அரக்கனோ அழகனோ 26

அரக்கனோ அழகனோ 26
0

என்று வரிகளில் தனது காதலை மெழிந்தவன் மெதுவாய் சுஹீராவை நோக்கி முன்னேறிய படி “உன்னை கண்ட நொடியில் இருந்து, உன்னை மட்டுமே நினைத்து வாழும் உன் காதல் கணவன் இனி வரும் நாட்களும் இது போலவே இருப்பேன் என்று உனக்கு உறுதி தருகின்றேன், உன்னை தவிர வேறு எந்த பெண்னையும் என் சிந்தனையில் கூட தீண்ட மாட்டேன், உன் சந்தோஷங்களை இரட்டிப்பாக்குவேன், சோகங்கள் உன்னை தீண்டாமல் அரணாய் இருந்து காப்பேன், என் இறுதி மூச்சு வரை உனக்கு உறுதுணையாக இருப்பேன்”, என்றவன் சுஹீரா கண்களில் மிளிர்ந்த சந்தோசக்கண்ணீரை துடைத்து விட்டு கள்ளசிரிப்பு சிரித்து, “நீ உப்பு சப்பு இல்லாமல் சமைத்து கொடுக்கும் உணவையும் சுவையோ சுவை என்று ரசித்து உண்பேன், நீ ஷாப்பிங் சென்றால் அமைதியாய் உன் பைகளை சுமந்து வருவேன், நீ செலவழிப்பத்திற்கும் சேர்த்து இருமடங்கு வருமானம் ஈட்டுவேன்”, என்று கூறவும் இடையில் கைவைத்து சுஹீரா முறைக்க காதில் கைவைத்து மன்னிப்பு கேட்டு கொண்டவன். “உனக்காக என்னையே மாற்றி கொண்டு எப்போதும் உன் அன்பில் வாழ்த்திட விருப்புகின்றேன்! என் துணையாய் என் வாழ்வில் இணைவாயா? கண்மணி” என்று அனுமதி கேட்டு கையை நீட்டினான் அகரன்.

அவன் கரம் பற்றாமல் மறுப்பாய் தலையசைத்து “எனக்கு அக்மார்க் அகரன் பிடிக்காதே வழக்கமான கேடி! என் அரக்கனான அழகன் தான் பிடிக்கும் உன்னை நீ மாற்றி கொள்ளாமலே இருந்தால் உன் வேண்டுதல் ஏற்கப்படும்” என்று சுஹீரா கூறிட, வாய்விட்டு சிரித்த படி மாற்றம் நிகழாது என் குணத்திலும் உன் மீதான அன்பிலும் என்றான் அகரன்.

சம்மதமாய் தலையசைத்து அகரன் கைகளை பற்றி கொள்ள அரங்கம் முழுவதும் வெளிச்சம் பரவியது நடப்பது கனவா ? இல்லை நனவா? என்று புரியாமல் சந்தோஷத்தில் கால்கள் தரையில்படாமல் மிதந்துவந்தவள் காது அருகில் குனிந்து “உன் கல்யாணம் பற்றிய கனவினை கொஞ்சமாவது நிறைவேற்றினேனா? சுஹீ” என்று அகரன் வினவிட, மனதின் சந்தோசத்தை எல்லாம் கண்களில் தேக்கிக்கொண்டு “நான் விரும்பியதற்கும் மேல் செய்துவிட்டாய் என் செல்ல பகடு” என்று காதலாய் கூறினாள் சுஹீரா.

“இப்படி காதலாய் பார்த்து கொல்லாதே! உன்னை அணைக்க துடிக்கும் மனதிற்கு தெரியாது இடம் பொருள் ஏவல் எல்லாம் நேரம் காலம் அறியாமல் உன்னை அனைத்து ஆசையை தீர்த்துக்கொள்ள கரங்களுக்கு கட்டளையிட்டு என்னை கொடுமை செய்கின்றது” என்ற அகரன் குரலில் காதல் கிறக்கம் மிகுந்து இருந்தது. சுஹீரா கை பற்றிய படியே மேடை வரை அழைத்து வந்தான் அகரன் , சுஹீரா மறுத்தும் கேட்கமால் கையில் தூக்கிக்கொண்டு படி ஏறிச்சென்றான், சுஹீரா முகம் வெட்கத்தில் இன்னும் அழகு கூடிப்போனது.

வரவேற்புக்கு வந்தவர்களுக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை சந்திரன் பரப்பி இருந்த படி மகேஸ்வரனை பழிவாங்க நடத்தப்பட்ட திருமணம் என்று எண்ணி வந்தவர்களுக்கு அகரன் செயல் விசித்திரமாய் இருந்தது “சந்திரன் சொன்னது போல இது பழிவாங்க நடத்தப்பட்ட திருமணம் போல இல்லையே உண்மையில் இருவரும் காதலித்து தான் உள்ளார்கள்” என்று மணமக்கள் பற்றி பேசி கொள்ளத்துவங்கினர்.

