அரக்கனோ அழகனோ 18

அரக்கனோ அழகனோ 18
0

அழகன்18

அச்சமின்றி
அலைந்தேன் நானடி…
உன் மீது இச்சை கொண்டு
பித்தன் போல்
திரிக்கிறேன் ஏனடி…

சங்கத்தின் மீட்டிங் முடிந்த கையோடு அகரன் சுஹீராவை நாடிச்செல்ல குகன் அதிகாவை தேடிவந்தான். எந்த வேலையும் இல்லை என்று கூறி வந்தாலும் இன்றுதான் முதன் முதலில் அலுவலகம் வந்தவள் என்ன செய்வாளோ? என்ற கவலையில் சென்றவன், தன்னை சுற்றி பல பைல்களை அடுக்கி வைத்துக்கொண்டு அதன் நடுவில் திருவிழாவில் காணாமல்போன குழந்தைபோல விழித்து கொண்டு அமர்ந்து இருந்தவளை கண்டு கவலை மறந்து சிரிக்க துவங்கி விட்டான்.

தான் இருந்த நிலை கண்டு குகன் சிரிக்கவும் வந்த “கோபத்தில் சிரிக்காதே , எனக்கு வரும் கோபத்தில் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது?” என்று இரு கைகளை நீட்டி கழுத்தை நெறிப்பது போல அதிகா பாவனை செய்ய, வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “இந்த பைல் மலைக்குள், நீ ஒழிந்தது கொண்டு என்ன செய்கின்றாய்?” என்று சில பைல்களை கஷ்டப்பட்டு தாண்டி சென்றவன், அவள் கையில் இருந்த காகிதங்களை வாங்கி ஒரு புறம் வைத்து விட்டு மீண்டும் அடக்க முடியாமல் சிரித்தான்.

அதிகா முகத்தில் கோபம் தாண்டி குகன் கேலி செய்யும் நிலையில் உள்ளோம் என்று தாழ்வுணர்ச்சியில் கண்ணீர் வந்தது. அதிகா கண்களில் நீரை கண்டவன் அவளின் கண்ணீருக்கு காரணமான சிரிப்பை நிறுத்தி விட்டு, “உன்னை இந்த கோலத்தில் பார்க்கவும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை அதி, மற்றபடி உன்னை காயப்படுத்தும் நோக்கம் இல்லை” என்று மன்னிப்பு வேண்டினான் குகன்.

குகனின் மன்னிப்பை விட அவனின் அதி என்ற அழைப்பே அதிகாவின் கண்ணீரை நிறுத்தி. புன்னகை தந்தது , கண்ணீரை துடைத்து கொண்டு “நீ தானே சொன்னாய் பெரிதாய் எந்த வேலையும் இருக்காது இந்த பைலை மட்டும் பார்த்தால் போதும் என்றாய்?, நானும் அதை தானே செய்தேன்” என்று கூறினாள் அதிகா.

கையில் கிடைத்த பைல் கொண்டு தனது முகத்தை மறைத்து கொண்டு குலுங்கி சிரிக்க துவங்கினான் குகன், “குகா வேண்டாம், என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அது அதோட பார்டர் தாண்டிவிட்டால் மவனே நீ பாடி தான்” என்று கோபத்தை அடக்கிய குரலில் அதிகா மிரட்டிட. இருகைகளையும் மேலே உயர்த்தி கொண்டு “நான் முழு சரண்டர்” என்றான் குகன்.

பெரிய மனது வைத்து அதிகா குகனை மன்னித்துவிட்டால், “இதை எடுத்து வைத்து கிளம்பவே விடிந்து விடும்போல, அரைநாள் நான் இல்லை என்றால், என் அறையையே அலங்கோலம் செய்து வைத்துவிடீர்களே என்ன அசிஸ்டெண்ட்ட்டோ” என்று புலம்பிய படி எல்லாவற்றையும் சரியாய் அடுக்க துவங்கினான் குகன்.

“ரொம்பையும் தான் புலம்பத்தே பியூனை விட்டால் அவன் அடுக்கி வைக்க போகிறான் இதற்கு இந்த புலம்பல்” என்று அதிகா சலித்துகொள்ள , “அவன் அவன் இஷ்டத்திற்கு அடுக்கி வைப்பான் அப்புறம் உங்கள் அத்தான் கேட்கும் போது, தேடித்தேடி எடுக்க லேட்டானால் இடி நான் தான் வாங்க வேண்டும் அவன் இல்லை” என்று குகன் பதில் தந்தான்.

“ சரி சரி என் உதவி வேண்டும் என்றால் அதை நேரடியாக கேட்க வேண்டியது தானே அதற்கு எதற்கு இப்படி சுற்றிவலைகின்றாய்?” என்று ஒவ்ஒன்றாய் எடுத்து கொடுக்க குகன் அதை வாங்கி சரியான இடத்தில் அடுக்கி வைத்தான்.

ஒரு புறம் வேலை நடந்து கொண்டிருக்க அதிகா தனது சந்தேகங்களை கேட்க துவங்கினாள், “கரண் எத்தனை நாளாய் காதலிக்கிறான்?” என்று அதிகா கேட்க, தயங்காமல் “அண்ணியை பார்த்த நாளிலிருந்து, ஆனால் அவருக்கு முன் அவர் காதலை அறிந்து கொண்டது நான் தான் தெரியுமா ?” என்று பெருமையாய் கூறியவன், “மற்றநேரம் எல்லாம் விருமாண்டி மாதிரி விறைத்துக்கொண்டு இருக்கும் பாஸ் அண்ணி பெயர் சொன்னதும் அப்படியே காதல் ரோமியோ போல மாறிவிடுவார்… கண்களில் காதல் இதழில் சிரிப்பு முகத்தில் பொழிவு…”
என்று குகன் அடுக்கிக்கொண்டே போனான்.

“ஆமாம் அதை நானும் தான் பார்த்தேன், இன்று சுஹீரா என்ற பெயரை சொல்லும் போதே கரைந்து போய்விட்டான்” என்றவள் “கரணின் காதலை அறிந்து கொண்ட உன்னால் என் காதலை ஏன் புரிந்துகொள்ளமுடியவில்லையா, குகா” என்று வினவிய அதிகா குரலில் ஏக்கம் நிறைந்து இருந்தது. அதிகாவை நேராய் பார்ப்பதை தவிர்த்தவன் “உங்களுக்கு நேரம் ஆகிவிட்டது நீங்கள் கிளம்புங்கள் மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்” என்றவன் அவள் கண் பார்த்து பேசுவதை தவிர்த்து மண்டியிட்டு அமர்ந்து மீதி பைல்களை வரிசையாக அடுக்க துவங்கினான், குகன்.

“குகா” என்று அழைத்த, அதிகா குரலில் இருந்த அளவில்லா காதல் குகனை தடுமாறவைத்தது “ப்ளீஸ் நீங்கள் கிளம்புங்கள் என்று கலங்கிய குரலில் குகன் கூற, “நான் உன் பெயரை உச்சரிக்கும் போது அதில் என் காதலையும் சேர்த்து உச்சரிப்பது உனக்கு தெரியவில்லையா?, இல்லை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கின்றாயா?” என்று அவளும் குகன் அருகில் மண்டியிட்டு “ஒரு பெண் வழிய வந்து என் காதலை சொல்வதால் என்னை தப்பானவள் என்று தோன்றுகின்றதா” என்று அதிகா வருத்தமாய் வினவினாள்.

