அரக்கனோ அழகனோ 21

அரக்கனோ அழகனோ 21
0

“இனி ஒருமுறை என் சுஹீயை அடித்தீர்கள் என்றால், நான் மனிதனாய் இருக்க மாட்டேன்” என்று எச்சரித்தவன் தடுமாறி விழ போனவளை தாங்கிப்பிடித்தபடி “சுஹீ சுஹீ கண்ணம்மா உனக்கு ஒன்றும் இல்லை தானே என்று மென்மையாய் அவள் தோள் பற்றி தன்புறம் திருப்பியவன், இங்கு யாருக்கும் உன் அருமை தெரியவில்லை சுஹீ நீ உன் பகடுவுடன் வந்து விடு காலம் முழுவதும் உன்னை காதலுடன் கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பேன்” என்று உருகினான் அகரன்.

“என் வாழ்வில் நீ வந்ததில் இருந்து தான் எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது தயவுசெய்து என்னை விட்டுவிடு, உன் நினைவில் இருந்து மொத்தமாய் என்னை அழித்துவிடு நீ என்னை மறந்தால் மட்டும் தான் எனக்கு நிம்மதி” என்று சுஹீரா கையெடுத்து குடும்பிட… “உனக்கு வலித்தால் அது என்னையும் காயப்படுத்தும் சுஹீ, நீ கவலைப்படாதே அதை என்னால் தாங்க முடியவில்லை , இனி உன் முன் வந்து என் காதலுக்காக கெஞ்சிக்கொண்டு நிற்க மாட்டேன் சுஹீ, நீயே வந்து உன் காதலை கூறி என் காதலை ஏற்கும் வரை உன் முன் வரவும் மாட்டேன், ஆனால் உன்னை விட்டு மொத்தமாய் விலகி சென்றுவிடுவேன் என்று மட்டும் நினைக்காதே நீ என்னை காணாத தூரம் நின்று நான் உன்னை கவனித்துக்கொண்டே தான் இருப்பேன் “ என்றவன் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு விலகி வந்தவன். சுபத்ரா முன் சென்று நின்றான் “தவறு எல்லாம் என் மீது தான் சுஹீயை தண்டிக்காதீர்கள் அவளுக்கு என்னைவிட இந்த குடும்பம் அவள் அப்பா தான் உயிர்! என்று கசந்த புன்னகை சிந்தியவன் ஆனால் எனக்கு என் உயிர் அவள் மட்டும் தான்” என்றவன் சுபத்ரா கரம் பற்றி மன்னிப்பு வேண்டினான். மகேஸ்வரன் அருகில் வந்து “என் காயத்தின் வலியை குறைக்க உங்களை காயப்படுத்த நினைத்தேன், ஆனால் உங்கள் மகள் மீது கொண்ட காதலால் மீண்டும் காயப்பட்டு நிற்கின்றேன்” என்று வெறுமையான குரலில் கூறியவன், “உண்மையில் நீங்கள் பெருமைபடும்படிதான் என் சுஹீ இருக்கின்றாள்! என்றுமே உங்களை தலைகுனிய விடமாட்டாள், அவள் செய்த அனைத்தும் உங்கள் மீது உள்ள அன்பினால் மட்டுமே தவிர என் மீது துளியும் காதல் இல்லை ஆனால் எனக்கு என் வாழ்வில் காதல் என்றால் அது சுஹீயை தவிர வேறு யாரும் இல்லை” என்றான். விலகிச்சென்று சுகந்தனை கட்டி அனைத்து கொண்டவன் “மனம் உடைந்து இருக்கின்றாள் தனியாய் விடாதே” என்று கூறியவன் நீ என்னை நம்பினாய் அந்த நம்பிக்கையை கூட என்னால் காப்பாற்ற முடியவில்லை என் காதலை காப்பாற்ற முடியாதது போல” என்று மீண்டும் ஒரு முறை சுஹீராவை நெருங்கி “என் உயிர் நீதான் நீ ஏதும் தவறான முடிவு எடுத்தால் உன் முடிவு அறிந்த அடுத்த நொடி நானும் என் வாழ்வை முடித்துக்கொள்வேன்” என்றவன், “வெகு நாட்கள் காக்க வைக்காதே சீக்கிரம் வந்து விடு” என்று கை பற்றி முத்தமிட்டு வீட்டை விட்டு வெளியேறி சென்றான் அகரன்.

புயல் அடித்து ஓய்ந்தது போல வீடு எங்கும் அமைதியில் இருந்தது ஆளுக்கொரு திசையில் அமர்ந்து இனி நடக்க போவது என்ன என்று புரியாமல் குழம்பி போய் இருந்தனர்.
என் கண்களில்
விழுந்தவனே
காதல் தந்தவனே
கவிதையாய்
வடிக்கிறேன் என்
காதல் நினைவுகளை
கண்ணீரால் அழிக்கிறேன்
அதன் சுவடுகளை…

அழகன்21

எனக்குள்ள
நியாபக மறதி்
வியாதியாலும்
முடியவில்லை
உன் நினைவை
மறக்க வைக்க…

நான் வாழ எனக்கு
நீ வேணுமே
வேண்டாம்
வேறு யாருமே…

அகரன் சென்றதும் நிலைத்த பெரும் அமைதியை முதலில் களைத்த சுபத்ரா “செய்வது எல்லாம் செய்து விட்டு மூலையில் உட்கார்ந்து நீலிக்கண்ணீர் வடிக்காமல் முதலில் கிளம்பு” என்று சுபத்ரா கட்டளை குரலில் கூறிட அனைவரும் புரியாமல் விழித்தனர்.

“என்னை எங்கு போக சொல்கின்றீர்கள் அம்மா” என்று கண்ணீருடன் வினவிய சுஹீரா குரலில் கவலையை விட பயம் அதிகம் இருந்தது. “திருமணம் ஆன பெண்ணை எங்குபோக சொல்வார்கள் உன் புருஷன் வீட்டிற்கு தான் கிளம்பு என்கின்றேன்” என்று மீண்டும் அழுத்தமாய் கூறிட, “அவன் என்னை ஏமாற்றிவிட்டான் அவனுடனே போய் வாழச்சொல்கிண்றீர்களா?” என்று குற்றம் சாட்டும் குரலில் கூறினாள் சுஹீரா.

“என்ன ஏமாற்றிவிட்டான் ஏமாற்றிவிட்டான்… என்று புலம்பிக்கின்றாய் ஏமாற்றும் போது கண்னை மூடிக்கொண்டு நம்பவேண்டியது உண்மை தெரியும் போது தாம்தூம் என்று குதிக்க வேண்டியது, இப்போது தெரிக்கின்றாதா? அம்மா ஏன் கண்டிப்புடன் இருக்கின்றார்கள் என்று , சரி உன் அப்பாவை பழிவாங்க காதல் என்று கதை சொன்னார், ஆனால் திருமணம் செய்யும் போது உன் கையை காலை கட்டிக்கட்டாயப்ப்படுத்தியா செய்தார் உன் விருப்பம் கேட்டாரா இல்லையா?” என்றார் சுபத்ரா.

அவள் மனம் அறிந்த உண்மை அவளை “ஆமாம்” என்று தலையாட்ட வைக்க ஆனால் “அப்பாவிற்காக தான்” என்று சேர்த்து சொன்னாள் சுஹீரா. “என்ன அப்பாவிற்காகவா? நீ திருமணம் செய்யவில்லை என்றால் உன் அப்பாவை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினாரா?” என்று ஏளனமாய் கேட்டார் சுபத்ரா.

இல்லை என்று மறுப்பாக தலையாட்டியவள் மனசாட்சி சுட்டது “எந்த இடத்திலும் என்னை கட்டாய படுத்தவில்லை , பணத்திற்காக எழுதிக்கொடுத்த பத்திரத்தை என்னிடம் கொடுத்துவிட்டு, அதன் பின் என் விருப்பத்தைக்கேட்டு தான் திருமணம் செய்தான்” என்ற சுஹீரா பதிலில் மகேஸ்வரனும் சுகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “என் முழு சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது” என்றவள் அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீரில் கரைய ஆதரவாய் அவள் அருகில் சென்று அமர்ந்த சுகன்.

