இருளின் நிழல்கள்

இருளின் நிழல்கள்
0

இருளின் நிழல்கள்

‘எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா’! என்று செல்போன் ஒலிக்க தனது போனை எடுத்தான் ரித்திக்.

“ஹேய் பொண்டாட்டி. என்னடி திடீர்னு கூப்டு இருக்க? ஏதாவது முக்கியமான விஷயமா?” தன் காதலியிடம் கொஞ்சலாக கேட்டான் ரித்திக்.

“ஆமாடா புருஷா.என்னமோ தெரியல உன் கூடவே இருக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.நாளைக்கு வரியா?” என்று தனது அன்பு காதலனிடம் ஆசையுடன் கேட்டாள் யாழினி.

“என்ன ஆச்சு என் பொண்டாட்டிக்கு? இவ்வளவு ஆசையா இந்த மாமன் மேல! நீ இப்படியெல்லாம் பேச மாட்டியே?” என்று அவன் சொல்ல,

“டேய் ஒழுங்கா இருந்துக்கோ நாளைக்கு நீ வா அப்ப தெரியும்” என்று தன் குரலை உயர்த்தி கூற,

“அய்யய்யோ சாரி செல்லம். ஏதோ மைன்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமாக பேசி விட்டேன். பாவம்டி நான்” என கெ(கொ)ஞ்சலாக அவன் சொல்ல,

“உன்கிட்ட நெறைய பேசனும் டா கேட்கணும். அதனால தான் நான் உன்ன வரச் சொல்றேன்
மறக்காம நாளைக்கு எப்பவுமே நாம மீட் பண்ற அந்த இடத்துக்கு பார்க்க வந்துரு” என அவள் சொல்லும் அவளின் மன எண்ணத்தை அறிந்து கொண்டான் ரித்திக்.

“சரிடி நாளைக்கு கரெக்டா பத்து மணிக்கு நான் அங்கு இருப்பேன். நீயும் வந்துரு. ஓகே டி குட்டிமா நான் தூங்க போறேன். ஐ லவ் யூ டி பொண்டாட்டி” என்று அவன் சொல்ல,

“நானும் சீக்கிரமே வந்தர்றேன்டா புருஷா ஐ லவ் யூ டூ” என்று சொல்லிவிட்டு தன் போனை அணைத்துவிட்டு மீண்டும் மீண்டும் தன்னுள் அடங்கியுள்ள சந்தேகத்தை அனலாய் கொதிக்கவிட்டாள் யாழினி.

யாழினிக்கு தூக்கம் வரவில்லை.அவள் மனதில் பற்றி எரியும் நெருப்புக்கு ரித்திக்கின் பதில் மட்டுமே நீராய் அமையும்.

அவ்வப்போது எழுந்து நடக்கவும் செய்தாள் யாழினி. எல்லாவற்றிற்கும் காரணம் அமைந்தது மனிஷாவின் வாழ்க்கைதான்.

ஆனாலும் யாழினி இது போன்று பல முறை ரித்திக்யிடம் கேட்டுள்ளாள்.ஒவ்வொரு முறையும் கோபமில்லாமல் பொறுமையாக தன் காதலினால் அதை அழகாக அவளுக்கு எடுத்து உரைத்து இருக்கிறான் ரித்திக்.

அவளின் குறுக்கும் நெடுக்குமாய் நடந்த அந்த நடையில் உடலும் அசதிகொள்ள,நேரத்தின் நகர்வும் அதை சாதகமாக எடுத்துக் கொள்ள கண்ணை அயர்ந்தால் யாழினி.

தாமதமாக உறங்கியதால் காலையில் யாழினி எழ நேரமாகியது. இருப்பினும் அவசர அவசரமாக கிளம்பி பார்க்கிற்கு வேகமாகச் சென்றாள் தன் தோழியுடன்.

பத்து மணிக்கு வந்து விடுவேன் என்று சொன்ன ரித்திக் 20 நிமிடங்களுக்கு முன்னரே கையில் அழகிய ரோஜா பூ உடன் அவளுக்காக காத்திருந்தான்.

சற்று நேரம் கழித்து 10.35க்கு அவனை நோக்கி வர காத்திருந்த அவன் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி.

