அரக்கனோ அழகனோ 23

அரக்கனோ அழகனோ 23
0

அழகன் 23

நீ வேண்டாம் என்று விலகிட
நினைக்கவில்லை…
நீ மட்டும் போதும் என்று
இணைந்திட துடிக்கவில்லை
உன் மீது கொண்ட காதல்
நான் கொண்ட கர்வத்திடம்
காணாமல் போனதடா…

அதிகா கைபிடித்து வந்த குகனை பிடித்து தள்ளி விளக்கியவர் “நீ என் மகளுடன் உன் இஷ்டபடி சுற்றுவதற்கு தான் என் மாப்பிள்ளைக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தாயா?, வேலைக்கார நாயே! என் வீட்டை விட்டு வெளியே போ” என்று கோபமாய் கலையரசி கத்திட, இடையில் வந்து தடுத்த அதிகா “இது ஒன்றும் உங்கள் வீடு இல்லை அம்மா மாமா வீடு இங்கு யார் வர வேண்டும் கூடாது என்று நீ முடிவு எடுக்க கூடாது” என்று அவருக்கும் மேலே குரலை உயர்த்தி அதிகா தடுத்திட முயன்றாள்.

“இது என் வீடாய் இருந்திருக்க வேண்டியது பாவி எல்லாம் உன்னால் தான் அப்படியே உன் அப்பா போல் பிழைக்கத்தெரியாத ஜென்மமாய் இருக்கின்றாய்” என்று அதிகா கன்னத்தில் அறைந்தார் கலையரசி. அடுத்த அடி கொடுக்க கை ஓங்கும்முன் முன்னே வந்து கலையரசி கை பற்றி தடித்தவன், “அடுத்த அடி என் அதி மீது விழுந்தால் நான் பொறுமையாய் நின்று பேசிக்கொண்டு இருக்கமாட்டேன் நான் கிராமத்துகாரன் அத்தை, பாசம் வைக்கின்ற அளவிற்கு கோபத்தையும் காட்டுவோம் சும்மா வேலைக்காரன் வேலைக்காரன் என்று அவமான படுத்துகின்றீர்கள், என்னை போன்ற வேலைக்காரர்கள் இருப்பதால் தான் நீங்கள் முதலாளியாய் அதிகாரம் செய்து கொண்டு இருக்கின்றீர்கள்” என்றான் குகன்.

“என் அண்ணன் மீது உள்ள மரியாதைக்கு நீங்கள் அவர் குடும்பம் என்ற ஒரு காரணத்திற்காக தான் பொறுமையாய் பேசிக்கொண்டிருக்கின்றேன், இனியும் நீங்கள் செய்வதை பார்த்துக்கொண்டு அமைதியாய் இருக்கமாட்டேன்” என்று பற்றி இருந்த கலையரசி கையை விடுத்தவன், உரிமையாய் சென்று அதிகா தோள்களில் கை போட்டு கொண்டான் குகன்.

“அதியும் நானும் காதலிக்கின்றோம், அதை தடுக்கும் உரிமை யாருக்குமில்லை சட்டப்படி அவள் மேஜர் எங்களை பிரிக்கும் எண்ணத்தை உங்கள் கனவிலும் நினைத்து பார்க்காதீர்கள்”, என்று குகன் அடக்கிய குரலில் ஒவ்வொரு வரியாய் தெளிவாய் உச்சரித்து நிதானமாய் தனது கோபத்தை காட்டினான்.

இதுவரை தன்னை நிமிர்ந்து பார்த்து பேசக்கூட தயங்குபவன் இன்று நெஞ்சை நிமிர்த்தி தன்னை எச்சரித்து கொண்டு இருப்பதை கலையரசியால் பொறுத்து கொள்ள முடியவில்லை, அதே சமயம் குகன் கோபத்தை கண்டு சிறு அச்சமும் உண்டானது. “என்னடி உன் முன்பே உன் அம்மாவை எடுத்து எறிந்து பேசுகின்றான் இந்த வேலைக்காரன்” என்று மகள் புறம் திரும்பி நியாயம் கேட்டவர் குகன் கைகள் அதிகா தோளில் கிடப்பதை கண்டு, நீ” வேறு அவன் கையை மாலைபோல தோளில் சுமந்துகொண்டு ச்சீ கையை எடுடா” என்று மீண்டும் கோபம் காட்டினர் கலையரசி.

“ இன்னோரு முறை அவரை அவமான படுத்திப்பேசதே” என்று எச்சரித்தவள் “அவர் சொன்னது கேட்கவில்லை நானும் குகனும் காதலிக்கின்றோம்” என்று அதிகாவும் அதையே கூறிட செய்வது அறியாமல் திகைத்து போனார், கலையரசி.

“என்ன அண்ணா நீங்கள் இங்கு நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்ரீர்கள்? அந்த நாயை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுங்கள், இவன் கெட்டகேட்டிற்கு நம் வீட்டு பெண் கேட்கின்றதாம், என்ன என்று தட்டி கேட்டால் ஆமாம் அப்படித்தான் என்று என்னிடமே திமிராய் பேசுகின்றான் அண்ணா” என்று ஈஸ்வரிடம் முறையிட்டார், கலையரசி.

அதுவரை ஒதுங்கி நின்று நடந்ததை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த ஈஸ்வர் முன்னே வர “என்னங்க பிள்ளைகள் விருப்பத்திற்கும் மதிப்பு தரவேண்டும்” என்று அவர் கை பற்றி தடுத்தார் யமுனா. “நீ வாயை மூடு யமுனா உன்னை போல பஞ்சத்தில் அடிப்பட்டவனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு முன் வராதே எங்கள் குடும்பத்திற்கு என்று ஒரு கௌரவம் உள்ளது, அது உன் போல அடுத்த வேலைக்கஞ்சிக்கு இல்லாதவர்களுக்கு புரியாது தகுதியே இல்லாத உன்னிடம் போய் இந்த வீட்டின் பொறுப்பை கொடுத்தார்கள் பார் என் அம்மா அவர்களை சொல்ல வேண்டும்” என்று இருந்த கோபத்தில் ஈஸ்வர் முன்பே தரக்குறைவாக பேசுகின்றோம் என்பதை மறந்தது கோபத்தில் கத்தி கொண்டே போனார் கலையரசி. “கலை” என்று ஈஸ்வர் அவருக்கு மேல் குரலை உயர்த்தி அதட்டவும் அமைதியானவர், தனது அண்ணன் முகத்தில் இருந்த அருவருப்பை கண்டு செய்த தவறு புரிய “கோபத்தில் என்ன பேசுவது என்று புரியாமல் பேசிவிட்டேன் அண்ணா, நீங்கள் வந்து இவனை என்னவென்று கேளுங்கள்” என்று அப்போதைய பிரச்சனையை சரிக்கட்ட எண்ணி பணிந்து போனார் கலையரசி.