“அகரன் ரொம்ப நல்லவர் குட்டிமா கொஞ்சம் கோபம் முரட்டுத்தனம் அதிகம் தான் அதற்காக கெட்டவர் இல்லை, என்னுடன் பழகியதை வைத்துச்சொல்கிறேன், முரட்டு தனமான குழந்தை குணம் ஆனால் அன்பு வைத்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்வார் உன் மீது கொண்ட கண்மூடி தனமான அன்பு தான் அவரின் இத்தனை பொய்களுக்கும் காரணம் புரிந்துகொள் குட்டிமா, நீ நினைத்தால் உன் காதலால் அந்த முரட்டு குழந்தையை அன்பான மனிதனாய் மாற்ற முடியும் சுஹீ” என்று சுகன் அண்ணனாய் அறிவுரை வழங்கினான்.

“என்ன சொல்கின்றாய் சுகன், உன்னை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு வந்துவிட்டது, நீ சொல்லும் முரட்டு குழந்தை தான், அன்று துவங்கியது என் வேதனை” என்று மீண்டும் அன்றைய நினைவில் கண்ணீர் சிந்தியவள், “அன்றே சொன்னான் உன்னை பழிவாங்க தான் உன் அண்ணனை பயன்க்படுத்தி கொண்டேன் என்று அன்றே அவன் குணம் புரிந்து விலகி இருக்கவேண்டும் முட்டாள் போல் அவன் சொன்னதை எல்லாம் பயந்துகொண்டு கேட்டதால் தான் எனக்கு இந்த நிலை” என்று சுஹீரா கூறி முடிக்கும் முன், “என்ன போலீஸ் ஸ்டேஷனா, இது எப்போது நடந்தது, இன்னும் எங்களுக்கு தெரியாமல் எத்தனையை மறைத்து வைத்து உள்ளீர்கள் ஒவ்வொரு இடியாய் இறக்காமல் மொத்தமாய் கொட்டி விடுங்கள் ஒரேடியாய் அழுது புலம்பி விடுகின்றோம்” என்றவர் மகேஸ்வரன் இன்னும் அமைதியாகவே நிற்க கண்டு அவர் அருகில் சென்று ஆறுதலாய் கை பற்றி கொண்ட சுபத்ரா.

“இத்தனை நடந்து உள்ளது உன்னை மிரட்டி கொண்டு இருந்திருக்கின்றார் ஒருவார்த்தை எங்களிடம் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லையா? என்னை விடு எப்போதும் உன்னை கட்டுப்படுத்தும் நான் உனக்கு வில்லியாய் தான் தெரிவேன், ஆனால் நீ என்ன செய்தலும் உனக்கு உறுதுணையாக இருக்கும் உன் அப்பா உனக்கு ஹீரோ தானே அவரிடம் மட்டுமாவது உன் நிலையை கூறி இருக்கலாம் இல்லையா?, இப்படி உங்கள் பெயரை சொல்லி ஒருவன் என்னை மிரட்டிக் கொண்டு இருக்கின்றான் என்று அவரிடம் சொல்லி இருந்தால் அவர் ஏதாவது செய்வார் இல்லையா?, உன் அன்பு அண்ணன் சிறை சென்ற தியாகி இவனிடம் சொல்லி இருக்கலாம் இல்லையா?, நீ பணம் வாங்கியதால் அவன் என்னையே பணையம் வைக்கின்றான் என்று, அதை எல்லாம் விடுத்து இன்று உனக்கு என்று ஒருவனை பார்த்து முடிவு செய்து வீடு வரை வந்து நிற்கும் வரை வாய்யை மூடி கொண்டு இருந்ததும் இல்லாமல் என்னவோ தியாகம் செய்ததுபோல் உன்னை தாங்க வேண்டும் என்று வேறு எதிர்பார்கின்றாயா “ என்று கோபமாய் பேசினார்.

“போதும் சுபா பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த நேரத்தில் எதுவும் தோன்றாமல் தடுமாறி இருப்பாள்” என்று மகேஸ்வரன் சமாதானம் சொல்ல, “இவ்வளவு நடந்தும் இன்னும் நீங்கள் அவள் செய்யும் தப்புக்கு துணை போகின்றீர்களா?, இவளை பார்த்தால் பயத்தில் செய்தது போலவா இருக்கிறது பயமிருந்திருந்தால், உள்ளே வந்து தகராறு செய்யும் போதே உண்மையை சொல்லி இருக்க வேண்டும், கண்ணு செல்லம் என்று கை பிடித்து கன்னம் தடவி அருகில் அமர்ந்து அவர் கோபத்தை குறைத்து கொண்டு அல்லவா? இருந்தாள், அவரின் பொய்கள் தெரியவும் தானே உண்மையை சொன்னாள்” என்று வரிசையாய் சுஹீரா குற்றங்களை அடுக்கி கொண்டே போனார் சுபத்ரா.

“அவளே கவலையில் இருக்கின்றாள் நீ வேறு பேசி இன்னும் கஷ்டத்தை அதிகரிக்காதே, சுகன் நீ குட்டிமாவை அவள் அறைக்கு அழைத்துச்செல் என்று மகேஸ்வரன் மகனை ஏவினார்.

“நான் அவளை அவள் புருஷன் வீட்டிற்கு அனுப்பி வைக்கநினைக்கின்றேன் நீங்கள் என்னவென்றால் அறைக்கு அழைத்து செல்ல சொல்கின்றீர்கள், இதுவே என் அப்பாவாக இருந்திருந்தால் வீட்டின் உள்ளேயே குழி தோண்டி புதைத்து இருப்பார்” என்று சுபத்ரா பேசிக்கொண்டு இருக்கும் போதே… “போதும் சுபத்ரா ஏதோ அதிரிச்சியில் பேசிக்கின்றாய் என்று நினைத்தால் ரொம்பவும் பேசிக்கொண்டே செல்கின்றாய் நான் உன் அப்பா இல்லை என் மகள் சுஹீராவின் அப்பா, அவள் விருப்பப்படி இங்கு இருக்கலாம்” என்று அவருக்கு மேலே குரலை உயர்த்தி அடக்கினார்.

“எனக்கு என்ன வந்தது இனி உங்கள் மகள் வாழ்வில் நான் தலையிடமாட்டேன், போதுமா?” என்று உள் அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டார் சுபத்ரா.

நீ போடா உனக்கு என்ன சரி என்று தோன்றுகின்றதோ? அதை செய் உன்னை எந்த விதத்திலும் கட்டாயபடுத்தமாட்டேன் என்றவர், மகள் கை பற்றி ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள், கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் எல்லா நேரமும் சரியாய் இருக்கும் என்று சொல்ல முடியாது கோபம் குறையவும் அமைதியாய் யோசித்து பார்” என்று அறிவுத்தியவர் மகன் புறம் திரும்பி “நீ குட்டிமாவை அவள் அறையில் விட்டு உன் அம்மாவிடம் போய் சமாதான படுத்து என்றிட, சரி என்று தலையாட்டிய சுகன் தந்தை சொன்ன படியே செய்தான்.

தனது அறையில் நுழைந்தவளுக்கு நேற்று அகரன் தன்னுடன் இருந்த நினைவுவர மேலும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீரில் கரைந்தாள் சுஹீரா. அவள் அழுவதை கண்டு தவறாக புரிந்து கொண்ட சுகன். “குட்டிமா அம்மா பேசியதை எண்ணி வருந்தாதே” என்று சமாதான படுத்த முயன்றான் சுகன். “அம்மா கோபம் நியாயம் தானே சுகன் எனக்கு அவர்கள் மீது வருத்தம் இல்லை அவர்கள் சொன்னது சரி தானே உங்களிடம் முன்பே அகரனை பற்றி தெரியபடுத்தியிருந்தால், இந்த அளவிற்கு இன்னல் அனுபவிக்க வேண்டிய நிலை இருந்து இருக்காது” என்று வருத்த குரலில் கூறினாள் சுஹீரா.

