உன் விழியில் என் காதல்

உன் விழியில் என் காதல்
0

அத்தியாயம் - 1
பாரிஸ், பிரான்ஸ் நாட்டின் தலைநகரம். உலகத்தில் உள்ள‌ நகரங்களிலேயே மிக
அழகிய நகரம் என்று பெயரெடுத்த பாரிஸ் குறிப்பாக அதன்
அருங்காட்சியகங்களுக்கும் கட்டிடக்கலை அடையாளங்களுக்கும்
அறியப்படுகிறது.

அழகு கொஞ்சும் பாரிஸ் சாலையில் ரென்வோ கார் மிக வேகமாக சென்று
கொண்டு இருந்தது. ரென்வோ தன் வேகம் இழந்து அந்த பிரம்மாண்ட இல்லம்,
அல்ல அல்ல "மாளிகையின்" முன் நின்றது. அதில் இருந்து இறங்கினார்கள்
அபியும் நோலனும்.

அவன் வேக நடையில் உள்ளே வரவும் அந்த வீட்டின் வேலையாட்கள் அனைவரின்
முகத்திலும் மகிழ்ச்சி. அபியை அவனின் நண்பன் கேவின் கட்டிக்கொண்டு
கண்ணீர் வடித்தான். அது பிரிவின் துயரோ அல்லது அபியை கண்ட மகிழ்வோ
தெரியவில்லை. இருவரும் கட்டிக்கொண்டு அழ, நோலனும், டாம்மும் சேர்ந்து
அவர்களையும் கட்டி
கொண்டனர்.

அபினவ், 26 வயது இளைஞன். பிரான்ஸ் மற்றும் உலக நாடுகளின் சொகுசு
கார்களில் ஒன்று ஆன "ரென்வோ" கார் நிறுவனத்தின் உரிமையாளன். பல
ஆயிரம் மில்லியன் சொத்துக்கு சொந்தக்காரன். ஆறடி அழகன். குறும்புக்காரன்,
எப்போது சிரிப்பும் நட்பும் சூழ வளம் வருபவன். பணமும் பண்பும் அவனிடம்
நிறைந்து இருந்தது.

அபினவ் பிரெஞ்ச் தாயகம் ஆக கொண்ட சார்லஸ்க்கும், தமிழ்நாட்டை தாயகமாக
கொண்ட மகேஸ்வரிக்கும் ஒரே மகன். சார்லஸ் - மகேஸ்வரி காதல் திருமணம்
செய்து கொண்டவர்கள். அபினவ் அவர்களின் காதல் பரிசு. அந்த பரிசை
பாதுக்காக்க தான் அவர்கள் இப்போது இல்லை.

மகேஸ்வரி அபியின் 7 வயதில் கார் விபத்து ஒன்றில் இறந்து விட தந்தையின்
அரவணைப்பில் வளர்ந்தான். அவரும் அவனின் பதினாறு வயதில் இறந்து விட,
அவனை பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு அவனின் சித்தப்பா விக்டரிடம்
சென்றது.

விக்டர்க்கு அபியை விட அவனின் சொத்து மீது அதிக அன்பு. அபியின் ஒரே உறவு
அவனின் சித்தப்பா மட்டுமே, அபிக்கு பின் சொத்து அனைத்தும் அவருக்கே, எனவே
அபியின் முடிவை எதிர் நோக்கி இருந்தவர் அவர்.

அபினவ், கேவின், நோலன் மூவரும் இணை பிரியா நண்பர்கள், மூவரும் ஒன்றாக
ஆட்டோமொபைல் பயின்று தரம் பெற்று உள்ளனர். ரென்வோ நிறுவனத்தின் உயர்
பதவியில் இருப்பவர்கள்.

கேவின் அபியின் பள்ளி தோழன், அவனோடு படித்து வளர்ந்தவன். அபியின்
நிறுவனத்தின் உற்பத்தி தலைமையில் உள்ளான். பெற்றோர் இந்தியா வம்ச
வழிகளே கேவின் பிறந்த பின் பிரான்ஸ் குடி பெயர்ந்து இருந்தனர். இங்கு இந்திய
உணவு விடுதி ஒன்றை சிறப்பாக நடத்தி கொண்டு வருகின்றனர்.

நோலன் - அபி, கேவின்னின் கல்லூரி நண்பன். ஒரெலண்டஸ் பொறியியல்
கல்லூரியில் கிடைத்த நட்பு மூவருக்கும், நோலன் பிறந்து வளர்ந்து எல்லாம்
ஒரெலண்டஸ் தான். அவனின் பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட
நோலனும் அவனின் அக்கா ஈவாவும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இரண்டு வருடம்
முன்பு அவன் அக்கா திருமணம் ஆகி சென்று விட, நோலன் அபியோடு வந்து தங்கி
கொண்டான்.
ரென்வோ நிறுவனத்தின் டிசைன் ஹெட் ஆக உள்ளான்.

டாம் - அபியின் மெய் காப்பாளன், தந்தை சார்லஸ் நம்பிக்கைக்கு உரியவன்.
விசுவாசி, அவனது 22 வயது முதலே அபியின் நிழல் போல் தொடர்ந்து வருபவன்.
இப்போது இங்கு நடந்து கொண்டு இருக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் ஆகி
போனவன். குற்ற உணர்ச்சியில் தன் எஜமானை எண்ணி கவலையில் துடித்து
கொண்டு இருந்தவன். அபியின் தரிசனம் இன்று அவன் உயிரை அவனுக்கு
திருப்பி தந்தது என்று கூறினால் மிகையாகாது.

நால்வரும் கட்டிய நிலையில் நிற்க, அபியின் கால்களில் அவன் விரல் பதிந்தது…
தன் வாலை ஆட்டி கொண்டு உற்சாகத்தோடு அங்கும் இங்கும் ஓடியது… ஃபெலிக்ஸ்
என்று ஒரு அழைப்பில் அபியின் மீது விழுந்து அவன் முகம் எல்லாம் அதன் நாக்கை
கொண்டு ஈரம் செய்து அதன் அன்பையும் உற்சாகத்தையும் தெரிவித்து கொண்டு
இருந்தது. அபியின் கட்டளையில் அவனிடம் இருந்து எழுந்து, தூரம் தள்ளி போய்
அமர்ந்து கொண்டு அவனை பார்த்தது.

கேவின்: "நீ இல்லாத இந்த நாய்க்குட்டி கூட சமாளிக்க முடியலை எங்கனாலே, எங்க
டா போன? என்னாச்சு? எப்படி இருந்த எங்களை எல்லாம் விட்டு? நீ இல்லாம
இங்கே…"

அபி: "இங்கே…?"

அபி, கேவினை உற்று நோக்கி கேட்க, கேவின் நோலனை பார்த்து நின்று கொண்டு
இருந்தான்.

அபி அவன் பார்வையை டாம் பக்கம் திருப்ப, டாம் தலை குனிந்து நின்றான்.

அபி: "ப்ரோ, கேவின் எனக்கு எல்லாம் தெரியும். நீங்க யாரும் சொல்ல யோசிக்க
வேண்டாம்."

கேவின்: "நீ உயிரோட இல்லை சொல்லி உன் சொத்து எல்லாம் அவர் பெயருக்கு
மாற்றி இருக்கார் அபி, நாங்க கேள்வி கேட்ட அதுக்கு பதில் இல்லை. எட்டு மாசமா
வராத அபி, இனி வரபோறது இல்லை சொன்னார். நோலனையும் டாம்மையும்
வீட்டை விட்டு வெளியே அனுப்பி, எங்களை வேலையா விட்டு எடுத்து கம்பெனி
உள்ளே வர முடியாத மாறி பண்ணிட்டார்."

"நான் ரெண்டு பேரையும் என் வீட்டில் தங்க வெச்சு இருக்கேன். அப்பா போலீஸ்
புகார் சொல்லி விசாரணை செஞ்சோம் நீ உயிரோட இருக்க நிரூபிக்க எங்க கிட்ட
எதும் இல்லை. அவர் பக்கம் எல்லாமே சாதகமாக இருக்க போய் எதும் செய்ய
முடியல."

"ஃபெலிக்ஸ் கூட அவர் வீட்டை விட்டு அனுப்ப ஏற்பாடு பண்ணி இருக்கார் அபி. நீ
இல்லாம இங்க எதுவும் சரி இல்லை."

டாம்: "வேலை போனதோ, வீடு போனதோ எல்லாம் இழப்பா தெரியல, நீ இல்லாம
போனது, எங்களை விட்டு நீ போய்ட்ட உயிரோட இல்லை சொன்னது தான் தாங்க
முடியலை. எல்லாம் என் தப்பு, உன்னை போக விட்டது என் தப்பு. ஒரு வாரத்தில்
உனக்கு எதும் ஆகாது இருந்தேன். என் முட்டாள்தனம்."

அபி: "போதும் எனக்கு எல்லாமே தெரியும். உங்க வாயில் சொல்ல வைக்க தான்
கேட்டேன். விக்டர் ஆங்கிள் எங்கே?"

அங்கே இருந்த வேலை ஆள் வந்து, அவர் தயாரிப்பு நிறுவனம் சென்று இருப்பதாக
கூற,

அபி எதோ யோசனையோடு வெளியில் கிளம்ப, விக்டர் வீட்டின் உள்ளே
நுழைந்தார். அபியை கண்டதும் சிறிது அதிர்ந்து, பின் முகம் சோகமாக வந்து
அவனை கட்டிக்கொண்டு அழுதார்.

விக்டர்: "எங்க போன அபி? உன்னை காணாம நான் தவிச்சு போய் இருந்தேன்.
உன்னை பார்த்ததும் தான் உயிர் வந்தது போல இருக்கு…
உன்னை எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா? எங்கப்பா போன? என்னாச்சு??"

அபி: "அதுனால தான் நான் செத்து போய்ட்டேன் சொல்லி என் சொத்தை இப்படி
உங்க பேருக்கு மாத்தி இருகிங்காள? "

விக்டர்: "அபி இவங்க எல்லோரும் என்னை பத்தி தப்பா சொல்லி இருக்காங்க…
நான் சொல்றதை கேளு கொஞ்சம்."

அபி: "சொல்லுங்க"

விக்டர்: "உன்னை எங்க எங்கயோ தேடினோம் நீ கிடைக்கல, அப்புறம் தான் உன்
கையெழுத்து இல்லாம தொழில், வேலை தேங்க ஆரம்பிச்சுது, உன் இடத்தை நிரப்ப
நான் பொறுப்பு கையில் எடுத்தேன். நீ இல்லைன்னு சொன்ன தான் இந்த
சொத்தையும், தொழிலையும் காப்பாத்த முடியும் அதன் இப்படி செஞ்சேன். அது
புரியாம இவங்க என் மேல பழி போடறாங்க."

அபி: "சரி ஏன் வேலை விட்டு எடுத்தீங்க? வீட்டை விட்டு அனுப்பினீங்க?"

விக்டர்: "உன் மேல இவங்க கவலை எல்லாம் வெறும் நடிப்பு, உனக்காக இவங்க
எதும் செய்யல, நன்றி கேட்ட இவங்கள கூட வெச்சுக்க எனக்கு விருப்பம் இல்லை,

அதான் வெளிய அனுப்பினேன். இப்பவும் என்னையும் என் செயலையும் தான்
குறை சொல்றாங்க, அவங்க தப்பை சொல்லவே இல்லை."

அபி: "சரி நம்புறேன் உங்களை, அவங்க மேல உள்ள தப்பை நான் பேசி சரி
பண்ணிகறேன், பழைய மாதிரி எல்லா சொத்தும் என் பெயர் மாறனும் அதுக்கு
ஏற்பாடு செய்யுங்க,
இனிமேல் என் பிஸ்னஸ் நானே பார்த்துக்கறேன். நோலன், கேவின் எப்பவும் போல
ஆஃபீஸ் கிளம்பி வாங்க நாளையில் இருந்து, எனக்கு களைப்பா இருக்கு, நான் ரூம்
போறேன்."

கேவின், நோலன், டாம் என அனைவரும் புரியாது முழிக்க…

"என்ன சரி தானே?" என்று விக்டரிடம் அபி கேட்க,

விக்டர்: "சரி" என எந்த உணர்வும் இன்றி தலை அசைக்க,

அபியோடு அனைவரும் அவன் அறைக்கு சென்றனர்.

விக்டர் அபியின் உயிர் குடிக்க புது திட்டம் தீட்டி இருந்தார்.

2 Likes

அத்தியாயம் - 2

பொள்ளாச்சியில் அங்கலகுறிச்சி பசுமை கொஞ்சும் ஊர். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் இருக்கிறது. இயற்கையின் ராஜ்ஜியம் தான் இங்கு… கண் எட்டும் தூரம் வரை பசுமை பொங்கும் கோவை கொங்கு நாடு…

அங்கலகுறிச்சி ஊரின் நடுவே அந்த பெரிய வீடு, வீட்டை சுற்றி தென்னை தோப்பு… வீட்டின் பின் புறம் தென்னை தோப்பை தாண்டி வாழை தோப்பு… வீட்டை சுற்றி பசுமை போட்டி போட்டு கொண்டு நின்றது.

காலை 5.30… பூஜை அறையில் ஸ்வாதி சாமி முன் அமர்ந்து இருக்க அவள் எதிரே கோமதி அமர்ந்து இருக்க, பூஜை அறையின் வெளியே விஷ்வா, நிஷாந்த், ஆதியா என அமர்ந்து இருக்க… அங்கே அவளுக்கான இடம் மட்டும் இன்னும் நிரப்ப படாமல் இருந்தது.

" மங்கலாசசன பாராயி மடச்சார்யா புரோக்மயாய்
சர்விஸ்ச்சா புர்வை ரேச்சாராய் சத்ரிதிஷ்டா மங்கலம்"

ஸ்ரீ வெங்கடேச மங்களா சாசனதின் கடைசி மங்கலம் சொல்லும் போது வந்து சேர்ந்தாள் அதிதீ.

கோமதி முறைப்பதை பொருப்படுத்தாது, பூஜையின் மேல் கவனம் வைக்க, ஸ்வாதி பூஜையை முடித்து இருந்தாள்.

பூஜை அறையை விட்டு வெளியே வந்த கோமதி, அதியை முறைக்க,

நிஷாந்த்: “அம்மா அவ நைட் லேட்டா தான் மா வந்த, அதான் பூஜையில கலந்துக்க முடியுமா போய்டுச்சு… இப்போ எதுக்கு இப்படி அவளை முறைக்குறிங்க?”

கோமதி: “நீ போதும் டா, அவளுக்கு செல்லம் குடுக்க, உன் பொண்ணு கூட இப்போவே அஞ்சு மணிக்கு எழுந்து பூஜைக்கு வந்துற, எழு வயசு பொண்ணுக்கு இருக்கற பொறுப்பு இருக்கா இவளுக்கு? எனக்கு பூஜை முக்கியம், அதில் வீட்டுல இருக்கற எல்லாரும் கலந்து தான் ஆகனும்.”

விஷ்வா: “அம்மா விடு மா, அக்கா திட்டிடே இருப்பியா? அவ என்ன பொறுப்பு இல்லாம இருக்க? பூஜைக்கு வராதது தப்பா ஒரு நாள் தானே? சரி வழியை விடுங்க, நான் போய் தூங்குறேன்.”

கோமதி: “என்ன தூங்க போரிய?”

தியா: “பாட்டி அவன் தினம் இது தான் செய்யுறான்.”

விஷ்வா: “அடி வாலு, என்னை டா போட்டு பேசாத எவ்ளோ தடவ சொல்லி இருக்கேன்.”

தியா: “போட…” “போட விஷ்வா”

விஷ்வா: “உன் பொண்ணை பார் அண்ணா, எனக்கு மரியாதையே இல்லை”

நிஷாந்த்: “நீ தரியா மரியாதை? அதியை மரியாதை இல்லாம நீ பேசுறதை பார்த்து தான் தியா உன்னை பேச கத்துக்கிட்டு இருக்கா”

விஷ்வா: “உன் பொண்ணுக்கு துணை நிக்குறியா?”

தியா: “லவ் யூ டாடி”

“இரு டி வரேன்” என்று விஷ்வாவும், தியாவும் ஓடி விட, நிஷாந்த் செய்தித்தாளில் மூழ்கிட, அதிதீயின் அருகில் சென்ற கோமதி,

கோமதி : “அதி, நீ வயசு பொண்ணு டா, கோயம்புத்தூர் இருந்து பொள்ளாச்சி வர தனியா போய்ட்டு தனியா திரும்பி வர, அதும் லேட் நைட். நேத்து ரொம்ப லேட் அதான் காலையிலேயே திட்டிடேன். போ, போய் அண்ணிக்கு உதவி செய்.”

அதி மெல்லிய சிரிப்போடு சமையல் அறை நோக்கி சென்றாள்.

அதிதீ - 24 வயது, குறும்பும் அன்பும் கலந்து செய்த அழகி. வாயாடி, சிலருக்கு மட்டுமே இதழ் பேசும் போது கண்ணும் பேசும், அதில் இவளும் ஒருத்தி அவளின் சிறு கண் அசைவும், உணர்ச்சி சிந்தும் முகமும் போதும் நாள் முழுதும் பார்த்துகொண்டு இருக்கலாம். ஸ்டான்போர்ட் கலிஃபோர்னியா பல்கலை கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பயின்று, தன் சொந்த நிறுவனம் ஆன GN நிறுவனத்தில் அண்ணனுடன் சேர்ந்து தொழிலில் உதவி செய்து கொண்டு இருக்கிறாள்.

நிஷாந்த் - ஸ்வாதி
அதிதீயின் அண்ணனும், அண்ணியும், அதியின் மீது அதிக அன்பு நிஷாந்துக்கு… அவர்களின் தந்தையின் இழப்பிற்கு பின் குடும்பத்தை தாய்க்கு அடுத்து தன் தோள்களில் தாங்குபவன்.
ஆதியா அவர்களது மகள். எழு வயது, படு சுட்டி, இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.

விஷ்வா: அதிதீயின் தம்பி. கோவையில் பி. எஸ். ஜி யில் தொழில் மேலாண்மை முதல் வருடம் படித்து கொண்டு இருக்கிறான். வீட்டின் கடை குட்டி அவனும் தியாவும் தினம் சேர்ந்து செய்யும் சேட்டைகளில் வீடு எப்போதும் அமைதி இழந்தே இருக்கும்.

கோமதி: அதியின் தாய். அன்பானவர். தன் கணவர் ராம் கோபால் இறந்த உடன், மனம் தளராது பிள்ளைகளை பேணி வளர்த்து, உழைத்து தொழிலை பெருக்கி, அதை மகனின் கைகளில் கொடுத்து விட்டு ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறார். அவரின் இப்போதைய ஒரே எண்ணம் அதியின் திருமணம்.

பர பரப்பாக அனைவரும் கிளம்பி கொண்டு இருக்க, அதி தியாவுக்கு இட்லி ஊட்டி விட, ஸ்வாதி மற்ற அனைவருக்கும் பரிமாற, உணவு உண்டு கொண்டே…

நிஷாந்த்: “அதி, ஒன்னு கேக்கட்டுமா?”

அதி: “கேளுங்க அண்ணா என்ன இது இப்படி எல்லாம் புதுசா?”

நிஷாந்த்: “இன்னும் எவ்ளோ நாள் மா, இப்படி இருக்க போற? ஸ்ரீ வர மாதிரி தெரியுல, நாங்களும் உன் மனசு கஷ்டப்பட கூடாதுன்னு அமைதியா இருக்கோம். ஹரீஷ்க்கு கட்டி தர சொல்லி பாக்கிய அத்தை கேட்டுட்டே இருக்காங்க… நல்ல பதில் சொல்லு டா…”

அதி: “அண்ணா என் காதல் உண்மை. என் ஸ்ரீ வருவான். அவனை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… பிளீஸ் எனக்காக பொறுமையா இருங்க… என் ஸ்ரீ என்கிட்ட வரும் போது நான் வேற ஒருத்தன் பொண்டாட்டி ஆகி நின்னா அவன் என்னை என்ன நினைப்பான். காத்து இருனு சொல்லிட்டு தானே போய் இருக்கான். வருவான்,
இனி இதை பற்றி என்கிட்ட பேசாதீங்க.”

கோமதி: “இப்பவே ஒரு வருஷம் முழுசா முடிஞ்சு போய்டுச்சு அதி, இன்னும் எவ்ளோ நாள் காத்து இருக்க முடிவு பண்ணி இருக்க? இன்னும் மூணு மாசம் உனக்கு தரேன் அதுக்குள்ள ஸ்ரீ வரணும் இல்லை. நீ ஹரிஷை கல்யாணம் பண்ணிக்க தான் வேணும். என் முடிவில் மாற்றம் இல்லை.”

அதி எழுந்து அவள் அறை சென்று விட,

விஷ்வா: “அம்மா அக்கா இவளோ தூரம் சொல்ற இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இருப்போமே, பிளீஸ் மா…
அக்கா அழுதுட்டே போய்ட்டா, பாவம் மா பிளீஸ்…”

ஸ்வாதி: “ஆமா அத்தை இவளோ கோவமா இதை நீங்க சொல்லி இருக்க வேண்டாம்.”

நிஷாந்த்: “அதிக்கிட்ட ராகவ் பேச சொல்றேன். அவன் பேசின அதி மனசு மாறலாம்.”

அதியின் அறையில் அவளின் தலையாணைக்கு கண்ணீர் முத்தங்கள் கொடுத்து கொண்டு இருந்தாள்.

ஸ்ரீ? எங்கே இருக்க? எப்போ வருவ?..

:purple_heart:

அத்தியாயம் - 3

ஃபெலிக்ஸ் அபியின் அறை முன் அமர்ந்து கொள்ள, அபி அவனின் படுக்கையில் விழுந்தான். அவனின் பின்னே வந்த டாம், கேவின், நோலன் மூவரும் உள்ளே வந்து அவன் அருகில் அமர்ந்தனர்.

நோலன்: “அபி, அவரை நீ நம்புறியா? அப்போ எங்களை? நாங்க உன்கிட்ட பொய் சொல்வோமா?”

அபி: “இப்போ என்ன ஆச்சு? நான் எதும் உன்கிட்ட கேட்டனா? எனக்கு தெரியும் அவர் நடிப்பு, ஃபெலிக்ஸ் ஏன் வெளிய அனுப்ப நின்னாரு அதுக்கும் பொய்யா ஒரு பதில் இருக்கும் அவருக்கு”

கேவின்: “நீ அவரை எதும் பேசல, ரொம்ப சாதாரணமா என்ன? சரினு பேசி வந்து இருக்க அதான் எங்களுக்கு எதோ மாறி இருக்கு.”

நோலன்: “இந்த பிரச்சனை சரி ஆகாம நான் இங்க வர மாட்டேன்.”

அபி: “என்ன தான் டா உங்க பிரச்சனை, நான் எதும் அவரை சொல்லல, கேக்கல அதானே? கேக்கணும் வெறும் வாய் வார்த்தையில் கேக்க கூடாது. என்னை கொல்ல முயற்சி செய்து, உங்களை எல்லாம் பிரிஞ்சு வாழ வெச்சு இருக்கார், உங்களை அவமான படுத்தி, வெளியில் அனுப்பி, கேக்க யாரும் இல்லைன்னு தான் இதெல்லாம் செய்து இருக்கார். எனக்கு ஒரே சொந்தம் இவர் தான். இவர் இப்படி பண்ணுவார் நான் நினைச்சு கூட பார்க்கலை.”

கேவின்: “என்ன டா சொல்ற? உன்னை கொல்ல முயற்சியா? எப்போ? நீ கனடா போறதா தானே சொல்லிட்டு போன அங்க உனக்கு என்னாச்சு?”

அபி: “அது பெரிய கதை. எனக்கு அவர் மேல சந்தேகம் வந்த அப்போவே நான் எதாவது முன் எச்சரிக்கை ஏற்பாடு செய்து இருக்கணும். செய்யாம போய் தான் உங்களை பிரிஞ்சு இருக்க வேண்டிய நிலைமை எனக்கு”

“சரி நான் கொஞ்சம் தூங்குறேன், டாம் டின்னர்க்கு பாஸ்டா , சாக்லேட் சௌப்ளே (முழுவதும் சாக்லேட் செய்யப்பட்ட இனிப்பு), கேஸோவுலேட் (வெள்ளை பீன்ஸ் உடன் வாத்து அல்லது மட்டன் சேர்த்து செய்யப்படும் உணவு) செய்ய சொல்லுங்க, நோலன் நீ நம்ம லாயேர் நாளைக்கு வர சொல்லு, கேவின் அப்பாவையும் அம்மாவையும் நைட் டின்னர் வர சொல்லு…”

“என் கூடவே இருங்க ரெண்டு பேரும், இந்த பிரச்சனை முடிக்கிற வரை, நீங்க என்கூட இல்லாம எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?”

“நோலன் எனக்கு புரியுது உன் மன வருத்தம் ஆனா எனக்கு இப்போ உங்க உதவி வேணும். என்னை மீறி இனி எதுவும் நடக்காது… என் மேல நம்பிக்கை இருக்குல?”

கேவின்: “எங்கேயும் போகல, உன்னை விட்டு நாங்க எங்க போக போறோம்? பைத்தியமா நீ? ரெஸ்ட் எடு.”

நோலன்: “நான் கால் பேசிட்டு வெளிய போய்ட்டு வரேன், தூங்கு கொஞ்சம்.”

அனைவரும் அவரவர் வேலைகளில் மூழ்கி விட, அபி எதோ சிந்தனையில் மூழ்கி, தூங்கி போனேன்.

அவன் எழுந்து, கிளம்பி உணவு மேஜைக்கு வர உணவு தயாராக இருந்தது. கேவினின் பெற்றோரும் வந்து இருந்தனர்.

கேவின் அம்மா நேன்ஸி அபியை கட்டி கொண்டு கண்ணீர் விட்டார். அவனின் தந்தை ஜேம்ஸ் நேன்ஸியை சமாதானம் செய்ய அனைவரும் உணவு உண்டனர். அபி இன்று நன்றாக சாப்பிட்டு இருந்தான். அவன் இந்த உணவுகளை கண்டு நீண்ட நாட்கள் ஆகிறது.

ஆம் நீண்ட நாட்களுக்கு பிறகு அவனின் ஊர், அவன் வீடு, அவன் நண்பர்கள் உடன் இருப்பது என மனதுக்கு நிம்மதியை அளித்தது.

‘பாவம், அவனுக்கு தெரியாது நாளைய இரவு இதுவே அவன் நிம்மதி இழக்க செய்ய போகிறது என்று’

ஆமா அவனுக்கு எப்படி தெரியும்? கதை நான் தானே எழுதுறேன்.
“அபி கேட் ரெடி.”

நாளை செய்ய வேண்டிய வேலைகளை பற்றி சிறிது பேசி விட்டு அபி அவன் அறைக்கு செல்ல, ஃபெலிக்ஸ் அபியுடன் சென்று அவன் அறையில் படுத்து கொண்டது.
ஐந்து நிமிடம் கழித்து கேவினும், நோலனும் அவன் உடன் வந்து கட்டிலில் படுத்து கொள்ள அபி சிரித்தான்.

கேவின்: “என்ன சிரிப்பு உனக்கு?”

அபி: “இன்னும் வரலையே பார்த்திட்டு இருந்தேன். வந்ததும் சந்தோசம் எப்படி சொல்றதுன்னு தெரில.”

நோலன்: “எட்டு மாசம் ஆச்சு டா உன்னோட தூங்கி, உன்னை எவ்ளோ மிஸ் பண்ணோம் தெரியுமா?”

கேவின்: "ஒரெலண்ட் போய் இப்படி தூங்கி பழகி நீ இல்லாம தூங்காம போன ராத்திரி எவ்வளவு? கனடால என்ன ஆச்சு? "

அபி: “என்னை கொல்ல முயற்சி செஞ்சங்க, யாருனு என்னால கண்டு பிடிக்க முடியல, ஆனா அதை இப்போ யோசிக்க, யோசிக்க விக்டர்
அங்கிள் தான் காரணமோ தோணுது.”

“டாம் என்னோட வர விடாம செய்தது, அங்க நடந்த கொலை முயற்சி, அப்புறம் இங்கே நடந்து இருக்கற பிரச்சனை எல்லாமே அவர் மேல தான் சந்தேகம் உண்டு பண்ணுது, நான் முடிக்க வேண்டிய நிறைய இருக்கு, வேலை எல்லாம் முடிச்சுட்டு எனக்கு கனடா என்ன நடந்துச்சு சொல்றேன்.”

“இப்போ தூங்குவோம், ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கி களைப்பா இருக்கு… பொன்னே நூயி, பியன் டோர்மிர் என்று கூறி விட்டு அபி உறங்க ஆரம்பித்து விட்டான்.”

பொன்னே நூயி/ bonne Nuit/ நல்ல இரவு/ Good night

பியன் டோர்மிர்/ bien dormir / நல்லுறக்கம்/ Sleep well

அடுத்த நாள் காலை,

அவர்களை டாம் எழுப்பி விட, அனைவரும் எழுந்து கிளம்பி வர, கீழே சட்ட ஆலோசகர் ராபின் வரவும் சரியாய் இருந்தது.

ராபின்: “எங்க போன அபி, ஒரே குழப்பம், நீ இருக்கியா? இல்லையான்னு தேடி தேடி, கடைசியில் உன் சொத்து முழுக்க அவர் பெயருக்கு போய் இருக்கு,
அதை அவர் உங்க அப்பா உனக்காக செய்து இருந்த ஷர்ஸ் எல்லாத்தையும் மாற்றி வேற ஷர்ஸ் முதலீடு பண்ணி இருக்கார். கம்பனி நிர்வாகம் முழுக்க முழுக்க அவர் கைக்கு போய் இருக்கு, நீ கூட இப்போ உள்ளே போக முடியாது. முதலில் நீ அவருக்கு எதிராக ஒரு கேஸ் ஃபைல் பண்ணு, நீ உயிரோட இருக்க, உன் சொத்து அவர் பெயருக்கு போனதை செல்லாது என்று ரத்து செய்யணும்.”

“உன் அப்பா எத்தனை கனவுல இதை ஆரம்பித்தார் தெரியுமா? உன் அம்மா இதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காங்க தெரியுமா? பொறுப்பு இல்லாம எப்படி விட்டுட அபி நீ… உன் பிடிவாதமும், விளையாட்டும் தான் இதுக்கு எல்லாம் காரணம்.”

அபி: “அங்கிள் பிளீஸ், நான் செஞ்சது எல்லாமே தப்பு தான், அதுக்கு தான் எனக்கு இப்போ இந்த நிலைமை… என் தப்பு இப்போ என் பிரெண்ட்ஸ் சேர்த்து கஷ்டப்பட வெச்சு இருக்கு. இனி அப்படி எதும் நடக்காது… நான் தான் எல்லாத்தையும் பார்த்துக்க போறேன்.”

“அங்கிள், நேத்து விக்டர் அங்கிள் சொத்தை என் பெயருக்கு மாற்றி தரேன் சொல்லிட்டாரு, எதுக்கு கேஸ் போடனும். அவர் தப்பு செஞ்சாரு தான் அதுக்காக கேஸ் போட்டு அவரை இப்படி தண்டிக்கனுமா? நீங்க பேபர்ஸ் தயார் பண்ணுங்க அங்கிள் கையெழுத்து போடுவாரு. அப்புறம் நான் உயிரோடு இருக்கறது தெரியாம செய்து இருக்கார் சொல்லி இதை இப்படியே முடிஞ்சு விடுங்க அங்கிள் பிளீஸ்.”

