என் வாழ்வே நீ யவ்வனா-3

என் வாழ்வே நீ யவ்வனா-3
0

அத்தியாயம்-3
மணி ஆறரைத்தொடவும் தன் கைப்பையை எடுத்தக் கொண்டு கிளம்ப எத்தனித்தவளை,

“என்ன விளையாடுறீங்களா…”

என்ற விநாயகத்தின் கர்ஜனையான குரல் தடுத்து நிறுத்தியது.

வாசலில் நின்று அலைபேசியில் யாருடனோ கோபமாய் உரையாடுவதை கண்டவள் காலையில் எடுத்திருந்த உறுதியை மறந்து அவர் பேச்சை நின்று கவனித்தாள்.

“நேத்து நைட்டே உன்னுட்ட சேர்க்க வேண்டியதை சேர்த்துட்டேன் பரமா…இனி அது உன்னோட பொறுப்பு…நீ தொலச்சிட்டு என்மேல் பழிப்போட நினைச்ச…நான் மனுஷனா இருக்க மாட்டேன்…”

என்று உச்சகட்ட கோபத்தில் உறுமிய விநாயகத்திற்கு சுற்றத்தை பற்றியோ தான் இருக்கும் இடம் பற்றியோ சிறிதும் நினைவில்லை.

“…”

“என்னது…ஹோமியோவா…யோவ் அதெல்லாம் நான் எதுவும் வைக்கல…எப்படி பேக் மாறும்…ஐயாக்கு விசயம் தெரிஞ்சிது உன்னோட என்னையும் பொலிப்போட்டுருவாரு…”

“…”

மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ கோபமாய் அலைப்பை துண்டித்தவன் படபடவென அலைபேசியாலே தன் கையில் தட்டி டென்ஷனை குறைக்க முயன்றான்.
பின் ஏதோ தோன்றியவராய் சட்டென்று பார்வையை உயர்த்தி பார்க்க அதுவரை அவரையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த யவ்வனா விநாயகம் திடீரென பார்க்கவும் திருதிருவென விழித்தாள்.

அவள் பார்வையும் உடல்மொழியில் தெரிந்த பதற்றமும் அவளை காட்டி கொடுத்தது.

“யவ்வனா இங்க வா…”
என்று அதட்டலாய் அழைக்க வெடவெடத்துப் போனவள் அருகில் வந்து,

“எ-என்ன அண்ணே…”

என்றாள் அலைபாயும் விழிகளோடு…

“எதுக்கு என்ன பார்த்து பதறுற…எதை மறைக்க நினைக்கிற…”

என்று அழுத்தமாய் நேரடியாக கேட்க,

“அப்படி…அப்படிலா ஒன்னும் இல்ல அண்ணா…எனக்கு எதுவும் தெரியாது…”

என்று அவள் தட்டு தடுமாறி சொல்ல,

“நான் ரொம்ப காண்டுல இருக்கேன்…ஒழுங்க உண்மைய சொல்லு…இல்ல நடக்குறதே வேற…”
என்ற அவன் உறுமலில் கண்கள் இரண்டும் கலங்கிவிட,

“சத்தியமா…பணத்தை பத்தி எனக்கு எதுவும் தெரியாது அண்ணே…”
என்றாள் அழுகையின் ஊடே…

சுற்றி ஒருமுறை பார்த்தவர் அவளை தரதரவென இழுத்துக் கொண்டு தன் அறையுள் தள்ளிவிட தடுமாறி கீழே விழுந்தவள் பார்வையில் ரூத்ரமூரத்தியாய் காட்சியளித்தார் விநாயகம்.

“நான் பணத்தை பத்தி கேட்கவே இல்லையே…நீயா சொல்ற…உண்மைய சொல்லுடி…பணம் எங்க…”

“எனக்கு எதுவும் தெரியாது…சத்தியமா தெரியாது அண்ணா…”

என்று அவள் முடிக்கும் போது பளீர் என்று கன்னத்தில் ஒரு அறைவிழ அதிர்ந்து விழித்தாள்.

“பொய் சொன்ன…மவளே தொலச்சி கட்டிருவேன்…நான் பணம் பை இங்க வைத்து நேத்து கைமாறுற வரைக்கும் கடை பசங்க யாரும் இல்ல உன்னை தவிர…நேத்து நீ உள்ளேந்து திருதிருனு வந்தபோதே எனக்கு உறுத்துச்சு…உன்னை நம்பி சந்தேகப்படாமல் விட்டுடேன்…அதுக்கு நல்லா காட்டிடே…ஒழுங்கு மரியாதையா சொல்லுடி…”
என்று முடியை பிடித்து தூக்க வலியில் கத்தினாள் யவ்வனா.

“சொல்லிடுறேன்…சொல்லிடுறேன்”
என்று அலறியவள் தேம்பியபடி நேற்று நடந்ததை அப்படியே சொன்னாள்.

“அப்போ பேக் மாறிப் போயிடுச்சு…அப்படி தானே…சரி வா…வந்து எங்க வைச்சேனு காட்டு…”
என்று அவளை இழுத்து செல்ல முகம் சிவக்க அழுது நிற்கும் அவள் கோலத்தை கண்டு மற்றவர்கள் “என்னாச்சு…”
என்று அருகில் வர,

“டேய்…எவனும் வரகூடாது…கிளம்புங்க…”
என்று புலியாய் விநாயகம் கர்ஜித்ததில் 'என்ன ஏதென்று கேட்டால் தங்கள் வேலைக்கு ஆபத்து என்று புரிந்து வெளியேறிவிட அங்கே மிஞ்சியது அவளும் விநாயகமும் மட்டுமே…

“ம்ம்…போ…எங்கேயோ மாத்தி வைச்சேனு சொன்னியே… போய் எடுத்துக் காட்டு…”

என்று சொல்ல அவசரமாய் ஓடிச் சென்று அலமாரியை திறந்தவள் கீழ் தட்டில் தேட அங்கே அந்த ட்ராவல் பேக் இல்லை!!!

தலையே சுற்றுவது போல் இருக்க அழுத்த பிடித்துக் கொண்டவள் மீண்டும் முழு அலமாரியையும் தேட அப்பை இருந்ததற்கான சுவடே இல்லை.

“நீ தானே சொன்னே ரெண்டு பேக் இருந்துதுனு…ஒன்னு நான் கொடுத்துட்டேன்…இன்னொன்னு எங்கே…”

“அண்ணே…இங்க தானே இருந்துச்சு…”
என்று நடுங்கும் குரலோடு சொல்ல,

“என்னை பார்த்த பைத்தியம் மாதிரி இருக்கா…வச்ச எனக்கு தெரியாதா…இங்க நான் வச்சது ஒரு பேக் தான்…அதில் உள்ள பணத்தை எடுத்துட்டு வேற ஏதோ நோட்டீஸால நிரம்பிட்டு செந்தில் மாதிரி 'அந்த பழம் தானே இதுனு…’ நக்கல் பண்றீயா…”
என்று ஆத்திரமாய் கத்தினார்.

“எனக்கு தெரியாது அண்ணே…”
என்று அவள் மீண்டும் சொன்னபோது கோபம் தலைக்கேற ஓங்கி வைத்த ஒரு அறையில் சுருண்டு விழுந்தாள் யவ்வனா.

மீண்டும் அவளுக்கு நினைவு திரும்பிய போது அவள் விழுந்தபோது இருந்த நிலையிலேயே இருந்தாள்.

சற்றும் நகராமல் பார்வையை மட்டும் லேசாக உயர்த்தி பார்க்க விநாயகத்தோடு இன்னும் சில தடியர்களும் அங்காங்கே நின்றிருக்க விநாயகத்தின் முன் அவரைவிட இருமடங்கு கோபத்துடன் வெள்ளை வேட்டி சட்டையில் நின்றிருந்தார் மற்றொருவர்.யாரின் கவனமும் அவளிடம் இல்லை.

“பணம் விசயத்துல இவ்வளவு அஜாக்கிரதையாவா இருப்ப.ஆயிரம்,லட்சம் இல்லடா கோடி…சொலையா இரண்டு கோடி…நீ ஈஸியா கடையில் வச்சேன்…தோ இவ திருடிட்டானு கதை சொல்ற…அறிவில்ல…”

(ஏது ரெண்டு கோடியா….யோவ் நான் ரெண்டு ஆயிரத்துக்கே வாய பொலக்குற கேஸுயா…)

“அய்யோ பரமா…வீட்டில் வைச்சா
என் பொண்டாட்டி கண்டுபிடிச்சிடுவா…அவளுக்கு தெரியாம மறைக்க தான் இங்க கடையில வைச்சேன்…மத்த பசங்களல நம்ப முடியாம தான் எவனையும் பணம் இருக்குற வரை கடைப்பக்கமே வர விடலை…ஆனால் இந்த அமுகுனி இப்படி பண்ணுவானு நினைக்கலடா…வேலை இல்ல குடும்ப கஷ்டமுனு நின்னவளுக்கு போனா போகுதுனு வேலை போட்டு கொடுத்தாள் இந்த நாய் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிடுச்சு…”

(ம்க்கும்…உழைச்ச சோறே உடம்புல ஒட்ட மாட்டேங்குது…இதுல ஊறான் வீட்டு காசு எனகெதுக்கு ய்யயா…)

“எனக்கு உன்மேல தான் டவுட்டா இருக்கு விநாயகா…பணத்துக்கு ஆசைப்பட்டு டபுள் கேம் ஆடுறீயா…”

“(எனக்கும் அதே சந்தேகம் தான்…)

“டேய்…தலைவரு பத்தி தெரிஞ்சும் நான் அப்படி செய்வேனா… எந்தளவுக்கு அவருக்கு வேலை செஞ்சா அள்ளி கொடுப்பாரோ அதே போல அவரை ஏமாத்த நினைச்சாலே பரலோகம் தான்னு தெரியாதா எனக்கு…”

“இந்நேரம் பணமும் அந்த பய ஃபோட்டோவும் நரசிமன் கைக்கு போகலனு தெரிந்திருக்கும்…போட்டோகூட பிரச்சனை இல்லை…வாட்ஸப்பில் அனுப்பிக்கலாம்…ஆனால் பணம்…???விசயம் தலைவர் காதுக்கு போனதும் அந்த பையன போடுறதுக்கு முன்னாடி நாம போய் சேர வேண்டியது தான்…நீ 'இந்த பொண்ணு உரிச்சு தொங்க விடுவியோ இல்ல என்ன பண்ணுவியோ தெரியாது…அந்த ஃபோட்டோவும் பணமும் வந்தே ஆகணும்…”

“(அட…கொலகார பாவீங்களா…இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நிச்சயம் உயிருக்கு உத்தரவாதம் இல்ல…கடவுளே என்னை இவனுங்களுட்ட மாட்டிவிட்டியே…உனக்கே இது நியாயமா…”

என்று மானசீகமாய் புலம்பியவள் தன்னை சுற்றி ஆராய அவளுக்கு முன் ஒரு பேப்பர் வெய்ட் கிடப்பதை கண்டவள் வெளியே செல்லும் கதவை பார்த்துவிட்டு நொடியில் தான் செய்ய வேண்டியதை முடிவெடுத்தாள்.

மெல்ல கையை மட்டும் நீட்டி அதனை எடுத்தவள் தனக்கு நேரெதிரே சுவரோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டப்பாக்களின் மீது ஓங்கி வீச நிலைத்தடுமாறி படபடவென அனைத்தும் விழுந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

அவள் பழையபடி மயங்கிய தோரணையில் படுத்துவிட்டாள்.

சிதறிக்கிடந்த பொருட்களை கண்டு,

“ஷ்ஷ்…குப்ப மாதிரி அடுக்கி போடாதீங்கடானு சொன்ன கேட்குறானுங்களா…ஒருவேலை உருபடியா செய்றதில்ல…ம்ச்…டேய் பசங்களா…அந்த டப்பாவெல்லாம் கொஞ்சம் ஓரமா அடுக்கி போடுங்கடா…”

என்று வாயிலின் புறம் நின்ற இரண்டு தடியர்களையும் ஏவிய விநாயகம் மீண்டும் 'அடுத்து என்ன செய்வது…’ என்பதை குறித்து பரமனுடன் தீவரமாய் பேச்சில் ஈடுபட யாரின் கவனமும் தன்மீது ஈர்க்கா வண்ணம் பொறுமையாய் எழுந்தவள் நான்கே எட்டில் கதவை அடைந்து திறந்துக் கொண்டு வெளியே ஓட,

“ஏய்…நில்லுடி…டேய் அந்த **** தப்பிச்சு ஓடுறா போய் பிடிங்கடா…”

என்று அவளை முதலில் கவனித்த பரமன் ஆத்திரமாய் கத்த அதற்குள் மின்னலென அவள் வெளியேறியிருந்தாள்.

“அப்போ ஓட ஆரம்பிச்சவ தான் நிக்கவே இல்ல…இங்க உங்க வீட்டுக்கு வரவரைக்கும்…அந்த பணத்த யாரு எடுத்தா…இல்ல இவரே எடுத்துகிட்டு என்மேல பழிய போடுறாரா என்ன ஏதுனு ஒன்னும் எனக்கு தெரியாது…ஆனால் நல்ல வசமாய் மாட்டிக்கிட்டேன் மட்டும் புரியுது…நல்ல காலம் என் புதுசா மாறிய வீட்டு அட்ரஸ் எதுவும் விநாயகத்திற்கு தெரியாது…அதனால இப்போதிக்கு என் குடும்பத்திற்கு பிரச்சனை இல்ல…ஆனால் அவங்கள விட்டு கொஞ்ச நாள் தள்ளி இருக்குறது தான் நல்லது…அதுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் அனு மேடம்…”

மரத்த குரலில் தனக்கு நடந்ததை சொல்லிய யவ்வனா இறுதியில் சற்று கெஞ்சலாய் சொல்ல,

“நான் என்ன பண்ண முடியும்…”

“எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல உண்மையா பணத்தை எடுத்தவன கண்டுபிடிச்சிடுவானுங்க…அத்தோடு அந்த 'ஐயா…'வே விநாயகத்தைம் பரமனையும் எதாவது செஞ்சிடுவார்…அதுவரை நான் அவனுங்க கண்ணுல படாமல் இருந்தாலே போதும்…எனக்கு இங்க யாரையும் தெரியாது அனு…ப்ளீஸ் என்னை எப்படியாவது வெளியூருக்கு போக மட்டும் ஹெல்ப் பண்ணுங்க அனு…எங்கே என்றாலும் எனக்கு ஓகே…நான் ஊரைவிட்டு போனாலே போதும்…”

“நானே இன்னும் ரெண்டு நாள்ல இங்கிருந்லு போக போறேன்…இதில் உன்னை எங்கே கொண்டு போய் விடுறது…”

“ஹே…சூப்பர்…நீங்க போற இடத்துக்கே என்னையும் கூட்டிட்டு போங்க மேடம்…ப்ளீஸ்…ப்ளீஸ்…”

“உன்ன யாருனு எனக்கே தெரியாது…என்ன சொல்லி கூட்டிட்டு போவேன்…உன் நிலைமை நினைத்தால் பாவமாய் தான் இருக்கு…ஆனால் உனக்கு உதவும் ச்விச்சுவேஷன்ல நான் இல்ல…வேணுனா இன்னைக்கு ஒரு நைட் தங்கிகோ…அவ்வளவு தான் என்னால பண்ணமுடியும்…”

என்று அனு படபடவென சொல்ல யவ்வனாவின் முகம் ஓர் கசந்த முறுவலை சிந்தியது.

“மனுஷனோட வார்த்தைக்கு நம்பிக்கையே இல்லாம போச்சுல…என் விதி…நீங்க என்ன செய்வீங்க…”

என்று விரக்தியாய் யவ்வனா கூற அதே சமயம் மேசையின் மீது வைக்க பட்டிருந்த அனுவின் அலைபேசி சிணுங்கியது.

திரையில் மின்னிய 'ஹப்பீ…’ என்பதை பார்த்ததும்,

“நீங்க போய் பேசுங்க மேடம்…நான் இங்கனேயே இருக்கேன்…”

என்று சோபாவில் தலை சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள அவளை சில நொடிகள் பார்த்த அனு பின் அழைப்பை ஏற்று நகர்ந்தாள்.

“ஹலோ செல்லம்ஸ்…என்ன பண்ற…பேக்கிங் எல்லாம் முடிச்சாச்சா…”

மறுமுனையில் உற்சாகமாய் ஒலித்தது அவள் கணவன் மனோவின் குரல்.

“ம்ம்…ஆச்சுங்க…நீங்க என்ன பண்றீங்க…சாப்டாச்சா…”

“சாப்டேன்டி பொண்டாட்டி…என் பாப்பா எப்படி இருக்காங்க…என்ன சொல்றாங்க…”
என்று அவன் சொன்னதும்
அனிச்சையாய் அவள் கை தன் வயிற்றில் படர,

“ம்ம்…அவங்களுக்கு என்ன…அமைதியா அவங்க அம்மா வயித்துல தூங்கிட்டு இருக்காங்க…அவங்க அப்பாவை தான் ரொம்ப மிஸ் செய்றாங்களாம்…”

என்றாள் புன்னகையோடு…

“அப்டீங்களா…நானும் தான் என் ரெண்டு பாப்பாவையும் ரொம்பபபபபப மிஸ் பண்றேன்… இன்னும் ஒன் வீக் தான் அப்புறம் உங்கள பார்க்க ஓடோடி வந்திடுவேன்… அதுவரை அவங்க தாத்தா வீட்டில் ஜாலீயா இருங்க…”
என்று அவன் சொன்னதும் மறைந்திருந்த கவலை மீண்டும் தொற்றிக்கொள்ள,

“ஜாலியாவா…??எனக்கு ரொம்ப நர்வஸ்ஸா இருக்கு…மாமா,அத்தை எல்லாரும் என்ன ஏத்துப்பாங்கல்ல…எதாவது திட்டீட்டாங்கனா…”

என்றவளின் குரலில் அந்த தவிப்பு தெரிந்தது.அதற்கு காரணம் உண்டு.

மனோகரும் அனுஷியாவும் இணையத்தில் ஒருவரையொருவர் அறியாமல் அறிமுகமாகி நட்பாகி பின் காதலாய் கசிந்துருகியவர்கள்.

‘வெவ்வேறு வேர்களில் பிறந்த நம் காதல் இணையுமா…’
என்பது போல் தான் இவர்கள் நிலையும்…

அனுஷியாவின் வீட்டில் இவர்கள் காதல் விவகாரம் தெரியவர அவளுக்கு அவசர திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேறு எந்த யோசனையும் இன்றி உடனே பதிவு திருமணம் செய்துக் கொண்டனர்.

சொல்லாமல் கொல்லாமல் மாலையும் கழுத்துமாய் வந்துநின்ற மகனின் செயல் அவன் தந்தை நடராஜனின் கௌரவத்திற்கு பெரும் இழுக்காய் அமைய அவர்களை வீட்டின் உள்ளேயே அனுமதிக்காமல் வாசலோடு அனுப்பிய நடராஜன்
உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமே இல்லை.இனி இந்த ஊரு பக்கமே வரக்கூடாது என்று கூறிவிட முடிவில் இருக்குடும்பத்தாலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

தாய்-தந்தை கோபத்தில் இருந்தாலும் மனோவின் அண்ணன் பிரகாஷ் தன் தம்பியோடு தொடர்பில் தான் இருந்தான்.

இப்படியாக சில மாதங்கள் ஓடிவிட மனோ அலுவலகத்தில் வேலை தொடர்பாக மும்பை சென்ற மறுநாள் அனு கர்ப்பமாய் இருப்பது தெரியவர மகிழ்ச்சியிலும் உடனே ஊருக்கு திரும்ப முடியாத தவிப்பிலும் திக்குமுக்காடி போனான்.

மனோவின் பெற்றோருக்கு தங்கள் ஆசை மகனின் மேல் கொண்ட கோபம் ஒரு மாதத்திலே மறைந்திருந்தாலும் வீம்பாய் இத்தனை நாள் இருந்தவர்கள் இன்று மருமகள் உண்டாகி இருப்பது தெரியவந்ததும் மனம் முற்றிலும் இளகிவிட மனோ இல்லாமல் புள்ளதாச்சி அங்கே தனித்து இருக்கவேண்டாம் என்று கூறி தங்கள் மூத்த மகனையும் மருமகளையும் நல்ல நாள் பார்த்து அழைத்துவர சொல்லிவிட இருவருக்குமே மிகுந்த மகிழ்ச்சி.
இருப்பினும் முதல் முறை புகுந்த வீட்டுக்கு தனியே செல்வதால் அனுவிடம் தயக்கமும் இருந்தது.

“அடடடா…அனும்மா எங்கப்பா அன்னைக்கு கோபத்தில் அவ்வளவு டென்ஷனா பேசினார்.மத்தபடி கோபம் எல்லாம் அப்பாக்கு அதிகமாக வராது.அம்மாவும் அப்படி தான்.ரெண்டு பேருக்கும் நான் அவ்வளவு செல்லம் தெரியுமா…!கண்டிப்பா கோபம் எல்லாம் இந்நேரம் போயே போயிருக்கும்…அதுவும் அம்மாக்கு பாசத்தை மட்டும் தான் காட்ட தெரியும்…ஊருக்கு போனதும் நீயே சொல்லுவ பாரு எங்கத்த ரொம்ப ஸ்வீட்டுனு…”

என்ற மனோவின் ஆறுதல் மொழியில் ஓரளவுக்கு சமாதானமாகிய அனு,

'இந்த பெண்ணை பற்றி சொல்லலாமா…வேண்டாமா…’
என்று தனக்குள்ளே நீயா…நானா நடத்தியவள் மனதில் யவ்வனாவின் கசந்த முறுவல் என்னவோ செய்ய இறுதியில் மனோவிடம் அனைத்தையும் ஒப்புவித்தாள்.

அவள் கூறுவதை பொறுமையாய் கேட்டவன்,

“அந்த பொண்ணு சொல்றதலாம் நம்புறீயா…”

என்று கேட்க,

“வாய் தான் கொஞ்சம் அதிகமாச்சே தவிர அவ பொய் சொல்லலங்க…அவ சொல்றதெல்லாம் உண்மைனு தான் தோணுது…இப்ப கூட அவளுட்ட நாளைக்கு காலைல இங்கிருந்து கிளம்புனு சொல்லிட்டேன் தான்…ஆனால் ஏனோ அவளுக்கு உதவனுனு என் உள்மனசு சொல்லுது…”

“அதுக்கு…”

“பேசாமல் என்கூடவே நாளைக்கு கூட்டிட்டு போகவா…”

“ஏய்…லூசாடி நீ…வீட்டில் என்னானு சொல்றது… அதெல்லாம் வேண்டாம்…வேணுனா கொஞ்சம் பணம் கொடுத்து போறவழியில அந்த பொண்ணு சொன்னா மாதிரி எதாவது ஒரு ஊருக்கு பஸ் ஏத்தி விட்று…மேல எதுவும் இழுத்துக்காத…”

“ஏங்க…வயசு பொண்ணுங்க அப்படி தனியா விட மனசு வரலை…ப்ளீஸ் வீட்டில் உண்மையை சொல்லேனாலும் எதாவது சொல்லி சமாளிங்க உங்களுக்கா சமாளிக்க தெரியாது…”

“உனக்கு ஏன் அனும்மா இந்த தேவையில்லாத வேல…"

என் மன திருப்திகாக ப்ளீஸ்…”

என்று குழந்தையாய் அடம்பிடிப்பவளை என்ன சொல்வது என்று தெரியவில்லை மனோவிற்கு…

சொடக்கிட்டால் அவள் சொல்வதை தலையால் முடிக்கும் அளவு செல்வாக்கு நிறைந்த குடும்பத்தை சேர்ந்தவள் அனைத்தையும் உதறிவிட்டு தன்னை மட்டுமே நம்பி வந்த தன் மனைவி கேட்டு எதற்கும் மறுக்காத அந்த அன்பு கணவனுக்கு இதையும் மறுக்க தோன்றவில்லை.

2 Likes

என் வாழ்வே நீ யவ்வனா-4

நல்ல உறக்கத்தில் இருந்த யவ்வனாவின் நாசியில் காஃபி மனம் கமழ அதனை வாசம் பிடித்தபடி தூக்கத்திலே புரண்டு படுத்தவளின் கையில் 'சுளீரென்று…’ வலி எடுக்க பதறியெழுந்து அமர்ந்து வலித்த இடத்தில் பார்த்தபோது தான் கையில் இருந்த கட்டு நேற்று நடந்தவற்றையும் தான் இருக்கும் இடத்தையும் உணர்த்தியது.

வலித்த இடத்தில் நீவிவிட்டபடி சுற்றும் முற்றும் பார்த்தாள்.நேற்று அமர்ந்திருந்த சோபாவிலே தான் தூங்கியிருப்பது புரிந்தது.ஆனால் எப்பொழுது தூங்கினாள் என்று தெரியவில்லை.

“குட் மார்னிங் யவ்வனா…”

என்று புன்னகைமுகமாய் வந்த அனு,

“யப்பா…நல்ல தூக்கம் போல…எழுப்பினாலும் கொஞ்சம் கூட அசையவே இல்ல…”

என்று சிரித்தவள்,

“நேரா போய் லெஃப்ட் திரும்பினேனா பாத்ரூம்…உனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்…போய் ப்ரெஸாகிட்டு வா… சீக்கிரம் கிளம்பனும்…”

என்று சொல்ல தன்னை கிளப்பிவிடுவதில் முனைப்பாக இருக்கிறாள் என்றே நினைத்தாள்.
இயல்பிலே சற்று கலகலப்பான பெண் தான் யவ்வனா எனினும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத இன்றைய நிலையில் ரொம்பவும் சோர்ந்து காணப்பட்டாள்.பேச்சக்கூட தோன்றவில்லை.
சற்று நேரத்தில் ரெப்ரெஸாகி வந்த யவ்வனா கூடத்தில் அவள் இல்லாததால்,

“அனு மேடம்…”

என்று சத்தமாய் அழைக்க,

“இங்கே இருக்கேன்…வா யவ்வனா…”

என்று அடுபறையில் இருந்து குரல் கேட்க தயக்கதோடே அங்கே செல்ல அனு ஏதோ மும்முரமாய் செய்து கொண்டிருந்தாள்.

“இந்தோ காஃபி வச்சிருக்கேன்…சாப்பிடு…”

கைகள் வேலையாய் இருந்ததால் கண்ணால் காட்ட,

“இல்ல மேடம் வேண்டாம்…உங்க உதவிக்கு ரொம்ப நன்றி மேடம்.நான் வரேன்…”

என்றாள் விடைப்பெரும் விதமாய்…

“போறீயா எங்க…”

“தெரில…கடவுள் விட்ட வழில…”

“அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம்…கடவுள் ஏற்கேனவே உனக்கான வழிய டிசைட் பண்ணிட்டாரு…”

என்றவளை புரியாமல் பார்க்க,

“நீ என்கூட தான் வர போற போதுமா…உன் பிரச்சனை தீர்ரவரை என்னோடவே இருக்கலாம்…”
என்று சிரிப்போடு சொன்னவளை நம்பமுடியாமல் பார்த்தவள்,

“நிஜமாவா மேடம்…”

என்றாள் திக்கிதிணறி…

“உண்மை தான் ம்மா…”
என்றவள் தன்னை பற்றி மேலோட்டமாய் சொல்லி,

“என் வீட்டுகாரு ‘நான் அனீமிக்கா இருக்குறதால…என் ஹெல்த்தை கவனித்துக்கொள்ள ஏற்பாடு செஞ்ச டயடீசியன்னும் உன் கான்ராக்ட் முடியுற வரை என் கூடவே தான் இருக்கணும்னு…’ வீட்டில் எல்லாருக்கும் சொல்லி வச்சிருக்கார்…ஸோ நீயும் அதையே மெய்ன்டைன் பண்ணிக்கோ…”

என்றவளை குழப்பமும் சந்தோஷமும் போட்டிப்போட,

“டயடீசியன்…அப்படினா…என்ன மேடம்…”

என்று அப்பாவியாய் கேட்டவளிடம்,

“நான் என்னெல்லாம் சாப்பிடனும்…எப்யெப்ப சாப்பிடனும்னு.எவ்வளவு சாப்பிடனும்னு என்னை வழி நடத்துறது தான்…டயடீசியன் வேலை…”

என்று அவளுக்கு புரியும்படி கூறினாள்.

“ரொம்ப தேங்க்ஸ் மேடம்…நேத்து நைட் கூட நம்பிக்கையா இருந்தேன்…ஆனால காலைலேந்து அடுத்து எங்க போறது…?என்ன செய்றது…?கையில ஒத்த பைசா இல்ல மேடம்…வீட்டில் என்னை காணாம பதறிப்போய் இருப்பாங்களே அவங்களுக்கு என்ன சொல்றதுனு…? தலையே வெடிக்கிற மாதிரி இருந்தது…இப்ப தான் போன நம்பிக்க வந்த மாதிரி இருக்கு…”

என்று சொன்னவளின் கண்கள் கொஞ்சம் கலங்கிதான் போனது.

“நேத்தி அவ்வளவு இரணகளத்திலையும் கன்னு மாதிரி இருந்துட்டு இன்னைக்கென்ன கண்கலங்கிட்டு இருக்க…இனி ஆக வேண்டியத பாரு… முதல்ல நீ உன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி பத்திரமா இருக்கிறதா சொல்லு…”

என்று அலைபேசியை கொடுத்த அனு யவ்வனாவின் கண்களுக்கு தன்னை காக்க வந்த தேவதையாகவே தெரிந்தாள்.

“இங்க கிட்சனில் டவர் இருக்காது…ஹால்ல போய் கால் பண்ணு…”

என்று அனு சொல்ல உதவி கிடைத்ததில் மனசு இலேசாக மறைந்திருந்த துடுக்குத்தனம் மீண்டும் தலை தூக்கியது.

“அது இருக்கட்டும் மேடம்…வயித்து புள்ளக்காரி எல்லாம் வேலையும் நீயே செஞ்சா பின்ன நான் எதுக்கு…நகருங்க…நான் இதெல்லாம் பார்த்துக்குறேன்…”

என்ற அனுவின் கையிலிருந்த சாரணியை வாங்கியவள் அவள் சமைக்க எடுத்து வைத்திருந்த பொருட்களை ஆராய்ந்தாள்.

“ஆமா…ஒரு கேரக்டர் எடுத்தா…அதாவே மாறிடனும்…மேடம்…உண்மைக்கோ இல்ல சும்மாகிச்சிக்கோ ஆனால் இன்னைலேந்து உங்களை பார்த்துகிறது தான் என் டியூடி…அதனால அப்படியே ஓரமா நின்னு என்னென்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்க…”

அவள் பரபரவென்று கையை தேய்த்தபடி சொன்னதில் சிரித்தவள்,

“ஹாஹா…டயடீசியனா சமையல் செய்றவங்க இல்ல… டாக்டர் மாதிரி…”
என்க,
“அதெல்லாம் எனக்கு தெரியாது மேடம்…அதனால எனக்கு தெரிந்ததை நான் செய்றேன்…சும்மா இல்ல மேடம்…என் ரெண்டக்காகும் பிரசவம் முழுசும் கூடவே இருந்து பார்த்திருககேன்…அதனால இந்த நேரத்தில் என்னென்ன சாப்பிடுவாங்கன்றது தெரியும்…”

என்றாள் வேலையின் மும்முரத்துடன்.

“உன் கடமை உணர்ச்சி யெல்லாம் இருக்கட்டும்…உனக்கு கையில் அடிப்பட்டிருக்கு நியாபகம் இருக்குல்ல…"

என்று சொல்ல,

அட ஏன் மேடம்…வாழ்கையிலே சில அடிகள் விழதான் செய்யும்…அதுக்குனு பொம்மை மாதிரி உட்கார்ந்தேவா இருக்க முடியும்…வகை வகையா செஞ்சி அசத்த வேண்டாம்…”
என்றாள் யவ்வனா.

“பர்ரா…நீ கொடுக்குற பில்டப் பார்த்தால் நல்லா சமைப்பியோ…”

“என்ன இப்படி கேட்டுடீங்க…அறுசுவையும் எனக்கு அத்துப்படி…நீங்க லிஸ்ட் மட்டும் போடுங்க…”

என்றவள் வாய் ஓயாமல் பேசினாலும் சொன்னபடியே நேர்த்தியாய் ஒவ்வொன்றையும் செய்ய அவளை மெச்சுதலாய் பார்த்தாள்.

“ஸ்மெல்லே ஆஸமா இருக்கு…யவ்வா…”

என்று வாசம் பிடித்தபடி சொல்ல,

“டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும்…எங்க அம்மா கை பக்குவம்…”

என்று பெருமையாய் சொன்னவள் பின் சட்டென்று தலையில் கைவைத்து,

“வீட்டுக்கு கால் பண்ணவே இல்ல…எல்லாம் ரொம்ப பயத்துல இருப்பாங்க…மேடம் உங்க ஃபோன் கொடுங்களேன்…”

என்று அவள் அலைபேசியை வாங்கி கொண்டு அப்பாவின் எண்ணிற்கு அழைத்தபடி கூடத்திற்கு நகர்ந்தாள்.

சில நிமடங்களுக்கு பின் கிட்சனை ஒழுங்கு படுத்துவிட்டு வந்த அனு வெளியே காதில் ஃபோனை வைத்தபடி சிலையாய் நின்ற யவ்வனாவை வித்தியாசமாய் பார்த்தவள் தோளில் கை வைத்து உலுக்க திடுக்கிட்டு திரும்பினாள்.

“ஏன்…இப்படி நிக்கிற…வீட்டுக்கு பேசிட்டியா…”

“ஆங்…ம்ம்… பேசிட்டேன்… இந்தாங்க…”

என்று போனை நீட்டியவள் கண்கள் கலங்கியிருந்தது.

அனுவின் பார்வையை உணர்ந்து,

“இல்ல…வீட்டில் எல்லாம் ரொம்ப பயந்து போயிருக்காங்க…அவங்க அழுகவும் எனக்கும்…”
என்றாள் முகத்தை அழுத்த துடைத்தபடி…
ஆனால் விதியோ புது ஆட்டத்தை துவங்கி வைத்ததை எண்ணி பரிகாசமாய் சிரித்தது.

1 Like

என் வாழ்வே நீ யவ்வனா-5
தேன்சோலை என்று கருப்பு நிறத்தில் அந்த மஞ்சள் பலகையில் தீட்டபட்டு அந்த கிராமத்திற்கு வருபவர்களை வரவேற்க அதனை ஏற்றுக் கொண்டு நாமும் செல்வோம்.

தேன்சோலை பெயரைப் போலவே ஊரூம் சோலையாய் பச்சை பசேலென இருப்புறம் இருந்த வயல்களில் பயிர்கள் அதிகாலை தென்றலின் வருடலில் தலையசைத்து மகிழ்ந்தது.

அந்த அதிகாலை பொழுதிலும் ஊரே எழுந்து அவரவர் தொழிலை பார்க்க கிளம்பிவிடதமிழோ அப்பொழுதும் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான்.அரைத்தூக்கத்தில் இருந்தவனின் காதில் அன்னையின் வசவு தன்போக்கில் வந்து விழுந்தது.

“எப்போ போறான்…எப்போ வரான்…ஒன்னும் சொல்றதில்ல…வீட்டில் ஒருத்தி தனியா கிடக்காளே…நமளை காணாம தவிச்சிட்டு இருப்பாளே…என்ன ஏதுனு சொல்லுவோம்…அந்த அறிவெல்லாம் இருக்கா… எவ்வளவு பெரிய மனுஷனாகி என்ன பிரியோஜம்…பெத்தவ மேல கொஞ்சமாவது அக்கறை இருக்கனும்…ஏதோ சத்திரத்துல இருக்கா மாதிரி…நினைச்சப்ப வரது…நினைச்சப்ப போறது…நான் நித்தம் இவன நினைச்சி வெசன படனும்…இவனுட்ட பேசி இனி பயனில்ல…பெரியய்யாட்டேயே போய் இரண்டுல ஒன்னு கேட்டா தான் இவன் சரிப்பட்டு வருவான்…”

என்று வசுமதி அவனை தாளித்து எடுக்க எரிச்சலோடு எழுந்து வெளியே வந்தவன்,

“ம்மாஆஆஆஆ…இப்போ எதுக்கு சும்மா கத்திட்டு கிடக்க…வேல வெட்டிக்கு போறவன் நாலு எடம் போக வரதான் இருப்பான்…இத ஒரு விசயமுனு பேசிட்டு இருக்க…நீ தனியா இருக்கேனு உன்கூடவே நானும் உக்கார்ந்து கிட்டா சோத்துக்கு என்னா செய்றது…இதுல ஸ்கூல் பையன டீச்சருட்ட மாட்டி விடுறா மாதிரி ஐய்யாட்ட போய் சொல்றேங்குற…”

என்று அவனும் பதிலுக்கு சத்தம் போட அதற்காகவே காத்திருந்தார்ப்போல் முந்தானையை வரிந்துக் கட்டிக் கொண்டு வந்த வசுமதி,

“உன்ன ஒன்னும் ஏன் பக்கத்துல உக்கார்ந்துக்க சொல்லுல ராசா…வெளியே போறவன் இப்போ வருவேன்…இன்னதுனு சொல்லிட்டு போறதுக்கென்ன…திடீர் திடீர்னு காண போயிடுற…ஒத்த மனிஷியா நான் என்ன தான் செய்யட்டும்…இப்ப கூட வெளியூர் போரேனு கிளம்பினவன் நாலு நாளா ஒரு போன் கூட இல்ல…இப்ப திடீர்னு அத்த இராத்திரியில திருடன் மாதிரி வந்து படுத்து கெடக்க…என்ன வேலை செய்யுறேனு கூட தெரியல…ஏதோ… ஐயாட்ட வேல பார்க்கிறங்குற நம்பிக்கை மட்டும் தான் இன்னும் ஆறுதல இருக்கு…”

என்று படபடவென பொரிய தலையில் கைவைத்து,

“காலைலே படுத்தாதம்மா…”

என்றான்.

“ஆமாடா…நான் உன்னை படுத்துறேன் தான்…பேசாம நானும் என் புருஷன் போன மாதிரியே போயிட்டா நிம்மதியா இருப்பல்ல…”

என்று கண்ணை கசக்க தமிழின் மனம் உருகி விட்டது.

“அம்மா…என்னம்மா…பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற…”

என்று கையை பிடித்துக் கொண்டவன்,

“சரி…இப்ப நான் என்ன செய்ய நீயே சொல்லு…”

என்று தணிந்து வந்தான்.

“எனக்கு உன்னோட மல்லு கட்ட முடியல…உனக்கொரு கல்யாணத்த பண்ணி அவ வந்தா தான் நீ வீட்டுல அடங்குவா…நானும் என் மருமக வந்திட்டால் நீ எப்படியோ இருனு நான் அக்கடானு இருப்பேன்… ”

“என்னம்மா…என்னுட்ட சண்டை போட்டு அலுத்து போயிடுச்சுனு… மாமியார்-மருமக சண்டைக்கு ரெடியாகிட்டியா…”

“பிச்சிடுவேன் படவா…என்னை பாத்தா சண்டகாரி போல இருக்கா…”

“சரி…சரி பொங்காத…உனக்கு என்ன விருப்பமோ செய்…நீ யாரை சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்…சரியா முகத்தை மட்டும் தூக்கி வச்சிக்காத…”
என்று செல்லம் கொஞ்ச இப்பொழுது தான் லேசாய் வசுமதி முகத்தில் புன்னகை தோன்றியது.

“நெசமா…”

“சத்தியமாம்மா…”

“அப்போ சரி…உன சம்மந்தப்பட்ட எந்த விசயத்தையும் ஐயாட்ட கேட்காம எப்ப செஞ்சிருக்கோம்….என்ன பெரிய வீட்டுக்கு கூட்டிட்டு போ…நான் ஐயாட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு பொண்ணு பார்க்கிறேன்…”

என்றார் வசுமதி.அவர் சொல்வதும் உண்மை தான்.

தமிழழகன் தேன்சோலை கிராமத்தின் கட்டுக்கடங்கா காளை.அவனது சிறு வயதிலே தந்தை தவறிவிட ஏழு வயது பையனோடு தனித்து நின்ற வசுமதிக்கு அவரது முதலாளி நடராஜன் அவர்கள் குடும்பம் தான் ஆதர்வ கரம் நீட்டியது.

அவர்கள் வயலிலே வசுமதி வேலை செய்ய தமிழின் படிப்பில் தொடங்கி அவன் பொறுப்புகளை தானே முன்வந்து எடுத்துக் கொண்டார் நடராஜன்.கல்லூரி வரை நன்றாக படித்து திறமைசாலியாய் உயர்ந்த தமிழ் வெளியே கிடைத்த வேலையெல்லாம் விடுத்து நடராஜரிடமே சேர்ந்துக் கொண்டான்.தொழில் மட்டுமல்லாது அதனையும் தாண்டிய சில முக்கிய வேலைகளுக்கு அவர் நம்பும் ஒரே நபரும் தமிழ் தான் என்னும் அளவிற்கு மிகவும் விஸ்வாசமானவன்.

“சரிம்மா….இப்ப வேண்டாம்…ஐயா கொஞ்சம் பிஸி…நானே ஒரு நாள் உன்ன கூட்டிட்டு போறேன்…”

என்று சொல்ல சரியென மகிழ்ச்சியாய் ஒப்புக்கொண்டவர்

“அப்புறம் தமிழு…நான் ஒன்னு கேள்விப்பட்டேனே…அது உண்மையா…”
என்று கேட்க விரலிடுக்கில் கொட்டாவியை மறைத்தபடி,

“என்ன கேள்விப்பட்ட…”

என்று கேட்டுக் கொண்டே தமிழ் கூடத்தில் போடப்பட்டிருந்த இரும்பு கட்டிலில் படுக்க அவன் தலைமாட்டில் அமர்ந்த வசுமதி,

““அதான்டா…ஐயா,மனோ தம்பி மேல் இருந்த கோவத்தெல்லாம் விட்டுடு அவரையும் அவர் பொண்டாட்டியையும் ஏத்துக்கிட்டாங்களாமே…நெசமாலுமா…”

என்று கேட்க ஒரு கண்ணை மட்டும் திறந்தவன்,

“உனக்கு எப்படி இந்த விசயம் தெரிஞ்சிது…”

என்றான்.

“பக்கத்துவீட்டு மங்கா தான் சொன்ன…அந்த புள்ளையகூட கூட்டிட்டு வந்துட்டாங்களாம்…ஆனால் மனோ தம்பி இல்லாம தனியா தான் வந்துதாம்…ஏன்டா அப்புடி…”

“உஃப்…இந்த 3ஜி,4ஜியோட உங்க நெட்வொர்க் ரொம்ப பாஸ்ட்ஆஆ இருக்கு…அவுங்க தனியா வராங்க…ஜோடியா வராங்க…அதை நீ தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போற…அதெல்லாம் பெரிய இடத்து விசயம்…சொல்ற விசயமுனா…சொல்லிர்பாக…அதேயேன்…நீங்க இட்டுகட்டி பேசுறீங்க…போம்மா அங்கிட்டு…”

என்று அவன் எரிந்து விழ கழுத்தை நொடித்துக் கொண்ட வசுமதி,

“ஏன்டா அதுக்கு வள்ளுனு விழுகுற…”
என்றவர்
“மனோ தம்பி தங்கமான புள்ளயாச்சே…அது குடும்பத்தோட ராசியாகிட்டா சந்தோஷமுனு தான் கேட்டேன்…இதுல இட்டிகட்டி வேற பேசுறாங்க…”

என்று புலம்பியபடி அவன் அறையை நோக்கி நகர நொடி பொழுதில் பாய்ந்து வந்து அவர்முன் நின்றவன்,

“என்ன வேணும்…எதுக்கு ரூமுக்கு போறம்மா…”
என்றான்.

“இதென்ன புதுசா கேட்குற…நீ நாலு நாளா குமிச்சி வைச்சிருப்பே…அலுக்கு துணி அதை துவைக்க வேண்ணாமா…?”

“ம்ம்… அதெல்லாம் நான் எடுத்து வந்து போடுறேன்…நீ போம்மா…”

என்ற மகனை விநோதமாய் பார்த்த வசுமதி,

“ஏன்…நான் ஏன் போக கூடாது…டேய்…உன் முழியே சரியில்லையே…நகருடா…இதுக்காண்டியே நான் என்னானு போய் பாக்குறேன்…”

என்று அவனை தள்ளிக் கொண்டு உள்ளே போக முனைய,

“அய்யோ அம்மா…நீ பாட்டு எதாவது கற்பனை பண்ணாத…முக்கியமான பைல்லாம் ஐயா என்னுட்ட குடுத்து வச்சிருக்காவ…நீ பாட்டுக்கு சுத்தம் பண்றேனு பறக்க விட்டுடேனா…அதான் சொன்னேன்…”

என்றவனை அவர் நம்பாமல் பார்க்க,
“என்ன லுக்கு விட்டுட்டுடு இருக்க…நாலு நாளு கழுச்சி வூடு வந்த புள்ளைக்கு எதாவது சாப்புட குடுத்தியா…போம்மா…காலைலேந்து வயிறு கடமுடானு கத்துது…போய் எதாவது செஞ்சிக்குடு…நான் சீக்கிரம் கிளம்புனும்…”

என்று அவரை அடுப்பறை நோக்கி திருப்பி விட்டவன் அவர் தலை மறைந்ததும் அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டான்.

பத்து நிமிடங்கள் கழித்து மூச்சை இழுத்துவிட்டபடி வெளியே வந்த தமிழ் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான்.

குளித்து வந்தப்போது அவனுக்கு உணவு தயாராய் இருக்க அன்னையுடன் வம்பழந்தபடி வேகவேகமாய் உண்டு முடித்துவிட்டு தன் இருச்சக்கர வாகனத்தில் பறந்தவன் நேராக சென்று நின்ற இடம் பெரிய வீடு தான்.

பழமை கிஞ்சிதமும் மாறாமல் அதில் தேவையான புதுமையை மட்டும் சேர்ந்து வனப்பாய் காட்சியளித்த அவ்வீட்டை பார்க்கவே நம் கண்களுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.இத்தகைய வீடுகளை இக்காலத்தில் காண்பதே அரிதல்லவா…

கோட்டை மதில் சுவர் அமைந்திருந்த நுழைவாயிலுக்கும் வீட்டிற்கும் இடையிலே பல அடி தொலைவு இருக்க உள்ளே நுழைந்த தமிழ் பைக்கை வழக்கமாய் நிறுத்துமிடத்தில் நிறுத்தினான்.

