அரக்கனோ அழகனோ 17

அரக்கனோ அழகனோ 17
0

அழகன்17

வெட்டும் பார்வையில்
பிறரை மிரட்டிக்கொண்டு
இருந்தேன் நானடி…
உன் வெட்கப்பார்வையில்
மிரண்டு நிற்கின்றேன்
ஏனடி. …

காலையில் வழக்கம் போல அலுவலகத்திற்கு வந்த குகன் தனது அறையில் , தனது இடத்தில் அமர்ந்திருந்த அதிகாவை கண்டு இங்கும் வந்துவிட்டாளா என்று அதிர்ந்தான் தனது பலவீனத்தை காட்ட கூடாது என்று முகத்தில் எதையும் காட்டாமல் தன்னை சரி செய்து கொண்டவன் மேஜையின் மறுபக்கம் சென்று கைகளை மேஜை மீது ஊன்றிய படி.

“ஹலோ மேடம் இது என் இடம் உங்கள் வீடு இல்லை அதிகாரம் செய்ய” என்று தோரணையாய் கூற இருப்பிடத்தில் இருந்து எழுந்து நின்றவள் குகன் முன் அவனை போலவே மேஜை மீது கைவைத்து கொண்டு. “இது என் வீடோ இடமோ இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் இங்கு இனி எனக்கும் இடம் உண்டு என்று உனக்கு தெரியுமா?” என்று அர்த்தமாய் புன்னகை செய்தாள் அதிகா.

“உங்களுக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா? என் மனதில் உங்களுக்கு இடம் இல்லை வீணாய் முயற்சி செய்யாதீர்கள்” என்று குகன் கோபம் காட்டிட, “இல்லாத இடத்தை பிடிப்பது தான் கடினம் குகா நான் தான் அங்கு ஏற்கனவே நிறைந்து விட்டேனே ஆனால் இப்போது எதற்கு தேவையில்லாமல் மனம், மானம் என்று வீணாய் வீர வசனம் பேசுகின்றாய்?, நான் உன் மனதை பற்றி ஏதும் சொல்லவில்லையே உனக்கு எதற்கு அப்படி தோன்றுகின்றது, ஒரு வேலை உண்மை என்ன என்று நான் கண்டுவிடுவேன் என்ற பயத்தில் முந்துகொண்டு பதில் தருகின்றாயா?” என்று யோசிப்பது போல அதிகா இழுக்க.

வழக்கம் போல சுற்றிவளைத்து பேசுகின்றாள் என்று நினைத்து நானாகத்தான் உளறிவிட்டேனா, சரியாய் போச்சு ஒரு புள்ளி கிடைத்தாலே கோலம் போடுவாள் வசமாய் கோடே போட்டு கொடுத்து உள்ளேன், இப்போது என்ன செய்ய போகின்றாளோ? என்று மனதில் தோன்றிய கலக்கத்தை மறைத்து கொண்டு, “அதெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் இதை பற்றி மட்டும் தானே அதிகம் பேசுவது அதனால் சொன்னேன், சரி சரி வீணாய் கதை பேசி கொண்டு என் நேரத்தை வீணடிக்காமல் இடத்தை காலி செய்யுங்கள், என் பாஸ் வந்து பார்த்தால், உங்களை உண்டு இல்லை என்று செய்து விடுவார்” என்று தனது தடுமாற்றத்தை மறைத்து மிரட்டும் தோரணையில் கூறினான் குகன்.

“உங்கள் டான் என்னை எதுவும் செய்ய முடியாது சின்ன டான், அவரை விட பெரிய சிபாரிசில் வந்திருக்கிறேன், என் விரலை கூட அசைக்க முடியாது” என்று ஒரு விரலை நீட்டி காட்டியவள் மறுகை இடையில் இருக்க, சிறு குழந்தை போல மிரட்டி கொண்டு இருந்தவளை, ஒரு நொடி தன்னை மறந்து அவள் அழகில் லகித்தவன் “அது என்ன சின்ன டான்” என்று புன்னகையுடன் வினவினான் குகன்.

குகன் முகத்தில் தோன்றிய மாறுதலை கவனித்துக்கொண்டு இருந்தவள் “அதுவா பொதுவாய் எல்லோரும் முதலாளியை சார் என்பார்கள்! ஆனால் நீ கரண் அத்தானை கொள்ளை கூட்ட தலைவனை அழைப்பது போல் பாஸ் என்கின்றாய் ,அதனால் கரண் டான் அவன் பி. ஏ, நீ அசிஸ்டெண்ட் சின்ன டான்” விளக்கம் போதுமா இனியாவது வேலையை கவனிக்கலாமா என்று கேள்வியாய் நிறுத்தினாள்.

அதிகா தந்த விளக்கத்தில் வந்த சிரிப்பினை அடக்கிக்கொண்டு “நல்லா தான் பேசுகின்றீர்கள்!, அதற்கு எல்லாம் வேலை போட்டு தர முடியாது” என்று குகன் மறுத்து கொண்டு இருக்கும்போதே ஒருவன் வந்து அகரன் வந்து விட்டதாகவும் குகனை அழைத்ததாகவும் கூறியவன் இருவரையும் ஒரு மாதிரி பார்த்து சென்றான். அவன் பார்வையில் வேறுபாட்டை உணர்ந்த குகன் “பார் உங்களால் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்து செல்கின்றார்கள், ஒழுங்காய் நீங்களே இடத்தை காலி செய்யுங்கள் இதில் பாஸ் தலையிட்டால் விஷயம் விபரீதமாய் போகும்” என்று குகன் கூறி கொண்டு இருக்கும் போதே வாசல் வரை சென்றவள்,
“என்ன உன் வார்த்தைக்கு பயந்து ஓடுகின்றேன்! என்று நினைத்தாயா ?” என்றவள் “கரனிடம் போய் நமக்குள் இருப்பதை கூறி நியாயம் கேட்கின்றேன் அதன் பின் கரணே உன்னை என் கழுத்தில் தாலி கட்ட சொல்லுவான் அப்போது உன் பாஸ் பேச்சை மீறுகின்றாயா? என்று பார்க்கிறேன்” என்று மிரட்டிவிட்டு அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் வேகமாய் வெளியேறினாள் அதிகா.

உள்ளே வர அனுமதி பெற்று கொண்டவள் நேராய் அகரன் முன் சென்று அவன் கை பற்றி குழுக்கியவள் “வாழ்த்துக்கள் கரண்” என்று கூற, குகன் வருவான் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தவன் அதிகா வரவும் என்ன என்பது போல் யோசனையாய் புருவம் உயர்த்தி அமர்ந்து இருந்தவன் அவள் நேராய் வந்து வாழ்த்து கூறி கைகுலுக்க, “எதற்கு இந்த வாழ்த்துக்கள்” என்றான் அகரன்.