ராபின்: “அவன் கையெழுத்து போடுவானா? எனக்கு நீ சொல்ற எதும் சரின்னு தோணல.”

அபி: “எனக்கும் அவர் மேல கோவம் தான், ஆன இது சரியான நேரம் இல்லை. அவர் செஞ்சதை நானும் செஞ்சா எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாம போய்ரும், அவருக்கு எவ்ளோ வேணுமோ அதை அவருக்கு கொடுத்து விட்டுட போறேன். இனி என்னை மீறி எதும் நடக்காது.”

இதை எல்லாம் மறைந்து இருந்து விக்டர் கேட்டு சிரித்தார்.

என்ன செய்ய போரிங்க விக்டர்…?

:purple_heart:

அத்தியாயம் -4

அனைவருக்கும் வணக்கம்

அபி யாரு, அதி யாரு? ஸ்ரீ யாருன்னு? உங்களுக்கு கேள்விகள் இருக்கும். நான் இன்னும் கதையில் யார் நாயகன், நாயகின்னு சொல்லவே இல்லை. நாயகி அதிதீ தான். நாயகன் யாருனு சீக்கிரமே சொல்றேன். கதையை தொடர்ந்து படியுங்கள், கதையில் பாதி பகுதி முடியும் போது தான் கதையின் சுவாரஸ்யம் கூடும், கண்டிப்பா இந்த கதை உங்களை ரசிக்க வைக்கும்.

இப்போ எல்லாம் கேரக்டர்களையும் ஒரு முறை பார்த்துருவோம்.

அபினவ் - கதையில் ஒரு கேரக்டர்.

கேவின், நோலன் - அபியின் நண்பர்கள்

டாம் - அபியின் பாடிகார்டு

விக்டர் - அபியின் சித்தப்பா

ஜேம்ஸ், நேன்ஸி - கேவினின் பெற்றோர்

ராபின் - அபியின் சட்ட ஆலோசகர்

ஃபெலிக்ஸ் - அபியின் நாய்

:purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart:

அதிதீ - நாயகி

கோமதி - அதியின் அம்மா

நிஷாந்த் - அதியின் அண்ணன்

ஸ்வாதி - அதியின் அண்ணி, அதியின் அத்தை மகள், ஹரீஷ் அக்கா.

ஆதியா - அதியின் அண்ணன் மகள்

விஷ்வா - அதியின் தம்பி

பாக்கிய - அதியின் அத்தை, ஸ்வாதி - ஹரீஷின் அம்மா

ஹரீஷ் - அதியின் அத்தை மகன், ஸ்வாதியின் தம்பி.

ஸ்ரீ - அதியின் காதலன்.

ராகவ் - அதியின் தோழன்.

இப்போ ஒரு தெளிவு இருக்கும் வாங்க கதைக்கு போவோம்…

அதி அழுத முகம் கழுவி, மனதில் உள்ள பாரம் அனைத்தும் ஒதுக்கி வைத்து விட்டு, கிளம்பி கொண்டு இருந்தாள். அப்போது அவள் அறைக்கு வந்த ஸ்வாதி அதியை சாப்பிட அழைக்க, வேண்டாம் என மறுத்தாள் அதி.

ஸ்வாதி: “அதி உன் விருப்பம் இல்லாம எதும் நடக்காது. ஏன் இப்படி அழுது, சாப்பிடாம உடம்பை வீண் பண்ற? நாளைக்கே ஹரீஷ் வந்த உன்னை பார்த்து, எங்களை என்ன சொல்வான்? நாங்க தான் உன்னை சரியா பார்க்காம போய்ட்டோம் சொல்ல மாட்டான்?”

அதி: “அண்ணி, உங்களுக்கு என்ன நான் இப்போ சாப்பிடணும் அதானே? எல்லாம் என் விருப்பமா? ஏது என் விருப்பம் மூணு மாசத்தில் கல்யாணம்னு சொன்னாங்க அம்மா அதுவா? எனக்கு பசி இல்ல நான் கிளம்புறேன்.”

ஸ்வாதி: “சரி, இதுவும் எங்க விருப்பம் தான். உன் ஸ்ரீ எப்போ வருவான் அதை சொல்லு அவனுக்கே உன்னை கட்டி வெச்சுறோம், சொல்லு அதி…”

அதி: “அண்ணி ஏன் இப்படி என்னை காயப்படுத்தி பார்க்கறீங்க? எனக்கு தான் என் ஸ்ரீ எங்கே போனான் தெரியாதே, எங்க இருக்கான், என்ன பண்றான் எதுவும் தெரியல, ஆனா வருவான் கண்டிப்பா வருவான்.”

ஸ்வாதி: "எப்போ? அதி உன் மனசு மாற நான் இதை சொல்றேன்… நீ ஹரீஷ் கூட கல்யாணம் பண்ண வேண்டாம், வேற பையனை கட்டிக்கோ, அது போதும் எங்களுக்கு.

“ஸ்ரீ வருவானா? எப்போ? அவன் உன்ன விட்டு போய் ஒரு வருஷம் ஆகுது, உன்னை தேடி ஒரு போன் கூட இல்லை, அவன் எங்க, எப்படி இருக்கான் தெரியாது, அவன் முகம் தெரியாது.”

“முகம் தெரியா ஒருத்தனுக்கு இன்னும் எத்தனை நாள் காத்து இருக்க போற? அவனுக்கு உன் நினைப்பு இருக்கும்மா? டைம் பாஸ் பேசி உன்னை விட்டு போய் இருந்தா? வேற ஒரு பெண்ணோட இருந்தா? இல்ல உயிரோட தான் இருக்கானா? உன்ன காயப்படுத்த இப்படி பேசல அதி, எதையும் யோசிக்காம இப்படி அவன் வருவான் ஒரு நம்பிக்கையில் நீ நிக்கிறது நல்லது இல்லை.”

“இப்போ ஹரீஷ்க்கு என் அம்மா உன்னை கேக்கறதே அவனுக்கு உன் மேல விருப்பம் இருக்க போய் தான். சின்ன வயசில் இருந்தே அவனுக்கு நீ உனக்கு அவன் பேசி இருந்து இருக்காங்க அதான், எங்க பயம் எல்லாம், அவனை நீ கட்டிக்க மாட்டேன் சொன்ன,
என் அம்மா அவன் கல்யாணம் பார்க்கணும் ஆசையில் வேற பொண்ணை கட்டி வெச்சுருவாங்க… அவனும் எதும் பேச மாட்டான்.”

“ஒரு வேளை ஸ்ரீ வரவே இல்லைனா நீ யாரையோ எங்களுக்காக கல்யாணம் பண்ணி தானே ஆகனும்? நீ கல்யாணம் வேண்டாம் சொன்னாலும் அத்தை உன்னை விடவும் மாட்டாங்க, யாரயோ கல்யாணம் பண்ண போறதுக்கு என் தம்பியா பண்ணிக்கோ, அவனுக்காது அவன் காதல் கிடைக்கட்டும்… அவ்ளோ தான்.”

அதி: “அண்ணி நான் ஹரீஷ் நல்ல ப்ரெண்ட் பார்த்து இருக்கேன்… என் மேல அவனுக்கு எப்படி காதல்? எனக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்ததே இல்லை.”

“என்னால ஸ்ரீயை மறக்க முடியல, முடியாது. அவன் வருவான் என் மனசு சொல்லிட்டே இருக்கு, ஹரிஷை உங்க எல்லார் விருப்பத்துக்காக கல்யாணம் செஞ்சு, அவனோட வாழ முடியுமா என்னால?”

“என் ஸ்ரீ வந்தா அய்யோ நான் என்ன பதில் சொல்வேன்? அவன் மேல நம்பிக்கையும் காதலும் இல்லாம நான் இப்படி பண்ணிட்டேன் நினைக்க மாட்டான்? எனக்காக என் ஸ்ரீ காத்து இருந்து இருந்தா என்ன செய்வீங்க அண்ணி? அவனை பார்த்த அப்புறம் ஹரீஷ் கூட நான் எப்படி? தெரிஞ்சே ஹரீஷ் வாழ்க்கையை நான் நாசம் பண்ணனுமா? என் காதலுக்கு அவன் வாழ்க்கையை இழந்து நிக்கணுமா?”

“நீங்க சொன்னதை விட நான் சொன்னது நடந்தா என்னால ரெண்டு பேர் வாழ்க்கை அழிஞ்சு போகும்… என்னால முடியாது. நீங்க சொன்னதை நான் யோசிக்கிறேன் நான் சொன்னதை நீங்க யோசிங்க,
நான் ஆஃபீஸ் கிளம்புறேன்.”

அதி கிளம்பி அலுவலகம் செல்லாது கோவையில் உள்ள அவனின் நண்பன் இல்லம் சென்றாள்.

கதையில் முக்கிய பங்கு இவனுக்கு உண்டு. அதியின் உயிர் நண்பன்.
அதியின் காதலுக்கு சாட்சி, அவளின் காதலை பற்றி அறிந்தவன். ராகவ்.

ராகவ் அதியின் நான்கு வயதில் இருந்து இவள் உடன் இருக்கிறான். இவன் அறியாத ரகசியம் எதுவும் அதியிடம் இல்லை. ஆண் பெண் நட்பின் உதாரணம் இவர்கள். அதி மேலாண்மை படிப்பை எடுத்த ஒரே காரணத்திற்காக அவனின் பொறியாளன் கனவை துறந்தவன்.
அதி மீது அன்பும் அக்கறையும் அதிகம் உண்டு. அவன் சொல்லி அதி மறுத்து பேசியது எதுவும் இல்லை. அதே நிலை தான் ராகவ்விற்க்கும், அதி சொல்லி மறுத்து அவனும் பேசியது இல்லை.

அதியுடன் அமெரிக்காவில் மேலாண்மை கல்வி கற்று இப்போது சொந்த தொழில் செய்ய அனுபவம் வேண்டி கோவையில் மிக பெரும் நிறுவனம் ஒன்றில் தலைமை பொறுப்பில் உள்ளான்.

இப்போது அதிக்கும் ராகவ்விற்க்கும் வாழ்க்கையில் முதன் முறையாக கருத்து முரண்பாடு. அதுக்கு காரணமும் நம்ம ஸ்ரீ தான்.

ஸ்ரீ எங்க இருக்க?

:purple_heart:

அத்தியாயம் - 5

அபியின் இல்லம்

ராபினும் அபியும் பேசியதை எல்லாம் கேட்டு விட்டு அங்கே வந்த விக்டர். அபியிடம் போன்ஜூர் (காலை வணக்கம்) சொல்லிவிட்டு, வந்து உணவு மேஜையில் அமர்ந்தார். அவருக்கு கிரீன் டீ வர அதை எடுத்து குடித்தார்.

Bonjour / போன்ஜூர் / Good morning / காலை வணக்கம்.

விக்டர்: “எதாவது சொல்லனுமா அபி? சரி,ராபின் வந்து இருக்கார், இது தான் சரியான நேரம், உன் சொத்து எல்லாம் உன் பேரில் எழுதி வைக்க பத்திரம் தயார் செய்ய சொல்லணும். இன்னிக்கி சாய்ந்தரம் உன் பேரில் எல்லாத்தையும் மாற்றி விட்ட தான் நிம்மதி. போதும் இந்த தப்பான பார்வையும், உன் சந்தேகமும், நான் வீட்டை விட்டே நாளைக்கு போக முடிவு செய்து இருக்கேன்.”

அபி: “அங்கிள், உங்க மேல வருத்தம் தான். யாரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கீங்க தெரியுமா? என் நண்பர்களை. நான் இல்லைனா எதிலும் உரிமை இல்லையா? நான் வந்து சொல்லாம எப்படி அனுப்புவீங்க எல்லாரையும் அது தான் கோவம். பணம் ஒரு விஷயம் இல்லை, இதுக்கு முன்னாடி நீங்க பணம் எடுத்து இருக்கீங்க நான் அதை கவனித்தும் எதும் செய்யலை ஏன்? உங்களுக்கு உரிமை இருக்கு, நமக்குள்ள உறவு இருக்குன்னு நினைச்சு விட்டேன். ஆனா என் நண்பர்களை இப்படி செய்தது ரொம்ப பெரிய தப்பு… அது தான் கோவம். உங்களுக்கு தேவையான பணத்தை வாங்கிட்டு போங்க, ஆனா நீங்க வெளிய போறதுல எனக்கு உடன்பாடில்லை.”

விக்டர்: “உன் சொத்தை காப்பாற்ற எதேதோ செய்துட்டேன் மன்னிச்சுரு அபி.”

என்று விக்டர் கூற அதை மறுத்து அபி பேச, விக்டர் அங்கே இருப்பதாக முடிவு ஆனது.

விக்டர்: “ராபின் பேப்பர் ரெடி பண்ணுங்க, கையெழுத்து போடுறேன்.”

என்று கூறி விக்டர் எழுந்து போக, ராபின் அதிர்ச்சியாக பார்த்தார்.

பின் விக்டர் சொன்னது போல, அவர் சொத்துக்கள் அனைத்தையும் அபியின் பெயருக்கு மாற்றி எழுதினார். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி.

அபி: "எங்க இவளோ வேகமா கிளம்பி எங்க போக போற? "

கேவின்:" ஜோ பார்க்க "

அபி: “இன்னுமா? காஃபி குடிக்க வந்துட்டு இருக்க?”

கேவின்: “இல்லை குடும்பத்தோடு இரவு உணவு சாப்பிட”

அபி: “லவ் சொல்லிட்டியா?”

கேவின்: “இல்லை”

அபி: “நீ எப்போ சொல்லப்போற? நான் காணாமல் போய் திரும்பியும் வந்துட்டேன்… நான் ஒன்பது மாசம் முன்னாடி கேட்ட அப்போ சொன்ன அதே வசனம்… என்ன, காப்பி, இரவு உணவு ஆகி இருக்கு.”

கேவின்: “காதலிச்சு பார் தெரியும். அவ கண்ண பார்த்து காதல் சொல்லவே முடியல, அவ பார்த்தாலே நான் ஆஃப், நேரம் வரும் சொல்வேன். அம்மா அப்பாக்கு தெரியும், அவங்களுக்கும் சம்மதம்.”

அபி: “சம்மதம் வாங்கிட்டியா? நல்லது. அப்போ அந்த பொண்ணு முடிவையும் தெரிஞ்சுக்கோ, அப்புறம் பேசு… காதலிக்கு காதல் சொல்ல முடியாத காதலன் நீ… என்கிட்ட காதல் பத்தி பேசுற.”

நோலன் சிரித்து கொண்டே உள்ளே வந்தான். “ஏலியன் என்ன ஆச்சு?”
“என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்”

அபி: “என்ன ஏலியன் சொல்லாதே சொல்லி இருக்கேன், அதை சொல்லாதே”

நோலன்: " பர்டான் " ஏலியன், “எனக்கு இது தான் பிடிச்சு இருக்கு” என்று கூறி சிரித்தான்.

பர்டான்/ Pardon / Sorry / மன்னிப்பு

அபி நோலனை அடிக்க துரத்த, கேவின் சிரித்து விட்டு “சலுட்” ஏலியன், என்று கூறிவிட்டு சென்று விட்டான். அதை கேட்ட நோலன் மீண்டும் சிரிக்க, அபி அவனை துரத்தி பிடித்து விளையாட்டாய் அடிக்க,

சலுட்/ salut/ Good bye / போய் வருகிறேன்

நோலன்: “அபி உனக்கு இந்த பெயர் தான் சரி. இது கூப்பிட்டா தான் நல்லா இருக்கு… உண்மையில் உன் பள்ளி ஆசிரியர் சரியா தான் பேர் வெச்சு இருக்காங்க உனக்கு என்று கூறி சிரிக்க, அபியும் சிரித்து விட்டான்.”

அபி: “ஆனா எனக்கு பள்ளியில் இந்த பெயர் பிடிக்காது, என்னை பிரிக்கற மாதிரி இருக்கும், இப்போ சிரிப்பா வருது.”

இவர்கள் சிரித்து பேசி கொண்டு இருக்க, அங்கே வந்த விக்டர், அபியை அழைத்து இரவு உணவுக்கு வெளியில் செல்லலாம் என்று கூறி சம்மதம் வாங்கி விட்டு சென்றார்.
அபி நோலனையும், கேவினையும் உடன் அழைத்தான்.

நோலன்: “அவன் வர மாட்டான் இன்னிக்கி முழுக்க கண்ணுல காதல் சொல்லிட்டு வருவான். சொன்னா முடிவு தெரிய போது, இவன் எப்போ சொல்வனோ, அதுக்கு முன்னாடி அந்த பொண்ணு வருதோ இல்லையோ தெரியலை.”

அபி: “என்ன சொல்ற?”

நோலன்: “அவன் ஆறு மாசம் கழிச்சு இன்னிக்கி தானே பார்க்க போறான், அந்த பொண்ணு இவனை காணாம எங்க வாரமா போய் இருந்தா?”

அபி: “என்ன? ஏன் இவன் போகல? என்ன நெனச்சு இவன் லவ் நாசம் பண்ணிட்டனா?”

நோலன்: “அபி நீ தானே எங்களுக்கு எல்லாம்? கேவின் இல்லாம நீயும் நானும் நிம்மதியா இருப்போமா? அப்படி தானே அவனும்? இதில் என்ன இருக்கு, அவனை தேடி அந்த பொண்ணு இன்னிக்கி வந்தா அவன் காதல் ஆழம் தெரிய போது, அவன் சொல்லவே வேணாம், காதல் சொல்லாமே தெரியும்”.

அபி: “ஆமாம் நீ சொல்றது எல்லாம் சரி தான், இல்லைனாலும் அவனையும் ஜோவையும் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.”

நோலன்: “நானும் இருக்கேன் ஏலியன்”

அபி: “ஹெய்”

நோலன்: “நான் என் லக்கேஜ் எடுத்துட்டு வரேன். ஒன்ன போவோம் டின்னர்க்கு”

அபி: “சரி சீக்கிரம் வா”

அபி நோலன் விடை கொடுத்துவிட்டு டாம்மிடம் இன்று இரவு உணவு வெளியே என்று கூறிவிட்டு கிளம்பி வர சென்றான்.

அபி ரெடி ஆகி வரக்குள்ள நாம கேவின் லவ் பத்தி ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் பார்த்திட்டு வருவோம்.

ஒன்பது மாதம் முன்பு,

கேவின் அவனின் பெற்றோர்க்கு உதவியாக வார இறுதியில் அவர்களது உணவகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தான். அப்போது அவனின் உணவகம் வந்தாள் ஜோ… இந்திய காபியின் சுவை பிடித்து போக வாரம் ஒருமுறை அங்கு வந்து, காப்பி அருந்திவிட்டு செல்வாள். அன்று அவளை கண்ட கேவின், பார்த்த உடனே காதல் வயப்பட்டு, அவளுக்கு சேர்வுர் வேலை பார்க்க தொடங்கினான்.

புதன் கிழமை தோறும் காஃபி குடிக்க அவள் வருவதும், இவளை காண இவன் அங்கு போவதும் வாடிக்கை ஆனது, இதை அறிந்து கொண்டு அபியும் நோலனும் கேலி பேச, அதை எல்லாம் பெரிதாக கண்டுக்கொள்ளாது, அவளை பின் தொடர்ந்து அவளை பற்றி தெரிந்து வைத்து இருந்தான் கேவின். இரண்டு மாதம் நன்றாக சென்ற காதல், அதன்பின் அபியை காணாது தேடி அலைந்ததில் இத்தனை நாளும் மறந்து இருந்தது. இன்று, அபி திரும்பி வந்த நிலையில் ஜோவின் நினைவு வர அவளை காண இன்று அவன் உணவகம் திரும்பி உள்ளான்.

குட்டி ஃப்ளாஷ்பேக் முடிஞ்சது.

டாம், அபி, நோலன் மூவரும் கிளம்பி விக்டர் கூறிய உணவகம் சென்று, அவர்களுக்கு ஒதுக்கி வைத்து இருந்த இருக்கை பெற்று அமர்ந்து இருந்தனர். சிறிது தாமதமாக வந்த விக்டர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்களோடு இணைந்து கொள்ள, அனைவரும் உணவு உண்டு விட்டு இல்லம் திரும்பினர்.

காலையில் இருந்து ஓடி ஆடிய களைப்பில் அனைவரும் உறங்க செல்ல, அபி படுக்கையில் படுத்து உறங்கி இருந்தான். நோலன் யாரோடோ அலைபேசியில் உரையாடி கொண்டு பால்கனியில் அமர்ந்து இருந்தான். திடீரென அபி இரும்பும் ஓசை கேட்டு எழுந்து வர அபி நெஞ்சை பிடித்து கொண்டு வாயில் இரத்தம் வழிய சரிந்து இருந்தான்.

நோலன் மாடியில் இருந்து டாம் என்று உரக்க அழைக்க, அந்த அழைப்பு விக்டர்க்கும் ஏட்டியது. அதை கேட்டு குரோதத்தொடு சிரித்து கொண்டார்.

:purple_heart:

அத்தியாயம் - 6

அதி ராகவ்வின் இல்லம் வர அவன், உணவு உண்டு கொண்டு இருந்தான்.
அதை கண்ட அதி,

அதி: “எப்போ பாரு சோறு தான், சரியான சாப்பாட்டு ராமன்.”

சுஜி: “சரியா சொன்ன அதி, ஆனா பெயர் தப்பு, இவன் சாப்பாட்டு ராகவன்”

இருவரும் சொல்லி சிரிக்க, அவர்களை முறைத்து விட்டு மீண்டும் சாப்பாட்டில் கவனமாக இருந்தான் ராகவ்.

சுஜி - ராகவ்வின் அண்ணி

அதி: “அண்ணா எங்கே?”

சுஜி : “அவரு நேத்து அமெரிக்கா கிளம்பி போயிட்டாரு, இவன் தான் நாலு மணிக்கு ஃப்ளைட் ஏத்தி விட்டு வந்தான். அதான் இன்னிக்கி இவன் லேட்.”

அதி: “சரி அண்ணி.”

சுஜி: “சாப்பிடு டா பூரி செஞ்சு இருக்கேன்.”

அதி: “வைங்க அண்ணி…உங்க கையில பூரி மசால் நல்ல இருக்கும்.”

ராகவ்: “ஏன்? ஏன்? என் ஸ்வாதி அண்ணி இட்லி நல்ல இருக்காதா?
சாப்பிடாம வந்து இருக்க?”

அதி: “அதுக்குள்ள செய்தி சொல்லிட்டங்களா?”

ராகவ்: “சாப்பிடு அப்புறம் பேசலாம்.”

இருவரும் சாப்பிட்டு எழுந்து ஹாலில் அமர்ந்தனர்.

ராகவ்: “என்ன தப்பா சொல்லிட்டாங்க? எதுக்கு இப்போ இவளோ கோவம்? வருத்தம்? உனக்கு எல்லாம் அவங்க விருப்பம் தானே இப்போ இதில் மட்டும் என்ன? எப்பவும் என் அம்மா சொன்ன சரின்னு தானே சொல்லுவா? இப்போ என்னாச்சு?”

அதி: “ஏன் உனக்கு தெரியாதோ?”

ராகவ்: “என்ன இன்னும் அந்த ஸ்ரீ புரணமா? தயவு செஞ்சு அதை பேசாதே அதி. எனக்கு உன் மேல கோவமா வருது.”

அதி: “நான் என்ன சொன்னேன் இப்போ? உனக்கு என் மனசு தெரியும், என் காதலை பத்தி உனக்கு நல்லா தெரியும். அப்புறம் ஏன் கோவம் வருது உனக்கு?”

ராகவ்: “அவன்கூட பேசாதே எவ்ளோ முறை சொன்னேன் கேட்டியா? இப்போ பாரு பைத்தியக்காரத்தனமா எல்லாத்தையும் செஞ்சுட்டு இருக்க, சரி இன்னும் மூணு மாசம், தொண்ணூறு நாள் வந்துருவானா? வரலைன்னா?”

அதி: “வந்துருவான். கண்டிப்பா வந்துருவான்.”

ராகவ்: “உன்னை போல ஒரு பைத்தியத்தை நான் பார்த்ததே இல்ல… சரி வரலைன்னா? தொண்ணூறு நாளுக்கு அப்புறம் வரலைன்னா? நான் சொல்றதை கேக்கணும் சரியா?”

அதி: “ராகவ் பிளீஸ் எதும் சொல்லி என்னை கட்டி போடாதே.”

ராகவ்:" இல்ல அதி, உனக்கு தொண்ணூறு நாள் டைம் வேணும்னா கண்டிப்பா நீ நான் சொல்றதை செய்தே ஆகனும். இல்லை நான் அம்மா குடுத்த மூணு மாச அவகாசம் வேண்டாம் சொல்லிடுவேன்."

அதி: “நீயுமா? ராகவ் எல்லாரும் இதில் ஏன் என் விருப்பம், என் உணர்ச்சி புரிஞ்சுக்க மாட்டிங்கரீங்க? எனக்கும் மனசு இருக்குல? உனக்கு கூடவா என் வேதனை புரியுல? என் காதல் புரியுல?”

ராகவ்: “அதி இங்க பாரு, அவன் வரமா போன உன் வாழ்க்கையே போய்டும், அவனையே நெனச்சு இன்னும் எவ்ளோ நாள் இப்படி வாழ போற? அவன் வரமா போய்ட்டா? எங்க எல்லார் பயமும் அதுதான். இப்போ கல்யாணத்துக்கு சரி சொல்லு, மூணு மாசம் உனக்கு டைம் வாங்கி தரேன் அதுக்குள்ள உன் ஸ்ரீ வந்தா, இந்த கல்யாணம் அவனோட இல்ல ஹரீஷ் கூட சரியா? உன் காதல் உண்மை தானே? அப்போ அது அவனை உன்கூட சேர்க்கும். இல்லை, உன் காதல் அவன் இல்ல… உன் வாழ்க்கையும் காதலும் ஹரீஷ் கூட தான். அதை நீ ஏத்துக்கிட்டு வாழணும் சரியா? சரின்னு சொல்லு, இப்போவே இல்ல இன்னிக்கி ஒரு நாள் டைம் தரேன் நைட் சொல்லு.”

அதி எதுவும் பேசாது அதிர்ந்து அமர்ந்து இருக்க, அவளின் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. இதயம் வெடித்து விடும் அளவுக்கு வலி… கத்தி அழவேண்டும் போல இருக்க… எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள்.

டிரைவரிடம் கார் எடுத்து கொண்டு வீட்டிற்க்கு செல்லுமாறு கூறி விட்டு சென்ற அதி, அலுவலகம் செல்லவில்லை, வீட்டுக்கும் வரவில்லை, அவளின் இரண்டு எண்களும் ஸ்விட்ச் ஆஃப். கோமதிக்கு பயம் அதிகம் ஆனது, ராகவ்விடம் கேட்ட போது அவள் காலையில் கிளம்பி விட்டதாக செய்தி கிடைக்க அனைவரும் பதறினர். நேரம் ஆக ஆக கோமதி அழுது புலம்பினார். நிஷாந்த், விஷ்வா, ராகவ் என அனைவரும் அவளை தேடி தேடி களைத்து இல்லம் வர இன்னும் அவள் வந்து சேரவில்லை.

இனி வேறு வழி இல்லை, போலீஸ் புகார் செய்யாலாம் என்று முடிவு செய்து, நிஷாந்த் கிளம்ப வீட்டின் முன் ஒரு கால் டாக்ஸி வந்து நின்றது. அதி அதில் இருந்து இறங்கி வர பெருமூச்சு ஒன்றை விட்டு நிஷாந்த் நிற்க, அனைவரையும் எந்த உணர்வும் இல்லாத முகத்தோடு பார்த்தால் அதி,

விஷ்வா: “எங்க அக்கா போன? உன்ன காணாம பயந்து போய்ட்டோம்.”

நிஷாந்த்: “டேய், என்னமா ஆச்சு? எதும் பிரச்சனையா?”

கோமதி: “எங்க போன? என்ன ஆச்சு? உன் போன் எங்க? ஏன் இவளோ நேரம்?”

அதி: “மருதமலை போனேன். மனசு சரி இல்ல, போன் சார்ஜ் இல்ல, காலையில ஆஃபீஸ் போய் போடுவோம் கிளம்பி போய்ட்டேன், அது தான் எதும் சொல்ல முடியல. கல்யாணத்துக்கு சம்மதம் எல்லாம் உங்க இஷ்டம், என்னை எதும் கேட்காதீங்க இனிமேல், சாப்பாடு வேண்டாம். அசதியா இருக்கு நான் தூங்க போறேன். இந்தாங்க பிரசாதம் என்று தந்து விட்டு சென்றாள்.”

அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் இயல்புக்கு வர, அதி அதற்குள் அவள் அறை சென்று இருந்தாள்.

அவளை தொடர்ந்து அவள் அறை சென்ற ராகவ், அதி என்று அழைக்க,

அவனை கண்டதும் கண்ணீர் பெருக அதை துடைத்து கொண்டவள், “இப்போ சந்தோசம் தானே? நான் இப்போ சந்தோஷமா இருப்பேன் இல்லையா? நீயும் என்னை புரிஞ்சுக்க தயாரா இல்லைல, சரி அதான் முடிவே சொல்லிட்டேன்.” இனி என்ன…?

ராகவ்: “இல்ல அதி, நான் உன் நல்லதுக்கு தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். அதும் அம்மா, அண்ணா எல்லாரும் சொல்லி தான். ஒரு வருஷம் காத்து இருந்து வீணா போன மாதிரி இப்பவும் ஆக கூடாது அதான்.”

அதி: “போதும் டா உன் விளக்கம். எனக்கு தூங்கனும் போ… போ… வெளியே.”

ராகவ் எதோ ஒரு பாரம் மனதில் ஏறி கொள்ள, அறையை விட்டு வெளியே வந்தான்.

அதி ஷவரின் கீழ் உக்கார்ந்து அழுது கரைந்தாள், அவள் சத்தம் போட்டு கத்தி அழுதது ஷவரின் நீர் ஒலியில் எவருக்கும் அது எட்டவில்லை.

ஆனால் அது ஸ்ரீயின் காதுகளுக்கு எட்டியது. துடித்து எழுந்து அமர்ந்தான்.
இவளின் நினைவுகள் அவனை கொன்றது. சீக்கிரம் வரேன் அதி, சொன்ன வார்த்தையை காப்பாத்த நான் வருவேன், நம்ம காதல் நம்மை சேர்க்கும்.

அழுது ஓய்ந்து அதி, ஸ்ரீ கண்களோடு பேசி உறங்கி இருந்தாள்.

அவளின் நினைவுகளால் அவன் உறக்கம் இன்றி தவித்து கொண்டு இருந்தான்.

அதியின் சம்மதம் ஹரீஷ் காதுகளுக்கு எட்டியது. அவளை காண அவன் வேலைகளை விட்டு விட்டு ஓடி வந்தான் அந்த மாவட்டத்தின் துணை ஆணையாளர்.

