அரக்கனோ அழகனோ 16

அரக்கனோ அழகனோ 16
0

அழகன்16

என் தூக்கங்களை
அள்ளிக்கொண்டு
ஏக்கங்களை விதைத்து
சென்றவள் நீயடி…
நீ விதைத்து சென்ற
ஏக்க விதைகளுக்கு
தினம்தினம் கனவெனும்
உரமிடுகிறேன் நானடி…

மீண்டும் அகரன் அவன் திருவிளையாடலை துவங்க செய்வது அறியாது திணறி போனாள் சுஹீரா. இப்போதைக்கு வீட்டில் தனது திருமண செய்தி தெரிந்தால் என்ன நடக்கும் என்றே கணிக்க முடியாமல் இருந்தவள் அகரன் சொல்லுக்கு அடிபணிய கடமைப்பட்டவளானாள்.

அகரனின் மிரட்டும் தோரணை “அவன் பலியாடு இல்லை தான்தான் புலி கூண்டிற்குள் மாட்டிய புள்ளிமான் போல என்று மனதில் புலம்பியவள்” இனி ஒரு முறை அகரனை தனிமையில் சந்திக்ககூடாது, அவன் தன் கண் பார்த்து உளறும் காதல் பித்தற்றல்களை கேட்ககூடாது , மறந்தும் அவனிடம் தோற்க கூடாது என்று தனக்குள் பல தீர்மானங்கள் எடுத்து கொண்டவள், “நல்லவேளை இடத்தை என்னை தேர்வு செய்ய சொன்னான்” என்று தனது வீட்டின் அருகில் இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த சிறுவர் பூங்காவை சந்திக்கும் இடமாக தேர்வு செய்தவள் அகரனுக்கும் சந்திக்கும் இடம் நேரம் குறித்து செய்தியாக அனுப்பி வைத்தாள், “உன் அருகாமைக்காக ஆவலுடன் உன் அரக்கன்” என்று அகரனிடம் இருந்து பதில் வந்தது.

சுஹீரா சொன்ன நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பே கிளம்பி கீழே வந்தவனை வழிமறைந்தாள் அதிகா. தன்னவளை சந்திக்கும் ஆவலில் அவசரமாய் கிளம்பியவன் அதிகா செயலில் சினம் வர, “என்ன” என்பது போல ஒற்றை புருவம் உயர்த்தி தோரணையாய் நின்றான் அகரன். அவனுக்கு சளைக்காமல் பார்த்தபடி “உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் கரண்” என்றாள் அதிகா.

“அவசரமாய் வெளியில் கிளம்பிகொண்டு இருப்பது தெரியவில்லை வந்ததும் உன் புலம்பலை கேட்கிறேன்” என்று ஒரு விரல் கொண்டு தன் வழியில் இருந்து நகற்றியவன் தனது கார் சாவியை சுழட்டிய படி முன்னேறினான் அகரன். “அவளும் ஏதோ அவசரமாய் தான் பேசவேண்டும் என்கின்றாள், அதை என்னவென்று ஒருமுறை கேட்டுவிட்டு போ அகரா” என்று சிறு கட்டளையுடன் ஒலித்தது யமுனாவின் குரல். தனது தாய் இது வரை எதற்கும் தன்னிடம் இப்படி பேசியது இல்லை என்று ஒரு நொடி திரும்பி யமுனாவை பார்த்தவன் அவரின் குரலுக்கு நேர்மாறாய் கண்களில் சிறு வேண்டுதல் இருந்தது, முதன் முறை தனது அம்மா தன்னிடம் ஒன்று கேட்கின்றார் என்று அமைதியாய் வந்து சோபாவில் அமர்ந்தான் அகரன்.

தனக்காக தன் மகனிடம் பேசிய அத்தையை விசித்திரமாய் பார்த்த படி அகரன் எதிரில் வந்து அமர்ந்தவள் “எனக்கு உன் அலுவலகத்தில் ஒருவேலை வேண்டும் என்று வேண்டுதல் வைத்தாள், அதிகா.

“என்ன?” என்று அகரனின் அழுத்தமான குரலில் அதிகா சற்று தடுமாறி மீண்டும் முதலில் சொன்னதையே கூற, அவளும் படித்து முடித்து வீட்டில் தானே இருக்கின்றாள்?” என்று அதிகாவிற்கு ஆதரவாய் பேசினார் யமுனா. “அது என் அலுவலகம் அங்கு நான் தான் முதலாளி ஒரு உரையில் ஒரு கத்தி தான் என் தொழிலுக்கு நான் மட்டும் தான்” என்று அதிகாரமாய் ஒலித்தது அகரன் குரல்.

அகரன் தன்னை தவறாக புரிந்து கொண்டான் என்று புரிய “கரண் எனக்கு உன் அலுவலகத்தில் ஒரு வேலை தான் கேட்டேன் உன் இடத்தை கேட்கவில்லை எனக்கு அதன் மீது ஆசையும் இல்லை” என்று அவசரமாய் கூறியவள், எனக்கு குகன் வேண்டும் “ என்றாள் அதிகா . “என்ன?” என்று அகரன் புரியாமல் பார்க்க “அவள் குகன் செய்யும் வேலை போல் வேண்டும் என்கின்றாள்” என்று மீண்டும் அதிகாவின் துணைக்கு வந்தவர், “இப்படி மிலிட்டரி ஆஃபீஸ்ர் போல விரைப்பாய் இருந்தால் அதான் அவள் சொல்லவந்தது சொல்லாமல் தடுமாறுகின்றாள் என்றவர்”, அதிகா அருகில் அமர்ந்து ஆதரவாய் அவள் கரம் பற்றி கொண்டார் யமுனா.

புதிதாய் சேர்ந்த கூட்டணியை புதிராய் பார்த்துக்கொண்டு இருந்தான் அகரன், யமுனா ஆதரவாய் பேசவும் தான் கூற வந்ததை தடுமாறாமல் கூற துவங்கினாள் அதிகா. “குகன் செய்வது போல நானும் உனக்கு பி. ஏ வாக இருக்கிறேன்” என்றவளை, “என் குகன் இடத்தை வேறு யாருக்கும் என்னால் கொடுக்க முடியாது” அத்தோடு பேசவேண்டியது முடிந்தது என்று எழுந்தான் அகரன்.

