அரக்கனோ அழகனோ 14

அரக்கனோ அழகனோ 14
0

பாஸ் என்று குகன் கதவை தட்ட அந்த சத்தத்தில் சுயநினைவு பெற்றவள் தன்னை நெருங்கி அமர்ந்திருந்தவனை விலகித்தள்ளி காரை விட்டு வெளியேறினாள் சுஹீரா.

“என்ன நந்தி, நானே அவளை சம்மதிக்க வைக்க நான் போராடி கொண்டு இருக்கின்றேன் நீ வந்து நேரம் காலம் இல்லாமல் தொந்தரவு செய்து கொண்டு” என்று அகரன் சிடுசிடுக்க, “ என்ன இன்னும் சம்மதமே வாங்கவில்லையா” அங்கு இன்னும் அரைமணி நேரத்தில் உங்கள் திருமணம் நடக்கவேண்டிய ஏற்பாடு செய்துவிட்டு, இப்போது வந்து சம்மதிக்க வைக்கிறேன் சம்பூராணி பிடிக்கிறேன் என்கின்றீர்களே, “நீங்கள் தள்ளுங்கள் அண்ணியிடம் நான் பேசி சம்மதிக்கவைக்கிறேன்” என்று சுஹீராவை தேடி சென்றான் குகன். அருகில் இருந்த ஆட்டோகாரரிடம் செல்லும் இடம் சொல்லி கொண்டிருந்தவளை அண்ணி ஒரு நிமிடம் என்று அழைத்தவன் அவள் திரும்பவும் “அண்ணி என் பாஸ் நிலை என்ன என்று நான் உங்களுக்கு விலக்கி சொல்கிறேன் அதன் பின் ஒரு முடிவிற்கு வாருங்கள்” என்று அழைத்து சென்றான் குகன்.

அகரன் பாஸ் “உங்களை உயிருக்கு உயிராய் காதலிக்கின்றார் அண்ணி அதனால் நீங்கள் அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் அவர் உங்களை கண் கலங்காமல் பார்த்துக்கொள்வார்” என்றவன் சுஹீரா முறைக்கவும், “ நீங்கள் அவரை கண் கலங்காமல் பார்த்து கொள்வீர்கள்” என்று நம்பிக்கை உள்ளது என்றான் குகன்.

“உங்கள் பாஸ் காதல் உண்மை என்றால் என் வீட்டில் வந்து என் அப்பாவிடம் எங்கள் திருமணத்தை பற்றி பேசச்சொல்லுங்கள்” அதைவிட்டு எதற்கு இந்த திருட்டு கல்யாணம் என்றாள் சுஹீரா.

அதுவும் சரிதானே பாஸ் “நீங்கள் போய் அண்ணி அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கி வாருங்கள்” என்று சூழ்நிலை உணராமல் கூறினான் குகன். “குகா அவள் அப்பா முன் சென்று நின்றால் என்ன நடக்கும் என்று உனக்கு தெரியாதா? என்று அகரன் மெதுவாய் எச்சரிக்க “ஆமாலா” அது முடியாது அண்ணி பாஸ் “சூழ்நிலை அதற்கு இடம் தராது “ என்றான் குகன்.

அப்படி என்ன உங்கள் பாஸ் சூழ்நிலை கொஞ்சம் விளக்க முடியுமா? என்று நக்கலாய் கேட்டாள் சுஹீரா. அகரனும் அருகில் இருக்க “எங்கள் பாஸ் வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றார்கள் ஆனால் அவர் உங்களை உயிருக்குஉயிராய் காதலிப்பதால் அவரால் வேறு யாரையும் திருமணம் செய்யமுடியாது” என்று இந்த முடிவிற்கு வந்து விட்டார் தயவுசெய்து அவர் நிலையை புரிந்துகொண்டு அவருக்கு வாழ்கை கொடுங்கள், இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லுங்கள் அண்ணி என்று கதை கட்டினான் குகன்.

“குகன் என்னமோ திட்டம் போட்டு விட்டான் என்பது புரிய அவன் சொன்ன கதைக்கு ஏற்றார் போல் பாவமாய் முகத்தை வைத்திருந்தான் அகரன். திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு “யார் இந்த பகடாவது ஒருவருக்கு பயப்படுவதாவது நீ சொல்லும் கதையை நம்பி இந்த அரக்கனை திருமணம் செய்து கொள்ள நான் முட்டாள் இல்லை, ஒரு பெண் வந்து எனக்கு கட்டாய கல்யாணம் செய்கின்றார்கள் என்றாலே இந்த காலத்தில் நம்புவது கடினம் இதில் இந்த ஆறடி மரத்தை மிரட்டிகட்டாய திருமணம் செய்கின்றார்களா?” என்று சுஹீரா காட்டமாய் பதில் தந்தாள்.

“என்ன பாஸ் இவ்வளவு ஷார்ப்பா இருக்கின்றார்கள்!” உங்கள் பாடு திண்டாட்டம் தான் “இது தான் கடைசி வாய்ப்பு இப்படியே கழண்டுகொள்ளுங்கள்” என்று குகன் கூறவும் . அவன் காதைத்திருகி “நீ சொன்ன கதையை பச்சைபிள்ளை கூட நம்பாது” இதில் இவன் பேசி என் திருமணத்தை நடத்தி வைக்கின்றானாம், போய் சாட்சி கையெழுத்துக்கு ஏற்பாடு செய் என்றான் அகரன்.

“பாஸ் இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் இந்த முறை சரியாய் செய்து விடுவேன்” என்று கூறிவிட்டு இப்போது கடைசியாய் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறார் எங்கள் பாஸ் “அலைபயதே ஸ்டைலியில் திருமணம் செய்து கொண்டு நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து கொள்ளுங்கள் அவர் அவர் வீட்டில் இருக்கட்டும்”, “உங்கள் இருவரின் பெற்றோரும் சம்மதித்தவுடன் இருவரும் சேர்ந்து வாழத்துவங்குங்கள்” என்றான் குகன்.

சுஹீரா யோசிப்பது போல தோன்றவும், “பார்த்தீர்களா பாஸ் திட்டம் எப்படி வேலை செய்கின்றது என்று அண்ணி யோசிக்கின்றார்கள் சீக்கிரம் சம்மதம் சொல்லிவிடுவார்கள்” என்றவனை முறைத்து கொண்டு நின்றான் அகரன்.

இப்போது இவர் “எதற்கு இப்படி முறைகின்றார் நீங்கள் கவலை படாதீர்கள்! பாஸ் அண்ணி நிச்சயம் சம்மதம் சொல்லி விடுவார்கள் என்று நம்பிக்கை சொன்னவனை, “ஏன்டா திருமணம் செய்து அவளை அவள் வீட்டில் விட்டுவைப்பதற்கு எதற்குடா? நான் இவ்வளவு கஷ்டப்பட்டு அவசரவசரமாய் திருமணம் செய்கிறேன் மடையா” உன் திருவாய்யை மூடி கொண்டு அந்த பத்திரங்களை எடுத்துவா “இவளை எப்படி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்” என்றான் அகரன்.

குகன் பொறுங்கள் பாஸ் அண்ணி என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம் என்று சுஹீரா பக்கம் திரும்பியவன் என்ன அண்ணி என் திட்டம் சரிதானே எனவும், “வந்ததிலிருந்து ஓவராய் பேசுகின்றாயே நீ யார்? என்றால் சுஹீரா.

என்ன… நான் யாரா? என்னை பார்த்து யார் என்கின்றீர்களே! “நான் தான் குகன் அகரன் பாஸ் வலது கை இடது கை எல்லாம் நான் தான்” என்று பெருமையாய் கூறினான் குகன். “அதானே பார்த்தேன் இவ்வளவு அறிவாய் பேசும் போதே எனக்கு புரிந்திருக்க வேண்டும்” உன் பாஸே ஒரு லூசு அவன் எடுப்பு நீ எப்படி அறிவாளியாக இருப்பாய் ? “அவனை திருமணம் செய்யவே விருப்பம் இல்லை என்கிறேன் இதில் யோசனை வேறு மடையா!” என்று ஏளனமாய் கூறினாள் சுஹீரா.