அதிகாவின் கேள்வி குகன் மனதில் வலியை க் கொடுத்தது “உன்னை போய் தவறாய் நினைப்பேனா?” அதி நீ மட்டும் அகரன் பாஸ் குடும்பமாய் இல்லாமல் இருந்திருந்து வேறு வேறு யாராய் இருந்திருந்தாலும் என் காதலால் உன்னை திணறடித்திருப்பேன் என்று மனம் புலம்ப வாய்யோ வேறு வார்த்தைகளை உச்சரித்து… “என் பாஸ் குடும்பத்தை சேர்ந்தவர், நீங்கள் உங்களை என்றுமே என்னால் தவறாக நினைக்க முடியாது, நான் உங்களுக்கு பொருத்தமானவன் இல்லை, அது உங்களுக்கு புரியமாட்டேன் என்கின்றது, காதல் என்று யோசிக்கும் போது குணம் மட்டுமே கண்ணுக்கு தெரியும், காதலின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது தான் பணம் அந்தஸ்து எல்லாம் தடையாய் வரும், உங்கள் கார் உங்களுக்குக்காக காத்திருக்கும் நீங்கள் கிளம்புங்கள்” என்று தனது மனதின் வலியை மறைத்து கூறினான் குகன்.

“கார்” என்று கசந்த புன்னகை சிந்தித்தவள் “என் கணவர் வசதிக்கு வாழப்பழக வேண்டும் என்ற முடிவில் தான் இங்கு வேலைக்கு வந்தேன் குகா இனி நான் வாழ்ப்போவது சராசரி பெண்ணின் வாழ்கை தான், என் மாமாவின் வசதி பணம் எதையும் நான் இனி அனுபவிக்க போவதுயில்லை, காலையில் கூட பஸ்ஸில் தான் வந்தேன்”, என்றவள் குகன் தோள் பற்றி “என் அப்பா கூட மாத சம்பளத்தில் வேலை பார்த்தவர் தான் பகட்டான பணத்திமிர் பிடித்த பெண்மணியின் மகளாய் பார்க்கும் உனக்கு நான் என் அப்பாவின் இரத்தம் என்று நிரூபித்து காட்டுகின்றேன் “ என்றவள் சரி நான் கிளம்புகின்ரேன் என்று அறையை விட்டு வெளியேறினாள் அதிகா.

அதிகா சென்ற சிறிது நேரம் வரை அசையாது இருந்தவன் ஏதோ நினைவு வந்தவனாய் ஓடி சென்று அறையின் ஜன்னல் வழி அதிகா அலுவலகக் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதை பார்த்தவன் கையில் இருந்த பைலை ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு வேகமாய் கிளம்பி சென்றான் குகன். தனது வண்டியில் அதிகாவை பின் தொடர்ந்தவன் அவள் பஸ் ஏறி இரண்டு பஸ் மாறி அவள் வீடு செல்லும் வரை பின் தொடர்ந்தான் அதன் பின் தனது வீடு நோக்கி கிளம்பி சென்றான் குகன்.

அகரனுடன் பீச்யில் இருந்து திரும்பி வந்த சுஹீரா, “ இரண்டு தெரு தள்ளி இருக்கும் பார்க் சென்றுவர இவ்வளவு நேரமா?” என்று சுபத்ரா கேட்கவும் சுஹீராவை முந்திக்கொண்டு “நாங்கள் பீச் போனோம்” என்று உளறி கொட்டினான் சோட்டு.

“என்ன பீச்சா” என்று அவர் சந்தேகமாய் பார்க்க “அடடா குண்டா”, சரியான நேரத்தில் வாய்யை திறந்து வத்திவைத்துவிடு என்று மனதில் சோட்டுவிற்கு திட்டுகளை கொண்டு அர்ச்சனை செய்து விட்டு “ஆமாம் அம்மா இந்த சோட்டு தான் போயே ஆகவேண்டும் என்று ஒற்றைகாலில் நின்று அடம் பிடித்தான்” என்று பலியை தூக்கி சோட்டு மீது சுமத்தியவள், சுபத்ரா முகம் இன்னும் தெளிவுராமல் இருக்க “சரியான வாலுமா இந்த பையன் இவன் அம்மா அப்பா எப்படித்தான் சமாளிக்கின்றார்களோ” என்று பேச்சை திசை திருப்ப நினைத்தாள் சுஹீரா.

“அவன் அம்மா அப்பா சமாளிப்பது இருக்கட்டும், நீ இவனை எப்படி தனியாய் சமாளித்தாய்” என்றதும் “ஆமாம் அம்மா தனியாய் சமாளிக்கும் முன் போதும் போதும் என்றாகிவிட்டது குடிக்க ஏதாவது கொடுங்கள்” என்று அவரை அங்கிருந்து அகற்ற முயன்றாள் சுஹீரா. ஒரு வழியாய் சுபத்ராவும் வேறு ஏதும் கேட்கமால் அடுபடிக்குள் சென்று குடிக்க ஜூஸ் கலந்து கொண்டு வரச்சென்றார், அன்னை வருவதற்குள் சோட்டு அருகில் வேகமாய் சென்று “உன் திருவாய்யை திறக்காமல்யிருந்தால் தான் தினமும் வெளியில் அழைத்து செல்வேன் ஓகே வா?” என்றதும் “தினமும் அகி லட்டு வாங்கி தருவானா என்று சோட்டு தனது தேவையை கேட்க, உன் வேலையில் மட்டும் தெளிவாய் இரு” என்று எண்ணியவள் டதருவான் தருவான் நிறைய தருவான் அவன் தருவதை திண்க வாய் வேண்டும் என்றால் அமைதியாய் இருட என்று மிரட்டி விட்டு வந்து சோபாவில் அமர்ந்தாள் சுஹீரா.

தலையில் கைவைத்து அமர்ந்திருந்த சுஹீரா கையில் ஒரு டம்ளர் கொடுத்தவர் மற்றொன்றை பொம்மைகளுடன் விளையாடி கொண்டு இருந்த சோட்டுவிடம் ஒன்றை நீட்டினார் “இது என்ன எல்லாம் புது பொம்மைகளா இருக்கின்றது யார் வாங்கி கொடுத்தது?” என்று கேட்டார், சுபத்ரா.

“எங்க கூட வந்தானே அகி அவன் தான் வாங்கி கொடுத்தான், நான் கட்டின கோட்டையை கூட இடுச்சுட்டான், அப்புறம் ஹீ தான் அவனை அடிச்சு புதிசா பெரிசா கட்டித்தர வைச்சா ஆமாந்தான ஹீ” என்று சுஹீராவை வேறு சாட்சிக்கு அழைத்தான் சோட்டு. மனதில் தோன்றிய பதட்டத்தை மறைப்பது பெரும் பாடாக போனது சுஹீராவிற்கு. “அடப்பாவி இவ்வளவு நேரம் நான் இவனை மிரட்டி கொண்டு இருந்தேன் ஒரே வார்த்தையில் என்னை மிரளவைத்துவிட்டானே” என்று திருதிருவென விழித்துக்கொண்டு இருந்தாள் சுஹீரா.

“என் அம்மாவே நாம் சொல்கின்ற பதிலியிருந்து கேள்வி கணை தொடுக்கும் ஜிகஜால கில்லாடி, இதில் நீ வேற புட்டு புட்டு வைத்து என்னை போட்டு கொடுக்கின்றாயே நல்லவேளை பெயரை முழுதாய் சொல்லவில்லை, அது ஒரு ஆறுதல் இல்லை நான் பதில் சொல்லியே பரலோகம் போக வேண்டியது தான்” என்று தனக்குள் புலம்பி கொண்டு வாய்க்கு வந்த பொய்களை கூற துவங்கினாள் சுஹீரா.

“அகி நம்ம அகி என் கூட பள்ளியில் படித்தவள் அதற்குள் மறந்துவிட்டர்களா அகிலா சுருக்கமாய் அகிஅகி என்போமே!” என்றதும் அன்னை யோசிக்க துவங்கவும் “வரவர உங்களுக்கு மறதி அதிகமாகி விட்டது வயசானாலே இதே பிரச்சனை தான்” என்று யோசிக்க விடாமல் அவரின் எண்ணத்தை திசை திருபிவிட்டு.

