அவள் வந்துவிட்டாள்

அவள் வந்துவிட்டாள்
0

அவள் வந்துவிட்டாள்- முன்னுரை

வணக்கம் சகோக்களே

இது எனது மூன்றாம் கதை. வெறும் லவ் மட்டுமே எழுதனுமா ஒரு எண்ணம் அதான் கொஞ்சம் நட்பும், காதலும், குடும்பமும் சேர்ந்து வர கதையா எழுத போறேன். கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன். அப்புறம் கதையை பற்றி சொல்லணும் என்றால் இது என் நண்பனின் கதை. அவன் வாழ்க்கை நிகழ்ச்சியை எல்லாம் தொகுத்து கதையா மாத்தா போறேன். இதுல என் கற்பனையும் சேர்ந்து கதையாக போகுது. அவரோட அனுமதி வாங்கி தான் எழுதி இருக்கேன். ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.

என் கதைக்கு உங்க ஆதரவு தான் பெருசு, உங்க விமர்சனம் தான் என் பரிசு. குறை இருந்தாலும் சரி, நிறை இருந்தாலும் சரி சொல்லுங்க.

கதையோட ஹீரோ பெயர் அன்புசெல்வன். ஹீரோயின் ரெண்டு பேர் இருக்காங்க கதைக்கு ரொம்ப முக்கியம் ரெண்டு பேரும். ஒருத்தர் சுமித்ரா, இன்னொருத்தர் வைஷ்ணவி. அன்பு செல்வனோட அவள் யார் என்று நாளை பார்ப்போம். இந்த கதையில் என் கேரக்டரும் இருக்கு… :slight_smile::slight_smile: என் ப்ரெண்ட் கதை நான் இல்லாம இருப்பேனா?

நன்றிகளுடன்,

கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:!*

1. அவள் வந்துவிட்டாள்

ஞாயிறு காலை,

அன்பு பரபரப்பாக அந்த நாளும் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தான். பின்னே அவனின் அக்கா வீட்டிற்க்கு வந்து இருக்கிறாள், அதுவும் மாமா மற்றும் அந்த வீட்டின் முதல் வாரிசையும் அழைத்து கொண்டு வந்து இருக்கிறாள். வந்தவர்களை உபசரிப்பதில் அவனுக்கு நிற்க நேரம் இல்லை.

சரி இந்த வீட்டில் தான் நம்ம கதை ஆரம்பம். யார் யார் எல்லாம் இருக்காங்க பார்த்துட்டு வருவோமா?
அன்பு செல்வன் நம்ம கதையோட நாயகன். அழகான பையன் 27 வயது, 5.7 அடி உயரம், மாநிறம், குட்டியா சிரிக்குற கண்ணு, கூர் நாசி, கிள்ளி வைக்கணும் ஆசைப்பட வைக்கற கன்னம், அவன் முகத்தையே அழகாக்குற உதடு, அளவான உடம்பு. அவனுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் வேற அதிகம். அவன் டீ ஷர்ட் போட்டாலும் மாஸா இருப்பான்.

அன்பு வீட்டுக்கு நடுபுள்ளை, இவன் அக்கா கலை செல்வி, கல்யாணம் ஆகி சென்னையில் இருக்கிறார். அவங்களுக்கு ஒரு குட்டீஸ் இருக்கான். அடுத்து அன்பு, சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு, பேவர் பிளாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் மேனேஜராக வேலையில் இருக்கிறான். சொந்தமாய் தானும் அது போல தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அவன் குடும்ப சூழ்நிலை அதுக்கு கை கொடுக்கவில்லை. அடுத்து அவன் தம்பி வசந்தகுமாரன் மெக்கானிகல் என்ஜினீயரிங் படித்து விட்டு மூஞ்சிபுத்தகத்தில் பெரிய பக்கம் ஒன்றில் மிமீ க்ரீயேடராக இருக்கிறான். சம்பாத்தியம் செய்கிறான் தான், அது அவனுக்கே போதாது.

அன்புவின் அம்மா லலிதா மிக அன்பானவர், மூன்று பிள்ளைகளின் மீதும் பேரன்பு வைத்து இருந்தார். அப்பா நீலகண்டன் டெய்லர். அவர் தைத்து கொடுத்த துணிகளுக்கு என்று பெரு மதிப்பு உண்டு. லலிதாவின் இப்போதைய ஆசை எல்லாம் அன்புவின் திருமணம் ஒன்று தான். அவனோ கல்யாணம் என்று கூறினாலே மறுத்து கொண்டு இருந்தான்.

அன்பு பெயருக்கு ஏற்றார் போல் அன்பானவன் தான். வீட்டின் மொத்த பொறுப்பும் அவன் தோல்களில், தம்பி இருந்தும் அவனுக்கு பயனில்லை. ஆனாலும் அன்பு அதை வெளியே கூறியதும் இல்லை, அவனை விட்டு கொடுப்பதும் இல்லை. அன்பின் குடும்பம் செல்வ செளிப்பாக இருந்த குடும்பம் தான். அன்பின் அப்பா செய்த தொழில் முயற்சியில் அவன் வீடு நடுத்தர நிலைக்கு வந்து விட்டது. நடுத்தர மக்கள் வாழ்வு பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நாமும் அதில் தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அப்பா முடிந்த வரை முயன்று, அன்புடைய உதவியோடு அக்கா கலையை காட்டிக்கொடுத்து, ஒரு பிள்ளை பெறும் பார்த்து இருந்தார். அக்காவின் கல்யாண கடன், வீட்டின் அத்தனை செலவும் அவன் தான் பார்க்க வேண்டும். முகசுளிப்பு இன்றி அனைத்தும் செய்து வருகிறான். அவனுக்கு என தனிப்பட்ட செலவுகள் எதுவும் இல்லை. டீ டோட்டலர் வேறு, அனைத்து நல்ல குணமும் இருந்தும் அவனுக்கு கல்யாணம் என்று கூறினால் பயப்பட காரணம் அவனின் குடும்ப சூழலும், அவனின் காதல் தோல்வியும் தான்.

அன்பின் காதல் தோல்வி பற்றி அறிந்த சில பேரில் அக்கா கலையும், அவனின் எழு வருட தோழி ஜீவிதாவும் அடக்கம். அவனின் சூழ் நிலை மாற்ற, அவன் காதலை கொண்டாட அவள் வருவாள் சீக்கிரம்.

அறிமுகம் எல்லாம் முடிஞ்சுது, வாங்க கதைக்கு போகலாம்.

அன்பு வந்தவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தான். அவனின் வாட்ஸ் அப் ஒலி எழுப்பி அழைத்தது. அன்பு அவன் அலைபேசி எடுத்து பார்த்தான்.

ஜீவி: " என் டிபி (dp) சுட்டு வெச்சு இருக்க, ஏன் டா?"

“ஸ்டேட்டஸ் தான் சுட்டு வைப்பாங்க, நீ ஒரு படி மேல போய் என் டிபியை சுட்டு வெச்சு இருக்க,”

அன்பு சிரித்துவிட்டு பதில் அனுப்பினான்.

அன்பு: " அழகா இருந்துச்சு, அதான் வெச்சேன், என்ன இப்போ? இதுக்கு போய் பொலம்புற?"

ஜீவி: " நாங்க தேடி தேடி வெப்போம், இவரு ஈசியா காபி பண்ணிப்பாரு இல்லையா?"

“அதும் பொம்பள புள்ளை வெக்குற
டிபி அது, அதை போய் வெச்சு இருக்க, சரி போ நானே வேற பிக்சர் மாத்திக்கறேன், அதையும் காபி பண்ணாத காபி கேட்”

அன்பு: " அக்கா வந்து இருக்கா, பிஸியா இருக்கேன், அப்புறம் பேசறேன்"

லலிதா: " யார் டா ஃபோன்ல?"

அன்பு: " ப்ரெண்ட் மா ஜீவி"

கலை: " எப்போ தான் டா கல்யாணம் பண்ணிக்க போற நீ?"

அன்பு: " பண்ணலாம் அக்கா, இப்போ வீடு இருக்கற நிலைமையில் அது தான் முக்கியமா? வீடு கட்டின அப்புறம் பார்க்கலாம்"

லலிதா: " இப்படியே நாள் தள்ளி போட்டுடே இரு டா நீ, எல்லார் வீட்டிலும் இதே நிலை தான், அதெல்லாம் கல்யாணம் ஆன சரியாயிடும். சம்மதம் சொல்லு"

அன்பு எதுவும் பேசாது அவன் அறை நோக்கி சென்று விட்டான். கலை அவன் பின்னே சென்றார். அன்பு அவன் அறை சென்று அமர்ந்து இருந்தான்.

கலை: " நீ இன்னும் அவளை மறக்கலையா? அதெல்லாம் முடிஞ்சு போய்டுச்சு, அவளுக்கு கல்யாணம் கூட ஆகிருச்சு இன்னும் அதை மறக்காம மனசுல வெச்சுட்டு இருக்காதே டா"

அன்பு: " அவளை எப்படி மறப்பேன் அக்கா நான்? என் முதல் காதல் அவ, அவ தப்பான பொண்ணு இல்லையே அக்கா, அவளுக்கு என்னோட வாழ பிடிக்கல, எனக்கு அவளை ரொம்ப பிடிக்குமே, எவ்ளோ கனவு, காதல் எனக்குள்ள இருந்தது தெரியுமா?"

கலை: " அதுக்காக இப்போ என்ன செய்ய போற? வாழ்க்கையில் சில விஷயங்களை கடந்து போய் தான் ஆகனும்."

அன்பு: " நான் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண அவளோட உண்மையா வாழ முடியும்ன்னு தோணல அக்கா"

கலை: " டேய் என்ன டா பேசுற?"

அன்பு: " ஆமா அக்கா, வேற ஒரு பொண்ணோட என்னால வாழ முடியாது. பொய்யா ஒரு வாழ்க்கை எப்படி வாழ முடியும்? அவளுக்கும் ஒரு நாள் இது நடிப்பு தெரிஞ்சு போய்டும். ஒரு பொண்ணு வாழ்க்கை அழிக்க நான் தயார் இல்ல, அம்மா கிட்ட பேசு அக்கா பிளீஸ்"

கலை: " டேய் இப்படி எல்லாம் யோசிக்காதே முதலில் சரியா?"

அன்பு: " சரி"

கலை அவன் அறை விட்டு வெளியே செல்ல,

லலிதா: " என்ன சொல்றான் உன் அன்பு தம்பி?"

கலை: " அவன் சின்ன குழப்பத்தில் இருக்கான் அம்மா. நீங்க நல்ல பொண்ணா பாருங்க அம்மா, பொண்ணு அவ மனசு புரிஞ்சு நடக்கணும்."

லலிதா: " எல்லாம் கல்யாணம் ஆனா சரியாகிடும்"

கலை: " சரி அம்மா"

அன்பு அவனின் அறையில் தனியாய் அவளை பற்றி யோசித்து கொண்டு இருந்தான். சுமி, அவள் சிரிப்பு, அவனை வலுவிழக்க செய்தது. அவனை அவள் திரும்பி பார்த்து சிரித்தது. அந்த நாள் அதனுள் சென்றான். சுமியை பற்றிய நினைவுகள் அவனை சூழ்ந்தது.

வணக்கம் சகோ,

கதை ஆரம்பம் எப்படி இருக்கு, எல்லாரும் ரியல் பிபிள் கதைக்குள் அதான் பார்த்து பார்த்து எழுதி இருக்கேன். உங்கள் விமர்சனம் காண ஆவலோடு,

:purple_heart:

1 Like

2. அவள் வந்துவிட்டாள்

வணக்கம் சகோஸ்,

நான் எப்பவும் கதையின் கேரக்டர்களை ஒரு முறை சரியா சொல்றது வழக்கம். கதையில் அதிக பேர் இருக்கறதால இது அவசியம்.

அன்பு இருக்கறது சிங்காநல்லூர் கோவையில்,

அன்பு செல்வன் - ஹீரோ

நீலகண்டன் - அன்பின் அப்பா

லலிதா - அன்பின் அம்மா

கலைச்செல்வி - அன்பின் அக்கா

தனசேகர் - கலைசெல்வியின் கணவர்

திருநாவுக்கரசு - கலையின் மகன்

வசந்தகுமாரன் - அன்பின் தம்பி

ஜீவிதா - அன்போட தோழி

சுமித்ரா - அன்பின் காதலி

அவளின் நினைவுகளோடு இருந்தவனை வசந்தின் குரல் கலைத்தது.

வசந்த்: " அண்ணா, அக்கா ஊருக்கு கிளம்பிட்டாங்க, அம்மா உன்னை கூப்பிட சொன்னாங்க எழுந்து வா"

அன்பு: " என்ன அதுக்குள்ளையா?"

வசந்த்: " மாமாக்கு எதோ அவசர வேலையாம் அதான்"

அன்பு ஹாலுக்கு எழுந்து வந்தான். ஹாலில் கலையின் கால்களை சுற்றி கொண்டு இருந்த திரு, அவன் மாமனை பார்த்து ஓடி வந்தான். அன்பு அவனை தூக்கி கொண்டே பேசினான்.

அன்பு: " என்னக்கா? இப்போ என்ன அவசரம் வந்து ரெண்டு நாள் தானே ஆகுது? ஒரு வாரம் இருப்பேன்னு சொல்லிட்டு இப்போ இப்படி ரெண்டே நாளுல கிளம்பி போற?"

கலை: " நான் என்ன டா பண்றது? உன் மாமாக்கு ஆபீஸில் அவசர வேலை அவரு போக வேண்டாமா?"

அன்பு: " சரி மாமா வேலையை முடிச்சுட்டு வந்து கூப்பிட்டு போகட்டும் அது வரை இங்க இரு"

கலை: " அவருக்கு வேலை இருக்குன்னு சொன்னேன் நானு, அவரு என்னை இங்க விட்டு போய் திரும்பி வந்து அலையனுமா? திரு அவரை விட்டு இருக்க மாட்டான் தெரியும் தானே உனக்கு?"

அன்பு: " போ அக்கா, எப்பவாது தானே வர அதுலயும் இப்படி கிளம்பி போற, சரி அடுத்த முறை வந்த சேர்ந்து நாலு நாள் இருந்துட்டு போ"

கலை: " நீ தான் இவளோ சொல்ற, அங்க ஒருத்தனை பாரு, எப்பவும் கையில மொபைல், இல்ல லேப்டாப், கேட்ட மீம் க்ரீயேடர் சொல்லிட்டு எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கான்"

அன்பு: " விடு அக்கா அவனை பத்தி தான் தெரியும் இல்லையா? அவனுக்கு எல்லாமே ஈஸி தான்"

வசந்த்: " அப்புறம் உன்னை மாறி எல்லாத்துக்கும் ஓவரா உணர்ச்சி வசப்பட முடியுமா?"

அன்பு: " ஒடிரு, இல்ல அவ்ளோ தான்"

வசந்த்: " போ டா"

லலிதா: " கலை நான் உன்கிட்ட கேட்டதை மறக்காம மாப்பிள்ளை கிட்ட கேட்டு சொல்லு சரியா?"

கலை: " கண்டிப்பா கேக்குறேன் அம்மா"

அன்பு: " என்ன அக்கா அது?"

கலை: " அம்மா பொண்ணுக்குள்ள ஆயிரம் இருக்கும் உனக்கு என்ன டா?"

அன்பு: " எனக்கு ஒரு நாள் தெரியும் அப்போ பேசிக்கிறேன்"

கலை, திரு, தனசேகர் மூவரும் கிளம்பி விட்டனர்.

15 நாளுக்கு பிறகு, சென்னையில் இருந்து கலை அழைத்து இருந்தார்.

கலை: " ஹலோ அம்மா, நீங்க சொன்னது சரி தான். அவர் கிட்ட பேசி அவங்க வீட்டில் கேட்டோம். அவங்களுக்கும் நம்ம அன்பு மேல ஒரு நல்ல எண்ணம் இருந்து இருக்கு, திரு காது குத்து அப்போவே பேசணும் இருந்து இருக்காங்க பொண்ணு படிக்கவும் இப்போ வேண்டாம் தள்ளி போட்டு இருந்துட்டாங்க, இப்போ நேரம் கூடி வருது, அன்புக்கு அவங்க பொண்ணை தர சம்மதம் சொல்லிட்டாங்க"

லலிதா: " ரொம்ப சந்தோசம் கலை, பேசி ஒருநாள் பொண்ணு பார்க்க போவோம், நீ எப்போ வர?"

கலை: " அவர் வர வெள்ளிக்கிழமை கிளம்பலாம் சொல்லி இருக்கார் அம்மா, ஞாயிறுகிழமை காலை பத்து மணிக்கு வரோம் சொல்லி இருக்கார் அவரு, நல்ல நேரம், அன்புக்கும் வேலை இருக்காது, அன்னிக்கு போய் பார்த்துட்டு வந்துடுவோம்"

லலிதா: " மாப்பிள்ளை நன்றி சொன்னேன் சொல்லு டா கலை, அவர் நமக்கு ரொம்ப பெரிய உதவி செய்து இருக்கார்."

கலை: " என்னம்மா இது? நன்றி எல்லாம் சொல்லிகிட்டு?, நீங்க அன்பு, அப்பாக்கிட்ட எல்லாம் சொல்லி தயாரா இருங்க, நம்ம எல்லாரும் போய் பார்த்திட்டு வந்துடுவோம்"

லலிதா: " வைஷுவை தான் பார்த்து இருக்கோமே, அழகான பொண்ணு தான், என்ன கொஞ்சம் உடம்பு வெச்சா இன்னும் அழகா இருப்பா"

கலை: " சரி மா எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க வெக்குறேன்"

லலிதா: " எங்க என் பேரன் சத்தமே இல்லை?"

கலை: “அவன் தூங்குறான் அம்மா, அவன் முழிச்சு இருந்தா என்னை பேச விடுவானா? ஃபோன் அவன் கையில் இருக்கும்”

லலிதா: " சரி டா, நானும் வெக்குறேன் எல்லாரையும் கேட்டதா சொல்லு டா"

லலிதா விஷயத்தை சொல்ல, நீலகண்டன், வசந்த் முகத்தில் மகிழ்ச்சி, அன்புக்கு மட்டும் அதிர்ச்சி.

அன்பு அவன் அறையில் அமர்ந்து இருந்தான். என்ன செய்ய? எப்படி சென்று பெண் பார்க்க? பிடிக்கவில்லை என்று கூறினால் என்ன நினைப்பார்கள் என்று பல எண்ணம் அவன் மனதில், அப்போது அவன் அலைபேசி ஒலி எழுப்பியது.

வேற யாரு நான் தான் :purple_heart:

ஜீவிதா: " dp சூப்பர்"

அன்பு: " நல்லா இருக்கா, பொண்ணு வீட்டுக்கு அனுப்ப எடுத்தேன்"

ஜீவி: “பொண்ணு பாக்குறாங்களா? உனக்கா?”

அன்பு: " ஏன் எனக்கெல்லாம் பார்க்க மாட்டாங்களா?"

ஜீவி: " கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருங்க அன்பு, நான் எதும் சொன்னேனா? "

அன்பு: " கொஞ்சம் சும்மா இரு, நானே
ஞாயிறுகிழமை போய் பார்க்கணும் கவலையா இருக்கேன், நீ கிண்டல் பண்ற"

ஜீவி: " ஏன் என்னாச்சு? என்ன கவலை உனக்கு?"

அன்பு: " என்னால சுமியா மறக்க முடில"

ஜீவி: " அவ வேற ஒருத்தன் பொண்டாட்டி டா இப்போ"

அன்பு: " சில விஷயங்களை மறக்க முடியாது, அது எல்லாம் நல்ல நினைவுகள்."

ஜீவி: " சரி தான் டா, வாழ்க்கையில் அடுத்த கட்டம் போகும் போது ஏன்? பழைய சுமை எல்லாம் எடுத்துட்டு போற? "

அன்பு: " அவளோட நினைவுகள் எப்படி சுமை ஆகும்?"

ஜீவி: " போய் பார்துட்டு வா, அப்புறமா மற்றதை எல்லாம் பார்ப்போம். எதையும் முயற்சி பண்ணாம முடியல சொல்ல கூடாது. உனக்கு மட்டும் தான் காதல் தோல்வியா? அப்போ எனக்கு? எல்லாருக்கும் முதல் காதல் மறக்க முடியாதது தான். சிலருக்கு வலியும், சிலர்க்கு வாழ்க்கையும் அது தான். யோசிக்காம போய்ட்டு வா அன்பு"

அன்பு: " குழப்பமா இருந்தேன், இப்போ கொஞ்சம் பரவாயில்லை. உன் சென்டர் எப்படி போகுது? கதை எழுதுற சொன்ன என்ன ஆச்சு?"

ஜீவி: " எல்லாம் நல்லா போகுது, விமர்சனம் எல்லாம் நல்லா வருது நான் ஹாப்பி"

இருவரும் பேசி விட்டு அலைபேசியை வைக்க ( இப்போ உங்க எல்லாருக்கும் ஒரு டவுட்டு வரும் மெசேஜ் தானே வந்தது, எப்படி கால் ஆச்சுன்னு எனக்கும் அவனும் இருக்கற நட்பு அப்படி தான் நாலு மெசேஜ் அப்புறம் கால் பண்ணிருவான். ரெண்டு பேருக்கும் அடுத்து சொல்ல தேவையே இல்ல நெறைய டாபிக் பேசுவோம்.)

இருவரும் பேசி விட்டு அலைபேசியை வைக்க, அன்புவை அவன் அம்மாவிடம் பெண் பார்க்க செல்லலாம் என்று கூறி வந்தான்.

கலை சொன்னது போல வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்ந்து விட, ஞாயிறுகிழமை காலை அனைவரும் கிளம்பி பெண் பார்க்க சென்றனர்.

:purple_heart:

3. அவள் வந்துவிட்டாள்

காரில் அனைவரும் ஒரு மெல்லிய புன்னகையோடு இருக்க, அன்பு மட்டும் எதோ ஒரு யோசனையில் இருந்தான்.

தனசேகர்: " என்ன ஆச்சு அன்பு? முகமே சரி இல்ல, உனக்கு தான் பொண்ணு பார்க்க போறோம், கொஞ்சம் சிரி"

அன்பு: " இல்லை மாமா, அப்படி எதும் இல்லை எதோ டென்ஷன்"

தனசேகர்: " வைஷ ரொம்ப நல்ல பொண்ணு, என் மேனேஜர் என்ன சொல்வாரோ இருந்தேன், அவருக்கும் உன்னை பிடிச்சு இருக்கு."

அன்பு: " மாமா உங்க முன்னாள் மேனேஜர் வேற, எனக்கு ஒருவேளை பொண்ணு புடிக்காம போய்ட்டா சங்கடம் இல்லையா? அப்படி நான் எதும் சொன்ன என் மேல கோவப்பட மாட்டீங்க தானே?"

கலை: " வாயா மூடு டா, பொண்ணை ஏன் பிடிக்காம போக போது?"

அன்பு அமைதியாய் அமர்ந்து கொண்டான்.

அனைவரும் பெண் வீடு வந்து சேர்ந்தனர். பெண் வீட்டில் அவர்களை வரவேற்க, அதை ஏற்றுக் கொண்டு உள்ளே சென்றனர். உள்ளே வீட்டின் அழகு அவர்களை வரவேற்றது. லலிதா வீடும் அதை வைத்து இருந்த நேர்த்தியும் மிகவும் பிடித்து இருந்தது.
பெரிதாய் யாரும் வீட்டின் உள்ளே இல்லை. வைஷுவின் அப்பா, அம்மா, அவள் வீட்டு நாய்க்குட்டி, பக்கத்து வீட்டில் இருந்து வந்து இருந்த இரு பெண்களை தவிர,

சண்முகம் (வைஷுவின் அப்பா) : " நீங்க என் பொண்ணை கேட்டு இருந்தீங்கன்னு சேகர் சொன்னதும் ரொம்ப சந்தோசம், எனக்கும் அன்பை பிடிக்கும். திரு காதுகுத்து அப்போ எல்லாத்தையும் இழுத்து போட்டு பொறுப்பா செய்து விழா நல்லா நடக்க உதவி செய்தது பார்த்து ஆச்சரியம் தான் எனக்கு, வயசை விட முதிர்ச்சி, எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்த அக்கறைன்னு எல்லாம் பிடிச்சு போய் இருந்தது. நீங்களும் எங்க கூட சம்பந்தம் வைக்க விரும்பியதில் எனக்கு சந்தோசம்."

நீலகண்டன்: " வைஷணவியை யாருக்கு தான் பிடிக்காது, அன்பான பொண்ணு"

லலிதா: " கேக்கறேன் தப்பா நினைக்க வேண்டாம், யாருக்கும் சொல்லலையா வீட்டில் யாருமே இல்லை, ஏன்?"