:purple_heart:

அத்தியாயம் - 7

நோலனின் சத்தம் கேட்டு டாம் விரைந்து வந்து, நோலனை பேச விடாது, அபியை தூக்கி கொண்டு வெளியில் வரவும் ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது, உடன் மருத்துவமனை அழைத்து செல்ல இதற்காக காத்து இருந்த மருத்துவ குழு அவனுக்கு சிகிச்சை கொடுக்க, டாம் நோலனை பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு, அவசரமாக எங்கோ கிளம்பி சென்று விட்டான். நோலன் கேவினுக்கு செய்தியை சொல்ல, கேவின் உடனே கிளம்பி வர, அபிக்கும் சிகிச்சை முடித்து தனி அறைக்கு மாற்றி இருந்தனர்.

கேவின்: “எப்படி? என்ன ஆச்சு?”

நோலன்: “நீ கிளம்பி போனதும், விக்டர் அங்கிள் நைட் வெளியே சாப்பிட போவோம் என்று சொல்லி விட்டு போனார். அபியும் சம்மதம் தெரிவித்து, உன்னையும் என்னையும் கூட வர சொன்னான். உன்னால் வர முடியாது என்று தெரியும், அதான் உன்னை கூப்பிடாமல் போய் வந்தோம், சாப்பிடும் வரை நல்லா இருந்த அபி, சாப்பிட்டு வந்த தூக்கம் வருது தூங்கிட்டான். நான் போன் பேசிட்டு இருந்தேன் அவன் இரும்பல் சத்தம் கேட்டு உள்ள போனேன் பார்த்த வாயில் ரத்தத்தோடு மயங்கி விழுந்தான். என் உயிரே போய்டுச்சு கேவின் அவனை இப்படி ஒரு நிலையில் பார்க்க, அவனோடு இருந்தும் எப்படி இது இவனுக்கு நடந்தது என்று புரில, டாக்டர் இன்னும் எதுவும் சொல்லல, பயமா இருக்கு கேவின்.”

கேவின்: “எதும் ஆகாது, பயப்படாத, ஆமா டாம் எங்கே? தெரியல எங்கயோ அவசரமா போறதா சொன்னான்.”

டாக்டர் கேவினையும் நோலனையும் அவர் அறைக்கு அழைக்க உள்ளே சென்றனர்.

டாக்டர்: “அபி உங்களுக்கு யாரு?”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க,

கேவின்: “எங்க ப்ரெண்ட் சார். எப்படி இருக்கான்?”

டாக்டர்: “அவர் சாப்பிட்ட சாப்பாட்டில் விஷம் இருந்து இருக்கு, அவர் நெஞ்சு அடைக்க பார்த்து இருக்கு, சரியான நேரம் வந்ததால் தான் உயிர் பிழைக்க முடிஞ்சுது, கொஞ்சம் லேட் ஆகி இருந்தாலும், நிலைமை மோஷம் ஆகி இருக்கும்.”

நோலன்: “இப்போ அவனோட உடல்நிலை எப்படி இருக்கு? நாங்க பார்க்கலாமா?”

டாக்டர்: “அவருக்கு ரெஸ்ட் வேணும், நல்லா தூங்கனும், இன்னும் கண் முழிக்கல, போய் பாருங்க ஆனா எந்த தொந்தரவும் செய்ய கூடாது.”

இருவரும் சரி என கூறி விட்டு, எழுந்து வந்து அபி கண் முழிக்க காத்து இருந்தனர்.

இரவு முழுவதும் அவன் தூங்குவதை பார்த்து கொண்டே அவர்கள் இருவரும் மனம் கலங்கி போய் இருந்தனர். கேவின் கண்ணீர் வடித்தே உறங்கி இருக்க, அவன் தோள் சாய்ந்து நோலனும் உறங்கி இருந்தான். பொழுது விடிந்து டாம் அந்த அறையில் நுழையவும், அபி கண் முழிக்கவும் சரியாக இருந்தது.

அபி கண் திறந்து மென்னகை சிந்த, டாம் வெற்றி என்பது போல் அவன் கட்டை விரலை உயர்த்தி காட்ட, அபியின் மென்னகை, இதழ் விரிந்து பெரும் புன்னகையை சிந்தியது.

டாம்: “உனக்கு காவல் வெச்சுட்டு போன, என்ன பண்ணுறாங்க பாரு, சரியான தூங்கு முஞ்சீங்க, இதுக்கு எதுக்கு கூட வந்தாங்க? இரு இப்போ பார்.”

டாம் அருகில் சென்று, “கேவின் அபியா பாரு…” “நோலன்” என்று சத்தம் போட…

இருவரும் அடித்து பிடித்து எழுந்து பார்க்க, அபி வயிற்றை பிடித்து சிரித்து கொண்டு இருக்க, டாம் இரு கைகளையும் கட்டி கொண்டு அபியின் அருகில் அமைதியாக நின்று இருந்தான்.

நோலன்: “என்னாச்சு? அபிக்கு?”

டாம்: “வயிறு வலிக்குது, உங்க நட்பையும் பாசத்தையும் பார்த்து.”

கேவின்: “அபியிடம் எப்படி இருக்கு இப்போ? எதும் கஷ்டமா இருக்கா?”

அபி: “எதும் இல்லை. நான் நல்லா இருக்கேன்.”

நோலன் சென்று டாக்டரை அழைத்து வர,

டாக்டர்: “சரியான நேரத்தில் கால் பண்ணி சொன்னிங்க அபி, வாந்தி எடுக்காம இருந்து இருந்தா நிலைமை இன்னும் மோசம் தான், இப்போ எதும் கஷ்டமா இருக்கா? நல்ல ரெஸ்ட் வேணும் இப்போ, இன்னிக்கே நீங்க வீட்டுக்கு போலாம்.”

அபி : “ரொம்ப நன்றி டாக்டர், சரியான நேரத்தில் எனக்கு எல்லா உதவியும் செஞ்சு இருக்கீங்க, நான் நன்றி கடன் பட்டு இருக்கேன். நன்றின்னு சொன்ன போதாது உங்களுக்கு, எந்த உதவி தேவை பட்டாலும் எனக்கு கால் பண்ணுங்க, நான் உங்கள் உதவி செய்ய காத்து இருக்கேன்.”

டாக்டர்: “கண்டிப்பா அபி, கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, நான் அப்புறம் வரேன். டாம்மும் நன்றி கூற சிரித்து விட்டு வெளியே சென்றார்.”

கேவின்: “என்னடா சொல்றாரு? எதும் புரியுல, டாம் நீங்க சொல்லுங்க என்ன நடக்குது இங்க?”

நோலன்: “ஆமா, எப்படி போன் கூட பண்ணாம ஆம்புலன்ஸ் வந்துச்சு? நீங்க எங்க போனீங்க நைட்? இதுல எதோ மர்மம் இருக்கு.”

அபி: “ஆமா இருக்கு, அவர் எனக்கு விஷம் வெச்சாரு, அதை நான் அவருக்கே ஆயுதமா மாத்திக்கிட்டேன்.”

கேவின்: “என்ன சொல்ற? விஷமா?”

நோலன்: “புரியுற மாதிரி சொல்லு அபி.”

அபி: “அவர் எனக்கு வீட்டில விஷம் வெச்சா, மாட்டிப்போம் நினைச்சு, வெளிய சாப்பிட கூப்பிட்டு போய் சாப்பாட்டில் விஷம் வெச்சாரு.”

நேற்று மாலையில்:

அபி, அவனின் சொத்து அவன் வசம் வந்த பிறகு, அவனின் அனைத்து தொழில் பற்றிய நிலையை அறிந்து அதிர்ந்து இருந்தான். விக்டர் எதோ பெரிய நயவஞ்சகம் செய்து இருப்பது அபியின் மூளைக்கு எட்டியது.

இதை பற்றி கேட்க அபி அவர் அறைக்கு போன போது, விக்டர் யாரிடமோ உணவில் விஷம் வைக்க சொல்லி பேசி சமாதானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அதை கேட்ட அபிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி, சரியாய் அதே நேரம் அபியை கேவின் அழைக்க, அபி வந்த சுவடு இல்லாது வெளியேறி இருந்தான்.

அபி: “என்னை கொல்ல தான் ஏற்பாடு நடக்குது புரிஞ்சு போய்டுச்சு, அதான் அதில் அவரை சரியாய் மாட்டி விட திட்டம் தீட்டி, செயல் படுத்துனேன்.”

“ராபின் அங்கிள் நேற்று காலை சொன்னார். அவன் சொத்தை எழுதி தர ஆள் இல்லை எதோ சதி இருக்கு, எழுதி தரது போல் எழுதி கொடுத்து விட்டு எதாவது பிரச்சனை செய்ய வாய்ப்பு இருக்குன்னு.”

“அவருக்கு என் அப்பா மேல, அவர் வளர்ச்சி மேல கோவம், நம்ம டீம் மாத்தி இருக்கார். ஆல்ரெடி, முன்னூறு கார் சரியான ப்ரேக் அக்சஸ் இல்லாம வெளிய போய்டுச்சு. நம்ம காரோட விற்பனை ஆறு மாசத்தில் குறைந்து இருக்கு, அவருக்கு என் அப்பா பேர், இந்த தொழில் எல்லாம் அழியனும் அதான் அவர் ஒரே நோக்கம். நான், நீங்க எல்லாரும் அதுக்கு தடை.”

“அவருக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லாமல் என்ன செய்ய நான்? அதான் அவர் வழியில போய் அவரை அடிச்சேன்.”

“நோலன் கிளம்பி போனான், டாம்கிட்ட எல்லாத்தையும் சொன்னேன், டாக்டர்கிட்ட பேசி அடித்து என்ன செய்யனும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அவரோட உதவியோடு எனக்கு சிகிச்சைக்கான ஏற்பாடு பண்ணிக்கிட்டேன்.”

“அவர் திட்டப்படி சாப்பிட போனோம், சாப்பிட்டோம், விஷம் இருக்கு தெரிஞ்சே தான் சாப்பிட்டேன். அதான் எனக்கு ஆர்டர் பண்ண எதும் யாருக்கும் நான் டேஸ்ட் பார்க்க கூட தரல…டாம் தான் பாவம் ரொம்ப கஷ்டபபட்டான் இயல்பா இருக்க, சாப்பிட்டதும் வாந்தி எடுத்துட்டுடேன், மயக்கம் வரது போல் இருக்கவும் தூக்கம் வர மாறி போய் படுத்துடேன், அப்புறம் நடந்த எல்லாமே உங்களுக்கும் தெரியுமே.”

நோலன்: “அப்போ டாம் அண்ணா நைட் எங்க போனாரு?”

டாம் சிர்த்து விட்டு அவர் சென்ற இடத்தை பற்றி கூறினார்.

நோலன், கேவின் இருவருக்கும் முகத்தில் புன்னகை பூத்தது.

:purple_heart:

அத்தியாயம் - 8

அதி காலை எழுந்து கிளம்பி பூஜைக்கு வர ஹரீஷ் அவள் எதிரில் அமர்ந்து இருந்தான்.

மனதிற்குள்

அதி: ‘என் ஸ்ரீ எங்கிட்ட வரணும், அவனை என்னோடு சேர்த்து வை, நான் சம்மதம் சொன்னதே மூணு மாசம் இன்னும் நேரம் கிடைக்கும் தான், இது வரை எதுமே என் விருப்பம் இல்ல, எனக்காக நான் எதையும் வேண்டினது இல்ல, முதல் முறை கேக்குறேன், என் காதலையாவது என் விருப்பம் போல நடக்க விடு மா’

ஹரீஷ்: ‘ரொம்ப நன்றி மா, என் காதல் கைகூடி வர போது, எனக்கு தெரியும் அவளுக்கு இதுல விருப்பம் இல்லன்னு, ஆனா என் காதல் , என் அன்பு, அவளை மாற்றும். இப்போ என் கூட வாழ சரினு சொல்லி இருக்கா, அது போதும். இதை என் மேல காதல் ஆக்கிருவேன், அதுக்கு உன் அருள் குடுத்து எனக்கு உதவி செய் மா’

இருவரும் கண் திறக்க, ஹரீஷ் புன்னகை முகமாக அதியை பார்க்க, அவள் கண்ணின் கண்ணீரோ இமை திறந்ததும் அணை திறந்து வெள்ளம் வருவது போல, கண்ணீரை சிந்தியது.

அவளின் நிலை கண்டு ஒரு நிமிடம் இவனுக்கு மூச்சு நின்றது.

ஹரீஷ்: ‘அழாத டீ அதி, அவனை நினைச்சு தானே அழர? சீக்கிரம் எல்லாம் சரி ஆகிரும், என் கண்ணுல வெச்சு பார்த்துப்பேன் டீ, அவன் மேல வெச்சு இருக்கற காதல் பார்த்தா கொஞ்சம் பொறாமையா தான் டீ இருக்கு, கூடிய சீக்கிரம் அந்த அன்பு மொத்தமும் எனக்கு தான் என மனதிற்குள் நினைத்து கொண்டான்.’

பூஜை முடிந்து அனைவரும் எழுந்து ஹால் வர, தியா மாமா என ஹரீஷ் கட்டிக்கொண்டாள்,

தியா: “எப்போ மாமா வந்த?”

ஹரி: “இன்னிக்கு காலையில் தான். என் தங்க குட்டி பார்க்க வந்தேன்.”

தியா: “லவ் யூ மாமா”

விஷ்வா: “போலீஸ் பொய் சொல்ல கூடாது, உண்மையா தியாவை பார்க்க தான் வந்தீங்களா மாமா?”

ஹரீஷ் சிரித்துக்கொண்டே அவன் முதுகில் ஒரு அடி வைக்க,

விஷ்வா: “மாமா, ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்து, பூஜையில் பார்த்ததும் செம்ம ஹாப்பி, திரும்பி என் முகம் பார்ப்பீங்க சிரிப்போம் நினைச்சு நான் உங்க முகத்தை பார்த்தா, நீங்க…”

அதற்குள் ஹரீஷ் அவன் வாயை மூடி விட,

நிஷாந்த்: “அவன் வாயை ஏன் மூடுற? அவன் சொல்றது சரி தான், உனக்கு மாமன், மச்சான் எல்லாம் எங்க கண்ணு தெரிய போரான்? நீ வந்தது அதியை பார்க்க தானே, இதுல என் பொண்ணுக்கிட்ட பொய் வேற சொல்ற,”

ஸ்வாதி: “அப்போ நீங்க ரெண்டு பேரும் சாமி கும்புடல, இதை தான் பார்த்துக்கிட்டு இருந்து இருக்கீங்க அப்படி தானே?”

ஹரீஷ்: “அப்படி சொல்லு என் செல்ல அக்கா”

நிஷாந்த்: “ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா?”

ஸ்வாதி: “நீங்க சேரும் போது நாங்க சேர கூடாத?”

இவர்கள் எல்லாம் சிரித்து பேசி கொண்டு இருக்க, அதி அனைவருக்கும் காஃபி போட்டு கொண்டு இருந்தாள். அதை அனைவருக்கும் கொடுத்து விட்டு, காலை உணவு செய்ய உதவி கொண்டு இருந்தாள்.

காலையில் உணவு வேலை முடிய, அனைவரும் உண்டு கொண்டு இருக்க,

ஸ்வாதி: “இன்னிக்கி நீ ஆஃபீஸ் போகாதே அதி, நான் தியா ஸ்கூல் பரெண்ட்ஸ் மீட்டிங் போறேன் பதினோரு மணிக்கு மதியம் சமையல் செய்யன்னும். ஹரி, விஷ்வா, அத்தை எல்லாரும் வீட்டில் இருப்பாங்க அதான்.”

அதி: “சரி அண்ணி நான் பார்த்துக்கறேன் நீங்க போய்ட்டு வாங்க”

ஸ்வாதி: “ஹரி, தூக்கம் வருது போய் தூங்க போய்ட்டான், அவனுக்கு”

அதி: “சரி அண்ணி, நான் பார்த்துக்கிறேன்.”

ஸ்வாதி: “சரி தான், நீ தான் இனி அவனை பார்த்துக்கணும்?”

இதை கேட்டதும் அதியின் முகத்தில் சிரிப்பு தொலைந்தது…

விஷ்வா: “அக்கா நல்லதா எதாவது சமையல் செய் பிளீஸ் அக்கா, அதே சாம்பார், பொரியல் போர் அக்கா, மீன் குழம்பு வை நீ நல்லா செய்வ”

அதி: “செய்றேன் டா, வேற எதும் வேணுமா?”

நிஷாந்த்: “மீன் வறுவல், குழம்பு ரெண்டும் செய் டா, மதியம் வந்துறேன் எல்லாரும் ஒண்ணா சாப்பிடுவோம்.”

அதி: “சரி அண்ணா”

நிஷாந்த்: “அதி… அது வந்து… உனக்கு… உனக்கு… விரு…விருப்பம் தானே மா?உன் மனசுல எது இருந்தாலும் சொல்லு மா…”

அதி: “எதும் இல்லை அண்ணா, இதை பற்றி பேச எனக்கு எதும் இல்லை, இனி எல்லாம் உங்க விருப்பம் தான்.”

அனைவரும் அவரவர் வேலையை பார்க்க போய் விட , ஹரீஷ் எழுந்து கீழே வந்தான்.

ஹரீஷ்: "அக்கா பசிக்குது, என்ன செய்யுற? " என்று கேட்டுக்கொண்டே உணவு மேஜையில் அமர்ந்தான்.

அதி: “அண்ணி தியா ஸ்கூல் வர போய் இருக்காங்க, ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க தக்காளி ரசம் வெச்சுட்டு இருக்கேன் முடிஞ்சதும் சூட சாப்பாடு வெக்கறேன்.”

ஹரீஷ்: “சரி அதி, ஆமா இது என்ன புதுசா வாங்க போங்க?”

அதி: “நான் உங்களை என் ப்ரெண்ட்னு நினைச்சேன் அப்போ அப்படி கூப்பிட்டேன், ஆனா நீங்க அப்படி நினைச்சு பார்க்களையே அதான் இப்போ இப்படி கூப்பிடுறேன்.”

ஹரீஷ்: “…”

அதி அவனுக்கு உணவு பரிமாற ஹரீஷ் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஹரிஷ்: "அதி, என்ன பிடிக்கலையா? ஏன்? "

அதி: “எனக்கு உன்னை பிடிக்கும் ஹரி, அதை விட என் ஸ்ரீ யை ரொம்ப பிடிக்கும்.”

ஹரீஷ்: “சரி, அப்புறம் ஏன் என்னை கட்டிக்க சம்மதம் சொன்ன?”

அதி: “சரின்னு சொன்ன இன்னும் மூணு மாசம் நேரம் கிடைக்கும் சொன்னாங்க அதான்.”

ஹரிஷ்: “அதி?”

அதி: “எனக்கு வேற வழி தெரில ஹரி, எதாவது செய், இந்த கல்யாணம் வேண்டாம் தான், ஆனா சொன்ன இந்த மூணு மாசம் நேரம் கிடைக்காது, உன்னை வேண்டாம் சொன்ன வேற யாரையாவது பேசி கல்யாணம் பண்ணி வெச்சுருவாங்க, அதான் உனக்கு சரின்னு சொன்னேன். இன்னும் ஒரு ஆறு மாசம் தள்ளி போடு இந்த கல்யாணத்தை பிளீஸ் எனக்கு உதவி செய், அதுக்குள்ள என் ஸ்ரீ வந்துருவான் பிளீஸ் பிளீஸ்”

ஹரீஷ்: “சரி தள்ளி போடுறேன் ஆனா அவன் வரலைன்னா? என்ன செய்ய போற? தள்ளி போட்டுடே இருப்பியா?
நான் ஒரு யோசனை சொல்றேன் யோசி, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ, இதே மாறி இருந்துருவோம். என் மூச்சு காத்து கூட உன் மேல படாது இது சத்தியம். தள்ளி போடுறது பிரச்சனைக்கு தீர்வு இல்ல, உன் ஸ்ரீ வரட்டும் அவர்கிட்ட இது சந்தர்ப்பதுக்கும், உன்னை காப்பாதவும் நடந்த கல்யாணம் நானே சொல்லி புரிய வெக்குறேன், அதுக்கு அப்புறம் உன்னை யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க. சரியா? யோசி அதி”

அதி: “இல்ல கல்யாணம் வேண்டாம் ஹரி, என் ஸ்ரீ முன்னாடி உன் பொண்டாட்டியா”

ஹரீஷ்: “யாரு சொன்னா? நீ என் பொண்டாட்டி இல்ல, இது சும்மா எல்லாரையும் இப்போ சமாதானம் செய்ய பொம்மை கல்யாணம்.”

அதி: “ஹரி எதும் தப்பா? பயமா இருக்கு?”

ஹரீஷ்: “என்னை நம்பு. என்னால கல்யாணம் வேண்டாம் போ முடியும். அப்புறம் உன் நிலைமை மோசம் ஆகிரும், அதுக்கு தான் இந்த யோசனை, என் மேல காதல் தான் இல்லை நம்பிக்கையும் இல்லையா?”

அதி: “நம்புறேன் அதான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன், உன்கிட்ட உதவி கேக்குறேன்.”

ஹரீஷ்: “இதுவும் உதவி தான்.”

அதி: “அப்போ சரி”

ஹரீஷ்: “நான் இருக்கேன், இனி நிம்மதியா சிரிச்சு சந்தோசமா இரு. நான் பார்த்துக்கறேன்.”

அதி குழப்பத்தோடு இது சரியா? தவறா என யோசித்து கொண்டு இருந்தாள்.

பின் அனைவரும் வர உணவு அருந்திவிட்டு அதி அவள் அறைக்குள் நுழைய,

கோமதி: “யார ஏமாத்தா இந்த திட்டம் ஹரி? நீ சொன்னது பொய்னு அவளுக்கு தெரிய வரும் போது அவ கலங்கி போக போற”

ஹரி: “என் அதி அத்தை, என்னால யாருக்கும் விட்டு தர முடியாது. அவ மனசு மாற என்கூட இருக்கணும், அதுக்கு தான் பொய் சொன்னேன்.
கல்யாணம் ஆகி அவ என் பக்கத்துல வந்துட்டா மனசு மாற வாய்ப்பு இருக்கு அத்தை.”

கோமதி: “என்னமோ டா, எனக்கு அவளும் நீயும் சந்தோஷமா இருக்கணும், அது தான் வேணும்.”

இந்த காதல் வந்துட்டா சுயநலமும் சேர்ந்து வந்துருமோ? ரெண்டு பேரும் அவங்க காதலை விட்டு தர தயாரா இல்லை. என்ன செய்ய?

"அடேய் ஹரி பொய் எல்லாம் சொல்ற? ஆனா உன் பொய்க்கு இங்க வேலை இல்ல ராசா ஏன்னா நான் ஸ்ரீ க்கு டிக்கெட் போட்டுடேன். வந்துருவான் சீக்கிரம். அதி குட்டி சிரி தங்கம் உன் வேண்டுதல் நிறைவேற போகுது - மீ "

:purple_heart:

அத்தியாயம் - 9

டாம் கூறிய அனைத்தும் நோலனையும் கேவினையும் மகிழ்ச்சியில் தள்ளியது.

அபியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு நோலன் விரைந்தது அவர்கள் இரவு உணவு உண்ட அந்த உணவகத்திற்கு, அவர்களுக்கு உணவு பரிமாறிய அவனை பிடித்து அடிக்க அவன் உண்மையை ஒற்றுக் கொள்ள காவல் நிலையம் அழைத்து சென்று டாம் நடந்தவற்றை கூற அந்த சேர்வேர் சாட்சியாக வைத்து விக்டரை போலீஸிடம் பிடித்து கொடுத்தான் டாம். அவர்களை சிறையில் தள்ளி விட்டு, காலையில் அபியிடம் அனைத்தும் கூறி கட்டை விரலை உயர்த்தி வெற்றி என கூறி இருந்தான்.

அபியின் தரப்பில் ராபின் வாதாட குற்றம் விக்டரின் பெயரில் நிரூபிக்க பட்டு அவருக்கு சிறையை பரிசளித்தது பிரெஞ்ச் அரசு.

அபி உடல் நலம் பெற்று வீட்டிற்க்கு வந்து இருந்தான். அவனை ஓய்வில் விட்டு அலுவலகம் சென்ற கேவினும், நோலனும் சோர்ந்த முகத்தோடு வீடு திரும்பினர்.

அபி: “ஹெய், என்னாச்சு ரெண்டு பேர் முகமும் இருண்டு போய் இருக்கு என்னாச்சு?”

நோலன்: “நிறைய குழப்பம், நிறைய பேர் வேலையில் இல்ல, புதுசா வந்த யாருக்கும் சரியா இன்னும் வேலை புரியுல, என்ன செய்ய தெரில, இதுக்கு நடுவில் அந்த ப்ரேக் அக்சஸ் தப்பா போன கார்களை வேற கண்டு பிடிக்கணும்… என்ன செய்ய?”

கேவின்: “இப்போ புரொடக்ஷன் நிறுத்தி இருக்கு அபி, மாடல் டிமாண்ட் இருக்கற இந்த நேரத்தில் நம்ம மெகினிஸ்ம் பிரச்சனை தெரிஞ்சா கம்பனி பெயருக்கு ஆபத்து. சரியா மாட்டிவிட்டு போய் இருகார் உன் அங்கிள்.”

அபி: “சரி போய் ஃப்ரெஷ் ஆகி வாங்க இரவு உணவுக்கு கேவின் ரெஸ்ட்டாரண்ட் போவோம். கேவின் ரெஸ்ட்டாரண்ட்க்கு போய் ரொம்ப நாள் ஆச்சு.”

நோலன்: “அபி இங்க என்ன பிரச்சனை போய்ட்டு இருக்கு நீ அசால்ட்டா இருக்க”

அபி: “நாளையில் இருந்து நான் வரேன் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இருக்கு”

போங்க கிளம்புங்க இன்னிக்கி புதன்கிழமை,

கேவின்: “அய்யோ! ஆமா, நான் போணும் இன்னிக்கி அங்க”

அபி: “நாங்களும் வாரோம் இன்னிக்கி போ கிளம்பு”

பின் மூவரும் கிளம்பி கேவினின் உணவக செல்ல காரில் ஏறினர்.

கேவின்: “ஆமா இப்போ அங்க ஏன் போறோம்?”

அபி: “அப்பா, அம்மாவை பார்க்க அப்புறம் உன் ஜோவை பார்க்க, நீ கண்ணில காதல் செய்ற அழகை பார்க்க, இப்படி பார்க்க நிறைய இருக்கு”

நோலன்: “இன்னிக்கி ஏலியன் உன்ன வெச்சு எதோ பிளான் பண்றான், என்னன்னு தான் தெரியல”

கேவின்: “நானே அவ இன்னிக்காது என்னை பார்க்கணும் இருக்கேன், நீங்க ரெண்டு பேரும் ஏன் என்னை வெறுப்பு ஏத்திட்டு இருக்கீங்க?”

நோலன்: “என்ன ஆச்சு கேவின்?”

கேவின்: “இவ்வளவு நாள் பார்க்காத கோவம் அவளுக்கு, நான் என் நிலைமை விவரமா டிஸ்யூ பேப்பர் ல எழுதி குடுத்தேன், அவ அதை படிச்சுட்டு தூக்கி போட்டு போய்ட்டா, இன்னும் கோவமா தான் இருக்களோ என்னமோ தெரில… ஒரே டென்ஷனா இருக்கு”

அபி: “விடு, சரி பண்ணிருவோம், இன்னிக்கி லவ் சொல்ல வெக்கறேன் உங்க ரெண்டு பேரையும் சரியா?”

நோலன்: “என்ன? இதையும் சரி செய்ய போறியா? இன்னிக்கி இவன் சரி இல்லயே”

அதற்குள் உணவகம் வந்து விட,

அபி: “நீ முன்னாடி போ கேவின், நாங்க பின்னாடி வரோம், அப்புறம் நான் சொல்ற வரை உனக்கு எங்களை தெரியாது, எங்களுக்கு உன்னை தெரியாது சரியா?”

நான் அப்பாவையும் அம்மாவையும் பின்னாடி வழியில் போய் பார்த்திட்டு வரேன் நோலன் பார்க் பண்ணிட்டு வெயிட் பண்ணு,

நோலன்: “நான் பார்க்க வேணாமா ரெண்டு பேரையும்?”

அபி: “அப்புறம் பார்க்கலாம், இப்போ சொல்றத செய்”

அபி சொன்னது போல் அனைத்தும் நடந்தது, அபி உள்ளே சென்று இருவரையும் பார்த்துவிட்டு கேவின் - ஜோ காதலை பற்றி சொல்ல நேன்ஸி முதலில் லேசாக மறுத்து பின் ஏற்று கொண்டார். இனி அவன் நடத்த இருக்கும் நாடகத்திற்கு அவர்களையும் துணை சேர்த்து கொண்டு வாசலுக்கு சென்றான்.

பின் இருவரும் உள்ளே செல்ல, நேன்ஸி சிரித்து வரவேற்க, நோலன் அம்மா என வாய் திறக்க அபி அவன் கை பிடித்து கண் காட்ட, நோலன் புரிந்து கொண்டு வேறு எதோ சொல்ல வந்தது போல பேசி கொண்டே இருவரும் அவர்களுக்கு என ஒரு டேபிள் எடுத்து கொண்டு இருக்கையில் அமர, கேவின் ஜோவிற்க்கு இரவு உணவுகளை கொண்டு வந்து தரவும் சரியாக இருந்தது.

நோலன்: “சரியான நேரத்துக்கு தான் நாமும் வந்து இருக்கோம்.”

அபி: “சரி, எது கொடுத்தாலும் குறை சொல்லணும் இப்போ புரிஞ்சுதா?”

நோலன்: “இங்க எதுமே அப்படி இருக்காதே, எல்லாமே எனக்கு பிடிக்கும், எப்படி சொல்ல?”

அபி: “கேவின் காதலுக்காக செய், புரிஞ்சுதா? எதாவது தப்பா செய்த என்ன பத்தி தெரியும்ல?”

நோலன்: “சரி, சரி”

அபி கேவினை அழைத்து பட்டர் நான், சிக்கன் டிக்கா, சீஸ் தோசை, பட்டர் பன்னீர் என ஆர்டர் செய்து விட்டு அமர்ந்து ஜோவை பார்த்து கொண்டு இருந்தனர்.

ஜோ, கேவின் பார்க்காத போது அவனை பார்ப்பதும், அவன் கண் அவளை தீண்டும் போது திரும்பி கொள்வதும் என கேவினோடு விளையாடி கொண்டு இருந்தாள்.

