அரக்கனோ அழகனோ 24

அரக்கனோ அழகனோ 24
0

அழகன்24
என்னை
மன்னித்துவிடு என்றேன்
என்னை
மறந்துவிடு என்றாய்
நானும் மறந்தேன்
உன்னையல்ல
உன் காதலால்
என்னை…

“குகன் இங்கு பார் ஆயிரம் இருந்தாலும், நான் ஒரு டாக்டர் என்னிடம் நீ இப்படி நடந்துகொள்வது கொஞ்சம் கூட சரியில்லை நீ எல்லாம் என்ன பொண்டாட்டி உன் புருஷனை உன் முன்னாடியே ஒருத்தன் மிரட்டிக்கொண்டு இருக்கின்றான், நீ அதை ரசித்து கொண்டு இருக்கின்றாய்” என்று குகன் மற்றும் சந்திரிமாவிடம் இருந்து தப்பிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தான் சூர்யா.

“தலையில் சிறு காயம் என்று தானே சொன்னீர்கள் ?, அப்புறம் எப்படி. அண்ணாவிற்கு பழைய நினைவு எல்லாம் மறந்துவிட்டது, அதுவும் அவர் உயிருக்குஉயிரான அண்ணியையே மறந்துவிட்டார், அவர்களுக்குகாக தான் இந்த ரிஸ்க் எடுத்தார், இன்று அண்ணியே முன் நிற்கும்போது அவர் எல்லாவற்றையும் மறந்து நிற்பது கொடுமையில்லையா என்று வருத்தமாய் வினவினான் குகன்.

“ச்சு… ச்சு… மிகவும் கொடுமை தான் குகன்” என்று சூர்யா உச்சுக்கொட்டி அவன் வருத்தத்தை வெளிப்படுத்த, “இப்படி நடந்தத்திற்கு முக்கிய காரணம் யார்?” என்று குகன் கேள்வியாய் நிறுத்த, சந்திரிமா சூர்யா முதுகில் தட்டி “வேறு யார் என் காதல் கணவர் தான் “ என்று முடித்தாள்.

“ஏய் என்ன இருவரும் என்னை குறிவைக்கின்றீர்கள் திட்டமிட்டது விழுந்து தலையை உடைத்துகொண்டது அவன், ஆனால் பலிமட்டும் என் மீதா?, நான் என்ன செய்தேன் விழுந்து கிடந்தவனை தூக்கி வந்து மருத்துவம் பார்த்தது குற்றமா?” என்று இருவரிடமும் விலகி நின்றபடி கூறினான் சூர்யா.

“இது தான் திட்டம் என்று உங்களிடம் சொல்லும் போதே நீங்கள் தடுத்து இருந்தால் இந்தநிலை வந்திருக்காது இல்லையா?” என்று குகன் கையின் சட்டையை மடக்கி விட்டு கொண்டே கேட்க,. “ஒரு மருத்துவரை தாக்குவது சட்டப்படி குற்றம்! உனக்கு அகரன் மீது அக்கறை இருப்பது எல்லாம் சரிதான் இந்த சட்ட திட்டங்களையும் கொஞ்சம் மதிக்கவேண்டும் தம்பி” என்று பாவமாய் வேண்டுதல் வைத்தான் சூர்யா.

“அந்நியன் நான் அடித்தால் தானே தவறு!, அண்ணி அடித்தால்? அண்ணி உங்கள் கைவரிசையை காட்டுங்கள், நான் இருக்கின்றேன் என்று பார்க்க வேண்டாம் இந்த அறைக்குள் நடப்பது. யாருக்கும் தெரியாது இதற்கு நான் பொறுப்பு” என்று கதவின் வழியை மறைத்து நின்றவன், “அண்ணி உங்கள் கவுண்டன் இப்போது துவங்குகின்றது” என்று குகன் கூறி முடிப்பதற்குள் தனது கணவன் முதுகில் தனது பாசத்தை காட்ட துவங்கினாள் சந்திரிமா.

“சந்து ஏய் வலிகின்றதுடி செய்வது எல்லாம் செய்துவிட்டு அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் நினைவே இல்லை, என்று சொல்லி தப்பித்துக்கொண்டான், இங்கு நான் தான் மாட்டி கொண்டேன்” என்று சூர்யா புலம்ப, “ஒரு நிமிடம் என்ன சொன்னீர்கள்?” என்று குகன் திரும்ப கேட்க, “என் புலம்பலை சொன்னேன்” என்று அலுத்துக்கொண்டே “எல்லாவற்றையும் செய்தது அவன் ஆனால் அடி மட்டும் எனக்கு” என்று சோகமாய் கூறினான் சூர்யா.

“எனக்கு ஒரு விஷயம் தெளிவு படுத்துங்கள் தலையில் அடிபட்டால் நினைவு மறக்க அதுவும் குறிப்பிட்ட நபர்களை மறக்க வாய்ப்பு உள்ளதா?” என்று ஐயமாய் குகன் வினவிட, சூர்யா சந்திரிமா ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “தலையில் அடிபட்டால் மறக்க வாய்ப்புஉண்டு ஆனால் குறிப்பிட்ட நபர் விஷயம் என்பது கோடியில் ஒருத்தர் அவ்வளவு தான்! ஆனால் அகரனுக்கு எப்படி இந்த சின்னஅடிக்கு அதாவது தலையில் சாதாரணமாய் முட்டிக்கொள்வதற்கு எல்லாம் மறக்குமா? என்பது”, என்று யோசித்தபடி இழுத்தான், சூர்யா.