“என் செல்ல குட்டிமா இதை சொல்வதால் நீ என்னை கோபித்துக்கொள்ள கூடாது, என்னடா அண்ணன் இப்படி சொல்கின்றான் என்று தவறாய் எடுக்காமல், ஒரு வேலை இப்படி இருக்குமோ? என்று யோசித்து பார்க்கவேண்டும்” என்று வேண்டுதலுடன் சுகன் துவங்கினான்.

என்ன என்பது போல் சுஹீரா பார்த்திட “உனக்கும் அகரனை பிடித்து உள்ளது குட்டிமா எங்கு எங்களிடம் அவரைப்பற்றி கூறினால் அதன் பின் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று உன் ஆசை மனது உன் மூளையை மறைக்க அது தான் சரியென்று நீயும் நம்பிவிட்டாய் “ என்று சுஹீரா மௌனத்திற்கு விளக்கம் தந்தான் சுகந்தன்.

“முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே எனக்கு உன்னை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்ததும், உனக்காக தான் அவன் சொன்ன அனைத்தையும் செய்தேன் மற்றபடி ஒன்றுமில்லை” என்று தயக்கத்துடன் உள்ளம் அறிந்த உண்மையை மறைத்து கூறினாள் சுஹீரா.

“சரி பொறுமையாய்யிருந்து யோசித்து பார் அகரன் உன்னை ரொம்ப விரும்புகின்றார் அதையும் மனதில் வைத்து கொண்டு நல்ல முடிவாய் எடு நிச்சயம் அது உனக்கும் நல்ல வாழ்வை தான் தரும்” என்று கூறி ஆறுதலாய் அனைத்து விட்டு அங்கிருந்து சென்றான் சுகன்.

“கட்டிலில் சரிந்தவள் முதல் நாள் அகரன் தன் மடியில் படுத்திருந்து காதல் கவிதை பேசியது நினைவு வந்தது அதன் பின் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் நினைவில் உலவ. வெளியில் சொல்ல முடியாத மனவலியில் துடிக்க துவங்கினாள் சுஹீரா.

“ ஏன் அரக்கா என்னிடம் பொய் சொன்னாய், என் அப்பா மீது உள்ள கோபத்தில் என்னை ஏமாற்றிவிட்டாயே!” என்று தனக்குள் புலம்பியபடி கண்மூடி மனதினுள் அகரனுக்கு கேள்விகளை தொடுக்க துவங்கினாள் சுஹீரா.

“அம்மா பாருங்கள் என்னை பாருங்கள் என்கின்றேன் இல்லையா குட்டிமா செய்தது தவறு தான்” “ என்ன தவறு என்று சாதாரணமாய் சொல்லிவிட்டாய்” என்று கோபமாய் சுபத்ரா துவங்கிட, “சரி குற்றம் பெறும் குற்றம் ஆனால் அதை யாருக்காக செய்ய துணிந்தாள் நம் குடும்பத்திற்காக தானே” என்று சுகன் வாதிட. “நீ இதற்கு என்ன பெயர் வேண்டும் என்றாலும் வைத்து கொள், ஆனால் என்னை பொறுத்தவரை அவளை அன்பில் தாங்கிய அவள் அப்பாவிற்கு செய்த துரோகம், எந்த வீட்டில் பெண்களுக்கு இந்த அளவிற்கு சுதந்திரம் கொடுக்கின்றார்கள்” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே உள்ளே வந்த மகேஸ்வரன்.
“குட்டிமா செய்தது தப்பு தான் அதற்காக அவள் செய்ததையே சொல்லிக்காட்டி அவளை நோகடிக்காமல் அதை எப்படி சரி செய்யலாம் என்று யோசிக்கலாம் இல்லையா?” என்றவர் சுகன் அவள் அமைதியாய் தானே இருக்கின்றாள் என்று மகளை பற்றி வினவினார்.

தலையை மறுப்பாய் அசைத்து விட்டு “அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அப்பா, அவளுக்கு இன்னும் அகரன் மீது உள்ள காதல் புரியவேயில்லை, அதை என்னவோ தாலிகாட்டியதால் வந்த ஒரு ஈர்ப்பு என்று மட்டும் தான் நினைக்கின்றாள், அவள் காதலை முழுதாய் உணரும் முன் உண்மை தெரிந்தது தான் கொடுமை “ என்றான் சுகன்.

“இல்லை அந்த உண்மை அடுத்தவர் மூலம் தெரிந்தது தான் பிரச்சனை” என்றவர் அவர்கள் அருகில் சென்று அமர்ந்து கொண்டு “உன் கோபம் நியாயம் தான் சுபா , எனக்கும் இது தெரிய வந்த போது அதிர்ச்சியும் கோபமும் வர தான் செய்தது, ஆனால் உன் அளவிற்கு இல்லை ஏன் தெரியுமா?, உனக்கே தெரியும் நம் பெண்யாரிடம் எளிதில் பழகமாட்டாள், ஆனால் அன்று அகரனுடன் பேசியதும் , அவள் பார்வை எல்லாம் இவர்களுக்குள் இப்படி ஒன்று இருக்குமா? என்று எனக்கு உறுத்திக்கொண்டேயிருந்தது, திருமணமே முடிந்து விட்டது என்பது தான் தாங்க முடியாத வலியாய் உள்ளது, இவ்வளவு அன்பை கொடுத்தும் அவள் ஏன் என்னிடம் மறைத்தாள் என்று வருத்தம் உள்ளது” என்றவர்…

ஒரு நொடி நிறுத்தி “ஆனால் அவள் நிலையையும் புரிந்து கொள்ளவேண்டும் தானே, அன்று ஒரு நாள் முகம் சரியில்லை என்று விசாரிக்க சொன்னாய் நினைவிற்கின்றதா?, அன்று என்னிடம் சொல்ல முடியாமல் தடுமாறினாள், தவறுயென்று தெரிந்தே செய்து விட்டேன் என்றவள் செய்த தவறுக்கு வருந்தவில்லை என்னிடம் எப்படி சொல்வது என்று தான் கலங்கி போய் இருக்கின்றாள்!, அன்று என் இடத்தில் நீயிருந்து கோபமாய்யில்லாமல் ஒரு தோழி போல் விசாரித்து இருந்தால் எல்லா உண்மையையும் உன்னிடம் சொல்லி இருப்பாள், அப்பாவிற்கு பெண் செல்லம் தான் ஆனால் தோழியாய் நெருங்க அம்மாவால் மட்டும் தான் முடியும் சுபா, நீ ஆரம்பத்தில் இருந்து அவளிடம் நெருக்கமாய் பழகியிருந்தால் உன்னிடம் எதையும் மறைத்தியிருக்கமாட்டாள் அப்பாவிடம் சொல்ல தயங்கும் பல ரகசியம் பகிர்ந்து கொள்ளப்படுவது அம்மாவிடம் தான்” என்று பொறுமையாய் எங்கு தவறு என்று விலகினார், மகேஸ்வரன்.

“கோபம் காட்டுவதால் எனக்கு அவளிடம் அன்புயில்லை என்கின்றீர்களா? யாரவது ஒருவராவது கண்டிப்புடன் இருக்கலாம் என்று நினைத்தேன்” என்று வருத்த குரலில் கூறிட, “கண்டிப்பு தேவை படும் இடத்தில் அதை காட்டு இப்போது அவளுக்கு தேவைப்படுவது உன் அரவணைப்பு ஒருவர் தவறு உணர்ந்து கலங்கும் போது தட்டிக்கொடுத்து ஆறுதல் தான் சொல்ல வேண்டும், நீ தவறு தவறு என்று குத்தி காட்ட துவங்கினால் இன்னும் உடைந்து தான் போவார்கள், நீ இனி சுஹீராவை திட்டாதே தோளில் சாய்த்து ஆறுதல் படுத்து உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காத நிம்மதி தாயின் மடியில் கிடக்கும்” என்றவர், “சுகன் இந்த சந்திரன் எப்படியும் இந்த விசயத்தை பரப்பாமல் இருக்கமாட்டான்”, என்று கவலையுடன் நிறுத்த “அப்படி பரப்பினால் அவனுக்கான முடிவை அவனே தேடிக்கொள்வான், அகரனிடம் மோதுவது என்பது சாதாரணமா” என்று அந்த நிலையிலும் சிரிக்க முயன்றான் சுகன்.