கேவின் அவர்கள் ஆர்டர் செய்ததை கொண்டு வந்து வைக்கவும். ஒரு வாய் தோசை உண்ட அபி, காரம் அதிகம் என கூற அதை மாற்றி கொடுத்தான், நோலன் நானில் இன்னும் வெண்ணெய் வேண்டும் என கூற அதை மாற்றி கொடுத்தான், இப்படியே அவனை ஜோவின் பக்கம் திரும்ப விடாது அவர்கள் வேலை வாங்க, கேவினின் பொறுமை போய் இருந்தது, ஒரு கட்டத்தில் நோலன் உணவு நன்றாக இல்லை என கேவினோடு வாக்குவாதம் செய்ய அங்கே இருந்த அனைவரும் இவர்களை திரும்பி பார்க்க, ஜோவிருக்கோ நோலன் மீது கடும் கோபம் வந்தது. அபியும் சேர்ந்து கொண்டு நேன்ஸியை அழைக்க, கேவினை நேன்ஸி திட்டி கொண்டு இருக்கும் போது ஜோ அவள் இருக்கை விட்டு எழுந்து வந்து நேன்ஸியிடம்…

ஜோ: “ஆண்டி அவர் மேல என்ன தப்பு? நானும் அதே தான் சாப்பிட்டு இருக்கேன் எனக்கு எந்த குறையும் தெரியுல, இவங்க தேவை இல்லாம பிரச்சனை பண்ண வந்து இருக்காங்க, அவங்கள என்னன்னு கேளுங்க”

அபியும் நோலனும் ஒருவரை ஒருவர் பார்த்து லேசாக சிரித்து கொண்டனர்.

அபி: “ஆமா யாரு நீங்க? உங்க வேலைய போய் பாருங்க, இது எங்க பிரச்சனை, மேன்னர்ஸ் இல்ல? இப்படி அடுத்தவங்க பிராப்ளம் ல தலையிட?”

நோலன்: “ஒரு சர்வர் திட்டினா உங்களுக்கு என்ன? கேட்ட சாப்பாடு எதும் சரி இல்ல கேட்ட பேசாம இருக்கான், இவனுக்கு சப்போட் பண்ண நீங்க வேறயா சரி தான்”

அபி: “இவன் கிட்ட நாங்க என்ன கேட்டோம் என்ன கொடுத்து இருக்கான்? சிக்கன் சரியா வேகவே இல்ல, கேட்ட போய் குக் பண்ணி தரேன் சொன்னான், இப்போ ஓவர் குக் பண்ணி குடுத்து இருக்கான், இது ஒரு சாப்பாடு?”

நோலன்: “இவன இப்போவே வேலையா விட்டு எடுங்க… என் வாழ்க்கையில் ரொம்ப வொர்ஸ்ட் சர்விஸ் இது தான்.”

ஜோ: “ஹலோ, மிஸ்டர் என்ன பேசிட்டே போறீங்க?”

நேன்ஸி: “விடுங்க மேடம் நான் பார்த்துக்கறேன் நீங்க போய் சாப்பிடுங்க, கேவின் போ கடையா விட்டு வெளியே”

அங்கு ஜோவை வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டு இருந்த கேவினை அவன் அம்மா திட்டவும். சுயநினைவுக்கு வந்து அவன் அவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்க…

ஜோ: “எதுக்கு கேவின் மன்னிப்பு கேக்குற? இவங்க இப்படி பொய் சொல்லி அதே காசுக்கு இன்னும் கொஞ்சம் சேர்த்து சாப்பிட போக இப்படி பேசுறாங்க இந்த மாறி கீழ் தரமான ஆளுங்க கிட்ட எதுக்கு நீ மன்னிப்பு கேக்கணும்?”

உங்களுக்கு இவர் யாருன்னு தெரில அதான் இப்படி பேசறீங்க,

அபி: “யாரு இவரு? சொல்லுங்க தெரிஞ்சுப்போம்”

ஜோ: “இவர் இந்த ரெஸ்ட்டாரண்ட் முதலாளி, இவங்க அவர் அம்மா. நீங்க தான் வெளிய போகனும். போங்க, உங்க காசையும் நானே கொடுத்தரேன் வெளிய போங்க”

நோலன்: “ஹலோ மேடம் நீங்க யார் இதெல்லாம் சொல்ல? உங்களுக்கு என்ன உரிமை, நீங்களும் இங்க சாப்பிட தானே வந்தீங்க? உங்களுக்கு என்ன அவரை பேசினா?”

அபி: “அதனே யாரு நீ? அவங்க அம்மாவே சும்மா இருக்கும் போது நீங்க ஏன் சும்மா சத்தம் போட்டு இருக்கீங்க?”

யார் நீ என கேட்க ஜோவின் முகம் வாடி போனது… நான் யார்? இப்போ என்ன செய்ய என ஒரு நிமிடம் யோசித்த ஜோ. அடுத்த நொடி நிமிர்ந்து கேவினை ஒருமுறை பார்த்து விட்டு

ஜோ: “நான் அவர் காதலி, எனக்கு உரிமை இருக்கு இதை சொல்ல, இது எனக்கும் சொந்தமான இடம் தான் நீங்க வெளிய போலாம்” என கூற,

கேவின் ஜோ கூரியதை கேட்டு அப்படியே நின்று இருந்தான், நேன்ஸியின் முகம் புன்னகை பூத்தது, அபியும் நோலனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க, இத்தனை நேரம் இதை எல்லாம் பார்த்து சிரித்து கொண்டு இருந்த ஜேம்ஸ் அருகில் வந்து,

ஜேம்ஸ்: “போதும் உங்க விளையாட்டு நிறுத்துங்க, கஸ்டமர்ஸ் வர நேரம் இது, கொஞ்சம் விட்ட என் மருமகளை இப்படி டென்ஷன் பண்ணி விட்டிங்களே” என்று கூற…

அபி, நோலன், நான்சி, ஜேம்ஸ் என அனைவரும் சிரிக்க கேவினும் ஜோவும் முழித்து கொண்டு நின்று இருந்தனர்.

அபி கேவினின் தோள்களில் தட்ட கேவின் என்ன என்பது போல பார்க்க, நோலன் ஜோவை கை காட்ட, ஜோவை பார்த்து சிரித்துவிட்டு அனைவரையும் அறிமுகம் செய்து வைக்க, ஜோவிற்க்கு இங்கு நடந்த விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது.

அபி: “நாங்க அவன் ப்ரெண்ட்ஸ், உங்க கோவம் போகவும், உங்களை சேர்த்து வைக்கவும் நான் செய்த வேலை தான் இது… நீங்களே சொல்லணும் தான் இப்படி பண்ணேன். உங்களை அவன் வந்து பார்க்காதது என்னால தான்… கோவப்படுத்தி இருந்தா மன்னிச்சுருங்க.”

நோலனும் சிரித்துவிட்டு சாரி சொல்ல,

ஜோவின் கண்கள் கேவினை தேடியது, அவனை அங்கு காணவில்லை.

ஜோவிற்க்கு பெரிய ரோஜா பூஞ்செண்டை கைகளில் அடக்கிக்கொண்டு அங்கே வந்து நின்றான் கேவின். அபியும் நோலனும் கட்டிக்கொள்ள,

ஜோவின் முன் வந்து நின்ற கேவின் அவளிடம் காதலின் காதலர்களின் மந்திர சொல்லை உதிர்த்தான்.

" ஐ லவ் யூ ஜோ "

ஜோ அதை வாங்கி கொண்டு அவனை கட்டிக்கொள்ள அங்கு இருந்த அனைவரும் வாழ்த்து சொல்ல, அந்த இடமே விழா கோலம் ஆனது.

:purple_heart:

அத்தியாயம் - 10

மாலை வேளை தோட்டத்தில் அமர்ந்து தன் மடிக்கணினியில் அன்றைய வேலைகள் பற்றிய விவரங்களை சரி பார்த்து கொண்டு இருந்தாள் அதி. அப்போது அவளை காண அங்கே வந்தான் ராகவ்.

ராகவ்: "இன்னிக்கி நீ லீவ் தானே? ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல? என்ன பண்ற? "

அதி: “வா, ராகவ் உக்காரு நான் வேலையை முடிச்சுசுட்டேன். சொல்லு,”

ராகவ்: “என் மேல கோவமா?”

அதி: “இல்ல உன் மேல கோவம் இல்ல”

ராகவ்: “சரி அப்போ நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும், கேக்கட்டுமா?”

அதி: “என்னடா இது எல்லாம் புதுசா? கேளு டா எரும”

ராகவ்: “உனக்கு ஹரீஷ் காதல் பத்தி தெரியும் தானே? அவன் நான் உன்கூட பேசினாலே விட மாட்டான். இந்த நிலைமையில் நீ மூணு மாசம் நேரம் கிடைச்சா போதும் நினைச்சு அவனை கட்டிக்க சம்மதம் சொல்லி இருக்க இப்போ ஸ்ரீ வந்தா ஹரீஷ் விடுவானா? அப்போ இது சண்டை ஆகாது? பொண்ணு குடுத்தது பொண்ணு எடுக்க தான் அன்னிக்கி பாக்கிய அத்தையே சொன்னாங்க, பின் விளைவு யோசிச்சு முடிவு எடுத்தியா? சொல்லு அதி.”

அதி: "ஒஹ் நான் மூணு மாச நேரத்துக்கு தான் இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன் உனக்கும் தெரிஞ்சு போய்டுச்சா? "

ராகவ்: “உனக்கும்னா? வேற யாருக்கு தெரியும்?”

அதி: “ஹரீஷ்”

ராகவ்: “என்ன!? உனக்கு பைத்தியாம அவன் உன்னை யாரது பார்த்தாலே விட மாட்டான். அவங்க்கிட்டயே சொல்லி இருக்க, என்ன தான் பண்ண போற?”

அதி: "அவன் உனக்கு தான் அப்படி, எனக்கு எப்பவும் நல்ல ப்ரெண்ட் தான். என் நலன் மேல அவனுக்கு அக்கறை இருக்கு ராகவ். அதான் சொல்லிட்டேன், நாங்க ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம். அது படி தான் இனி எல்லாம் நடக்கும். உன் கவலை விடு, என் ஸ்ரீ இந்த எல்லா குழப்பத்துக்கு பதில் சொல்ல வருவான். "

ராகவ்: "வருவான் தெரியும் ஆனா… ஆனா… உன் காதலனா வருவான? வரேன் தானே சொல்லி இருக்கான். உன் காதலை நீ அவனுக்கு சொல்லவே இல்லையே, அவன் மனசுல உன்மேல காதல் இருக்கா தெரியல. நாளைக்கு அவன் வேற ஒரு பொண்ணோட வந்தா? "

அதி: “போதும் போதும் சொல்லாத ராகவ் அதெல்லாம் நடக்காது. அவருக்கு என் மேல காதல் தான் எனக்கு தெரியும். அவர் கண்ணு என்கிட்ட காதல் சொல்லி இருக்கு பல முறை”

ராகவ்: “பைத்தியக்காரத்தனமா பேசாத, வீட்டுல யாருக்கும் தெரியாது உனக்காக இதை மறைச்சு வெச்சு இருக்கேன் இந்த நிமிஷம் வரை. அவன் உன்ன பார்க்க வருவேன் தான் சொல்லி இருக்கான். நீ செய்த உதவிக்கு நன்றி சொன்ன, அவன் நன்றி ல காதலை நீ தான் தேடிட்டு இருக்க”

அதி : “…”

ராகவ்: “இது வீட்டுல தெரிஞ்சுது என்ன நடக்குமோ? காதல், எங்க இருக்கு அவன் சொன்ன வார்த்தையில்? சொல்லாத காதல், இருக்கறதா நீ நினைக்கிற காதல், இல்லாம போய்ருமோனு தான் தினம் தினம் பயமா இருக்கு. உன் சிரிப்பு, சந்தோசம், உன் கண்ணுல இருந்த குறும்பும், உன் சேட்டை, துள்ளல் எல்லாம் எங்க மொத்தமா அவனோட போய்ருமோ பயமா இருக்கு. உன் வாழ்க்கை என்ன ஆகுமோ பயந்து போய் இருக்கேன்.”

“கவலை படாம இருக்கணுமா நான்? ஒரு வருஷம் வாய் மூடி இருந்தேன் உன் நம்பிக்கை உண்மை ஆகிரும் நம்பினேன். இப்போ அது முடியாது. நீ உன்னை ஏமாத்திக்க தயாரா இருக்கலாம், நான் தயாரா இல்லை.”

“ஹரீஷ் நல்லவன் தான். ஆனா உன்னை யாருக்கும் விட்டு தர மாட்டான். அது தான் நாளைக்கு நம்ம நட்புக்கு அவனால ஆபத்து வந்தாலும் பரவயில்லைன்னு தான் ஹரீஷ் தான் உனக்கு முடிவு பண்ணேன்.”

“நீ உன் மனசை முழுசா மாத்திகிறது நல்லது. ஒரு நண்பனா சொல்லவேண்டியது என் கடமை. நீயே நிறுத்த நினைச்சாலும் அது நடக்காது புரிஞ்சுக்க, ஹரீஷ் உனக்கு உதவி செய்ய மாட்டான். என்னை மீறி இந்த கல்யாணம் நிக்காது, நீ புத்திசாலி வாழ்க்கையோட எதார்த்தம் புரிஞ்சு நடந்துக்கோ.”

அதி: “இல்ல ஹரீஷ் எனக்கு உதவி செய்வான். அவனை உன்ன விட எனக்கு நல்ல தெரியும். அவனுக்கு என்னை வேற யாரும் சொந்தம் கொண்டாட கூடாது அவ்ளோ தான், ஆனா எனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டான். யாரும் என்னை புரிஞ்சுக்க தயாரா இல்லை தானே? என் மனசு சொல்லுது என் ஸ்ரீ வருவான்”

ராகவ்: “வந்தா அவனை நான் சும்மா விட மாட்டேன். இன்னொரு முறை சொல்லாதே என்கிட்ட இதை கோவம் கோவமா வருது. நான் அண்ணாவை பார்க்கணும் பார்த்துட்டு வரேன்.”

அதி: “அண்ணிக்கிட்ட காஃபி கேட்டேன் சொல்லு ராகவ்,”

ராகவ் சரி என்று உள்ளே சென்று விட, இதை எல்லாம் நான்கு காதுகள் கேட்டு கொண்டு இருந்தது…

இரண்டு அங்கு பூ பறிக்க வந்த கோமதியின் காதுகள். இன்னும் இரண்டு துணை ஆணையாளர் காதுகள், அவனுக்கு ஒரு பக்கம் சிறு நிம்மதி, மறுபக்கம் பெரும் கவலை மனதை அழுத்தியது.

கோமதிக்கு தான் இது அதிர்ச்சி, காதலை சொல்லாத ஒருத்தன் மேல இத்தனை காதல், வருவான் என்ற நம்பிக்கையில் ஒரு வருடம் ஓடியும் போய் இருந்தது. அவளும் நம்பி நம்மையும் நம்ப வைத்து நாளை அவன் இதை காதல் இல்லை சொன்ன?? அதி நிலைமை?

கோமதி பாக்கியவை அலைபேசியில்
அழைத்து பெண் பார்த்து, நிச்சியம் செய்ய முறை படி வருமாறு அழைப்பு விடுத்தார். அன்று மாலையே பாக்கிய சொந்தகளை அழைத்து கொண்டு வந்து விட்டார். தீடீர் என இவர்கள் வரவும், அதியின் நிலைமை தான் மோசம் ஆனது.

அவளை சேலை கட்டி வர சொல்ல, நல்ல நேரம் பார்த்து அவளுக்கு பூ வைத்து விட, மறுப்பு எதும் சொல்ல முடியாது அவள் தவித்து போய் நிற்க, அங்கு பாக்கியத்தின் முகத்தில் தான் அத்தனை சந்தோசம், கோமதியின் கண்களில் சொல்ல முடியாத உணர்வு, எதிர்பாராது நடந்த இந்த சின்ன விஷேசத்தில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க, அனைவரின் முகத்தையும் பார்த்து அதி பேசாது மௌனமாக அமர்ந்து இருந்தாள், ஸ்வாதியும் ராகவ்வும் வந்தவர்களை கவனிக்க, தியாவை மாடியில் அமர்த்திக் கொண்டு அதியை பார்த்துகொண்டு இருந்தான் ஹரீஷ்.

அன்றே நிச்சயம் செய்ய பெரியவர்கள் அனைவரும் ஒரு தேதியை பேசி குறிக்க, இத்தனை நேரம் அமைதியாக இருந்த அதி, எழுந்து வந்து நிச்சயம் வேண்டாம் என்று கூற, அனைவரும் புரியாது விழிக்க,

அதி: “அத்தை நான் ஆஃபீஸ் போகனும், இப்போவே நிச்சயம் பண்ணிட்டா நான் வீட்டுலயே இருக்கணும், பிளீஸ் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி வைங்க. நான் அதுக்குள்ள என்னோட வேலை, அதோட பொறுப்பு எல்லாம் வேற ஒருத்தர் கைக்கு மாத்திறேன்… தப்பா எதாவது சொல்லி இருந்தா சாரி அத்தை”

பாக்கியம்: “சரி கண்ணு, என்ன இதுக்கு போய் பிளீஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்க? அவனுக்கும் இது தான் சரி, நான் யோசிக்கவே இல்ல, இந்த வேலை வேண்டாம் நீயாது சொல்லு கண்ணு, நான் சொன்னா கேக்கரதும் இல்லை.”

“அண்ணி, கல்யாண தேதி பார்ப்போம் அப்போ, வர வெள்ளிக்கிழமை குல தெய்வக்கோவில்ல தட்டு மாத்திட்டு அங்கேயே கல்யாண தேதி குறிச்சுருவோம். சரியா?”

கோமதி: “இல்ல நிச்சயம் பண்ணிருவோம் அத எதுக்கு தள்ளி போடணும்? ரெண்டு பேரும் மோதிரம் மாத்திகிட்ட தான் எனக்கு நிம்மதி.”

ஹரீஷ்: “அத்தை அதி நிச்சயம் வேண்டாம்ன்னா சொன்ன? இப்போ வேண்டாம், தள்ளி போடுங்கன்னு தானே சொல்ற? அது தான் கோவில்ல தட்டு மாத்த போறோமே அப்புறம் என்ன? விடுங்க கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி வெச்சுபோம், அது தான் என் வேலைக்கும் நல்லது. எனக்கு இருக்கற வேலையில் நிச்சயம், கல்யாணம் தனி தனியா லீவ் போடவோ, பத்திரிக்கை குடுக்கவோ அலையா முடியாது. சரின்னு சொல்லுங்க”

கோமதி: “உம் சரி, சரி உங்க இஷ்டம்.”

ஸ்வாதி: “பாருங்க அத்தை இப்பவே பொண்டாட்டிக்கு சப்போட் பண்றதை”

கோமதி: “அட இவன் மட்டுமா? உங்க அம்மாவும் தான்”

பாக்கியம்: “என் மருமகளா எதுக்கு கிண்டல் பண்ற இப்போ? அப்படி தான் இனி எல்லாம் அவ இஷ்டம் தான்.”

அனைவரும் அவர் சொல்லிய வார்த்தை கேட்டு சிரிக்க, அதி அனைவரையும் உணர்ச்சி இல்லாது பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அன்று இரவு உணவு உண்டு அனைவரும் கிளம்ப,

ஹரீஷ்: “அதி எதையும் நினைச்சு குழம்பிக்கிட்டு இருக்காதே, இருக்கேன் சரியா?”

அதி: “தாங்க்ஸ். நிச்சயம் நிறுத்த உதவி பண்ணதுக்கு”

ஹரீஷ்: “நிறுத்த இல்ல, தள்ளி வைக்க. உனக்கு தள்ளி போன போதும் இல்லையா? அதை தான் செய்தேன்.”

"அதி காதலே சொல்லாத ஒருத்தனை நீ நம்பலாம், நான் ஏன் நம்பனும்? அப்புறம் எனக்கு எல்லாம் தெரியும். உன் மனப்போரட்டம் புரியாம இல்ல எனக்கு… நான் உன் கழுத்தில் தாலி கட்ட தான் போறேன். ஆனா எல்லாம் உன் விருப்பம். கடைசி வர உன் கூடவே இருப்பேன். இது நட்பு இல்லை, இது காதல். "

“உன் ஸ்ரீ க்கு நீ காத்து இருக்கற மாதிரி நானும் என் அதிக்கு காலம் முழுக்க காத்து இருப்பேன். ஸ்ரீ வந்தா, அவனுக்கு உன் மேல காதல் இருந்தா அதை சேர்த்து வைப்பேன். இல்ல உனக்கு காவல் நான் உன்னை யாரும் எதும் சொல்ல முடியாது. உனக்காக என் காதல் புரியுற வரை காத்து இருப்பேன். நீ நிம்மதியா இரு. என்னால உன்னை விட்டு தர முடியாது தான். அதே போல நீ அழுதா என்னால தாங்க முடியாது,
நான் பழைய ஹரீஷ் இல்லை.”

ஹரீஷ் சொல்லிவிட்டு திரும்ப அங்கு ராகவ் நின்று இருந்தான்.

ஹரீஷ் யோசிக்கும் நொடிக்குள் ராகவ் அவனை கட்டிபிடித்து அழுது இருந்தான்.

ராகவ்: "தாங்க்ஸ் ஹரி, நான் பயந்து போய் இருந்தேன். இப்போ உன் வார்த்தை கேட்ட அப்புறம் நிம்மதியா இருக்கு. நான் உன்னை சரியா புரிஞ்சு வெச்சுக்கல, எனக்கு நம்பிக்கை வந்துருச்சு அதி வாழ்க்கை மாறிரும், அதி நல்ல இருப்பா இது போதும் "

ஹரீஷ்: “ஆமா, அவளை நான் பார்த்துபேன், உன் கவலை விடு, அதி கூட பேசினதுக்கு உன் மூக்கை ஒடைச்சா பழைய ஹரீஷ் இல்லை நான், கோயம்புத்தூர் டெபுடி கமிஷனர்.”

"என்னடா நீங்களே முடிவு பண்ணிறீங்க?? நான் இங்க இருக்கேன் டா - மீ "

ராகவ் : “சரிங்க ஆபீசர், அம்மா கூப்பிட்டாங்க நேரம் ஆச்சு சொல்ல சொன்னாங்க”

ஹரீஷ்: “ம்ம் வரேன் அதி”

அதி: “…”

அதி பெரும் குழப்பத்தோடு அவள் அறைக்கு சென்றாள்.

அப்போ ஸ்ரீ காதல் சொல்லாம? எப்படி அவன் மேல உனக்கு இத்தனை காதல் அதி?

:purple_heart:

அத்தியாயம் - 11

கேவின், ஜோ இருவரும் சென்ட்ரல் பார்கில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

கேவின்: “என் மேல கோவமா ஜோ?”

ஜோ: “இல்ல உங்க மேல கோவம் இல்லை, சின்ன வருத்தம்”

கேவின்: “என்ன?”

ஜோ: “என்கிட்ட ஏன் நீங்க உங்க பிரச்சனை சொல்லவே இல்ல, இத்தனை பிரச்சனை நீங்களே இத்தனை நாளும் தனியா பார்த்து இருக்கீங்க, எனக்கு சொல்லி இருக்காலம் இல்லையா? உங்க பிரச்சனை எதும் தெரியாம நானும் கோவமா இருந்துட்டேன். அது தான் வருத்தம்.”

கேவின்: “உன்கிட்ட என் காதலையே இப்போ தான் சொல்லி இருக்கேன், இதுல உன்கிட்ட என் பிரச்சனை எல்லாம் எப்படி சொல்வேன் ஜோ?”

ஜோ: "சொன்ன தான் காதலா? நான் உங்க காதலை உங்க அக்கறையில் தெரிஞ்சுகிட்டேன். உங்களுக்கு தான் சொல்ல இத்தனை நாள் தேவைப்பட்டு இருக்கு "

கேவின்: “ஆமா நானே எதிர்பார்க்கல இன்னிக்கி நடந்த எல்லாமே ஃபெயிரி டேல் மாதிரி இருக்கு, ஜோ இப்போ எல்லா பிரச்சனையும் முடிஞ்சுது. கவலை விடு.”

ஜோ: “சரி கேவின், நான் கிளம்புறேன் நேரம் ஆகுது.”

கேவின்:" ம்ம் சரி நெக்ஸ்ட் வீக் பார்ப்போம்."

ஜோ: “ஏன் நாளைக்கு?”

கேவின்: “ஜோ? உண்மையா? உன்னை நாளைக்கு பார்க்க முடியுமா?”

ஜோ: “முடியும், நீ என் வீட்டுக்கு வா”

கேவின்: “வீட்டுக்கு?” “நாளைக்கு?” “ஜோ?” “என்ன இது விளையாட்டு உனக்கு?”

ஜோ: “கேவின் வா நாளைக்கு உனக்காக, நான், என் அப்பா, அப்புறம் என் தம்பி மூணு பேரும் காத்து இருப்போம். என்னால இனி உன்ன பிரிஞ்சு இருக்க முடியாது, அப்பாக்கு உன்னை அறிமுகம் பண்ணனும், வருவா தானே கேவின்?”

கேவின்: "என் பரென்ட்ஸ் கூட்டிட்டு வரலாமா? "

ஜோ: “ஓ எஸ், தரலாமா வாங்க”

கேவின்: “நாளைக்கு பார்ப்போம், நீ கிளம்பு.”

ஜோ: “கிளம்பணுமா?”

ஜோ அவன் அருகில் வர, கேவின் அவளை தன் நெஞ்சோடு சேர்த்து கொண்டான். இருவருக்குள்ளும் முதல் முத்தம் சத்தமின்றி அங்கு பரிமாறப்பட்டது.

ஜோ விலகி விடை பெற்று செல்ல,

நோலன்: “போலாமா கேவின்?”

கேவின்: “போலாம், அபி எங்க?”

நோலன்: “காரில் இருக்கான், வா நேரம் ஆச்சு, நாளைக்கு அபி ஆஃபீஸ் வர போறான். காலையில் நிறையா வேலை இருக்கு”

கேவின்: “ஆமா, இந்த சந்தோசத்தில் கம்பனி பிரச்சனை மறந்து போய்ட்டேன்.”

அபி: “கேவின் சந்தோசமா இருக்கு டா, உன் முகமே சொல்லுது நீ சந்தோசமா இருக்கறது.”

கேவின்: “நீ தானே காரணம். உனக்கு பொறுப்பு, அக்கறை இதெல்லாம் வந்து இருக்கற மாதிரி இருக்கு, உன் மாற்றம் எல்லாமே நல்லா இருக்கு, புதுசா தெரியுற நீ.”

நோலன்: “போதும் போதும் வீட்டுக்கு வந்துட்டோம் தூங்கலாம் வாங்க நான் ரொம்ப டயர்டா இருக்கேன்.”

அபி: “ஆமா நாளைக்கு நிறைய வேலை இருக்கு.”

காலை வேளை

அபி கிளம்பி கீழே வர டாம் அபியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அபியின் கண்களில் இருந்த குறும்பு மறைந்து ஆளை துளைக்கும் கூர்மையும், ஆழமான பார்வையும் இருந்தது. அவன் நடையில் துள்ளல் மறைந்து கம்பீரம் குடி ஏறி இருந்தது. வெள்ளை சட்டையும், கருப்பு நிற கோட் சூட் என்று ஆளே மாறி தான் இருந்தான். அவன் டாம் அருகில் வந்து நின்று டாம் என்று அழைக்க சுயநினைவு வந்த டாம் அபியை பார்த்து,

டாம்: “பார்க்க ரொம்ப அழகா இருக்க அபி, ஒரு மல்டி நேஷனல் கார்ப்பரேட் கம்பெனி ஓனருக்கு இருக்க வேண்டிய தோற்றம் இப்போ தான் இருக்கு”

அபி சிரித்து கிளம்ப டாம் கார் கதவுகளை திறந்து விட அபி ஏறிக்கொண்டான். ரென்வோ பாரிஸ் சாலைகளை முத்தமிட ஆரம்பித்தது.

கார் அந்த நுழைவாயில் உள்ளே வர அந்த ஆறு அடுக்கு கட்டிடம் “RENVO” என்ற பெயரோடு, எழுந்து நின்று இருந்தது. கட்டிடத்தின் கண்ணாடி சுவர்கள் அபியின் காரை பிரதிபலிக்க சென்று நின்றது. அபிக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவன் விளையாடி, பொழுது போக்கிய இடம் தான். இன்று ஏனோ அந்த கட்டிடத்தின் உள்ளே செல்வது அவனுக்கு பெரும் சங்கடத்தை தந்தது.

அபி இன்னும் காரைவிட்டு இறங்காமல் இருப்பதை கண்ட டாம்,

டாம்: “அபி, எசி கியூ ச வா?” என்று கேக்க

ece ce que ça va / எசி கியூ ச வா?/ are you okay? / நீ நன்றாக இருக்கிறாயா?

அபி இரண்டு நிமிடம் அவனை சமன் செய்து கொண்டு இறங்கினான்.

அபி உள் நுழைய அவனை விரிந்த விழிகளோடு அனைவரும் ஒரு முறை கண்களால் தீண்டி இருந்தனர்.

அபி அவன் அறை உள்ளே செல்ல ஒரு நிமிடம் அவன் இன்ப அதிர்ச்சி ஆகி புன்னகை தவழ அவன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான். வெள்ளை நிற வேலைப்பாடுகாளில் மின்னியது அந்தத் அறை, அபிக்கு தெரியும் இது அவனது நண்பர்களின் ஏற்பாடு என்று அதுவே அபியின் இன்ப அதிர்ச்சிக்கு காரணம்.

டாம்: “ரொம்ப கம்பீரமா இருக்கு இப்போ இந்த ரூம், அந்த சீட்”

அபி: “டாம் என்னாச்சு, இன்னிக்கி உங்க சாரா கிட்ட சொல்ல வேண்டியது எல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?”

டாம்: “ஹ… ஹ… ஹ… சாரா இன்னிக்கி தான் பார்க்கவே போறேன் உன் தயவில்”

அபி: “என்ன சொல்றீங்க? உங்க கல்யாணம்? ப்ரோ பிளீஸ் என்ன மறைச்சு வெச்சு இருக்கீங்க?”

டாம் பேச வாய் திறக்க,

சாரா உள்ளே நுழைந்தாள். டாம் பக்கம் திரும்பாது, அபியை பார்த்து காலை வணக்கம் சொல்ல,

சாரா அபியின் பிசினஸ் செக்ரிடரி, டாமின் காதலி. வேலை தேடி வந்த சாரா அபியின் மனதில் நின்று விட, அபி வேலையும், தங்க உதவியும் செய்து கொடுத்து இருந்தான்.

அபி: “டாம் என்னாச்சு? பதில் சொல்லுங்க,”

சாரா: “நீ இல்லாம கல்யாணம் நடக்க வேண்டாம் தள்ளி போட்டு இருக்கேன்.”

அபி: “ஒஹ் ஷிட்”

சாரா: "நிறுத்து அபி, நீ என் தம்பி, உன்னை அப்படி தான் நான் பார்த்தேன். லண்டன்ல எல்லாம் இழந்து ஒரு வேலை தேடி வந்த எனக்கு, வேலையும் குடுத்து வாழ்க்கையும் குடுத்து இருக்க, உனக்காக தான் தள்ளி போட்டேன். காசு வரும் போகும், ஆனா நீ? "

அபி: “எல்லாரும் உங்க இஷ்டம் போல தானே இருப்பீங்க இல்லையா?”

சாரா: “இப்போ பிரச்சனை இது இல்ல உன் கம்பெனி, இதோட எதிர்காலம், பெயர், புகழ் இதை யோசி…”

அபி: “மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க எல்லாரும் வரணும். புதுசா சேர்ந்த எல்லாரையும் டிரெய்னிங்ல போட ரெடி பண்ணுங்க, வேலைய விட்டு போன பழைய டீம்க்கு ஆஃபர் லெட்டர் அனுப்புங்க இன்னிக்கி சாய்ந்தரத்துக்குள்ள இது நடக்கணும்.”