“பீச்சுக்கு அகியும் வந்திருந்தாள் இவனை பார்த்ததும் பொம்மை வாங்கிக்கொடுத்தால், நீ அவளை தானே செல்கின்றாய் சோட்டு என்று அவன் தலையில் கைவைத்து ஆமாம் என்பது போல் தலையாட்ட வைத்தவள் பாருங்கள் ஆமாம்மாம் இவனும் அவளை தான் சொல்கின்றான்” என்றவள் ஒருவழியாய் சமாளித்தோம் என்று மூச்சு வாங்கி முடிப்பதற்குள் “சோட்டு அகி தந்தான் என்றான், அந்த அவன் யார்?” என்றதும் நிம்மதியாய் விட்ட மூச்சு காற்று எல்லாம் மீண்டும் நுரையிரலுக்குள் நுழைந்தது போல் திணறி போனாள் சுஹீரா.

“ஈ… என்னமா உனக்கு நம்ம சோட்டு மழலை மொழி தெரியாதா என்ன?, சுஹீரா என்ற என் பெயர் கூட இவன் வாயில் முழுதாய் நுழையாமல் ஹீ என்கின்றான், அவன் அப்பாவை கூட டாடி என்பதற்கு பதில் தாடி என்கின்றான், மம்மி டம்மி இவன் வாய்க்குள் லட்டு நுழையும் அளவிற்குகூட வார்த்தை நுழையாது, இவன் பேச்சையெல்லாம் கேட்டு நீ கஷ்டப்பட்டு பத்து மாதம் சுமந்து பெற்ற உன் பத்தரை மாதத்து தங்கத்தை போய் உன் கேள்விகளால் உரசிப்பார்கின்றாயே நியாயமா?” என்று வசனம் பேசி ஒருவழியாய் சமாளித்தாள் சுஹீரா.

இன்னும் இவன் என்ன சொல்ல போக்கின்றானோ அதற்கு எப்படி சமாளிக்க வேண்டுமோ என்று பயத்தில் இருந்த நேரம் சோட்டு என்று அவன் அம்மா வந்து அழைத்ததும் தன்னை காக்க வந்த தெய்வம் போல கும்பிடு போட்டு வரவேற்றவள், சோட்டுவை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு போய் அவரிடம் கொடுத்தாள் சுஹீரா. “பிள்ளையை நன்கு வளர்த்து வைத்து உள்ளீர்கள் அக்கா அரிச்சந்திரனுக்கு அடுத்த வாரிசு” என்று வஞ்சப்புகழ்ச்சியாய் வாழ்த்திவிட்டு, “சோட்டா பீம் லட்டு சாப்பிட்டு என்னை அரக்கனிடம் இருந்து காப்பாற்றுவேன் என்று சொன்ன ஆபத்பாண்டவா !, போதும் உன் லீலை கிளம்பு” என்று சோட்டு கன்னத்தை செல்லமாய் கடித்து அனுப்பிவைத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட படி வீட்டினுள் நுழைந்தாள் சுஹீரா.

“என்னமா இன்று இவ்வளவு நேரம் ஆகின்றது, அப்பாவும் அண்ணனும் வரவில்லையே” என்றாள் சுஹீரா. “அப்பாவிற்கு இப்போது எல்லாம் நிறைய புது ஆர்டர் வருக்கின்றதாம் முதலில் ஆர்டர் கான்செல் செய்து போனவர்கள் கூட திரும்ப நம்மிடமே ஆர்டர் தருக்கின்றார்கள் போல் அதானல் கொஞ்சம் வேலை அதிகம் என்று சுகன் சொன்னான்” என்று சுபத்ரா பதில் தந்து கொண்டு இருக்கும் போதே உள்ளே வந்த மகேஸ்வரன், “என்ன அம்மாவும் பொன்னும், கதை அளந்து கொண்டு இருக்கின்ரீர்கள்” என்றார். “என்ன அப்பா ரொம்ப பிஸி போல ஆனால் முகத்தில் கொஞ்சம் கூட அலுப்பு தெரியவில்லையே “ என்று கேலியாய் வினவினாள் சுஹீரா.

“ஆமாம் குட்டிமா உன் அண்ணன் நண்பன் ஒருவன் நிறைய ஆர்டர் வாங்கி க்கொடுக்கின்றான், அதானல் அடுத்தடுத்து புது ஆர்டர்கள் வந்து கொண்டேயிருக்கின்றன , சுகனும் பொறுப்பாய் தொழிலை நடத்துகின்றான் அதானல் எனக்கு அலுப்பு தெரியவில்லைடா!” என்று மகிழ்வுடன் கூறினார் மகேஸ்வரன்.

தனது தந்தையின் முகம் முன்பை போல் இயல்பாகவும் நிம்மதியாகவும் இருப்பதை கண்டு சுஹீரா மனமும் நிறைந்தது. என் கதை இருக்கட்டும் இன்று “என் குட்டிமா ரொம்ப சந்தோசமாய் தெரிகின்றாள் அதற்கு காரணம் என்ன?” என்று மகேஸ்வரன் வினவ.

“எல்லாம் இந்த சோட்டு தான் அப்பா பயங்கர வாலு தினம் தினம் ஏதாவது பேசி புதிதாய் செய்து என்னை சந்தோசப்படுத்துகின்றான்” என்றவள் மனதில் அகரன் முகம் தோன்றி “தினம் அவள் காதலால் என்னை மயக்கிக்கொண்டு இருக்கின்றான்” என்று தனக்குள் கூறி கொண்டாள் சுஹீரா.

“சுபத்ரா நாளை நம் வரதன் வீட்டு த்திருமணம் வரவேற்பு அவர்கள் வழக்கப்படி பையன் , வீட்டில் திருமணத்தை முடித்து கொண்டு இங்கு வந்து வரவேற்பு வைக்கின்றார்கள் , நாம் குடும்பத்தோடு வரவேண்டும், என்றான் நானும் சரியென்றுவிட்டேன் நாளை மாலை தயாராகி விடுங்கள்” என்றார் மகேஸ்வரன்.

“நாளை மாலையா? அப்படியென்றால் என் பகடுவை பார்க்கப் போக முடியாதா?, திருமணம் வீட்டிற்கு எல்லாம் நான் எதற்கு அப்பா ஒரே கூட்டமாய் இருக்கும் எனக்கு வேற வேலை உள்ளது” என்று வர மறுத்தாள் சுஹீரா.

“ஆமாம் பெரிய வேலை பொழுது போனால், அந்த வாண்டு சோட்டுயுடன் வெளியில் சுற்ற கிளம்பிவிடுகின்றால், கல்லூரி விடுமுறை அடுத்து தேர்விற்கு போனால் போதுமாம் இனியாவது வெளியில் சுற்றுவதை குறைத்து கொள்வாள் என்று நினைத்தால் இப்போது தான் இருமடங்கு சுற்றுகின்றாள், இன்று கூட யாரோ அகியாம் அவளுடன் பீச் வரை போய் வந்து இருக்கின்றாள் எல்லாம் நீங்கள் தரும் இடம் தான் என் அப்பாவிடம் மட்டும் நான் இப்படி செய்திருந்தால் என்றோ என் கால்களை உடைத்து அடுப்பில் போட்டு எரித்திருப்பார்” என்று சலித்து கொண்டார் சுபத்ரா.