“நான் குகனுக்கு அசிஸ்டெண்ட் ஆக இருக்கிறேன்” என்றாள் விடாமல், “அது எப்படி இந்த நேரம் உனக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடந்து இருந்தால் அந்த கோட்டையின் ராணி போல் ஒய்யாரமாய் அமரவேண்டியவள் ஒரு எடுபிடிக்கு எடுப்பாக சேர்கிறேன் என்கின்றாய்” என்று அங்கு வந்து சேர்ந்தார் கலையரசி.

“என் அம்மா ஒருத்தி போதும் என் வாழ்வை கெடுப்பதற்கு கரணே சம்மதித்தாலும் இந்த அம்மா விட மாட்டாள்” என்று நொந்து கொண்டாள் அதிகா. “நான் யாரை திருமணம் செய்து கொள்ள போகின்றேனோ, அவர் தான் உங்களுக்கு மாப்பிளை அதை மறந்து விடாதீர்கள், அம்மா என்று எச்சரிக்கும் குரலில் கூறியவள் என் அப்பா கூட இங்கு நம் வீட்டிற்கு வேலைக்கு வந்தவர் தான் அதை நான் உங்களுக்கு நினைவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை , கௌரவமாக செய்யும் எந்த வேலையும் தரம் குறைந்தது இல்லை இத்தனை நாள் மாமாவின் இரக்கத்தில் வாழ்ந்துகொண்டு இருந்தேன் இனி சொந்தமாய் முடிவெடுத்து எனக்கான வாழ்வை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் அதற்கு இடையில் நிற்காதீர்கள் “ என்று தன் அன்னையை கண்டித்தாள் அதிகா.

இங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்பது போல் தனது கடிகாரத்தை நொடிக்கு ஒருமுறை பார்த்து கொண்டு இருந்தான் அகரன். “உன்னை பெற்றவளுக்கு தெரியும் உனக்கான வாழ்கை அமைத்து கொடுக்க” என்று கலையரசி கோபமாய் கூற, “சில நேரங்களில் பெரியவர் எடுக்கும் முடிவை விட சிறியவர்கள் அவர்கள் ஆசைப்படி அமைத்து கொள்ளும் வாழ்கை இன்னும் சிறப்பானதாக இருக்கும் அண்ணி பல நேரங்களில் நாம் எடுக்கும் முடிவில் நமது கௌரவம் மட்டும் தான் இருக்கும், ஆனால் நம் பிள்ளைகள் எடுக்கும் முடிவில் அவர்களின் சந்தோஷமும் சேர்ந்து இருக்கும், அதிகா அவள் விருப்பப்படி அகரன் அலுவலகத்தில் வேலைக்கு செல்லட்டும் யாரும் தடுக்காதீர்கள்” என்று யமுனா முதன் முறை கலையரசியை எதிர்த்து பேச வாயடைத்து போய் நின்றிருந்தார் கலையரசி.

அகரனும் அன்னையின் முதல் எதிர்ப்பு குரலுக்கு அடிப்பணித்தவன் போல இது தனக்காகவும் சொல்லப்பட்டது என்று புரிய மறுத்து ஏதும் கூறாமல் “நாளையில் இருந்து நீ அலுவலகம் வந்துவிடு உனக்கு ட்ரெயின் கொடுக்க சொல்லி குகனிடம் சொல்கிறேன்” என்று இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்பது போல், காலில் இறக்கை கட்டி காலையில் தாலிகட்டி தன்னவளாய் ஏற்ற காதல் மனைவியை காண பறந்து சென்றான் அகரன்.
“கடைசியில் என் மகளை உங்கள் வீட்டு வேலைக்காரி ஆக்கிவிட்டீர்களே இது தானே உங்கள் ஆசை” என்று அகரன் சென்றதும் தனிமையில் விடப்பட்ட யமுனாவை எரிக்கும் பார்வை பார்த்து வினவினார் கலையரசி.

“இங்கு எல்லாம் என் விருப்பப்படி ஆசை படிதான் நடக்கின்றது இதில் அத்தைக்கு எந்த சம்பந்தமுமில்லை தேவையில்லாமல் அவர்களை முறைக்காதீர்கள் உங்களுக்கு ஏதும் கேட்க வேண்டும் என்றால் என்னை கேளுங்கள்” என்று இருவருக்கும் இடையில் வந்து நின்றாள் அதிகா.

இதுவரை தனது பேச்சை கேட்டு தனது மிரட்டலுக்கு அடிபணிந்து அவளுக்கு விருப்பம் இல்லாத பலதும் செய்து கொண்டு இருந்த மகள் என்று தன் சுயரூபம் வெளிப்பட்டதோ அன்றிலிருந்து தான் சொல்வதற்கு எதிர்மறையாக நடப்பதும் இல்லாமல் தன்னை ஒரு எதிரி இன்னும் தெளிவாக சொல்வது என்றால் ஒரு அற்ப பிறவியை பார்ப்பது போல் விலகி செல்வத்தை கண்டு மனம் வேதனை பட்டுக்கொண்டு இருப்பவர், தனக்கு எதிரி என்று யாரை கருத்துகின்றாரோ அந்த யமுனாவிற்கு ஆதரவாக பேசவும் பொறுத்து கொள்ள முடியாமல் தன்னை எதிர்த்து நின்ற மகளை நோக்கி கையோங்கினார் கலையரசி.

ஓங்கிய கை அதிகா கன்னத்தில் பதியும் முன் தடுத்து நிறுத்தினார் யமுனா, “தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை கைநீட்டிவது அநாகரிகம் அண்ணி அதை உங்கள் அண்ணனும் விரும்பமாட்டார்” என்று கூற தன் பலம் குறைந்தது போல உணர்ந்த கலையரசி அண்ணன் என்ற வார்த்தையில் அடக்கினார். இருந்தும் அவ்வளவு எளிதில் விலகி செல்ல மனமின்றி “இப்போது இந்த அம்மாவின் வார்த்தையின் அருமை புரியாது உனக்கு இவர்களின் உண்மையான குணம் தெரியும் போது தானாய் என் பக்கம் வருவாய்” என்று சபதம் போல கூறி அங்கிருந்து நகர்ந்தார் கலையரசி.