“உன் திருமணத்திற்கு!” என்று அதிகா மறைக்காமல் கூற, அகரனும் மறைக்க முயலாமல் சுற்றிவளைக்காமல் “உனக்கு யார் சொன்னது” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான். “குகன் தான் சொன்னான் பாஸ்… வேறு ஒரு பெண்னை உருகிஉருகி காதலிக்கிறார், திருமணமும் செய்து கொண்டார் அவர் மனதில் இனி உனக்கு இடம் இல்லை, அதனால் உனக்கு பொருத்தமான ஒரு பையனை தேர்ந்தெடுத்துக்கொள் என்று எனக்கு புத்திமதி சொன்னார்” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கூறினாள் அதிகா.

அவள் முகத்தையே தீர்க்கமாய் பார்த்து கொண்டு இருந்தவன் “உனக்கு என்ன வேலை எப்படி செய்ய வேண்டும்? என்பதை குகன் கற்றுக்கொடுப்பான் “ என்று கூறியவன் “இப்போது நீ போகலாம் “ என்று கதவின் பக்கம் கை நீட்டியவன் அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பது போல கையில் இருந்த பைலை பார்க்க துவங்கினான், அகரன். கதவு வரை சென்றவள் “குகன் சொன்னது உண்மையா என்று நீ இன்னும் சொல்லவில்லையே, கரண்” என்று சந்தேகம் வினவினாள் அதிகா…

பைலில் இருந்த பார்வையை விளக்காமலேயே “என் மனைவி பெயர் மிஸஸ். சுஹீரா அகரன்” என்றான் அகரன். தனது மனைவி பெயருடன் தன் பெயர் சேர்த்து உச்சரிக்கும் போது அகரன் குரலில் இருந்த மயக்கமும், முகத்தில் தோன்றிய பரவசமும், அவன் எந்த அளவிற்கு காதலில் கரைந்து கிடக்கிறான், என்று அதிகாவிற்கு உணரத்தியது.

சுஹீரா என்ற பெயரை கூட இந்த அளவிற்கு காதலிக்கிறான். அகரன் குரல் இந்த அளவிற்கு மென்மையாய் ஒலித்து இது வரை கேட்டிராத அதிகா இவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுத்தவளை சந்திக்கும் ஆவல் எழுந்தது.

அதிகா அறையை விட்டு வெளியேறியதும், குகனை அழைத்தான் அகரன். அதிகா மிரட்டி சென்றது போல “என்ன சொல்லி வைத்தாளோ?” என்ற பயத்துடன் அகரன் முன் வந்து நின்றவன் அவன் முகத்தில் எதையும் கணிக்க முடியாமல், மேலும் குழம்பி போனான்.

“அதிகா நீ சொன்ன எல்லாம் சொன்னாள்” என்று அகரன் துவங்கும் முன் “பாஸ்… அது அவர்கள் ஒரு சரியான லூசு… பாஸ், லூசு… சொல்லவதை எல்லாம் யாரும் பெரியதாய் எடுத்து கொள்வார்களா என்ன?” என்று அவசரமாய் மறுத்தான் குகன்.

“அப்படி அதிகா என்ன சொல்லி நான் நம்பக்கூடாது என்கின்றாய்? குகா” என்று அகரன் கேள்வியாய் நிறுத்த, அகரன் முகசுழிப்பு ஏதோ விபரீதம் என்று உணர்த்த, என்ன சொல்லி வைத்தாலோ என்று அச்சத்துடன் “அவர்கள் சொல்வதை எதையும் நம்பாதீர்கள் பாஸ் உனக்கும், எனக்கும் செட்ஆகாது, என்று பலமுறை சொல்லிவிட்டேன், என்ன ஒரு மனிதனாகவே மதிக்காத உன் அம்மா மருமகனாய் எப்படி ஏற்பார்கள் என்று சிறு பிள்ளைக்கு சொல்லுவது போல புரியவைத்தேன், ஆனால் என் பேச்சை கேட்கமால் இன்னும் என் பின்னே சுற்றி கொண்டு என் நேரத்தையும் வீணாக்கி கொண்டு இருக்கின்றார்கள் எனக்கு அவர்கள் மீது எந்த பீலிங்கும் இல்லை என்று கூறியும், இன்னும் அவர்கள் மனதை மாற்றிக்கொள்ளாமல் இப்படி வேலை செய்யும் இடத்திற்கே வந்து தொந்தரவு செய்ய துவங்கி விட்டார்கள் இப்போது கூட பாருங்கள் இங்கு உங்களுக்கு வேலை இல்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தேன் ஆனால் உங்களிடம் வந்து என்னை பற்றி என்னென்னமோ கதை காட்டுகின்றார்கள் பாஸ், உங்களுக்கு என்னை பற்றி தெரியாத என்ன?, எனக்கு தெரியும் பாஸ் யார் வந்து என்னை பற்றி என்ன சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்!” என்று குகன் இடைவிடாது கூறி முடித்தான் குகன்.

தனது இருக்கையில் கால் மீது கால் போட்டு கன்னத்தில் ஒரு கை வைத்து பயத்தில் உளறிய குகனை பார்த்து கொண்டு இருந்தவன், குகன் பேசி முடிக்கவும் “உங்களுக்குள் இப்படி ஒரு கதை வேற நடக்கின்றதா?” என்று அகரன் கேள்வியாய் நிறுத்த “என்ன இப்படி கதை நடக்கின்றதா வா?” அப்படியென்றால், “இங்கேயும் நான் தான் உளறிவிட்டேனா?” என்று குகன் தலையில் அடித்துகொண்டான்.

ஒரு நொடி புதிராய் பார்த்தவன், “யார் வந்து சொன்னாலும் நம்ப மாட்டேன் என்று தான் உன்னையே சொல்ல வைத்தாள் போல!” என்று கூறியவன் மறு நிமிடமே புதிருக்கான விடை கிடைத்து விட்ட பாவனையில் உதட்டில் புன்னகை பிறக்க “இன்றிலிருந்து அதிகா உனக்கு அசிஸ்டெண்ட், நாம் இங்கு இல்லாத நேரம் அவள் தான் இங்கு பொறுப்பு, உன் பக்கத்திலேயே வைத்து வேண்டிய பாடம் நடத்து” என்று சிரித்தான் அகரன்.

“என்ன பாஸ் இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறேன் அவர்களை என் பக்கத்தில் வைத்து கொண்டு என்னால் , எப்படி?” என்று குகன் தடுமாறபடி பாதியில் நிறுத்த, “உன் பக்கத்தில் வைத்திருந்தே அவளுக்கு நீ பொருத்தம் இல்லை என்று புரியவை” என்று குகன் பாதியில் நிறுத்தியதை அகரன் கூறி முடித்தான். ஆனால் அகரன் முகத்தில் இருந்த புன்னகை வேறு கதை சொன்னது.