“வா…தமிழு…ரெண்டு நாளா ஆளே பார்க்க முடியல…”

அங்கே நிறுத்தப்பட்டிருந்த காரை துடைத்துக் கொண்டிருந்த ட்ரைவர் தமிழிடம் கேட்க அவரை பார்த்து புன்னகைத்தவன்,

“வெளியூர் போயிருந்தேண்ணே…அதான்…அப்புறம் பையன் இப்ப ஒழுங்க ஸ்கூலு போறானா…”

என்று கேட்க அதற்கு வேகமாய் தலையாட்டிய அவர்,

“ம்ம்…நீ பார்த்து ரெண்டு காட்டு காட்டுனதுலேந்து பைய அடங்கிட்டான்… எதாவது அரட்டு பண்ணின உன் பேர சொன்னாலே கப்சிப்புனு ஆயிடுறான்…இப்பெல்லாம் எந்த வம்புக்கும் போகாம சொல்பேச்சு கேட்டு இருக்கான்… ரொம்ப நிம்மதியா இருக்குய்யா…”

என்றார் சந்தோஷமாய்…

“ம்ம்…சரிண்ணே…பைய மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்…உங்க பொண்ண எப்படி கண்ணும் கருத்துமா வளக்குறிய…அதுல கொஞ்ச கவனத்த பசங்கமேல வச்சாலே போதும் நாட்டுல பாதி பிரச்சனை குறையும்…”

என்றபடி வீட்டை நோக்கி சென்றான்.
அவன் உள்ளே செல்வதற்குள் எதிர்ப்பட்ட அனைவரும் அவனிடம் பேச்சுக் கொடுக்க அனைவரையும் கடந்து செல்லவே சில நிமிடங்கள் ஆனது.

சரி அவன் வருவதற்குள் நாம் அவ்வீட்டை ஒருமுறை சுற்றிப்பார்த்து விடுவோம்.

வீட்டின் முகப்பில் தூண்கள் ஊன்ற பட்ட திண்ணையை கடந்தால் பெரிய கூடம்.சிவப்பு ஆக்சைடு பூசப்பட்ட தரையுடைய கூடத்தில் மட்டுமே பத்து ஜன்னல்கள் இருக்கும்.மரத்தினால் ஆன ஊஞ்சல் ஒன்றும் தொங்கியது. அதனை கடந்தால் அடுத்த கூடத்தில் நடுவில் செவ்வக வடிவிலே முற்றம் அமைத்து சுற்றிவர திண்ணை அமைத்து பின்னர் அதனை சுற்றி அறைகள் அமைக்க பட்டிருக்க வடக்கு மூலையில் மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது.

அதனை தாண்டி உள்ளே சென்றால் அடுத்து சமையலறை பின்னர் கொல்லைபுறம் என்று இருந்தது.

கூடத்தை அடைந்தவன் ஊஞ்சலில் அமர்ந்து பேத்திகளோடு விளையாடிக் கொண்டிருந்த நடராஜனை கண்டு தானாய் ஓர் புன்னகை அவன் உதட்டில் உதிர்த்தது.

குழந்தைகளோடு விளையாடுவதால் முகத்தில் கொஞ்சல் இருந்தாலும் அவற்றையும் தாண்டிய கம்பீரம் அவர்மீது முதல் பார்வையிலே மரியாதைக் கொள்ள வைத்தது.

எதர்ச்சியாய் திரும்பியவர் தமிழைக் கண்டதும்,

“வா தமிழு…”

என்று வரவேற்று பிள்ளைகளை உள்ளே சென்று விளையாட அனுப்பிவிட்டு நேராய் அமர்ந்தார்.

“ஐயா…”
என்றபடி வந்தவனை அருகிலிருந்த நாற்காலியில் அமரச் சொன்னவர் உள்நோக்கி குரல் கொடுக்க அடுத்த நிமிடம் அவன் கையில் மோர் இருந்தது.

அவன் அருந்தியபின்,

“போன வேலை என்னாச்சு தமிழு…”

என்று கேட்க,

“அது வந்துய்யா…”

என்று சுற்றம் பார்த்தவாறு அவன் தயங்க,

“சொல்லுடா…யாரும் வரமாட்டாங்க…”

என்றார் அவன் எண்ணம் புரிந்தாற்போல்…

அவனும் கடகடவென அனைத்தையும் தனது நரைத்த மீசையை நீவியபடி அவன் சொல்வதை கேட்கும் நடராஜரின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

தமிழிற்கோ வாய் பேசினாலும் தன்னை யாரோ உற்று நோக்குவது போல் உள்ளுணர்வு சொல்ல ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவன் சட்டென்று திரும்பி பார்க்க அதுவரை கதவருகே நின்ற பெண் சட்டென்று ஒலிய முனைந்து அவன் பார்த்துவிடவும் முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டு எதுவும் நடவாதது போல் அங்கே வந்தாள்.

புருவம் சுருங்க யோசனையாய் ஒரு நிமிடம் அவளை பார்த்தவன் பின் தன் வேல்விழியால் நோக்க அவன் பார்வை போன திசையில் தானும் பார்த்த நடராஜன்,

“இந்த பொண்ணு…சின்ன மருமகளோட வந்த பொண்ணுப்பா…மனோ அவன் பொஞ்சாதிய பார்த்துக்க ஏற்பாடு பண்ணின டாக்டராம்…அது என்னமோ பேர் சொன்னானே…என்னம்மா அது…”

என்று அவனிடம் தொடங்கி அவளை பார்த்துக் கேட்டார்.

“டயட்டிசீயன்…”

என்று சொன்ன யவ்வனாவை அவன் புருவம் உயர்த்தி ஆச்சரியமாய் பார்த்தான்.

ஆம்…யவ்வனாவே தான்.தமிழின் பார்வை அவளுள் பக்கென்று உணர்வை தோற்றுவிக்க,
‘இவன் என்ன போலீஸு மாதிரி பாக்குறான்…அதுக்குள்ள போலிஸுக்கு விசயம் தெரிந்து சந்தேகப்பட்டு என்னை தேடி வந்திருச்சோ…அந்தாளு எனக்கு எந்த பிரச்சனையும் வராதுனு தானே சொன்னான்…ஐய்யையோ…நான் ஒன்னுமே பண்ணலயே…”

என்று ஓயாமல் உள்மனம் புலம்பினாலும் வெளியே முகத்தை சீராய் வைத்திருக்க ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த தமிழ்,

“நம்ம ஆச்சு…அம்மாச்சி மதனிகெல்லாம் தெரியாத புள்ளதாச்சி பிள்ளைக்கு என்ன சாப்பிட கொடுக்கணுமுனு…அதுகேன் ஐயா டாக்டர்…”

என்று கேட்க அதற்கு சிரித்த நடராஜன்,

“அது வாஸ்தவம் தான்…ஆனால் மருமகளுக்கு குழந்தை தாங்குற அளவு சத்தியில்லேனு டாக்டர் சொன்னதுல பயந்துபோய் மனோ கூடவே இருந்து பார்த்துக்க இந்த பொண்ணை ஏற்பாடு செஞ்சானாம்…ஆறு மாசம் கான்ராக்ட்படி சம்பளம் கொடுத்திருக்கானாம் மனோ.அதனால அது முடியும்வர அனுவோட தான் இருப்பாங்க…”

என்று கூற அவன் 'ஹோ…’ என்று தலையாட்டினான்.

“சரிம்மா…நீ எங்க போறே…”
அவனிடம் நடராஜன் பேசிக்கொண்டிருந்த கேப்பில் அவர்களை கடந்து செல்ல எத்தனித்த யவ்வனாவிடம் அவர் கேட்க விழித்தவள்,

“அது…அது…இல்ல சார்…வந்ததில் இருந்து வீட்டிலே இருக்கேனா…போர் அடிக்குது…அத்தோட வர வழியில பக்கத்துல நிறைய வயலெல்லாம் பார்த்தேன்…அதான் சும்மா வெளியே காத்தாட நடந்துட்டு வரலாமுனு…”
என்றாள்.

“தெரியாத ஊரு…எப்படி தனியா போவீங்க…இருங்க யாரையாவது கூட வர சொல்றேன்…”

“இல்ல…இல்ல சர்…வேணாம்…நான் பார்த்துப்பேன்…”

என்று சமாளித்து வீட்டை விட்டு வெளியேறுவதற்குள் போதும் போதும் என்றானது.

1 Like

என் வாழ்வே நீ யவ்வனா-6
நுழைவாயிலை தாண்டி சில அடிகள் வைத்ததும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள்.

“யப்பா…சாமி…வீடாய்யா இது…எத்தனை செக்போஸ்ட்…வெளியே வரதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்திடுச்சு…தேவையா எனக்கிதுலாம்…இதுல புதுசா வேற ஒரு என்ரீ…அந்த தாடிகாரனும் அவன் பார்வையும்…இருக்குற வில்லனுங்களோட மல்லுகட்டவே எனக்கு நேரம் இல்ல…இதுல நியூ என்ரீ வேற….கடவுளே…”

என்று தலையிலே தட்டிக்கொள்ள அருகில் சைக்கிளில் வந்த நபரோ அவளை விநோதமாய் பார்க்கவும்,

“அய்யோ…உணர்ச்சி வசப்பட்டோமோ…”

என்று கைகளை இறக்கி அமைதியாய் சாலையில் நடந்தவள் சில நிமிடங்களில் தெரிந்த வயல்வெளியை கண்டதும் முகம் பிரகாசமானது.

சிலுசிலுவென்று வீசிய காற்று இதமாய் அவளை வருடிச் செல்ல அதில் லயித்து நின்றுவிட்டாள்.

மனதில் வீட்டின் நியாபகம் அலைமோதியது.

‘இப்படி வரப்புல ஓடி திரிஞ்சிக்கிட்டு எவ்வளவு நிம்மதியா இருந்தேன்…பணம் இல்லேன்னாலும் சந்தோஷத்துக்கு குறையில்லாம இருந்தேனே…ஆனா…இப்போ…???நிம்மதினு ஒன்னு இல்லாமலே போயிடுச்சு…நான் செய்யுற பாவத்துக்கு அந்த ஆண்டவனே நிச்சயம் என்ன மன்னிக்க மாட்டான்…”

விரக்தியாய் அவள் பெருமூச்சுவிட அதே நேரம் அவள் அலைபேசி சத்தமின்றி அதிர்ந்தது.

இடுப்பில் மறைத்து வைத்திருந்ததை எடுத்து பார்த்தவள் திரையில் மின்னிய எண்ணை பார்த்ததும் எரிச்சலானாள்.

“சாத்தான் நினைச்சதும் வரும்பாங்க…சரியா தான் இருக்கு…கொஞ்ச நிம்மதியா இருக்க விடுறானா…எடுக்கலேனாலும் பிரச்சனை…ச்சை கொடுமை…”

என்று முணுமுணுப்போடு அழைப்பை ஏற்றவள்,

“சொல்லுங்க சார்…”

என்றாள் அமைதியான குரலில்…

“________”

“யாருக்கும் இதுவரை என்மேல சந்தேகம் வரலை சார்…நீங்க இப்படி சும்மா கால் பண்ணிட்டே இருந்தா தான் நிச்சயம் நான் மாட்டுவேன்…”

“________”

“ திமிர் காட்டுற நிலைமையிலா நான் இருக்கேன்…?உள்ளதை சொன்னேன் சார்…யாராவது வர்ரதுக்குள்ள சீக்கிரம் விசயத்தை சொல்லுங்க…”

“_______’’

மறுமுனையில் கூறியவற்றை கேட்டு கோபம் பொங்கினாலும் அங்கும் இங்கும் நடந்தபடி வேண்டா வெறுப்பாய் 'உம்…’ கொட்டியவள் அழைப்பை வைத்ததும்,

“இந்த நாய் சொல்லதை எல்லாம் கேட்கணும்னு தலையெழுத்து…”

என்று கடுப்பில் தரையை ஓங்கி உதைத்தாள்.

அவ்விடம் சற்று வழவழப்பாய் இருந்திருக்க இவள் உதைத்த வேகத்தில் இடறிவிட்டு சரியாக அருகில் இருந்த சேற்றில் பொத்தென்று விழுந்தாள்.

நொடியில் நடந்த நிகழ்வை உணரும்முன் அவளை சுற்றி பூச்சு பறப்பதுபோல் தலை சுற்றியது.

சற்று சுதாரித்தவள் முகத்தை அஷ்டக்கோனலாய் சுருக்கி தரையில் கையூன்றி எழ முயல வழவழப்பான தரை மீண்டும் சதி செய்தது.

“அய்யோ… இதுவும் சதி பண்ணூதே…”

என்று அந்நிலையிலே தலையை பிடித்தபடி சோர்ந்துவிட்டாள்.

அச்சமயம் அருகில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்க,

“எவன்டா அவன்…”

என்று ஸ்லோ மோசனில் தலையை திருப்பியவள் தாடிக்காரனை அதாவது தமிழை கண்டதும் விழித்தாள்.

பைக்கில் அமர்ந்தபடி அவளை பார்த்து சிரித்தவன் அவள் திரும்பி பார்க்கவும்,

“என்னம்மா…காத்தாட நடந்துட்டு வரேன்னு இங்க ஹாயா படுத்திருக்கீங்க…என்ன எக்சசைஸா…”

என்று நக்கலாய் வினவ அவனை முறைத்தவள்,

“இல்ல அங்கபிரதட்சணம் பண்றதா வேண்டுதல்…”

என்று சொல்ல,

“ஓஹோ…அப்படி…ஆனால் அது கோயில் வாசல்ல பண்ணுவாங்க…ம்ம்… ஆகட்டும்… ஆகட்டும்…”

என்று கூறி மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்ய,

“ஹே…ஹே…நில்லுய்யா…விழுந்துகிடக்குறது தெரியுதுல…அப்புறம் என்ன நெக்கலு…ஹெல்ப் பண்ணுய்யா…”

என்று அவள் கத்தவும் நிறுத்தியவன்,

“ய்யா வா…அடிங்க…”

என்று முணுமுணுத்தபடி இறங்கி வந்தான் தமிழ்.

“என்ன உன் பாடுட்டுக்கு வாய்யா…போய்யானு பேசுற…நான் யார் தெரியுமா…ஐயா வீட்டுக்கு வந்த விருந்தாளி போனா போதுனு விடுறேன்…இல்ல…”

என்று அவன் அதட்டவும்
வலித்த இடுப்பை ஒருக்கையால் பிடித்துவிட்டபடி,

“தெய்வமே… தெரியாமல் சொல்லிட்டேன்…செத்த தூக்கி விடுறீங்களா…”

என்று பல்லை கடித்தபடி சொல்ல,

“ம்ம்…அது…”
என்ற அவனும் அவளை கைபிடித்து தூக்கி நிறுத்தினான்.

“ஆமா…ஏன் வீட்டில என்னை பார்த்ததும் பயந்து ஒலியப்பார்த்தீங்க…”

தட்டு தடுமாறி நின்றவளை பார்த்து தமிழ் கேட்டான்.

(அய்யோ… கவனிச்சிருக்கானே…)

“பயமா…எனக்கா…நான் சிங்கம்-புலியெல்லாம் பார்த்தே பயப்பட மாட்டேன்…உங்களை பார்த்து ஏங்க பயப்படனும்…”

என்று கையை உதறிக்கொண்டு அவனை தாண்டி நடந்தவளை ஒரே எட்டில் அடைந்தவன்,

“சரி நம்பிட்டேன்…இந்தாங்க உங்க போன்…எடுக்காம போறீங்க…”

என்று கீழ கிடந்ததை எடுத்து நீட்டினான்.
நாக்கை கடித்து வேகமாய் அதனை பெற்றவள்

‘அடியேய்…இப்ப தான் யாருக்கும் சந்தேகம் வரலைன்னு சொன்ன…அதுக்குள்ள இப்படி சொதப்புறீயே…’

என்று மானசீகமாய் தலையில் கொட்டிக்கொண்டு அங்கிருந்து ஓட பார்க்க ஆனால் அவனோ விடுவதாய் தெரியவில்லை.

“ஏங்க…இப்படியேவா போக போறீங்க…”

என்றான் சேறு படிந்திருந்த அவள் உடையை சுட்டிக் காட்டி…

“எப்படியோ போய் சேர்றேன்…விடுங்க பாஸ்…”

“இல்ல…நாய் கீய் தொறத்தும்மேனு சொன்னேன்…நீங்க தான் சிங்கம்-புலிய பார்த்தே பயப்பட மாட்டீங்களே… அப்புறம் என்ன…”

என்று போற போக்கில் சொல்லிவிட்டு திரும்பி பைக்கை நோக்கி தமிழ் நடக்க அவன் கூறியதை கேட்டு தேங்கியவள்

“நாயா…???”
என்று அதிர அவன் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

யவ்வனா,

“வேறென்ன பண்ண முடியும்…”
என்று சத்தமாய் அவனிடம் கேட்க நின்று நிதானமாய் திரும்பியவன்,

“என்னையா கேட்டீங்க…”

என்று கேட்க,

“உஙகள தான்… சொல்லுங்க…”
என்றாள்.

“ம்ம்ம்… பக்கத்துல தான் பம்பு செட் இருக்கு…நானே கூட்டிட்டு போவேன்…ஆனால் எனக்கு மில்லுக்கு போகனும்…நிறைய வேலை இருக்கு… நேரம் இல்ல…”

“தாடிக்காரன் ரொம்ப பில்டப் கொடுக்குறானே…பேசாம இவனையும் இந்த சேத்துல தள்ளிவிட்டா என்ன…”

என்ற யோசனையோடு அவனை நோக்கி அவள் மெல்ல வர,

“ம்ச்…உங்களை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு…சரி வாங்க…”
என்று அவன் கூறவும்
‘தப்புச்சிட்டான்…பொழச்சு போ…’
என்று அவ்வெண்ணத்தை கைவிட்டு அவனை பின் தொடர்ந்து நடந்தாள்.

மௌனமாய் சில அடிகள் நடந்தாலும் இருவர் மனதிலும் மற்றவரை பற்றி சிந்தனையோடு வர முதலில் அதை கலைத்தது தமிழ் தான்.

“எங்க ஊரு எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்கல்ல…இந்த மாதிரி வயல்வெளிலாம் சினிமால மட்டும் தானே பார்த்திருப்பீங்க…”

என்றவனை ‘யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்னாய்…’ என்ற பாவனையில் பார்க்கவும் இல்லை முறைக்கவும்,

“பொதுவா சிட்டிவாசிகள் எல்லாரும் அப்படி தானே அதான் சொன்னேன்…”

என்று அவன் விளக்கம் அளிக்க,

“சிட்டினாலும் நாங்க திருச்சி தாங்க…அதனால மண்மனம் இன்னும் எங்கள விட்டு போகல…”
என்றாள் தோளை சிலுப்பிக் கொண்டு…

பம்பு செட்டை அடைந்ததும் உள்ளே தண்ணீரை திறந்துவிட்டு சற்று தள்ளி அவன் நின்றுக்கொள்ள பாய்ந்து வந்த தண்ணீரை கண்டதும் யவ்வனா மனம் குதூகலிக்க ஆடையை சுத்தப்படுத்திக்கொண்டவள் குளிக்க ஆசையாக இருந்தாலும் சூழ்நிலை கருதி கை-கால்களை மட்டும் நனைத்து விளையாடினாள்.

“இன்னும் எவ்வளவு நேரமுங்க…”

பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்தும் அவள் நகர்வதாய் தெரியவில்லை எனபதால் தமிழ் கேட்க அவளோ

“ப்ளீஸ்…ப்ளீஸ்…ஒரு ரெண்டு நிமிஷம்…”

என்றவள் எதர்ச்சியாய் திரும்ப இவளுக்கு மறுபுறம் ஒரு கையை இடுப்பில் ஊன்றி மறுக்கையில் இருந்த கைகடிகாரத்தில் மணியை பார்த்தபடி நின்றான்.

அவனது அந்த தோரணை அவள் இதழ் கடையில் புன்னகையை தோற்றுவிக்க தாமதமானாலும் யாரென்றே தெரியாத தன்னை எப்படியோ போ என்று விடாமல் அவளுக்காக பொறுமையாய் நிற்பது ஈரத்தில் நனைந்திருந்த கைகளின் குளுமையை போல் மனமும் சில்லென்று இருந்தது.

“யாருங்க நீங்க…”

திடீரென அவள் கேட்கவும் அவள் புறம் பார்வையை திருப்பியவன் ‘இதென்ன கேள்வி…’ என்பது போல் பார்க்க,

“இல்ல…கொஞ்ச நேரத்துக்கு முந்தி 'நான் யார் தெரியுமா…'னு ஹை பிச்சில் கேட்டீங்கல்ல…எனக்கு நிஜமாகவே நீங்க யாருனு தெரியாது…அதான் கேட்டேன்…”
என்று அவள் கூறியபடி இறங்கி அவன் அருகில் வந்தாள்.

அவள் சொன்னதை கேட்டு மெல்லியதாய் ஒர் புன்னகை சிந்தி பெண்ணவள் மனதில் சத்தமின்றி பூகம்பத்தையே உருவாக்கினான்.

திராவிடரின் அக்மார்க் நிறத்தில் இருந்தாலும் மிகவும் வசீகரமான தோற்றம் தமிழுடையது. புன்னகை பூசிய அவன் முகத்தை காணும் கண்ணியரை நிச்சயம் மீண்டும் பார்க்க தூண்டும்.அவ்வகையில் தான் தற்போது யவ்வனாவும் இருக்க,

‘இவங்கூட நின்னா நானெல்லாம் ரொம்ப சுமாரா தெரிவேனே…"

என்று சம்பந்தமே இல்லாமல் அவள் மனம் கவலை கொள்ள இதை எதையும் அறியாது அவள் கேள்விக்கு பதிலளித்தான் தமிழ்.

“என் பேரு தமிழ்…நடராஜன் ஐயாக்கு பாடிகார்ட்,பி.ஏ எல்லாம் அடியேன் நானே… அப்புறம்…தேன்சோலையோட மோஸ்ட் எளிஜிபுல் பேச்சுலர்… இதுக்குமேல நல்லவன்…வல்லவன் நாலும் தெரிஞ்சவன் இதெல்லாம் நீங்களே ஃபில் பண்ணிக்கோங்க.”

என்று அவன் சொல்ல ‘நடராஜன் ஐயா…’ என்றதும் சட்டென்று அவள் மனம் விழித்துக் கொண்டது.

2 Likes

அத்தியாயம்-7

"பாடிகார்ட் ஆ…?? அதற்கென்ன அவசியம்…”

என்றவளை தமிழ் ஓர் பார்வை பார்க்க,

“இல்லங்க…நான் பார்த்த வரை எந்த வம்பு தும்பும் இல்லாமல் அமைதியா ரொம்ப அழகா அவங்க வாழ்க்கைமுறை இருக்கு…அவங்களுக்கு என்ன ஆபத்துனு…”

என்று அவசரமாய் அவள் சமாளித்தாள்.
“ஐயா எப்பவும் எளிமையா தான் இருப்பாரு…அதுக்குனு சாதாரண ஆளுனு நினைச்சிடாதீங்க…இந்த ஊருல நடக்குற எந்த நல்ல விசயமும் அவர் பங்கு இல்லாம இருக்காது தெரியுமா…இன்னவங்க…இன்ன பிரிவு எதுவும் பார்க்க மாட்டாரு…அவருக்கு சரினு பட்டுடா எல்லாம் செய்ய தயங்குற விசயத்தை கூட அசால்ட்டாக செஞ்சிட்டு போயிட்டே இருப்பாரு…
எப்படி உதவுறதுக்கு முன்ன நிப்பாரோ…அதே மாதிரி தப்புன்னு பட்டுட்டால் யோசிக்கவே மாட்டாரு…சட்டைய புடிச்சி லெப்ட் ரைட் தான்…அப்புடி அவருட்ட வாங்குன சில கோழைங்க தான் வன்மத்தை மனசுல வச்சிட்டு முகத்துக்கு நேரா எதிர்க்க தைரியம் இல்லாம முதுகுல குத்த சான்ஸ் கிடைக்க காத்துட்டு இருக்கானுவோ…ஆனால் அவனுங்களுக்கு ஒன்னு புரியலை…பணத்தால வாங்க முடியாத ஒரு பலம் எங்க ஐயாட்ட இருக்கு…”
“அதான் நம்பிக்கை”

என்றவன் குரலில் பெருமை நிறைந்திருக்க மேலும் பேசலானான்.

“எங்க ஐயா சுத்தி உள்ள எல்லாருமே ரொம்ப விசுவாசமானவங்க…எவ்வளவு கோடி கொடுத்தாலும் சரி ஒருத்தனை கூட விலைக்கு வாங்க முடியாது…நாங்க இருக்குறவரை எங்க ஐயா நிழல கூட தொடமுடியாது…”

என்று அவன் சொல்ல அவள் முகத்தில் கலக்கம் பிறந்தது.

'அதுக்குதான்…என்னை இங்க அனுப்பிருக்கானுங்களா…கேட்கும் போதே உள்ள தடதடங்குதே…நான் வந்த நோக்கம் மட்டும் தெரிஞ்சுது இவனே என்னை சாவடிச்சிடுவான்…அய்யோ ஆண்டவா…"

என்று கடவுளை அழைத்தவளுக்கு தான் வந்து சிக்கிய தினம் நினைவிற்கு வந்தது.

அன்று அனுஷியாவின் அலைபேசியை பெற்றுக் கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துவிட்டு ஆர்வமாய் காத்திருக்க மறுமுனையில் அழைப்பும் ஏற்கப்பட்டதும்,

“ஹலோ…அப்பா…நான் யவ்வனா ப்பா…”

“அம்மா…ராஜாத்தி…”

என்றவர் குரல் நடுங்க,

“ப்பா… நான் பத்திரமா இருக்கேன் பயப்படாதீங்க…”

என்று தந்தையின் படபடப்பை போக்க அவள் மொழிய அவரோ,

“எங்கம்மா…இருக்க…என்னாச்சு…நேத்திலேந்து உன்னை காணாம தவிச்சி போயிட்டோம்…என் கண்ணு…”

என்றார் உடைந்த குரலில்…

“ப்ளீஸ்ப்பா…நீங்க நிதானமாகுங்க…ஒரு பிரச்சனை தான்…ஆனால் இப்போ நான் பத்திரமா இருக்கேன்…”

என்றவள் நடந்ததை சுருக்க கூறி,

“அதனால இப்போ என்னால வீட்டுக்கு வரமுடியாது ப்பா…அனு என்னை அவங்க கூட கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காங்க…அவங்க ரொம்ப நல்ல மாதிரி ப்பா…என்ன நினைச்சு பயப்படாதீங்க…அம்மா…”

என்று அவள் ஏதோ மேலும் சொல்ல முனையும் போது மறுமுனையில் அலைபேசி பறிக்கப்பட அதை தொடர்ந்து,

“உன்னை அனு எங்க கூட்டிட்டு போறேன்னு சொல்லுச்சு…”

என்று அவசரமாய் ஒரு குரல் கேட்க தூக்கிவாரி போட்டது…

“ப்பா…ப்பா…”

“ஏய்…உங்கப்பன் இருக்கட்டும்…உன்னை எங்க கூட்டிட்டு போறேன்னு அனு சொன்னா அதை சொல்லு…”

என்று அதிகாரமாய் கேட்ட குரலில் அவள் மேனி சிலிர்க்க,

“அவங்க…அவங்க…ஹஸ்பென்ட் ஊருக்கு…”

என்றாள் திக்கி திணறி…

மறுமுனையில் ஒரு நீண்ட அமைதி நிலவ அவர்கள் தன்னை தேடி தான் தன் வீட்டிற்கு சென்று இருக்கார்கள் என்பதை அறிந்து யவ்வனா,

“சர்…சத்தியமா அந்த பணம் எங்கேனு எனக்கு தெரியாது சர்…எங்கள விட்ருங்க சர்… என்னுட்ட பணமெல்லாம் இல்ல சர்…நம்புங்கள் சர்…”
என்று அழுகையோடு கெஞ்சினாள்.

“பணம் கிடக்குது விடு…அதைவிட நிறைய பணம் நான் உனக்கு தரேன்…பதிலுக்கு நீ ஒன்னு செய்யனுமே…”

என்று அவன் நிறுத்த அவள் அழுகை ஓய்ந்து குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

“என்ன புரியலயா…அந்த பொண்ணு அனுஷியா…அதோட சேர்ந்து நீ ஊருக்கு போற…அங்கே முடிக்க வேண்டிய முக்கிய கணக்கு ஒன்னு இருக்கு…அதுக்கு ஹெல்ப் பண்ணினால் போதும்…”

“நீங்க சொல்றது எதுவும் சரியா படலங்க…என்னால அதெல்லாம் பண்ண முடியாது…அனு நல்லவங்க…அவங்களுக்கு என்னால எந்த ஆபத்தும் வரவிட மாட்டேன்…என் சம்பந்தப்பட்ட விசயம்…என்னோட போகட்டும்…நான் இப்வே அவங்களுட்ட சொல்லிட்டு கிளம்புறேன்.”

“இங்க பாரு…உன்னுட்ட செய்யுறீயானு கேட்கல…செய்யனுனு சொல்றேன்…இது எவ்வளவு பெரிய வாய்ப்பு தெரியுமா…அதை நழுவ விட நான் என்ன முட்டாளா…நான் சொல்றதை நீ செஞ்சிதான் ஆகனும்…உன் மொத்த குடும்பமும் இப்ப என் கஸ்டடில…நியாபகம் வச்சுக்கோ…”

என்று அவன் கூறுவதை கேட்டு ஆத்திரம் பொங்க,

“என்ன மிரட்டுறீங்களா…என்னால என் குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது எதுவா இருந்தாலும் என்னோட போகட்டுமுனு தான் நான் விலகி வந்தேன்…தேவையில்லாம என்னை சீண்டாதீங்க…எனக்கு நீங்க யார் யார்னு அடையாளம் தெரியும்…நேரா போலிஸ்ட்ட போனேனா… எல்லாரும் கம்பி எண்ண வேண்டியது தான்…”

என்று உறுமினாள்.எதற்கும் துணிந்தவள் தான் ஆனால் அவளது பலம் பலவீனம் இரண்டுமே அவள் குடும்பம் தான்.

அவள் பேசி முடித்த நொடி பளாரென்று அறைந்த சத்ததை தொடர்ந்து தன் தந்தை அலறலும் கேட்க,

“அப்பா…!!!”

என்று துடித்துப்போனாள்.

“ஷ்ஷ்…!!!சத்தம் போட்ட இன்னும் நாலு போடுவேன்…”

என்றதும் பட்டென்று வாயை மூடிவிட்டவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“என்ன சொன்ன போலீஸ்ட்ட போவியா…போ… ஆனால் அதுக்குள்ள இங்க ஒரு உயிர் கூட மிஞ்சியிருக்காது… அதிலும் உன் தங்கச்சி வேற சின்ன பொண்ணா இருந்தாலும் நல்லா தளதளன்னு இருக்கா…என்ன வேணாலும் நடக்கலாம்…அப்படியே அதுக்கும் சேர்த்து கம்ப்ளைன்ட் கொடு…”

என்று அவன் இரக்கமின்றி பேச அவளுக்கோ ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட,

“நோ!!!அவங்களை எதுவும் செஞ்சிடாதீங்க…நான்…நான்…நீங்க சொல்றதை செய்றேன்…எங்க வீட்டை விட்டு முதல்ல போங்க…”
என்றாள்.

“போக தான் போறோம்…நீ ஒத்துக்கிட்டதுக்கப்புறம்…எங்களுக்கு இங்க என்ன வேலை…ஆனால் என் கண்பார்வையில் தான் இருப்பாங்க…மறந்திடாத… எங்க கண்ணுல மண்ணை தூவிட்டு எதாவது செய்ய நினைச்ச இங்க மட்டும் இல்ல உன் அக்காளுங்க வீட்டுலையும் இதே நிலைமை தான்…”

“இல்ல…இல்ல… அதெல்லாம் எதுவும் பண்ண மாட்டேன்…நான் என்ன செய்யனும்…”

அனுஷியாவின் வெள்ளந்தியான முகம் கண்முன் தோன்றினாலும் மனதை இரும்பாக்கி கொண்டு கேட்டாள்.

“இது நல்ல பிள்ளைக்கு அழகு…”

என்றவன்
" நடராஜன்…அனுவோட மாமனார் அவர் தான் நம்ம டார்கேட்…நீ என்ன செய்வீயோ தெரியாது…அந்த பேமிலியோட நல்லா மிங்கிள் ஆகி நடராஜனை முழு நேரம் கண்காணிக்கிற…அந்தாளு எங்க போறாரு…என்னென்ன செய்றாருனு எல்லா டீடெயில்ஸும் எனக்கு வந்தாகனும்… அப்புறம் நான் என்ன செய்றதுனு சொல்றேன்…இப்போ ஃபோன் வச்சதும் வாசல்ல போய் பாரு…ஒரு செல்போன் கிடக்கும்…அதிலேந்து தான் இனி நான் கால் பண்ணுவேன்…"

என்று அவன் கூற எரிச்சலாய் வந்தாலும் அதனை குரலில் காட்டாது சரி என்று ஒப்புக்கொண்டாள்.

“சரி…இப்போவாவது என் அப்பாட்டா போனை கொடுங்க…”

என்று சொல்ல அலைபேசி கை மாறியது.

“யம்மா…என்னடா இதெல்லாம்… எங்கள நினைச்சி நீ எதிலும் மாட்டிக்காத ராஜாத்தி…வீட்டுக்கு வந்திடுடா…என்னானாலும் பார்த்துக்கலாம்… உன்னை பிரச்சனையில் விட்டு நாங்க எப்படிடா நிம்மதியா இருப்போம்…”

“ப்பா… பயப்படாதீங்க…என்னை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது…நான் செய்ய போறது தப்பு தான்…ஆனால் உங்களைவிட எனக்கு நியாயம்,தர்மம் எதுவும் தெரியலை ப்பா… சீக்கிரமே வந்திடுவேன்…எல்லாருக்கும் ஆறுதலா நீங்க தான் இருக்கனும்…”

என்று பேசிவிட்டு கண்ணீரோடு நிமிர்ந்தவள் பார்வையில் சுவரில் மாட்டிருந்த புகைப்படம் விழ உறைந்து நின்றாள்.

அதில் அனுஷியாவின் தோளில் கைப்போட்டு நின்றவன் தான் அன்று பணப்பையில் இருந்த புகைப்படத்தில் இருந்தவன்.

தற்போது ஓரளவுக்கு அவளுக்கு விசயம் புரிய,

‘தப்பிக்கிறேன்… பேர்வழி என்று நாமே வந்து மாட்டிக்கொண்டோமே…’

என்று அதிர்ச்சியில் இருந்தவளை அனுஷியா வந்து அழைக்கவும் தான் நினைவுலகிற்கு வந்தாள்.
*
*
*
அதையெல்லாம் யோசித்தபடி தமிழோடு அமைதியாய் நடந்து வந்தவளுக்கு,

'பர்ஸ்ட் அனு ஹஸ்பென்டை தூக்கனும்னு பேசிக்கிட்டாங்கே… அப்புறம் நடராஜன் ஐயாவை டார்க்கெட் அப்படினு சொல்லாய்ங்கே…அப்படி என்ன தான் அவனுங்க நோக்கம்…விநாயகம்,பரமன் இதோ இப்ப ஃபோனில் பேசும் அந்த நரசிமன் எல்லாரும் வெறும் அம்புதானு நல்லா புரியுது…இவங்களை எல்லாம் எய்துற அந்த ஆளு யாராக இருக்கும்…இவங்க பேமிலியோட என்ன விரோதமா இருக்கும்…அந்த தடிமாடுங்களாம்…தலைவரு…தலைவருனு சொன்னாய்களே தவிர…அவர் பேரை சொல்லவே இல்ல…இல்லேனா கூட இங்க யாருட்டையாவது போட்டு வாங்களாம்…யாரா இருக்கும்…"

என்று பல கேள்விகள் மண்டையை கொடைய அதனை குறுக்கிட்டான் தமிழ்.

“நான் வந்து உங்களை வீட்டில் விடவா…”

பைக் அருகில் வந்ததும் தமிழ் கேட்க,

“இல்லங்க… வேண்டாம்…நான் போயிடுவேன்… தேங்க்யூ…”

என்றவள் விலகி நடக்க,

“ஹலோ…ஒரு நிமிஷம்…”

என்று அவளை நிறுத்தியவன்,

“உங்க பேர சொல்லவே இல்லை…”

என்று கேட்க லேசாய் புன்னகைத்தவள்,

“யவ்வனா…”

என்று கூற உதட்டை மடக்கி அழகாய் தலையசைத்தவன்,

“சரி… பாப்போம்…”

என்று கூறிவிட்டு அவன் பைக்கில் ஏறி சென்றுவிட,

‘பாப்போம்னா…??எப்போ…’

என்று கேட்க விழைந்த நாவை கட்டுபடுத்தி போகும் அவனையே பார்த்தபடி நின்றவள் பின் பெருமூச்சோடு,

‘இந்த இரணகளத்திலும் உனக்கு
கிளுகிளுப்பு கேட்குது…நடக்காத விசயத்தெல்லாம் கற்பனை கூட செஞ்சி பார்த்திடாத…’

என்று தன்னையே திட்டிக் கொண்டு திரும்பி நடந்தாள்.

வீட்டை அடைந்ததும் முதலில் எதிர்ப்பட்டது அனுஷியா தான்.

“ஏன் இவ்வளவு நேரம் யவ்வா…என்ன…ஏதுனு கேட்க உன்னுட்ட போன் கூட இல்ல…நான் பயந்துட்டேன் தெரியுமா…”

என்றவள்,

“சரி…நீ இன்னும் சாப்பிடலைல…வா…”

என்று அழைத்து செல்ல காரணமே இன்றி இப்பெண் செலுத்தும் அன்புக்கு தான் செய்ய போகும் துரோகத்தை நினைத்து குற்றவுணர்வு பெருக,

“இல்ல… மேடம்…பசிக்கல…நான் அப்புறம் போன்ற
சாப்பிடுறேனே…”

என்றாள்.

“மேடம் சொல்லாதே…அனுனே கூப்பிடுனா கேட்குறீயா…ஏன் பசிக்கல…கெஞ்சமாவது சாப்பிடலாம் வா…”

என்று அவள் அழைக்க அதற்குள் இவளை கண்டுவிட்டு வேகமாய் அருகில் வந்த வித்யா,

“எங்க போன யவ்வா…உன்னை தான் தேடிட்டு இருந்தேன்…நீ ஒரு ரெஸிபி சொன்னேல அதை ட்ரை பண்ணிருக்கேன்…வா…வந்து எப்படி இருக்கு…சொல்லு…”

என்று அவள் கைப்பிடித்து இழுத்து சென்றாள்.நடராஜனின் மூத்தமகன் பிரகாஷின் மனைவி தான் வித்யா…சிறுபெண் போல் துள்ளி திரியும் அவளுக்கு இரண்டு குழந்தைகள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

போகும் அவர்களை கண்டு சிரிப்புதான் வந்தது அனுவிற்கு…

முதல் முறை இங்கே யவ்வனாவோடு வந்த போது இவளை என்ன சொல்வார்களோ என்ற பயம் அவளுள் இருக்க யவ்வனாவோ தன் பேச்சு ஜாலத்திலே அனைவருக்கும் பிடித்தமான பெண்ணாய் மாறிவிட அவளை பற்றி பெரியதாய் யாரும் சந்தேகம் கொள்ளவில்லை.

1 Like

அத்தியாயம்-8
“கவின் கிளாஸ்… எங்கே மேடம்…”

பார்வையை சுழற்றிய யவ்வனா கேட்க,

“அதோ அந்த ப்ளாக் தான்…”

என்ற வித்யாவின் குரலிலோ மெல்லிய பதட்டம்…

அதை உணர்ந்த யவ்வனாவிற்கு புரியவில்லை எதற்கு இந்த பதட்டமென்று…
பள்ளிக்கு வந்ததில் இருந்தே வித்யா ரெஸ்ட்லெஸ்ஸாக கண்டு அதை அவளிடமே கேட்டாள்.

“ஏன் ஒருமாதிரி இருக்கீங்க… எதாவது பிரச்சனையா…”

“ம்ம்…எல்லாம் நான் பெத்து வச்சிருக்கேனே…அதை நினைச்சு தான்…இன்னைக்கு என்னென்ன சொல்லுவாங்களோனு நினைச்சாளே பக்கு பக்குங்குது…”

என்று அவள் சொல்ல ஒருவேளை கவின் படிப்பில் சற்று சுமாராக இருப்பானாக்கும்…அதை நினைத்து வருந்துகிறாள் என்றெண்ணி,

“ஏன் மேடம்…கவி செக்கேன்ட் ஸ்டாண்டர்ட் தானே படிக்கிறான்…எல்லாம் போக போக நல்லா படிப்பான்… அதற்கெல்லாம் ஏன் கவலை படுறீங்க…”

என்று சொல்ல,

“அட…ஏன் யவ்வா நீ வேற…படிப்பு வரலைனா கூட எம்புள்ள என்ன மாதிரினு பெருமையா சொல்லிட்டு போயிட்டே இருப்பேனாக்கும்…அதொன்னும் பிரச்சனை இல்ல…ஆனா இந்த பைய உலகத்து சேஷ்ட்டையும் ஒன்னா வச்சிருக்கு…பசங்களேந்து மிஸ்ஸுங்கு வரை எல்லாருட்டையும் தன் வாலுதனத்தை காட்ட வேண்டியது…யாரு பேச்சுக்கும் அடங்குறதே கிடையாது…படிக்கிறது ரெண்டாப்பு ஆனா பெரிய டானு மாதிரி இந்த நண்டு சிண்டெல்லாம் கூட்டு சேர்த்துக்கிட்டு இவன் செய்யுற அலப்பறை இருக்கே…ஷப்பா…மீட்டிங்க்கு மீட்டிங் இவனை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணவே அந்த மிஸ்ஸு ஒரு அரைமணி நேரம் எடுத்துபாங்க…”

என்று அவள் சொன்னதை கேட்டு சிரிப்பு பொங்கியது.

“சிரிக்காத யவ்வா…நான் சீரியஸா தான் சொல்றேன்…சின்னவளை பத்திகூட கவலையே இல்ல…அவ பாட்டுக்கு சமத்தா இருந்துப்பா…ஆனால் இவனை தான் சமாளிக்கவே பெரும்பாட இருக்கு…எப்பவும் இவுக அப்பா வருவாங்க…அவங்க முன்னாடி நிறுத்தி பேசவிட்டு நான் தப்புசிப்பேன்…இந்த தடவ மனுஷன் ஏதோ வேலைனு நைசா எஸ்ஸாகிட்டாரு…நான் என்ன சொல்ல போறேனே தெரியல…”

என்று புலம்பியவளை பார்க்க ஒரு பக்கம் பாவமாக தான் இருந்தது.

வித்யாவின் மூத்தமகன் கவினிற்கு இன்று பெற்றோர் - ஆசிரியர் கூட்டம்.
தேர்விற்கான மதிப்பீடினையும் அத்தோடு பிள்ளைகளின் பண்புநலன்களையும் கலந்தாயவே ஒவ்வொரு தேர்விற்கு பின்பும் நடத்தபடும்.

அதே போல் இன்று காலாண்டு தேர்வு முடிந்தபின் நடக்கும் மீட்டிங்கிற்கு தான் வந்திருந்தனர் வித்யாவும் யவ்வனாவும்…

கணவன் காலையிலே தனக்கு முக்கியமான வேலை இருப்பதால் இன்று வர இயலாது.மீட்டிங் முடிந்ததும் பிக்கப் செய்ய வருவதாக கூறியிருக்க தனியாக செல்ல வேண்டுமா என்று மலைப்பாக இருந்தது.

யாரை உடன் அழைத்து செல்லலாம் என்று யோசித்தவள் அனு மசக்கையின் சோர்வில் உறங்கி விட்டதால் யவ்வனாவை தன்னுடன் அழைத்துக் கொண்டாள்.

அவர்கள் கவினின் வகுப்பை வந்தடைய அங்கே ஏற்கனவே நிறைய பிள்ளைகளின் பெற்றோர்களும் அனைத்து பாட ஆசிரியர்களும் இருந்தனர்.

அவரவர் ரேங்க் கார்டை பெற்றோரிடம் ஒப்படைத்து அவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் பேசிவிட்டு கையெழுத்துட்டு அனுப்பி வைத்துக கொண்டிருக்க வித்யாவை பார்த்தும் பேன்ச்சில் அமர்ந்திருந்த கவின்,

“அம்மா…”
என்று ஓடி வந்ந அன்னையின் கையை பற்றிக் கொண்டவன் யவ்வனா புறம் திரும்பி,
“ஹாய் அக்கா…”

என்றவன்,

“இதான் எங்க கிளாஸ்…அதோ அந்த பென்ச்ல தான் நான் உட்கார்ந்திருப்பேன்…வாங்க க்கா…என் பிரண்ட்ஸ் எல்லாம் உங்களுக்கு காட்டுறேன்…”

சிறுபிள்ளைக்கே உரிதான ஆர்வத்தோடு பேச,

“டேய் நல்லவனே…பொறுடா… அப்புறம் உன் ப்ரெண்டெல்லாம் காட்டலாம்…”
என்று பிடித்து நிறுத்தினாள் வித்யா.
அப்பொழுது,

“கவின் அம்மா தானே நீங்க…”

என்று அவர்களை அணுகிய வகுப்பு ஆசிரியர் அவர்களை அழைத்து சென்றவர் அவனது ரேங்க் கார்டினை எடுத்து வித்யாவிடம் கொடுத்தார்.

எல்லா பாடத்திலுமே மதிப்பெண் நன்றாக எடுத்திருக்க அதனை கவனித்த யவ்வனா கவனின் புறம் குனிந்து,

“நான் பார்த்த வரைக்கும் நீ தப்பு தவறிக் கூட புக்க எடுக்க மாட்டீயே… அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு மார்க்…”

என்று கிசுகிசுப்பாய் கேட்க,

“அக்கா…நான் சிட்டி ரோபோ மாதிரி…சங் சுவைங்னு ஒரு வாட்டி பார்த்தாலே போதும்…”

என்று தன் முகத்தின் முன் கையை ஆட்டி கூறினான் அவளை போல் கிசுகிசுப்பாவே…

தொண்டையை கனைத்துக் கொண்ட ஆசிரியர்,

“கவின் நல்லா படிக்கிறான்…அதில் எந்த பிரச்சனையும் இல்லை…ஆனால் படிப்பு மட்டும் இருந்தால் போதாதே மேடம்…டிஸிப்லீன் ரொம்ப முக்கியம் இல்லையா…”

என்று அவர் தொடங்கவும்

'ஆஹா…ஆராம்பிச்சிடாங்களே…"
என்று வித்யாவுள் ஆபாய மணி அடித்தது.

யவ்வனா கவினை பார்க்க அவன் அப்பாவியாய் விழித்தான்.