“நீ ரிப்போர்ட் எல்லாம் சரியாய் பார்த்தாய் தானே வெளியில் சிறு காயம் போல இருந்து மூளை நரம்புகளை பாதித்து இருக்க போகின்றது?” என்று கவலையுடன் சந்திரிமா கேட்க, “கோடியில் ஒருத்தருக்கு மட்டும் இல்லை சிலகேடிகளுக்கும் இதுபோல் நடக்க வாய்ப்பு உண்டு சூர்யா சார்” எனவும் புரியாமல் பார்த்த கணவன் மனைவியை குறும்பாய் பார்த்து சிரித்து கொண்டே, “உண்மை தெரிந்து உங்கள் மனைவி உங்களுக்கு கொடுக்கும் அடியை! அண்ணன் அண்ணியிடம் வாங்ககூடாது என்ற முன்னெச்சரிகையில் ஏன் மறந்ததுபோல நடிக்ககூடாது!” என்றதும் சூர்யாவிற்கும் அதே சந்தேகம் வந்தது.

சந்தேகம் என்று முடிவான பின் அதை தெளிவு படுத்தாமல் இருக்க முடியுமா?, இருவரும் அகரன் அறையை நோக்கி கிளம்பினர். நர்ஸ் கொடுத்து சென்ற உணவை அகரனுக்கு ஊட்டி விட ஸ்பூனில் உணவை அள்ளி அவன் வாய் அருகில் கொண்டுசென்றாள் சுஹீரா. முகம் சுளித்தபடி “இதை எல்லாம் நீ எனக்கு செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று மறுத்து கொண்டிருந்தான் அகரன். “நான் செய்யாமல் வேறு யார் செய்ய வேண்டும் என்று எதிர்பார்கின்றாய், பகடு ஒழுங்காய் வாய்யை திற இல்லை உன் காதில் திணித்து விடுவேன்” என்று மிரட்டிட வாய்யை திறந்தவன் ஸ்பூனில் சரியாய் வாங்காமல் தவற விட்டான், இரண்டு முறை இதுவே நடக்க “நீ என்ன சிறு குழந்தையா?, இப்படி சிந்திக்கொண்டே சாப்பிடுகின்றாய்!” என்று சுஹீரா சிடுசிடுக்க, “எனக்கு உண்ணத்தெரியாமல் இல்லை உனக்கு தான் ஊட்ட தெரியவில்லை!” என்று விதண்டா வாதம் செய்தவன், முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு “நீ ஒன்றும் எனக்கு இரக்கப்பட்டு ஊட்டவேண்டாம் குகன் வந்து பார்த்துகொள்வான் நீ உன் வேலையை பார்த்து கொண்டு கிளம்பு” என்றான் அகரன்.

பொறுமை இழந்தவளாக கையில் எடுத்து அவன் தலையை சாய்த்து பிடித்து கொண்டு ஊட்டி விட துவங்கினாள், “இன்னோரு வார்த்தை பேசினால் அடி கிடைக்கும்” என்றபடி தட்டில் இருந்த அனைத்தையும் ஊட்டி முடித்தாள் சுஹீரா.

“இதுதான் கடைசி வாய், கடை குட்டி வாய்” என்றபடி வாயின் அருகில் கொண்டுசெல்ல, சுஹீரா கரத்திணை பற்றி உணவினை வாங்கி விழுங்கியவன் பற்றியிருந்த கையின் ஒவ்வொரு விரலாய் சப்புக்கொட்டி உறிஞ்சிட “விடு பகடு” என்று முகம் சிவக்க விலகிசென்றவள் அகரன் வாய்யை துடைத்து விட்டு “வேண்டாம் வேண்டாம், என்றாய் இப்போது எப்படி உண்டாய்?” என்று சிரித்தாள் சுஹீரா. “என்றும் இல்லாத படி இன்று புது ருசியாய் இருந்தது அதிலும் அந்த கடைக்குட்டி வாய் சுவையோ சுவை! இது வரை இப்படி ஒரு அருமையான உணவை உண்டது இல்லை” என்று அகரன் கூறிக்கொண்டே தன்னை மயக்கும் கண்களை பார்த்து தனது காதல் கிறக்கத்தில் அவளையும் மயங்க வைக்க முயன்று கொண்டு இருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படி உலகம் மறந்து இருந்த தருணம் குகனும் சூர்யாவும் உள்ளே வந்தனர், “ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, என்னடா காவியம் அதை விட மிக பெரிய காதல் காவியம் இங்கு நடந்து கொண்டு இருக்கின்றது” என்று சூர்யா கேலி செய்திட, அவர்கள் குரலில் வேகமாய் சுஹீரா விலகி அமர்ந்தாள்.