"பி மீட்டிங்கில் அனைவரிடமும் கம்பெனி பழைய நிலைக்கு மாற வேண்டி சில முடிவுகளை சொல்லி விட்டு தொழிற்சாலைக்கு சென்றான், அங்கு இது வரை தயார் செய்து இருந்த கார்களோடு தயாரிப்பை நிறுத்த உத்தரவு இட்டான். அதற்குள் மதியம் ஆகி விட அவன் அறைக்கு சென்ற போது அங்கு கேவினும், நோலனும் அமர்ந்து இருந்தனர்.

நோலன்: "என்ன பண்ணிட்டு இருக்க? தயாரிப்பு நிறுத்தி வெச்சா நமக்கு தான் நஷ்டம். "

அபி: “தப்பான கார் வெளிய போன கம்பெனி பெயர் போய்டும்.”

கேவின்: "அபி எனக்கு புரியுல, என்ன செய்துட்டு இருக்க? "

அபி: "புதுசா வேலைக்கு வந்த எல்லாருக்கும் டிரெய்னிங், பழைய டீம் திரும்பி வர வெச்சு அவங்களை விட்டே டிரெயின் பண்ண போறேன். அது வரை தயாரிப்பு நடக்காது. வெளிய பிரேக் அக்சஸ் தப்பா போன கார்களை சரி செய்யணும், எதுல எல்லாம் பிரச்சனை தெரியாது. சோ அதுக்கு தான் ஃப்ரீ சர்வீஸ் அறிவிக்க போறேன். நம்ம டெக்னிகல் டீம் எல்லாரையும் பிரேக் அக்சஸ் சரி செய்ய சர்வீஸ் போக சொல்ல போறேன், இல்ல ஆஃபர் குடுத்து அவங்களை ஷோரூம் வர வைக்கணும். இந்த ஆறு மாசமா வெளிய போன அத்தனை காரும், அதோட பிரேக் அக்சஸ் ரிபோட் வாராமல் தயாரிப்பு ஆரம்பிக்க போறது இல்லை. ரென்வோ அட்வான்ஸ் புக்கிங் பண்ண போறோம், இப்போ பண்ண மூணு மாசம் கழிச்சு தான் கார் கிடைக்கும் சொல்லுங்க, எப்பவும் போல விற்பனை நடக்கட்டும்.

கேவின் கண்கள் விரிய அபியை பார்த்து பேசாது நிற்க, நோலன் அபியை மகிழ்ச்சியில் கட்டிக்கொள்ள கேவினும் இணைந்து கொண்டான்.

நோலன்: “உண்மையா எப்படி அபி? இவ்வளவு துல்லியமா திட்டம் போட்டு இருக்க, உண்மையா ஆச்சர்யமா இருக்கு கண்டிப்பா நீ சொன்னது எல்லாத்தையும் ரகசியமாக சர்குலர் அனுப்பி வெக்கறேன்.”

வேலைகள் துரிதமாக நடக்க, அன்றே ரகசிய சர்குலர் அனுப்பி வைக்கப்பட்டது. ரென்வோ புது தோற்றம் பெற தயாரானது.

:purple_heart:

1 Like

அத்தியாயம் - 12

அதியின் இல்லம்

அனைவரும் பரபரப்பாக கிளம்பி கொண்டு இருந்தனர். அதி மஞ்சள் நிறத்தில் ஊதா நிற கரையும் கலந்த பட்டு புடவையில் கண்ணாடி முன் அமர்ந்து இருந்தாள். அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை இறுகி போய் இருந்தது. ஒப்பனை முடித்து பூவை அவள் கூந்தலில் சூடி கொள்ள அங்கு ஸ்வாதி வந்து நின்றார்.

ஸ்வாதி: என் கண்ணு பட்டுருச்சு அதி உனக்கு, அழகு நீ, என் தம்பி உனக்கு அழகா சேலை எடுத்து இருக்கான். சரி வா நல்ல நேரத்தில கிளம்பனும் என்று ஸ்வாதி கூறி விட்டு அதியை அழைத்து கொண்டு கீழே வந்தார்.

அனைவரும் காரில் ஏறி இருக்க அதியும் ஸ்வாதியும் ஏற கார் கிளம்பியது குலதெய்வ கோவிலை நோக்கி, அங்கு முன்னமே வந்து இருந்த ஹரீஷ், பாக்கியா, மற்றும் சில குடும்பத்து பெரியவர்கள் என அனைவரும் சாமி கும்பிட்டு காத்து இருந்தனர்.

அதியின் வீட்டில் அனைவரும் வர பாக்கிய அனைவரையும் அழைக்க இவர்களும் கோவில் உள் சென்றனர்.

அதி கடவுளின் முன் நின்று " ஸ்ரீ சீக்கிரம் தன்னிடம் வந்து சேர வேண்டும் என வேண்டி கொண்டாள் "

பின் கோவில் மண்டபத்தில் இரண்டு பக்கமும் அமர, அவர்கள் நடுவில் அதியும், ஹரீஷ் அமர்த்தப்பட்டனர்.

பெரியவர்கள் பேசி முடிக்க :

அதியின் பக்கம்: திருமண செலவு முழுவதும் அவர்கள் பக்கம் எனவும், அதிக்கு " 100 சவரன் நகைகளும், இரண்டு கார், அவள் பெயரில் உள்ள சொத்து, மாப்பிளை சீர் என அனைத்தும் அவளுக்கென கொடுத்து விடுவதாக கோமதி கூற…

ஹரீஷ் பக்கம்: பெண்ணுக்கு தாலி, அவளுக்கான சீர், வரவேற்பு என அனைத்தும் அவர்கள் பார்த்து கொள்வதாக கூற…

இன்னும் இரு மாதத்தில் ஒரு சுப நாளை குறித்து உறுதி செய்து தட்டு மாற்றப்பட்டது.

பின் அனைவரும் பொங்கல் வைத்து வழிபட்டு விட்டு வீடு திரும்பினர்.

இல்லம் வந்த அதி அவள் அறை சென்றுவிட்டாள்.

நிஷாந்த்: “அம்மா, நாம எதும் தப்பு செய்றோமா? அதி முகத்துல ஒரு சின்ன சிரிப்பு கூட இல்ல, யார்கோ இது நடந்தது போல இருக்கா, எனக்கு எதோ மனசு எதோ செய்யுது.”

விஷ்வா: “ஆமா அண்ணா. அக்கா சிரிச்சு பல மாசம் ஆயிருச்சு, இதில் இப்போ இந்த கல்யாண பேச்சை எடுத்த அப்புறம் சிரிப்பே இல்ல.”

கோமதி: “நம்ம தப்பு செய்யல, இது அவளோட பிடிவாதம், நெஞ்சு அழுத்தம், பொய் நம்பிக்கை.”

நிஷாந்த்: “அம்மா என்ன சொல்றீங்க?”

கோமதி: “ஆமா டா, இவ கிட்ட அவன் காதல் சொன்னதே இல்லையாம், அவன் உன்ன பார்க்க வரேன் சொன்னதை நம்பி, அவளையும் ஏமாத்தி, நம்மளையும் ஏமாத்திட்டு இருந்து இருக்க, அதான் ராகவ் இவ கல்யாணத்தை தள்ளி போடாதீங்க பேசுங்க சொல்லி அன்னிக்கி நம்ம கிட்ட வற்புறுத்தி பேசி இருக்கான்.”
(அப்போ ராகவ் தான் இந்த கல்யாண ஏற்பாடு செய்ய காரணமா? நல்ல நண்பன்.)

நிஷாந்த்: “பைத்தியமா இந்த பொண்ணு? இன்னும் என்ன எல்லாம் மறைச்சு வெச்சு இருக்களோ, தெரியல”

ஸ்வாதி: “அவ காதலை பத்தி எல்லாம் தெரிஞ்சது ராகவ் தான்.”

விஷ்வா: “ராகவ் அண்ணாவை கூப்பிட்டு தான் கேக்கணும்.”

ஸ்வாதி: “அப்போ அவனை வர சொல்லுங்க கேட்டு தெரிஞ்சுப்போம்.”

கோமதி: “அப்போ ஹரீஷையும் வர சொல்லு ஸ்வாதி, இதை அவனும் தான் தெரிஞ்சுக்கணும். நாளைக்கு அவளோட வாழ போறது அவன் தான்.”

நிஷாந்த் இருவருக்கும் விவரம் சொல்லி அழைக்க அனைவரும் அதியின் வீட்டு தோட்டத்தில் ஒன்றாக அமர்ந்து இருந்தனர்.

நிஷாந்த்: “டேய், சரியான திருடன் டா நீ, உன்னை உக்கார வெச்சு பேசுறது தப்பு, அவ கூடையே இருந்தும் அவன பத்தி ஒன்னும் தெரியாது சொல்ற பாரு”

ராகவ்: “அண்ணா, உண்மையா எனக்கு அவன் யாருன்னு தெரியாது, தெரிஞ்சு இருந்த இப்படியா அமைதியா இருப்பேன், எப்பவோ இந்த பிரச்சனை சரி பண்ணி இருப்பேன்.”

ஹரீஷ்: “என்ன சொல்ற ராகவ்? எதுவும் புரியுல”

ராகவ்: “எனக்கு மட்டும் இல்ல அதிக்கும் எதும் தெரியாது.”

கோமதி: “பின்ன எப்படி இவளோ காதல் அவன் மேல இவளுக்கு?”

ராகவ்: “சாட்டிங், வெறும் எழுத்து வழி காதல்.”

ஹரிஷ்: “என்ன?”

ராகவ்: “அதிக்கு அவன் முகம் தெரியாது. அவன் எப்படி இருப்பான் தெரியாது, அவன் குரல் தெரியாது, அவன் எந்த ஊர், எந்த மொழி, தொழில், படிப்பு, முகவரி இப்படி எதும் தெரியாது. அவன் கடைசியா அதிக்கு அனுப்பிய செய்தி.”

"உன்னை விட்டு பிரிய வேண்டிய அவசர நிலை மன்னித்து விடு, உன்னை காண வருவேன். நன்றி."

- அன்புடன் ,
ஸ்ரீ.

"இது தான் அவனோட கடைசி செய்தி, இதில் காதல் இல்லை. காதல் இருக்கறது போல தெரியுல, எதை நம்பி அவ காத்து இருக்கா? எனக்கே தெரியுல, ஆனா எனக்கு தெரிஞ்ச அளவுக்கு தான் அவளுக்கும் அவனை பற்றி தெரியும். "

“இது எல்லாமே உண்மை. போதுமா?”

ஹரீஷ்: “என்னடா சொல்ற? இது வரை நான் பார்த்த கேஸ் கூட இத்தனை சிக்கல் இருந்தது இல்லை. எதும் தெரியாத அவன் மேல எப்படி இத்தனை காதல், நம்பிக்கை…?!”

விஷ்வா: “எனக்கு அந்த ஸ்ரீ யை பார்க்கணும் போல இருக்கு”

ராகவ்: “அதி சொல்ற மாதிரி அவன் வந்தா தான் பார்க்க முடியும்.”

ஹரீஷ்: “எனக்கு என்னமோ உனக்கு தெரியாம எதோ இருக்கு அவங்களுக்குள்ள, இல்ல நீ கவனிக்காம விட்டு இருக்கணும். அதியோட உறுதி எதோ சொல்லுது”

ஸ்வாதி: “அப்போ அவன் வருவானா?”

தூங்கி எழுந்து அப்போது அங்கு வந்த அதி,

அதி: "என் ஸ்ரீ வருவான். "

ஹரீஷ்: எப்படி?

எப்படி? :thinking::wink:

:purple_heart:

அத்தியாயம் - 13

சன்ட் சப்பெல் தேவாலயம், இரு உள்ளங்கள் இணையும் காதல் விழா, “உய்” என டாம் கூற சாராவும் டாம்மும் மோதிரம் மாற்றி கொண்டனர். இருவரின் இதழ் முத்தம் பரிமாறப்பட்டது. அங்கு மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

"உய்" / oui / yes / ஆம்

நோலன்: “அடுத்து கேவின் நீ தான்”

கேவின் சந்தோசமாக “ஆமா” என்று கூறி கொண்டே ஜோவை பார்க்க அவளும் அதே உற்சாகத்தில் “ஆம்” என கூறினாள்.

‘உங்க எல்லாருக்கும் சில கேள்வி இருக்கும், கேவின் ஜோ வீட்டுக்கு போனான? எப்போ டாம் கல்யாணம் நிச்சயம் ஆச்சு?’ வாங்க பதில் பார்த்திட்டு வருவோம்.

ஒரு மாதத்திற்கு முன்: அபி எடுத்த முக்கிய முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்று மாலை உற்சாகமாக கேவின் கிளம்பி கொண்டு இருக்க

நோலன்: “போண் ச்சன்ஸ் என்று கூற கேவின் சிரித்து விட்டு கிளம்பினான்.”

போண் ச்சன்ஸ்/bonne chance / all the best/ வாழ்த்துக்கள்

அபி: “வாங்கிட்டு போ சரியான நேரத்துக்கு போய்ருங்க”

கேவின்: “போதும் உங்க அன்பும் அக்கறையும் அதான் கூட வரமாட்டேன் சொல்லிட்டீங்க பின்ன என்ன அக்கறை?”

அபி சிரிக்க, நோலனும் சிரித்தான்.

அபி: “இது உனக்கான டெஸ்ட் நீ தான் போய் உன் காதலை ஜோ அப்பா முன்னாடி நிருப்பிக்கனும். நாங்க இதுக்கும் உதவி பண்ண வரணுமா?” என கேட்டு சிரித்தான்.

நோலன்: “போ போய் பேசு, அவர்க்கிட்ட அவர் பெண்ணை கேளு. சம்மதம் வாங்கு, எல்லாம் நல்லபடியா நடக்கும் போய்ட்டு வா.”

கேவின் அவன் பெற்றோரை அழைத்து கொண்டு ஜோவின் இல்லம் செல்ல, ஜோவின் தந்தை வில்பர்ட் அவர்களை வரவேற்று கேவினின் பெற்றோர் உடன் முறையே நலம் விசாரித்து கொண்டு இருந்தார்.

வில்பர்ட்: “ஜேம்ஸ், என் பொண்ணு உங்க காஃபி பத்தி நிறைய சொல்லி இருக்க, உங்க இந்தியா சமையல் முறை அவளுக்கு பிடிச்சு இருக்கு, உங்களுக்கு நான் இதை சொல்ல வேண்டியது இல்லை அப்புறம் சுத்தி வளைச்சு பேசவும் விரும்பல,”

“ஜோயாக்கு (ஜோவின் முழு பெயர் ஜோயா - joya) உங்க பையன் மேல ரொம்ப விருப்பம் அவளோட எந்த ஆசைக்கும் நான் இதுவரை தடையா இருந்தது இல்லை, நான் போலீஸ் இருந்தேன், என் மனைவி போன அப்புறம் என் குழந்தைகள் கூட இருக்க முடிவு பண்ணி விவசாயம் செய்ய ஆரம்பிச்சுட்டேன். ஜோ ஒரு செஃப், நல்ல சமைப்பா ஒரு குக்கிங் சேனல் வெச்சு இருக்க, அவ சொந்த உழைப்பு அது.”

அதற்குள் ஜோ அனைவரையும் உணவு உண்ண அழைக்க அனைவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தனர். அப்போது அங்கு ஜோவின் தம்பி ஜோஷ் வர அவனும் அவர்களோடு இணைந்து கொண்டான்.அனைவரும் பொது விஷயங்களை பேசிக் கொண்டே உணவு உண்டு முடித்து இருந்தனர்.

ஜேம்ஸ்: “அப்புறம் வில்பர்ட் ஒருநாள் நீங்க எங்க இல்ல நம்ம வீட்டுக்கு வரணும், அப்புறம் எங்களுக்கு உங்க எல்லாரையும் பிடிச்சு இருக்கு, நம்ம இனி ஒரே குடும்பம். இனி ஜோவும் ஜோஷ் எங்க இல்ல நம்ம பசங்க”

“கேவின் நல்ல பையன், ஜோவை ரொம்ப நேசிக்கிறான். எங்க நீங்க வேண்டாம் சொல்லிருவீங்களோ ரொம்ப பயந்து போய் இருந்தான். இப்போ தான் அவனுக்கு நிம்மதி வந்து இருக்கும்.”

கேவின்: “அங்கிள் உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்க?”

வில்பர்ட் சத்தமாக சிரித்து,

வில்பர்ட்: “என் பொண்ணுக்கு பிடிச்சு இருக்கு அப்போ எனக்கும் பிடிக்கும். எனக்கு உங்களை உங்க குடும்பத்தை ரொம்ப பிடிச்சு இருக்கு, கொஞ்ச நாள் காதல் செய்யுங்க, எப்போ கல்யாணம் பண்ணனும்னு தோணுதோ அப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு திருப்பியும் காதலீங்க”

கேவின் வில்பர்டை அணைத்து கொள்ள, அங்கு ஒரு இன்பமான சூழல் உருவானது.

பின் வந்த வாரங்களில் எல்லாம் கேவின், அபி, நோலன், டாம், ஜோஷ், ஜோ என அனைவரும் சந்தித்து கொள்ள ஒரு நட்பும் சகோதரத்துவமும் அங்கு பூத்து இருந்தது. ஜோஷ் செய்யும் குறும்புகள் எல்லாம் அங்கு மகிழ்ச்சியை பெருகியது.

ஜோவின் வீட்டில் அனைவரும் கேவின் இல்லம் வந்துவிட்டு சென்று இருந்தனர். இப்போது ஜோவின் தோட்டத்தில் இருந்து காய்கறிகள் வர, நான்ஸி ஜேம்ஸ் உடன் ஜோவும் இணைந்து சமையல் செய்ய, அவளின் ப்ளாக்கில் கேவினின் உணவகம் பற்றி செய்தி வர, வியாபாரம் கூடியது. கேவின் - ஜோ காதல் சிறப்பாய் வளர்ந்தது.

"இப்படி எல்லாம் லவ் செட் ஆக புண்ணியம் பண்ணி இருக்கணும். இல்லையா? என் மைண்ட் வாய்ஸ் மக்களே இது."

இதன் இடையில் ஒரு நாள் அபி டாம்மை அழைத்து கொண்டு சாராவின் இல்லம் சென்று இருந்தான்.

சாரா: “என் மேல கோவம் தானே அப்புறம் ஏன் நீ இங்க வந்த?”

அபி: “கோவம் தான், ரொம்ப கோவம் என் மேல அவ்ளோ பாசம் இல்லையா? அதான் அங்கிள் விஷம் வெச்சு நான் ஹாஸ்பிடல் இருந்த அப்போ வரலியா? இல்லை எட்டு மாசம் கழிச்சு ஒருத்தன் வந்தும் பார்க்க வரலியா?”

சாரா: “உன் அங்கிள் பண்ணி வெச்சுட்டு போன பிரச்சனை அவ்ளோ நான் இங்க இல்லை ஜெர்மன் போய் இருந்தேன் நம்ம கம்பனி பார்ட்ஸ் தயாரிப்பு தான் பிரச்சனை அதை சரி செய்ய போய் இருந்தேன். அதுக்குள்ள நீ வந்துட்ட”

அபி: “பிரேக் அக்சஸ் அப்போ அங்க இருந்தே தரம் இல்லாம தான் பண்றங்களா?”

சாரா: “ஆமா, உனக்கு கொஞ்சமாவது உதவி செய்வோம் தான் போனேன். உன் அங்கிள் என்னை மட்டும் வேலை விட்டு எடுக்கல, நான் தானே பார்க்கணும்?”

அபி: “புரியுது, அதுக்காக கல்யாணத்தை தள்ளி போடணுமா?”

சாரா: “ஒரு வாரத்தில் வரேன் தானே சொல்லிட்டு போன?”

அபி: “எதும் எனக்கு தெரிஞ்சு நடக்கல சாரா”

சாரா: “சரி அபி அதை விடு, இப்போ என் மேல கோவம் போய்டுச்சா?”

அபி: “இல்லை”

சாரா: “சரி அப்போ கோவம் போனதும் பேசு”

அபி: “நான் சொல்றதை ரெண்டு பேரும் செய்யுங்க”

டாம்: “எதுக்கு இப்போ என்னையும் இதுல சேர்த்து இருக்க? இவ கூட பேசவே கூடாதுன்னு இருக்கேன்.”

அபி: “என்னமோ பண்ணுங்க ரெண்டு பேரும் ஆனா அதை கல்யாணம் பண்ணிட்டு பண்ணுங்க.”

சாரா: “கண்டிப்பா நான் தயார்”

டாம் ஆச்சரியமாக பார்க்க,

சாரா : "ஏன் இப்படி பார்க்கற டாம்?"டாம்: “நானும் இவளோ நாள் இதை தானே கேட்டேன்?”

சாரா: “அபிக்கு என்ன ஆச்சு தெரியாம குழப்பத்தில் இருந்தேன். எனக்கு எப்பவும் உன்னோட வாழ சம்மதம் தான். என்னால உன் அப்பா ஆசையை நிறைவேற்றி வைக்க முடியல மன்னிச்சிடு டாம்.”

டாம்: “ஜுட் ஏய்ம் பொர் டூர்ஜேர்”

ஜுட் ஏய்ம் பொர் டூஜேர் / je’t aime pour toujours / I love you forever / நான் உன்னை என்றும் நேசிப்பேன்.

அதன் பின்னர் ஒரு நாள் அனைவரும் கூடி சாரா - டாம் திருமணம் என்று என முடிவு செய்தனர். இதோ இப்போது திருமணமும் இனிதாய் நிறைவு பெற்றது.'அபியின் கண்களில் அத்தனை நிம்மதி. எல்லாம் சரியானது போல ஒரு உணர்வு. மனது லேசானது போல இருந்தது அவனுக்கு’மாலை இசை நிகழ்ச்சி ஆட்டம், பாட்டு, விளையாட்டு என்று ஆரங்கமே மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தது.

சாரா: “எல்லாருக்கும் என்னோட மாலை வணக்கம், இந்த நாள் இத்தனை இனிமையாக இருக்க காரணம் நீங்க எல்லாரும் தான். இந்த கல்யாணம் எட்டு மாசம் முன்னாடி நடந்து இருக்க வேண்டியது, ஆனா அப்போ அபி எங்க கூட இல்லை, என் தம்பி சொல்றதை விட என் அம்மா அவன். அவன் இல்லாம இந்த கல்யாணம் வேண்டாம் நான் தள்ளி போட்டு இருந்தேன். இதோ இப்போ என் தம்பி வந்துட்டான்.”

“நான் என் கல்யாணத்தை தள்ளி போட்டதுக்கு இன்னொரு காரணம் அவன் :guitar: கிதார் இசை தான். அவன் இசைக்கு நான் அடிமை. அவன் இசையோட தான் என் கல்யாண பார்டி இருக்கணும் நினைச்சேன்.”

“அபி இது சாராவோட ஆசை, உனக்கு பிடிச்சா எதாவது ஒரு பாடலை நீ எனக்காக பாடனும் என்று கூற…”

அபி அதிர்ந்து போனான். அபி மறுக்க சாரா அவன் கைகளில் கிதார் கொடுத்து வாசிக்க சொல்ல, ஐந்து நிமிட அமைதிக்கு பின் அபி ஒரு பாடலை கிதார் வாசித்து பாடி இருந்தான். அந்த பாடலை கேட்ட அபியின் நட்பு கூட்டம் ஒரு நிமிடம் கண் விரித்து ஆச்சரியமானது.

“பாட்டு அப்படி…” “வரிகள் அப்படி…”

Thinking out loud - Ed Sheeran

So baby now

Take me into your loving arms

Kiss me under the light of a thousand stars

Oh darling, place your head on my beating heart

I’m thinking out loud

That maybe we found love right where we are

Oh maybe we found love right where we are

And we found love right where we are

YouTube link:- https://youtu.be/lp-EO5I60KA

“மக்களே சாங் ரொம்ப நல்ல இருக்கும் ஒருமுறை பாருங்க, நீங்களும் அபியின் காதலை உணரலாம்.”

அபி பாடி முடித்ததும் அனைவரும் கைத்தட்டி வாழ்த்து சொல்ல அதை ஏற்றுக் கொண்டான்.பின் நிகழ்ச்சி முடிந்து டாம் கிளம்ப, ஒரு வாரம் இருவரும் தங்கள் கண்களில் படக்கூடாது என கூறி இருந்தான். அனைவரும் அவர்களை மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்தனர்.

ரென்வோ நிறுவனம் இந்த இரு மாதத்தில் புது தோற்றம் பெற்று இருந்தது. அபிக்கு அனைவரையும் வேலை வாங்குவதே பெரும் வேலையாக இருந்தது. விக்டர் செய்த சிக்கல்கள் எல்லாம் விலகி ரென்வோவின் புது மாடல் கார் ஒன்றை சந்தையில் இறக்க முடிவு செய்து இருந்தது. அபி அதை உலக சந்தையில் உள்ள அத்தனை இடத்திலும் கிடைக்க புது கிளைகளை திறக்க திட்டம் இட்டு இருந்தான். அந்த புது காரின் வடிவைப்பு தான் இப்பொழுது அவனின் புது சவால்.

:purple_heart:

அத்தியாயம் - 14

அபியின் அலுவலக அறை

அபி புது மாடல் கார் பற்றிய யோசனையில் இருந்தான். அங்கு வந்த சாரா,

சாரா: " அபி கிளம்பு நம்ம ஷாப்பிங் போணும் நேரம் ஆச்சு என்ன யோசனை உனக்கு?"

அபி: " புது மாடல் கார் பற்றி தான்."

சாரா: " கேவின் எங்கேஜ்மெண்ட் (நிச்சயதார்த்தம்) முடிஞ்சா அப்புறம் யோசிப்போம், இப்போ கிளம்பு"

அபி, சாரா, டாம், நோலன் என நால்வரும் பாபோர்க் செயின்ட் ஹானோரி தெரு வந்து சேர்ந்தனர்.

பின் கேவின், ஜோயா மற்றும் ஜோஷ் இருவரையும் அழைத்து கொண்டு அங்கு வந்தான். அதன் பின் அனைவரும் ஷாப்பிங் செய்ய நேரம் மாலையை தாண்டி இரவை நெருங்கி கொண்டு இருந்தது.

அபி அவன் அலைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டே திரும்ப அவன் கவனம் ஒரு புள்ளியில் நின்றது.
அனைவரும் உடைகளை பார்த்துகொண்டு இருக்க, அபி தீடீர் என இருந்த இடத்தை விட்டு எங்கோ ஓட, டாம் பின்னே செல்ல அபி யாரையோ பார்த்து ஏமாந்து அவன் நெற்றியை தேய்த்துக்கொண்டு திரும்ப,

அவன் பின்னே அனைவரும் புரியாது பார்த்து நிற்க, கேவின் முறைத்து கொண்டு நிற்க, அபி என்ன என்பது போல் பார்த்து நகர்ந்தான்.

கேவின் வாங்கியது உடைகள் போதும் என்று கூறிவிட்டு அனைவரையும் கிளம்பும் படி கூறி விட்டு முன்னே சென்றுவிட்டான்.

பின் அனைவரும் காரில் ஏற, எதுவும் பேசாது இறுக்கமான மனநிலையில் அனைவரும் அபியின் இல்லம் வந்து சேர்ந்தனர்.

அபி இல்லம் வந்து அவன் அறை நுழைய, கேவின் அவனை அழைத்தான்.

கேவின்: " அபி உன்கூட பேசணும் நில்லு".

அபி: “சொல்லு”

கேவின்: “யாரை பார்த்து ஓடின கடையில்?”

அபி: " யாரும் இல்லை"

கேவின்: " என்கிட்டே பொய் சொல்ற அபி"

அபி: “இல்லை”

கேவின்: “நீ சரி இல்ல, எதையோ மறைக்க முயற்சி பண்ணுற, என்ன சொல்லு எதும் பிரச்சனையா?”

அபி: “நீ நினைக்கிற மாதிரி எதும் இல்லை.”

நோலன்: “அப்போ யார் அந்த பொண்ணு? நீ உருகி உருகி பாடின பாட்டுக்கு சொந்தக்காரி யாரு?”

அபி: “அது…”

டாம்: “என்னை விட்டு போய் தனியா தமிழ் கத்துக்கிட்ட இருக்க எதுக்கு?”

நோலன்: “எட்டு மாசம் எங்க போன? அந்த பொண்ணு தமிழா? எப்படி பழக்கம்?”

கேவின்: "ஒரு பொண்ணுக்காகவா எங்களை எல்லாம் விட்டு போன? எட்டு மாசம் எங்களை எல்லாம் விட்டு இருந்த? எத்தனை பிரச்சனை நீ இல்லாம அவள பார்க்க தான் போறேன் சொல்லிட்டு போய் இருக்கலாமே? "

நோலன்: “சொல்லு அபி, எங்களை விட அந்த பொண்ணு முக்கியமா? பதில் சொல்லு, என்னாச்சு? எங்க போன?”

டாம்: “அந்த பொண்ணு இப்போ எங்க? எதாவது பேசு அபி”

அபி: “அது…” “அவ என்…” “எப்படி சொல்றது?”

அபி முகம் பொத்தி அழுக ஆரம்பித்தான். அதை கண்ட சாரா அவன் முகம் ஏந்தி,

சாரா: “இங்க பாரு என்னாச்சு சொல்லு அழுத என்னன்னு தெரியுமா எங்களுக்கு?”

அபி: “நான் கனடா போனேன், அங்க மாஸ்டர் இல்லை ஆன யாரோ என்னை தொடர்ந்து பின்னாடி வந்தாங்க ஆக்ஸிடென்ட் செய்ய முயற்சி நடந்துச்சு, ஆன எனக்கு எதும் ஆகலை, மாஸ்டர் ஒரு கான்சர்ட்க்கு (concert) அமெரிக்கா போய் இருகார் தெரிஞ்சுது நானும் அங்கே போனேன். நீங்க டாம் கல்யாணத்தில் வேலையா இருந்தீங்க, விக்டர் அங்கிள் சொல்லிட்டு தான் போனேன்.”

"போன இடத்தில் விபத்து, என்னை பார்த்துகிட்டா, அம்மா போல, அவ மேல காதல். நான் சொல்ல காத்து இருந்தேன் அவ விட்டு போய்ட்டா, அவளை நானும் விட்டு வந்துட்டேன். "

“எனக்காக காத்து இருப்பாளா? இல்லை, வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருப்பாளா? நான் இங்க வந்து இருந்த குழப்பத்தில், வேலையில் எட்டு மாசம் ஓடி போய்டுச்சு”

“தூங்க முடியல, அவ அழுறது எனக்கு கேட்குது. பிரம்மை இல்ல இது, என்னால உயிருக்குள்ள உணர முடியுது அவளோட வலியை, எனக்கு அவளை பார்க்கணும்.”

“இன்னிக்கி கடையில் அவளை போல ஒரு பொண்ணு ஒரு நிமிஷம் கண்டு பிடிச்சு தேடி வந்துட்டான்னு நினைச்சேன், ஆனா இல்லை, அது வேறு யாரோ”

சாரா: “இவளோ தானே போலாம் போய் உன் காதலை சொல்லி கூட்டிட்டு வா.”