"காத்திருந்த நொடிகளிலெல்லாம்
யுகமாய் தெரிந்திடவே
காரணங்கள் புரியாமல்
களவுமனது காயங்கள் செய்கிறதே

மாற்றங்கள் செய்திடவே
மாயங்கள் கொண்டவளின்
குறுபுருவ அடியினிலே
பெருமருந்து கொண்டுவந்தாள்"

ரித்திக் அருகில் வந்தவுடன் யாமினியின் தோழி விலகிச் சென்று விட, தன் கையில் இருந்த பூவை அவள் கையில் கொடுத்து “ஐ லவ் யூ டி பொண்டாட்டி” என்று சொன்னான் ரித்திக்.

“நேத்து சார் என்னமோ சொன்ன மாதிரி தெரிஞ்சுச்சு” என்று யாழினி நீ கேட்க,

“ஓ அதுவா! உன்ன பார்க்க வரும்போது ரோஜா பூ வாங்கிட்டு வரட்டுமா? இல்ல மல்லிகை பூ வாங்கிட்டு வரட்டுமா? அப்படின்னு தானே கேட்டேன்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்ல,அவனின் தோளில் கிள்ளினாள் யாழினி.

“அதான் ரோஜா பூ வாங்கிட்டு வந்துடில. அப்புறம் என்ன நீயே வச்சு விடுடா” என்று யாழினி சொல்ல, தன் கையால் அவளுக்கு தான் வாங்கி வந்த பூவை வைத்துவிட்டான் ரித்திக்.

தன் காதலிக்கு பூ வைத்துவிடுவதில் ஆண்களுக்கு எப்போதுமே தனி ஆனந்தம் தான்.

தலையில் பூவை வைத்து விட்டு யாமினியின் முன்வந்து மண்டியிட்டு தன் காதலியின் கையில் முத்தம் ஒன்றையும் கொடுத்தான் ரித்திக்.

“டேய் பொறுக்கி. யாராவது பாக்க போறாங்க ஏன்டா இப்படி பண்ற?” என்று வெட்கத்துடன் அவள் கேட்க,

“ஏன்டி என் பொண்டாட்டி கையில நான் முத்தம் தர்றேன்.யார் பார்த்தால் எனக்கென்ன?” என அவன் சொன்னான்.

“போதும் போதும். உன்னோட வியாக்கியானம்.யாராவது பாத்தா உனக்கு பிரச்சனை இல்லை. நான் பொண்ணு! என் நிலைமையும் கொஞ்சம் யோசிச்சு பாரு” என்று யாழினி சொல்ல,

“ஏய் பொண்டாட்டி.யார் வந்தாலும் எனக்கு கவலையில்லை. பார்த்தாலும் கவலையில்லை. என் பொண்டாட்டிக்கு நான் முத்தம் கையிலயும் கொடுப்பேன். கன்னத்திலும் கொடுப்பேன். நெத்திலயும் கொடுப்பேன். உதட்டிலும் கொடுப்பேன். ஏன்னா நீ என் பொண்டாட்டி” என்று உரிமையுடனும் கொஞ்சம் அழுத்தியும் சொன்னான் ரித்திக்.

“போடா. ஏதாவது சொல்லி என்னைய பேச விடாம பண்ணிடற.ஏதோ மாயம் பண்ணி வச்சுருக்க உன் பேச்சுல. ஐ ஹேட் யூ. ஐ லவ் யூ டூ புருஷா” என்று யாழினி வெட்கத்துடன் கூறினாள்.

“சரி பொண்டாட்டி. நீ இந்த புருஷன ஹேட் பண்ணிக்கிட்டே இரு. அப்போதுதான் என் பொண்டாட்டிய நான் ரொம்ப ரொம்ப லவ் பண்ணிக்கிட்டு இருப்பேன்” என்று அவன் சொல்ல, நாணத்தில் பேச முடியாமல் நின்றாள் யாழினி.

“ஹேய் பொண்டாட்டி. என்கூட ரொம்ப நேரம் இருக்கனுமுனு சொன்னில. அந்த மரத்துக்கு பின்னாடி போயி உக்கார்ந்து பேசுவோம்” என்று அழைத்துச்சென்றான் ரித்திக்.