“ நீங்கள் எதற்கு இங்கு வந்தீர்கள்” என்று அகரன், சிடுசிடுக்க, “என்னடா இது டாக்டருக்கு வந்த சோதனை ஏன் குகன் ஒரு டாக்டர் அவர் மருத்துவமனையில் சேர்க்கபட்டிருக்கும் பேஷண்டை பார்க்க வரக் கூடாதா என்ன?” என்று கேட்டுக்கொண்டே அகரன் காயத்தின் கட்டுகளை சரி பார்த்திட, “வரலாம் வராமலும் போகலாம் அப்பப்பா… வரலாம் இல்லை இங்கேயே தங்கியும்விடலாம்” என்றான் குகன். “என்ன நக்கலா இருவரும் முதலில் கிளம்புங்கள் காற்றுவரட்டும்” என்றான் அகரன். “நான் சரியான மாங்காய் மண்டையன் அண்ணா காற்றுவேண்டுமா இல்லை காதல் வேண்டுமா? என்று தெளிவாக சொல்லுங்கள்” என்றான் குகன்.

இருவரும் ஏதோ முடிவுடன் வந்து இருப்பது புரிந்து கொண்ட அகரன், சுஹீராவை யோசனையாக பார்க்க அதை கவனித்த சூரியா, “சுஹீரா உங்களிடம் சந்திரிமா, ஏதோ முக்கியமாய் பேசவேண்டும், என்றால் அவள் அறையில் இருக்கின்றாள் போய் பாருங்கள்” என்று கூறி சுஹீராவை வெளியில் அனுப்பி வைத்தவன், அவள் சென்றதும் அறையின் கதவை மூடிக்கொண்டு வந்தான் குகன்.

அகரன் அமைதியாக இருவர் முகங்களையும் கவனித்துவிட்டு “என்ன வேண்டும் எதற்காக இப்படி பார்க்கிண்றீர்கள்?” என்றான். “இந்த பழையதை மறக்கும் வியாதி அதுவும் குறிப்பிட்டவர்களை மட்டும் மறக்கும் வியாதிக்கு எங்கள் ஊர் பக்கம் வித்தியாசமான முறையில் சிகிச்சை செய்வார்கள்ட என்று குகன் துவங்கவும், “அப்படியா!, அது என்ன குகன் கொஞ்சம் சொல்லு அகரனுக்கு முயன்று பார்த்து விடுவோம்” என்று சூர்யா வினவிட , “ஒரு இன்ச் ஆணி எடுத்து இந்த உச்சந்தலையில் அடித்து அரை இன்ச் உள்ளே இறக்கினால்” என்று குகன் சொல்லிக்கொண்டே போக, “அப்புறம்” என்று சூர்யா ஆர்வமாய் வினவினான்.

“அப்புறம் என்ன ஒரு காலண்டர் கொண்டு வந்து தொங்கவிடு மடையா! அவன் தான் அறிவில்லாமல் கூறினால் நீயும் ஆமாம் சாமி போடுகின்றாயா?, உண்மையில் நீ படித்து தான் பட்டம் பெற்றாயா இல்லை பணம் கொடுத்தா ?” என்று சிடுசிடுக்க வினவினான் அகரன்.

“ஏன் கேட்க மாட்டாய், ஒரு டாக்டராய் இருந்து கொண்டு உன் தில்லுமுல்லு வேலைக்கு எல்லாம் துணை போனேன் பார்!, . இதையும் கேட்பாய் இதற்கு மேலும் கேட்பாய்!” என்று பதில் தந்தான் சூர்யா . “அட உங்கள் சண்டையை அப்புறம் வைத்து கொள்ளுங்கள் இப்போது அண்ணனுக்கு குணமாக வேண்டும் இல்லை அவர் திருமணம் நடக்காது” என்றான் குகன்.

“ஏன் நடக்காது?” என்று வினவிய அகரன் குரலில் இருந்த கோபத்தை பொருட்படுத்தாமல் குகன் பேசத்துவங்கினான்.

“இதை எப்படி சொல்வது அண்ணா, அப்பா உங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை உங்களுக்கு நினைவு திரும்பியதும் வைத்துகொள்ளலாம் என்று அண்ணியின் அப்பாவிடம் சொல்லிவிட்டார் இப்போது தான் மகேஸ்வரன் மாமா பேசினார்" என்று குகன் கூறி முடிக்கும் முன், “என் திருமண விசயத்தில் முடிவு எடுக்க யாருக்கும் உரிமையில்லை என் போன் எங்கே?”, என்று அகரன் அவன் போனை எடுக்கும் முன் அதனை கைப்பற்றிக்கொண்ட குகன், “எப்படி எப்படி உங்கள் திருமணத்தில் முடிவு எடுக்க யாருக்கும் உரிமை இல்லையா கொஞ்ச நேரத்திற்கு முன் அண்ணி முடிவு எடுக்கும் போது சிரித்து கொண்டே இருந்தது யார்?” என்ற குகன் கேள்விக்கு, “சும்மா எதையாவது பேசி என் நேரத்தை வீனடிக்காதே போனை கொடு திருமணத்திற்கான ஏற்பாடு செய்யச்சொல்ல வேண்டும்”, என்று அகரன் அதிகாரமாய் கேட்க, “பாஸ்வேர்ட் மறந்த போனில் எப்படி பேசுவீர்கள் அண்ணா பேசமுடியாத போன் இருந்தென்ன உடைந்தென்ன!” என்று தூக்கி எறிவது போல குகன் செய்கை செய்ய, “சுஹீரன் என் போன் பாஸ்வேர்ட் சுஹீரன்” என்று அழுத்தம் திருத்தமாய் திருப்பி சொன்னவன், “எனக்கு தெரியும் குகா நீ என்னை கண்டுபிடித்துவிடுவாய் என்று என் கண் அசைவிற்கும் அர்த்தம் சொல்லும் நீ என்னை கண்டுகொள்ளாமல் எப்படி இருப்பாய்!” என்றபடி கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான் அகரன்.