“என் அம்மாவிற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் அத்தை” என்று அதிகா வருத்த குரலில் கூற, மாறாத புன்னகையுடன் “இதற்கே மொத்தமாய் மன்னிப்பு கேட்டு விடாதே உனக்கும் குகனுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு நானும் ஒருகாரணம் என்று தெரிய வரும்போது இன்னும் அதிகமாக மன்னிப்பு கேட்க வேண்டி வரும்” என்று யமுனா கூற, அதிர்ந்து போய் நின்றாள் அதிகா “உன் பாகற்க்காய் ஜூஸ் கதை எனக்கு தெரியும் என்று ரகசியப்புன்னகை சிந்தியவர், குகன் ரொம்ப நல்ல பையன் எனக்கு குகனும் அகரன் போல தான் ஆனால் செல்வநிலை உன் அம்மா எதிர்பார்ப்பது போல இல்லை என்றாலும் . உண்மையான அன்பிற்கு என்றும் குறையிருக்காது பணம் மட்டும் ஒருவரின் சந்தோசத்தை தீர்மானிக்காது அந்த உண்மை உன் அம்மா புரிந்து கொள் வாய்ப்பே கிடைக்க வில்லை, ஆனால் இந்த சிறு வயதில் நீ அறிந்து வைத்துள்ளாய், நீ இப்போது ஏன் அகரன் அலுவலகத்தில் வேலைக்கு செல்ல நினைக்கின்றாய் என்று என்னால் ஓரளவு யூகிக்க முடிகின்றது வசதி இல்லாமலும் உன்னால் வாழ முடியும் என்று குகனுக்கு நிரூபிக்க நினைக்கின்றாய் அப்படி தானே” என்று யமுனா சரியாய் கணித்து சொல்ல, ஆமாம் என்று மட்டும் தலையாட்டினால் அதிகா “உனக்கு திருமணம் முடிந்ததும் நீ எந்த குறையும் தெரியாமல் இங்கு இருந்தது போல வளமாய் வாழ போதுமான செல்வம் உன் மாமா கொடுப்பார்” என்று கூறினர் யமுனா. “ஆனால் அதை என் குகனோ நானோ ஏற்க மாட்டோம் அத்தை” என்று தீர்க்கமாய் பதில் தந்தாள் அதிகா . “குகன் மிகவும் கொடுத்து வைத்தவன்” என்று கன்னம் தட்டி சென்றார் யமுனா.

மறைக்க படும் காதல் விபரம் வீட்டின் பெரியவர்களுக்கு தெரியவந்து அதற்கு பச்சை கொடியும் அசைக்க பட்டால் சந்தோஷத்தின் அளவை கேட்கவா வேண்டும் சந்தோஷத்தில் இறக்கை இல்லாமல் இருப்படிகளுக்கு ஒன்றாய் தாவி தனது அறைக்கு சென்றவள் மொபைலில் இருந்த புகைப்படத்தை குகனை மட்டும் பெரிதுபடுத்தி தன்னவனை கண்களால் ரசிக்க துவங்கியவளுக்கு குகனை முதலில் சந்தித்தது, அவன் மீது காதலை உணர்த்த தருணம் நினைவலையில் உலா வரத்துவங்கியது.

அகரனிடம் வேலைக்கு சேர்ந்த புதிதில் அடிக்கடி அகரனுடன் வீட்டிற்கு வருபவன் கலையரசி ஏளன பார்வையில் குத்தல் பேச்சிலும் வீட்டிற்குள் வராமல் அதிக நேரம் காரின் அருகிலேயே நின்று கொள்வான் அன்றும் அப்படி குகன் நிற்கும் போது முதன் முறை தனது ஸ்கூட்டியில் கல்லூரி சென்று திரும்பி வந்தவள் , குகன் மீது மோதி தடுமாறி கீழே விழுந்தாள் “காலக் கொடுமைடா கந்தா விரல் சூப்பும் வயதில் எல்லாம் வண்டி ஓட்டி எதிரில் இருப்பவர்களை சாவடிக்கின்றார்கள்” என்று கேலி செய்தவன் தனக்கு காயம்பட்டது அறிந்ததும், தன் மீது மோதியதையும் பொருட்படுத்தாமல் வேகமாய் முன் வந்து கைநீட்டி பார்த்துவரக் கூடாதா ? பாருங்கள் கையில் அடிபட்டுவிட்டது, என்று அவள் கைப்பற்றி அவள் காயத்தை தொட்டுபார்த்தவன் அவள் வலியில் துடிக்கையில் ரொம்ப வலிக்கின்றதா? என்று தனது கைக்குட்டை எடுத்து கட்டுகட்டிவிட்டு கை தாங்களாய் உள்ளே அழைத்து சென்றான் குகன்.

அதிகாவின் காயத்தை விட தங்களிடம் சம்பளம் வாங்குபவன் கை மகள் மீது பட்டுவிட்டதே என்று தான் கலையரசி அதிகம் கொதித்து போனார். வேகமாய் அவர்கள் அருகில் வந்தவர் அதிகாவை பற்றி இருந்த குகன் கையை வேகமாய் தட்டிவிட்டார் , எதிர்பாராத தாக்குத்தலில் நிலைதடுமாறி கீழே விழப்போன அதிகாவை தோள் பற்றி நிறுத்தியவன், கலையரசி தான் அதிகாவின் அம்மா என்று அறியாமல் “என்ன செய்கின்றீர்கள் அவளுக்கு அடிபட்டு உள்ளது” என்று கோபமாய் உறுமினான் குகன்.

“என் மகளுக்கு அடிபட்டது என்றால் அதை கவனிக்க எனக்கு தெரியும் வேலைக்காரன் நீ ஒன்றும் கரிசனம் காட்டத்தேவையில்லை உன் இடம் என்ன என்று புரிந்து நடந்து கொள் “ என்று கூறி அதிகாவை தன்னுடன் அழைத்து சென்றார் கலையரசி.

ஏனோ கலையரசி குகனை பேசியவிதம் அதிகாவிற்கு பிடிக்கவில்லை தனக்கு உதவியவனை தரக்குறைவாய் நடத்துவது காண பொறுக்கவில்லை ஆனால் தனது அம்மாவை எதிர்த்து பேசும் தைரியம் இல்லாமல் அமைதியாய் அவர் பின் சென்றவள் திரும்பி கண்களால் மன்னிப்பு வேண்டினாள் அதிகா. ஆனால் குகனோ தன்னை எப்போதும் ஏளனமாய் நடத்தும் கலையரசி மகள் தான் அதிகா என்று தெரியவும் அவள் பார்வையின் பொருள் புரிந்தும் அதை பொருட்படுத்தாமல் வெளியேறி சென்றான்.