“அப்டியென்றால் உங்கள் நண்பன் சொன்னது போல உங்களுக்கு எல்லா தொந்தரவும் கொடுத்தது மாப்பிள்ளை தானா?” என்று கவலையுடன் சுபத்ரா வினவ, “ஆரம்பத்தில் கொடுத்தார் ஆனால் கொஞ்ச நாட்களாக இல்லாமல் இருந்தது” என்று மகேஸ்வரன் யோசனையாய் நிறுத்த, “அது நம் சுஹீராவை காணும் முன் என்று நினைக்கிறேன் அப்பா, அதன் பிறகு அவர் மறைமுகமாக நமக்கு உதவிதான் செய்திருக்கின்றார்”, “கோபக்காரர் அவரிடம் மோதுபவர்கள் முன்னேறவேமுடியாது என்று தொழில் வட்டாரத்தில் பேசுவார்கள் அப்படிப்பட்டவர் நம் வீட்டு பெண்ணிற்காக அவர் கோபத்தைவிடுத்து மாறியிருக்கின்றார், அதை வைத்து தான் சொல்கிறேன் நம் குட்டிமாவை அவரை விட யாரும் நன்றாக பார்த்து கொள்ள முடியாது” என்று மகேஸ்வரன் யோசித்ததை கூறி முடித்தான் சுகன்.

“எனக்கும் அந்த பையன் நல்லவன் போல தான் தெரிகின்றது, பார்த்தாலே தெரிகின்றது பெரியயிடம் என்று ஆனால் சுஹீராவிற்காக இந்த அளவிற்கு இறங்கி வந்து நம்மிடம் பேசினார் பாருங்கள், பெற்ற தாய் நான் அடிப்பதையே அவரால் தாங்க முடியவில்லை அவரின் கவலை எல்லாம் சுஹீராவின் கண்ணீர் தான் நிச்சயம் அந்த கண்ணீரை அவர் மனைவிக்கு கொடுக்க மாட்டார், தவறு நடந்து விட்டது இனி அதை சரிசெய்யப்பார்ப்போம் “ என்றவர் தலை நிமிர்ந்து “இனி நான் சுஹீராவின் இல்லை இல்லை… என் மாப்பிள்ளையின் சுஹீயின் தோழி” என்று சுபத்ரா கூறவும் சுகன் வந்து அனைத்து கொள்ள எனக்கு தெரியும் நீ புரிந்து கொள்வாய் என்று மகேஸ்வரன் சிரித்தார்.

“சுகன் வந்து சமாதானம் செய்யும்வரை உங்களுக்கு என்னுடன் பேச வேண்டும் என்று தோன்றவில்லையா?” என்று மனைவி கோபம் காட்டிட, “அது இல்லை சுபா, குட்டிமா பேசியதால் அகரன் மிகவும் மனம் ஒடிந்துபோனார், அதனால் அவரிடம் பேசலாம் என்று நினைத்தேன், என்னிடம் அவரின் அலுவல் எண் தான் உள்ளது அதற்கு முயன்றேன் ஸ்வீட்ச்ஆஃப் என்று வந்தது அவரிடம் ஒரு முறை பேசிவிட்டால் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கும்” என்று மகேஸ்வரன் கவலையுடன் கூறினார். “என்னிடம் அவரின் தனிப்பட்ட எண் உள்ளது அதற்கு முயன்று பார்க்கின்றேன்” என்ற சுகன் அழைத்த எண்ணும் ஸ்விட்ச்ஆஃப் என்று பதில் தர “அவரின் பி.ஏ எண்ணிற்கு முயன்று பார்க்கிறேன் குகனுக்கு தெரியும்” என்று குகனை தொடர்பு கொண்டான் சுகன்.

“என்ன பாஸ் மச்சான் நம்மை எதற்கு அழைக்கின்றார், என்று குழப்பத்துடன் சொல்லுங்கள் சுகன், என்ன இந்த நேரம் என்று குகன் குரல் கேட்டதும் அகரனை பற்றி விசாரித்த சுகன், குகனுக்கும் எந்த விபரம் தெரியவில்லை… என்று கூறவும் கவலையுடன் வீட்டில் நடந்த முழு விபரம் கூறியதும் நீங்கள் கவலை படாதீர்கள் பாஸ் எங்கு இருப்பார் என்று எனக்கு தெரியும் நான் போய் பார்த்துப்பேசிவிட்டு உங்களிடம் சொல்கிறேன்” என்று சுகந்தனுக்கு வாக்கு கொடுத்துவிட்டு அகரன் இருக்கும் இடம் தேடி புறப்பட்டு சென்றான் குகன்.

அகரன் மனதின் சந்தோசமோ சோகமோ? அதை வெளிப்படுத்த வழக்கமாய் செல்லும் இடமான பீச் ஹவுஸ் முன் காரை நிறுத்தியவன் வீட்டின் உள்ளே வெளிச்சம் இருக்க தனது உரிமையாளன் இங்கு தான் இருக்கின்றான் என்று சொல்லாமல் சொல்ல வீட்டின் உள்ளே சென்றான் குகன்.

“வாங்க தம்பி அகரன் தம்பி வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு இன்னும் எதுவும் சாப்பிட்டால எது கேட்டாலும் பதிலே சொல்லாம மண்ணை நோண்டிகிட்டே இருக்கின்றார்” என்று கவலையுடன் கூறினார், பணியால். “சரி சாப்பாட்டை எடுத்து வாருங்கள் நான் பார்த்து கொள்கிறேன்” என்று அகரன் இருக்கும் இடம் சென்றான் குகன்.

மண்ணை கொண்டு ஏதோ உருவம் செய்துகொண்டு இருந்த அகரனை விசித்திரமாய் பார்த்த படி “ஊரில் ஒரு பெறும் புள்ளி ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை வழி நடத்தும் ராஜா போல இருப்பவன் இங்கு வந்து களிமண்ணுடன் சிறுவன்போல விளையாடி கொண்டு இருந்தால் வியப்பு வராமல் என்ன செய்யும்”

“என்ன பாஸ் இங்கு இருக்கின்ரீர்கள்!” என்று குகன் கேள்விக்கு “எங்கு இருக்கின்றேன்?” என்றான் அகரன், என்ன ஆரம்பமே இப்படி இருக்கிறது பயங்கர மூடவுட் போல சரி சமாளிக்க வேண்டியது தான் குகா கொஞ்சம் பொறுமையாய் பேசு… அவர் பொறுமை பறந்து விட்டது என்றால் மண்ணை பிரட்டுவதை விட்டு உன்னை பிரட்டி எடுக்க த்துவங்கிவிடுவார் என்று தனக்குள் தைரியம் சொல்லிக்கொண்டவன், பணியாள் வந்து உணவு தட்டை கொடுக்க அதை வாங்கி கொண்டு அகரன் அருகில் சென்று அமர்ந்தான் குகன்.