“… ஆனால் அது உங்க பையனுக்கு கொஞ்சம் கூட இருக்க மாட்டேங்குது…எப்போ பாரு நான்-ஸ்டாப் டாக்கிங்…கிளாஸ கவனிக்கறேதே இல்ல…லெசன் நடத்தும் போது கிளாஸை டிஸ்டர்ப் பண்றா மாதிரி எதாவது ஸ்டுப்பிட் கொஸினா கேட்கிறது…”

'அப்படி என்னடா கேட்ப…"

மெதுவாய் யவ்வனா கேட்க,

"அவங்க சொல்றது புரியாம தான் கேப்பேன் க்கா…’
என்றான் பாவமாய்…

“…இவன் பண்றதோட கூட உள்ள பசங்களையும் கெடுக்குறான்…ஹோம் வொர்க் கொடுத்தா வீட்டுல எழுதாம இங்க வந்து சப்மிட் செய்யும் போது அவசர அவசரமா எழுதுறது…கிளாஸ் ஹார்ஸ்லே சாப்பிடுறது…”

‘இப்போ இல்ல…அது போன வருஷம்…’

“பர்மிஸன் கேட்காம கிளாஸை விட்டு வெளியே போறது…”

‘ரொம்ப அர்சென்டா சுச்சு வந்துச்சு…பர்மிஸன் கேட்க லேட் ஆகுமுனு ஓடிட்டேன்…’

“பசங்களுட்ட வம்பு பண்றது…அடிக்கிறது… டீச்சர்ஸுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்காமல் எதிர்த்து எதிர்த்து பேசுறது…”

என்று இன்னும் அவர் லிஸ்ட்டை நீட்டிக்கொண்டே போக ஒவ்வொன்றுக்கும் யவ்வனாவிடம் பதில் சொல்லிக்கொண்டே வந்தான் கவின்.

“டேய்…மகனே…என் வாத்தியாருட்ட கூட நான் இவ்வளவு பேச்சு வாங்குனது இல்லடா…”

என்று வித்யா கவலையாய் எண்ண பொறுக்க மாட்டாமல் ஆசிரியரின் பேச்சை யவ்வனா,

“குறுக்க பேசுறதுக்கு சாரி மிஸ்…ஆனால் நீங்க சொல்ற எல்லாத்தையும் நாங்க ஏத்துக்க முடியாது… அதெப்படி எங்க புள்ள செய்யுற எல்லாமே தப்புனு சொல்வீங்க…கிளாஸை கவனிக்கலனு சொல்றீங்க…கவனிக்காம எப்படி கொஸின் கேட்பான்…கேள்வி கேட்க கேட்க தானே அறிவு வளரும்…அதை பற்றி மேலும் மேலும் யோசிக்க தோணும்…சின்ன பையன் அவனுக்கு தெரிஞ்சா மாதிரி தான் கேள்வி கேட்பான்…அதை நாம தான் புரிஞ்சிக்கிட்டு பக்குவமா அவனுக்கு விளக்கனும்…ஹோம் வொர்க் எங்க எழுதினாலும் சப்மிட் செய்யாமல் இருந்ததில்லைல… அப்புறம் என்ன மிஸ்…என்னைக்காவது ரொம்ப பசிச்சிருக்கும் சாப்பிட்டு இருப்பான்…சின்ன பசங்க அடிச்சிப்பாங்க உடனே சேர்ந்துப்பாங்க…நாம தன்மையா சொன்னா கேட்டுக்க மாட்டாங்களா என்ன…??கேப்பேல கவின்…”

என்று அவள் கேட்டதற்கு வேகமாய் மண்டையை உருட்டினான்.

“அப்புறம் என்ன மிஸ்… இவ்வளவு கம்ப்ளைன்ட் சொல்றீங்களே…போன தடவையை விட இப்போ ரொம்ப நல்லா மார்க் எடுத்திருக்கான்… அதுக்கு பாராட்ட வேண்டாமா…நாம ஊக்குவித்தால் தானே பிள்ளைங்களும் ஆர்வமா கத்துப்பாங்க…நான் சொன்னதில்
தப்பேதும் இல்லையே மிஸ்…”

என்று அவள் முடிக்கும் போது அவர் கையெடுத்து கும்பிடாத குறை தான்…

அதன்பின் எதுவுமே பேசாமல் கையெழுத்தை வாங்கி கொண்டு அனுப்பிவிட வெளியே வந்ததும் அவளை கட்டிக் கொண்ட கவின்,

“சூப்பர் க்கா… தேங்க்ஸ்… தேங்க்ஸ்…”
என்று குதித்தான்.

“அந்த மிஸ் எவ்வளவு பேசுவாங்க தெரியுமா…அவங்க வாயவே அடைச்சுப்புட்டியே…போற எடத்துல பொழச்சிப்ப போ…”

என்றாள் வித்யாவும் சிரிப்புடன்…

“பின்ன என்ன மேடம்…சின்ன பிள்ளைங்க விளையாட்டா தான் இருக்கும்…அதுக்கு போய் குற்ற பத்திரிக்க வாசிச்சா…”
என்று அவள் கூற,

“அதுக்குனு இவன் கேட்குற குண்டக்க மண்டக்க கேள்விக்கெல்லாம் எனக்கே சில நேரம் டென்ஷனாகிட்டும்…அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்…”

என்று வித்யா கூற அதே சமயம் அவள் அழைப்பேசியும் ஒலித்தது.
பிரகாஷ் தான்.

எடுத்த உடனே,

“சாரிம்மா…என்னால இப்பவும் வர முடியாது போல…வேலை நெட்டி முறிக்குது…தமிழ் வருவான் அவனோட வந்திடுங்க…”

என்று அவன் கூற அவளும் புரிந்துக் கொண்டவளாய்,

“சரி பரவால்லங்க…ஆனால் ஏன் தமிழ் தம்பிய சிரமம்…நாங்க ஆட்டோ பிடிச்சே வந்திடுவோமே…”

என்றாள் சங்கடமாய்…
தமிழ் எனவும் சட்டென்று நிமிர்ந்தாள் யவ்வனா…

“நானும் சொன்னேன்டி…அவன் தான் நான் ப்ரீயா தான் இருக்கேண்ணா…போயிட்டு வரேன்னு கிளம்பிட்டான்…”

“ஹோ…சரி…அப்புறம் இன்னைக்கு மீட்டிங் அமோகமா போச்சு…”

“ஏன்… என்னாச்சு…”

“நீங்க வீட்டுக்கு வாங்க…சொல்றேன்…”

என்று கூறி வைத்தவள்,

“தமிழ் தான் அழைக்க வராராம்…”

என்று சொல்ல அவளுள் ஒரு இனிய படபடப்பு…

அன்றைக்கு பிறகு நிறைய முறை அவன் வீட்டிற்கு வந்திருந்தாலும் அவள் தூரமாய் நின்று பார்பாளே அன்றி அவன் முன் வரவில்லை.

ஏனோ அன்று அவன் அவ்வளவு விசுவாசமாய் பேசிய பின்னும் தான் செய்யும் வேலை எல்லாம் அவனுக்கு தெரிந்தால் என்ன செய்வான்…தன்னை பற்றி என்ன நினைப்பான் என்ற பயமே அவனிடம் விலகி நிற்க செய்தது.

ஆனால் இன்று அவனை நேரெதிரே பார்க்க தான் போகிறோம் என்னும் போது எழும் படபடப்பை மறைக்கவோ மறுக்கவோ முடியவில்லை.

“ஸ்கூல் முடியிற நேரமாச்சு…நான் போய் மதுவையும் அழைச்சிட்டு வரேன்…நீங்க இங்கேயே வெய்ட் பண்ணுங்க…”

என்று கூறி உள்ளே செல்ல யவ்வனாவிற்கு தன் ஸ்கூலின் அருமை பெருமைகளை அளந்துவிட்ட கவினிற்கு செவி சாய்த்து வேடிக்கை பார்த்தக் கொண்டிருந்தவளை,

“யவ்வனா…”

என்று ஆழ்ந்து அழைக்க பெற்ற குரலில் சிலிர்த்தவள் சட்டென்று திரும்பி பார்க்க அதே அசரவைக்கும் புன்னகையோடு நின்றிருந்தான் தமிழ்.

‘அய்யோ…இப்ப யாரு இவன புன்னகை மன்னனா வந்து நிக்க சொன்னா… மானங்கெட்ட மனசு மறுபடியும் சாய பார்க்குதே…’

என்று உள்ளுக்குள் புலம்பியவள் வெளியே மிக சாதாரணமாக பார்த்து,

“எப்படி இருக்கீங்க சர்…”
என்க அவனோ தொடர்ந்து,

“இன்னைக்கு தேவியார் தரிசனம் கிடைச்சிருக்குல சேமமா இருக்கேன்…நான் கூட தேவி மறுபடியும் திருச்சிக்கே போயிட்டீங்களோனு நினைச்சேன்…ஊரு இருந்துட்டே தான் கண்ல படலையோ…”

என்று கூற,

“அய்யோ… சித்தப்பா…அக்கா பேரு யவ்வனா…தேவி இல்ல…”

என்றான் கவின் அங்கே தானும் இருப்பதை உணர்த்துவது போல…

அவனுக்கு என்ன சொல்வது என்று விழித்தவன் பின் பேச்சை மாற்றும் பொருட்டு,

“ஆமா…இவங்க உனக்கு அக்காவா…இது உனக்கே ஓவரா இல்ல…”
என்றான்.

“ஏன் சித்தப்பா…”

என்று கவின் புரியாமல் கேட்க,

“உங்க அம்மா மாதிரி இருக்காங்க…அபாரமா அக்கானு கூப்பிட்டு சின்ன பொண்ணாக்க பார்க்குறீயே…நியாயமாடா இது…நீங்களாவது சொல்ல மாட்டீங்க…”

என்று அவனிடம் தொடங்கி அவளிடம் முடிக்க,

“ஏங்க.அவன் எப்படியோ கூப்பிடுறான்…உங்களுக்கு ஏன் நோவுது…”
என்றாள் கடுப்பாக…

கவினோ அதுக்குள்

“அப்போ ஆன்ட்டினு கூப்பிடவா…”

என்று இடைப்புக,

“தங்கமே…இதை தான் நான் எதிர்பார்த்தேன்…”
என்று ஹைஃபை கொடுத்தான்.

'ஏது…ஆன்ட்டியா…அடேய்…"

என்று அதிர்ந்தவள்,

“கவி…இந்த ஆன்ட்டி…ஆண்டானா எல்லாம் கூப்பிட கூட்டிட்டு போய் உன் மிஸ்ஸுக்கிட்ட கோத்து விட்ருவேன்…”

என்று அவனை மிரட்டி,
“உங்களுக்கு ஏன் சர் இந்த வேலை…”

என்று தமிழை கேட்க,

"எரிச்சலாகுதுல…அதே மாதிரி தான் நீங்க ‘சர்…’ போடும் போது எனக்கு இருக்கு…நான் என்ன உங்க டீச்சரா…இல்ல பாஸ்ஸா…சும்மா…சர் சர் னு "
என்றான்.

“உஃப்…இதுக்கு தான் இந்த பில்டப்-ஆ…யப்பா மொக்க மோகன் உங்களை பேர் சொல்லியே கூப்பிடுறேன்…இப்படி சீலிப்பர் செல்ஸ்ஸெல்லாம் கிளப்பி விடாதீங்க…”

என்று அவள் கூற அதற்கு கவின் ஏதோ சொல்ல வரவும்,

“உடனே நீ…சித்தப்பா பேரு தமிழ்… மோகன் இல்லேனு ஆரம்பிக்காத…”

என்று அவசரமாய் கூற தமிழ் வாய்விட்டு சிரித்தான்.

அதே சமயம் வித்யாவும் தன் இளைய மகள் மதுவுடன் வந்தாள்.

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா தமிழ்”

என்று அவள் கேட்க,

“இல்லண்ணி…இப்போ தான் வந்தேன்”

என்று வித்யாவிடம் கூறியவன்

“மது பாப்பா”

என்றபடி அவளை தூக்கி கொஞ்ச உடனே மூக்கு வேர்த்துவிட்டது கவினிற்கு…

“அவள மட்டும் தூக்குறீங்க…நானும் இங்க தானே இருந்தேன்…என்னை தூக்குனீங்களா…”

என்று சிணுங்களாய் கோவித்துக் கொள்ள,

“டேய்…மது சின்ன பொண்ணு…நீ பெரியவன் தானே…சரி வா உன்னையும் தூக்குறேன்…”

என்க மதுவும் அவனை சீண்டுவது போல் நாக்கை துருத்தினாள்.

“வேணாம் போங்க…”

என்று அவன் கோபமாய் முன்னால் போக,

“சரிதான் வாடா…வாலு…”

என்று மறுக்கையில் அவனையும் தூக்கிக்கொண்டவன் கார் அருகில் வந்ததும் தான் விட்டான்.

காரில் அவனுக்கு அருகில் சண்டையிட்டு போட்டி போட்டுக்கொண்டு மதுவும் கவினும் ஏறிக்கொள்ள இது ரெண்டையும் வச்சிக்கிட்டு…

என்று தலையில் அடித்துக் கொண்டு பின்னால் வித்யா ஏற அவளை தொடர்ந்து யவ்வனாவும் ஏறினாள்.

அதன்பின் கவினையும் மதுவையும் வம்பிழுத்துக் கொண்டும் அரட்டையடித்துக் கொண்டுமே அவர்கள் பயணம் தொடர,

"இவன் என்ன…எனக்குமேல பேசுவான் போலவே’

என்று எண்ணினாலும் அவனை இரசிக்காமல் இருக்க முடியவில்லை.அவனையே பார்த்துக் கொண்டும் அவன் பேசுவதை சிரித்து இரசித்துக் கொண்டும் வந்தவளுக்கு இப்பயணம் இப்படியே தொடராதா என்றிருந்தது.

நன்றாக பேசிக்கொண்டு வந்தவன் திடீரென ஓரிடத்தில் வண்டியை ஸ்லோ செய்தவன் விண்டோவை இறக்கி வெளியே தலையை நீட்ட அவளும் வெளியே பார்த்தாள்.

அங்கே ஒரு பெண்ணை மூன்று பேர் வழிமறித்து நிற்பது தெரிந்தது.

தமிழ் அவர்களை பார்த்தபடி ஹாரன் அடித்து அவர்கள் கவனத்தை தன்புறம் திருப்ப தமிழைக் கண்டதும் அப்பெண்ணின் முகத்தில் நிம்மதியும் மற்றவர் முகத்தில் கலவரமும் இன்ஸ்டெண்டாய் அப்பிக் கொண்டது.

அந்த பசங்களை ஒரு பார்வை பார்த்தவன் அப்பெண்ணை நோக்கி,

“நீ…சேகர் அண்ண மவ தானே…இன்னேரத்துல இங்க என்ன பண்ணுற…வீட்டுக்கு கிளம்பு”

என்று அதட்டலாய் கூற அவளும் வேகமாய் தலையை ஆட்டிவிட்டு நகர முற்பட்டாள்.

அந்த பசங்களும் அப்படியே கலண்டுக் கொள்ள எத்தனிக்க ஒருவன் மட்டும் திமிராய்,

“நா இங்க பேசிட்டு இருக்கேன்…என்ன நீ பாட்டு போற…”

என்று அவன் கூறியது இவர்களுக்கும் கேட்டது.

‘செத்தான்’ என்று வித்யா முணுமுணுக்க கதவை திறந்துக்கொண்டு தமிழ் இறங்கினான்.

அவன் வரவும் மற்ற இருவரும்,

“டேய் வேணாம்டா வாடா போயிருலாம்…”

என்று இழுக்க இவனோ அசையாமல் நின்றான்.

அருகில் சென்றதும் அப்பெண்ணை பார்த்து போ என்பதுப்போல் தலையசைக்க அவளும் உடனே நகர்ந்துவிட்டாள்.

அவளை தடுக்க கைநீட்டியவனின் கன்னத்தில் பளீரென்று ஒரு அரைவிட திடுக்கிட்டு யவ்வனா ஏதோ தனக்கே விழுந்தது போல கன்னத்தை பிடித்துக்கொண்டாள்.

என்ன பேசினான் என்றுக் கேட்கவில்லை எனினும் அவன் முகத்தில் அத்தனை கடுமை.பேசிக்கொண்டே மூவரையும் இன்னும் நாலு சாத்து சாத்தினான்.

“என்ன மேடம்…இவங்க பாட்டுபோய் இப்படி அடிக்கிறாங்க…”

என்று அதிர்ச்சியாய் வித்யாவை கேட்க அவளோ,

“தமிழ் அப்படி தான்…”

என்றாள் சாதாரணமாய்…

“அப்படி தான்னா புரியல்ல…”

“ம்ம்ம்…தமிழுக்கு வாய் பேசுதோ இல்லையோ கை ரொம்ப நல்லா பேசும்…யாரு என்னானு லாம் யோசிக்காது…தப்பா ரைட்டானு தான் பாக்கும்…”

“யாரும் இவரை கேக்க மாட்டாங்களா…”

“ஆளை பார்த்தா அடுத்தவங்க பேச்சுக்கு அடங்குறவர் மாதிரியா இருக்கு…இங்க யாரும் தமிழ எதிர்த்து பேசமாட்டாங்க…அப்படிங்குறதவிட அவர் அழுத்தமா ஒரு பார்வ பார்த்தாலே வாய மூடிறுவாங்க…”

என்னும் போது அவன் முதல் முறை தன்னை பார்த்த பார்வையில் தான் பயந்தது நினைவு வந்தது.

“அதுவும்…”

என்று ஏதோ சொல்லவந்தவள் அவன் கார் அருகில் வந்ததும் அப்படியே நிறுத்தினாள்.

உள்ளே ஏறியதும் அதுவரை இருந்த கடுமையெல்லாம் மறைந்து மீண்டும் அதே குறும்புன்னகை ஒட்டிக்கொண்டது.

“அந்நியனாடா நீயு…”

என்று வாயை பிளந்தது யவ்வனாவின் மனம்…

மீதி பயணத்திலும் அவனையே தான் பார்த்திருந்தால் ஆனால் ஒருவிதயோசனையோடு…

வீடு வந்ததும் அவர்களை இறக்கிவிட்டு வண்டியை திருப்ப,

“காஃபி குடிச்சிட்டு போலாம்…வா தமிழ்”

என்று வித்யா அவனை அழைக்க,

“இல்லண்ணி அப்புறம் வரேன்…அம்மா வேற கால் பண்ணிட்டே இருந்தாங்க…”

என்றவன் கவினிடமும் மதுவிடமும் டாட்டா காட்ட அவர்கள் முன்னால் சென்றதும் கடைசியாய் அவர்களை தொடர்ந்த யவ்வனா அவனை கடக்கும் நேரம்,

“அப்படி பார்த்தா என்னங்க அர்த்தம்”

என்று கேட்க ஜெர்காகி நின்றாள்.இதயம் படபடவென அடித்துக்கொள்ள முயன்று,

“என்ன சொல்றீங்க…புரியலையே…”

என்றாள் விளங்காதது போல்…

அவனோ,

“புரியல…ஹம்ம்ம்ஆனா எனக்கு புரிஞ்சிது…”

என்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.

‘மடச்சி…பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாக்குறது மாதிரி பார்த்து வச்சா…அவன் கவனிக்காம இருப்பானா…ஹைய்யோ போச்சு…என்னை பத்தி என்ன நினைச்சிருப்பான்…இருக்குற சிக்கல்ல ம்ச்…’

என்று ஒருபுறம் தன்னை எண்ணிக் கடுப்பானாலும் மனதின் ஒரு மூலையில் புரிஞ்சிது என்னும் போது அவன் இதழின் ஓரம் தெறித்த புன்னகை வெட்கம் கொள்ள வைத்தது.

காரை மில்லில் நிறுத்திவிட்டு தன் பைக்கை எடுத்துக்கொண்டு தமிழ் கிளம்ப மீண்டும் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.

‘என்ன இன்னிக்கி அம்மா ஓயாம அடிக்கிது…’

என்றெண்ணியவன் அழைப்பை ஏற்க,

“சொல்லும்மோய்…”

என்று கூறவும்

“உன்னை வீட்டுக்கு வரச்சொன்னேன்…இன்னும் எங்கடா சுத்துற…”

என்று கடித்து குதறாத குறையாய் வசுமதி சத்தமிட,

“என்னம்மாச்சு…வீட்டுக்குதான் வந்திட்டு இருக்கேன்…”

என்று சொல்ல ஒரு பதிலும் இன்றி மறுமுனையில் அழைப்பு துண்டிக்க பட்டிருந்தது.

“என்னாச்சு…”

என்று குழம்பினாலும் வீட்டிற்கு விரைந்தான்.

கதவு திறந்தே கிடக்க கூடத்தில் அன்னையை காணாது,

“அம்மா…”

என்று அழைத்தபடி உள்ளே வந்தவன் பின் ஏதோ தோன்ற தன் அறைக்குள் செல்ல அங்கே தரையில் கால்களை மடக்கி அதில் தலைசாய்த்து வசுமதி அமர்ந்திருக்க அவர் அருகில் ஒரு ட்ரவல் பேக் நிறைய பணத்தோடு திறந்து கிடந்தது.

இருங்க…இருங்க…இது நமக்கு நல்லா பரிச்சயம் ஆன பேக்போல் இருக்கே…ஆஹா…ஆம்…அதே தான்…யவ்வனாயை இத்தனை சிக்கலுக்கு உள்ளாக்கிய அந்த விநாயகம் கடையில் மனோ புகைப்படத்துடன் இருந்த அதே பேக் தான்.

1 Like

அத்தியாயம்-9
அதனை கண்டதும் தமிழ் ஆத்திரம் பொங்க,

“ம்மாஆஆ…”

என்று கர்ஜித்தவன் வேகமாய் சென்று அந்த பையை எடுத்து மூடினான்.

“உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா…அன்னிக்கே என் ரூம்ல எதையும் தொடாதேனு சொன்னேன்லஎதுக்கு வந்த…எல்லா விசயத்துலையும் தலையிடாதனு சொன்னா கேக்குறீயா …”

என்றவனை தீபார்வை பார்த்தவர் வேகமாய் எழுந்துவந்து அவன் சட்டையை பிடித்தார்.

“ஏன் நான் தலயிடமா வேற எவ தலயிடுவா…இத மறைக்க தான் என்ன உள்ளியே விடாமா தடுத்தியா…ஏதுடா இந்த பணம்,சொல்லுடா…தோளுக்குமேல வளர்ந்துட்டா நீ செய்யுற எதையும் நான் கேட்க மாட்டேன்னு நினைச்சியா…சொல்லுடா…”

என்று அவன் அன்னை அவனுக்குமேல் கோபமாய் உறும அவன் பதில் எதுவும் சொல்லவில்லை எனவும் ஆத்திரம் அழுகையாக,

“ஏண்டா உன் புத்தி இப்படி போகுது… நீ மறுபடியும் அந்தவீணாபோனவனோட சேர்ந்துட்ட தானேஅவன் கொடுத்தது தானே இந்த பணம்…சொல்லுடாஅய்யோ பாவி…என் மேல சத்தியம் செஞ்சியேடா இனிமே அவனோட எந்த சகவாசமும் வச்சுக்க மாட்டேனு.அப்போ எல்லாம் பொய்.வெறும் நடிப்பு அப்படிதானே…அவன் நல்ல இருப்பானா…என் புள்ளை வாழ்க்கையை பாழாக்கவே இருக்கானே…ஊருல எவன் எவன்கோ சாவு வருது…அவனுக்கு அது வராது…”

என்று அவர் சொல்லி முடிக்கவில்லை,

“அம்மாஆஆ…”

என்று அவன் போட்ட சத்தத்தில் அவர் உடல் நடுங்கிவிட்டது.கண்ணெல்லாம் கோவைபழமாய் சிவந்து கலங்கியிருக்க கோபத்தில் உதடுகள் துடிக்க நின்ற தோற்றம் ஒரு நிமிடம் பழைய தமிழே வந்தது போல் இருந்தது.

“அவனை பத்தி இன்னும் ஒரு வார்த்தை…ஒரு வார்த்தை பேசினீங்க…”

என்று விரல் நீட்டி எச்சரித்தவன் பின்,

“உன்னால எப்டிம்மா இப்படிலாம் பேச முடியுது…உனக்காக தான் எல்லாத்தையும் விட்டுடு இருக்கேன்.அவனும் விலகி போய்ட்டான்…அப்படி என்ன வஞ்சம் சாவுனுலாம் பேசுற அளவுக்கு…நல்லா கேட்டுக்கோ இந்த பணம் ஐயா சம்மந்தப்பட்டது…என் கையிலே இப்போதைக்கு இருக்கடும்னு ஐயா சொன்னத்தால தான் வச்சிருக்கேன்…”

என்றதும் அவர் முகத்தில் அதிர்ச்சியும் அதை தொடர்ந்து குற்றவுணர்ச்சியும் பிரதிபலிக்க அவர் ஏதோ சொல்லவறவும் கைநீட்டி தடுத்தவன்,

“எதுவும் சொல்ல வேண்டாம்… ஒரு விசயம் நியாபகம் வச்சிக்கோங்க… நான் ஒன்னு செய்ய நினச்சிட்டால் யாரு தடுக்க நினைச்சாலும் முடியாது…அதை மறைத்து நடிக்க எனக்கு எந்த அவசியமும் இல்ல…இருந்தும் சொன்ன வார்த்தையை நான் மாத்த மாட்டேன்…அவனை தேடி நான் மறுபடியும் போக மாட்டேன்…ஆனா அவனை நீங்க பேசுறது என்ன பேசுறா மாதிரி தான்…மறந்திடாதீங்க…”

என்று அழுத்தமாய் கூறியவனுக்கு தெரியாது அவனை தேடி தான் செல்ல போகும் நாள் வெகு தூரம் இல்லையென்று…

“தமிழ்…”

“தயவு செஞ்சி என்னை கொஞ்சம் தனியா விடுங்க…”

அவனையே பார்த்தப்படி தயக்கதோடு அவர் வெளியேற சோர்ந்துபோய் பொத்தென்று அமர்ந்துவிட்டான்.பழைய நினைவுகள் மனசை தீயாய் காந்தியது.

அதிலிருந்து மீள முடியாமல் தவித்தவன் பார்வையில் அந்த பணம் இருந்த பைப்பட,

“எல்லாம் இந்த கருமத்தால வந்தது”

என்று தலையிலே அடித்துக்கொண்டான்.அது தன் கையில் வந்து சேர்ந்த நாள் நினைவு வந்தது.

நடராஜனின் தொழில் பாதி இங்கே என்றால் மீதி திருச்சியில் என்பதால் இங்கேயும் அங்கேயும் மாறி மாறி இருப்பது தமிழுக்கு பழக்கபட்ட ஒன்று தான்.அப்படி அவன் திருச்சியில் தங்க நேரிடும் போதெல்லாம் அவன் கல்லூரி நண்பன் விவேக் உடன் தங்கிக்கொள்வான்.

அப்படி ஒருமுறை இருக்கும் பொழுது,

“மச்சான் ஒரு ஹெல்ப் செயுறீயா…”

என்று எங்கேயோ கிளம்பி இருந்தவன் அவசரமாய் தமிழிடம் வந்து கேட்டான்.

“சொல்லுடா…”

“எங்க பெரியப்பா புதுசா ஓப்பன் பண்ணிருக்க சித்தா க்ளீனிக்கு விளம்பரம் தர நோட்டீஸ் அடிக்கிற பொறுப்பை என் அப்பா என் தலையில கட்டிடாருடா…ஆர்டர்ல கொடுத்துடேன்…ஆனால் போய் வாங்க தான் நேரமே இல்லை.ரெண்டு நாளா கடையும் இல்ல…அவர் வேற பணத்த ஏதோ நான் முழுங்கிட்டா மாதிரி டெயிலீ போன் பண்ணி படுத்தி வைக்கிறார்…இன்னிக்கு கொஞ்சம் நீ போய் வாங்கிட்டு வந்திடுறியா…உனக்கு வேலை இருந்தால் வேணாம்…”

என்று அவன் கேட்க,

“என் வேலைலா முடிஞ்சிருச்சுடா,இன்னிக்கி ஊருக்கு கிளம்புறேன்… நீ கொடு… நான் வாங்கி கொடுத்துட்டு போறேன்…”

என்று சொல்ல “தேங்க்ஸ் மச்சி…”

என்றவன் இரசீதையும் பணத்தையும் கொடுக்க அதை பெற்றுக்கொண்டு அவன் நேராக சென்ற இடம் விநாயகா பிரிண்டர்ஸ்…

அவனை எதிர்க்கொண்ட ராஜிடம் இரசீதை கொடுத்து கேட்க அது அவன் எடுத்த ஆர்டர் தான் என்பதால் அவனுக்கு நன்றாக நினைவு இருந்தது.

“இதோ வெய்ட் பண்ணுங்க சார்…”

என்று ராஜ் உள்ளே செல்ல விநாயகம் கொடுத்த பணத்தில் இரண்டு நாளாய் அடித்த கூத்தை பற்றி தான் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.ராஜும் அவர்கள் பேச்சில் கலந்துக் கொண்டாலும் கைக்கள் இயல்பாக தான் வைத்த இடமான அலமாரி செலப்பில் கீழே இருந்த பேக்கை எடுத்து தனியே வைத்திருந்த செம்பிள்ளோடு பில் போட்டு எடுத்து சென்றான்.

பேச்சு சுவாரசியத்தில் ராஜும் பையை மீண்டும் ஒரு முறை சரிப்பார்க்க விழைவில்லை.

பில்லைக் கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்டு அந்த பையை தமிழிடம் ஒப்படைத்தான்.

அதனை வாங்கிய தமிழும் உள்ளே சரியாக இருக்கிறதா என்று பார்க்க விழையவில்லை.

எடுத்துக் கொண்டு வெளியே வந்த தமிழ் தன் பைக்கில் டேன்க் மேல் வைத்து ஹெல்மெட் அணிந்தவன் வண்டியை கிளப்பிய சில அடிகளிலே ஒரு பெண் வண்டி முன் விழுவதுபோல் வர,

“ரோட்ட பாத்து போக மாட்ட சாவுகிறாக்கி…”

என்று கத்திய அவனும் அவள் முகத்தை சரியாக பார்க்கவில்லை.

“நீ வண்டிய ஒழுங்கா ஓட்டிடு போடா,மெட்டல் மண்டைய்யா…”

என்று திட்டிய யவ்வனாவும் அவனையும் அவன் வண்டியில் இருந்த பேக்கையும் கவனிக்கவில்லை.இது தற்செயலோ இல்லை விதியின் செயலோ யான் அறியேன்.

பாதி தூரம் சென்றதும் தான்,

“நாம் பாடிற்கு வாங்கிக்கொண்டு வந்துவிட்டோம் எண்ணிக்கை சரியாக இருக்குதானு கூட பார்க்கலஅடுத்தவன் வேலைனா உனக்கு அவ்வள்வு அலட்சியம் இல்ல…”

என்று மனசாட்சி கேள்வி கேட்க,

“சரி இப்போ பார்த்துட்டு எதாவது சரியில்லேனா…மறுபடியும் நாமே போய் மாத்திக்கொடுப்போம்…”

என்று சமாதானப் படுத்திக்கொண்டவன் விவேக்கின் அறைக்கு வந்ததும் முதல் வேலையாய் அந்த பேக்கை திறந்துபார்க்க பார்த்த நொடி திகைத்துவிட்டான்.

அவ்வளவு பணம்!!!அதன் மேல் சிகப்பு மையில் வட்டமிட பட்டிருந்த மனோவின் புகைப்படம்!

“எப்படியாருக்கு இந்த பணம்…அதுவும் மனோவின் புகைப்படத்தோடு…என்னிடம் வேண்டுமென்றே சேர்க்க நினைத்து வந்ததா…”

“ஒரு நிலையில் நில்லாமல் குழம்பிய மனதை அமைதிப்படுத்தி நிதானமாய் சிந்திதான்…”

“இவ்வளவு பணம் இருப்பது தெரிந்தால் நிச்சயம் அசால்டாக எவனும் தூக்கி கொடுக்க மாட்டான்…இது வேறு எங்கோ செல்ல வேண்டியது தன்னிடம் வந்து சிக்கியுள்ளது…”

என்பதை யூகித்தவன் துரிதமாக செயல்பட தொடங்கினான்.
நோட்டீஸிற்கு வேறு ஏற்பாடு செய்து தந்தவன் அவனுக்கு தெரிந்த ப்ரெய்வேட் டிடெக்டிவ் ஏஜண்ட் ஒருவரை அன்றே அணுகி விநாயகம் பிரிண்டர்ஸின் முதலாளியையும் அங்கே வேலை செய்யும் மற்றவர்களையும் பற்றியும் முழுமையான தகவல் திரட்டி தர கேட்டுக் கொண்டு நேராக நடராஜனிடம் வந்து நின்றான்.

அவரிடம் அவன் அனைத்தையும் கூற கேட்ட அவருக்கும் அதிர்ச்சி தான்.

‘நான் என்ன நடக்க கூடாதுனு நினைச்சி மனோவை விலகி வச்சேனோ அதுவே நடக்குது…’

என்று மிகுந்த வருத்தோடு அவர் சொல்ல,

“என்ன ஐயா சொல்றீங்க அப்போ உங்களுக்கு தெரியுமா…”

என்று அதிர்ந்தவன் பின்,

“அது யாருனு சொல்லுங்கய்யா… அப்புறம் இந்த தமிழ் யாருனு நான் அவங்களுக்கு காட்றேன்…”

என்று கூற,

“எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்யுற விசயமில்ல தமிழ்… நீ தான் விசாரிக்க சொல்லிருக்கேல…எதுவும் ஊர்ஜிதம் ஆகட்டும்…அதுவரை நமக்குள்ளே இந்த விசயம் இருக்கட்டும்… அந்த பணம் உன்னிடனே இருக்கட்டும் தமிழ்…அதை தேடி யாரவது வந்தாலும் நல்லது தான்…”

என்றவர் இனியும் மனோவையும் மருமகளையும் தனியாக விடமுடியாது…

என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.அதன் பின்னர் தான் அனுவை அழைத்தது எல்லாம் நடந்தது.

மற்றவர்களை பற்றி முழுமையான விவரம் வந்துவிட்டாலும் இன்னும் விநாயகத்தை பற்றி தகவல் சரிவர தெரியவில்லை.அவர் நேரடியான தொழிலாய் பிரிண்டிங் பிரெஸ் இருந்தாலும் மறைமுகமாய் இன்னும் ஏதோ ஏதோ இருப்பதை தோண்டி துருவி கண்டு பிடித்த டிடெக்டிவ் சில நாளில் அவரை பற்றி எல்லாம் அடங்கிய ரிப்போட்டை சொல்வதாக சொல்ல அதற்காகவே காத்திருந்தான்.அதில் யவ்வனாவும் இருப்பது தெரிய வரும் போது???

1 Like

அத்தியாயம்-10

அந்தி சாயும் வேளையில் மாடியில் காய வைந்திருந்த துணிகளை வித்யா எடுத்துக் கொண்டிருக்க அருகில் பந்தலால் சிறு குடில் போல் அமைக்க பட்டிருந்த இடத்தில் அனு தலையை தாங்கியபடி அமர்ந்திருக்க அவளுக்கு பின்புறம் இருந்த குட்டிசுவரை பிடித்தபடி வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்றாள் யவ்வனா.

துணிகளை கையில் ஏந்தி வந்த வித்யா அனுவின் அருகில் இருந்த மேசைமீது போட்டு ஒன்றொன்றாக மடிக்க துவங்கியவள் சோர்ந்திருந்த அனுவை கண்டு,

“மயக்கமா வருதா அனு…போய் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்ல…இந்த மாதிரி நேரத்துல உடம்பு ரொம்ப அசதியா தான் இருக்கும்…கவி வயித்துல இருந்தப்போ முத நாலு மாசம் கிட்ட என்னால படுக்கைய விட்டு எழகூட முடியல…”
என்றவள்
" டாக்டரம்மா…உங்களுக்கு தெரியாததா…எடுத்து சொல்லலாம்ல…"
என்றாள் நக்கலாக…

யவ்வனாவை பற்றிய உண்மை வித்யாவிற்கு தெரிந்துவிட்டது.அதாவது அனுவிற்கு சொல்லப்பட்ட அதே விசயம் வரை…அனு-யவ்வனாவின் உரையாடலை தற்செயலாய் கேட்டுவிட்டபடியால் அதன்பின் அவளிடம் மறைக்க முடியவில்லை.

ஆனால் விசயம் அறிந்ததும் வித்யா,

"மாமாவிடம் மறைப்பது சரியல்ல… அவரிடம் சொன்னாலே போதும்…அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார்…’
என்று கூறி நடராஜனிடம் செல்ல துடித்தவளை சமாளித்து தடுத்து நிறுத்தி வைப்பதற்குள் போதும் போதுமென்றானது யவ்வனாவிற்கு…

“ஏன் மேடம்…நீங்க வேற…”
என்றாள் அசடு வழிந்தாலும்,

“அவங்க உடம்புக்கு ஒன்னுமில்லங்க…எதையோ நினைச்சி கவலை படுறாங்க”

என்றாள் சரியாக…
அப்போதிலிருந்து அவளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.ஆனால் கேட்க தான் சற்று தயக்கமாக இருந்தது.இந்த சில நாட்களிலே அனுவின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு அத்துப்படி…
காரணமின்றி அவள் தன்மீது காட்டும் அக்கறையில் யவ்வனாவின் மனம் உருகி தான் போனது.அது அவளையும் அறியாமல் ஒரு ஆழமான நேசத்தை அவள் மீது கொள்ள வைத்தது.

“ஏன் தலைவனை காணாம பசலை நோய்யா…”

என்று விளையாட்டாய் கேட்டாலும் பின் அவள் தலைக்கோதி,

“அப்படியா அனு…”

என்றாள் பரிவோடு… நிமிர்ந்து அமர்ந்த அனு,

“அவரோட கொஞ்சம் சண்ட…”

என்றாள் தயக்கமாக…

“ஏன்டா…”

“நீங்களே சொல்லுங்க க்கா…அவர் எப்போ வரதாய் சொன்னாரு…இன்னும் வேல வேலனு ஒருவாரம் ஆச்சு வந்தபாடில்ல…கல்யாணத்திற்கு அப்புறம் அவரை பிரிந்து இருந்ததே இல்ல…இங்க நம்ம வீட்டை பத்தியும் உங்க எல்லாரை பத்தியும் நிறைய சொல்லியிருக்காரு…எல்லாரையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணாரு…ஆனால் இப்போ நானே இங்க வந்திட்டேன்…அவர் அங்க என்ன கலட்டுறாருனு ஒருக்கோவம்…அதான் ஃபோன் பண்ணினப்போ கொஞ்சம் ரொம்பவே கோபமா அவரை” பேசக்கூட விடாம திட்டிடேன்…

“அவன் தான் நாளைக்கு வரானே அப்புறம் ஏன்…”

“அதை சொல்ல அவர் ஃபோன் பண்ணின போது தான்இப்படி பேசிட்டேன்…அவரும் ஃபோனை கோபமாய் வச்சிட்டாரு…அப்புறம் அழைக்கவே இல்லை…அதான் மனசு கஸ்டமா இருக்கு…”

என்று அவள் வருத்தமாய் சொல்ல,

“இவ்வளவு தான் மேட்ரா… நான் கூட என்னவோனு பயந்துட்டேன்…இதுக்கெல்லாம் கவலை பட ஆரம்பிச்சா வருசம் முழுக்க பட்டுடே இருக்க வேண்டி தான்…புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்து ஒருத்தரை ஒருத்தர் வாயிக்கு வந்தபடி திட்டுவதும் அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே ரொம்ப பேசிட்டோமோனு ஒருதருக்காக மற்றவர் வருத்தபடுவதும் இந்த கல்யாண வாழ்க்கையில சகஜமப்பா…”

என்று அனுபவ இஸ்திரியாக புத்திமதி சொன்னாள்.

“இருந்தாலும்…அவரே வொர்க் டென்ஷனில் இருப்பாரு…இதுல நான் வேற …”

என்று அவள் மீண்டும் முதலில் இருந்து துவங்க,

“அடடடா… அதெல்லாம் உன்ற வீட்டுகாரரு அடுத்த நிமிடமே மறந்திருப்பாரு…நீ போட்டு மாஞ்சிக்காத…”

என்றவள்,

“ஆனாலும் நீ ரொம்ப அப்பாவி அனு… எப்படி இந்த மனோட்ட வந்து மாட்டினே…”

என்று சிரிப்போடு கேட்க,

“ம்ம்ம்…உங்களுட்ட பிரகாஷ் சர் மட்டினா மாதிரி…”

என்று சட்டென்று கவுண்டர் கொடுத்த யவ்வனா வித்யா முறைக்கவும்,

“ஈஈஈ…ப்லோவுல வந்திடுச்சு…”

என்று இளிக்க அனுவும் சிரித்துவிட்டாள்.

“ஓய்…என்ன நீயும் அவளோட சேர்ந்து சிரிக்கிற…உன் புருஷனோட சேர்ந்து தான் எனக்கு வாய் ஜாஸ்தியாச்சுனு இப்ப வரை அத்தை சொல்லுவாங்க… தெரியுமா…”

என்ற வித்யாவை பார்த்து,

“ஏங்க இதெல்லாம் நம்புறா மாதிரியா இருக்கு…”

என்று மீண்டும் யவ்வனா கிண்டலாய் சிரிக்க,

“நிஜமா சின்ன வயசுல அவனோட எவ்வளவு ரகளை பண்ணிருக்கேன் தெரியுமா… அதுக்கெல்லாம் சேர்த்து தான் இப்போ நான் பெத்ததுட்ட அனுபவிக்கிறேன்…”

என்று போலியாக சலித்துக்கொள்ள மனோ இவர்களது சேட்டையை பற்றி கூறி நிறைய கேட்டிருந்ததால் வித்யா சொன்னதை கேட்டு சிரித்தாள் அனு.

ஆனால் யவ்வனாவோ,

“சின்ன வயசுலயா…அப்போலேந்தே உங்களுக்கு இவங்களை தெரியுமா…”
என்று குழப்பமாய் கேட்க,

“ஹேய்…என் சொந்த தாய்மாமா பசங்கல எனக்கு தெரியாதா…”

என்று கூற யவ்வனாவிற்கு இது புதிய தகவல்.‘ஹோ…’ என்று கேட்டுக்கொண்டாள்.
ஆமா…சின்ன வயசுல லீவ் விட்டா போதும் அப்பா,அம்மா வாராங்களோ இல்லையோ நானும் என் தம்பி விஷாலும் இங்க வந்திடுவோம்…நாங்க மனோ மூன்னு பேரும் சேர்ந்து வீட்டையே ரெண்டாக்கிடுவோம்…அத்தை தான் எங்களை சமாளிக்கலாம் முடியாம திணறுவாங்க…"

என்று அன்றைய நினைவில் அவள் சிரிக்க,

“அப்போ பிரகாஷ் அத்தான்…உங்க கூட்டனில இல்லையா…”
என்று அனு கேட்டாள்.

“எங்க…அவங்க வயசு பசங்களோட தான் இருப்பாங்க…அதுவும் அவர் முறைச்சி முறைச்சி பாப்பாரா எனக்கு பயமா இருக்கும்…அதான் அவரை முன்வாசல பார்தா நான் பின் வாசல்ல போய் ஒளிந்துபேன்…”

என்றவளை இருவரும் சுவாரஸ்யமாய் பார்க்க,

“முறைச்சி…முறைச்சா…”

“ஹம்ம்…அந்த மனுஷன் என்னை சைட் அடிச்சிருப்பாருனு நான் என்னத்த கண்டேன்…”
என்று அலுத்துக் கொள்வது போல் சொன்னாலும் அவள் முகத்தில் வெட்க புன்னகை…

“சரியான அப்பா கோண்டு…மாமா என்ன சொன்னாலும் ஆமா சாமி போடுவாரு…ஆனால் இந்த மனோ இருக்கான் பாரு எதுக்கெடுத்தாலும் எதிர்த்துக்கிட்டு தான் இருப்பான்…படிப்பு…வேலைனு எல்லாமே…நான் அப்போவே சொல்வேன்…இந்த பய கண்டிப்பா லவ் மேரேஜ் தான்னு…அப்போ பெருசா அம்மா காட்டுற பொண்ணுக்கு தான் தாலி கட்டுவேன்…வீடு கட்டுவேன் னு பீலா விட்டான்…ஆனால் நான் சொன்னது தான் உண்மையாச்சு…”

என்று குறும்பாக கூறியவள் பின் சற்று சீரியஸாக,

“இது மாமாக்கும் தெரியும்…அவர் எப்போமே மனோ விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிச்சதே இல்லை…ஆனால் உங்க விசயத்துல ஏன் அவ்வளவு கோபப்பட்டாருனு புரியலை…அவன் சொல்லாம கொல்லாம மாலையும் கழுத்துமாய் வந்து நின்னது தப்பு தான்…அதுக்குனு வீட்டுலே சேர்க்க மாட்டேன் சொன்னப்போ நாங்க துடிச்சு போயிட்டோம்…எதிர்த்து யாரும் ஒன்றும் பேசுவும் முடியல… ரொம்ப செல்லமா வளர்ந்த பிள்ளையா தனியா என்ன கஷ்டம் படுறானோனு ரொம்ப வருத்தமா இருந்தது…”
என்று கூற அனுவிற்கும் சங்கடமாய் இருந்தது.

“என்னால தான்…விசயம் தெரிந்ததும் அப்பா ரொம்ப ஆத்திரப்பட்டாரு…அம்மா எனக்காக பேசி அவங்களுக்கும்…அவங்களும் பாவம்…நிறைய பட்டுடாங்க…உடனே எவனையோ புடிச்சு அவன் தான் மாப்பிள்ளைனு சொல்லவும்…அந்த நேரத்துல மேரேஜ் பண்ணிக்கிற தவிர வேற எதுவுமே தோணல…”

என்று வருத்தமாய் அனுவும் சொல்ல அவளது வருந்திய முகத்தை காண பொறுக்காது யவ்வனா,

“உங்களுக்காக எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் தப்பே இல்ல…”
என்றவள் வித்யாபுறம் திரும்பி

“நீங்களே தேடினாலும் எங்க அனு மேடம் மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பாங்களா மேடம்…அவங்க கிடைக்க உங்க கொழுந்தனார் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்…”

என்று அவளுக்காக போர் கொடி தூக்க அவள் கேட்ட பாவனையில் சிரித்த வித்யா,

“ஆமா…ஆமா…கிடைக்காது தான்…ஒத்துக்குறேன்…”

என்றவள்,

“ப்பா…உன் தீவிர பக்தையாவே ஆகிட்டா அனு…”

என்று சிரித்தாள்.

“திக்கத்து நின்னவள தெய்வ மாதிரி இருந்து அடைக்கலம் கொடுத்த அவங்களுக்கு பக்த்தையா இருந்தாலும் தப்பில்ல மேடம்…”

என்று உணர்ச்சிகரமாய் யவ்வனா கூற,

“ஹே…என்னப்பா…பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற…உன்னோட எனக்கு ஒரு சிஸ்டர் ஃபீல் தான் எப்பவும் இருக்கும்…”

என்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் அனு.யவ்வனாவின் மனமோ குற்றவுணர்வில் இன்னும் இன்னும் குறுக கண்கள் கலங்கினாள்.