ஈஸ்வர் முன்னே வந்து நிற்கவும் கைகள் தானாக கீழே இறங்க தலை தாழ்ந்து குற்ற உணர்ச்சியில் நின்றிருந்த குகனை நோக்கி “கலை சொல்வது உண்மையா?, நீ அதிகாவை காதலிக்கின்றாயா? “ என்று அழுத்தமாய் ஈஸ்வர் வினவிட, “என்னை மன்னித்து விடுங்கள் சார் நான் அதிகாவை விரும்புவது உண்மைதான், உங்கள் குடும்பத்திற்கு நான் தகுதி இல்லாதவன் என்று தெரியும் உங்களுக்கு பிடிக்காது என்று தெரியும் ஆனால் என்னால் அதியை மறக்க முடியாது யாருக்காகவும் அவளை விட்டு கொடுக்கமாட்டேன் உங்கள் வீட்டு பெண்னை கடைசி வரை காதலுடன் என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்வேன்”, என்று குனிந்த தலை நிமிராமலேயே ஆனால் தெளிவாக தனது மனதில் இருந்ததை மறைக்காமல் கூறினான் குகன்.

ஈஸ்வர் கைகள் ஓங்கவும், “ மாமா” என்று பதறி போன அதிகா, “அவர் மீது தவறு இல்லை மாமா நான் தான் அவரை முதலில் விரும்பினேன்” என்று முன்னே வந்து தடுக்க, அவள் கன்னம் தட்டி சிரித்தவர் “சரியான தேர்வு அதிகா” என்று பராட்டுத்தலாய் கூறினார், ஈஸ்வர். “ குகா இங்கே வா” என்று குகனை முன்னே அழைத்து, “கலை பேசத்துவங்கினாலேயே பயந்து ஒதுங்கி போய்விடுவாய் எங்கு கலை மீது உள்ள பயத்தில் அதிகாவை கைவிட்டு விடுவாயோ என்று பயத்தில் தான் உங்கள் விபரம் தெரிந்தும், அமைதியாய் இருந்தேன் இப்போது நம்பிக்கை வந்துவிட்டது, யாருக்காகவும் நீ என் மருமகளை கண்கலங்க விடமாட்டாய் உன்னை விடப்பொருத்தமான பையன் வேறு எங்கு கிடைப்பான்” என்றபடி தனது சம்மதத்தை தந்தார் ஈஸ்வர்.

“எங்களை புரிந்து கொண்டதற்கு நன்றி சார்” என்று உணர்ச்சி வேகத்தில் அவரை கட்டிப்பிடித்து கொண்ட குகன் சூழ்நிலை உணர்ந்து விலகி “சாரி சந்தோஷத்தில் என்ன செய்கின்றேன் என்று புரியாமல் ” என்று மன்னிப்பு வேண்டும் குரலில் கூறினான். “உன்னை மன்னிக்க முடியாது என் மருமகளை திருமணம் செய்து கொள்ளப்போகின்றாய், என் மகனை அண்ணா என்கின்றாய் நான் மட்டும் சார் , என்னை அப்பா என்று அழைத்தால் உன் மன்னிப்பு ஏற்று கொள்ளபடும்” என்று ஈஸ்வர், கோபமாய் துவங்கி புன்னகையுடன் முடிக்க, நடப்பது விளங்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த கலையரசி “உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா அண்ணா” என்று கேட்டபடி முன்னே வந்தார்.

“நாம் பெற்றுவிட்டோம் என்பதற்காக நம் விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க கூடாது அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடு” என்று ஈஸ்வர் தங்கைக்கு அறிவுரை கூறிட அதை காதில் ஏற்காமல், “இவள் உணர்வுகளை மதித்து நம் குடும்ப மானத்தை காற்றில் விட சொல்கின்றாயா?” என்று கோபம் தனியாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தார், கலையரசி.

ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவர் “எதுவும் பேசதே கலை சும்மா சும்மா அந்தஸ்து அந்தஸ்து என்று குதிக்கின்றாய், நீ உன் கணவரை காதலித்து திருமணம் செய்யும் போது எங்கு போனது இந்த அந்தஸ்து. உன் உணர்வுகளுக்கு மதிப்பு தந்து தானே அப்பா உன் விருப்பப்படியே நம்மிடம் வேலை பார்த்தவருக்கு உன்னை திருமணம் செய்து வைத்தார் நடந்தது எல்லாம் மறந்து அநாகரிகமான பேசி உன் நிலையை நீயே தரம் இறக்கி கொள்ளாதே ஒருவரின் அந்தஸ்து யாருக்கும் தீங்கு செய்யாத குணத்தில் தான் உள்ளது என்று அப்பா சொல்வது மறந்துவிட்டதா?” என்றார் ஈஸ்வர்.

“அது தான் என் பயமும் நான் விரும்பிய ஒரே காரணத்திற்காக கொஞ்சமும் தகுதி இல்லாதவரை எனக்கு திருமணம் செய்து வைத்ததால் தான் இப்போது இந்த நிலையில் இருக்கின்றேன் என் மகளுக்கும் என் நிலை வர அனுமதிக்க மாட்டேன், இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்”, என்று மீண்டும் எதிர்த்து பேசி தனது மறுப்பை தெரிவித்த படி இருந்தார் கலையரசி.

“அண்ணி உங்களுக்கு நிகழ்ந்தது போல அதிகாவிற்கும் நடக்கும் என்று இல்லை அவள் புத்திசாலி பெண் சூழ்நிலை உணர்ந்து நல்லவிதமாய் நடந்து கொள்வாள்” என்று அவரை சமாதான படுத்த கூறிய யமுனாவின் வார்த்தையை கூட தவறாக புரிந்து கொண்டவர், “அப்படியென்றால் என்னை முட்டாள் என்கின்றீர்களா? வாழத்தெரியாமல் என் வாழ்வை நானே கெடுத்துக்கொண்டேன் என்கின்றாயா?, உன் திட்டம் இது தானே பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்தால் சீர்வரிசை செய்ய வேண்டும் இவனை போல பஞ்சத்துக்கு அடிப்பட்டவனுக்கு என்றால் கொடுப்பதை வாங்கி கொண்டு வாலை ஆட்டிக்கொண்டு இருப்பான் என்று நினைக்கின்றாய் உனக்கு என்றுமே நானும் என் மகளும் நல்லா இருந்தால் பொறுக்காதே “ என்று கோபத்தில் மீண்டும் ஒருமையில் அழைத்து மரியாதை இல்லாமல் பேசத்துவங்கினார், கலையரசி.

“இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினாய் என்றால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது? கலை, நீ பேசிக்கொண்டு இருப்பது என் மனைவி உன் அண்ணியிடம் என்பதை மறந்துவிடாதே! குகனுக்கும், அதிகாவிற்கும் தான் திருமணம் இது தான் என் முடிவு இதற்கு மேல் இதை பற்றி பேசதே” என்று முடிவாய் கூறி கலையரசி வாய்யை அடக்கினார் ஈஸ்வர்.

கலையரசி வார்த்தையில் கலங்கி நின்று இருந்த யமுனா அருகில் வந்த அதிகா “அத்தை எனக்காக அம்மாவை மன்னித்துவிடுங்கள்” என்றதும் “அவர்கள் கோபத்தில் பேசிக்கின்றார்கள் அதிகா கோபத்தில் பேசும்வார்த்தைகள் சிலது அர்த்தமற்றதாய் இருக்கவும் வாய்ப்பு உள்ளது” என்று பெருந்தன்மையாய் கூறினார், யமுனா.

“நல்லவள் போல நடித்து என் மகளையும் உன் பக்கம் இழுத்து கொண்டாயா? யமுனா”, என்று தனக்குள் கருவிக் கொண்டவர், அண்ணனை நிழலில் இருந்துகொண்டு அவரையே எதிர்த்துப்பேச தைரியமின்றி, “என் மகள் வாழ்வையும் அழிக்க முடிவு செய்துவிட்டீர்கள் நான் தடுத்தாலும் என்னை வில்லி போல பார்க்கின்றீர்கள், ஆனால் நாளை நீ கண்னை கசக்கி கொண்டு வந்து நிற்கும் போது உனக்கு இருக்க போவது நான் மட்டும் தான்” என்று மறைமுகமாய் அதிகாவை எச்சரிக்கை செய்து பார்த்தார், அவளோ எதையும் கண்டு கொள்ளாமல் யமுனா அருகில் நின்று குகனை பார்த்து கொண்டு இருக்கவும் “சொன்னால் திருந்தாது பட்டால் தான் புரியும்” என்று மகள் என்றும் பாராமல் சபித்தார் கலையரசி. “என் மகளை விட்டுவிட்டாய் இல்லையா?” என்று குற்றம் சாட்டும் குரலில் ஈஸ்வரிடம் கேட்டார் கலையரசி.

மறைமுகமான அவரின் சம்மதத்தை புரிந்து கொண்ட ஈஸ்வர் “கவலைபடாதே கலை அதிகாவும இந்த வீட்டு பெண் தான் செய்ய வேண்டியதை நிறக்கவே செய்து அனுப்புவேன்” என்று உறுதி தந்தார் ஈஸ்வர்.

குகன் போன் அடிக்க அதை எடுத்து பேசியவன் அதிர்ந்து போய் பதறிய படி மற்ற விபரம் கேட்டுக்கொண்டவன் என்ன என்று புரியாமல் தன்னையே பார்த்து கொண்டு நின்றிருந்த மற்றவர்கள் புறம் திரும்பி “அண்ணன் கார் ஹைவே அருகில் என்று தடுமாற”, “என்ன என்று சொல்” என்று பதறினார் யமுனா.

ஓரளவு விபரம் புரிந்து கொண்ட ஈஸ்வர் “வேறு விபரம் சொன்னார்களா? மருத்துவமனையில் சேர்த்து விட்டார்களா?” என்று கேட்டு கொண்டே, தனது கார் சாவியை எடுத்து வர அவர் பின் மற்றவர் ஓடாத குறையாய் சென்றனர். “சூர்யா சார் மருத்துவமனையில் தான் சேர்ந்து உள்ளனர்” என்றதும் வேகமாய் மருத்துவமனை வந்து சேர்ந்தனர். ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டு இருக்கின்றது என்று யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை, குகன் வேகமாய் சுகனுக்கு விபரம் கூறிட, சுஹீரா வீடும் அதிர்ச்சியில் உறைந்தது.

ஊருக்கு கிளம்புவதற்கு தேவையான தனது பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள் சுஹீரா, வேகமாய் அவள் அறைக்குள் வந்த சுகன் அதனை கோபமாய் தட்டிவிட்டு, “இங்கு ஒருவர் உயிரோடு செத்துக்கொண்டு இருக்கின்றார், நீ எதை பற்றியும் கவலையில்லாமல் பயணம் கிளம்பி விட்டாயா?” என்று கோபக் குரலில் கூறினான் சுகன்.

சுகன் கோபத்தை இதுவரை அறிந்திராத சுஹீரா, “என்ன சுகன் ஏற்கனவே எடுத்த முடிவு தானே, வீணாய் வம்பு செய்யாமல் கிளம்பு” என்று அலட்சியமாய் பதில் தந்தபடி மீண்டும் தனது பொருட்களை அடுக்குவதில் முனைந்தாள்.

“சுஹீராஅகரனுக்கு விபத்து நேர்ந்து விட்டதாம் மருத்துவமனையில் இருக்கின்றார்” என்று சுகன் கூறியதும்ஒரு நொடி தடுமாறி போனவள் கையில் இருந்த பொருளை கீழே தவரவிட்டாள். “இருக்காது சுகன் , பகடு காரை வேகமாய் ஓட்டுவான் தான் அதற்காக விபத்து நேரும் படி தடுமாறமாட்டான் நானே பார்த்து இருக்கின்றேன் எவ்வளவு அழகாய் கார் ஓட்டுவான் தெரியுமா? உன்னிடம் யாரவது பொய்ச்சொல்லி இருப்பார்கள், ஏன் அந்த பகடுவே என்னை வரவைக்க இது போல் பொய்ச்சொல்லி இருப்பான்”, என்றவள் குரல் கலக்கமாய் ஒலித்தது.

அவள் குரலில் இருந்த கலக்கத்தை உணர்ந்தவன் “நீ என்று தான் அவரை நம்பபோகின்றாய் குட்டிமா, உண்மையை தான் சொல்கின்றேன் அவர் கார் நன்கு ஓட்டுவார் தான் ஆனால் மனம் குழப்பத்தில் இருக்கும் போது யாராய் இருந்தாலும் தடுமாறத்தான் செய்வார்கள்” என்றான் சுகன்.

சுகன் குரலில் இருந்த உண்மை சுஹீராவை தடுமாற வைத்தது, “அகர் என்று கூவியபடி சரிந்து தரையில் அமர்ந்தவள் பித்து பிடித்ததுபோல, இருக்காது என் பகடு என்னை விட்டு போகமாட்டான், எனக்கு தெரியும் அவனுக்கு என்னுடன் யுகம் யுகமாய் வாழவேண்டும் என்று ஆசை என்னை விட்டு போக மாட்டான், அவன் இல்லாமல் என்னால் இருக்கமுடியாது என்று அவனுக்கு தெரியும் நான் அழுதால் வருத்தபட்டால் எனக்கு ஒரு வலி என்றால் முதலில் துடிப்பவன் அவன் தான் அவனே அந்த வலிகளை எனக்கு கொடுக்கமாட்டான்” என்று திரும்ப திரும்ப பிதற்றி கொண்டே இருந்தாள் சுஹீரா.

அவள் நிலை கண்டவன் பயந்து போய் “அம்மா” என்று அலறிட வேகமாய் வந்த சுபத்ரா சுஹீரா நிலை கண்டு “என்ன?” என்று புரியாமல் வினவிட சுகன் நடந்ததை கூறினான். “இன்னும் என்ன பேசி கொண்டிருக்கின்றாய் போய் காரை எடு மருத்துவமனை சொல்வோம் அப்பா எங்கே? என்று பார்” என்று அடுத்தடுத்து செய்ய வேண்டியதை கட்டளையிட்டவர், சுஹீராவின் அருகில் அமர்ந்து “இங்கு பார் குட்டிமா உன் அகரனுக்கு எதுவும் ஆகாது இப்போதே அவரிடம் செல்வோம்” என்று ஆறுதல் படித்தமுயன்றார், சுபத்ரா.

“அம்மா சுகன் என்னென்னவோ சொல்கின்றான் அது எல்லாம் பொய் தானே?”, என்று பொய் என்று கூறிவிட மாட்டாரா என்ற எண்ணத்தில் ஏக்கமாய் அவர் முகம் பார்த்து வினவினாள் சுஹீரா. மறுப்பாய் தலையசைத்த சுபத்ராவை பார்த்து நம்பாமல் “இருக்காது அம்மா என் பகடு என்னை விட்டு போகமாட்டன் அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அம்மா என்னை விட்டு போகமாட்டன்” என்று மீண்டும் பித்தற்ற துவங்கினாள், சுஹீரா.

“இப்போது சொல் அவன் என்னை விட்டு போகமாட்டான் போகமாட்டான், என்று எத்தனை முறை உன்னிடம், தன் காதலுக்காக வேண்டி நின்றார் அப்போது எல்லாம் எங்கு போனது, இந்த புத்தி?” என்று கோபமாய் சுபத்ரா கேட்டிட, அது எதையும் உணராமல் “இருக்காது என் பகடு என்னை விட்டுப்போகமாட்டான்” என்று மீண்டும் மீண்டும் அதையே மந்திரம் போல கூறிக்கொண்டு இருந்தவளை அழைத்து சென்று மருத்துவமனை வந்து சேர்த்தனர்.

மகேஸ்வரன் ஏற்கனவே அங்கு வந்து இருக்க முகம் எல்லாம் வெளிரி போய் பைத்தியம் போல் “பகடு என்னை விட்டு போகமாட்டான்” என்று முணுமுணுத்த படி வந்த சுஹீராவை கண்டு வேகமாய் அவள் அருகில் வந்தவர், “குட்டிமா இங்கு பார் இன்னும் மாப்பிள்ளைக்கு ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டு தான் இருக்கின்றது, இன்னும் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை” என்றார்.

தனது தந்தையின் குரல் கூட அவள் மனதில் உணராமல் சுற்றும் பார்வையை சுழற்றியபடி “என் அகியை பார்க்கவேண்டும் என் பகடுவை பார்க்கவேண்டும்” என்று கூறிக் கொண்டே அகரன் இருக்கும் அறை வரை வந்தவள் உள்ளே செல்ல முயல, குகன் அதிகா யமுனா தடுத்து அவளை அருகில் அமரவைத்து ஆறுதல் படுத்த முனைந்தனர். கல்நெஞ்சான கலையரசியே சுஹீரா நிலை கண்டு இறங்கி வந்து அகரனுக்கு ஏதும் ஆகாது நீ கடவுளை மட்டும் நன்றாக வேண்டிக்கொள் என்று ஆறுதல் கூறினார்.

எதையும் உணரும் நிலையில் அவள் இல்லை சுஹீரா வந்தது அறிந்து அவளை காண வெளியில் வந்த சந்திரிமாவும் “இப்படியே அழுகாமலிருந்தால் மனம் அழுத்தம் ஏற்பட்டு உனக்கு எதாவது வந்து விடும் தயவு செய்து, கண்ணீர் சிந்தி அழுது விடு” என்று மருத்துவராய் அறிவுரை வழங்கினார்.

“அழவேண்டுமா, நான் அழுதால் என் பகடுவிற்கு பிடிக்காது, நான் அழமாட்டேன்பா , அவன் வந்து நான் அழுது இருந்ததை பார்த்தால் கோப்படுவான் நான் அழமாட்டேன்” என்றவளை யோசனையாய் பார்த்துவிட்டு டீரீட்மெண்ட் நடக்கும் அறைக்குள் சென்றவர், “சூர்யா! சுஹீரா நிலை மோசமாக உள்ளது இப்படியே அவள் அவளை கட்டுபடுத்தி வைத்திருப்பது நல்லது அல்ல சீக்கிரம் அகரனை அவள் கண் முன் காட்டு” என்று கட்டளை போல கூறினார் சந்திரிமா.

அடுத்த சில நொடி நேரங்களில் அகரனை காண சுஹீராவிற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது உள்ளே சென்றவள் தலையில்.கட்டுகட்டி ஒற்றைக்கை காலில் கட்டுகளுடன் இருந்த அகரனை கண்டு இது வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் வெளியில் வர, அகரன் அருகில் சென்று காயம்படாத அவன் கரம் பற்றிக்கொண்டு குரல் நடுங்க, உடல் நடுங்க கையில் முகம் புதைத்து அழத்துவங்கினாள் சுஹீரா.

“பகடு நான் கோபத்தில் பேசிவிட்டேன், இனி உன்னை விட்டு விலகிப்போக நினைக்கமாட்டேன் நீயும் என்னை விட்டு போக க்கூடாது, இனி நீ என்ன செய்தாலும் உன்னுடனே இருந்து உரிமையாய் சண்டை போடுவேன் உன்னை விட்டு விலகிப்போகமாட்டேன் பகடு கண்ணை திறந்து பார் விசர் நான் அழுகின்றேன் என் கண்ணீரை துடைக்க மாட்டாயா?” என்று செல்ல கோபம் போல் கூறினாள் சுஹீரா.

“சுஹீரா அகரன் தலையில் அடி பலமாய் பட்டு உள்ளது, அதானல் வலி தெரியாமலிருக்க மயக்கமருந்து கொடுத்து இருக்கின்றோம், நீங்கள் என்னுடன் வாருங்கள் அவன் கண் விழித்ததும் நானே வந்து உங்களை அழைத்து வருகிறேன்” என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல சொன்னான் சூர்யா.

அகரன் முகத்தை விட்டு பார்வை விலகாமல் மறுப்பாய் தலையசைத்து “நான் இவனை விட்டு விலகமாட்டேன் என்று செல்லியிருக்கின்றேன் வாக்கு தவறினால் அகரனுக்கு பிடிக்காது பின் அரக்கனாய் மாறிவிடுவான்” என்றிட வேறு வழியின்றி சுஹீராவை அகரனுடன் விட்டு அகன்றான் சூர்யா.

சூர்யா அறைக்குள் வந்த குகன் “என்ன நடந்து?” என்று வினவ, “எதை கேட்கின்றாய்?” என்று புரியாதது போல வினவினான் சூர்யா. “இந்த விபத்து எப்படி நடந்தது என்று கேட்கின்றேன்” என்றான் குகன் அழுத்தமாய், “என்னை கேட்டால் எனக்கு எப்படி தெரியும் விபத்து நடந்த இடத்திலிருந்து போன் வந்தது ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து ட்ரீட்மெண்ட் கொடுத்தேன்” என்றான் சூர்யா. நம்பாமல் பார்த்த குகன் “விபத்து நடந்தது ஹைவே அண்ணன் மீட்டிங் முடிந்து வரும் வழி வேறு அதற்கும் இந்த ஹைவேக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அது மட்டுமில்லாமல் விபத்து நடந்த இடத்திலிருந்து சிட்டிக்கு நடுவில்யிருக்கும் இந்த மருத்துவமனை ஏன் கொண்டு வர வேண்டும் ?, விபத்து நடந்த இடத்தின் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு போன் பண்ணாமல் உங்களுக்கு எப்படி அழைத்தார்கள்?, நீங்கள் தான் அவர் நண்பர் என்று ஏற்கனவே தெரியுமா என்ன?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டு இருந்தான் குகன்.

“என்னையே சந்தேகப்படுகின்றாயா நீ விசாரிப்பதை பார்த்தால் நான் தான் அகரனை விபத்தில் சிக்கவைத்தது போல கூறுகின்றாய் ?” என்றான் சூர்யா. “நீங்கள் தான் விபத்தை ஏற்படுத்தியது என்று கூறவில்லை, ஆனால் உங்கள் உதவியுடன் தான் இந்த விபத்து நடந்து உள்ளது என்கின்றேன்” அழுத்தம் திருந்தமாய் கூறினான் குகன்.

“உண்மையை சொல்லுங்கள் சூர்யா என்ன நடந்தது?” என்று குரல் கேட்டு திரும்பினால் சந்திரிமா அங்கு கோபமாய் நின்றுகொண்டிருந்தார், “இரண்டு நாட்களாக நீங்கள் சரியில்லை எதையோ யோசித்து கொண்டே இருந்தீர்கள்” என்றார். “இந்த விபத்து அண்ணன் திட்டமா? அதற்கு நீங்கள் உதவினீர்களா? என்று நேரடியாகவே வினவினான் குகன்.

இதற்கு மேல் மறைக்க முடியாது என்று உணர்ந்து “நீ சொல்வது போல இது அகரன் திட்டம் தான் இரு தினங்களுக்கு முன் என்னை அழைத்து இப்படி செய்யப்போகின்றேன், நீ எனக்கு உதவவேண்டும் என்றான், நான் மறுத்தேன் நீ செய்யவில்லை என்றால் வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளவேன்” என்றதும் வேறு வழி தெரியாமல் சம்மதித்தேன், ஊருக்குள் விபத்து ஏற்படுத்துவது பிரச்சனை வரும் என்று தான் ஊருக்கு வெளியில் இடம் தேர்வு செய்தோம், அவனிடம் பலமுறை கூறினேன் வேகத்தை குறைத்து வா… என்று ஆனால் நானே எதிர்பார்க்காத அளவு வேகமாய் வந்தான் அவன் வந்த வேகத்தில், மரத்தில் மோதியிருந்தால் நிச்சயம் பெரிய அடி! ஏன் உயிருக்கே கூட ஆபத்து நேர்ந்திருக்கும், ஆனால் மரத்தில் மோதும் முன்பே சூழ்நிலை உணர்ந்தவன் கார் கதவை திறந்து வெளியில் குதித்துவிட்டான், அவன் விழுந்த இடத்தில் இருந்த கல் தலையில் மோதியதால் தான் இந்த காயம், மற்றபடி பயப்படும்படி பெரிய அடியில்லை” என்று சமாதானம் கூறினான் சூர்யா.

“அவர் இப்படி ஒரு திட்டமிடும்போதே என்னிடம் சொல்லி இருக்கலாம் இல்லையா நான் எப்படியாவது அவரை தடுத்து இருப்பேன்” என்று ஆற்றமையுடன் வேதனைபட்டான் குகன். “உங்களால் தடுக்கமுடியவில்லை என்றால் எண்ணிடமாவது சொல்லி இருக்கலாம் இல்லையா நான் அவனை தடுக்க முயற்சித்து இருப்பேன் கொஞ்சம் நிலைதடுமாறி இருந்தாலும் உயிருக்கே ஆபத்து இல்லையா?” என்ற சந்திரிமா, “அந்த பெண் சுஹீராவை நினைத்திருந்தால் இது போல் முட்டாள் தனமான யோசனை செய்திருப்பானா?, அவனை நேரில் காணும்வரை பைத்தியம் போல சொன்னதையே சொல்லிக்கொண்டு பார்க்கவே கஷ்டமாய் இருந்தது” என்று வேதனையாய் கூறினார் சந்திரிமா…

“அத்த பெண்ணிற்காக தான் உயிரையும் பணையம்வைத்து இந்த முடிவுக்கு வந்தான், அகரனும் சுஹீராவை அந்த அளவிற்கு காதலிக்கின்றான்” என்று நேரம்காலம் அறியாமல் அகரனுக்காக வாதாடி இருவரின் கோபமான முறைப்பையும் பெற்றுக்கொண்டான் சூர்யா.

“அண்ணியுடன் பிரச்சனை வந்ததிலிருந்து அவர் மூளை இப்படி தான் ஏடாகூடமாய் வேலை செய்கின்றது, அண்ணியை பற்றி ஒருமுறை யோசித்திருந்தால் இந்த முடிவிற்கு வந்திருக்கமாட்டார், இவருக்கு என்ன தோன்றுகின்றதோ?, அதை செய்து அண்ணியை அழவைத்துக்கொண்டே இருக்கின்றார், இவர் தவறு செய்வாராம் அதை அவர்கள் பெருந்தன்மையாய் மன்னிக்கவேண்டுமா?, அப்படி மன்னிக்கவில்லை என்றால் எதையாவது செய்து அழவைப்பது, இந்த நடிப்பையும் அண்ணியிடம் சொல்கின்றேன், அவர்கள் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் இனி இது போல அதிபுத்திசாலி யோசனை அவர் மூலையில் உதிக்காது” என்ற குகன் அகரன் இருக்கும் அறைக்கு செல்ல திரும்பிட, ஒரு நர்ஸ் வேகமாய் வந்து அகரன் கண்விழித்த செய்தி கூறி அழைத்து சென்றார்.

கண்விழித்து பார்த்த அகரன் தலை பாரமாய் உணர்ந்து கண்களை மீண்டும் மூடிக்கொள்ள, அகரனிடம் அசைவை உணர்ந்த சுஹீரா வேகமாய் நர்ஸியிடம் கூறிவிட்டு வந்து அகரனுக்கு வலி கொடுக்காமல் மென்மையாய் அனைத்துகொள்ள, தன் மீது பூவாய் வந்து விழுந்தவள் தேகம் தந்த கிறக்கம் மெதுவாய் அகரனை கண் விழிக்க செய்தது தன் முன் நின்றிருந்த சுஹீராவை புதியதாய் பார்ப்பது போல் பார்த்தவன் வேகமாய் உள்ளே வந்த ஈஸ்வர், யமுனா மற்றும் சுஹீரா குடும்பத்து நபர்களையும் புரியாமல் பார்த்தான்.அகரன்,

“பகடு உனக்கு ஒன்றும் இல்லை நான் வந்துவிட்டேன், பார் இனி உன்னை விட்டு போகமாட்டேன்” என்று அகரன் கன்னம் வருடி இதமாய் சுஹீரா பேசிட, அவள் கையை விலக்கிவிட்டவன் “அது சரி நீ யார் நீ எதற்கு என்னை விட்டுப்போகமாட்டாய்!” என்று புரியாமல் வினவியவன், யமுனா பக்கம் திரும்பி யார் இந்த பெண் அம்மா கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் வந்து என்னை தொட்டுக்கொண்டு நிற்கின்றாள்” என்று அகரன் கேள்வியில்அங்கு இருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

“என்ன அகரா யார் இது என்கின்றாய் இது சுஹீரா உன் மனைவி “, என்று யமுனா விளக்கம் தந்தார். “என்ன என் மனைவியா? உங்களுக்கு ஏதும் பைத்தியம் பிடித்து விடவில்லையே திருமணமே வேண்டாம், என்று சொல்லிக்கொண்டு இருந்தவனிடம் ஒரு பெண்னை காட்டி மனைவி என்கின்றீர்களே!” என்று ஏளனமாய் கூறிக்கொண்டே, சுஹீராவை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவன் “சரி அழைத்து வந்தது தான் வந்தீர்கள் ஒரு அழகான பெண்ணாய் அழைத்து வந்திருக்ககூடாது” என்று ஏளனமாய் சிரித்தான்.

என்ன நடக்கின்றது என்று புரியாமல் எல்லோரும் குழம்பி நிற்க உள்ளே வந்த சூர்யா, “என்ன அகர் இப்போது தலைவலி எப்படியிருக்கின்றது, இன்னும் வலிக்கின்றதா?” என்று வினவிட, “அந்த வலியை விடு சூர்யா இங்கு எல்லோரும் என்னை வைத்து காமெடி செய்கின்றார்கள், இதோ இங்கு நிற்கின்ற பெண் என் மனைவியாம்!” என்று கூறி அகரன் சிரிக்க, “உண்மைதான் அகரா உன் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து நானே போட்டேன்” என்றான் சூர்யா.

“உளராதே உனக்கே தெரியும் பெண்களை என் அருகில் கூட சேர்த்துக் கொள்ளமாட்டேன் என்று இதில் திருமணமே செய்து கொண்டேன் என்கின்றாய்?” என்று அகரன் மீண்டும் சிரித்திட, சூர்யாவிற்கே குழப்பம் உண்டானது “சரி அகர் இங்கு நிற்பவர்கள் யார் என்று சொல் பார்ப்போம்” என்று அறையில் இருந்த மற்றவர்களை காட்டி மருத்துவராய் சூர்யாவினவினான்.

ஒரு முறை கண் மூடி திறந்து விட்டு “அம்மா, அப்பா, குகன், கலை அத்தை அவர் மகள் அதிகா” என்றவன் மகேஸ்வரன் சுகன் சுபத்ராவை கண்டு “சாரி நீங்கள் யார் என்று தெரியவில்லை?” என்றான் அகரன். “தலையில் அடிப்பட்டதில் பழைய நினைவுகளை இழந்துவிட்டான் போல அதனால் தான் உங்களை நினைவில்லை, ஏற்கனே ஸ்கேன் செய்துபார்த்ததில் எந்த பிரச்னையும் தெரியவில்லை நாளை மீண்டும் தலைக்கு ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம், இப்போது இரவாகிவிட்டது உடன் யாரவது ஒருத்தர் மட்டும் இருந்து மற்றவர்கள் கிளம்புங்கள்” என்று சூழ்நிலையை விளக்கி சமாதானம் சொன்னான் சூர்யா.

“நான் அகரனுடன் இருக்கின்றேன்” என்று யமுனா முன் வர, “அத்தை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் நான் இருக்கின்றேன்” என்று தயக்கமாய் வினவினாள் சுஹீரா. “இதில் தவறாக எடுக்க என்னமா இருக்கின்றது நீ தாராளமாய்யிரு” என்றவர், அகரன் அருகில் வந்து ஏதும் பேசி என் மருமகள் மனதை காயப்படுத்தாமல் இரு” என்றவர் அகரன் நெற்றியில் முத்தமிட்டு சென்றார் யமுனா.

சுஹீரா அருகில் வந்த சுபத்ரா “எதையும் பேசி அவரை கஷ்டப்படுத்தமல் ஓய்வு எடுக்க விடு, தானாய் எல்லாம் நினைவு வரும்” என்று அறிவுறுத்தி விட்டு இரு குடும்பமும் கிளம்பி சென்றனர்.

“உங்களுக்கு வேண்டிய வசதி செய்துத்தர சொல்கின்றேன், சுஹீரா நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுங்கள் காலையில் வந்து மீண்டும் ஒரு ஸ்கேன் செய்து விட்டு, ஸ்பெஸிலிஸ்ட் வரவழைத்து பார்க்கலாம்” என்று சூர்யாவும் கிளம்பிச் சென்றான்.

“என்ன அண்ணனா இப்படி செய்துவீட்டீர்களே! இப்போது என்ன செய்வது” என்று குகன் கலங்கி நின்றான், “ஒருவர் தானே துணைக்கு இருக்க சொன்னார்கள் நீங்கள் கிளம்புங்கள் நான் பார்த்து கொள்கின்றேன்” என்றாள் சுஹீரா.“இல்லை இருக்கட்டும் அண்ணி உங்களுக்கு துணைக்கு நான் இருக்கின்றேன் “ என்றவன். “உங்களுக்கு சரியாகட்டும் பின் உங்களை என்ன செய்கின்றேன்” என்று பாருங்கள் என்று குகன் கண்ணீருடன் கூறினான்.

அகரன் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என்று அறிந்ததும் இது வரை இருந்த இறுக்கமான மனநிலை மாறி நிம்மதியாய் உணர்ந்தவள் கடைசி நிமிடம் வரை தன்னை கதறவிட்டவனை ஒரு கை பார்க்கவேண்டுமே என்ற தீர்மானத்தில், “நீங்கள் செய்வது இருக்கட்டும் கொஞ்சம் விலகுங்கள் இந்த பகடுவை நான் என்ன செய்கின்றேன் என்று பொறுத்து இருந்து பாருங்கள் கவனிக்கும் விதமாய் கவனித்தால் நினைவு தானாய் வந்து விடும்” என்று குகனை விலக்கி விட்டு அகரன் அருகில் வந்தாள் சுஹீரா.

“ மரணத்திலும் உன் நினைவை இழக்க மாட்டேன், என்றுமே என் நினைவுகளை தொலைக்க முடியாது, என்று பக்கம் பக்கமாய் வசனம் பேசிவிட்டு தலையில் சின்னக் காயம்பட்டதும் என்னை மறந்து விட்டாயா?, இது தான் உன் காதலின் லட்சணமா சும்மா இருந்தவளை, காதல் கீதல் கத்தாரிகாய் என்று கதை அளந்து ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு இப்போது மனைவி என்றதும் ஏளனமாய் சிரிக்கின்றாயா? எப்படிஎப்படி அழகான பெண் வேண்டுமா? ம்… உன்னை சும்மா விடக்கூடாதே ஏதாவது செய்ய வேண்டுமே, இப்படியே விட்டால் அடுத்து வேறு யாரையாவது பழிவாங்க கிளம்பிவிடுவாய்” என்று யோசித்தவள் “திருமணம் அது ஒன்றுதான் உன்னை என்னோடு கட்டிவைக்க ஒரே வழி முன்பு நடந்த திருமணம் தானே மறந்துவிட்டது மீண்டும் பெற்றோர் சம்மதத்துடன் செய்து கொள்ளலாம் என்றவள், இப்போது எப்படி என்னிடமிருந்து தப்பிப்பாய் என்று பார்க்கலாம்” என்று அருகில் கிடந்த அகரன் போனை எடுத்து ஆன் செய்தால் அது பாஸ்வேர்ட் கேட்டிட, “பாஸ்வேர்ட் என்ன என்று சொல்?” என்று அதிகாரமாய் வினவினாள் சுஹீரா. உதட்டை சுளித்து தெரியவில்லை என்று அகரன் தலையசைக்க குகன் தனது போனை எடுத்து நீட்டினான்.

“அப்பா மாமாவிடம் பேசி அடுத்த முகூர்த்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றவள் அகரன் உதடுகள் புன்னகையில் விரிந்திருக்க சந்தேகமாய் “என்ன சிரிக்கின்றாய் விசர் ?” என்றாள் சுஹீரா. “இல்லை திருமணம் செய்ய என் சம்மதம் வேண்டாமா?, நீ ஒரு முடிவு எடுத்தால் அதற்கு நான் எப்படி சம்மதிப்பேன்” என்றான் அகரன். “நீ என் சம்மதம் கேட்டு தான் திருமணம் செய்தாயா?” என்று சுஹீரா கோபமாய் முறைக்க, “உன் இஷ்டப்படி எதுவும் நடக்காது உன் திட்டம் எதுவும் என்னிடம் பலிக்காது, ஒழுங்காய் இங்கிருந்து கிளம்பிவிடு” என்றவன், குகன் பக்கம் திரும்பி “குகா எனக்கு பசிகின்றது சாப்பிட ஏதாவது ஏற்பாடு செய் அப்படியே இதையும் எங்காவது தள்ளிவிட்டு வந்துவிடு” என்று கட்டிலில் சாய்ந்து படுத்தான் அகரன்.

“என்ன இதுவா ?” என்று சுஹீரா கோபமாய் நிற்க , “அண்ணி நான் கிளம்புகின்றேன் நீங்கள் உங்கள் விருப்பபடி கவனித்து கொள்ளுங்கள்” என்று அறையை விட்டு வெளியேறினான் குகன்.

அகரன் அருகில் வந்தவள் “இப்போது என்ன சொன்னாய் இதுவா?” என்று மீண்டும் கோபமாய் முறைத்த படி வினவினாள், சுஹீரா. அவள் அனல் பார்வையில் ஈர்க்க பட்டவன் தன் அருகில் இழுத்து…

இப்படி காதலாய்
என் விழி
பார்க்காதே கண்ணே
பின்விளைவுகளுக்கு
நான் பொறுப்பல்ல…

என்று தன்னோடு சேர்த்து இறுக அனைத்து கொண்டான் அகரன். அகரன் செயலில் இருந்த முரண்பாடு புரியாமல் “என்னை தொடாதே!” என்ற அதட்டலுடன் விலகி அமர,

விலகி நில் என்று
கட்டளையிடுகின்றது
உன் இதழ்கள்
விட்டு விலகதே என்று
வேண்டுதல் விடுகின்றது
உன் விழிகள்
எதன் மொழி கேட்கும்
என் காதல் மனது…

பல நாட்கள் கழித்து அகரன் கவிதை வரிகளை கேட்டவள், தன்னை மறந்து அகரனை கட்டியணைத்து கொண்டு “நீ என்னை காதலித்தை ஒப்புக்கொள்கின்றாயா?” என்று மகிழ்ச்சியாய் வினவினாள் சுஹீரா. “இது சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன், இதற்கு முன் உன்னை காதலித்தேனா இல்லையா?, என்று எனக்கு தெரியவில்லை” என்று அகரன் அனைத்து இருந்தவளை விலக்கி விட, “அடப்பாவி பகடு இவ்வளவு நேரம் மூச்சு விடாமல் பேசியதற்காவது இரக்கப்பட்டு நினைவுவந்தது போல் பொய் சொல்லக்கூடாது என்று பாவமாய் கேட்டாள் சுஹீரா.

“அது என்ன அடிக்கடி பகடு பகடு என்கின்றாய் அப்படியென்றால் என்ன?” என்று அகரன் கேட்கவும், பெருமூச்சு விட்டபடி “உனக்கு புரிய வைக்க எனக்கு தெம்பு இல்லை போ பகடு” என்றவள் செல்லமாய் அலுத்து கொள்ள, “இதற்கு முன் உன்னை எந்த அளவிற்கு காதலித்தேன் என்று நினைவில்லை ஆனால் இப்போது இந்த நொடி உன் துடுக்கான பேச்சிலும் குழந்தை தனமான கோபத்திலும் என்னை கொல்லாமல் கொல்லும் இந்த கண்ணின் காந்த வீச்சிலும் உன்னை காதலிக்க வேண்டும் என்று ஆசை வருகின்றது, பழையதை நீயும் மறந்துவிடு புதியதாய் புத்தம் புதியதாய் காதலிப்போம் அதன் பிறகு திருமணத்தை பற்றி யோசிப்போம்” என்றான் அகரன்.

“மறுபடியும் முதலில் இருந்தா” என்று சுஹீரா தலையில் கைவைத்து அமர்ந்திட அகரன் அவள் செய்கையை கண்டு ரசித்து சிரித்தான்.

உன்னை காதலால்
சிறைப்பிடிக்க நினைத்தேன்
நானடி…
உன் கண்களில்
சிறைப்பட்டு கிடைகின்றேன்
ஏனடி…