“என்ன பாஸ் இப்படி கேட்கின்றீர்கள்!” என்றான் குகன் “வேறு எப்படி கேட்க?” என்று முகத்தை திருப்பாமலேயே மண்ணில் உருவம் செய்து கொண்டு இருந்தான் அகரன். சரியாக தானே பேசுகின்றேன் என்று தனக்கு தானே முணுமுணுத்து கொண்டவன் “இங்கு வந்து மண்ணில் என்ன செய்துகொண்டு இருக்கின்ரீர்கள்?, நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை போய் கை கழுவிவிட்டு வந்து சாப்பிடுங்கள் என்று அகரனை பிடித்து உலுக்கி விட, “எதற்கு சாப்பிட?” என்று மீண்டும் ஒற்றை வரியில் பதில் கேள்விகேட்டு அகரன் நிறுத்த, குகனுக்கு இருந்த பொறுமை காற்றில் பறந்தது “எதற்கு சாப்பிடுவார்கள் உயிர்வாழ வேறு எதற்கு?” என்று வேகமாய் பதில் தந்தான் குகன்

“அதான் அந்த உயிர் எதற்கு யாருக்காக? என்றவன், இது வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த குரல் உடைய “யாரை உயிர் என்று உருகி கொண்டு இருந்தேனோ அவளே என்னை வேண்டாம் என்று விட்டப்பின், இந்த உயிர் இருந்து என்ன மடிந்து என்ன?, என் கண்முன்னே நான் கட்டிய தாலியை கழட்டி எரிய துணித்தால் பார் அப்போதே அந்த நொடியே அகரன் உணர்வுகள் மடிந்துவிட்டது, நீ பேசி கொண்டு இருப்பது உணர்வுகள் இல்லாத உணர்ச்சிகள் இழந்த மனிதனிடம்” என்று அகரன் வேதனை குரலில் கூறிட

இது வரை அகரனை இந்த நிலையில் கண்டிராத குகனும் மனம் உடைந்து அகரனை கட்டிகொண்டவன் “பைத்தியம் மாதிரி உளராதே அண்ணா, உன்னையும் என்னால் இழக்க முடியாது” என்று கதறினான்.

முதன் முறை குகன் தன்னை “அண்ணா” என்று அழைத்தது இதமாய் உணரவைத்தது அகரனை, “இப்போது என்னை என்ன சொல்லி அழைத்தாய்” என்று அகரன் கேட்டதும், உணர்ச்சி வேகத்தில் மனதில் எப்போதும் அழைத்து பார்க்கும் அண்ணா என்ற வார்த்தையை வெளிப்படையாக கூறியது உறுத்திட, “அது வந்து பாஸ் என்று தடுமாறிய படி” அகரனை விட்டு விலகி அமர்ந்தான் குகன். குகனை பார்த்து மென்மையாய் சிரித்த படி “ஷாக் ட்ரீட்மெண்ட் கிடைத்தால், தான் உண்மையான உணர்வுகள் வெளியில் வருகின்றது?” என்றவன் “நானும் உனக்கு நளன் போல தான்” என்று கட்டியனைத்து கொண்டவன் “நீ எனக்கு தம்பி தான்” என்றான் அகரன்.

அகரன் தந்த அனுமதியில் மனம் நிறைய அது வந்து… “ உங்களுக்கு பிடிக்குமா இல்லையா?” என்று தடுமாறிய படி குகன நிறுத்த, “நீ அண்ணா என்று அழைப்பது தான் மிகவும் பிடித்திருக்கின்றது… நானே உன்னை அப்படி அழைக்கச்சொல்லவேண்டும் என்று பலமுறை நினைப்பேன், ஒருவேலை நளன் நினைவில் அவன் இடத்தில் வேறு யாரையும் நினைக்க முடியாமல் தான் தவிற்கின்றாயோ? என்று விட்டு விட்டேன்” என்று மனம் திறந்து பேசினான் அகரன்.

இதற்கு மேல் மறைக்க ஒன்றும் இல்லை என்று “நான் ஏன் உங்கள் மனைவியை அண்ணி என்கின்றேன்… உங்களை அண்ணனாய் நினைத்ததால் தானே?” என்று குகன் கூறியதும், “நீயும் அதிகாவும் ஒரே குணம் அவளும் உன்னை போல தான் பிறர் நலம் எண்ணுபவள், அன்பாய் இருப்பாள், ஆனால் வெளிப்படையாக காட்டி கொள்ளமாட்டாள்” என்றான் அகரன்.

அதிகா என்ற பெயரே குகனை மௌனமாக்கியது குகனின் மௌனம் உணர்ந்து அதை மாற்றும் விதமாய் “அது சரி நான் இங்கு இருப்பது உனக்கு எப்படி தெரியும்?” என்று அகரன் வினவ, மௌனம் களைத்து “உங்கள் மச்சான் தான் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை கவலையாய் வெளியேறியது கண்டு பொறுக்க முடியாமல் என்னை அழைத்து விபரம் சொல்லி உங்களை பார்த்து கொள்ள சொன்னார்” என்று சுகன் அழைத்த விபரம் சொன்னான் குகன்.

அதுவரை இருந்த கவலை அகன்றவனாய் “சுகன் ரொம்ப நல்லவன் குகா நான் தான் அவனை போலீஸ் ஸ்டேஷன் அனுப்பினேன் என்று தெரிந்தும் என்னை மன்னித்து எனக்காக அவன் அப்பாவிடம் பேசினான், என்னிடம் பாசமாய் நடந்துகொள்கிறான், அவன் குணத்தில் பாதி என் பத்தினி சுஹீக்கு இருந்தால், எனக்கு இந்த கவலையே வேண்டியது இல்லை” என்றவன் மனதில் நிம்மதி உணர்ந்து, “சுகன் எனக்காக சுஹீயிடம் பேசுவான்” என்று கவலை அகன்று சிரித்தான் அகரன்.

“இது என்ன பாஸ்…” என்றவன் அகரன் முறைக்கவும் “அண்ணா” என்று திருத்தி கொண்டவன் “எந்த பிரச்னை வந்தாலும் அதனை சரி செய்ய வழி யோசிக்கும் என் அண்ணன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி இருப்பதா?, அண்ணியை எப்படி உங்கள் வழிக்கு கொண்டு வருவது என்று யோசியுங்கள்” என்றான் குகன்.

“நீ சொல்வது சரிதான் ஒரு பிரச்சனை என்னை நெருங்கும் முன் அதை அகற்றும் வழி யோசிப்பவன் இன்று இது திடீரென்று எதிர்பாராமல் நிகழ்ந்தது என்னை நிலைகுலைய செய்துவிட்டது, என் வாழ்வில், எப்போதும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தினறியதே இல்லை குகா, சுஹீ கோபம் என் நிம்மதியை கொள்கிறது அவளின் மௌனம் என் உணர்வுகளை வதைக்கின்றது… இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை புரிந்து கொள்ள துவங்கியிருந்தால், என் தொடுகையையும் நெருக்கத்தையும் தடுமாறாமல் ஏற்க துவங்கினாள், அதற்குள் உண்மை தெரிந்ததால் எங்கு என்னை வெறுத்து விலகிவிடுவாளோ என்ற கவலை தடுமாற வைத்துவிட்டது, இனி இது போல பேச மாட்டேன்” என்றவன்
“அவள் வாய் என்னை வெறுப்பதாய் கூறினாலும் அவள் கண்களும் அதில் வடிந்த கண்ணீரும் என் மீதான காதலை சொல்லாமல் சொன்னது, அவளே அவளின் காதலை உணர்ந்து என்னை தேடிவந்து என் காதலை ஏற்கும் படி செய்யவேண்டும் என்ன செய்யலாம்?” என்று அகரன். தீவிராமாய் யோசிக்க துவங்கினான்.

“கை கழுவிவிட்டு வந்து சாப்பிடலாம், உங்களை பற்றி கவலையாய் இருக்கும் சுகனிடம் பேசலாம், வீட்ற்க்கு சென்று நிம்மதியாய் தூங்கி எழுந்து அதன் பின் தெளிவாய் யோசிக்கலாம்” என்று குணங்கள் வரிசையாய் அடுக்கி கொண்டே போக, எழுந்து சென்று கை கழுவி வந்தவன் “என் மொபைல் ஸ்விட்ச்ஆஃப் குகா உன் மொபைல் கொடு, சுகனிடம் பேசி விடுகிறேன் என்றவன், குகன் எண்ணில் இருந்து சுகந்தனை அழைத்தான் அகரன்.