யாருமே இல்லாத அந்த மரத்திற்கு பின்னால் இந்த காதல் ஜோடிகள் சென்று அமர்ந்தன.

“யாழுமா. ஐ லவ் யூ” என்று அவன் சொல்ல,

“ரித்திக் உங்கிட்ட ஒன்னு கேட்கனும்” என்று அவள் கூறினாள்.

"“அதெல்லாம் ஒன்னும் பேச வேண்டாம் இந்த இடத்தில் யாரும் இல்லை.நாம் இருக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கலாமே” என்று ரித்திக் சொன்னான்.

"இல்லடா புருஷா! எனக்கு ரெண்டு நாளா நிம்மதியே இல்லை. எப்படிக் கேட்கறதுன்னு தெரியல?.அதான் யோசிச்சிட்டு இருக்கேன்"என்றாள் யாழினி.

“எப்படியோ கேட்கணும் என்கிற மனநிலையில தான் வந்து இருக்க! ஏன் மென்னு விழுங்குற. கேட்டுரு குட்டிமா” என்றான்.

“டேய் புருஷா! நான் கேட்பேன். நீ கோவிச்சுக்க கூடாது” என்று சொல்ல,

“ஹேய் பொண்டாட்டி நீ கேட்டு பேசி என்னைக்காவது நான் பீல் பண்ணி இருக்கேனா? சும்மா கேளுடி” என்றவனின் கைகளை பற்றிக்கொண்டு கேட்க தயாரானாள் யாழினி.

“உண்மையிலேயே என்னை உனக்கு பிடிச்சிருக்கா?” என தயங்கித் தயங்கி அவள் கேட்க,சற்று சத்தமாக சிரித்தான் ரித்திக்.

அவன் சிரிப்பின் காரணத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“நீ இதைத்தான் கேட்பேன்னு நேத்து நைட்டே எனக்கு தெரியும். அதனால தான் அதுக்கு மேல பேசாம தூங்கலாம்னு சொல்லிட்டேன். இல்லன்னா இப்ப நாம மீட் பண்ணிருக்க முடியாதுல” என்றான் ரித்திக்.

“நீ பேச்ச மாத்த வேண்டாம் ரித்திக்.நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்று தலை குனிந்தவாறு கேட்டாள் யாழினி.

தன் கைகளால் குனிந்திருந்த அவளின் முகத்தை உயர்த்தி, “ஏண்டி பொண்டாட்டி இப்படி கேக்குற? நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியும். ஆனால் ஏன் நீயே இந்த மாதிரி அடிக்கடி நினைச்சுக்கிறே” என்றான் ரித்திக்.

“இல்ல இல்ல ரித்திக். நான் அழகில்லை. அதுவுமில்லாம” என்று இழுத்தவள் சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு " நாளைக்கு ஒருவேளை என்னை உனக்கு பிடிக்காமல் போயிருச்சுனா? அதான்டா புருஷன் எனக்கு ஒண்ணுமே புரியாம இருக்கு" என்று ஏக்கத்துடன் கூறினாள் யாழினி.

“ஏண்டி உனக்கு தெரியாதா நான் உன்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கேன்னு? என்னைக்குமே உன் மேல இருக்கிற பாசம் குறையாது குட்டிமா” என்று அவளின் கைகளை கோர்த்து பிடித்தான் ரித்திக்.

“அதுக்காக இல்லடா எனக்கு தெரியும் நீ என்னை எவ்வளவு லவ் பண்றேன்னு ஆனால் என்னுடைய இந்த முகம் மத்த எல்லாரையும் போல இல்லையே” என்று வருத்தத்துடன் கூறினான் யாழினி.

“உங்க எல்லார் முகமும் நல்லா அழகாக இருக்கும். ஆனா என் முகம் மட்டும் தீக்காயத்துடன் இப்படி ஆயிடுச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் நீ இதை பார்க்க பார்க்க என் மேல இருக்கிற அன்பு போயிடுமோன்னு பயமா இருக்குடா” என்று அவள் சொல்லும்போது அவரின் கண்களில் நீர் ததும்பியது.

அவளின் முகத்தை தன் கரங்களால் பிடித்தவன் கட்டைவிரலால் இரண்டு கண்களிலும் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான்.