“என்னால் முடியாது பாஸ் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய என்னால் முடியாது, அவர்கள் என் அசிஸ்டெண்ட் என்றால், இன்றில் இருந்து நான் உங்கள் அசிஸ்டெண்ட் இல்லை! என் வேலையை நான் விட்டுவிடுவேன்” என்று மிரட்டி பார்த்தான் குகன். பதில் பேசாமல் புன்னகை மாறாமல் இருந்த அகரனை பார்த்து “நான் வேலையை விட்டு போய்விடுவேன் என்றேன்” என்று மீண்டும்அழுத்தமாய் கூறினான். “அதற்கு மேல் உன் விருப்பம் “ என்று அகரன் அசட்டையாக பதில் தந்தான் . “இது தான் உங்கள் இறுதி முடிவா?” என்று ஆற்றமையுடன் வினவினான் குகன்.

“இங்கு நான் தான் பாஸ் நான் எடுக்கும் முடிவு இறுதியானது” என்று அகரன் தனது வழக்கமான வசனத்தை கூறவும்… “அப்படியென்றால் சரி நானும் என் முடிவை சொல்கிறேன் என்றவன், இன்றில் இருந்து அதிகா என் அசிஸ்டெண்ட்” என்று ஒரு தோளை குலுக்கி கூற அகரன் வாய்விட்டே சிரிக்க துவங்கிவிட்டான்.

“போடா ஜோக்கர்” என்று மேலும் சிரிக்க , ”நல்லா சிரிங்க இந்த விஷயம் அதாவது அதிகா என் அசிஸ்டெண்ட் என்ற விபரம் உங்கள் அத்தைக்கு தெரியவரும்போது புரியும் யார் ஜோக்கர்” என்று கூறியவன் “நான் கோபமாய் போகிறேன் நீங்கள் குலுங்கி குலுங்கி சிரிங்கள்” என்று அகரன் அறையை விட்டு வெளியேறினான் குகன்.

“என் அத்தைக்கு இருக்கும் பிடிவாதம் அவர் மகளுக்கும் கொஞ்சமும் குறையாமல் இருக்கும், குகா உன்னை மாற்றாமல் அவள் விடமாட்டாள்! நீ என்ன முயற்சி செய்தாலும் கடைசியில் உன்னை தோற்று, அவள் காதல் மனதை வெல்ல போகின்றாய், அதற்கு எதற்கு இத்தனை வீராப்பு?” என்று குகனின் நிலையை எண்ணி மேலும் சிரித்தான் அகரன்.

அகரன் அறையில் இருந்து வந்ததும் நேராய் அதிகா முன் சென்று நின்றவன் “பாஸ்ஸிடம் என்ன சொன்னாய்?” என்று குகன் ஒரு விரல் நீட்டி வினவ, நீட்டிய விரலை தன் விரல்களால் மடக்கி பிடித்த கொண்டு “உண்மையை சொன்னேன்” என்று ஒற்றை புருவம் ஏறி இறங்க பதில் தந்தாள் அதிகா.

அவள் பிடியில் இருந்த தனது விரல்களை மீட்டு கொண்டே “நான் வேறு நீ என்ன சொன்னாய் என்றே தெரியாமல் வழிய போய் வாய் கொடுத்து புண்ணாகி வந்து நிற்கிறேன், அந்த உண்மை தான் என்ன? என்று உங்கள் திருவாய் திறந்து அருளுங்கள் தாயே!!” .என்று கோபம் காட்ட முயன்ற முடியாமல் கெஞ்சலாய் முடித்தான் குகன்.

குகனின் செயலில் சிரிக்க துவங்கியவள், அருகில் நின்றிருந்த குகன் முதுகில் அடித்து சிரித்தவள் “நீ பயப்படாதே எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தால் இப்படித்தான் அடித்து சிரிப்பேன்” என்றாள், “அடிக்க வேண்டும் என்றால் அடுத்தவன் முதுகு தான் கிடைத்ததா? அந்த சுவற்றில் போய் முட்டி கொண்டே சிரிக்க வேண்டியது தானே?” என்று கடுப்புடன் கூறினான், குகன்.

“இந்த பேச்சு தான் என்னை உன்னிடம் இழுத்தது!” என்றவளை முறைத்த படி “நீங்கள் கொடுத்த அடியில் எரிச்சல் எடுத்து, கடுப்பில் இருக்கிறேன் இதில் இழுத்தது கொழுத்து என்று மேலும் எரிச்சலை கிளம்பிகொண்டு, என் பாஸ் சொன்னதால் உங்களுக்கு வேலை கற்றுதருக்கிறேன் அதை தவிர நமக்கு இடையில் எதுவும் இல்லை” என்று தீர்மானமாய் முடித்தான் குகன்.

கை கட்டி வாய் பொத்தி நின்றவளை கண்டு வந்த கோபம் கரைந்திட “ என்னிடம் என்ன சொல்லி சென்றீர்கள், பின் பாஸ்ஸிடம் என்ன சொன்னீர்கள் …” என்று குகன் கேள்வியாய் நிறுத்த, கண்களில் குறும்பு மின்ன “வாய்யை திறந்து சொல்லலாமா? சின்ன டான்” என்று அதிகா அனுமதி கேட்க “ம்” என்று கையை மட்டும் சம்மதமாய் அசைத்தான், குகன். அகரனிடம் சொன்னதை அதிகா கூறமுடிக்க, குகன் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது, “உன் முகத்தை பார்த்தால் நீயாக வழிய சென்று நம் கதையை உளறிவிட்டு பெரிய டான்னிடம் வாங்கி கட்டி கொண்டாய் போல?” என்று சிரித்தாள் அதிகா…

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை பாஸ் எப்போதும் என்னை திட்டவே மாட்டார்” என்று நடந்ததை கூறாமல் மழுப்பியவன். “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வெளியில் கிளம்புவோம், நீங்கள் இங்கிருந்து கவனித்து கொள்ளுங்கள், பெரியதாய் எந்த வேலையும் இருக்காது, அதோ அந்த பைலை எல்லாம் சரிபார்க்க வேண்டும், டெண்டர் வந்தால் அதை கவனிக்க வேண்டும்,” என்று வரிசையாய் வேலை சொன்னவன் “வேறு சந்தேகம் என்றால் இது தான் என் எண் என்னை அழையுங்கள், விளக்கம் தருகிறேன்” என்று அவன் ஒரு கார்டை நீட்டினான் குகன், கார்டை கையில் வாங்காமல் “உன் எண் என்னிடம் ஏற்கனவே இருக்கு, குகன்” என்று மறுத்து விட்டு, அவன் கன்னம் தொட்டு “தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் ஒரு எண் கேட்டால் தவறாமல் கூறுவேன்” என்று அதிகா காதலுடன் கூறினாள்.