மேடைக்கு வந்த ஈஸ்வர் “சந்திரனால் பரப்பபட்ட வதந்தி பொய் என்று நிரூபித்து விட்டாய்! அகரா உனக்கும் சுஹீராவிற்கு இடையில் உள்ள காதலை இனி எல்லோரும் புரிந்து கொள்வார்கள்” என்று கூறி நகர்ந்தார்.

குகன் அம்மா மற்றும் தங்கையும் வரவேற்பிற்கு வந்திருக்க லட்சுமி அம்மாளையும், தங்கை அமுதினியையும் விழுந்துவிழுந்து கவனித்தாள் அதிகா. குகனை அழைத்து “யார் இந்த பெண் குகா அத்தை அத்தை என்று எங்கள் பின்னாடியே சுற்றி வருகின்றாள்?” என்று புரியாமல் வினவ, “இது அகரன் அண்ணாவின் அத்தை மகள் அம்மா பெயர் அதிகா” என்று அறிமுகம் செய்து வைக்க அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பண்ணுங்கள் அத்தை என்றாள் அதிகா. “என்னடா குகா காலில் விழுகின்றாள்” என்று புரியாமல் விழிக்க “என்னையும் சேர்த்து ஆசீர்வாதம் பண்ணுங்கள்” என்று குகனும் காலில் விழுந்தான்.

“என்ன அம்மா புரியவில்லையா?, அவர்கள் அத்தை என்கின்றார்கள் காலில் விழுகின்றார்கள்” என்று இழுத்த அமுதினி “இவர்கள் தான் உன் மருமகள் அம்மா உன் மகன் முடிவு செய்து விட்டான்” என்றாள். “உன் அண்ணன் காதல் என்று தான் உயிரை விட்டான் இப்போது நீயும் காதல் என்று வந்து நின்று எங்கள் தலையில் இடியை இறக்குகின்றாய் உன் தங்கை வாழ்வை யோசித்தாயா?” என்று கவலையுடன் வினவிட, யமுனாவும், ஈஸ்வரும் அவர்கள் அருகில் வந்து “நீங்கள் கவலைப்படாதீர்கள் குகன் நல்ல பையன், அவன் தங்கை திருமணத்திற்கு பிறகு தான் தனக்கு திருமணம் என்று தெளிவாய் உள்ளான், இருவரும் மனமும் ஒத்துப்போய் விட்டது அதானல் நாங்களும் சம்மதம் சொல்லி விட்டோம், உங்கள் விருப்பம் என்ன?” என்று கேட்க அமைதியாய் இருந்தவர் யோசனையாய் அதிகாவையும், குகனையும் பார்த்தவர் “வாழ்வில் எப்போதும் சந்தோஷமாய் ஒற்றுமையாய் இருந்தால் சரி” என்று தனது சம்மதத்தை கூறினார்.

“கலை இது தான் உன் சம்மந்தி” என்று லட்சுமியை அறிமுகம் செய்து வைக்க அவர்களை மேலும் கீழுமாக பார்த்து “ஆ… வணக்கம் வணக்கம்” என்று பெயருக்கு அழைத்தவர், மகள் அருகில் வந்துபார்த்தாலே கிராமத்துப்பட்டிக்காடு போல் இருக்கின்றார்கள் இப்போது ஒன்றும் கேட்டுப்போகவில்லை, உன் மனதை மாற்றிக்கொள் நல்ல வசதியான இடமாய் பார்க்கின்றேன்” என்றார். “மனிதர்களை அவர்கள் மனதை வைத்து தான் கணிக்கவேண்டும் அம்மா அவர்களிடம் உள்ள பணத்தை வைத்து இல்லை” என்று மெதுவாய் அவர் மட்டும் கேட்கும் படி அறிவுறுத்தியவள், அமுதினியின் அருகில் வந்து “என்ன படிக்கின்றாய்?” என்று அக்கறையாய் விசாரித்தாள், அமுதினியும் சகஜமாய் பேசிட இருவர்க்கும் இடையில் நட்பு மலர்ந்தது அதன் பின் அமுதினி கைகோர்த்து கொண்டே எங்கும் சுற்ற துவங்கினாள், அதிகா.