“நம்ம காலம் வேறு சுபத்ரா , இப்போதும் அதே போல் பெண் பிள்ளைகளை அடக்கிவைக்க நினைப்பது தவறு, உன் அப்பா செய்த பிழையை என் பிள்ளைக்கு நான் செய்ய மாட்டேன், குட்டிமா நாளை மாலை அப்பாவிற்காக நேரம் ஒதுக்குங்கள் வரதன் நான் சந்திரன் எல்லாம் தொழில் துவங்கிய காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் நட்பு அப்பா வாக்கு வேறு கொடுத்துவிட்டேன்” என்று கெஞ்சலாய் கேட்க சுஹீராவால் மறுக்க முடியவில்லை சரியென்று தலையாட்டி விட்டு வந்தாள்.

தனது அறைக்குள் வந்தவள் கைபேசியை எடுக்க சுகன் இருமுறை தன்னை அழைத்திருப்பது அறிந்து மீண்டும் சுகனை அழைத்தாள், “என்ன சுகன் ஏதும் பிரச்சனையா?, அப்பா இப்போது தான் எல்லாம் சரியானது போல கூறினார்”, என்று வருத்தமாய் சுஹீரா வினவ, “இல்லை குட்டிமா எல்லா பிரச்சனையும் சீக்கிரமே தீர்ந்துவிடும் நமக்கு இப்போது நிறைய ஆர்டர் வருகின்றது சீக்கிரமே எல்லா கடனையும் அடைத்துவிடலாம் அதை சொல்ல தான் அழைத்தேன் நான் வரஇரவாகி விடும் அதை அம்மாவிடம் சொல்லிவிடு “ என்றவன் குரலில் களைப்பை தாண்டி மகிழ்வு நிறைந்து இருந்தது.

“அப்பாடா இனி அந்த அகரன் கடனை அடைத்துவிடலாம்” என்று நிம்மதி பிறந்தது எந்த நிலையிலும் “என் அப்பா யாரிடமும் கை ஏத்தும் நிலையில் இருக்க கூடாது. அது அகரனாய் இருந்தால் என்ன என் கணவனாய் இருந்தால் என்ன ?” என்று சுஹீரா நினைத்து கொண்டு இருக்கும் போதே அகரனிடம் இருந்து அழைப்பு வந்தது.

மற்ற நாட்கள் என்றால் வேண்டும் என்றே தவிர்பவள் இன்று அகரன் மீது முளைத்த புது எண்ணமும் பிரச்சனை தீர்ந்த மனநிலையில் வேகமாய் அட்டன் செய்யவைத்தது. “சொல் பகடு” என்று குதூகலமாய் விசாரிக்க வேறு செய்தாள் சுஹீரா.

சுஹீரா குரலில் பிரமித்து போனவன் ஒருமுறை அழைத்த எண் சரி தானா என்று சரிபார்க்க அது சரி என்று அறிந்து “என்ன இன்று இவ்வளவு உற்சாகமாய் என் அழைப்பிற்கு பதில் தருகின்றாய், நீ என் சுஹீ தானே?” என்று சந்தேகத்தை அவளிடமே கேட்டான் அகரன்.

“ஆங் சுஹீரா தான் பயப்படாதே , இன்று நான் ரொம்ப சந்தோசமாய் இருக்கின்றேன் காரணம் தெரியுமா?” என்று கேள்வியாய் வினவ, “காரணம் நான் இல்லை என்று மட்டும் தெளிவாய் தெரியும், என்ன சோட்டு வீட்டில் போட்டு கொடுத்து அதில் இருந்து சாமர்த்தியமாய் தப்பி விட்டாயா?” என்று அகரன் இது தான் என்று உறுதியாய் பதில் தந்தான்.

“அதுவும் ஒன்று இன்னொன்று என்ன தெரியுமா?, என் அப்பா தொழில் பழையபடி லாபம் வரத்துவங்கி விட்டது அதானல் சீக்கிரமே உன்னிடம் வாங்கிய கடனை அடைத்து விடுவோம், அதன் பிறகு நாங்கள் யாரிடமும் கடனாளியாய் தலை குனிந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தனது மகிழ்ச்சியின் காரணம் சொன்னாள்.

ஒரு நொடி எதிர் திசையில் அமைதி நிலவியது பின் “ என்னிடம் கடனாளியாய் இருப்பது உனக்கு அவ்வளவு கஷ்டமாய் இருக்கின்றதா? நடந்த பிரச்சனை நம் திருமணம் எல்லாவற்றிற்கும் அந்த கடன் தான் காரணம் என்று இன்னும் என் மீது வெறுப்பாய் இருக்கின்றயா? சுஹீ” என்ற அகரன் குரலில் தன்னை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் வேதனை வெளிப்பட்டது.

“ச்சீ அப்படி இல்லை பகடு எந்த தன்மானம் உள்ள மனிதனும் யாரிடமும் கடனாளியாய் கையேந்தும் நிலையில் இருப்பதை விரும்பமாட்டான், இது அந்த சந்தோசம் மட்டும் தான்” என்று சுஹீரா கூறவும், அகரன் மனம் தெளிவுற்றது “அப்படியென்றால் என் மீது வெறுப்பு இல்லை அப்படி தானே?” என்றவன் சுஹீரா மௌனத்தையே சந்தமாய் எடுத்து கொண்டு மேலும் தொடர்ந்தான், “சரி நீ எனக்கு கடன்காரியாய் இல்லாவிட்டால் என்ன என் செல்ல காதல்காரியாய் மாறிவிடு என்ன நான் சொல்வது சரிதானே ?சுஹீ” என்றான் அகரன்.

அகரன் குரலில் கேலியோடு எதிர்பார்ப்பும் கலந்திருக்க “என்ன காதல்காரி சூனியக்காரி என்று “ சுஹீரா என்று வேண்டும் என்றே புரியாதது போல கூற, சுஹீரா பதிலில் கடுப்பானவன் தனது மொபைல் கொண்டே தலையில் அடித்து கொண்டான் அகரன். “என்ன அங்கு சத்தம்?” என்றால் சுஹீரா. “உன் புத்திசாலி தனத்தை எண்ணி, என்னை நானே தலையில் தட்டி பாராட்டிகொண்டேன்” என்றான் அகரன். அகரன் சொன்ன தோரணையில் அவன் என்ன செய்திருப்பான் என்று புரிய வாய்விட்டு சிரிக்க துவங்கினாள் சுஹீரா.

“சிரிக்காதேடி அது சரி இப்போது என்ன திடீர்ரென்று உன் அப்பாவிற்கு ஆர்டர் வருகின்றது” என்றான். “அதுவா எல்லோரும் உன்னை போல் இருக்கமாட்டார்கள் அரக்கா, என் அண்ணனின் நண்பர் யாரோ உதவி செய்கின்றார் போல, அப்பா அப்படித்தான் சொன்னார்” என்று, சுஹீரா கூறியதும் “அது யார் என்று உன் அண்ணன் சொன்னானா?” என்றான் அகரன். “இல்லை” என்ற பதில் அறிந்து நிம்மதி பெருமுச்சு விட்டபடி, “இத்தனை நாள் இல்லாமல் திடீரென்று எதற்கு உங்களை தேடிவந்து உதவவேண்டும், இந்த காலத்தில் எதையும் எதிர்பார்காமல் உதவி செய்யமாட்டார்கள் செய்த உதவிக்கு பதிலாய் உன்னையே கேட்டுவிட போகிறான் அந்த பொல்லாதவன் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்து கொள்” என்று எச்சரிக்கை செய்து சிரித்தான் அகரன்.

“அப்படியே யாரவது வந்து என்னை கேட்டால், நீ பார்த்து கொண்டு சும்மாவா இருப்பாய்?, உனக்குள் இருக்கும் அரக்கன் விழித்துக்கொண்டு விலத்தனமாய் யோசிக்க ஆரம்பித்துவிடுவான், பின் நீ பின்னும் சதிவலையில் இருந்து யாரால் தப்பிக்க முடியும்?” என்று குத்தலாய் இருந்தது சுஹீரா பதில்.

