அரக்கனோ அழகனோ 19

அரக்கனோ அழகனோ 19
0

குகனை தனியாய் அழைத்து சென்ற அதிகா, “குகன் இது போல பெரிய அளவில் எல்லாம் நம் திருமணம் நடக்க வேண்டாம், உன் ஊரில் உன் உறவுகளின் முன் ஒருமஞ்சள் கயிறு கொண்டு நம் பந்தத்தின் முடிபோட்டுவிடு அது போதும் எனக்கு” என்னவள் மனதில் கற்பனையில் அதனை கண்டு உள்ளம் மகிழ்ந்து போனாள் அதிகா. “சும்மா வேண்டாததையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள் அது நடக்க வாய்ப்பே இல்லை, எனக்கு உங்கள் மீது அதுபோல எண்ணமில்லை எங்கள் ஊர் பக்கம் முறை பெண்னை தான் மணந்து கொள்வார்கள் எனக்கு முறை பெண் இருக்கின்றாள் அதானல் என்னை மறந்து விடுங்கள்” என்று எழுந்து சென்றான் குகன்.

கண்ணாடி உடையும் ஓசை கேட்டு திரும்பியவன் அதிகா கையில் இருந்த கண்ணாடி டம்ளர் உடைந்து அது அவள் கையை கிழித்து இரத்தம் வழிந்திட வேகமாய் அவளை நெருங்கி கையில் குத்தி யிருந்த கண்ணாடியை வெளியில் மெதுவாய் எடுத்தான், தனது கைக்குட்டை கொண்டு கட்டுகட்டி விட்டு “என்ன அதி இது உன் பிடிவாத்திற்கு அளவில்லாமல் போய் விட்டது” என்று கண்களில் நீர் திரையிட அவளின் வலியை தனதாய் உணர்ந்து கதறிக்கொண்டு இருந்தான் குகன். “நான் செய்வது பிடிவாதம் என்றால், நீ என்ன செய்து கொண்டு இருக்கின்றாய்? உன் காதலை மறைந்து , உன் வார்த்தையால் என்னை கொன்றுக்கொண்டு இருக்கின்றாய், உனக்கு மனைவி என்றால் அது நான் மட்டும் தான் அது என் இடம் வேறு எவளுக்கும் விட்டுத்தர மாட்டேன், அது உன் முறை பெண்ணாய் இருந்தாலும் சரி” என்று காயத்தின் மீது அவன் கட்டியகட்டை விலக்கியவள் , “எனக்கு வலித்தால் இவன் துடிப்பானம் கேட்டால் காதல் இல்லையாம் இதை நம்ப ஏதாவது முட்டாளை தேடிபிடி” என்று கோபமாய் அங்கிருந்து கிளப்பி சென்றாள் அதிகா.

அதிகா பிடிவாத காதலில் செய்வது அறியாது திணறி போனான் குகன். எல்லோரும் இருக்குமிடம் பார்த்து வந்தவள் பிறர் அறியாதபடி தனது கையை மறைத்து கொண்டு அமர்ந்தாள் அதிகா. அகரன் அருகில் இருந்த சுஹீராவை கண்டவள் “அகரன் கண்ணில் தெரிந்த காதலும் அதன் பிரதிபலிப்பாய் அவள் கண்ணில் நீ என்னவன்!, என்ற கர்வம் தெரிந்திட சரியான பொருத்தம் என்று மனதில் மகிழ்ந்து கொண்டவள்” கண்கள் தானாய் குகனை தேடியது. குகனும் சரியாய் அதிகாவைத் தேடி வந்து நெருங்கி ஈரம் நனைத்திருந்த தனது கைக்குட்டையை வலுக்கட்டாயமாக அவள் கையில் காட்டியவன் “இதையும் கழட்டினால் கன்னம் பழுத்து விடும்” என்று கோபமாய் முறைக்க அவன் கோபத்தை கூட குளுமையாய் அனுபவித்தாள் அதிகா.

உணவு வேலை அனைவரும் வேண்டியதை எடுத்துக்கொண்டு மேசைத்தேடி அமர அகரன் தனக்கு அருகில் இடம் விட்டு சுஹீராவை கண்களால் அழைத்து கொண்டு இருந்தான் அவளும் போக்கு கட்டி விட்டு, பின் அகரன் முகம் சுருங்கவும் அவன் அருகில்யிருந்த இடத்தில் வந்து அமர்ந்தாள். அதிகாவிற்கு சேர்த்து உணவு எடுத்து கொண்டு வந்த குகன், “நீயே ஊட்டிவிடு என்று அவள் செல்லம் கொஞ்ச அடி கிடைக்கும் ஒழுங்காய் ஸ்பூன் கொண்டு இடது கையில் சாப்பிடு” என்று கட்டளையிட்டு தனது உணவை உண்ண துவங்கினான் குகன்.

மகேஸ்வரன் அருகில் வந்து “அது சரி தேர்தல் நேரத்தில் சொல்லப்படும் வாக்கு மட்டும் இல்லை வார்த்தைகள் கூட மறந்து போகும் போல!” என்றார், யாரென்று நிமிர்ந்து பார்க்க அந்த மீட்டிங் போது உன் மகளுக்கு கிசுகிசுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற பொறாமையில் பேசுகின்றாய் என்று மகேஸ்வரன் மீது குற்றம் சுமத்தியவர்.

“என்ன மஹேஸ்வரா என் மகள் சும்மா கிசுகிசுப்பில் மட்டும் தான் இடம்பெற்றால் , ஆனால் உன் மகள் சரியாய் வளைத்து பிடித்துவிட்டாள், அன்று என்னவோ அளந்தாய் என் மகள் அது போல் என்றுமே நடக்கமாட்டாள் அவளின் குணத்திற்கு இந்த அகரன் போல் மாதம் ஒரு பெண்ணுடன் சுற்றும்பொறுக்கி, பெண் பித்தனை பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தராமல் இழிவாக நடந்து கொள்ளும் இவனை போன்ற ஆண்களை கண்டாலே கண்ணாலேயே எரித்து விடுவாள் என் பெண் அவளின் கால் தூசிக்கு தரும் மதிப்பை கூட இது போன்றவனுக்கு தர மாட்டாள் என்று மேடை வசனம் பேசினாய் இன்று அந்த வார்த்தைகள் எல்லாம் தூசியாய் பறந்து போய்விட்டதே” என்று இகழ்ச்சியாய் கூறி நகர்ந்தார் வந்தவர். மஹேஸ்வரன் பார்வையில் அகரன் அருகில் சுஹீராயிருக்க இருவரும் ரகசியம் எதையோ பகிர்ந்து கொண்டு சிரிக்க சுகனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்துக்கொண்டு இருப்பது பட்டது, மனம் வாட, மகளின் முகம் நோக்கியவர், சுஹீரா முகம் மகிழ்வில் நிறைந்திருக்கு குழப்பம் கொண்டார்.

“எனக்கு என்னவோ நம் பெண் மீது சந்தேகமில்லை மகேஸ் எல்லாம் அந்த அகரன் செய்யும் வேலையாய் இருக்கும் உனக்கு தொழில் நஷ்டம் கொடுக்கப்பார்த்தான் அதற்கும் நீ அசரவில்லை என்று நீ யாரை வைத்து அவமான படுத்தினாயோ! அவர்களை கொண்டே உன்னை பழிவாங்க நினைக்கின்றான், நீ தேவையில்லாமல் நம் சுஹீராவை சந்தேகிக்காதே, நாளையே நான் என் குடும்பத்துடன் வந்து என் மகனுக்கு உன் மகளை பெண் கேட்கிறேன் அதன்பின் வரும் முகூர்த்தில் திருமணத்தை நடத்திவிடுவோம் பின் இந்த அகரன் என்ன செய்ய முடியும்?” என்றார் சந்திரன்.

“சுஹீரா சம்மதம் கேட்க வேண்டும் சந்திரா” என்று மகேஸ்வரன் யோசிக்க “இதில் யோசிக்க என்ன இருக்கிறது சும்மா ஒரு விருந்து போல் வைத்துக்கொள்வோம் உதயனும் சுஹீராவும் தனிமையில் பேசிக் கொள்ளட்டும் அதன் பின் முடிவு செய்து கொள்ளலாம் என்று தனது திட்டத்திற்கு மகேஸ்வரனை சம்மதிக்க வைத்தார் சந்திரன்.