குகன் அறியாமல் செய்த தவறுக்கு வழக்கம் போல அகரன் குகனிடம் கோபம் காட்டி செல்ல, அதை பார்த்திருந்த அதிகாவிற்கு பொறுக்க முடியவில்லை தன் அன்னை திட்டியதில் இருந்து அவளை கண்டாலும் கண்டும்காணாமலும் விலகி சென்றவனை வழிய சென்று வழி மறைத்து பேச்சுக் கொடுத்தாள் அதிகா.

அப்போது எல்லாம் தன் அன்னையின் வார்த்தையை உண்மை என நம்பி அகரன் அவன் குடும்பம் எல்லாம் தங்களுக்கு துரோகம் செய்தவர்கள் என்ற எண்ணத்தில் இருந்தவள் அப்படி பட்டகெட்ட குணம் கொண்டவர்கள் மத்தியில் தனக்கு பட்ட அடியையும் பொருட்படுத்தாமல் உதவிக்கு வந்த குகன் போன்ற நல்லவர்கள் இருப்பது எப்படி என்று அறியும் ஆவலில் “இந்த கரண் போன்ற கொடுமைகாரனிடம் எப்படி வேலை பார்கின்றாய்” என்று வினவ “என் பாஸ் பற்றி தவறாக பேசதே” என்று கோபமாய் கூறியவன் கண்களில் தெரிந்த கனல் ஒரு நொடி அதிகாவை மிரள வைத்தது “அப்படி என்ன செய்தார் உன் பாஸ் இந்த அளவிற்கு நீ விசுவாசமாய் இருப்பதற்கு நாயை விட கேவலமாய் நடத்துகிறான் என்று மீண்டும் அதிகா துவங்க”, “இதை உனக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை ஆனால் என் பாஸ் பற்றி தெரியாமல் பிதற்றும் உங்களை போன்றவர்களுக்கு அவர் குணம் தெரிந்தால் தான் அமைதியாவீர்கள் என்று உங்களிடம் சொல்கிறேன், ஒருவன் கோபப்படுவதால் கெட்டவன் ஆக மாட்டான் அமைதியாய் நடிப்பதால் நல்லவன் ஆக மாட்டான், அவர் என் மீது காட்டும் கோபத்தை என் மீது கொண்ட அன்பின் வெளிப்படாய் நினைக்கிறேன் உரிமையாய் அதட்டும் போது என் மீது உள்ள அக்கறையாய் பார்க்கிறேன், இனி பாஸ் பற்றி தப்பாய் பேசதே அவர் நல்லவர்” என்று பேச்சை தவிர்த்து வேறுபுறம் திரும்பியவனை, “மாயம் மந்திரம் என்பது இது தான் போல ஒன்றுமே செய்யாமலேயே ஒருவரை தன் வசத்தில் வைத்திருப்பது” என்று அதிகா கேலி செய்தாள்.

“எதையும் கொடுக்காமல் திரும்ப எதுவும் கிடைக்காது ஒருவருக்கு நாம் அன்பு கொடுக்கும் போது அது இருமடங்கு திரும்ப கிடைக்கும்” என்றவன் வானத்தை வெறித்த படி தனது வாழ்வில் நடந்ததை சுருக்கமாய் கூற துவங்கினான் குகன்.

“என் அண்ணன் நளன் ஒரு பெண் தன்னை மறுத்ததால் அதை தாங்கி கொள்ள முடியாமல் தனது வாழ்க்கையையே முடித்து கொண்ட ஒரு கோழை அவனுடன் நட்பாய் பழகிய ஒரே காரணத்துக்காக எங்கள் குடும்பத்தை அவர் உறவாய் நினைத்து எங்களுக்கு வேண்டியதை செய்துகொடுத்தவர் தான் இந்த கொடுமைக்கார அகரன், இன்று இந்த குகன் படித்து கௌரவமான வேலை பார்த்து சம்பாதிக்கிறேன் என்றால் இந்த வாழ்கை கொடுத்தது என் பாஸ் இன்று என் குடும்பம் பசியரியமல் வாழ்வதற்கு காரணம் என் பாஸ் என்றவன் கண்களில் விசுவசாத்தின் கண்ணீர் சுரந்தது என் காலம் முழுவதும் அவர்க்கு நன்றி கடனாய் ஏன் நீ, உன் அம்மா ஏளனமாய் கூறுவது போல நன்றியுள்ள நாயாய் இருப்பேன் அதில் எனக்கு சந்தோசம் தான் அதில் மட்டும் தான் சந்தோசம் நான் இழந்த என் அண்ணனை பாஸ் உருவத்தில் பார்க்கிறேன் அவர் காட்டும் கோபத்தை அளவில்லா அன்பை மட்டும் எதிர்பார்த்து தான் அவருடன் இருக்கின்றேன், உங்கள் அம்மா உங்களை தேட போகின்றார்கள் நீங்கள் என்னுடன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தால் திட்டு தான் கிடைக்கும்” என்று அக்கறையாய் குகன் கூற

“என் மீது உனக்கு இவ்வளவு அக்கறையா !” என்று அதிகா கூறியதும் “திட்டு கிடைப்பது உங்களுக்கு அல்ல எனக்கு என்று தனது தலையில் அடித்து கொண்டான்” குகன். அகரன் பற்றி தெரிந்து கொள்ள குகன் கூறிய விசயத்தில் அதிகா குகனை பற்றியே அதிகம் தெரிந்து கொண்டாள், இந்த காலத்தில் பெற்ற உதவி மறந்து வாழும் மக்கள் இடையில் குகன் சிறந்தவனாய் தெரிந்தான், அன்றில் இருந்து குகனை அவன் அறியாமல் கண்காணிக்க துவங்கினாள் அதிகா அவனே விலகி சென்றாலும் வழிய சென்று பேசுவாள்.