சண்முகம்: " எங்களுக்கு சொந்தம் பெருசா யாரும் இல்லை, அப்புறம் இது என் பொண்ணு வைஷ்ணவி விருப்பம், பொண்ணு பார்க்க வரது என்னை தானே ? நம்ம குடும்பமா அவங்க குடும்பத்தோடு பேச வெளியாட்கள், சொந்தம், எல்லாம் எதுக்கு? அதும் இல்லாம வர அவங்களுக்கும் சங்கடம், நிச்சயம் ஆனால் எல்லாருக்கும் சொல்வோம் சொன்ன, அதான் யாரையும் கூப்பிடல"

லலிதா: " வைஷு சொன்னது சரி தான், ஆனாலும் வீட்டுல இருக்கற பெரியவங்களுக்கு சொல்லி இருக்கலாம்"

சண்முகம்: " எங்க வீட்டில் பெரியவங்க யாரும் இல்லை, என் தம்பி மட்டும் தான் அவனும் வெளிநாட்டில் இருக்கான் அதான் இப்போ நாங்க மட்டும்"

சேகர்: " சார், வைஷுவை வர சொல்லுங்க நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணை பார்த்து முடிவு பண்ணிடுவோம்"

பெண் அழைக்க உள்ளே சென்றனர். காபி கொண்டு வந்து வைஷுவின் அம்மா லக்ஷ்மி கொடுத்தார். வைஷு மஞ்சள் நிற புடவையில் பிங்க் ஓரங்களில் கல் பதித்த பட்டு சேலையில், அவள் நீள் கூந்தல் பிண்ணி, மல்லிகை பூ சூடி, அளவான ஒப்பணையில் அழகாக நடந்து வந்தாள். அனைவருக்கும் அவள் இனிப்பு வழங்க, அன்பிடம் வரும் போது மட்டும் சில நொடி பொறுமையாய் வந்து கொடுத்து அவனை ஓர கண்களில் பார்த்து விட்டு சென்றாள். அவள் அன்னையின் பின்னே சென்று நின்று கொள்ள, அன்பு இரு நொடி அவளை உற்று பார்த்து விட்டு தலை குனிந்தான். அவனுக்குள் ஆயிரம் போராட்டம். அங்கு இருக்கவே அவனால் முடியவில்லை.

வைஷ்ணவியை அவள் அறைக்கு அழைத்து சென்று, அவளின் சம்மதம் கேட்டனர். அவளுக்கு முழு சம்மதம். லக்ஷ்மி வெளியில் புன்னகையுடன் வந்து சண்முகம் காதில் கூறி விட்டு அருகில் நின்றார்.

சேகர் அன்பின் காதில் மெலிதாக,

சேகர்: " பொண்ணு பிடிச்சு இருக்கு தானே அன்பு?"

அன்பு அமைதியாக இருந்தான்.

கலை : " பேசு அன்பு, என்ன டா? பிடிக்கலையா?"

லலிதா: " பொண்ணு எங்களுக்கு பிடிச்சு இருக்கு வர மாசத்தில் நல்ல நாள் பாருங்க நிச்சயம் பண்ணிடுவோம்"

நீலகண்டன்: " ஆமா பொண்ணு ரொம்ப பிடிச்சு இருக்கு, லலிதா சொன்ன மாதிரி செய்திடுவோம்"

சண்முகம்: " ரொம்ப சந்தோசம், அப்போ நல்ல நாள் பார்த்து நான் கால் பண்றேன் சம்பந்தி"

லலிதா: வைஷ்ணவியா பார்க்கணும் பூ வெச்சு விடணும் என் மருமகளுக்கு"

லக்ஷ்மி: " உள்ள வாங்க, தரலாமா வெச்சு விடுங்க அவ இனி உங்க வீட்டு பொண்ணு"

கலை, லலிதா இருவரும் அவள் அறை நுழைய, வைஷு சிரித்த முகத்தோடு வரவேற்றாள்.

கலை: “கடைசியில் என் தம்பிக்கு பொண்டாட்டி ஆக போற வைஷு நீ”

வைஷு: " ம்ம் ஆமா அக்கா"

லலிதா: " வைஷு இனி அவ உனக்கு அக்கா இல்லை, அண்ணி. வைஷு, உனக்கு என் பையனை பிடிச்சு இருக்கா?"

வைஷு பிடிச்சு இருக்கு என்று முக சிவக்க கூற, கலையும் லலிதாவும் பூ வைத்து விட்டனர். வைஷு லலிதா காலில் விழுந்து ஆசி வாங்கி கொண்டாள்.

லலிதா: " வைஷுக்கு சமைக்க தெரியுமா?"

வைஷு: " தெரியும் அத்தை"

கலை: " அவ M.sc. in Hospitality and Travel Management படிச்ச பொண்ணு, நம்ம வீட்டை அழகா பார்த்துப்பா"

லலிதா : " அதான் வீடு அழகா இருக்கு, சரி டா நாங்க கிளம்புறோம், உடம்பை பார்த்துக்கோ டா"

வைஷு கலையை பார்த்துக் கொண்டே நிற்க, கலை என்ன என்பது போல் கண்ணில் வினவா, வைஷு இரண்டு நிமிடம் என்று கூறினாள். கலை மட்டும் அவளோடு பேசி வருவதாக சொல்லி அங்கு இருந்தார்.

கலை: " என்ன வைஷ்ணவி? என்ன பேசணும்?"

வைஷு: " அவர் நம்பர்"

கலை சிரிக்க, வைஷ்ணவி வெக்கத்தில் தலை குனிந்து அமர்ந்து கொண்டாள்.

கலை: " ரொம்ப வேகம் தான் நீ, யார் பொண்ணு தெரியல, அவன் உன் முகம் பார்க்கவே கூச்சப்பட்டு இருக்கான், நீ நம்பர் கேக்குற வாலு"

வைஷு: " நான் என்ன தப்பா கேட்டேன், எப்படியும் அவர் என்னோட பேச தானே போறாரு? அப்போ அவர் தான் பேசராருன்னு தெரிய வேண்டாமா? "

கலை: " ஒஹ் அப்படி, சரி டி வாயாடி, என் தம்பி இப்படி வாயாட மாட்டான், பார்த்து பேசு அவன்கிட்ட சரியா?"

வைஷு: " ம் சரி அண்ணி"

பின் அனைவரும் விடைபெற்று கிளம்பி சென்றனர். அன்று மாலையே நிச்சயம் இன்னும் பதினைந்து நாளில் என முடிவு ஆனது.

:purple_heart:

4. அவள் வந்துவிட்டாள்
அன்பு விஷயம் அறிந்து அவன் அன்னையை தேடி வந்தான்.

அன்பு: " அம்மா, நான் சம்மதம் சொல்லவே இல்லை, நீங்க சரின்னு சொல்லி நிச்சயம் வரை கொண்டு வந்து இருக்கீங்க? இப்போ எதுக்கு இவளோ அவசரம்?"

லலிதா: " எதாவது வாய் பேசின அடி விழும், பொண்ணுக்கு என்ன டா குறை? பார்க்க அழகா இருக்கா, நம்ம வீட்டுக்கு ஏத்தா பொண்ணு அவ, நான் கூட முன்னாடி பார்த்த மாதிரி உடம்பு இல்லாம இருப்பான்னு நினைச்சேன், ஆனா அப்படி எந்த குறையும் இல்ல, கல கலன்னு பேசுற பொண்ணு, நல்ல படிப்பு, வேலை, அழகு, குடும்பம் எல்லாம் சரியா வரும் போது உன்னை எதுக்கு கேக்கணும் நான்? "

அன்பு: " இப்போ கல்யாணம் பண்ண வீடு கட்ட சேர்த்த பணம் எல்லாம் இதில் போடணும், வீடு கட்டின பின்னாடி கல்யாணம் பத்தி பண்ணிக்கறேன் மா"

கலை: " டேய், பொண்ணுக்கு பூ வெச்சுட்டு வந்துட்டோம், இனி பேச எதுவும் இல்லை. வீடு கட்டு உன் பொண்டாட்டி கூட சேர்ந்து சரியா?"

அன்பு: " அக்கா நீயுமா இப்படி பேசற?"

கலை: " டேய் உண்மையா சொல்லு அந்த பொண்ணு பிடிக்கலையா? அப்படி என்ன குறை அவ மேல"

அன்பு: " பொண்ணுக்கிட்ட எந்த குறையும் இல்லை, எனக்கு தான் அந்த பொண்ணு அதிகம்"

கலை: " எனக்கு வைஷுவை ரெண்டு வருஷமா தெரியும், அவ ரொம்ப நல்ல பொண்ணு டா, உனக்கு சரியான துணையா இருப்பா, எதையும் யோசிக்காதே சம்மதம் சொல்லு"

அன்பு: " அக்கா… "

கலை: " அன்பு பிளீஸ், தேவை இல்லாம மனசை போட்டு குழம்பாதே"

அன்பு: " சரிக்கா"

அன்பு அவன் நண்பர்களுக்கு அவன் நிச்சய செய்தியை கூறினான்.

அவனின் கல்லூரி தோழர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து, அவனை வம்பு செய்தனர். பெண்ணின் நிழல் படம் கேக்க, அன்பு முதல் முறை அவளின் முகத்தை நினைவுப்படுத்தினான். கலையிடம் விபரம் சொல்லி, அவளின் நிழல் படம் கேட்டான்.

கலை: " அச்சோ அவ ஃபோட்டோ இல்லையே டா"

அன்பு: " என் ஃபோட்டோ அவங்களுக்கு அனுப்பி விட்டீங்க தானே? அப்போ பொண்ணு ஃபோட்டோ அனுப்பி இருப்பாங்க தானே?"

கலை: " டேய் ஃபோட்டோ அனுப்பி வெச்சது வைஷு சித்தப்பாக்கு, நம்ம வீட்டில் எல்லாரும் தான் வைஷுவை முன்னாடியே பார்த்து இருக்கோமே அதான் ஃபோட்டோ வாங்களை, இப்போ என்ன அவ ஃபோட்டோ வேணும் அவ்ளோ தானே அவ நம்பர் அனுப்புறேன் நீயே வாங்கிக்கோ"

அன்பு: " அக்கா விளையாடாத, நான் கேக்க மாட்டேன், வாங்கி குடு"

கலை: " நான் நம்பர் அனுப்புறேன் நீயே பேசு, ஃபோட்டோ வாங்கு, வாங்காத எல்லாம் உன் இஷ்டம், என்னை இம்சை பண்ணாதே"

கலை இணைப்பை துண்டித்து விட்டு, வைஷ்ணவி எண்ணை அனுப்பி வைத்தார். அன்பு அதை வைஷ்ணவி என சேமித்து கொண்டான். அவளிடம் புகைப்படம் கேக்க அவனுக்கு விருப்பம் இல்லை, ஆனால் அவள் புகைப்படம் வேண்டுமே? என்ன செய்ய என யோசித்து அவளின் வாட்ஸ்அப் சென்றான். ஆனால் அவளோ பூனை குட்டி படத்தை dp ஆக வைத்து இருந்தாள்.

மூன்று நாட்கள் முடிந்தும் அவன் புகைப்படம் அனுப்பவில்லை என்று நண்பர்கள் பேச, அவளின் எண்ணுக்கு ஹை என்று அனுப்பி வைத்தான். அவளிடம் இருந்து எந்த விதமான பதிலும் இல்லை. ஒருநாள் முழுக்க காத்து இருந்து சலித்து போய் வேலை விட்டு, வீடு வந்து சாப்பிட்டு தூங்கி இருந்தான். இரவு 8.30 மணிக்கு சொல்லுங்க என்று ரிப்ளை வந்தது.

அன்பு: " ஹை வைஷ்ணவி ?"

வைஷு: " ஆமாம், சொல்லுங்க. யார் நீங்க?"

வைஷ்ணவி வேண்டும் என்றே விளையாடினாள்.

அன்பு: " நான் அன்பு"

வைஷு: " சரிங்க, அன்பு. உங்களுக்கு என்னை தெரியுமா? எனக்கு யாரையும் தெரியாதே"

அன்பு: " நான் அன்புங்க, உங்களுக்கு பார்த்த பையன்"

வைஷு: " எனக்கு பார்த்த பையனா? என்னங்க சொல்றீங்க?"

அன்பு: " ஹலோ நீங்க வைஷ்ணவி தானே?"

வைஷு: " ஆமா, நான் வைஷ்ணவி தான், நீங்க என் வருங்கால வீட்டுக்கார், சரியா? "

அன்பு: " தெரிஞ்சே என்கிட்ட விளையாடுரீங்களா?"

வைஷு: " சாரி, சும்மா நீங்க பேசவே மாட்டீங்க சொன்னாங்க அதான் பேச வைக்க அப்படி சொன்னேன்"

அன்பு: " சரிங்க, கேக்கறேன் தப்பா நினைக்க வேண்டாம், எனக்கு உங்க ஃபோட்டோ வேணும், ப்ரெண்ட்ஸ் எல்லாரும் உங்களை பார்க்கணும் சொல்றாங்க"

வைஷு : " சரிங்க அனுப்பி விடுறேன்"

அன்பு: " நன்றிங்க"

வைஷு வேண்டும் என்றே அவள் அம்மாவின் ஃபோட்டோ அனுப்பி வைத்தாள்.

அன்பு : " என்னங்க நான் உங்க ஃபோட்டோ கேட்டேன்"

வைஷு: " அச்சச்சோ அது நான் தாங்க"

அன்பு: " உங்க ஃபோட்டோ ஒன்னு கேட்டது தப்பா? இப்படி பண்றீங்க?"

வைஷு: " உங்களுக்கு என்னை அடையாளம் தெரியுதா இல்லையான்னு பார்த்தேன். "

அன்பு: " பிளீஸ் உங்க விளையாட்டை விட்டு ஃபோட்டோ அனுப்புங்க"

வைஷு ஃபோட்டோ அனுப்பி வைத்தாள்.

அன்பு: " நன்றிங்க"

வைஷு: " மனசில் எதும் வைக்கதீங்க சும்மா விளையாடினேன், இனி செய்ய மாட்டேன் சாரி"

பதில் எதுவும் வரவில்லை.

வைஷு அலைபேசியை கீழே வைக்க கலை அழைத்தார்.

கலை: " என்ன மேடம், என் தம்பி கூட பேசினியா?"

வைஷு: “போங்க அண்ணி அவர் எங்க பேசினாரு? ஃபோட்டோ அனுப்புங்க, ஃபோட்டோ அனுப்புங்க கிளி பிள்ளை மாதிரி சொன்னதே சொல்லிட்டு”

கலை: " அட ஒரே நாளில் ரொமான்ஸ் பண்ண முடியுமா?"

வைஷு: “ச்சீ, அண்ணி. ரொமான்ஸ் கேக்கலை, எப்படி இருக்க நலம் கூட விசாரிக்காம பேசுறார். பேசவே இல்லை அவர், என்ன பண்ற, என்னை பிடிச்சு இருக்கா இப்படி எதும் கேக்கல”

கலை: " நான் சொன்னேன்ல அவன் ரொம்ப பேசமாட்டான்"

வைஷு: " சரி அண்ணி நான் தூங்க போறேன், குட் நைட்"

வைஷுவின் புகைப்படம் பார்த்து அன்பின் நண்பர்கள் அவனை கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். அவன் நண்பனின் ஒருவன் அவர்களை பக்கம் பக்கமா நிறுத்தி ஜோடி பொருத்தம் பார்த்து இருந்தான். அன்பு அந்த படத்தை சேமித்து கொண்டான். வைஷுவின் சிரிப்பு அவனை கொஞ்சம் அசைத்து பார்த்தது.

:purple_heart:

5 . அவள் வந்துவிட்டாள்

அன்பு அவள் தோழிக்கு வைஷ்ணவி ஃபோட்டோ அனுப்பி வைத்தான்.

ஜீவி: " உனக்கு பார்த்த பொண்ணா?"

அன்பு: " ஆமா"

ஜீவி: " அழகான பொண்ணு டா"

அன்பு: " ம் ஆமா"

ஜீவி: " உனக்கு பிடிச்சு இருக்கு தானே? அப்புறம் என்ன வெறும் ம் மட்டும் சொல்ற?"

அன்பு: " பொண்ணு நல்ல பொண்ணு தான், அழகா இருக்கா, வீட்டில் எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு, சம்மதம் சொல்லிட்டேன்."

ஜீவி: " அப்போ உனக்கு பிடிக்கலையா?"

அன்பு: " எனக்கே தெரியல, வைஷ்ணவி பார்க்கும் போது இவளோட வாழ்க்கை மாறும்னு தோணுது. ஆனா சுமியை என்னால மறக்க முடியுல, உனக்கு தெரியும் தானே என் காதலை பத்தி? நான் எப்படி சுமியை மறப்பேன் தெரியல, இதில இவளை கல்யாணம் வேற பண்ணி இவ வாழ்க்கையும் நான் நாசம் பண்ணிருவேன்னு பயமா இருக்கு"

ஜீவி: " டேய், டேய் என்னடா பேசிட்டு இருக்க? அவ உன்னை விட்டு போய்ட்டா அதும் உன்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போனவளை போய் மறக்க முடியலன்னு சொல்லிட்டு இருக்க டா நீ"

அன்பு: " ஜீவி நான் சொல்றத கேளு, சுமி ஒரு பக்கம், கடன், கடமைன்னு ஒரு பக்கம், ஒரு ஆர்டர் கிடைக்க நாய் மாதிரி அலையுறேன் தெரியுமா? மாசம் மாசம் ஓட்டுறதே பெரும்பாடு இதில் கல்யாணம் ஒரு குறையா மா எனக்கு?"

ஜீவி : " சரி டா நீ சொல்றது சரி தான் அப்போ கல்யாணம் வேண்டாம் சொல்லலாம் தானே?"

அன்பு: " எல்லாம் சொல்லிட்டேன், யாரும் கேக்கற மாதிரி இல்ல, நிச்சயம் இன்னும் பதினஞ்சு நாளில்"

ஜீவி: " அப்போ விடு, இந்த கல்யாணம் எல்லாத்தையும் சரி செய்யும் கவலைப்படாத"

அன்பு: " சரி பார்ப்போம், தூங்கு"

ஜீவி: " குட் நைட்"

அன்பின் சேமிப்பு பணம் பிரித்து வைக்கப்பட்டு கல்யாண கணக்கு எழுதி செலவு செய்யப்பட்டது. அவனுக்கு இப்போது இந்த கல்யாணம் ஒரு சுமையாக தெரிந்தது.

நிச்சயம் பெரிய அளவில் வேண்டாம் என்று கூறிவிட்டான். அதனால் சொந்தத்தையும் அக்கம் பக்கம் உள்ளவர்களையும் மட்டும் அழைத்து இருந்தனர். நிச்சயதார்த்தம் பற்றி அவள் விரும்பியது ஒன்று, ஆனால் நடந்தது ஒன்று. ஒரே பெண் என அவளுக்கு செய்திட அவள் பெற்றோர்க்கு ஆசை தான். ஆனால் அன்பின் நிலை இங்கு வேறு.

மண்டபத்தில் நிச்சயம் செய்ய அவளுக்கு விருப்பம், அன்போ கோவிலில் நிச்சயம் சாப்பாடு மட்டும் ஹோட்டலில் என்று கூறி விட்டான். பின் வைஷ்ணவி வீட்டில் பேசி மண்டப செலவு அவர்களது என்று கூறி ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால் நிச்சயம் கோவிலில் என்று கூறி விட்டான். சரி என்று ஏற்றுக் கொண்டனர்.

நிச்சயம் புது துணி, மோதிரம், சாப்பாடு, நண்பர்களுக்கு டிரீட், வாகன வசதி என்று அவனே அலைந்து அனைத்து வேலையும் செய்ய வேண்டி இருந்தது. விடிந்தால் நிச்சயம் வீடே விழா கோலம் பூண்டது. அவனின் நண்பர்கள் மாடியில் பேசி சிரித்து கொண்டு இருக்க, அவன் கல்லூரி நண்பன் விசுவின் மடியில் தலை சாய்த்து படுத்து இருந்தான் அன்பு. அவனுக்கு எந்த கனவும் இல்லை, சாப்பிட்டு உறங்கி விட்டான்.

வைஷ்ணவி வீட்டில் நிலையே வேறு, உறவுகள் கூடி இருக்க, அன்பை பற்றி பேசி பேசியே வாய் ஓய்ந்து போய் இருந்தனர். அவளின் தோழிகளும் சேர்ந்து கொண்டு அன்புடன் பேச வேண்டும் கால் செய் என அவளை இம்சை செய்ய, வைஷு அன்பிற்கு அழைத்தாள்.

முதல் முறை அழைத்த போது நண்பர்களின் பேச்சு ஒலியில் அழைப்பு மணி கேக்கவில்லை. இரண்டாம் முறை கேட்டது விசுவிற்க்கு, அவன் பெயர் பார்த்து அவனை எழுப்பி கையில் அலைபேசியை கொடுத்தான்.

அன்பு: " ஹலோ"

வைஷு: " நான் வைஷு பேசறேன், என் பிரெண்ட்ஸ் உங்க கூட பேசணும் சொன்னாங்க, அதான் கூப்பிட்டேன்."

அன்பு: " நாளைக்கு காலை பார்க்க தானே போறோம்? அப்போ பேசிக்கலாம், இப்போ வெக்கறங்க, நான் தூங்கனும்"

அன்பு அவளின் பதில் கூட கேட்காது இணைப்பை துண்டித்தான். வைஷு முதல் முறை அவனிடம் எதோ ஒதுக்கம் உணர்ந்தாள். அவன் உறக்கத்தில் இருப்பதாக கூறி, சமாளித்து அவளும் உறங்க சென்று விட்டாள்.

காலை, கோவையில் உள்ள அகிலாண்டேஸ்வரி கோயில் கல்யாண மண்டபத்தில் வந்து இறங்கினர் பெண் வீட்டார், அதான் பின்னே வந்தனர் அன்பின் வீட்டார் சாமி தரிசனம் முடித்து, சாப்பிட்டு, நிச்சய உடை மாற்றி இருவரையும் ஒன்றாக அமர வைத்தனர். அன்பு முகத்தில் உணர்ச்சிகள் இல்லை. வைஷு முகத்தில் வெக்கம். அவன் அருகாமை தந்த வெக்கத்தில் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.

நிச்சய ஓலை வாசிக்கப்பட்டு, இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர். அன்பு மோதிரம் இடும் போது அவன் கை நடுங்கியது. வைஷு வெக்கத்தில் அவன் கை பற்றி மோதிரம் இட்டு மீண்டும் தலை குனிந்து கொண்டாள். அவளின் தோழிகள் அவளை கிண்டல் செய்ய, கேக் வெட்டிக் கொண்டாடி, இருவரும் நண்பர்களை அறிமுகம் செய்து வைக்க என்று அங்கு இன்பமாய் நேரம் கழிந்தது. காலையில் இரு வீடாய் வந்து கிளம்பும் போது ஒரு வீடு ஆகி இருந்தனர். அங்கு எதிலும் ஒட்டாத ஒருவனாக இருந்தான் அன்பு.

வீடு வந்ததும் தலை வழி என்று கூறி அவன் அறை சென்று விட்டான். குழப்பம் அவனை இன்னும் குழப்பியது. குழம்பி உறங்கி போய் இருந்தவனை அவனின் அலைபேசி அழைத்தது. விசு காலிங் என்று வர, இணைப்பை இணைத்தான்.

அன்பு: " ஹலோ சொல்லுடா, நான் ரூம்ல இருக்கேன், எங்க இருக்க நீ?"

விசு: " நான் கிளம்பிட்டேன் டா பிளீஸ் கோவப்படாத, ரெண்டு நாள் தான் டா லீவ் கிடைச்சது, அதான் இப்போ கிளம்பின தான் சரியா இருக்கும், சொல்ல தான் டா கால் பண்ணேன்"

அன்பு: " சரி டா, நீ இவளோ தூரம் வந்ததே பெருசு"

விசு: " அன்பு உன்கிட்ட ஒன்னு சொல்றேன் தப்பா நினைக்காதே, போனவள நினைச்சு, வர பொண்ணை கஷ்டப்படுத்தாத, அந்த பொண்ணு பாவம். உன்னையே பாக்குது, நீ எப்போ பார்ப்பேன்னு, நிச்சயம் உனக்கு தான் டா நடந்துச்சு ஆனா நீ ஒதுங்கி ஒதுங்கி போற? இனி இது தான் உன் லைஃப் பார்த்துக்கோ"

அன்பு: " சாரி டா, நான் குழம்பி போய் இருக்கேன் அதான்"

விசு: " புரியுது, ரொம்ப நாள் இப்படி இருக்காதே, கல்யாணத்துக்கு வரும் போது நீ மாறி இருக்கணும் சரியா?"

அன்பு: " கல்யாணத்துக்கு சீக்கிரம் வந்துரு டா, அப்புறம் இப்படி அடுத்த நாளே ஓட கூடாது சரியா?"

விசு: " சரி டா நேரம் ஆச்சு, பெங்களூர் போய்ட்டு கால் பண்றேன்"

அன்பு: " சரி டா, டேக் கேர்"

இணைப்பை துண்டித்து விட்டு அலைபேசியில் அவனுக்கு வந்த வாழ்த்துக்களை பார்த்து கொண்டு இருந்தான். ஜீவியின் வாழ்த்து பார்த்து சிரித்துவிட்டு அவளுக்கு அழைப்பு கொடுத்தான்.

இங்கே வைஷு அவளின் அறையில் அழுது தீர்த்தாள்.

பாவம் அவளுக்கு தெரியாது இது தான் அவள் அழுகையின் ஆரம்பம் என்றும், கண்ணீர் அறியாத அவள் கண்கள் கண்ணீரை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும். - மீ

:purple_heart:

6. அவள் வந்துவிட்டாள்

வைஷு அழுது கொண்டு இருந்த போது அறையின் உள்ளே வந்தார்கள் கலையும் லக்ஷ்மியும்.

வைஷு அவசரமாய் கண் துடைத்து நிமிர, இருவரும் கலவரமாய் அவளை பார்த்தனர்.

லக்ஷ்மி: " எதுக்கு இப்போ அழுகுற வைஷு?"

கலை: " நிச்சயம் முடிஞ்சு இன்னும் சரியா ஒரு நாள் கூட ஆகள, இப்படி அழுது இருக்க ஏன்?"

லக்ஷ்மி: " என்னடி ஆச்சு சொல்லேன், பயமா இருக்கு"

வைஷு: " இன்னிக்கி அவர் என்கூட சரியா பேசவே இல்லை, என்னை அவருக்கு பிடிக்கலையா? நேத்து நைட்டு பட்டுன்னு போன் வெச்சுட்டார்."