“அடியே பொண்டாட்டி! உன் முகத்துக்கு என்னடி குறைச்சல். அழகான வட்ட முகம், அளந்து வச்சு நெத்தி. கத்தி போல ரெண்டு புருவம். அதுக்கு கீழே சின்னதா ரெண்டு கண்ணு. முட்டி நிற்கிற மூக்கு. புஸ்ன்னு இருக்கிற கன்னம். அதுல திருஷ்டி பொட்டு மாதிரி கொஞ்சம் தீக்காயம், இளஞ்சிவப்பு உதடு” இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு எப்படி குட்டிமா உன் மேல வெறுப்பு வரும் என்று ரித்திக் கூறினான்.

தான் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக கண்கள் நீரை தொடர்ந்து கொட்ட, அவன் கைகளை தன் முகத்தோடு அடுத்து இருந்தால் யாழினி.

“என்கிட்ட இருக்கிற குறைகளை பார்த்து தான் உனக்கு பரிதாபத்தில காதலே வந்துச்சுன்னு என்னுடைய பிரண்ட்ஸ் சொல்றாங்க. அதான் மாமா எனக்கு இப்படி இருக்குது” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

“யாழினி நீ ஒன்ன நல்லா புரிஞ்சுக்க. நான் உங்கிட்ட இருக்கிற எந்த குறையையும் பார்க்கவே இல்லை. முதன் முதலில் பார்க்கும் போது நீ செஞ்ச சில விஷயங்கள் எனக்கு புடிச்சது. நீ பேசின பேச்சு எனக்கு பிடிச்சது. அதனால தாண்டி நானே வந்து காதல் சொன்னேன்” என்று தன் காதல் பயணத்தின் ஆரம்பத்தை கூறினான்.

“அதெல்லாம் எனக்கும் தெரியும் இருந்தாலும் எனக்குள்ள அந்த பயம் மட்டும் இன்னமும் இருக்குடா” என்று சொன்னாள்.

பலமுறை கூறியும் அவளிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை அவனால் மாற்ற முடியவில்லை. அவளை இழுத்து தன் மடிமீது படுக்க வைத்து, அவளின் தலையை வருடிக்கொண்டே அவளின் தோளில் தட்டிக்கொடுத்தான்.

தன் காதலனின் தோளும் மடியும் தரும் நிம்மதி வேறு எந்தப் பொருளாலும் காதலிக்கு கிடைப்பதில்லை.

சிறிது நேர அழுகைக்கு பின் அவளே சமாதானம் ஆனாள்.

“செல்லம் கடவுள் படைக்கும் போது எல்லோருக்கும் குறை வைத்துத்தான் படைக்கிறான். ஒரு சிலருக்கு அது வெளிப்படையாக தெரியுது. ஒரு சிலருக்கு வெளிப்படையாகத் தெரியாது.அவ்வளவுதான்டி” என்றான் ரித்திக்.

“ஆனால் எல்லோருக்கும் இந்த மாதிரி அழகான ஒரு காதல் கிடைக்கிறது இல்லையே. அதுதானே எனக்கு பயத்தை கொடுத்தது” என்றாள் யாழினி.

“நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணுனேன் தெரியலடா?. இந்த ஜென்மத்துல இப்படி பிறந்து தொலைச்சிட்டேன்” என்றாள் யாழினி

“லூசு மாதிரி பேசக்கூடாதுடி. எத்தன டைம் சொல்லி இருக்கேன் இந்த மாதிரி எல்லாம் பேசாதனு” என்றான் கோபமாக.

“பின்ன என்னடா என்னுடைய அப்பா அம்மாவே அவங்களுக்கு நான் பாரமா இருக்குன்னு என்னை கொண்டு வந்து இந்த ஆசிரமத்தில் சேர்த்துட்டு போயிட்டாங்க. கிட்டத்தட்ட நான் ஒரு அனாதை தான்” என்று அவள் சொல்லும்போது அவளின் வாயை மூடினான் ரித்திக்.

“அவங்க உன்ன வேணாம்னு விட்டுட்டு போனதால தான்டி எனக்கு நீ கிடைச்சுருக்க” என்று அவளின் வருத்தத்திற்கு ஆறுதலாக தன் காதலை கூறினான் ரித்திக்.