“கலையரசி தனது சொந்த அனுபவத்தை தனது வாயாலேயே புகழ்ந்து பேசும் போது சொந்த உறவே செய்த உதவி மறந்து மிருகத்தனமாய் நடக்கும் போது குகன் செயல் இன்னும் அதிகம் அவனை அறியும் படி செய்தது அகரனுடன் திருமண ஏற்பாட்டை அதிகா மறுக்க குகனும் ஒரு காரணம் அதன் பின் குகனை அவன் அறியாமலேயே பின் தொடர்ந்து அவனை பற்றி முழு விபரம் சேகரிக்க துவங்கினாள் அதிகா. அவன் நடவடிக்கையில் மேலும் அவன் புறம் ஈர்ப்பு அதிகமாக குகனின் கள்ளம் இல்லாத பேச்சு, எளிதில் சிரிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வும், குழந்தை தனமான குணம் ஓவ்ஒன்றிலும் குகன் மீதான ஈர்ப்பை காதலாய் உருமாற்றியது.

குகனை முதன் முதலில் சந்தித்த நாளிலிருந்து அவனிடம் காதல் வயப்பட்ட நாள் வரை நினைவு கூர்ந்தவள் குகனின் அருகில் இருந்து கொண்டே அவனுக்கு தான் ஏற்றவள் என்று நிரூபித்து அவன் கரம் பற்றும் கனவுடன் கண்மூடி கனவில் கரைந்தாள் அதிகா.

சுஹீரா சொன்ன இடம் வந்து சேர்ந்தவன் இன்னும் சுஹீரா வராமல் இருக்க அவள் எண்ணிற்கு தொடர்பு கொண்டான் அழைப்பு துண்டிக்க பட “என்ன ஒருவேளை பக்கத்தில் வந்திருப்பாளா?” என்று பார்வையை சுழற்றி நோட்டம் விட்டவன் கொஞ்சம் தொலைவில் சுஹீரா மூச்சு வாங்க நடந்து வருவதை கண்டு துடித்துப்போய் அவள் அருகில் ஓடினான் அகரன்.

“என்ன சுஹீ எதற்கு இப்படி மூச்சு வாங்குகின்றது? என்னை காண அவ்வளவு அவசரமா என்ன என்று கேலி செய்ய, “உன்னை பார்ப்பதில் என்ன ஆர்வம் எல்லாம் இந்த சோட்டுவால் வந்தது இவனை தூக்கி கொண்டு நடப்பாதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது இப்போது தான் கெஞ்சி கூத்தாடி இரண்டு பாப்கார்ன் பாக்கெட் வாங்கிக்கொடுத்து இறக்கி நடக்க விட்டேன் “என்று மூச்சுவாங்கிக்கொண்டே கூறினாள், சுஹீரா.

“கட்டிய கணவனை சந்திக்க வர உனக்கு ஒரு பயில்வான் பாடிகார்ட வேண்டுமா?” என்று அகரன் கேலி செய்ய தன் எண்ணத்தை சரியாய் கணித்த அவன் புத்திசாலி தனத்தை மனதினுள் திட்டி கொண்டே, “சேச்ச உன்னை பார்க்க எனக்கு என்ன பயம் இந்த சோட்டு எப்போதும் டிவி முன் உட்கார்ந்து கார்ட்டூன் பார்த்தே தனது மூளையை சிறுக்க வைத்து, உடலை பெருக்க வைத்து விட்டான், பார்க்கில் ஓடியாடி விளையாடினால் அவனுக்கும் நல்லது என்ற அக்கரையில் அழைத்து வந்தேன்” என்று சுஹீரா காரணம் கூறினாள். “நீ சொன்னதை அப்படியே நம்பிவிட்டேன்” என்ற அகரன் சிரிப்பே அவன் நம்பியவிதத்தை வெளிப்படையாக காட்ட வேறு ஏதும் பேசாமல் சிறுவன் கைபிடித்து அழைத்து சென்றாள் சுஹீரா. உடன் நடக்க அடம் செய்து “எனக்கு கால் வலிக்கின்றது என்னை தூக்கிட்டு போ ஹீ” என்று கட்டளையிடன் சோட்டு. “உனக்காவது கால் மட்டும் தான் வலிகின்றது உன்னை தூக்கி நடந்தால் எனக்கு எல்லா இடமும் வலிகின்றது என் இடுப்பை உடைத்து விடுவாய் போல” என்று சுஹீ மறுக்க. “இப்போது நீ என்னை தூக்கி செல்லவில்லை என்றால் உன் அம்மாவிடம் நீ பார்க்கில் இந்த பையனை பார்க்க வந்தாய் என்பதை போட்டு கொடுத்து விடுவேன்” என்று மிரட்டினான், சோட்டு.

“வரவர நண்டு சுண்டு குண்டு எல்லாம் என்னை மிரட்டுகின்றது அந்த அளவிற்கு எல்லோரும் என்னை கண்டு வைத்து உள்ளார்கள்” என்று அகரனை பார்த்து பொருமலுடன் கூறியவள், “உன்னை போய் எனக்கு துணை என்று அழைத்து வந்தேன் பார், அதற்கு இந்த தண்டனை தேவைதான்” என்று மீண்டும் சோட்டுவை தூக்க செல்லும்முன் அகரன் அவனை தூக்கி போட்டு மீண்டும் கையில் பிடித்தவன் “உன்னைவிட நான் எவ்வளவு பெரியவன் என்னை பார்த்து பையன் என்கின்றாய் இனி இப்படி சொல்லுவாயா?” என்று மீண்டும் தூக்கி போடுவது போல செய்கை செய்ய , “இதற்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் பையா நான் ஜெய்ண்ட்வீலில் கூட சிரித்து கொண்டே ஏறுபவன்” என்று பஞ்ச் கூறினான், சோட்டு.

“சரி உன் சுஹீ அக்கா இந்த பையனை சந்திக்க வருவதை நீ யாரிடமும் சொல்லாமல் இருக்க உனக்கு என்ன லஞ்சம் வேண்டும்? என்று அகரன் சமாதான தூது அனுப்பிட “ , “எனக்கு சோட்டா பீம் லட்டு வாங்கி தந்தால் சொல்லமாட்டேன்” என்று சமாதானத்தை ஏற்றான் சோட்டு.

“அது என்ன சோட்டா பீம் லட்டு எனக்கு திருப்பதி லட்டு, ரவா லட்டு, ராகி லட்டு தெரியும் நீ சொல்லும் சோட்டா பீம் லட்டு தெரியாதே எனவும்”. தலையில் கைவைத்து கொண்ட சிறுவன் “பையன் என்றால் கோபம் மட்டும் வருகின்றது, உனக்கு சோட்டா பீம் லட்டு தெரியவில்லை ஹீ உனக்கு தெரியும் தானே” என்று சுஹீராவை துணைக்கு அழைக்க, “அது போகோவில் வரும் கார்டூன் கதாபாத்திரம் சோட்டு விரும்பி பார்ப்பது அது தான்” என்று சுஹீரா விளக்கம் தந்தாள்.