“அதுவும் உண்மை தான் என்னிடம் இருந்து உன்னை பிரிக்கமட்டும் யாரவது நினைத்தால் இந்த அகரன் அரக்கனாய் மாறிவிடுவான் அது உன் குடும்ப ஆட்களாகவும் இருந்தாலும் சரி” என்று அகரன் கூறி முடிக்கும் முன், “போதும் நிறுத்து உன் வில்லன் வசனத்தை கேட்டு கேட்டு அலுத்து விட்டது” என்றாள் சுஹீரா, கடுப்புடன்.

“சரி அலுக்காத காதல் வசனம் நாளை நீ என்னை சந்திக்க வரும் போது பேசுகின்றேன் வெறும் பேச்சு மட்டும் போதுமா?, இல்லை செயலில் காட்டினால் இன்னும் நன்றாக இருக்குமா? சுஹீ” என்ற அகரன் குரலில் காதல் கரைபுரண்டு ஓடியது. அகரனின் நாளை சந்திப்பு அவளுக்கு நாளை சந்திக்க முடியாது என்ற நினைவினை தர “நாளை என்னால் வர முடியாது, நாங்கள் எல்லோரும் என் அப்பாவின் நெருங்கிய நண்பர் வரதன் அங்கிள் வீட்டு வரவேற்பிற்கு போக போகின்றோம், அதானல் நாளை இல்லை நாளை மறுநாள் உன் புலம்பலை வந்து கேட்கிறேன்” என்றாள், சுஹீரா. “நீ என்னை காண வருவதை தவிர்த்து எங்கும் செல்ல கூடாது” என்று கட்டளையிட்டான் அகரன். “அப்பாவிடம் சரியென்று சொல்லிவிட்டேன், அகி செல்லம் ப்ளீஸ் என் கண்ணுல என் தங்கம்ல என் பட்டு பகடு இப்போ நீ சரி செல்லுவியாம் நாளை மறுநாள் உன்னை பார்க்க வரும்போது, குச்சி மிட்டாய் குருவி ரொட்டி அக்கா வாங்கிட்டு வருவேனாம் எங்க என் சமத்து சரியென்று சொல்லுங்கள் பார்பபோம்” என்று கொஞ்சலான கெஞ்சலில் இறங்கினாள் சுஹீரா.

அவள் சொன்ன தோரணையில் சிரித்த படி “எனக்கு குச்சி மிட்டாய் குருவி ரொட்டி வேண்டாம் வேறு வேண்டும் தருவாயா?” என்றான் அகரன். சற்றும் யோசிக்காமல் அவன் சரியென்றதே போதுமாய் சம்மதம் சொன்னால் சுஹீரா “எனக்கு என்ன வேண்டும் என்று கேட்க மாட்டாயா? சுஹீ” என்றவன் குரலில் இருந்த உணர்வை கணிக்க முடியாமல் “ம்” மட்டும் கொட்டி அமைதியானாள் சுஹீரா.

“எனக்கு மிகவும் பிடித்த இத்தனை நாள் நீ தராமல் ஏய்து கொண்டு இருக்கும் தித்திப்பான எத்தனை முறை சுவைத்தாலும் திகட்டாத உன் இதழ் ரசகுல்லா வேண்டும்” என்றவன் குரலில் இருந்த கிறக்கம் சஹீராவையும் கிறாங்கடித்தது.

“என்ன நான் கேட்டது கிடைக்குமா கிடைக்கும் என்றால் நாளை நீ உன் அப்பாவுடன் சென்று கொள், என்றான் அகரன். நம்முடன் சோட்டு இருக்கும் போது என்ன கவலை சிறுவன் முன் அத்துமீறி நடக்க அகரன் ஒன்றும் அவ்வளவு மோசமானவன் இல்லை என்ற நம்பிக்கையில், அரைமனதாய் சரியென்றாள் சுஹீரா.

பாவம் அகரன் ஒரு முடிவு எடுத்தால் அதை சாதிக்க எதுவும் செய்வான் என்று புரியாமல் அவன் விரித்த காதல்வலையில் தானாய் மாட்டிக்கொண்டாள் சுஹீரா. மறுநாள் சுஹீரா அவள் அம்மாவின் கட்டாயத்தில் புடவை கட்டியிருந்தாள் அழகின் தேவதை இவள் தான் என்று கொள்ளை கொள்ளும் அழகுடன் தயாராகி கண்ணாடியில் பார்த்தவள் இப்போது அகரன் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்? என்று எண்ணம் வரவும் அகரனின் காதல் கண்கள் குறும்பாய் தன்னை தீண்டுவது போல் உணர்வு எழுந்தது சரியான அரக்கன் தொலைவில் இருந்தாலும் தொந்தரவு செய்கின்றான், என்று செல்லமாய் நினைத்தவள் கன்னம் தானாய் நாணத்தால் சிவந்தது.

முகத்தில் வெட்கம் பூசி கொண்டு வந்த மகளின் தோற்றம் அவள் திருமணத்திற்கு தயார் என்று அவளின் பெற்றோருக்கு உணர்த்தியது சுபத்ராவும் மஹேஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமாய் புன்னகைத்து கொண்டனர், அனைவரும் கிளம்பி வரவேற்பு விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர்.

“யமுனா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? நீ கிளம்பி வருவதற்குள் மாப்பிள்ளை பெண்ணும் கிளம்பி ஹனிமூன் போய் விடுவார்கள்” என்று மனைவியை கேலி செய்து விட்டு கீழே இறங்கி வந்தார் ஈஸ்வரன்.

“என்னமா அதிகா நீயும் தயாராகி விட்டாயா? உன் அம்மா வரவில்லை போல என்று கேட்டபடி ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தார், ஆமாம் மாமா அம்மவிற்கு கொஞ்சம் தலை வலிக்கின்றதாம்” என்றவள், கண்கள் மட்டும் வாசலில் குகன் வருகின்றானா? என்று ஆவலாய் நோக்கி கொண்டிருந்தது.

“என்னமோ உன் சொந்தத்தின் விருந்து போல குடும்பமே கிளம்பி கொண்டு இருக்கின்ரீர்கள் நம் அருகில் கூட நிற்க தகுதியற்ற கூட்டம் இதற்கு நீ சென்றே ஆக வேண்டுமா?, நம் வீட்டு வேலையாட்களிடம் பரிசை கொடுத்து அனுப்பினால் போதும் நல்லவேளை, என் மருமகன் ஒருவனுக்காவது யாரை எங்கு வைக்க வேண்டும் என்று தெரிந்துள்ளது “ என்று சலித்து கொண்டு இருந்தார் கலையரசி.

“யாரை எங்கு வைக்க வேண்டும் என்கின்றீர்கள்?” என்று கேட்டபடி வந்த அகரனும் வெளியில் எங்கோ செல்ல தயாராகி வர “என்னப்பா நீயும் வெளியில் கிளம்பிவிட்டாய் போல” என்று வாய் நிறைய புன்னகையை நிறைத்து கொண்டு கலையரசி அகரனிடம் வினவ.