சூழ்நிலையை இலகுவாக்க,

“ஹேய்…போதும் ப்பா…பின்னாடி லாலாலால பிஜியம் தான் மிஸ்ஸிங்…இப்படி சென்டிமென்ட் பிழியிறீங்க…யவ்வனா…பேசாமல் நீ எங்க ஊருலேயே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடு…உன் அனுவை பிரிய தேவையில்ல பாரு…”

என்று கண்ணடிக்க,

“ம்க்கும்…நான் இருக்க இருப்புக்கு…இப்போ கல்யாணம் ஒன்னு தான் குறை…போங்க மேடம்…”

என்றாள் அவளோ சலிப்பாக…

“நிஜமாதான் சொல்றேன்…ஹம்ம்ம்…வசுமதி அம்மா கூட அவங்க பையனுக்கு பொண்ணு பார்க்கிறதா அன்னைக்கு வந்து பேசிட்டு இருந்தாங்கல்ல அனு…”

என்று பொடிவைத்து வித்யா கேட்க அனுவோ எதுவும் அறியாமல்,

“தமிழ் அம்மாவை தானே சொல்றீங்க…ஆமாக்கா…பேசுவோமா…”

என்று சாதாரணமாய் அவளை வம்பிழுக்க விழுக்கென்று நிமிர்ந்து வித்யாவை பார்த்தாள்.

அவளோ கண்களை சிமிட்டி உதட்டில் குறும்போடு,

“என்ன யவ்வா…பேசட்டுமா…”

என்று புருவம் உயர்ந்த அகப்பட்டு கொண்ட பாவணையில் திருதிருத்தாள்.

வித்யாவின் கேலியிலும் அதற்கு யவ்வனாவின் முழியிலும் இதில் வேறெதோ இருக்கும் போலவே என்று யோசித்த அனு,

“என்ன அக்கா…எனக்கு தெரியாம எதாவது நடக்குதா…”

என்றாள்.

“நடக்குதாவா…படமே ஓடுச்சு…அனு…நீ தான் மிஸ் பண்ணிட்ட…டைடில் கூட வைக்கலாம்…கண்ணாலே காதல் சொன்னாலேனு… எப்படி…”

என்று வித்யா விடாமல் வாரவும் அவள் முகம் சிவக்க,

“இந்த விளையாட்டுக்கு நான் வரலை…ஆள விடாங்க ப்பா…”

என்று துள்ளி ஓடிவிட அவர்கள் சிரிப்பு அவளை தொடர்ந்தது.

தலையில் தட்டிக்கொண்டே படிக்கட்டில் ஏறங்கிய யவ்வனாவிற்கு வெட்கமும் சங்கடமுமாய் இருந்தது.

'அறிவே உனக்கு இல்ல…அஹ்ஹ்ஹ்…வித்யா மேடமும் கவனிச்சிருக்காங்க…அன்னைக்கு அவரும் சொன்னாரு…ஒரு சைட்டு கூட ஒழுங்கா அடிக்க தெரியலை… நீயெல்லாம்…த்தூ…"

என்று இன்னும் சிலபல வார்த்தைகள் போட்டு தன்னை தானே கரித்துக் கொண்டே இறங்கியவள் கடைசி படி வந்தபோது,

“என்னாச்சு பிரகாஷ்…”

என்று கேட்ட அவன் குரலில் இதயம் ஒருமுறை எம்பி நின்றது.

‘இங்க எங்க…’
என்று சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு படிக்கட்டை ஒட்டி இருந்த அறையில் உள்ளனர் என்பது புரிய நகர மறுத்த கால்களால் அப்படியே நின்றுவிட்டாள்.

அங்கே பிரகாஷ் முகத்தில் கவலையும் சூழ,

“மாமா கால் பண்ணிருந்தாங்க… மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறானுங்களாம்…”

என்றான் நெற்றியை தேய்த்தபடி…

“இப்போ என்னடா…”

என்று கவலையாய் நடராஜன் கேட்க,

“ப்ராடெக்ஸ் லோவ் குவாலிட்டி மெடீரியல்ஸ்ல புரோடியூஸ் பண்ணறதாவும் அதனால நிறைய கன்சியுமர்ஸ் பாதிக்க பட்ட மாதிரி சித்தரித்து கேஸ் கொடுத்துருக்காங்க…இதுல அரசியல் பின்னணி ஏதோ இருக்கிறதால மீடியாவும் இதுல சேர்ந்து பிரச்சனைய பெருசாக்குறாங்க… ஏற்கெனவே விழுந்த அடியில் இருந்து பெரும்பாடு பட்டு எழுந்தாங்க இப்போ மறுபடியும்…பிஸ்னெஸ்ல இப்போ தான் கால் பதிச்சிருக்கான் விஷால…இப்படி ஃபெயிலியர் மேல ஃபெயிலியரால அவன் ரொம்ப நொந்து போயிருக்கான் அப்பா…யாரு அவங்கள இப்படி சுத்தி சுத்தி அடிக்கிறதுனு தெரியல…”

என்றவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சோர்ந்து அமர்ந்தான்.

மேலும் தமிழோ,

“ஆமா ஐயா…அத்தோட நம்மளோட முக்கியமான ஆர்டர்ஸூ வரிசையா எல்லாம் கேன்சல் ஆகிடுச்சு…முக்கியமான திட்டம் எல்லாம் வெளியே லீக் ஆகிருக்கு…அதனால எவ்வளவு நஷ்டம்னு உங்களுக்கே தெரியும்…யாரைனு சந்தேகப்பட…பேமிலியவே யாரோ குறி வைக்கிறாங்க… எல்லாத்திற்கும் காரணம் ஒருத்தவங்க தான்னு நிச்சயம் சொல்லுவேன்…அது யாருனு உங்களுக்கு தான் தெரியும்…ஆனால் நீங்க சொல்ல விரும்பல…ஏன் ஐயா…”

என்று அவனது குரலில் பணிவை மீறி ஒரு கோபம் தெறித்தது.
அவனது கடுமையில் எச்சில் கூட்டி விழுங்கிய யவ்வனாவிற்கு சில நாட்களாய் நடுநிசியில் யாரும் அறியாமல் அவர்கள் அலுவலக அறையில் தான் செய்த தில்லு முல்லுகள் நினைவில் வந்து தொலைத்தது.

ஆழ்ந்த யோசனையில் இருந்தார் நடராஜன்.நடந்த விஷயங்களில் தன்னுடைய நஷ்டங்கள் கூட அவருக்கு பொருட்டாய் தெரியவில்லை.
ஆனால் தன் தங்கை குடும்பத்தில் அடுத்தடுத்து வரும் துன்பங்களையும் அதற்கான காரணங்களை ஓரளவு யூகித்து இருந்ததாலும் அவருக்கு வேதனையாய் இருந்தது.

தமிழ் சொல்வது சரி தான்.ஆனால் இவ்விசயத்தை ஆராய்ந்து பழைய சம்பவங்கள் தற்போது அனைவருக்கும் தெரிய வருவதை அவர் விரும்பவில்லை.ஆனால் எந்த உண்மையையும் ஒரு நாள் வெளியே வந்து தான் ஆகும் அல்லவா…அது அவர் வாய்வழியே வெளிப்படும் தருணம் வெகு தொலைவில் இல்லை.

“தமிழ்…அப்போ சொன்னது தான் இப்பவும்…யாரென்று உறுதியாகாம யாரையும் வார்த்தைக்கு கூட சந்தேகப்பட்டு நான் சொல்ல விரும்பலை…ஆனால் ஒன்னு புரிஞ்சிக்கோங்க…பெயர் வெளிய வராமல் ஒளிந்து மறைந்து செய்யும் இவனை எதிர்ப்பது ஒரு விஷயமில்ல…ஏதோ நேத்து முளைத்த காலான் தான்…கிள்ளி எறிய வேண்டிய நேரத்தில் அதை செய்ய தான் போறோம்…”

என்றவர் பின்,

“நீ மாமா வீட்டுக்கே போ…விஷாலோட சேர்ந்து லீகலா என்ன செய்யலாம்னு பாரு… எக்காரணம் கொண்டும் வித்யாவுக்கு தெரிய வேண்டாம்…”

என்று பிரகாஷிடம் கூறியவர்,

“எனக்கு ஒரு வேலை இருக்கு…அதை நான் இப்போவே முடித்தால் தான் சரி வரும்…”

என்று கூறிய உடன்,

“தனியா எங்கையும் போக வேண்டாம் ப்பா…”

என்று பிரகாஷும்

“நானும் வர்றேன் ஐயா…”
என்று தமிழும் ஒரே நேரத்தில் சொல்ல,

“டேய்…எனக்கு என்னை பார்த்துக்க தெரியும் டா…வயசாகிட்டா என்ன…நான் இப்பவும் அதே நடராஜன் தான்…”

என்று அழுத்தமாய் கூறியவர்
தமிழிடம்,

“உன்னுட்ட ஒரு வேலை ஒப்படைத்து இருந்தேன்…அது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ…முடிக்க பாரு…”

என்று அந்த விநாயகம் பற்றிய விபரம் சேகரிக்க சொன்னதை சுட்டிக் காட்ட அவன் சரி என்று தலையசைத்து,

“அப்போ நான் வரேன்…”

என்று விடைப்பெற்று வெளியே வர அதுவரை அங்கேயே சாய்ந்து நின்று பிஸியாக ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யவ்வனா கதவு அருகில் தமிழை கண்டதும் வேகமாய் அங்கிருந்து ஓட எத்தனித்து படிக்கட்டில் வெற்றிகரமாய் சரிந்தாள்.

“அம்மாஆஆஆ…”
என்று இடுப்பை பிடித்துக் கொண்டு அவள் முனங்கினாள்.

வெளியே வந்தவன் அவளை அந்நிலையில் கண்டதும் அதுவரை இருந்த டென்ஷன் நீங்கி சிரித்தவன்,

“நான் பார்க்கிற வாசிக்கெல்லாம்…கீழ விழுந்து புதையல் எடுக்குறதே வேலையா…”

என்று நக்கலடிக்க முறைத்தவள்,

“கீழே விழுந்தவங்களுக்கு உதவாம எப்பவும் பார்த்து கெக்கே பெக்கேனு சிரிக்கிறது தான் உங்க வேலையா…”

என்றவள், “விழறதுக்கு முன்னால தான் பிடிக்க தெரியல…பாவம் விழுந்து கஷ்டப்படுறளே தூக்கி விடுவோமேனு தோணுதா…இவரை வச்சிக்கிட்டு…”

என்று முணுமுணுத்தது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

“ஆமா…இங்க படம் ஓட்றாங்க…ஹீரோயின் விழும் முன்னால ஹீரோ பாய்ந்து வந்து காப்பாற்ற…”

என்றபடி அவள் கையை பிடித்து தூக்கிவிட அவன் விரலில் சற்று இலகுவாய் இருந்த மோதிரத்தை நைசாக உருவிக் கொண்டாள்.

‘படம் ஓட்றாங்க…’ என்றதும் வித்யா கூறியது நினைவு வர முகம் சிவந்தவள் யாராவது வந்திட போகிறார்கள் என்று அவசரமாய் ஒரு நன்றியை உதிர்த்து அறைக்கு ஓடிவிட்டாள்.

செல்லும் அவளை கண்டு,

“என் விரலில் உள்ள மோதிரத்தை கழட்டுறது கூடவா எனக்கு தெரியாது… ரொம்ப அறிவு தான்…”

என்று எண்ணியவனுக்கு புன்னகை விரிய,

“என்னவோ என்னை செய்யுறாடா…”

என்று தலையை கோதிக் கொண்டான்.

அறைக்கு வந்தவளுக்கும் இதயம் படபடக்க அவன் பிடித்த கையை ஆசையாய் பார்த்தவள் அதில் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து இதழ் பதித்து தன் விரலில் அணிந்து பார்க்க அவள் கட்டை விரலிற்கு தான் அது பொருந்தியது.அதை இரசித்து சிரித்தவளை,

'வர…வர…உன் திருட்டுதனம் ரொம்ப அதிகமாச்சு யவ்வா…"

என்று உள்ளம் இடித்துரைக்க தோளை குலுக்கி,

" எவனுக்காகவோ செய்யும் போது…எனக்காக இந்த சின்ன திருட்டு தானே…தப்பில்ல…"

என்று சொல்லிக் கொண்டாள்.

2 Likes

அத்தியாயம்-11

"சரிங்க தலைவரே…கண்டிப்பா தலைவரே…ஹாஹா… அதெல்லாம் இந்த தேர்தலிலும் வெற்றி நம்ம பக்கம் தான்…என்ன பேசினா எங்க அடிச்சா மக்கள் மனச தொடும்னு எனக்கு தெரியாதா…ஹிஹி.எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டது தான் தலைவரே… "

வாயெல்லாம் பல்லாக மிகுந்த பவ்யத்தோடு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் எம்.எல்.ஏ. சிவபாலன்.

கிட்டதட்ட அரைமணி நேரமாய் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அத்தனை பணிவோடு பேசிக் கொண்டிருந்த சிவபாலனை காண்கையில் வியப்பாக இருந்தது அவருடைய காரியதரிசிக்கு…

அந்த எம்.எல்.ஏ சீட்டிற்கு அவர்கள் கட்சிக்குள் தான் எத்தனை போட்டிகள்.எத்தனை சண்டைகள்.ஆனால் அனைத்தையும் தன் தந்திரத்தால் வென்று இம்முறையும் அதனை தானே தக்க வைத்துக் கொண்டார்.தற்போது இத்தனை நேரம் கட்சி தலைவரிடம் போடும் சோப்பும் அமைச்சர் பதிவிக்காக தான் என்பது அவனிற்கு புரிந்தது.
தன் காரியம் ஆக என்ன வேணாலும் செய்வாரே என்று எண்ணிக் கொண்டான்.
இன்னும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்த சிவபாலன் அவனிடம் திரும்பி,

“நாளைக்கு கட்சி மீட்டிங் ஏற்பாடு எல்லாம் எப்படிய்யா போது…”

என்று கேட்டபடி சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.

“எல்லாம் ஓகே சர்…வண்டி வண்டியா நாளைக்கு மக்கள் கூட்டம் வந்து சேர்ந்திடும்…நீங்க இந்த ஐந்து வருஷத்துல மக்களுக்கு செஞ்சதா நாம காட்டிய நலத்திட்டங்கள் எல்லாம் இந்த ஃபைல கம்பைல் பண்ணிட்டேன்…அத்தோட எதிர்க்கட்சியை தாக்கி சொல்ல வேண்டிய முக்கியமான பாய்ண்ஸூம் எடுத்தாச்சு சர்…”

என்று கூறிக் கொண்டே அந்த கோப்பினை நீட்டினான்.

அதனை வாங்கி பார்வையிட்டு கொண்டிருந்தவரிடம்,

“சர்… அப்புறம் உங்களை பார்க்க ஒருத்தர் வந்திருக்காங்க…”

என்று சொன்னதற்கு,

“யாருய்யா… அதுவும் இந்த நேரத்துல வீடு தேடி வரது…”

என்று அலட்சியமாய் கேட்டார்.

“அதான் நானும் சொல்லி அனுப்ப நினைச்சேன் சர்… ஆனால் அவர் பிடிவாதமா உட்கார்ந்து இருக்கார்…நடராஜன் வந்திருக்கேனு சொல்ல சொன்னார்…”

என்று அவன் சொல்ல பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்த சிவபாலனின் கை நின்றது.

“என்ன பேரு சொன்ன…”

என்று கேட்க அவன் மீண்டும் சொல்லவும் அவர் புருவம் ஏறி இறங்க நக்கலாய் உதட்டை சுளித்தவர் அவரை வரச்சொல்லி அனுமதி அளித்தார்.

வீட்டின் வெளியே காத்திருந்த நடராஜனை உள்ளே செல்லுமாறு காவலாளி சொல்லவும் நுழைந்தார்.

யாரோ என்று எதார்த்தமாய் வந்து பார்த்த சிவபாலனின் மனைவி கலைவாணி நடராஜனை கண்டதும் வியந்தார்.அவரை இங்கே சற்று எதிர்பாராததால் தடுமாற்றத்தோடு,

“வாங்க…”
என்றவர் என்ன முறை சொல்வது என்ற தயக்கத்தோடு நிறுத்த அவரோ ஒரு தலையசைப்போடு விட்டுவிட்டார்.

“உட்காருங்க…வீட்டில் எல்லாரும் சௌக்கியமா…”

என்றவருக்கு தொண்டை வரை ஒரு கேள்வி வந்தும் அதை கேட்க முடியவில்லை.கணவனிற்கு தெரிந்தால் அவ்வளவு தான் ஆனால் மனம் ஒரு வார்த்தையாவது கேட்க வேண்டும் என்று அடித்துக் கொள்ள தவிப்போடு நின்றவரை மேலும் சிந்திக்க விடாமல் சிவபாலன் குரல் ஒலித்தது.

"அடடடடே…வாங்க…வாங்க நடராஜன்…எப்படி இருக்கீங்க…என்ன ஒரு அதிசயம் என்னை தேடி வந்திருக்கீங்க… எதாவது உதவி வேண்டுமா…ஹம்ம்… எத்தனை வருடங்களாகிட்டது உங்களை சந்தித்து. "

என்று ஆர்பாட்டமாய் வரவேற்ற சிவபாலனை எந்த உணர்வும் அற்று பார்த்தார்.

“என்ன நிக்குறீங்க…உட்காருங்க நடராஜன்…கலை வந்தவங்களுக்கு சாப்பிட எதாவது எடுத்து வா…டீ சாப்பிடுறீங்களா…இல்ல காஃபியா…”

என்று பேசிக் கொண்டே வந்தவரை,

“போதுமா நிறுத்து சிவபாலன்…நான் இங்க உறவு பாராட்ட வரலைனு உனக்கே தெரியும்…”

என்றார் கோபமாக…

“விருந்தோம்பல் செய்யுறது ஒரு குத்தமா…சரி விடு… அப்புறம் என்ன இந்த பக்கம்…”

என்றார் ஆசுவாசமாய் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு…

“ஒரு பதவிக்கு வந்த பிறகும் உன்னோட சின்ன புத்தி மாறவே இல்லைல…நீ செய்யுறதெல்லாம் உனக்கே சில்லறை தனமா இல்ல…”

என்று நடராஜன் கேட்டதற்கு ,

“எப்படி…நீ உன் பையனை வச்சி சில்லறை தனமா நடந்துக்கிட்டியே அந்த மாதிரியா…”

மீண்டும் நிதானமாகவே பதில் வந்தது.

‘தெரியும்…இதுப்போல் ஒரு பேச்சு வரும் என்று நிச்சயம்
எதிர்பார்த்தார்.ஆனால் அனைத்தும் தற்செயல் என்று இவனுக்கு சொன்னால் புரியுமா…’

என்று யோசித்தவருக்கு மீண்டும் மனோ மீது தான் கோபம் வந்தது.

“என் பையனிற்கு நீ யாருனு கூட தெரியாது…தெரிந்திருந்தால் உன் பெண்ணை திரும்பியும் பார்த்திருக்க மாட்டான்… நடந்தது எல்லாமே தற்செயல் தான்…”

என்று நடராஜன் சொல்ல சிரித்த சிவபாலன்,

“அப்படியா…இப்பவும் ஒன்னும் கெட்டு போகல…நான் யாருனு சொல்லி அனுவை மறுபடியும் இங்கேயே விட்ருங்க…”

என்று கூற,

“அனு இப்போ உன் மகள் இல்ல…எங்க வீட்டு மருமகள்…எங்க வீட்டு பொண்ணை இப்பவும் எப்பவும் உன்னால நெருங்க முடியாது…”
என்றார் நடராஜன்.அதில் சிவபாலனின் தன்மானம் சீண்டப்பட,

“அதெப்படி நடராஜன்…இதே மாதிரி பல வருஷங்களுக்கு முன்னாடி நான் வந்து நின்னப்போ உன் குடும்பத்தின் தகுதிக்கு நான் ஏற்றவன் இல்லனு அசிங்கப்படுத்துனீங்க…இப்போ இதையே உன் பையன் பண்ணும் போது உனக்கு அசிங்கமா தெரியலையா…?நீங்க எனக்கு செய்ததை நான் திருப்பி செய்ய வேண்டாமா…?!”

என்று நக்கலாய் பேசினாலும் அதிலிருந்த குரோதத்தை அவரால் உணர முடிந்தது.

“அப்போ என்னை எத்தனை தூரம் அசிங்கப்படுத்தி துரத்துனீங்க…என்னைவிட உன் தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவேன்னு கம்பீரமா சொன்னாய்…இப்போ என் உயரமும் தகுதியும் என்னவென்று தெரியுமா…உன் தங்கச்சி புருஷன் அனார்ந்து பார்க்கும் உயரத்தில் நான் இருக்கேன்…”

என்றவர் கர்வமாய் சொல்ல பார்த்துக் கொண்டிருந்த கலைவாணிக்கு மனம் கசந்தது.

நடராஜனோ,

“நான் எந்த தகுதியை பற்றி பேசினேனோ அது இப்பவும் உன்னிடம் இல்ல…அது என்னவென்றும் உனக்கு புரியவும் புரியாது…உன்னால எப்பவுமே என்னை ஒன்னும் செய்ய முடியாது…ஆனால் உன்னை ஒன்னுமில்லாம ஆக்க எனக்கு ஒரு நிமிஷம் போதும்… தேவையில்லாமல் என் வழியில் வராதே…விளைவு மோசமா இருக்கும்…”

அழுந்தந் திருத்தமாய் எச்சரித்தார்.

“என்னால ஒன்னும் செய்ய முடியாதா…என்னால என்ன செய்ய முடியும்னு நாளைக்கு பார்பீங்க நடராஜன்…”

என்றவர், “உங்க பையன் வேற மும்பையில் இருந்து வருகிறார் இல்லையா…என்ன வேணாலும் நடக்கலாம்…”

என்று புருவங்களை உயர்த்தி கேலியாக சொன்னவர் மீது ஆத்திரம் பொங்க,

“டேய்…உன்னை கொன்னுடுவேன்…”

என்றார் ஆக்ரோஷமாய்…

“ஏன் கத்துறீங்க…போங்க…உங்களால என்ன செய்ய முடியுமா செய்யுங்க…”

என்றவனை கொலைவெறியோடு நோக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் நடராஜன்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கலைவாணிக்கு பகீரென்றது.

“என்னங்க… எதுவும் பண்ணீடாதீங்க…நம்ம பொண்ணு வாழ்க்கை…”

என்று சொல்ல அவரை தீப்பார்வை பார்த்தார்.

“என்னைக்கு என் பேச்ச மீறி ஓடிப்போனாலோ அப்போவே அவளை கொன்னுப் போடுருப்பேன்… எலெக்ஷன் டைம்…தேவையில்லாம என் பேருக்கு கலங்கம் வரக்கூடாதுனு பொறுமையா இருக்கேன்…எலக்ஷென் முடிந்ததும் அவளுக்கு இருக்கு…நீ மகள்னு உறவு பாராட்ட நினைத்தால் உனக்கும் அதே நிலை தான்…”

என்று கர்ஜித்துவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட கண்ணீர் மல்க,

“கடவுளே…என் புள்ளைய நீதான் காப்பாற்ற வேண்டும்…”

என்று இறைவனிடம் வேண்டினார்.

           ********************

“முடியாது…நான் அப்படி செய்யவே மாட்டேன்…”

அந்த இரவு நேரத்தில் தன் குரல் யாருக்கும் கேட்டிவிடாதபடி மெதுவாக கூறினாள் யவ்வனா.

“ஹேய்…இங்க பாரு…உன்னுட்ட எத்தனை தடவ சொல்றது…உன்னை செய்யுனு தான் சொனேன்…செய்யுறீயா கேட்கவில்லை…உனக்கு வேற வழியும் இல்ல.”

“இதை ஒன்னை சொல்லியே இன்னும் என்னை எவ்வளவு படுத்துவீங்க… உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா… தைரியம் இருந்தால் நேருக்கு நேரு மோதுங்களேன்… இப்படி கோழைத்தனமான ச்சை …”

என்று அவள் பெண்புலியாய் உறுமினாள்.
‘இந்த வாய் செவடால ஒரு விஷயம் செய்ய வைக்கிறதுக்குள்ள…’
என்று எரிச்சலாய் எண்ணியவன்

“ஏய்…அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்…மூடிட்டு சொன்னதை செய்…இல்லை அவ்வளவு திமிரு இருந்தால் உன் குடும்பத்தை அப்படியே மறந்திடு…”

என்ற உடனே அவனது அழைப்பையும் துண்டிக்கப்பட்டது.

ஆத்திரம் மிகுதியில் அழுகையாய் வர,

“நான் எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செஞ்சேனு என்னை இப்படி ஒரு சூழ்நிலை கைதியாக்கிட்டியே…கடவுளே…”

என்று குற்றவுணர்ச்சியில் வெதும்பினாள்.

யோசித்து யோசித்து தலையில் ஆணியடிப்பது போல் வலியெடுக்க அப்படியே மடங்கி அமர்ந்தாள்.

2 Likes

அத்தியாயம்-12

“ம்ஹூம்…ம்ஹூம்…ம்மா…”

என்று சிணுங்கிய மகனை உறுத்து விழித்த வித்யா,

“மூச்…வாயை தொறந்த பிச்சிடுவேன்…”

என்று மிரட்டி அவனுக்கு பள்ளி சீருடையை அணிவித்தாள்.

“நேத்து நான் கேட்டதற்கு சரின்னு சொன்னீங்கள்ல… அப்புறம் ஏன் அப்பா விட்டுடு போனாரு…”

என்று அழுகைக்கு பிதுங்கிய உதட்டோடு கவின் கேட்க,

“நீ தான்டா…எழுப்ப எழுப்ப நல்லா தூங்கிட்டு இப்போ என்னை கேட்குறீயா…”
என்றாள்.
மனோகரை விமான நிலையத்தில் இருந்து ரிசிவ் செய்ய பிரகாஷூம் உடன் தமிழையும் போக சொல்லி நடராஜன் சொல்ல இருவரும் காலையே புறப்பட்டு இருந்தனர்.ஆனால் கவினை விட்டுவிட்டு சென்றதால்
காலையிலிருந்து அவன் பண்ணும் அலும்பை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் புன்னகை அரும்பியது.

“போ…நீ எழுப்பவே இல்ல…நான் ஸ்கூல் போக மாட்டேன்…”

“அடி வாங்குவ கவின்…அதான் அப்பா கூட போகலைல…வீட்டில உட்கார்ந்து என்ன பண்ண போற…”

“சித்தப்பா இன்னைக்கு வராங்களம்மா… அதனால லீவ் போட போறேனு ஸ்கூல எல்லாருட்டையும் சொல்லிட்டேன்…இப்போ போனால் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க…போ நான் போக மாட்டேன்…”
“உன்னை யாரு ஊருக்கே டமாரம் அடிக்க சொன்னா… அதெல்லாம் யாரும் கிண்டல் பண்ண மாட்டாங்க…பாரு மது ரெடியாகிட்டா…”

என்று வித்யா சொல்லிவிட தன் பாட்டியை பாவமாய் பார்த்தான்.

“ஒருநாள் தானே வித்யா…விடேன்…ஏன் புள்ளைய அழ வைக்கிற…"

என்று பல்லவி சப்போட்டிற்கு வர,

“வேணாம் அத்தை…இப்போ மனோ வந்ததும் ‘சித்தப்பாவோட அங்க போறேன்…இங்க போறதுன்னு…’ வரிசை கட்டி லீவ் போடுவான்…இன்னைக்கு ஸ்கூல் போகட்டும்…”

என்று உறுதியாக சொல்ல அவன் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டான்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நடராஜன்,

“கண்ணா இங்க வா…”

என்று அழைக்க ஓடிச் சென்று அவரோடு ஒட்டிக் கொண்டான்.

“அடம் பண்ணாமல் போயிட்டு வா ராஜா…தாத்தா சாயுங்காலம் உனக்கு பிடித்த ஐஸ்கிரீம் நிறைய வாங்கி தரேன்…”

“ஆனால் அம்மா ஐஸ்கிரீம் சாப்பிட்டா திட்டுவாங்க…”

“திட்டமாட்டா நான் பார்த்துக்குறேன்…சரியா…”

என்று கன்னம் வலித்து செல்லம் கொஞ்ச கவின் முகம் மலர்ந்தது.

“மை ஸ்வீட் தாத்தா…”

என்று சிட்டாய் பறந்து செல்ல அவர் உதடுகள் சிரித்தாலும் ஏனோ காலையில் இருந்து அவருக்கு மனமே சரியில்லை.

நேற்று சிவபாலன் அவ்வாறு சொன்னதில் இருந்த மனோவிற்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என்று மனம் பதைபதைக்க அதே சிந்தனையிலே உழன்று கொண்டிருந்தார்.

இதனை அறியாது மனம் முழுக்க மகிழ்ச்சியோடு தாய் மண்ணை அடைந்திருந்தான் மனோ.

“ஆஹா…ஆஹா… ஆயிரம் சொல்லு இப்போ தான் சுவாசிக்கிறா மாதிரியே இருக்கு…”

மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த காரின் வின்டோ புறம் தலையை சாய்ந்து இரசித்து சொன்னான் மனோ.

“ஏன்டா அப்படி…”

“பின்னே…ஹிந்தியா கேட்டு கேட்டு காதெல்லாம் புளிச்சு போயிருச்சு ண்ணே… அதுவும் சாப்பாடு மூணு வேளையும் சப்பாத்தி தான்… அரவிந்த் மாதிரி காண்டுல 'சப்பாத்தி…சப்பாத்தி…'னு பாடாத ஒன்னு தான் குறை…நாக்கு செத்து போச்சு…விட்டால் போதும்னு ஒடியாந்திருக்கேன்…”
என்றான் பெருமூச்சோடு…

“உன்னை யாரு அப்படி போய் வேலை பார்க்க சொன்னா…நம்ம சொந்த தொழிலே பார்த்துக் கொண்டு நம்ம ஊரிலேயே ராஜா மாதிரி இருப்பியாம்…”

என்று பிரகாஷ் சொல்ல,

“அக்ஷுவலி அண்ணா… நானும் அந்த முடிவில் தான் இருக்கேன்…இந்த ப்ராஜெக்ட் ஓட நான் ரெசிக்னேஷன் எழுதிக் கொண்டுத்துட்டேன்…வீட்டை விட்டு நாங்க பட்ட கஷ்டமெல்லாம் போதும்…”

என்று மனோ கூறியதை கேட்டு பிரகாஷ், தமிழ் இருவருக்குமே இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.

“என்னடா…சொல்லவே இல்லை…என்ன திடீர் மாற்றம்…”

என்று பிரகாஷும்,

“ஒரு மும்பை பயணத்திலே இத்தனை நாள் பிடிவாதத்தை விட்டுடீங்க…என்ன ஆச்சரியம்…”

என்று தமிழும் கூற,

“இப்போ இல்லை…கொஞ்ச நாளாவே அதான் என் மனசுல ஓடிட்டு இருக்கு…ஒண்டிக்கட்டையா ஊரு சுத்தும் போது ஒன்னும் தெரியல…ஆனால் பொண்டாட்டி குடும்பம்னு ஆனதும் தான் தனியா இருக்கறதோடு கஷ்டம் புரிஞ்சிது…என் ஊரு…என் குடும்பம் இருக்கும் போது நாங்க ஏன் இப்படி இருக்கணும்னு அடிக்கடி யோசிப்பேன்…அதோட விளைவு தான்…”
என்றான் உணர்ந்து…

“ரொம்ப சந்தோஷமா இருக்குடா…இதை தான் ஒரு கால் கட்டு போட்டால் எல்லாம் சரியாகிடும்னு சொல்றதா…என் தம்பிக்கே ஞானம் வந்துடுச்சே…”

என்று மகிழ்ச்சியாய் கூறிய பிரகாஷ் பின் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் குளறுபடிகளை பற்றி சொல்ல,

“என்ன அண்ணா… இவ்வளவு நடந்திருக்கு…என்னிடம் ஒரு வார்த்தைக்கூட சொல்லல…”
என்றான் வருத்தமாய்…

“நேரில் சொல்லிக் கொள்ளலாம் என்று தான் விடடு்டேன்…”

“மாமாவே சாப்ட் கேரக்டர்…அவரு உண்டு அவர் வேலை உண்டுனு இருப்பாரு…அவருக்கு யாரு கொடைச்சல் தருவது…மச். விஷால் தனியா என்ன பண்றானோ தெரியலையே…”
என்றான் கலவையாய்…

அதே சமயம் தமிழின் அலைபேசி சிணுங்க எடுத்து பார்த்தவன் அந்த டிடெக்டிவின் எண்ணை கண்டு பரபரப்பானான்.

“சொல்லுங்க ஜி…”

“சர்…விநாயகம் பத்தி டாப் டூ பாட்டம் கிடைச்சிருச்சு சர்…நாம சந்தேகப்பட்டது போல அவரு பிரின்டிங் பிரெஸ் வச்சிருந்தாலும் மறைமுகமாய் கடத்தல்,அடிதடி,கறுப்பு பணம்,போதை பொருள் பதுக்கி வைக்கிறதுனு நிறைய இல்லீகல் வேலை எல்லாம் அவர் ப்ரதர் பரமனோட சேர்ந்து செய்கிறார்… இதுவரை எந்த பிரச்சனையிலும் சிக்காமல் தான் தொழில் செஞ்சிட்டு இருந்திருக்காங்க…பட்
கடைசியாக நரசிம்மன் என்றவருட்ட இரண்டு கோடி பணம் வாங்கி இருக்காங்க…அதை ஏமாத்திட்டாங்களா…இல்லை ஏமாந்துடாங்களா தெரியலை…அந்த பணத்தை திருப்ப சொல்லி அந்த ஆளு ரெண்டு பேரையும் சிவியரா டார்ச்சர் பண்றான்…அதனால பணத்திற்கு நாயா பேயா அலைறாங்க…”

என்ற போது அது எந்த பணம் என்று தமிழிற்கு புரிந்தது.

“ஹோ…யாரு அந்ந நரசிம்மன்…”

“நரசிம்மன் எம்.எல்.ஏ சிவபாலனோட கையாளு சர்…
எம்.எல்.ஏவோட ரைட் லெஃப்ட் எல்லாம் அவன் தான்…பக்கா ஃப்ராடு…சிவபாலனோட எல்லா ஃபோர்ஜரி வேலையும் அவர் பெயர் வெளியே வராமல் இவன் தான் செய்வான்…”

என்றவன்,

“அப்புறம் இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் விநாயகம் கடையில் வேலை செய்த எல்லாரையும் பற்றி டிட்டெய்ல் கொடுத்திருந்தேனே அதுல ஒரு பொண்ணை பற்றிய தகவல் மட்டும் இப்போ தான் கிடைத்தது.அந்த பெண்… நரசிம்மன் இவர்களை வேவு பார்க்க ஏற்பாடு செய்த பொண்ணாக இருக்கும் மென்று நினைக்கிறேன்…ஏன்னா விநாயகமும் பரமனும் நரசிம்மனிடம் சிக்கிய அன்னைக்கே அந்த பொண்ணு மாயமாகிடுச்சு…அந்த பொண்ணை பற்றி எந்த தகவலும் கிடைக்கலனாலும் ஃபோட்டோ கிடைச்சிருக்கு சர்… உங்களுக்கு ஒரு வேளை அது உபயோகமாய் இருக்கலாம்…நான் வாட்ஸ்அப் பண்றேன்…”

என்று கூறியவன்,

“அப்புறம்…ஜெ.கே ஸ்டீல்ஸ் மேல கேஸ் போட்டவங்களை பற்றி விசாரிக்க சொல்லிருந்தீங்கல்ல சர்…அந்த கன்ஸ்ரக்ஷன் கம்பெனியோட ஃபினான்சியல் பார்ட்னர் சிவபாலன் தான் சர்…ஸோ நீங்க தேடுற கேள்வி விடை இவராக மட்டும் தான் இருக்க முடியும்னு நினைக்கிறேன்…”

என்று தன் கருத்தை கூற அனைத்தையும் உள்வாங்கிய தமிழ் நன்றி கூறி அழைப்பை வைத்தான்.

'சிவபாலன்…!!"

என்று யோசித்தவனுக்கு சட்டென்று பொரித்தட்டியது.

'அனு அண்ணி அப்பா தானே… அடப்பாவி…எலலாம் இவர் வேலை தானா… பொண்ணு கல்யாணம் செய்தது பிடிக்கலனு கொலை செய்யும் அளவு துணிச்சலா…??ஆனால் இதில் ஜெயகாந்த் சர் எங்கிருந்து வந்தாரு…அவரோட பிஸ்னெஸில் ஏன் தலையிடனும்…"

என்று சிந்தனையில் அவன் இருக்க வாட்ஸ்அப் கூவியது.

அவனுக்கு வேண்டிய விஷயம் தெரிந்துவிட்டதால் இந்த பெண் யாராக இருந்தால் என்ன என்ற அலட்சியதோடு மெசேஜை திருந்தவன் அதிர்ச்சியில் உறைந்தான்.

‘இல்லை…இல்லை…இருக்காது…’

என்று மனம் முரண்ட
கண்களை ஒருமுறைக்கு இருமுறை சிமிட்டியும் பார்த்தான் புகைப்படத்தில் இருந்தது யவ்வனாவே தான்.

முதலில் வெளிப்பட்ட உண்மையைவிட இது தான் அவனை ஸ்தம்பிக்க செய்தது.அவனுக்கு உண்மையை யூகிக்கவே சில நிமிடங்களில் ஆனாது.

‘என்னை…இந்த தமிழையே ஏமாற்றி இருக்காளே…எப்படி…எப்படி நான் கவனிக்காமல் போனேன்… முதல் பார்வையில் அவள் மேல் கொண்ட சந்தேகம் அதன்பின் ஏன் இருந்த இடம் தெரியாமல் போனது…’

தன்னையே கேட்டுக் கொண்டவனுக்கு விடையாய் மனம்,

‘நீ அவள் மேல் கொண்ட காதல்…’
என்று சொல்ல திடுக்கிட்டான்.

“உண்மை தானே…அவளின் துடுக்கான குணத்தில் தன் மனம் வசியப்பட்டு தானே கிடந்தது.அவள் விழி பார்வையின் அழகில் மனம் சொக்கித் தானே போனது.நேரில் அவளை கண்டதைவிட தினம் தினம் கனவில் அவள் செய்யும் தொல்லைகளை சுகமாய் தானே இரசித்தேன்…ஆனால் அனைத்தும்…போலிதானா…”

இதயத்தை யாரோ வாள் கொண்டு வீசியது போல் இருந்தது.

“அவளிடம் சந்தேகம் வராமல் இருக்க தன்னை அவள் திசை திருப்ப முயன்று இருக்கிறாள்…அதைகூட புரிந்துக் கொள்ளாமல் தானும் அவளிடம் மயங்கி இருந்திருக்கோமே…”

என்பது புரிந்த போது தன்னை குறித்தே அவமானமாய் உணர்ந்தவன் மேலும் சிந்திக்க சிந்திக்க ஏமாற்றம் போய் ரௌத்திரம் தலைகேறியது.

‘நான் யாருனு தெரியாமல் என் ஃப்லீங்ஸோட விளையாண்டு இருக்க யவ்வனா…இதற்கு நீ நிச்சயம் அனுபவிப்ப…ரொம்ப கோரமாய் அனுபவிப்ப…இந்த தமிழ் எவ்வளவு மோசமானவன்னு உனக்கு தெரியல …ஏன்டா உயிர் வாழ்கிறோம்னு நீ நினைக்கிற நிலையில் உன்னை நிறுத்துவேன்…’

என்று மூர்க்கத்தனமாக எண்ணியவனுக்கு அவள் ஏற்கெனவே அப்படியோர் நிலையில் தான் உள்ளாள் என்பதை யார் புரியவைப்பது.

“தமிழ்…தமிழ்…”

என்று அருகில் அமர்ந்திருந்த பிரகாஷ் உலுக்கியதும் தான் சுயநினைவையே அடைந்தான்.

“ஏன் இங்க வண்டியை நிறுத்தி வைத்திருக்க…ஃபோனில யாரு என்ன சொன்னா…உன் முகமே சரியில்லையே…”

கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்
இருந்தனிடம் கேட்க எதுவும் சொல்லாமல் பின் சீட்டில் இருந்த மனோவின் புறம் திரும்பி,

“அந்த டயடீசியனை பற்றி நல்லா விசாரித்தீங்களா மனோ…அந்த பொண்ணு உங்களுக்கு எப்படி அறிமுகம் ஆச்சு…”

என்று கேட்க அவன் முகத்தில் இருந்த கடுமையில் இதில் ஏதோ இருப்பது புரிய இனியும் உண்மையை மறைக்க வேண்டாம் என்று எண்ணியவன் அனைத்தையும் சொன்னான்.

“என்னது…!!! இந்த விசயத்தை ஏன்டா மறைச்ச…அறிவில்லையா உனக்கு…”

என்று பிரகாஷ் கத்த,

“இல்ல அண்ணா…அனு தான் உண்மையை சொல்ல பயந்தால் அதான் நானும்…”

என்று அவன் தயங்கினான்.

“அவங்க தான் புரியாமல் சொன்னால் நீங்க யோசிக்க வேண்டாமா மனோ…நீங்க இப்படி அலட்சியமா விட்டது எங்க கொண்டு வந்து விட்ருக்கு தெரியுமா…”

என்றான் தமிழ் காட்டமாக…
கோபம் கண்மண் தெரியாமல் எல்லோர் மீதும் வந்தது.

“ஏன்…என்னாச்சு தமிழ்…”

“இன்னும் என்னாக இருக்கு…அந்த பொண்ணு திட்டமிட்டு தான் வீட்டில் நுழைந்திருக்கா…அதுக்காக ஏதோ ஒரு கதையை சொல்லி உங்களை ஏமாத்திருக்கு…என்ன நோக்கத்தோட வந்தானு தெரியலை…ஆனால் யாரு அனுப்பினா தெரியுமா…உங்க மாமனாரு தான்…”

“அவர் எதுக்கு தமிழ் இதெல்லாம் செய்ய போராரு…நீ எதாவது தப்பா புரிந்திருக்க போற…”

“நல்லா தெரிஞ்சிக்கிட்டு தான் சொல்றேன்… ஏற்கெனவே ஒருவாட்டி உங்க மேல கொலை முயற்சி நடந்திருக்கு தெரியுமா…”

என்று கூறி சகோதரர்கள் இருவரையும் அதிர வைத்தான்.

“என்ன தமிழ் சொல்ற…”

“உள்ளதை தான் சொல்றேன்…உங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிட கூடாதுனு நானும் ஐயாவும் இங்க ஏதேதோ பண்ணிட்டு இருந்தால் நீங்க அப்படியே கூட்டிட்டு வந்து நடு வீட்டுல விட்டுடீங்க…”

என்றான் கோபமாகவே…அவன் கோபம் நியாயமானது என்பதால் மனோவால் எதுவும் சொல்ல முடியவில்லை.

பிரகாஷ் தான்,

“சரிடா…இப்போ தான் தெரிந்து விட்டதுல…விபரீதமா எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி அந்த புள்ளைய புடிச்சு விசாரிப்போம்…வண்டியை எடு…”

என்று சொல்ல தலையசைத்தவன் காரை ஸ்டார்ட் செய்து வேகமாய் ஓட்டினான்.அவன் கோபமெல்லாம் வண்டியின் வேகத்தில் காட்ட கார் பறந்தது.

‘இவன் ஏன் இப்படி ஓட்டுறான்…சொன்னாலும் கேட்க மாட்டானே…அடெய் இவன் வண்டி ஓட்டும் போது தான் கால் பண்ணி கலவரத்தை தூண்டுவீங்களாடா…கருப்பசாமி உன் புள்ளைய காப்பாத்து ப்பா…’

என்று மனதுக்குள் இறைவனை துதித்தானே தவிர வெளியே ஒன்றும் கூறவில்லை.தமிழ் கோபமாய் இருக்கும் பொழுது அவனிடம் வாய் கொடுக்க முடியாது என்று இருவருக்குமே தெரியும்.

ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை அரைமணி நேரத்திலேயே எட்டிவிட்டனர்.

2 Likes

அத்தியாயம்-13

ஒருவழியாக வீடு வந்து சேர்ந்த மூவரின் முகமும் இறுக்கத்தை தழுவி இருக்க அவர்களை வாசலிலே நிறுத்தினார் பல்லவி.

வித்யா சிரிப்போடு ஆரத்தி தட்டை கரைத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுக்க,

“அனு…போய் மனோ பக்கத்தில் நில்லுமா…”

என்று சொல்ல கணவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் சிறு வெட்க புன்னகையோடு அவன் அருகில் சென்று நின்றாள்.

திருமணத்திற்கு பிறகு ஒருவழியாக ஜோடியாய் இருவரையும் கண்டுவிட்ட அவர் மனம் குளிர சற்று தள்ளி நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நடராஜன் மக்களின் முக பாவனையிலே ஏதோ நடந்திருப்பதை யூகித்து இருந்தார்.

பிரகாஷின் பின்னால் நின்ற தமிழின் கண்கள் வழக்கம்போல் அவளை தேடியது ஆனால் இம்முறை கோபத்தோடு…

அவளை தவிர அனைவரும் இருக்க யோசனையில் அவன் புருவருங்கள் முடிச்சிட்டன.

உள்ளே வந்தவர்களிடம் ஆளாளுக்கு ஏதேதோ பேச,

“ஒரு நிமிஷம்… இதெல்லாம் அப்புறம் பேசிப்போம்…அந்த பொண்ணு யவ்வனா எங்கே…”

என்று பிரகாஷ் கேட்டான்.

“ஏங்க…இதோ இங்க தான் இருப்பா…”

என்ற வித்யாவை,

“ம்ச்…சொல்றேன்…கூப்பிடு அந்த புள்ளைய…”

என்று அவன் சொல்லவும் குழப்பமாய் அவனை பார்த்தபடி உள்ளே செல்ல அவள் அறையில் யவ்வனா இல்லை.

‘எங்க போனா…’

என்று யோசித்த வித்யாவுக்கு அப்பொழுதும் எந்த சந்தேகமும் இல்லை.

‘இங்கே தான் எங்கயாவது இருப்பாள்…’

என்று நம்பியவள் அவளை வீடு முழுவதும் தேடினாள்.ஆனால் எங்கேயும் அவளை காணாததால் மனம் லேசாக உறுத்த அவசரமாய் கூடத்திற்கு வந்தவள்,

“வீட்டில் எங்கேயும் காணும்…அனு எங்கேயாவது போறேனு சொன்னாலா…”

என்று கேட்க,

“இல்லையே க்கா…”
என்று அவள் முழித்தாள்.

“ஃபோன் பண்ணி பாருங்க அண்ணி…”

“அவளுட்ட ஃபோன் இல்லை தமிழ்…”

என்று வித்யா சொல்லவும் சுறுசுறுவென கோபம் இன்னும் ஏறியது.அவன் தான் முதல் சந்திப்பிலே அவள் அலைபேசி வைத்திருந்ததை கண்டவன் ஆகிற்றே…!!

அனு மனம் ஏதோ பெரியதாக வரப்போவதை உணர்ந்து படபடவென்று அடித்துக் கொள்ள,

“என்னாச்சுங்க…”
என்று மனோவிடம் அவள் கேட்டது தான் தாமதம்,

“இன்னும் என்னாக வேண்டும்…அதான் எல்லாம் ஆகிடுச்சே…நான் அப்போவே சொன்னேன்ல தேவையில்லாம எதையும் நம்ம தலையில கட்டிக்க வேண்டாம்னு…கேட்டியா நீ…இப்ப எங்க கொண்டுவந்து நிறுத்திருக்கு பார்…”

என்று அவன் பாய அவள் திடீரென்று கத்தவும் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.