“என்ன நான் மட்டுமா நீயும் அதைத்தானே என்னோடு சேர்ந்து பார்ப்பாய்” என்று உண்மையை போட்டு உடைத்தான் சோட்டு. அசடு வலிந்து “வேறு என்ன செய்ய உன்னுடன் சேர்ந்து பழக்கம் ஆகிவிட்டது” என்றாள் சுஹீரா.

சுஹீராவின் அசட்டு சிரிப்பையும் அசராமல் ரசித்து கொண்டிருந்த அகரன் கன்னம் தொட்டு தன் புறம் திருப்பியவன் “அங்கு என்ன கார்ட்டூன் ஒடுகின்றதா? சோட்டா பீம் லட்டு சாப்பிட்டதும் பெரிய பெரிய அர்க்கனுடனும் சண்டை போடுவான்” என்று சோட்டு மேலும் விளக்கம் தர, அகரன் கண்களில் கூர்மை கூடியது, “ நானும் கொஞ்சம் கெட்டவன் தான் என்னை அடிக்க சொல்லி தான் உன் சுஹீ அழைத்து வந்தாளா? என்னை அடிக்க என்னிடமே லஞ்சம் கேட்கும் முதல் ஆள் நீதான்” என்றவன் பேசிக்கொண்டே பார்க் வாசல் வரை வந்தவன் சோட்டு வை கீழ் இறக்கிவிட உள்ளே ஓடி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்றவனை கை பற்றி தடுத்து நிறுத்தினாள், சுஹீரா.

“நீ என்னுடனே இரு சோட்டு என்னை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று கட்டளையிட்டாள் சுஹீரா. மற்ற குழந்தைகள் விளையாடுவதை ஏக்கமாய் பார்த்து கொண்டு இருந்த சோட்டு “என்ன ஹீ நீ தானே ஓடியாடி விளையாடினால் தான் உடலுக்கு நல்லது என்று டிவி பார்த்து கொண்டு இருந்தவனை வம்படியாய் இழுத்து வந்துவிட்டு இப்போது எங்கும் போகாமல் உன்னுடன் இருக்க சொல்கின்றாய்” என்று சலித்து கொள்ள, “நீ சின்ன பையன் கீழே விழுந்துவிட்டால் உன் அம்மாவிடம் யார் பதில் சொல்லுவது?” என்று அவன் கை பற்றி விடாமல் வாதம் செய்தாள் சுஹீரா.

“நான் ஒன்றும் சின்ன பையன் இல்லை ஹீ எனக்கு பீம், தெரியும் சுக்கி, காளியா தெரியும் ஆனால் இந்த பையனுக்கு தான் யாரும் தெரியாது இவன் தான் சின்ன பையன் நான் பஸ்ட் ஸ்டாண்டெர்ட் முடித்து செகண்ட் போறேன், ஐ யம் பிக் பாய்” என்று கூறி சுஹீராவை ஏய்து கொண்டு இருந்தான் சோட்டு.

சுஹீரா பிடியில் இருந்து விடுதலை வாங்கி தந்தவன் “சரி நீ பெரிய பையன் தான் அது என்ன சுஹீயை ஹீ என்கின்றாய்?” என சந்தேகம் கேட்டான் அகரன்.

“உங்களுக்கு தெரியாதா சுஹீரா கன்னம் ஹீ மைசூர் பாகு போல் சாப்ட்டா இருக்கும்” என்று ரகசியம் சொன்னவன். “இப்போதாவது நான் விளையாட போகலாமா?” என்று கெஞ்சலாய் கேட்க. “தாராளமாய் என்று கைகளை விட்டுவிட்டு அதோ அந்த இடத்தில் நானும் ஹீயும் இருப்பபோம்” என்று கூறி சோட்டு செல்ல அனுமதி தந்தான் அகரன்.

“ஏன் அவனை அனுப்பினாய் பகடு” என்று சுஹீரா சிறு கோபம் காட்ட “என்னிடம் தனியாய் இருக்க பயமா என்ன? துணைக்கு ஆள் பிடித்து வருகின்றாய்” என்று அகரன் கேலி செய்து உன் கன்னம் அவ்வளவு இனிமையாய் இருக்காமா?” சுஹீ உன் இதழ்களை விடவா,” என்று மெதுவாய் கன்னம் வருடியவன் அவள் பார்வை சென்ற திசையை பார்த்து அவன் “இஷ்டப்படி விளையாடி வரட்டும் அதுவரை நாம் காதல் விளையாட்டை கவனிப்போம்” என்று சோட்டு சென்ற திசையை கவலையுடன் பார்த்தபடி நின்றிருந்தவள் இடையில் கை கோர்த்த படி, சிறுவனிடம் காட்டிய இடம் நோக்கி அழைத்து சென்றான் அகரன்.

அகரன் விரல்கள் தாபத்துடன் தன் இடையில் காதல் இசை மீட்டுவதையும் உணராமல் தூரத்தில் விளையாடிய சிறுவன் மீதே கண்ணாய் இருந்தவள் தனது தீண்டலை உணர்வில்லை என்று புரிய சுவாரசியம் குறைந்தவனாய், “ பிள்ளைகளை அப்படி அவர்கள் இஷ்டத்திற்கு கொஞ்சம் விளையாட விடவேண்டும் சுஹீ” என்று அகரன் குரலில் அவனை திரும்பி பார்த்தவள் , “அது இல்லை சோட்டு அவர்களின் அப்பா அம்மாவிற்கு வெகு நாட்கள் கடந்து பிறந்த ஒரே மகன் அவர்களின் உயிர் அவன் தான் அதனால் தான், அவர்கள் வேறு எங்கும் வெளியில் விடாமல் இருப்பவர்கள், நம்பிக்கையான என்னுடன் அனுப்பி வைத்தார்கள், அவனுக்கு சிறு காயம் என்றாலும் அவர்களுக்கு பதில் கூற முடியாது” என்று உண்மையான வருத்தத்துடன் கூறினாள் சுஹீரா.

“சுஹீ கிழே விழுந்தால் தான் எழ தெரியும் அடிபட்டால் தான் அடுத்த முறை அடிபடாமல் தன்னை காத்துக்கொள்ள தெரியும் பொத்தி பொத்தி வளர்க்க பிள்ளைகள் ஒன்றும் கோழிக்குஞ்சு இல்லை பருந்து வந்து தூக்கி செல்லுமோ என்று பயத்துடன் வாழ்வதற்கு அவர்களை அவர்கள் போக்கில் அனுப்பிவிட்டு தவறு செய்யும் போது மட்டும் பக்குவமாய் திருத்த வேண்டும் “ என்று அகரன் நீண்ட அறிவுரை சொல்ல ரொம்ப அனுபவம் தான் போல எத்தனை குழந்தைகள் என்று கேலி செய்தாள் சுஹீரா.

சுஹீரா கவனம் தன் புறம் திசை திரும்பிவிட்டதை உணர்ந்தவன், “ஒரு பத்து போதுமா? “ என்று அகரன் மறு கேள்வி கேட்க, “என்ன உனக்கு பத்து பிள்ளைகள் உள்ளதா!” என்று சுஹீரா அதிர்ந்து போனாள். கண் விரித்து அதிர்ச்சி காட்டி பேசியவள் அழகில் அவள் புறம் ஈர்க்க பட்டவன் சுஹீராவை நெருங்கி அமர்ந்து கொண்டு மெதுவாய் ரகசிய குரலில் “இதுவரை இல்லை இனி என் மனைவி அவள் மடியில் இடம் கொடுத்தால் பத்தென்ன அதற்கு மேலும் ஆசையாய் தருவேன்” என்று மீண்டும் அவள் இடையில் கை கோர்த்து தனது காதல் லீலையை துவங்கினான் அகரன்.

கன்னங்கள் நாணசிவப்பு ஏற அகரன் கையை விலக்க முயன்று முடியாமல் போக “இது சிறுகுழந்தைகள் விளையாடும் இடம் ஒழுங்காய் கையை எடு” என்று மிரட்ட , ” நான் உன்னுடன் விளையாடினால் தானே நம் பிள்ளைகள் நாளை இது போல் விளையாட முடியும்” என்று கை விரல்களில் அழுத்தம் கொடுத்தவன்.

உன் இடைவளைவு
என்ன மாயம் செய்ததோ
என் கைகள்
அதனோடு கட்டுண்டு
கிடைக்கவே துடிக்கின்றன…

என்றவன் “சுஹீ நடப்பது எல்லாம் கனவு போல் உள்ளது இன்று காலையில் தான் திருமணம் நடந்தது ஆனால் மாலையில் காதலர்களாய் திருட்டுதனமாய் சந்தித்து கொண்டு இருக்கின்றோம்”.

“உரிமையாய் உன்னை அணைத்துக்கொள்ள வேண்டியவன் யாரும் அறியாமல் கள்ள பார்வையில் கைதீண்டலில் திருப்தி அடைய வேண்டிய நிலையில் உள்ளேன்” என்று ஏக்க குரலில் கூற, “உண்மை காதல் ஒழிவு மறைவு இல்லாதது உள்ளத்தை தவிர வேறு எதையும் நாடாது உன் செயல்களில் காதல் என்பதை என்னால் உணர முடியவில்லை”, என்று கடுமையாய் பேசினாள் சுஹீரா.

அகரன் முகம் கோபத்தைக்காட்டி “பாவம் என்று உன் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்தால் என் காதலையே பொய் என்கின்றாயா?” என்று கோபத்தில் பற்றி இருந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தவன் வலியில் முகம் சுருங்க இருந்தவளை பார்த்து கோபம் மறைத்து அவளுக்கு வலி கொடுத்த தன் மீதே கோபம் வர, “நான் அரக்கன் தான், முரடன் தான் , உனக்கு வலித்தால் எனக்கும் வலிக்கும் என்பதை மறந்து அடிக்கடி உன்னை காயப்படுத்தி விடுகிறேன்” என்று வருத்த குரலில் கூறி விலகி அமர்ந்தான்.

அகரன் குரலில் இருந்த ஏதோ ஒன்று சுஹீராவின் கோபத்தை குறைக்க “பொதுவாய் காதல் என்ற பெயரில் பொது இடத்தில் அத்துமீறுபவர்களை காணும் போது எனக்கு கோபம் வரும், இன்று நானே அந்த தவறை செய்து கொண்டு இருக்கிறேன் என்ற கோபத்தில் பேசிவிட்டேன் என்று தனது செயலின் விளக்கம் தர”, அகரன் முகம் மலர்ந்தது முதன் முறை தன்னை காயப்படுத்தியதற்கு தன்னவள் வருந்துகின்றாள் என்ற உணர்வே அவனை சுய நிலை மறக்க வைத்தது.

“உன்னை காண வரும்போது… உன் அனுமதியில்லாமல் தொடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் வருகிறேன், ஆனால் உன்னை கண்டதும் தானாய் என் விரல்கள் உன் உடல் மேய பாய்ந்து விடுகின்றன, இதழ்கள் பசியாற உன் இதழ் உண்ண என்னை உந்துகின்றன, கண்கள் ஆர்வமாய் நீ ஒழித்து மறைத்து வைத்திருக்கும் எனக்கான மர்ம இடங்களை கள்ள பார்வையில் கண்டு கள்ளுண்டது போல் மயக்கம் தந்து என்னை கிறாங்கடிக்கின்றன” என்றவன். விலகி இருந்தே பார்வையால் வருட அகரன் தீண்டலில் தோன்றாத உணர்வு அவன் பார்வையில் உயிர்த்தெழசெய்ய கண்களை காணக்கூடாது காதல் மொழிக்கு செவி சாய்க்கக் கூடாது என்ற தீர்மானம் எல்லாம் காற்றில் பறக்க அகரன் கண்களில் தோன்றிய காதல் வசியத்தில் தன் வசம் இழந்து போனாள் சுஹீரா.

மெதுவாய் சுஹீரா கண்களில் தனது காதலுக்கான பிரதிபலிப்பை கண்டவன் மனம் வெற்றி புன்னகை புரிய சுஹீரா கை பற்றி தனது கைக்குள் பத்திரமாய் அடக்கி கொண்டவன், மேலும் தன்னவளை மயக்கும் மாய வார்த்தைகளை கவிதையாய் கோர்த்து அவள் செவி வழி இதயத்திற்கு காதல் மனு ஒன்றை அனுப்பிவைத்தான் அகரன்.