“எங்கோ இல்லை அப்பா செல்லும் திருமண வரவேற்பு தான்” என்றதும் “என்ன அகரா முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்றாய் மீட்டிங் கான்செல் ஆகிவிட்டதா” என்றதும் “மீட்டிங் அங்கு தான் அப்பா” என்று உளறிய அகரன் “என்ன மீட்டிங் அங்கு தானா?” என்று கலையரசி விசித்திரமாய் நோக்க, “என்ன அப்பா நீங்கள் தானே நமது சுற்றத்தாரின், நல்லது கெட்டதில் கலந்து கொள்ளவேண்டும் , அப்போதுதான் நட்பு வட்டம் விரிவடையும் என்றீர்கள்!, அது மட்டும் இல்லை சங்கத்தின் தலைவன் என்ற முறையில் எனக்கு தனி அழைப்பு வேறு உண்டு” என்று பெருமையாய் சட்டை காலரை தூக்கிவிட, “அப்போது தான் அகரன் உடையை கவனித்த கலையரசி “சரி சரி இவ்வளவு சொல்கின்றீர்கள் கொஞ்சம் பொறுங்கள் நானும் கிளம்பி வருகிறேன்” என்று எழுந்து கொள்ள, அதிகாவிற்கு பகிறீரென்றது சும்மாவே பக்கத்தில் வந்து பேச தயங்கும் குகன் அம்மா வந்தால் தனது பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டான், அப்புறம் யாருக்காக இவ்வளவு அலங்காரம்?, இந்த அம்மாவை எப்படி கழட்டி விடலாம் என்று யோசனையில் முழ்கினாள் அதிகா.

“அம்மா என்ன அம்மா நீ யார்?, தேவேந்திர மூர்த்தி செல்வ மகள் உன் அந்தர்ஸ்த்து என்ன? நீ போய் ஒரு சாதாரண திருமணம் வரவேற்பில் கலந்து கொள்வதா?” என்று அவர் கர்வத்தை அசைத்து பார்க்கும் கேள்வி கேட்டாள் அதிகா.

“நீ சொல்வதும் சரி தான் அதிகா ஆனால் எனக்கு என்னவோ இந்த அகரன் நடவடிக்கை மீது சந்தேகமாய் இருக்கிறது, எப்போதும் போல இல்லாமல் இன்று என்னவோ இவன் முகத்தில் ஒரு பொழிவு… அவன் உடையை கவனித்தாயா இவன் கல்யாண வீட்டிற்க்கு போகின்றானா இல்லை இவனுக்கே கல்யாணம் பண்ண போகின்றானா? என்று தெரியவில்லை, சும்மாவே இவனை வளைத்து போட ஒரு கூட்டம் பின்னாலேயே சுற்றும் இன்று இவன் வேறு மாப்பிள்ளை மாதிரி இருக்கின்றான் அங்கு வந்தவள்களில் எவளையாவது பார்த்து மயங்கி தொலைத்து விட்டால் அதனால் தான் நானும் உங்களுடன் வந்து மாப்பிள்ளை அருகில் யாரையும் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வேன்” என்று கலையரசி தான் வருவதற்கான காரணம் சொன்னார்.

“ஆமாம் இவன் இனிதான் மயங்க போகின்றான் பார் ஏற்கனவே மயங்கி கரைந்து கொண்டு இருக்கின்றான்” என்று அதிகா முணுமுணுக்க என்ன சொன்னாய் என்றார் கலையரசி.

“அந்த கவலை உனக்கு வேண்டாம் என்றேன், அம்மா அதான் நான் கரண் உடன் போகின்றேன் இல்லையா? என் பார்வை அவனை விட்டு விலகாது என்றவள் அகரன் பின் இருந்து வந்து கொண்டு இருந்த குகன் மீது இருந்தது.

“என் காதலை அடைய யார் குறுக்கே வந்தாலும் அவர்களை எப்படி என் வழியில் இருந்து அகற்றவேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும், இப்போது உன்னை அகற்றியது போல” என்று அதிகா கூறி முடிக்க “என்ன என்னை அகற்றினாயா?” என்று புரியாமல் கேட்டார் கலையரசி. “உன் மகள் இல்லையா, உன் வழி பயன்படுத்தி அகற்றிவிடுவேன் என்றேன், நீ ஒன்று செய் நல்லா வாய்க்கு ருசியாய் சமைக்க சொல்லி உன் தலை வலி குறையும் வரை நன்றாக சாப்பிட்டு ஓய்வுஎடு மற்றதை நான் கவனித்து கொள்கிறேன்” என்று தாய்க்கு தைரியம் கூறிக்கொண்டு இருந்தாள் அதிகா.

யமுனாவும் தயாராகி வர அகரன் குடும்பம் கிளம்பி அவர்களின் தொழில் முறை நண்பர் வரதன் வீட்டின் திருமணம் வரவேற்பில் கலந்து கொள்ள கிளம்பினர்.

குகன் காரை ஒட்ட. முன் இருக்கையில் அகரன் அமர்ந்து இருந்தான் ஈஸ்வரன் யமுனா வேறு காரில் வர அதிகா அகரன் காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.

“மக்கு குகா உனக்காக தான் இவ்வளவு அலங்காரம், ஆனால் கவனிக்கின்றானா? சரி வாயால் பாராட்ட வேண்டாம், ஒரு கண் பார்வையில் அழகாய் இருக்கின்றாய், என்று சொல்ல கூடாது” என்று மனதில் புகைந்து கொண்டே வந்தவள். “அகரன் இந்த உடை எனக்கு எப்படி இருக்கிறது?” என்று அகரனிடம் கேட்பது போல் கண்ணாடி வழி குகனை பார்த்து கேட்டாள் அதிகா.

தனது மொபைலில் எதையோ பார்த்து கொண்டு வந்தவன் பார்வையை திருப்பாமலேயே “ம்… நன்றாக உள்ளது” என்றிட குகனும் கண்ணாடி வழி பார்த்தான், அவன் கண்களில் தெரிந்த மின்னல் குகன் தன்னை கவனித்து விட்டதை புரிய “ரொம்ப அழகாய் இருக்கிறேன் தானே?” என்று மீண்டும் கேட்க, பொறுமை இழந்தவன் போல குகன் தலையில் ஒரு போடு போட்ட அகரன் “என்ன விளையாட்டு இது” என்று சிடுசிடுத்தான், பின் பக்கம் ஏதோ சத்தம் வரவும் அகரன் திரும்பி பார்க்க, கோபமாய் தன் கையில் இருந்த பர்ஸ் கொண்டு சீட்டில் ஓங்கி அடித்தவள் அகரன் கவனிக்கவும் அவனை, கோபமாய் முறைத்தாள் அதிகா.

குகனை அடித்ததால் வந்த கோபம் என்று புரிய “அப்பப்பா என்ன ஒரு அனல் காற்று?, குகா “ஏசி"யை கூட்டிவை இல்லை, இங்கேயே எறிந்து விடுவேன்” என்று அகரன்,  சிரிக்க கண்ணாடி வழி பார்த்து அதிகாவை முறைத்தான், குகன். விழா நடக்கும் இடம் வந்ததும் அகரன் இறங்கி சென்றிட அவனை பின் தொடர்ந்த அதிகாவை கைப்பற்றி தடுத்த குகன் “எவ்வளவு தைரியமிருந்தால் என் முன்பே என் பாஸ்ஸை முறைபாய்... இனி இது போல நடந்து கொள்ளாதே எல்லா நேரமும் பொறுமையாய் சொல்லமாட்டேன்” என்று எச்சரித்தான் குகன்.  குகனின் உரிமையான கோப வார்த்தை விட அவன் கை தன்னை தீண்டியது எண்ணி மகிழ்வில் இருந்தவள் “உன் பாஸ் மட்டும் என் முன்பே என் குகனை அடிக்கலாமா?, எனக்கு கோபம் வராது” என்று சிறு பிள்ளை போல் உதட்டை குவித்து பழிப்பு காட்டினாள்.  ஒரு நொடி அவள் இதழில் நிலைத்த பார்வையை பின் விலகி “என் வாழ்வில் முதலில் பாஸ் தான் அப்புறம் தான் எல்லாம் அது நீயாய் இருந்தாலும் சரி” என்று கோபத்தில் தன் மனதில் அவளுக்கும் இடம் உள்ளது என்று உளறினான், குகன்.