கலை சிரிக்க, லக்ஷ்மி நிம்மதி ஆனார்.

லக்ஷ்மி: " அதான் இனி வாழ்க்கை முழுக்க பேச தானே போற? மாப்பிள்ளை கூச்சப்பட்டு பேசி இருக்க மாட்டார். ஃபோன் பண்ணி பேசு இனி உனக்கு முழு உரிமை இருக்கு, அழுததும் நான் பயந்து போனேன்.

கலை: " வைஷு இந்தா உன் பட்டு சேலை, இதை குடுக்க தான் வந்தேன். ஆனா, நான் வந்தது சரியான நேரம் தான்."

“அத்தை நீங்க அனுமதி குடுங்க நான் வைஷு கூட கொஞ்சம் தனியா பேசணும்.”

லக்ஷ்மி: " பேசுங்க டா, நான் காபி எடுத்துட்டு வரேன்"

கலை: " என்ன வைஷு இது தேவை இல்லாம எதேதோ யோசனை பண்ணிட்டு இருக்க? நான் வரலைன்னா தேவை இல்லாதது எல்லாம் யோசிச்சு என் தம்பியை வில்லன் ஆக்கி இருப்ப இல்லையா?"

வைஷு: " இல்ல அண்ணி அவருக்கு என்னை பிடிச்சு இருக்கா? எதுலையும் அவர் ஒட்டின மாதிரி தெரியல, விருப்பம் இல்லாம இருக்கற மாதிரி நடந்துக்கிட்டார். எனக்கு இருந்த சந்தோசம் அவர் முகத்தில் இல்லை, ஊருக்காக வெளிய சிரிச்ச மாதிரி இருக்கார்."

கலை: " வைஷு நீ சொல்றது சரி தான் அவனுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை"

வைஷு: " அண்ணி?"

கலை: " நான் சொல்றத முழுசா கேளு டா கொஞ்சம், அவனை பத்தி உனக்கு தெரியல அதான், கொஞ்சம் குட்டி ஃப்ளாஷ்பேக் தான் பொறுமையா கேளு சரியா?"

வைஷு: " சொல்லுங்க அண்ணி"

கலை: " அன்பு எங்க வீட்டில் ரொம்ப வித்தியாசமான பையன், ரொம்ப பொறுப்பு, அநியாயத்துக்கு நல்லவன். நல்லா வரைவான், அவனுக்கு பேஸ்ட் ப்ரெண்ட் அமிர்தாவும், விசுவும் தான். நல்லா பேசுவான் அவனுக்கு பிடிச்சு இருந்தா மட்டும். எங்க சொந்த ஊரு கும்பகோணம். நான் பிறக்கறதுக்கு முன்னாடியே அப்பாவும் அம்மாவும் கோயம்புத்தூர் வந்துட்டாங்க.

நாங்க பிறந்து, வளர்ந்தது எல்லாம் கோவை தான். காசு இல்லைன்னு எங்க சொந்தம் எல்லாம் எங்களை பெருசா மதிக்க மாட்டாங்க. அதுனால அங்க நாங்க பெருசா போனதும் இல்லை, எங்களுக்கு சொந்தம் கூட பெருசா ஒட்டுதலும் இல்லை.

அப்பா டெய்லர் எவ்ளோ சம்பாதிக்க முடியும் சொல்லு? மிடில் கிளாஸ் வாழ்க்கை தான். எங்க வீட்டுக்கு எதிர் வீடு தான் அமிர்தா, அவங்க குடும்பமும் எங்க குடும்பமும் நல்ல நட்பு, ஆரம்பத்தில் அமிர்தா கூட அவ படிச்ச ஸ்கூல் தான் நாங்களும், அப்புறம் வீட்டில் உள்ள பண கஷ்டம் நாங்க கவர்மென்ட் ஸ்கூல் போனோம். அமிர்தா- அன்பு ரெண்டு பெரும் நல்ல ப்ரெண்ட்ஸ். இப்போ அவ கல்யாணம் ஆகி அமெரிக்கால இருக்கா, அமிர்தா அப்பா ரொம்ப நல்லவர், அவர் சொல்லி தான் அன்பு சிவில் படிச்சான்.

நாங்க காலேஜ் போகனும் இல்லையா? அதுக்கு எங்க அப்பா ஊரில் இருந்த வீட்டை விற்று, புது தொழில் சொல்லி லாரி எல்லாம் வாங்கி விட்டார். எங்களுக்கு படிப்பு, தெரிஞ்ச சிலருக்கு வட்டி இல்லாம உதவி பணம் எல்லாம் குடுத்தார்.

அப்போ தான் அப்பாக்கு சரியான நஷ்டம். அன்பு காலேஜ் முடிக்கவும் அவன் தோளில் வீடோட எல்லா சுமையும் ஏறுச்சு, படிச்சு முடிச்சதும் வேலை, நானும் வேலைக்கு போனேன் தான். ஆனா ஆம்பளையா அவனுக்கு தான் பொறுப்பு அதிகம் இருக்கும் இல்லையா? ரெண்டு வருடத்தில் நிறையா செஞ்சு இருக்கான். அப்புறம் எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆச்சு, நிச்சயம் நடக்கும் போது எங்க கூட இல்லை அவன். துபாயில் வீடியோ காலில் தான் எங்க நிச்சயம் பார்த்தான்.

கல்யாணத்துக்கு பதினஞ்சு நாள் தான் லீவ் அவனுக்கு, ஓடி ஓடி என் கல்யாண வேலை செஞ்சு இருக்கான். அவனுக்கு வீடு, குடும்பம் தான் எல்லாம். வீடு கட்டிட்டு தான் கல்யாணம் இருந்தான், நாங்க தான் வயசு போகுதுன்னு பொண்ணு பார்த்து பேசினோம். அவனுக்கு அவன் கடமையும், சுமையும் தான் கண் முன்னாடி இருக்கு, வீடு கட்டிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணலாம் ரொம்ப கேட்டான், அம்மா முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

இந்த கல்யாண செலவு எல்லாம் அவன் சேமிப்பு, வீடு கட்ட அவன் சேர்த்த காசு. அவனுக்கு கடமை கண் மறைக்குது, அதான் அவன் அதே டென்ஷன்ல இருக்கான். மண்டபம் வேண்டாம் சொன்னதும் அதுக்கு தான். உன் ஆசை உன் அப்பா சொன்னதும் சரின்னு சொல்லிட்டான். அவன் தான் பாதி காசும் குடுத்தான்.

இந்த வயசுக்கு இருக்க வேண்டிய எந்த உணர்ச்சியும் இல்லாம இருக்கான். சொந்தம் எல்லாம் காசு இல்லைன்னு ஒதுக்கி வெச்ச வலி, எப்படியாவது வளரனும் வெறி. எல்லாரும் அப்பா, அம்மாவை மரியாதையா பார்க்கணும் ஆசை. அதான் இப்படி இருக்கான்.

அவனை புரிஞ்சுக்க வைஷு, வாழ்க்கையில் பெரிய சந்தோசம் எதும் அவன் பார்க்கவே இல்லை, நிறைய வலியும், அவமானமும் தான் அவனுக்கு, நீ தான் அவனை நல்லா பார்த்துக்கணும். உன் பொறுப்பான குணம் தெரிஞ்சு தான் அவனுக்கு உன்னை பேசி முடிச்சேன்.

என் தம்பி மேல தான் தப்புன்னா மன்னிச்சிடு வைஷ்ணவி.

வைஷு: " சரி அண்ணி புரியுது, ஆனா எப்பவும் இப்படி தான் இறுக்கமா இருப்பார?"

கலை: " அட வாயாடி நீ தான் அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வரணும்"

வைஷு: " இது வேறயா?"

கலை: " ரொம்ப நல்லவன் அவன். என் தம்பி மாதிரி பையன் இந்த தமிழ்நாடு முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டான்."

வைஷு: " இந்த ரோபோ அன்பை கல்யாணம் பண்ணிட்டு நான் என்ன பாடு படப்போரனோ தெரியல"

கலை: " அடி வாலு, என் தம்பி ரோபோ வா?"

வைஷு: கண்டிப்பா ரோபோ தான், எங்க நிச்சயதார்த்த ஆல்பம் வரும் அப்போ பாருங்க தெரியும்"

கலையும் வைஷ்ணவியும் சிரிக்க அங்கு நிலை கொஞ்சம் மாறியது.

கல்யாண வேலைகள் ஆரம்பம் ஆனது. அனைவரும் மகிழ்ச்சியோடு திருமண வேலைகளை செய்தனர். அன்பு பண வசதி புரிந்து, சண்முகம் அவன் விருப்பப்படி எல்லாவற்றையும் ஏற்று கொண்டார். அன்பு எது தேர்வு செய்தாலும் அவன் விருப்பம் போல விட்டு விட வேண்டும் என்பது செல்ல மகள் வைஷ்ணவி கட்டளை. அன்புவிற்கும் இதில் மகிழ்ச்சி தான். அவன் முறை செய்ய வேண்டிய அனைத்தும் அவன் விருப்பம் போல் அமைந்தது. அவன் ரசிகன் தான். சில விஷயங்களில் அவனும் தாராளமாக செலவு செய்து இருந்தான். அதுவும் வைஷ்ணவியின் முகூர்த்த பட்டு அவன் விருப்பம் போல என்று கூறி விட அவளுக்கு முதல் முதலில் அவன் எடுக்கும் உடை என்பதால் தாராளமாக செய்து இருந்தான். நிறம் கூட அவளுக்கு ஏக பொருத்தமாக இருந்தது. அவளுக்கும் மிக பிடித்து இருந்தது. அதை அவளும் கவனித்தாள். அவன் பொறுப்பும், பொறுமையும், குணமும் கண்டு அவன் மேல் அவளுக்கு காதல் பெருகியது. அவனுக்கோ இனி தன் வாழ்வு அவளோடு தான் என்ற அவன் மனம் ஏற்று கொள்ள முயற்சி செய்தது. முயற்சி மட்டுமே செய்தது பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

இரண்டு மாதம் வேகமாக ஓடியது. அனைவருக்கும் அழைப்பு வைத்து முடித்து இருந்தனர். இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். அன்பு - வைஷு இருவரும் வாட்ஸ்அப் மூலம் பேச தொடங்கி இருந்தனர். வெறும் காலை வணக்கமும், இரவு வணக்கம் சொல்லி கொண்டனர். வைஷுவிற்க்கு அவன் இறங்கி இறுக்கம் குறைத்து பேசுவதே மகிழ்ச்சியாக இருந்தது.

கல்யாணத்தின் முந்திய நாள் அன்பு வீட்டில்,

:purple_heart:

7. அவள் வந்துவிட்டாள்

கல்யாணத்திற்கு முன் தினம் அன்பு வீட்டில் பெண் அழைப்புக்கு கிளம்பி கொண்டு இருக்க, அங்கு வந்து சேர்ந்தாள் ஜீவிதா. ஜீவி வீட்டின் முன் இறங்க அவளை பார்த்ததும் கலை அடையாளம் தெரிந்து கொண்டு அருகில் வந்தார்.

கலை: " வா ஜீவி, உன் அவர் எங்கே வரலியா?"

ஜீவி: " நீங்க கலை அக்கா தானே? நல்லா இருக்கீங்களா? அவர் வரலை அக்கா."

கலை: " அதான் ஏன்?"

ஜீவி: " அக்கவுண்ட்ஸ் மேனேஜர் கல்யாணம் பண்ணிக்க கூடாது அக்கா, எப்போ பாரு வேலை வேலைன்னு சொல்லிகிட்டு, அவரை விடுங்க அக்கா, அன்பு எங்கே?

கலை: " மாப்பிள்ளை அழைப்பு இன்னும் கொஞ்ச நேரத்தில் அதான் தயார் ஆகிட்டு இருக்கான்."

ஜீவி: " நான் அன்பை பார்க்கனுமே"

கலை: " நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா டா, அவன் ரெடி ஆனதும் பார்ப்போம்"

பின் கலை வீட்டில் உள்ள அனைவருக்கும் ஜீவியை அறிமுக செய்ய, ஜீவியும் கலையும் வேலையில் ஒன்றாக பேசி சிரித்து சேர்ந்து கொண்டனர்.

அன்பு கிளம்பி தயாராக இருந்தான். பெண் வீட்டில் இருந்து வந்து மரியாதை செய்து அன்புவை அழைத்து சென்றனர்.

பெண் வீட்டிற்க்கு அன்பின் வீட்டில் இருந்து சொந்தம் எல்லாம் கிளம்பி வைஷுவை அழைத்து வர அவள் இல்லம் சென்றனர். வைஷு அழுதாள். பெண் அழைப்பு அன்றே பெண்ணை புகுந்த வீடு அனுப்பி வைத்து விடுவர் இவர்கள் முறையில் அதனால் அவளால் பிரிவை தாங்க முடியவில்லை. வீட்டின் ஒரே பெண். அவள் இல்லாது இனி வீடு கலை இழந்து போகுமே என அவளின் அம்மாவும் அழுக, அங்கே எவராலும் பேச முடியவில்லை. பின் நல்ல நேரம் போகும் முன் கிளம்ப வேண்டும் என்று அழைத்து சென்றனர்.

இரு வீட்டாரும் மண்டபம் வந்து சேர்ந்து இருந்தனர். அடுத்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயார் ஆக வேண்டும் என்று கூறி சென்றனர். ஜீவி அன்புவை பார்த்து பேசிவிட்டு அவன் நண்பர்களோடு அறிமுகம் செய்து விட்டு பெண்ணை பார்க்க வேண்டும் என்று கேட்க, அன்பு கலையிடம் கூறி ஜீவியை வைஷுவின் அறைக்கு அழைத்து செல்லுமாறு கூறினான். கலையும் அழைத்து சென்றாள்.

கலை: " வைஷு"

வைஷு: " வாங்க அண்ணி"

ஜீவி: " அப்போ நான் வர வேண்டாமா?"

வைஷு: " அச்சோ வாங்க அக்கா"

கலை: " வாயாடி உனக்கு சரியான ஜோடி இந்த வெச்சுக்க"

வைஷு: " யார் இவங்க?"

ஜீவி: " இந்த அவமானம் உனக்கு தேவையா ஜீவி?"

கலை: " அன்போட ப்ரெண்ட் ஜீவிதா"

வைஷு: " அச்சோ சாரி எனக்கு சத்தியமா நீங்க யாருன்னு தெரியாது"

ஜீவி: " அன்பு சொல்லவே இல்லையா?"

வைஷு: " அட போங்க ஜீவிதா"

ஜீவி: " கலை அக்கா நான் போய்ட்டு வரேன்."

கலை: " போதும் முடியல ரெண்டு பேரும் பேசுங்க, நான் வரேன்."

வைஷு: " அவர் என்கூட பேசவே மாட்டாரு, அப்புறம் எங்க உங்களை எல்லாம் சொல்றது?"

ஜீவி: " அவன் நல்லா பேசுவனே? டாபிக் இல்லாம ரெண்டு மணி நேரம் பேசுவோம், அவன் பேசலையா?

வைஷு: " என்கூட பேசலையே"

ஜீவி: " அதெல்லாம் பேசுவான் நீ போதும் சொல்ற வரை, உன் காதில் இரத்தம் வர வரை பேசுவான், அப்போ போன் பண்ணி அழ கூடாது சொல்லிட்டேன்"

வைஷு: " அப்போ என்கிட்ட மட்டும் தான் பிரச்சனை போல"

ஜீவி: " ஆரம்ப கோளாறு போல"

இருவரும் அன்பை பற்றி பேசி, கிண்டல் செய்து கொண்டனர்.

வைஷு: " என் பிரெண்ட்ஸ் யாரும் வரலை நாளைக்கு கல்யாணத்துக்கு தான் வருவாங்க போல, நீங்க என் கூட இருங்க ஜீவிக்கா"

ஜீவி: " ஓஹ இருக்கலாமே, சரி என் பேக் எடுத்துட்டு வரேன் வெயிட்"

ஜீவி வைஷு அறைக்கு வந்து விட, வைஷுவின் சித்தி, ஜீவி, அம்மா அனைவரும் வரவேற்புக்கு கிளம்பினர். வைஷு பிங்க் நிற டிசைனர் புடவையில், மிதமான ஒப்பனையோடு, அவன் கூந்தல் காற்றில் ஆட, பார்க்க தேவதை போல் அழகாக இருந்தாள்.

அன்பு பிங்க் நிற சட்டையும், மேல நீல நிற கோட் சூட் அணிந்து மேடைக்கு வந்தான். வைஷு பின்னே வந்து அவன் அருகில் நிற்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்து கொண்டனர். போட்டோகிராபர் அழைக்க கண் விலகி இருவரும் போட்டோவுக்கு சில போஸ் குடுத்தனர். பின் வாழ்த்துக்களும், பரிசுகளும் அவர்களை பேச என்ன? பார்க்க கூட விடவில்லை. வைஷு அறிமுகம் செய்த அனைவரையும் அன்புவும், அன்பு அறிமுகம் செய்த அனைவரையும் வைஷுவும் அவர்களின் மெமரியில் சேமித்து கொண்டதோடு சரி. ஒரு வழியாய் ஆட்டம் பாட்டு என்று அங்கு வரவேற்பு கலை கட்டியது. இரவு உணவோடு வரவேற்பு முடிந்தது. அவரவர் அறை வந்து இருவரும் ஓய்வு எடுக்க வந்தனர்.

வைஷு வரவும் உடன் ஜீவி வந்தாள், கைகளில் ஃபோனோடு, அவளும் அவன் கணவனும் தான் பேசிக் கொண்டு இருக்கின்றனர் என வைஷு அறிந்து கொண்டாள். அவள் ஃப்ரெஷ் ஆகி, உடை மாற்றி, அவள் அம்மா கொடுத்து அனுப்பிய பாலை குடித்து கொண்டே அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாள். ஜீவி முகம் முழுக்க சிரிப்புடன் பேசுவதை பார்த்து, வைஷு சிரிக்கவும், ஜீவி போனை அணைக்கவும் சரியாக இருந்தது.

வைஷு: " என்ன ஜீவி அக்கா, ஒரே ரொமான்ஸ் தான் போல"

ஜீவி: " ரொமான்ஸ் அதுக்கு ரொம்ப பஞ்சம் அங்க, அவரை விட்டு வந்து வாரம் ஆகுது அதான் விசாரணை."

வைஷு: " நீங்க பேசுனதை பார்த்தா விசாரணை மாதிரி இல்லயே, சாய்ந்தரம் கூட உங்க முகம் இவளோ அழகா இல்லை இப்போ சும்மா மின்னுது."

ஜீவி: " நாளைக்கு தாலி வாங்குன அப்புறம் உனக்கும் தெரியும்"

வைஷு: " அக்கா, நீங்க காதல் கல்யாணம். எனக்கு ஏற்பாட்டு கல்யாணம், ரெண்டுகும் வித்தியாசம் இருக்கும் இல்லையா? உங்க அளவுக்கு காதல் இருக்காது தானே?"

ஜீவி: " யார் சொன்னா? இங்க பாரு வைஷு, நான் மட்டும் அவரை காதலிக்கும் முன்னாடி பார்த்து இருந்தேனா? எனக்கும் அவர் புது முகம் தான், அப்போ எதோ ஒன்னு ஈர்த்து, அவரையும் என்னை பேச வெச்சுது. அப்புறம் நட்பு, அப்புறம் தான் காதல்."

“உங்களுக்கு இப்போ அறிமுகம் முடிஞ்சுது, இனி நீங்க இணைய போற வாழ்க்கையில் நட்பு முக்கியம். நட்பு இல்லாத எந்த உறவும் நிலைக்காது. நட்பையும் நண்பனையும் வெறுக்க முடியாது”

"அதுக்கு அப்புறம் தான் காதல், நட்பையும் தாண்டி வர பாசம். ஆண் பெண் தாண்டி வர அன்பு. "

“பொண்ணு பார்த்து முடிச்சதும் உங்களுக்கு வர நம்பிக்கை தான் எங்களுக்கும், அதே நட்பும் காதலும் தான் எல்லா திருமண வாழ்க்கைக்கும்
அஸ்திவாரம்.”

" நாங்க பாஸ் வாங்காம காதல் செய்றோம் சோ, வாங்கினா தான் காதல் வெற்றி. நீங்க பாஸ் வாங்கிட்டு வந்து காதலிக்க ஆரம்பிக்குறீங்க அவ்ளோ தான் வித்தியாசம்."

வைஷு: " ம்ம், சரி தான் அக்கா நீங்க சொல்றது. சரி உங்க ப்ரெண்ட் பத்தி சொல்லுங்க"

ஜீவி: " ரொம்ப நல்ல பையன், ஆனா முன் கோவம் அதிகம், அவன் எல்லார்கிட்டயும் சரியா இருப்பான், அதே மாதிரி அவங்களும் இருக்கணும் சொல்வான். யாரையும் காயப்படுத்த தெரியாது. உதவின்னு சொல்லு கண்டிப்பா அவனால முடிஞ்சது எதுனாலும் செய்வான். அவன் பேசும் போது கவனமா கேக்கணும். அவன் சொல்லாம சில அடிப்படை விஷயங்கள் புரியனும் நினைப்பான். வேற என்ன?"

" நல்ல சமைப்பான், நல்ல வரைவான், எல்லாத்தையும் புரிஞ்சு நடந்துப்பான், அப்ப அப்போ கொஞ்சம் வாலு, நல்ல ப்ரெண்ட், எல்லாத்தையும் ரொம்ப ரொம்ப பொறுமை, டீ டொடல்லேர். டீ குடிப்பான் மா, இஞ்சி ஏலக்காய் போட்ட மசால் டீ ரொம்ப புடிக்கும்."

வைஷு: “இவளோ இருக்கா?”

ஜீவி: " இன்னும் இருக்கு இப்போ தூங்குவோம் துக்கம் கண்ணை கட்டுத்து, தூங்குவோம்."

வைஷு: " சரி அக்கா"

இருவரும் தூங்கி விட, ஜீவியின் அலைபேசி அழைக்க , அன்பு அழைத்து இருந்தான். ஜீவிடம் பேச வேண்டும் என்று கூற, அவளும் எழுந்து சென்றாள்.

அங்கே

:purple_heart:

8. அவள் வந்துவிட்டாள்

அங்கே விசு, கலை இருவரும் கோபமாய் அமர்ந்து இருக்க, ஜீவி உள்ளே சென்றாள்.

விசு: " வாங்க ஜீவி"

ஜீவி: " என்ன அக்கா ஆச்சு?, என்ன அன்பு பேசணும் சொல்லி கூப்பிட்ட? எதுவும் பிரச்சனையா?"

கலை: " சார்க்கு இந்தக் கல்யாணம் வேண்டாமாம், நீயும் விசுவும் பேசுங்க, என்கிட்ட சொல்ல முடியாத எதாவது இருந்தா உங்ககிட்ட சொல்லட்டும்."

ஜீவி: " அன்பு என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசிட்டு இருக்க?"

விசு: " இன்னும் மூணு மணி நேரத்தில் கல்யாண வேலை ஆரம்பம் நாலு மணி நேரம் தான் இருக்கு இவன் தாலி கட்ட, இப்போ போய் ஒலறிக்கிட்டு இருக்கான்"

ஜீவி: " அன்பு பேசணும் வர சொன்ன ஏன் அமைதியா இருக்க?"

அன்பு: " நான் எதோ தப்பு பண்ணிட்டு இருக்கேன், என் மனசு இந்த கல்யாணத்தை ஏத்துக்க மாட்டிங்குது"

விசு: " ஏன் டா?"

ஜீவி: " இங்க பாரு உன் கை காசு எல்லாம் போட்டு கல்யாணம் வர வந்த அப்புறம் புடிக்கல சொல்ற? சரி காசை விடு. அங்கு ஒருத்தி உன்னை புருஷனா நினைச்சு ரெண்டு மாசம் ஆகுது. நேத்து சாய்ந்தரம் முழுக்க உன் பக்கத்துல உன் பொண்டாட்டிய நின்னு இருக்கா அவளுக்கு என்ன பதில் சொல்றது? விளையாட்டு இல்ல இது வாழ்க்கை"

விசு: " ஜீவி சொல்றதை யோசி அறிவு இல்லாம பேசாத, எல்லாம் கல்யாணம் ஆனா சரியா போய்டும். வைஷ்ணவி ரொம்ப நல்ல பொண்ணு டா, இந்த மாதிரி பொண்ணு கிடைக்கல அவனவன் கஷ்டப்பட்டு இருக்கான், உனக்கு கிடைச்சு இருக்கு, அதை வேஸ்ட் பண்ணாதே"

ஜீவி: " நீ நேசிச்சது உண்மை தான், உன்னை விட்டு போய்ட்டா தானே? அப்புறம் ஏன் அவளையே யோசிச்சு உன் லைஃப் வீண் பண்ற?"

அன்பு: " எனக்கு எதோ பயமாவே இருக்கு ஜீவி, அந்த பொண்ணை பாரேன் பாவம், நிறையா கனவோட இருக்கா, அதை எல்லாம் நான் அழிச்சு அவளை கஷ்டப்புடுத்த போறேன் தோணுது, சுமி ஒரு பக்கம் என்னை கொல்றா, என்னால முடியல. கல்யாணம் ஆனதும் அவ கூட வாழ போறது நான் தான், நீங்க இல்ல."

ஜீவி: " உனக்கு அவ்ளோ தான் மரியாதை பயம் என்ன பயம்? உன்னை மீறி எதுவும் ஆகாது. நீ நல்லவன் டா, உனக்கு தப்பா எதுவும் நடக்காது, நடக்கவும் நாங்க விட மாட்டோம்."