“அது என்னவோ உண்மைதான் டா புருஷன். ஆனாலும் எனக்கு சந்தோஷம்தான் இல்லையே! என்னடா பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று மீண்டும் அழத்தொடங்கினாள் யாழினி.

“நீ என் மேல ரொம்ப பாசம் வெச்சிருக்க. என்னை எப்போதுமே சந்தோஷமா பார்த்துக்கனுமுனு நினைக்கிற. என் மூஞ்சியில் இருக்கிற அந்த தழும்புகள் கூட உனக்கு அழகா தெரியுது. ஆனா என்னால தான்!” என்று அவள் சொல்லும்போது மேலும் பேச்சுக்கள் வராமல் அவள் தொண்டைக்குழியை அடித்தது.

“உன் கஷ்டம் புரியுது செல்லம். நான் எப்பவுமே நான் சந்தோஷமா பார்த்துக்கவேன்டி‌. நீ அழுத எனக்கும் அழுகையா வருதுடி” சொல்லும்பொழுது ரித்திக்கின் கண்களில் இருந்து வெளிவந்த கண்ணீர் அவன் மடியில் படுத்திருந்த யாழினியின் கன்னத்தில் விழுந்தது.

திடுக்கிட்டு வேகமாக எழுந்தவள் அவன் முகத்தை தொட்டு அழுதுகொண்டே “என் புருஷன் என்னால கண்ணீர் சிந்துரான்.ஆனா அது கூட தெரிஞ்சுக்க முடியாத இந்த குருடி எப்படிடா உனக்கு கடைசி வரைக்கும் சந்தோஷமாகச் பாத்துக்குவா” என்று சொல்லும் போது ரித்திக்கின் இதயம் உறைந்து போனது.

“டேய் புருஷா சொன்னா கேளுடா, என்னை கல்யாணம் பண்ணி நீ கஷ்டம் தான்டா படுவ. என்னால உன்ன சந்தோஷமா பார்க்க முடியாது” என்று தேம்பித் தேம்பி அவள் சொல்லும் பொழுது ரித்திக்கின் கண்களிலிருந்து கண்ணீர் மழைபோல கொட்டியது.

“உன்னோட தாண்டி இன்னைக்கு நான் சந்தோஷமா இருக்கேன். இன்னைக்கு நான் நல்லவனா இருக்குறதுக்கு காரணமே உன்னுடைய இந்த காதல் தாண்டி. நீ தாண்டி என்னைக்குமே எனக்கு பொண்டாட்டி.நீ மட்டும் இல்லேன்னா நான் கட்டாயம் செத்துருவேன்” என்று அவன் சொல்ல சொல்ல அவளின் கண்களிலும் இதயத்திலும் சோகங்களும் வலிகளும் அதிகமாயின.

“ஆனா என்னால இப்படி டா உன்ன சந்தோஷமாக பாத்துக்க முடியும்? நீ எப்ப சிரிக்கிற,எப்ப கோபப்படுற எதுவுமே தெரியாம! நீ என் பக்கத்தில் இருக்கிறயா தூரத்தில் இருக்குறயானு கூட தெரியாம எப்படிடா புருஷன் உன்னை நான் சந்தோஷமா பார்த்துக்குவேன். நீ நல்லா இருக்கனும்டா” என்று சொல்ல,

சிறிது நேர அழுகைக்குப் பின்னர், தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பேசத் தொடங்கினான் ரித்திக்.

“யாழினி. இறைவனோட ஒவ்வொரு படைப்பிலும் ஒரு காரணம் இருக்கு. நீ கண்ணு தெரியாம பொறக்கனுமுனு விதி. அப்படிப் பிறந்த உனக்கு நான் கண்ணாயிருக்கணும் என்பதும் அதே இறைவன் வகுத்த விதி இதை செய்ய நினைத்தாலும் மாத்தமுடியாதுடி என் பொண்டாட்டி” என்று சொல்லிவிட்டு அவளின் உச்சந்தலையில் முத்தம் ஒன்றை பதித்தான் ரித்திக்.

எதுவும் பேசமுடியாமல் அவனை மார்பில் தன் முகத்தை புதைத்து இறுக அணைத்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் யாழினி.