அவன் கோபத்தில் ஆளாளுக்கு என்ன என்னவென்று ஆர்பரிக்க அனைவரையும் மீறி,

“என்ன நடக்குது இங்க…”

என்று நடராஜன் போட்ட அதட்டலில் சட்டென்று இடமே அமைதி ஆனாது.

அவர் அழுத்தமாய் மனோகரை நோக்க அவர் பார்வையில் சிரம் தாழ்த்தியவன்,

“என்னை மன்னிச்சிடுங்க ப்பா…நான் பொய் சொல்லிடேன்…”

என்றவன் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் ஒப்புவிக்க வீட்டினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவித உணர்ச்சியில் இருந்தனர்.

ஆனால் அனைவரையும் காட்டிலும் அதிக அதிர்ச்சியில் தாக்க பட்டது அனுஷ்யா தான்.

ஒருபக்கம் தந்தையின் செயலும் மறுபக்கம் யவ்வனாவின் துரோகமும் அவளை ஸ்தம்பிக்க வைக்க பேச்சற்று நின்றாள்.

“நீ விளையாட்டு தனமா இருந்தாலும் விபரமான பிள்ளைனு நம்பினேன்…ஆனால் இல்லைனு நிரூபிச்சிட்டே மனோ…”

என்று நடராஜன் சொல்லும் போது அவனால் தலையை உயர்த்தவே முடியவில்லை.

“அந்த பொண்ணே போயிடுச்சுனா…அது செய்ய நினைத்ததை செஞ்சிட்டு தான் போயிருக்கும்…என்ன பண்ணிட்டு போயிருக்குனு தெரியலை…ஊரை தாண்டுவதுக்குள் அந்த பொண்ணை பிடிக்க பாருங்க…நேரத்தை வீணாக்காதீங்க…”

என்று அவர் கட்டளையிட அதை உணர்ந்து மூவரும் அவளை தேட விரைந்தனர்.

‘என்ன செய்துவிடுவான்…’

என்று அலட்சியமாய் அவனை எண்ணியதற்கு வீட்டிலே என் கண்முன் அவன் ஆள் வைத்திருக்கிறான் ஆனால் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கோமே என்றெண்ணி தலையை தாங்கி பிடித்து அவர் அமர்ந்துவிட்டார்.

“என்னங்க…என்னென்னவோ சொல்றான்…எனக்கு பயமா இருக்கு…நம்ம பிள்ளையை எதுவும் ஆகாதுல…”

தாயாய் பதறிய பல்லவி நடராஜனின் அருகில் வந்து பயத்தோடு கேட்க உடனே தான் சுதாரித்தவர்,

“இதுவரை நாம பார்க்காத பிரச்சனையா பல்லவி…நம்ம கிட்ட யாரும் சீண்ட முடியாது…அந்த பொண்ணு விசயத்துல கொஞ்சம் தவறிட்டோம்…அவ்வளவு தான்…மனசை குழப்பிக்காதே…”

என்று மனைவியை ஆறுதல் படுத்தியவர் திகைத்து நின்ற மருமகள்களிடம்,

“உங்களுக்கும் தான்…இனிமேயாவது யாரு என்னானு பார்த்து பழகுங்க…”
என்று பொதுவாக கூறினாரே அன்றி அனு யவ்வனாவை குறித்து மறைத்தை பற்றியோ இல்லை அவள் தந்தை பற்றியோ ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

ஆனால் அவளால் தான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

தன்னை கொண்டு தன் கணவனை கொல்ல துணிந்த தந்தையின் செயலில் துணுக்குற்ற மனம் யவ்வனாவின் துரோகத்தின் வெறுத்தே போனது.

‘எப்படி… எப்படி… இவ்வாறு செய்ய அவளுக்கு மனம் வந்தது.ஒரு தங்கை போல் அல்லவா நடத்தினேன்.என் உண்மையான அன்பை எப்படி சுயநலமாக சுபயோகிக்க முடிந்தது அவளால்…’

என்று மனம் வருந்த கணவன் போகும் போது பார்த்த பார்வையில் இருந்த ஆத்திரம் வேறு அவளை வெகுவாய் தாக்கியது.

யவ்வனாவை தேடி அலைந்த மூவருக்குமே அவள் என்ன செய்துவிட்டு தப்பித்திருப்பாள் என்ற கேள்வியே மண்டையை குடைய அதற்கான பதில் மாலை குழந்தைகளை அழைக்க சென்ற போது தெரியவர அன்றைய நாளின் அடுத்த இடி சத்தமில்லாமல் அவர்கள் தலையில் இறங்கியது.

ஏதேதோ யோசித்த அவர்கள் அவள் கவின்,மதுவின் பள்ளியை அணுகி குழந்தைகளை கடத்தியிருக்க கூடும் என்று துளியும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதன் பின் சரியாக ஒரு மணி நேரம் சென்று பிரகாஷின் எண்ணில்,

‘உங்க அப்பா பெரிசா கிழிச்சிடுவோம்னு வீர வசனம் பேசினார்…முடிந்தால் 48 மணி நேரத்திற்குள் உன் பிள்ளைகளை கண்டுபிடித்து காப்பாற்றிக் கொள்…இல்லை அத்தோடு அவர்களை மறந்துவிடு…’

என்ற செய்தியை தாங்கி குறுஞ்செய்தி வர மொத்த வீடும் நிலைகுலைந்து போனது.

“புது கார்…யாருடையது க்கா…அப்பா வாங்கி இருக்காங்களா…”

கையில் ஒழுகிய ஐஸ்கிரீமை சுவைத்தபடி கவின் கேட்க ஏதோ யோசனையில் இருந்த யவ்வனா,

“ஹான்…ம்ம்…ஆமாம்மா…அதான் முதல்ல உன்னை ஏற்ற அனுப்பி வைத்தார்…”

என்று வாயிற்கு வந்ததை சொல்ல அவனோ,

“ஓஓஓஓ… சூப்பர்…ஆனால் ஏன் ரொம்ப நேரம் போயிட்டேஏஏஏஏ இருககோம்… பாருங்க மது தூங்குயே போயிட்டாள்…அப்படி எங்கே போறோம்…”

என்று மீண்டும் ஒரு கேள்வியை வைக்க ஏதோ சொல்லி சமாளித்த யவ்வனாவிற்கு இந்த பிஞ்சு முகங்களை காண்கையில் மனம் துடித்தது.

இதனை செய்யவே கூடாது என்று உறுதியாய் இருந்தவளை காலையில் அலைபேசியில் வந்த புகைப்படம் கலைத்தது.

அவள் தங்கையின் கழுத்தில் கத்தியை வைத்து இருப்பதுபோல் ஒரு புகைப்படத்தை எடுத்து கீழே உன் தங்கச்சி உயிரோட இருக்க வேண்டுமா…வேண்டாமா…
என்றதை படித்தபின்பு மனதை கல்லாகி கொண்டு செய்தாள்.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் பிள்ளைகளை என்ன செய்ய காத்திருக்கின்றனரோ சிந்திக்கும் போது செத்து செத்து பிழைத்தாள்.

தற்போதும் துக்கத்தில் கண்ணீர் வழிய சத்தமில்லாமல் அதனை துடைத்துக் கொண்டவளின் கட்டை விரலில் இருந்த மோதிரம் அவள் கன்னத்தை கீற அடுத்த நொடி மனம் தமிழ் பால் தாவியது.

‘கண்டிப்பாக இந்நேரம் என்னை பற்றி கண்டு பிடித்திருப்பார்…என்னை ரொம்ப கேவலமா நினைத்திருப்பார்ல…’

என்று விரக்தியாய் எண்ணியவள்,

“ம்ஹூம்… பரவாயில்லை… அவருக்கும் என்மேல் ஒரு விருப்பம் இருந்தது புரிய தான் செய்தது…ஆனால் அவருக்கு ஏற்றவள் நானில்லை…என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பாள்…”

என்று மனம் வலித்தாலும் அவன் நலனுக்காக நினைத்தவள்,

“ஆனால் நீங்க எப்படியும் பசங்களை காப்பாற்றி விடுவீங்கனு நம்புறேன் தமிழ்…அந்த ஒரே நம்பிக்கை தான் எனக்கு ஆறுதல்…”

என்று மனதால் அவனோடா உரையாடியபடி மோதிரத்தின் மேல் அழுத்தமாய் ஒரு முத்ததை வைத்தாள்.

சற்று நேரத்தில் கார் ஒரு இடத்தில் திடீரென நிற்க பட்டென்று அவள் புறம் கதவு திறக்கப்பட்டது.

“ஹேய்…இறங்கு…”

அக்கூட்டத்தில் வந்து நின்ற தடியன் அவளை அதட்டினான். அவனை கண்டு பிள்ளைகள் அவள் பின்னால் பயத்தில் பதுங்க அவர்களை விட்டு இம்மியளவும் நகர அவளுக்கா தோன்றவில்லை.

“ஏ…ஏன்…”

“உன் வேலை இத்தோட முடிஞ்சிருச்சி…அதுங்கள இனி நாங்க பார்த்துப்போம்…நீ இறங்கு”

“இல்லை…ப்ளீஸ்…பசங்களை எதுவும் செஞ்சிடாதீங்க…”

“எங்களுக்கு தெரியும்…நைநைங்காம இறங்கும்மே…”

என்று அவன் எரிச்சலாய் கூற அவள் கால்கள் நகர மறந்தது.

“அடடடடே…இத்தோட பெரிய ரோதனையா போச்சு…”

என்று சலித்தவன் திடீரென்று யவ்வனா கையை பிடித்து இழுத்துபபோட பொத்தென்று வண்டியிலிருந்து கீழே விழுந்தாள்.

“அக்கா…அக்கா…”

என்று கவினும் மதுவும் பயத்தில் அலற அவளை கீழே தள்ளிய அவனோடு இன்னும் இருவரும் காரில் ஏறிக் கொண்டதும் புறப்பட்டது.

வேகமாய் எழுந்த யவ்வனா ஓடும் காரின் பின்னால்,

“ப்ளீஸ்…விட்டுருங்க…”

என்று பைத்தியகாரியை போல் கத்திக் கொண்டே ஓட அந்த ஆள் அரவம் அற்ற அவ்விடத்தில் அவள் குரலை கேட்க யாருமில்லை.

காரை துரத்திக் கொண்டே வந்தவள் அங்கே இருந்த இரயில்வே ட்ராக்கில் தடுமாறி விழுந்தாள்.

இரும்பில் தாக்கப்பட்ட கால்கள் வலியெடுக்க அவளால் துளியும் அசைய முடியவில்லை.காதில் இரயில் தூரத்தில் வரும் ஓசை கேட்டாலும் நகர விளையவில்லை.தனது இயலாமை நினைத்து கதறி அழுதாள்.

2 Likes

அத்தியாயம்-14

ஆகிற்று…கவினும் மதுவும் தொலைந்து இத்துடன் ஒரு நாள் பொழுது கழிந்து விட்டது.ஆனால் அவர்களை பற்றி சிறு தகவலும் கிடைக்கவில்லை.அவன் கொடுத்த கெடு முடிய இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்க வீடே துக்க வீடாய் பொழிவிழந்து போனது.

தன் தாயின் மடியில் கவிழ்ந்திருந்த வித்யா அழுதே கரைந்திருந்தாள்.

‘போமாட்டேனு சொன்ன பிள்ளைய கட்டாய படுத்தி போக வச்சேனே…என்னால தான்…அவன் பேச்சை கேட்டிருக்கனும்…’

விடாமல் புலம்பி மகளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் பூங்கொடியும் ஜெயகாந்தும் தவித்தனர்.

வெளியே சென்றிருந்த ஆண்கள் வீட்டுக்கு வரவும் வேகமாய் அவர்களை அணுகிய வித்யா தன் கணவனின் கையை பற்றிக் கொண்டு,

“எங்கங்க பிள்ளைங்க… கிடைச்சிட்டாங்கல…இப்ப வந்திடுவாங்களே…”

என்று அவன் ஆம் சொல்ல மாட்டானா என்ற நப்பாசையோடு கேட்க பதிலற்று பிரகாஷின் தோள்கள் குலுங்கியது.ஒரே நாளில் அரைமனிதனாக இளைத்து விட்டான் அவன்.எல்லா விஷயங்களையும் நிதானமாய் அணுகும் அவனால் இதனையும் அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியவில்லை.

எல்லா வழிகளிலும் முயற்சி செய்தாகி விட்டது ஆனால் ஒரு துரும்புகூட கிடைக்கவில்லை.
காவல் துறையிலும் புகார் கொடுத்துவிட்டனர்.அவர்களும் தேடலில் தான் உள்ளனர்.நடராஜனே நேரில் சென்று கமிஷ்னரிடம் சிவபாலன் மீது புகார் செய்ய அவரோ இவருக்கு உதவவும் முடியாமல் சிவபாலனை எதிர்க்கவும் முடியாத சூழலில் இருந்தார்.

தற்போதிய எம்.எல்.ஏ என்பதால் தகுந்த ஆதாரங்கள் இன்றி அவர்மேல் விசாரணை மேற்கொண்டால் தேவை இல்லாத பிரச்சனைகள் கிளம்பும் என்பதை விளக்கியவர் கூடிய விரைவில் குழந்தைகளை மீட்போம் என்று உறுதியளித்தார்.

ஆனாலும் மகனும் மருமகளும் உடைந்து அழுவதை அவரால் தாங்க முடியவில்லை.தளர்வாய் அமர்ந்துவிட்டார்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அனுவிற்கு ஒவ்வொரு நிமிடமும் நரகமாய் இருந்தது.நேரம் ஆக ஆக தன்னால் தான் தன்னால் மட்டும் தான் என்ற எண்ணம் மேலொங்க மனோவின் வெறுத்த பார்வையில் அவள் வாழ்க்கையே கசந்து போனது.

மிகுந்த தயக்கத்தோடு வித்யாவின் அருகில் சென்ற அனு,

“அக்கா…எனக்கு இதை சொல்ல கூட அருகதையில்லை.ஆனாலும் என்னை மன்னிச்சிருங்க க்கா…என்னால தான் எல்லாமே எங்கப்பாவின் தொடங்கி யவ்வனா வரைக்கும் எல்லாம் என் ஒருத்தியாள் தான். .எங்கப்பா போன்ற ஒருத்தரோட பொண்ணு இந்த வீட்டில் இருக்க தகுதியே இல்லாதவள் தான்…நான் இங்கே வரபோய் தானே எல்லா பிரச்சனையும்…நான் போறேன்…”

என்று தளுதளுத்த குரலில் அவள் கூற அதிர்ந்து தன் மனைவியை நோக்கினான் மனோ.

அவளோ மேலும்,
“மனோ சொன்ன மாதிரி எல்லாம் என்னால் தானே… நான் திரும்ப போனால் ஒருவேளை குழந்தைகளை அவர் விட்டுடுவாரில்லையா…”

என்றவள் மீது கோபம் பொங்கியது.

அவள் எப்படி தன்னை விட்டு போவேன் என்று சாதாரணமாய் சொல்லலாம்.நான் அவ்வளவு தானா அவளுக்கு…ஒரு கோபத்தில் சொன்னால் அதையே பிடித்துக் கொண்டு இப்படி சொல்வாயா என்று ஆத்திரம் வர எதுவும் பேசாமல் அவளையே வெறித்தான்.

“என்னம்மா பேசுற நீ…”

யாரும் பேசும் முன் நடராஜன் கண்டிப்புடன் கேட்டவர்,

“நீ இந்த வீட்டு பொண்ணு…நீ எதுக்கும்மா உன்னை பிரிச்சு பார்க்கிற…வீட்டை விட்டு போறேங்கிற வார்த்தையெல்லாம் இங்க வரவே கூடாது…எனக்கு சுத்தமாக பிடிக்காது…”

என்று அழுத்தமாய் நடராஜன் கூற பார்வையை தாழ்த்தி அமைதியானாள் அனு.

மேலும் அவரே,

“அத்தோட இது இப்ப வந்த பிரச்சனை இல்லை…பல வருஷத்திற்கு முன்னாலே ஆரம்பிச்சது…அனுவோட அப்பா யாரு தெரியுமா கொடி…”

என்று தன் தங்கையை பார்த்துக்
கேட்ட நடராஜன்,

“சிவபாலன்…” என்று கூற அதிர்ந்து நோக்கினார் பூங்கொடி.

(சுத்தி சுத்தி ஒரே விசயத்திலே நிக்கிறியே என்ன தான் அப்படி நடந்தது சொல்லி தான் தொலையேம்மா என்று கோபமாய் நீங்கள் முறைப்பது என்னால் உணரமுடிகிறது ஆதலால் நானே அதனை கூறுகிறேன்.)

சில வருடங்களுக்கு பின்னோக்கி செல்வோம்…

அன்றைய காலக்கட்டத்தில் இப்பொழுதை காட்டிலும் ஊர் திருவிழாக்கள் இன்னும் சிறப்பாகவும் கொண்டாட்டமாகவும் நிகழும்…அந்தந்த ஊர் மக்கள் மட்டுமின்றி வண்டிக்கட்டி பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் திடலாய் கிளம்பி வருவார்கள்.
அப்படி ஓராண்டு தேன்சோலையில் நடந்த திருவிழாவில் கலந்துக் கொள்ள தன் தோழர்களோடு வந்தவன் தான் சிவபாலன்.

சாமி கும்பிட்டானோ இல்லையோ கலர் கலர் தாவணியில் மிளிர்ந்த கன்னியர்களை கண்களால் கொல்லை கொள்வதே முதல் பணியாய் செய்துக் கொண்டிருக்க பல பெண்களில் முக சுளிப்பிற்கும் பல பெண்களில் பொறுக்கி என்ற திட்டல்களுக்கும் மத்தியில் ஒரே ஒரு பெண் மட்டும் அவன் பார்வையில் வெட்கம் கொண்டு பார்வையை தாழ்த்தினாள்.
அவள் தான் பூங்கொடி.நடராஜனின் தங்கை.
புத்தம் புதிதாய் பூத்த அந்த பதினாறு வயது மங்கைக்கு காமப்பார்வைக்கும் காதல் பார்வைக்கும் வித்தியாசம் தெரியாதது தான் பரிதாபம்.ஊரின் இளவட்டங்களுக்கு நடராஜனின் தங்கை என்ற ஒன்றே அவள் மீது மரியாதையை மட்டுமே தர இதுவரை யாரும் அவளை வேறு பார்வை பார்ததில்லை.அதனால் முதல் முறையாக ஒரு ஆடவனின் இத்தகைய பார்வை அவளை வெட்கம் கொள்ள வைத்தது.

எதார்த்தமாய் நூல் விட்டு பார்த்தில் ஒரு பச்சை தாவணி போட்ட கிளி தானே வந்து சிக்கவும் ஏக குஷியான சிவபாலன் தனது பார்வை கனைகளை அவள் போகும் இடமெல்லாம் தொடரவிட்டான்.

மேலும் அவளை பற்றி நண்பர்களிடம் விசாரிக்கையில் கிடைத்த தகவல் படி அவளது செல்வாக்கை அறிந்தவன் மனதால் இன்னும் சில கணக்குகளை போட்டான்.

அவன் பார்வையின் பேதத்தை உணர்ந்த நண்பர்கள்,

“வேண்டாம் டா… அதெல்லாம் ரொம்ப பெரிய இடம்…உன் பட்டணத்து பழக்கத்தெல்லாம் இங்கே காட்டாதே…”

என்று எச்சரித்தும்,

“போடா… எத்தனை நாளைக்கு தான் ஒன்னு மாற்றி ஒன்று தாவிக் கொண்டே இருப்பது…ஒரு இடத்தில் செட்டில் ஆக வேண்டாமா…”

என்பான் கோணல்சிரிப்போடு…
அதன்படி திருவிழா முடிந்தும் தேன்சோலைக்கு அவனது வருகை அதிகமாக ஏற்கெனவே அவனிடம் லேசாக சாய்ந்திருந்த பூங்கொடியை காதல் வலையில் விழ வைப்பது கஷ்டமாகயில்லை.

நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாய் அவன் காதலை வளர்க்க தங்கையின் போக்கை கண்டுக்கொண்ட நடராஜன் முதலில் சிவபாலனை பற்றி தான் விசாரித்தான்.அதில் கிடைத்த பதில்கள் எல்லாம் மோசமாக இருக்க கோபம் கொண்டவன் தங்கையை கண்டித்து வைத்தார்.

காதல் கண்ணை மறைக்க அண்ணனின் பாசம் கூட அடக்குமுறையாய் தோன்ற தன் காதலுக்கு ஒப்புக்கொள்ளாத அண்ணனையே எதிர்க்க துணிந்தாள் பூங்கொடி.

அவள் சிவபாலனிடம் சொல்லி அழுத பொழுது அவனும் நல்ல பிள்ளையாய் வேடமிட்டு முறைப்படி பொண்ணு கேட்டு அவள் வீட்டிற்கே வந்துவிட உக்கிரமானான் நடராஜன்.

தன் தந்தையையும் மீறி சிவபாலனை கண்ட மேனிக்கு சாடிய நடராஜன் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வீட்டை விட்டு துரத்தினார்.

அந்த சம்பவம் சிவபாலனை பெரிதும் பாதிக்க நடராஜனை பழி வாங்கவேண்டும் என்ற வஞ்சகம் மனதில் துளிர்விட்டது.
அதன் முதல் கட்டமாக பூங்கொடியை கைப்பிடித்து அவள் மூலம் ஆட்டிவைக்க திட்டமிட்டவன் அவளை தனிமையில் சந்தித்து அவள் அண்ணன் செய்ததற்கு அனுதாபம் தேடி அவளை தன்னோடு ஓடிப்போய் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்தான்.

சிவபாலனின் திட்டத்தின் படியே எல்லாம் செயல்பட கடைசி நேரத்தில் எப்படியும் இதனை கண்டுபிடித்த நடராஜன் தன் நண்பன் ஜெயகாந்தை மட்டும் உடன் வைத்துக் கொண்டு யாரும் அறியும் முன் ஊர் எல்லையிலே அவர்களை பிடித்துவிட்டான்.

அங்கேயே அவன் உயிர் மட்டும் மிச்சம் இருக்கும் அளவு வெளுத்து வாங்கியவன் தன் தங்கையை இழுத்து சென்றுவிட்டான்.

இனி பூங்கொடியை இப்படியே விட மனம் இன்றி அவளை சீக்கிரம் திருமணம் முடிக்க நினைத்த நடராஜன் தன் தந்தையிடம் இதனை குறித்து பேச அவளை திருமணம் செய்துக் கொள்ள தானே முன் வந்தான் ஜெயகாந்த்.

அதன்பின் சிலபல மிரட்டல்களுக்கு மத்தியில் பூங்கொடியை ஜெயகாந்த் கையில் பிடித்துக் கொடுத்ததும் தான் நடராஜன் மனம் அமைதியடைந்தது.இனி தங்கை குறித்து பயமில்லை என்று…

காலமும் அனுபவமும் உண்மையான அன்பையும் காதலையும் பூங்கொடிக்கு கற்று தர தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார் இனிதாக…

இங்கே இவ்வாறாக இவர்கள் வாழ்க்கை இனி எல்லாம் வசந்தமே என்று இருக்க சிவபாலனோ மனதில் கடும் வெறியோடு முன்னேற பலவழிகளை கையாண்டான்.வாழ்க்கையில் தான் கொண்ட அவமானங்களுக்கு எல்லாம் அறுவடை செய்ய அடிப்பட்ட புலியாய் காத்திருந்தார்.

தான் நினைத்தை அடைய அவருக்கு தேவைப்பட்ட உயரத்தை அடையவே வாழ்க்கையில் பல வருடங்கள் கழிந்திருக்க மனைவி,மகள் என்று வந்தபின்பும் அவர் வன்மம் குறையவில்லை.

முதல் கட்டமாய் ஜெயகாந்தின் தொழிலில் தொடர்ந்து இடர்பாடுகளை ஏற்படுத்தினார்.
ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று தொடர்ந்து அவர் கொடுத்த இன்னலில் ஜெயகாந்த் திணறுவதை காண்கையில் ஒரு சேடிஸ்ட்டாக மகிழ்ந்து தான் போவார்.ஆனால் அதற்கு எதிரொலியால் தன் மகளை நடராஜனின் மகன் காதலிப்பது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து மகள் அவனோடு சென்று திருமணம் முடித்துக் கொண்டதும் இன்னுமே அவர் கோபம் அதிகரித்தது.

தன்னை பழிவாங்கவே இவ்வாறு நடராஜன் செய்வதாக சிவபாலன் நினைத்தவருக்கு கொலை செய்யும் வெறி வர அதனை அமல்படுத்தவும் விழைந்தார்.ஆனால் அதில் பணம் குழப்படி என்று பிரச்சனைகள் நுழைய இறுதியாக யவ்வனாவின் மூலம் நடராஜனின் வீட்டில் புகுந்தே விளையாடினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியவர் தான் கையே வைக்காமல் நரசிம்மனை கொண்டே தான் நினைத்ததை நிறைவேற்றி கொண்டார்.

நடராஜனும் ஜெயகாந்தும் பிஸ்னெஸ்ஸில் கொடைச்சல் செய்வது சிவபாலன் தான் என்று கண்டுபிடித்திருக்க இன்னும் வன்மம் பாராட்டுவதை கண்டு அதிர்ந்தனர்.

எப்படி இவனை சரிக்கட்டுவது என்று யோசித்தாலும் சிவபாலனை பற்றி தங்கள் மக்கள் அறிவதை இருவருமே விரும்பவில்லை.தங்கள் வாழ்கையின் கசங்கிய முடிந்து போன அத்தியாயங்களை பிள்ளைகளுக்கு தெரிய வேண்டாம் என்றே கருதினர்.
இவ்வாறு இவர்கள் நினைக்கையில் திடுதிப்பென்று மனோ மணக்கோலத்தில் அதுவும் சிவபாலனின் மகளையே திருமணம் முடித்து வந்து நிற்கவும் கடும் கோபம் கொண்டார் நடராஜன்.

தான் எப்படி வெளியே தெரியாமல் இதனை தீர்ப்பது என்று யோசிக்கும் போதும் இவன் மேலும் சிக்கலை ஏற்படுத்தி விட்டானே என்று ஆத்திரம் பொங்க அவனை வீட்டிலே சேர்க்க மாட்டேன் என்றார்.

அது கோபத்தில் சொன்னது தான் என்றாலும் நிதானித்த பின்பும் மகன் தன்னோடு இருப்பதைவிட தனியாக இருந்தால் அவனுக்கு எந்த ஆபத்தும் வராது என்று எண்ணினார்.ஆனால் அதை பொய்யாக்கி மனோகரை கொல்லும் அளவு துணிந்தபின் அவனை தனித்துவிட அவரால் முடியவில்லை.

இப்படி இலை மறை காயாக வீட்டினர் யாருக்கும் தெரியாமல் நடந்துக் கொண்டிருந்த அனைத்தும் இன்று குழந்தைகளை கடத்திய சம்பவத்தால் பகிரங்கமானது.

2 Likes

அத்தியாயம்-15

அனைத்தையும் சொல்லிவிட வில்லை என்றாலும் சொல்ல வேண்டியவையை நடராஜன் சொல்ல அனைவருக்குமே அதிர்ச்சி தான்.பூங்கொடி கண்கள் குளமாக கணவனை பார்க்க அவர் ஆதரவாய் தலையை தடவிக் கொடுத்தார்.

அனுவோ தந்தையின் மறுபக்கத்தை அறிந்ததில் அதிர்ந்தவள் ஒரு மகளாய் தன் தாயை நினைத்து வருந்தினாள்.அவர் வாழ்கின்ற வாழ்க்கைக்கு தான் என்ன அர்த்தம் என்று மனம் வெதும்பியது.

அனைவரின் சிந்தையிலும் ஏதேதோ ஓடிக் கொண்டிருந்தாலும் யாரும் வாய் திறந்து பேசும் மனநிலையில் இல்லை.

அனைத்தையும் ஒரு பார்வையாளராக அங்கே தூணின் அருகில் அமைதியாய் நின்றுக் கொண்டிருந்த தமிழின் அலைபேசி சிணுங்க அதில் வந்த தகவலை கண்டு அவன் இதழ்களில் லேசாய் புன்முறுவல் பூத்தது.

எதார்த்தமாய் அவனை கவனித்த மனோ ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்த ‘பொறு…’ என்பது போல் கையை உயர்த்தியவன் கையின் கடிகாரத்தில் பார்வையை வைத்து சரியாக ஐந்து நிமிடம் கழித்து வாசல் பக்கம் கையை காட்டினான்.

என்னவென்று புரியவில்லை எனினும் வாசல் பக்கம் திரும்பிய மனோ அதே சமயம் அங்கே,

“அம்மா…”

என்ற கூவளோடு கவினும் மதுவும் ஓடிவர அந்த குரல் அவன் உயிர் வரை சிலிர்த்தது.

பிள்ளைகளின் குரலில் சட்டென்று அனைவரும் வாசல் பக்கம் திரும்ப நம்ப முடியாத ஆச்சரியத்தில் திகைத்தனர்.

வரண்டு போயிருந்த பூமி மழையை கண்டது போல் எல்லார் மனமும் குளிர்ந்து போக வித்யாவும் பிரகாஷும் நொடி பொழுதில் பிள்ளைகளை அணுகி தூக்கி இருந்தனர்.

மிகுந்த பயத்தில் இருந்த பிள்ளைகள் பெற்றோரிடம் ஆறுதலை தேடி ஒளிய அவர்களை விட அச்சத்தில் இருந்த வித்யாவும் பிரகாஷும் பிள்ளைகளை தழுவி நிகழ்வதை கனவில்லை நிஜம் என்று உணர முயல அந்த குடும்பத்தின் அழகான சங்கமத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் கண்களும் ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தது.

எல்லோரும் அவர்களை சூழ்ந்துக் கொண்டு பிள்ளைகளை மாறி மாறி கொஞ்ச மனோ மட்டும் தமிழிடம் சென்றவன்,

“என்ன செஞ்ச தமிழ்… எ…எப்படி…”

சந்தோஷத்தில் வார்த்தை தடுமாற மிகுந்த உற்சாகத்துடன் கேட்கவும் மேலும் இதழ்கள் புன்னகையில் மலர,

“நமக்கு என்ன செய்ய அந்த எம்.எல்.ஏ நினைச்சானோ அதை நான் திருப்பி செஞ்சிட்டேன்…”

என்று தோளை குலுங்கி அசால்டாக சொல்ல அப்பொழுதும் மனோவிற்கு புரியவில்லை.

“தெளிவா தான் சொல்லேன்டா…”

“நாம நரசிம்மனை ஸ்மெல் பண்ணிட்ட விசயம் சிவபாலனுக்கு தெரியாதுல… நரசிம்மன் சிவபாலன் மாதிரி கிடையாது.பிள்ளை பாசம் ரொம்ப அவனுக்கு…அவன் பொண்ணு தான் அவன் உலகம்…ஸோ சிம்பிள்…அவன் பொண்ணை தூக்க வைச்சிட்டேன்…அவன் ஸ்டைல்லையே பொண்ணு வேணுனா பசங்க ரெண்டு பேரும் இன்னும் ஒரு மணி நேரத்திலே வீட்டில் இருக்கணும்னு நரசிம்மனை மிரட்ட வைத்தேன்… எல்லாம் தானா நடந்துச்சு…”

என்றவனை வாய் அடைத்து போய் தான் நோக்கினான் மனோ.எவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டான்.

“எப்படி தமிழ்…எங்க கூடவே தானே இருந்தே…”

“அதெல்லாம் அப்படி தான்…ஐயாக்கு நான் இந்த மாதிரி ரௌடி வேலைலா பார்த்தா பிடிக்காது…அதான் செஞ்சிட்டு சொல்லிக்கலாம்னு சொல்லல…”

என்றான் கண்சிமிட்டி…

சற்று அனைவரும் நிதானித்தபின் எப்படி வந்தார்கள் என்ற கேள்வி வர தமிழே சொன்னான்.

கேட்ட பிரகாஷ் கண்கலங்க வார்த்தைகள் இன்றி அவனை அணைத்துக் கொள்ள அவன் தோளில் ஆறுதலை தட்டினான் தமிழ்.

பெரிய கண்டத்தில் இருந்து தப்பி வந்ததால் பிள்ளைகளை உட்கார வைத்து முதல் வேளையாக பல்லவி திருஷ்டி சுத்திப்போடார். பயம் சற்றும் குறையாமல் அன்னையின் தோளிலே முகம் புதைத்து தேம்பும் மதுவை காணும் போது,

“ச்சே… இவரெல்லாம் மனுஷனா…”

என்று தன் தந்தை குறித்தே ஆற்றாமையோடு எண்ணினாள்.தள்ளி நின்றே அனைத்தையும் பார்த்தாளே ஒளிய அருகில் நெருங்கி யாருடனும் பேசவே அவளுக்கு தயக்கமாய் இருக்க ஏதோ தான் மட்டும் அந்நியப்பட்டது போல் தோன்றியது.அவள் நிலை அறிந்த பல்லவி தங்களைவிட மனோவின் ஆறுதல் தான் அவளுக்கு இப்போது அவசியம் என்பதை உணர்ந்து வித்யாவின் அருகில் அமர்ந்து மதுவின் தலையை வருடிக் கொண்டிருந்த மனோவை,

“மதுவை உன் அண்ணனும் அண்ணியும் பார்த்துப்பாங்க…நீ போய் பொண்டாட்டிய பாருடா…”
என்று முணுமுணுத்துவிட்டு சென்றார்.

திரும்பி அவளை பார்த்தவன் பச்சை மண்ணாய் திருதிருவென பாவமாய் நின்ற மனைவியை கண்டு மனம் இலக எழுந்து,

“என் பேக் எங்க வச்சே அனு…”

என்று இயல்பாய் கேட்டபடி அருகில் வர நேற்று திட்டிய பின் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் இருந்தவன் திடீரென்று கேட்கவும்,

“ஆங்…” என்று தடுமாறினாள்.

அதை பொருட்படுத்தாது,

“வா…வந்து எடுத்துக் கொடு…”

என்று கூறி அறைக்கு செல்ல அவளும் அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

உள்ளே வந்ததும் நேராய் கபோர்ட்டில் இருந்து அவன் உடைகள் இருந்த பையை எடுத்து நீட்ட அதை வாங்கி வைத்தவன்,

“அப்புறம்…கிளம்புறேன்னு சொன்னீயே…மூட்ட முடிச்செல்லாம் கட்டியாச்சா…”
என்று கேட்டான்.

கிளப்பி விடுவது போல அவன் கேட்டது கேட்டது அவளுக்கு கோபம் வர,

“ஏன் நான் போகணும்னு அவ்வளவு ஆசையா…”

என்றாள் முறைப்போடு…

“எனக்கா ஆசை…நீ தானே பெரிய இவ மாதிரி நான் போயிடுடேன் அது இதுனு டையலாக் விட்டது…பேசுறதுக்கு முன்னாடி என்னை பற்றி யோசிச்சியாடி…நான் கோபப்பட்ட பதிலுக்கு கோபப்படு…இல்ல சமாதானம் படுத்து…அதை விட்டு என்ன அசால்டா போறேங்கிற…உனக்கு அது அவ்வளவு ஈசியா…பிச்சுடுவேன் விளையாடுக்கு கூட இனியோருதரம் அப்படி சொன்னேனா…”

என்று கடுமையாய் சொல்ல அதற்கும் பாவமாய் பார்த்தவளை இழுத்து அணைத்து இருந்தான்.

அவன் மார்போடு ஒன்றியவள்,

“எனக்கு கில்டியா இருக்கு மனோ… எல்லாரும் என்னை பற்றி என்ன நினைப்பாங்க.வித்யாக்காட்ட எந்த முகத்தை வைச்சிக்கிட்டு போய் பேசுவேன்…”

அவனிலே புதைந்து விடுபவள் போல் அவனை அணைத்தபடி கலங்கமாய் கேட்டாள்.

“ஹே லூசு… யாரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க…என் அனு பேபி சொக்க தங்கமுனு எல்லாருக்கும் தெரியும்…அப்பா சொன்னா மாதிரி உனக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… சரியா…”

என்றவன்,

“ஆனால் இனிமேலாவது உன்னை மாதிரியே எல்லாரும் வெகுளியா இருப்பாங்கனு கண்மூடி தனமா நம்பாதே…”

என்று கூற அதற்கு தலை அசைத்தாலும் அவள் மனம் நம்பமறுத்தது.
'யவ்வனாவை நான் மறுபடியும் பார்க்கணும்…அவ வாயாலே ஏன் அப்படி செஞ்சானு கேட்டே ஆகணும்…"
என்று எண்ணினாள்.

“ஹான்…ஒரு முக்கியமானவங்கள நான் வந்ததில் இருந்து கண்டுக்கவே இல்லை பாரு… அப்புறம் கோவிச்சிக்க போறாங்க…”

என்று கூறியவன் அப்படியே மண்டியிட்டு லேசாக மேட்டிட்டு இருந்த அவள் வயிற்றின் அருகில் முகம் வைத்து,

“மை பேபி… எப்படி இருக்கீங்க…நான் இல்லாதப்ப அம்மாவை சமர்த்தா பார்த்துக்கிட்டீங்களா…”

என்று கொஞ்சும் குரலில் அவன் பேச மற்ற அனைத்தும் மறந்து கணவனின் செய்கையில் இரசிப்புடன் லயித்து இருந்தாள்.

சரி இவர்களுக்கு சற்று தனிமை கொடுத்துவிட்டு நாம் நமது நாயகனை தேடி செல்வோம்.

நடராஜனோடு ஏதோ தீவிர ஆலோசனையில் இருப்பது தெரிகிறது.இறுதியாய்,

“இத்தனை நாள் அவன் என்ன செய்தாலும் கண்டுகாமல் விட்டோம்…ஆனால் இன்னைக்கு இவ்வளவு தூரம் வந்தபிறகு அவனை சும்மா விடக்கூடாது தமிழ்…பதிவி இருக்க போய் தானே இந்த ஆட்டம்…அதை முதலில் பறிக்கனும்…”

என்று அவர் வார்த்தைகளை கடித்து துப்ப,

“ஐயா நீங்க கவலையே படாதீங்க…சொல்லிட்டீங்கள இனி நான் பார்த்துக்கிறேன்…”

என்று உறுதியளித்தான்.அதே சமயம் அவர்களிடம் வந்த கவின் தமிழிடம்,

“சித்தப்பா…”

என்று அவன் கையை பிடித்துக்கொள்ள,

“என்னடா…”
என்றான் வாஞ்சையோடு…

“சித்தப்பா…நீங்க தானே எங்களை காப்பாத்துனீங்க…ஏன் யவ்வனா அக்காவை காப்பாத்தல…”

என்று பளீச்சென்று கேட்க யவ்வனா பெயரை கேட்டதுமே அவனுக்கு கோபம் ஏறியது.

“அவளை ஏன் காப்பாத்தனும்…அவ தானே நம்ம எல்லாரையும் ஏமாற்றி உங்களை கடத்திட்டு போனா…குழந்தைங்கனு கூட யோசிக்காமல் இப்படி செஞ்ச அவள் பொண்ணே கிடையாது…பிசாசு…”

அவனுக்கு புரியாது என்றபோதும் தமிழின் ஆத்திரத்தில் வார்த்தைகள் வந்து விழுந்தது.

“அக்கா பேட் கேர்ள் இல்ல சித்தப்பா…அவங்க எங்களை விட்டு போக மாட்டேன் தான் சொன்னாங்க தெரியுமா…அந்த அங்கிள் தான் அவங்களை கார்லேந்து தள்ளி விட்டுடாங்க…பாவம் தெரியுமா அக்கா…அழுதுக்கிட்டே கார் பின்னாடி ஓடிவந்து விழுந்துட்டாங்க…”

ஏதோ அவனுக்கு தெரிந்த அளவில் விளக்க ‘இதென்னடா புது கதை…’ என்று குழம்பினான் தமிழ்.நடராஜனிற்கும் பேரன் கூறியதை கேட்டு குழப்பமே…!!ஆனால் அதற்கும் மேல் சிறு பிள்ளையிடம் என்ன கேட்பது எனவே,

“சரி கண்ணா…நாம பார்த்துக்கலாம்… இன்னும் நீ சாப்பிடல தானே… எவ்வளவு நேரம் என் தங்கம் பசியோட இருக்கும்
.வா சாப்பிடலாம்…”

என்று பேசிக்கொண்டே அவனை தூக்கிய நடராஜன் தமிழை அர்த்ததோடு ஒரு பார்வை பார்த்து செல்ல அவனோ யோசனையில் ஆழ்ந்தான்.


நிமிர்ந்து சிவபாலனை பார்க்கவே அச்சப்பட்டவனாய் நரசிம்மன் தாழ்ந்த குரலில்,

“மன்னிச்சிடுங்க ஐயா…என் பொண்ணை தூக்கு வாணுங்கனு நான் சத்தியமா எதிர்பார்க்கவில்லை.அவ என் உயிர் ஐயா…அவ இல்லாமல் நான் இல்லை…அதான்…”

என்று அவன் பேசும் போதே ஆத்திரத்தோடு கையில் இருந்த கைப்பேசியை தூக்கி வீசிய சிவபாலன்,

“செத்துப்போ…”

என்று ஆங்காரமாய் கத்தியவர்,

“கொலைவெறில இருக்கேன் சிம்மா… கோபத்தில் எதாவது செஞ்சிடும் முன்னால இங்கிருந்து போ…போடா…”
என்று உறுமினார் அடிப்பட்ட புலியாய்…நினைத்தது நடவாததால் அவருக்கு கண்மண் தெரியாமல் கோபம் பொங்கியது.நடராஜனை பற்றி அறிந்து கொணடவருக்கு அவரது நிழலாய் அசைக்க முடியாத அரணாய் இருக்கும் தமிழை தெரியாததே பரிதாபம்.

2 Likes

அத்தியாயம்-16

தனக்கு நேராக அதிவேதமாய் சுழன்றுக் கொண்டிருந்த மின்விசிறியை கண்சிமிட்டாமல் கட்டிலில் படுத்திருந்த யவ்வனா பார்த்துக் கொண்டிருந்தாள்.அதன் வேகத்திற்கு ஈடாக அவள் மூலையும் சிந்தனையில் சுழன்றுக் கொண்டிருந்தது.

ஆனால் என்ன யோசித்தும் அவளுக்கு எதுவும் தோன்றவில்லை.பிச்சு போட்டதுப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நினைவு வர அப்படி வரும் நினைவுகளையும் இன்னது என்று புரிந்துக் கொள்ள முடியாமல் மண்டை காய்ந்தது.

அவளை மேலும் சிந்திக்க விடாமல் கதவு திறக்கும் சத்தம் கேட்க உள்ளே வந்தவனை கண்டு பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

வாட்ட சாட்டமான உடல்வாகும் கூர்மையான பார்வையோடும் நடிகர் ரானாவின் சாயலில் இருந்தான் அவன்.

அவன் பேசும்முன் அவளே,

“அவர்தான் முதலில் என்னை பேசுனாரு…அதுக்கு பதில் தான் நான் கொடுத்தேன்…”

என்று அவசரமாய் சொல்ல அவன் பதிலே சொல்லாமல் வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தான் அவளையே அழுத்தமாய் பார்த்தபடி…

“அவன் யாரு தெரியுமா…அவனுக்கு புடிக்காது யாராவது செஞ்சால் போதும் பட்டுனு கன் எடுத்து சுட்டுடு போயிட்டே இருப்பான்…எனக்காக தான் உன்னிடம் அடங்கி போறான்…அதுக்குனு அவனுட்ட நீ ரொம்ப சீண்டுறீயா… நேரம் போல
நேரம் இருக்க மாட்டான்…அவனை எதுக்கு எரிச்சலாக்குற…”

என்று அவன் சொன்னது அவளுக்கு லேசாய் பயத்தை கொடுத்தாலும்,

“அவரு சும்மா என்னை ‘பைத்தியம்… பைத்தியம்…’ னு திட்டினால் எனக்கு கோபம் வராதா…நான் ஒன்னும் பைத்தியம் இல்ல…”

என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்… அதேசமயம் இவர்கள் யாரை பற்றி பேசிக் கொண்டிருந்தனரோ அவனே உள்ளே வந்தான் யவ்வனாவை முறைத்தபடி…பதிலுக்கு அவளும் அவனை விறைப்பாக பார்த்தாள்.

‘இவங்க இரண்டு பேரையும் ஒரே இடத்தில் வைப்பது கஷ்டம் போலவே…’
என்று யோசித்தவன் இரண்டு நாள் முன் இவளை இங்கு அழைத்து வந்ததை நினைத்து பார்த்தான்.
தண்டவாளத்தில் விழுந்து கிடந்த இவளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்தபின் அவளுக்கு முதல் முறை நினைவு திரும்பிய போது அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.

‘அந்த பசங்களை எதுவும் செய்யாதீங்க…விட்டுருங்க…’

என்பதையே திரும்ப திரும்ப சொல்லி அழுதவளை மயக்க மருந்தின் உதவியோடு தான் கட்டுப்படுத்த முடிந்தது.

மருத்துவரோ இப்பெண் நெடு நாளாக ஒரு மன அழுத்ததில் இருந்துள்ளாள் என்றும் அது சிறுக சிறுக அதிகரித்து இன்று அது வெடித்து வெளி வந்ததன் விளைவு தான் இந்த ஆர்பாட்டம் என்றும் இதன் பாதிப்பாக அவள் பழைய நினைவுகளை இழந்து விட்டாள் என்றும் கூறியவர்,

‘எப்பொழுது நினைவு திரும்பும்…’

என்று அவன் கேட்டதற்கு,

“அவங்களுக்கு இப்பொழுது தேவை மன அமைதி தான்…எதையோ நினைத்து மிகவும் மனதை வருத்திக் கொண்டதன் விளைவு தான் இது… மீண்டும் எதையும் பற்றி கவலை கொள்ளாமல் இருந்தால் தானாக எப்பொழுது வேண்டும் சரியாகி விடுவார்கள்.இதனை தவிர உடம்பிற்கு எந்த பிரச்சனையும் இல்ல… மயக்கம் தெளிந்ததும் கூட டிஸ்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்…”

என்று கூறி அவர் சென்றுவிட அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மருத்துவமனையில் கிளம்பிவிடலாம் என்று தான் நினைத்திருந்தான்.ஆனால் இப்பொழுதையே அப்பெண்ணின் நிலையை காணும்போது அப்படி விட்டு செல்ல தோன்றவில்லை.
ஏற்கெனவே அவன் இங்கே வந்து நிற்பதை பல கண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தே இருந்தான்.எனவே தான் ரொம்ப நேரம் இங்கே இருப்பது சரி வராது என்று நினைத்தான்.இப்படியாக பல சிந்தனைகள் மனதில் ஓடினாலும் முகமோ மிகவும் இயல்பாய் இருந்தது.