" வைஷு வாய் ஓயாமா உன்னை பத்தி தான் கேட்டு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுற, உன்னை சுத்தியே அவ நினைப்பு இருக்கு, எல்லாம் மாறும் பாரு, எதையும் யோசிக்காத தூங்கு, இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு"

அன்பு: " தாங்க்ஸ் ஜீவி"

ஜீவி: " போ டா லூசு. விசு இனி எதாவது பேசினா வாயில ரெண்டு குடுங்க"

விசு: " சரி ஜீவி கண்டிப்பா, இவனால எனக்கு தூக்கம் போய்டுச்சு"

ஜீவி சிரித்து விட்டு செல்ல, விசு அன்பை கட்டி கொண்டு சமாதானம் செய்து தூங்க வைத்தான். கலையிடம் விபரம் சொல்லி விட்டு ஜீவி அறைக்குள் வர, வைஷு உறங்காமல் உக்காந்து இருந்தாள்.

ஜீவி: " தூங்கலயா வைஷு?"

வைஷு: " தூக்கம் வரல"

ஜீவி: " கல்யாண காய்ச்சலா?"

வைஷு: " ம்ம் கிட்ட தட்ட அதான், அம்மா அப்பாவை விட்டு போணும், எல்லாமே புதுசா இருக்க போது, அவர் வேற சரியா பேச மாட்டேன் இருக்காரு, அதான் கவலை."

ஜீவி: " தூங்கு வைஷு, அப்போ தான் காலையில் ஃப்ரெஷா இருக்கும். நாளைக்கு விழா நாயகி நீ தான் மறந்துறாத"

வைஷு: " தெரியும் அக்கா, நீங்க எங்க போனீங்க?"

ஜீவி: " உன் புருஷனை பார்க்க தான்"

வைஷு: " என்ன சொல்றீங்க?"

ஜீவி: " நாங்க, விசு, கலை அக்கா எல்லாரும் அன்பை கிண்டல் பண்ணிட்டு வந்தோம், விசு கால் பண்ணி வாங்க கூப்பிட்டார், அதான் போய் என்னால் முடியுற வரை கொஞ்சம் கிண்டல் பண்ணிட்டு வந்தேன்"

வைஷு: " என்ன கிண்டல் பண்ணிட்டு வந்தீங்க?"

ஜீவி: " தூங்கு சொன்ன அவனும் உன்னை மாதிரி தூங்காம இருக்கான், இன்னிக்கி நைட் தூங்கு டா நாளைக்கு நைட் முடியாது சொல்லி கிண்டல் பண்ணோம்."

வைஷு வெக்கத்தில் தலை குனிய, ஜீவி அவளையும் சீண்டி சிரிக்க வைத்து, பின் தூங்க வைத்தாள்.

திருமண நாள் காலை,

அன்பு மண மேடையில் உலகில் உள்ள எல்லா தெய்வதிடமும் வேண்டி கொண்டு அய்யர் சொல்லும் மந்திரம் எல்லாம் கேட்டு சொல்லி கொண்டு அமர்ந்து இருந்தான். வைஷு அலங்காரம் முடித்து பெண் அழைக்க வேண்டி காத்து இருந்தாள். அவள் காத்திருப்பு அதிகம் நேரம் நீடிக்கவில்லை, அவளையும் அழைத்து சென்று அவன் அருகில் அமர்த்தினர்.

வைஷு அவனை ஓரக்கண்ணில் பார்த்தாள். வெண்பட்டு சட்டை வேஷ்டியில் அழகாக அமர்ந்து இருந்தான். அவன் முகம் தான் கல்யாண கலக்கத்தோடு இருந்தது.

வைஷு அவன் தேர்ந்து எடுத்த இளம்சிவப்பு பட்டில் அழகாக அமர்ந்து இருந்தாள். கெட்டிமேளம் கொட்டி, அய்யர் தாலி தர வைஷ்ணவி கழுத்தில் பொன் தாலி இட்டான் அன்பு செல்வன். வைஷு நெகிழ்ந்து அழுக அன்பு அவள் கண்ணை துடைத்து விட, அவன் கைகளை அவள் இறுக்கி பற்றிக்கொள்ள, அங்கு இதை கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி.

பின் சிறு சிறு விளையாட்டு, சிறுபிள்ளை போல் இருவரும் விளையாடி, வைஷு வீட்டிற்க்கு சென்று பால் பழம் உண்டு, அங்கு இருந்து கிளம்ப வேண்டிய நேரத்தில் வைஷு அழுக, லக்ஷ்மி, சண்முகம் என அனைவரும் அழுக பார்த்து கொண்டு இருந்த அன்பு,

அன்பு: " வைஷ்ணவி அழ கூடாது, நாளைக்கு இங்க தான் வர போறோம். இன்னிக்கி மட்டும் தான் அங்க, இப்படி நீ அழுதா, அத்தைக்கும் மாமாக்கும் யார் ஆறுதல் சொல்றது?"

“மாமா, தயவு செய்து அழதீங்க பிளீஸ், என்னை நம்புங்க நான் வைஷ்ணவி நல்லா பார்த்துப்பேன். எனக்கும் உங்க வலி புரியுது. கலை அக்கா மறுவீடு போன போது நானும் தான் அழுதேன். ரொம்ப மிஸ் பண்ணோம். அதே வலி தானே உங்களுக்கும் இருக்கும். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வேன கிளம்பி போறோம் மாமா”

சண்முகம்: " மாப்பிள்ளை அதெல்லாம் வேண்டாம், நல்ல நேரம் போய்டும். நேரத்துக்கு கிளம்பி போகணும் அதான் சரி. லக்ஷ்மி வைஷு சமாதானம் சொல்லு மா, நேரம் ஆகுது."

பின் வைஷ்ணவி அழுது கிளம்பி, அன்பு இல்லம் வந்து சேர்ந்தாள். இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வர அழைத்து, விளக்கேற்றி, பால் பழம் கொடுத்து மேல் உள்ள அறையில் ஓய்வு எடுக்க கூறி வைஷ்ணவியை அனுப்பி வைத்தனர், அன்பு கீழே உள்ள அவன் தம்பியின் அறையில் எதையும் யோசிக்காமல் தூங்கி போனான்.

ஜீவி வீட்டிற்க்கு கிளம்ப அனைவரிடமும் கூறி விட்டு வைஷு தேடி சென்றாள்.

வைஷு குளித்து உடை மாற்றி தலை காய வைத்து கொண்டு இருந்தாள்.

ஜீவி: " இன்னும் நாலு மணி நேரம் இருக்கு அதுக்குள்ள நைட் பார்டி தயார் போல"

வைஷு: " அக்கா ஏன் இப்படி?"

ஜீவி: " சரி நான் கிளம்பறேன் டா, பார்த்துக்கோ சரியா?"

வைஷு: " என்ன அதுக்குள்ள அவசரம்? இன்னும் ரெண்டு நாள் கழிச்சு போலாம் பிளீஸ்"

ஜீவி: " வேலை இருக்கு டா, என் சென்டர், அப்புறம் அவரை பார்த்து வாரம் ஆகுது. உண்மையா எனக்கு அவரை தேடுது. போய் பார்த்த அப்புறம் தான் சமாதானம் ஆகும் மனசு"

வைஷு: " சரி, போய்ட்டு வரணும் சரியா?"

ஜீவி: " அவரையும் கூப்பிட்டு வரேன், அப்புறம் வைஷு அவன் நல்லவன் தான், முன் கோவமும் சரி பாசமும் சரி அதிகம். அவனை புரிஞ்சு நட டா சரியா?"

வைஷு: " அன்பு பாப்பாவை அழுகமா பார்த்துக்கிறேன் போதுமா?"

ஜீவி: " வாயாடி"

ஜீவி விடை பெற்று விட, இரவு நடக்க வேண்டிய சடங்குகிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

வைஷு அடர் நீல சேலை அணிந்து இருந்தாள். அன்பு இரவு உடையில் தயார் ஆகி இருந்தான். அறைக்கு முதலில் வந்தது வைஷு. அவனை காணாது தேட அவன் விசுவை வழியனுப்பி கொண்டு இருந்தான். அறையின் உள் சென்று காத்து இருந்தாள்.

:purple_heart:

9.அவள் வந்துவிட்டாள்

வைஷு காத்து இருக்கும் இடைவேளையில் வந்து இருந்த குறுஞ்செய்திகளை வசித்து பதில் அனுப்பினாள். வைஷுவின் தோழி ஒருத்தி முதல் இரவுக்கு வாழ்த்து கூறி அவளுக்காக ஒரு பாடல் அனுப்பி இருந்தாள்.

அருமையான பாடல் அது, சுசிலா அம்மா குரலில், கண்ணதாசன் வரிகளில், கே. வி. மகாதேவன் அய்யா இசையில் கேக்க கேக்க அருமை தான். 1967 வந்த கந்தன் கருணையில் இருந்து,

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு

நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

மத்தளம் மேளம் முரசொலிக்க

வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க

கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்

கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்

அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்

துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்

தோழி… தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்.

நேரம் இருந்தா ஒரு முறை கேளுங்க மக்களே, பேஸ்ட் முதலிரவு பாடல் இது. அதும் முருகனின் முதலிரவு பாடல்.

வைஷு பாடலில் மூழ்கி இருக்க, அன்பு அவள் பின்னே நின்று கேட்டு கொண்டு இருந்தான். வைஷு யாரோ பின் இருப்பதாக உணர்ந்து திரும்ப, அன்பு நின்றதை பார்த்து கட்டில் இருந்து அவசரமாக எழுந்தாள்.

அன்பு: " ஏய், நான் என்ன பூதமா, என்னை பார்த்து எதுக்கு இப்போ எழுந்த? எவ்ளோ நல்ல பாட்டு பதிலையே போய்டுச்சு, திருப்பி போட்டு விடு நான் முழுசும் கேக்கணும்."

வைஷு: " இப்படி நீங்க சத்தம் இல்லாம வந்தா, பயந்து தான் எழுவாங்க."

அன்பு: " இல்ல, நீ அமைதியா பாட்டு கேட்டு இருந்தியா அதான் தொந்தரவு செய்ய தோணல, அதும் இல்லாம இது நம்ம ரூம், நான் வர சத்தம் போட்டு வரணுமா?"

வைஷு: " …"

அன்பு: " சாரி, உன்னை டிஸ்ட்ரப் பண்ணிடேனா?"

வைஷு: " அதெல்லாம் இல்லங்க"

அன்பு: " வைஷ்ணவி, உனக்கு எப்போ எல்லாம் உங்க அப்பா, அம்மாவை பார்க்கணும் தோணுதோ அப்போ என்கிட்ட சொல்லிடு சரியா? நீ இன்னிக்கி அழுதது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு"

வைஷு: " சரிங்க"

அன்பு: " அந்த பாட்டு போடு கேக்கணும் போல இருக்கு"

வைஷு அந்த பாடலை வைக்க, இருவரும் அருகில் அமர்ந்து அந்த பாடலை பார்த்தனர். பாடல் முடிந்தது.
இருவரும் பேசாது அமர்ந்து இருந்தனர். பத்து நிமிடம் கழித்து அன்பு எழுந்தான்.

அன்பு: " வைஷ்ணவி நான் வெளிய நிக்குறேன் இந்த சேலையை மாத்திக்க, நைட் டிரஸ் போட்டு கூப்பிடு, தூக்கமா இருக்கு எனக்கு"

வைஷு எழுந்து நிற்க, அவன் அறையை விட்டு வெளியே சென்றான். வைஷு உடை மாற்றி நைட்டி அணிந்து கொண்டு கதவை திறக்க, அன்பு அறையின் உள்ளே வந்து அவன் இடத்தில் படுத்துக் கொண்டான். வைஷு என்ன செய்வது என்று முழித்து கொண்டு நிற்க,

அன்பு: " தூக்கம் வரலையா? வா படு தூங்கு"

வைஷு தயங்கி தயங்கி நிற்க,

அன்பு: " வைஷ்ணவி வா இங்க வந்து உக்காரு, எதுக்கு இப்படி தயங்கி நிக்குற? எனக்கு தெரியும் உனக்கு எல்லாமே புதுசு தான். ஆனா இனி பழகி தான் ஆகனும். எதும் வேணும், கஷ்டமா இருக்குனா சொல்லணும் சரியா? இப்போ ஏன் நிக்குற?

வைஷு: " நீங்க பால் குடிக்கலையா?"

அன்பு லேசாக சிரித்து,

அன்பு: " வைஷ்ணவி, பால் வேண்டாம் எனக்கு, இன்னிக்கி நமக்குள்ள எதும் இல்ல, அதெல்லாம் போக போக அதுவா நடக்கட்டும் சரியா, காலையில் இருந்து சடங்கு, முறைன்னு சொல்லி நிறைய வேலை, நீ வேற அழுது சோர்ந்து போய் இருக்க, அதான் சாரீ மாத்த சொன்னேன், நைட்டியில் உன் வீட்டில் தூங்குற மாதிரி தூங்கு, தனியா தூங்கி பழக்கம்ன்னா சொல்லு நான் கீழ படுத்துக்குறேன்."

வைஷு: " தாங்க்ஸ் , நீங்க கீழ எல்லாம் போக வேணாம், இங்கேயே படுங்க, நான் பழகிக்குறேன்"

அன்பு: " சரி புது இடம் தூக்கம் வரலேன்னா அங்க செல்ஃப்ல என் ஐபாட் இருக்கு, பாட்டு கேட்டு தூங்கு சரியா? குட் நைட்."

வைஷு: " சரிங்க குட் நைட்"

அன்பு படுத்த கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டான். வைஷு அவள் மொபைலில் எப்எம் போட்டு கேட்டு தூங்கி போனாள்.

காலையில் முதலில் எழுந்தது அன்பு தான். வைஷு கையில் இறுக்கி பிடித்து இருந்த மொபைலை அவளிடம் இருந்து பிரித்து சார்ஜ் போட்டு விட்டு, ஜன்னல் திறந்து, ஃபேன் வேகம் கொஞ்சம் குறைத்து விட்டு அறை மூடி வெளியே வர, திரு ஓடி வந்து அவனிடம் ஒட்டி கொண்டான். அங்கு வந்த கலை,

கலை: " இன்னும் வைஷு தூங்கிட்டு இருக்காளா?"

அன்பு: " ஆமா அக்கா, புது இடம் இல்லையா, அதான் தூக்கம் வந்து இருக்காது. "

கலை: " அம்மா கோவிலில் உங்க ரெண்டு பேர் பெயரிலும் அர்ச்சனை
அபிஷேகத்துக்கு சொல்லி இருக்காங்க, சீக்கிரம் போகனும் அபிஷேகம் பார்க்க அதான்"

அன்பு: " சரிக்க நீ போய் எழுப்பு நான் குளிச்சுட்டு வரேன் அக்கா"

கலை உள்ளே செல்ல, வைஷு நைட்டி அணிந்து தூங்குவதை பார்த்து சிரித்து கொண்டே வந்து எழுப்பி விட்டார்.

வைஷு தூக்கம் கலைந்து எழுந்து கலை முகம் பார்க்க,

கலை: " என்ன நல்ல தூக்கமா?"

வைஷு: " ஆமா அண்ணி"

கலை : " குளிச்சுட்டு வா கோவில் போகனும், மஞ்சள் எடுத்துக்கோ குளிக்க சரியா?"

வைஷு: " சரி அண்ணி"

கலை: " வைஷு பால் ஏன் குடிக்கல?"

வைஷு: " அண்ணி அது வந்து… அவர்… அவர் வேண்டாம் சொல்லிட்டாரு"

கலை: " சரி டா, போ குளி"

கலை யோசனையோடு வெளியே செல்ல, வைஷு மாடியில் உள்ள குளியல் அறையில் குளித்து, கிளம்பி கொண்டு இருந்தாள். அன்பு கதவை தட்டி “வைஷ்ணவி” என்று அழைத்து விட்டு, ஒரு நொடி நின்று உள்ளே வந்தான். வைஷு தலை பிண்ணி கொண்டு இருந்தாள்.

அன்பு: " உனக்கு நல்ல நீளமான முடி அழகா இருக்கு, இந்த பூ வெச்சுக்க, போலாம் தானே?"

வைஷு: " ம்ம் போலாம்"

அன்பு: " இரு ட்ரெஸ் எடுத்து வெச்சுறேன் போவோம், உனக்கு அங்க இருக்கு தானே?"

வைஷு: " எங்க போறோம்? எதுக்கு ட்ரெஸ்?"

அன்பு: " ஹனிமூன் போறோம்"

வைஷு: " என்ன? இன்னிக்கா? சொல்லவே இல்ல?"

அன்பு: " ஒஹ் அப்போ சொல்லி இருந்தா ஓகே வா? வைஷ்ணவி மறுவீடு போறோம், அத்தையும் மாமாவும் வந்து இருக்காங்க நம்மளை கூப்பிட்டு போக"

வைஷு: " அம்மாவா? "

அடுத்த நொடி அவள் அங்கு இல்லை ஓடி சென்று இருந்தாள்.

அன்பு கிளம்பி கீழே வர, கலை, திரு, சேகர், சண்முகம், லக்ஷ்மி, வைஷு, அன்பு என அனைவரும் கோவில் சென்றனர். கோவிலில் தரிசனம் முடித்து வைஷ்ணவி இல்லம் சென்றனர் வைஷுவும் அன்பும்.

:purple_heart:

10. அவள் வந்துவிட்டாள்

வீடு வந்து சேர்ந்ததும் அவள் அறை சென்று விட்டாள் வைஷ்ணவி. அன்பு ஹாலில் அமர்ந்து கொள்ள, வைஷு அரை மணி நேரம் கழித்து சுடிதார் அணிந்து வெளியே வந்தாள்.

வைஷு: " என்னங்க வலது பக்க ரூம் தான் என்னுடையது. போங்க போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க சாப்பிட போவோம் பசிக்குது"

அன்பு: " சரி, மாமா எங்கே?"

வைஷு: " அப்பா கடைக்கு போய் இருக்கார்"

அன்பு: " சரி இதோ வரேன்"

அன்பும் ஆடை மாற்றி வர, இருவரும் உணவு உண்ண அமர சண்முகம் ஜாமூன் வாங்கி வந்தார்.

வைஷு: " அப்பா, ஜாமூன்னா?, ரொம்ப தாங்க்ஸ்"

அன்பு லேசாய் சிரிக்க, அதை கண்டு வைஷு சிரிக்க, இருவரும் உண்டு முடித்தனர். அன்பு வைஷு அறைக்கு சென்று கம்பெனிக்கு போன் செய்து பேசிவிட்டு அவள் படுக்கையில் படுத்துக்கொண்டான். வைஷு லக்ஷ்மியுடன் பேசிக்கொண்டு இருக்க, அவளின் சித்தி (ஜெயா), சித்தப்பா (சுப்ரமணி), அவர்களின் மகன் (கெளதம்) என அனைவரும் வர, வீடு கலகலப்பு கூடியது.

வைஷு அன்பை அழைக்க அவனும் அவர்களோடு பேசி கொண்டு இருந்தான். வைஷுவை அவளின் அறைக்கு அழைத்து வந்தார் ஜெயா,

ஜெயா: " வைஷு அங்க எல்லாரும் எப்படி பழகுறாங்க?"

வைஷு: " ரொம்ப நல்லா பழகுறாங்க சித்தி, வீடும் பிடிச்சு இருக்கு"

ஜெயா: " எதுவும் குறையில்லை தானே?"

வைஷு: " சித்தி நான் ஒரு ராத்திரி தான் அங்க இருந்தேன், இப்படி கேட்டுட்டே இருந்தா என்ன அர்த்தம்? எனக்கு எந்த குறையும் இல்ல போதுமா?"

ஜெயா: " ராத்திரி சந்தோசமா இருந்த தானே?"

வைஷு: “சித்திதி…”

ஜெயா: " கண்ணு எனக்கு புரியுது, ஆனா வீட்டுக்கு ஒரே பொண்ணு நீ, நீயும் மாப்பிள்ளையும் சந்தோசமா இருக்கணும் இல்லையா? அதான் கேட்டேன்"

வைஷு: " போதும் எதும் கேட்காதீங்க நான் சந்தோசமா தான் இருக்கேன், எந்த குறையும் இல்லை"

ஜெயா: " எதாவது குறை இருந்தா சொல்லு, எதும் வேணுமா? வசதி குறையா இருக்கா? சொல்லு கண்ணு நாங்க எல்லாம் வாங்கி அனுப்பிறோம்"

வைஷு: " ஏன் அவர் வாங்கி தர மாட்டாரா? நீங்க தான் வரணுமா?"
சித்தி நம்ம கிட்ட பணம் இருக்கலாம் அதுகாக அவரை மட்டம் தட்டி பேசாதீங்க, எனக்கு இது சுத்தமா பிடிக்கல"

ஜெயா: " அம்மா உன் புருஷனை எதும் சொல்லல போதுமா?"

இதை எல்லாம் அன்பு வெளியில் நின்று கேட்டு கொண்டு இருந்தான்.

அன்பு உள்ளே வர, ஜெயா வெளியில் செல்ல, அன்பு அவளின் கட்டிலில் விழுந்தான். வைஷு வெளியே செல்ல, அன்பு கை பிடித்து இழுக்க, வைஷு அவனின் முதல் தொடுகையில் முகம் சிவந்து நின்றாள்.

அன்பு: " ரொம்ப தேங்க்ஸ், எங்க வீட்டையும் என்னையும் விட்டு குடுக்காம பேசினதுக்கு"

வைஷு: " சரி, கை விடுங்க நான் போனும்"

அன்பு: " சாரி"

வைஷு வெளியில் சென்று விட, அன்பு மொபைல் பார்த்து கொண்டே இருந்தான்.

வைஷு சமையலுக்கு உதவி செய்ய வர, அவளை தூங்குமாறு லஷ்மி கூறவும், ஹாலுக்கு வந்தாள்.

வைஷு: " அப்பா, சாக்லேட் வேணும். அதும் டயரி மில்க் வித் ஒரியோ."

சண்முகம்: " அப்பா கடைக்கு போகும் போது வாங்கிட்டு வரேன்"

வைஷு: " சரிப்பா, நான் உன் மடில படுத்து தூங்கனும்"

சண்முகம்: " அதுக்கு என்ன டா, வா தூங்கு"

வைஷு தந்தையின் மடியில் படுத்துகொண்டாள். அவள் தூங்கியதும் சண்முகமும், சுப்ரமணியமும் மாப்பிள்ளை - பெண் இருவருக்கும் உடை எடுக்க கிளம்பி விட்டனர். கெளதம் நண்பர்களோடு விளையாட சென்று விட்டான்.

வைஷு ஹாலில் தூங்கி விட, அன்பு அறையில் தூங்கி இருந்தான். முதல் நாள் சைவ விருந்து தயார் ஆனது. சாப்பாடு, சாம்பார், வத்தகுழம்பு, மூன்று வகை பொரியல், கூட்டு, வடை, இரண்டு வகை பாயசம், ரசம், தயிர், அப்பளம் என விருந்து சமைத்தனர்.

சமையல் முடிவுக்கு வரும் போது தான் தெரிந்தது அப்பளம் போதுமான அளவு இல்லை என்று, உடனே ஜெயா கௌதமை அழைக்க அவன் அங்கு இருந்தால் தானே?

அன்பு எழுந்து வரவும், லக்ஷ்மி கிளம்பி வெளியே செல்லவும் சரியாக இருந்தது.

லக்ஷ்மி: " ஜெயா மாப்பிள்ளை எழுந்துடாரு, ஜூஸ் கொண்டு வா"

அன்பு: " வேண்டாம் அத்தை, சாப்பிட தானே போறோம் எதுவும் வேண்டாம் எனக்கு, சாப்பிடவே ரெண்டு நாள கஷ்டமா இருக்கு"

லக்ஷ்மி: " சரி ஹாலில் உக்காருங்க தம்பி, நான் கடைக்கு போய்ட்டு வந்துறேன், வைஷு எழுப்பிவிட்டு போறேன் உங்க கூட பேசிட்டு இருப்பா"

அன்பு: " அச்சோ, அதெல்லாம் வேண்டாம். நைட் அவ புது இடம்னு தூங்கவே இல்லை. தூங்கட்டும் விடுங்க, எதுக்கு கடைக்கு போறீங்க, நான் போய்ட்டு வரேன் கூடைய தாங்க"

லக்ஷ்மி: " இல்ல மாப்பிள்ளை வேண்டாம், நான் போய்ட்டு வரேன் ரொம்ப பக்கம் தான். கெளதம் இருந்தா அனுப்பி இருப்பேன், அவன் சொல்லாம விளையாட ஒடிட்டான்."

அன்பு: " நான் வாங்கிட்டு வரேன் தாங்க, கெளதம் தான் போனுமா? நான் போக கூடாதா?"

லக்ஷ்மி: “அது…”

அன்பு: " நான் இந்த வீட்டில் யாரு, நான் எந்த உதவியும் செய்ய கூடாது அப்படி தானே? வைஷ்ணவி வாங்கி குடுக்க உரிமை இருக்கு தானே? அப்போ எனக்கும் இருக்கு, இதுக்கும் மேல தடுக்கதீங்க"

லக்ஷ்மி கூடையை கொடுக்க, அன்பு கடைக்கு சென்றான். அப்பளம் வாங்கிவிட்டு வைஷ்ணவி அவள் தந்தையிடம் கேட்டு கொண்டு இருந்த டயரி மில்க் சாக்லேட் வாங்கி கொண்டு வீட்டிற்க்கு வந்தான்.