“நல்லா தெரிஞ்சிக்க யாழினி. எங்கள மாதிரி கண்ணு தெரிஞ்சவங்களுக்கு தான் கருப்பு சிவப்பு நெட்டை குட்டை அழகு எல்லாமே. உன்னை பொருத்தவரைக்கும் இது எதுவுமே உனக்கு தெரியாது. நீ வாங்கிட்டு வந்தது வரம். உன்கிட்ட இருந்து கிடைக்கக்கூடிய ஒரே விஷயம் அன்பு மட்டும் தான்டி.உனக்கு போலியை நடிக்க தெரியாது. நீ இறைவன் எனக்கு கொடுத்த பரிசு. அத அந்த கடவுள் நெனச்சா கூட எடுக்க முடியாது” என்று சொல்லும் போது சிலிர்த்து போனாள்.

ஆனால் அவளால் எதுவும் பேச முடியவில்லை.
அமைதியாக அவன் மார்பில் புதைந்து கண்ணீரின் மொழியை சந்தோஷமாக மாற்ற முயன்றாள்.

“ஒருவேளை உன் முகம் தீக்காயங்கள் இல்லாம அழகா இருந்தா, வயசாகும் போது தோல் சுருங்கி அழகு போயிடும். அப்போ காதலும் போகும். ஆனா இப்போ பாருடி செல்லம். எப்பவும் உன் மேல அன்பும் காதலும் குறையாது” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவளின் கண்கள் மீது முத்தமிட்டான்

தீக்காயங்கள் நிறைந்த கன்னத்தில் கண்ணீர் துளிகள் படர்ந்து படிந்த உப்பை தன் முத்தத்தால் துடைத்தான் ரித்திக்.

அழகு என்றால் என்ன என்பது அவளுக்கு தெரியாது. தனக்கு இத்தனை நாள் கண்கள் இல்லை இன்று வருந்தியவள், கடந்த சில மாதங்களாக அவனின் காதலில் விழுந்து கண்கள் இல்லை என்று ஏங்கி ஏங்கி அழுது கொண்டு இருந்தாள்.

ஆனால் தற்போது யாழினி நன்றாக புரிந்து கொண்டாள்.காதல் என்பது இரண்டு உள்ளங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது. இங்கு உடல் என்பது வெறும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் பரிமாற்ற பொருளே என்பதை உணர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்கள் இருவரும் பார்க் என்பதை மறந்து இருந்தனர் அந்த மரத்தின் பின்னால்.

சுயநினைவுக்கு வந்தவர்கள் பல கதைகள் பேச தொடங்கினர்.
நேரங்கள் கடந்து மாலை வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் அவள் தோழி அழைத்து வந்தாள்.

அப்போது யாழினியிடம் சத்தமாக, “ஹேய் பொண்டாட்டி உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்றேன்னு தான் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தேன்” என்று சொல்ல,

“என்னடா புருஷா பொடிவச்சு பேசுற” என்று அவள் கேட்க,

“சீக்கிரமே உன்னைய வீட்டுக்கு கூட்டிட்டு வரச்சொல்லி எங்க அம்மா அப்பா சொல்லிட்டாங்க. அதனால உன் கழுத்த தயாரா வச்சுக்கோ.நான் கட்டுற தாலியை தாங்குறதுக்கு” என்று பலரின் காதுகளில் விழும் படி கூறினான்.

அதை கேட்டு சந்தோசத்தில் அவன் இருக்கும் திசையை நோக்கி வேகமாக வந்தாள் யாழினி குறுக்கே எது உள்ளது என்பதைக் கூட அறியாமல்.

தன்னை நோக்கி வருபவளை கண்டவன் அவரை நோக்கி வேகமாகச் சென்று தூக்கினான்.

பார்க்கில் பலர் பார்க்கும் நேரத்தில் இந்த அழகான காதல் ஜோடி புரிதல் என்ற அன்பை மட்டும் வைத்துக் கொண்டு யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோசமாக இருந்தது.

               - சேதுபதி விசுவநாதன்
1 Like

sago arumaiyana padaipu :purple_heart:

1 Like

நன்றி அக்கா

1 Like