மெதுவாய் அவள் கைகளை விளக்கிவிட்டு “நீங்கள் மண் குதிரைக்கு ஆசைப்படுகிண்றீர்கள் அது உங்கள் அந்தஸ்துக்கு கொஞ்சமும் பொருந்தாது , கனவிலிருந்து வெளியில் வாருங்கள்” என்று வருத்த குரலில் கூறி வெளியேறினான் குகன்.

“இந்த அகரன் என்ன தான் நினைத்து கொண்டு இருக்கின்றான் வரவர யாருக்கும் மரியாதை இல்லாமல் போய் விட்டது , இதற்கு தான் அன்றே அவ்வளவு பேசினோம் ஆனால் யாரும் எங்கள் பேச்சை மதிக்காமல் , அவன் மிடுக்கான பேச்சிற்கு மயங்கி இப்போது அனுபவிக்கின்றீர்கள் இன்று இந்த வேந்தனுக்கு வந்த நிலைமை நாளைக்கு நமக்கு வராது என்று என்ன நிச்சயம்?, இதை இப்படியே விடக்கூடாது, எல்லோரும் ஒன்றாய் இருந்து அவன் சர்வாதிகார முறையை எதிர்க்கக்வேண்டும்” என்று சந்திரன் பொருமி கொண்டு இருந்தார். “ஏன் மகேஸ்வர் நீ எதுவும் பேச மாட்டேன் என்கின்றாய்? இப்படியே போனால், இவன் யாரையும் தொழில் செய்ய விடாமல் இவன் பணபலம் கொண்டு நசுக்குவான் நாம் அதை வேடிக்கை பார்க்க வேண்டுமா?” என்று தனது நண்பனிடம் நியாயம் கேட்டு கொண்டு இருந்தார் சந்திரன்.

“கொஞ்சம் பொறு சந்திரா, அவரும் வரட்டும் அவர் பக்க வாதம் என்ன என்று கேட்போம்” என்று பக்குவமாய் பதில் தந்து கொண்டு இருந்தார் மகேஸ்வரன். “நீ அவனை பார்த்து பயந்து விட்டாயா?, உன் தொழிலை ஒன்றும் இல்லாமல் செய்தது அவன் தான் என்று தெரிந்தும் ஏன் அமைதியாய் இருக்கின்றாய்?” என்று சந்திரன் கேட்க , “ஒரு மனிதனுக்கு கஷ்டத்தில் தான் பக்குவம் பிறக்கின்றது சந்திரா அந்த பக்குவம் எனக்கு இப்போது தான் வந்துள்ளது, அன்று உனக்காக பேசிய போது இந்த பக்குவம் இல்லாமல் போனது, என் தொழில் நஷ்டத்திற்கு என்றுமே, நான் மட்டும் தான் பொறுப்பு அதில் யாரையும் குறைகூற முடியாது “ என்று மகேஸ்வரன் கூறிகொண்டு இருக்கும்போதே, அகரன் மீட்டிங் நடக்கும் இடத்திற்குள் நுழைய அனைவரும் அமைதியாகினர்.

அகரன் அவன் இருக்கையில் வந்து அமர்த்தும் அவர்களுக்கு விவாதம் செய்த படி இருக்க அங்கு சலசலப்பு எழுந்தது, “என் அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், இன்று இங்கு அவசரமாய் கூடி இருப்பதன் காரணம் உங்களுக்கு தெரியும், கடந்த சில ஆண்டுகளாக மிஸ்டர் வேந்தன் நடத்திவரும் சாயத்தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றபடும் கழிவுகள் அந்த பகுதியில் உள்ள ஆற்றில் கலக்க படுகின்றது, அந்த ஆற்றின் நீர் தான், அந்த சுற்று வட்டாரப்பகுதி மக்களுக்கு குடிநீருக்கான ஆதாரம், இவர் கலக்கும் ரசாயன கழிவுகளால் பல குடும்பங்கள் பாதிப்படைந்து உள்ளனர், அதானல் அந்த தொழிற்சாலை மீது பலவழக்குகள் நிலுவையில் உள்ளன, இந்த நிலையில் மிஸ்டர்.வேந்தன் நமது தொழிற்சங்கத்தின் உறுப்பினர் என்கின்ற முறையில் நமது உதவியை நாடுகின்றார் இதை பற்றி விவாதிக்கவே இந்த அவசர கூட்டம்” என்றதும் பெரும் அமைதி நிலவியது.

அகரன் கூறி முடித்ததும் “தொழில் என்று வந்து விட்டால் நியாய தர்மம் பார்க்க முடியுமா என்ன? யாருக்கும் கேடுயில்லாமல் தொழில் செய்தால் தலையில் துண்டை போட்டு கொண்டு தான் போக வேண்டும்” என்று பதில் தந்தான் வேந்தன்.

“அப்படியென்றால் உங்கள் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுகளால் மக்கள் பாதிப்பு அடைகின்றனர் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கினீர்கள்?” என்று அகரன் கேள்வியாய் நிறுத்த, “ஆமாம் என் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுகள் அந்த பகுதி ஆற்றில் தான் கலக்கப்படுகின்றன, அதனால் இங்கு இருப்பவர்களுக்கு என்ன பதிப்பு அதனால் சில பஞ்சபரதேசிகள் குடும்பம் அழிந்தால் தான் என்ன?, ஆயிரம் பேரை கொன்றால் தான் அறைவைத்தியன் ஆவான் உயிர்காக்கும் தொழிலுக்குகே! இந்த நிலை என்றால் நமக்கு எப்படி” என்று பெரிய நகைசுவை சொன்னது போல் சிரிக்க அவன் ஆதரவாளர்கள் உடன் சேர்ந்து சிரித்தனர்.