குகன் தன்னை பற்றி இருந்த கையை எடுத்து தனது இடையோடு சேர்த்து கொண்ட அதிகா, குகன் கையை விலக்க முயல, “இன்னும் என்ன அதான் உன் வாழ்வில் நான் இருக்கின்றேன் என்று இப்போது தானே நீ ஒத்துக்கொண்டாய்” என்று சிரிக்கவும், குகன் கைகள் தானாய் வளமையான இடையில் மெதுவாய் வருட சூழ்நிலை புரிந்து வேகமாய் விலகியவன் “உன்னை திருத்தவே முடியாது” என்று வேகமாய் முன்னே சென்றான் குகன்.

குகன் கை பட்ட இடம் குறுகுறுக்க முகம் சிவக்க அவனை பின் தொடர்ந்தவள் “வேண்டும் என்றால் ஒன்று செய், என்னை திருமணம் செய்து கொண்டு அதன் பின் என்னை திருத்தும் பணியில் இறங்கிவிடு குகா” என்று அவனை பின் தொடர்ந்தாள் அதிகா.

இவர்கள் செயலை கவனித்து கொண்டு இருந்த ஈஸ்வரன் “என்ன இது யமுனா நம் அதிகாவிற்கு குகனை பிடித்திருப்பது போல தெரிக்கின்றது, இந்த விவரம் மட்டும் கலையரசிக்கு தெரியவந்தால் என்ன செய்வாள் என்றே தெரியாது!” என்று ஈஸ்வரன் பயந்து போய் கூறிட, “அதிகா விருப்பம் ஒன்றும் தவறு இல்லையே குகனும் நல்ல பையன் தானே உங்கள் தங்கையை சம்மதிக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று பெரும் பொறுப்பை தனது கணவர் தலையில் கட்டிவிட்டு நிம்மதியாய் அகன்றார் யமுனா.

விழா நடக்கும் இடத்திற்குள் வந்த அகரனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது யாரும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது சுற்றி இருந்தவர்களின் பதட்டத்தில் தெளிவாய் தெரிந்தது இதுவரை எந்த தனிப்பட்ட நபர்களின் சொந்த நிகழ்விற்கும் அகரன் தலை காட்டியது இல்லை அப்படி பட்டவன் தங்கள் வீட்டு விழாவிற்கு வந்ததை எண்ணி மிகவும் மகிழ்ந்து போன வரதன், வாசலுக்கே வந்து வரவேற்றார் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கார்டன் ஏரியா முழுவதும் விழாவிற்கான ஏற்பாடு செய்ய பட்டுயிருக்க, அகரனை உள்ளே அழைத்து சென்றவர் தன் மகளையும், மருமகனையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அகரனை தொடர்ந்து ஈஸ்வரன், யமுனா தம்பதிகள் உள்ளே வர அவர்களுடன் சேர்ந்து இணைத்து கொண்டான் அகரன். ஈஸ்வரன் வெகு நாட்கள் கழித்து தனது நட்புகளை சந்திப்பதில் சந்தோசமாய் ஒவ்வொருவரையும் சந்தித்து பேசியபடி இருக்க ஒரு இடத்தில மகேஸ்வரன், சுபத்ரா சுகன், இருக்க அவர்களுடன் சந்திரன் அவர் மகன் உதயன் மற்றும் மனைவி வேணி பேசிக்கொண்டு இருந்தனர்.

வந்ததில் இருந்து அகரனின் கண்கள் சுஹீராவை தேட ஒருவழியாய் அவளை கண்டு விட்டவன் அவளை விட்டு பார்வையை விலக்க முடியாமல் திணறிப்போனான். “என் சுஹீ” என்று ஒவ்வொரு முறையும் பார்வையில் தன்னவளின் அழகை தனக்குள் நிறைத்து கொண்டவன் , காதல் கண்களை கைகளாய் மாற்றி பார்வையில் வருட துவங்கினான். இன்னும் சுஹீரா தன்னை கவனிக்காமல் இருக்க “உன்னையே ஒருவன் விழுங்குவது போல ரசித்துக்கொண்டு இருக்கின்றேன் நீ என்ன என்றால்?, என் நினைவு சிறிதும் இன்றி இருக்கின்றாய் இப்படியே விடக்கூடாதே இது தப்பிச்சே” என்று எண்ணியவன் தனது அம்மா, அப்பாவை அழைத்துக்கொண்டு அவர்களை நெருங்கிச்சென்றான் அகரன்.

குகனும் அகரனை பின் தொடர அதிகா அவன் கைப்பற்றி “அவர்கள் குடும்பமாய் பேச போகின்றார்கள் வா நாமும் நம் குடும்பம் பற்றிப்பேசுவோம்” என்று அழைக்க இன்று தெளிவாய் பேசிவிட வேண்டும் இதற்கு மேலும் காதல் கண்றாவி என்று, என் பின் சுற்ற கூடாது என்று தெளிவாய் கூறிவிட வேண்டும் என்று மறுத்து பேசாமல் அதிகாவுடன் சென்றான் குகன்.

ஈஸ்வரனுக்கு இருவரும் நல்ல பழக்கம் என்பதால் அருகே சென்றதும் தானாய் பேசத் துவங்கினார் “என்ன மஹேஸ்வரா நலமா?” என்று ஈஸ்வர் குரல் கேட்டு மகிழ்வாய் திரும்பியவர், அங்கு அகரனும் உடன்யிருக்க முக மாறுதலை மறைத்து “என் நலத்திற்கு என்ன குறை ஈஸ்வர் நீ தான் சங்கத்துப்பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டேன் என்கின்றாய்?” என்று நட்பாய் வினவினார்.

“ஆமாம்பா எல்லாம் போதும் என்று பொறுப்பை பையனிடம் கொடுத்து விட்டு ஒதுங்கிவிட்டேன்” என்றவர், “இது என் மனைவி யமுனா” என்று அறிமுகம் செய்து வைக்க “இது என் மனைவி சுபத்ரா மகன் சுகந்தன்” என்றவர் “இது என் மகள் என்று சுஹீராவை” அறிமுகம் செய்துவைத்தார்.

யமுனாவிற்கு ”சுஹீரா” பெயர் நினைவு வர தன் மகனை “இவள் தானா?” என்பது போல பார்த்தார், ஆனால் அகரன் கண்களோ சுஹீராவை விட்டு விலகாமல்யிருக்க “இவளே தான்” என்று முடிவுக்கு வந்தவர், சுஹீரா அருகில் சென்று “அழகாய் லட்சணமாய் இருக்கின்றாய்!” என்று கன்னம் தொட்டு ரசனையாய் கூற முகம் சிவக்க அகரனை நோக்கினாள் அவனும் கண்களால் அதையே கூற வெட்கம் தாளாமல் தலைதாழ்த்திக்கொண்டாள் சுஹீரா.

“என்ன ஈஸ்வர் இங்கு மகேஸ்வரன் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிக்கின்றார் போல ?” என்று சந்திரன் கேலிபோல் ஏளனமாய் வினவ. “ஏனப்பா உன்னை தெரியாமல் போகுமா? இவ்வளவு பெரிய உருவம்” என்று பதில் கொடுத்தவர் சந்திரன் முகம் கோபமாய் மாறியிருக்க “இது யார்?” என்று சொல்லவில்லையே என்று அருகில் இருந்தவனை பார்த்து கேட்டார். “இது என் மகன் உதயன் டெல்லியில் இருந்தான், இப்போது தான் வந்தான்” என்று அறிமுகம் செய்து வைத்தார் சந்திரன். சுகன் அகரன் அருகில் வந்து கைகுலுக்கி “உங்கள் உடை சூப்பர் அகரன்” என்று பராட்டுத்தலாய் கூற அதை நீ சொல்லி என்ன பயன் மச்சான் உன் தங்கை திருவாய் திறந்து கூறினாள், போதும் வானத்தில் மிதப்பேன் என்று தனக்குள் நினைத்து கொண்டான்.

