை வேறு சமாளிக்க வேண்டும் ஏன் புடவை காட்டினாய் ஏன் சீக்கிரம் போகின்றாய் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொடுமை செய்து விடுவார்கள் என்று நிம்மதியாய் வீட்டை விட்டு வெளியேறி அகரன் காரை நோக்கி சென்றாள், சுஹீரா.

காரில் வேறு ஒருவன்யிருக்க யோசனையாய் காரில் ஏறாமல் புதியவனை பார்த்து நிற்க, அகரனே சுஹீராவை போனில் அழைத்து அவன் என் ஆள் தான் பயப்படாமல் கிளம்பிவா, எனவும் “நீயே எனக்கு யாரோ தான்” என்று மனதில் நினைத்தவள் டிரைவர் சீட்டில் இருந்தவனை முறைத்தபடியே பின் இருக்கையில் சென்று அமர்ந்தாள் சுஹீரா.

“பாஸ் சரியான கேடி எப்படியோ அண்ணியை சம்மதிக்க வைத்து விட்டார் போல தயாராகி வந்து விட்டார்கள்” என்று மனதில் தனது பாஸை பாராட்டி கொண்டே செல்லும் இடம் நோக்கி காரை செலுத்தினான் குகன்.

“கார் திருமணம் பதிவு செய்யும் அலுவலகத்தில் முன் நிற்கவும் உண்மையை தான் சொன்னான் போல் நான்தான் முட்டாள் தனமாய் பொய் சொல்கின்றான் என்று நினைத்து என்னையே ஏமாற்றி கொண்டேனா ? “என்று தன் மீதே கோபம் வர அந்த கோபத்தை காரை ஓட்டி வந்த குகனிடம் திருப்பி ஆத்திரம் குறையாமல் முறைத்தாள் சுஹீரா.

“அடடா இது என்ன இவர்கள் என்னை இப்படி முறைகின்றார்கள் “ பாஸ் மீது உள்ள கோபத்தை நம்மை அடித்துவிடுவார்களோ என்று குகன் மனதில் பயம் பற்றிக்கொண்டது அகரன் வந்து தான் குகனை காப்பாற்றினான். “ஒரு பார்வையில் குகனை விலகிப்போக சொன்னவன் சுஹீ “புடவையில் தேவதை போல் அழகாய் இருக்கின்றாய்” என்று கண்களில் காதல் மின்ன கூறிய அகரனை கனல்ப்பார்வை பார்த்தவள் “இங்கு என்ன நடக்கின்றது அரக்கா யாரை கேட்டு திருமண ஏற்பாடு செய்தாய் “என்று கோபமாய் கத்த துவங்கினாள் சுஹீரா.

அவள் சத்தம் வெளியில் கேட்க கூடாது என்று அவள் அருகில் ஏறி அமர்ந்தவன் காரின் கதவை அடைத்துவிட்டு,அவளை நெருங்கிட, “ஏய் பகடு எதற்கு இப்போது கார் கதவை அடைத்தாய்?” என்று சுஹீ கோபமாய் துவங்க, அவள் இதழ் மீது கை வைத்து தடுத்தவன் காது அருகில் சென்று மெதுவாய் “எனக்கு நீ வேண்டும் சுஹீ இப்போதும், எப்போதும் இனியும் உன்னை விலகியிருக்கும் தண்டனை எனக்கு தராதே சுஹீ” என்னை உன்னவனாய் ஏற்றுக்கொள் கண்மணி என்று கன்னத்தோடு கன்னம் உரச இந்த நான்கு நாட்கள் தள்ளி இருந்ததிலேயே தவித்து போனேன் என்று சரசம் பேசிட, “அகரன் மூச்சு காற்று கன்னம் உரச” ஒரு நொடி தன்னை மறந்து கண் மூடி அமர்ந்து இருந்தாள் சுஹீரா.