“மிஸ்டர். வேந்தன் உங்களுக்கு அந்த பழமொழி சரியாக… சரியாக இல்லை சுத்தமாகவே புரியவில்லை ஆயிரம் வேரைக்கொன்றவன் அரைவைத்தியன் என்பதுதான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஆகிவிட்டது!, நம் நாட்டில் சித்தவைத்தியம்தான் சிறப்பாகவும், சீராகவும் இருந்து வந்தது, அதை அடிப்படையாகவு‌ம் வைத்தியர்களை மன‌தி‌ல் வை‌த்து‌ம் சொல்லப்பட்டதுதா‌ன் இது, வைத்தியன் என்பவர் குறைந்தபட்சம் 50,000 வேர், செடி, கொடிகளை எடுத்து இலைகளைப் பறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும், அதுபோல, குறை‌ந்தப‌ட்ச‌ம் ஆயிரம் வேரையாவது கொன்றிருந்தால்தா‌ன் அரை வைத்தியனாகவாவது ஆகியிருக்க முடியும் என்ற அடிப்படையில் சொன்னதுதான் இந்தப் பழமொழி…, நீங்கள் கலக்கும் ரசாயன கழிவுகளால் இங்கு இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை தான், ஆனால் நீங்கள் நாசம் செய்து கொண்டிருப்பது என் நாட்டின் இயற்கை வளங்களை , அழித்து கொண்டிருப்பது, என் நாட்டின் மக்களை இதற்கு என்னை துணை போக சொல்லும் உங்களை போன்ற பணப்பரதேசியின் பேச்சிற்கும் திமிருக்கும் அடங்கி என்றும் தவறு செய்ய மாட்டேன், நீ இன்று அழித்து செல்லும் இடத்தில தான் நாளை என் வாரிசுகள் வளரும், இனி வரும் காலத்தில் வாரிசுகளுக்கு சொத்துசேர்த்து வைக்கின்றோமோ இல்லையோ!, இயற்கை வளங்கள் சேர்த்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்”, என்று அகரன் தெளிவாய் எடுத்துரைக்க.

“உன் கருத்து எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் எனக்காக வந்து மாசுகட்டுப்பாட்டு அதிகாரியிடம் உன்னால் பேச முடியமா இல்லையா?” என்று வேந்தன் கட்டளை போல வினவ…

“இவ்வளவு நேரம் அதை தான் முடியாது என்று தான் மறுத்து கொண்டு இருக்கிறேன்” என்று பொறுமையாய் பதில் தந்தான் அகரன். தனக்கு எதர்மறையான பதில் வரவும் அதை தாங்கிக்கொள்ள முடியாத வேந்தன், சங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் பக்கம் திரும்பி, “ஏன் எனக்கு உதவினால் என்ன?, நானும் இந்த சங்கத்தின் உறுப்பினர் தான் எனக்கு ஒரு இடர் என்றால் அது நாளை உங்களுக்கு வர எவ்வளவு காலம் ஆகும் , நமக்குள் நாமே உதவி செய்து கொள்ளாவிட்டால் எப்படி? அதானல் கட்டாயம், எனக்கு சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் உதவ வேண்டும், என் மீது தொடுக்கபட்டுள்ள வழக்குகள் , அதை ஒன்றும் இல்லாமல் செய்ய மாசுகட்டுபாட்டு வாரியா அதிகாரியிடம், சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அகரன் பேசினால் போதும் எல்லாம் சுலபமாய் முடியும்!” என்று மற்றவர்களின் மனதை தன் பக்கம் இழுக்க முயன்றான்.

“தப்பு இல்லாமல் நடக்கும் எந்த தொழிலுக்கும் இடர் என்பது வராது அப்படியே இடர் வந்தாலும் அதை விலக்கித்தர உண்மையான ஆட்கள் துணை இருப்பார்” என்று அகரன் வேந்தனிடம் கூறுவது போல மற்றவர்களுக்கு உணர்த்தி விட்டு, “நீங்கள் இந்த சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் தானே முறைகேடான விசயத்திற்கு இந்த சங்கத்தின் உதவியை நாடுகின்றீர்கள், இனி நீங்கள் இந்த சங்கத்தின் உறுப்பினர் கிடையாது அடிப்படை உரிமை உங்களிடம் இருந்து பறிக்கப்படுகின்றது, அது மட்டுமில்லாமல் சட்டத்திற்கு புறம்பான செயலை செய்யச்சொல்லி வற்புறுதியதாக, இந்த தொழிற் சங்கத்தின் சார்பாக உங்கள் மீதும் உங்கள் தொழிற்சாலை மீதும் புதிதாய் ஒரு வழக்கு தொடரப்படும் “ என்று அழுத்தமாய் கூறினான் அகரன்.

வேந்தனின் ஆதரவாளர்கள் அதை எதிர்க்க துவங்கினர் “நீங்கள் இந்த சங்கத்தின் தலைவன் தான் மக்களின் தலைவன் இல்லை” என்று சிலர் கூச்சலிட. “மக்களுக்கு தரமான வாழ்வாதாரத்தை அமைத்து தருவது தான், ஒரு வியாபாரியின் கடமை, அவர்களின் இயல்பு வாழ்வை பறித்து நாம் மட்டும் சுகபோகாதத்தில் வாழ்வதற்கு, பெயர் வேறு” என்று அவர்கள் கூச்சலுக்கும் மேல் அகரன் கோபமாய் கத்தினான்.

சாயகழிவுகளால் பாதிபடைந்தவர்கள் பற்றிய ஆதாரம் அடங்கிய பைலை அனைவர்க்கும் காட்டிட சிலர் மனசாட்சிக்கு பயந்து அமைதியாகினர், அகரனை காணும் வரை அவனுக்கு எதிராக பேசி கொண்டு இருந்த சந்திரன் அகரனை கண்டதும் அமைதியாகிட, “இன்னும் இந்த வேந்தனுக்கு உறுதுணையாய் இருப்போம் என்றால் அவருக்கு துணையாக இந்த சங்கத்தில் இருந்து நீங்களும் தாராளமாய் வெளியேறலாம்” என்று எச்சரிக்கை கலந்த மிரட்டாலுடன் அகரன் கூற, மற்றவரும் அமைதியாகினர் சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் அகரனுக்கு சாதகமாக இருக்க வேந்தன் சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

ஒருமனதாய் தீர்மானம் நிறைவேற்றபட்டு வேந்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் சங்கத்தின் உறுப்பினர்கள் கையெழுத்து பெற்றுக்கொள்ள பட்டது. சந்திரன் மகேஸ்வரன் அருகில் வந்து “பார்த்தாயா அவன் பேச்சிலேயே எல்லோரையும் மிரட்டி வைத்து உள்ளான், அது சரி நீ ஏன் இன்று அமைதியாய் இருந்தாய் அவனை அன்று கேட்டது போல் இன்றும் நான்கு கேள்வி கேட்டிருக்க வேண்டியது தானே?” என்று சந்திரன் ஏற்றிவிட்ட முயல. “தவறு செய்தால் தட்டி கேட்க வேண்டியது தான், யாருக்கும் அஞ்சாமல் தைரியமாய் தவறை தட்டி கேட்கும் போது ஆதரவாய் தட்டிக்கொடுக்க தான் வேண்டும் சந்திரா அவர் செய்தது சரியானது” என்று அகரனுக்கு சாதகமாக பேசினார், மகேஸ்வரன்.