வீட்டின் உள் நுழையும் போதே, வைஷு சிறுபிள்ளை போல சாக்லேட் சாப்பிட்டு கொண்டு இருந்தாள். அன்புக்கு முகம் வாடிப்போனது. கூடையில் இருந்த சாக்லேட் எடுத்து அவன் பண்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டு அப்பளத்தை மட்டும் லக்ஷ்மியிடம் கொடுத்தான். இதை எல்லாம் பார்த்தா ஜெயா,

ஜெயா: " அக்கா, மாப்பிள்ளை வைஷுக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்து இருக்கார். வைஷு காலையில் நான் கேள்வி கேட்ட அப்போ கத்துனா இப்போ புரியுது ஏன்னு, தங்கமான பையன் தான்"

லக்ஷ்மி: " ஆமா ரொம்ப நல்ல பையன், வைஷு சந்தோசமா இருக்கா தெரியுது. கிச்சன் வரும் போதே முகம் எல்லாம் வெக்கம். இதுவே போதும் ஜெயா"

அன்பு விருந்து உண்டு, மாலை வரை தூங்கி, பின் கோவில் சென்று வந்தனர். இரவு வைஷு அறைக்குள் வரவும். அன்பு அறையில் காத்து இருந்தான்.

அன்பு: " வைஷ்ணவி உனக்கு சாக்லேட் ரொம்ப பிடிக்குமா?"

வைஷு: " ஆமா, ஏன்?"

அன்பு: " காலையில் மாமாகிட்ட கேட்டியே அதான் கேட்டேன், ஏன் என்கிட்ட கேக்கல நீ?"

வைஷு: " அது… அது வந்து…"

அன்பு: " எல்லாம் அவர் வாங்கி தருவாருன்னு உரிமையா சொன்ன தானே? ஏன் கேக்கல? சொல்லு ."

வைஷு: " நீங்க நேத்து ராத்திரி இருந்து தான் பேசவே செய்றீங்க, எப்படி உரிமையா கேக்கறது நான்? சின்ன தயக்கம் அதான்"

அன்பு: " கல்யாண வேலை அதான் பேசல, இல்லைனாலும் நான் அதிகமா பேச மாட்டேன். இப்போ பேசு என்ன பேசனுமோ பேசுவோம்"

வைஷு: " சரி நான் சாக்லேட் கேட்டேன் உங்களுக்கு எப்படி தெரியும்? "

அன்பு: " கதவு சாத்த எழுந்து வந்தேன், அப்போ கேட்டேன்"

வைஷு: " சரி"

அன்பு எழுந்து சாக்லேட் எடுத்து தர, வைஷு முகத்திலும் கண்களிலும் ஒளி.

அன்பு: " நான் ஆசையா வாங்கிட்டு வந்தேன், நீ மாமா வாங்கி கொடுத்ததை சாப்பிட்டு இருக்க, அதான் எடுத்து வெச்சுட்டேன். இப்போ சாப்பிடு"

வைஷு முகம் சிவக்க, சாக்லேட் பிரித்து உண்ண தொடங்கினாள். அது உருகி போய் இருந்தது. அன்பு அவள் உண்பதை பார்த்து கொண்டு இருந்தான். அவள் வேண்டுமா என கேட்க, சாப்பிடு என்று கூறி, அவள் உண்பதை மட்டுமே பார்த்தான். வைஷ்ணவி பாதி உண்டு விட்டு எழுந்து சென்று மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு வந்தாள்.

இருவரும் படுக்க, அன்பையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அன்பு அவள் பார்ப்பதை பார்த்து,

அன்பு: " என்ன? "

வைஷு: " தூங்கலையா நீங்க?"

அன்பு: " தூக்கம் வரல"

வைஷு: " ஏன்? வரல?"

அன்பு: " பகல் எல்லாம் தூங்கி இருக்கேன் இல்லையா அதான், நீ வேற என்னை இப்படி பார்த்துட்டே இருக்க எப்படி தூங்க"

வைஷு முகம் சிவக்க, முகத்தை திருப்பி கொண்டாள். அவள் வெக்கம் விட்டு அவன் முகம் பார்க்க, என்ன என்பது போல் அவன் கண் அசைக்க, வைஷு வெக்கத்தில் முகம் திருப்ப, அவள் கை பிடித்து அன்பு இழுக்க, அவள் திரும்பி,

வைஷு: " என் புருஷனை நான் அப்படி தான் சைட் அடிப்பேன். எனக்கு எல்லா உரிமையும் இருக்கு, பேசாம தூங்குங்க"

என்று திரும்பி படுத்து கொண்டாள்.
அன்பு இப்போது சத்தமாக சிரிக்க, அது அறையை விட்டு வெளியே கேட்க, பெரியவர்களும் சிரித்து கொண்டனர்.

மறுவீடு விருந்து மிக நன்றாக சென்றது. விருந்து, அரட்டை, சினிமா, விளையாட்டு என்று நாட்கள் அருமையாய் சென்றது. வைஷ்ணவி வீட்டில் அவனும் ஒரு மகன் ஆனான்.

வைஷு வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அன்பு அவர்களை விட சிறிது பணத்தில் குறைந்து இருந்தாலும் குணத்தில் தங்கம் என்று நினைத்து ஆனந்தம் கொண்டனர்.

அன்பு கல்யாணத்திற்கு முன் கொண்டு இருந்த குழப்பம் நீங்கி, வைஷு உடன் நெருங்கி இருந்தான். அவளின் கை பிடிப்பது, தோள் உரசுவதும் சகஜம் ஆகி இருந்தது. அடிக்கடி அவன் பார்வை மாறுவதை வைஷுவும் அறிந்து இருந்தாள்.

மறுவீடு முடிந்து அன்பு அவன் இல்லம் வந்து இருந்தான். அவன் முகத்தில் ஒரு தெளிவு. அன்பின் மனது வைஷுவிடம் தஞ்சம் புகுந்தது. குழப்பம் விலகி அவளை நெருங்கி கொண்டு இருந்தான். அவள் முதல் சமையலுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தான். இரவு முழுக்க அவளோடு தூங்காது கை கோர்த்து பேசி கொண்டு இருந்தான். அவன் மனம் அவன் வசம் இல்லை.

கலை அக்கா அன்பின் மாற்றம் பார்த்து நிம்மதியாக ஊர் திரும்ப கிளம்பி கொண்டு இருந்தார். அப்போது தான் அங்கு அவள் வந்தாள்.

:purple_heart:

11. அவள் வந்துவிட்டாள்
அன்று ஞாயிறு கிழமை,

வைஷு முதலில் எழுந்து காபி போட்டு அத்தை, மாமாவுக்கு கொடுத்து விட்டு, கலை கிளம்ப உதவி கொண்டு இருந்தாள். அன்பு அழைக்க, மேலே சென்றாள்.

அன்பு: " வைஷ்ணவி காபி வேணும், பசிக்குது இப்போவே, நான் பிரஷ் பண்ணிட்டு வரேன் எடுத்துட்டு வா"

வைஷு சிறு தலை அசைபோடு சென்றுவிட்டாள்.

கீழே சென்றவள், இட்லி செய்ய மாவை தட்டில் ஊற்றி விட்டு, திருவுக்கு பால் கொடுத்து விட்டு, அன்புக்கு காபி போட்டு, அடுப்பை அணைத்து விட்டு, அவளுக்கும் சேர்த்து காபி எடுத்து கொண்டு மேலே சென்றாள்.

அவள் காபி வைத்து விட்டு தலை உலர்த்த, அன்பு காலை கடன்கள் முடித்து வந்து காபி குடித்தான்.

அன்பு: " உன் காபி ஆரி போக போகுது, சீக்கிரம் வந்து குடி"

வைஷு: " இருங்க தலை துவட்டிட்டு வரேன்"

அன்பு அவளை திரும்பி பார்க்க, வைஷு வலது புறம் வளைந்து அவள் முடியினை துவட்டி கொண்டு இருந்தாள். அன்பு லேசாய் சிரித்து,

அன்பு: " வைஷு, இங்க வா உன்கிட்ட ஒன்னு கேக்கணும்"

அவனின் வைஷு என்ற அழைப்பு அவளை இன்பம் கொள்ள செய்ய சாவி கொடுத்த பொம்மை போல உள்ளே வந்தாள்.

வைஷு: " என்னங்க? "

அன்பு: " கதவை சாத்திட்டு வா அப்போ தான் கேக்க முடியும், கொஞ்சம் முக்கியமான விஷயம்"

வைஷு: " இருங்க, வரேன்"

அன்பு சிரித்து கொண்டு இருக்க, அவள் அருகில் வந்து என்ன என கேட்க, அன்பு அவள் இடை பற்றி அவன் நெஞ்சில் சாய்த்து கொண்டான். அவனின் அத்து மீறல் அவளுக்கு வெக்கம் கொடுக்க, அன்பின் பிடி இறுகியது. அவளை அள்ளி படுக்கையில் படுக்க வைத்து கேட்டான்.

அன்பு: " பால் குடிக்கலாமா?"

வைஷு: " அப்போ காபி?"

அன்பு: “நம்ம ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு கேட்ட தானே என்கிட்ட பால் குடிக்கலையான்னு?”

வைஷு: " ஆமா கேட்டேன்"

அன்பு: " இப்போ குடிக்கலாமா?"

வைஷு: " இப்போ எப்படி அந்த பாலை குடிக்கறது?"

அன்பு: " வைஷு, பால் குடிக்கணும் என்ன அர்த்தம் தெரியுமா?"

வைஷு: " என்ன அர்த்தம்?"

அன்பு: “********** சம்மதமானு அர்த்தம், அன்னிக்கு ராத்திரி நீ என்கிட்ட அதான் கேட்ட”

வைஷு அன்று அவள் கேட்ட கேள்வியை நினைவு கூர்ந்து, அர்த்தம் புரிய, பெரிதாய் அவள் கண்கள் விரிய,

வைஷு: " அச்சோ, அன்னிக்கு அண்ணி கேட்டாங்க பால் குடிக்கலையான்னு, நான் லூசு மாறி அவர் வேண்டாம் சொல்லிட்டாரு சொன்னேன் அண்ணி என்ன நினைச்சு இருப்பாங்க? இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்லி குடுத்தா?"

அன்பு அதை கேட்டு சத்தமாக சிரிக்க, வெக்கத்தில் வைஷு அவன் மார்பின் உள்ளே முகம் புதைக்க,

அன்பு: " என் மாமா சொன்னாரு, சரி அதை விடு, இப்போ குடிக்கலாமா" என்று அவள் காதிற்குள் கேக்க, அவள் உடல் சிலிர்க்க,

வைஷு: " ம்"

அவளின் சம்மதம் கிடைத்த நொடி அன்பு அவளை தனது உதடுகளால் தீண்டி கொண்டு இருந்தான். அவன் அவள் இதழ்களை சிறைப்பிடித்து, முத்தம் என்னும் ஆயுதம் கொண்டு அவளோடு கட்டில் யுத்தம் செய்ய, அவன் கைகள் அவளின் அந்தரங்கம் தேட, அவளோ பாவம் அவன் வேகத்தோடு போட்டி இட முடியாது தடுமாறி கொண்டு இருந்தாள். இதழ் முத்தம் நீண்டு கொண்டே போக, கதவு தட்டும் ஓசை கேட்டு இருவரும் விலகினர்.

வைஷு அவள் உடை சரி செய்து கொள்ள, அன்பு கதவை திறந்தான்.

கலை: " அமிர்தா வந்து இருக்கா, வா டா, வைஷு கூப்பிட்டு வா"

அன்பு: " அவளை கட்டிக்கொண்டு, ராத்திரி பார்த்துப்போம், என் பெஸ்ட் ப்ரெண்ட் அவ ஸ்கூல் படிக்கும் போதில் இருந்து, அமெரிக்கா இருந்து என்னை பார்க்க வந்து இருக்க, நான் கீழ போறேன், நீ ரெடி ஆகிட்டு வா"

வைஷு சிரிக்க, அன்பு கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு சென்று விட்டான்.

அன்பு கீழே சென்று அமிர்தா, அவரின் கணவர் ஸ்ரீனிவாசன் இருவரிடம் பேசிக்கொண்டு இருக்க, பெட்டியை கையில் எடுத்து கொண்டு உள்ளே வந்தாள் சுமி.

அன்பு அதிர்ந்து முகம் மாறிபோக, கலை கண்களில் சமாதானம் செய்ய, அவனை சமன் செய்து கொண்டு அவளை அழைக்க,

அமிர்தா: " நியபகம் இருக்கா?, என் ப்ரெண்ட் சுமி"

அன்பு: " இருக்கு அமிர்தா"

அனைவருக்கும் லலிதா காபி தர, எடுத்து கொண்டு அன்பின் அருகில் அமர்ந்தாள் சுமி.

வைஷு மாடியில் இருந்து முகம் கழுவி, கண்ணாடியில் அவள் முகம் பார்த்து சிவந்து, முகம் முழுக்க சிரிப்போடு கிளம்பி கீழே வந்தாள்.

"பாவம் அவளுக்கு தெரியாது, இப்போது எதை நினைத்து கன்னம் சிவந்ததோ, அதுவே அவளின் கண்கள் நனைக்க வைக்கும் என்று"

வைஷு ஆசையாய் அவனின் தோழியை காண கீழே வந்தாள்.
அவள் மாடி இறங்கி கீழே வர, அன்பு அவளை கண்ட நொடி எழுந்து அவள் அருகில் போய் நின்று,

அன்பு: " அமிர்தா, என் வைஃப் வைஷ்ணவி"

அமிர்தா வைஷு உடன் பேசி, சிரிக்க, சுமியின் கண்கள் வைஷுவை வெறித்தது. வைஷுவின் அழகு, அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, அவளின் குணம், நளினம் அனைத்தும் சுமியை கொன்றது. அன்பு தன்னை பார்க்கும் முன் வரை சிரித்து பேசியது, அவன் கண்களில் இருந்த மகிழ்ச்சியும் தெளிவும், தன்னை கண்ட பின் தான் அவன் முகம் மாறி இருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.

வைஷு அமிர்தா இருவரும் பேசிக்கொண்டே இருக்க, அன்பின் அப்பா, தம்பி, மாமா, திரு என அனைவரும் கூட காலை உணவை சாப்பிட்டனர். பின் வைஷு, அமிர்தா உதவி செய்ய, கலை லலிதா சமையல் செய்ய, அன்பு ஸ்ரீனிவாசன் உடன் பேசிக்கொண்டு இருந்தான். சுமி வைஷணவியை பொறாமையாக பார்த்துக்கொண்டே இருந்தாள். மதிய உணவு முடித்து அமிர்தா விடை பெறும் போது தான் கூறினாள் சுமியின் நிலையை, அன்புக்கு தலை வலித்தது. இப்போது சுமியின் பார்வையில் இருந்த ஏக்கம் அவனை கொன்றது. அவர்கள் கிளம்பவும், கலையும் கிளம்பினார்.

அவர்களை டிரெயின் ஏற்றி விட்டு வீடு வர, அன்பின் காதுகளில் அமிர்தா கூறியதும், கலையின் அறிவுரைகளும் அவன் மனதில் போராட்டம் நடத்தியது.

குழம்பி போய் அவன் வீடு வந்து சேர, வைஷு குளித்து பால் எடுத்து கொண்டு அறை வந்து சேர்ந்தாள். வெக்கத்தொடு அவள் அறையை தாளிட்டு போக, அன்பு குழப்பத்தின் உச்சியில் படுத்து இருந்தான்.

வைஷு: " என்னங்க, பால் குடிச்சிட்டு தூங்குங்க"

அன்பு: " வேண்டாம்"

வைஷு: " அப்போ பால் குடிக்கலையா என்று அவள் அர்த்தமாக கேட்க"

அன்பு: " எனக்கு எதும் வேண்டாம் தலை வலி உயிர் போகுது, தயவு செஞ்சு விடு என்று முகம் கடு கடுக்க"

வைஷு மருந்து போட்டு விட வர, அன்பு அதையும் தட்டி விட, அவள் கண் கலங்கிய படி தூங்கி விட்டாள். அன்பு தூங்காது சுமியை நினைத்து மனதில் புலம்பினான்.

:purple_heart:

12. அவள் வந்துவிட்டாள்

வைஷு காலையில் எழும் போது அன்பு அருகில் இல்லை. குளித்து கீழே செல்ல, லலிதா மசாலா டீ போட்டு கொண்டு இருந்தார். வைஷுவிற்கு கொடுக்க, அவளும் குடித்து கொண்டே,

வைஷு: " அத்தை அவர் எங்கே?"

லலிதா: " அவன் வேலைக்கு கிளம்பி போய்ட்டான். எதோ அவசர வேலை போல"

வைஷு: " ராத்திரி அவர் முகமே சரி இல்ல, தலை வலின்னு வேற சொன்னாரு"

லலிதா: " கலையும், திருவும் கிளம்பி போன போதும் இவனுக்கு எதாவது வந்துடும், கலை மேல அவனுக்கு பாசம், விடவே மாட்டான். அவளுக்கும் அங்க வேலை இருக்கும்லா? வேலை விட்டு மாப்பிள்ளை வந்து இருக்கார், அதெல்லாம் புரியாது இவனுக்கு"

வைஷு அவர் பதிலில் தெளிவு பெற, காலை உணவு செய்து முடித்து, வசந்த், மாமா, அத்தைக்கு உணவு பரிமாறி விட்டு அவர்களோடு அவளும் சாப்பிட்டு, மதிய சமையலுக்கு தேவையான வேலைகளை செய்து விட்டு, அவள் அறை வந்தாள். அவளின் நெட் ஆன் செய்ய, அன்பின் குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

காலையில் ஜீவிதா உடன் பேசி இருந்தான் அன்பு. அவள் குடுத்த அறிவுரை அவனை தெளிய செய்து இருந்தது. காலையில் கிளம்பி வேலை இல்லாத அவன் அலுவலுக அறையில் உக்கார்ந்து இருந்தான். அவளிடம் பேசி விட்டு, வைஷுவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

அன்பு: " வைஷு குட் மார்னிங், ஆபீஸ் வேலை, கால் வந்ததும் கிளம்பி வந்துட்டேன், நீ தூங்கிட்டு இருந்த அதான் எழுப்ப தோணல, நைட் உன்னை ஹேர்ட் பண்ணிட்டேன் தானே? சாரி. தலை வலி, அது போக ஒரு யோசனையில் இருந்தேன். நைட் அழுதியா? சாரி வைஷு பிளீஸ்"

வைஷு: " சாரி ஒன்னும் வேண்டாம்"

அன்பு: " வேற என்ன வேணும்"

வைஷு: " வேலை முடிச்சுட்டு வந்து வெளிய கூப்பிட்டு போகனும் சரியா?"

அன்பு: " சரி மதியம் வரேன், எங்க போலாம் யோசிச்சு வை"

வைஷு: " சரிங்க "

மதியம் அவன் வந்து விடுவான் என்று தெரிந்த உடன், சமையல் வேலை வேகமாக முடித்து, வீட்டில் உள்ள மற்ற வேலை எல்லாம் முடித்துவிட்டு குளித்து கிளம்பி, கீழே வந்து அனைவருக்கும் மதிய உணவு பரிமாறி கொண்டு இருக்கும் போது அன்பு வந்தான்.

லலிதா: " அன்பு நீயும் வா, சாப்பிடு"

அன்பு: " ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன், நீங்க சாப்பிடுங்க"

லலிதா: " காலையில் சாப்பிட்டியா?"

அன்பு: " சாப்பிட்டேன்"

நீலகண்டன்: " அன்பு வேலை இல்லைன்னா, வைஷ்ணவி எங்காவது கூப்பிட்டு போ, அந்த பொண்ணு வீட்டுல தானே இருக்கா?"

அன்பு: " நாளைக்கு போறோம் அப்பா, கோவை குற்றாலம் போலாம் இருக்கேன்"

நீலகண்டன்: " அப்போ சரி"

வைஷு முகம் தான் சுருங்கியது. அவளும் எதுவும் பேசாது பரிமாறி விட்டு அன்பு வந்த உடன் உணவு உண்ணுவோம் என்று காத்து இருந்தாள். கால் மணி நேரம் ஆகியும் அவன் வரவில்லை என மேலே போக, அன்பு நிம்மதியாய் தூங்கி கொண்டு இருந்தான். வைஷ்ணவி பெருமூச்சு விட்டு கொண்டு அவன் அருகில் வந்து அவனை எழுப்ப,

அன்பு: " கொஞ்ச நேரம் வைஷு பிளீஸ்"

வைஷு : " சாப்பிட்டு தூங்குங்க"

அன்பு: " அப்புறம் சாப்புடுறேன், உனக்கு பசி இருந்த போ சாப்பிட்டு வா"

வைஷு: " என்ன வெளிய கூப்பிட்டு போறேன் சொன்னீங்க?"

அன்பு: " சொன்னேன் இப்போ மூடு இல்ல"

வைஷு: " எப்போ பாரு பேசுறது ஒன்னு, செய்றது ஒன்னு, இனி உங்களை நம்பவே மாட்டேன்."

அன்பு அவளை இழுத்து அவன்மேல் போட்டு கொண்டு,

அன்பு: " சரி வா, சொன்ன வாக்கை காப்பாத்துறேன்"

வைஷு: " விடுங்க என்ன விளையாட்டு கீழ நீங்க சாப்பிட வருவீங்கன்னு எல்லாம் அப்படியே இருக்கு, கதவு திறந்து இருக்கு பிளீஸ்"

அன்பு இன்னும் இறுக்கி, அவளை படுக்கையில் போட்டு விட்டு கதவை சாற்றி விட்டு வந்தான். ஒரு பக்கம் அவளுக்கோ வெக்கம், மறுபக்கம் அவளுக்குள் படபடப்பு,

வைஷு: " கீழ எல்லாம் எடுத்து வெச்சுட்டு வரேன், அத்தை என்ன நினைப்பாங்க?"

அன்பு: " அதெல்லாம் அம்மா பார்த்துப்பாங்க"

வைஷு: “வெளிய கூப்பிட்டு போங்க, அப்புறம் தான் இதெல்லாம்”

அன்பு: " விளையாடிட்டு போவோம்"

அவள் அடுத்த வார்த்தை பேசும் நிலையில் இல்லை, அவன் அத்துமீறல் அதிகம் ஆகி இருந்தது. அவள் உருகி அவனோடு கலந்து கொண்டு இருந்தாள்.

“வைஷு” என்ற அழைப்பில் அவள் அவனை விட்டு விலக, அன்பு அவளை விடும் நிலையில் இல்லை.

வைஷு: " அத்தை கூப்பிட்டு இருக்காங்க விடுங்க"

அன்பு: " அப்புறம் போய் பதில் சொல்லு இப்போ இரு"

“வைஷு” என்ற அடுத்த அழைப்பிற்கு அவளை விட்டு விலகி இருந்தான்.

வைஷு: " நான் சொன்னேன் தானே?

அன்பு: " சரி போ சாப்பிடு, சாப்பிட்டு கிளம்பு வெளிய போவோம்"

வைஷு : " நீங்களும் வாங்க சேர்ந்து சாப்பிடுவோம்"

அன்பு: " காலை சாப்பாடே லேட் நான், நீ போய் சாப்பிட்டு வந்து கிளம்பு சீக்கிரம்"

வைஷு சாப்பிட்டு வர, அன்பு கிளம்பி இருந்தான்.

வைஷு: “வெளிய போங்க, புடவை மாத்தணும்.”

அன்பு: " போணுமா? கண்டிப்பா?"

வைஷு: " ஆமா போணும்"

அன்பு எழுந்து வெளியில் சென்று விட, வைஷு புடவை மாற்றி வெளியில் வர, இருவரும் வெளியில் கிளம்பினர்.

கோவையில் உள்ள தாரவியல் பூங்காவிற்கு, எங்கும் பச்சை நிறம் தான். மாலை நேரம் என்பதால் குளுமையாக இருந்தது. இருவரும் பூங்கா முழுதும் சுற்றி, நிறைய கதை பேசி, சில செல்ஃபிகள் எடுத்து, பிறகு பூங்கா விட்டு கிளம்பினர்.

பூங்காவின் யூ ட்யூப் லிங்க்:

https://youtu.be/S9xrmyfLKzI

ரொம்ப அழகாக இருக்கும், நானும் என் கணவரும் முதல் சந்திப்பின் அப்போது இங்கு தான் சென்றோம். மருதமலை போகும் வழியில் இருக்கு, கோவை மக்கள் சென்று வாருங்கள். மனதிற்கு இதமான இடம். ஸ்ட்ரெஸ் பஸ்டர் அந்த இடம்.

பின் கோவில் சென்று வழிபாடு செய்து விட்டு, ஹோட்டலில் சாப்பிட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கும் இரவு உணவு வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

வைஷு சில வேலைகள் முடித்து, மாடி வந்து குளித்து அறை வர, அன்பு கீழே இன்னும் டிவியில் மூழ்கி இருந்தான். அரை மணி நேரம் கழித்து அறை வந்தவன். கதவை சாற்றி விளக்கு அணைத்து அவள் அருகில் வந்தான்.

வைஷு: " என்ன? எனக்கு தூக்கம் வருது"

அன்பு: " சரி தூங்கு"

வைஷு: " இவ்வளவு நேரம் என்ன டிவி?"

அன்பு: " டிவி கூட பார்க்க கூடாதா?"

அவளை அணைத்து அருகில் இழுத்து காதில் கூறினான்.

அன்பு: " உன்னை இனி யாரும் விடியற வரை கூப்பிட கூடாது, அதான் அங்கேயே இருந்து எல்லாம் உதவியும் செய்து கொடுத்து, எல்லாரும் தூங்கின அப்புறம் வந்தேன்"

வைஷு: " என்ன அறிவு என் புருஷனுக்கு?"