எதார்த்தமாய் திரும்பி பார்த்தவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த கணபதியை கண்டு சிரிப்பு வர அதை மறைத்துக் கொண்டு,

“என்ன கணபதி செய்யலாம்…”

என்று அறையை சுட்டிக் காட்டி கேட்க அவன் இன்னும் வாய் பிளந்தான்.

'இந்த அண்ணனை காலத்துக்கும் என்னால புரிஞ்சிக்கவே முடியாது போலவே…ரோட்டில் எவனோ எப்படியோ போகட்டும்னு தலையை கூட திருப்பாமல் தன் வேலையே குறினு போயிட்டு இருக்கும்…இன்னைக்கு என்னானா தண்டவாளத்தில் மயங்கி கிடந்த ஒரு புள்ளைய கொண்டு வந்து ஹாஸ்பிடலில் சேர்த்ததே அதிசயத்திலும் அதிசயம்…இதிலே டாக்டர் வந்து பேசுறத பொறுமையாய் கேட்டதோடு நில்லாமல் அடுத்து என்ன செய்றதுனு என்னுட்ட வேற கேட்குறாரு…எனக்கு போட்டு தள்ள சொன்னால் அசால்ட்டா செய்வேன்… இதெல்லாம் எனக்கு என்ன தெரியும்…பதில் சொல்லலேனாலும் திட்டுவாரே…"

என்று கணபதியின் மனமோ புலம்பி தீர்க அவனோ,

“பதில் சொல்லுடா…”

என்று அதட்டவும்,

“அது அண்ணே… நாம என்ன செய்யமுடியும்…பார்க்கவும் பாவமா தான் இருக்கு…வேணும்னா ஒரு மென்டல் ஹாஸ்பிடலில் கொண்டு போய் விட்ருவோம்…அதுக்கா பைத்தியம் தெளிந்ததும் தன் வழியை பார்த்துக்கும்…”

என்று நல்ல தீர்வு சொன்ன பாவனையில் கணபதி நிற்க அவனை முறைத்தவன்,

“ஏன்டா கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா…ஆளு மட்டும் எருமை மாதிரி வளர்ந்திருக்க…அது பழசை எல்லாம் மறந்திடுச்சுனு தானே டாக்டர் சொன்னாரு…அதுக்குனு பைத்தியமுனே முடிவு பண்ணிட்டியா…நல்லா இருக்கிற பொண்ணை பைத்தியகார ஹாஸ்பிடலில் சேர்த்து அந்த பொண்ணு முழு பைத்தியம் ஆகவா…”

என்று கோபமாய் அவன் திட்ட,

“அந்த பொண்ணு என்னவான நமக்கு என்னாண்ணே…”

என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே முழுங்கிவிட்டு அவனை பாவமாக பார்த்தான்.

அப்பொழுது அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த தாழ்வாரத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் இவனை கணடதும் அதிர்ந்து ஒருவன் மற்றவன் காதில்,

“இது பத்ரி தானே…”

என்று கிசுகிசுக்க அவனோ,

“ஆமாடா…அவரேதான்…”
என்று பதிலுக்கு கிசுகிசுத்தான்.
அது சற்று குறுகிய வழித்தான்.அதில் இவர்கள் இருவரும் எதிரெதிரே நிற்பதால் அந்த இளைஞர்கள் அவர்களை கடந்து செல்ல யோசித்துக் கொண்டே நிற்க முன்னாடி ஒரு அடி வைப்பதும் பின் வாங்குவதுமாய் தடுமாறிய அவர்களை கண்டு பத்ரி,

“என்ன டா…”

என்று அதட்டலாய் கேட்க பதறி விட்டனர்.

“இல்ல…அங்க…போக…வழி…இல்ல இங்க…”

என்று ஒருவன் தந்தியடிக்க மற்றவனோ அவன் பின்னால் பதுங்கினான்.அதற்குள்

“அடிங்க…நீ போகுறதுக்கு எங்கண்ணே வழி விட்டு நிற்கணுமா…பொடிப்பசங்க மாதிரி இருந்துகிட்டு…என்ன தெனாவெட்டு இருக்கும் உனக்கு…வந்து பாரேன்…முடிஞ்சா வந்து பாருடா…”

என்று கணபதி எகிறி அடிக்க வர,

“அய்யோ இல்லங்க…நான்…நான் இன்னோரு நாளு வந்து பார்த்துக்குறேன்…”

என்று அடித்து பிடித்து வந்தவழியே திரும்பி ஓடிவிட்டனர்.

“டேய்…டேய்…ஏன்டா இப்படி அலம்பல் பண்ற…மாடிக்கு போக இது மட்டும் தான் வழி…அவன் வேற எப்படி போவான்…”

“எப்படியோ போகட்டும்…அதுக்குனு உன்னையே தள்ளி நிக்க சொல்வானா…”

என்று நியாயம் கேட்க,
‘இவனை…’ என்று தலையில் அடித்துக்கொள்ளதான் முடிந்தது.

இப்படியே இருந்தால் இந்த பக்கமே யாரையும் வரவிட மாட்டான் என்பதை உணர்ந்து ஒரு முடிவிற்கு வந்தவனாய் பத்ரி,

“சரி…சாயுங்காலம் வந்து டிஸ்சார்ஜ் பண்ணி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடுவோம்…”

என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியை கணபதியின் தலையில் இறக்கினான்.

“அண்ணே… வீட்டுக்குளாம் எதுக்கு…”

என்று விழிக்க, “சொன்னால் கேட்டுகனும் எதிர்த்து கேட்ககூடாது…”

என்று அவன் அழுத்தமாய் சொல்லவும் ‘இந்த அண்ணனுக்கு என்னவோ ஆகிடுச்சு…’ என்று புலம்பிய படி முன்னால் சென்றான்.

அப்போழுது இருந்தே யவ்வனாவின் மீது அவனுக்கு ஒரு எரிச்சல் தான்.

பத்ரி இதுவரை யார்மீதும் இரக்கமோ கருணையோ காட்டியது இல்லை.அகத்திலும் சரி முகத்திலும் சரி உடன் பிறந்த ஒன்றாய் இறுக்கம் இருக்கும்… அப்படி பட்ட பத்ரிக்கு முதல் முறையாக ஒரு கனிவு ஏனோ யவ்வனாவிடம் தோன்றியது.அதற்கு ஒரு காரணமும் இருந்தது.(அது என்னவென்று பின்னொரு நாளில் அறிவோம்)
எனவே அவளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தவன் அவளுக்கு உடையவர்களை கண்டுபிடித்து அவளை சேர்க்கும் வரை அவள் தன் வீட்டிலே வைத்திருக்க முடிவு செய்ய அது கணபதியின் கோபத்திற்கு தூபம் போட்டது.இருந்தும் பத்ரியை எதிர்த்து பழக்கமே இல்லாததால் அவன் கோபம் எல்லாம் யவ்வனா மீதே இருக்க அவளை பார்க்கும் போதெல்லாம் கடுகடுத்தான்.

முதல் நாள் தன்னை குறித்தே குழப்பத்திலும் அறியாமையிலும் துவண்டதால் கணபதியின் பேச்சுக்களை அமைதியாய் ஏற்றுக் கொண்டாலும் மறுநாள் அவளது பிறவி குணம் தலைதூக்க பதிலுக்குப் பதில் வாயாடினாள்.
இப்பொழுதும் இதே தான்.உள்ளே வந்த கணபதி,

“அண்ணா…இந்த எட்டனாவை பத்தி ஒரு தகவலும் கிடைக்கல…பேரை தவிர வேற ஒன்னும் தெரியலேனு சொல்லுது…ஊரு எதுனு விசாரிச்சா வயலு இருக்கும் வாய்க்கால் இருக்கும்னு சொல்லுது…இதை வைத்து என்ன அண்ணா கண்டுபிடிப்பது…இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்…”
என்று அவன் சொல்லி முடிக்கவில்லை,

“என் பேரு யவ்வனா…இந்த எட்டனா.அஞ்சுகாசுனுலாம் கூப்பிட்டீங்க எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்…”

என்று அவள் சிலிர்க்க,

“ஏ…எனக்கு எப்படி தோனுதோ அப்படி தான் சொல்லுவேன்…என்ன கிழிச்சுடுவே நீ…அரைலூசு…”
என்றான் அவனும் கோபமாய்…

“நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு எனக்கு தான் தெரியும்…கேள்வியே தெரியாமல் பதில் தேடுறா மாதிரி மண்டையே வெடிக்குது…இதுல உங்களுக்கு நான் என்ன பண்ணினேன்…லூசு…லூசுனு சொல்றீங்க…நான் இல்ல நீங்க தான் லூசு…லூசு மாதிரி கத்திட்டே இருக்கீங்க…”

“யாரை பார்த்து லூசுங்குற…அடிச்சு பல்லெல்லாம் பேத்துடுவேன்…அண்ணா…நீ கொடுக்குற எடம் தான்…அது இப்படி திமிரா பேசுது…”

என்று அவன் சொல்ல கோபத்தில் புஸுபுஸு என்று மூச்சுவிட்டவள் பத்ரியிடம்,

“இப்படி பேச்சு வாங்கிட்டு என்னால இருக்க முடியல அண்ணா…நான் போறேன்…நல்லதோ கெட்டதோ என்னை நான் பார்த்துக்குவேன்…”

என்றாள்.

“ஹப்பாடா…அதை முதலில் செய்… போய் தொல…”

என்று கணபதி கூற தான் அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைத்துக் கொண்டு கோபமாய் பத்ரி எழவும் பட்டென்று இருவர் வாயும் மூடிக்கக்கொண்டன.

கணபதியை பார்த்தவன்,

“நான் சொன்னால் சொன்னதை செஞ்சி முடிக்கிற கணபதியை தான் எனக்கு தெரியும்… இப்படி காரணம் சொல்லி தட்டிகழிக்கிற கணபதி எனக்கே புதுசா இருக்கே…எப்போலேந்து கணபதி இப்படி…”

அதட்டல் இல்லாமல் ஓர் ஆளுமை நிறைந்த அவன் தொனியில் கணபதி பார்வை தாழ்த்தினான்.
யவ்வனாவின் புறம் திரும்பி,

“அப்புறம் நீ…உன்னை நான் தானே இங்கே அழைத்து வந்தேன்…நான் நினைத்தால் மட்டும் தான் நீ இங்கிருந்து போக முடியும்…அத்தோட என் முன்னால் குரல் உயர்த்தி பேசாதே…எனக்கு பிடிக்காது…”

என்று சொல்ல அவளையும் அறியாமல் தலையை சரியென அசைத்தாள்.கணபதியிடம் சரிக்கு சரி பேசியவளால் பத்ரியிடம் அவ்வாறு பேச இயலவில்லை.அதன்பின்
அவன் அங்கிருந்து வெளியேற அவனை தொடர்ந்து கணபதியும் சென்றுவிட்டான்.

கால்களை மடக்கி தன்னோடு அணைத்து பிடித்தவள் அதில் தலை சாய்த்துக் கொண்டாள்.

தனக்கு என்னதான் நேர்ந்தது… நினைவுகள் இழந்து நானே யாரென்று அறியாத இந்நிலையை அவள் அறவே வெறுத்தாள்.முழுவதும் மறந்திருந்தால் கூட பரவாயில்லை.நிறைய முகங்கள்… சின்ன சின்ன சம்பவங்கள் என்று ஏதேதோ நினைவில் வருகிறது ஆனால் அதை புரிந்துக் கொள்ள தான் முடியாமல் தவித்தாள்.இதில் கணபதி வேறு…தான் இருப்பது ஆபத்தான ஒரு இடம் தான் என்பதை அவள் இந்த இரண்டு நாட்களிலே உணர்ந்துக் கொண்டாள்.பத்ரியை பற்றியும் ஓரளவு தெரிந்து வைத்திருந்தாள்.இருந்தும் பத்ரி மீது பயம் வரவில்லை.மாறாக தன் உயிரைக் மீட்டு தனக்கு அடைக்கலம் கொடுக்கும் அவன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாள்.சற்று நேரத்தில் அமர்ந்த வாக்கிலே உறங்கியும் போனாள்.

அறையில் இருந்து வெளியே வந்த பத்ரியை தொடர்ந்து வந்த கணபதி,

“மன்னிச்சிடுங்க ண்ணா…”

என்று சின்ன குரலில் கூற அவன் மன்னிப்பை விடுத்து,

“உனக்கு ஏன் யவ்வனா மேல அப்படி ஒரு கோபம் கணபதி…அவ உனக்கு என்ன செஞ்சிட்டா…”

என்று கேட்டபடி முன்னால் நடந்தான் பத்ரி.

“இல்ல ண்ணா…அது யாரு என்னானே தெரியலை…அத எதுக்கு நாம பார்த்துக்கணும்…உண்மையாவே அது எல்லாத்தையும் மறந்திடுச்சா…இல்ல ஓசில இங்கே டேரா போட பார்க்குதானு எனக்கு டவுட்டா இருக்கு…அதுவும் எப்படி பேசுது நீங்களே பார்த்தீங்கல்ல…”

என்று அவன் சொல்லும்போது பத்ரி அலைபேசியை எடுத்து ஏதோ பார்த்துக் கொண்டே வந்தான்.அவன் முக பாவனை கணபதி சொன்னதை கவனித்தானா இல்லையா என்று நம்மை யோசிக்க வைக்கும்படி இருந்தது.

ஆனால் அவனோ அலைபேசியில் இருந்து கண்களையும் நகர்ந்தாமல் நடையையும் நிறுத்தாமல்,

“மறந்துட்டியா கணபதி…சில வருஷங்களுக்கு முன்னால நானும் இதே மாதிரி ஒரு நிலையில் இருந்தேன்…நீ சொன்னா மாதிரி அவனும் நினைத்திருந்தா இன்நேரம் என்னை புதைச்ச இடத்துல புல்லு முளைத்திருக்கும்…”

என்று வெகு சாதாரணமாய் சொல்ல,

“ண்ணா…பேச்சிற்கு கூட அப்படி சொல்லாதீங்க…”
என்று பதறினான் கணபதி.

"ஏன் பதறுற…நாம இருக்கும் தொழிலில் சாவு கழுத்து நுனில தான் இருக்கு…அதை கண்டு பயப்பட ஆரம்பிச்சா அதுவே நம்ம கழுத்தை அப்படியே நெறித்து போடுடும் தெரியும் தானே… அப்புறம் அதைப்பற்றி பேசவே பயந்தால் எப்படி… "

என்று பத்ரி சொன்னதற்கு கணபதியிடம் பதில் இல்லை.
மேலும் அவனே,

"நான் யாரு என்னானே தெரியாமல் தான் அவனும் என்னை காப்பாற்றினான் கணபதி அதுவும் அவன் உயிரை பணயம் வைத்து…

'ஒரு செக்கென்ட் தவறி இருந்தால் என்னோட நீயும் செத்திருப்படா…'னு நான் சொன்னதற்கு என்ன சொன்னான் தெரியுமா,

‘கண்ணு முன்னால போற உசுற வேடிக்க பார்த்துக்கிட்டு என் உயிர் நிக்காது சார்…’
சிரிச்சிக்கிட்டே சொன்னான்.
எத்தனை பேருக்குடா இந்த மனசு வரும்…அந்த பொண்ணு பார்த்தப் போ எனக்கு அவன் சொன்னது தான் பொட்டுல அறைந்தா மாதிரி ஞாபகம் வந்துச்சு…நம்ம கேரக்டர் இது இல்ல தான்.ஆனால் அவன் இங்கிருந்தா என்ன செஞ்சிருப்பானோ அதை செய்தேன்…"

என்று கூறிவிட்டு கையில் லாக் ஆகியிருந்த அலைபேசியை பார்த்தபடி நின்றான்.

ரொம்ப நாட்களுக்கு பின்பு இன்று தான் ‘அவனை’ பற்றி பேசுகிறான்.உணர்ச்சிகள் எதுவும் அவன் முகத்தில் பிரதிபலிக்வில்லை என்றாலும் அவன் உள்ள போராட்டத்தை கணபதியால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

“நீ சொல்லிட்டேல ண்ணா… விடு இனி அந்த எட்டனா என் பொறுப்பு…”

என்று உறுதியாக சொல்ல சரி என்று தலையசைத்துவிட்டு எதுவும் பேசாமல் தன்னறைக்கு செல்ல,

‘இரும்பு மனிதனாக காட்டிக்கொண்டாலும் இவருக்குள்ளும் எத்தனை பாசம்… எத்தனை அன்பு அவன்மேல்…’

என்று எண்ணி பெருமூச்சு விட்டான் கணபதி…

ஆம் இரும்பு மனிதன் தான் பத்ரி…!!!
வாழ்க்கையின் கடைநிலையில் தொடங்கிய அவன் பயணம் இன்று யாருவரும் அன்னார்ந்து பார்க்கும் உயரத்தை அடைந்தான் என்றால் அது அவனிற்கு இருந்த வெறியால் மட்டுமே சாத்தியமானது.
ஆம் கனவல்ல வெறி தான்.அவன் கடந்துவந்த உதாசினங்கள் புகழின் உயர்த்தில் இருக்க வேண்டும் என்ற வெறியை கொடுக்க அதற்கு எந்த வழியில் செல்லவும் தயங்கவில்லை.சிறு சிறு வேலைகள் செய்தான் பணம் சம்பாதிக்க அல்ல.பலம் சம்பாதிப்பதற்கு…அவன் நினைத்த உயரத்தை அடைய பணம் மட்டும் போதாது பலமும் தேவை என்பதை உணர்ந்தவன் நிறைய பேரிடம் பழக்கம் வைத்துக் கொண்டான்.

படிபடியாக நடந்து முதலில் அவன் ஆரம்பித்த தொழில் பழுதடைந்த பழைய கார்களை பழுது பார்த்து செக்கென்ட் ஹன்டில் விற்பதே…ஆனால் அவன் செட்டில் உள்ள பல கார்களுக்கு பல கதைகள் உண்டு.திருட்டு காரில் தொடங்கி பேங்கில் சீஸ் செய்த கார்வரை அனைத்திற்கும் அவன் ஷோருமில் இடமுண்டு.

அதில் தொடங்கி நிழலுலக பயணம் கடத்தல்,நிலம் அபகரித்தல், என்று எதையும் அவன் விட்டு வைக்கவில்லை.அனைத்தையும் தன் கைவசம் வைத்திருந்தான்.தொழில் எதிரிகள் என்று யாரையும் அவன் வளரவிட்டது இல்லை.
அவனை எதிர்க்க நினைத்தால்கூட கூண்டோடு அழித்து விடுவான்.ஒரு கட்டத்தில் அவன் வழியில் யாவரும் வரவே அஞ்சி நடுங்கினர்.அங்கே அவன் கை மட்டுமே ஓங்க ஆரம்பித்தது.
‘வேண்டும்…’ என்று நினைத்துவிட்டால் கடைசி சொட்டு இரத்தம் வரை உறிஞ்சாமல் விடமாட்டான் என்ற அப்பிராயம் அனைவரின் மனதிலும் ஆழ பதிந்தது.ஆனால் அவனால் ஒரு அப்பாவி பதிக்கப்பட்டான் என்று கைநீட்டி சொல்ல முடியாது. அவன் என்றுமே புரியாத புதிர் தான்.அந்த புதிரை விளங்கிக் கொள்ள இது அவனுக்கான கதைக்களம் இல்லை என்பதால் பத்ரியை விடுத்து நாம் நம் நாயகனை தேடி செல்வோம்…!!

2 Likes

அத்தியாயம்-17

தமிழின் வீட்டில்…

நாம் இங்கு வராத சில நாட்களில் அவன் வீட்டின் முன்புறமிருந்த செடிகளில் அப்பொழுது புதியாய் மொட்டு விட்டிருந்த பூக்கள் தற்சமயம் வண்ண வண்ண பூக்களாய் மாறியுள்ளது.மரம் செடிகள் வளர்பதில் வசுமதிக்கு ஆர்வம் அதிகம்.முன்பைவிட தற்போது புதிதாய் இரண்டு மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்.மேலும் வீட்டிற்கு புதிதாய் பெய்ன்ட் அடித்திருப்பார்கள் போலும் வீட்டின் வண்ணமும் மாறியிருக்க ஆனால் அப்பொழுதில் இருந்து இன்றும் மாறாத ஒன்று வசுமதியின் வசவு மட்டும் தான்.

சமையலறையில் அடுப்பில் எதையோ தாளித்துக் கொண்டே வாயில் தன் மகனையும் சேர்த்து தாளித்துக் கொண்டிருந்தார் வசுமதி.

“ஊரு உலகத்துல அவ அவ எண்ணென்னமோ கேட்குற…ஆனால் நான் என்ன பெருசா கேட்டுபோட்டேன்…பட்டும் நகையுமா வந்து கொட்ட சொன்னேன்…இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி என் பேரக்குழந்தைகள ஆசையா வளர்க்க தானே கேட்டேன்…அதுக்கு எனக்கு கொடுப்பினை இல்லாமல் செய்யுறானே…”

என்று பல்லை கடித்தபடி சத்தமாகவே புலம்பியவர் ஒவ்வொரு பொருளையும் எடுக்கும் போதும் வைக்கும் போதும் ‘டொம்…டொம்…’ என்று அதிர்வோடு வைத்தார்.

“முன்னாமாச்சும்…ஏதோ கல்யாணத்தை தள்ளி தான் போடுறானு நினைச்சா…இப்போ சட்டமா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேனு சொல்றானே…இவன் வயசு பசங்க என்ன… இவனோட சின்ன பசங்க கூட பிள்ளை குட்டினு ஆகிடானுங்க…ஆனால் இவன் மட்டும் இப்படி புத்திக் கெட்ட தனமா இருக்கானே…அப்பா இல்லாம வளர்ந்ததால தான் யார் பேச்சுக்கும் அடங்காமா திரியுறான்… அம்மா தானேனு இளக்காரம்…இதே அவன் அப்பா இருந்திருந்தால் இப்படி தான் தோண்றியா இருப்பானா…நான் கேட்டதை செய்ய எனக்குனு யாரு இருக்கா…”

என்று ஃபுல் ஸ்டாப் வைக்கும் எண்ணமே இல்லாமல் கமா போட்டு வசுமதி அவனை வதைத்துக் கொண்டிருக்க எங்கோ வெளியே செல்ல கிளம்பிக் கொண்டிருந்த தமிழ் அன்னையின் பேச்சை தாங்க முடியாமல் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.சில நாட்களாக தினமும் இதே வாடிக்கை தான்.குறிப்பாக பெண் பார்த்துவிட்டு வந்ததில் இருந்து.

வசுமதி தீடீரென்று ஒரு நாள் ஒரு சம்மந்தம் தகைந்து வருவதாகவும் பெண் பார்த்துவிட்டு வரலாம் என்று அழைக்க யவ்வனாவிடம் தொலைத்திருந்த மனதிற்கும் அன்னைக்கும் இடையில் தவித்தான்.அவன் தான் வசுமதியை முதலில் பெண் பார்க்க சொன்னது இடையில் யவ்வனா புகுந்து அனைத்தையும் குழப்பிவிட்டபின் தற்போது அம்மாவிடம் என்ன சொல்லி சமாளிப்பான்.அத்தோடு தன் ஏமாற்றியவள் என்று வண்டி வண்டியாய் கோபம் இருக்க,
"அவளுக்காக என் வாழ்க்கையை நான் வீணாக்க வேண்டுமா என்று வீம்பாக வசுமதியிடம் பெண் பார்க்க செல்ல சம்மதம் சொன்னான்.

பெரிதாக சொல்லிவிட்டாலும் அங்கே சென்றதும் ஏதோ தவறு செய்பவன் போல் அவஸ்தையில் நெளிந்தான்.அந்த சூழ்நிலையில் அவனால் பொருந்தவே முடியவில்லை.அதுவும் சர்வ அலங்காரத்தோடு குனிந்த தலைநிமிராமல் வந்து நின்ற பெண்ணை துளியும் அவன் கவனிக்கவில்லை.மாறாக இதே போல் யவ்வனாவை பெண் பார்க்க சென்றால் அவளும் இப்படி தான் குனிந்த தலை நிமிராமல் நிற்பாள என்று தன்னையே கேட்டுக் கொண்டவன் பின்பு,

‘எங்கே…அவள் தான் மாப்பிள்ளை பார்க்க வந்தது போல் என்னை சைட் அடிப்பாள்…நான் தான் வெட்கி தலை குனியனும்…’
என்று தானே கற்பனை செய்து கேலியாக எண்ணி பின்பு அந்த நிகழ்வெல்லாம் நடக்காத என்று மனம் ஏங்க தன் எண்ணபோக்கை கண்டு திடுக்கிட்டு தான் போனான்.

முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போல் இருக்க இனி ஒரு இங்கே இருக்க முடியாது என்பதை உணர்ந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு கிளம்பியவன் வீட்டிற்கு வந்ததும் வசுமதியிடம்,

'இனி பெண் பார்ப்பதை எல்லாம் விட்டுவிடு…நான் திருமணமே செய்துக்கொள்ள போவதில்லை…"

என்று ஒரே போடாய் போட அப்பொழுது அதிர்ந்தவர் தான் இப்பொழுது வரை விடாமல் அவனை திட்டிக்கொண்டிருக்கிறார்.

அவனாலும் அவள் நினைப்பில் இருந்து மீள முடியவில்லை.அவள் இருக்கும் போது கூட அவ்வளவாக எதுவும் தோன்றியது இல்லை.ஆனால் தற்போது சிந்தனை முழுவதும் அவளே வலம்வர எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்தான்.

இன்றும் அதே போல் தளர்ந்து அமர்ந்தவனின் முன்னால் இருந்த டீப்பாயில் சிரிப்புடன் அவள் அமர்ந்திருப்பது போலொரு பிம்பம் அவன்முன் தோன்ற அவளை கண்டதும் ஆத்திரமானான்.

“ஏய்… எல்லாம் உன்னால தான்டி…நான் பாட்டு சிவனேனு இருந்தேன் இங்க வந்து என் மனசை கலச்சிட்டு எஸ்கேப் ஆகிட்ட…ஆனால் நான் தினம் தினம் உன் நினைப்புல சாகுறேன்…”

என்று அவன் வார்த்தைகளை கடித்து துப்ப அப்பொழுதும் அதே புன்னகை தான்.

'சிரிக்காத…இப்படி சிரித்து சிரித்து தானே என்னை ஏமாற்றினே…இனியும் ஏமாறுவேன் நினைச்சியா…கொன்றுவேன் ராஸ்கல்…உன்னை ஒரு நாளு வாட்டி பார்த்திருப்பேனா…அதுக்குள்ள எப்படி இந்த அளவு மனசு பேதலிச்சு போச்சு…என்னவோ நீ தான் என் வாழ்க்கை என்கிறா மாதிரி எல்லாமே ஸ்தம்பித்து போச்சு…எப்படி இதெல்லாம் செஞ்ச…மனிஷியே இல்ல நீ…பிசாசுடி…பிசாசு…"

என்று கோபமாய் சொன்னபடி கழுத்தை நெறிக்க முயல அவள் பிம்பம் காற்றோடு மறைந்தது.

“எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும்
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி

கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும்
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி….”

சுற்றும் முற்றும் பார்த்தவன் தன் பைத்தியகார தனத்தை எண்ணி தலையிலே அடித்துக் கொண்டான்.சில நொடிகள் அவனிடம் ஒர் மௌனம்!!பின்பு மெதுவாக தலையை உயர்த்தியவன்,

“விடமாட்டேன் யவ்வா…உன்னை நிச்சயம் விடமாட்டேன்…எங்க நீ போயிருந்தாலும் சரி உன்னை தேடிக் கண்டுபிடித்தே தீருவேன்…நீ நல்லவளோ… கெட்டவளோ… என்னை பிடிக்குமோ பிடிக்காதோ…எனக்கு தெரியாது… அதெல்லாம் எனக்கு தேவையும் இல்லை.எனக்கு நீ வேணும்…என்னை பைத்தியகாரன் மாதிரி ஆக்கிட்டு போயிட்டேல உன்னை தேடிக் கண்டுபிடித்து கல்யாணம் பண்ணி காலம் பூரா என்கூடவே வாழ வைத்துக் கொடுமை படுத்துறேன்டி…நான் எப்படி உன்மேல பைத்தியம் ஆனேனோ அதே மாதிரி உன்னையும் என்மேல பைத்தியம் ஆக வைக்கிறேன்…இதுதான் உனக்கான தண்டனை…”

என்று வீர சபதம் எடுத்தான் தமிழ்…

(அடேய்ய்ய்… இதெல்லாம் ஓரு தண்டனையாடா…நாலு எப்பிசோட் முன்னாடி தானே பெரிய வில்லன் மாதிரி நரகத்தை காட்டுறேன் நாசாவ காட்டுறேன்னு சபதமெடுத்த அதுக்குள்ள இப்படி அந்த பல்டி அடிக்கிறியே…இது ஒரு ஹிரோக்கு அழகா…ஹலோ…சர்…தமிழ் சர்…கேட்காதே…இனி நான் என்ன பேசினாலும் இவனுக்கு கேட்கவே கேட்காது…)

முடிவெடுத்த திருப்தியில் எழுத்து வந்தவன் இன்னும் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்த வசுமதியின் கையை பற்றி மறுகையால் அடுப்பை அணைத்துவிட்டு அவரை இழுத்துக்கொண்டு நகர,

“டேய்…டேய்…அது இன்னும் கொதிக்கலடா…”

என்றவரை, “அதான்…அதுக்கும் சேர்த்து நீ கொதிக்கிறியே…வா ம்மோவ்…”

என்று அழைத்து வந்து கூடத்தில் நாற்காலியில் அமரவைத்தவன் அவர்முன் மண்டியிட்டு அவர் கையை பிடித்துக் கொண்டான்.

“இங்க பாரும்மா…நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தானே…சரி பண்ணிக்கிறேன்…ஆனா பாரு…உன் மருமக இருக்காளே…சரியான எமகாதகி…எங்க இருக்கானு தெரியல…அவளை எப்படியாவது கூட்டிட்டு வரேன்… அப்புறம் உன் ஆசைபடி கல்யாணம் பண்ணி வை…போதுமா…”

என்று சொன்னவனை உலக அதிசயத்தை பார்ப்பது போல் விழி விரித்து பார்த்த வசுமதி,

“லவ் ஆ…??நீயா…???”

என்று வாய் பிளக்க அவர் பாவனையில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,

“ஏம்மோவ்… நானெல்லாம் லவ் பண்ண கூடாத…”

என்றான்.

“நம்ப முடியலயே ராசா…எம்மவனுக்கு அந்த திறமைலாம் இருக்கா…”

என்று வியந்தவரை அவன் முறைக்கவும்,

“சரி…சரி…ஒத்துக்குறேன்…யாருடா பொண்ணு…நம்மூரா…”

என்றார் ஆர்வமாய்…

“அதெல்லாம் அவளை கூட்டிட்டு வந்து உன்னுட்ட நிறுத்துவேன்…அவளுட்டே விசாரிச்சுகோ…”

என்று சொல்ல அவனை சந்தேகமாய் பார்த்தபடி,

“உண்மைய தான் சொல்லுறீயா தமிழு…”

என்றவரின் தலையில் கையை வைத்து லேசாக அவர் தலையை ஆட்டியபடி,

“சத்தியம்மா…”

என்று சொல்லி எழுந்தவன் எங்கோ புறப்பட,

“சாப்பிட்டு போ தமிழு…”

என்றவரிடம்,

“முக்கியமான வேலை ம்மா…வந்து சாப்பிடுறேன்…”

என்று கூறிக்கொண்டே அவன் சென்றுவிட கொஞ்ச நாளாய் சோர்ந்து காணப்பட்ட மகனிடம் பழைய வேகத்தை கண்டதும் அத்தாயின் மனதில் நிம்மதி பிறந்தது.

அன்னையிடம் சொல்லிக்கொண்டு அவன் நேராக சென்றது அவர்கள் ஏரியாயின் எக்.ஸ் கவுன்சிலர் இந்திரனை காண தான்.

ஐம்பதுகளின் பாதியில் இருந்த அவருக்கு தமிழை ஒரளவுக்கு தெரியும் என்பதால் அவனை நன்றாகவே வரவேற்றார்.

“வாங்க தம்பி…ஏதாவது உதவி வேணுமா…எதுவாக இருந்தாலும் சொல்லுப்பா…”

என்று அவர் விசாரிக்க அவர்களை சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“ஐயா…உங்களுட்ட கொஞ்சம் தனியா பேசனுமுங்க…”

என்று பணிவாய் கூற ஒரு நிமிடம் யோசித்துவிட்டு பின்பு அவனை உள்ளே தன்னோடு அழைத்துச் சென்றார்…

“ஏன் ப்பா…எதாவது பிரச்சனையா… நடராஜன் ஐயா அனுப்பி வைத்தாரா…”

என்று தனியாக வந்ததும் இந்திரன் விசாரிக்க,

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லேங்க ஐயா…ஆனால் ஒரு விசயம் கேட்கனும்னு…”

என்று அவன் தயங்க அவர் சொல்லும்படி ஊக்குவிக்கவும்,

“அது வந்துங்கய்யா…இந்த எம்.எல்.ஏ தேர்தலில் நீங்க தான் நம்ம கட்சி சார்ப்பா நிப்பீங்கனு எல்லாரும் எதிர்பார்த்தோம்…ஆனால் நீங்க நிக்கலயே…ஏன் ஐயா…”

என்று தமிழ் கேட்க அவர் முகம் சுருங்கியது.

அவருக்கு மட்டும் என்ன வேண்டுதலா…தேர்தலில் நிற்ககூடாது என்று…ஆனால் சீட்டு கொடுக்கபடவில்லையே…சிறு வயதில் இருந்தே கட்சிக்காகவே ஓடாக உழைத்து அரும்பாடு பட்டவர் ஆனால் கவுன்சிலர் என்பதை தான்டி அவரால் வேறெதுவும் செய்ய இயலவில்லை.சிவபாலன் அவர்கள் கட்சிக்கு வந்தபின்பு இவரின் முக்கியதுவம் பறிப்போனது.அதுவும் அவர் எம்.எல்.ஏ ஆனா சமயம் இவருக்கு இருந்த கவுன்சிலர் பதவியும் பறிப்போக தற்போது கட்சி தொண்டர் என்பதை தாண்டி அவருக்கு எந்த பதவியும் இல்லை.ஆனாலும் இந்திரன் என்றால் அவர்கள் தொகுதி மக்களுக்கும் சரி தொண்டர்களுக்கும் சரி தனி செல்வாக்கு தான். இதெல்லாம் அவனிடம் சொல்ல விரும்பாமல்,

“கட்சி சூழ்நிலைப்பா…”

என்று சமாளித்தார்.

“என்னங்கயா சூழ்நிலை… இத்தனை வருஷமாக கட்சியில இருக்கீங்க…நேத்து வந்த அந்த சிவபாலனிற்கு என்ன தெரியும்… நீங்க இருக்கும் போது எப்படிய்யா அவருக்கு சீட்டு தந்ததாங்க…அத்தோட பதவியில் இருந்த போது அவரு எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார்…அவரால் நம்ம கட்சி பேருக்கே அத்தனை இழுக்கு…அந்த இடத்தில் நீங்க இருந்திருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்குமா… இப்படி இருக்கும்போது மறுபடியும் அவரே பதிவிக்கு வந்தால் எப்படிய்யா…”

என்ற பதிவிசான தமிழின் பேச்சில் அந்த மனுஷர் சிலிர்த்து போனார்.

“சின்ன பையன் உனக்கு தெரியுது…ஆனால் பெரிய மனுஷங்களுக்கு புரியலேயே…என்ன பண்றது…”

என்று தானே வலையில் சிக்க புன்னகைக்க முயன்ற உதட்டை கட்டுபடுத்தி மேலும் பேசினான்.

“இல்லய்யா…நீங்க இப்படி சாதாரண விட கூடாது…உங்க உரிமையை நீங்க தான் கைப்பற்றனும்…”

என்றவனை புரியாமல் பார்த்தார்.

“ஆமாங்க ஐயா…அவங்க முடிவு தப்புனு இந்த முறை சிவபாலனை தோற்கடித்து நீங்க நிரூபிக்கனும் ஐயா…”

என்று கூற,

“என்ன தம்பி சொல்ற…இந்த உட்பூசலுக்கு பயந்து நான் என் கட்சியை விட்டேல்லாம் விலக மாட்டேன்…”
என்று சொன்னார் இந்திரன்.

“நீங்க ஏன் ஐயா விலகனும்…சிவபாலனை விலக வைங்க…”

“புரியலையே தம்பி…”

“நான் புரிய வைக்கிறேன்…”

என்றபடி சற்று நகர்ந்து அவர்முன் வந்தவன்,

"இந்த ஒரு வாட்டி இந்த ஒரு தொகுதியில நம்ம கட்சி தோற்பதால் நாம ஆட்சி அமைக்கிறதுல ஒரு பிரச்சினையும் வராது அது உங்களுக்கே தெரியும்…அதே சமயம் சிவபாலனுக்கு எந்த பதவியும் இருக்காது…இந்த அஞ்சு வருஷ கேப்புல அவரை ஒன்னுமில்லாமல் ஆகிடலாம்… அப்புறம் அடுத்த தேர்தலில் நீங்க தான் எம்.எல்.ஏ அது கன்பார்ம்…

ஆனால் இப்போ மட்டும் சிவபாலன் ஜெய்த்து விட்டார்னு வைங்க…எம்.எல்.ஏ மட்டும் இல்ல நிச்சயம் அமைச்சர் பதிவியையும் கைப்பற்றிடுவார்… அப்புறம் அவரை கீழே இறக்குவது ரொம்பவே கஷ்டம்…கஷ்டம் என்ன அவரை எதிர்க்கவே முடியாது…இந்த நிலை வரணுமா…"

என்று சற்று அலுங்காமல் அவரை தூண்டிவிட சிந்தனை வயப்பட்டார்.

“ஆனால்…அது கஷ்டம் தம்பி…அவன் தந்திரகாரன்…ஜெய்கிறதுக்கு பல வழி வச்சிருப்பான்…”

என்று யோசனையாய் இழுக்க,

“அட… நீங்களெல்லாம் ஒரே கட்சி… பாம்பின் கால் பாம்பிறியாதா…அத்தோட கட்சியில முக்கால்வாசி பேருக்கு சிவபாலன் தேர்தலில் நிற்பது பிடிக்கல… எல்லாம் உங்க சப்போர்ட் தான்…மிச்ச சொச்சம் அவர் பக்கம் நிக்கிற வளங்களையும் காசு கொடுத்து சாச்சிடுங்க…
ஐயா… நீங்களெல்லாம் நினைத்தால் அவரை நிச்சயம் வீழ்த்திடுவீங்க…நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை…”

என்றான்.இருந்தும் அவர் முகத்தில் குழப்பம் குறையவில்லை.

“இப்போ தோற்றாலும் அவன் முண்டி அடிச்சு அடுத்த தடவையும் வருவான்…வாட்டிக்கு வாட்டி அவனோட போட்டி போடுடே இருக்க முடியுமா… அத்தோடு பணம் கொடுத்தா எல்லாரும் உதவுவானுங்க தான்… ஆனால் அந்த படத்திற்கு நான் எங்க போனேன்… சிவபாலன் மாதிரி நான் முன்ன பின்ன கொள்ளையடிச்சது சொத்து சேர்த்தது இல்லையே…”

என்று அவர் இன்னமும் தயங்க பெரூமூச்சு விட்டவன்,

“ஏனுங்க ஐயா…நான் எவ்வளவு பாஸிட்டிவ் பேசுறேன்…நீங்க மறுத்து மறுத்து பேசுறீங்க…”

என்றவன்,

“சரி…நீங்க கடைசியா சொன்ன இரண்டுக்கும் நான் வழிப்பண்றேன்…அதாவது…அவரை எப்படியாவது ஜெய்க்க விடாமல் பண்ணிடுங்க…அவர் செய்த ஊழலை வைத்து அவரை உள்ள தள்ளி நீங்க பதிவிக்கி வரவரைக்கும் ஜெயிலேயே வைப்பது என் பொறுப்பு… அப்புறம் பணம்…”

என்று நிறுத்தியவன் தன்னோடு கொண்டு வந்திருந்த ட்ராவல் பேக் (!) எடுத்து முன்னால் வைத்து திறந்து வைத்தான்.உள்ளே கட்டு கட்டாய் பணம்!!!

“இதுல…இரண்டு கோடி இருக்கு…இப்போதிக்கு இதை வைச்சுகோங்க…மேலே தேவை பட்டாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்…”

என்று கூற மனுஷன், ‘யாரு சாமி இவன்…’ என்பது போல் வாய் பிளந்து பார்த்தார்.

“அவனை காப்பாற்ற நிறைய பேரு வருவாங்க… அவ்வளவு ஈஸியா உள்ளே வைக்க முடியாதேப்பா…”

என்று அவர் இன்னமும் பின் வாங்க,

“அய்யோ…அதெல்லாம் யாரும் அவருக்காக முன் வராதபடி ஏற்பாடெல்லாம் நான் பார்த்துப்பேன்…நீங்க அவரை எப்படி கவுக்கிறதுனு மட்டும் யோசிங்க…”

என்றுவிட்டு, “அப்போ நான் கிளம்புறேன்…”

என்று எழுந்திருக்க அவரும் கூடவே எழுந்தார்.நடப்பதெல்லாம் ஆச்சரியமாய் இருக்க,

“உனக்கு இதனால என்ன லாபம் தம்பி…நீ இவ்வளவு மெனகிடுறதை பார்த்தால் ஏதோ இருக்கும் போலவே…”

என்றவரை பார்த்து புன்னகைத்தவன்,

“எல்லாம் ஒரு சோஷியல் சர்விஸ் தான்…நாடு நல்லா இருந்தால் தானே நாம நல்லா இருக்க முடியும்…”

என்று கண்சிமிட்டி கூறிவிட்டு வெளியே வந்து தன் பைக்கை எடுத்தவன்,

“உன்னை சுற்றி குழி தோண்ட ஏற்பாடு பண்ணியாச்சுடி மாப்பிள்ளே…நீ விழுந்தால் மட்டும் போதும்…அப்படியே மண்ணு போட்டு மூடிட வேண்டியது தான்…”

என்று நக்கலாய் எண்ணியபடி புறப்பட்டான்.

2 Likes

அத்தியாயம்-18
“ஏய்…நில்லு…இங்க என்ன பண்ற நீ…”

மாடி படிக்கட்டில் சாவகாசமாய் இறங்கி வந்த யவ்வனாவை பார்த்த கணபதி கேட்டுக்கொண்டே அருகில் சென்றான்.

“ஒரே இடத்துல இருக்க போர் அடிக்குது ப்பா…அதான் சுத்தி பார்க்கலாம்னு…”

“சுத்தி பார்க்க இதென்ன டூரிஸ்ட் ஸ்பார்ட்டா… இங்கெல்லாம் வராத எட்டனா…வெளியேந்து நாலு பேரு வந்து போற இடம்…வா முதல்ல…”

என்றபடி அவளை அங்கேந்து வேகமாய் அப்புறப்படுத்த
அவளும் பெருசாக அலட்டிக்காமல் அவனோடு நடந்தபடி,

“ஆமா…எனக்கு இந்த ட்ரெஸ்ஸ எடுத்தது யாரு…”
என்றாள்.

“ஏன் நான் தான்…”

என்று அவன் கூறவும் நின்று அவனை முறைத்தவள்,

“என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது…டிரெஸ் வாங்கிட்டு வர சொன்னால் கோனிப்பை மாதிரி ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கீங்க…இதுக்குள்ள ஒரு ஊரையே அடைக்கலாம் போல…இவ்வளோ…பெரிசு…இதை போட்டுடு இறங்கி வருவதுக்குள்ள எத்தனை இடத்துல தடுமாறிட்டேன் தெரியுமா…”

என்றாள் கண்களை உருட்டி…

“ஏன் பேச மாட்டே…உனக்கு டிரெஸ் வாங்கி கொடுத்ததே பெரிசு…இதில ஆயிரம் நொட்டம் வேற சொல்ற…உன்னை எல்லாம் நீ போட்டு இருந்த அந்த ஒரு டிரெஸ்ஸோடையே இருனு உட்ருக்கனும்…”

“ஹலோ…ஹலோ…என்ன…பத்ரி அண்ணா என்ன சொன்னாங்க…‘யவ்வனாக்கு தேவையானதை செஞ்சிக் கொடுனு சொன்னாங்களா இல்லையா…’ ஆனால் ஒரு டிரெஸ் கேட்டதுக்கு இப்படி பேசுறீங்க…வேண்டா வெறுப்பா ஒரு டிரெஸ்ஸு வேற…”

“உஃப்…இப்ப என்ன டிரெஸ் தானே வேணும்… ஈவ்னிங் உன்னையே அழைச்சிட்டு போறேன்…என்ன வேண்டுமோ வாங்கிக்க…என்னை தொல்லை பண்ணாத…”

என்று அவன் கூறவும் முழு பற்களையும் காட்டி சிரித்து,

“இதை தான் எதிர்பார்த்தேன்…நன்றி… நன்றி…”

என்று கூறிவிட்டு பின்பு சுற்றும் முற்றும் பார்த்தபடி,

“இங்க என்ன ஒரே பசங்களா இருக்காங்க…ஒரு பொண்ணு கூட இல்லையா…”

என்றாள் ஆச்சரியமாக…
“இல்ல…”

“அப்போ சமையல்…??”

என்று அவள் கேட்கும் போதே அவர்கள் சமையலறையை அடைந்திருக்க அவள் கேள்விக்கு பதிலாய் அவன் அறையை காட்டினான்.

அங்கே ஒரு பெரியவர் மட்டுமே இருக்க இவர்களை கண்டதும் முழித்தவர்,

“எதாவது வேண்டுமா தம்பி…”

என்று கேட்க அவனிற்கு முன்,

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் தாத்தா…நீங்க தான் இங்க எப்பவும் சமைப்பீங்களா…”

என்று ஆர்வமாய் கேட்க அவர் தயங்கினாலும்,

“ஆமாம்மா…”

என்றார்.ஒரு பெண்ணை இங்கே பத்ரி தங்க வைத்திருப்பதை அங்குள்ள அனைவரும் அறிவர் தான்.ஆனால் யாரும் பார்த்ததில்லை.

என்வே தற்போது திடீரென்று அந்த பெண் வந்து பேசவும் தயங்கினார்.யவ்வனா அதை எல்லாம் கண்டுக் கொண்டாள் தானே…!!தன் போக்கில் பேசினாள்.

“உங்க சமையல் சூப்பர் தாத்தா…செம்ம டேஸ்ட்… அதுவும் நேத்தி ஒரு வத்தக் குழம்பு வைச்சிருந்தீங்களே அருமையோ அருமை…நீங்க மட்டுமே எப்படி தாத்தா… இத்தனை பேருக்கு சமைக்கீறீங்க… அதுவும் இவ்வளவு சூப்பரா…”

என்ற அவளது பாராட்டில் அவர் மனம் குளிர்ந்தது.ஏனெனில் இதுவரை யாரும் அவர் சமையலை பாராட்டியது இல்லை.