“சுகன்… சுஹீ” என்று அகரன் அடுத்து என்ன பேசுவது என்று தடுமாற, “என்ன மச்சான் மனைவியை பற்றிய கவலையா? இங்கு நல்லபடியாக பார்த்துக்கொள்கின்றோம் நீங்கள் தான் மனம் வருந்தி சென்றதாக அப்பா அதான் உங்கள் மாமனார் மிகவும் கவலைபட்டார்” என்று சுகன் சொன்னதும், “என் மீது கோபமாய் இருப்பார் என்று நினைத்து இருந்தேன், சுகன் உனக்கு தான் நன்றி சொல்லவேண்டும் எனக்கு சாதகமாக பேசியதற்க்கு” என்று அகரன் நிறுத்தவும்.

“இங்கு எல்லோருக்கும் வருத்தம் உண்டு தான் அகரன், ஆனால் நடந்ததை மாற்ற முடியாது அல்லவா? அது மட்டுமில்லை எங்களுக்கு எங்கள் குட்டிமாவை பற்றி தெரியும் ஈடுபாடு இல்லாமல் எதையும் செய்யமாட்டாள், நீங்கள் திருமணத்திற்கு அவளை கட்டாயப்படுத்தவில்லை, அவள் சம்மதத்துடன் தான் நடந்தது! என்று சொல்லவும் அவள் மனம் என்ன என்று எங்களுக்கு புரிந்துவிட்டது, நீங்களும் அவள் மீது உள்ள காதலை உங்கள் கோபம் சுஹீராவின் வார்த்தைக்கு அமைதியானது, கிளம்பும் போது கூறிய வார்த்தைகள் மூலம் உங்கள் அன்பை வெளிப்படுத்திவிட்டீர்களே! இருவருக்கும் இடையில் காதல் இருக்கும் போது பின் யார் தடுப்பது” என்று தங்கள் மனநிலையை தெளிவாய் விளக்கினான் சுகன்.

“சுஹீ என் மீது உள்ள கோபத்தில் சாப்பிடாமல்யிருக்க போகின்றாள் நான் வந்து அழைத்து செல்லும் வரை என் மனைவியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சுகனுக்கு உரிமையுடன் கட்டளையிட்டான் அகரன்.

“கவலை படாதீர்கள் உங்கள் மனைவிக்கான உணவு அவர்களின் அம்மா கொண்டு சென்றுவுள்ளார்கள், அதனால் கவலையில்லாமல் இருங்கள்” என்று சுகன் கூறியதும் புதிதாய் கவலை பிறந்தது அகரனுக்கு.

“உங்கள் அம்மாவா அவர்கள் சுஹீ மீது கோபத்தில் உள்ளார்கள் ஏதாவது கூறி அவளை காயப்படுத்திவிடப் போகின்றார்கள்” என்றான் அகரன் கவலையுடன். அகரன் குரலில் இருந்த கவலையயும், பதட்டத்தையும் கண்டு சிரித்த சுகன், “ஹலோ மச்சான் உங்களுக்கு மனைவியாகும் முன்பே அவள் அவர்களின் மகள் மகள் தவறு செய்தால் கண்டிக்கும் உரிமை அம்மவிற்கு உண்டு” என்று கூற, அகரன் தனது குரலை கட்டுப்படுத்தி கொண்டு “என் சுஹீயை யாரும் காயப்படுத்தகூடாது, சுகன் அது அவள் அம்மாவாகயிருந்தாலும் சரி அவள் அழுது கலங்கினாள் என்னால் தாங்க முடியாது” என்றான்.

அகரன் காதலை கண்டு கொஞ்சம் பயந்து, நிறைய வியந்தும் போனான் சுகந்தன், “நீங்கள் கவலைப்பட வேண்டாம், அம்மாவிற்கு அப்பா புரியவைத்து விட்டார் இனி அவர்கள் உங்கள் சுஹீயை காயப்படுத்த மாட்டார்கள், எனவும், தனது தவறு உணர்ந்த அகரன் “நான் அவள் மீது உள்ள அன்பில் தான் கூறுகின்றேன்” என்று தனக்கான காரணத்தை விளக்கினான். “புரிகின்றது அகரன் எல்லாம் சீக்கிரம் மாறும் என்று நம்புவோம்” என்று கூறி அழைப்பை துண்டித்தான் சுகந்தன்.

“என்ன பாஸ் அண்ணியின் அண்ணனிடம் பேசியதற்கே இந்த சிரிப்பா?” என்று குகன் கேலி செய்திட இது அதற்கான சிரிப்புயில்லை சுஹீ வீட்டில் எல்லோரும் எங்கள் காதலை புரிந்து கொண்டார்கள் அதற்கான சந்தோசப்புன்னகை என்றான் அகரன்,

மனதின் கவலை அகன்றதும், பசி தெரிய ஆரம்பித்தது :சாப்பாடு யாருக்கு கொண்டு வந்தாய் வாய்ப் பார்த்து கொண்டு இருக்கின்றாய்? அங்கு என் சுஹீ இந்தநேரம் அவள் அம்மா கைய்யாள் சாப்பிட்டு கொண்டுயிருப்பாள் எனக்கும் பசிகின்றது” என்று வேகமாய் உணவை உண்ண துவங்கினான் அகரன்.

“அகரன் மீண்டு விட்டது கண்டு மனநிறைவுடன் அவன் உண்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த குகனுக்கு, ஒரு வாய் ஊட்டி விட்டான் அகரன் குகன் வாங்க மறுத்து தயங்கவும் “அப்படியென்றால் அண்ணா என்பது வெறும் வாய் வார்த்தை தானா ?, இதுவே நளனாய் இருந்தால் மறுத்து இருப்பாயா?” என்று அகரன் கேட்ட மறுநொடி வாய் திறந்து அகரன் ஊட்டிய உணவை பெற்றவன், கண்களில் கண்ணீர் மறைத்து நின்றது, “ டேய் தம்பி அண்ணாவே இப்போது தான் அழுகாட்சி சீன் முடித்து வைத்தேன் நீ துவங்கதே!” என்றதும் கண்ணீரை துடைத்து கொண்டான் குகன்.

“உங்களுக்கு அண்ணி மீது வருத்தம் இருக்கலாம் அதற்காக இப்படியா?, அவர்கள் உருவத்தை கெடுத்து வைப்பீர்கள்?” என்று அகரன் செய்து கொண்டியிருந்த மண் உருவத்தை காட்டி குகன் கேலி செய்திட, “என்னையே கேலி செய்கின்றாயா? இனி உனக்கு “ஆ” கிடையாது ஒழுங்காய் ஓடிப் போய்விடு” என்று பொய் கோபம் காட்டி எச்சரித்தான் அகரன்.

கண்ணீரில் தலையணையை நனைத்து கொண்டு இருந்த சுஹீரா அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்திட அங்கு சுபத்ரா நிற்க கண்டு அச்சம் படர்ந்தவளாய், “அம்மா” என்றால் சுஹீரா.

கையில் உணவு தட்டுடன் அவள் அருகில் சென்று அமர்ந்தவர், “அழுவதற்கு தெம்பு வேண்டுமில்லையா? இரண்டு வாய் உண்டு விட்டு உன் கண்ணீரை தொடரு” என்றார் சுபத்ரா.

“அம்மா நான் செய்தது மன்னிக்க முடியாத பெரிய தவறு தான், ஆனால் அதற்கு மன்னிப்பை தவிர என்ன கேட்பது என்று தெரியவில்லை “ என்று மீண்டும் கண்ணீரில் கரைந்த சுஹீராவை கன்னம் வருடி கண்ணீரை துடைத்துவிட்டவர், “தவறு இல்லாமல் வாழ்கை இல்லை ஏதோ செய்துவிட்டாய் நானும் கோபித்துவிட்டேன் அதைவிடு இனி உன் வாழ்வில் என்ன செய்ய போகின்றாய்? என்று தெளிவான முடிவுஎடு” என்று உணவை உருட்டி அவள் வாய் அருகில் கொண்டு சென்றபடி வினவினார் சுபத்ரா.