“சுஹீ நீ என்னை என்னவேண்டுமென்றாலும் சொல்லிகொள் உனக்கு அந்த உரிமை உள்ளது” ஆனால் “குகனை எதுவும் சொல்லாதே எனக்கு கோபம் வரும்” என்று கோபத்தை அடக்கிய குரலில் கூறினான் அகரன். “என்ன செய்து விடுவாய் வழக்கம் போல அந்த பத்திரங்களை வைத்து என்னை மிரட்டுவாய் அவ்ளளவு தானே” எதற்கும் நான் பணிய மாட்டேன், என்று தீர்மானமாய் கூறினாள் சுஹீரா.

“ பாஸ் அண்ணிக்கு உங்கள் முறை தான் சரி என்று அவன் கேட்ட பத்திரங்களை எடுத்து கொடுத்து விட்டு கட்டைவிரலை உயர்த்தி காட்டி வெற்றியுடன் வாருங்கள் நான் மற்ற ஏற்பாட்டை கவனிக்கிறேன்” என்று குகன் நகர்ந்து சென்றான்.

“கொஞ்சம் தனிமையில் பேசுவோமா சுஹீ” என்று இதழ் விரிய சிரித்தான் அகரன் , அவன் திட்டம் என்ன என்று புரிந்து கொண்ட சுஹீ மனதில் அடிவாங்கிய உணர்வில் அமைதியாய் நின்றாள். அசையாது நின்றவள் தோள்களில் கைப்போட்டு அழைத்து சென்று காரில் அமர்த்தி விட்டு இதை படித்து பார் சுஹீ என்றான் அகரன். வாங்கி படித்து பார்த்தவள் முகம் இறுக அப்பாவும் அண்ணனும் கையெழுத்துபோட்ட பத்திரம் என்றாள், “சரியாய் சொன்னாய் கண்ணம்மா” என்று அவள் கன்னம் வருடியவன், “அன்று என்ன சொன்னாய் என்று நினைவிற்கின்றதா” சுஹீ. “என் தெய்வீக காதலுக்காக அந்த காதலை அடைவதற்காக உன் கழுத்தில் கத்தியாய் உன்னை கட்டுப்படுத்த வைத்திருக்கும் என் ஆயுதமான இந்த பத்திரங்களை எரித்துவிட சொன்னாய் அதை செய்தால் என் காதலை ஏற்று கொள்வதாய் சொன்னாய்” என்று அன்று நடந்ததை நினைவுருத்தினான் அகரன்.

“இப்போது இது உன்னுடையது இதை என்ன செய்ய நினைக்கின்றாயோ அதை செய்து கொள் அது உன் விருப்பம் ஆனால் நீ சொன்ன அடுத்த இரண்டையும் என்னால் என்றுமே செய்ய முடியாது” என்றவனை புரியாமல் பார்த்தாள் சுஹீரா.

“என் காதலை நிரூபிக்க என் ஆயுதத்தை உன்னிடம் கொடுத்துவிட்டேன், இனி உன் முடிவு என்றவன், என் காதலை ஏற்றுக்கொள் என்று தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டு, எனக்கு நீ வேண்டும் சுஹீ என்று காதில் மெதுவாய் கிசுகிசுத்தான், உண்னை சந்தித்த நாளில் இருந்து உன் சிந்தனையிலேயே இருக்கின்றேன் என்றவன்…

நீ தூரம் நிற்க
என் தூக்கம்
தொலை தூரமடி…
அருகில் வந்தால்
என் துக்கம்
தொலை தூரமடி…

“நான் நிம்மதியாய் உறங்க உன் மடிவேண்டுமடி… என் தாபம் தீர உன் தேன்இதழ் வேண்டுமடி. என் ஆயுள் வாழ உன் காதல் வேண்டுமடி… என்றவன் அவள் பதில் என்ன என்று அறிய ஏக்கமாய் பார்த்து கொண்டிருந்தான் அகரன்.

அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தவள் “உண்மையாகவே இதை நான் என்ன செய்தாலும் உனக்கு ஒன்றும் இல்லையா?” என்றவள் அவன் ஆமாம் என்று தலையாட்ட வேகமாய் அதனை கிழித்து எரிந்தவள் , அழகாய் புன்னகை செய்து விடுதலை கிடைத்துவிட்டது என்று குழந்தை போல் கைதட்டி சிரித்தவள், இப்போது எந்த தைரியத்தில் எதை வைத்து என்னை மிரட்டி இந்த திருமணத்திற்கு என்னை சம்மதிக்க வைப்பாய் என்றாள் சுஹீரா.

அவள் கண்களிலிருந்து பார்வையை விலக்காமல் என் காதல் மீது உள்ள நம்பிக்கையில் என்றான் அகரன், அவன் வார்த்தை ஆழ்மனதில் இருந்த உணர்வை தட்டி எழுப்ப, அகரனுக்கு சம்மதமாய் தலையாட்டினாள் சுஹீரா.

அவள் கை பற்றி இதழ் ஒற்றியவன் அவள் கன்னத்தில் கை வைத்து தாங்கி பிடித்து, உன்னை இழந்து விடுவேனோ என்று மிகவும் பயந்துவிட்டேன் சுஹீ என்றான் அகரன்.

உன்னை அழகாய்
படைக்க பிரம்மன்
எடுத்த முயற்சியையும்
மிஞ்சிவிட்டன
நான் உன்னை அடைய
எடுத்துக்கொண்ட முயற்சிகள்…

அழகன்14

நான் கட்டிய பொன் தாலி
உன் கழுத்தில்
மின்னுகையில்
என்னுள் பல மின்னல்கள்
வெடிக்குதடி…

அகரன் பத்திரங்களை ஒப்படைத்து விட்டு தனது காதலுக்கு பதில் என்ன? என்று கேட்ட அவன் கண்களில் தேங்கியிருந்த ஆவலும் அளவில்லா காதலும் சுஹீரா மனதில் அகரன் மீதான காதல் ஒழிந்து மறைந்திருந்த சிறு இடம் இடமே இல்லாமல் இதயத்தை முழுதாய் ஆக்கிரமிப்பு செய்திட அவன் விருப்பத்திற்கு தலையாட்ட வைத்தது, “இவ்வளவு விரைவாக திருமண ஏற்பாடு செய்து அதற்கு தன்னிடம் சம்மதம் கேட்கும் அகரனை, சுஹீரா புத்திசாலி மூளை நம்ப மறுத்தது கடைசியில் பத்திரத்தை கொடுத்து என்ன செய்தலும் உன் பொறுப்பு என்று அகரன் சொன்னதும் வேகமாய் கிழித்து ஏறிய உத்தரவு பிறப்பித்தது, மூளையின் உத்தரவு படி பத்திரத்தை கிழித்தெரிந்தவள், இனி இவனிடம் இருந்து விடுதலை என்று மகிழ்ந்தாள் நடப்பதை நம்ப முடியாமல் அவள் மூளை இது ஒருவேலை கனவா? என்று இன்று காலையில் இருந்து நடந்ததை எண்ணி பார்க்க துவங்கியது, இன்ப அதிர்ச்சில் இருந்து மூளை விடுபடும், முன் அதற்க்குள் அகரன் கண்களில் தெரிந்த காதலில் மனம் அவன் புறம் சரிய, அவன் அழைத்ததும் மறுப்பு சொல்லாமல் சென்று அகரன் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டாள்.