அகரன், சுஹீராவை வாழ்த்த வந்தர்களில் சந்திரனும் இருக்க ஒற்றை புருவம் உயர்த்தி அகரன் ஆச்சர்யம் காட்டிட, “ நான் ஏதோ புரியாமல் பேசிவிட்டேன் என் நண்பனுக்கு நீங்கள் கெடுதல் செய்துவிட்டதாக நினைத்து அப்படி நடந்துகொண்டேன் என்னை மன்னித்து விடுங்கள் அகரன் தம்பி” என்று கை குலுக்கி வாழ்த்துகள் என்றிட, “அப்படியா மிஸ்டர் சந்திரன் உங்கள் நட்பின் அன்பு அவ்வளவு ஆழமானது, ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியது என்னிடம் இல்லை என் மாமாவிடம் என்றான் அகரன்.

“நீங்கள் சொன்னால் சரியாய் தான் இருக்கும் தம்பி” என்று இருவரையும் வாழ்த்திவிட்டு மகேஸ்வரன் அருகில் சென்று “என்னை மன்னித்து விடு மகேஷ்” என்று வேண்டும் குரலில் நிற்க, “மகிழ்ச்சியான தருணத்தில் எதற்கு மன்னிப்பு என்று பெரியவார்த்தை எல்லாம்” என்று பெரிய மனிதனாய் பேசினார் மகேஸ்வர்.

“என்ன சந்திரா மன்னிப்பு எல்லாம்” என்று உடன் வந்தவர் கேட்க, “இந்த அகரனை பகைத்துக்கொண்டு பிழைக்க முடியாது அது தெரிந்தால் தான் மகேஸ்வரனை பயன்படுத்தி கொண்டேன், ஆனால் கடைசியில் நானே மாட்டிக்கொண்டேன், இவனிடம் மோதியதால் இப்போது வருமானவரி சோதனையில் மாட்டிக்கொண்டு படாதபாடுப்பட்டேன்” என்று பெருமூச்சு விட்டார் சந்திரன்.

குகன் மேடைக்கு வந்து கிப்ட் ஒன்றை நீட்டிட , ஆர்வமாய் இருவரும் பிரித்து பார்த்தனர் அதில் இரு கண்கள் கோபமாய் முறைப்பது போல இருக்க சுஹீரா புரியாமல் பார்க்க “உனக்கு அன்றே என் மனம் புரிந்துவிட்டதா?” என்று ஆச்சரியமாய் வினவினான் அகரன்.

“அன்றே என்ன நீங்கள் அண்ணியை பார்த்து கோவில்பட்டி வீரலட்சுமியும் என்று வருணித்து நல்லவேளை இவள் பின் எவனும் காதல் என்று சுற்றவில்லை அப்படி மட்டும் எவனுக்காவது இவள் மீது காதல் வந்தால் தன் மரணத்திற்கே அறைக்கூவல் விடும் முதல் ஆள் அந்த முட்டாளாய் தான் இருப்பான்! என்று உங்களை பற்றியே பெருமையாய் பேசி கொண்டு இருந்தீர்கள் பாருங்கள் அன்றே தெரிந்துவிட்டது இது இப்படி தான் முடிய போகின்றது” என்று கூறி சிரித்தான் குகன். “என்னை பற்றி என்னவெல்லாம் சொல்லிவிட்டு அடுத்தநாளே வந்து என்னிடம் வழிந்தாயா? பகடு” என்று கோபம்காட்டினாள் சுஹீரா.

“என்ன நாராதரே வந்த வேலை முடிந்ததா?” என்று அகரன் கேட்கவும், “சிறப்பாய் முடிந்தது அண்ணா பினிஷிங் டச் ஒன்று மட்டும்” என்றவன் “இந்த கண்களை உங்களை சந்தித்து வந்த, அடுத்த நாள் வரைந்தார் அண்ணி அன்றே என் அண்ணன் மனதில் நீங்கள் நிறைந்துவீட்டீர்கள்!” என்று அவனே கோபத்தையும் குறைக்கும் வழியும் சொல்லி சென்றான் குகன்.

“அவன் என்னவோ உளருகின்றான் அவனை நம்பாதே” என்று அசடு வலிந்து அகரன் சிரிக்க இருந்த கொஞ்ச கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. “என்ன அகி ஹீயை சமாதானம் செய்ஞ்சுட்டயா ஹீ உன் மேல ரொம்ப கோபமா இருந்தா நீ அவள கள்ளாட்ட பண்ணி ஏமாத்தினயா இனி ஹீயை அழவச்ச, லட்டு சாப்பிட்டு பீம் மாதிரி உன்னை தூக்கி போடுவேன்” என்று பிஞ்சு விரல் நீட்டி சோட்டு எச்சரிக்கை செய்ய, “ஓகே டான் உங்கள் ஹீயை கண்கலங்காமல் பார்த்து கொள்வேன் வெங்காயம் கூட உரிக்க விடமாட்டேன்” என்று சிரியாமல் அகரன் கூறிட, “சும்மா சோட்டுவை வம்பிழுத்து கொண்டே இருக்காதே” என்று தூக்கிக்கொண்டு இருவருக்கும் நடுவில் வைத்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

எல்லோரும் வந்து வாழ்த்து சொல்லி செல்ல இறுதியாக பாடல் ஒலிக்கப்பட அனைவரும் தங்களின் ஜோடியுடன் ஆட துவங்கினார், அகரனும் வம்படியாய் சுஹீரா கரம் பற்றி பிறருடன் சேர்ந்து நடனம் ஆடிட , குகன் எனக்கு ஆடத்தெரியாது என்று மறுக்க நான் சொல்லி தருகின்றேன் என்று இழுத்துசென்றாள் அதிகா. குகனும் அதிகாவும் நடனம் ஆட அவர்களை கவனித்து கொண்டு இருந்த கலையரசிக்கு அதிகா முகத்தில் இருந்த சந்தோசம் நிம்மதியை தந்தது. “உன் வாழ்வை நீயே தேடி கொண்டாய் அதில் தான் உனக்கு நிம்மதி என்றால் நான் என்ன சொல்வது” என்று தனக்குள் ஒரு முடிவிற்கு வந்தார் கலையரசி.

சுகன் கவனம் புன்னகையுடன் சாந்தமான அழகுடன் நின்று இருந்த அமுதினி பக்கம் சென்றது “நான் சுகந்தன் சுகன் என்பார்கள்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவன், “நீங்கள் குகன் தங்கை தானே?” என்றிட, “ஆமாம் என் பெயர் அமுதினி” என்று கூச்சத்துடன் கூறினாள் அமுதினி.

“என்னுடன் சேர்ந்து ஆடவருக்கின்ரீர்களா? அம்மு” என்று சுகந்தன் வினவ, வெட்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மறுப்பாய் தையசைத்து வேறுபுறம் சென்று நின்று கொண்டாள், ஆனால் கண்கள் மட்டும் சுகந்தனை விட்டு அகலாமல் இருக்க இருவரும் பார்வையில் பல ரகசியங்கள் பகிர்ந்து கொள்ள துவங்கினார்.

இரவு இருள் சூழ ஏனோ புரியாத நடுக்கம் உடல் எங்கும் பரவியது அகரனை நன்கு அறிந்தவள் தான் இருந்தும் மனம் படப்படப்பதை தவிர்க்க முடியவில்லை சுஹீராவால், “மாப்பிள்ளை மனம் நோகாமல் நடக்க வேண்டும்” என்று சுபத்ரா அறிவுரை வேறு பயத்தை அதிகரித்தது “நான் பார்த்து கொள்கின்றேன்” என்று அதிகா வர அறையை விட்டு வெளியேறினார் சுபத்ரா.

அவள் மனதின் போராட்டத்தை புரிந்து கொண்ட அதிகா “உன் பயம் நியாயம் தான் சுஹீரா கரண் கொஞ்சம் கொஞ்சம் என்ன நிறையவே முரடன் ஆயிற்றே!” என்று சிரிக்க, “அதெல்லாம் என் பகடு ஒன்றும் முரடன் இல்லை என் உணர்வுகளுக்கு மதிப்பு தருபவன்” என்று அகரானுக்காக பரிந்து பேசினாள் சுஹீரா. “ ஓ உன் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் பகடுவை கண்டு எதற்கு பயம்?” என்று அதிகா சிரிக்க, “இது சொன்னால் உனக்கு புரியாது நீ அனுபவிக்கும் போது நானும் அருகில் தானே இருப்பேன்” என்றுவள் குரலில் கேலி இருக்க, “நான் எல்லாம் குகனை பார்த்துபயப்படுவதா? அது கனவிலும் நடக்காது என்று அழகாய் தலை சிலுப்பி விட்டு அலங்கரிக்க பட்ட தனியறையில் சுஹீராவை கொண்டு சென்று விட்டு திரும்பினாள் அதிகா.

அறையில் அகரன் இல்லாமல் இருக்க சுற்றும் முற்றும் பார்வையில் தேடியவள் அறையின் உள் இருந்த மற்றொரு கதவை திறந்து வெளியில் வந்தவன், சுஹீரா அழகில் அசைவற்று நின்று விட்டான், “என் கண்ணம்மா என்று ஆசையாய் நெருங்கி வந்து அவள் நெற்றியில் விழுந்த முடியை கோதிவிட்டவன், அவள் முகம் எங்கும் வேர்த்து இருப்பது உணர்ந்து என்னிடம் என்ன பயம் , என் செல்ல பொண்டாட்டி” என்று மென்மையாய் கன்னத்தில் இதழ் ஒற்றியவன் , “என்னுடன் வா” என்று கை பற்றி வெளியில் அழைத்து சென்றான், “எங்கு செல்கின்றோம் “ என்று சுஹீரா பலமுறை கேள்வி கேட்டும் பதில் சொல்லாமல் சத்தமின்றி காரில் ஏறி அமர்ந்தவன். “யாரும் பார்க்கும் முன் சீக்கிரம் ஏறு சுஹீ யாரும் பார்த்தால் விடமாட்டர்கள்” என்று கூறிட நடப்பது புரியாமல், ஆனால் அகரன் வார்த்தையை மீற மனம் இல்லாமல் உடன் சென்றாள் சுஹீரா.

கார் நேராய் அகரன் பீச் ஹவுஸ் சென்று நிற்க “இப்போது இங்கு எதற்கு பகடு” என்று புரியாமல் வினவ, அவள் இதழில் விரல் வைத்து “ஷ்.” என்று உள்ளே அழைத்து சென்றான் அறை முழுவதும் மெழுகுவர்த்தி ஒளியில் நிறைந்திருக்க கதவை மூடி விட்டு வந்தவன், “சும்மா சொல்லகூடாது குகன் சிறப்பாய் ஏற்பாடு செய்து உள்ளான்” என்று மெச்சுதலாய் கூறிய படி தன்னவளை பின்னிருந்து அணைத்தான்.

“இங்கு உனக்கு என்னிடம் எந்த பயமும் தயக்கமும் வேண்டாம் சுஹீ” என்றவன் விலகி சென்று மீண்டும் வந்து கழுத்தில் அன்று அவள் வேண்டாம் என்று விட்டு சென்ற வைர மாலையை அணிவித்து விட்டு தனது கைகளையும் மாலை போல் அவள் தோள்களில் போட்ட படி, “நான் உன் அகரன் உன் விருப்பம் இல்லாமல் உன்னை அணுகமாட்டேன்” என்று மெதுவாய் காது அருகில் கூறி கழுத்து வளைவில் முத்தமிட்டவன், “இங்கு நீயும் நானும் மட்டும் தான் குறுகுறுவென பார்க்கும் கண்கள் இல்லை, கேலி செய்திடும் வார்த்தையில்லை, உன் அகரன் மட்டும் உன் அளவில்லா காதலை அனுபவிக்க காத்திருக்கின்றேன்” என்று இடையில் கை கோர்த்து கொஞ்சம் கொஞ்சமாய் தன்னவளை தன் காதல் வசியத்தில் மயக்க துவங்கினான் அகரன்.

போதை தரும்
தேகம் உனது
உன்னை தீண்டி
தித்திக்குது என் மனது…

என்றவன் மேலும் முன்னேறிட தன்னவனுக்கு தயக்கமின்றி தன்னை வழங்கிட துவங்கினாள் சுஹீரா.
காலை எழுந்து வந்து பார்த்த பெரியவர்கள் அகரனும் சுஹீராவும் அறையில் இல்லாமல் இருக்க முதலில் பயந்தவர்கள் பின் குகன் முன் வந்து நின்று “இதுவும் உன் அண்ணன் வேலை தானா?” என்றிட, “ செய்வது எல்லாம் அவர் ஆனால் உங்களிடம் வசமாய் மாட்டிக்கொள்வது நான்” என்று தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான் குகன்.

சில மாதங்கள் கடந்து…

“சுஹீரா இங்கு வந்து உன் அண்ணனை என்னவென்று கேள் எந்த பெண்னை பார்த்தாலும் பிடிக்கவில்லை என்கிறான், ஏதாவது குறை சொல்லிக்கொண்டேயிருக்கின்றான்” என்று சுபத்ரா அழைக்க நிறைய மாத கர்ப்பிணியான சுஹீரா தனது பானை வயிற்றை தள்ளிக்கொண்டு மூச்சு வாங்க வந்து நின்றாள்.

சுபத்ரா விலகி சென்றதும் “யார் அது? சுகன்” என்று சுஹீரா வினவிட, கண்கள் மின்னிட “உனக்காவது என் நிலை புரிந்ததே?” என்றவன் அசடு வழிந்த படி, “அம்மு அமுதினி உன் திருமண வரவேற்பில் பார்த்தேன் அதில் இருந்து அவள் நியாபகம் மட்டும் தான்” என்று சுகந்தன் கூறிட, “யாரை சொல்கின்றாய் குகன் தங்கையையா?” என்று ஆச்சர்யமாய் வினவினாள் சுஹீரா. “ஆமாம்” என்று வெட்கத்துடன் சுகன் தலையாட்ட “பொறு” என்று சென்று அகரனை அழைத்து வந்து சுகன் முன் நிறுத்தினாள், “இப்போது கேள் சுகன் உங்கள் தங்கையை எனக்கு பிடித்து உள்ளது, திருமணம் செய்து தருவீர்களா?” என்று கேள் என்றாள் சுஹீரா.

அகரன் அதிர்ந்து போய் “அமுதினியை விரும்புகின்றாயா! இது எப்போதிருந்து?” என்றவன், சுகன் “ஆமாம்” என்று தலையாட்டி தனக்கு காதல் வந்த விதத்தை விவரிக்க, “இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருப்பவன் இன்று இந்த போடு போடுகின்றாய் போ” என்று சுகன் முதுகில் தட்டி கேலி செய்தான் அகரன். “போதும் என் அண்ணனை கிண்டல் செய்தது குகனிடம் நீங்கள் தான் பேசி சம்மதம் வாங்க வேண்டும்” என்று மனைவியாய் உத்தரவிட்டாள் சுஹீரா.

“குகனிடம் பேசுகின்றேன், ஆனால் அவனுக்கோ அமுதினிக்கோ விருப்பம் இல்லை என்று தெரிந்தால்நான் கட்டாய ப்படுத்த மாட்டேன்” என்று கூறி சென்றான் அகரன். “குகன் நம் அமுதினி திருமணம் விஷயம் பற்றி ஏதும் யோசித்தாயா ?” என்று அகரன் வினவிட, “என்ன அண்ணா சொல்வது இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்துக்கொண்டே இருக்கின்றாள்” என்று குகன் சோகம் காட்டினான். “என்ன அவளுமா!” என்று அகரன் ஆச்சர்யமாய் வினவ, “அவளுமா என்றால் என்ன அர்த்தம் அண்ணா வேறு யார் அப்படி சொல்கின்றார்கள்” என்று குகன் புரியாமல் வினவிட, “என் மச்சான் சுகன் தான்”, என்று அனைத்து விபரம் கூறினான் அகரன். சுகன் பற்றி நன்கு தெரியும் எந்த கெட்டபழக்கமில்லை நிச்சயம் என் தங்கை நிம்மதியாய் இருப்பாள், ஆனால் அவள் விருப்பம் என்ன என்று தெரியவில்லையே என்று குகன் நிறுத்த, “நீ அமுதினிக்கு போன் செய் நான் கேட்கின்றேன்” என்று அகரன் கூறிட , தயக்கத்துடன் அழைத்தான் குகன்.

குகன் அன்னையிடம் “அமுதினிக்கு நல்ல வரன் வந்துள்ளது” என்று விபரம் கூறியவன் அமுதினிடம் “சம்மதமா?” என்று கேளுங்கள் என்றிட , திருமண பேச்சை எடுத்தாலே ஓடுகின்றாள் நீயே கேள் என்று அமுதினி கையில் போனை திணித்துவிட்டு அருகிலேயே அமர்ந்து இருந்தார் லட்சுமி. அகரன் சுகந்தன் பெயரை சொன்னதும் முகம் மலர்ந்தவள் பெரியவர்கள் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் என்றவள் குரலும் சந்தோசத்தில் துள்ளியது. இரு வீட்டு பெரியவர்களும் அமர்ந்து பேசி நல்ல நாள் முடிவு செய்து குகன், அதிகா மற்றும், சுகந்தன், அமுதினி திருமணத்தை முடிவு செய்தனர்.

திருமண நாள் சுஹீரா கையில் அவளுக்கும் அகரனுக்கும் உள்ள காதல் அடையாளமாய் மகிழன் இருந்தான்.

சுபவேலை சுப தினத்தில் காதலில் இணைந்த உள்ளங்கள் வாழ்விலும் இணைத்து வைக்கபட்டனர்.

கலையரசி மட்டும் முகத்தை தூக்கி வைத்து கொண்டே திரிந்தார். அகரன், குகன் அதிகா திருமண பரிசாக அதிகா பெயரில் சில சொத்துகளை மாற்றித்தர அதை மறுத்தான் குகன். “இது உனக்கு இல்லை குகா எங்கள் வீட்டு பெண்ணிற்கு சேர வேண்டியது” என்று அகரன் கட்டாயப்படுத்த, “இதை நான் வாங்கி கொண்டால் பணத்திற்காக தான் அதிகாவை விரும்பியதுபோல இருக்கும் அண்ணா” என்று மறுத்தான் குகன்.

குகன் மேலும் மறுத்து கொண்டே இருக்க “வாங்கிகொள்ளுங்கள் மாப்பிள்ளை அகரன் செய்ய வேண்டிய சீரை செய்யாமல் விடமாட்டான்” என்று கலையரசி கட்டாய படுத்த, முதல் முறை கலையரசி தன்னை மாப்பிள்ளை என்றதே நிம்மதியை கொடுக்க அதிகா விருப்பம் என்றான் குகன். “இது எல்லாம் நீயும், மாமாவும் சுயமாய் சம்மதித்த சொத்துகள் கரண் இதில் எனக்கு எந்த பங்கும் இல்லை” என்று அதிகா மறுக்க, “விபரம் இல்லாமல் பேசதே அதிகா வரும் செல்வத்தை எட்டி உதைக்க கூடாது” என்று அவள் கையில் வாங்கி திணித்த பின்பே நிம்மதியாய் மூச்சு விட்டார் கலையரசி.

பெரிய இடம் மகள் விரும்பி விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக, இறங்கி வந்து சம்மந்தம் செய்துஉள்ளார் என்று குகன் உறவுகள் புகழ்ந்து தள்ள தனக்குள் இருந்த சிறு நெருடலும் விலகிட அதன் பின் கொஞ்சம் கர்வமாய் தலை நிமிர்ந்து மண்டபத்தை சுற்றி வந்தார் கலையரசி.

இரவில் சுஹீரா இரு பெண்களையும் அலங்கரிக்க அமுதினி நடுக்கத்துடன் அமர்ந்து இருக்க அதிகாவோ எந்த தயக்கமும் இன்றி தயாராகிக்கொண்டு இருந்தாள், “அடி அதி கொஞ்சம் வெட்க படுவது போல நடிக்கவாது செய்” என்று சுஹீரா கேலி செய்திட , “எனக்கும் சேர்த்து, குகன் வெட்கப்பட்டு கொண்டு இருப்பான் “ என்றாள் அதிகா.

“அண்ணா ப்ளீஸ் அண்ணா இது எல்லாம் இப்போது எதற்கு எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது” என்று கெஞ்சி கொண்டிருந்தான் குகன். “என்ன குகா என் தம்பியாய் இருந்து கொண்டு இப்படி தயங்குகின்றாய், அங்கு பார் நம் மச்சானை எப்படி டிப்டபாய் தயாராகி கொண்டு இருக்கின்றார்” என்று ஒருவழியாய் குகனையும் சுகந்தனையும், முதல் இரவு அறையில் விட்டு வந்தான் அகரன். இருளில் காதல் உள்ளங்கள் ஒருவரை ஒருவர் இழந்தும் தொலைத்தும் புது வாழ்வில் சங்கமித்து இருந்தனர்.

“சுஹீ ரசகுல்லா வேண்டுமா?” என்று அகரன் அருகில் வந்து வினவ, “ஒன்றும் வேண்டாம் ஒழுங்காய் ஓடிவிடு” என்று போலியாக கோபம் காட்டி எச்சரித்தாள் சுஹீரா. “சுஹீ எனக்கு அந்த நாள் நியாபகம் வந்துவிட்டது கண்ணம்மா” என்று கொஞ்சிக்காரியம் சாதித்து கொண்டான் அகரன்.

சில வருடம் கடந்து…

பள்ளி விடுமுறை வாண்டுகள் எல்லாம் ஒன்றாய் சுஹீரா வீட்டில் கூடி இருந்தனர், “வேண்டாம் மகி அண்ணா சோட்டு அண்ணாவை நீ ஏதாவது செய்தால் அம்மாவிற்கு கோபம் வரும்” என்று கூறிக்கொண்டு இருந்தால் ஆருதிரா, சுஹீரா அகரன் செல்ல மகள். “அவள் கிடக்கின்றால் நீ என்ன செய்ய வேண்டும் என்று சொல் நான் செய்கின்றேன் மகி அண்ணா” என்று வந்தான் நளன் குகன், அதிகாவின் செல்ல மகன்.

“யாருக்கும் கஷ்டம் கொடுக்க கூடாது, என்று அம்மா சொன்னது மறந்து விட்டதா?” என்று மழலை குரலில் ஆருதிரா எச்சரிக்கை செய்ய, “அதற்காக அந்த சோட்டு என் மதுவை அழவைப்பான் அதை நான் பார்த்து கொண்டு இருக்கவேண்டுமா என் மதுவிற்கு கஷ்டம் கொடுத்தவனை நான் கஷ்டப்படுத்தாமல் விட மாட்டேன்” என்றவன், “நளா நீ அவன் உட்காரும் இடத்தில் இந்த முட்களை வைத்துவிடு நான் எப்படியாவது பேசி இங்கு அழைத்து வந்து இதில் உட்காரவைத்து விடுகின்றேன் அப்போது தான் அந்த குண்டனுக்கு இனி என் மதுவிடம் மோத தைரியம் வராது” என்றான் மகிழன். “வேணாம் மகி அவனை விட்டுவிடு அத்தைக்கு தெரிந்தால் உன்னை தான் திட்டுவார்கள், எனக்கு அழுகை வரும்” என்று மகிழனை சமாதான படுத்த முயன்றாள், மதுலிகா சுகன் அமுதினி அழகு மகள்.

ஆருதிரா சொல்லியும் கேட்கமால் மகிழன் திட்டம் தீட்ட நளன் அதற்கு உதவி புரிந்தான், உள்ளே ஓடி சென்ற ஆருதிரா சுஹீராவுடன் வெளியில் வந்து “பார் அம்மா நான் எவ்வளவு சொல்லியும் மகி அண்ணனும் நளன் அண்ணனும் என் பேச்சை கேட்கவே இல்லை” என்று அவர்கள் திட்டத்தை போட்டு உடைத்திட, “மகி” என்று சுஹீரா அழைக்க, “என்ன அம்மா” என்று முன் வந்து நின்றான் மகிழன். “ஆரு சொல்வது உண்மையா நீ சோட்டு உட்காரும் இடத்தில முட்களை வைக்க ச்சொன்னாயா?” என்று விசாரித்தாள் சுஹீரா.

ஆருதிராவை பார்த்து முறைத்து கொண்டே , “ஆமாம் அவன் என் மது கையில் இருந்த லட்டுவை பிடுங்கி தின்று அவளை அழவைத்துவிட்டான் பதிலுக்கு அவனை அழவைக்காமல் நான் விட மாட்டேன்” என்று திமிராய் பதில் தந்தான் மகிழன். “பாருங்கள் அம்மா இந்த மகிக்கு உள்ள திமிரை” என்று சுபத்ராவிடம் முறையிட்டாள் சுஹீரா. ` “உன் பாடு உன் மகன் பாடு இதில் நான் தலையிட்டு என் நிம்மதியை கெடுத்துக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை” என்று கழண்டு கொண்டார் சுபத்ரா…

சுஹீரா அகரனை அழைத்தாள் எவ்வளவு வேகமாய் வரமுடியுமோ அவ்வளவு வேகமாய் வந்து சுஹீரா முன் வந்து நின்றான் அகரன். “உங்கள் மகன் செய்த காரியத்தை பாருங்கள்” என்று நடந்ததை சுஹீரா முறையிட, “நீ என் இனமடா!” என்று மனதில் சபாஷ் போட்டு கொண்டவன் மகிழன் அருகில் அமர்ந்து “நான் சோட்டுவை அழைத்து கண்டித்துவைக்கின்றேன், ஆனால் நீ செய்ததும் தவறு தான் மகி ஒழுங்காய் அம்மாவிடம் மன்னிப்புகேள்” என்றான் அகரன். “சாரி என்று சொன்னவன் வா நளன் உள்ளே சென்று விளையாடுவோம்” என்று நளன் மதுவை அழைத்து கொண்டு உள்ளே சென்றான் மகிழன்.

தங்கள் அறைக்கு வந்த அகரன் “சின்ன பையன் தெரியாமல் செய்கின்றான், அதற்கு இவ்வளவு கடுமைவேண்டுமா?” என்று மனைவியை சமாதானப்படுத்த முயன்றான் அகரன். “அப்படியே உன்னை உரித்துவைத்து உள்ளான் பகடு கோபம் பிடிவாதம் முரட்டுத்தனம்” என்று அடுக்கி கொண்டே போக, “புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என் செல்லப்பொண்டாட்டி” என்று கட்டியனைத்துக் கொண்டான் அகரன். “இதில் பெருமையா உனக்கு” என்று விலகிட முயன்றாள் சுஹீரா.

கரம் பற்றி இழுத்து தன் மீது சரித்து கொண்டவன் “நம் குட்டிமா ஆருதிரா, உன்னைப்போல தானே இருக்கின்றாள் அவள் பெயருக்கு ஏற்றது போல மிருதுவாக!” என்றவன், “நீயும் நானும் சேர்ந்த கலவையாக ஒன்று பெற்று கொள்வோமா?” என்று அகரன் ரகசியம் பேசி கிசுகிசுக்க. “அப்பா சாமி ஆளை விடு உன்னையும் உன் பிள்ளையையும் வைத்து சமாளிப்பதே எனக்கு போதும் போதும் என்றாகிவிடுகின்றது” என்று சினுங்களாய் கூறிக்கொண்டே மெதுவாய் கணவன் கை அணைவில் தன்னை இழக்க துவங்கினாள் சுஹீரா. ஊடலுடன் கூடல் அங்கு அழகாய் நிறைவேறியது…

என்ஆயுள் உள்ள வரை
உன் காதல் வேண்டும்
அது முடியாது என்றால்
உன் காதல் உள்ள வரை
எனக்கு ஆயுள் போதும்

இனியெல்லாம் சுகமே சுபமே.