உணவை வாங்கமலேயே “அவனுடன் மட்டும் போய் வாழ சொல்லாதீர்கள் அம்மா அவன் என்னை ஏமாற்றிவிட்டான்” என்றாள் சுஹீரா. வெற்று சிரிப்பை உதிர்த்தவர் “உன் கோபம் நியாயமானது தான் , உன் அப்பாவை பழிவாங்க வேண்டும் என்றால் அவருடன் நேரடியாக மோத வேண்டியது தானே அதைவிட்டு ஒன்றும் அறியாத உன் வாழ்வை வீணாக்குவதா? இது எந்த விதத்தில் நியாயம் உன்னை கட்டாயபடுத்தி கஷ்டப்படுத்தி அதில் இன்பம் கண்டு இருக்கின்றான்! அவன் மனிதனே இல்லை” என்றிட சுஹீரா வாய் தானாய் அரக்கன் என்று முணுமுணுத்தது…

“சரியாய் சொன்னாய் அரக்கன் தான் இன்றே அத்தனை பேர் முன்பும் எப்படி கோபபடுகின்றான் என்று பார்த்தாயா? என்ன தான் உன் மீது அளவில்லா அன்பாய் இருந்தாலும் இந்த அளவிற்கா மிருகத்தனமாய் நடந்து கொள்வது நீ மட்டும் தடுக்கவில்லை என்றால் அந்த உதயன் நிலை என்னாவது?” என்று அகரனை பழித்தார் சுபத்ரா.

“பகடு ரொம்ப கோபக்காரன் அம்மா… அவனுக்கு கோபம் வந்து விட்டால் கட்டுப்படுத்துவது ரொம்ப கடினம்…” என்றாள் சுஹீரா. “அப்படியா சொல்கின்றாய் ஆனால் உன்னை பார்த்ததும் அப்படியே அடங்கிவிட்டார்” என்று மெதுவாய் அகரன் பற்றிய பேச்சை வளர்த்தார், சுபத்ரா.

“அது என்ன பகடு என்று வினவிட அவனை அப்படித்தான் நான் அழைப்பேன் அம்மா பகடு என்றால் எருமைகிடா என்று அர்த்தம்” என்று உதட்டளவில் சிரித்தவள்… கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை மறந்து அகரனை பற்றி வாய் திறந்தாள் சுஹீரா. “என்னிடம் மட்டும் கோபப்பட மாட்டான், என் மீதே கோபம் வந்தாலும் அதை கட்டுப்படுத்திக் கொள்வான் என்னை காயப்படுத்த மாட்டான்!” என்றவள் முகம் தானாய் மலர அதை கவனித்து கொண்டே இருந்த சுபத்ரா “ஏன் அப்படி?” என்று புரியாதது போல் வினவினார்.

“அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்” என்றவள்… “அப்படியா உன் அப்பாவை விடவா? என்று அன்னை ஆச்சர்யமாய் வினவிட, ஒரு நாள் அகரன் இதற்கு சொன்ன விளக்கம் நினைவில் வர… “இந்த கேள்விக்கு அரக்கன் பதில் என்ன தெரியுமா?” என்று அகரன் சொன்னதை திரும்ப சொன்னாள் சுஹீரா.

“உன் அப்பா உன் மீது வைத்திருக்கும் பாசத்தை உன் அம்மா, அண்ணனுடனும் பங்கு போட்டு கொண்டார் ஆனால் நான் உன் மீதான அன்பினை யாருடனும் பங்கு போட விரும்பவில்லை,” கூறி முடிக்கும் முன் அன்றைய நினைவில் அழத்துவங்கிவிட்டாள் சுஹீரா. கண்ணீரை துடைத்துவிட்டவர் “இப்படி எல்லாம் கூட அந்த முரடனுக்கு பேசத்தெரியுமா? என்ன உன்னை அந்த அளவிற்கு விரும்புகின்றாரா?” என்று சுபத்ரா அகரனுக்கு சாதகமாய் பேச துவங்கவும், “இப்படி எல்லாம் போலியாய் பேசி பேசி தான் என்னை ஏமாற்றிவிட்டான்” என்று கோபமாய் அந்த பேச்சை முடித்திட நினைத்தாள் சுஹீரா.

இதற்கு மேல் தான் பேச வேண்டி உள்ளது என்று அவள் கோபத்தை கண்டும் காணமல் தொடர்ந்தார் சுபத்ரா. “அவர் உன்னை ஏமாற்றினார் என்கின்றாயே? நீ எங்களுக்கு செய்ததற்கு பெயர் என்ன?, என்ற சுபத்ரா கேள்வியில் அறை வாங்கிய உணர்வில் துவண்டு போனாள் சுஹீரா.

“அவர் உன்னை ஏமாற்றியத்திற்கு காரணம் உன் அப்பா அவரை அவமானப்படுத்தியது நீ எங்களை ஏமாற்றியத்திற்கு என்ன காரணம் குட்டிமா?” என்று சுபத்ரா மெதுவாய் வினவிட இதுவரை தன்னை அழைக்காத விதத்தில் “குட்டிமா” என்று அழைத்ததும் அவர் குரலில் இருந்த மென்மையும் சுஹீராவிற்கு புதிதாய் இருந்தது இருந்தும் அவர் கேட்டதற்கான பதில் தெரியாமல் விழித்தாள் சுஹீரா.

“நான் அதற்கான காரணம் சொல்லவா?, உனக்கு அவர் மீதான உள்ள காதல் தான், நீ எங்களை ஏமாற்ற துணிந்ததற்கான காரணம்” என்று சுபத்ரா கூறியதும் சுகனும் இதையே தான் சொன்னான் என்று மனம் சலன பட துவங்கியது.

அகரனுடனான திருமணத்திற்கு பிறகு தான் தான் இது போல உணர்ந்தது ஆனால் அதற்கு முன்பில் இருந்தே நான் அவனை விரும்பியதாக என்னை ஏன் நம்ப வைக்க பார்கின்றார்கள் என்று குழம்பி போனாள் சுஹீரா.

“உன் கோபம் நியாயமானது தான், ஆனால் நீ நியாயமாய் கோபப்பட வேண்டியது அகரன் மீது இல்லை உன் அப்பா மீது” என்று சுபத்ரா கூறிட, “என்ன என்று” புரியாமல் பார்த்தாள் சுஹீரா. “உண்மை தான் குட்டிமா என்று உணவை ஊட்டி விட்டுக்கொண்டே மேலும் தொடர்ந்தார், “உன் அப்பா எவ்வளவு பக்குவமான மனிதர், அவரே யாரையோ ஜெயிக்கவைக்க எந்த சம்பந்தமும் இல்லாத அகரனை, அத்தனை பேர் முன் மரியாதை இல்லாமல் அவமான படுத்தியது நியாயமா? சொல் தொழிலில் முன்னேறி ஒரு அந்தஸ்தில்யிருக்கும் யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும் அந்த கோபத்தில் பழிவாங்க முடிவு எடுத்து இருப்பார், எல்லா அப்பாகளுக்கும் தங்கள் பிள்ளைகள் உயர்ந்தவர்கள் தான், உன்னை பெருமையாய் பேச வேண்டும் என்று அவரை மட்டம் தட்டி உன்னுடன் ஒப்பிட்டு பேசியது தவறு தானே?, உன் அப்பா செய்த தவறு தான் அவரையும் தவறு செய்ய தூண்டி இருக்கின்றது “யாகவராயினும் நாகாக்க வேண்டும்”. குட்டிமா இல்லை அதற்கான தண்டனை அனுபவிக்க வேண்டும் தானே, சிறுவயது சட்டென்று கோபம் வந்து இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்து விட்டது, ஆனாலும் உன் மீது உள்ள அன்பினால் தானே அவர் குணத்தையே மாற்றிக்கொண்டு உள்ளார்!, அதை புரிந்து கொள்”, என்று அகரனுக்கு சாதகமாய் பேசிட சுஹீரா முகம் வாடியது யாருக்குமே என் வலி என்னவென்று புரியவில்லையே, என்று உள்ளுக்குள் தவிக்கத்துவங்கினாள் சுஹீரா.