“எனக்கு என்னமோ நீ அந்த முரடனை பார்த்து பயந்து விட்டாய் என்று நினைக்கிறேன் அதானல் தான் சரி தவறு என்று கதை பேசி நழுவிக்கொள்கிறாய்” என்று ஏளனமாய் கூற. “நான் ஒன்றும் அவர் முதுகுக்குபின் ஒன்று, முகத்துக்குமுன் ஒன்று, என்று பேசவில்லையே!” என்று சந்திரன் செயலை சுட்டி காட்டியவர், “எனக்கு தவறு என்று தோன்றினால் யாராய் இருந்தாலும் எதிர்த்துக்கேள்வி கேட்பேன், இப்போது அவர் சொன்ன கருத்து எதுவும் தவறு இல்லை, அதை ஏன் நான் மறுத்து பேச வேண்டும் கடவுளைத்தவிர வேறு யாருக்கும் நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, யார் தடுத்தாலும் கடவுளின் கருணை இருக்கும் வரை நம் வாழ்வை யாரும் அழிக்க முடியாது சந்திரா “ என்று மகேஸ்வரன் நிதானமாய் பதில் கூற வாயடைத்து போனார் சந்திரன்.

“பரவாயில்லை பாஸ் உங்கள் மாமனார் உங்கள் செயலை புகழ்ந்து பேசிவிட்டார்” என்று மகேஸ்வரன் பேசியதை அருகில் இருந்து கேட்டு வந்த குகன் பெருமையாய் கூறிட, “மற்றவர் என்னை புகழ வேண்டும் என்பதற்காக நான் எதையும் செய்வது இல்லை குகன் எனக்கு சரியென்றுபட்டதை செய்கிறேன் பிறரை பாதிக்காத தொழில் மட்டுமே உயர்ந்தது அடுத்தவர் கண்ணீரில் சேர்த்த பணம் அனைத்தும் நம்மை நரகத்தில் சேர்க்கும் வழி என்று தாத்தா அடிக்கடி கூறுவார் அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியாது ஆனால் உறுத்தாலாய் செய்யும் சிறுசெயலும், என்னை நிம்மதியாய் உறங்க விடாது இந்த வேந்தன் இன்னும் தன்தவறை உணர்ந்ததாக தெரியவில்லை மொத்தமாய் அவரின் தொழிற்சாலையை முடவைத்து பாதிப்படைந்தவர்களுக்கு உதவி செய்யாமல் என் மனம் ஆறாது, “நீ ஒன்று செய் குகா தாத்தா பெயரில் நடைபெற்று வரும் டிரஸ்ட் மூலம் அந்த பகுதியில் பாதிக்கபட்டவர்களை தத்தெடுக்க ஏற்பாடு செய் அவர்கள் மருத்துவ பொறுப்பு இனி நம்முடையது” என்று அகரன் கூறவும் பெருமையாய் தனது பாஸ்சை பார்த்தது சரியென்று தலையாட்டினான் குகன்.

பாதிக்க பட்டவர்களுக்கு தன்னால் ஆனா உதவி செய்ய முடிவு எடுத்த பிறகு நிம்மதியாய் உணர்த்த அகரன் அப்புறம் என்ன சொல்கின்றாள் உன் அசிஸ்டெண்ட் என்று குகனை கேலி செய்ய துவங்கினான். “அதை பற்றி பேசதீர்கள் நான் உங்கள் மீது பயங்கர கோபத்தில் உள்ளேன்” என்று குகன் முகத்தை திருப்பி கொள்ள. “என்ன என் அத்தை மகள் மக்காய் இருக்கின்றாளா? நீ கற்றுத்தரும் பாடம் அவள் மரமண்டையில் ஏறவே இல்லையா?, என்று மேலும் கேலி செய்தான்.

அகரன் அதிகாவை மக்கு என்றதை பொறுக்க முடியாமல் “அதிகா ஒன்றும் மக்கு இல்லை நல்ல தெளிவான பெண் என்ன கொஞ்சம் பிடிவாதம் கூட உங்கள் குடும்பத்தில் பிரிந்திருந்து இந்த அளவிற்கு கூட இல்லை என்றால்? தான் அதிசயம்” என்று அகரனை சேர்த்து காலை வாரினான் குகன்.

குகன் கூறியதும் உதட்டை சுளித்து “அதிகாவை ஒரு வார்த்தை சொன்னால் உன்னால் பொறுக்க முடியவில்லை, அவளுக்கும் உனக்கும் நடுவில் எதுவும் இல்லை என்றதும் நான் நம்பிவிடுகின்றேன்!” என்றான் அகரன். குகன் அமைதியாகிவிட “உன் வாழ்கை உன் விருப்பம்” என்று அகரனும் அமைதியானன்.

அகரனின் அதிகா பற்றிய பேச்சு அவள் நினைவை கொடுத்திட ரொம்ப நேரம் தனியாய் இருப்பாள் எப்படி சமளிப்பாள் என்று கவலை மேலோங்கியது. “சரி பாஸ் நான் அலுவலகம் கிளம்புகின்றேன், நீங்கள் வழக்கம் போல அண்ணி பார்க்க கிளம்புங்கள்” என்று குகன் கூறவும் அகரன் மனதில் சுஹீரா நினைவு சுகமாய் நிறைத்தது, வெட்க புன்னகை பூசிய முகமாய் இருவரும் அவர்களின் மனம் நிறைத்தவளின் நினைவில் கிளம்பினர்.

மாலை நெருங்க சுஹீரா எண்ணிற்கு தான் காத்திருக்கும் செய்திஅனுப்பி வைத்து ஆவலாய் காத்திருந்தான் அகரன். வழக்கமாய் சுஹீராவை ஏற்றிக்கொள்ளும் இடத்தில் காரில் அகரன் காத்திருக்க தனது குட்டி பாடிகார்ட் சோட்டுவுடன் வந்து சேர்ந்தாள் சுஹீரா.

கார் கதவை திறந்துவிட்டவன் காரை கிளப்பி கொண்டு பார்க் செல்லும் வழியை தாண்டி சென்றிட சுஹீரா தடுத்தாள், “என்ன இது சந்திக்கும் இடம் என் தேர்வு என்று சொன்னது மறந்துவிட்டதா?”, என்று சுஹீரா கோபமாய் துவங்கிட , “அது நேற்று இது இன்று” என்று சிரித்தான் அகரன். “ஒழுங்காய் காரை நிறுத்து வேறு இடத்தில் உன்னை சந்திக்க எனக்கு விருப்பம் இல்லை” என்று சுஹீரா தீர்க்கமாய் கூறினாள். “ஏன் சுஹீ பயப்படுகின்றாய் அதான் உன் பாடிகார்ட் உன்னுடனே தானே இருக்கின்றார்!” என்றவன் ஒரு டப்பா நிறைய லட்டுவை சோட்டுவிடம் நீட்டினான்.