நான் சுவாசிக்கும்
காற்று கூட உன் தேகம்
தீண்டியதாய் இருக்க வேண்டும்
நம் நெருக்கம் கண்டு
இருளும் வெட்கத்தில்
சிவக்க வேண்டும்

அகரன் கைக்குள் தனது கை சுகமாய் அடங்கியது கண்டு காலையில் அப்பா சொன்னது சரிதானா அகரனை இழந்து விடுவோம் என்ற அச்சம் தான் எங்கள் திருமணத்திற்கு காரணமா? என்று மீண்டும் குழம்பினாள்.

“இது என்ன இந்த அகரனை சந்தித்ததில் இருந்து என் மனம் என்னை குழம்பி கொண்டே இருக்கின்றது, இவன் அருகில் இல்லாத போது வெறும் ஈர்ப்பு என்று கூறும் மனது இவன் அருகில் வந்தால் இது காதல் தான் என்று நச்சரிக்க துவங்குகின்றது” என்று குழப்பமாய் பார்க்க. “இன்னும் இது காதலா? இல்லை, ஈர்ப்பா? என்று குழப்பமாய் இருக்கின்றதா” என்று அகரன் வினாவில் தூக்கிவாரிப்போட்டது சுஹீராவிற்கு, தான் மனதில் நினைத்தது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று குழப்பம் அகலாமல் பார்த்தாள் சுஹீரா.

உன் மூச்சை கூட
மொழிப்பெயர்ப்பு
செய்வபவன் நானடி
உன் கண் அசைவின்
கருத்தினை உணராமல்
போவேனா …
என்று சிரிக்க “ ஆனால் என்னால் உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை என்று மனதில் உள்ளதை மறைக்காமல் கூறினாள்” சுஹீரா. “நீ என்னை புரிந்து கொள்ளமுடியாமல் இல்லை சுஹீ, நீ புரிந்து கொண்டதை அப்படி இருக்க வாய்ப்பேயில்லை என்று நம்பமுடியாமல் தவிக்கிறாய்” என்றான் அகரன்.

விளையாடி கொண்டு இருந்த சோட்டு இருவருக்கும் இடையில் வந்து குதிக்க அகரன் மாயவலையில் இருந்து மீண்டவள் போல சுஹீரா கண் சிமிட்டி விடுபட. “உரிமையாய் அகரன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டவன் உன் பெயர் என்ன?” என்று அதிகாரமாய் வினவினான் சோட்டு. “நான் அகரன்” என்று தனது பெயரை அறிமுகம் செய்து கொண்டான் , “அகி என்று உன்னை கூப்பிடவா” என்று சிறுவன் கேட்க “ஏன் முழு பெயர் சொல்லி அழைக்க வேண்டியது தானே” எனவும் “அகரன் என்றால் ஏதோ பெரிய பையனை சொல்வது போல் இருக்கிறது, அகி என்றால் சிறு பையன் போல் அழகாய் இருக்கிறது, என் முழு பெயர் சோழன் ஆனால் சோட்டு என்று கூப்பிட்டால் தான் எனக்கே பிடிக்கும்” எனவும் “உன் இஷ்டம் பெரிய மனுஷா எப்படி வேண்டும் என்றாலும் அழைத்து கொள்” என்று அனுமதி தந்தான் அகரன். மூவரும் கிளம்ப தயாராகினர்.

அகரன் காரின் அருகில் சென்றவுடன் “ஏய் அகி எனக்கு லட்டு வாங்கி தருகிறேன் என்று ஏமாற்றிவிட்டாய் “ என்று தன் சின்ன இடையில் கைவைத்து முறைக்க இருவரும் தங்களை மறந்து சிரிக்க துவங்கினர். “இங்கு நான் காமெடியா பண்ணுறேன்? சிரிக்கிறதை நிறுத்துங்க” என்று கட்டளையிட தங்களை கட்டுப்படுத்தி கொண்டு , “இன்று நீ வருவாய் என்று எனக்கு தெரியாது ,அதனால் உனக்கு பிடித்த லட்டு வாங்கிவரவில்லை, எனக்கு பிடித்த ரசகுல்லா வாங்கிவந்தேன்” என்று சோட்டு வை தூக்கி தனது காரின் பின் சீட்டில் அமரவைத்தவன் ஒரு டப்பா எடுத்து நீட்ட அதில் இருந்த ரசகுல்லாவை ஆசையாய் எடுத்து உண்டான் சிறுவன்.

ஒன்றை எடுத்து தானும் உண்டவன் விழிகள் மட்டும் சுஹீரா இதழில் மையம் கொண்டு இருந்தது “இன்று நடந்தற்கு நிச்சயம் நான் எதிர்பார்த்த வந்த ரசகுல்லா கிடைக்காது என்று தெரியும் அதனால் கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம்! அதுபோல் உணரக்கூடிய இந்த போலி ரசகுல்லா வாங்கி வந்தேன்” என்று சுஹீராவிற்கு விளக்கம் தந்தவன், “ஆனால் இதன் சுவை அந்த சுவையின் அருகில் நெருங்க கூட முடியவில்லை” என்று தன் இதழ் குவித்து கூற, அவன் குறிப்பிடுவது எதை என்று புரிந்து கொண்டதால் அதற்கு மேல் வாயில் உள்ளதை விழுங்கவும் முடியாமல் துப்பாவும் முடியாமல் தவித்தாள் சுஹீரா.

சுஹீராவின் அவஸ்தையை சிறிது நேரம் ரசித்து சிரித்தவன் அவர்கள் இருவரையும் தெருவின் முனையில் இறக்கி விட்டான், சோட்டு விடம் திரும்பி “ஐ லவ் யூ சோட்டு” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டவன் அதையே சுஹீராவிடம் செய்து அவள் சுதாரிக்கு முன் “நாளையும் சந்திக்கலாம்” என்று ஆர்வமாய் கூறி கிளம்பி சென்றான் அகரன். சாதாரண ஜீன்ஸ் டி. ஷீர்ட் அணிந்து வந்தவன் இயல்பாய் பழகிய விதம் சுஹீரா மனதில் அகரன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆட்டம் காண செய்தது. முதன் முறை அகரனை பிரிகையில் மனதில் பாரம் உணர்ந்தாள் சுஹீரா

உன் காதல் போதுமே
என் காலம் கடந்திட
உன் சுவாசம் போதுமே
நானும் வாழ்ந்திட…