உண்டு முடித்த தட்டை அப்புற படுத்திவிட்டு கை கழுவிவிட்டு வந்து மீண்டும் அமர்ந்தவர் தனது மடியில் மகளை தலை சாய்த்து கொள்ள செய்து மெதுவாய் நெற்றி வருடிய படி, “என்னடா அம்மா இப்படியும் பேசுகின்றாள், அப்படியும் பேசுகின்றாள் என்று குழம்பாதே, ஒரு பிரச்சனையை எல்லா விதித்தில்லிருந்தும் பார்த்தால் தான் தெளிவான முடிவு எடுக்க முடியும் “ என்றவர் இதமாய் வருடிட அன்னை மடி தந்த இதம் ஆறுதல் வார்த்தையில் கவலை துறந்து மெதுவாய் கண்மூடி உறங்கினாள் சுஹீரா.

அகரனை எச்சரிக்க! வாசலிலேயே காத்திருந்தாள் அதிகா, அகரனுடன் தன்னவன் குகனும் வரக்கண்டு மனம் துள்ள வேகமாய் அவனை நெருங்கி, “குகா இப்போதே கரணை எங்காவது அழைத்து சென்று விடு” எனவும், “நீங்கள் வேறு இப்போது தான் மண்ணில் விளையாடிக்கொண்டு இருந்தவரை ஒருவழியாய் கட்டாயபடுத்தி அழைத்து வந்து இருக்கின்றேன், மறுபடியும் எங்காவது அழைத்துபோ என்றால்”, என்று குகன் புரியாமல் கோபம் காட்டினான்.

“புரியாமல் பேசதே குகா, மாமா கரண் மீது கோபமாய் இருக்கின்றார், கரண் சுஹீ திருமண விசயம் மாமாவிற்கு தெரியவந்து விட்டது” என்று நிலமையை எடுத்து சொல்ல. தலையில் அடித்து கொண்ட குகன் “இதை எதற்கு என்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள்?, நீங்கள் பிடித்துவைக்க வேண்டிய ஆள் எப்போதோ உள்ளே சென்று விட்டார், அதுவே தெரியாமல் வந்து என்னை அறுத்துக்கொண்டு வழியை விடுங்கள்” என்று வழிமறித்து நின்று இருந்தவளை நகர்த்திவிட்டு முன்னேறி சென்றான் குகன்.

கலையரசி கண்ணீரை துடைத்தபடி இருக்க யமுனா கலக்கத்துடன், ஈஸ்வரன் முன் நின்று என்னவோ தீவிராமாய் விவாதித்து கொண்டுயிருந்தார், அகரனை கண்டதும் கலையரசி “அண்ணா உங்கள் அருமை புதல்வன் வந்துவிட்டான், எனக்கு ஒரு நியாயம் கேட்டு சொல்லுங்கள்” என்றார்.

“நீ அமைதியாய் இரு யமுனா நான் அவனிடம் பேசி கொள்கிறேன்” என்று மனைவியை அடக்கிவிட்டு “உன்னிடம் பேச வேண்டும்” அகரா என்றார் ஈஸ்வர். ஏதோ விசயம் என்று உணர்ந்தவன் ஏதும் பேசாமல் சம்மதமாய் அவர் முன் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

“உனக்கும் மகேஸ் மகளுக்கும் என்ன சம்மந்தம்?” என்று ஈஸ்வர் வினவிட, துளியும் தாமதிக்காமல் “நான் அவளை காதலிக்கின்றேன்” என்றான் அகரன். “காதலிக்கின்றாயா இல்லை எங்களுக்கு தெரியாமல் திருமணமே செய்து கொண்டாயா?” என்று எதிர் கேள்வி கேட்டார் ஈஸ்வர்.

ஒரு நொடி அனைவரையும் கூர்ந்து கவனித்தவன் “நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான் நான் சுஹீராவை திருமணம் செய்துகொண்டேன்” என்று அகரனே ஒத்துக்கொள்ளவும் கதறி அழத்துவங்கினர் கலையரசி.

“பார்த்தாயா உன் மகனே ஒத்துக்கொண்டுவிட்டான் இனி என் மகள் நிலை என்ன? அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள்” என்று புலம்பிட, உள்ளே வந்த அதிகா “சும்மா புலம்பாதே அம்மா, இப்போது என்ன பிரச்சனை நடக்கின்றது நீ என்ன பிரச்சனை பேசி கொண்டிருக்கின்றாய்” என்று தாயை அடக்க முயன்றாள் அதிகா.

“நீ வாயை மூடு கழுதை எல்லாம் உன்னால் தான் சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது, அது இது என்று உன் தலையில் நீயே மண் அள்ளிபோட்டு கொண்டாய்”, என்று மீண்டும் துவங்க, “கொஞ்சம் சும்மா இருங்கள் உங்கள் கழுதைக்கு ஏற்ற குட்டிச்சுவர் கிடைக்கும்” என்று அதட்டலாய் அடக்கியவன், “என்ன குகா கிடைக்கும் தானே?” என்று குகனை வினவினான் அகரன். அதிகா ஆர்வமாய் குகனை பார்த்த படி நின்றாள். “இப்போது என்ன பிரச்சனை முதலில் அதை பாருங்கள் அண்ணா, அப்பாவிற்கு உங்கள் திருமணத்திற்கான விளக்கம் கொடுங்கள்”, என்று சூழ்நிலையை நினைவு படுத்தினான் குகன்.

அகரன் கவனம் ஈஸ்வர் பக்கம் வந்ததும், யமுனா வேகமாய் “அவர்கள் காதலைபற்றி உங்களிடம் சொன்ன போது, நீங்களே மகேஸ்வரன் அவர்களிடம் பேசி திருமணத்தை நடத்திவைப்பதாய் சொன்னீர்கள் தானே?, இப்போது உங்களுக்கு வேலை இல்லாமல் அவனே முடித்து கொண்டான்” என்று யமுனா மகனுக்கு சாதகமாய் பேசிட, “அந்த திருமணம் எப்படி நடந்தது என்பது தான் என் கேள்வி?, அந்த பெண் திருமணத்திற்கு சம்மதம் சொன்னாளா இல்லை நீ கட்டாயப் படுத்தினாயா?”, என்று கேள்வியாய் நிறுத்தினார்,ஈஸ்வர்.

“திருமணம் அண்ணியின் முழு சம்மதத்துடன் தான் நடந்தது” என்று குகன் பதில் தந்தான். “அப்படியென்றால் இந்த திருட்டு தனத்திற்கு நீயும் உடந்தையா?, வேலைக்கார நாயே! கூடவே இருந்து குழிப்பறித்து விட்டாய்”, என்று கலையரசி கோபம் குகன் புறம் திரும்பியது. குகன் வேதனையில் முகம் வாடி நின்றான்.

அகரன் கோபமாய் கலையரசி பக்கம் திரும்ப, அதற்கு முன் அதிகா “இன்னோரு முறை குகனை ஏதாவது சொன்னால் அம்மா என்றும் பார்க்கமாட்டேன் யார் வேலைக்காரன் குகன், கரணை அண்ணா! என்றது உன் காதில் விழவில்லை?, இன்னோரு முறை குகனை திட்டாதே பின் அகரனின் வேறுமுகத்தை பார்க்கநேரிடும்”, என்று விரல் நீட்டி எச்சரித்தவள், “இதை தானே சொல்ல நினைத்தாய் கரண்!” என்று அகரனிடம் வினவினாள் அதிகா.

கை விரல்களை மடக்கி , “சூப்பர் சிறப்பாய் செய்தாய்!” என்றவன் , குகன் புறம் திரும்பி “எப்படி” என்று புருவம் உயர்ந்திட அதிகாவை முதன்முறை வேறு விதமாய் பார்க்கத்துவங்கினான் குகன்.

“கொஞ்ச நேரம் நீ அமைதியாய் இரு கலையரசி, முடியாது என்றால் உள்ளே சென்று விடுயென்று”, ஈஸ்வர் எச்சரிக்கவும் எல்லோரையும் ஒருமுறை முறைத்து விட்டு உள்ளே சென்றார் கலையரசி.