கேவின்: “சரி இத்தனை காதல் அவ மேல உனக்கு இருக்கு? அவளுக்கு? உன்னை தேடி வரவேயில்லை ஏன்?”

நோலன்: “சரியான கேள்வி தான், சொல்லு அபி ஏன் வரல?”

அபி: “அவளுக்கு என்னை தெரியாது.”

அனைவரும் அதிர்ந்து பார்க்க,

நோலன்: “என்ன?”

அபி: “என் முகம் அவளுக்கு தெரியாது, என் பெயர், முகவரி, நான் யார் என்ற உண்மை எதும் தெரியாது.”

அபி கூறிய அனைத்தும் கேட்டு அனைவரும் அதிர்ந்து, உறைந்து போய் இருக்க, சாரா அபியின் கன்னத்தில் அறைந்து இருந்தார்.

சாரா: “அந்த பெண் பாவம், உன்னை பத்தி எதும் சொல்லாம ஏன் வந்த? காரணம் எதுவோ இருக்கட்டும் இது தப்பு. நீ எப்படி அபி இப்படி ஒரு தப்பு செய்த? கிளம்பு இனியும் தாமதிக்காமல் போய் உண்மையை சொல்லு, உன் காதலை சொல்லு”

அபி: “என் பாஸ்போர்ட் இன்னும் தயார் ஆகலை, அது போக என் கம்பனி புது கார் உலக சந்தைக்கு கொண்டு வரணும். என் கடமை முடிக்காம போக மாட்டேன்.”

“நான் அவளை பார்க்க போன எத்தனை நாள் ஆகுமோ தெரியாது அதுவரை நீங்க எல்லாரும் தான் பார்க்கணும் நம்ம கம்பெனியை அதுதான் இப்போ எல்லாத்தையும் சரி பண்ணிட்டு இருக்கேன்.”

நோலன்: “நானும் வரேன் உன்னோட, நீயும் நானும் போவோம். இனி உன்னை தனியா எங்கையும் விட மாட்டோம்.”

கேவின்: “நானும் வரேன்.”

டாம்: “அப்போ நான்?”

அபி: “யாரும் வேண்டாம், நானே போய்ட்டு வரேன்.”

சாரா: “உன்னோட கேவினும், நோலனும் வரட்டும். ஜோஷும் நானும் கம்பெனி பார்த்துக்கொள்வோம். டாம் எங்களுக்கு துணைக்கு இருக்கட்டும். ஜோயா கேவின் அம்மா அப்பாவை பார்த்துக்க இருக்கட்டும்.”

அபி: “அதெல்லாம் வேண்டாம்.”

ஜோ: “உங்க காதலியோடு வந்து எங்க கல்யாணத்தில் கலந்துக்குங்க அபி, அதுவரை எதும் பேச கூடாது.”

கேவின்: “சரியா சொன்ன டியர்.”

ஜோஷ்: “அதெல்லாம் சரி உங்க லவ்வர் பெயர் என்ன?”

அபியின் முகத்தில் சிரிப்பு பரவியது,

சாரா: “ஆமா, என்ன பெயர் சொல்லு?”

அபி: " அதீதி"

அதின்னு கூப்பிடுவாங்க,

டாம்: சரி உன்னை அதிக்கு தெரியாது. உனக்கு அதியை பற்றி எல்லாம் தெரியுமா?

அபி: தெரியும்.

கேவின்: “எப்படி?”

எப்படின்னு ஹரீஷ் கேட்டான் இல்லையா? இப்படி தான்.

அபி சிரித்து விட்டு கூறினான்,

அபி: “அவ டயரி என்கிட்ட தான் இருக்கு”.

ஜோ: “அப்போ ஃபோட்டோ இருக்க?”

அபி: “ம்ம்”

நோலன்: “எல்லாம் இருக்கு, போகாம ஏன் இருக்க?”

அபி: “அதுக்கு காரணம் அவ தான்.”

கேவின்: “போவோம் அபி, உன் காதலை சொல்லி… அந்த பொண்ணு பெயர் என்ன?”

அபி: “அதி…”

கேவின்: “அதியை உன் மனைவியா இங்க கூட்டிட்டு வரோம் சரியா?”

அபி: “சரி நான் தமிழ் க்ளாஸ் போணும் நேரம் ஆச்சு, போய்ட்டு வந்து பேசலாம்.”

அனைவரும் சிரிக்க, அபியின் பழைய துள்ளல் அவன் நடையில் வந்தது. இரவு அனைவருக்கும் அதியின் ஃபோட்டோ கட்டினான் அபி.

சாரா: “உனக்கு மனசு கல்லா? இவளை போய் எப்படி விட்டு வந்த?”

ஜோ: “ரொம்ப அழகா இருக்காங்க, பொறாமையா இருக்கு எனக்கு, உண்மையில் நீங்க செய்தது தப்பு அபி.”

ஜோஷ்: “நானும் வரேன் எனக்கு இவங்களை நேரில் பார்க்கணும் போல இருக்கு.”

டாம், நோலன், கேவின் மூவரும் அமைதியாக இருக்க, அபி கண்களால் “என்ன?” என்று கேட்க,

நோலன்: “அதி ரொம்ப அழகு. ஆனால் பாரு அபி, உனக்கும் உன்னை போல ஒரு ஏலியன் மீது காதல் வந்து இருக்கு பார்.”

டாம்மும் கேவினும் சிரிக்க,

கேவின்: “இனம் இனத்தோடு தான் சேரும், ஏலியன் காதல் ஜோடிகள்” என்று கூற,

அபி இருவரையும் அடிக்க துரத்தி கொண்டு போக, நீண்ட நாளுக்கு பிறகு அபி பழைய நிலைக்கு திரும்பி இருந்தான்.

நாட்கள் ஓடியது, ஐந்து மாதத்திற்கு பின், அபியின் புது கார் சந்தையில் அனைவரின் பாராட்டையும் பெற்று இருந்தது.

ஆம், நால்வர் மட்டுமே அமரும் சொகுசு கார்கள் மட்டும் தயாரித்து இருந்த “ரென்வோ” முதன்முதலாக "ரென்வோ காம்போ" என்னும் எட்டு இருக்கை காரை உலக சந்தையில் இறக்கி இருந்தது.

புது கிளைகளை திறந்து இருந்தான். உலக நாடுகளில் பத்தில் ஒரு விளம்பரம் ரென்வோ பற்றி இருந்தது. தொழில் வளர்ச்சி, சாராவுக்கு தாய்மை, கேவின் - ஜோ எங்கேஜ்மெண்ட் என்று நாட்கள் சந்தோசத்தை அபிக்கும் அனைவருக்கும் அள்ளி தந்து இருந்தது.

" பாவம் இனி அபி அழுக போற நாள், அவனுக்கு இனி மகிழ்ச்சி கொஞ்சம் தூரம் தான் " - மீ .

அபி தமிழ் பயிற்சியில் தேர்ச்சி பெற்று இருந்தான். அதியை காண மூவரும் கிளம்பி கொண்டு இருந்தனர். அபி அவன் அறையில் அதியின் டயரி எடுத்து பார்த்து விட்டு, அதில் பேனா மை கொண்டு எழுதினான்.

என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா?

இப்படிக்கு உன்
ஸ்ரீ.

இல்ல இல்ல

அபினவ் ஸ்ரீ.

மக்களே வணக்கம் :pray:

கதையின் நாயகன் அபினவ் ஸ்ரீ. இப்போ சந்தேகம் தீர்ந்ததா?
கதை எப்படி இருக்கு? இதுவரை எதும் குறை இருக்க கதையில்? எனக்கு விமர்சனம் கூறுங்கள். உங்கள் விமர்சனம் தான் எனக்கு பரிசு. கருத்து சொல்வது உங்கள் உரிமை, என் மீது உள்ள பிழையோ, பாராட்டோ எதை கூறினாலும் சிறப்பு தான்.

நன்றிகளுடன்

  • கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:

அத்தியாயம் - 15

அதியின் இல்லம்

ஹரீஷ்: “எப்படி?”

அதி: “அவன்கிட்ட என் டைரி இருக்கு”

ஹரிஷ்: “:joy: என்ன உன் டைரி யார்க்கிட்ட இருக்கோ அவன் தான் ஸ்ரீ இல்லையா?”

அதி: “ஆமா”

ஹரிஷ்: “இதெல்லாம் ஒரு விஷயமா? அப்போ என்கிட்ட உன் டைரி இருந்தா நான் தான் ஸ்ரீ இல்லையா?”

“உன் டைரி அவன் தொலைச்சு இருந்த? எதோ ஆதாயத்துக்காக எவனோ வந்தா? சின்னபிள்ளை தானமா இருக்கு உன் பதில்.”

அதி: “திருடுறவன் ஒரு டைரி திருடுவான், நாலு டைரி எப்படி முடியும்?”

ஹரீஷ்: “எதாவது புரியுற மாதிரி சொல்லு, எனக்கு ஒன்னும் புரியுல”

ராகவ்: “அப்போ நீ அவ லவ் ஸ்டோரி தான் கேக்கணும்.”

ஹரீஷ்: “அப்போ முழுசா சொல்லுங்க”

அதி: “அது… அம்மா முன்னாடி”

கோமதி: " நானும் இந்த காலத்து அம்மா தான் சொல்லு"

அதி: “நான்னா? ராகவ் சொல்லுவான்”

ராகவ்: “நீயும் வேண்டாம், நானும் வேண்டாம் கௌரி அக்கா சொல்லும் பாருங்க”

ஆமா மக்களே எல்லாரும் மேல இல்ல இல்ல போன் ஸ்கிரீன் பாருங்க பெரிய ஃப்ளாஷ்பேக் பார்க்க போறோம். இது தான் கதையோட அடுத்த கட்டத்துக்கு நம்மை கூட்டிட்டு போக போகுது.

:purple_heart:

ஆல் க்ரீன் அப்பார்ட்மெண்ட்ஸ் , ஸ்டேன்போர்ட், கலிஃபோர்னியா , அமெரிக்கா.

ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் இருந்து மிக நெருக்கமாக இருக்கும், இந்த அபார்ட்மென்ட்டில் தான் அதியும் ராகவ்வும் தங்கி இருந்தனர். இருபத்தி ஐந்து நிமிடத்தில் அவர்கள் பல்கலைக்கழகம் சென்று விடலாம், மிகவும் அருகில் இருப்பதாலோ என்னவோ அவர்கள் சீக்கிரமே கிளம்பி சென்று விடுவார்கள் இருவரும் அன்றும் அதுபோலவே கிளம்பி பல்கலைகழகம் சென்று இருந்தனர்.

பல்கலைகழகத்தின் மையத்தில் இருக்கும் மணிக்கூண்டின் அருகில் உள்ள பெரிய மரம் தான் அதியின் விருப்பமான இடம். அங்கு தான் எப்போதும் அமர்ந்து அவளின் நாட்குறிப்பு எழுதுவது. அவளின் அன்றாட செயல்கள் அனைத்தும் எழுதி விடுவாள். அதன் பின் வகுப்புக்கு செல்வதும் அவளின் வாடிக்கை.

அதி வகுப்புக்கள் செல்ல ராகவ்வும் அவர்களின் வகுப்பு தோழி டினாவும் பேசி கொண்டு இருந்தனர். அவர்களோடு இணைந்து கொள்ள சிறிது நேரத்தில் வகுப்பு தொடங்கியது. மதியம் வரை இருந்த அன்றைய வகுப்பு முடிந்து அனைவரும் கலைந்து செல்ல அதியை அழைத்த டினா,

டினா: “அதி இந்த வாரம் ஃப்ரீ தானே?”

அதி: "ஆமா ஃப்ரீ தான்.

டினா: "அப்போ இசை கச்சேரி போவோமா? அதும் உனக்கு பிடிச்சா கிதரிஸ்ட் " டெரெக் மவுன்ட்" இசையும் இருக்கு, சோ டிக்கெட் புக் பண்ணவா போவோம்?

அதி: “போலாம் ஆனா கான்சர்ட் எங்கே?”

டினா: “ஓக்லேண்டில்”

அதி: “அப்போ கண்டிப்பா போவோம்”

ராகவ்: “எங்க போறீங்க? அதும் பக்கம் இல்லை அது 2 மணி நேரம் டிராவல் வேற இருக்கு, நைட் லேட் ஆனால் கஷ்டம்.”

டினா: “கான்சர்ட் காலையில் தான் மதியத்தோடு முடிஞ்சுது, நானே அதியை வீட்டில் விட்டு போறேன் போதுமா?”

ராகவ்: " சரி ஆனாலும்…"

அதி: " என் டா இப்படி? என்னை யாரும் எதும் செய்ய மாட்டாங்க, நம்பி விடு, உன் அக்கறை தாங்க முடியலை"

ராகவ்: " உன்னை பார்த்துக்க சொல்லி என் அப்பா, உன் அம்மா, அண்ணா எல்லாரும் சொல்லி இருக்காங்க, நீ எங்க வேணாலும் போ, ஆனா என்கிட்ட சொல்லிட்டு போ, நீ பத்திரமா இருந்த எனக்கு அது போதும்."

அதி: “சரி டா”

அந்த வார இறுதி வந்தது, அதி காலையில் எழுந்து மிக உற்சாகமாக கிளம்பி ராகவ்வின் அறைக்கு வந்தாள், அவன் உறங்கி கொண்டு இருக்க, அவனை எழுப்பாது அவன் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அவள் காரில் ஏறி டினா இல்லம் வர, அங்கே அவள் வரவில்லை என கூற, டெரெக் மவுன்ட் இசை கேட்க வேண்டும் என்ற ஆவலில் தனியே கான்சர்ட்க்கு சென்றாள்.

அவள் கார் பார்க் செய்து அரங்கின் அருகில் வர பெரிய வெடி சத்தமும் கண் கூசும் அளவிருக்கு வெளிச்சமும் வர அவள் மயங்கி விழுந்தாள். அவள் கரம் வேறு யாரோ ஒருவரின் கரத்தை பற்றி இருந்தது.

சிறிது நேரத்தில் காதுகளில் ஒலித்த ஆம்புலன்ஸ் சத்தத்தில் சிறிது சிறிதாக கண் திறந்து பார்க்க, அந்த அரங்கம் வெடித்து சிதறி இருந்தது, மனித உடலும், இரத்தமும், வலியில் பலர் கத்தும் ஓசையும், காவலர்கள் உதவி செய்ய விரைவதும் என்று பார்த்த காட்சிகள் அனைத்தும் அவளை அதிர்ச்சிக்கும் அழுகைக்கும் தள்ளியது.

காவலர்கள் அவள் இருந்த இடம் நோக்கி வர அவள் எழுந்து நிற்க முயற்சி செய்யும் போது தான் தெரிந்தது அவளின் கையை யாரோ பிடித்து இருப்பது. அவள் திரும்பி பார்க்கவும் காவலர்கள் வந்து அவன் கைகளை பிரித்து விட்டு இருவரையும் ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

அதி தன் கை பிடித்து இருந்த அவனை கவனித்து பார்க்க முகம் சரியாக தெரியவில்லை, முகம், கை, கால் என அவன் மீது ஒரே இரத்த காயங்கள் மட்டுமே, அவனின் இடக்கை மட்டுமே அவனின் உடலில் ரத்தம் சிந்தாத பாகம். அவனின் சீர் அற்ற மூச்சு அவன் பிழைப்பது கடினமென்பது போல இருக்க, அதி அவனுக்கு எதுவும் ஆக கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.

மருத்துவமனை வந்து அவனை அவசர பிரிவுக்கு எடுத்து செல்ல, அதிக்கு அவளின் இடக்கையில் சிறிதாக பட்ட அடிக்கு வைத்தியம் செய்தனர்.

குண்டு வெடிப்பு செய்தியை அறிந்த ராகவ் அதியை தேடி, அரங்கம் சென்று விசாரித்து அவள் இருந்த மருத்துவமனை வரவும் அதி வெளியில் வரவும் அவளை கண்டு அழுது கோவத்தில் அவளை அறைந்து இருந்தான்.

ராகவ்: "உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருக்கு, அறிவே இல்லையா? தனியா ஏன் வந்த? என்கிட்ட சொல்லாம? டினா நான் போகல, அதி வீட்டுக்கு வரலையா கேட்டதும் எனக்கு மூச்சு நின்னு போய்டுச்சு, அப்படி என்ன அவசியம் இப்போ? எதும் பெருசா அடி இல்லைலா? "

அதி: “தப்பு தான், எதோ ஆசையில வந்துட்டேன். ஆனா இதெல்லாம் நான் எதிர்ப் பார்க்கல, தெரிஞ்சு யாரும் வருவாங்களா? விழா மாதிரி இருந்த அரங்கம் அரை நிமிஷத்தில் பல நூறு உயிர் எடுத்துட்டு போய்டுச்சு”

ராகவ்: “சரி வா வீட்டுக்கு போவோம், அப்புறம் யாருக்கும் அடி பட்டதை சொல்ல வேண்டாம்.”

அதி: “இதே தான் நானும் சொல்லணும் நினைச்சேன்.”

பின் இருவரும் வீடு வர ராகவ் இரவு சமைத்து உணவு உண்டு உறங்க சென்றனர். தூங்கும் முன் இன்றைய நாளுக்கு நன்றி சொல்லி அதி கண் மூட, அவள் கைகளை யாரோ பற்றியது போல உணர்வு, எழுந்து அமர்ந்து அவள் கைகளை பார்க்க, ஏனோ கையை பற்றிய அவன் பிழைத்து இருப்பான என்று தோன்றியது. இன்றைய நாளின் அழுத்தமும் அவள் உண்ட மருந்தும் வேலை செய்ய உறங்கிப்போனாள்.

அதன் பின் வந்த இரு தினங்களும் அவள் ஓய்வு எடுக்க, சிகிச்சைக்கு அதே மருத்துவமனை சென்றாள் அதி. அருகில் பல மருத்துவமனை இருந்தும் விதி அவளை அவனோடு இணைக்க அழைத்து இருந்தது.

அவள் முறை வந்ததும் கை கட்டை அகற்றி விட்டு, அவளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். அவளோ அவனை பற்றி விசாரித்து அவன் இருக்கும் அறை நோக்கி சென்றாள்.

அவன் அறை உள்ளே செல்ல, அதிக்கு அவளை அறியாது கண்ணீர் வந்தது, அவனின் நிலை அப்படி, கால்கள் இரண்டிலும் அடி, வலது கை முழுவது கட்டு போட பட்டு இருந்தது. இன்னும் அருகில் சென்று பார்க்க, அதிக்கு மயக்கம் வரும் போல இருந்தது. முகம் முழுவதும் அடி, அவன் கண் இரண்டை தவிர வேறு எதுவும் அவன் முகத்தில் காண இயலவில்லை, அப்போது அங்கு மருத்துவர் வர, அதி அவளை பற்றிய விவரம் கூறி அவனின் உடல் நிலை பற்றி கேட்க,

மருத்துவர்: “ரொம்ப அடி பட்டு இருக்கு, வலது பக்கம் எதும் செயல்படாது, அவருக்கு முதுகு எலும்பு விலகி போய் இருக்கு, அதை விட அவர் இன்னும் சுயநினைவுக்கு வரலை. வந்தா தான் அடுத்த கட்டம் என்னன்னு தெரியும். சுயநினைவு வரமா போன இவர் வெறும் ஜடம் தான். பார்ப்போம் இவர் கண் திறப்பது அரிது தான்.”

அதி இதை எல்லாம் கேட்டு மன சங்கடத்தோடு அவள் இல்லம் நோக்கி சென்றாள்.

:purple_heart:

அத்தியாயம் 16

அபியின் இல்லம்,

நாளை மறுநாள் இந்தியா பயணம் அபி கிளம்பிக் கொண்டு இருந்தான். அதியின் டைரிகள், அவனுக்கு அவள் அளித்த பரிசு என அனைத்தும் எடுத்து வைத்து கொண்டான்.

சாரா: “அபி, கேவின் அப்பாவும் அம்மாவும், அப்புறம் வில்பர்ட் அங்கிள் வந்து இருக்காங்க, கொஞ்சம் கீழ வா”

அபி: " வந்துட்டேன்"

ஜேம்ஸ்: “அபி கிளம்ப தயாரா?”

அபி: " தயார்"

நேன்ஸி : “அபி அங்க என்ன வேணாலும் ஆகி இருக்கலாம், சூழ்நிலை உனக்கு சரி இல்லாம கூட போகலாம். அப்படி ஆனா நீ கவலை படக்கூடாது சரியா?”

அபி: " புரியுது அம்மா, ஆனா அப்படி எதும் ஆகலை, என் அதி எனக்கு காத்து இருப்பா"

நேன்ஸி: “எப்படி இவளோ உறுதியா சொல்ற?”

அபி: " எதோ நம்பிக்கை, அவ்ளோ தான்."

வில்பர்ட்: “உன் நம்பிக்கை உண்மை ஆகனும் அபி, அப்புறம் உன்கிட்ட சில விஷயம் கேக்கணும்”

அபி: “ரொம்ப நன்றி அங்கிள் உங்க வாழ்த்துக்கு, என்ன கேக்கணும்? கேளுங்க.”

வில்பர்ட்: " கேக்கறேன் தப்பா நினைக்க வேண்டாம், எப்படி அந்த பொண்ணு காத்து இருப்பான்னு சொல்ற? உன்னை பத்தி எதுவும் தெரியாது அப்புறம் எப்படி? ஏன் நீ உன்னை பத்தி எதுவும் சொல்லல அதிக்கிட்ட? "

அபி:" அங்கிள் இவளோ கேள்வியா? என் லவ் ஸ்டோரி முழுக்க சொன்ன தான் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியும்"

வில்பர்ட்: " அப்போ சொல்லு, நாங்க எல்லாருமே தெரிஞ்சுக்க வேணாமா?"

அபி: “சொல்றேன்.”

"மக்களே இங்கேயும் அதே ஃப்ளாஷ்பேக் தான். ஆனா இது அபியோட முறை" - மீ

அபி: "அங்கிள் நான் நீங்க இப்போ பாக்குற மாதிரி பொறுப்பான பையன் இல்ல, ரொம்ப சேட்டை, கிதார் பைத்தியமா இருந்தேன். "

"அளவு இல்லாத காசு என்னை பொறுப்பு இல்லாத ஒருத்தனா தான் மாத்தி இருந்தது. கம்பெனி போவேன் வெறும் கையெழுத்து போட, கேவினும், நோலனும், சாராவும் பார்த்த அளவுக்கு கூட எனக்கு தொழில் தெரியாது, போன விக்டர் அங்கிள் கேட்ட இடத்தில் கையெழுத்து போட்டு அரட்டை அடிச்சுட்டு வருவேன். நோலனும், கேவினும் ஆஃபீஸ் தான் இருப்பாங்க இவங்களை பார்க்க போவேன் அங்கே, ரென்வோ ஆஃபீஸ் எனக்கு பார்க் மாதிரி ரீலக்ஸ் செய்ய தான் போவேன். "

“என் முழு நேரம் வேலை கிதார் வாசிக்கறது தான். நல்ல கவிதை வரும், பாட்டு எழுதுவேன். நானே பாடுவேன். நான் எப்படியும் ஒரு உலகப் புகழ் பெற்ற கிடரிஸ்டி ஆகனும் ஆசைப்பட்டு இருந்தேன்.”

“என்ன தான் காசு இருந்தாலும், கலையை காசு குடுத்து வாங்க முடியாதே? அதுனால டெரெக் மவுன்ட் நடத்துற கிதார் க்ளாஸ் சேர்ந்து கத்துக்கிட்டேன். நாளுக்கு நாள் எனக்கு இருந்த ஆர்வம் பார்த்து அவரே என்னை கைட் பண்ணாரு, அவரோட எல்லா கான்சர்ட் போவேன், அப்படிதான் ஒரு கான்சர்ட் அட்டென்ட் பண்ண கனடா போனேன்.”

"அப்போ தான், டாம் ப்ரோ அப்பாக்கு உடம்பு சரியில்ல, அவர் டாம்க்கு கல்யாணம் பண்ண ஆசைப்பட்டார், அதுனால நான் தனியா போறேன் சொல்லி கிளம்பி போய்ட்டேன். கனடா போய் எதுவும் சரியில்லை, என்னை யாரோ பின்னாடி தொடர்ந்து வந்தாங்க, அச்சிடேன்ட் செய்ய முயற்சி பண்ணாங்க, நான் அதுல தப்பிச்சுட்டேன். "

" டெரெக் மவுன்ட் சார் கான்சர்ட் ஓக்லாண்டில் நடக்க இருந்தது, நான் விக்டர் அங்கிள் கால் பண்ணி சொன்னேன், அப்போதான் டாம் அப்பா தவறியதும், அதில்கேவினும் நோலனும் பிஸி என்று, கல்யாணம் நான் வந்த பின்னாடிதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு வாரத்தில் வந்துருவேன் சொல்லி அமெரிக்கா கிளம்பினேன். அங்கே போய் எனக்கான ரூம் எடுத்துத்துட்டு ரெபிரஷ் ஆகி கிளம்பி கான்சர்ட் போனேன். என் பாஸ்போர்ட், விசா, கான்சர்ட் உள்ள போக தேவையான என்ட்ரி லெட்டர் இப்படி எல்லாம் எடுத்துட்டு உள்ள போனேன். சார் பார்த்து பேசிட்டு, ஷோ ஆரம்பிக்க நேரம் இருக்கு தெரிஞ்சு, கால் பேசலாம் வெளியே வந்தேன்."

" நான் வெளியே வரும் போது தான் அதி பார்த்தேன், அவ கண்ணுல ஏதோ ஆவல். அதை ரசிச்சு பார்த்துட்டே அவக்கிட்ட போனேன். என் பின்னாடி ஏதோ பலமான அடி, அப்போ நான் அவளை நெருங்கி இருந்தேன். என் உடம்பு எல்லாம் எறியுது, என் உடம்பு முழுக்க கத்தி குத்துன மாதிரி ரத்தம். நான் எட்டி அவ கை புடிச்சு இருந்தேன். ஏன்? ஏதுக்கு? தெரியல. அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு ஏதும் தெரியல."

" நான் கண் திறந்த போது, என் கை புடிச்சு என் பக்கத்துல உக்காந்து இருந்த, அவ சொல்லி தான் தெரியும், அன்னிக்கு நடந்தது குண்டு வெடிப்புன்னு, நான் செத்து போய் இருக்கலாம் தோணுற அளவுக்கு உடம்பு முழுக்க அடிப்பட்டு இருந்தது. என் இடக்கை தவிர எதுவும் அசையாது சொன்னாங்க, முதுக்கு எலும்பு அடிப்பட்டு இருக்கு, உங்களால இன்னொருத்தர் உதவி இல்லாம இனி வாழ முடியாது, சக்கர நாற்காலியில் நீங்க வாழ்க்கை முழுக்க வாழ வேண்டி இருக்கலாம். இப்படி இன்னும் நிறைய, இதெல்லாம் தெரிஞ்ச அப்புறம் எப்படி உயிர் வாழத்தோனும்? என்னை கருணை கொலை செய்ய சொல்லி கேட்டேன்."

கேவின்: " என்ன? கருணை கொலையா? என்ன பேசுற அபி நீ? உனக்கு நாங்க இல்லையா? எங்களை எல்லாம் மறந்துட்டியா? இல்ல வேண்டாம் முடிவு பண்ணிட்டியா?"

அபி: இல்லை கேவின், நான் கண் திறந்த அப்போ உடம்பு அசையவே இல்லை, உடம்பில் ஒவ்வொரு அணுவும் வழி, எங்க இருக்கேன் தெரியல, என் கண் முன்னாடி கண்ணீரோடு அவ உக்காந்து இருந்த, நான் கண் திறந்து பார்த்ததும் அவளுக்கு அவ்ளோ சந்தோசம், என்கிட்ட அவ பேசின எனக்கு கேக்கல, என் முகம் முழுக்க கண்ணாடி குத்தி கிழிஞ்சு இருக்கு, எதோ என் கண் மட்டும் தப்பி இருந்தது. "

"எனக்கு எதும் புரியவும் இல்லை. டாக்டர் வந்தார் அவரும் எதோ எதோ பேசுறார் புரியுல, அதி தான் அவ டயரி எடுத்து என்கிட்ட “ஆர் யூ அல்ரைட்னு” கேட்ட, என் வலது பக்கம் செயல் படலை, என் இடப்பக்கம் தான் வேலை செய்தது. அதில் என் இடக்கை, அவ என்கிட்ட பென் டயரி குடுத்த, வாழ்க்கையில் முதல் முறை நான் ஆங்கிலம் தெரிஞ்சு வெச்சு இருந்ததுக்கும், என் இடக்கை எழுது பழக்கதுக்கும் நன்றி சொன்னேன். "

"நான் எழுதி காட்டி தான் அவங்க என்கூட பேசினாங்க, அப்போ சொன்ன தகவல் தான் இதெல்லாம், உங்ககிட்ட என்னை சேர்க்க என் பெயர், முகவரி, எல்லாம் கேட்டாங்க நான் சொல்ல விருப்பப்படலை, நான் இப்படி முடங்கி போய் வந்தா? என்னை பார்க்க உங்க வாழ்க்கை முழுசும் குடுத்துருவீங்க, உங்க அன்பு எனக்கு தெரியாதா? நான் இல்லைன்னு கல்யாணத்தை, காதலை தள்ளி வெச்சா உங்களை எனக்கு தெரியுமே, நானும் வாழ போறது இல்லை தெரிஞ்ச அப்புறம் உங்களையாவது வாழ வைக்க வேண்டாமா? உங்களுக்கு சுமை ஆகணுமா? எப்படி என்னால முடியும். "

“உங்களுக்காக தான் சொல்லலை எதையும், நான் கட்டில் விட்டு எழுந்தரிப்பேன் நம்பிக்கையே இல்லை, உயிர் போற வழி உடலிலும் மனதிலும் எனக்குள்ள உயிரே இப்போ அதி தான். அவ இல்லாம நான் இப்போ உயிர் வாழ்ந்து கூட இருக்கமாட்டேன். எனக்குள்ளே நம்பிக்கை வளர்த்தது அவ தான். அன்னிக்கு அவ சொன்ன வார்த்தைகள் தான் என்னை இப்போ மாற்றி இருக்கு… நான் மாறிட்டேன் சொன்னீங்க, ஆமா நான் மாறிட்டேன். என்னை மாற்றினது அவள் தான்.”

:purple_heart:

அத்தியாயம் 17

அதி இதை எல்லாம் கேட்டு மன சங்கடத்தோடு அவள் இல்லம் நோக்கி சென்றாள்.

மேலும் இரண்டு நாட்கள் ஆனது, அதியின் எண்ணம் எல்லாம் அவன் மீது தான், இதை எல்லாம் கவனித்த ராகவ்,

ராகவ்: " என்னாச்சு மேடம்க்கு? சரியா இல்லையே,"

அதி: " அது அன்னிக்கு குண்டு வெடிப்பு நடந்துச்சு இல்ல?"

ராகவ்: " என்னடி எதும் அடி பட்டு இருக்க? என்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லலை? இப்போ உடம்புக்கு என்ன பண்ணுது?"