“நிஜமாலுமா கண்ணு…”

“நிஜம்மா தான்…சரி…இன்னைக்கு என்ன செய்ய போறீங்க…இதை கொடுங்க நான் கட் பண்றேன்…”

என்றபடி அவர் கையில் இருந்த கத்தியை வாங்க,

“இல்லம்மா…நானே செய்யுறேன்… உங்களுக்கு எதுக்கு சிரமம்…”

என்று அவர் மறுக்க,

“பரவாயில்ல கொடுங்க தாத்தா…”

என்று அவள் வற்புறுத்த கணபதி கொடு என்று ஜாடை காட்டவும் தான் தந்தார்.

அதை கவனித்த யவ்வனா,

“ஏன் அவர் பர்மிஸன் கொடுத்தால் தான் தருவீங்களா…”

என்று கேட்க அவர் பதில் சொல்லும் முன்,

“ஆமா… சாப்பாட்டு விஷயத்துல யாரையும் நம்பக்கூடாதுல…நீ பாட்டு விஷம் கிஷம் கலந்துட்டால்…”

என்று அவன் சொல்ல கத்தியால் கன்னத்தில் தட்டிக் கொண்டு,

“இந்த ஐடியா எனக்கு தோணாமல் போயிடுச்சே… எதுக்கும் இன்னைக்கு மதியம் கொஞ்சம் உஷாரா இருங்க…சொல்லிட்டேன்…”
என்றாள் குறும்பாக…
கணபதியிடம் இவ்வளவு இலகுவாக இப்பெண் பேசுகிறதே என்று வியந்தார் அவர்.ஏனெனில் கணபதி ஒரு முரடன்.பேச்சும் சரி செயலும் சரி சற்று கரடு முரடாக தான் இருக்கும் என்பதால் தான்.

“வாய் கொழும்பு ஜாஸ்தி… உன் பேச்சு தாங்காமல் தான் உன்னை கட்டி கொண்டு போய் தண்டவாளத்தில் வீசிரிப்பாங்க…”

என்று சொல்ல அவள் பழிப்பு காட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள்.மனக்கண்ணில் தான் காரில் இருந்து கீழே விழுந்ததது.அதனை தொடர்ந்து கத்திக் கொண்டே அதன் பின்னால் ஓடி தண்டவாளத்தில் தடுமாறி விழுந்ததும் கலங்கலாய் நினைவு வந்தது.அதனையொட்டி மேலும் அவள் ஞாபகப்படுத்த முனைந்தாள்.இப்படி தான்.அப்பப்போ தீடீரென்று எதாவது பொருளை பார்த்தாலோ கேட்டாளோ அதனையொட்டிய நினைவு வந்து போகும்.அன்று அப்படி தான்.அவள் கட்டைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்து ‘இதென்ன ஜென்ஸ் மோதிரம் மாதிரி இருக்கு…’

என்று அவள் பார்க்க அதனை அவள் சுட்ட நிகழ்வு நினைவுப் வந்தது.அவள் தெளிவான மனநிலையில் இருப்பால் கொஞ்சமாக அவளது பழைய நினைவுகள் எல்லாம் மீண்டது.

“ம்மா…ம்மா…பார்த்து…கைய வெட்டிக்க போறீங்க…”

என்று அந்த பெரியவர் கையை தடுக்கவும் தான் தற்போதிய நிலையை உணர்ந்தவள் தான் செய்ய இருந்த காரியத்தை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டாள்.

“தேங்க்ஸ் தாத்தா…ஏதோ ஞாபகத்துல…”

என்று அவள் இழுக்க,

“பரவாயில்ல…இங்க கொடு அதை…”

என்று அவர் வாங்கிக் கொள்ள நெற்றியை தடவியபடி வாசலை பார்த்தாள்.அங்கே கணபதி இல்லை.

“இவர் எங்க தாத்தா…??”

“கணபதி அப்போவே போயிடுச்சு ம்மா…”

என்றவர் பின்பு,

“எப்படிம்மா… கணபதிட்ட இவ்வளவு சாதாரணமா வாயாடுறே…”

என்று சற்று முன் நினைத்தை கேட்டேவிட,

“ஏன் இதில் என்ன…நான் பத்ரி அண்ணாட்டே இப்படி தான் பேசுவேன்…”
என்று கண்சிமிட்டியவள் அங்கே இருந்த ஸ்டூலில் அமர வாய் பிளந்தார் அவர்.

“உனக்கு தைரியம் ரொம்ப தான்…”

“ஏன் அவங்க என்ன சிங்கமா…புலியா பயப்பட…பேசுறதை கேட்கும்போது தாதா கேங்னு புரியுது…ஆனால் பத்ரி அண்ணாவை பார்த்தால் அப்படி தெரியலயே…”

என்று சொன்னவள் அவர் மௌனமாய் புன்னகைக்கவும்,

“ஏன் தாத்தா அப்படி பார்க்குறீங்க… உங்களுக்கு ரொம்ப பயமா… அவ்வளவு மோசமாவா உங்களுட்ட நடந்துப்பாங்க…”
என்றாள்.

“அய்யோ…எனக்கு படி அளக்கின்ற தெய்வம்மா…அப்படிலாம் எதுவும் இல்லை…ஆனால் பயம் எப்பவும் இருக்க தான் செய்யும்…ரொம்ப வருஷமா இங்க தான் இருக்கேன்…இங்க இருக்க பசங்க எல்லாரும் ஒவ்வொரு மாதிரி…நான் யாருட்டையும் பேசவே பயப்படுவேன்…எங்க எதாவது சொல்ல போய் கை வைச்சிருவாங்களோனு பயம்…அதுவும் பத்ரி அவ்வளவா பேசிக்கூட பார்த்தது இல்ல.எப்பவும் இறுக்கமாக தான் இருக்கும்.ஒரு வாட்டி என் கண்ணால ஒரு சம்பவத்தை பார்த்து நாலு நாள் ஜோரம் வந்து கிடந்தேன்…ஆனால் இங்கேந்து போகனும்னு நினைச்சதே இல்ல…அவுங்களுக்கும் என் சமையலே பழகி மாத்த நினைக்கல…”

என்று பேச ஆள்கிடைத்ததில் அவர் பாட்டிற்கு பேசினார்.அவளோ அவர் சொன்ன மற்றதை விட்டு,

“என்ன சம்பவம் தாத்தா…”
என்றாள் ஆர்வமாய்…

அவளை மேலும் கீழும் பார்த்தவர்,

“இதில் என்ன உனக்கு இவ்வளவு ஆர்வம்…”
என்றார்.

“நாலு நாள் ஜோரம் வந்து இருந்தேனு சொன்னீங்களே அப்படி என்ன நடந்து இருக்கும்னு தெரிஞ்சிக்க தான்…”

என்று கண்களை உருட்டி கேட்டவளை

‘இதென்னடா இப்படி ஒரு பொண்ணு…’

என்று வித்தியாசமாய் பார்த்தார்.(போக போக பழகிடும் தாத்தா…)

“ஒரு வாட்டி… விருந்தாளி வந்திருக்காங்க.காஃபி எடுத்துட்டு வர சொன்னாங்க…நானும் பதமா கலந்து கொண்டு போனேன்…நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க மாதிரி இருந்துச்சு… ஆனால் பேசிட்டு இருக்கும்போதே திடீரெனு பத்ரி அவரை துப்பாக்கி எடுத்து பொட்டுனு சுட்டுடுச்சு…எனக்கா ஒரு நிமிஷம் இதயமே நின்னு போச்சு…விழுந்தவனை சுத்தி உள்ள உள்ளவனுங்க சாதாரண தூக்கி அப்புறப்படுத்துறானுங்க…அப்படியே நெஞ்சை புடிச்சிட்டு நின்னுடேன்.பத்ரி அதே துப்பாக்கிய என் பக்கம் நீட்டி, 'இங்க என்ன வேடிக்கை…உள்ள போ ’ அப்படினு சொல்லுச்சே ஓடிப்போனவன் தான்…நாலு நாளு படுத்த படுக்கை…”

என்று அவர் சொல்ல திறந்தவாய் மூடாமல் அதிர்ச்சியாய் பார்ப்பது அவள் முறையானது.கண்களில் லேசாய் பீதி…

“என்ன தாத்தா…அப்பளம் சுடுறா மாதிரி ஈஸியா சொல்றீங்க…அவருக்கு அப்புறம் என்னாச்சு…”

என்று படபடப்பாய் கேட்க,

“தோளில் தான் சுட்டாரு…அதனால் அந்தாளுக்கு ஒன்னுமில்ல…”

என்று கூறவும் தான் பெருமூச்சு விட்டாலும் இன்னும் படபடப்பு குறையவில்லை.

“ஆனால் எனக்கு அதெல்லாம் விட பெரிய அதிர்ச்சி உன்னை பற்றி கேள்விப்பட்டபோ தான் ஆனேன்…ஏன்னா ஏதோ ஒரு பொண்ணுக்காக இரக்கப்பட்டு காப்பாற்றி அதுவும் வீட்டிலே தங்க வைச்சிருக்குனுனா அது சாதாரணம் இல்லம்மா…”

என்று அவர் தன்போக்கில் பேசியபடி வேலை செய்ய ‘அதானே…நமக்கு இவ்வளவு செய்ய வேண்டிய அவசியம் என்ன…’ என்ற யோசனை அவள் மனதில் எழுந்தது.

இங்கே இப்படி இருக்க அங்கு தமிழோ இவளை தேடி அலையாத இடமே இல்லை என்லாம்.ஆனால் அவளை குறித்து ஒரு தகவலும் கிட்டவில்லை.ஒருபுறம் தேர்தல் பரபரப்பில் தமிழ்நாடே நியூஸ் சேனல்களிலும் பேப்பர்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆர்பரிக்க இந்தரனின் பின்னால் இருந்து அவரை டிரிக்கர் செய்து சிவபாலனிற்கு எதிராக அவரை இயக்கி கொண்டிருந்தான்.சிவபாலனின் கருப்பு பக்கமும் மக்களிடையே அதே சமூக வலைத்தளங்களின் வழியே உலாவிக் கொண்டிருக்க கடைசி நேரத்தில் கிளம்பும் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியாம திணறினார்.அதே சமயம் மனோகரும் பிரகாஷூம் விஷாலுடன் இணைந்து அவர்கள் ஜே.கே ஸ்டீல்ஸ் மீது இருந்த கேஸினை வென்று இருந்தனர்.

இவ்வாறான நிலையில் திசை தெரியாமல் தவித்தவனுக்கு கிட்டிய கலங்கரை விளக்கு போல் யவ்வனாவின் வீட்டு முகவரி தமிழுக்கு கிடைத்தது.

எங்கே அவள் இருந்தாலும் நிச்சயம் வீட்டினருடன் தொடர்பில் இருப்பாள் என்று நம்பிய தமிழ் உடனே அங்கு செல்ல முடிவெடுத்தான்

2 Likes

அத்தியாயம்-19

“இந்த வீடு தாங்க…”

என்று அடையாளங்காட்டிய சிறுவனுக்கு நன்றிக் கூறியவன் தன் பைக்கை வீட்டின் அருகே நிறுத்தினான்.

சிறிய வீடு தான்.ஆனாலும் அழகாக இருந்தது.அவன் வாசலை நெருங்கிய சமயம் உள்ளே ஒரே சத்தமாய் இருக்க ஏதோ சண்டை போல என்பதை உணர்ந்தவன் மேற்கொண்டு செல்ல தயங்கினான்.

‘எப்படி நீங்க இவ்வளவு பெரிய விசயத்தை மறைக்கலாம்…நாங்களும் இந்த வீட்டு பொண்ணுங்க தானே…எங்களை எப்படி தள்ளி வைத்து பார்த்தீங்க…’

என்று ஒரு பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தது.இங்கேயே நின்று அவர்கள் பேசுவதை கேட்பது இங்கிதம் அல்ல என்று எண்ணியவன் தயக்கத்தை விடுத்து அழைப்பு மணியை சொடுக்கினான்.

சட்டென்று அமைதி நிலவ சில நொடிகளில் கதவும் திறக்கபட,

“யாருங்க…”

என்று கேட்டபடி வந்து நின்றான் ஒருவன்.சற்று ஒல்லியாய் உயரமாய் புட்டிக்கண்ணாடியில் வந்து நின்றவனை கண்டு,

'யாரா இருக்கும்… ஒருவேளை யவ்வனாவோட அண்ணா இருக்குமோ…அவளுக்கு அண்ணன் இருக்கா…"

என்று அவனை பார்த்தபடி தமிழ் யோசனை செய்ய,

“ஹலோ…உங்களை தான்…என்ன பார்க்குறீங்க…என்ன வேணும்…”

தற்போது சற்று அதட்டலாய் கண்ணாடிகாரன் கேட்க சுதாரித்தான்.

“யவ்வனா இருக்காங்களா…”

“நீங்க யாரு…”

“அவங்களுக்கு என்னை தெரியும்…கூப்பிடுங்களேன்…”

“இல்லை…அவ இப்போ இங்க இல்லை…வெளியே போயிருக்கா…”

“ஓ…இப்போ வந்திடுவங்களா…”

“ஆங்…அது…வெளியேனா… வெளியூருக்கு போயிருக்கா…”

“வெளியூரா…எப்போ…எந்த ஊருக்கு போயிருக்காங்க…”

“என்ன நீங்க பாட்டுக்கு கேள்விக்கேட்டுடே இருக்கீங்க…அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு… இப்ப பார்க்க முடியாது அவ்வளவு தான்…கிளம்புங்க…”

என்று அடித்தார்போல் சொன்னவன் கதவை சாத்த முயல சட்டென்று சாற்றமுடியாதபடி தடுத்த தமிழ்,

" என்ன பேசிட்டு இருக்கும் போதே கதவை சாத்துறீங்க… முதல்ல நீங்க யாரு யவ்வனாவிற்கு…"
என்றான் சற்று குரல் உயர்த்தி…

“உனக்கெதுக்கு அதெல்லாம்.கிளம்புறீயா…இல்ல…போலீஸை கூப்பிடவா…”
என்று அவன் எகிற
அதற்குள் வீட்டில் இருந்து இன்னும் இரண்டு பேர் வந்துவிட்டனர்.பருத்த உடல்வாகு டன் ஒருவனும் அவரைவிட வயதான தோற்றத்தில் மற்றவரும் இருக்க பெரியவர் முகத்தில் தெரிந்து யவ்வனாவின் சாயல் அவர் அவளின் தந்தையாக இருக்க கூடும் என்பதை கணித்தவன்,

“சர்…நீங்க யவ்வனா அப்பா தானே…உங்களுட்ட கொஞ்சம் பேசணும்…இல்லை போலீஸை கூப்பிவேன் அடம்பிடித்தால் கூப்பிடுங்க…உங்க பொண்ணு பண்ணின காரியத்திற்கு உங்களை தான் புடிச்சிட்டு போவான்…”

என்று தன்மையாய் தொடங்கி கண்ணாடிகாரனை பார்த்து சற்று மிரட்டலாகவே முடிக்க அவள் தந்தையின் முகம் வெளிறியது.

“மாப்ள… கொஞ்சம் பொறுமையா பேசலாம் மாப்ள…கோவப்படாதீங்க…”
என்று அவர் கண்ணாடிகாரனை சமாதானம் படுத்த தமிழை முறைத்து பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

“ஏது… மாப்பிள்ளையா…”

என்று தமிழ் யோசித்தாலும் முகத்தில் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.அதற்குள் மற்றவன்,

“உள்ள போய் பேசிக்கலாம்…வாங்க சர்…”

என்று தமிழை அழைக்க அவனும் உடன் வந்தான்.

கூடத்தில் மூன்று பெண்களும் ஒரு
டீன்ஏஜ் பையனும் இருக்க அவர்களை பார்த்துவிட்டு தமிழ்,

“விருந்தாளி வந்திருக்காங்களா…நாம வேணும்னா தனியா போய் பேசலாமா…”

என்று யோசனையாய் தன்னை உள்ளே அழைத்தவனிடம் கேட்க,

“எல்லாம் வீட்டு ஆளுங்க தான்…வாங்க…”

என்று சொல்ல,

'இவ்வளவு பெரிய குடும்பம் இருக்குனு அவ சொன்னதே இல்லையே…"
ஆச்சரியமாய் அவன் நினைக்கும் போதே,

“ஆமா…மத்த எல்லாம் பேசிட்டீங்க…இது ஒன்னு தான் பாக்கி…”
என்று அவன் மனமே நக்கலடித்தது.

அதனை புறந்தள்ளிவிட்டு யவ்வனா தந்தையை நோக்கி,

“சர்…இந்த சில மாசமா உங்க பொண்ணு எங்க இருந்தது என்ன பண்ணுச்சு தெரியுமா…ரௌடி பசங்களோட சகவாசம் வச்சிக்கிட்டு ஒரு வீட்டில் பொய் சொல்லி நுழைந்து திருட்டு வேளை எல்லாம் செஞ்சது ம்ம் இல்லாம அந்த வீட்டு பிள்ளைங்கள கடத்துற அளவிற்கு போயிருக்கா…பொண்ணு என்ன செய்கிறாள்னு கூட கவனிக்கவில்லை மாட்டீங்களா…”

அந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் அவன் முகம் கடுமையை தத்தெடுக்க காட்டமாகவே கேட்டவன் குறைந்த பட்சம் ஒரு அதிர்ச்சியையாவது எதிர்பாத்தான்.ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாய் நிற்க,
“ஹோ…அப்போ உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் அப்படி தானே…”

என்று கேட்டபோதும் அவர் அமைதி அதுதான் உண்மை என்பதை காட்ட அவனுக்கு கோபம் தலைக்கேறியது.

“ஏங்க…பார்க்க நல்ல குடும்பம் மாதிரி தானே இருக்கீங்க… இதெல்லாம் ஒரு பொழப்பா…கண்டிக்க வேண்டிய நீங்களே இப்படி இருக்கும் போது உங்க மவளை சொல்லி என்னாக போகுது…உங்க வீட்டிலும் தானே குழந்தைங்க இருக்காங்க…அவங்களை யாராவது இப்படி கடத்தினால் அப்போ தெரியும்…இப்போ எந்த வீட்டுல நுழைந்து ஏமாற்றிக்கொண்டு இருக்கிறாள் உங்க பொண்ணு…பொண்ண இந்த பக்கம் இப்படி அனுப்பிட்டு ஊரு முன்னாடி நல்லவங்க மாதிரி வேஷம் போட்டு இருப்பீங்க…அப்படி தானே…இப்பவே போலீஸை கூப்பிட்டு உங்க எல்லாரையும் உள்ள தள்ளினாள் தான் புரியும்…”

அவன் வந்தது வேறு விசயமாக தான்.ஆனால் இப்படி மொத்த குடும்பமும் தெரிந்தே அவளை இப்படி ஒரு வேலைக்கு அனுப்பி வேடிக்கை பார்க்கிறது என்று நினைக்கும் போது கண்மண் தெரியாமல் ஆத்திரம் வர வார்த்தைகளை விட்டான். பதில் பேசாமல் நின்ற அவள் தந்தையின் கண்கள் கலங்கி முகமே கசங்கியிருந்தது.

அதனை பொறுக்க முடியாமல்,

“இங்க பாருங்க… புரியாமல் பேசாதீங்க…அதிகாரமும் ஆட்சியும் இருக்க திமிறுல எங்களை மாதிரி சாதாரண குடும்பத்தையே சிதைச்சி இப்படி நிலைக்குலைந்து போக வச்சீட்டாங்க…யவ்வனா அப்படி செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் இங்க ஒரு உயிர் மிஞ்சியிருக்காது…நீங்க சொல்றீங்களே போலீஸு அவங்ககூட எங்களுக்காக முன் வர மாட்டாங்க… அவங்களை எல்லாம் விட்டுவிட்டு புள்ளைய பறிக் கொடுத்துட்டு நிற்கிற இந்த அப்பாவி மனுஷனை கேள்வி கேட்டால்…அவர் என்ன செய்வாறு…”

தமிழுக்கு சற்று குறையாத ஆத்திரத்தோட கண்ணாடிகாரன் பேச அதிர்ச்சியில் உறைந்தான் தமிழ்.இப்படி ஒரு கோணத்தில் அவன் யோசிக்கவே இல்லையே…!!

“என்ன சொல்றீங்க…”

என்று கேட்டவனுக்கு ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் அவன் கூற பேச்சற்று போனான் தமிழ்.சிவபாலன் இவ்வளவு தூரம் இறங்கி செய்திருப்பார் என்று அவன் நினைக்கவில்லை.கேட்கவே அவன் மனம் பதறியது.

“பிள்ளைகளை கடத்திட்டாள்னு அழுத்தமா சொல்றீங்கள்ல…அந்த பிள்ளைங்க கொண்டு வந்து விடுறீயா இல்ல உன் தங்கச்சி கழுத்தை அறுத்துப்போடவானு அந்த அர்த்த ஜாமத்துல வீடு புகுந்து அந்த சின்ன பிள்ளையோட கழுத்துல கத்தி வைத்து மிரட்டிருக்காங்க…யவ்வனாவும் வேற என்ன தான் சர் பண்ணுவா…இதே அவ இடத்திலே வேற பொண்ணு இருந்தால் என்னாகி இருக்குமோ… எல்லாத்தையும் தாங்கிட்டு நின்னுடுக்கு யவ்வனா…”

என்று சொல்லும்போதே அவன் கண்கள் பனிக்க தமிழுக்கு தாள முடியவில்லை.

“இப்போ என்ன…அவளை போலிஸிடம் பிடித்துக் கொடுக்கனுமா…போங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணி அப்படியாச்சு எங்க பொண்ணை கண்டுபிடிச்சு தாங்க…”

என்று அவன் உணர்ச்சிகரமாய் சொல்ல மூச்சு முட்டுவது போல் இருந்தது தமிழுக்கு…

“எங்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்…ம்ச்…”

தலையை அழுத்த கோதி தன்னை அவன் சமன்பாடுத்த முயன்ற,

“சொல்ல மாட்டாள்… அவ பிரச்சனைய யாரிடமும் சொல்ல மாட்டாள்.சொந்த அக்கா குடும்பத்திற்கே சொல்லேங்க அவ…இவங்களும் மறைச்சிட்டாங்க…இப்போ தான் விசயம் தெரிந்து ஓடி வந்திருக்கோம்…”

என்றான் அவன் ஆதங்கத்தோடு…

அவன் சொல்வது உண்மை தான்.

இரண்டு அக்காக்களின் புகுந்த வீட்டில் இந்த விசயத்தை பற்றி தெரிந்தால் அவர்களுக்கு எதாவது பிரச்சனை வருமோ என்று நினைத்து தாய்-தந்தையை சொல்ல வேண்டாம் என்று சட்டமாய் சொல்லிவிட அவர்களும் மறைத்து விட்டனர்.
ஆனால் அன்று இரவு வந்து கத்தி வைத்து மிரட்டி சென்றபின் அவர்கள் யாரும் அந்த பக்கமே வரவில்லை.வழக்கமாக அவர்களை கண்காணிக்க அங்கே இருப்பவர்களும் இல்லை.இத்தோடு தொலைந்தது சனி என்று நினைத்தால் யவ்வனாவிடமும் தொடர்பற்று போனது.அவள் வழக்கமாக அழைக்கும் எண்ணும் செயலில் இல்லை என்று வர யவ்வனாவிடமும் எந்த தகவலும் இல்லை எனவும் பயந்து போனது அவள் குடும்பம்.யாரிடம் சென்று என்னவென்று கேட்பது என்றுகூட தெரியாமல் தவித்தனர்.

யவ்வனாவின் தந்தை முருகானந்தம் ஒரு உலகம் தெரியாத கிராமத்து வெளேந்தியான மனிதர் தான்.கணவனிற்கு ஏற்றார் போல் தான் மனைவி முல்லையும்…கடும் உழைப்பாளி தான் என்றாலும் உழைப்பை தவிர உலக சூது எதுவும் தெரியாமலே வாழ்ந்து விட்டனர்.ஆனால் அவர்களுக்கு சேர்த்து துணிவும் திறனும் யவ்வனாவிடம் கொட்டிக் கிடந்தது.மூத்த அக்காள் இருவரைவிட வீட்டின் சூழ்நிலை புரிந்து பக்குவமாய் நடந்துக் கொள்பவள் யவ்வனா தான்.ஒரு வயதிற்கு பின் அவளே அக்குடும்பத்தின் முதுகெலும்பு என்றானாள்.சின்ன பெண் என்றாலும் அவள் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்புவர்.அவள் தமக்கையர் இருவருக்குமும் அப்படி தான்.தம்பி,தங்கைக்கு அவள் தான் வழிக்காட்டி…

ஏன் தற்போது அவள் தான் ஆபத்தில் மாட்டி இருந்தாலும் யவ்வனா தன்னை குறித்து பயப்படவில்லை.இங்கிருந்து வீட்டினருக்கு தான் ஆறுதல் சொல்லி தேற்றி வந்தாள்.

இப்படி இருக்கும் போது யவ்வனாவிற்கு ஒன்று என்னும் போது அவர்கள் நிலையே ஆட்டம் கண்டது.பிள்ளையை கண்முன்னே பறிக்கொடுத்துவிட்டு அவளை காப்பாற்ற கூட முடியாமல் நானெல்லாம் என்ன தந்தை என்று தனக்குள்ளே மறுகினார்.

இறுதியில் வாசு தான் தனது பெரிய அக்காவிடம் அழைத்து அனைத்தையும் போட்டு உடைக்க இருவரும் பதறி வந்திருந்தனர்.எப்படி மறைப்பீர்கள் என்று சண்டை போட்டாலும் யவ்வனாவை எங்கே தேடுவது, அவளுக்கு எதுவும் நேர்ந்திருக்க கூடாதே என்ற பதட்டம் தான் எல்லார் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.இந்நேரத்தில் தமிழ் வந்து சிக்கவும் தான் மொத்த ஆதங்கத்தையும் அவனிடம் கொட்டினான் இளைய மருமகன்.மேலும் மேலும் அவன் யவ்வனாவை பற்றி சொல்ல சொல்ல தமிழின் மனம் வேதனையில் ஆழ்ந்தது.அவர்களுக்கு ஆறுதல் கூறி நிச்சயம் அவளை கண்டுபிடித்து விடலாம் என்று உறுதியவளித்தவன் அங்கிருந்து புறப்பட்டு இயந்திரகதியில் வீடு வந்து சேர்ந்துவிட்டான்.வழியில் கண்ட எதுவுமே அவன் கருத்தில் பதியவில்லை.மூளையே ஸ்தம்பித்து தான் போனது.

தான் கூப்பிட கூப்பிட கவனிக்காமல் கூடத்தில் வெறும் தரையில் அமர்ந்திருந்த மகனின் தோள் தட்டி,

“என்னடா…”

என்று அவர் கேட்கவும் தாயின் முகம் பார்த்தவன் கண்கள் கலங்க பதறிவிட்டார் வசுமதி.

“அய்யா…ராசா…என்னாச்சுய்யா…”

என்று அவனிடம் மண்டியிட்டு அவர் பதற அப்படியே அவர் மடியில் சாய்ந்தவன்,

“தப்பு பண்ணிடேன்…அவளை போய் தப்பா நினைச்சுட்டேன் ம்மா…”

என்று புலம்பியவனை கண்டு அவர் கண்களும் கலங்கிவிட்டது.தமிழ் கோபமெல்லாம் அவர் அசால்ட்டாக கடந்துவிடுவார்.ஆனால் அவன் கண்ணீர் அவரை வெகுவாக அசைத்தது.

“யார ராசா…”
என்று அவர் கேட்டதை அவன் கவனிக்கவே இல்லை.தன் போக்கில் பேசினான்.

“அவ என்னுட்ட சொல்லி இருக்கனும்ல ம்மா…என் மேல நம்பிக்கை வைக்கனும் தானே… கிறுக்கி… எல்லாத்தையும் மனசுக்குள்ளவே வச்சு புழுங்கி இருக்காள்…அப்பவும் எப்படி விளையாட்டா இருப்பா தெரியுமாம்மா…அவ கஷ்டம் எதுவும் அவ முகத்துல கூட தெரியாது…லூசு ம்மா அவ…”

என்று உடைந்த குரலில் கூற,

“தமிழ்…இங்க பாரு…முதல்ல என்னானு சொல்லு…”

என்று முகம் தாங்கி கேட்டவரிடம் அனைத்தையும் சொன்னான்.இதுவரை பெரிதாக அவன் அன்னையிடம் எதுவும் அவன் பகிர்ந்தில்லை.ஆனால் இன்று காயப்பட்டு வந்த மனம் அன்னை மடியை மட்டுமே தான் தேடியது.எல்லாத்தையும் கொட்டி தீர்த்தான்.

“இத்தனை நாள் அவ எங்கேயோ தலைமறைவா இருக்கானு தான் நினைச்சேன் ம்மா…ஆனால் இப்போ…இப்போ அவளுக்கு எதாவது ஆகிருக்குமோன நினைச்சாலே பதறுது…அவள் பத்திரமா தானே ம்மா இருப்பா…கிடைச்சிடுவா தானே ம்மா…”

சிறுபிள்ளையாய் தன் முகம் பார்க்கும் மகனை காணும் போது அவருக்கு துக்கம் பெருகியது.

அவள்மீது தான் தவறு என்று நினைத்தபோதே அவனால் அவளை விட்டுக் கொடுக்க முடியவில்லை.அவள் தான வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தான்.இப்பொழுது உண்மை தெரிந்தபின் அவன் நிலையை சொல்லவும் வேண்டுமோ…?

“தமிழு…இதென்ன சினன புள்ள மாதிரி…நீயே தானே சொல்ற…அவளுக்கு ரொம்ப தைரியமுனு…அப்போ எங்கே இருந்தாலும் அவ தன்னை காத்துப்பாடா…நான் சொல்றேன் உனக்காகவே அவள் பத்திரமா தான் இருப்பாள்.நீ நம்பிக்கையை விட்டுறாமல் தேடுடா…என் தமிழு ஒன்னு நினைத்தால் அதை செய்யாம விடமாட்டானு ஊருக்கே தெரியும்…நீயே இப்படி இடிஞ்சு போனால் எப்படி…”

என்று தோள் வருடி கூறிய வசுமதி அவன் புலம்பல்கள் அனைத்திற்கும் பொறுமையாய் பதில்கூறி தேற்றினார்.

“மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
மழை மட்டும் தராது வானவில்லை
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை

அருகில் இருந்தும் காதல்
பிரிவில் பெருகிடுமே

ஒரு முறை தெரியிது மறு முறை மறையிது
தொலையிது உன் பிம்பம்

கனவுகள் வருவது காலையில் களைவது
காதலில் பேரின்பம்

இது வரை இது வரை இடைவெளி தொடர்ந்திடும்
கேட்க்குது என் நெஞ்சம்
அருகே வா உயிரே

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்”

2 Likes

அத்தியாயம் 20

அந்த மதிய வேளையில் காலில் சக்கரம் கட்டியது போல பரபரப்பாய் வேலை செய்துக்கொண்டிருந்தாள் யவ்வனா…அடுப்பில் சரியான சூட்டில் இருந்த எண்ணெயில் அப்பளங்களை பொரித்து எடுத்தவள் அவ்வற்றை ஒரு பாத்திரத்தில் அடுக்கி வெளியே எடுத்துவர அங்கே பந்திப் பறிமாறுவதற்காக காத்திருப்பது போல வரிசையாய் அமர்திருந்தனர்.அவர்களது தோற்றத்திக்கும் அமர்ந்திருந்த தோரணைக்கும் சம்மந்தமே இல்லை.
எந்த சூழலிலும் துவண்டு போகாமல் அந்த சூழலில் தன்னை பொருத்திக் கொண்டு தனக்கு ஏற்றார்போல் அதனை மாற்றி அமைத்துக்கொள்ளும் பக்குவம் சிலருக்கு மட்டுமே இருக்கும்.அதற்கு தக்க உதாரணம் நம் யவ்வனாவே…
தேன்சோலையில் இருந்த பொழுதும் சரி தற்போதும் பத்ரி வீட்டில் இருக்கும் போதும் சரி இருக்கும் சூழலை பழகிக் கொண்டதோடு இருக்கும் மனிதர்களையும் பழகிக்கொண்டாள்.அதுதான் அவள் இயல்பே என்றும் கூறலாம்.பேச்சு தான் அவள் மூச்சு…எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும் தனக்குள் ஒடுங்கி பேசாமல் இருப்பது மௌனங்காப்பது எல்லாம் அவள் அகராதிலே இல்லை.உலகின் எந்த மூலையில் கொண்டுபோய் விட்டாலும் சரி வாயை வைத்தே பொழைத்துக் கொள்ளும் அசாத்திய திறமைசாலி.

இப்படி மொழித்தெரியாத மனிதகளையே சமாளித்து விடுவாள் என்னும் போது பத்ரி வீட்டில் இருப்பவர்கள் எம்மாத்திரம்…அன்று சமையல் செய்யும் பெரியவரிடம் ஆரம்பித்தது.அதன்பின் அங்கே வேலை செய்யும் எல்லாருடனும் இயல்பாய் பேசினாள்.பத்ரியின் அடியாட்களிடம் கூட சென்று அண்ணா என்று ஆரம்பித்து விடுவாள். அங்கே அவள் பொழுது போவதே அப்படி தான்.

பத்ரி கூட்டி வந்து தங்க வைத்து இருக்கிறார் என்ற ஒன்றே அவளுக்கு மதிப்பை தர அவளிடம் மரியாதையோடே நடந்துக்கொண்டனர்.ஆனால் நாளடைவில் அவள் மீது அவர்களுக்கு ஒரு பாசம்வர காரணம் அவள் குணமேயாகும்.

அன்பும் பரிவும் மனிதனாய் பிறந்த எவருக்கும் மனதில் ஒரு மூளையிலாவது நிச்சயம் இருக்கும்.அது இல்லையேல் அவர்கள் மனித உருவில் இருக்கும் வேறு ஜந்து தான்.அவ்வகையில் பத்ரி வீட்டில் இருக்கும் அனைவரும் மனிதர்கள் தான்.யவ்வனாவின் குறும்பிலும் பேச்சிலும் அவள் மீது ஒரு பாசம் இயல்பாய் ஒட்டிகொண்டது.
இந்நிலையில் இன்று அனைவருக்கும் அவளே ஸ்பெஷலாக தாத்தாவின் உதவியோடு சமைத்த உணவினை அனைவருக்கும் ஆர்வமாய் பறிமாறிக்கொண்டிருந்தாள்.
“சாப்பாடு பிரமாதம் பாப்பா…திருப்தியாய் சாப்பிட்டேன்…”
என்று ஒருவர் பைனல் டச்சான பாயசத்தை சுவைத்தபடி கூற,

“சும்மாவா நம்ம கைப்பக்குவம்…”
என்று இல்லாத காலரை தூக்கி விட்டவள்

“இன்னும் கொஞ்சம் பாயாசம்…”
என்றபடி அவரை கவனிக்க,

“இவனுங்களை சாப்பிட விட்டால் ஒரு பருக்கை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுருவானுங்க… நீயும் சாப்பிடு போ…”
என்றான் மற்றொருவன்.

“அதனால் என்ணணே…வயிறாற சாப்பிடடும்…செட்டில் நீங்க காரோட மல்லுக்கட்டி வேலை பார்ப்பதை தான் பார்த்திருக்கேனே…வயிறு நிரம்ப சாப்பிட்டால் தானே தெம்பா வேலை செய்ய முடியும்…”
என்று இயல்பாய் கூறவும்,

“ஆனாலும் நீ எங்களை அநியாயத்திற்கு நம்புற பாப்பா… நீ பாசம் வைக்கிற அளவு நாங்க நல்லவங்க இல்ல… நாங்க என்ன தொழில் செய்றோம் தெரியுமா…”
என்று ஒருவன் சொல்ல அவள் உதட்டில் மெல்லியே புன்னகை…

“சொல்லாதீங்க ண்ணே… நாம எப்படி யோசித்து பார்க்கிறோமோ…அப்படி தான் எதுவும் நமக்கு தெரியும்… நான் உங்க எல்லாரையும் நல்லவங்களா தான் பார்க்கிறேன்…எனக்கு அப்படி தான் தெரியிறீங்க…நான் இங்க இன்னும் எத்தனை நாள் இருக்க போறேன் தெரியலை…இருக்கிற வரை அப்படியே நினைச்சிட்டு போறேனே…”
என்றவள் அப்பேச்சை தொடர விரும்பாமல் வேறு பேச்சிற்கு தாவினாள்.

அவர்கள் எல்லாம் சாப்பிட்டு சென்ற சற்று நேரத்திற்கு பின் தான் வந்து சேர்ந்தனர் பத்ரியும் கணபதியும்…
சாப்பிட அழைத்தவள் அவர்களுக்கும் தானே பறிமாற,

“இதெல்லாம் எதுக்கு நீ பண்ற…உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்திட்டு இருக்க மாட்டியா…”
வழக்கம்போல் கடுகடுத்த கணபதியிடம்,

“எனக்கு இங்க ஒரு வேலையும் இல்ல பாஸ்…அதான் நானா ஒரு வேலை எடுத்துக்கிட்டேன்…அப்புறம்…”
என்றவள்,
“ நான் விஷம் எதுவும் கலக்கல்லை…”
என்றாள் மேடை ரகசியம்போல்…

அவளை முறைத்தாலும் அவள் கைபக்குவம் சுவைக்கவே செய்தது.அவர்கள் சம்பாஷணை கேட்டு புன்னகைத்தபடி பத்ரி உண்ண,
“என்ன பத்ரி அண்ணே…ஒன்னுமே சொல்லாம சாப்பிடுறீங்க… நல்லாயிருக்கா…”
என்று அவள் கேட்கவும்,

“சான்சே இல்ல போ…சூப்பர்…”
என்று சொல்ல அவள் முகம் பிரகாசம் ஆனது.

“தேங்க்ஸ்ண்ணே…எனக்கு தெரியும் உங்களுக்கு பிடிக்குமுனு…”
என்று அவள் சொல்ல கணபதியோ,

“ஏன்-ண்ணே பொய் சொல்றே…இந்தம்மா சமைச்சு ட்ரைனிங் எடுக்க நாம தான் சோதனை எலி போல…வாய்ல வைக்க முடியல…”
என்று வேண்டுமென்றே முகம் சுளித்தான்.

“ஆமா… வாய்ல வைக்க முடியாமல் தான்…இவுக ரெண்டு ப்ளேட் உள்ள தள்ளினாக…”

“என் விதி…இன்னைக்கு இததான் திங்கணுமுனு…என்ன செய்ய முடியும்”
என்று சலித்துக் கொண்டு சொன்னாலும் உண்வை ஒருக்கை பார்த்துவிட்டு தான் எழுந்தான்.

“கணபதினு பேருக்கு பதிலா காண்டுபதினு வச்சிருக்கலாம்…எப்ப பாரு மூஞ்சில முள்ள கட்டிக்கிட்டி…”
என்று முகத்தை அஷ்டகோணலாய் சுளித்து முணுமுணுக்க அதை காதில் வாங்கிய பத்ரி வாய் விட்டு சிரித்தான்.

அவன் சிரிப்பு தன் முணுமுணுப்பை கேட்டுவிட்டான் என்பதை உணர்த்த அசடு வழிந்தாள்.அதே சமயம் கைகழுவி வந்த கணபதி,
“ஏன் சிரிக்கிறண்ணா…என்னாச்சு…”
என்று கேட்கவும் அவள் சொல்ல வேண்டாம் என்று கண்களால் கெஞ்சவும்,

“ஒன்னுமில்ல டா…”
என்று தோளை குலுக்க அவனும் மேலே எதுவும் கேட்காமல் சென்றுவிட்டான்.

மீதம் அங்கே பத்ரியும் யவ்வனாவும் மட்டுமே இருக்க அவன் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் தன் மண்டையில் சில நாளாய் ஓடிக்கொண்டிருந்த ஒன்றை கேட்க நினைத்து,

”அண்ணே… நான் ஒன்னு கேட்கடுமா…”
என்றாள் தயக்கமாய்…

”கேளு…”

“ நீங்க முறைக்க மாட்டேன்…திட்ட மாட்டேன்…முக்கியமா கன் எடுக்க மாட்டேனு சத்தியம் பண்ணுங்க…கேட்குறேன்…”

“கன்-ஆ…?”

“ஆமா… நீங்க தான் கோபம் வந்தால் பட்டுனு எடுத்து பொட்டுனு சுட்டுடுவீங்களாமே…அதான் ஒரு சேஃப்டிக்கு…”

“ஹாஹா…அப்படி என்ன கேட்க போறீங்க…மேடம்”

“நீங்க சத்தியம் பண்ணுங்க சொல்றேன்…”

“சரி…சத்தியம்…சொல்லு…”

என்று சொன்னவன் இலையை மூடிவிட்டு எழ அவளும் உடன் எழுந்தபடி,
“அது வந்து…”
என்று இழுத்தவள்,

“நீங்க ஏன் அண்ணா என்னை காப்பாத்தினீங்க…”
என்று கேட்க கைகழுவி திரும்பியவன்,

“இதென்ன கேள்வி…அடிப்பட்டு ஒரு பொண்ணு மயங்கி கிடந்தால் கண்டுக்காமல் போனால் தான் தப்பு… காப்பாத்தினது ஒரு தப்பா…”
என்றான்.

“அது சரி தான்…ஆனால் இவ்வளவு தூரம் கூட்டிவந்து அவளுக்கு தேவையானது எல்லாம் செய்துக் கொடுத்து…அவளை வீட்டில் சேர்க்க தன்னால முடிந்த மட்டும் முயற்சி செய்யுற அளவுலாம் யாராவது தெரியாத ஒரு பொண்ணுக்காக பண்ணுவாங்களா…”
என்றவள்,

“எவ்வளவோ ஆக்சிடெண்ட் பார்த்திருப்பீங்க… உண்மைய சொல்லுங்க எல்லாரையும் இதே போல காப்பாத்திருப்பீங்களா…”
என்று மென்று முழுங்கி கேட்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.
அவளுக்கு தெரிந்துக் கொள்ளாட்டி தலையே வெடித்துவிடும் போல் இருக்க மாடி வராண்டாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து தன் ஃபோனில் கவனமாய் இருந்தவனை தேடி வந்தவள்,
“ என்னண்ணா… பதிலே சொல்லல…”
என்று கேட்டாள்.

“ என்ன சொல்லணும்னு நினைக்கிற…”

“அது…என்னை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா… நான் தான் உங்களை மறந்துட்டேனா…இல்லை வேற எதாவது.”
என்று குழம்பியவளை கண்டு,

“ஹாஹாஹா…எம்மாடி உன்னை எனக்கு முன்னலாம் தெரியவே தெரியாது…இன்ஃபக்ட் உன்னை மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்தே இல்லை…”
என்று சிரித்தவன்,

“பெருசா ஒரு காரணமும் இல்ல…ஏன் இவ்வளவு யோசிக்கிற…”
என்றான் ஃபோனை வைத்துவிட்டு சோஃபாவில் சாய்ந்தமர்ந்தபடி…

“இல்ல ண்ணா…இதே போல எங்கயோ நடந்தா மாதிரி இருக்கு…எங்கயோ இருக்கேன்…யாரோ என்னை மிரட்டுறாங்க…என்னானு புரியலை…நைட் கண்ட கனவு விடிஞ்சதும் பாதி மறந்து பாதி நியாபகம் இருக்குமே…அப்படி தான் இப்போ இருக்கு எனக்கு…அதான் என்னென்னவோ யோசனை…”

என்று சொன்னவளின் தோரணையில் சற்று பாவமாக தான் இருந்தது.

“நீ ரொம்பலாம் யோசிக்கிற அளவு ஒன்னும் இல்ல யவ்வனா…ஆனால் நீ சொன்னா மாதிரி உன்னை கூட்டிட்டு வந்த மாதிரி எல்லாரையுலாம் நான் காப்பாற்ற முன் வந்திருக்க மாட்டேன்…உண்மையை சொல்லணும்னா கண்டுக்ககூட மாட்டேன் தான்…பட் உன்னை பார்க்க காரணமும் என் ஃப்ரெண்ட் தான்…என் தளபதி…”
என்ற போது அவன் உதட்டில் ஒர் அழகிய புன்னகை…

“ஃப்ரெண்டாஆ…புரியலையே…”
என்று அவள் தலையை சொரிய பெருமூச்சு விட்டவன்,

“உனக்கு புரியுறா மாதிரியே சொல்றேன்…”
என்றான்.

“நீ அன்னைக்கு தண்டவாளத்தில் எப்படி இருந்தியோ அதே மாதிரி ஒரு சிச்சுவெஷனில் நானும் இருந்திருக்கேன்…ம்ம்ம்ம் ஒரு ஏழு எட்டு வருஷம் முன்னாடி இருக்கும்…இப்போ உள்ள பவர் எல்லாம் அப்போ எனக்கு இல்லை…என்னை முளையிலே கிள்ளிப்போட ஒரு கூட்டமே அலஞ்சுது…அதுல ஒருதனிடம் சிக்கிடேன்… அந்த லூசு என்ன நினைச்சதோ பார்த்ததும் சுட்டுக்கொள்ளாமல் பக்கத்தில் இருந்த தண்டவாளத்தில் என்னை சேர்த்து கட்டி போட்டு போய்டான்…
அது சரியா ட்ரைன் வர்ர நேரம்…தூரமா ட்ரைன் வர்ரதை என்னால நல்லவே உணர முடிந்தது…ஆனால் என்னால இன்ச் கூட அசைய முடியல… அப்போ மரண பயமில்லை…ஆனாலும் நான் நினைத்த எதையுமே செய்யாமல் போறேனேனு வருத்தமா இருந்தது.
சாவு தானு முடிவே பண்ணிட்டேன்…அப்போ வந்தான் அவன்…எங்கிருந்து வந்தானோ தெரியலை.பக்கத்தில வந்து படபடனு என் கட்டை அவிழ்த்தான்.ட்ரைன் என் கண்பார்வை தூரத்திற்கு வந்திடுச்சு…அவனை பார்த்தபோது,
‘இவன் என்ன பைத்தியமானு தான் தோணூச்சு…’.போடானு துரத்தினேன்.அப்பவும் அவன் எல்லா முடிச்சையும் அவிழ்கிறதுல தான் முனைப்பா இருந்தான்…ட்ரைன் கிட்டக்க வந்திடுச்சு…அந்த கடைசி நொடில என்னை இழுத்துக்கிட்டு அவனும் பக்கத்துல தாவிட்டான்…”
என்று அவன் சொன்னபோது “ஹப்பாடி…” என்று நெஞ்சில் கைவைத்தாள் ஏதோ நேரிலே பார்ப்பது போல்…
கடகடவென ஓடிய இரயிலுக்கு ஈடாய் இருவர் இதயமும் துடித்தது.