அன்பு: " என்ன கிண்டலா ?அவசரப்பட்டு, அவசரப்பட்டு பாதி வழி கூட போகாம பிரியறதுக்கு இது மேல்"

வைஷு: " போதும் போதும் இன்னிக்கி ஒரு நாளே இவளோ இன்ப அதிர்ச்சி போதும்"

அன்பு: " வாயாடி, நீ தான் எனக்கு முன்னாடியே மாடிக்கு வந்துட்டியே"

வைஷு: " ஆமா, நீங்க ஆசையா வரதும், பாதில விலகி போறதும் போதும்"

அன்பு: " அப்போ பால்…

வைஷு அவன் இதழ்களை இதழ் கொண்டு பூட்டி இருந்தாள். அவன் அவளை இன்னும் இறுக்க, அறை முழுக்க அவளின் முனங்கல் சத்தம், சத்தம் கேட்டு அவன் வேகம் சேர்க்க, வேர்வை குளியலில் அவளின் உள்ளே அவன் கரைந்தான்.

:purple_heart:

13. அவள் வந்துவிட்டாள்

காலையில் வைஷ்ணவி எழும் போது அன்பு செல்வன் அருகில் இல்லை. அவள் எழுந்து குளித்து உடை மற்றும் போது அன்பு காபி எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

வைஷு: " நேத்து மாதிரியே சீக்கிரம் கிளம்பி வேலைக்கு போய்ட்டீங்க போலன்னு நினைச்சேன்"

அன்பு: “நேத்து கொஞ்சம் வேலை, இன்னிக்கி பொறுமையா போன போதும்.”

வைஷு: " அப்போ வேலைக்கு போகணுமா?"

அன்பு: " ஏன் போக வேண்டாமா?"

வைஷு: " கோவை குற்றாலம் போலாம் சொன்னீங்க?"

அன்பு: " வேலை இருக்கு டா, கண்டிப்பா போலாம் பட் இன்னிக்கு இல்லம்மா"

வைஷு: " சரிங்க"

அன்பு: " ஏன் ஸ்ருதி இறங்குது குரல்ல?"

வைஷு: " அதெல்லாம் ஒன்னும் இல்லை"

அன்பு: " இங்க பாரு கண்டிப்பா இந்த வாரம் போறோம் சரியா?"

வைஷு: " சரிங்க"

அன்பு: " சரி நான் கிளம்புறேன், காபி குடி, மதியம் நான் வர மாட்டேன். சாப்பிட்டு நல்ல ரெஸ்ட் எடு"

அன்பு அவள் கன்னத்தில் முத்தம் வைத்து சென்று விட்டான்.

வைஷு பின் அவள் வேலைகளில் மூழ்கிவிட, நேரம் போனது தெரியவில்லை. மாலை நான்கு மணிக்கு வீட்டின் அழைப்பு மணி அடிக்க, லலிதா கதவு திறந்து பார்க்க அங்கு லக்ஷ்மியும், சண்முகமும் வந்து இருந்தனர். வைஷு அவள் அறையில் துணி மடித்து கொண்டு இருந்தாள். லக்ஷ்மி அவளை தேடி மேலே வர, வைஷு மகிழ்ச்சியாக அவள் தாயிடம் ஒட்டி கொண்டாள்.

லக்ஷ்மி: " எப்படி தங்கம் இருக்க"

வைஷு: " ரொம்ப நல்லா இருக்கேன்."

லக்ஷ்மி: " மாப்பிள்ளை எப்படி இருக்காரு? நீ சந்தோசமா இருக்கியா? எந்த குறையும் இல்லை தானே?"

வைஷு: " அம்மா, ஒரே கேள்வி எப்போ பார், நான் நல்லா இருக்கேன், என்னை அவரு நல்லா பார்த்துக்கராரு, எந்த வசதியும் குறை இல்லை, அவரும் ரொம்ப நல்லா இருக்காரு"

லக்ஷ்மி: " நீ அம்மா ஆகி ஒரு பொண்ணை கட்டி குடுக்கும் போது தெரியும், சரி வா கீழ உங்க அப்பா உன்னை பார்க்க காத்து இருப்பாரு"

வைஷு, லக்ஷ்மி இருவரும் கீழே வர, வைஷ்ணவி அவள் தந்தை உடன் பேசி கொண்டு இருக்க, லலிதா அனைவருக்கும் காபி கொடுக்க, குடித்து முடித்து விட்டு, லக்ஷ்மி பேச ஆரம்பித்தார்.

லக்ஷ்மி: " அண்ணி வைஷுக்கு தாலி பிரிச்சு போடணும், அதான் அதை பத்தி பேசலாம் வந்தோம்"

லலிதா: " நானும் பேசணும் இருந்தேன், கல்யாணம் ஆகி முதல் மாசமே செஞ்சுடனும் இல்லையா?" அன்பு வேலையில் இருந்து வந்ததும் அவன்கிட்ட பேசிட்டு சொல்றேன் அண்ணி"

சண்முகம்: " நல்ல நாள் வார வெள்ளிக்கிழமை வருது, சரின்னு சொன்னா நாங்க ஏற்பாடு எல்லாம் பண்ணிடுவோம்"

லலிதா: " அப்போ வெள்ளிக்கிழமை வெச்சுடுவோம்."

அப்போது அங்கு நீலகண்டன் வர அவரோடு பேசிவிட்டு, அன்பை பார்க்க நீண்ட நேரம் காத்து இருந்தும் அவன் வரவில்லை. பொறுமை இழந்து வைஷ்ணவி அன்புக்கு அழைப்பு கொடுக்க, அது பிஸி என்று வந்தது. பின் இருவரும் அன்பை கேட்டதாக கூறி விட்டு சென்று விட்டனர்.

இரவு எட்டு மணிக்கு அன்பு வந்து சேர, வைஷ்ணவி சமையல் செய்து கொண்டு இருந்தாள். அன்பின் அம்மா அவனின் அத்தை, மாமா வந்த செய்தியை கூறிவிட்டு, அவர்கள் சொன்ன செய்தியும் கேட்டு விட்டு அன்பு சம்மதம் கூறினான். பின்பு அனைவரும் இரவு உணவு முடித்து அவரவர் அறை சென்றனர்.

வைஷு கோபத்தோடு அறை உள்ளே சென்றாள். அன்பு எதுவும் பேசாது அவளை பார்க்க, அவள் எதுவும் பேசாது படுத்து கொண்டாள்.

அன்பு: " கோவமா? வந்துல இருந்து ஒரு சிரிப்பு கூட இல்ல ஏன்? எதாவது என் தப்பு இருந்தா சொல்லு, சரி பண்ணிகறேன்"

வைஷு: " தப்பு எல்லாம் இல்லைங்க, என் மனசு தான் கோபமா இருக்கு, என் மைண்ட் தெளிவா தான் இருக்கு, திருப்பி போன் செய்யற நிலைமை இருந்து இருந்தா, நீங்களே கால் பண்ணி இருப்பீங்க தானே, மதியம் பேசல அதான் கோவமா இருக்கு மனசு"

" அப்பா அம்மா வேற வந்து இருந்து வெயிட் பண்ணி கூட உங்களை பார்க்க முடியலை அதுவும் கோவம். உங்க மேல எந்த தப்பும் இல்ல கொஞ்ச நேரம் குடுங்க நான் சரி ஆகிடுவேன்"

அன்பு அவளை அள்ளிக்கொண்டான்.

அன்பு: “சாரி எனக்கு புரியுது, புது ஆர்டர் நல்ல வேலை அதான் மாட்டிக்கிட்டேன்”

வைஷு: " இப்போ எதுக்கு சாரி"

அன்பு: " உன் முகம் வாடி போய் இருக்கு இல்லையா அதுக்கு"

வைஷு கன்னம் காட்ட அன்பு முத்தம் வைத்து அணைத்து கொண்டான்.

அடுத்து வந்த நாள்களில் அனைத்தும் நன்றாகவே சென்றது.

வெள்ளி அன்று காலை சொந்தம், அக்கம் பக்கம் என்று அனைவரும் வர, வைஷ்ணவியின் தாலி கோர்த்து மாற்றும் சடங்கு ஆரம்பம் ஆனது, அவள் தாலி கோர்த்து முடிய, மஞ்சள் குங்குமம் வைத்து இருவரும் பெரியவர்கள் ஆசி பெற்றனர். பின் அனைவருக்கும் புடவையும், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு என அனைத்தும் கொடுத்து, மதிய உணவு அளித்து, கோவிலில் அன்னதானமும் செய்து இருந்தனர் வைஷ்ணவி வீட்டில், கலையும் வந்து இருந்தார்.

வீட்டில் அனைவரும் கூடி இருக்க மாலை வரை அங்கு கலகலபுக்கு குறை இல்லை. மாலை கலை கிளம்ப, வைஷ்ணவி பெற்றோர் உடன் அவள் சென்று விட, அனைவரையும் வழி அனுப்பி வைத்து விட்டு வைஷு பட்டு புடவையை மாற்ற அறைக்கு சென்றாள். அவள் உடை மாற்றும் போது உள்ளே வந்தான் அன்பு. அவளை பின் இருந்து கட்டி கொண்டவன் குறும்புகள் செய்ய, அன்பின் அலைபேசி அலற, அந்த அழைப்பு சுமியிடம் இருந்து வந்து இருந்தது.

அன்பு ஒரு நொடி யோசிக்க,

வைஷு: " கால் எடுங்க, யாரோட கால் போனை பார்த்துட்டே இருக்கீங்க?"

அன்பு: " என் பழைய ப்ரெண்ட்"

அன்பு அழைப்பை தவிர்க்க, சுமி மூன்றாவது முறையாக அழைத்து கொண்டு இருந்தாள்.

வைஷு அவன் அருகில் வர, தீ பட்டது போல விலகி அறையின் வெளியில் சென்றான். வைஷு அவனுக்காக காத்து இருந்து உறங்கி போனாள்.

அன்பு தன்னிலை இழந்து இருந்தான். அவனின் குழப்பம் மீண்டும் ஆரம்பம் ஆனது.

:purple_heart:

14. அவள் வந்துவிட்டாள்

சுமி ஹாஸ்பிடலில் அமர்ந்து இருந்தாள். அன்பு அவளுக்கு அருகில் கவலையோடு அமர்ந்து இருந்தான்.

அன்பு: " இப்போ இந்த கருவை நீ களைச்சு தான் ஆகணுமா?"

சுமி: " எனக்கு இந்த குழந்தை வேண்டாம், அதும் இல்லாம இந்த குழந்தையை வெச்சு புது உறவு ஏற்படுத்த நான் தயாரா இல்லை"

அன்பு: " உனக்கு அறிவே இல்ல, மடத்தனம் பண்ற, ஈகோ உடம்பு முழுக்க உனக்கு, அவர் கூட சேர விருப்பம் இல்ல, எங்க இந்த குழந்தை இருக்கறது தெரிஞ்சா உன் புருஷன் கூட சேரணுமோ பயம். அதுக்கு இந்த சின்ன உயிரை அழிக்க நிக்குற இல்லையா?"

சுமி: " என் வாழ்க்கை முடிஞ்சு போயிடுச்சு, அதும் அவர் கூட இனி என்னால வாழ முடியாது, அவர் இந்த குழந்தையை காலம் முழுக்க காரணம் சொல்லி என்னை அடக்கிடுவார், எனக்கு இந்த குழந்தை மூலம் வர எந்த கடமையும், கட்டுப்பாடும் வேண்டாம்."

அன்பு: " இந்த குழந்தை உன்னோடது மட்டும் இல்ல சுமி, அவரோடதும் தான். அவருக்கு தெரியாம நீ இதை செய்ய கூடாது. நான் அதுக்கு விட மாட்டேன்"

சுமி: " நான் உன்னை எனக்கு உதவி செய்ய வர சொன்னேன், அவருக்கு இல்ல"

அன்பு: " அமிர்தா உன்னை பத்தியும் என்ன பத்தியும் தெரியாம, என்ன உனக்கு உதவி செய்ய சொல்லி கேட்டா அதான் போன வாரம் வந்தேன். இப்போ நீ செய்ய போறது அநியாயம் இதை எல்லாம் என்னால பார்த்திட்டு சும்மா இருக்க முடியாது"

(வைஷு அப்பா, அம்மா வந்த அப்போ அன்பு சுமி கூட தான் ஹாஸ்பிடல் வந்து இருக்கான், அமிர்தா ஹெல்ப் கேட்டதினால், அன்பு உன் பாடு கஷ்டம் டா இனி, வைஷ்ணவி உன் பின்னாடி நின்னுட்டு இருக்கா, இனி பேச போறதை கேக்க போற, நஸ்டம் அன்புக்கு தான்.)

சுமி: " அப்போ என் மேல உனக்கு அக்கறை இல்ல அப்படி தானே?"

அன்பு: “அக்கறையில் தான் சொல்றேன் சுமி. அமிர்தா, அப்புறம் உன் வீட்டுக்காரர் ரெண்டு பேர் கிட்டயும் சொல்லு இதை, நீ செய்றது தப்பு”

சுமி: " உன் அக்கறை என்மேல இருக்கட்டும் என் புருஷன் மேல வேண்டாம்"

அன்பு: " குழந்தையை களைக்க வேண்டாம் சுமி, எவ்ளோ பேர் குழந்தை இல்லன்னு அழுகுறாங்க தெரியுமா? இந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு சொல்லு? பெரியவங்க நம்ம செய்ற தப்புக்கு தண்டனை குழந்தைக்கு எதுக்கு தரணும்? "

சுமி: " இந்த குழந்தைக்கு தான் அப்பா இல்லையே, அவருக்கு வேற பொண்ணு மேல இல்லையா இப்போ காதல்"

அன்பு: " எல்லாத்தையும் நீ தானே விட்ட? ஈகோ விட்டு போனது யாரு? நீ கிளம்பு வீட்டுக்கு போ, நான் அமிர்தாகிட்ட பேசறேன் இதை பத்தி, நான் பார்த்துக்கறேன் விடு"

அவர்களின் டோக்கன் ரத்து செய்துவிட்டு அன்பு சுமியுடன் கிளம்பி விட, வைஷ்ணவி அவள் தாயுடன் கிளம்பி இல்லம் சென்றாள்.

வைஷ்ணவி மனதிற்குள் ஆயிரம் கேள்வி, கிளம்பி வந்த போது இருந்த மகிழ்ச்சி அவள் முகத்தில் இல்லை என்று லக்ஷ்மி கவனித்து கொண்டார்.

லக்ஷ்மி: " என்ன டா ஆச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? என்ன டென்ஷன் ?"

வைஷு : " அம்மா, நான் உன்கிட்ட ஒன்னு கேக்கட்டுமா? நம்ம ஒருத்தர் மேல நம்பிக்கை வெச்சு இருக்கோம். ஆனா அதும் உண்மை இல்லைன்னு தெரிய வந்தா என்ன செய்யனும்?"

லக்ஷ்மி: " வைஷு, யாரை நம்பின? யார் ஏமாத்தினா? என்ன சொல்ற?"

வைஷு: " என் ஃப்ரெண்ட் ஒருத்தி மா, வேற ஒரு பையன் கூட ஹாஸ்பிடல் வந்து இருக்கா, அவங்க பேசுறது எல்லாம் கேட்டேன். அவளை ரொம்ப நம்பினேன் ஆனா அவ அப்படி இல்ல"

லக்ஷ்மி: " ஒட்டு கேட்டியா வைஷு?"

வைஷு: " அம்மா ஒட்டு கேக்கணும் போகல, ஆனா அவளை பார்த்ததும் ஆர்வமா போனேன் கொஞ்சம் பக்கத்தில் போனதும் தான் கண்ணு தெரிஞ்சுது, அவங்க பேசினது தான் கவனிக்க தோணுச்சு, சுற்றம் மறந்து அவங்க பேசினது அப்படி, அதில் தான் இதெல்லாம் கேட்டேன்".

லக்ஷ்மி: " கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், அவ கிட்டயே போய் கேளு, உன்னால முடிஞ்ச உதவி செய், அவ கண்ணு வழியா பாரு, எல்லாம் புரியும்."

வைஷு அவள் அத்தைக்கு அழைத்து ஒரு வாரம் அம்மா வீட்டில் இருக்கிறேன் என்று கூறி விட்டு அலைபேசி அணைத்து ஒரு ஓரம் போட்டு விட்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அன்பு காலையில் பேசியது அவள் முன் மீண்டும் வந்து சென்றது.

காலையில் அவள் எழும் போது அன்பின் கைவளைவில் படுத்து இருந்தாள். அவள் எழுந்து கொள்ள அவனை விட்டு விலகிய போது இன்னும் இறுக்கி அவனோட சேர்த்து,

அன்பு: " இப்போவே எழுந்து எங்க போற?"

வைஷு: " எங்க போவேன், ரெஸ்ட் ரூம் போறேன்"

அன்பு: " போய்ட்டு வா, உன்கூட பேசணும்."

வைஷு: " என்னால உங்களை புரிஞ்சுக்க முடியல, எப்போ சிரிப்பீங்க, எப்போ மொறைப்பீங்க எதும் தெரில, இப்போ கொஞ்சிக்கொஞ்சி பேசறீங்க, நைட் தொட்டதும் எழுந்து வெளிய போறீங்க, என்ன தான் உங்க மனசுல குழப்பம்?"

அன்பு அவளை இழுத்து ஒரு முத்தம் கொடுத்து,

அன்பு: " ரொம்ப சரி குழப்பம் தான், உன்கிட்ட சொல்லிட்டா தான் நிம்மதி எனக்கு, போ ஃப்ரெஷ் ஆகிட்டு வா"

வைஷு: " என்ன சொல்லுங்க அப்புறம் போறேன்"

அன்பு: " என்னை நம்புறியா வைஷு?"

வைஷு: " என்னங்க கேள்வி இது? உங்களை நம்பாம வேற யாரை நம்பி இந்த வீட்டுக்கு வந்தேன். இனி இப்படி கேட்காதீங்க"

அன்பு அவள் மடியில் படுத்து கொண்டான்.

அன்பு: " நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் வைஷு, நான் உன்கிட்ட இதை சொல்லாதது என் தப்பு தான். மன்னிச்சிடு, சொன்னா நீ அப்போ எப்படி எடுத்துப்பான்னு எனக்கு தெரியாது அதான் சொல்லல, இப்போ என் வைஷு என்னை வெறுக்க மாட்டா, விலகி போக மாட்டா, என்னை முழுசா நம்புறா இது போதும். "

வைஷு: " என்னங்க என்ன விஷயம் சொல்லுங்க, எதுவா இருந்தாலும் சரி செய்ய உங்க கூட நான் இருக்கேன்"

அன்பு அவளை கட்டி கொண்டான், அவளின் இதழ் பருகி,

அன்பு: " லவ் யூ வைஷு", கொஞ்சம் பொறுத்துக்கோ செல்லம், என் குழப்பம் போனதும் உன்கிட்ட சொல்லிடுறேன்"

வைஷு : " லவ் யூ டூ அன்பு செல்வன்."

அன்பு: " நல்லா இருக்கு இனி என் பேர் சொல்லியே கூப்பிடு"

வைஷு: " தப்புங்க அது, ஆசையா இருந்தா மட்டும் கூப்பிடுவேன்"

அன்பு: " உன் இஷ்டம் போ போய் காபி போட்டு எடுத்துட்டு வா, நான் வெளிய கிளம்பனும் வேலை இருக்கு"

வைஷு: " நான் அம்மா வீட்டுக்கு போறேன், ஹாஸ்பிடல் போகனும் சொன்னாங்க கூட போய்ட்டு வரேன்"

அன்பு: " போய்ட்டு ரெண்டு நாள் அங்க இருந்துட்டு வா, நைட் மட்டும் நான் வரேன்"

வைஷு அவனை கட்டி முத்தம் வைக்க, பின் சீண்டி கொண்டே இருவரும் கிளம்பி சென்றனர்.

வைஷு மனம் எதேதோ சொல்ல, எதுவும் புரியாது முதல் முறை தன்னிலை மீறி அழுதாள். எதோ இழந்த வலி. காதில் கேட்டது உண்மை தானே? அவர் அந்த குழந்தைக்கு அப்பாவா? என்ன உண்மை சொல்ல இருக்கார்? சுமிக்கு இவருக்கும் என்ன சம்பந்தம்? வைஷு கேள்வியில் குழம்பி கொண்டு இருக்க, அன்பின் அழைப்பு வந்தது.

:purple_heart:

15. அவள் வந்துவிட்டாள்

வைஷு அன்பின் அழைப்பு எடுக்க,

அன்பு: " எங்க இருக்க? வீட்டுக்கு வந்தச்சா?"

வைஷு: " வந்துட்டேன்"

அன்பு: " ஏன் குரல் சரி இல்ல, டாக்டர் என்ன சொன்னாங்க?"

வைஷு: " அதெல்லாம் எதும் இல்ல, அம்மாக்கு இது நார்மல் செக் அப் எதும் இல்லன்னு சொல்லிட்டாங்க"

அன்பு: " சரிம்மா, சாப்பிட்டியா?"

வைஷு: " இல்லை இனி தான், நீங்க"

அன்பு: " வீட்டுக்கு போகல, ஹோட்டல் தான் சாப்பாடு"

வைஷு: " உங்களுக்கு வீட்டு சாப்பாட்டை விட ஹோட்டல் தானே பிடிக்குது"

அன்பு: " புரியல, என்ன சொல்ற?"

வைஷு: " நான் ஹோப்ஸ்ல இருக்க என் ப்ரெண்ட் மஞ்சு வீட்டுக்கு போக போறேன், ஒரு வாரம் அவ கூட தான் இருக்க போறேன்."

அன்பு: " சரிடா போய்ட்டு வா, ஆனா ஒரு வாரம் ரொம்ப அதிகம், ரெண்டு மூணு நாள் போதாதா?"

வைஷு: " ஏன் போறேன், எதுக்கு கேக்க மாட்டீங்களா?"

அன்பு: " எதுக்கு கேக்கணும்? இது உன் சுதந்திரம், உன் ப்ரெண்ட் வீட்டுக்கு சொல்லிட்டு தானே போற? வேற என்ன கேக்கணும்?"

வைஷு: " கேளுங்க ஏன்னு"

அன்பு : " சொல்லு"

வைஷு: “அவளோட லவ்வர் இவளையும் லவ் பண்ணிட்டே அவன் பொண்டாட்டியை ஏமாத்திட்டு இருந்து இருக்கான், அதான் ஆறுதல் சொல்ல போறேன்”

அன்பு: " சரி டா, பாரு எதும் உதவி தேவைப்பட்டால் கூப்பிடு"

வைஷு: " சரிங்க"

அன்பு: " வைஷு, நேரத்துக்கு சாப்பிடு, தூங்கு, என்கூட தினம் பேசு சரியா? ஒரு வாரம் முழுசா இருந்துறதா வைஷு, சீக்கிரம் வந்துடு, இன்னிக்கி நைட் வரட்டுமா? நாளைக்கு தானே போற? என்னடா இப்படி கேட்டிட்டு இருக்கான் நினைக்காத"

வைஷு: " இல்ல இப்போவே கிளம்பிட்டேன்"

அன்பு: " அப்போ இரு நான் வந்து கூப்பிட்டு போறேன்"

வைஷு: " இல்ல நீங்க வர வேண்டாம், என் வண்டி இருக்கு அதுல என் ஃப்ரெண்ட் வந்ததும் போகனும்"

அன்பு: " சரி, லஞ்ச் வரேன். இரு உன்னை பார்க்கணும் போல இருக்கு"

வைஷு: " என்ன இப்ப உங்களுக்கு? எதுக்கு இப்போ இவளோ கேள்வி? நான் தான் கிளம்பிட்டேன் சொல்றேன், அதையே பேசிட்டு இருக்கீங்க? நான் போன் வெக்குறேன்"

வைஷு அழைப்பை முடிக்க, அன்பு மீண்டும் அழைத்தான் .

வைஷு: " என்ன?"

அன்பு: “சாரி வைஷ்ணவி எதோ எண்ணத்துல கேட்டேன். அதை விடு, நீ பாரு, பத்திரமா இரு, லவ் யூ, வெக்குறேன்”

வைஷு மொபைல் தூக்கி எறிய அது நொறுங்கியது.

லக்ஷ்மி: " இது தப்பு வைஷு, உன் ப்ரெண்ட் உன்னை ஏமாத்தினதுக்கு இப்படி மாப்பிள்ளைகிட்ட உன் கோவத்தை கட்டிட்டு இருக்க? என்ன தான் உன் பிரச்சனை"

வைஷு: " என் புருஷன் என் பிரச்சனை நான் பார்த்துப்பேன்"

லக்ஷ்மி: " ஏய், வைஷ்ணவி என்னாச்சு? நீ இப்படி பேசற பொண்ணு இல்ல, உன் பொறுமை எங்க? எடுத்து எரிஞ்சு எப்போ இருந்து பேச கத்துகிட்ட?"

வைஷு லக்ஷ்மியை கட்டி அணைத்து கொண்டு அழுதாள். அவள் அழுது தூங்கும் வரை அவளை விட்டு விலகாது அவளுடனே இருந்தார். மாலை விழித்த வைஷு அவள் தோழி வீட்டுக்கு கிளம்பி இருந்தாள்.

லக்ஷ்மி: " எங்க போற? "

வைஷு: " மஞ்சு வீட்டுக்கு"

சண்முகம்: " என்னாச்சு டா, என்ன சொல்லு"

வைஷு: " அப்பா நான் மஞ்சு வீட்டுக்கு போய்ட்டு வரேன் மூணு அல்லது நாலு நாள் பிளீஸ்"

சண்முகம்: " உன் ப்ரெண்ட் எதோ தப்பு பண்ணன்னு போன் வேற ஓடச்சு வெச்சு இருக்க ஏன்?"