எல்லாம் என் வசம்

என்று இறுமாப்பில்

இருந்தேன் நானடி…

உன் மீது கொண்ட காதலால்

என் வசம் இழந்தேன் ஏனடி…

அழகன் 19

என் ஆறடி உயரத்தை

உன் ஐந்தரை அடியில்

அடக்கிவிட்டாய் நீயடி .

உன்னுள் சுகமாய்

கலந்தேன் நானடி…

“என்னாயிற்று உங்களுக்கு வரவேற்பிற்க்கு சென்று வந்ததில் இருந்து அமைதியாவே இருக்கின்றீர்கள் ஏதும் பிரச்சனையா?” என்று சுபத்ரா வினவ, அதுவரை அமைதியாய் எங்கோ பார்த்து கொண்டு தீவிர யோசனையில் இருந்த மகேஸ்வரன். “இன்று சந்திரன் ஒன்று சொன்னான் அதை பற்றி யோசித்து கொண்டு இருந்தேன்” என்று வாய் திறந்தார்.

“என்ன சொன்னார் “ என்று விளங்காமல் சுபத்ரா வினவ, “அவன் மகனுக்கு நம் குட்டிமாவை திருமணம் செய்யக்கேட்கிறான்” என்றதும், “அதற்கு எதற்கு இத்தனை யோசனை நல்ல விஷயம் தானே?” என்று மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தை வெளிப்படுத்தினர் சுபத்ரா. “இப்போது தான் படிப்பை முடித்து இருக்கின்றாள் அதற்குள் எதற்கு என்று யோசிக்கிறேன்” என்று மகேஸ்வரன் இழுக்க…

“நீங்கள் குட்டிமா குட்டிமா என்று கொஞ்சி கொண்டு இருப்பதால் அவள் இன்னும் சிறு குழந்தை என்ற எண்ணம்மா உங்களுக்கு?, அவளுக்கும் திருமண வயது வந்து விட்டது தானே, திருமணம் முடிந்ததும் பெண் நம்மை விட்டு பிரிந்துவிடுவாளே என்று பயந்து கொண்டு காலம் முழுவதும் நம்முடனே வைத்து கொள்ள முடியுமா என்ன?, காலகாலத்தில் அவளுக்கு செய்யவேண்டிய, நல்லது செய்துவிட்டால் அடுத்து சுகன் என்று ஒவ்வொரு கடமையாய் முடித்து விட்டு நிம்மதியாய் இருக்கலாம்” என்று தனது கணவனை சம்மதிக்க வைக்க முயன்று கொண்டு இருந்தார் சுபத்ரா.

இன்னும் மகேஸ்வரன் முகம் குழப்பத்தில் இருப்பது போல் இருக்க “இவ்வளவு சொல்கின்றேன் இன்னும் உங்களுக்கு என்ன குழப்பம்?” என்றார் சுபத்ரா. “அவள் மனதில் என்ன இருக்கின்றது என்று அறியாமல் நாமாக ஒரு முடிவிற்கு எப்படி வருவது, சுபத்ரா ஒருவேலை அவள் மனதில் வேறு யாரையாவது நினைத்து இருந்தால்?” என்று யோசனையாய் இழுத்தவர் மனதில் சுஹீராவை அறிமுகம் செய்துவைத்த போது அகரன் பார்வையும் அதற்கு சுஹீராவின் முகம் மலர்ந்ததும் நினைவு வந்து “அவள் மனம் விரும்பும் வாழ்வு அமைத்து தர வேண்டுமே “ என்ற கவலை தான் என்றார் மகேஸ்வரன்.

“பெற்றவர்கள் அவளுக்கு என்ன கெடுதலா? செய்து விட போகின்றோம் , நம் பார்க்கும் பையனை கட்டிக்கொள்ள என்ன வந்தது, நீங்கள் தயங்காமல் அவர்களை வர சொல்லுங்கள் நான் சுஹீராவிடம் பேசிக் கொள்கிறேன்” என்று கூறிய மனைவியை விசித்திரமாய் பார்த்தார் மகேஸ்வரன். “நம் மகன் சுகந்தன் ஒரு பெண்னை காதலிக்கின்றான் சுபத்ரா ஆனால் அவள் நம் குடும்பத்திற்கு பெருத்தமானவளா என்று எனக்கு சந்தேகம்” என்று யோசனையாய் நிறுத்த, கோபமாய் “என் மகன் அப்படி பட்டவன் இல்லை , எனக்கு தெரியாமல் எதுவும் செய்யமாட்டான் அப்படியே அவனுக்கு வேறு பெண்னை பிடித்து இருந்தாள் நான் வேண்டாம் என்றால் விட்டு விடுவான்” என்றார் சுபத்ரா, “ஓ… ஒருவேலை நீ சொல்லியும் மனதை மாற்றி கொள்ளாமல் அந்த பெண்னை தான் மணப்பேன் என்று சுகன் சொன்னால் என்ன செய்வாய்?” என்று மகேஸ்வரன் எதிர் கேள்வி கேட்கவும். கொஞ்சமும் தயங்காமல் “மகன் சந்தோசம் தான் முக்கியம் என்று அந்த பெண்னை ஏற்க வேண்டியது தான்” என்று சுபத்ரா கூற கசந்த புன்னகையை சிந்திய மகேஸ்வரன். “கவலைப்படாதே இப்போதைக்கு உன் பையன் உனக்கு அந்த கஷ்டத்தை கொடுக்கவில்லை” என்றார், என்ன என்று புரியாமல் பார்த்த மனைவியை பார்த்து பேசத்துவங்கினார்.

“மகனுக்கு ஒரு நியாயம் மகளுக்கு ஒரு நியாயம், மகள் காதலித்தால் கட்டாய திருமணம் மகன் காதலித்தால் , அவன் சந்தோசம் தான் முக்கியம் என்று சம்மதிப்பாய் என்ன நடைமுறை இது எனக்கு விளங்கவில்லை, அவளுக்கும் தனி உணர்வு உண்டு விருப்பம் உண்டு என்று நீ என்று தான் புரிந்து கொள்ள போகின்றாய்?, சுபத்ரா” என்று கசந்த குரலில் கூறியவர், “அதுசரி குட்டிமா என்ன செய்தாலும் குற்றம் குறை காணும் உன்னை போய் அவள் உணர்வுகளுக்கு மதிப்பு தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது என் குற்றம் தான்,” என்று வருத்தமாய் கூறினார். அவர் முன் சென்று அமர்ந்த சுபத்ரா “அதிகமான பெண்கள் தங்களுக்கு ஆண்குழந்தை வேண்டும் பெண்குழந்தை வேண்டாம் என்று ஏன் விருப்புவார்கள் என்று தெரியுமா? ஒரு பெண்ணாய் இந்த சமூகத்தில் தான் அனுபவித்த இன்னல்களை தனது மகளும் அனுபவிக்ககூடாது என்பதற்காக தான் எல்லா அம்மாக்களும் தன் மகள்களை கண்காணித்து கொண்டே தான் இருப்பார்கள் , எந்த கயவன் கண்ணும் நம் பெண் மீது பட்டு அவள் வாழ்வு அழிந்து விட கூடாது” என்று தான் “வயதில் உண்ணர்ச்சிகள் கண்னை மறைக்க அது காதல் என்று எடுக்கும் முடிவில் எனக்கு நம்பிக்கை இல்லை, எனக்கு என் மகள் வாழ்வு அவளை காலம் முழுவதும் அன்புடன் கவனித்து கொள்பவனுடன் அமைய வேண்டும், அதனால் நீங்கள் என்னை என்ன சொன்னாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை, உங்கள் நண்பர் குடும்பத்தை நாளை நம் வீட்டிற்கு விருந்திற்கு வரச்சொல்லுங்கள், அதன் பின் சுஹீராவை எப்படி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்” என்று தீர்மானமாய் கூறினார், சுபத்ரா.

“என்ன நம்ம சுஹீராவிற்கு திருமணமா? ரொம்ப நல்லது தான் காலகாலத்தில் செய்ய வேண்டியதை செய்யவேண்டும் என்று கையில் சோட்டுவை பிடித்தபடி அங்கு வந்து நின்றார் சோட்டுவின் பாட்டி. “அதையே தான் நானும் இவரிடம் சொல்லி கொண்டு இருக்கின்றேன் அக்கா, ஆனால் இவர் தான் இப்போது என்ன அவசரம் என்று தயங்குகின்றார்” என்று வரவேற்பபாய் புன்னகை செய்தார் சுபத்ரா.

“நல்ல இடம் வரும் போது தயக்கம் எதற்கு?” என்று சோட்டு பாட்டி கூறி கொண்டு இருக்கும் போதே, வீட்டின் உள்ளே ஏதோ உடையும் சத்தம் கேட்டு அனைவரும் சென்று பார்க்க பூஜை அறையில் சாமி படத்தில் அணிவித்து இருந்த மாலை சரிந்து அதன் முன் இருந்த விளக்கை தட்டிவிட்டியிருக்க தீபம் கீழே விழுந்த சத்தம் அது “திருமண விபரம் பேசும் போது இது என்ன அபசகுணமாய்?” என்று சுபத்ரா கலங்கி போனார்.

மனைவி முகத்தில் வாட்டம் கண்ட மகேஸ்வரன், “என்ன சுபத்ரா இதற்கு எல்லாம் கலங்கி கொண்டு இவ்வளவு பெரிய மாலை கனம் தாங்காமல் சரிந்து விட்டது சரி சரி வா” என்று அழைத்து சென்றவர் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்தவர், “நீங்கள் என்ன சொன்னாலும் சரி மனம் பயம் கொள்ளத்தான் செய்கின்றது” என்று அச்சம் விலகாமல் கூற, ஆதரவாய் அவர் கை பற்றி கொண்ட மகேஸ்வரன் “சரி இப்போதைக்கு திருமணம் பற்றி பேச வேண்டாம் சந்திரனிடம் கூறி விடுகின்றேன்” என்றார், என்ன செய்வது என்று புரியாமல் சுபத்ரா அமைதியாய் அமர்ந்திருக்க, “நல்ல விசயம் பேசத்துவங்கி அதை பாதியில் விட கூடாது, ஒன்று செய்யுங்கள் மனம் குழப்பமாய் இருந்தால் இருவரும் உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள் அதன் பின் திருமண பேச்சை துவங்குங்கள், பொதுவாய் எல்லோரும் திருமணம் போன்ற பெரிய விஷயம் முடிவு எடுக்கும் போது இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டே செய்வர் நீங்களும் அதையே செய்யலாமே!” என்று சோட்டு பாட்டி யோசனை சொல்ல இருவருக்கும் அதுவே சரியாய் பட்டது.

நாளையே நாம் கோவிலுக்கு போய் வரலாம் என்று முடிவெடுத்தனர், “அதுவும் சரி தான் என்றவர், இந்த சோட்டு விளையாட்டு பொருள் இங்கு இருக்கின்றதாம் அதை எடுத்து செல்ல தான் வந்தேன் வந்ததும் நல்லது தான் உங்கள் குழப்பத்தை தீர்க்க முடிந்ததே சோட்டு உன் பொருளை எடுத்து கொள் கிளம்பலாம்” என்று சோட்டுவுடன் கிளம்பினர் அவர்.

“இன்று சுகனுக்கும் நிறைய வேலை என்று எங்களுடன் வர முடியவில்லை உன்னை உடன் அழைத்து செல்லலாம் என்றால் ?, நீயும் இப்படி காலில் அடிபட்டு கிடக்கின்றாய் ஏண்டி, திரும்பி வந்ததும் வராததும், குளிக்கின்றேன் என்று இப்படி காலை உடைத்து கொண்டு நிற்க வேண்டுமா என்ன?” என்று சிடுசிடுத்தார் சுபத்ரா.

“என்னமா என்ன செய்தாலும் திட்டினால் எப்படி வெளியில் சென்று வந்தது கசகசவென்று இருந்தது என்று குளித்தது ஒரு குற்றமா?” என்று சலித்துக்கொண்டாள் சுஹீரா. “நீ குளித்தது கீழே விழுந்து குட்டிக்கரணம் போட்டது எதுவும் குற்றம் இல்லை குட்டிமா , நீ கீழே விழுந்ததால் வீட்டிற்குள் குட்டி நிலநடுக்கம் ஏற்பட்டு அதனால் பூஜை அறையில் இருந்த விளக்கு மண்ணை கவ்வியது தான் குற்றம்” என்று சிரியாமல் கேலி செய்தான் சுகந்தன்.

“அப்ப்ப்பா… பாருங்கள்” என்று செல்லமாய் தந்தை தோளில் சாய்ந்து “நான் விழுந்து கால் உடைந்து கிடப்பது கவலை இல்லையாம் கவலை எல்லாம் அந்த விளக்கு விழுந்தது தானம் அதுவும் நான் விழுந்ததால் விழுந்தது வேறு என்று மொக்கையாய் சிரிக்க கூட முடியாத கேலி வேறு, என்னால் தான் விளக்கு விழுந்ததா?, நீங்கள் சொல்லுங்கள் அப்பா” என்று சலுகையாய் கேட்க, “இதற்கு உனக்கு சாட்சி வேறு தேவையா?” என்று மீண்டும் சுகன் துவங்க என்னால் தான் வீடு அதிர்ந்ததா அதற்கு உன்னிடம் ஆதாரம் உள்ளதா என்று சுகனை பார்த்து முறைப்பாய் வினவினாள் சுஹீரா.

“என்ன செய்ய குட்டிமா உன் அம்மா விளக்கு விழுந்து கவலையாய் நாளை கோவிலுக்கு போகலாம் என்று முடிவுக்கு வந்த நேரம், தான் நீ வந்து காலை உடைத்து கொண்டேன் என்று நின்றாய், நேரம் காலம் எல்லாம் சரியாய் தானே உள்ளது!” என்று மகேஸ்வரனும் சுகனுடன் சேர்ந்து கொள்ள, “அப்பா நீங்களுமா?” என்று முகம் சுருங்க அழுவது போல கண்னை கசக்கி கொண்டு “என் மீது யாருக்கும் பாசமே இல்லை இப்படி அடிபட்டு கிடக்கும் மகளை கவனிப்பதை விட இப்போது குலதெய்வம் தான் முக்கியமா?” என்று கேட்டு செல்லமாய் சிணுங்கினாள், சுஹீரா.

“ஏய் சும்மா நடிக்காதே இந்த நடிப்பு எல்லாம் என்னிடம் செல்லாது நீ இன்று என்ன சொல்லி, கண்னைக்கசக்கி கொண்டு நின்றாலும் என் முடிவில் மாற்றம் இல்லை, என்ன நீங்கள் என்னுடன் கிளப்புகின்றீர்களா? இல்லை உன் செல்ல மகள் புலம்பலை கேட்டுக்கொண்டு இருக்க போகின்றீர்களா?” என்று சுபத்ரா ஒரு அதட்டல் போட அமைதியாய் எழுந்து கிளம்ப துவங்கினார் மகேஸ்வரன்.

“அப்பா” என்று சுஹீரா தந்தை கைபிடித்து தடுக்க அவள் தலையில் மெதுவாய் வருடி கொடுத்தவர் “மன்னித்து விடு குட்டிமா மேலிடத்து உத்தரவு மீறினால் உணவிற்கு பஞ்சம் வந்துவிடும் “ என்று சிரிக்க தனது அன்னையை முறைக்க துவங்கினாள் சுஹீரா.

“சும்மா முறைக்காதே கோவிலுக்கு போய்விட்டு மாலை தான் வருவோம் உனக்கு வேண்டியதை சமைத்து வைத்துவிட்டேன் சுகன் வெளியில் தனது உணவை பார்த்துக்கொள்வான் சாப்பிட்டு பாத்திரத்தை அப்படியே போட்டு வைக்காமல் சுத்தமாய் விளக்கி வைத்துவிடு, சோட்டு பள்ளி முடிந்து வந்ததும் உன்னுடன் அழைத்து வைத்துக்கொள் “ என்று கூறி சுபத்ராவும் மகேஸ்வரனும் கிளம்பி சென்றனர்.

சுகனும் அலுவலகம் கிளம்பி சென்று விட, டயாருக்கும் என் மீது அக்கறை இல்லை சும்மா சுஹீ சுஹீ என்று என் பின் சுற்றும் இந்த அரக்கன் கூட கண்டு கொள்ளாமல் இருக்கின்றான்ட என்று மனதில் தனது கணவனை கடிந்து கொண்டாள் சுஹீரா.

அலுவலகம் வந்தவன் அதிகாவை காணாமல் தவிக்க துவங்கினான் அகரன் வந்ததும் அவன் முன் சென்று நின்ற குகன் “என்ன அசிஸ்டெண்ட்… வந்த அடுத்தநாளே வேலைக்கு மட்டம் போட்டால் எப்படி பாஸ் அதானல் தான் வேலைக்கு சேர்க்க வேண்டாம் என்று சொன்னேன் யார் என் பேச்சை கேட்டது என்று புலம்பியவன்” குரலில் அதிகாவை காணாத ஏக்கம் இருப்பதை உணர்ந்த அகரன். மெதுவாய் சிரித்து கொண்டு அவளை காணாமல் தவிக்கின்றாயா இன்னும் கொஞ்ச நேரம் நன்றாக துடித்திடு என்று தனக்குள் எண்ணியபடி, “இன்னும் அதிகா வரவில்லையா? அவள் எனக்கு முன்பே கிளம்பிவிட்டாளே, ஏன் இன்னும் வரவில்லை பஸ் பயணம் வேறு புதிது எங்காவது வழி தெரியாமல் நின்று இருப்பாள் வந்து விடுவாள் நீ சென்று உன் வேலையை கவனி” என்று சாதாரணமாய் பதில் தந்தான் அகரன்.

“என்ன இவ்வளவு அசட்டையாக, பதில் சொல்கின்றீர்கள் பாஸ் நேற்று கையில் வேறு காயம்பட்டது பார்த்து பத்திரமாய் உங்களுடன் அழைத்து வருவதற்கு என்ன எங்கு வழி தெரியாமல் நிற்கின்றாளோ!” என்று பதட்டமாய் தனது மொபைலில் இருந்து அதிகாவிற்கு முயன்றான்.

முதல் முறை தவறி இரண்டாம் முறை அதிகா எடுக்கவும் “நீ எங்கு இருக்கின்றாய் சொல் நான் வந்து உன்னை அழைத்து வருகின்றேன்” என்று வினவ. “ என் வீட்டில் இருக்கின்றேன் குகன் வந்து அழைத்து போகின்றாயா?" என்று வினவியவள் குரலில் கேலி இழையோட, “என்ன விளையாடுகின்றாயா?” என்று குகன் வினவ, “உன்னுடன் விளையாட நீ என்ன என் அத்தை மகனா? குகா உண்மையை தான் சொல்கிறேன், கையில் அடிபட்டு இருக்கிறது இதோடு எங்கு கிளம்புகின்றாய் அத்தை விடமாட்டேன் என்கின்றார்கள், கரணும் ஓய்வு எடு என்று என்னை விட்டுவிட்டு கிளம்பிவிட்டான்” என்று அதிகா கெஞ்சலாய் கேட்க.

“என்ன நீ இன்னும் கிளம்பவே இல்லையா? குகன் அதிர்ந்திட, “இதை தான் இவ்வளவு நேரம் கூறிக்கொண்டிருக்கின்றேன்” என்று அதிகா பதில் தந்தாள், அகரனை நிமிர்ந்து பார்த்தவன் அகரன் கண்ணில் தெரிந்த குறும்பு சிரிப்பை கண்டு “அது ஒன்றும் இல்லை உனக்கு கையில் அடி பட்டது எப்படி உள்ளது நீ ஓய்வு எடு” என்று அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் அவசரமாய் கூறி முடித்து அழைப்பை துண்டித்தான் குகன்.

“என்ன குகா முகத்தில் லிட்டர்லிட்டாராய் அசடு வலிகின்றது, இந்த அசட்டு தனத்தில் எனக்கு நீ அதிகா மீது கொண்ட காதல் தான் தெரிகின்றது” என்று குகன் அருகில் வந்து நின்றவன் , “நானும் முதலில் அதிகாவை அவள் அம்மா போல் என்று தவறாய் தான் நினைத்து இருந்தேன் ஆனால் அவள் அப்படி இல்லை குகா, நல்ல பெண் ஏன் உன் காதலை மறைத்து அவளை வதைக்கின்றாய்” என்று அக்கறையாய் வினவினான் அகரன்.

“என்ன பாஸ் நீங்கள் காதலிக்க துவங்கிவிட்டால் உங்களை சுற்றி இருப்பவரும் கட்டாயம் காதலிக்க வேண்டும் என்று அவசியமா என்ன?, எனக்கு அதிகா மீது உள்ளது உங்கள் உறவுப்பெண் என்ற அக்கறை மட்டும் தான்” என்றான் குகன்.

“ம்ம்ம் இந்த கதை நன்றாக உள்ளது அதான் உன் அக்கறையை சொன்னேன், பார்க்கின்றேன்… இந்த அக்கறை எத்தனை நாள் என்று!, சரி வேலையை கவனி என்று அகரன் உத்தரவிட அதன் பின் அங்கு வேலை மட்டுமே நடந்தது.

“ பாஸ் உங்கள் மச்சான் அதான் சுகந்தன் உங்களை பார்க்க வந்துள்ளார் “ என்று குகன் வந்து கூறிட , அகரன் முகம் அழகாய் மலர்ந்து சிரிக்க “பாஸ் வந்துள்ளது அண்ணி இல்லை அண்ணியின் அண்ணன்” என்று குகன் கேலி செய்தான். “போய் என் மச்சானை வரச்சொல்லுடா… மாங்கா” என்று வெட்கம் கலந்து அகரன் கூறிட, “அண்ணி பெயரை சொன்னாலே ஒரே வெட்கம் தான் “ என்று அகரனை கேலி செய்துவிட்டு சுகந்தனை உள்ளே அனுப்பிவைத்தான் குகன்.

“என்ன சுகந்தன் இவ்வளவு காலையில்!” என்று அகரன் வினவ, கையோடு கொண்டு வந்திருந்த பணத்திற்காக செக்கை எடுத்து கொடுத்தவன் “ரொம்ப நன்றி அகரன் சார் உதவி தேவைபட்டப்போது தானாய் முன் வந்து உதவி செய்தீர்கள், அது மட்டும் இல்லாமல் நீங்கள் கூறியதால் நிறைய ஆர்டர் கூட கிடைத்துள்ளது, அதனால் ரொம்ப நன்றி” என்று நன்றியுடன் கூறினான் சுகந்தன்.

“செக்கை கையில் வாங்கியவன் இந்த பணத்திற்காக நீ கொடுத்த உங்கள் வீட்டு பத்திரம் பத்திரமாய் உங்கள் அலுவலகம் வந்து சேரும்” என்ற அகரனுக்கு, சுஹீரா கூறியது நினைவு வர “நீங்கள் பணத்தை திருப்பித்தந்ததில் உங்கள் தங்கை தான் மிகவும் சந்தோசப்படுவார் இல்லையா? என்றவனுக்கு சுஹீரா முகத்தில் தோன்றும் சந்தோசத்தை நேரில் காணும் ஆவல் எழுந்தது. “எப்படி இருக்கின்றாள் சுஹீரா” என்று தன்னை அடக்கி கொண்டு அகரன் வினவ, சுஹீரா காலில் அடிப்பட்டத்தை கூறிய குகன் “பாவம் துணைக்கு ஆள் இல்லாமல் தனியாய் இருக்கின்றாள் இன்று ஒரு ஆர்டர் முடிக்க வேண்டியுள்ளது” என்று கவலையாய் கூற, “ஏன் உங்கள் அம்மா “ என்று துவங்கியவன் எப்படி கேட்பது என்று முழுதாய் கூறாமல் அகரன் நிறுத்த.

“அம்மாவும் அப்பாவும் கோவிலுக்கு சென்று உள்ளார்கள், சரி நான் கிளம்புகின்றேன் அகரன் சார், வேலையை சீக்கிரம் முடித்து விட்டு அவளை பார்க்கச்செல்ல வேண்டும் இல்லை காளியாய் மாறி என்னை காலி செய்து விடுவாள்” என்று சுகன் எழுந்திட. அகரன் கவனம் எங்கோ இருக்க அழுத்தமாய் மீண்டும் ஒரு முறை கூறி விடை பெற்றான் சுகந்தன்.

சுஹீரா காலில் அடி பட்டது அறிந்து உடனே அவளை காண தவித்தான் அகரன் வீட்டில் யாருமில்லை, என்ற கூடுதல் தகவல் அவனை உந்த உடனே கிளம்பினான்.

“என்ன பாஸ் கணவன் கடமை அழைக்கின்றது போல அண்ணி காலில் வலி என்றால் உங்கள் மனதில் இரத்தம் வலிகின்றது”என்று குகன் கேலி செய்ய, “என்ன கிண்டலா ஒழுங்காய் வேலையை கவனி” என்று அகரன் எச்சரித்தான், “நான் ஏன் பாஸ் கிண்டல் செய்ய போகின்றேன் உண்மையை தான் சொன்னேன் நமக்கு பிடித்தவர்கள் வலியில் துடித்தால் நாமும் துடித்து தான் போவோம்” என்றான் குகன். அவன் கண்களில் அதிகாவின் மீதான கவலை இருப்பது புரிய “என்ன செய்ய காதல் கண் கட்டுதே, நீ ஒன்று செய் இந்த பைலை கொண்டு போய் அப்பாவிடம் கையெழுத்து வாங்கி வந்து விடு” என்று கண்ணடித்து அகரன் கூற, சந்தோசமாய் குகனும் அதிகாவை காண கிளம்பினான்.

ஏனோ தனிமையில் விடப்பட்டது போல உணர்ந்தாள் சுஹீரா டிவி முன் அமர்ந்தவள் எதிலும் மனம் செல்லாமல் சேனலை மாற்றி கொண்டே இருந்த நேரம் அகரனிடம் இருந்து

நீ கொடுக்க

தயங்கிய முத்தம்

இன்னும் என்னுள்

நடத்துகின்றது பல யுத்தம் .

யுத்தம் நிறுத்த

சமாதான தூதாய்

ஒரு பறக்கும் முத்தம் .

காற்றிடம் கொடுத்து அனுப்பு

நான் உயிர் பிழைக்க…

“உன் ஆசை முத்தத்தை எதிர்பார்த்து ஆவலுடன் உன் அன்பு அரக்கன்…” என்று அகரனின் செய்தி வர இது வரை உணர்ந்த தனிமை எல்லாம் தகர்க்கப்பட்டு இதழ் தானாய் புன்னகை சூடி கொள்ள…

நான் மறுத்தாலும்

என் அனுமதி இன்றி

என்னை திருட துடிக்கும்

திருடனே

என் முத்தம் நீயின்றி

பிறர் பெற அனுமதிப்பாயா

உன்னை கண்டு அச்சம் கொண்டு

என்னை நெருங்க காற்றும்

தயங்கிய நிற்கின்றது

என்று பதில் செய்தி அனுப்பி வைத்து அகரன் பதிலுக்காக காத்திருந்தாள் சுஹீரா, செய்தி வருவதற்கு பதில் அகரனே, தொலைபேசியில் நேரடியாய் அழைத்தான்.

வேண்டும் என்றே சிறிது நேரம் வெறுபெற்றிவிட்டு எடுத்தவள் “என்ன என்ன வேண்டும் உனக்கு சும்மா காலையில் அறுவையை போட்டுக் கொண்டு” என்று தனக்குள் சிரித்து கொண்டே தன்னவனை மிரட்ட துவங்கினாள் சுஹீரா. “வரவர உனக்கு என்னிடம் பயம் விட்டு போச்சு இன்று நேரில் வந்து உன்னை கவனித்து கொள்கிறேன் “ என்று அகரனும் பதிலுக்கு மிரட்டினான்.

“நான் வர முடியாதே! எனக்கு காலில் அடிபட்டு என்னால் நடக்க முடியாதே! அதானல் வீணாய் ரசகுல்லா கனவில் மிதக்காமல் வேலையை பார்” என்று சுஹீரா பதில் தந்தாள்.

“நான் வந்து என்று தான் சொன்னேன் உன்னை வர சொல்லவில்லை வந்து கதவை திற” என்றான் அகரன். “என்ன கதவை திறக்கவா! என்னவோ வாசலில் இருப்பது போல அளக்கின்றாய்? என் அம்மா அழைக்கின்றார்கள் எனக்கு வேலை உள்ளது உன் பித்தற்றலை நிறுத்து” என்று அழைப்பை துண்டித்தாள் சுஹீரா.

வாசலில் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் ஒருவேலை உண்மையை தான் சொல்லி இருப்பானா உண்மையில் வந்து இருப்பானா என்று யோசனையுடன் ஒரு நொடி நின்றவள். இருக்காது என்று தலையை சிலுப்பிய படி அந்த எண்ணத்தை துடைத்து எறிந்து கதவை திறந்தவள் அகரன் நிற்கக்கண்டு அதிர்ந்து போனாள் சுஹீரா.

மரத்தால் ஆன கதவை திறந்தவள் அதற்கு அடுத்து இருந்த இரும்பு கதவை திறக்காமல் “இங்கு எதற்கு வந்தாய் பகடு, மரியாதையாய் கிளம்பு என் அம்மா உள்ளே தான் இருக்கின்றார்கள்” என்று தடுமாற்றத்துடன் கூறிட, “உனக்கு காலில் அடிபட்டது என்று கேள்விபட்டு துடித்துப்போய் உன்னை பார்க்க வந்தால் இப்படி துரத்துகின்றாய், சரி சரி கதவை திற” என்று செய்கை செய்தான் அகரன்.

“இப்போது தானே சொன்னேன் அதற்குள் எப்படி வந்தாய்?.. என்றவள் வேகமாய் உள்ளே திரும்பி… “சும்மா சேல்ஸ் பாய் மா…, கேட்டயா அம்மா யார் என்கின்றார்கள் வெளியே வந்து பார்க்கும் முன் கிளம்பிவிடு” என்று கதவில் கைவைத்து பூட்டப்போனாள்.

“எனக்கு எதுவும் கேட்கவில்லையே கண்ணம்மா ஒரு வேலை கோவிலுக்கு போன உன் அம்மா குரல் உனக்கு மட்டும் தான் கேட்குமா என்ன ? என்று அகரன் கூறவும். “யார் சொன்னது கோவிலுக்கு போனது என்று என் அம்மா உள்ளே தான் இருக்கின்றார்கள் நான் பொய் சொல்கின்றேன் என்கின்றாயா?, பொய் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது தெரியுமா?, நான் எல்லாம் அரிச்சந்திரன் அடுத்த வீடு கவரிமான் வம்சவழி, பொய் சொன்னால் என் புகழுக்கே இழுக்கு” என்று சுஹீரா அடுக்கி கொண்டே போக அகரன் தனது மொபைலில் இருந்து யாரையோ அழைத்துக்கொண்டு இருந்தான் , “உன்னை கிளம்ப சொன்னேன்” என்று சுஹீரா திரும்பக்கூறினாள்.

தனது உதட்டில் கைவைத்து “ஷ்” என்று செய்கை செய்தவன், சொல்லுங்கள் அகரன் சார் என்று சுகந்தன் குரல் கேட்டதும் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, “உங்கள் குலதெய்வ கோவில் தூரமா சுகந்தன் வர எப்படியும் மாலை ஆகிவிடுமே !” என்றிட “ஆமாம் சார்” என்று சுகந்தன் பதில் தந்தான். தனது அண்ணனின் செயலை எண்ணி தலையில் அடித்து கொண்டு வேறு பேசாமல் கதவை திறந்து விட்டாள் சுஹீரா.

“எதற்கு சார்” என்று சுகந்தன் வினவ, “ஒரு முக்கியமான வேலை உள்ளது” என்றிட சுஹீரா முறைக்க கண்டு, “உங்கள் அப்பாவிடம் “ என்று சேர்த்து சொன்னவன் “சரி சுகந்தன் உங்களிடம் பிறகு பேசுகின்றேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்டு சுஹீரா அனுமதி இல்லாமல் கதவை மூடினான். “எதற்கு கதவை மூடினாய்?, அதான் என்னை பார்த்துவிட்டாய் தானே வந்த வேலை முடிந்தது கிளம்பு” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினாள் சுஹீரா.

அந்த விரலை பற்றியவன் “எப்படி எப்படி கவரிமான், அரிச்சந்திரன் அடுத்த வீடு” என்று அவளை போலவே சொல்லி காட்டி “விரல்கள் வெண்டை பிஞ்சு என்பது இதுதானா?, அப்படியே கடிக்க வேண்டும், என்று உள்ளம் பரபரக்கின்றது” என்று விரலை கடித்தான் அகரன்.

“வலி தாங்காமல் என்னை பற்றி உனக்கு தெரியாது! நான் ரொம்ப கோபக்காரி, இங்கு உன்னை காப்பாற்ற யாரும் இல்லை மரியாதையாய் கிளம்பி விடு” என்று அகரன் கடித்த விரலை தடவிக் கொண்டே சுஹீரா கூற, “அதையே தான் நானும் சொல்கின்றேன் சுஹீ” யாரும் இல்லை “நம் காதல் லீலை செய்ய சரியான நேரம், என்று ஆசையாய் உன்னை காண வந்தால் நீ கதவை திறக்கவே இத்தனை கேள்வி கேட்கின்றாய் இதில் எங்கிருந்து உன்னை திறக்க” என்று அகரன் சலித்த படி கூற, “என்ன திமிரா வாசலில் வந்து கதவை திற என்றதும் ஓடி வந்து கதவை திறப்பார்களாம் நீ பெரிய மகாராஜா!, முதலில் கிளம்பு” என்று அகரனை வெளியேற்றவே முயன்றாள் சுஹீரா.

“யார் வந்தாலும் திறக்க தேவையில்லை, ஏன் மாகராஜவே என்றாலும் காரணம் வேண்டும் தான், ஆனால் உன் கணவன் வரும் போது கட்டாயம் கேள்வி கேட்கமால் திறக்க வேண்டும் என்றவன், அவளின் சுடிதாரில் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து வெளியில் போட்டவன், இதை உன் சங்கு கழுத்தில் கட்டி இந்த தங்கமான அங்கத்தை எனக்கு சொந்தமாக மாற்றிக்கொண்ட அதிர்ஷ்டக்காரன் கண்ணம்மா” என்றவன் சிறிதும் தாமதிக்காமல் அவளை கைகளில் ஏந்தி கொண்டு “உன் ரூம் எது என்றான்” அகரன்.

அகரன் பேச்சும் பார்வையும் சுஹீராவிற்குள் பயத்தை கொடுக்க அவன் கைக்குள் அடங்கி இருக்க, மனமின்றி, இறங்க முயன்றபடி “என் ரூம் எதற்கு கேட்கின்றாய் முதலில் என்னை இறக்கிவிடு இல்லை சத்தம் போட்டு ஊரை கூட்டிவிடுவேன்” என்று சுஹீரா தடுமாற்றத்துடன் கூறிட, “நீ சத்தம்மிட்டால் முத்தமிட்டு உன்னை அடக்கும் வித்தை நான் அறிவேன், திருமணம் முடிந்ததில் இருந்து நமக்குள் எதுவும் நடக்காமல் இருப்பதால் தெய்வக்குத்தம் வந்து விட்டதாம்! இப்படி உன்னிடம் உருகும் உயிரை நெருங்காமல் விலக்கிவைத்ததற்கு தண்டனை தான் நீ கிழே விழுந்தது நாம் இருவரும் சேர்ந்து சிறப்பு பூஜை சிறப்பாய் செய்து தெய்வக்குத்தம் நேராமல் பார்த்து கொள்ளலாம்” என்றவன். அவளை கையில் ஏந்தி கொண்டே மாடி ஏறிட “என்ன என்ன என்னென்னவோ உளருக்கின்றாய்… என்னை முதலில் கீழே இறக்கிவிடு” என்று திமிறினாள் சுஹீரா.

“உனக்கு காலில் காயம் மறந்துவிட்டாயா! நீ சிரமப்படவே வேண்டாம் மாமாவிடம் உன் ரூம் எது, என்று மட்டும் சொல் பூ போல உன்னை சுமந்து சென்று கட்டிலில் படுக்க வைத்து…” என்று அகரன் கூறிக்கொண்டு இருக்கும் போதே, ஒரே துள்ளளில் அவன் பிடியில் இருந்து தப்பியவள் “வந்ததிலிருந்து உன் பேச்சே சரியில்லை நீ கிளம்பு” என்று தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிட்ட படி நின்றாள் சுஹீரா.

அவளை சுற்றி கொண்டு சென்றவன் அருகில் இருந்த அறையை திறந்து பார்த்துவிட்டு மூடினான் மற்றோரு அறையை திறந்து பார்த்து விட்டு உள்ளே நுழைய “அது தான் என் அறை என்று எப்படி கண்டு பிடித்தாய்” என்று நொண்டி கொண்டே அவன் பின் சென்றாள் சுஹீரா.

சுஹீரா கட்டிலின் அருகில் நின்றிருந்தவன் அவள் தாங்கி தாங்கி நடந்து வருவதை கண்டு நெருங்கி சென்று இடையில் கைக் கோர்த்து தன்னோடு சேர்த்து இறுக்க அனைத்து பிடித்த படி “ஆமாம் பெரிய ரகசியம், இங்கே தன் இவ்வளவு பெரிய போட்டோ உள்ளதே! என்றவன் “எங்கே விழுந்ததாய்? எப்படி விழுந்ததாய்? என்று கேள்வியாய் அடுக்கி பற்றி இருந்த இடையில் அழுத்தம் கொடுத்து வினவினான்.

“உனக்காக இன்னோரு முறை விழுந்து காட்டவா முடியும்?” என்று சுஹீரா சிடுசிடுக்க, “ நீ கோபப்படுவதை பார்த்தால் என்னிடம் சொல்ல முடியாத காரணம் போல! என்ன நேற்று நடந்ததை எண்ணி இந்த மாமன் நினைவில் தூக்கத்தில் கட்டிலில் இருந்து உருண்டுவிட்டாயா?” என்றபடி அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்து விட்டு காலை தூக்கி தலையணை மீது மெதுவாய் வைத்தவன், இன்னும் வலி இருக்கின்றதா வேண்டும் என்றால், நான் சந்திரிமாவை வரச்சொல்லவா என்று விளையாட்டை விடுத்து அக்கறையாய் கேட்டபடி குனிந்து கால் விரல்களில் முத்தமிட்டான் அகரன்.

அகரன் தீண்டலில் திணறியவள் “எனக்கு சும்மா சின்ன சுளுக்கு தான் குளித்து விட்டு வரும் போது கால் வழுக்கிவிட்டது, அவ்வளவு தான் நீ கிளம்பு” என்று மீண்டும் சொன்னதையே சொல்ல பொறுமை இழந்தவன்போல், “சும்மா கிளம்பு கிளம்பு என்று அறுக்காதே” என்று சிடுசிடுத்தான். சுஹீரா முகம் சுருங்கிவிட அவள் அருகில் சென்று அமர்ந்தவன் தோளில் கை போட்டு கொண்டு “என் நெருக்கம் உனக்கு கிறக்கம் தருக்கின்றதா சுஹீ, எங்கு தடுமாறிவிடுவாயோ என்ற பயத்தில் தான் என்னை துரத்துகின்றாயா?” என்று காது அருகில் கிசுகிசுத்தவன், நானும் உன்னை கண்ட நொடியில் இருந்து இது போல தான் உணர்கிறேன் சுஹீ

என்னுடன் இருக்கும்

வேலை உன் ஆடைகளுக்கு

விடுமுறை கொடுத்திடு .

உன் உடையென என்னை

உடுத்திடு

இதுவரை நீ அறியாத

இன்ப சொர்க்கம்

என்னவென்று

உனக்கு உணர்த்திடுவேன் நானடி…

என்றவன் பூனை குட்டி போல உரசிக்கொண்டே நெருங்கி அமர்ந்து கொண்டு…

.

தீய பழக்கங்களும்

நீயும் ஒன்று தான்

அதை பழகிவிட்டால்

விடமுடிவதில்லை

உன்னை தொட்டுவிட்டால்

விலக முடிவதில்லை .

என்றவன் கழுத்து வளைவில், இதழ் பதித்து “என் சுஹீ சுஹீ” என்று விடாமல் அவள் பெயரை மந்திரம் போல் உச்சரிக்க, மந்திரத்தில் கட்டுண்டவள் போல சுஹீரா அகரன் பிடியில் மயங்க துவங்கினாள். “இப்போது எல்லாம் இரவில் எனக்கு உறக்கம் வரவில்லை கண்ணம்மா, அசந்து கண் மூடினாலும் கனவில் வந்து நீ காதல் செய்திட தூக்கம் பறந்து எழுந்து அமர்ந்து விடுகின்றேன், உன்னை என் வீட்டிற்கு அழைத்து சென்று இந்த நெஞ்சம் எனும் மஞ்சத்தில் சரிந்து உன்னை தழுவி கொண்டு உறங்கினால் தான் நிம்மதியான உறக்கம் என்னை தழுவும் கண்ணம்மா” என்றவன் மெதுவாய் சரிந்து, அவள் மடியில் தலை வைத்து இடையை சுற்றி கை போட்டுக்கொண்டவன் , சுஹீரா முகம் நாணத்தால் சிவந்து இருக்க அதை பார்வை விலகாமல் ரசித்த படி.

உன் மார்பில் என்னை

சுமந்து தாலாட்டி

இதமாய் தூங்கவைக்கும்

என் தலையணை நீயடி…

ஆசைத்தீண்டாலில்

உன் தேகம் முழுவதும்

நாணச் சிவப்பேற்றும்

உன் மருதாணி நானடி .

என்றவன் தலையை மட்டும் திருப்பி வயிற்றில் முத்தமிட, கூச்சம் தாளாமல் அவன் தலை முடி பற்றி தடுத்தவள் “தயவு செய்து நீ கிளம்பு பகடு இனி நீ இங்கு இருப்பது சரியில்லை” என்று வாய் கூறிட கைகள் இதமாய் தலை முடி கோதியது. சுஹீராவின் விசித்திர செயலில் மெல்ல மெல்ல மோகம் தலைக்கேற “நான் கேட்டது இன்னும் கிடைக்க வில்லையே சுஹீ “என்று கிறக்கமாய் மொழிந்தவன், சுஹீ மறுப்பாய் தலை அசைக்க அவள் சுதாரிக்கு முன் வேகமாய் எழுந்தவன்… சுஹீரா விலகமுடியமல் பின் தலையில் கை கொண்டு அசையாமல் அழுத்தி பிடித்தவன் “எனக்கு வேண்டியது அடையாமல் விடமாட்டேன் சுஹீ, இன்னும் என் குணம் புரியவில்லையா உனக்கு?” என்றவன், இமை மூடிதன்னவள் இதழில் தனது காதலுக்கான முத்த கவிதை வடிக்க துவங்கினான் அகரன்.

முதலில் விலகும் எண்ணம் வந்தவளுக்கு அகரன் நெருக்கம் வேண்டும் என்று காதல் மனம் நச்சரிக்க இமை மூடி அகரன் வடிக்கும் காதல் கவிதையின் காகிதமாய் மாறிப்போனாள் சுஹீரா.

சுஹீராவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் போக அவளின் மௌனம் எல்லை மீறும் துணிவை தந்தது அகரனுக்கு, இதழ் விலக்காமலே கைகள் அவள் செழுமையான அங்கங்கள் அளந்திட, முழுதாய் அவளை அடைந்திடும் எண்ணம் முளைத்தது தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் முகம் எங்கும் முத்த மழை பொழிந்து மெதுவாய் கழுத்தில் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாய் தன்னவளை தனது காதல் லீலையில் மயங்க வைக்க துவங்கினான் அகரன்.

இதுவரை தீண்டாத பாகங்கள் தீண்டி சுகம் என்னவென்று கண்டவன் மெதுவாய் இதழ் யுத்தம் விடுத்து

இதுவரை நான்

அறியாத மன்மத கலையை

உன் மயக்கும் விழி

எனக்கு அறிமுகம் செய்யுதடி…

புரியாதா பாடம்

எல்லாம் புரிகின்ற திகைப்பில்

என் உள்ளம் தித்திக்குதடி .

என்று தனது உள்ளத்தின் தடுமாற்றத்தை உரைத்தவன் “சுஹீ எனக்கு நீ வேண்டும்” என்று மனு போட்டு பதிலுக்காக காத்திருந்தான் அகரன்.

மௌனமாய் அகரனிடம் இருந்து விலகி “என்ன” என்று புரியாதது போல் சுஹீரா வினவ, என்றும் இல்லாத சுஹீயின் அமைதி அகரனை தடுமாற செய்தது, “உன்னை நான்” என்று தடுமாறும் குரலில் “உனக்கு சம்மதம் தானே” என்று வினவியவன் குரலில் மறக்காதே என்று வேண்டுதல் கலந்து இருக்க எதுவும் பேசாமல் இமை மூடி கொண்டாள் சுஹீரா.

“நமக்கு திருமணம் முடிந்து விட்டது ஆனால் இன்னும் பெரியவர்களின் சம்மதம் பெறவில்லை, அதுவரை” என்று கண்களை திறக்காமல் கூறிட மூடிய இமைகளில் முத்தமிட்டு , “உன் விருப்பமின்றி, உன் பகடு உன்னை நெருங்க மாட்டேன், ஆனால் இன்னும் கொஞ்சம் ரசகுல்லா மட்டும் கிடைக்குமா இதையும் மறக்காதே நான் தாங்க மாட்டேன்” என்று அகரன் கிறக்கமாய் கொஞ்சிட…

சம்மதமாய் சுஹீரா தலையசைத்த மறு நொடி இறுக அனைத்து இதழ் பதித்தவன் மூச்சு விடவும் மறந்தவன் போல முத்தத்தில் மூழ்கி இருக்க அகரனின் முரட்டு தனத்தால் வலி உணர்ந்து சுஹீரா வலியில் முனங்க மெதுவாய் முரட்டு தனத்தை குறைத்து கொண்டு விலக மனம் இல்லாமல் விலகினான் அகரன். “இதற்கு மேல் இங்கு இருந்தால் என்னை கட்டுப்படுத்துவது கடினம் நான் கிளம்புகின்றேன் நீ வந்து கதவை பூட்டி கொள்” என்று மீண்டும் கையில் ஏந்தி கொண்டு கீழே இறங்க துவங்கினான், அகரன். இம்முறை மறுக்காமல் அகரன் தோளில் சாய்ந்து கொண்டு “ஆமாம் எப்படி உடனே உடனே கவிதை வரிகள் சொல்கின்றாய்”, இத்தனை நாள் மனதில் இருந்த கேள்வியை சுஹீரா கேட்டிட

கவிதைகள்

நான் படைக்கவில்லை

உன் காதல் தான்

என்னை

ஒரு கவிஞனாய்

படைத்துவிட்டது .

என்றான் அகரன். “இதற்கும் கவிதை தான் பதிலா?” என்று சுஹீரா சிரித்திட அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன்.

காதலும்கவிதையும்

ஒட்டி பிறந்த

இரட்டை பிறவிகள்

ஒன்றில்லாமல்

மற்றொன்று இல்லை .

என்ற அகரன் மெதுவாய் படியிறங்கி கதவு வரை கொண்டு வந்து இறக்கி விட்டான். கிளம்பும் நேரம் சுஹீரா தனது தலையில் அடித்து கொண்டு “வீட்டிற்கு வந்தவர்களுக்கு ஏதும் கொடுக்காமல் அனுப்ப கூடாது நீ இங்கேயே இரு நான் உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருகின்றேன்” என்று திரும்பிட.

அவளை கை பற்றி தடுத்தவன் “அது விருந்தாளிகளுக்கு சொல்வது வீட்டு மாப்பிள்ளைக்கு இல்லை! அப்படியே ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால்? இது வரை நான் கொடுத்து கொண்டிருந்த முத்தத்தை மொத்தமாய் திருப்பி கொடு” என்று கண்ணாடித்து கூறிட, “கேடி நீ கிளம்பு” என்றால் சுஹீரா. மீண்டும் தன்னவள் இதழ் அமுதம் பருகிவிட்டே கிளம்பி சென்றான் அகரன்.

அகரன் சென்றதும் வந்து சோபாவில் சரிந்தவள், முதன் முறை தன்னிடம் அனுமதி கேட்டு நெருங்கியது மனதில் இன்பமாய் நிறைய அகரன் நினைவில் நொடிகளை கடக்க துவங்கினாள் சுஹீரா. முதல் முறை தன்னை விளக்காமல் சுஹீரா ஏற்றது மனதிற்கு இதம் தர அவளை மட்டுமே மனதில் நிறைத்து கொண்டு அன்றைய நாளை கடத்தினான் அகரன்.

அகரன் கொடுத்து அனுப்பிய பைலை ஈஸ்வரனிடம் கையெழுத்திற்காக கொடுத்தவன் கண்கள் மட்டும் அதிகாவை தேட அதை கண்ட ஈஸ்வரருக்கு, குகன் தேடுவது அதிகாவை என்று புரிந்திட. “குகா என்று அழுத்தமாய் அழைத்து, வந்த வேலை முடிந்து என்றால் கிளம்பு” என்று கட்டளை போல கூறவும் வேறு வழியின்றி குகன் கிளம்பும் தருணம். “கொஞ்சம்யிரு குகா குடிக்க உனக்கு ஜூஸ் கொண்டு வரச்சொன்னேன் குடித்துவிட்டு அதன் பிறகு கிளம்பு” என்று கூறியபடி அங்கு வந்து நின்றார் யமுனா.

“இல்லை யமுனா அவனுக்கு நேரம் இல்லை, இந்த பைலை உடனே கொண்டு போக வேண்டும் அப்படித்தானே குகா” என்றிட, “இல்லை சார் அவசரம் ஒன்றுமில்லை அம்மா இவ்வளவு சொன்ன பிறகு மீறினால் நன்றாக இருக்காது” என்றான் குகன்.

வேலையாள் கையில் ஜூஸ் ஏந்தியபடி வர அவருக்கு முன் வந்து கொண்டு இருந்தால் அதிகா. ஜூஸ் குகன் கையில் கொடுத்து விட்டு அவன் ஒரு சோபாவில் அமரசொல்லி செய்கை செய்தாள், தானும் மற்றொன்றில் அமர்ந்தவள் யோசனையாய் யமுனாவை பார்க்க, “நீங்கள் கையெழுத்து போட்டு விட்டால், உங்களுக்கு இங்கு என்ன வேலை என்னுடன் வாருங்கள்” என்று விடாப்பிடியாய் தன்னோடு ஈஸ்வரனை அழைத்து சென்றார் யமுனா.

“என்ன என்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை போல!, கையில் ஒரு பைலை தூக்கி கொண்டு வந்து விட்டாய்?” என்று அதிகா கேலி செய்ய, “உங்களை பார்க்க என்று இல்லை உண்மையில், இதில் ஈஸ்வரன் சார் கையெழுத்து வேண்டியிருந்தது” என்றவன் “அது சரி வேலைக்கு சேர்ந்த மறுநாளே மட்டம் போடும் உன்னிடம் நான் எதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்” என்றான் குகன்.

“எதற்கு இவ்வளவு கோபம் உனக்கு என் நிலை புரியாத என்ன? என்று கண்களில் கெஞ்சலுடன் அதிகா நிறுத்த, “உங்கள் நிலை தெரியாமல் இருக்குமா என்ன?, அந்த கம்பெனியின் முதலாளி நீங்கள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன?” என்று குத்தலாய் பதில் தந்தான் குகன்.

“சரி நான் வருகிறேன்” என்றவன், யோசனையாய் தயங்கிய கொண்டே “இப்போது கை வலி எப்படி இருக்கிறது மருந்து எடுத்துக்கொண்டீர்களா” என்று அக்கறையாய் வினவிட, “உன்னை நினைத்து கொண்டேயிருந்ததில் எனக்கு வலி தெரியவே இல்லை குகா “என்று அதிகா அழகாய் முகம் மலர்ந்து சிரித்தாள்…

“உங்களை திருத்தவே முடியாது” என்றான் குகன். “இதற்கான பதில் நேற்றே உன்னிடம் கூறிவிட்டேன் என்னை திருமணம் செய்துகொண்டு திருத்தும் உன் பொன்னான பணியை துவங்கு” என்று உனக்கு எப்படி வசதி என்று அதிகா வினவ. வேகமாய் கையில் இருந்த ஜூஸை குடித்து விட்டு நான் வருகின்றேன் “உன் காயத்திற்கு மறக்காமல் மருந்திட்டு கொள்” என்றவன் தாமதிக்காமல், வெளியில் சென்றிட “குகா” என்று தடுத்தாள் அதிகா.

ஒற்றை புருவம் ஏறி இறங்க நேற்று அவன் காயத்தில் கட்டிவிட்ட கைக்குட்டையை எடுத்து கன்னம் உரசிய படி… “என் காயத்தின் மருந்து உன் காதல் தான் மறுக்காமல் தந்திடு அது போதும் நான் பிழைத்திட” என்றிட பதில் ஏதும் கூறாமல் வெளியேறினான் குகன்.

“நான் கூட உன் மனம் மாற ரொம்ப நாள் எடுக்கும் என்று பயந்தேன் குகா, ஆனால் இவ்வளவு எளிதில் என் அருகில் வந்துவிட்டாய்” என்று மனதில் நினைத்தவள் குகன் நினைவில் தனக்குள் சிரித்து கொண்டாள் அதிகா.

குகன் அதிகாவை தேடுவது தெரிந்ததும், “எதற்கு இவ்வளவு கோபம் என்று யமுனா வினவ, எப்படியும் கலை இந்த திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டாள் வீணாய் ஏன் ஆசை வளர்த்து கொண்டு” என்று ஈஸ்வரன் கூறி முடிப்பதற்குள், “இது அவர்கள் வாழ்கை , முடிவு அவர்கள் தான் எடுக்க வேண்டும் நீங்களோ நானோ இல்லை, தேவையில்லாமல் உங்கள் தங்கை பெயர் சொல்லி உங்கள் பணக்கார குறுக்கு புத்தியை பயன்படுத்தி அவர்களை பிரிக்க நினைக்காதீர்கள் பிறகு அகரன் சும்மா இருக்க மாட்டான்” என்று யமுனா எச்சரிக்கை செய்திட, “இவர்கள் காதலுக்கும் அகரனுக்கு என்ன சம்மந்தம்” என்று புரியாமல் ஈஸ்வரன் விழிக்க, “ஏன் என்றால் உங்கள் மகன் அகரனும் இப்போது காதல் கடலில் முத்துக்குளிக்க துவங்கிவிட்டார், அதனால் உண்மையான காதலர்களை பிரித்தால், முதலில் அவன் தான் உங்களை கேள்வி கேட்பான்” என்றார் யமுனா.

“என்ன அகரன் காதலிக்கின்றானா இது எப்படி உனக்கு தெரியும் யார் அந்த பெண்?” என்று ஆர்வமாய் வினவினார் ஈஸ்வரன்.