கையெழுத்து போட்டு முடிந்த கையோடு அகரன் ஏற்கனவே கோர்த்துவைத்துயிருந்த தங்கத்தாலியை எடுக்க “நடக்கும் விபரீதம் புரியத்துவங்கியது சும்மா கையெழுத்து என்று நினைத்த போது தோன்றாத பயம் தாலியை பார்த்ததும் வந்தது “ இது தவறு திருமணம் அப்பா அம்மா சம்மதத்துடன் நடக்க வேண்டியது யாரும் இல்லாமல் இப்படி நடப்பது தவறு என்று தவிப்பு வந்தது, “இவன் நல்லவனே என்றாலும் என்னால் ஏற்க முடியாது என்று மனச்சாட்சி முரண்டுசெய்யத் துவங்கியது தன்னையும் அறியாமல் கால்கள் பின் செல்ல கையில் தாலியுடன் நின்றவனை வெற்று பார்வை பார்த்தாள் சுஹீரா.

சுஹீரா முகத்தில் தோன்றிய மாறுதலை கவனித்த படி அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவன் மெதுவாய் அவள் காது அருகில் சென்று “திருதிருவென விழிக்காதே உன்னால் திருடப்பட்டவன் உன் விழியின் வீச்சில் வீழிந்திடுவேன்” என்று கரம் பற்றி அழுத்தம் கொடுத்தான், அவன் தீண்டலில் தவிப்பு கொஞ்சம் குறைவது போல உணர்ந்தவள் நிமிரும் முன் சுஹீரா சங்கு கழுத்தில் பொன் சங்கிலியிட்டான் அகரன்.

பொன் தாலி சூடும் வேலை அகரன் கை தேகம் உரசியதும் சிலிர்த்த உடல் மூளைக்கு செய்தி அனுப்பிட சுதாரித்த மூளை மனதிற்கு கட்டளை பிறப்பிக்க துவங்கியது, “விழித்து கொள் சுஹீரா இங்கு என்ன நடக்கின்றது என்று முதலில் புரிந்து கொள் இவ்வளவு நாள் உன்னையும் உன் குடும்பத்தை கஷ்டப்படுத்தி , கட்டாயப்படுத்தி காதலிக்கும் படி உன்னை தொந்தரவு செய்தவன்” இன்று உன்னை “ஒரு பார்வையில் மயக்கி வார்த்தை ஜாலத்தில் வீழ்த்தி திருமணமே செய்து கொண்டு இருக்கிறான்” நீயும் முட்டாள் போல அவன் சொல்வதற்கு எல்லாம் ஆடிக்கொண்டு இருக்கின்றாய், விழித்துக்கொள் என்று அவளுக்கு எதிராய் நடக்கும் சதித்திட்டத்தை கூறி முறையிட துவங்கியது.

முழு தவறும் அகரன் மீது சுமத்த படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கட்டாயப்படுத்தினார் தான் ஆனால் அது என் காதலுக்காக தான் , “அவர் காதல் உண்மை அதை அவர் கண்களில் நான் உணர்ந்தேன் என் பகடு என்னை கட்டாயப்படுத்த வில்லை நான் சொன்ன ஒற்றை வார்தைக்காக அண்ணன் தரவேண்டிய பெரும் தொகைக்கான பத்திரத்தை என்னிடமே கொடுத்துவிட்டு, அவன் காதலை நிரூபித்து என் அனுமதியுடன் தான் திருமணம் செய்கிறான்” என்று மனம் அகரன் பக்கத்து நியாயத்தை எடுத்து கூறியது.

“ஏன் உன்னிடம் ஒரு பத்திரத்தை கொடுத்துவிட்டு வேறு ஒன்றை மறைத்து வைத்து இருக்கமாட்டானா அவ்வளவு பெரிய தொகையை இழப்பதற்கு அவன் என்ன முட்டாளா?” அன்று கூட நீ இந்த பத்திரத்தை கிழித்து எரியவும் சாதாரணமாய் அது நகல் என்று கூறி சிரிக்கவில்லை அது போல் இன்று உன்னிடம் காட்டி ஏமாற்றியதும் நகல் என்றால் என்ன செய்வாய்? முன் பின் யோசிக்காமல் இப்படி அவன் சதிவலையில் மாட்டிக்கொண்டாயே, என்று மூளை அனுதாபப்பட , அடிவாங்கிய வலியில் மனமும் தடுமாற துவங்கியது உண்மைதானே சந்தித்ததியில் இருந்து தன்னிடம் ஒருமுறை கூட நல்லமுறையில் நடந்து கொள்ளதாவன் அவன் நினைத்து சாதிக்க எந்த எல்லைக்கு போக துணிந்தவன் இன்று மட்டும் எப்படி பணிந்து செல்வான் இதுவும் அவன் திட்டம் என்றால் என்ன செய்வது? என்று மனம் கலங்க நின்றாள் சுஹீரா. அவள் குழப்பத்தை கண்டும் காணாமல் இருந்தான் அகரன்.

“அண்ணி பாஸ்… ரொம்ப நேரம் உங்கள் முன் தலை குனிந்து சிலையென நின்று கொண்டு இருக்கின்றார் உங்கள் கைகளால் மாலையிட்டு உங்கள் காதல் கரங்களால் அந்த கற்சிலைக்கு உயிர் கொடுத்திடுங்கள்” பாஸ்… “இன்றிலிருந்து இது தான் உங்கள் சரணாகதி நிலை அண்ணி என்ன சொன்னாலும் இப்படியே குனிந்து ஆமாம் போட பழகிக்கொள்ளுங்கள்” அது தான் திருமண பந்தத்தின் தாரக மந்திரம் என்று குகன் கேலி செய்ய, சாட்சி கையெழுத்து போட வந்திருந்த, நிறுவன லீகல் வக்கீல் தமிழ், மற்றும் அகரனின் நெருங்கிய நண்பன் சூர்யாஅவரின் மனைவியும் சேர்ந்து சிரிக்க துவங்கினர்.

“நீ சொல்வதும் சரிதான் குகா எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் வீட்டில் வெறும் வெத்துவெத்துவேட்டு தான் நான் பெரிய பருப்பு என்று மனைவியிடம் பந்தா காட்டினால் பருப்பு கடையும் மத்தை வைத்தே மொத்து கிடைக்கும்” என்று சூர்யா விளக்கம் தர “அப்படியா டார்லிங், வீட்டிற்கு வாருங்கள் மத்து மொத்து என்று டைமிங் ரயமிங் பேசும் உங்களுக்கு என் டைமிங் என்னவென்று காட்டுகிறேன்” என்று கூறினாள் சந்திரிமா சூர்யாவின் மனைவி.

எல்லோரும் கேலியை ரசித்து சிரித்துக்கொண்டிருக்க சுஹீரா மட்டும் தான் ஏமாற்று பட்டுவிட்டோமா சிந்தனையில் சிலையென நின்றிருந்தாள், “என்ன சுஹீரா அவசர பட்டு எங்கள் அகரனை திருமணம் செய்து கொண்டோமே என்று கவலையாய் இருக்கின்றாயா என்று சுஹீரா மனநிலையை சரியாய் கணித்து சொன்னாள் சந்திரிமா.

“பாஸ் இவர்களுக்கும் எல்லா உண்மையும் தெரியுமா? சரியாக சொல்கின்றார்கள்” என்று அகரன் காதில் கிசுகிசுத்தான் குகன். ஒரு புறம் சரிந்து பிறர் அறியாமல் சாதாரணமாய் சிரித்தபடி தன் முக பாவத்தை மறைத்து கொண்டு “தேவையில்லாமல் நீயாக எதையும் உளறிக்காட்டிக் கொடுத்துவிடாதே யாருக்கும் ஏதும் தெரியாது” என்று எச்சரித்தான் அகரன்.