“வைஷு, உன் நம்பிக்கை போய்டுச்சு கோவம் இல்லையா? சரி உண்மையா தப்பு உன் ப்ரெண்ட் மேல தானா? நீ கேட்டது அரை குறையா, உனக்கு எதும் சரியா தெரியாது, முழுசா எதும் தெரியாம எதுக்கு இப்போ இவளோ கோவம், உனக்கு தப்பா தெரியறது, அவங்க கண் வழி பார்க்கும் போது சரியா இருக்கலாம். நீ பார்த்ததும் கேட்டதும் சரி தானான்னு தெரிஞ்சுகிட்டு அப்புறம் கோவப்படு.”

“தப்பா ஒருத்தரை பார்க்கறதுக்கு முன்னாடி அவங்க செஞ்ச நல்லது எல்லாம் யோசி, இதுக்கு முன்னாடி எந்த சந்தர்ப்பத்தில் இப்படி இருந்தாங்க என்று, எதையும் முழுசா தெரிஞ்சுக்க, அவங்கள முழுசா புரிஞ்சுக்க, அப்புறம் இதெல்லாம் செய், அப்போ உன் கோவம் சரி, நியாயம். கிளம்பு உனக்கு புது மொபைல் வாங்கிட்டு மஞ்சு வீட்டில் விட்டு வரேன்”

வைஷு: " சரிப்பா, நான் தனியா இருக்கணும். மொபைல் வேண்டாம் இப்போ, மஞ்சு நம்பர்ல பேசுங்க"

லக்ஷ்மி: " நாங்க பேசறது இருக்கட்டும், அன்பு எப்படி பேசுவாரு?"

வைஷு: " மஞ்சு நம்பர்ல இருந்து பேசிப்பேன்"

சண்முகம்: " தப்பு வைஷு, உனக்கும் மாப்பிள்ளைக்கும் தனிப்பட்ட பல விஷயம் இருக்கும், அது எல்லாம் மஞ்சு ஃபோனில் பேச முடியாது, நீ கிளம்பு நான் வரேன் இப்போ"

வைஷு கிளம்ப, சண்முகம் அவளுக்கு புது மொபைல் வாங்கி வந்து கையில் கொடுத்து, சிம், மெமரி கார்ட் என அனைத்தும் போட்டு, அவள் கைகளில் கொடுத்தார்.

வைஷு அதை வாங்கி வைத்து கொண்டு, தந்தை உடன் அவள் தோழி மஞ்சு வீடு சென்று அடைந்தாள்.

மஞ்சு வைஷுவை பார்த்து சிரித்து, இன்ப அதிர்வில் கட்டிக்கொண்டாள். தோழிகள் இருவரிடம் விடை பெற்று சண்முகம் சென்று விட, வைஷு மஞ்சுவை அணைத்து அழுது இதுவரை அவள் உள்ளே இருக்கும் குழப்பம் அனைத்தும் கூறி அழுதாள்.

அன்பு இரவு இல்லம் வந்து அவன் மொபைல் பார்த்து அவன் அனுப்பிய எந்த குறுஞ்செய்தியும் அவளை சேரவில்லை என்று அறிந்து கொண்டான். அழைப்பு கொடுத்தால் சுவிட்ச் ஆப் என்றே வந்தது. அன்பு உண்ணாது படுக்கையில் சரிய, வைஷ்ணவி மதியம் பேசியது அவள் முன் வந்து சென்றது.

தூக்கம் வருவேனா என்றது, தூக்கம் இன்றி நடை பயின்று, பின் காலையில் எழுந்து பார்க்க அவன் கண்ணு சிவந்து இருந்தது. ஆர்வமாய் அவன் அலைபேசி எடுத்து பார்க்க அது மௌனமாக இருந்தது. காலை வணக்கம் கூறியும் அதுவும் அவளை சேரவில்லை.

முதல் முதலில் காதலியின் பிரிவு வலித்தது. பிரிவு துயரை தாங்காது அன்பு தவிக்க போகிறான். வைஷு அங்கு தெளிந்து இருந்தாள். வைஷு எண் அலைபேசி உயிர் பெற, செட்டிங் அனைத்தும் சரி செய்ய, அன்பின் செய்தி அவளை சேர்ந்தது. அத்தனையும் அள்ளி அவள் அலைபேசியின் குப்பை தொட்டியில் கொட்டினாள். அவளின் எண் அழைப்பு விடுத்தது ஜீவிதாவிற்கு…

:purple_heart:

16. அவள் வந்துவிட்டாள்

வைஷு அழைப்பு விடுக்க, ஜீவி அழைப்பை எடுத்தாள்.

ஜீவி: " ஹலோ வைஷு, எப்படி இருக்க? இவளோ காலையில் போன்?"

வைஷு: " நல்லா இருக்கேன் அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க? என் ஞாபகமே இல்லை தானே?"

ஜீவி: " அப்படி இல்ல வைஷு, நான் உனக்கு அறிமுகம், அன்புக்கு தோழி, நானும் நீயும் பேசினா உனக்கு என்மேல பொறமையோ, கோபமோ தான் வரும். அவனை பத்தி சாரி, அன்பு பத்தி எனக்கு தெரிஞ்சது நான் சொல்ல, உரிமையில் நீ பேச அது மனகசப்பு ஆக கூடாது. எனக்கு ஒரு லிமிட் இருக்கு இனி உங்க லைஃப் ல, நான் அதில் சரியா நிக்குறேன்."

வைஷு: " சரி தான். உங்களை மாறி எல்லாரும் இருந்தா பிரச்சனை இல்ல"

ஜீவி: " அப்படி யாரு பிரச்சனை பண்ண?"

வைஷு: " சுமி"

ஜீவி: " என்ன சொல்ற வைஷு?"

வைஷு: " அக்கா சுமி யாரு? அன்புக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? அவ மேல இன்னும் அவரு என்ன ஃபீலிங்? அவ வந்த நாளில் இருந்து எங்களுக்குள்ள எதோ சரி இல்ல, எதும் தெரியாது நீங்க சொல்ல முடியாது. ஏன்னா நீங்க அவரோட ப்ரெண்ட்"

ஜீவி: " சொல்றேன் டா, அவரு வேலைக்கு கிளம்பிட்டாரு, நான் அவரை அனுப்பி வெச்சுட்டு பேசட்டுமா?"

வைஷு: " அக்கா, நான் அவர் மேல சந்தேகப்படல, உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க கேக்குறேன், அவருக்கு இது எதுவும் தெரியாது, நான் என் ப்ரெண்ட் வீட்டில் இருக்கேன், நீங்க இப்போ அவருக்கு போன் பண்ணி எதாவது பேசினா நான் இனி அங்க திரும்பி போக மாட்டேன். உங்க நண்பனுக்கு நீங்க உதவி செய்யணும் ஆசைப்பட்டா என்கிட்ட மட்டும் பேசுங்க"

ஜீவி : " பத்து நிமிஷம் டா"

வைஷு ஜீவியுடன் பேசி முடிக்க, அன்பின் அழைப்பு வந்தது. அதை அவள் எடுக்காமல் இருக்க,

மஞ்சு: " எடு டீ, அண்ணா போன் பண்ணுறாரு"

வைஷு: " வேண்டாம் என் குழப்பம் முழுசா தெளியுல, அவர் மேல நெருப்பு அள்ளி கொட்டிடுவேன் பேசினா"

மஞ்சு அழைப்பு எடுக்க,

அன்பு: " வைஷு, என் மேல கோவமா?"

மஞ்சு: " அண்ணா அவ குளிச்சுட்டு இருக்கா, அப்பறம் பேசுங்க, இல்ல நான் பேச சொல்றேன்."

அன்பு: " நல்லா இருக்கீங்களா, உங்களை பத்தி வைஷு நிறைய சொல்லி இருக்கா, கல்யாணத்துக்கு நீங்க வராதது எனக்கும் வருத்தம் தான், அப்புறம் வைஷ்ணவி கிட்ட சொல்லி பேச சொல்லுங்க பிளீஸ்"

மஞ்சு: " ரொம்ப நல்லா இருக்கேன் அண்ணா, நீங்க எப்டி இருக்கீங்க? வேலை அதான் வரமுடியல, ஒருநாள் மீட் பண்ணுவோம் அண்ணா."

அன்பு: " நான் இருக்கேன், நல்லா இருக்கணும்னா என் பொண்டாட்டியா பேச சொல்லுங்க."

மஞ்சு: " குளிச்சுட்டு வரட்டும் கண்டிப்பா பேச சொல்றேன் அண்ணா"

மஞ்சு அழைப்பு முடிக்க, வைஷு குளிக்க சென்று இருந்தாள். பலருக்கு பல ஆயிரம் குழப்பங்கள் தெளிவது ஷவரின் கீழ் தான். வைஷ்ணவி தெளிய தொடங்கி இருந்தாள். மஞ்சுவின் நேற்றைய வார்த்தைகள் தெளிவுக்கு அவளை அழைத்து சென்றது.

நேற்று மாலை:

வைஷு மஞ்சு வீடு வந்து, மதியம் இது வரை நடந்த அனைத்தும் கூற,

மஞ்சு: " உன் எண்ணம் சரி இல்ல, உன் மனசு எதுக்கு இப்போ இப்படி தப்பு கண்டு பிடிக்குது அண்ணா மேல, நீ அதை முதலில் கட்டுக்குள்ள வை"

வைஷு: " முடில டீ"

மஞ்சு: " அதான் காதல். மனசு அவரை இழந்துருவோம் பயப்படுது இல்லையா? நல்லா யோசி புரியும். காலைல வரைக்கும் இந்த வெறுப்பு, கோவம், இயலாமை எல்லாம் இருந்துச்சா? இப்போ எங்க இருந்து வந்துச்சு? அவர்கிட்ட கேள்வி கேட்டு, அவரை காயப்படுத்தி, உன் சந்தேகம் தீர்த்து இருக்கலாம் தானே? ஏன் செய்யல?

வைஷு: " பயம் தான், காதல் தான், வேற ஒரு பொண்ணோட அதும் கருகளைப்பு பத்தி பேசிட்டு இருந்ததை கேட்டு அதிர்ச்சி, என்னால அவரை விட்டு தர முடியாது. அதும் இல்லாம இன்னிக்கி தான் கேட்டாரு என்னை முழுசா நம்புறியான்னு, நான் அவரை நம்பாம வேற யாரை நம்ப போறேன்? நம்புறேன் சொல்லிட்டு அவரை கேள்வி கேக்கவும் முடியுல, இயலாமை கோவமா வெடிக்குது அவர் எனக்கு லவ் யூ சொல்லினதும் அவர் மேல கோவம் எதுக்கு தெரில மொபைல் ஓடச்சுட்டேன்."

மஞ்சு: " அவ்ளோ தான் வைஷு, நீ தெளிவு ஆகிட்ட, இப்போ தெரிய வேண்டியது அந்த சுமி யாருன்னு தான். அவ யாரு, அவளுக்கும் அண்ணாக்கும் என்ன சம்பந்தம்? அது தெரிஞ்ச போதும் நீ முழுசா சரி ஆகிடுவ, யார்கிட்ட கேட்டா தெரியும் உன் அண்ணிக்கு தெரிஞ்சு இருக்கும் தானே?"

வைஷு: " அண்ணிக்கிட்ட வேண்டாம் அவர் காதுக்கு போய்டும், ஜீவி அக்கா கிட்ட கேட்டு பார்ப்போம்"

மஞ்சு: " தெரியுமா அவங்களுக்கு? அமிர்தா அக்காக்கிட்ட கேட்டு பார்த்தா?"

வைஷு:" அமிர்தா அக்காக்கு தெரியாது அவரே சொன்னாரு"

மஞ்சு: " சரி அப்போ ஜீவி அக்காக்கு கால் பண்ணு"

வைஷு: " இப்போ வேண்டாம் காலையில் பேசுவோம்"

மஞ்சு: " அப்போ வா கொஞ்சம் நேரமும் வெளிய போய்ட்டு வருவோம்"

பின் இருவரும் கோவில் சென்று விட்டு, வெளியில் உண்டு விட்டு இல்லம் திரும்பினர். வைஷு தோழியுடன் பழைய கதை பேசி தூங்கி இருந்தாள்.

இன்று:

வைஷு நினைவில் இருந்து நீங்கி இருந்தாள். குளித்து முடித்து வெளியில் வரவும் ஜீவியின் அழைப்பு வந்தது.

ஜீவி: " ஹலோ வைஷு இப்போ நான் ஃப்ரீ என்ன கேக்கணும் கேளு"

வைஷு: " சுமி யாரு? சுமிக்கும் அவருக்கும் நடுவுல என்ன உறவு?

ஜீவி: " இதை நீ அன்புக்கிட்ட கேக்கலாம் வைஷு, தெளிவான பதில் கிடைக்கும்"

வைஷு: " நீங்க சொல்லுங்க அக்கா பிளீஸ், அவரே சொல்ற வரை நான் இதை பேசமாட்டேன் போதுமா?

ஜீவி: " வைஷு, சாரி. சுமியும் அன்பும் லவ் பண்ணுங்க, 2 வருஷம். அப்புறம் கல்யாணம் பண்ண சுமிக்கு விருப்பம் இல்ல அன்பை விட்டு பிரிஞ்சு போய்ட்டா, இப்போ அவளுக்கும் அவளோட புருஷனுக்கும் சண்டை, சுமி இப்போ கர்ப்பமா இருக்கா"

வைஷு நொறுங்கி இருந்தாள்.

ஜீவி: " இதெல்லாம் அவன் தான் சொல்லி இருக்கணும். சுமி அன்பை விட்டு போய்ட்டா, நீ இப்போ பார்க்கிற அன்பு கிடைக்க, கலை அக்காவும் விசுவும் ரொம்ப போராடி இருக்காங்க, அவன் இப்போ சிரிக்கிறது கூட உன்னால தான்"

வைஷு: " போதும் அக்கா, எதுவும் சொல்லாதீங்க. நான் திருப்பி கால் பண்றேன். தயவு செஞ்சு இதெல்லாம் அவர்க்கிட்ட சொல்லாதீங்க"

ஜீவி: " சரி, நீ நல்லா இருக்க தானே? எப்போ என்ன வேணும்னாலும் கூப்பிடு"

வைஷு அழைப்பை துண்டித்து விட்டு அழுதாள். மனம் முழுக்க பாரம் இப்போது.

மஞ்சு: " என்ன சொன்னாங்க, ஏன் அழுகுற"

வைஷு: " அவருக்கு என்மேல காதலே இல்ல மஞ்சு, அவ நினைப்பு தான், அவளுக்கு ஓடி ஓடி சேவகம் பண்ணிட்டு இருக்காரு, எல்லாம் முடிஞ்சு போன மாதிரி இருக்கு"

:purple_heart:

17. அவள் வந்துவிட்டாள்

மஞ்சு: " என்ன தான் சொன்னாங்க ஜீவி?"

வைஷு: " அவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் சொன்னாங்க"

மஞ்சு வைஷ்ணவி கன்னத்தில் அறைந்தால். வைஷு கன்னம் பிடித்து மஞ்சுவை பார்க்க,

மஞ்சு: " உனக்கு அறிவு மழுங்கி போய்டுச்சு தானே? நான் தப்பான முடிவு எடுக்கும் போது என்ன சரி செய்யரதே நீ தானே? இப்போ உனக்கு என்ன ஆச்சு? எப்பவும் வைஷ்ணவி முடிவு தெளிவா இருக்கும். இன்னிக்கு எதும் சரி இல்ல, மனசை கட்டுகுள்ள வை."

வைஷு: " இல்ல அவரை என்னால விட்டு தர முடியாது, அவ மேல அவருக்கு என்ன அக்கறை இப்போ?, எதுக்கு அவளுக்கு உதவி செய்ய போய் நின்னுட்டு இருக்காரு? இன்னும் அவளை மறக்கல தானே அப்போ?"

மஞ்சு: " வைஷு ஏன் டீ இப்படி யோசிக்கிற, இது சரி வராது முழுசா எதும் நீ கேக்கல, தேவை இல்லாம புலம்பதே சரியா"

இந்த முறை மஞ்சு அழைத்து ஜீவிடம் அறிமுகம் செய்து கொண்டு விவரம் கேட்டாள். ஜீவியும் சொல்ல தொடங்கி இருந்தாள். அன்பின் காதலை பற்றி, வாங்க நம்மாலும் போய் கேட்டு வருவோம். ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் போய்ட்டு வருவோமா?

சரியாய் மூன்று வருடம் முன்பு, அன்பு வீட்டில் அனைவரும் அமிர்தா - ஸ்ரீனிவாசன் வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்தனர். அன்பின் கண்கள் அவளை தேடி அலைந்தது. சுமி, அமிர்தாவின் பள்ளி தோழி, அன்பு அமிர்தாவின் பள்ளி விட்டு அரசு பள்ளி மாறிய நேரம் அங்கு சேர்ந்து, அமிர்தாவின் தோழி ஆகி இருந்தாள். எதிர் வீடு என்பதால் அமிர்தாவின் இல்லம் வரும் போது எல்லாம் சுமியை கண்டு இருக்கிறான் அன்பு. அமிர்தா மூலம் அப்போது அறிமுகமும் இருவருக்கும் உண்டு. பள்ளி முடித்து அன்பு கல்லூரி சென்று விட இவர்கள் நட்பில் பிரிவு. அலைபேசி அழைப்புடன் முடிந்து விட்டது இந்த நட்பு. அமிர்தா - அன்பு நட்பே அலைபேசி நட்பு ஆன பின் சுமியை எப்படி பார்த்து இருப்பான்?

ஆனால் அவனுள் சுமி இருந்தாள். எந்த பெண்ணிடமும் இல்லாத ஈர்ப்பு அவனுக்கு சுமி மேல் இருந்தது. கல்லூரியில் கூட எந்த பெண்ணின் வலையிலும் விழாமல் வந்தவன், விரும்பியே சுமியிடம் விழுந்து விட காத்து இருந்தான்.

சுமி சேலை கட்டிய ஓவியமாய் உள்ளே வர, அன்பின் இதயம் இருமடங்கு வேகத்தோடு துடித்தது. கலை அருகில் அமர்ந்து பேசிய அவளை அன்பின் கண்கள் ஆச்சரியம் பூசி கொண்டு பார்த்தது, பள்ளி பருவத்தில் பார்த்த சுமித்ரா இல்லை அவள். பருவம் தந்த மாற்றம் அவளை பேரழகி ஆக்கி இருந்தது. அமிர்தா திருமணம் முடிந்து திரும்பும் வரை அவன் கண்களுக்கு ஓய்வு இல்லை. கலை அக்காவிற்கு சுமி அவளின் எண்ணை கூறும் போது ரகசியமாக குறித்து கொண்டான்.

திருமணம் முடிந்து அனைவரும் வீடு திரும்பி சென்று விட, அடுத்த பத்து நாளில் அமிர்தா அமெரிக்கா கிளம்பி இருந்தாள். அன்பு அவனின் மொத்த தைரியத்தையும் திரட்டி அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

ஒரு நாள் கழித்து பதில் வந்தது யார் என்று, இவன் விவரம் சொல்ல தெரியவில்லை என கூறி அவள் முடித்துவிட அன்பும் எதுவும் பேசவில்லை.

ஒரு வாரம் கழித்து மன்னிப்பு கூறி அன்புக்கு குறுஞ்செய்தி வர, அன்பும் சுமியும் பேச ஆரம்பித்து இருந்தனர். அன்புக்கே இது புதிது தான். முதல் முறை ஒரு அதிகம் அறிமுகம் இல்லாத பெண்ணோடு நட்பு. ஆனால் அவன் மனம் கவர்ந்த பெண் என இன்பம். நட்பு காதலாக வேண்டிய நாளும் வந்தது.

கலையை வேலையில் இருந்து அழைத்து வர சென்றவன், கலை வேலை முடிய நேரம் ஆகும் என்று கூற, சுமியுடன் பேசிக்கொண்டு இருந்தான். அவள் வீட்டில் அழைத்து சென்று விடுமாறு கேட்டதும் அவளை அழைக்க சென்றான். முதல் முறை அவன் மனம் கவர்ந்த பெண்ணுடன் பயணம். அவளின் வீடு இருக்கும் வீதியின் முன்னே அவளை விட்டு அவன் வண்டியை திருப்பி நடந்து போகும் அவளை கண்ணாடியில் பார்த்து கொண்டு இருக்க, சுமி நின்று திரும்பி அன்பை பார்த்து சிரிக்க, கண்ணாடியில் அதை கண்ட அன்புக்கு அவள் சிரிப்பில் பூத்தது காதல்.

ஒரு மாதம் முடிந்து இருந்த நிலையில் அன்பு அவனின் மனதில் உள்ள காதலை சொல்ல எந்த மறுப்பும் இல்லாது சுமியும் ஏற்றுக் கொள்ள காதல் வானில் இருவரும் இறக்கை இன்றி பறந்தனர். காதல், அரட்டை, வெளியில் செல்வது என்று காதல் வளர்த்தனர். அன்பின் கண்ணியம் அவனை சுமியை விட்டு ஒரு அடி தள்ளியே வைத்து இருந்தது.

அன்பு சுமியை தன் மனதில் மனைவி என்ற இடம் கொடுத்து, தன் வருங்காலம் அவளோடு தான் என்று அவள் மேல் பைத்தியக்காரத்தனமான காதலை வைத்து இருந்தான். அவளின் எண்ணம் அறியாது, பல கனவை வளர்த்து இருந்தான். அவனின் காதல் கோட்டை வான் தொடும் அளவு வளர்ந்து கொண்டு இருந்தது. அவன் மனக் கோட்டை முழுதாய் வான் தொடும் முன் அது உடைந்து தரை தொடும் நேரமும் வந்தது.

அன்பு செல்வனுக்கு துபாயில் அவன் எட்டு மாதம் முன்பு சென்று வந்து இருந்த நேர் முகம் தேர்வில் அவனுக்கு வேலை கிடைத்து இருந்தது. அன்புக்கு வந்த நல்ல வாய்ப்பு, மகனாய் அவன் தோளில் இருக்கும் பொறுப்பு அவனை வேலைக்கு செல் என்று ஒரு புறம் கூற, அவனோ சுமியை பிரிந்து எப்படி செல்வது என்ற குழப்பத்தில் இருந்தான். வேலைக்கான நியமன
உத்தரவு வரட்டும் என்று இருந்தான்.

அந்த வார இறுதி, வீட்டில் அனைவரும் வெளியில் சென்று இருப்பதாகவும், தானே தான் சமைக்க வேண்டும் என்று அன்பு சுமியுடன் பேசிக்கொண்டே சமைக்க, அவள் எனக்கும் வேண்டும் என்று கேட்க, அன்பு விளையாட்டாய் வீட்டிற்க்கு வா என்று அழைக்க, சுமி உண்மையாகவே அவன் வீடு வருகிறேன் என கேட்க, தயங்கி தயங்கி அன்பு சம்மதம் கூற வீடு வந்து சேர்ந்தாள் சுமி.

அவளுக்கும் உணவு பரிமாறி, உண்டு, ஒன்றாய் படம் பார்த்து கொண்டு இருந்தனர். சுமி அவன் அருகில் அமர்ந்து கொள்ள அன்பு விலகி செல்ல, அவன் கை பிடித்து அவள் அருகில் அமர்ந்து அவன் தோள் சாய்ந்து இருந்தாள். தனிமை தந்த தைரியம் சுமி அன்பின் கன்னத்தில் முத்தம் தர, அவனோ நிலை தடுமாற ஆரம்பித்து இருந்தான். நெருக்கம் குறைந்து அது இதழ் முத்தமாக மாறியது. தன்னிலை உணர்ந்து முதலில் விலகியது அன்பு.

சுமியை காண முடியாது அவன் தலை குனிய, சுமியும் எதுவும் பேசவில்லை. அவளை கிளம்புமாறு கூறி வழி அனுப்பி வைத்தான். அன்புக்கு தன் மீதே கோவம் வந்த போதும், அவள் தன்னவள் என்ற எண்ணம் அதை சரி செய்து இருந்தது. அதன் பின் சுமியிடம் அவன் விளையாட்டாக கூட எதுவும் பேசுவது இல்லை.

அன்பின் உத்தரவு வந்தது. அவனின் தவிப்பு அதிகமானது, சுமியின் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை தேடி கொண்டு இருந்தனர். சுமி இதை கூற அன்பு அவளை தனியே சந்திக்க அழைத்து இருந்தான். மாலை நேரம் ஒரு உணவகத்தில் அமர்ந்து இருந்தனர். அன்பு ஸ்வீட் ஆர்டர் செய்து விட்டு தனக்கு வேலை கிடைத்து இருப்பதை கூறியதும் சுமி மகிழ்ந்தாள். அடுத்து அன்பு கூறிய விஷயம் சுமியின் தலையில் இடியாய் இறங்கியது.

அன்பு: " உன்ன விட்டு இருக்க முடியாது சுமி, நான் உங்க வீட்டுக்கு வந்து பேசறேன், நம்ம கல்யாணம் முடிவு பண்ணி நிச்சயம் முடிச்சுட்டு நான் துபாய் போலாம் இருக்கேன் சுமி, உனக்கு சம்மதம் தானே?"

சுமி: " என்ன கல்யாணமா? நம்ம ரெண்டு பேருகும்மா?"

அன்பு: " ஆமா சுமி"

சுமி: " இல்ல அன்பு முடியாது, எனக்கு உன்ன கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல அன்பு, சொந்த வீடு கூட இல்லாத உன்னை நான் எப்படி கல்யாணம் பண்ணுவேன்?"