மெதுவாய் நகர்ந்து சுஹீராவுடன் நின்றிருந்த தனது அன்னை அருகில் சென்றவன் “தேவதை தான் வானத்திலிருந்து தரையிறங்கி வந்துவிட்டதா? என்று குழம்பி போனேன், இப்படி அப்பாவி ஜீவனை உன் அளவில்லா அழகால் கொடுமை செய்வது நியாயமா? என்று கேட்டு சொல்லுங்கள் அம்மா” என்று யமுனாவிடம் கூற திகைத்து போனாள் சுஹீரா. எல்லோர் முன்பும் இப்படி பார்க்கின்றான் என்றால் அவன் அம்மாவிடம் வந்தே இப்படி கேட்கின்றான் என்று சுஹீரா முழிக்க. “என்ன செய்ய அகரா கல்லாயிருந்த உன் இதயத்தை கரைக்க இந்த அளவு அழகேனும் தேவை என்று கடவுள் பார்த்து பார்த்து செய்து என் மருமகளை அனுப்பி இருக்கின்றார்” என்று யமுனாவும் பதில் தர, சுஹீராவிற்கு மயக்கம் போடாத குறைதான், இவர்களுக்கு என்னை தெரியுமா என்ற யோசனை மறைந்து எல்லாம் தெரியுமா என்று திகைப்பு வந்தது.

ஈஸ்வரன் மகேஸ்வரன் பேசிக்கொண்டு இருக்க மகேஸ்வரன் மெதுவாய் “நான் உன்னை எப்படி சந்திப்பது என்று தயங்கியக்கொண்டு இருந்தேன் ஈஸ்வர்” என்று தயக்கமாய் கூற, “அந்த சங்கத் தேர்தல் பற்றி கூறுகின்றாயா அதைவிடு அன்று அகரன் பற்றி உனக்கு தெரியாது அவனும் நீ சொன்னது போல் சும்மா ஊர் சுற்றிக்கொண்டு தானே இருந்தான், எதை பற்றியும் கவலை இல்லாமல்” என்றவர் ஆறுதலாய் மகேஸ்வரன் தோளை தட்டி கொடுத்தார் ஈஸ்வரன், “உன் நண்பன் ஜெயிக்க நீ ஒரு யுக்தியை பயன்படுத்தினாய் அவ்வளவு தான் அகரனை பற்றி வேண்டும் என்றா? அப்படி சொன்னாய் அவனுக்கும் உனக்கும் என்ன முன் விரோதமா என்ன? நானும் உன் நண்பன் தானே மகேஸ் எனக்கு உன் குணம் தெரியாதா?, என்று மேலும் கட்டியணைத்து கொள்ள மகேஸ்வரன் குற்றவுணர்வு மெதுனாய் மறைய, சந்திரன் வயிற்றெருச்சயில் புகைந்தார், உதயன் அகரன் சுஹீராவுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து புகைந்து கொண்டு இருந்தான்.

அகரனை தேடித்தேடி விழுந்துவிழுந்து பெண்கள் கவனிக்க அதை கண்ட சுஹீராவிற்கு கண்களில் கோபத்தை திரட்டிக்கொண்டு அகரனை முறைத்து கொண்டே திரிந்தவளை, யாரும் இல்லா செடி மறைவில் இழுத்து சென்றவன், “என்ன என் செல்ல பொண்டாட்டி, இன்று இப்படி கண்ணாலே என்னை எரிகின்றாள்” என்று அவள் கன்னம் தொட்டு வினவிட, கோபமாய் கையை தட்டிவிட்டவள் “என்னை ஏன் தொடுகின்றாய்? பொறுக்கி அதற்கு தான் உன்னை சுற்றிசுற்றி வரும் பெண்கள் இருக்கின்றார்களே!” என்று கோபம் காட்டினாள். சுஹீராவின் பொறுக்கி என்ற வார்த்தை அகரனுக்கு கோபத்தை கொடுத்தது , கைகளை இறுக பற்றியவன் “என்னை பார்ப்பவர்கள் எல்லாம் பொறுக்கிபொறுக்கி என்றால் என்ன அர்த்தம்?, நான் தான் அந்த பெண்கள் பின் அலைந்து கொண்டு இருக்கின்றேனா?, இல்லை அவர்கள் மேல் விழுந்து வம்பு செய்து கொண்டு இருக்கின்றேனா ?” என்று கோபமாய் அடிக்குரலில் சீறினான் அகரன்.

அகரன் பற்றி இருந்த இடம் வலியெடுக்க கண்னை மூடி அந்த வலியை தாங்கி கொண்டிருந்தவளை தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் “உன்னை தவிர வேறு எந்த பெண்ணையும் , காதல் கொண்டு பார்த்தது இல்லை சுஹீ! உன்னை தவிர வேறு எந்த பெண்ணையும் என் கரங்கள் காமமாய் தீண்டியது இல்லை… வேறு இதழ்களில் இது போல் இதம் தேடியது இல்லை…” என்று இதழோடு இதழ் உரசிட ஒட்டி நின்றவன். “என்னை யாரும் எதுவும் சொல்லட்டும், ஆனால் நீ மட்டும் உன்னை விடுத்து வேறு பெண்னை பார்க்கிறேன் என்று கூறி என்னை வதைக்காதே “ என்றவன் உரசிக் கொண்டு இருந்த இதழில் மொத்தமாய் முத்தம் பதித்து உயிர் வரை உறிஞ்சத்துவங்கினான் அகரன்.

கண்மூடி அவன் காதலுக்கு பரிசாய் தன்னை இழந்து கொண்டு இருந்தவள் அகரன் கைகள் மெதுவாய் சேலை விலகியிருந்த பிறை இடையில் கோலமிட , இயல்பாய் கைகள் கொண்டு அதை தடுத்தாள், அகரன் விடாமல் முன்னேறி சேலைக்குள் நுழைந்திட முயல, அவன் கைகள் செல்லும் திசையரிந்து அவன் நோக்கம் புரிய பெற்றவள், தனது பலம் மொத்தம் திரட்டி தன்னிடம் இருந்து பிரித்தவள் “சரியான திருட்டு பூனை இன்று சந்திக்காமல் இருப்பதற்கு நாளை தானே லஞ்சம் கேட்டாய்? அதை இன்றே திருடி கொண்டாய் நாளை ஒன்றும் இல்லை நீ பட்டினி தான்” என்று விலகிச்செல்ல முயன்றாள் , “ம்… அது நாளைய கணக்கு சுஹீ இது இன்றைய தண்டனை” என்றவன் விடாமல் பிடித்து இழுக்க, “என்ன தண்டனை” என்று அவன் பிடியில் இருந்து விடுபட போராடினாள் சுஹீரா.

“என்னை பொறுக்கி என்றதற்கு தண்டனை” என்று சிரித்தவன், “இந்த காதல் பொறுக்கி எப்படி இதழிலிருந்து முத்தங்களை பொறுக்குவான் என்று காட்டிக்கொண்டு இருந்தேன்” என்றான் அகரன். ஒருவழியாய் அவன் பிடியில் இருந்து விலகி ஓடியவள் எதிரில் வந்தவர் மீது மோதி கொள்ள மன்னிப்பு வேண்டி கொண்டு தனது குடும்பம் இருந்த இடத்தை வந்தடைந்தாள் சுஹீரா.

தன்னை மோதி சென்றவள் பின் செடி மறைவில் இருந்து அகரன் வெளிப்படுவதை கண்டவர் கண்கள் குரோதத்தால் மின்னியது.