“மாலை சூட்ட இவ்வளவு யோசனையா? என்று சந்திரிமா மேலும் கேலி செய்ய .அகரன் சுஹீராவை கவனித்தான், அவள் கண்களில் தெரிந்த குழப்பம் உணர்ந்து “உனக்கு என் காதலை புரிய வைத்தே என் பாதி ஆயுள் கழிந்துவிடும் போல ஒரு பிரச்சனையை தீர்த்து வைத்தால் அடுத்ததை எடுத்து தலையில் போட்டு கொள்கின்றாள், இப்போது என்ன சிந்தனையில் சிலையென நிற்கின்றாள் என்று தெரியவில்லையே” என்று செல்லமாய் அலுத்துக் கொண்டவன் அவள் கரம் பற்றி தன் கழுத்தில் மாலையிட செய்தவன், பற்றிய கரத்தை விடாமல் தன் அருகில் இழுத்து நிறுத்தி கொண்டான் அகரன்.

“எல்லோரும் வாருங்கள் திருமணம் முடிந்து விட்டது நாம் தான் இந்த திருமணத்தை முன் நின்று நடத்திவைத்தோம் என்று சாட்சியாக ஒரு புகைபடம் எடுத்து கொள்வோம் வரலாறு பேசும் நம் சரித்திரத்தை” என்று சூர்யா கூறி தனது போனில் புகைப்படம் எடுக்க, அதுவும் சரிதான் நாளையே பெண் கடத்தல் திருட்டு திருமணம் என்று போலீஸ் வந்து நின்றால் நாம் தான் உடந்தை என்று எல்லோரும் ஒன்றாய் உள்ளே செல்வோம் ஏன் வக்கீல் சார் சட்டம் உங்கள் மீதும் பாயும் தானே? இல்லை என் போன்ற அப்பாவிகளை மட்டும் தான் பதம் பார்க்குமா? என்று பயத்துடன் வினவினான் குகன்.

சுஹீராவின் மறுபக்கம் இருந்த குகனை சுஹீராவை நெருங்கி அனைத்து பிடித்தபடி குகன் தலையில் ஓங்கி ஒன்று கொடுத்தவன் நீ அமைதியாய் இருந்தாலே போதும் பாதி பிரச்சனை தீர்ந்து விடும் என்று அகரன் மிரட்ட, இன்னும் இரண்டு சேர்த்துக்கொடு அகர் இப்போது தான் திருமணம் நடந்து உள்ளது அதற்குள் அபாசகுணமாய் பேசிக் கொண்டு என்று சந்திரிமா அகரனுக்கு ஆதரவாய் பேசினாள்.

“ஏன் சொல்லமாட்டீர்கள் அண்ணி ஏதோ மனகுழப்பதில் சரியென்றுவிட்டு இப்போது தனக்குள்ளேயே புகைந்து கொண்டு இருக்கின்றார்கள்” அந்த எரிமலை வெடித்து நம்மை எரிக்கும் முன் தப்பிப்பிழைத்து ஓடுவதை விட்டு போட்டோவிற்கு போஸ் கொடுகின்றீர்கள், நாலு பேருக்கு நல்லது சொன்னால் என்னை கேணையன் என்பீர்கள் என்று தனக்குள் புலம்பி கொண்டான் குகன்.

குகனை அடிக்க கொண்டு சென்ற கையை எடுக்கமறந்து அது சுஹீரா தோள்களிலேயே தங்கிவிட அந்த போஸ்யில் இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பிறர் அறியாவண்ணம் கையை மெதுவாய் கீழ் இறக்கி அவள் இடைவளைவை மெதுவாய் வருடியவன், சுஹீரா உடல் கூச முகம் அருவருப்பில் சுருங்க விலக முயல மேலும் இறுக்கமாய் பற்றி கொண்டான் அகரன்.

அவன் கைகளை விலக்க முயன்று முடியாமல் நிமிரும் போது குகனும் இவர்களின் செயலை கவனித்துக்கொண்டிருக்க “அகரன் உடலின் கைகள் செய்யும் செயலுக்கு அவனின் வலது இடது கை என்று பெருமை பேசிய குகனை கோபமாய் முறைத்தாள்” சுஹீரா.

நான் எதையும் பார்க்கவில்லை என்று வேறுபுறம் தலையை திருப்பி கொண்டான் குகன். “என்னை அடிக்கும் சாக்கில் அண்ணியை அனைத்து கொண்டு இருக்கின்றார் அவர் செயலுக்கு அண்ணி என்னை முறைத்து கொண்டு இருக்கின்றார், இது தெரியாமல் இதுகள் வேறு விதவிதமாய் போஸ் கொடுத்து கொண்டு இருக்கின்றார்கள், என்று தனக்குள் புலம்பி கொண்டே … “ பாஸ் மற்ற பார்மாலிட்டிஸ் நான் முடித்து விட்டு வருகிறேன் நீங்கள் அப்படி கொஞ்சம் தள்ளி போய் போஸ் கொடுங்கள், அடுத்த ஜோடிகள் திருட்டுதனத்திற்கு என்று துவங்கியவன், எல்லோரும் முறைக்க திருமணத்திற்கு என்று சொல்ல வந்தேன் வழக்கம் போல அவசரத்தில் உண்மையை உளறிவிட்டேன் என்று மழுப்பினான் குகன்.
அனைவரையும் ஒரு காரணம் சொல்லி தள்ளி அனுப்பிவைத்தவன், அப்பாடா ஆபத்தில் இருந்து தப்பியாயிற்று இனி எரிமலை வெடித்தாலும் நமக்கு அதிகசேதாரம் இருக்காது என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி மற்ற வேலைகளை கவனிக்க துவங்கினான்.

தன்னோடு சேர்த்து அணைத்த படியே அழைத்து சென்றவனிடம் “கையை எடு என்னை தொடாதே” என்று கூறி கண்களால் எச்சரித்தாள் சுஹீரா. “இன்னும் என்ன சுஹீ நமக்கு திருமணம் முடிந்துவிட்டது நான் உன் காதல் கணவன் கண்மணி விலகநினைக்காதே வீண் முயற்சி” என்று சிரித்தான் அகரன்.

எல்லோரும் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருக்க ஒருவழியாய் நீயும் காதலில் மாட்டிக்கொண்டாய் இப்போது தான் நிம்மதியாய் இருக்கிறது நீ மட்டும் எந்த பந்தத்திலும் சிக்காமல் பந்தாவாக வலம் வந்ததை பார்த்தது எத்தனை நாள் பொறாமையில் புழுங்கினேன் தெரியுமா? “இறுதியாய் உன் சுதந்திரம் என் கண்முன் பறிபோனதை நினைக்கும் போது அளவில்லா நிம்மதி அடைகிறேன்” என்று தன் நெஞ்சில் கைவைத்து கூறினான் சூர்யா

“நீ சொல்வது போல் காதல் ஒன்றும் மோசம் என்று எனக்கு தோன்றவில்லை இன்னும் வேண்டும் என்று வேண்டி விரும்பி அனுபவிக்க தூண்டும் சுகமான இம்சை” என்று சுஹீரா தோள்களில் கை போட்டு கொண்டவன் அப்படித்தானே சுஹீ என்று வினவ, இதற்கு மேல் காதல் என்று கதை பேசினால் உண்மையை கூறிவிடுவேன் என்று மிரட்டுவது போல் இருந்தது அவள் கண்களில் தெரிந்த கனல் பார்வை.

பேச்சை மாற்றும் விதமாய் இவன் சூர்யா சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழன் பள்ளி பருவம் வரை ஒன்றாய் தான் சுற்றி திரிந்தோம், பின் சார் மருத்துவம் பக்கம் செல்ல நான் பொறியியல் பக்கம் பயணித்தேன். இது இவன் மனைவி சந்திரிமா, மூவரும் பள்ளி தோழர்கள் தான் என்னை சொல்கின்றானே இவன் காதல் துவங்கியது பள்ளியில் தான்! பையன் பயங்கர பாஸ்ட் மேடம் அதற்கு சளைத்தவர்கள் இல்லை அவன் உடனே மருத்துவம் படித்து ட்ரினிங் முடித்து இருவரும் தூங்க மட்டுமே அவரரவர் வீட்டிற்கு செல்வர் கொடுத்து வைத்தவன் என்று ஏக்க பெருமூச்சு விட்டு சுஹீராவை பார்க்க , “கொடுத்து வைத்து எல்லாம் காதலிக்கும் போது மட்டும் தான் அகர் திருமணம் முடிந்ததும், எல்லாம் தலைகீழ் தான் இப்போது தானே திருமணம் முடிந்து உள்ளது உனக்கு போகப்போக புரியும்” என்று உண்மையை கூறி சந்திரிமாவிடம் இருந்து கொட்டுகளை வாங்கிக்கொண்டு வலி தாங்க முடியாமல் தலையை தேய்த்துவிட்டு கொண்டு இருந்தான் சூர்யா.