அதி: " ஒன்னும் இல்ல எனக்கு, கொஞ்சம் அமைதியா சொல்றதை முழுசா கேளு டா, அன்னிக்கு குண்டு வெடிப்பு நடந்த அப்போ ஒருத்தன் என் கை பிடிச்சு மயங்கி இருந்தான். அவனை ரெண்டு நாள் முன்னாடி பார்த்தேன், இன்னும் கண் முழிக்காம இருக்கான், எனக்கு இப்போ அவனை பார்க்கணும் போல இருக்கு, அவன் நினைப்பவே இருக்கு, அது தான் டல்."

ராகவ் : “அவளை முறைத்த ராகவ், எனக்கு மீன் கொழம்பு வெச்சு தரேன் சொன்னியே அது எங்க? நோட்ஸ் எடுத்து தரேன் சொன்ன அதெல்லாம் செய்தியா? அதி உனக்கு எது தேவையோ அதை செய், அவன் யாரோ நம்ம யாரோ, எதுக்கு உனக்கு தேவை இல்லாத வேலை?”

அதி: “பிளீஸ் இன்னிக்கி ஒருமுறை மட்டும். அப்புறம் கேக்க மாட்டேன்.”

ராகவ்: " சரி இன்னிக்கி போவோம் ஆனா இதுவே கடைசி."

அதி: “நாளைக்கு மீன் கொழம்பு வெச்சு தரேன்.”

ராகவ்: " என்னமோ போ, எனக்கு மீன் கொழம்பு கிடைச்சா போதும்."

மாலை வகுப்பு முடிந்து இருவரும் மருத்துவமனை செல்ல, அதியின் அண்ணன் நிஷாந்தின் நண்பன் ஸ்டீவ் அங்கு இருந்தான். கல்லூரியில் நிஷாந்த் படிக்கும் போதும் அவனுடன் பயின்ற நண்பன் இவன்.

அதியையும், ராகவ்வையும் இங்கு படிக்கும் அனுப்பும் போதே ஸ்டீவிடம் இவர்களை கவனித்து கொள்ளுமாறு கூறி இருந்தான் நிஷாந்த், ஸ்டீவ் இரு முறை இவர்கள் தங்கி உள்ள இல்லத்திற்கு வந்து இருக்கிறான். கல்லூரிக்கும் ஒரு முறை வந்து நேரில் சந்தித்து இருக்கிறான்.

ஸ்டீவ்: "அதி? இங்க என்ன பண்ற? நல்ல இருக்க தானே? "

அதி : “நான் நல்ல இருக்கேன், நீங்க? எனக்கு இங்க ஒருத்தரை பார்க்கணும், அதுக்கு வந்தேன், ராகவ் எனக்கு துணைக்கு வந்தான்.”

ஸ்டீவ்: “யாரது?”

அதி முழு விவரம் சொல்ல,

ராகவ்: " பாருங்க ப்ரோ, யாருன்னு தெரியல, அவனை போய் பார்க்கணும் அடம் பண்றா"

ஸ்டீவ்: “சரி வா நானும் யாருன்னு பார்க்கறேன்”

அனைவரும் அவன் இருக்கும் அறை செல்ல, அங்கு அவன் எந்த சலனமும் இன்றி உறங்கி கொண்டு இருந்தான்.

வழக்கமான சில அறிமுகத்திற்கு பிறகு, ஸ்டீவ் அவனின் நிலை பற்றி கேட்க, டாக்டர் கூறிய அனைத்தும் கேட்டு அனைவருக்கும் முகம் சோகம் ஆனது.

டாக்டர்: “வயசு எப்படியும் 26 இருக்கலாம், ரொம்ப அடி பட்டு இருக்கார், இவரை பற்றி எதுவும் தெரியல, இன்னும் யாரும் இவரை தேடி வரவும் இல்லை. என்ன செய்யறது தெரியாம நாங்க சிகிச்சை அளிக்கிறோம். அவர் முகம் தெரிந்தால் கூட எதாவது விளம்பரம் செய்யலாம். முகமும் சேர்ந்து சிதைந்து இருக்கு.”

ஸ்டீவ்: “நீங்க சிகிச்சை செய்யுங்க, என்னை தான் குண்டு வெடிப்பு பற்றி கவனிக்க சொல்லி சிறப்பு அதிகாரியா நியமனம் பண்ணி இருக்காங்க, நான் பார்த்துக்கறேன். சீக்கிரம் தகவல் கிடைக்கும்.”

ராகவ், ஸ்டீவ், டாக்டர் என அனைவரும் பேசிக்கொண்டே அறை விட்டு நகர, அதி அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். எதோ யோசித்து கொண்டே அவன் இடக்கையில் அவள் கைகளில் தொட அவனிடம் சிறு சலனம், அதி அவனை பார்க்க, அவன் கண்களில் கண்ணீர், அவள் அவன் கரம் பற்ற, அவன் கண் திறந்தான்.

அதியின் முகத்தில் அத்தனை சந்தோசம். ஏனோ அவளுக்கும் கண்ணீர், அதி பேச பேச இவன் கண்கள் குழப்பமான பார்வையை மட்டுமே தந்தது, அதற்குள் தகவல் அறிந்து அங்கு வந்த மருத்துவர் அவனை சோதித்து பார்த்து விட்டு, அவனிடம் கேள்விகள் கேக்க, அவனுக்கு எதுவும் புரியவில்லை, தான் எங்கு உள்ளோம், தனக்கு என்ன ஆனது என எதும் புரியவில்லை.

அதி யோசித்து விட்டு அவள் பையில் உள்ள அவளின் டயரி எடுத்து, “ஆர் யூ அல்ரைட்?” என்று எழுதி காட்டினாள்.

அவன் விரல் காட்ட, பேனாவை அவன் கைகளில் தர, அவன் எனக்கு என்ன ஆனது என்று வினவா, டாக்டர் அவனின் நிலைமையை மறைத்து பாதியாக பாதிப்பை பற்றி கூற, அவன் அதற்கே அதிர்ந்து கண்ணீர் வடிக்க,

டாக்டர்: " உங்கள் பெயர், முகவரி, சொல்லுங்கள் உங்கள் உறவுக்கு தெரிவிக்க என்று கேட்க,"

அவனிடம் பெரிய மௌனம்.

அவன் தான் ஒரு அனாதை என்று கூற, அவனின் முகவரி கேட்டனர்.
அவனோ அவனை கருணை கொலை செய்து விடும் படி கெஞ்சினான்.

அப்போது அங்கு வந்த ஸ்டீவ், ராகவ்வும் இணைந்து கொள்ள, அங்கு நடந்தவற்றை தெரிந்து கொண்டு,

ஸ்டீவ்: “உன் பெயர் என்ன? சொல்லு. நான் ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் பொய் சொல்லாதே, நான் இருக்கேன் உனக்கு உதவி செய்ய சரியா?”

அவன்: “என் பெயர் ஸ்ரீ. என்னை கருணை கொலை செய்யுங்கள் எனக்கு வாழ விருப்பம் இல்லை.”

அவர்கள் எதேதோ கூறியும் அவன் பெயரை தவிர எதுவும் சொல்லவில்லை.

டாக்டர்: " சரி நாளை இதை பற்றி பேசுவோம் நீ தூங்கு இப்போது"

அதியிடம் திரும்பி,

டாக்டர்: “நன்றி அதி, சரியான நேரத்தில் அவரோடு பேச ஒரு ஐடியா தந்ததற்கு”

ராகவ் “போகலாம்” என்று அழைக்க, ஸ்டீவ் டாக்டர் உடன் எதோ பேச சென்று விட்டார்.

அதி மட்டும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு துக்கம் தாங்கவில்லை. அந்த டயரி எடுத்து எழுதினாள்.

அதி: " ஸ்ரீ, நீ சாகனும் ஏன் சொல்ற? நீ சாகனும் இருந்தா, நீ குண்டு வெடிப்பில் செத்து இருப்ப, கடவுள் உன்னை எதுக்கோ உயிர் பிழைக்க வெச்சு இருக்கார், நீ சாக தயாரா இருக்க, இந்த முடிவை மாற்று ஸ்ரீ"

ஸ்ரீ: " நான் உயிர் வாழ்ந்து என்ன செய்ய போறேன்? என்ன பாருங்க நான் இந்த படுக்கையை விட்டு எழுந்து நிக்க போறது கூட இல்லை, யாருக்கும் சுமை ஆக எனக்கு விருப்பம் இல்லை, எதை சொன்னாலும் என் நண்பர்களுக்கு தான் சுமை, அவங்களுக்கு தான் கஷ்டம்."

அதி: " நாளை ஒரு வேலை உன் நண்பர்கள் உன்னை கண்டு பிடித்து வந்தா? உன் பிணமா பார்த்து மட்டும் சந்தோசமா படப்போறாங்க? அப்பவும் அவங்களுக்கு கஷ்டம் தானே இது, அவங்க துடிச்சு போக மாட்டங்க?"

ஸ்ரீ: “வேற என்ன செய்ய? நான் இப்படியே காலத்துக்கும் படுத்து இருந்தா, அவங்க வாழ்க்கை முழுக்க என்னோட வாழ்க்கைக்காக வீணா போய்ரும், இப்படி ஆனது யார் தப்பு? என்னோட சுமையை அவங்க மேல போட சொல்றீங்களா? என் இடத்தில் இருந்து பாருங்க என் நிலைமை புரியும், எனக்கு வாழ விருப்பம் இல்லை என்னை கொலை பண்ண சொல்லுங்க, நானும் கான்சர்ட் இறந்ததாக இருக்கட்டும்” என்று எழுதி விட்டு பேனாவை கீழே போட்டு கண் மூடினான் ஸ்ரீ.

அதிக்கு எதுவும் பேச தோணவில்லை, அமைதியும் சோகமும், அவனின் எண்ண அலைகளும் அவள் மனதில்.

டாக்டர்: “ஸ்டீவ், அதி பேசினதை நான் பார்த்தேன், கொஞ்ச அவர் சரி ஆகட்டும் திருப்பியும் பேசுவோம். அவருக்கு இப்போ ரெஸ்ட் தேவை.”

ஸ்டீவ்: “சரி டாக்டர்”

ராகவ்: " போகலாம் அதி நேரம் ஆச்சு, ப்ரோ நீங்க பாருங்க, நாங்க வரோம் என்று கூறி விடை பெற்றான்."

அதி அமைதியாக வருவதை கண்ட ராகவ்,

ராகவ்: " அதி இது நமக்கு தேவை இல்லாதது, போதும் விடு. அவர் நிலைமை கஷ்டம் தான். அதுக்கு இப்படி ஃபீல் பண்ணி என்ன ஆக போகுது? உன்னால் இதில் எதுவும் செய்ய முடியாது, ப்ரோ பார்த்துப்பார்."

அதி: "அவன் வாழ்க்கையே வெறுத்துட்டான், அவன் கண்ணில் அவ்ளோ சோகம், அது என்னை எதோ செய்யுது ராகவ், அதுதான். அவனை தேடி இன்னும் யாரும் வரலை ஏன்? "

ராகவ்: “அதி போதும் எனக்கு ரொம்ப பசிக்குது, சாப்பிடுவோம் வா, வீட்டுக்கு போய் சமைச்சு சாப்பிட நேரம் இல்லை”

பின் அவர்கள் உணவு உண்டு இல்லம் சென்று சேர, நேரம் ஆகி விட்டது.

அதியின் கனவில் அவனின் கண்களும் அவனின் வார்த்தைகளும் அவளை சுட்டது. அடுத்த நாள் காலை எழுந்து வழக்கம் போல கல்லூரி சென்று அவளின் விருப்ப இடமான அந்த மரத்தின் கீழ் அமர்ந்து அவள் டைரியை எடுக்க பைகளில் கையை விட, அது அவளின் பையில் இல்லை, எங்கு என்று யோசித்து பார்க்க அப்போது தான் தெரிந்தது அவளின் டைரி அவனிடம் இருப்பது.

அதி: “ராகவ் என் டைரி ஸ்ரீ கிட்ட இருக்கு இன்னிக்கி போய் எடுத்துட்டு வருவோம்.”

ராகவ்: " என்ன? உன் டைரி அவன்கிட்ட எப்படி? ஆமா தினம் அலையா விடுவியா?"

அதி: அது நேத்து அவனோட எழுதி பேச குடுத்தேன், மறந்துட்டு வந்துட்டேன். என் டைரி வேணும் எனக்கு, என்னோட எல்லா விபரமும் அதில் இருக்கு"

ராகவ்: “நான் லைப்ரரி போணும் அதி, படிக்க நிறைய இருக்கு, உனக்கு அது புரியலை”

அதி: " இந்த ஒருமுறை சத்தியமா இது தான் கடைசி பிளீஸ் ராகவ்"

ராகவ்: “சரி போவோம்.”

அங்கு ஸ்ரீயோ அதியின் டைரியை முழுவதும் படித்து இருந்தான். அவனுக்கு அதியை பிடித்து இருந்தது. அவளின் குடும்பம், அவளை முதல் முதலில் கண்ட நொடியை நினைத்து பார்த்து, அவளின் பெயரை ஒரு முறை எழுதினான்.

அதிதீ

:purple_heart:

அத்தியாயம் 18

ராகவ் மாலையில் லைப்ரரி சென்று அமர்ந்து விட, அவனுக்கு காத்து இருந்து, பொறுமை இழந்து அதி தனியாகவே மருத்துவமனை சென்றாள்.

மருத்துவனையில் டாக்டரிடம் அனுமதி வாங்கி அவன் அறை சென்றாள் அதி, அவன் கண் மூடி படுத்து இருந்தான். அதி அவனின் கையின் அடியில் உள்ள டைரியை எடுக்க, அதில் கண் விழித்து ஸ்ரீ அவளை பார்க்க,

அதி: “அதி இது என் பெர்சனல் டைரி அதான் எடுக்க வந்தேன். உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு?”

ஸ்ரீ: “எதுக்கு உயிரோட இருக்கேன் இருக்கு, வலி உயிர் போகுது, மருந்து இல்லாம தூங்க முடில, இன்னும் எவ்ளோ நாள் என் உயிரையும் இந்த வலியையும் நான் தாங்கனும் தெரில”

பொறுமை இழந்த அதி,

அதி: “உனக்கு என்ன இப்போ சாகனும் அவ்ளோ தானே? ரெண்டு நிமிஷம் போதும் ஒரு ஊசி போட்ட இந்த உயிர் போய்ரும், உன் அப்பா, அம்மா, ப்ரெண்ட்ஸ், இப்படி யாரையும் நீ யோசிக்க தயாரா இல்லை, நீ சாகனும் உனக்கு அவ்ளோ தான் இல்லையா?உன்னால உன் வலியை தாங்க முடியல? இது ஒரு பதில்? சரி செத்து போ, ஒரு முறை வாழ முயற்சி செஞ்சு பார்த்துட்டு செத்து போ, முயற்சியே செய்யாம முடியலனு சொல்ற? உன் சிகிச்சையை நான் பார்த்துக்கறேன், நீ ஒரு முறை முயற்சி செய்யுறியா?”

ஆவேசமாக ஆரம்பித்து அமைதியாக எழுதி முடித்து இருந்தாள்.

ஸ்ரீ: " நான் சுயநலவாதி இல்ல, எனக்கு என்னாச்சுனு பார்க்க, என் நண்பர்கள் எப்பவும் வரலாம், அவங்களுக்கு நான் சுமையா மாற விரும்பல்ல, என்ன அவங்க நெருங்க கூடாது, நெருங்கி வரதுக்குள்ள நான் இல்லாம போகனும் அதுதான் எனக்கு வேணும்"

“உனக்கு ஏன் அதி என்மேல இவ்வளவு அக்கறை? நான் நடப்பேன் அவ்ளோ நம்புற? எனக்கு நீ சிகிச்சை தர போறியா? நான் உனக்கு யாரு என் சுமை உனக்கு வேண்டாம் விட்டுரு.”

அதி: " யாரும் எனக்கு சுமை இல்ல. உன்னை யாராவது பார்த்துக்க வேணும், நீ யாருன்னு தெரியாம எப்படி சிகிச்சை நடக்கும்? உனக்கு எதாவது ஆனா யார் யாருக்கு பதில் சொல்லணும் தெரியுல, அதுல பயந்து போய் இருக்காங்க டாக்டர்கள் எல்லாம், உன் ப்ரெண்ட் வந்து ஏன் சொல்லல கேட்ட?"

“சோ என்னை உன் ப்ரெண்ட் நினச்சுக்கோ, நான் உனக்கு கார்டியன் ஆகிறேன், உன் உடம்பு நல்லானதுக்கு அப்புறம் உன் பிரெண்ட் சொல்லி வர சொல்வோம் சரியா?”

ஸ்ரீ: “நீ சொல்றது சரி தான். நான் இறந்து போய்ட்டா? சிகிச்சை பலன் இல்லாம நான் இறந்து போய்ட்டா உனக்கு தான் தொல்லை. எனக்கு நீ கார்டியன் ஆகி பின்னாடி கஷ்டப்பட வேண்டாம். சோ என்னை விடு.”

அதி: “எனக்கு என்ன செய்றது தெரில, நீ இவளோ யோசிக்க வேண்டாம் அதும் தேவை இல்லாததை”

அப்போது அங்கு வந்த ஸ்டீவ், “என்ன” என வினவினார். அதி அனைத்தையும் சொல்ல,

ஸ்டீவ்: “நான் கார்டியன் ஃபார்ம் ஃபில் பண்ணிகறேன், நீ செய்ய வேண்டாம்.”

அதி: “அண்ணா பணத்துக்கு என்ன செய்வீங்க?”

சிறிது நேரம் இருவரும் யோசிக்க, ஸ்ரீ மட்டும் எதுவும் புரியாது இருவரையும் பார்த்து கொண்டு இருந்தான்.

அதி: " அண்ணா கார்டியன் நீங்க எடுக்க வேண்டாம், நான் எடுத்துக்கறேன், நீங்க உதவி செய்யுங்க போதும்".

ஸ்டீவ்: “சரி”

பின் இருவரும் சேர்ந்து, ஃபார்ம் ஃபில் செய்துவிட்டு வந்தனர். அதி ஸ்ரீயிடம் அவள் பொறுப்பில் அவன் இருப்பதாக கூற,

ஸ்ரீ: “யார் நீ? எனக்காக ஏன் இவளோ கஷ்டப்படற? என் மேல இவ்ளோ அக்கறை இதெல்லாம் ஏன்?”

அதி: “நான் என் மனசு சொல்றதை தான் செய்வேன் ஸ்ரீ, எனக்கு தோணுது நீ சரி ஆகி எழுந்து நடக்க போறேன்னு, என் கண் முன்னாடி நீ கஷ்டப்படற அதை பார்த்துட்டு எப்படி உன்னை கடந்து போக சொல்ற? உணர்வுகள் எல்லாருக்கும் ஒன்னு தான் ஸ்ரீ. உன் ப்ரெண்ட் நான் சரியா? இனி என்னை வேற ஒருத்தியாக நினைக்காதே.”

ஸ்ரீ: "எனக்கு உண்மையாவே, நான் எழுந்து நடப்பேன் நம்பிக்கையே இல்லை. அதோட எதோ பயம் எனக்குள்ள இருந்துட்டே இருக்கு "

ஸ்டீவ்: “எதும் இல்லை ஸ்ரீ, சீக்கிரம் குணம் ஆக போற நீ, கவலைப்படாதே”

அப்போது ஸ்டீவ் அழைப்பு வந்தது.

ஸ்டீவ்: “ஹலோ”

ராகவ்: “ப்ரோ, அதி காணோம், போன் பண்ணேன் பல முறை பதிலே இல்லை, அதி அம்மா வேற கால் பண்ணி கேட்டுட்டே இருக்காங்க, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க”

ஸ்டீவ்: “அதி இங்க தான் ஹாஸ்பிடல் இருக்க, நீ இங்க வா.”

ராகவ்: " சரி நான் வர வரை அவளோடு இருங்க ப்ரோ"

அலைபேசியை அணைத்த ஸ்டீவ் விவரம் சொல்ல, அதி சரி என கூறி, அவளின் டைரி எடுக்க, அதை ஸ்ரீ முயன்று லேசாக பிடிக்க,

அதி: “இது என் டைரி, நான் எடுத்துட்டு போறேன்” என எழுதி காட்ட,

ஸ்ரீ: “இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கு படிச்சுட்டு தரேன்”

அதி கோவமாக முறைத்து,

அதி: “அடுத்தவங்க டைரி படிக்க கூடாது தெரியாத?”

ஸ்ரீ: " இந்த ரூம் என்ன இருக்கு? காலையில் இருந்து வெறும் சேவர் தான் இருக்கு, என்னை தனி அறைக்கு மாற்ற சொல்லேன் இந்த ஐசியூ ரூம் வெறுமை என்னை இன்னும் ஏதேதோ யோசிக்க வைக்குது, உன் டைரி தான் கொஞ்சம் நேரம் போக வெச்சுது, கழுத்து சரியா அசைக்க முடியாம, கஷ்டப்பட்டு படிச்சேன், இது இங்கேயே இருக்கட்டும்" என ஸ்ரீ எழுத

அதி: " சரி நீ என் ப்ரெண்ட் தானே படிச்சுக்கோ, யாருக்கும் சொல்லாதே, பத்திரம் சரியா?, நீ சொன்னது போல இன்னும் ரெண்டு நாளில் உன்னை வேற ரூம் மாத்த சொல்றேன். இப்போ நேரம் ஆச்சு, நான் கிளம்புறேன். குட் நைட்."

ஸ்ரீ: " நன்றி, குட் நைட்."

ஸ்டீவ்வும், அதியும் அறை விட்டு வெளியே வர, ராகவ் முறைத்து கொண்டு நின்று இருந்தான்.

அதி: “என்ன ராகவ் என்னை தேடி இங்கேயே வந்துட்டீங்க?”

ராகவ் முதன் முறையாக அவளின் கன்னம் சிவக்க அடித்து இருந்தான்.

ராகவ்: " மொபைல் சைலண்ட் எடு, அறிவு இருக்கா? சொல்லிட்டு போக மாட்டியா நீ? எவ்ளோ கால் பண்றேன் எடுக்கவே இல்லை, அம்மா பயந்து போய் இருக்காங்க, நான் இல்லாம இவ்வளவு தூரம் வருவியா?"

ஸ்டீவ்: " பொறுமையா இரு. அதி,
ஸ்ரீயோட கார்டியன் ஆக கொஞ்சம் வேலையா இருந்தா அதான் கவனிக்காம இருந்து இருப்பா"

ராகவ்: " ஒஹ், கிளம்பு போலாம்." அடி குரலில் அவன் சீற,

அதி நடுங்கி போய் முன்னே நடக்க அவன் ஸ்டீவ்விடம் விடை பெற்றுக் கொண்டு ராகவ் கிளம்பினான்.

வீடு வந்து சேரும் வரை பெரும் அமைதி, அவனின் முகம் கோவத்தில் சிவந்து இருந்தது. அதியின் பக்கமே திரும்பாது அவன் கார் ஓட்டுவதில் மட்டுமே கவனமாக இருந்தான்.

வீடு வந்து அதி சீரியல் சாப்பிட எடுத்து வர, ராகவ் அவன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான். அதி அவனை சாப்பிட அழைக்க,

ராகவ் அங்கு இருக்கும் பூ ஜாடியை எடுத்து உடைக்க, அதி அழுது கொண்டே அவள் அறை சென்று விட, ராகவ் நிஷாந்த்திடம் அழைத்து பேசினான்.

ராகவ்: “அண்ணா, இவ சரி இல்ல, என்கிட்ட சொல்லாம அன்னிக்கு கான்சர்ட் போன, அப்புறம் அவனை பார்க்கணும் போன, இன்னிக்கி இவ அவனுக்கு கார்டியன் ஆகி வந்து இருக்க, எல்லாம் அவ இஷ்டம் தான். இன்னிக்கி என்கிட்ட சொல்லிட்டு போகல, நீங்களே பேசுங்க அவக்கிட்ட பேசினா இன்னும் நாலு அடி சேர்த்து வெச்சுருவேன்.”

நிஷாந்த்: “என்ன அடிச்சியா? என்ன தைரியம் உனக்கு எங்கிட்டயே சொல்ற, எதுக்கு டா, அடிக்கிற? அதி எங்க? வீட்டுக்கு வந்துட்டீங்க தானே? சரி ஆமா யாரு அந்த அவன்?”

ராகவ்: " இல்லை அவ செய்ற வேலைக்கு கொஞ்சுவாங்களா? சொல்லாம போய், எங்க போனேனே எனக்கு தெரில, இருக்கற டென்ஷன்ல ஹாஸ்பிடல் போய் இருப்பான்னு எனக்கு யோசனை வரதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்து இருக்கு, இதுல அம்மா வேற அவள் கால் எடுக்கல சொல்லி இன்னும் டென்ஷன், உங்க தங்கச்சி செய்ற வேலையெல்லாம் சொல்றேன் இருங்க,"

ராகவ் அன்று அதி கான்சர்ட் சென்றது முதல், இன்று நடந்தது வரை அனைத்தும் சொல்ல, நிஷாந்த் அதியிடம் அலைபேசியை தர சொன்னான்.

ராகவ் அவள் அறை சென்று அவளை அழைக்க அவளோ அழுது தூங்கி இருந்தாள். அவன் அறை கதவை திறந்து தூங்கும் அவளை பார்க்க, அவள் முகம் சிவந்து, கண்ணீர் கோடுகளோடு அவள் முகம் காட்சி தந்தது, அவனின் கை ரேகை அவள் கன்னத்தில், தான் செய்த தவறு புரிய தன்னையே நொந்து கொண்டான்.

ராகவ் அவளை எழுப்பி விட, அவன் அலைபேசியை அண்ணா என தர,

நிஷாந்த்: “அதி எப்படி இருக்க? யாரு அது? ஏன் அவன் கிட்ட சொல்லாம போன? அவன் பாரு உனக்காக தானே துடிக்கிறான்? அம்மா பயந்து போய் இருக்காங்க டா”

அதி: “இல்லை அண்ணா, மொபைல் சைலண்ட் போட்டேன், எடுக்க மறந்துட்டேன். லைப்ரரி போய் இருந்தான், இவன் போன் சைலண்ட் இருக்குமோ இருக்காதோ மெசேஜ் இல்ல கால் பண்ண சத்தம் கேட்டு அது இவனுக்கு பிரச்சனை ஆகும் அதான் டீனாகிட்ட சொல்லிட்டு வந்தேன். நான் சொல்லாம ஒரு முறை கூட போனது இல்லை அண்ணா.”

நிஷாந்த்: " சரி யாரு அவன்? நீ ஏன் கார்டியன் ஆகனும்? ஸ்டீவ் கூட சொல்லவே இல்லை"

அதி: " கான்சர்ட் அப்போ எனக்கு ஆக்ஸிடென்ட், அப்போ என் கை பிடிச்சுத்தான் நான் விலகி விழுந்தேன், அவன் நிலைமை மோசம் அண்ணா அதான் உதவி செஞ்சேன்." என்று ஸ்ரீ பற்றி இவளும் ஒரு முறை விளக்கம் சொல்ல,

நிஷாந்த்: "சரி இனி போன, அவன்கிட்ட சொல்லிட்டு போ, அம்மாகிட்ட பேசு "

கோமதி: “என்ன பொண்ணு நீ? கொஞ்சம் நேரத்துல பயந்து போய்ட்டேன், கை எப்படி இருக்கு இப்போ? உடம்பை பார்த்துக்கோ இப்போ நேரம் ஆச்சு, நாளைக்கு பேசுவோம்”

அதி: “சாரி மா, இனி இப்படி செய்ய மாட்டேன்.”

கோமதி: " சரி கண்ணு"

நிஷாந்த்: “நான் ஸ்டீவ்க்கிட்ட பேசிட்டு நாளைக்கு கூப்பிடுறேன் இப்போ சண்டை போடாம சாப்பிட்டு தூங்குங்க சரியா?”

அதி: " சண்டை எல்லாம் இல்லை அண்ணா அவனுக்கு என் மேல பாசம் அக்கறை அதிகம், இன்னிக்கி அவன் நிலைமை புரியுது அண்ணா எனக்கு, தப்பு என் மேல தான்."

நிஷாந்த்: “சரி நீயாச்சு அவனாச்சு என்னமோ பண்ணிங்க, குட் நைட்”

அதி பேசிவிட்டு அலைபேசியை தர, அவன் சீரியல் ஊட்டிவிட்டான். எதுவும் பேசாது வாங்கி கொண்டாள்.

ராகவ்: “சாரி அதி, வலிக்குதா? ரொம்ப கோவம், உன்னை பார்க்காம தவிப்பு, கொஞ்சம் பொறாமை வேற அதுதான். பொறுமை இல்லாம அடிச்சிட்டேன்.”

அதி: “நீ அடிச்சது வலிக்கல ராகவ், உன் மௌனம் தான் வலிச்சுது, மூஞ்சி தூக்கி வெச்சுக்கிட்டு பேசாம வந்த பாரு அது தாங்கல, திட்டு, இப்படி ரெண்டு அரை வை வாங்கிப்பேன், பேசாம இருக்காதா டா”

ராகவ்: “சரி தூங்கு, நாளைக்கு பேசுவோம் உன்கிட்ட சில கேள்வி கேக்கணும் எனக்கு, இப்போ வேண்டாம், நாளைக்கு காலேஜ் போக வேண்டாம். நல்லா தூங்கு.”

அதி: " ம்ம் சரி, குட் நைட் "

ராகவ் சீரியல் உண்டு விட்டு அவன் அறையில் பல கேள்விகளோடு தூங்கி விட்டான். அதியும் எதோ நிம்மதியில் தூங்கி போனாள். ஆனால் ஸ்ரீ?

அவனுக்கு நினைவு எல்லாம் அதியே, அவளின் நம்பிக்கையும் உறுதியும் அவன் எழுந்து நடப்பான் என கூறியதும். அவள் மேல் பெரும் நம்பிக்கை கொள்ள செய்தது. அவளின் நட்பு அவனுள் எதோ ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

:purple_heart:

அத்தியாயம் 19

நிஷாந்த் ஸ்டீவ் உடன் பேசி ஸ்ரீ பற்றி அனைத்து விவரங்களையும் வாங்கி இருந்தான்.

காலை மணி பத்து, கல்லூரிக்கு விடுப்பு, அதி நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தாள். அவளை அவள் அறையில் ஒரு முறை வந்து பார்த்துவிட்டு ராகவ் நிஷாந்த்துடன் பேசிக்கொண்டு இருந்தான்.

ராகவ்: “ரொம்ப நாள் கழிச்சு நல்லா தூங்குறா, அவன் கண் முழிக்கல, சிகிச்சைக்கு சரின்னு சொல்லல, இப்படி நிறைய வருத்தமா இருந்தா, அவன் சரின்னு சொன்னதும் நிம்மதியா தூங்குறா. ஸ்ரீ இவ கை புடிச்சு மயங்கி இருக்கான், இவளுக்கு அவன் மேல எதோ சாப்ட் கார்னர், சோ இவ பரிதாபப்பட்டு இப்படி எல்லாம் செய்துட்டு இருக்க, எனக்கு அவனை பார்த்தா பாவமா தான் இருக்கு, அதும் இல்லாம அதி யோசிக்கிறது சரி தான். சொல்லாம போனது தான் என் கோவம் வேற எதும் இல்லை, நேத்து ரொம்ப கோபப்பட்டு லூசி மாதிரி நடந்துக்கிட்டேன்.”