அதை வாங்கி கொண்டவன் “நீ கவலை படாதே ஹீ இப்போது எனக்கு சோட்டா பீம் லட்டு வேறு கிடைத்து விட்டது எனக்கு இன்னும் அதிகமாய் பலம் வந்துவிட்டது” என்று இருக்கையில் எடுத்து வாய்யில் அடைத்துகொண்டே கூற தலையில் அடித்துக்கொண்டு அமைதியாய் அமர்ந்து கொண்டாள் சுஹீரா. கார் நேராய் பீச் ரோட்டில் செல்ல வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவள் நல்லவேளை ஆள் நடமாட்டம் உள்ள இடம் என்று மனதில் கொஞ்சம் நிம்மதி பிறந்தது, இது என்ன சோட்டு இருக்கும் போது இவன் அப்படி என்ன விடுவான் என்று பயம் என்று தனக்கு தானே தைரியம் கூறி கொண்டவள், தனது மடியில் இருந்த சோட்டுவை ஆதரவாய் பற்றி கொண்டாள், சுஹீரா.

பீச்யில் கையில் சில கவர்களுடன் இறங்கியவன், காலரா சிறுது தூரம் நடந்தார்கள் சோட்டு தூக்க சொல்லி அடம் செய்ய, அகரன் அவனை தூக்கி தனது தோள்களில் அமர்த்திக்கொண்டு கொஞ்ச தூரம் தள்ளி தனிமையாய் அழைத்து சென்றவன், சோட்டுவை இறக்கி விட்டு அலைகள் கால்களில் உரச அமைதியாய் அமர்ந்தனர்.

அகரன் கொண்டு வந்த கவரில் சோட்டுவிற்கு சில விளையாட்டு சாமான்கள் இருக்க அதனுடன் விளையாட துவங்கினான் சிறுவன். தனக்கான தனிமை கிடைத்துவிட தன்னவளை நெருங்கி அமர்ந்து கொண்டவன் அவன் கண்களில் தெரிந்த கலக்கம் உணர்ந்து அவள் கைகளில் மெதுவாய் இதழ் பதித்தான் “என்னை கண்டு உனக்கு எதற்கு பயம் சுஹீ, நான் உன் கணவன் என்று அடிக்கடி மறந்து விடுகின்றாய் என்றவன், மறக்காமல் இருக்க முத்தான இதழில் முத்திரை பதிக்கவா?” என்று கண்களில் காதலை தேக்கி கொண்டு ஆசையாய் கேட்டான் அகரன்.

மனதில் இனம் புரியாத புது உணர்வு எழ என்னிடம் அத்து மீற நினைக்காதே என்று கூறியவளின் குரலில் அழுத்தம் இல்லாமல் இருந்தது, அவளின் தடுமாற்றத்தை ரசித்துகொண்டவன், மேலும் இம்சிக்க முடிவு செய்து நெருங்கி பயத்தில் அவள் முகத்தில் துளிர்த்த வேர்வையாய் தனது விரல் கொண்டு வருடியவன் இடையை சுற்றி கை போட்டு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெலிதாய்

என் கைகுட்டையாய்
நீ இருந்திருந்தால்
உன் நினைவு என்னுள்
நுழைகையில்
உன்னை விரித்து
அணைத்திடுவேன்…
உன் கைக்குட்டையாய்
நான் இருந்திருந்தால்
முத்தான உன் முக
வியர்வையை
முத்தத்தால் துடைத்திடுவேன்…

என்று கூறி இடையில் கோர்த்திருந்த கரத்தில் அழுத்தம் கொடுத்து தனது தாபத்தை உணர்ந்திட துடித்தான். சுஹீரா உடல் மெதுவாய் நாணமோ அச்சமோ இனம்புரியா உணர்வில் நடுங்கிட தோளோடு சேர்த்து இறுக்கி கொண்டவன், அவள் தோள்களில் சாய்ந்து கொண்டு “உன்னை பிரிந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் மரணம் என்னை தழுவுவதாய் உணர்கிறேன் சுஹீ, மீண்டும் உன்னை காணும் நிமிடங்களுக்காக தான் சுவாசிக்கிறேன்” என்றவன்.

ஆயுள் முழுதும்
உன் அருகில்
வாழ நினைக்கிறன்
அரைநொடி பிரிவிலும்
புழுவென துடிக்கிறேன்.

“உன் ஒரு வார்தைக்காக தான் உன்னை விலகி இருந்து தண்டனை அனுபவிக்கின்றேன் நீ இப்போதே “ம்” என்று ஒரு மொழி கூறினால் மறுநொடி உன்னை கையில் ஏந்திக்கொண்டு யாரும் இல்லாத தனி தீவில் உன்னை சுமந்துகொண்டு சேர்ப்பேன் இதுவரை நீ அறியாத வகையில் உன்னை காதல் செய்வேன்” என்றான் அகரன்.

இமைவிலகாது தன்னை பார்த்துக்கொண்டு இருந்தவளின் கண்களில் எப்படி என்ற கேள்வியை உணர்ந்தவன் கிறக்கம் உண்டாக அவளை இன்னும் நெருங்கிச் சென்றவன். “காற்றும் நமக்கு இடையில் நுழைய முடியாமல் மூச்சு திணறும் அளவிற்கு நமது நெருக்கம் இருக்கும்… இடைவிடாது உன் இடைவளைத்து உன் உடையென நான் இருப்பேன்… இதழ் முத்தம்வைத்தே உன்னை இம்சை செய்வேன்… நொடியும் விலகாது நான் தரும் முத்தத்தில் மூச்சிற்கு நீ தவிக்கும் போது என் சுவாசம் தந்து உன்னை அரவனைப்பேன்… மோகம் போதும் என்று எண்ணம் வந்த போதும் உன்னை விலகாது அணைத்த படி உன் மார்பில் தலை சாய்த்து உறங்கிடுவேன்…” என்று அவள் கை கோர்த்து கொண்டவன் மெதுவாய் இதழ் ஒற்றி, “நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் உன் முதல் குழந்தை நான்… என்று செல்லம் கொஞ்சி உன்னை கிறங்கடிப்பேன்… சுஹீ” என்றவன். சுஹீரா முகம் சிவந்து இருப்பதை கவனித்து “என் தொல்லைவில் நீ நாணத்தால் சிவக்கும் போது எல்லாம் முத்தத்தால் உன் முக சிவப்பை அதிகரிப்பேன்…” என்று கூறியவன் தன்னை மறந்து தன்னவளிடம் நெருங்கிட, சுற்றுப்புறம் நினைவு வந்தவனாக ஒரு பார்வை சோட்டுவை பார்த்து அவன் கவனம் முழுவதும் மணல் கோட்டை காட்டுவதில் இருக்க அவசரமாய் இதழ் ஒற்றி பிரித்தான் அகரன்.