இருவரின் ஊடலிலும் காதல் கலந்திருப்பதை கண்டு சுஹீராவிற்கும் புன்னகை அரும்பியது அழகனா ஆழமான காதல் என்று சிந்தனையுடன் திரும்பியவள் அகரன் கண்களிலும் அதே போல் ஆழமான காதல் இருப்பதை உணர்ந்து ஒரு நொடி தடுமாறினாள், “ம்ம்ம்ம் இவன் கண்களை பார்க்க கூடாது பார்த்தால் என் சுயநிலை மறந்து விடுவேன்” இப்போது இந்த திருமணம் பற்றி அப்பாவிடம் எப்படி சொல்வது என்று மட்டுமே யோசிக்க வேண்டும் என்று பார்வையை விலக்கிக்கொண்டாள் சுஹீரா.

இது தமிழ் நம் நிறுவனத்தின் லீகல் அட்வைஸ்ர் எனவும் சுஹீரா முகம் மாறியது இவருடன் தானே அன்று அண்ணன் கேஸ் விசயமாக பேசினான் என்று நியாபகம் வர அப்படியென்றால் இவருக்கு தன்னை பற்றிய உண்மை தெரிந்து இருக்குமோ என்று முகம் சிவக்க தன்னை மீறி உடலில் நடுக்கம் உணர்ந்தாள் சுஹீரா.
“என் இயலாமையை பயன்படுத்தி ஒருவன் தன்னை திருமணம் செய்து கொண்டான் என்று கூற அவமானம் “ அவனை விரும்பி தான் திருமணம் செய்து கொண்டேன் என்று பொய் கூற தயக்கம்” இந்த திருமணத்தை எப்படி ஏற்பது என்று குழப்பம் எல்லாம் சேர்ந்து கொள்ள எங்கு இங்கு வந்தவர்களுக்கு தன் திருமணத்தின் முழுக்காரணம் தெரிந்தால் தன்னை எப்படி பார்ப்பார்கள் என்று தவிப்பு இது எல்லாம் கலவையாய் சுஹீரா முகத்தில் பிரதிபலிக்கஅமைதியாய் நின்றாள்.

அவள் நிலை உணர்த்து கொண்டவன் போல தோளோடு சேர்த்து இறுக பற்றிக்கொண்டு சுஹீ நம் காதல் விபரம் யாருக்கும் தெரியாது என்று மற்றவர்க்கு சொல்வது போல் அவளுக்கு மட்டும் புரியும் படி ஆறுதல் கூறினான் அகரன்.

அது உண்மைதான் மேடம் சார் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென அழைத்து நான் பதிவு திருமணம் செய்து கொள்ளப்போகிறேன், குகன் அதற்கு தேவையான ஏற்பாட்டினை செய்து கொண்டு இருக்கிறான் அவனுக்கு உங்கள் துணை வேண்டும் என்று கூறியதும் தான் எனக்கே விசயம் தெரியும் என்று கூறினான் தமிழ்.

உங்களுக்காவது இரண்டு நாட்கள் டைம் கொடுத்தான் “இன்று காலையில் கிளினிக் கிளம்பி கொண்டு இருக்கின்றோம் திடீர்ரென போன் செய்து இன்று பதிவு திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் சாட்சி கையெழுத்து போடவா என்று மனசாட்சியே இல்லாமல் சொல்கிறான் கோபம் வந்தது இருந்தும் நெடுநாள் நண்பன் ஆயிற்றே அவன் வாழ்வில் ஒரு துயரம் நேரும் போது துணைக்கு இல்லாமல் போனால் நன்றாக இருக்காது என்று என் வாழ்க்கை துணையுடன் கிளம்பி வந்துவிட்டேன்” என்று பெரும் தியாகம் செய்தது போல் சூர்யா கூற மற்றவர் சேர்ந்து சிரித்தனர்.

சரி எங்களுக்காக நேரம் ஒதுக்கி வந்ததற்கு ரொம்ப நன்றி என்று கிளம்பும்படி அகரன் செய்கை செய்ய, “அடப்பாவி நன்றி கெட்டவனே உனக்காக வந்தால் காரியம் ஆனதும் கழட்டி விடுகின்றாயா” என்று சந்திரிமா பொய் கோபம் கட்டிட , “விடு சந்து சின்னசிறுசுகள் தனிமையில் இருக்க நினைக்கின்றாகள் பெரியார்கள் நாம் தான் நாகரிகமாய் விலகிக்கொள்ள வேண்டும்” என்று சூர்யா கூறி தன் மனைவியை அழைத்து சென்றான். “சரி அகரன் சார் வாழ்த்துகள்” என்று கூறி கை குலுக்கி தமிழும் விடை பெற, “தனிமை வேண்டி தவித்த காதல் மனது சமயம் கிடைத்ததும் நெருங்கி நின்று “சுஹீ சுஹீ என்று மீண்டும் மீண்டும் அவள் பெயரை உச்சரித்து நடப்பது எல்லாம் கனவு போல் இருக்கிறது கண்ணம்மா இன்றிலிருந்து என் சுஹீ என் மனைவி” என்று சந்தோஷத்தில் சொன்னதையே திரும்ப திரும்ப கூறி மகிழ்ந்து போனான், அகரன்.

சுஹீராவின் மொபைல் அடிக்க யார் என்று பார்த்தவள் அவள் உடன் பயிலும் தோழி மது கல்லூரி வாராதற்கு காரணம் கேட்பாள் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் “ஹலோ மது நான் இன்று வரமாட்டேன் இல்லை எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை” என்று பொய் கூறி சமாளித்து கொண்டு இருந்தாள் சுஹீரா.

குகன் அழைக்க இதோ வந்துவிடுகிறேன் என்று செய்கையால் சுஹீராவிற்கு உணர்த்திவிட்டு குகனை தேடிச்சென்றான் அகரன். மதுவுடன் பேசி முடித்ததும் தனிமை கிடைத்து விட்ட உணர்வில் சிந்திக்க துவங்கினாள் சுஹீரா. “இத்தனை நாட்கள் தன்னை தானே திடமானவள் என்று நம்பிக்கொண்டிருந்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் பத்திரத்தை கொடுத்ததும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாய் இவ்வளவு தானா நீ? நேற்று என்னவோ கட்டாய திருமணம் செய்தால் தாலியை கழட்டி அவன் கையில் வைத்து விட்டு வந்து விடுவேன் என்றாய்? இது தான் உன் மனோதிடம் போலி வார்த்தையில் ஏமாந்து தோற்று நிற்கும் கோழை” என்று மனச்சாட்சி கேள்வி கேட்க தன் மீதே கோபம் வந்தது.

நான் பலவீனமானவள் இல்லை என்று அவன் கட்டிய தாலியை எடுத்து பார்த்தவள் “தாலியை கழட்டினால் கணவன் உயிருக்கு ஏதும் நேரும் என்று பாட்டி சொல்வார்களே இதை கழட்டி விட்டால் அகரனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால்” என்று மனம் பதறியது.

வாய் பேச்சில் வீராப்பை காட்டி விட்டு செயலில் தோற்று நிற்கின்றேன் என்று எண்ணியவள் கண்களில் நீர் வடிந்தது, “நீ தோற்கவில்லை உன் பலவீனம் அறிந்து செயல்பட்ட அகரன் வெற்றி பெற்றான் நீ நினைத்தால் இந்த வெற்றியை முழுமை அடையவிடாமல் செய்ய முடியும் நீ வேண்டும் என்று தானே இந்த திருமணம், அதுவே நடக்காது எனும் போது அவன் எப்படி வென்றதாக அர்த்தம் இத்தனை நாள் உன்னை கஷ்டப்படுத்தி சந்தோசப்பட்டான், இது உனக்கான வாய்ப்பு அவனே கூறியிருக்கிறேன் அவன் பலவீனம் உன் மீது கொண்ட காதல் தான் என்று அதுவே எட்டாகணியாய் இருந்தால் வென்றத்தில் மகிழ்ச்சி கொள்ளமுடியுமா?” என்று மூளை யோசனை சொன்னது அதுவே சுஹீராவிர்குன் சரியென்றும் தோன்றியது.

தனது முடிவிற்கு அவன் சம்மதிப்பான என்று தயக்கம் உண்டானது ஒருநாள் தன் கல்லூரியில் கருத்தரங்கில் பேசிய ஒருவரின் வரிகள் நினைவு வந்தது “கோபம் மட்டும் எதையும் சாதித்துவிடாது சூழ்நிலை உணர்ந்து பக்குவமாய் பேசுபவனும் சாதிக்ககூடியவன்”, கோபம் கொண்டு பேசும் போது நம் கோபம் அவர்கள் கண்ணை மறைக்கும் நம் கூறும் நல்ல கருத்தும் காதில் ஏறாது அதையே பொறுமையாக சொல்லும் போது நடப்பது வேறு மாதிரி இருக்கும் என்று கூறி “என் கணவன் முன் நின்று நாளை எனக்கு புது புடவை வேண்டும் என்று கோபமாய் கத்தினால் நீ சொன்னவுடன் வாங்கி தர முடியாது என்று அவரும் கோபமாய் தான் பதில் தருவார், இதையே கொஞ்சம் அமைதியாய் என்னங்க நாளைக்கு எனக்கு ஒரு புது புடவை வேணுங்க என்று ஆசையாய் காதலுடன் சொன்னால் என் முடிவை ஏற்று வாங்கி தருக்கின்றாரோ இல்லையோ என் பேச்சை மறுத்து பேச தோன்றாது, அவர் மௌனம் கூட நான் கொண்ட வெற்றி தானே” என்று கொடுத்த விளக்கமும் நினைவு வந்தது.

“ஏன் இந்த அரக்கனே ஆரம்பத்தில் கோபமாய் பேசிய போது எதிர்த்து பேச முடிந்த தன்னால் அவன் அமைதியாய் கையாண்ட போது தானே தடுமாற துவங்கினோம், ஏன் அவனுக்கு மட்டும் தான் கண்களில் காதல் மொழி பேசி சம்மதிக்க வைக்க முடியுமா, என்ன ? என்னால் முடியாத என்ன?” இந்த வழிமுறை தான் சரி என்னை எப்படி ஏமாற்றினானோ நானும் அது போல் செய்தால் மட்டும் தான் அகரனை தனது எண்ணத்திற்கு பணிய வைக்க முடியம் என்று தான் அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்தாள் சுஹீரா.

“என்ன சுஹீ தீவிர யோசனை எல்லா பார்மலிட்டிக்ஸ் முடிந்துவிட்டது இனி நாம் கிளம்பலாம்” என்று கைபிடித்து அழைத்து சென்றான் அகரன். அமைதியாய் அவன் பின் சென்று காரில் ஏறினாள், சுஹீரா.

“குகன் நீ நான் வந்த காரை எடுத்து அலுவலகம் சென்றுவிடு நான் வர மாட்டேன் ஏதும் சந்தேகம் என்றால்” என்று அகரன் கூறி முடிக்கும் முன் “உங்களுக்கு போன் செய்கிறேன் பாஸ்” என்றான் குகன். “அதை மட்டும் செய்யாதே நீ கேட்டதற்கு, அனுமதி மட்டும் கொடுத்தால் போதும், அரைமணி நேரத்திற்கு ஒருமுறை சந்தேகம் கேட்க போன் செய்வாய் உன்னை பற்றி எனக்கு தெரியும் நானே உன்னை அழைக்கிறேன் போதுமா?” என்று கூறி குறும்பாய் சிரித்து கண்டடித்தான் அகரன்.

“புரிந்தது பாஸ் வாழ்த்துக்கள் அண்ணி” என்று சுஹீரா புறம் திரும்பினான், எரித்துவிடுவது போல் முறைத்து கொண்டு அவள் அமர்ந்திருக்க “எரிமலையுடன் போகும் போதே உங்களுக்கு இந்த பேச்சா அதுவும் சரிதான் எரிமலையை பனிமலையாய் மாற்றும் வித்தை உங்களுக்கு தெரியாத என்ன?” என்று நினைத்துக் கொண்டு புதுமனதம்பதிகளை வழியனுப்பி வைத்தான் குகன்.

“மை ஸ்வீட் ரசகுல்லா அப்படியே உன்னை கடிச்சு சாப்பிடணும் போல இருக்குடி, இந்த நான்கு நாட்களாக உன்னை தொட்டு அணைக்க முடியாமல் ரசகுல்லா இதழ்களை நினைத்து நினைத்தே இழைத்து போனேன்டி, என் பொண்டாட்டி” என்று தன் பக்கம் இழுத்து கொண்டவன் “என் காதல் கைசேர்ந்தது காற்றில் மிதப்பது போல் உணர்கிறேன்” என்னவோ பேசிக்கொண்டே வெகு தூரம் காரை செலுத்தினான் அகரன்.

“உனக்கு உன் காதல் அடைந்து விட்ட சந்தோஷத்தில் இருக்கின்றாய் ஆனால் எனக்கு என் அப்பா என் மீது கொண்ட அளவில்லா நம்பிக்கையை இழந்த துக்கத்தில் இருக்கிறேன், என் மகள் என்ன செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்” என்று என்னை பற்றி பெருமையாய் பேசுபவர் இப்போது நான் செய்திருக்கும் காரியத்திற்கு என்ன காரணம் சொல்லுவேன் என்று வருத்தம் தோன்ற அவன் பிடியில் இருந்து விலகி அமர்ந்து கொண்டவள் , மனம் அமைதியானால் தான் தனது எண்ணத்தை நிறைவேற்ற முடியும் என்று மனம் சோர்வு விலக கொஞ்சநேரம் கண்னை மூடி அமர்ந்து கொண்டாள்.

சிறிது தூரம் கடந்தவன் ஒரு பீச் ஹவுஸ் முன் காரை நிறுத்தி “இறங்கு” எனவும் இது வரை இருந்த அமைதி பறந்து மனம் இருமடங்கு வேகத்தில் துடித்தது, “ஏய் பகடு இப்போது எதற்கு இங்கு காரை நிறுத்தினாய் என்னை எதற்கு இறங்க செல்கின்றாய்” என்று பதட்டத்துடன் சுஹீரா வினவ, “ரசகுல்லா சாப்பிட” என்று அகரன் கண்ணடித்து சிரிக்க தன் திட்டம் என்று நினைத்துவைத்தது எல்லாம் மறக்க, “உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா ? மரியாதையாய் காரை திருப்பி என்னை கொண்டு போய் என் வீட்டில் விடு” என்று கோபமாய் கத்த துவங்கினாள் சுஹீரா .

“என்ன உன் வீடா எது உன் வீடு பேபி, இனி என் வீடு தான் உன் வீடு அதாவது நம் வீடு உனக்கு மறந்து விட்டதா நான் உன் கணவன் சுஹீ, நமக்கு திருமணம் முடிந்து சரியாய் ஒரு மணிநேரம் கடந்து விட்டது” என்று சிறிது நேரத்திற்கு முன் கட்டிய தாலியை தொட்டு காட்டி சிரித்தான் அகரன்.