நிஷாந்த்: “ஸ்டீவ்வும் இது தான் சொன்னான், அதி கிட்ட தான் பேசுறானாம், அது தான் அவனும் உண்மையை சொல்லட்டும் இருக்கான், என்ன அதி பணம் தானே செலவு செய்ய போற? நமக்கு இல்லாத பணமா? செலவு, பெரிய விஷயம் இல்லை. அவன் நல்லா ஆன அப்புறம் விசாரணை பண்ணி தெரிஞ்சுப்போம். எப்படியும் அவன் நண்பனை தேடி போய் தானே ஆகனும்? அவன் காசை திருப்பி தரமா போனாலும் பரவாயில்லை, அதி அவனுக்கு உதவி செய்றதுல சந்தோசமா இருக்க, இருந்துட்டு போகட்டும், நீ எதுக்கும் ஒரு கண்ணு வை, ஸ்டீவ் இருக்கான் பார்த்துப்பான்.”

ராகவ்: " சரி அண்ணா."

அதி எழுந்து குளித்து , பசியோடு வெளியே வர, பிரியாணி மனம் வீடு எங்கும் பரவியது,

அதி: “ராகவ் பிரியாணி செஞ்சு இருக்கியா?”

ராகவ்: " மூக்கு நல்லா தானே இருக்கு? மொப்பம் புடிச்சுட்டே வந்து கேள்வி கேக்குறா?"

அதி: "நீ சாப்பாடை வை, சாப்பிட்டு பார்த்து சொல்றேன், என்ன செஞ்சு இருக்கேன்னு சரியா? "

ராகவ்: " எல்லாம் உன் நேரம் டா ராகவா, சாப்பிட்டு அவனை பார்க்க போலாம் கிளம்பு"

அதி: “யாரை?”

ராகவ்: " ஸ்ரீ" சொல்லிவிட்டு அவன் முகம் லேசாய் சுருங்கியது.

அதி: “பொறாமை தெரியுதே உன் கண்ணுல? ஏன்?”

ராகவ்: " அவனை பார்க்க என்னை விட்டு போய்ட்ட, என் நினைப்பே வரல தானே? நான் கால் பண்ணி ப்ரோ கிட்ட பேசி கூட, என்ன கேக்க நீ ஒரு கால் பண்ணியா? அதன் லேசா பொறாமை"

அதி வாய் விட்டு சிரிக்க, இருவரும் உண்டு விட்டு ஸ்ரீ யை காண சென்றனர்.

மருத்துவமனையில் ஸ்ரீயின் அறை மாற்றி இருந்தனர். அவன் உறங்கி கொண்டு இருந்தான்.

செவிலியர்: “அவரு தூங்குறார், தொந்தரவு செய்ய வேண்டாம். ராத்திரி முழுக்க தூங்காம அழுது இருக்கார்.”

அவரிடம் சரி என கூறி அதியும் ராகவ்வும், ஸ்ரீயின் அறை செல்ல ஸ்ரீ உறக்கத்தில் இருந்தான். ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் ஸ்ரீ கண் திறக்க, அதி அவனை பார்த்துக்
கொண்டே அமர்ந்து இருந்தாள். “ஹாய்” என கை காட்ட, ஸ்ரீயின் கண்கள் விரிந்தது.

சிறிது நேரம் எழுத்தில் பேசி விட்டு கிளம்பி வந்தாள். வாரம் ஒரு முறை, வாரம் மூன்று முறை, பின் தினமும் அவனை காண வந்து விடுவாள் அதி, முதலில் அவளின் குடும்பம், படிப்பு, அவளின் விருப்பு, வெறுப்பு என்று சென்ற பேச்சுக்கள் எல்லாம் பின், உரிமையோடு நட்போடு கிண்டல் கேலிகள் என ஆனது, படிப்பு ஒரு பக்கம், ஸ்ரீயின் நட்பு என அதியின் நாட்கள் வேகமாய் கரைந்தது, இதன் இடையில் படிப்பின் பளு காரணமாக ராகவ் அதியோடு உடன் வருவது நின்று இருந்தது, ஸ்டீவ் அதியின் மீது இருந்த நம்பிக்கையில் கொஞ்சம் வேறு வேலைகளில் கவனத்தை திருப்பி இருந்தான்.

ஸ்ரீயின் உடல் நிலை வேகமாய் குணமாகி கொண்டு இருந்தது. அவனின் கை கால்களில் இருந்த காயங்கள் எல்லாம் சரியாகி இருந்தது.

இருவரின் நட்பு, நட்பை தாண்டி காதல் ஆகும் தருணம் வந்தது. இருவரும் அவர்களின் காதல் உணர்ந்தது அப்போது தான்.

அதியை மருத்துவர் அழைத்து இருந்தார். ஸ்ரீயின் உடல்நிலை பற்றி ஆலோசிக்க,

டாக்டர்: “அதி வாங்க, எப்படி இருக்கீங்க, நல்ல இருக்கீங்க தானே? ஸ்ரீ எதுவும் அவர் பத்தி சொன்னாரா?”

அதி: “நான் நல்லா இருக்கேன். ஸ்ரீ எதுவும் சொல்லலை, நீங்க என்னை பார்க்கணும் சொல்லி இருக்கீங்க எதுக்கு?”

டாக்டர்: “அதி நீங்க தான் இப்போ அவரோட கார்டியன் அவருக்கு இப்போ ஒரு முக்கியமான ஆபரேஷன் பண்ணனும், அவர் உடல் நிலை சரியாகி வர இந்த நேரத்தில் செய்றது தான் நல்லது.”

அதி: “பண்ணுங்க டாக்டர், எவ்ளோ பணம் எவ்ளோ கட்டனும் சொல்லுங்க, பே பண்ணிறேன்.”

டாக்டர்: “அதி அமௌண்ட் பே பண்றது அப்புறம், ஆபரேஷன் 85% சதவீதம் அவர் பிழைக்க வாய்ப்பு இல்லை. இது ரொம்ப ரிஸ்கான ஆபரேஷன். அவர் உயிர் போனாலும் போகலாம்.”

அதி : “டாக்டர் என்ன சொல்றீங்க?”

டாக்டர்: “அதி இதுக்கு பெயர் டெட்ராபிளெகிய (Tetraplegia)
இரு கைகளுக்கும் கால்களுக்கும் வரும் முடக்கு வாதம், அதும் இது முழுமையாகத் ஸ்பைனல் கார்டு இஞ்சுரி, சிலருக்கு இடுப்புக்கு கீழே செயல் இழக்கும், சிலருக்கு உடலோட எதாவது ஒரு பக்கம் மட்டும் செயல் இழக்கும், சிலருக்கு உணர்ச்சிகள் இல்லாது போகும், சிலர் எழுந்து நடக்கமா கூட போகலாம், இந்த சிகிச்சை பலன் அளிக்கும் அது நோயாளியின் மன தைரியம் பொறுத்து தான்.”

தெரிந்துக்கொள்ள:

Tetraplegia:

https://www.aans.org/Patients/Neurosurgical-Conditions-and-Treatments/Spinal-Cord-Injury

“நாங்க எங்களோட சிறந்த டாக்டர்கள் கொண்டு தான் இதை செய்ய போறோம், கண்டிப்பா ஸ்ரீ உயிர்க்கு ஆபத்து வராது, ஆனாலும் நூறில் பத்து பேர் உயிர் பிழைக்கிறது கூட இல்லை, இதில் என்ன வேணாலும் ஆகலாம், இதோட முடிவு எங்க கையில் இல்லை. கார்டியன் உங்களுக்கு சொல்ல வேண்டியது என் கடமை. நீங்க சம்மதம் சொல்லி கையெழுத்து போடுங்க, நாங்க முறைப்படி எல்லாத்துக்கும் தயார் ஆகனும்.”

அதி: “சரி டாக்டர்.”

அதிக்கு இதை கேட்ட பின்பு அதிர்ச்சியிலும், பயத்திலும் அவளது
மனோதைரியம் கரைய துடங்கி இருந்தது. ஸ்ரீயின் அறைக்கு செல்ல, அங்கு செவிலியர் எதோ எழுத, ஸ்ரீ அதை வாசித்து கொண்டு இருந்தான்.

ஸ்ரீ அமர்ந்து இருந்த அதியின் கை தொட, அதி சிரித்து என்ன என சைகையில் கேக்க,

ஸ்ரீ: " எனக்கு ஆபரேஷன் எப்போ? ஏன் உன் முகம் இருண்டு போய் இருக்கு? நான் செத்துருவேன் சொன்னாரா டாக்டர்?"

அதி: " நீ எழுந்து நடக்க போற, பேஸ்ட் டீம் உனக்கு சிகிச்சை தர போறாங்க, வர வெள்ளிக்கிழமை ஆபரேஷன்."

ஸ்ரீ: “உன் வார்த்தை தான் அதி என் நம்பிக்கை, என்ன விட உன்னையும் உன் நம்பிக்கையையும் தான் நான் நம்புறேன்.”

அதி: " உன் நம்பிக்கையும் தைரியமும் தான் முக்கியம், உன் எதிர்மறை எண்ணத்தை விட்டு முழுசா நம்பு ஸ்ரீ நீ நடக்க போற"

ஸ்ரீ: " நம்புறேன், கொஞ்சம் சிரி அதி, உன் கண்ணு இன்னிக்கி எதோ மறைக்குது, வாய் பேசாத குறையை உன் கண் பேசி சரி பண்ணும் எப்பவும், இன்னிக்கி உன் கண்ணுல மௌனம் ஏன்?"

அதி: “டயர்ட் ஸ்ரீ, சரி நான் கிளம்புறேன், நாளைக்கு பார்ப்போம்.”

ஸ்ரீ: “சரி எஞ்சல்”

அதி அவளின் வீடு திரும்பும் போது அவளுக்காக ராகவ் இரவு உணவு செய்து காத்து இருக்க, அவனை கண்டதும் அவனை கட்டிக்கொண்டு அழுதாள் அதி.

விவரம் அனைத்தும் அறிந்து கொண்டு பின்,

ராகவ்: “எதுக்கு இப்போ அழுகுற? நீயே அழுது அவனை கொன்னுரு சரியா? நீ தர தைரியம் தான் அவன் இவளோ தூரம் வந்து இருக்கான், இப்போ என்ன? அவன் செத்து போய்டுவான் டாக்டர் சொல்லலை, அதுவும் நடக்கலாம் சொல்லி இருக்காங்க, தப்பா எதும் ஆகாது நம்பு, நாளைக்கு போய் முறைப்படி எல்லாம் செய், ஸ்டீவ் ப்ரோக்கு சொல்லிரு, தேவை இல்லாம எதையும் யோசிக்காத, உன் எண்ணங்கள் தான் எல்லாம் செய்யும் அதை சரி பண்ணு.”

அடுத்த நாள் அதி கையெழுத்து போட மேலே இறைவனும் இவர்கள் தலையெழுத்தை எழுதி இருந்தான்.

:purple_heart:

அத்தியாயம் 20

வியாழன் இரவு,

அதியும் ராகவ்வும் ஸ்ரீ காண வந்து இருந்தனர். ராகவ் அதி உடன் வருவதோடு சரி, தன்னை விட்டு அதி புதிதாக ஸ்ரீயிடம் நட்பு பாராட்டுவது அவனுக்கு எதோ கோவத்தை தந்து இருந்தது. அதனால் ஸ்ரீயிடம், ராகவ் பெரிதாக உரையாடுவது கிடையாது. அவன் மருத்துவமனையின் பூங்காவில் அமர்ந்து கொள்வான். அதி மட்டுமே ஸ்ரீயிடம் பேசிவிட்டு வருவாள். அன்றும் அப்படியே நடக்க,

ஸ்ரீ: “நாளைக்கு ஆபரேஷன் பயமா இருக்கு அதி”

அதி: “எதுக்கு பயம்? நீ நடக்க போற அதை நான் பார்க்க போறேன், உன் முகம் மட்டும் தான் இன்னும் சரி ஆகனும், அதுவும் ஆனதும் நீ உன் வீட்டுக்கு போலாம், நான் சந்தோசமா இருக்கேன், உன் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்க்கலாம். உனக்கு எதுக்கு பயமும் கவலையும்?”

ஸ்ரீ: “தெரியல, நான் செத்து போய்ட்டா கவலை இல்லை, மொத்தமா அசையாம போய்ட்டா? உனக்கு சுமை ஆகிற கூடாது இல்லையா?”

அதி: “இனி இப்படி பேசினா உன்னை என்ன செய்வேன் தெரியாது, நான் உன் ப்ரெண்ட் ஸ்ரீ, ஏன் இப்படி பேசற?”

ஸ்ரீ: “சரி, இனி இப்படி பேசமாட்டேன், உன்னை விட்டு பிரிந்து போகனும், அதுவும் கஷ்டம் தான். என்னை மறந்துருவ தானே, உன் கடமை முடிஞ்சது இல்லையா?”

அதி: “ஸ்ரீ என்ன இது? உன்னை மறக்க முடியுமா? நீ ஏன் என்னை விட்டு பிரிந்து போகனும்? என் வீட்டுக்கு வா ஸ்டான்போர்ட்க்கு, இல்லை இந்தியா வா அங்க என் அம்மா, அண்ணா, தம்பி, அண்ணி, இப்படி எல்லாரும் இருக்கோம். எப்போ வேணாலும் வரலாம் நீ, கவலையை விடு.”

ஸ்ரீ: “சரி அதி.”

இருவரும் எழுதி படித்த படியே பேசிக்கொண்டு இருக்க, அதியை அழைத்தான் ராகவ், அதி அமைதியாய் இருக்க, ஸ்ரீ அவளின் கைகளை முதல் முறை எட்டி பிடித்தான். அவனின் கண்கள் கலங்க அதை பார்த்து அதி, ஆபரேஷன் முடிந்து பின் வருவதாக சொல்ல, ராகவ் சிறு முறைப்போடு கிளம்பி சென்றான். ஸ்டீவ் வந்து இருந்தார் அதியின் உடன் இருக்க, அவரும் அறையின் வெளியே இருக்க, அதி உணவு கூட உண்ணாமல் அவனின் அருகில் இருந்தாள். அவனோ தூக்க மருந்து வேண்டாம் என்று கூறி விட்டு அதியின் முகம் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அதி: “தூங்கு நான் இங்கே தான் இருப்பேன், உனக்கு ரெஸ்ட் வேணும்.”

ஸ்ரீ: “இல்ல ரெஸ்ட் தேவையில்லை, நாளைக்கு நான் இறந்தும் போகலாம், அதுனால கொஞ்சம் முழிச்சு இருக்கேன். அதி எனக்கு இப்போ நடக்கணும் போல ஆசையா இருக்கு, என் பிரெண்ட்ஸ் பார்க்கணும், என் நாய்க்குட்டி, என் வீடு, என் அப்பா அம்மா ஃபோட்டோ இப்படி எல்லாம் பார்க்க, என் படுக்கையில் ஒரு முறை தூங்க, எதாவது சாப்பிடணும் தோணுது, ஒருமுறை வானம், நிலா, பூ பார்க்கனும் போல இருக்கு, ஆனால் உயிரோட இருந்தும் இது எதுவும் செய்ய முடியாத பிணமா இருக்கேன்.”

அதி: “ஸ்ரீ ஏன் இப்படி எல்லாம் பேசற, என்னை பாரு நீ தைரியமா இருக்கணும், நீ சொன்னதெல்லாம் செய்வ கண்டிப்பா”

ஸ்ரீ: “என்னை சொல்ல விடு பிளீஸ் மனசுல உள்ள எல்லாத்தையும் சொல்லணும் எனக்கு”

அதி: “சொல்லு ஸ்ரீ”

ஸ்ரீ: " என்கிட்ட பணம் அதிகம் அதி, பொறுப்பு இல்லாம இருந்தேன், எனக்கு படிப்பு, வசதி, பணம், எல்லாம் குடுத்த கடவுள் சொந்தத்தை தரல. அப்பா அம்மா இல்லாம, சித்தப்பா இருந்தும் அனாதையா தான் வளர்ந்தேன். எல்லாமே ப்ரெண்ட்ஸ் தான், அவங்க தான் எனக்கு எல்லாம். "

“நான் ஆசைப்பட்டது எல்லாமே என் கைக்கு கிடைச்சுரும், நான் எதுக்கும் கவலை பட்டதேயில்லை, என் விருப்பம் தான் முக்கியம். எனக்காக தான் எல்லாரும் எல்லாம் செஞ்சு இருக்காங்க, நான் அவங்களுக்கு இதுவரை எதுமே செய்தது இல்லை, சுயநலவாதியா வாழ்ந்து இருக்கேன், இப்போ குற்ற உணர்ச்சி கொள்ளுது அதி.”

“நான் நல்லா இருந்த அப்போ இதெல்லாம் பெருசா தெரியுல, இப்போ எனக்கு இதெல்லாம் பெருசா தெரியுது, திரும்ப கிடைக்காதனு இருக்கு”

அதி: " ஒன்னும் இல்ல, எல்லாம் சரி ஆகும், நீ உடம்பு சரியான அப்புறம் உங்க ஊருக்கு திரும்பி போய் எல்லாருக்கும் என்ன எல்லாம் செய்யனுமோ அதெல்லாம் செய்ய போற பாரு, உன் கடமையை எல்லாம் செஞ்சிட்டு தான் என்னை பார்க்க வரணும் அதுவரை உன்னை பார்க்க நானும் வர மாட்டேன்."

ஸ்ரீ: “கண்டிப்பா திருப்பி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைச்சா, என் கடமையை செய்யாம விட மாட்டேன்.”

அதி: " ஸ்ரீ, நீ வீட்டுக்கு போக தான் போற, உன் கடமை, ஆசை எல்லாம் நிறைவேற தான் போகுது. ஆனா இனிமேல் உனக்காக எந்த ஒரு வாய்ப்பு வந்தாலும் அதை முழுசா உபயோகப்படுத்து சரியா?"

"நம்ம எல்லாரும் இப்படி தான் ஸ்ரீ மாதிரி, இருக்கும் போதும் நம்ம கையில இருக்கற எதையும் மதிக்காம, அதை இழந்துட்டு, திரும்ப ஒரு வாய்ப்பு கிடைக்குமா ஏங்கிக்கிட்டு இருக்கோம்."
(Appreciate the things, what you have. / உங்களிடம் உள்ளவற்றைப் பாராட்டுங்கள்.) - மீ

ஸ்ரீ: “சரி அதி, இப்போ கொஞ்சம் நல்லா இருக்கு, அழுகையா வருது, உங்க எல்லாரையும் விட்டு தனியா போய்ருவனோனு பயமா இருக்கு”

அதி: " திருப்பி அங்கேயே வந்துட்டா நீ, தூங்கு நீ, எனக்கு தூக்கம் வருது."

ஸ்ரீ: " என்னை விட்டு போகாதே அதி"

ஸ்ரீ அவளின் கைகளை பிடிக்க, அவனின் கை நடுங்கி கொண்டு இருந்தது, அவனின் கரத்தை அவள் கரம் சேர்த்து அருகில் அமர்ந்து கொண்டாள். ஸ்ரீ அவளை பார்த்த படியே உறங்கி போனான். விடியும் வரை அவளும் நகரவில்லை, அவனும் அவள் கரம் விட வில்லை, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே அதி அவனது கை விடாது உறங்கி இருந்தாள். அவளின் அருகாமை தந்த நிம்மதியில் அவனும் உறங்கி கொண்டு இருந்தான்.

முதலில் விழித்தது அவன் தான். இரவு ஒரு நொடியும் கை விடாது உறங்கி கொண்டு இருந்தவளை, பார்க்க பார்க்க அவனுக்குள் வேதனை.

ஸ்ரீ மனதிற்குள் ’ எங்க இருந்து வந்த அதி நீ? ஏன் என் மேல இவளோ அன்பு? நம்பிக்கை? என்ன உறவு நமக்குள்ள? எனக்கு ஆசையா இருக்கு உயிரோட இருக்க, உன்னை பார்த்துட்டே இருக்க, உன் சிரிப்பு, கள்ளம் இல்லாத உன்னோட மனசு எல்லாம் எனக்கு வேணும்.’

‘நட்பை தாண்டி நான் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன் அதி உன்னை, தப்பு தான் எனக்கு உதவி பண்ண வந்த உன்னை இப்படி நினைக்க கூடாது, என்மேல உனக்கு காதல் இருக்கா? இல்லை இது வெறும் கருணை மட்டும் தானா? எதுவா இருந்தாலும் என்னால் இனி நீ இல்லாம இருக்க முடியாது.’

ஸ்ரீ கை விலக்காது அவளை பார்த்துகொண்டு இருந்தான். அதி தூக்கம் விலகி கண் விழிக்க, ஸ்ரீ அவளை பார்த்துகொண்டு இருக்க அதியும் அவனை இமைக்காது பார்த்துக்கொண்டே இருந்தாள். ஸ்டீவ் உள்ளே வர கை விலகி அதி எழுந்து நிற்க, அவளது வலது கை மிகவும் வலித்தது. கைகளை உதறி விட்டு ஸ்டீவ்விடம் திரும்ப,

ஸ்டீவ்: “அதி நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா, ஆபரேஷன் இன்னும் நாலு மணி நேரம் இருக்கு, நைட் சாப்பிடலையே நீ, இப்போவது சாப்பிட்டு வா சரியா?”

அதி: “சரி அண்ணா.”

ஸ்ரீ அவளை பார்த்துக்கொண்டே இருந்தான் இன்னமும், அவனிடம் சொல்லி விட்டு விடைபெற்று சென்றாள் அதி.

ஸ்டீவ்: “ஸ்ரீ காதலா? உனக்கும் அதிக்கும்?”

திடீர் என ஸ்டீவ் இப்படி கேக்கவும் ஸ்ரீ என்ன சொல்வது என்று குழம்பினான்.

ஸ்ரீ: “நான் இன்னும் தெளிவு ஆகலை, இது காதலா தான் இருக்கணும். என் உணர்வுகள் அவளுக்கு தான் புரியுது, அவ இல்லாம என்னால இனி இருக்க முடியுமா தெரியல, ஆன எனக்கு இது பேராசை இல்லையா?”

ஸ்டீவ்: “ம்ம், சரி நான் இதை எப்படி சொல்றதுன்னு நினைச்சேன் நீ தெளிவா தான் இருக்க, உனக்கே தெரியுது இல்லையா ஸ்ரீ? இது பேராசை தான்னு, உன்னை தப்பு சொல்ல மாட்டேன் ஸ்ரீ, ஆனா அவ வாழ வேண்டிய பொண்ணு.”

" உன் காதல் உண்மையானதா இருக்கலாம், அதுக்காக அதி வாழ்க்கையை அழிக்க முடியாது, நீ எப்படி இருக்க இப்போ உனக்கு தெரியும், உன் நட்புக்கு சுமையாக நினைக்காத நீ அதிக்கு சுமை ஆகிராத, உன் காதல் சுமை தான். நீ எழுந்து நடக்காத வரை"

“அவளுக்கு துணையா நீ இருக்கணும், அழகு, அந்தஸ்து, பணம் எல்லாம் வரும் போகும். இதை உன்கிட்ட அதியோட அண்ணான கேக்குறேன். நீ முழுசா குணம் ஆகர வரை அவகிட்ட உன் காதலை சொல்ல கூடாது சரியா?”

ஸ்ரீ: " நீங்க சொல்றது சரி தான், அவ வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன் நம்புங்க, நான் முழுசா குணம் ஆன அப்புறம் தான் என் காதலை அவளுக்கு சொல்வேன், இது உங்களுக்கு தர வாக்கு"

அவனை ஆபரேஷன் தயார் செய்ய, செவிலியர்கள் வர, ஸ்டீவ் வெளியில் வந்தான்.

ஸ்டீவ் மனதிற்குள் ’ ரெண்டு பேரும் கண்ணால தானே காதல் பேசுறாங்க, இவன் வாய் திறந்து சொல்றதுக்கு முன்னாடி இவன் கண்ணு சொல்லிரும் போல, தப்பு பண்ணிட்டேன் என் வேலையில் அதியை சரியா கவனிக்காம விட்டேன். நிஷாந்த் இதை எப்படி எடுப்பான் தெரியல சரியான நேரத்தில் சொல்லி எச்சரிக்கை செய்யணும்.’

அதி வந்து ஸ்ரீக்கு தைரியம் சொல்லி அனுப்பி விட்டு, அவளின் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு இருந்தாள். நான்கு மணி நேர சிகிச்சைக்கு பிறகு ஸ்ரீ அவனின் அறைக்கு மாற்றப்பட்டு, அவனை காண அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அவனின் முதுகு தண்டில் காயம் ஆரும் வரை அவனுக்கு மருந்தும் உறக்கமும் தான்.

பிரிவு துயரில் அதி, மெலிந்து போய் இருந்தாள். ஒரு முறை அவனை தூங்கும் போது பார்த்து வந்ததோடு சரி, எப்போது காண்போம் என்று இருந்தது அவளுக்கு, கடமையே என அவள் அனைத்தையும் செய்து கொண்டு இருந்தாள்.

அப்போது ஒரு நாள் ராகவ் அவனோடு லைப்ரரி வந்து உடன் உதவுமாறு கூறி இருந்தான், அதியும் சரி என கூறி இருந்தாள். மதிய வேளையில் அவனின் நினைப்பு வர, அங்கு சென்று விட்டாள். மாலை வீடு வந்து சேர்ந்து அதி அறையில் முடங்கி இருக்க, அங்கே வந்த ராகவ்,

ராகவ்: “எங்க போன?”

அதி: “ஹாஸ்பிடல்”

ராகவ்: “சரி, சாப்பிட்டு தூங்கு”

அதி: “நீ சாப்பிட்டயா?”

ராகவ்: “உனக்கு என் நினைப்பு இருக்க?”

அதி: “ராகவ் பிளீஸ்”

ராகவ்: “பிளீஸ் என்ன பேச வெக்கதா, உனக்கு அவன் மேல பைத்தியம் புடிச்சு இருக்கு இல்லையா? எதுக்கு வந்த இங்க? படிக்க தானே? இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு படிப்பு முடிய, உன்னை லைப்ரரி வா சொல்லி இருந்தேன் இல்லையா? நீ உன் இஷ்டம் போல ஹாஸ்பிடல் போய்ட்டு வர, அதும் எனக்கு சொல்லாம, என்னாச்சு அதி உனக்கு?”

அதி முகம் மூடி அழுதாள், அவள் கதறி கதறி அழுக, ராகவ் பயந்து போய் அவளை சமாதானம் செய்ய,

அதி: “எனக்கு ஸ்ரீ கூட பேசணும், அவனுக்கு ஆபரேஷன் சக்ஸஸ், ஆன இன்னும் ஆழ்ந்த மயக்கத்துல இருக்கான். அவனை ரொம்ப மிஸ் பண்றேன் ராகவ், தினம் நான் அவனை பார்க்க போன அவன் கண்ணு விரியும் சந்தோசமா, இப்போ கண் மூடியே இருக்கான். எனக்கு என் ஸ்ரீ வேணும், அவன் பேசாம, அவன் என்னை பார்க்காம எதோ என்ன விட்டு போன மாதிரி இருக்கு”

அதி கூறியதை கேட்டு, ராகவ் அதிர்ச்சியில் இருந்தான். மெல்ல அவனுக்கு அவளின் வார்த்தைகளின் அர்த்தம் புரிய அவனுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் தான்.

ராகவ்: “அதி, நீ ஸ்ரீ… ஸ்ரீயை லவ் பண்ணியா?”

அதி: “…”

ராகவ்: " சொல்லு அதி"

அதி: " ஆமா, எனக்கே ஆபரேஷன் அப்போ தான் தெரிஞ்சுது, அவன் இல்லாத வெறுமை என் காதலை எனக்கு புரிய வெச்சு இருக்கு"

ராகவ்: “ஸ்ரீயுமா?”

அதி: " தெரியுல, ஆன அவன் கண்ணு அப்போ அப்போ எதோ சொல்லும்,
அவன் கண் திறந்து என்னை பார்த்ததும் சொல்லணும் இருக்கேன்"

ராகவ்: " இது சரி வருமா அதி? அண்ணா, அம்மா எப்படி எடுத்துப்பாங்க தெரியுல"

அதி: " இதுவரை எல்லாம் எனக்கு அம்மா இஷ்டம் தான் ராகவ், அவங்க சொன்ன ஸ்கூல், காலேஜ், படிப்பு, என் வாழ்க்கையில் எல்லாமே அம்மா இஷ்டம் போல தான் நான் இருந்து இருக்கேன், முதல் முறை எனக்காக என் ஸ்ரீ கேக்க போறேன், கண்டிப்பா அம்மா சரின்னு சொல்லுவாங்க"

ராகவ்: “சரி அவன் இது வரை உன்கிட்ட எந்த விவரமும் சொல்லவே இல்ல, எதேதோ சொன்னவன், அவனை பத்தி எதுவும் சொல்லவே இல்லை, அவனை போய் எப்படி நீ? சாரி அதி”

அதி: " நீ சொல்றது சரி தான் ராகவ், அவன் இப்போ அவனோட நிலைமை யாருக்கும் சுமை ஆக கூடாதுன்னு சொல்லவே இல்லை, இனி எழுந்து நடக்க போறானே எல்லாம் சொல்லிருவான்"

ராகவ்: " அதி, அவன் நம்ம நட்பை பிரிச்சுருவான? என்னை விட உனக்கு இப்போ அவன் தானே முக்கியம்?"

அதி: “லூசு, எருமை, நீ என் நட்பு டா, உன்னை வேண்டாம் சொன்ன அவனும் எனக்கு வேண்டாம், எனக்கு ரெண்டு பேரும் முக்கியம், அவனா நீயா ஒரு நாள் வந்தா, அவனை விட்டு உன்கூட வந்துருவேன். ஆனா ஸ்ரீ உன்கிட்ட சண்டை போட மாட்டான், என்னை உனக்கு விட்டு தந்துருவான்.”

ராகவ்: " அவ்ளோ புரிஞ்சு வெச்சு இருக்கியா அவனை? சரி போதும். முகத்தை பாரு, குளிச்சுட்டு வா சாப்பிடலாம். இட்லி உனக்கு பிடிச்சா தக்காளி குருமா, செஞ்சு வெக்குறேன்."

மூன்று நாள் பிறகு, ஸ்ரீயை பார்க்க அனுமதி கிடைக்க, அவனை காண
மஞ்சள் பிங்க் டாப், ப்ளாக் ஜீன்ஸ் என அழகு ஓவியமாய் ஆவலோடு கிளம்பி கொண்டு இருந்தாள். அவளின் கண்களில் இருந்த மகிழ்ச்சி பார்த்து ராகவ் அவளை கிண்டல் செய்து கொண்டே பயணம் செய்து மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.

அதி: " பயமா இருக்கு டா ராகவ்"

ராகவ்: " இப்போவே பயந்தா எப்படி?தைரியமா போய் சொல்லு, ஒன்னும் ஆகாது, எப்படியும் ஒரு நாள் உன் காதலை சொல்லி தானே ஆகனும்."

அதி அவன் அறை முன் சில நிமிடம் நின்று தயங்கி பின் உள்ளே சென்றாள்.

:purple_heart:

1 Like