அன்பு காலின் கீழ் பூமி நழுவியது. அவளின் வார்த்தை தந்த அதிர்வு அவனின் இதயத்தின் செல்கள் அனைத்திலும் ஊசி ஏற்றியது போல வலி.

அன்பு: " என்ன பேசற சுமி? நம்ம காதலிக்கிறோம் இல்லையா? கல்யாணம் பண்ண தானே?"

சுமி: " ஆமா லவ் பண்றேன் சொன்னேன், கல்யாணம் பண்ணிக்கறேன் எப்போ சொன்னேன்? உங்க தகுதி என்ன அன்பு? காசு இல்லாத உங்க புலம்பல் கேட்டு கேட்டு எனக்கு சலிச்சு போய்டுச்சு. அது இல்லாம நான் எதிர் பார்க்கிற வாழ்க்கையை உங்களால தர முடியாது."

அன்பு மூச்சு விட மறந்து அமர்ந்து இருந்தான். அவன் முன் இனிப்பு வர, அதற்கு பணம் செலுத்தி விட்டு வீடு வந்து சேர்ந்தான். அடுக்கி வைத்த உணர்வுகள் கண்ணீராய் வெளியில் வந்தது. சுமி அவனை என்ன செய்து இருக்கிறாள் என்று அன்புக்கு புரிய, அவன் மீதே அவனுக்கு கோவம்.

ஆம் சுமி அவனை உபயோகித்து தூக்கி எறிந்து இருந்தாள். அவனுக்கு தான் இது காதல். அவளுக்கு அவன் நேரம் செலவு செய்ய கிடைத்த அடிமை. காதல் இல்லை என தெரிந்ததும் தான் புத்தி வேலை செய்தது.அவளின் சுயநலம் வேண்டி தன்னை உபயோகித்து தூக்கி எறிந்து இருப்பது புரிந்தது. காணும் அனைவரும் அவனை ஏளனமாக பார்ப்பது போல உணர்வு. அவனுள்ளே முடங்கினான். அவன் மீது அவனுக்கே வந்த வெறுப்பு, நாடு விட்டு நாடு சென்றான் சுற்றம் மறக்க,
யாருடனும் பேசாது, சிரிப்பு மறைந்து போய், தனிமை சிறையில் அவனை அவனே சிறைப்படுத்தி கொண்டான்.

கலையும், விசுவும் எதேதோ பேசி, புத்தி சொல்லி, பாசத்தை அள்ளி கொடுத்து, அழுது மிரட்டி இரண்டு வருட சிறையில் இருந்து அன்பு வெளியே வந்தான். ஜீவி அப்போது அவளின் திருமண பந்தத்தில் இணைந்து இருந்த நேரம், அன்பு எதுவும் கூறாது துபாய் சென்று இருக்க, இரண்டு வருடம் பிரிந்து இருந்தாள்.

பின் ஜீவி, விசு, கலை மூவரும் தரும் அறிவுரையில் அன்பு அவளின் எண்ணத்தை விட்டு வெளியே வந்து இயல்பு நிலை அடைந்து இருந்தான்.

இந்த சமூகத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணை காதல் என்று கூறி ஏமாற்றி இருந்தால் இந்நேரம் நீதி கேட்டு இருப்பார்கள், தண்டனை கிடைத்தது இருக்கும். பாவம் அன்பு செல்வன் ஆண் அல்லவா? ஒரு ஆணை ஒரு பெண் காதல் என கூறி ஏமாற்றி சென்றால் அதை யார் கேட்பார்கள்? அந்த ஆணுக்கு நீதி எங்கே? ஆணுக்கும் மனம், காதல், வலி, உணர்வு அனைத்தும் உள்ளது தானே? அவனுக்கும் பெண்ணுக்கு கிடைக்கும் அதே நீதி கிடைக்குமா? கிடைக்காது.

பின் அன்பின் தாயும், கலையும் போராடி அவனுக்கு பார்த்த பெண் தான் வைஷ்ணவி.

ஜீவி சொல்லி முடிக்க, வைஷ்ணவி கிளம்பி இருந்தாள்.

மஞ்சு: " எங்க டீ போற"

வைஷு: " என் வீட்டுக்கு"

மஞ்சு வைஷுவை கட்டி கொள்ள அங்கு தெளிவு பிறந்தது.

வைஷு லக்ஷ்மியிடம் கூறி விட்டு அவளின் புகுந்த வீடு சென்று இருந்தாள்.

:purple_heart:

18. அவள் வந்துவிட்டாள்

வீடு வந்த வைஷு அன்பை தேட, அன்பு வீட்டில் இல்லை, பின் அவள் அன்பின் அம்மாவிடம் கேட்க அன்பு வேலை விஷயமாக சென்னை சென்று விட்டதாக கூற, வைஷுவின் முகம் இருண்டது.

லலிதா: " என்னடா அவனுக்காக தான் வந்த போல"

வைஷு: " இல்ல அத்தை, அவர் என்கிட்ட சொல்லவே இல்லை இந்த விஷயத்தை அதான் லேசா வருத்தம்"

லலிதா: " உன் போன் நிறைய முறை முயற்சி பண்ணி இருகான், உன் போன் எடுக்கல, என்கிட்ட சொல்லிட்டு தான் போனான். நீ போன் பண்ண உன்கிட்ட விவரம் சொல்லிட சொல்லி போதுமா?" வைஷு லேசாய் சிரிக்க,

லலிதா: " என் பையனை என்கிட்ட உனக்கு தூது சொல்ற அளவுக்கு மாத்தி வெச்சு இருக்க"

என லேசாக அவள் காதுகளை பிடிக்க அவள் சிரித்து கொண்டே சமையல் செய்ய தயார் ஆகி இருந்தாள். இரண்டு நாள்களும் அவளுக்கு அவனை காண வேண்டும் என்று தவிப்பு. அன்பிடம் இருந்து அதன் பின் ஒரு குறுஞ்செய்தி கூட வரவில்லை. இவளும் அனுப்பவில்லை, காரணமே இல்லாது முன் யோசனை இன்றி தன் செய்த காரியத்தில் தான் கணவன் மௌனமாக இருக்கிறான் என தெரிந்து கொண்டாள்.

பேசினால் தானே பிரச்சனை முடியும்? இங்கு யார் முதலில் பேசுவது என்ற தயக்கம். அங்கு அன்போ கைபேசியை கட்டிக்கொண்டே இருந்த வேலை அனைத்தும் செய்தான். அம்மாவிடம் பேசிய போது தெரிந்து போனது அவள் வந்துவிட்டாள் என்று, இருந்தும் ஏன் எனக்கு தகவல் இல்லை? இன்னும் தன் மேல் என்ன கோவம்? எதுக்கு? தவறு என்ன என்பது கூட அறியாது, அறியவும் முயற்சி செய்யாமல் தான் இருந்தான். இந்த அமைதியும் பிரிவும் காதலை வளர்க்கும் என்றும் அவள் யோசிக்க நேரம் தர வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான்.

இதோ இரண்டு தினங்கள் ஓடியது. அன்பும் வீடு வந்து சேர்ந்தான். அவன் அம்மாவிடம் பேசி விட்டு அவன் அறை செல்ல, அங்கு வைஷு தூங்கி கொண்டு இருந்தாள். அவளை சில நிமிடம் பார்த்துவிட்டு, உடை மாற்றி அவனும் உறங்கி போனான்.

காலையில் வைஷ்ணவி எழும் போது அன்பு மொபைல் பார்த்து கொண்டே காபி அருந்தி கொண்டு இருந்தான். அவள் எழுந்து அமர, அவனோ எதுவும் பேசாது, அவள் புறம் திரும்பி கூட பார்க்காமல் அமைதியாக இருந்தான். வைஷ்ணவி அவன் கவனம் திருப்ப எதேதோ செய்ய, அன்பு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்தான்.

அவளின் முயற்சி எல்லாம் வீண் ஆக எதுவும் பேசாது அவளும் கீழே செல்ல, அங்கு வீட்டில் யாரும் இல்லை. அன்பு அவள் முன் வந்து நின்று சிரிக்க, அவ்ளோ அழுதாள். அன்பு அருகில் வர அவனை தடுத்தாள். அவனோ அவளை இழுத்து பக்கத்தில் அமர்த்தி,

அன்பு: " அப்போ என்கூட மேடம் பேச மாட்டீங்க அப்படி தானே?"

வைஷு: " நீங்களும் தான் என் கூட பேசல"

அன்பு: " நான் பேசினா தான் மேடம்க்கு பிடிக்கலையே"

வைஷு: " யார் சொன்னா? எதோ கோவத்தில் பேசிட்டேன்"

அன்பு: " மொபைல் தூக்கி போடலாமா? அதும் கால் கட் பண்ணாம? நொறுங்கி போனது போன் இல்ல என் மனசு."

" உனக்கு என்ன கோவம், ஏன் டென்ஷன் இதெல்லாம் நீ சொல்ல வேண்டாம் டா, உனக்கு என்னை அடிக்க, கொல்ல கூட உரிமை இருக்கு ஆனா எதுவா இருந்தாலும் ஒரு முறை என்கூட பேசு சரியா?"

“ஒரு வேளை உன் கோபத்துக்கு நான் தான் காரணமா இருந்தா சாரி, இது வரை மனசுக்கு தெரிஞ்சு நான் உனக்கு எந்த துரோகமும் செய்தது இல்ல, என் வாழ்க்கையில் உனக்கு இருக்கற உரிமை வேற யாருக்கும் இல்லை. மறுபடியும் சாரி வைஷு, உன் குரல் கேட்டு மூணு நாள் ஆச்சு தெரியுமா, ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன், எங்க பேசினா என்மேல கோவம் அதிகம் ஆகுமோனு பேசல, நீ ஏன் பேசல? இன்னும் கோவமா?”

வைஷு அவனை கட்டிக்கொண்டு அழ, அவனுக்கு காரணமே புரியவில்லை. இருந்தும் நெஞ்சோடு சாய்த்து கொண்டான். அவள் அழுகை குறைய,

அன்பு: " பசிக்குது சாப்பிடலாமா?"

வைஷு: " இருங்க தோசை சுட்டு தரேன்".

அன்பு: " நான் இட்லி சாம்பார் செஞ்சுட்டேன்"

வைஷு: " என்னங்க சொல்றீங்க?"

அன்பு: " அம்மாவும் அப்பாவும் ஒரு கல்யாணத்துக்கு போய் இருக்காங்க, வசந்த் டூர் போய் இருக்கான், நான் வரணும் வெயிட் பண்ணி இருக்கான். இன்னிக்கு கிளம்பிட்டான். நான் சீக்கிரம் எழுந்துட்டேன், அதான் அவனுக்கும் நமக்கும் சேர்த்து சமையல் செஞ்சேன். "

வைஷு: " நான் போய் எடுத்து வெக்கறேன்"

அன்பு: " கோவம் போய்டுச்சா என் பொண்டாட்டி? அப்போ எனக்கு ஊட்டி விடுங்க பிளீஸ்"

வைஷு ஊட்டி விட, அன்பு சாப்பிட்டு விட்டு வைஷுவிர்க்கு பரிமாறி சாப்பிட்டு முடித்தனர்.

அன்பு: " லஞ்ச் வெளிய போலாம், செய்யாதே. கீழ வேலை முடிஞ்சா, சீக்கிரம் ரூம் வரணும் சரியா நாலு நாள் ஆச்சு நான் பால் குடிச்சு"

வைஷு வெக்கத்தில் தலை குனிய,
அன்பு கன்னத்தில் முத்தம் வைக்க,

வைஷு: " பால் குடிக்கணும் தெரியுது, உதவி செய்யலாம் தானே அப்போ"

அன்பு: " வேலை எல்லாம் இன்னிக்கே செய்யணுமா? பால் குடிச்சிட்டு தெம்பா செய்யலாமே?

அன்பு அள்ளி கொண்டு அறை சென்று இருந்தான். அவள் வெக்கம் சீண்டி, நாலு நாள் பிரிவை தீர்த்து கொண்டான். இருவரும் தூங்கி எழும் போது மாலை மூன்று மணி, வைஷு கீழ் சென்று வேலை முடித்து குளித்து, ஜூஸ் செய்து வந்து அன்பை எழுப்ப, அவனும் எழுந்து கிளம்பி அவளை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.

அவர்கள் சென்றது வைஷ்ணவி இல்லத்திற்கு,

வைஷு: " சொல்லவே இல்ல நீங்க ஏன்?"

அன்பு: " சொன்னா எனக்கு எங்க பால் கிடைக்கும்? நீ இங்க வரதுல மட்டுமே குறியா இருப்ப அதான், அதும் இல்லாம அன்னிக்கி போன் ல போட்டு ஓடச்சு எதோ பிரச்சனை மாதிரி டென்ஷன் பண்ணி இருக்க, அவங்க பயந்து போய் இருப்பாங்க நமக்குள்ள எதும் பிரச்சனை வந்துருமொன்னு அதான் இப்போ நம்மளை பார்த்தா அதெல்லாம் இல்லைன்னு தெரிஞ்சு நிம்மதியா இருப்பாங்க"

வைஷு அவனை பக்கம் இழுத்து ஒரு முத்தம் வைக்க, வாசலில் சத்தம் கேட்டு வந்த மஞ்சு முழிக்க, அன்பு அங்கே பார் என கண் காட்ட, வைஷு மஞ்சுவை பார்த்து அசடு வழிய, மஞ்சுவும் அன்பும் சிரிப்பை அடக்கி கொண்டே உள்ளே சென்றனர்.

மஞ்சு: " லக்கி டீ வைஷு நீ, அண்ணா உண்மையாவே நல்லவரு தான், அவரை புரிஞ்சுக்க, நான் அவர் வாசலில் பேசினதை கேட்டேன்"

வைஷு: “ம்ம், ஆமா. அதான் அவர்க்கிட்ட அதை பேச கூடாது முடிவு பண்ணிட்டேன்”

மஞ்சு: " வைஷு, ஒரு டவுட்டு அது என்ன டீ பால் கிடைக்காது? அம்மா வீட்டுக்கு கூப்பிட்டு போகலனா பால் கூட கண்ணுல காட்ட மாட்ட போல"

மஞ்சு கேட்டுகொண்டே ஹால் வந்து சேர்ந்து இருக்க, முன்னே வந்த அன்பு சண்முகம் வெளியே சென்று இருக்க, லக்ஷ்மியுடன் பேசிவிட்டு, லக்ஷ்மி கொடுத்த காபியை குடித்து கொண்டு இருக்க, மஞ்சு கேட்ட கேள்வியில் அன்பு வாய் விட்டு சிரிக்க, வைஷ்ணவி மஞ்சுவை முறைக்க, அவள் முகத்தில் பொய் கோவம் மீறி வந்த வெக்கம் சொல்லியது அர்த்தம் என்ன என்று, பின் சண்முகம் வர பேசி சிரித்து, மஞ்சுவுடன் சேர்ந்து வைஷுவை சீண்டி, கிண்டல் செய்து இரவு உணவு முடித்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர்.

:purple_heart:

19. அவள் வந்துவிட்டாள்

அன்பின் வாழ்க்கை மிக இன்பமாக கழிந்து கொண்டு இருந்தது. காதல் பெருகியது. அவனின் வேலைப்பளு ஒன்றை தவிர வேறு எதும் அவர்களை பிரிக்கவில்லை.

வைஷு முழு தெளிவோடு ஒரு பெரும் திட்டம் தீட்டி கொண்டு இருந்தாள். ஜீவி, மஞ்சு, என இருவரும் உடன் நிற்க, அவளுக்கு தேவையான உதவி உடனுக்கு உடன் கிடைத்தது.

அன்று அன்பின் சம்பளத் தேதி, அன்பு தான் வீட்டின் மொத்த வரவு செலவு பார்ப்பது. அன்பு கணக்கு பிரித்து எழுதுவதை பார்த்த வைஷு,

வைஷு: " ஆமா உங்க மொத்தம் சம்பளமும் வீட்டு செலவுக்கு போய்டுது, அப்போ உங்க தனிப்பட்ட செலவு எல்லாம் எதுல செய்றீங்க?"

அன்பு: " அது நான் சில கம்பெனி டிசைன் போட்டு தரேன் இல்லையா அதில் சரி பண்ணிப்பேன். அதும் இல்லாம எனக்கு என்ன பெரிய செலவு?"

வைஷு: " உங்களுக்கு இல்ல சரி, எனக்கு இருக்கும் தானே?"

அன்பு: " என்ன வேணும் என் வைஷுக்கு? முதல் முறை கேட்டு இருக்க, தரலாமா வாங்கி தரேன் சொல்லு"

வைஷு: " தரலாமா? சரி. தினம் ஒரு முழம் மல்லிகை பூ வேணும். அப்புறம் என் ஐபோன் மாத்தணும் அப்பா பழைய வேர்ஷன் வாங்கி கொடுத்துட்டார்."

அன்பின் முகம் மாற, வைஷு புன்னகையோடு என்ன என கேட்க,

அன்பு: " ஐபோன் அடுத்த மாசம் மாத்தி தரேன் வைஷு, இந்த மாசம் பூ மட்டும் ஓகே?"

வைஷு: " என்ன அடுத்த மாசமா? இப்போ வேணும் சொன்னா அடுத்த மாசம் தான் கிடைக்குமா? அப்போ ஒரு மாசம் முன்னாடியே சொல்லனுமா எல்லாம்?"

அன்பு: " இப்போ என்ன ஆச்சு எதுக்கு கோவம், நான் தான் வாங்கி தரேன் தானே சொல்றேன்?"

வைஷு: “நான் உங்ககிட்ட முதல் முதலா ஒன்னு கேக்குறேன் நீங்க அடுத்த மாசம் சொல்றீங்க? இது வரை என்ன கேட்டு இம்சை பண்ணி இருக்கேன்? எங்க அப்பாகிட்ட இப்போ சொன்னாலும் மாத்தி குடுத்துருவாரு, அது உங்களுக்கு அசிங்கம் அதான் உங்ககிட்ட கேட்டேன், அடுத்த மாசம் சொன்னா யாருக்கு தான் கோவம் வராது?”

அன்பு: " சரிம்மா, வாங்கி தரேன் நாளைக்கு போவோம் சரியா?"

வைஷு: " இல்ல இன்னிக்கு போலாம் பிளீஸ்"

அன்பு: " சரி போவோம்."

வைஷு: " சரி நான் கிளம்பி வரேன்"

அன்பு அவன் கையில் உள்ள பணத்தை பார்த்தான். இந்த மாத செலவுக்கு சரியாக இருந்தது. இதில் எதை எடுத்து அவளுக்கு ஐபோன் வாங்குவது? அவனின் சம்பளமே ஐபோனின் பாதி தானே? அன்பு என்ன செய்ய என்ற யோசனையில் இருக்க, வைஷு கிளம்பி வந்து அவன் முன் போகலாமா என்று கேட்க,

அன்பு: " எந்த மொபைல் வேணும்? "

வைஷு: " ஐபோன் டென் எக்ஸ் அறுபத்தி நாலு ஜிபி, கோல்டு கலர். அது தான் இப்போ லாஸ்ட் ரிலீஸ்."

அன்புக்கு தலை வலித்தது. அவளை கை நீட்டி அருகில் அழைத்தான். அவள் அருகில் வந்து கேள்வியுடன் அமர,

அன்பு: " அவ்ளோ காசு என்கிட்ட இல்ல வைஷு, நீ ஆசையா கேக்குற, புரியுது. ஆனா என் சம்பளம் அவ்ளோ இல்ல, இதுவே நான் எந்த செலவும் செய்யாம நான் போட்ட கணக்கு படி போன தான் பத்தும், இல்ல அந்த செலவை சமாளிக்க நான் கடன் தான் வாங்கனும், என் சேமிப்பில் இப்போ வெறும் பதினஞ்சு ஆயிரம் தான் இருக்கு, அதை வேனா உன்கிட்ட தரேன் அத தவிர காசு இல்ல சாரி டா"

வைஷ்ணவி அறிவாள் அவனின் பதில் என்ன என்று ஆனாலும் அவன் சில விஷயங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றே போட்ட திட்டம் தானே இது, அவன் கை இருப்பு என்ன என நேற்றே ஜீவி, அன்பிடம் உதவி கேட்பது போல் கேட்டு வைஷுவிடம் கூறிவிட்டாள்.

அனைத்தும் கேட்ட வைஷு எதுவும் பேசவில்லை. உடை மாற்றி விட்டு கீழே சென்று விட்டாள். அவளின் முகம் சோகம் பூசியது அன்புக்கு புரிந்து போனது. உணவு உண்ணும் போதும் முகம் காட்டவில்லை. அன்பு இரவு அறை வந்தும் அவள் வரவும் இல்லை. எங்கே என்று பார்க்க செல்ல, அன்பின் அப்பா ஹாலில் உறங்க, லலித்தாவுடன் அவள் அறையில் உறங்கி இருந்தாள்.

கல்யாணமான நாளில் இருந்து இது தான் முதல் முதலில் அன்பை அவள் ஒதுக்கி வைப்பது. துடித்து தான் போனான். அத்தனை காசை ஒரு மொபைலில் கொட்டுவதா என்று தோன்றினாலும், அவள் வளர்ந்த முறை வேறு தானே? ஒரே பெண் கேட்டது கிடைத்து பழகி போனவள். இது தன்னிடம் இருந்து வரும் முதல் மறுப்பு என்று புரிந்து கொண்டான். காலையில் இதை பேசி சரி செய்ய வேண்டும் என்று நினைத்து அறை சென்று யோசித்து யோசித்து தூங்கி போனான். இங்கு இவளோ அழுது அவனிடம் மனதில் மன்னிப்பு வேண்டி கொண்டு உறங்கி போனாள்.

விடிந்தது. அன்பு கிளம்பி கீழே வரும் வரை அவள் அறை வரவில்லை, அவன் காலை உணவு உண்ண அமர, வைஷுவை அழைத்தான்.

லலிதா: " அவ கோவில் போய் இருக்கா டா, நீ தூங்குறனு சொல்லாம போய்ட்டா போல, சரி சாப்பிடு"

அன்புக்கு உணவு தொண்டையில் இறங்குவேனா என்றது. பேருக்கு உண்டு கிளம்பி சென்றான். அவன் சென்ற பின்னே அவள் இல்லம் வந்தாள். மதிய உணவுக்கு அவனால் வர முடியாது போக, மாலை கிளம்பி அவளுக்கு என மல்லிகை பூ வாங்கி சமாதானம் செய்துவிடலாம் என்று வீடு வந்தான். மீண்டும் அதே கண்ணாமூச்சி விளையாட்டு, இன்று அவன் கீழே அமர்ந்து விட, வேலை எல்லாம் முடித்து வெளியில் சமையல் அறை விட்டு வெளியே வந்தவள் எதுவும் பேசாமல் மாடிக்கு சென்றாள்.

அன்பு ஒரு சிறு புன்னகையோடு மேலே செல்ல, அவளோ உடை மாற்றி கீழே பாய் போட்டு படுத்து உறங்கி இருந்தாள். அன்புக்கும் தெரியும் அவள் உறங்கவில்லை என்று, அவள் அருகில் அமர வைஷு எழுந்து அமர்ந்து முறைக்க,

அன்பு: " என்ன கோவம் இது? எதுக்கு இப்போ தள்ளி தள்ளி போற? நீ கேட்ட மொபைல் இலட்ச ரூபாய் வைஷு, அவ்ளோ காசை ஒரு ஃபோனில் போடணுமா? வேற மாடல் சொல்லு வாங்கி தரேன்."

வைஷு: " இப்போ என்ன வேணும் உங்களுக்கு?"

அன்பு: " ஏய் வாயாடி, என்ன கேள்வி இது, என் வைஷு தான் வேணும், இந்தா மல்லிகை பூ"

வைஷு அவள் உடை விலக்க, அன்பு அதிர்ந்து போனான்.

அன்பு: " என்ன என்ன பண்ற?"

வைஷு: " நீங்க தானே நான் வேணும் கேட்டீங்க"

அன்பு அவளை அடிக்க கை ஓங்கி விட்டு பின் எதுவும் பேசாது எழுந்து கட்டிலில் சென்று படுத்து கொண்டான். வைஷு வாய் மூடி குலுங்கி அழுக, அங்கே அவனும் அழுது இருந்தான் அவனின் நேசமும், காதலும் அவமானத்தில் துடித்தது.

இரவு முழுவதும் இருவரும் முதுகு காட்டி, சுவர் வெறித்து தூங்காமல் களித்தனர். இன்ப நினைவில் மூழ்கிய அறை முதல் முதலில் சோகம் தாங்கி, அமைதியில் நிறைந்து போனது.

அடுத்த நாள் காலை மஞ்சு வந்து இருந்தாள். அவள் வந்ததே பூகம்பம் உண்டு செய்ய, அதும் வைஷுவின் அறிவுரையின் பெயரில், மஞ்சு வந்த வேலை சிறப்பாய் முடிந்தது. அன்பு கோவத்தில் முதல் அடியை வைஷுவின் கன்னத்தில் பரிசளித்து இருந்தான். வார்த்தை வெடித்து இருவரும் சண்டையில் முடிக்க, முதல் முறை ஓங்கி ஒலித்தது அவள் குரல் அன்பின் சுயகெளரவம் சீண்டி அவனை கோபத்தில் பேச வைத்து இருந்தாள். லலிதா, நீலகண்டன், வசந்த் என அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே நிற்க தான் முடிந்தது. விஷயம் கலையின் காதுகளுக்கு செல்ல அவர் தாய் வீட்டிற்கு கிளம்பி இருந்தார்.

:purple_heart: