அரக்கனோ அழகனோ 15

அரக்கனோ அழகனோ 15
0

“நான் யாரை ஏமாற்றினேன் என்கின்றாய்” என்று கேட்க சுஹீரா பதில் கூற முடியாமல் தினறினாள், அவள் செய்கையை ரசித்தவன் “சரி நாளை நானே உன்னை அழைத்து செல்ல வருகிறேன்” என்று கூற “காலையில் எல்லாம் முடியாது எனக்கு எப்போது முடியுமோ அப்போது என் தோது பார்த்து சொல்கிறேன்” என்று வேகமாய் இறங்கி ஓடிவிட்டாள் சுஹீரா.

அவள் சொன்ன தோரணையில் தனக்குள் சிரித்து கொண்டவன் “உன்னை கட்டாயப்படுத்தி அடைய நீ நினைப்பது போல் அரக்கன் இல்லையடி நான் உன் காதலுக்காக காத்திருக்கும் உன் அடிமை” என்று மனதில் நினைத்து கொண்டு காரை கிளப்பி சென்றான்.

தான் திட்டமிட்டது போல் பக்குவமாய் பேசி காரியம் சாதித்து விட்டோம் என்று நினைத்த சுஹீராவிற்கு இது அகரன் விட்டு கொடுத்ததால் நடந்தது என்று புரியவில்லை , எதையும் சாதிக்க தெரிந்தவனுக்கு அவன் விருப்பத்திற்கு அவளை பணியவைக்க வெகுநேரம் ஆகாது ஆனால் அகரன் அதை விரும்பவில்லை, சுஹீரா காதல் கட்டாயத்தால் இல்லாமல் முழுமனதாய் இருக்க வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் விட்டு கொடுத்தான் அவன். அம்மா சொன்னது போல் அவன் இயல்பு குணத்தை மாற்றி கொள்ளாமலே தனது காதலை புரியவைக்க நினைத்தான் அகரன்.

அகரன் செயலில் கோபமாய் இருந்தவளுக்கு திருமணத்தை எப்படி அப்பாவிடம் சொல்வது என்று கவலை இருந்ததே தவிர அகரனை பிரியும் எண்ணம் சிறிதும் இல்லை என்பது புரியாமல் போனது புரிந்து இருந்தால் அகரன் பற்றியும் அகரன் மீதான தனது காதல் பற்றியும் எப்தோ உணர்ந்து இருப்பாள்.

பிரம்மன் புத்திசாலியென்று
நிரூபித்துவிட்டான்
உன்னை அழகாய் படைத்தது
நான் அதிர்ஷ்டசாலி
என்று காட்டிவிட்டேன்
உன்னை அடைந்து…

அழகன்15

இன்று என்னவோ
நான் சகலமும்
அடைந்து விட்ட
திருப்தி பிறந்தது
ஆனால்
நம் பிரிவில்
ஒரு சலனமும் இல்லை
அது ஏனோ…

வீட்டினுள் நுழையும் போது தான் செய்த பெரும் தவறு மனதை நெருட துவங்கியது சுஹீராவிற்கு, எப்போதும் வீட்டின் உள்ளே நுழையும் போதே தான் வந்துவிட்டதை அறிவிக்கும் படி “அம்மா…” என்று கூச்சலிட்டு கொண்டே வருபவள், இன்று அமைதியாய் ஆரவாரமின்றி வருவதை கண்டு “என்ன இன்று சரவெடி சாதுவாய் இருக்கின்றது, அது சரி என்ன இப்போதே வந்து விட்டாய், கல்லூரிக்கு போகவில்லையா ? இன்றும் வழக்கம் போல வெளியில் சுற்றிவிட்டு வருகின்றாயா “ என்றார் சுபத்ரா.

“அம்மா அது வந்து” என்று பேயறைந்தது போல விழித்தவளின் நெற்றி தொட்டுகாய்ச்சலோ என்று பார்த்த சுபத்ரா, அடுத்து கழுத்தில் கைவைக்க ஒரு அடி பின் நகர்ந்தவள் “அது வந்து வந்து” என்று தடுமாற துவங்கினாள் சுஹீரா. வழக்கத்திற்கு மாறாக தடுமாறும் மகளின் முகம் ஏதோ தவறு என்று உணர்த்த “என்ன தப்பு செய்து விட்டு அந்த தப்பில் இருந்து தப்பிக்க இந்த ஊமை நாடகம் போடுகின்றாய்?” என்று கடுமையாய் வினவினார் சுபத்ரா.

முகம் வெளிரி “நான் எந்த தப்பும் செய்யவில்லை அம்மா என்று தடுமாற்றத்துடன் துவங்கியவள்”, அம்மாவிடம் எல்லாம் சொல்லி விடலாம் என்று மனச்சாட்சி உறுத்த , இல்லை இப்போது சொன்னால் அகரனிடம் என்ன காரணம் சொல்லி விலகி வந்தோமோ அது எல்லாம் வீண் இவர்களுக்கு மட்டும் உண்மை தெரிந்தால் பேசியே என் எண்ணத்தை மாற்றிவிடுவார்கள் அதை கூட தாங்கி கொள்ளலாம் “திருமணம் என்பது உனக்கு என்ன விளையாட்டா என்று ஒரு பெரிய அறிவுரை நிகழ்த்தி இவர்களே அகரனின் கையில் என்னை பிடித்து கொடுத்து விடுவார்கள்” என்று அறிவு அறிவுறுத்த, “கொஞ்சம் தலை வலி அதனால் தான் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகி விடும்” என்று தரையை பார்த்தே பதில் கூறியவள், எங்கு இன்னும் இங்கு நின்று கொண்டு இருந்தால் முகத்தை வைத்தே தனது மனதில் உள்ளதை படித்து விடுவார்கள் என்று மெதுவாய் நகர்ந்து தன் அறை பக்கம் சென்றாள் சுஹீரா.

“ஏய் நில்லு உன் தலை வலியின் காரணம் எனக்கு தெரியும் காலையில் உனக்காக எடுத்துவைத்திருந்த காலை உணவு அப்படியே இருந்தது சாப்பிட கூட நேரம் இல்லாமல் அப்படி என்ன அவசரம் மதிய உணவு வேலை நெருங்கி விட்டது, இன்னும் எதுவும் சாப்பிடாமல் தான் இருப்பாய் அதனால் தான் தலை வலி வந்திருக்கும், நீ முதலில் போய் உடை மாற்றி முகம் கழுவிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடு எல்லாம் தானாய் சரியாகும்” என்று சமையல் அறைபக்கம் சென்றவர் சுஹீரா “உணவு வேண்டாம்” என்று மறுக்க “சொன்னால் கேட்க மாட்டாயா” என்று கோபமாய் துவங்க சரி வருகிறேன் என்று கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று மறைந்தாள் சுஹீரா.

கண்ணாடி முன் நின்றிருந்தவளுக்கு தன்னை கட்டுபடுத்த முடியாமல் கண்ணீர் வந்தது “முன் யோசனை இன்றி தவறு செய்துவிட்டு இப்போது தடுமாறி கொண்டு இருக்கின்றேன்” என்று கோபம் வர அதற்கு காரணமாய் இருந்தவன் கட்டிய தாலியை எடுத்துப் பார்த்தாள் அழகாய் சொக்கர் மீனாட்சி உருவம் பொறித்திருக்க வழக்கமாய் இருக்கும் தாலி கொடி முறுக்கு டிசைன் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாய் புது மாடலாக இருந்தது. கட்டிய நொடியில் இருந்துகவனிக்காத தாலியை கையில் ஏந்தி பார்த்துப்கொண்டு இருந்தவள் மனதில் நேற்று “கட்டாயப்படுத்தி தாலி காட்டினால் கழட்டி அவன் கையில் கொடுத்து விட்டு வரவேண்டியது தான்” என்று எண்ணியது நினைவு வரவும். கையில் தாங்கி இருந்ததை கழுத்தை தாண்டி முகம் வரை கொண்டு வந்தவள் மனதில் ஏதோ ஒன்று பாரமாய் அழுத்த கழட்ட நினைத்த கைக்குலேயே அடக்கி கொண்டு “என்னால் அதை செய்ய முடியவில்லையே” என்று ஒருவேலை என்னை கட்டாயபடுத்தி இருந்தால் எண்ணியதை எளிதாய் செய்திருக்க முடியுமோ என்னவோ?, தன் முன் அவன் கொண்ட கர்வம், ஆணவம் அனைத்தையும் துறந்து கண்களில் காதலை தேக்கிவைத்து தனது பதிலுக்கு இறைஞ்சி நின்றவன் முகம் நினைவிற்கு வர அவன் நினைவு மட்டுமே நெஞ்சை நிறைத்தது இதற்கு முன்பிருந்த அகரனின் ஆணவ பேச்சும் திமிரும் சொல்லாமலே மனதில் வளம் வரத்துவங்கியது.

“நீ பேசியதற்கு பழிவாங்க தான் உன் அண்ணனை பயன்படுத்திக்கொண்டேன் என்று பேசியவன், அவன் தொடுகையில் முகம் சுருங்க நின்றவளை ஏளனமாய் பார்த்து உன் ஆணவம் கர்வம் இதனுடன் கொஞ்சம் விளையாடி பார்க்க போகிறேன் என்று சவால் விட்டவன், நான் உன்னை தொடுவது பார்ப்பது பேசுவது தான் உன் பிரச்சனை என்கின்றாய் அல்வா உனக்கு நான் தரப்போகும் தண்டனையே இது தான் என்று கூறியவன், இன்று தலை கீழாய் பேசுவது முரண்பாடாய் தோன்றியது”. ஒரு வேலை “அவன் எண்ணத்தை எளிதாய் நிறைவேற்றதான் காதல் வசனம் பேசி ,என்னைக் கவர்ந்திட நினைத்தானா? அதற்கு எந்த பலனும் இல்லை என்று தெரியவும், வேண்டும் என்றே நான்கு நாட்கள் தவிர்த்து என் உணர்வுகளுடன் விளையாடி, என் மனதினை பலவீனமாக்கி அவன் காரியத்தை சாதித்து கொண்டனோ?” என்று எண்ணம் மனதில் வலுப்பெறத் துவங்கியது. அகரன் சூழ்ச்சி அறியாமல் “அவன் கொண்டது உண்மை காதல் என்று தன்னையே ஏமாற்றிக்கொண்டு தந்தையின் நம்பிக்கையை துரோகம் செய்துவிட்டோம்” என்று குற்ற உணர்வு குடைய துவங்கியது அகரன் மீது வலுக்கட்டாயமாக கோபத்தை நிறைத்து தாலியை கழட்ட முயன்றும் முடியாமல் மீண்டும் சோர்ந்து போனாள் சுஹீரா.

“இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் சீக்கிரம் வா” என்ற அன்னையின் குரலில் அகரன் நினைவில் இருந்தது வெளிவந்தவள் வேறு உடை மாற்றிஅறையை விட்டு வெளியே வந்தாள் சுஹீரா.

உணவு பரிமாறிக்கொண்டே “என்ன இன்று புடவை கட்டியிருந்தாய் சாதாரணமாய் நான் கட்ட சொன்னாலே மாட்டேன் என்பவள் இன்று நீயாய் கட்டியிருக்கின்றாய் கல்லூரியில் ஏதும் விழாவா?” என்று ஆராயும் பார்வை பார்த்தார் சுபத்ரா. இது வரை அம்மா கவனிக்கவில்லை என்று இருந்த நிம்மதி மறைய என்ன சொல்வது என்று குழப்பமாய் யோசித்தவள், “இன்னும் கொஞ்ச நாட்களில் படிப்பு முடிய போகின்றது இல்லையா அதனால் எல்லோரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்தோம் அதனால் தான்” என்று ஒருவழியாய் காரணம் சொல்லி மழுப்பியவள் குனிந்த தலை நிமிராமல் உண்டு முடித்து இடத்தை காலி செய்தாள் சுஹீரா.

மகளின் நடவடிக்கை விசித்திரமாய் இருக்க தன்னிடம் எதையோ மறைக்கின்றாள் என்பதை தாய் மனது தெளிவாய் கண்டு கொண்டது உடனே மகேஸ்வரனை தொடர்பு கொண்டவர் தனது ஐயத்தை கூற, “உனக்கு எப்போதும் இதே வேலை அவளை கண்காணித்து கொண்டே இருப்பது” என்று மகேஸ்வரன் சாதாரணமாய் பதில் தர, “என்னிடம் தான் மறைக்கின்றாள் ஆனால் உங்களிடம் வெளிப்படையாக தானே பேசுவாள், நீங்களே வந்து அவளிடம் பேசி பாருங்கள்” எனவும் மனைவியின் கட்டாயத்தில் வந்தவருக்கு மகளின் முகத்தை கண்டே தான் வந்தது நல்லது தான் சுஹீராவிடம் நிச்சயம் பேச வேண்டும் என்று புரிய அவள் அருகில் சென்று அமர்ந்தார் மகேஸ்வரன்.

“நான் எப்படியும் சம்மதித்து விடுவேன் என்று அவனுக்கு தெரிந்து உள்ளது பத்திரத்தை கொடுத்த பின்பும் நான் திருமணத்திற்கு மறுத்திருந்தால் அவன் சுயரூபம் தெரிந்து இருக்குமோ என்னவோ அதற்கு இடமே தராமல் நடந்துகொண்ட தனது முட்டாள் தனத்தை எண்ணி வருந்த துவங்கினாள், அவன் கேட்டதும் மறுப்பேதும் கூறாமல் எப்படி அந்த அரக்கனை திருமணம் செய்ய சம்மதித்தோம்” என்று தீவிர சிந்தனையில் இருந்தாள் சுஹீரா.

“என்ன குட்டிமா என்ன யோசனை ஏன் முகத்தில் இத்தனை குழப்பம்” என்று அக்கறையாய் வினவ தந்தையின் குரலில் இருந்த நிதானம் அப்பாவிடம் எல்லாவற்றிற்கும் சரியான விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தந்தது, அவர் மடியில் தலை வைத்து படுத்து கொண்டவள் அவர் முகம் பார்ப்பதை தவிர்த்து, “இன்று நான் ஒரு தவறு செய்து விட்டேன் அப்பா அதை எப்படி துணிந்து செய்தேன் என்று இன்னும் எனக்கு காரணம் விளங்கவில்லை” என்று என்ன தவறு கூறாமல் கூறினாள் சுஹீரா.

எதையும் வெளிப்படையாக பேசும் மகள் இன்று என்ன தவறு என்று கூறாமல் விளக்கம் கேட்க மகேஸ்வரன் மனதில் சிறு நெருடல் உருவானது. இருந்தும் அவளே வெளிப்படையாக சொல்லாத போது வற்புறுத்துவது சரியில்லை என்று மனதில் தோன்றிய உணர்வுகளை வெளிக்காட்டாமல் சுஹீராவின் குழப்பத்தை தீர்க்க முன்வந்தார்.

“நீ செய்தது தெரிந்து செய்த தப்பா இல்லை தெரியாமல் செய்த தவறா” என்று மகேஸ்வரன் கேள்வி கேட்க, “என்ன” என்று புரியாமல் விழித்தாள் சுஹீரா.
“பின் விளைவு என்ன என்று தெரிந்திருந்தும் தான் செய்யப்போவது தவறான செயல் என்று தெரிந்தும் அதை துணிந்து செய்தால் அது தப்பு, இது எதுவுமே அறியாமல் செய்தால் அது தவறு” என்று விளக்கம் தந்தார் மகேஸ்வரன்.

மடியில் இருந்த தலையை நிமிர்தாமலே “பின் விளைவு என்ன என்று தெரிந்திருந்தும் அப்போதைக்கு எதை பற்றியும் யோசனையில்லாமல் செய்த தப்பு தான் அப்பா” என்று உண்மையை ஒத்துக்கொண்டாள் சுஹீரா. சுஹீராவின் குரலில் இருந்த குற்ற உணர்வு அவள் செய்த தப்பு என்ன என்று அறியும் ஆவலை கொடுத்தாலும், அவளே செய்த தவறினை எண்ணி வருந்துகின்றாள் என்று புரிய அதை போக்கும் வழியில் இறங்கினார் மகேஸ்வரன்.

“தெரிந்தே செய்த தப்பு என்றால் அதை நீ உணர்ந்துவிட்டால், அதனால் யார் அதிகம் பாதிக்க படுவார்கள் என்று உனக்கு தோன்றுகின்றதோ அவர்களிடம் உண்மையை கூறி மன்னிப்பு வேண்டிவிடு, இந்த குற்ற உணர்வு மறையும் “என்று வழி சொல்லி கொடுத்தார். சிறிது நேரம் மௌனமாய் இருந்தவள் “இன்னும் என்ன குழப்பம் குட்டிமா” என்று மகேஸ்வரன் வினவ “தப்பு என்று தெரிந்தும் எப்படி அதை செய்ய துணித்தேன் என்று எனக்கே புரியவில்லை அப்பா, என் மகள் எடுக்கும் எந்த முடிவும் சரியாய் இருக்கும் என்று நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஒரு நொடியில் பெய்யாக்கி விட்டேன், அதற்கு என்னை மன்னித்து விடுங்கள்” என்று மாஹேஸ்வரன் கூறியது போல அதிகம் பாதிக்க படுபவர் என்று எண்ணிய தந்தையிடம் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினாள் சுஹீரா. மகளின் முகத்திலிருந்த வருத்தம் காண பொறுக்காதவர் “சரி பின்விளைவு அறியாமல் செய்துவிட்டாய் இப்போது நீ வருந்துவதால் செய்த தப்பு இல்லை என்று ஆக போகின்றதா என்ன?, எங்கு இதை செய்யாமல் போனால் தன் வாழ்வில் பெரிதாய் எதையேனும் இழந்து விடுவோமோ என்ற கலக்கம் தான் பலரையும் துணிந்து தப்பு செய்ய தூண்டுகின்றது.

“ இப்போதும் என் மகள் மீது எனக்கு அளவில்லா நம்பிக்கை உள்ளது, தவறு என்று தெரிந்தும் நீ அதை துணிந்து செய்திருக்கின்றாய் என்றால், அந்த விசயத்தில் உனக்கு இருந்த ஈடுபாடும், நம்பிக்கையும் புரிகின்றது, இப்போதும் அந்த தவறு எப்படி செய்தோம் என்று குழம்பி தடுமாறுகின்றாயே தவிர, ஏன் செய்தோம் என்று தவிக்கவில்லை செய்தது தவறு என்று நீ வருந்தவில்லை, அதை வைத்து சொல்கிறேன் நீ இந்த முடிவு வெறும் அவசரத்தில் மட்டும் எடுத்து இருக்க மாட்டாய், பலநாள் உன் உள்மனதில் ஒரு போராட்டம் நிகழ்த்தி தான் செய்திருப்பாய், மற்ற படி உனக்கு விருப்பம் இல்லாததை கட்டாயபடுத்தி செய்யவைக்க யாரால் முடியும் பலமுறை அதை முயன்று தோற்ற இந்த அப்பாவிற்கு தெரியாத உன் குணம் ?” என்று தலையை வருடி கூறினார் மகேஸ்வரன்.

“சரி இப்போது உன் குழப்பம் தீர்ந்து விட்டதா இப்போதாவது இந்த அப்பாவி அப்பாவிடம் நீ செய்த பொல்லாத பெரும் தப்பு என்ன என்று சொல்லலாம் இல்லையா?” என்று கேலியாய் வினவினார் மகேஸ்வரன். “எப்படி சொல்வது உங்களுக்கு தெரியாமல் பழக்கம் ஆன சில தினங்களில் ஒருவன் காதல் வார்த்தைக்கு மயங்கி அவன் திருமணம் செய்ய கேட்டதும் இவ்வளவு நாள் பாசமாய் வளர்த்த உங்களை மறந்து அவன் மீது உண்டான உருவமில்லா உணர்வில் அவனை மணந்து கொண்டேன்” என்று இதை சொன்னால் நீங்கள் எப்படி எடுத்துகொள்வீர்கள் இப்படி இயல்பாய் பேசும் நீங்கள் என்னை வெறுத்துவிட்டால் என்னால் தாங்க முடியாதே என்று தனக்குலேயே புலம்பிக்கொண்டு இருந்தாள் சுஹீரா.

மகளின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்து கொண்டு இருந்தவர் “சிலர் தங்கள் சூழ்நிலை காரணமாக தவறு செய்வார்கள் சிலர் தங்களை காத்துக்கொள்ள தவறு செய்வார்கள் பலர் தனக்கு பிரியமானவர்களை இழந்துவிடக்கூடாது என்று அளவில்லா அன்பில் தவறு என்று தெரிந்தே செய்வார்கள்” என்றதும் மகளின் உடலில் உண்டான அதிர்வை குரிதுக்கொண்டவர் மேலும் பேச துவங்கினார்.

“தவறு செய்வது மனித இயல்பு தான் அதற்காக தனக்கு நெருக்கமானவர்களை என்றுமே வெறுக்க முடியாது நீ எவ்வளவு பெரிய தவறு செய்து இருந்தாலும் உன்னை மன்னித்து பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு எனக்கு என் மகள் மீது பாசம் உள்ளது உன் மனம் தெளிவடைந்து என்று என்னிடம் சொல்லவேண்டும் என்று உனக்கு தோன்றுகின்றதோ அன்று என்னிடம் கூறு” என்றவர் “சரி நீ இப்படி இருப்பதை பார்த்து உன் அம்மா தான் ரொம்ப கவலைப்பட்டாள், அவள் சொன்னதால் தான் பாதி வேலையில் அப்பா வந்தேன் இப்போது உனக்கு குழப்பம் தீரிந்தது தானே நான் கிளம்பலாமா?” என்று மகளின் அனுமதியுடன் அறையை விட்டு வெளியேறினர் மகேஸ்வரன்.

“என்ன என்று விசாரித்தீராகளா, அவள் அமைதிக்கு காரணம் சொன்னாளா? அவள் நடவடிக்கை கொஞ்ச நாட்களாக சரியில்லை அடிக்கடி வெளியே தனியே செல்லவது வீட்டில் இருந்தாலும் எங்கேயோ வெறித்துக்கொண்டு இருப்பது என்று இருக்கின்றாள் இன்று வழக்கத்துக்கு மாறாக புடவை அணிந்து சென்றுள்ளாள் முகமும் சரியில்லை” என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே சென்றார் சுபத்ரா

“கொஞ்சம் அமைதியாயிரு சுபத்ரா நான் சுஹீராவிடம் பேசிவிட்டேன் சிறு தடுமாற்றம் தான் இதற்கு போய் தேவையில்லாமல் கண்ட வர்ணம் பூசாதே, அவளே குழம்பி தவிக்கின்றாள் நீயும் எதையாவது கேட்டு அவளை மேலும் காயப்படுத்தாதே” என்று மகேஸ்வரன் மனைவிக்கு அறிவுரை வழங்கினர். “என்ன சிறு தடுமாற்றம் என்கின்றீர்கள் இவள் வயதில் வரும் காதல், பிரச்சனை வந்து ஒருநாள் நம்மை தலைகுனிய வைக்கப்போகின்றாள் அன்று தெரியும், உங்களுக்கு?” என்று பொரிந்து தள்ளினார் சுபத்ரா.

“ஏன் காதல் என்று வந்து நின்றால் தான் என்ன? அவளுக்கான வாழ்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இல்லையா என்ன? அவளுக்கு பொருத்தமான பையனை அவள் விரும்பும் போது ,அதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை அவன் நல்லவனா கெட்டவனா குணம் எப்படி என்று மட்டும் பார்த்தால் போதும், அந்த தொந்தரவும் என் குட்டிமா எனக்கு கொடுக்க மாட்டாள் , என் மகள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவும், தெளிவானதாகவும் தான் இருக்கும் அவள் தேர்ந்து எடுக்கும் பையனும் குணத்தில் சிறந்தவனாக தான் இருப்பான்”, பெருமை பேசி சென்றார் மகேஸ்வரன்.

மகேஸ்வரன் வந்து சென்ற பிறகு சுஹீரா வெகு நேரம் சிந்தனையில் முழ்கினாள். அப்பா சொல்வது போல் “எனக்கு விருப்பம் இல்லாமல் இந்த திருமணத்திற்கு சம்மதித்து இருக்க மாட்டேன் என்றால், எனக்கு எப்படி இந்த பகடுவை பிடிக்க துவங்கியது, என்னை அறியாமல் என் உள்மனம் அவனிடம் மயங்கத்துவங்கிவிட்டதா? எங்கு அவனை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் தான் அவன் கேட்டதும் மறுப்பேதும் கூறாமல் திருமணம் செய்து கொண்டேனா?”,அது எப்படி சத்தியம் அந்த அகரன் நிபந்தனை விதித்து தன்னை காதலிக்கும் படி கட்டாயப்படுத்திய போதே அவனை பற்றிய முழுவிபரம் சேகரித்தாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் அது அவளுக்கு கடினமாகவும் இல்லை, அவன் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒரே வாரிசு பெண்களுடன் அதிகம் கிசுகிசுக்க பட்டு உள்ளான், அதை எதையும் அவன் மறுத்ததும் இல்லை சமீபத்தில் நடைபெற்ற தொழில் அதிபர்கள் சங்கத்தின் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட வரை அவனை பற்றிய முழுவிபரம் அறிந்து வைத்தவள், “பல பெண்களுடன் பழகும் எண்ணம் உடையவன் சிலகாலம் முயன்று விட்டு பின் எந்த பலனும் இல்லை என்றால் தானாகவே விலகிவிடுவான்” என்று அகரனை கணித்து இருந்தாள் சுஹீரா அவனிடம் இருந்து விலகியேயிருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டாள், அதை அகரன் நடைமுறை படுத்த விடவில்லை என்றாலும் மனதால் அவனை ஒதுக்கிவைத்து இருந்தாய் நினைத்தது தவறு போல, இதுவரை எப்படி இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க வில்லை என்று குழப்பத்தில் திரிந்தவள் இப்போது எப்படி அவனுக்கு என்னுள் இடம் கிடைத்தது என்று புது குழப்பத்தில் முழ்கினாள் சுஹீரா.

“முதலில் திருமணம் என்றதும் மறுத்து தானே கூறினேன் அது மட்டும் இல்லாமல் கட்டாயபடுத்தி மிரட்டினாலும் எதிர்த்துநிற்கும் துணிவுடன் தானே இருந்தேன்!, ஆனால் தான் நினைத்தது போல் கட்டாயப்படுத்தாமல் காதலுக்காக பணிந்து சென்றது தான் தன்னை யோசிக்க விடாமல் தலையாட்ட வைத்துவிட்டது” என்று உண்மை புரிய துவங்கியது.

“அப்படியென்றால் அந்த விசரை இழக்க கூடாது என்று என் மனம் ஏங்கி தவித்திருக்கின்றதா அதனால் தான் இந்த தவறு நேர்ந்ததா?” என்று எண்ணியவள் அப்படி இருக்க வாய்ப்பேயில்லை, “பல பெண்களுடன் சுற்றி திரிந்த இந்த அகரன் மீது தனக்கு என்றுமே காதல் வராது அவன் பத்திரம் கொடுத்த பின்பும் எப்படியாவது என்ன செய்தாலும் தனது காரியம் சாதித்து கொள்ளக் கூடியவன் இனி அவனால் அண்ணனுக்கு என்ன பிரச்சனையும் வர விடக்கூடாது என்று முடிவு செய்தது தானே நான் மறுத்தாள் அண்ணனை ஏதும் செய்து விடுவான் என்ற உண்மை புரிந்ததால் அவன் இஷ்டத்திற்கு பணிய வைத்தது தனக்கு அகரன் மீது காதலோ, எந்த ஈர்ப்பும் இல்லை” என்று தன் மனம் ஏற்கும் படி சில விளக்கங்களை கொடுத்து கொண்டாள் சுஹீரா.

“அப்பாவிற்கு அந்த பகடுவை பற்றி தெரியாது தெரிந்திருந்தால், இப்படி பேசியிருக்க மாட்டார் , இப்படி ஒரு அரக்கனை போய் திருமணம் செய்து கொண்டேன் என்று மிகவும் வேதனைப்படுவார், என்னால் இயன்ற அளவு என் திருமணம் செய்தி அறிந்து வருந்தும் நாளை தள்ளிக்கொடுக்க வேண்டும் இனியும் அகரன் காதல் வசனத்திற்கு தடுமாற கூடாது” என்று தீர்மானங்கள் எடுத்துக்கொண்டாள்.

அப்பா தான் என் மனம் என்ன நான் இருக்கும் சூழ்நிலை என்ன என்று புரியாமல் பேசுகின்றார் தானும் அது போல் சிந்திப்பதா என்று அழகாய் ஒரு தலை சிலுப்பளுடன் அந்த எண்ணத்தையும் தூக்கி எறிந்தாள் சுஹீரா.

அகரன் கொண்டது வெறும் ஈர்ப்பு அது சிறிது காலம் கடந்தால் தானாய் மறைந்து விடும் அந்த உண்மை அவனுக்கே தெரிந்துள்ளது “அப்படி ஈர்ப்பு மறைந்தால் இப்போது போட்டிருக்கும் காதல் நாடகம் கலைக்க வேண்டிவரும், அப்படி நேர்ந்தால் நான் சொன்னது உண்மையாகி அந்த அகம்பாவகாரன் என்னிடம் தோற்றது போல் ஆகிவிடும் என்று தான் அவசரமாய் இந்த திருமணத்தை நடத்தி இருப்பான்” என்று காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்று நடந்தவைகளுக்கு ஒரு காரணம் கற்பித்து கொண்டபின் தான் அடுத்து செய்ய வேண்டிய நடைமுறைகளை பற்றி தெளிவாய் யோசிக்க முடிந்தது சுஹீராவாள், அகரன் தன் மீது கொண்டது, எளிதில் அழியாத காதல் என்று புரியாமல் போனது. அகரன் கொண்ட காதலை சோதித்து பார்க்க முடிவு எடுத்தாள் சுஹீரா. “இதுவரை எண்ணென்ண செய்து கட்டாயப்படுத்தி தனக்கு கஷ்டத்தை கொடுத்தவன் வழிய வந்து அவன் வாழ்க்கையையே என்னுடன் பிணைத்து பெரும் தவறு செய்து கொண்டான் இது எனக்கான வாய்ப்பு நான் கொடுக்கும் பதிலடிக்கு என்னை ஏன் திருமணம் செய்தோம் என்று அந்த பகடு யோசிக்கவேண்டும் “என்று திட்டமிட்டாள் சுஹீரா.

சுஹீரா என்ன அடி கொடுத்தாலும் அகரன் கொடுக்கும் முத்த அடிக்கு முன் ஏதும் செல்லாது என்று பலமுறை அகரனின் காதல் அடிகளை பெற்று கொண்டவள், இன்னும் அதை உணராமல் இருந்தாள் சுஹீரா. அகரன் செய்யும் முத்த சண்டைக்கு ஈடு கொடுக்க முடியாமல் புறமுதுகிட்டு ஒடுபவள் அதை மறந்து எப்படி பதிலடி கொடுப்பது என்று தீவிராமாய் சிந்திக்க துவங்கினாள்.

சுஹீரா அகரன் நினைவில் தன்னை மறந்திருக்க அகரனே அவளை தொடர்பு கொண்டான் அகரன் எண் என்று தெரிந்ததும் வேண்டுமென்றே அழைப்பை ஏற்காமல் கையில் ஏந்தி பலியாடு தானாய் தலை நீட்டுகின்றது, இதழ்கள் தானாய் ஏளன புன்னகை சூடிக்கொள்ள அமைதியாய் அமர்ந்திருந்தாள் சுஹீரா.

சில முறை முயன்றும் பதில் இன்றி போகவும்
என்னை காமுகனாய்
எண்ணாமல்
உன் காதலானாய்
ஒரு நொடி
எண்ணிப்பாராடி
என் செயல்களில்
உள்ள உன்மீதான
அளவில்லா காதல்
புரியும்…
என்று குறுஞ்செய்தி அனுப்பிவைத்து பதிலுக்காக காத்திருந்தான் அகரன். “செய்வதுயெல்லாம் 420 வேலை இதில் இவனை காதலனாய் நினைக்க வேண்டுமா?” என்று பொருமியவள், “காமுகன், காதலன் என்று வசனம் பேசி நீ நல்லவன் ஆக முயற்சி செய்யாதே எனக்கு என்றுமே நீ அரக்கன் தான்” என்று பதில் அனுப்பினாள் சுஹீரா.

உன் மீது அளவில்லா காதல்
கொண்டவனை
இரக்கமே இல்லாமல்
அரக்கன் என்கிறாய் நீயடி…
உன் கோபத்தை கூட
குளுமையாய் ரசிக்கிறேன் நானடி…

என்று மீண்டும் கவிதையில் பதில் தந்தான் அகரன். “இந்த கவிதை எல்லாம் எங்கிருந்து சுடுகின்றாய் இது போல் பிதற்றி எத்தனை எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறாய்” கோபமாய் வந்தது சுஹீரா பதில்.

இதற்கு முன்
எழுதியதும் இல்லை
எதிலும்
எழுதிவைத்ததும் இல்லை
என்னுள் நீ
வந்ததில் இருந்து
வார்தைகள் எல்லாம்
வர்ணஜாலம் புரிந்து
காதல் பித்தனாய்
பித்தற்ற செய்யுதடி…

என்று அகரன் பதில் வர, “இவனை திருத்தவே முடியாது” என்று தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டாள் சுஹீரா.

மறுமுறை அகரன் அழைத்ததும் தவிர்க்கமால் எடுத்தவள் “என்ன மனதில் பெரிய மன்மதன் என்று எண்ணமா? உன் கவிதை வரிகளில் மயங்கி உன் வலையில் விழ நான் ஒன்றும் புள்ளிமான் இல்லை” என்று சுஹீரா கோபமாய் துவங்க ,” உன்னை வலையில் வீழ்த்தும் வலிமை இல்லையடி… எனக்கு, நானே உன் கண் பார்வையில் காதல் வலையில்… சிக்கிக்கொண்டு மீள மனமில்லாமல் உன்னை சுற்றிவரும் வெறும் மானுடன்” என்று சமாதனமாய் பேசினான் அகரன்.

“என்ன வேண்டும் உனக்கு எதற்கு இம்சை செய்கிறாய் எப்படியோ நீ நினைத்ததை சாதித்து கொண்டாய் இன்னும் என்ன வேண்டும் ?” என்றாள் சுஹீரா. “நான் சாதித்து என்ன பயன் நான் சாதித்த சாதனை நீ என் அருகில் இல்லாமல் விலகியிருந்து சோதனை தானே தருகின்றாய் ? இன்று நமக்கு என்ன நாள் என்று நினைவிருக்கின்றதா சுஹீ” என்று அகரன் கேள்விக்கு, “என் நிம்மதியை உன்னிடம் பறிகொடுத்த நாள்” என்று வெடுக்கென பதில் தந்தாள் சுஹீரா.

சில நொடி அமைதிக்கு பின் “இன்று என் வாழ்வின் அர்த்தம் உணர்ந்த நாள்… என் காதல் என் கரம் சேர்ந்த நாள்… என்னவள் என் கைகோர்த்த நாள்… அதுமட்டும் இல்லை இன்று நமக்கு முதல்இரவு” என்று அகரன் கிறக்கமாய் கூற, சுஹீரா மனம் பதட்டத்தில் துடிக்க அவளையும் மீறி கன்னம் செம்மையுற “இப்போது உனக்கு என்ன வேண்டும்” என்று திக்கி திணறி முடிக்கும் முன், “எனக்கு என்ன வேண்டும் என்று உனக்கு தெரியாதா சுஹீ, இதம் தரும் உன் இதழ் வேண்டும்… கட்டியணைத்து களிப்புற உன் காதல் வேண்டும்… விலகாமல் உன் விரல் கோர்த்து கதை பேச வேண்டும்… உன் மடி சாய்ந்து அந்த மயக்கத்தில் உறங்க வேண்டும்…” என்றவன். “இதை எல்லாம் தாண்டி ஒரு கணவனாய் காதல் புரிந்திட என் மனைவி வேண்டும்…” என்று அகரன் கிறக்கமாய் கூறி…

நீ காத்துவைத்திருக்கும்
பெண்மை எனும்
பொக்கிஷத்தை
உன் ஆடை திரை அகற்றி
வெட்க பூட்டை உடைத்து
களவாட காத்திருக்கும்
காதல் கள்வன் நானடி …

தனது ஆண்மை நிறைந்த குரலில் காதலுடன் வரிகளில் ஏற்ற இரங்கங்களுடன் கவிதை கூறினான், அகரன். சுஹீரா பேச்சின்றி மவுனமானாள் “உன் மௌனத்தை என் கேள்விக்கான பதிலாய் சம்மதமாய் எடுத்து கொள்ளவா சுஹீ” என்று கூறியவன்,

உன்னை கைகளில்
தாங்கி என் ஏக்கம்
தீர்த்து கொள்ளவா
உன் இதழ் அமுதம் பருகி
என் பருவ தாகம்
தீர்த்துக்கொள்ளவா…

“உன் அனுமதிக்காக மட்டுமே விலகி நிற்கிறேன் சுஹீ நீ “ம்” என்றால் போதும் இந்த நொடியே உன்னை கவர்ந்து காதல் செய்வேன் கண்ணம்மா, சுஹீ நான் உன்னை சந்திக்க வேண்டும்” என்று பழக்கம் இல்லாத கெஞ்சலுடன் ஒலித்தது அகரன் குரல்.

அகரன் குரலில் தடுமாறத்துவங்கிய மனதை கட்டுப்படுத்தி இனி இவனுடன் பேசிக்கொண்டிருந்தால் அவன் விருப்பத்திற்கு பணிய வைத்துவிடுவான் என்று புரிய அது முடியாது “ஏற்கனவே உன்னால் என் வீட்டில் எல்லோருக்கும் என் மீது சந்தேகம் என்னால் நீ சொல்லும் இடத்திற்கு எல்லாம் வர முடியாது இப்படி அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்யாதே, நான் உன் அடிமையில்லை நீ எனக்கு அரசன்யில்லை, எனக்கு எப்போதும் நீ அரக்கன் தான் அதை மறந்துவிடாதே” என்று கடுமையாய் கூறியவள் அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்று போனை சுவிட்ச்ஆப் செய்து வைத்தாள் சுஹீரா.

மீண்டும் மீண்டும் அகரன் முயன்றும் சுவிட்ச்ஆப் என்று பதில் வர “பாவம் என்று பார்த்தால் ஓவராய் தான் பிகு பண்ணுகின்றாள், இவளுக்கு எல்லாம் பழைய பிடிவாதாக்கார அகரன் தான் சரிப்பட்டு வருவான்” என்று கோபமாய் பிதற்றி கொண்டு இருந்தான் அகரன். ஹீராவிடம் பேச முயன்று முடியாமல் போக வந்த கோபத்தில் என்ன செய்வது என்று புரியாமல் தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான் அகரன்.

“என்ன பாஸ்… இன்னேரம் நீங்கள் இங்கு என்ன செய்கின்றீர்கள் , அண்ணியுடன் டூயட் பாடிக்கொண்டியில்லாமல் அறையை அளந்து கொண்டு இருக்கின்ரீர்கள்” என்று குகன் குரல் கேட்டு திரும்பினான் அகரன்.

அகரன் பார்வையில் வேறுபாடு தெரிந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் குகன் தொடர்ந்தான். “வாழ்த்துகள் பாஸ் கடைசிவரை போராடி உங்கள் காதலை அடைந்துவிட்டீர்களே நீங்கள் ரொம்ப லக்கி பாஸ் சரி அண்ணிக்கு உங்கள் பரிசுகள் பிடித்து இருந்தாதா, ஆமாம் அண்ணி எங்கே ?கீழே இல்லையே. உங்கள் வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டார்களா யாரும் எந்த ரீயாக்சன் காட்டாமல் அமைதியாய் இருக்கின்றார்கள், உங்கள் அத்தை கூட எப்போதும் போல என்னை பார்த்ததும் வழக்கமான வம்பு பேசி ஒரு பார்வையில் விலகி ச்சென்றுவிட்டார்கள்,” என்றவன் கலையரசி பேசியது நினைவில் வர முகம் வாடி பின் சூழ்நிலை உணர்ந்து தன்னை சரி செய்து கொண்டு “நான் கூட உங்கள் அத்தை தான் உங்களுக்கு வில்லி என்று நினைத்து இருந்தேன் பரவாயில்லை எல்லோரும் பிரச்சனை செய்யாமல் அண்ணியை ஏற்றுக்கொண்டார்கள், நீங்கள் அண்ணியுடன் சென்று நின்ற போது , உங்கள் மாமனார் என்ன செய்தார் பாஸ்…!., உங்கள் இலக்கு இரண்டையும் அடைந்துவிடீர்களே பழிக்குபழியும் வாங்கியாயிற்று காதலியையே கல்யாணமும் செய்து கொண்டாயிற்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் நீங்கள் பலே கில்லாடி பாஸ்” என்று விடாமல் பேசிக்கொண்டே சென்றான் குகன்.

“அது எப்படி குகா எனக்கு தேவை ஏற்படும் போது சரியாய் என் முன் வந்து நிற்கின்றாய்” என்று அகரன் ஒருமாதிரி குரலில் குகனை புகழ்ந்தான். அகரன் குரலில் இருந்த வேறுபாட்டை கண்டுகொண்டவன் “அடடா குகா நேரம் தவறி வந்துவிட்டாய் போல… பார்வையும் சரியில்லை குரலும் சரியில்லை… எங்கெங்கோ பற்றி கொண்ட நெருப்பு எல்லாம் உன்னை சுட்டெரிக்க காத்திருக்கின்றது இனியும் நீ இங்கு இருப்பது ஆபத்து நைசாக நழுவிக்கொள்” என்று தனக்குள் தானே கூறிக்கொண்டு, “நீங்கள் அண்ணி பற்றிய நினைவில் இருக்கின்ரீர்கள் போல இடையில் நான் எதற்கு நந்தி போல, நான் தேடிவந்த பைல்களை நாளை எடுத்து கொள்கிறேன்” என்று அறைவாயில் புறம் திரும்பி தப்பிக்க நினைத்தான் குகன். வாசலில் அதிகா வழி மறைத்து நிற்க இவர்கள் வேறு நேரம் காலம் தெரியாமல் என்று முறைத்தப்படி குகன் திரும்ப , குகனுக்கு வெகு அருகில் வந்துவிட்ட அகரன், “ அதிகா நீ குகனுக்கு குடிக்க ஏதும் கொண்டுவா எனக்கு குகனுக்கு கொடுக்க வேண்டியது நிறைய உள்ளது” என்று அதிகாவை அனுப்பிவைத்தவன், குகன் தோள் மீது கைபோட்டு கொண்டு கதவை மூடி தாள் போட்டான் அகரன்.

“பாஸ் இது ரொம்ப பெரிய தவறு ஆயிரம் தான் நான் உங்கள் பி. ஏ வாக இருந்தாலும் கல்யாணம் ஆகாத கன்னிப்பையன் என்னிடம் நீங்கள் நடந்து கொள்ளும் முறை சரியில்லை எதற்கு இப்போது கதவை அடைத்தீர்கள் என்னை வெளியில் விடுங்கள்” என்று தடுமாற்றத்துடன் வசனம் பேசி தான் இருக்கும் இக்கட்டான நிலையிலும் குகன் வாய் அதன் வேலையை காட்டியது.

“என்ன கன்னிப்பையனா!” என்று குகனை நெருங்கி வந்து அவன் சட்டை காலரை பற்றி கொண்டு “என்ன கேட்டாய் அண்ணி எங்கேவா நீ செய்த சதியால் கல்யாணம் ஆகியும் இன்னும் பிரம்மச்சாரியாய் இருக்கிறேன் என்னிடம் வந்து வசனம் பேசி என் வயிற்றெருச்சலை கிளறிவிட்டு அதில் குளிர்காய நினைக்கின்றாயா?” அவன் கைகளை பின் புறம் கொண்டுவந்து பற்றியவன் “நான் என் வழியில் அவளை சம்மதிக்க வைத்து திருமணம் முடிந்தகையோடு என் வீட்டிற்கு அழைத்து வந்திருப்பேன், இவர் பெரிய ஐடியா கிங் இடையில் புகுந்து அலைபயுதே வலைபாயுதே என்று சும்மா இருந்தவளுக்கு ஐடியா கொடுத்ததும் இல்லாமல் என்னிடம் நலம் விசாரிப்பு வேறு” என்று முதுகில் ஒரு அடி கொடுத்தவன், கைகளை விடுவித்து கன்னத்தை கைகளால் பற்றி “ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றா கேட்கின்றாய் என்னால் ஒன்றையே கைப்பற்ற முடியவில்லை என்று கவலையில் தவித்துக்கொண்டு இருக்கிறேன்”, என்று கன்னத்தை வலிக்கும் படி தட்டினான் அகரன்.

குகன் முகம் கலங்கியிருக்க அவனை அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்து விட்டு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு அந்த நாற்காலியின் கைப்பிடியில் தானும் அமர்ந்து கொண்டான் அகரன்.

அகரன் செயலில் அவன் இயல்பாகிவிட்டது புரிய “போங்க பாஸ் முதலியெல்லாம், நீங்கள் வைத்தகுறி தப்பாது, தப்பாமல் இலக்கை தாக்கும் ஆனால் அண்ணியை காதலிக்க துவங்கியதில் இருந்து எல்லாம் இம்சை அரசன் கரடிக்கு வைத்த குறி போல் எல்லாம் தவறி என்னை தான் வந்தடைகின்றது” என்று குகன் கூறியதும், அவன் தோள்களில் போட்டிருந்த கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு “என்னை என்ன செய்யசொல்கிறாய் அவர்களை நான் ஏதும் செய்தால், என் சுஹீக்கு அல்வா வலிக்கும் அவளுக்கு ஒன்று என்றால் என்னால் தாங்க முடியாது , இந்த நினைவே என்னை ஏதும் செய்யவிடாமல் தடுக்கின்றது” என்று கூறிய அகரன் குரலில் இருந்த மென்மையே அகரன் காதலை அழகாய் காட்ட, குகன் முகமும் மலர்ந்தது “எல்லாம் காதல் செய்யும் மாயம் பாஸ்… அந்த மாயவலையில் மாட்டி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் தொலைந்து கொண்டு இருக்கின்ரீர்கள், இப்போது என்ன பாஸ் அண்ணி உங்களுடன் வர சம்மதிக்கவில்லை அதனால் நீங்கள் நினைத்தது போல் உங்கள் மாமனாருக்கு பதிலடி தர முடியவில்லை அது தானே உங்கள் கோபம் “என்று குகன் வினவ.

“என் மாமனாருக்கு எப்போது உண்மை தெரியவந்தாலும் அது அவர் என்னை பேசியதற்கு தண்டனை தான் ஆனால் உன் அண்ணி இருக்கின்றாள், பார் சரியான பச்சைமிளகாய் நேரம் காலம் தெரியாமல் காரத்தை காட்டி கோபத்தை க்கூட்டிவிடுகின்றாள், எந்த கட்டாயத்தாலும் அவள் அன்பு மாறக்கூடாது அவளுக்கு என் காதலை உணர்த்திவிடும் ஆசையில் தான் எல்லாம் செய்கிறேன் ஆனால் அவள் என்னை புரிந்து கொள்ளவேமாட்டேன் என்கிறாள்” என்று வலிமிகுந்த குரலில் கூறினான் அகரன்

“உங்கள் நிலை புரிகின்றது பாஸ்… அதற்க்காக அண்ணியிடம் காட்டவேண்டிய கோபத்தை என்னிடம் காட்டிக்கொண்டு இருக்கின்ரீர்கள் , நான் என்ன செய்வேன் அந்த நேரத்தில் அண்ணியை சம்மதிக்கவைக்க எனக்கு வேறு யோசனை தெரியவில்லை, இப்போது உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கள் அதை சிறப்பாய் செய்து விடுகிறேன்” என்று அகரன் சொல்லும் எதையும் செய்ய துணிந்ந்தான் குகன்.

முகத்தில் கள்ள சிரிப்பு படர தனக்கு என்ன செய்யவேண்டும் என்று கூறினான் அகரன், “உங்கள் காதலின் தூது இது தானா” என்று குகனும் அகரன் சொன்னதை செய்ய சம்மதித்தான்,குகன். மனதில் இருந்த இறுக்கம் விலகவும் இயல்பாய் தோன்றிய தோழமையுடன் “இப்போது எதற்கு வந்தாய் எந்த பைலை தேடிவந்தாய்” என்று விபரம் கேட்டான் அகரன்.

அது தான் பாஸ் “அந்த சாய தொழிற்சாலை பற்றிய ஆதாரங்கள் அடங்கிய பைல் நாளை சங்க மீட்டிங் சமர்ப்பிக்க வேண்டியது” என்று விபரம் குகன் கூறவும், அகரன் முகத்தில் கோபம் நிறைந்தது அகரன் முக மாற்றத்தை கவனித்தவன் “அவனுக்கு நீங்கள் சரியான பாடம் கத்துதருவீர்கள் என்று நம்பிக்கை உள்ளது”, “உங்கள் கவனத்தை சிதறவிடாமல் அண்ணியை பற்றி மட்டும் யோசியுங்கள் அவர்களை எப்படி உங்கள் வழிக்கு கொண்டு வருவது என்று மட்டும் சிந்தனை செய்யுங்கள் “ என்று கூறினான் குகன்.

சுஹீரா பெயரை சொன்னதும் கோபம் மறைந்து காதல் வெட்கம் கொண்டது அகரன் மனம் , அகரன் அறையில் இருந்து வெளியே வந்த குகனை கையில் ஜூஸ் உடன் எதிர்கொண்டாள் அதிகா.

அதிகாவை கண்டதும் விலகி செல்ல குகன் நகரும் போதே “வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு ஏதும் கொடுக்கவில்லை என்றால் அத்தை கோபித்து கொள்வார்கள்” என்று கையில் இருந்ததை கொடுக்க, அதை கையில் வாங்காமல் “நீங்கள் தவறாக நினைத்து கொண்டீர்கள் மேடம் நான் விருந்தாளி இல்லை!, உங்கள் முறைப்பையன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சாதாரண வேலைக்காரன் எனக்கு இந்த உபசரிப்பு எல்லாம் அதிகம்” என்றதும், “ஓ அப்படியா அப்படியென்றால் இதை வாங்கி குடி உன் பாஸ்ஸின் முறைப்பெண் கட்டளை இது” என்று கட்டாயப்படுத்த, அதை வாங்கி பருகியவன் முகம் சுருங்க “என்ன இது?” என்றான் சற்று கோபமாய்.

“பாகற்காய் ஜூஸ் கரண் குடிக்க கொடுக்க சொன்னான் என்ன? என்று சொல்லவில்லையே நீ இப்படித்தான் ஏடாகூடமாய் பேசுவாய் என்று தெரியும் அதனால் தான் முன்பே தண்டனையுடன் வந்தேன் , என் அம்மா பேசியதற்கு என்னிடம் ஏன் முகம் திருப்புகின்றாய் “ என்று உரிமையாய் சண்டையிட்டாள் அதிகா.

“உன் அம்மா நினைப்பதில் என்ன தவறு? அவர்கள் மகள் நல்ல பணக்கார இடத்தில் செல்வச்செழிப்புடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்கள், நியாமான ஆசை தானே” என்று குரலில் ஏளனம் கலந்து கூறினான், குகன்.

அவன் அருகில் வந்தவள் மெதுவாய் காது அருகில் நெருங்கி சென்று “எனக்கு பணக்கார பையன் வேண்டாம் இந்த குணக்கார குகன் தான் வேண்டும்” என்று மெதுவாய் கிசுகிசுக்க, இரண்டடி தள்ளி சென்றவன் “ஒரு வேலைக்காரனாய் இந்த வீட்டிற்குள் நுழைய கூட தகுதி இல்லாதவன், என்னை போய் உங்கள் துணையாக நினைக்கின்ரீர்களே உங்கள் அம்மா காதில் மட்டும் இந்த வார்த்தை விழுந்தால் நீங்கள் குடிக்க பாகற்க்காய் ஜூஸ் தான் கொடுத்தீர்கள் அவர்கள் பயாசத்தில் பாய்சன் கலந்து கொடுப்பார்கள், உங்கள் விலத்தனமான விளையாட்டிற்கு என் உயிரை பலிகொடுக்க எனக்கு விருப்பம் இல்லை” என்று குகன் மறுப்பு கூறினான்.

“என் அம்மா விருப்பம் நான் கரணை திருமணம் செய்து கொள்வது தான் எப்படி செய்து கொள்ளவா? இரண்டாவது திருமணம் செய்தால் உன் பாஸ் சிறையில் கலி உண்ண மாட்டானா? உன் பாஸ்ஸிற்கு இவ்வளவு விசுவாசமாய் இருக்கும் நீயே அவன் சிறைச்செல்ல யோசனை சொல்வது நியாயமா?” என்று அதிகா குறும்பாய் கூறி குகன் கன்னம் கிள்ள, “ உங்களுக்கு எப்படி தெரியும்? என்று புரியாமல் வினவினான் குகன். தனது மொபைலில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து காட்டினாள் அதிகா.

அதில் காலையில் அகரன் சுஹீரா திருமணம் முடிந்த கையோடு அனைவரும் சேர்ந்து எடுத்து கொண்ட போஸ்ஸில் தொலைவிலிருந்து அதிகா எடுத்துவைத்து இருந்தாள், பேயறைய்ந்தவன் போல் விழித்தான் குகன். சிறிது நேரம் குகன் நிலையை ரசித்து கொண்டு இருந்தவள், “வழக்கம் போல என் மனம் கவர்ந்தவனை அவனுக்கே தெரியாமல், பின் தொடர்ந்து சென்றேன், திடீரென அவன் பாஸ்… காதலிக்கும் பெண்னை காரில் ஏற்றுக்கொண்டவன் திருமணம் பதிவு செய்யும் அலுவகத்தில் இறங்கி திருட்டு தனமாய் அவனுக்கு பிரியமான பாஸ்க்கும்… பாஸ்ஸிற்கு பிரியமான காதலிக்கும்… திருட்டு திருமணம் செய்து வைத்துவிட்டு சாட்சியாக புகைப்படம் எடுத்ததை, என்னவனை என்னிடம் சிக்கவைக்க நான் ஒரு கிளிக் செய்தேன், நீ தெளிவாய் தெரிக்கின்றாய் பார்!” என்று மீண்டும் புகைப்படத்தை காட்டினாள் அதிகா.

“உங்களுக்கு வேறு வேலை இல்லையா? எப்போதும் என்னை பின் தொடர்ந்து கொண்டே இருப்பது தான் உங்கள் வேலையா ? உங்கள் குடும்பம் செல்வாக்கு வேறு, என் நிலைமை வேறு கொஞ்சம் கூட பொருந்தாது அதை எண்ணாமல் கண்டதையும் கற்பனை செய்து என் வாழ்வை சிதைத்து விடாதீர்கள்” என்று கோபமாய் கூறினான் குகன்.

“நானும் பிறந்ததிலிருந்து வசதியில் வாழ்ந்தவள் இல்லை, என் அப்பாவும் மாத சம்பளத்தில் வேலை பார்த்தவர் தான் அனாதை ஆசிரமத்தில் கூட சில வருடம் வாழ்ந்தது உண்டு, என் அத்தை மாமா இரக்கத்தால் இந்த வசதியை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் உன் குடும்ப சூழலுக்கு என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடியும் குகா”, என்று வாதம் செய்தாள் அதிகா. “ஆனால் என்னால் உங்களை ஏற்க முடியாது மேடம் “ என்றான் குகன்.

“உன் வெகுளிதனமான குணமும் கரண் மீது நீ காட்டும் பாசமும், அக்கறையும் தான் உன்னை எனக்கு பிடிக்கத்துவங்கியது குகா, அவ்வளவு எளிதில் என் காதலை விட்டு கொடுக்க மாட்டேன்” என்று அகரன் அத்தை மகள் என்று தெரிவாய் காட்டினாள் அதிகா.

“நான் என் பாஸ்ஸிற்கு மட்டும் தான் நல்லவன் எல்லோருக்கும் இல்லை அதை மறந்து விடாதே ! இப்போது என்னை பார்த்ததும் உன் அம்மா என்ன சொன்னார் தெரியுமா அவர்களின் மாப்பிள்ளையின் மந்தி வந்துவிட்டேனாம், இந்த மந்தியை என்றும் அவர்கள் மருமாகனாய் ஏற்க மாட்டார்கள் தயவு செய்து உன் மனதை மாற்றி கொள்” என்று அறிவுரை கூறினான்.

கோபத்தில் குகன் தன்னை ஒருமையில் அழைத்தது மனதிற்கு இதம்தர “அவர்கள் சொன்னதில் என்ன தவறு? நீ கரணின் மந்தி தான் அவர்கள் காதலை சேர்த்து வைக்க உதவும் அனுமன் மந்தி என்று சுற்றும்முற்றும் பார்வையை செலுத்திவிட்டு , எக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் என் மனம் கவர்ந்த மந்தி” என்று கூறி ஓடிச்சென்றாள் அதிகா.

இதழ் பட்ட இடத்தை ஒரு கைய்யால் இதமாய் வருடியபடி அவள் சென்ற திசை பார்த்து கொண்டே அவள் கொடுத்து சென்ற பாகற்காய் ஜூஸ் குடித்தான் அதன் கசப்பு கூட உணராமல் அதிகாவின் நெருக்கம் தந்த கிறக்கத்தில் தன்னை மறந்து ஒரு சொட்டும் விடாமல் குடித்துவிட்டு சென்றான் குகன்.

குகன் அதிகா உரையாடல்களை இரு செவிகள் ரகசியமாய் கேட்டு மனம்நிறைந்து இதழ் புன்னகை செய்தது.

சுஹீரா வீட்டில் அழைப்பு மணியடித்து காத்திருந்தவன் சுபத்ரா வந்து கதவை திறக்க அணிந்திருந்த தொப்பியை முகம் மறைக்கும் படி சரி செய்து கொண்டு சில பொருட்களை காட்டி விற்பனை செய்ய முயல, “வேண்டாம்” என்று மறுத்து சென்றார் சுபத்ரா.

மீண்டும் அழைப்பு மணியடிக்க இம்முறை கதவை திறந்தாள் சுஹீரா அவள் கையில் ஒரு பார்சலை கொடுத்தவன் “இதில் இருப்பது படி செய்யவில்லை, என்றால் பின் விளைவு மோசமாய் இருக்கும்” என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு சென்றான் அந்த சேல்ஸ் மேன்.

குழப்பத்துடன் கையில் இருந்த பார்சலை யார் அனுப்பியது என்று அதில் இருந்த வாசகங்களை படித்து பார்த்து கொண்டு இருந்தாள் ,சுஹீரா.

உன் மௌனம்
என்னை கொல்ல
என்னை கொள்ளை கொண்டவளே
உன் மௌனம் கலைத்து
என் உயிராவாயா??

“உன் இதயத்தின் அரக்கன் என்று இருக்க”, இது அகரன் வேலை என்று புரிந்து போனது. தன் அன்னை காணும் முன் தனது அறைக்கு சென்றவள் அதை பிரித்து பார்க்க இன்று காலையில் நடந்த திருமணம் பதிவிற்கான தாள்கள் மற்றும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அதில்லிருக்க மனம் பதற துவங்கியது அதனுடன் இருந்த கடிதத்தை எடுத்து, படித்தாள் சுஹீரா.

என் இதயத்தில் வசிப்பவளுக்கு …

“நீ என்னை விலகி நின்று காயப்படுத்த நினைத்தால் , எனக்குள் இருக்கும் அரக்கன் விழித்து கொள்வான், அவனுக்கு உயிரான உன்னை ஏதும் செய்ய மாட்டான் ஆனால் உனக்கு உயிராணவர்களுக்கு தொந்தரவு கொடுப்பான், மனிதனாய் இருப்பதும் அரக்கனாய் மாறுவதற்கும் நடுவில் இருப்பது உன் காதல் மட்டும் தான் அதை மறந்து விடாதே! உன் காதல் எனக்கு இல்லை என்று கூறி, என் நிம்மதியை நீ குழைத்தால் உன் குடும்பத்திற்கும் நிம்மதி இல்லாமல் போய்விடும், நீ இப்போதைக்கு மறைக்க நினைக்கும் விசயத்தை வெளிப்படையாக கூறி, என்னை பிரிந்திருக்க விரும்பும் உன் விருப்பத்தை நிறைவேற்றாமல் இப்போதே என்னுடனே அழைத்து சென்றுவிடுவேன்” என்று இதமாய் துவங்கி மிரட்டாலுடன் முடித்து இருந்தான், அகரன்.

கடிதம் படித்த கையோடு தனது போனை உயிர்பித்தவள் அகரனை தொடர்பு கொண்டாள். சுஹீராவின் அழைப்பிற்காகவே காத்துதிருந்தவன் “என்ன சுஹீ போட்டோ பதிவு திருமணம் பத்திரம் எல்லாம் பத்திரமாய் வந்து சேர்ந்ததா, நானும் நல்லவனாய் அன்பான கணவனாய் இருக்க நினைக்கிறேன் ஆனால் உனக்கு அரக்கனை தான் பிடிக்கின்றது போல, சரி இன்று மாலை உன்னை சந்திக்க வேண்டும் எந்த இடம் என்று நீயே முடிவு செய்து கொள் உனக்கும் சரிபாதி உரிமை தரவேண்டும் இல்லையா இடம் முடிவு செய்துவிட்டு கூறு” என்று கட்டளையுடன் முடித்தான் அகரன்.

“அண்ணன் கடன் பத்திரம் இல்லை என்ற தைரியத்தில் பதிலடி கொடுக்க நினைத்தவள் இனி அவன் சொல்படி நடக்கவில்லை என்றால் திருமணத்தை பற்றி கூறுவேன்” என்ற அகரன் தாக்குதலில் மூச்சு பேச்சின்றி அமைதியானாள் சுஹீரா.

வார்த்தைகளால்
வாதம் செய்து
என்னை வீழ்த்தும்
வஞ்சகியே
முத்த சண்டையில்
யுத்தம் செய்து
உன்னை வசியம்
செய்வேன் என் சகியே…