“அடப்பாவி நானும் உன் நடிப்பை உண்மை என்று நம்பிவிட்டேன் குகன் வந்து சொல்லும் வரை கண்டுபிடிக்கவேயில்லை” என்று சூர்யா சலித்து கொள்ள, “உன்னை நம்பி வரும் மக்கள் பாவம் தான்” என்று உதட்டை சுளித்து அகரன் வருத்தம் தெரிவித்தான். “இப்படி உங்கள் உயிரை பணையம் வைக்கும் திட்டம் தேவை தானா? உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பது முன்பே தெரிந்து இருந்தால் எப்படியாவது உங்களை தடுத்து இருப்பேன் என்னிடம் எதற்கு மறைத்தீர்கள் அண்ணா” என்று ஆற்றமையுடன் வினவினான் குகன்.

“இங்கே வா” என்று குகனை தன் அருகில் அழைத்து கொண்டவன், “குகா சுஹீ இல்லாத வெறுமையான வாழ்வு வாழ்வதற்கு பதில், அவளை என் வாழ்வில் கொண்டுவர எதையும் செய்யலாம் என்ற எண்ணம் தான் இந்த திட்டத்தின் காரணம், அன்று உனக்கு ஓரு ஷாக் கொடுக்கவும். தானே உன் மனதிலிருந்த உணர்வுகள் வெளிப்பட்டு என்னை அண்ணா என்று அழைத்தாய் அன்றே முடிவு செய்து விட்டேன் சுஹீக்கும் என் மீது உள்ள காதலை புரியவைக்க ஒரு ஷாக் டீரீட்மெண்ட் தேவை என்று, எனக்காக எதையும் செய்யும் நீ எனக்கு ஏதும் என்றால் அதை செய்யமாட்டாய், என்னை செய்யவும் விட மாட்டாய் அதனால் உனக்கே தெரியாமல் இந்த திட்டத்தை போட்டேன், திட்டம் போட்டதை விட அதை உன்னிடம் மறைக்கத்தான் திண்டாடி போனேன்” என்றவன், குகன் தோளில் கை போட்டு கொண்டு “இப்போது இந்த காயம் கூட எனக்கு வலிக்கவில்லை தெரியுமா? என் சுஹீ எனக்கே எனக்கென பார்த்துபார்த்து எல்லாம் செய்துகொண்டு என் அருகில் இருக்கின்றாள் இதை விட வேறு எனக்கு என்ன வேண்டும்? அவளும் என் மீதான காதலை புரிந்துகொண்டாள் இனி என்னை விட்டு பிரிந்து செல்லமாட்டாள்” என்று நிம்மதியாய் கூறினான் அகரன்.

“இவ்வளவு தெளிவாக திட்டம் போட்ட நீ ஏன் நான் சொன்னதை மீறி அதிக வேகத்தில் வந்தாய்?” என்று கோபமாய் குறையாமல் வினவினான் சூர்யா. குகன் கைகளை அழுத்தமாய் பற்றி கொண்டவன் “மாமா சுஹீ என்னை விட்டு வெகுதூரம் செல்லப்போவதாக சொன்னதும் எங்கு அவளை மொத்தமாய் இழந்துவிடுவேனோ என்ற பயம், இனி என் வாழ்வில் எல்லாம் முடிந்தது என்று தான் வேகமாய் வண்டியை ஒட்டினேன், பின் குகனுக்கு கொடுத்த வாக்கு நினைவில் வரவும் வேகத்தை குறைக்க முயன்றேன் முடியவில்லை, அதனால் குதித்து விட்டேன்” எனவும் குகன் அகரனை கட்டிக் கொண்டான்.

“உங்கள் திட்டப்படி அண்ணி தான் உங்களிடம் வந்துவிட்டார்களே அதன் பின் எதற்கு இந்த மறதி நாடகம் உங்களுக்கு விபத்து என்றதும் எப்படி துடிதுடித்து போனார்கள் தெரியுமா? இன்னும் ஏன் அவர்களை நோகடிக்கிண்றீர்கள்” என்றவன் குரலில் வருத்தத்தை விட தனக்காக அகரன் எண்ணியது பற்றிய நிறைவே நிறைந்து இருந்தது.

“உனக்கு உன் அண்ணியின் பிடிவாதம் தெரியாதா என்ன? எனக்கு விபத்து என்றதும் பதறிக்கொண்டு வருபவள் ஆபத்து ஒன்றும்இல்லை என்று தெரிந்ததும் பழைய கோபம் திரும்பிட அடிபட்டது என்று அறிந்து ஒரு அனுதாபத்தில் தான் வந்தேன் மற்றபடி. காதலே இல்லை என்று கதை கட்டி நம் காதில் பூவைசுற்றுவாள், அதனால் தான் மாமா சொன்னது படி அவளை மறந்ததுபோல நாடகம் ஆடினேன், இப்போது பார் உண்மை என்று நம்பி அவளே திருமணத்தை நடத்த சொல்லிவிட்டாள்” என்று தனது திட்டத்தின் வெற்றியை எண்ணி சிரிக்க துவங்கினான். அகரன்.