“எல்லாம் நினைவிருக்கின்றது மறக்கும் காரியமா செய்திருக்கின்றாய்? என்னை மிரட்டி உன் காரியம் சாதித்து கொண்டு இப்போது உன் ஆசையை தீர்த்து கொள்ள அழையும் மிருகம், அரக்கன்” என்று கோபம் தனியாமல் கூறியவள் காரை விட்டு இறங்க மறுத்தாள் சுஹீரா.

சுஹீரா வார்த்தையில் இருந்த முரண்பாடு அகரனுக்கும் கோபத்தை கொடுத்தது “நான் உன்னை கட்டாய படுத்தவில்லை சுஹீரா , உன் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடந்தது அதை மறந்துவிடாதே இன்னும் ஒருமுறை என் காதலையோ உன்னை அணுகும் முறையையோ தவறாய் பேசதே உன்னை என் விருப்பம் போல் அனுபவிக்க மட்டும் நினைத்திருந்தால் , இந்த நேரம் உன் கழுத்தில் தாலி இருந்திருக்காது வயிற்றில் குழந்தை தான் இருந்திருக்கும் என்னிடம் பேசும் முன் யோசித்து பேசு சுஹீ” என்று எச்சரித்தவன் கார் கதவை ஓங்கி அறைந்து சாற்றிவிட்டு அவள் கையை பற்றி உள்ளே இழுத்து சென்றான் அகரன்.

“என் கையை விடு விசர் என்ன சொன்னாய் நான் சம்மதித்தேனா நான் மறுதிருந்தால் மட்டும் நீ என்னை விட்டுவிடுவாயா? ஏதாவது சதி செய்து சம்மதிக்க வைத்து இருப்பாய் வேறு என்ன செய்வாய்?” என்று அவன் பிடியில் இருந்து விடுபட முயன்றபடி கூறினாள் சுஹீரா.

அவள் முயற்சி புரிந்து தன் முன் கொண்டு வந்து பின்புறம் இருந்து அனைத்து பிடித்தவன் சாவி கொண்டு கதவை திறந்து கொண்டு உள்ளே இழுத்து சென்றான், அறை முழுவதும் இருளில் இருக்க தன்னோடு சேர்த்து இறுக அனைத்து பிடித்த படி “என் வாழ்வை வசந்தங்களால் நிறைக்க என் வசம் வந்த தேவதையே, உன் வரவிற்கு நான் தரும் சிறு பரிசு” என்று அறையை ஒலியூட்டியவன்,

நான் கொண்ட
கர்வம் என் கவசம்
ஆணவம் என் ஆயுதம்.
பணம், பதவி என் படைகள்
என்று பகட்டாய்
திரிந்தேன் நானடி…
உன் ஒற்றை பார்வையில்
இதயத்தில் காயம் தந்து
என் பலம் என்று
நினைத்த அனைத்தும்
புறமுதுகிட்டு ஓடி ஒழிய
செய்தாய் நீயடி!!

“சரியான போராட்டகாரி” என்று மெதுவாய் காது மடலில் இதழ் ஒற்றியவன் “இன்னும் ஒன்று உனக்காக” என்று மேஜை மீது மூடி இருந்த திரையை விலக்க மார்பளவில் சுஹீரா உருவ மண் சிலை இருந்தது கண்களில் ஆச்சர்யம் மின்ன அவனை திரும்பி நோக்கினாள் சுஹீரா. “இது நானே என் கைகளால் செய்தது , இந்த பிறை நெற்றி கடிக்க தூண்டும் கன்னம் எப்போதும் கோபமாய் பார்க்கும் கண்கள் என்று ஒவ்ஒன்றாய் கூறி வருடியவன் உயிர் கொள்ளும் உதடுகள்” என்று மெதுவாய் விரலால் அளந்து இதழ் ஒற்றி விடுவித்தாவன்.

நானும் நம்பிவிட்டேன்
மலர்கள் மென்மையென்று
உன் தேகம் தீண்டும் வரை
தேன் தான் சுவையென்று
உன் இதழ் தேன் பருகும் வரை

என்று சிலை அருகில் அழைத்து சென்று இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்ந்தான் அகரன்.

உன் உருவம்
செய்ததால்
மண் சிலை கூட
பொன் போல்
மிளிருதடி…

என்றவன் அருகில் இருந்து ஒரு நகை பெட்டியை எடுத்து ஒரு வைர மாலை அணிவித்தான்.

உன் பேரழகில்
இந்த வைரங்கள்
கூட தன் ஒளியிழந்து
வெறும் கண்ணாடிக்
கல்லாய் தோன்றுதாடி…

“என்ன சுஹீ இன்னும் உனக்கு என் காதல் மீது சந்தேகம் தானா?” என்று வினவிட, “உன் காதலின் விலை இந்த வைரங்கள் அளவு தானா?” என்று ஏளனமாய் உதட்டை சுளித்து அந்த வைர மாலையை கழட்டி அவன் கைகளில் கொடுத்துவிட்டு “என்று எனக்கு உன் காதல் மீது நம்பிக்கை வருகின்றதோ அன்று இதை பெற்று கொள்கிறேன்” என்று அழகாய் சிரித்தாள் சுஹீரா.

அவள் அதை பெற்று கொண்டால் தான் அகரன் ஆச்சர்யப்பட்டு போயிருப்பான் இது நடக்கும் என்று அவன் யூகித்த ஒன்று தான் எனவே அதை எடுத்து பத்திரப்படுத்தியவன், “என் காதலால் நீ இந்த உலகம் மறந்து இருக்கும் நேரம் இதை உனக்கு நானே அணிவிக்கிறேன் அன்று நீ முழுதாய் எனக்கு சொந்தம் ஆகியிருப்பாய் ரசகுல்லா” என்று கள்ள பார்வை பார்க்க, முகம் சிவக்க வேறுபுறம் திரும்பி கொண்டு “நான் உன்னிடம் கொஞ்சம் முக்கியமாய் பேச வேண்டும்” என்று கூறி அவன் பதிலை எதிர்பார்க்காமல் பேச துவங்கினாள்.

“என் அப்பாவிற்கு கொஞ்ச நாட்களாக தொழிலில் நஷ்டம் அதனால் அவர் உடல்நிலை முன்பு போலயில்லை, இந்த சூழ்நிலையில் இந்த திருமணத்தை பற்றி அவருக்கு கூற முடியாது அதனால் உன் வலது கை சொன்னது போல் இப்போதைக்கு இருவரும் பிரிந்து இருப்போம் பின் நம் வீட்டில் பெரியவர்கள் அனுமதியுடன் நம் வாழ்வை” என்று சுஹீரா முடிக்கும் முன், “என்னால் முடியாது சுஹீ உன்னை விலகியிருக்க முடியாமல் தான் இவ்வளவு அவசரமாய் திருமணம் செய்தது குகன் பேச்சை பெரிதாய் எடுக்கதே அவன் அவ்வப்போது இப்படித்தான் உளரிக்கொண்டு இருப்பான் , இப்போதே இருவர் வீட்டிலும் பேசிவிடுவோம் நம் திருமணத்தை ஏற்க மறுத்தால் இங்கேயே நம் புது வாழ்வை துவங்கிவிடுவோம் “ என்று அகரன் தன் போனை எடுக்க, “இல்லை இல்லை அப்படி செய்யாதே அப்பா ரொம்ப கோபப்படுவார்” என்று சுஹீரா பதட்டத்துடன் தடுத்தாள். “பெரியவர்கள் கோபம் எல்லாம் பேரக்குழந்தையை பார்க்கும் வரை தான் பேசாமல் நாம் ஏன் நேரடியாக அவர்கள் கோபத்தை குறைக்கும் முயற்சியில் இறங்க கூடாது” என்று கிறக்கமாய் பார்த்தான் அகரன்.