தனக்கு கிடைத்த அவசர முத்தத்தில் உள்ளுக்குள் அவஸ்தையை உணர்ந்தவள் அகரன் அவசரத்தில் விட்டு சென்ற அவன் இதழ் எச்சிலை மெதுவாய் துடைத்த படி நாணத்தால் தலை குனிந்தாள். முதல்முறை தனது முத்தத்திற்கு, மறுப்பேதும் கூறாமல் மௌனமாய் இருந்தவள் அழகில் ஈர்க்க பட்டவன் “சுஹீ என்னால் உன்னை விலகி இருக்க முடியவில்லை, உன் அப்பாவிடம் வந்து நான் பேசுகின்றேன் என்னுடனே வந்து விடு” என்று குரலில் ஏக்கத்தை கலந்து கூறினான், அகரன்.

“இன்னும் கொஞ்ச நாள் நானே அப்பாவிடம் சமயம் பார்த்து சொல்லிக்கொள்கிறேன் என் விருப்பத்திற்கு அப்பா தடையாக இருக்கவே மாட்டார்” என்று நம்பிக்கை தந்தாள் சுஹீரா.

சுஹீராவின் என் விருப்பத்திற்கு என்ற வார்த்தை அவள் மனதின் ஆசையை கூறிட “சுஹீ ஐ லவ் யூ” என்றவன் மீண்டும் அவளிடம் அந்த வார்த்தை கேட்டிட ஆவலாய் அவள் முகம் நோக்கினான். வெகு நேரம் தனிமையில் விளையாடி கொண்டிருந்த சோட்டு தான் கட்டிய மணல் கோட்டையை பார்க்கும் படி இருவரையும் அழைக்க சுஹீரா கவனம் அதில் திசைதிரும்பியது. முதன் முறை அவள் காதலை சொல்ல வந்த நேரம் இடையூறு செய்த சோட்டு மீது வந்த கோபத்தில் அருகில் இருந்த கல்லை எடுத்து எறிந்து சோட்டு கட்டிய மணல் கோட்டையை இடித்துவிட்டான், அகரன்.

இவ்வளவு நேரம் தான் கஷ்டப்பட்டு கட்டியதை களைத்து விட்ட கோபத்தில் அருகில் கிடந்த டப்பா நிறைய மண்ணை அள்ளி கொண்டு வந்து அகரன் மீது கொட்டிவிட்டு “வந்து என் கோட்டையை சரி செய்து கொடு இல்லை பீம் லட்டு சாப்பிட்டு அந்த கப்பலை உன் மீது தூக்கி எறிந்து விடுவேன்” என்று மிரட்டினான் சோட்டு.

தன் மீது ஒட்டிருந்த மணலை துடைத்து கொண்டே “டேய் குண்டு அது கப்பல் இல்லை படகு” என்று திறுத்தியவன், சோட்டு தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு “முளைக்கும் முன் உனக்கு இவ்வளவு கோபமா ?”என்று அகரனும் பதிலுக்கு கோபம் காட்டினான்.

“பாரு ஹீ” என்று சுஹீராவை துணைக்கு அழைத்தான் சோட்டு இவர்கள் செயலைக்கண்டு ரசித்து சிரித்து கொண்டு இருந்தவள் சோட்டு தன்னிடம் நியாயம் கேட்கவும், அகரனின் காதை பிடித்து வலிக்கும்படி திருகியவள் “அவன் சின்ன பையன் அவனுக்கு சரியாய் நீ சண்டையிடுவாயா?” என்று கூறி “ஒழுங்காய் சென்று சோட்டு கட்டியத்தைவிட இருமடங்கு பெரியகோட்டையை கட்டிக்கொடு இது தான் உனக்கு தண்டனை” என்று சுஹீரா தீர்ப்பு கூறிட, “சுஹீ நீ என்ன இந்த வாண்டு குண்டுவிற்கு சப்போர்ட் பண்ணுகின்றாய்” என்று அகரன் வருத்தமாய் வினவினான்.

“நீ தானே சொன்னாய் என் முதல் குழந்தை நீ என்று குழந்தை தவறு செய்யும் போது அம்மா தட்டி கேட்கமாட்டார்களா?” என்று மேலும் அவன் காதை திருகினாள் சுஹீரா. தன் காதல் வார்த்தைகள் அவள் இதயத்தில் பதிந்துவிட்டது என்ற இதமான எண்ணத்தில் போலியாய் முகம் சுருக்கி “ஷ் வலிகின்றது விடுடி ராட்சசி செய்து தொலைக்கிறேன்” என்று தனது காதை மீட்டு கொண்டு தண்டனையை நிறைவேற்ற கிளம்பினான், அகரன்.

தூசி துரும்பும் படியாமல் பகட்டாய் இருந்த அகரன் மண் என்றும் பாராது மண்டியிட்டு, கீழ் உதட்டை பற்களால் கடித்துக்கொண்டு, தனது அழுக்கு படியாத கைகொண்டு மணலை குவித்து முடியாமல் போக நெற்றியில் வழிந்த வேர்வை துளிகளை துடைத்து கொண்டு மும்முரமாய், சில முறை முயன்று முடியாமல் மீண்டும் மீண்டும் மணலை குவித்து பெரிய கோட்டை கட்ட முயன்று கொண்டிருந்த அகரனை புதிதாய் இது வரை பார்த்திடாத கோணத்தில் பார்த்தாள் சுஹீரா.

“இந்த அகரன் தான் அறிந்த அரக்கன் இல்லை… அவனுக்கு பிறர் உணர்வுகளை மதிக்க தெரியாது தவறு என்று தோன்றினாலும் அதை சரி செய்யத்தோன்றாது, இவன் அரக்கன் இல்லை என்று உள்மனம் கூற இவன் அரக்கன் இல்லை என் காதல் அழகன் என்று உள்ளதோடு சேர்ந்து சுஹீரா இதழும் உச்சரித்து…” காதலாய் பார்க்க துவங்கிவள் எண்ணத்தில் , அகரன் அருகிலிருந்த சோட்டு உருவம் மறைந்து அகரன் சாயலில் ஒரு குழந்தையை உருவகப்படுத்தி பார்த்து வெட்கத்தில் சிவந்தாள் சுஹீரா.

உன் ஒவ்வொரு நொடியிலும்
என் உயிர் துடிக்கும்
உன் ஒவ்வொரு அசைவிலும்
என் உள்ளம் துள்ளும்
உனக்காகவே துடிக்கும்
என் மனது
மறந்தும் மறந்துவிடாதே
அது உனது என்று…