சூர்யா போன் அடிக்க யார் என்று பார்த்தவன் சந்திரிமா என்று அறிந்து “உன்னிடம் தனியாக பேசவேண்டும் என்று சுஹீயை சந்துவிடம் கோர்த்து விட்டேன் அவள் சமாளிக்க முடியாமல் என்னை அழைக்கின்றாள்” என்று அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், சந்திரிமாவிடம் இருந்து கிடைத்த வசை மொழிகளில் திணறிய படி “எல்லாவற்றுக்கும் காரணமானவனிடம் கொடுக்கின்றேன், நீ மீதியை அங்கு தொடர்ந்துகொள்” என்று அகரனிடம் போனை கொடுத்து விட்டு “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டான் சூர்யா. சூர்யாவின் செய்கையில் சிரித்த படி பேச துவங்கினான் அகரன். “உங்கள் திருட்டு தனத்தில் என்னை ஏன் கூட்டு சேர்கின்றீர்கள்?” என்று சந்திரிமா கோபமாய் துவங்க, “சந்துசெல்லம் கோபப்படாமல் உன் உயிர் நண்பனுக்காக இதை செய்” என்று ஐஸ் வைத்தான் அகரன்.

“நீ உயிர் நண்பன் இல்லை உயிரை வாங்கும் நண்பன் என்னவென்று சொல்லு செய்து தொலைகின்றேன்” என்று சந்திரிமா சலித்துக்கொள்ள அவள் செய்ய வேண்டியதை கூறினான் அகரன். “பழையதை மட்டும் நினைவுபடுத்தும் படி பேசச்சொல்லு மற்றதை நான் பார்த்து கொள்கின்றேன்” என்றவன் அழைப்பை துண்டித்து, “என்னடா உன் மனைவி சரியாய் சொதப்பல் இல்லாமல் செய்து விடுவாள் இல்லையா?” என்று சந்தேகமாய் சூர்யாவை பார்த்து வினவினான் அகரன்.

“அவளிடம் உண்மையை சொல் என்றால் தான் தடுமாறுவாள் பொய் சொல்லு என்றால் அதை சரியாய் சிறப்பாய் செய்வாள் அது எல்லாம் அவளுக்கு கைவந்த கலை” என்று சூர்யா கூறவும் மற்ற இருவரும் சிரிக்க துவங்கினார்.

சுஹீரா சந்திரிமா அறையில் இருந்து வந்ததும் மற்ற இருவரும் கிளம்பினர் திரும்பி வந்ததில் இருந்து வெகு நேரம் சுஹீரா அமைதியாய் இருக்க, “என்ன சுஹீரா அப்படி சந்திரிமா என்ன சொன்னால் ஏன் இப்படி அமைதியாய் இருக்கின்றாய்?” என்று இரண்டு மூன்று முறை அகரன் கேட்கவும், “நமக்குள் நடந்தவைகளை உனக்கு நினைவுபடுத்த சொன்னார்கள்” என்று யோசனையாய் கூறிட , “அதுவும் நல்ல யோசனை தான் சரி சொல்லு நம் முதல் சந்திப்பு எங்கு எப்படி?” என்று ஆர்வமாய் கதை கேட்கும் பாவனையில் வினவினான் அகரன்.

மீண்டும் யோசனையில் முழ்கினாள் சுஹீரா, அவளின் யோசனையை கவனித்து க்கொண்டு இருந்தவன், “என்ன கதை சொல்லி என்னை ஏமாற்றலாம் என்று யோசிக்கின்றாயா?” சுஹீரா என்று கோபமாய் கேட்டான் அகரன். “நான் எதற்கு உன்னை ஏமாற்ற வேண்டும்”, என்று பதிலுக்கு கோபம் காட்டினாள் சுஹீரா.

“ நமக்குள் எதுவும் இல்லை, நீ சொன்னது போல் நான் உன்னை காதலிக்கவுமில்லை நமக்கு திருமணமும் நடக்கவில்லை, என்னிடம் உள்ள பணத்திற்காக சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு என்னை ஏமாற்ற நினைக்கின்றாய்” என்று அகரன் அபாண்டமாய் பலி போட, அகரன் வார்த்தையில் வந்த கோபத்தில் அவன் கன்னத்தில் அறைந்தாள் சுஹீரா.

“என்னை விட்டு போ போ என்று நான் துரத்திய போது எல்லாம் கட்டாயப்படுத்தி மிரட்டி பொய்ச்சொல்லி உன் காதலை திருமணம் வரை கொண்டு சென்றுவிட்டு கோபமாய் ஒரு வார்த்தை சொன்னேன் என்று என்னை சமாதானப்படுத்த கூட மனமில்லாமல் நீயாய் வா… என்று விட்டு சென்றாய் பார் அன்றே இந்த அறையை உனக்கு கொடுத்து இருந்தால், இந்த நிலை எனக்கு வந்திருக்காது” என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே, “ நீ விட்டு சென்ற காதல் நினைவுகளை மறக்க முடியாமல் உனக்கு ஒன்று என்றதும் நீ செய்ததை எல்லாம் மறந்து உன் முன் ஓடிவந்து நிற்கின்றேன் பார் என்னை சொல்ல வேண்டும்” என்று எழுந்து விலகி சென்றவளை இழுத்து தன் மீது சரித்து கொண்டான் அகரன்.

“நீயும் என்னை காதலித்தாயா?” என்று அகரன் மென்மையாய் வினவவும், “என்னை விடு அரக்கா நான் ஏன் உன்னை காதலிக்க போகின்றேன் உன் பணத்தை தான் காதலிக்கின்றேன்” என்று அகரன் பிடியில் இருந்து விலக முயன்றாள் சுஹீரா.

“சுஹீ” என்று அழைத்தவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று, அவளை அதற்கு மேல் முயற்சிக்கவிடாமல் தடுக்க , “நீயும் என்னை காதலித்தாயா?, சுஹீ” என்று மீண்டும் அதையே திருப்பி கேட்டான் அகரன். மறுப்பாய் தலையசைத்தவள் “காதலித்தேன் என்றால் முடிந்துவிட்டது என்று அர்த்தம் பகடு காதலிக்கின்றேன் எப்போதும் காதலிப்பேன்” என்று சுஹீரா தன்னை மறந்து கூறிட, அகரன் முகமும் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்தது.

தன் மீது கொடியாய் படர்ந்து இருந்தவள் பூவிதழ் நோக்கி குனிந்தவன் ஏதோ நினைவு வந்தவனாக உதட்டில் கேலி புன்னகையை சூடிக்கொண்டு “எனக்கு உன் மீது நம்பிக்கை இல்லாமல் நம் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்?, சுஹீ” என்றான் அகரன்.

சிறிதும் தாமதிக்காமல் “உன் கையை காலைக்கட்டி தூக்கி சென்று உன் கழுத்தில் நான் தாலி கட்டிவிடுவேன்” என்றதும், ஒரு நொடி சுஹீரா முகத்தை கூர்ந்து நோக்கியவன் மறு நொடி தங்களுக்குள் காற்றும் நுழையாத படி இறுக அனைத்து கொண்டு, இதழை சிறை படுத்தி பிரிவிற்கான தண்டனை கொடுத்தபடி தனது காதலின் பரிசை பெற்று கொண்டு இருந்தான் அகரன்.

மூச்சு விட திணறிய படி “விடு பகடு” என்று விலக்கி தள்ளிட தன்னவள் விலகளை தாங்கி கொள்ளமுடியாமல் “ப்ளீஸ் சுஹீ என்னை விட்டுவிலகி என்னை கொள்ளாதே!” என்று மீண்டும் அனைத்து பிடித்தவன் கழுத்து வளைவில் முகம் புதைத்து…

நமக்கிடையில்
நுழைய இடைவெளி
வேண்டிகாத்திருக்கும்
காற்றுக்கு தான்
பொறுமைசாலி
பெயர் பொருத்தமாய்
பொருந்தும்…

காதில் மெதுவாய் கிசுகிசுக்க “வசமாய் மாட்டினாயா பகடு, ஒரு வழியாய் உன் நாடகத்தை முடித்து கொண்டாய்!” என்று அகரன் காதை பிடித்துதிருகிட “ஷ்…” வலிகின்றதுடி யார் நாடகம் ஆடியது என்று தனது பொய்யை விடாமல் தொடர்ந்தான் அகரன். “அப்படியா உனக்கு தான் என் நினைவு இல்லையே பின் எதற்கு திருமணம் நிறுத்திவிடலாம்” என்றாள் சுஹீரா.

இடையோடு கை கோர்த்து தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் “உன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே உன்னை விட்டு விலகமுடியாமல் உனக்காக எதையும் செய்யத்துணிந்தவன், உன் மனதில் நான் மட்டுமே நிறைந்து இருப்பது அறிந்த பின் ஒருநொடி பிரிவேனா சொல்” என்று செல்லமாய் கன்னம் கடித்தவன் “எப்படி கண்டு கொண்டாய் கண்ணம்மா“ என்று விளக்கம் அறிய விளைந்தான் அகரன்.

“உன் நடிப்பு எல்லாம் சரிதான் பகடு நம் திருமணத்தை பற்றி பேசும்போது சிரித்தாய் பார் அப்போதே தெரிந்து விட்டது, இவ்வளவு தெளிவாய் திட்டமிட்ட என் செல்ல பகடு என்னிடம் அசடு வழிந்ததை மட்டும் நிறுத்தவே இல்லை” என்று கேலியாய் சிரித்தவளின் அழகில் முழுதாய் தொலைந்தவன், “சுஹீ!” என்று கிறக்கமாய் பெயரை உச்சரிக்க, அகரன் கன்னத்தில் இதழ் ஒற்றியவள் வெட்கத்தில் அவன் மார்பிலேயே முகம் புதைத்து தனது வெட்கத்தை மறைத்துக் கொண்டாள்.

சுஹீராவின் மனமாற்றத்தை அறிந்து வியந்துபோனவன் தன்னவளின் முதல் முத்தத்தில் உண்டான கிறக்கத்துடன் “சுஹீ உனக்கு என்மீது கோபம் இல்லையே?” என்று வினவினான் அகரன்.

மார்பில் இருந்து முகத்தை நிமிர்த்தாமலே “கோபம் என்று இல்லை பகடு வருத்தம் தான்” என்று நன்றாக அவன் மார்பிலே சாய்ந்துகொண்டு “என் அப்பாவை பழிவாங்க எண்னிடம் காதல் என்று நெருங்கினாய், உண்மையில் உனக்கு என் மீது காதல் வந்துவிட்டதால் நம் வாழ்கை எப்படி எப்படியோ திசைமாறி சென்றுவிட்டது, இதுவே உனக்கு என் மீது காதல் வரவில்லை என்றால் என் வாழ்கை என்னவாகி இருக்கும்? என்று கொஞ்சமாவது யோசித்து பார்த்தாயா என்னை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் உன் கோபத்தை தீர்த்து கொள் நினைத்தது தவறு இல்லையா?, அரக்கன் அரக்கன் என்று ஆரம்பத்தில் திட்டிக்கொண்டு இருந்தவளுக்கு உன் காதல் மொழிகளால் அழகனாய் உன்னை உணர்த்தி விட்டு, என் மீது கொண்ட காதலுக்காக தான் இத்தனையும் செய்தாய் என்று நினைத்து உன்னிடம் மெதுமெதுவாய் என்னை இழந்து கொண்டிருந்த நேரம் உன் உண்மை முகம் தெரியவரவும், உன் அரக்க முகம் அறிந்தது தவித்து போனேன் பகடு, என்னால் தாங்க முடியவில்லை எந்த காதலுக்காக செய்தாய் என்று எண்ணி என்னையே மாற்றிக்கொண்டு உனக்காக வாழத்துவங்கி இருந்தேனோ! அந்த காதலே ஒரு காரணத்திற்கான நாடகம் என்று அறியவும் மொத்தமாய் ஒடிந்துபோனேன் அகி” என்று தனது கோபதிற்கான விளக்கம் தந்தவள் மார்பின் முடியில் கன்னம் உரசிய படி தன்னை நிறைத்து வைத்திருக்கும் மார்பு கூட்டில் முத்தமிட்டு மீண்டும் சாய்ந்து கொண்டாள்.

சுஹீராவின் நெருக்கமும் தீண்டலும் என்னாவோ உணர்வினை தூண்டிட “என் செல்ல பொண்டாட்டி ஒருவாரம், உன் இதழ் தீண்டாமல் என் உறக்கம் என்னை நெருங்க வில்லை…”

மெதுவாய் என் உயிர்க்
கொல்லும் காதல் நோய்க்கு
இதமாய் உன் இதழ் முத்தம்
கொடுத்து விடு
நித்தம் சத்தம்மின்றி
துயில் கொள்ளும் என் விழிகள்…

என்றான் அகரன் தலையை நிமிர்த்தி நாணத்தால் சிவந்திருந்தவள், விழி மூடி சம்மதமாய் தனது மலர் இதழ் குவித்து மௌனமாய் தனது சம்மதத்தை சொல்லிட மெதுவாய் இதழ் பொருத்தி மெதுமெதுவாய் அவள் இதழ் வழி உயிர்வரை பருகியவன் விலக மனமில்லாமல் இன்னும் சில விபரம் அறிந்து கொள்ளவேண்டும் என்று அரைமனதாய் இதழ் விடுத்து தனது கை அணைவிற்குள் வைத்த படியே, “உனக்கும் என் மீது இவ்வளவு காதலா?” என்று ஆச்சர்யமாய் அகரன் கேட்கவும். “எனக்கும் இதுவரை தெரியாமல் தான் இருந்தது உனக்கு விபத்து என்றதும் இனி நான் எதற்காக வாழவேண்டும் என்று ஒருநொடி தோன்றியது பார், அந்த எண்ணம் உணர்த்தியது உன்மீது நான் கொண்ட அளவில்லா காதலை, நமக்குள் இருந்த பிரிவு நான் உன்னை எந்த அளவிற்கு காதலிக்கின்றேன் என்று அறிந்துகொள்ளவே உதவியது, சுகனும் அம்மாவும் நான் உன் மீது கொண்ட காதலால் தான் நீ என்னை மிரட்டுவதை கூட யாரிடமும் கூறாமல் மறைத்தேன் என்றார்கள் அந்த நொடியில் இருந்து என்னை நானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டேன், என் கேள்வி அனைத்திற்கும் கிடைத்த ஒரே பதில் ஆமாம்!, நானும் உன்னை காதலிக்கின்றேன், என்று தான் நம் முதல் சந்திப்பிலேயே நீ என்னிடம் முரண்பாடாய் நடந்துகொண்டதே எனக்கு உன் மீது ஒரு ஈர்ப்பு வந்துள்ளது, அன்று முழுவதும் உன்னை பற்றியும் ஏன் என்னை திட்டினாய் என்றே தவித்துபோனேன், இரண்டாவது பீச்சில் வைத்து கவிதை சொல்லி அணைத்தாய் பார் உன்னை திட்டி கொண்டே உன்னை மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்தேன் ஏதோ ஒரு புரியாத உணர்வு உன் நினைவாய் முழுதாய் என்னை சூழ்ந்து கொண்டது உன்னையே நினைத்துக்கொண்டு இருப்பது என் மீதே கோபம் வந்து உன்னை மறக்கவேண்டும் என்று தீவிராமாய் நினைக்கும் போது என் அண்ணனை வைத்து மிரட்டிய உன் வேறு ரூபத்தை பார்தேன் எனக்கு உன்னை பற்றி இருந்த புரியாத உணர்வு அதை வெறுப்பு என்று நினைத்துக்கொண்டேன், அடுத்தடுத்து நமக்குள் நடந்த நிகழ்வுகள் அந்த எண்ணத்தை உறுதிசெய்தது நீ என்னை தவிர்த்த நான்கு நாட்கள் நான் தவித்துப்போனேன் எங்கு உன்னை இழந்து விடுவேனோ என்ற பயம் தான் நீ கேட்டதும் நம் திருமணத்திற்கு என்னை சம்மதிக்க வைத்தது, என்னை அறியமலேயே நான் உன்னை தான் விருப்பி கொண்டு இருந்திருக்கின்றேன்” என்றவள்.

“நானே உன் காதலை உணர்ந்து வர வேண்டும் என்று சொன்னதால் என்னை வர வைக்க நிச்சயம் ஏதாவது செய்வாய் என்று எதிர்பார்த்து கொண்டே இருந்தேன், நீ எதுவும் செய்து என் மனதை மாற்றுவதற்குள் விலகிச்செல்ல வேண்டும் என்று தான் வேலைக்கு செல்ல நினைத்தேன் அதற்குள் உன் விபத்து பற்றி அறியவும் தான் நான் எந்த அளவிற்கு உன்னை காதலிக்கின்றேன் என்பதை உணர்தேன், இனி நீ என்ன செய்தலும் உன்னுடன் இருந்து சண்டைபோட்டு தண்டனை தருவேனே தவிர விலகி சென்று எனக்கு நானே தண்டனை தர மாட்டேன்” என்று தெளிவாய் கூறியவள் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் துளிகள் மிளிர்ந்தது.

சிறகுகள் இன்றி
வானத்தில் பறக்கின்றேன்
என் காதலியின்
காதல் மொழிதனில்…

என்றவன் தன்னவள் கண்ணீரை துடைத்து விட்டு

என் உயிர் தான்
வேண்டுமெனில்
உரிமையுடன் கேள்
உனக்கென தந்திடுவேன்
நான் மரணிக்கும் நிலையில்
என் உயிர்காதல் உணர்ந்து
நீ சிந்தும் ஒரு துளி
கண்ணீர் போதும்
மீண்டு வந்து உன்னை
மீண்டும் காதல் செய்வேன்
கண்மணியே…

“இன்னும் என்ன தாமதம் கண்மணி என்னை முழுதாய் உன்னவனாய் ஏற்றுக்கொள்” என்று கைகளை விரித்து அழைத்திட சுகமாய் தன்னவனை கட்டியனைத்துக்கொண்டாள் சுஹீரா.
இது போதாது என்பது போல் அகரன் கைகள் காதல் தேடலில் ஈடுபட “ஏய் பகடு இது ஹோஸ்பிட்டல் ஒழுங்காய் இரு” என்று அகரனை விட்டுவிலகி சென்று தனக்கு என்று ஒதுக்கபட்டிருந்த இடத்தில் வந்து படுத்துகொண்டாள் சுஹீரா.

“சுஹீ இது நியாயமேயில்லை காதல் மொழி பேசிவிட்டு என் செல் எல்லாம் உன் சிந்தனையை சிதறவிட்டு இரக்கம் இல்லாமல் விலகிச்செல்கின்றாய், திருமணம் முடிந்தும் பிரமச்சாரியான கன்னிப்பையன் சாபம் உன்னை சும்மா விடாது கண்ணம்மா என்னை கட்டியனைத்து உன் சபாத்திற்கு விமோசனம் பெற்று கொள்” என்று அகரன் அழைக்க, எழுந்து வந்தவள் அகரன் காது அருகில் சென்று “எல்லா சாபத்தையும் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் திருமணத்திற்கு பிறகு மொத்தமாய் தீர்த்து கொள்கின்றேன் நீ உன் வாலை சுருட்டிக்கொண்டு அமைதியாய் படு இல்லை உன் வலது கை குகனை உனக்கு துணைக்கு வைத்துவிட்டு நான் கிளம்பி விடுவேன்” என்று மிரட்டினாள் சுஹீரா.

அவள் அசந்த நேரம் தனது மடியில் இழுத்து போட்டவன் தன்னை மிரட்டிய இதழுக்கு அவள் அனுமதியின்றி முத்த தண்டனை தந்து விடுவித்தான் அகரன். கைகள் தன்னை விடுத்தும் விலக மனம் இல்லாமல் கண் மூடி கிடைந்தவளை கண்டு சிரித்த படி

கொடுக்கும் போது
வேண்டாம் என்கின்றாய்
கொடுத்து முடித்தபின்
ஏக்கமாய் பார்கின்றாய்
உன் முத்தக்கோட்பாடு
புரியவில்லை
எனக்கு… என்றான் அகரன்.

வேண்டாம் என்று
விலகிட தான் நினைக்கின்றேன்
உன் விரல் தீண்டியதும்
என் எண்ணம் மறந்து
உன் கைக்குள் சுகமாய்
மயங்கினேன்
உன் முத்தத்தில்
மொத்தமாய்
என்னை இழக்கின்றேன் …

“கவிதைக்கு கவிதை சரியாய் போனது இனி பிறகு தான் எல்லாம்” என்று உறுதியாய் மறுத்து தனது இடத்தில் வந்து படுத்து கண் மூடி கொண்டாள் சுஹீரா. தன்னவள் காதல் முழுதாய் அடைந்து விட்ட நிம்மதியில் அதன் பிறகு தொந்தரவு செய்யாமல் காதல் கனவுகளுடன் உறங்கி போனான் அகரன்

என் உறக்கம்
திருடிக்கொண்ட
உன் அழகிற்கு
பரிசா என் கனவுகள்…