அவன் பார்வையில் முகம் சிவக்க “உனக்கு முற்றிவிட்டது என்று நினைக்கிறன் முதலில் என்னை கொண்டுபோய் என் வீட்டில் விடு பிறகு சூழ்நிலை பார்த்து நம் திருமணத்தை பற்றி கூறி விடலாம்” என்று அறையை விட்டு வெளியேற நகர்ந்தாள் சுஹீரா…

தன்னை தாண்டி சென்றவள் கரம் பற்றி அவள் அனுமதியின்றி அணைத்தவன் “என் செல்ல ரசகுல்லா “ என்று இதழ் அனைத்து கொண்டான் விலக முயல்வாள் என்று அகரன் நினைக்க அதற்கு எதிர்மறையாய் கண்களில் கண்ணீருடன் அமைதி போராட்டத்தில் இறங்கினாள் சுஹீரா.

தனது காதலியின் கோப வார்த்தைக்கு பதில் சொல்ல தெரிந்த பிடிவாதக்காரனுக்கு அவன் கண்ணீர் முன் பேச முடியவில்லை “கண்ணம்மா அழாதே நீ தானே திருமணத்திற்கு பிறகு தான் தொடவேண்டும் என்றாய்”, இன்னும் என்ன என்று புரியாமல் வினவியவன், கண்களில் குழப்பத்தை தாண்டி அளவில்லா காதல் ஒளிர்ந்தது.

இல்லை சுஹீ அவன் கண்களை பார்க்காதே என்று மூளை எச்சரிக்கை செய்ய அவன் கண்களை தவிர்த்து, தனது திட்டத்தை செயல் படுத்த துவங்கினாள், அவன் அருகில் சென்று விரல் கோர்த்து கொண்டவள் “நான் உன் மனைவி உன்னை விட்டு எங்கு செல்லப்போகிறேன் சொல், எங்கு சென்றாலும் இறுதியில் வருவது இங்கு தானே” என்று ஒருவிரல் கொண்டு அகரன் மார்பை சுட்டி காட்டி, ஆனால் நாம் நம் வாழ்வை துவங்கும் போது எந்த மனகுறையும் இல்லாமல் இருந்தால் தானே நல்லது” என்று மெதுவாய் கூறி அகரன் முக பாவத்தை கவனித்தாள் சுஹீரா

அகரன் கண்களில் சற்று கூர்மை அதிகரிக்க அவள் சொல்வதை கவனித்துக்கொண்டு இருந்தவன் , இதழ் விரிந்து “அருமையான முயற்சி மிஸஸ் அகரன்” என்றவன், “உன் விருப்பமின்றி உன் கணவன் இந்த அகரன்” என்றவன் கணவன் என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுத்து கூறியவன் “ஏதும் செய்ய மாட்டேன் கவலை வேண்டாம் , ஆனால் என்னிடம் இதுபோல் பொய்யாகவது உன் காதல் நாடகம் நடத்து அது போதும் எனக்கு” என்று கட்டி அனைத்து கொண்டான், அகரன்.

அவள் இடையில் கை கோர்த்து தோள்களில் தலை சாய்த்து கொண்டவன் “நான் உன் மீதான காதலை உணர்த்த நொடியிலிருந்து உனக்கு பிடித்தவனாக மட்டுமே நடந்து கொள்ள நினைகின்றேன், ஆனால் பல இடங்களில் தவறிவிட்டேன் காதலானாய் தவறிய கடமையை கணவனாய் நிறைவேற்றுகிறேன், உன் விருப்ப படி எப்போது என் காதலை உணர்ந்து என்னிடம் வர விருப்பம் உள்ளதோ அப்போது வா அதுவரை உனக்காக காத்திருப்பேன், ஆனால் என்னால் உன்னை சந்திக்காமல் ஒருமுறையேனும் அணைக்காமல் இருக்க முடியாது நீ தினமும் என்னை சந்திக்க வரவேண்டும்” என்று வேண்டுதலாய் நிபந்தனை விதித்தான் அகரன்.

அவள் சரி என்று சம்மதம் சொல்ல சாய்ந்திருந்த தலையை திருப்பி கன்னத்தில் முத்தமிட்டவன் , அவள் கூச்சத்தில் நெளிய விடுவித்து விலகி நின்றவன், “என்னென்னவோ கற்பனையில் வந்தேன் எல்லாம் கனவாய் போனது” என்று ஏக்கப்பெருமுச்சு விட அகரன் இவ்வளவு எளிதில் சம்மதிப்பான் என்று எதிர்பார்க்கத்தவள் பாரம் இறங்கிய நிம்மதியில் வாய்விட்டு சிரித்தாள் சுஹீரா, அழகாய் சிரித்தவளை ஏக்கமாய் பார்த்து “மை டியர் பொண்டாட்டி ஒரே ஒரு ஸ்வீட்” என்று ஆசையாய் கேட்டான், சுஹீரா என்ன என்று புரியாமல் விழிக்க சற்றும் தாமதிக்காமல் இதழோடு இதழ் சேர்த்து இனிப்பிலும் இனிமையான இன்பத்தை இமை மூடி அனுபவித்தான் அகரன்.

முதல் முறை அகரன் அணைப்பிற்கு விலகாமாலும் ஒட்டி உறவாடமலும் அமைதியாய் ஏற்றாள் சுஹீரா, சில மணி நேரம் கழித்து விடுதலை தந்து விடுவித்தவன் அவள் கன்னம் நாணத்தால் சிவந்து இருக்க, “சுஹீ முதன் முறை என் தொடுகையில் நீ கோபம் கொள்ளாமல் இருக்கின்றாய்” என்றான் அகரன், அவன் குரலில் இருந்த வேறுபாடு புரிந்து தன்னை நேர் செய்து கொண்டு “என்னை என் வீட்டில் விடு” என்று கட்டளை போல் கூற “இப்போதே போக வேண்டுமா கல்லூரி முடியும் நேரம் விடுகிறேன்” என்று கெஞ்சலுடன் கூறினான் அகரன்.

கோபமாய் முறைத்தாள் சுஹீரா “சரி சரி உத்தரவு மகாராணி” என்று தலை தாழ்த்தி நிமர்ந்தான் அகரன் அவன் செய்கையில் கோபம் மறைந்து சுஹீரா முகம் குழப்பத்தில் நிறைந்து இருந்தது, அதற்கு மேலும் தாமதம் செய்யாமல் அவள் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

வழக்கமாய் இறங்கும் இடம் வந்ததும் இறங்க போனவளை தடுத்தவன் வெளியில் தெரிந்த தாலிசெயினை சட்டைக்குள் தள்ளி மறைத்தவன், சுஹீரா வெடுக்கென விலகி முறைப்பதை கண்டு “வீட்டில் என்று…” சற்று தடுமாறி கூறியவன் அவளே மறைத்து விட்டு நிமிரும் போது இறுக அனைத்து கொண்டான். “எந்த சூழ்நிலையிலும் யார் என்னை பற்றி என்ன சொன்னாலும் நான் உன்மீது கொண்டது, உயிர்காதல் என்று மனதில் வைத்துக்கொள் உனக்காக தன்னையே மாற்றிக்கொண்ட இந்த அரக்கனின் காதல் என்றும் உண்மையானது இதை மட்டும் மறந்துவிடாதே” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு “நீ என் காதல் மட்டும் இல்லை என் சகலமும் நீ தான்” என்று பிரிய மனமில்லாமல் அனைத்து இருந்தான் அகரன்.

“நீ என்னிடம் கொடுத்தது, உண்மையான பத்திரம் தானே வேறு நகல் உள்ளதா? என்றாள் சுஹீரா. அவள் கேள்வியில் அவளை விடுவித்து வாய்விட்டு சிரித்தவன், “அது உண்மையான பத்திரம் தான் உன் அண்னன் பணம் தராமல் ஏமாற்றினாலும் என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று அகரன் கூற, ரேஷமாய் தலை நிமிர்ந்து “என் அண்ணன் ஒன்றும் உன்னை போல் இல்லை யாரையும் ஏமாற்றமாட்டான் உன் பணத்தை விரைவிலேயே திரும்ப கொடுத்து விடுவான்” என்றாள் சுஹீரா.