“அறிவிருக்கா உனக்கு…ஒரு செக்கெண்ட் லேட் ஆகியிருந்தால் என்னோட நீயும் பரலோகம் வரவேண்டியது தான்…”
மூச்சு வாங்க பத்ரி கேட்க எழுந்து தன் கையில் ஏற்பட்டிருந்த சிராய்பை ஆராய்ந்தவன்,

“ம்ச்…அதுக்குனு ஒரு உசுரு கண்ணு முன்னால போறதை வேடிக்க பார்த்திட்டு என் உசுரு நிக்காது சர்…”
என்றான் தன் ஆடையில் ஒட்டியிருந்த தூசியை துடைத்தபடி…

அவன் சாதாரணமாய் கூறிவிட்டான்.ஆனால் கேட்ட பத்ரிக்கு தான் அந்த நொடி அவன்மீது ஒரு சுவாரசியத்தை உண்டாக்கியது. அவன் கழுத்தில் தொங்கிய டேக் அவன் கல்லூரி மாணவன் என்பதை சொல்ல இந்த வயதில் இவனுக்கு இத்தனை துணிவா என்று வியந்தவன் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

“ நீ உசுர கொடுத்து நல்லவனை எல்லாம் காப்பத்துல…ஒரு ரௌடிய தான் காப்பத்திருக்க… நான் பத்ரி…கேள்விப்படிருக்கியா…”
என்று கேட்டபோது அவன் முகத்தில் ஒரு சின்ன அதிர்ச்சி அவ்வளவே…

“ஓ… நீங்களா அது…ம்ம்ம் நிறைய கேள்விப்பட்டிருகேன்…ஆனால் நீங்க சொன்னதில் ஒரு திருத்தம்… நல்லவன் இல்ல தான்…பட் கெட்டவரும் இல்லையே…”
என்று கூறியவன்,
“சரி ஓகே… வாய்பிருந்தால் மீண்டும் சந்திபோம்…”
என்று சொல்லி அவன் போக்கில் அங்கிருந்து சென்றுவிட்டான்.

“நான் ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல முற்படல யவ்வனா…அவன் அதை எதிர்பார்க்கவும் இல்ல… பேசிட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான்…அவன் செஞ்சது பெரிய விசயம் தான்…ஆனால் அதை அவன் அலட்சியமா செஞ்சிட்டு போன தோரணை எனக்கு ரொம்ப பிடிச்சது…மறுநாளே அவனை பத்தி எல்லா டீட்டைலும் என் கைக்கு வந்துடுச்சு…
அவனோட நட்பு வச்சுக்க எனக்கு தோணுச்சு… நானே தேடி போனேன்…எங்க நட்பு அப்படி தான் ஆரம்பிச்சுது…அவனுக்கு கொடுத்த முக்கியதுவம் நான் யாருக்கும் கொடுத்தது இல்ல யவ்வனா…அவனும் நான் யாரு என்னானு கவலையே படலை…என்னோட நிழல் மாதிரி இருந்தான்…எனக்காக எது செய்யவும் தயங்க மாட்டான்…அவனுக்கு என் தொழில் என்னவாக இருந்தாலும் என் நட்பு முன்னாடி அது பெருசாவே தெரியலை…ஆனால் அவனை சார்ந்தவங்களுக்கும் அப்படியே ஏத்துக்க மாட்டாங்க இல்லையா…
அவன் ஒரு ’தாதா’வோட பழக்கம் வச்சிட்டு அவன்கூடவே சுத்துறான்னு விசயம் அவன் அம்மாவிடம் போயிருக்கும் போல பதறி துடிச்சு வந்திடாங்க…அவங்க வந்து அவ்னோட சண்டை போட்டப்போ நானும் அங்க தான் இருந்தேன்…ஆனால் அவங்களுக்கு அது தெரியாது…எனக்காக அவ்வளவு பேசினான்…அவனே சரியான கோவக்காரன்…அவங்கம்மா என்னை பேசவும் பெரிய சண்டை…என் மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தான்னு அப்போ தான் தெரிஞ்சிக்கிட்டேன்…கடைசியா அவனோட கார்டியன் அவர் வந்து பேசவும் தான் தணிஞ்சான்… அவர் வார்த்தைக்கு அவன் ரொம்பவே கட்டுபடுவான்…அவர் என்னோட எந்த பழக்கமும் வச்சிக்க வேண்டாம்னு அவருக்காகனு சொல்லிக் கேட்கும்போது அவனால மறுக்க முடியல…
எனக்கும் படிக்கிற பையனை கெடுகிறோமோனு தோணுச்சு…அவன் நல்லதுக்காக அவனை தவிர்த்துடேன்…அப்புறமும் என்னை பார்க்க ரெண்டோரு முறை முயற்சி பண்ணான்… நான் அனுமதிக்கல…ம்ஹும்…அப்புறம் அவன் படிப்பு முடிந்து ஊருக்கே போயிட்டானு செய்தி மட்டும் வந்தது…விட்டுடேன்…”
என்று சொன்ன பத்ரி சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருக்க அவன்மீது பத்ரிக்கு இருந்த ஆளமான பிரியத்தை அவன் பாவனையிலே அவளால் உணர முடிந்தது.

ஒருவாறு தன்னை மீட்டவன்,
“உன்னை அன்னைக்கு அப்படி பார்த்தபோது அவன் முதல்ல ‘ஒரு உசுரு கண்ணு முன்னால போறதை வேடிக்க பார்த்திட்டு என் உசுரு நிக்காது சர்.” னு சொன்னது தான் நியாபகம் வந்துச்சு…ஏதோ ஒரு உள்ளுணர்வு…அவன் இருந்தால் என்ன பண்ணிருப்பானோ அதை நான் செஞ்சேன்…”
என்று சொல்லி, “அவ்வளவு தான்…கதை முடிஞ்சிது…போதுமா…எழுந்து போ…”
என்று போகும்மாறு கையை நீட்ட,
“போறேண்ணா…பட்…இன்னும் ஒரே ஒரு கேள்வி…இவ்வளவு சொன்னீங்களே…உங்க நண்பனோட பேரை சொன்னீங்களா…”

என்றாள் விளையாட்டாய்…
“பேரென்ன ஃபோடோவே காட்றேன் இரு…”
என்று தன் அலைபேசியில் இருந்த அவன் புகைப்படத்தை எடுத்து காட்ட அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

“இவன் தான் தமிழு…என் தோஸ்த்…”

கல்லூரி படிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் என்பதால் தற்போதைய கம்பீரமும் முதிர்ச்சியும் இல்லை என்றாலும் அந்த புன்னகை…அதே வசிகரிக்கும் புன்னகை அவளை என்னவோ செய்தது.பார்வை நிலைகுத்தி அதிலேயே நின்றது.

கடந்த காலத்தில் தொடர்புடைய ஒருவரை பார்த்ததாலோ இல்லை விதியின் செயலோ அவளது நினைவலைகள் பின்னோக்கி செல்ல தலை பாராமானது.நிற்க முடியாமல் பத்ரியிடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்து அமர்ந்தவளுக்கு தலைவலி இன்னும் இன்னும் அதிகமாக சில நொடிகளில் அப்படியே மயங்கி சரிந்தாள்.

2 Likes

அத்தியாயம்-21

தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களாகியும் அதன் பரபரப்பு இன்னும் தமிழகம் எங்கும் குறையவில்லை.
சென்ற முறை ஆட்சியில் இருந்த அதே கட்சியே இம்முறையும் பெரும்பாலான விழுக்காடுகளில் வெற்றி வாகையை சூடியிருந்தது.
கட்சி தொண்டர்களின் ஆர்பட்டமும் கொண்டாட்டமும் எல்லா ஊடகங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு நேரெதிராய் கொதித்து போயிருந்தார் சிவபாலன்.

ஆம்…அவர் தொகுதியில் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்க நிச்சயம் இம்முறையும் தனக்கு தான் வெற்றி என்று தலைகணத்தோடு இருந்தவருக்கு அவரது அரசியல் வாழ்வில் வந்த முதல் தோல்வி பெரிய அடியாக தான் அமைந்தது.அவரால் இன்னுமே அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.கண் எதிரே வருவோரை எல்லாம் கடித்து குதறாத குறையாக கோபத்தில் திளைத்திருந்தார்.அவரது வெறிப்பிடித்த நிலையை கண்டு திருப்தியானார் இந்திரன்.இதே போல் தானே இருந்திருக்கும் அவருக்கும்…மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ள தமிழை அலைபேசியில் அழைத்தார்.

“தமிழு…நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா… எல்லாம் உன்னால தான்ய்யா…”

என்றார் எடுத்ததும்…

“நான் என்னங்க பண்ணேன்…”

“என்ன பண்ணியா…எல்லாமே நீதான் பண்ணேன் தமிழு…நீ போட்டு கொடுத்த ப்ளான் தான்ய்யா…இன்னைக்கு அவன் நான் நினைச்சதைவிட கேவலமா தோத்து போனான்…நான் தான் ஜெய்பேன்னு எவ்வளவு ஆணவமாய் அலைஞ்சான் தெரியுமா…இப்போ அந்த மூஞ்ச கொண்டு போய் எங்க வச்சுப்பான்…எப்பா…டேய்…நீ மட்டும் அரசியல் வந்திடாதே…நாங்க பொழப்பு நடத்த முடியாது…அப்படியை வந்தாலும் என் கட்சில தான் இருக்கணும் சொல்லிட்டேன்…”

மகிழ்ச்சியில் அவர் ஆர்பாட்டமாய் பேச,

“எனக்கு இருக்குற தலவலியே போதுமுங்க… அரசியல் எல்லாம் வேணாம்…உங்களுக்கான பாதைய போட்டு கொடுத்தாச்சு…வழியை அமைச்சிக்கிறது உங்க சாமர்த்தியம்…”

என்று அழைப்பேசியை வைத்தவனுக்கு எதிலும் முழு மனதாக ஈடுபட முடியவில்லை.மனமெல்லாம் யவ்வனாவை தேடுவதில் தான் இருந்தது.மிகவும் சிரமப்பட்டே பிற விஷயங்களிலும் கவனத்தை கொண்டு வந்தான்.

தற்போது நடராஜன் தமிழை ஃபாக்டரியிற்கு வர சொல்லியிருந்ததால் அங்கு தான் அவருக்காக காத்திருந்தான்.

“வா தமிழு…”

என்றபடி வந்த நடராஜனை கண்டு அவன் எழவும் 'உட்காருடா…"
என்று அவன் தோளில் தட்டி அமர வைத்தவர் தானும் அவன் அருகில் அமர்ந்தார்.

“என்னங்க ஐயா…ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னீங்க…”

“ஆமா…முக்கியமான விஷயம் தான்…”

என்றவர் அவரோட வந்திருந்த அவர்கள் லீகல் அட்வைஸரை பார்க்க அவர் ஒரு பத்திரத்தை நீட்டினார். அதனை வாங்கி தமிழின் கையில் திணித்த நடராஜன்,

“வெள்ளிக்கிழமை ரெஜிஸ்டரெஷன் சரியா…இப்போ படிச்சு பார்த்து கையெழுத்து போடு…”

என்று கூற புரியாமல் அவரை பார்த்தவனுக்கு பத்திரத்தை பார்த்ததும் புரிந்தது.அவரது ரயிஸ் மில்லை அவனது பெயருக்கு மாற்றுவதற்கான பத்திரம் தான்.

“என்னங்க ஐயா…எனக்கு இதெல்லாம் வேண்டாம்…”

என்று உடனே மறுத்தவனிடம்,

“வேணுமா…வேணாமானு கேட்டேனா…இது உனக்கு தான்…”

என்று அழுத்தமாய் சொல்ல,

“என்னங்கய்யா…இதுக்கு ஆசைப்பட்ட நான் எல்லாம் செஞ்சேன்…வேலை முடிஞ்சிது இந்த உன் கூலிங்குறா மாதிரி கொடுக்கறீங்க…நான் இதெல்லாம் எதிர்பார்த்து எதுவும் செய்யலங்கய்யா…”

என்றான் அடிப்பட்ட பார்வையோடு…

“இதென்னடா கிறுக்கனாட்டும் பேசுற…இன்னைக்கு நேத்தி இல்ல நான் எப்பவோ முடிவு பண்ணது…நீ எனக்கு பிரகாஷ்,மனோ மாதிரினு சும்மா வார்த்தைக்கு சொன்னேனு நினைச்சியா…இங்கேந்து வந்ததுடா…”

என்று நெஞ்சில் கைவைத்து சொன்னவர்,

“அது முழுக்க உன் உழைப்பு தமிழு…உன்னை தான் சேரணும்…அத்தோட உன் திறமைக்கு நீ இன்னும் பெரிய பெரிய உயரத்தை அடையணும்…அது தான் என் ஆசை…சும்மா என் பின்னாடியே இருந்து காலத்தை ஓட்டிட நினைக்காத…இதை ஒரு தொடக்கமா வச்சு மேல போடா…”

என்று கட்டளையாகவே அவர் சொல்ல மறுத்து பேச முடியவில்லை.அவன் கையெழுத்து இட்ட பத்திரத்தை அட்வெய்சரிடம் கொடுக்கவும் அவர் வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றார்.

பின்,
“அப்புறம் காலகாலத்துல கல்யாணத்த பண்ணு…பார்க்க இளங்காளையாட்டும் இருந்தாலும் வயசு உனக்கும் ஏறுதுடா…”

என்று நடராஜன் சிரிப்போடு சொல்ல புன்னகைக்க முயன்றானே அன்றி ‘சரி’ ‘இல்லை’ என்று எதுவும் சொல்லவில்லை.

“அந்த பொண்ணை விரும்பரியா தமிழ்…”

என்று திடீரென அவர் கேட்கவும் அவரை பார்த்து விழித்தவன்,

“என்னங்கய்யா…யாரு…”

என்று அவன் தடுமாற,

“நான் யாரை சொல்றேனு உனக்கா தெரியாது…சொல்லுடா…”

என்று அவர் நக்கலடிக்கவும்,

“ஆமா ஐயா…”

நெற்றியை விரலால் சுரண்டியபடி அசடு வழிய அவன் சொன்னதில் சிரித்து விட்டார்.

யவ்வனாவை பற்றி உண்மைகள் தெரிந்ததும் முதல் வேலையாக நடராஜனின் வீட்டிற்கு வந்து தான் கூறினான்.

‘அவள் நல்லவள்:அவள் மீது எந்த தவறும் இல்லை…’ என்பதை எப்படியாவது எலலாருக்கும் உணர்த்திவிட வேண்டும் என்ற வேகம் அவன் குரலில் இருக்க அப்போவே அதனை உணர்ந்துக் கொண்டார் ஆனால் அதனை அவன் வாய்வழி கேட்க வேண்டிய தற்போது கேட்டது.

“சீக்கிரமே அந்த புள்ளைய தேடி கூட்டிட்டு வாடா…உன் கல்யாணத்தையும் பார்த்துட்டால் போதும்…”

என்று அவர் சொல்லவும்,

“கண்டிப்பா…” புன்னகைத்தவன் பின்,

“ஐயா… அப்புறம் இன்னைக்கு பத்ரியை பார்க்க போறேன்…”

என்று சொல்லும்போதே அவனிடம் ஒரு ஆர்வமும் தெரிய,

“ம்ஹூம்…’ நீ அவனை பார்க்கவே கூடாது…எனக்காக அவனோட எந்த நட்பும் வச்சிக்காதேனு’ நானே சொல்லிட்டு இப்போ எனக்காக வேண்டியே நீ அவனை தேடி போக வேண்டியது வந்துடுச்சு பார்… ரொம்ப சுயநலவாதி ஆகிட்டேனோ தமிழு… இத்தனை வருஷத்துல வராதவன் இப்போ தேவைன்றதும் வந்து நிற்கிறான் பார்னு’ பத்ரி உன்னை எதாவது பேசிட்டா…”

என்றார் நடராஜன் சற்று குற்றவுணர்வு தாங்கிய குரலில்…

சிவபாலனின் குற்றங்களுக்கு ஜெயிலில் போட்டாலும் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளில் ஏதேனும் ஒன்றின் வழியாக பணத்தை கொண்டு குதித்து ஒரே நாளில் வந்துவிடுவார் என்று நன்றாகவே தெரியும் என்பதால் அவருக்கு உதவி எவ்வழியிலும் கிடைக்காதபடி எப்படி லாக் செய்யலாம் என்று யோசித்தவனுக்கு தோன்றிய ஒரே முகம் பத்ரி தான்.

அவன் இதில் நுழைந்தால் அவனை எதிர்த்து யாரும் சிவபாலனிற்காக முன் வரமாட்டார்கள் என்று தோன்ற அதனை நடராஜனிடம் சொல்லியதில் இருந்தே அவருக்கு இதே தான் உறுத்தியது.

“என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க… அம்மா உங்களை ரொம்ப கெஞ்சி கேட்டு கிட்டதால தான் நீங்கள் அப்போ கடுமையா நடந்துக்கிட்டீங்கனு எனக்கு தெரியாதா…கூடவே இருந்தாலும் இல்லாட்டியும் சரி எத்தனை வருஷமானலும் சரி எங்க நட்பு அப்படியே தான் இருக்கும்…அப்படியே மீறி அவன் என்னை திட்டினால் கூட எனக்கு சந்தோஷம் தான் ஐயா…நீங்க அதெல்லாம் நினைக்காதீங்க…”

என்று அவன் சொல்லும் போது அவர் வேறென்ன சொல்வார்.அவனும் அத்தோடு விடைப்பெற்று கிளம்பி விட்டாலும் செல்லும் வழியெல்லாம் பத்ரியை பற்றிய சிந்தனை தான்.

முன்பைவிட தற்போதிய பத்ரியின் பலமும் உயரமும் அவனும் அறிந்தே தான் இருந்தான். இன்னும் தன்மீது அதே பிரியம் இருக்குமா…தன்னை பார்த்ததும் எப்படி நடந்துக் கொள்வான்.முதலில் அவன் அங்கு இருப்பானா…?

என்ற யோசனைகளோடு தனது பைக்கில் வந்தவன் ஒரு மணி நேரத்தில் அவன் பத்ரியின் பங்களாவை அடைந்திருந்தான்.

இத்தனை வருட இடைவெளியில் அந்த இடம் பெரிதும் மாறியிருக்க அவற்றை பார்வையிட்டபடி மெதுவாக தன் பைக்கை உருட்டிக்கொண்டு அவன் கேட்டை நெருங்க அப்படியே அவனை தடுத்து நிறுத்தினான் காவலாளி.

“யோவ்…என்ன உன் பாட்டுக்கு உள்ள போற…யாரு நீ…”

இருசக்கர வாகனத்தில் சாதாரணமாய் இருந்தவன் யாராக இருக்ககூடும் என்ற அலட்சியத்தில் அவன் தோரணையாய் விசாரிக்க தமிழும்,

“பத்ரியை பார்க்கனும்…நான் தமிழ் வந்திருக்கேனு சொல்லுங்க…”
என்று தமிழும் நல்லவிதமாகவே சொன்னான்.ஆனால் அவனோ,

“ஆமா…நீ பெரிய கலெக்டரு…பேரை சொன்னதும் தெரிய…!என்ன விசயமா வந்திருக்கேன்னு சொல்லுய்யா முதல்ல…உள்ள விடலாமா வேணாமானு நான் முடிவு பண்றேன்…”

என்றான் அலட்சியமாய்… இந்நேரம் அவன் இடத்தில் வேறு எவரும் இருந்து தமிழிடம் இவ்வாறு பேசியிருந்தால் ஒரே அரையில் அவன் பற்களை தெறிக்க விட்டிருப்பான்.பத்ரியின் இடம் என்பதால் சற்று பொறுமை காத்தான்.இருந்தாலும் அவன் பேச்சுக்கு பதில் சொல்லாமல் அவன் பார்த்த பார்வையே அந்த காவலாளியை அச்சுறுத்த மேலே எதுவும் அவன் பேசியிருந்தால் நிச்சயம் தமிழிடம் மொத்து வாங்கிருப்பான் அதற்குள் தமிழை சிசிடிவி கேமராவில் பார்த்துவிட்ட கணபதி வேகமாய் வெளியே வந்திருந்தான்.

“தமிழ்…”

என்று ஆர்வமாய் அழைத்தபடி வந்த கணபதியை கண்டதும்,

‘தேவயில்லாம வாய் விட்டோமோ…’
என்று காவலாளி பயந்தோடு நோக்க அவனது நல்ல காலம் இருவருமே அவனை பொருட்படுத்தவில்லை.

“நிஜமாவே நீ தானா தமிழ்…”

என்று ஆச்சரியம் விலகாமல் கணபதி கேட்க,

“யாருனு கேட்பியோன்னு நினைச்சேன்… பரவாயில்ல நியாபகம் வச்சிருக்க…”

என்றான் தமிழும் விரிந்த சிரிப்போடு…

“இதெல்லாம் மறக்க கூடிய மூஞ்சா…சரி…ஏன் இங்கேயே நிற்கிற…வா…வா”

என்று கணபதி அழைக்க அவனும் தன் பைக்கை உருட்டிக்கொண்டு வந்து உள்ளே நிறுத்தினான்.வரும் போது இருந்த சிந்தனைகள் தயக்கங்கள் எல்லாம் கணபதியின் இயல்பான பேச்சில் மறைந்தே போனது.

“ஆளே மாறிட்ட தமிழு…வாட்ட சாட்டமா நல்லா ஹீரோ மாதிரி இருக்க போ…”

“நான் மாறினது இருக்கட்டும்…நீ தான் ஆள் அடையாளமே தெரியாம மாறியிருக்க…உன் வாய்ஸை வச்சு தான் கணபதினே தெரிஞ்சிது…ஏன்டா இந்த கோலம்…உலக உருண்டையாட்டும் ஆகிட்ட…இதென்ன இந்த வயசுலே தொப்ப…”

என்று குறுஞ்சிரிப்போடு சொல்லி அவன் வயிற்றில் இடிக்க,

“நானா வச்சிக்கிட்டேன்…?தானா வந்திடுச்சு…”
என்று கணபதியும் சிரிக்க ஆங்காங்கே நின்ற ஆட்கள் எல்லாம் இருவரையும் ஆச்சரியமாய் பார்த்தனர்.

அவர்களுக்கெல்லாம் தமிழை தெரியாது.எப்பொழுதும் கடுவன் பூனையாக உர்ரென்றே திரியும் கணபதியே இப்படி விளையாட்டாக பேசி சிரிப்பதை பார்த்ததால் வந்த ஆச்சரியமே இது…!!!

“நீ ஒருநாள் நிச்சயம் வருவேன்னு தெரியும்…ஆனால் இப்படி திடுதிப்புனு வந்து நிற்பேனு நினைக்கல தமிழு…அண்ணா பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவாரு…”

என்று உள்ளார்ந்து சொன்னவன்,

“உட்காரு…அவரை கூப்பிடுறேன்…”

என்று சொல்லி செல்ல தமிழும் பத்ரிக்காக காத்திருந்தான்.

சில நொடிகளில் அங்கே வந்த பத்ரியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி…

“வா தமிழ்…”

என்று அதே மகிழ்ச்சியோடு வரவேற்றவன் அவன் அருகில் வந்து தோளோடு அணைத்து விலக தமிழின் முகத்திலும் அத்தனை மலர்ச்சி…

" நேத்தி தான் உன்னை பற்றி பேசிட்டு இருந்தேன் தெரியுமா…இன்னைக்கு நீ வந்து நிற்கிற…ஆச்சரியமா இருக்குடா…"

என்று வியந்தவன்,

“எப்படி இருக்க தமிழ்…அம்மா எப்படி இருக்காங்க…”

என்று விசாரிக்க தமிழ் பதிலளித்தான். நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் சந்தித்தாலும் இருவருக்குமே பேச்சு தடையின்றி வந்தது.

நட்பின் இலக்கணத்தில் ஒரு அழகான பண்பே இது தான்.எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வெவ்வேறு திசைகளில் இருந்தாலும் நட்பு என்றும் மாறாமல் அதே போல் தான் இருக்கும்…நம் வயதிற்கு தான் முதுமை உண்டே தவிர நட்பு என்றும் இளமையோடும் அதே தன்மையோடும் தான் விளங்கும்.அதற்கு தற்போதைய சான்று இவர்கள் நட்பு தான்.

தான் இங்கே வந்த விஷயத்தை மறந்து ஏதேதோ பேசியபடி அவர்கள் இருக்க அப்பொழுது,

“பத்ரி அண்ணா…”

என்று அழைத்தபடி அங்கே வந்தவள் உறைந்து நின்றாள்.இதயம் தடதடக்க கை கால் எல்லாம் சில்லிட்டு போய் அவள் நிற்க தமிழின் நிலையை சொல்லவும் வேண்டுமோ…!!! மூச்சு விடவேண்டும் என்பதனை மறந்தவனாய் ஏன் இந்த உலகத்தையே மறந்தவனாய் கண்சிமிட்டாமல் அவளை மட்டுமே விழி எடுக்காமல் பார்த்தான்.

உண்மையில் அவளே தானா…’ என்று வியந்து ‘இல்லை வழக்கம் போல் தன் பிரம்மையா…’ என்று தயங்கி ‘பிரம்மையாக இருந்தால் மறைந்து விடுவாளே…’ என்று பயந்து கண்கள் சிமிட்டாமல் அவனது பார்வை அழுத்தமாய் அவள்மீதே இருக்க அதில் அவள் கண்களோ அலைபாய சில நொடிகளில் பார்வையாலே ஒர் யுத்தம் சத்தமின்றி அரங்கேறியது.

“ஹப்பா…ஒருவழியா முழிச்சிட்டியா…சாப்பிட கூட இல்லாமல் இப்படியா அடிச்சிப்போட்டா மாதிரி தூங்குவ…”

என்ற பத்ரி குரலில் யவ்வனா சுதாரித்தாள்.

அப்பொழுதும் நம்பமுடியாமல் ஸ்தம்பித்து தமிழ் இருக்க பத்ரியோ,

“நான் சொன்னேன்ல…என் ஃப்ரெண்ட் தமிழ்…இவன் தான்…”

என்று சந்தோஷமாய் அறிமுகப்படுத்த அதற்குள் தன்னை மீட்டிருந்த யவ்வனா,

“வணக்கமுங்க…”

என்று அந்நிய குரலில் கூறியவள் மேற்கொண்டு எந்த பேச்சும் வராமல் உள்ளே ஓடிவிட அவள் பார்வையில் இருந்து மறையவும் தான் சுதாரித்தான்.

“யவ்வனா…நில்லு…”
என்று அழைத்தபடி வேகமாய் தமிழ் எழும்ப பத்ரி- கணபதி இருவருமே வியப்பாய் அவனை நோக்கினர்.

“தமிழ்…உனக்கு யவ்வனாவை தெரியுமா…”

என்று பத்ரி ஆச்சரியமாய் கேட்க தமிழுக்கு சிரிப்பதா…இல்லை அழுவதா என்று இருந்தது.

என்னவென்று சொல்லுவான்…!! இத்தனை நாட்களாய் வேறெதிலும் சிந்தனையை செலுத்த முடியாமல் உயிரை தொலைத்த வெறும் உடல்போல் தன் உயிரைக் தேடி திரிந்த கதையை எங்கனம் புரிய வைப்பான்.

“தெரியுமாவா…பைத்தியகாரனாட்டும் இவளை தேடி தான் நான் அலைஞ்சிட்டு இருக்கேன்…யாரோ மாதிரி பார்த்துட்டு போறா…இவளை…”

என்றவனுக்கு நின்று பேசக்கூட பொறுமையில்லை அவள் சென்ற திசையில் செல்ல,

“இருடா…அவ பழைய நினைவெல்லாம் இழந்துட்டா…அதான் உன்னை தெரியல போல…”

என்று பத்ரி கூற தமிழின் நடை தடைப்பட்டது.

அங்கிருந்து நழுவி தோட்டத்தில் தஞ்சம் புகுந்த யவ்வனாவிற்கு இன்னும் நடுக்கம் குறையவில்லை.வேகவேகமாய் மூச்சுவிட்டபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

நேற்று ஏற்பட்ட அதீத சிந்தனையில் அவள் மயக்க நிலைக்கே சென்றிருக்க அவள் சில நேரங்களில் இப்படி தான் அறையிலேயே இருப்பாள் என்பதால் அவள் அதன்பின் வெளியே வராததை இவர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கிட்ட தட்ட பதினைந்து மணி நேரத்திற்கு பின்பு தான் அவளுக்கு மயக்கமே தெளிந்தது.கண்களை சிரமப்பட்டு பிரித்தவள் மெத்தையில் கையூண்றி எழுந்து அமர்ந்தாள்.

மனக்கண்ணில் திரைப்படம் போல் அவள் வாழ்க்கையின் ஆதியில் தொடங்கி அந்தம் வரை அனைத்தும் ஓட அவற்றை கிரகிக்கவே சில நிமிடங்கள் ஆனது.

அனைத்தையும் உள்வாங்கிய யவ்வனாவிற்கு தன் உயிர் இத்தனையையும் தாண்டி இப்பூவுலகில் நீடிக்கும் விந்தையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆர்பரிக்கும் கடலில் சிக்கியவன் சிறு துடுப்பின் பிடிமானத்தில் அலையோடு சண்டையிட்டு முட்டி மோதி தத்தி தடுமாறி இறுதியில் உயிரோடு கரை சேர்ந்திருந்தால் அவன் உள்ளம் எத்தகைய உவகையை அடைந்திருக்குமோ அதற்கு ஈடான உணர்ச்சியில் தான் யவ்வனாவும் இருந்தாள்.

இனி எந்த ஓட்டத்தையும் எதிர்கொள்ள சக்தியற்று தோய்ந்து போன அவளது உடலும் மனமும் ஒருங்கே அன்னை மடியை நாட தனக்கு அனைத்தும் நினைவு வந்துவிட்டதை சொல்லவே அவள் பத்ரியை தேடிவர அங்கே அவள் கண்ணில் முதலில் பட்டது தமிழ் தான்.

எதிர்பாராததை எதிர்பாராத நேரத்தில் எதிர்க்கொள்ளும் சம்பவங்கள் விலைமதிப்பற்றவை…அவனை கண்டு ஒரு நொடி அதிர்ந்தாலும் மறு நொடி அவன் மார்பில் விழுந்து ஆறுதல் தேட சொல்லி உள்ளம் சிறுபிள்ளையாய் அடம்பிடித்தது.
அதனை தாண்டி தான் செய்து வைத்துவிட்டு வந்த துரோகத்தை நினைத்து பார்த்தவளுக்கு அவன் கோபத்தை எண்ணி அச்சமும் ஒவ்வொரு செல்லிலும் பரவ தனக்கு நினைவுகள் மீண்டதை மறைக்க முடிவு செய்தவள் அவனை தெரியாதது போல ஒரு பாவனை செய்துவிட்டு அதற்குமேல் நிற்க பயந்தவளாய் குடுகுடுவென ஓடி வந்து இங்கே நின்றுக்கொண்டாள்.

‘கடவுளே…இப்போ தான் எத்தனை பிரச்சனையிலும் என் உயிரை காப்பாத்திட்டேன்னு உன்னை பற்றி பெருமையா நினைச்சேன்… ஆனால் இப்போ தானே உன் மாஸ்டர் ப்ளான் புரியிது…என்னை இவ்வளவு தூரம் காப்பாத்தினது என் தமிழ் கையாலேயே என்னை போட்டு தள்ள தானே…எனக்கு நல்ல புரிஞ்சி போச்சு…அவரு என்னை நல்ல பார்த்திட்டாரு…நான் பண்ணி வைச்சிட்டு வந்த வேலைக்கு என் மேல கொலை காண்டுல இருப்பாருசெத்தேன்…’

குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி தனக்கு தானே அவள் புலம்பி தவிக்க அப்பொழுது,

“யவ்வனா…”

என்று தனக்கு பின்னால் கேட்ட குரலில் ‘பாஸ்…’ செய்தாற் போல் ஃப்ரீசாகி நின்றுவிட்டாள்.

இதயம் தடதடவென துடிக்க ஸ்லோ மோஷனில் திரும்பி அவனை பார்த்தவள் கண்களில் பயம்!பயம்!பயம் மட்டுமே!

“உனக்கு பழசெல்லாம் மறந்திடுச்சுன்னு பத்ரி சொன்னான்…உனக்கு என்னை தெரியலையா யவ்வனா…”

என்றவன் குரலில் இருந்த வேறுப்பாட்டை உணராத யவ்வனா தலையாட்டி பொம்மைப்போல் டிங்…டிங் என்று மண்டையை உருட்டினாள்.

“எப்படி யவ்வனா…எப்படி உன்னால என்னையும் நாம வாழ்ந்த வாழ்க்கையாய் மறக்க முடிந்தது…சொல்லு யவ்வனா…”

என்று வேதனை நிரம்பிய குரலில் கேட்டபடி அவள் அருகில் வர,

“வாழ்ந்த வாழ்க்கையா…”

என்று ‘ஞெ’ என விழித்தாள்.அவனோ அவள் தோளை பற்றியவன்,

“என்ன முழிக்கிற…ஒன்னா ரெண்டா பத்து வருஷ உன் கூட குடும்பம் நடத்திய உன் புருஷனையே உனக்கு நியாபகம் இல்லையாஆஆ…சொல்லு யவ்வனா சொல்லு”

என்றானே பார்க்கலாம். ‘அடப்பாவி… !!!’ என்று அவள் வாய் பிளக்க சிரித்துவிடாமல் அதே சோக முகத்தை கடைபிடிக்க பெரும்பாடு பட்டான் தமிழ்.

“என்ன முழிக்கிற… உன்னை எங்கெல்லாம் தேடினேன்…தெரியுமா…புருஷன், பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் சண்டை வரும் தான்…அதுக்குனு கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போனால் கூட பரவாயில்லை…தண்டவாளத்திலா தலையை கொடுப்ப…என் ஃப்ரெண்டு மட்டும் உன்னை பார்க்கலைனா என்னாகி இருக்கும்… நீ இல்லாமல் நானும் நம்ம மூணு பசங்களும் அனாதை ஆகிருப்போம் யவ்வனா…அனாதை ஆகியிருப்போம்…”

என்று நடிகர் திலகத்திற்கே டஃப் கொடுப்பது போல் தமிழ் கொடுத்த பாவனையில் ஒரு நிமிடம் தானே அவன் சொல்வது தான் உண்மையோ என்று குழம்பினாள்.

"இனியும் உன்னை பிரிந்து என்னால இருக்க முடியாது…வா யவ்வனா… நம்ம வீட்டுக்கு போகலாம் நான் கட்டிப்பிடி வைத்தியம் பண்ணி மருத்துவ முத்தம் கொடுத்தாலே போதும்…உனக்கு எல்லாம் நியாபகம் வந்திடும்…வா…”

என்று அவன் கையை பிடித்து இழுக்க சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு கோபமாய் அவனை ஏறிட்டாள்.

“அடப்பாவி மனுஷா…எனக்கு எல்லாம் மறந்திடுச்சுன்னு சொன்னால் இதான் சாக்குனு உன் இஷ்டத்துக்கு கத விடுவியா… எப்படி எப்படி நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகுதா?பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் ஸ்கூல் படிக்கிற பாப்பாய்யா…இதுல மூணு குழந்த வேற… பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாம்… நமக்குள்ள சண்டை வந்தால் நான் போய் ட்ரைன் முன்னாடி விழணும்மா எவ்வளவு பொய்…எவ்வளவு நடிப்பு…ஃபராடு…ஃப்ராடு…”

பழைய யவ்வனாவாய் மாறி தாம்தூம் என்று குதித்தவளை,

“அடிங்க…”

என்று அவள் கையை முறுக்கி அவள் முதுக்கு பின்னால் மடக்கியவன்,

“யாரை பார்த்து ஃப்ராடுங்கிற…நான் ஃப்ராடா…இல்லை நீ ஃப்ராடா… மேடமுக்கு பழசெல்லாம் மறந்திருச்சாமாம்…இப்போ மட்டும் எப்படி உண்மையெல்லாம் வருது…நீங்க மறந்திடுச்சுனு சொன்னால் நாங்க அப்படியே நம்பிடுவோமா… வாயை தொறந்தாலே பொய்… எப்ப பாரு பொய் சொல்ற இந்த வாயிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்…”

என்று மிரட்டுவது போல் அவன் பேசினாலும் இவன் மிரட்டுக்கிறானா இல்லை கொஞ்சுகிறானா என்று நமக்கு சந்தேகம் எழுவதை மறுக்க முடியவில்லை.

2 Likes

அத்தியாயம்-22

அம்மணி ஆட்டை திருடிய கள்வனாய் திருதிருவென முழித்தாலும்,

“உண்மையாவே எனக்கெல்லாம் மறந்திடுச்சு…”

என்று சின்ன குரலில் சொல்ல,

“இன்னொரு வாட்டி பொய் சொன்னே,…பல்லை கழட்டி கைல கொடுத்திடுவேன்…”

என்று அவன் கையோங்கவும்,

“அய்யோ நிஜமா தான்…”

என்று அவசரமாய் தடுத்து நேற்றில் இருந்து நடந்ததை கூறினாள்.அவள் கூறுவதை எல்லாம் பொறுமையாய் கேட்டவன்,

“அப்புறம் ஏன் என்னை தெரியலையான்னு கேட்டதுக்கு ஆமான்னு சொன்ன…”

என்று கேட்டான்.

“நீங்க என்மேல கோபமா இருப்பீங்கன்னு தெரியும்…பயமா இருந்துச்சு அதான்…”

என்று அவள் மெண்று விழுங்க,

“அய்யோடா…இவங்க ரொம்ப பயந்தவங்க தான்…”

என்று நக்கலாய் கூறியவன்,

“பயம் இருக்கிறவ அப்படி ஒரு காரியத்தை ஏண்டி செஞ்சே…”

என்றான் கோபமாய்.

“அப்போ என் சூழ்நிலை…”

என்றவள் பின் நினைவு வந்தவளாய்,

“கவின்,மது நல்லா இருக்காங்க தானே…அவங்களை காப்பாத்திட்டீங்கல்ல…”

என்று அவரமாய் கண்களில் எதிர்பார்ப்போடு நம்பிக்கை நிறைந்த குரலில் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“இல்லைன்னு சொன்னால் என்ன யவ்வா செய்வே…”

என்று கேட்கவும் துணுக்குறவள் மறுத்து தலையசைத்து,

“ம்ஹூஹும்…இருக்காது…அவங்களுக்கு ஒன்னும் ஆகியிருக்காது… மத்தவங்களை பற்றி எனக்கு தெரியாது…ஆனால் நீங்க நிச்சயம் எப்படியும் பிள்ளைங்கல காப்பாத்திடுவீங்கன்னு தெரியும்…அந்த நம்பிக்கையில் தான் அதை துணிந்து செஞ்சேன்…”

என்று உறுதியாய் சொன்னவளை முறைத்து பார்த்த தமிழ்,

“அவங்களை காப்பாற்ற தெரிஞ்ச எனக்கு உன்னை பாதுகாக்க தெரியாதாடி…இப்போ வக்கனையா பேசுறீயே…இதே நம்பிக்கையோட உன் பிரச்சனையும் என்னிடம் சொல்லறதுக்கு என்னடி…உனக்கொன்னுனா நான் சும்மா இருப்பேனா…”

என்றான் ஆதங்கத்தோடு…

அவனது உரிமையான கோபத்தில் சிலிர்த்தவள் அவன் கண்களை பார்க்க முடியாமல் அலைபாயும் விழிகளோடு,

“என் விசயமே வேற தமிழ்… நான் ஏன் இதெல்லாம் செஞ்சேன் தெரியுமா…”

என்று அவள் ஆரம்பிக்கும் போதே,

"தெரியும்… "என்று அவன் சொல்லவும் அவள் ஆச்சரியமாய் பார்க்க,

“நீ சொன்னா மாதிரி உன் மேல கொலவெறில தான் இருந்தேன்…உன்னை தேடி கண்டுப்பிடித்து உண்டு இல்லன்னு ஆக்கிடுற முடிவுல தான் இருந்தேன்…உன் வீட்டை தேடி கண்டுபிடித்தேன்…ஆனால் அப்புறம் தான் தெரிஞ்சிது…யாருக்காக இதெல்லாம் செய்றேன்னு கூட உனக்கு தெரியாதுனு…”

என்றவன் அவள் சென்ற பிறகு நடந்த அனைத்தையும் விவரித்தான்.

“அண்ணா…என்னால சத்தியமா நம்ப முடியல…இது தற்செயல்ன்னு…”

இன்னமும் ஆச்சரியம் விலகாமல் கேட்ட கணபதியிடம்,

“நாம ஒன்னு நினைச்சு செஞ்சால் கடவுள் நம்மை வைத்து வேறு திட்டம் போட்டிருக்கான் நினைத்து பார்…யவ்வனா ஏன் நம்ம கண்ணில் படணும்…? நாம ஏன் அவளுக்கு அடைக்கலம் தருணும்…?இத்தனை வருடங்களாய் எதுக்குமே நம்மை எதிர்பார்க்காத தமிழ் இப்போ ஏன் நம்ம உதவியை தேடி வரணும்…? எல்லாம் அவன் விதிச்ச விளையாட்டு தான்… நாம வாழ்க்கையில் யாரையுமே தற்செயலா சந்திக்கிறது இல்லை கணபதி ஒவ்வொருத்தரை சந்திக்கவும் ஒரு காரணம் இருக்கும்…”

என்று சொற்பொழிவு ஆற்றும் ஞானியாய் மாறி பத்ரி கூற அவன் வார்த்தைகளில் உள்ள உண்மையை அவனும் அமோதித்தான்.

“ம்ஹும்…அப்போ தமிழ் எட்டனாவை அழைத்துக்கொண்டு போயிடுவான்ல…”

“ஆமாடா…ஆஊன்னா சிக்கிரம் அவளை வீட்டை விட்டு அனுப்பினாள் தான் எனக்கு நிம்மதின்னு சொல்லிடே இருப்பியே,இப்போ உனக்கு நிம்மதியா…”

என்று இதழில் தேங்கிய புன்னகையோடு பத்ரி கேட்க அவன் முகத்திலும் ஒரு சின்ன புன்னகை…

“ஆமா…இனிமே என்னை நொய்… நொய்ன்னு பேசியே டார்ச்சர் பண்ண ஆளு இருக்காது…”

என்றவன்,

“இந்த கட்டிடத்தை வீடாக கொஞ்ச நாள் உணர வைத்தாள்…இனி மறுபடியும் பழய மாதிரி ஆகிடும்ல…அந்த வாயாடி இருந்தாலும் தொல்லையா தான் இருக்கு இல்லேன்னு நினைச்சு பார்க்கும் போது ஒரு மாதிரி கஷ்டமா தான் இருக்கு…”

என்று உணர்ந்து கூறியவன் பின் பேச்சை மாற்றும் பொருட்டு,

“அண்ணா…பேசாமல் நீ ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோயேன்…வர்ர அண்ணி நம்ம வீட்டை வீடா பார்த்துபாங்கல்லே…”

என்று கண்சிமிட்டலோடு சொல்ல அவன் பின்னந்தலையிலே ஒன்று போட்ட பத்ரி,

“உளராம உருப்படியா எதாவது வேலை இருந்தால் பாரு போ…”

என்று அதட்டினான்.

“என்ன தப்ப சொல்லிப்புட்டேன்… கல்யாணம் பண்ணிக்காட்டி போங்ககால பூரா முரட்டு சிங்கிளாவே இருக்க நீங்க நினைச்சால் யாரு மாத்தமுடியும்…”

என்று முனங்கியப்படி அலைபேசியை எடுத்துக் கொண்டு நகர,

“என்னடா முனங்குற…”

என்ற பத்ரியின் மிரட்டலில்,

“ஒன்னுமில்லண்ணா…உருப்படியா எதாவது செய்ய சொன்னீங்கல்ல…அதான் அந்த எம்.எல்.ஏ கேஸை முடிக்க வழி பண்றேன்…”

என்றான் பவ்யமாய் கூறினான் கணபதி.

“ரொம்ப நல்லது…அதோட அந்த அல்லக்கைங்க நரசிம்மன்,விநாயகம் அவனோட அண்ணன் மூணு பேரையும் இங்க வரவை நான் பார்க்கனும்…”

“ண்ணாஆ…அந்த சில்றைங்க-கிட்டலாம் நீ ஏன்னா பேசிக்கிட்டு…தட்டி தூக்கிடலாம் விடுங்க…”

“என்ன வேணாலும் பண்ணிக்கோடா…ஆனால் அதுக்கு முன்னாடி அவனுங்க இங்க வரணும்பத்ரி தங்கச்சியை மிரட்டி டார்ச்சர் பண்ணானுங்கல்ல…உண்மையான டார்ச்சரை நான் காட்டுறேன்…”

என்று பத்ரி சொல்ல அவன் ஒரு முடிவோடு இருப்பதை உணர்ந்து கணபதியும் அதனை ஏறுக்கொண்டான்.

சற்று நேரத்தில் யவ்வனாவோடு தமிழும் வர அவளுக்கு நினைவு திரும்பிவிட்டதை அறிந்ததும் இருவருமே மகிழ்ந்தனர்.

விடைபெறும் தருவாயில் அவளின் கண்கள் கலங்க,

"நன்றிங்குற ஒருவார்த்தை ரொம்ப சின்னதுன்னா நீங்க செஞ்சதுக்கெல்லாம்!!

மனசால ரொம்பவே நொந்து போயிருந்தேன்…அதிலிருந்து மீண்டு இத்தனை நாள் நான் உயிர்ப்போட வளையவர நீங்க எல்லாரும் தான் காரணம் அண்ணா…"

என்று உருக்கமாய் சொன்னவள் தன்னை சமாளித்துக்கொண்டு,

“இப்போ போறேன் தான்…ஆனால் இவரை மாதிரி கிடையாது நானு…உங்களை பார்க்க நான் அடிக்கடி வருவேன்”

என்று தமிழை காட்டி சொல்லி,

“வரலாம் தானே…”

என்று எதிர்பார்ப்போடு கேட்க விரிந்த சிரிப்போடு,

“இதென்னடா கேள்வி…தாராளமா…”

என்றான் பத்ரி.அடுத்து கணபதியை நோக்கி அவள் பேசும்மும்,

“செண்டிமென்ட்டால்லாம் பேசிடாத…”

என்று அவன் அவசரமாய் மறுக்க முறைத்தவள்,

“ஆமா பேசறாங்க…”

என்று நொடித்துக்கொண்டு,

“ஒரு ஃப்ரீ அட்வெய்ஸ்…அப்பப்போ சிரிங்க பாஸ்… சிரிக்காமல் இருந்தால் இளமையிலே முதுமை வந்திடுமாம்…பாருங்க…இப்போவே அங்கிள் மாதிரி ஆகிட்டிங்க…”

என்று வழக்கம்போல் அவனை வாரிவிட்டு அவன் பதில் கூறும்முன் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு வருவதாக கூறி ஓடிவிட்டாள்.

"அவளுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்திடா… நீ தப்ப எடுத்துக்காத…$

என்று யவ்வனாக்காக தமிழ் பேச,

“அவ இப்படி பேசலைன்னா தான் ஆச்சரியம்”

என்று இலகுவாக எடுத்துக் கொண்ட கணபதி பின்,

“எல்லாம் சரி…ஆனால் நீ ஒருவிசயத்தை பத்தி நீ சொல்லவே இல்லையே…”

என்றான் கேலியாக…

“என்ன அது…”

“உனக்கு யவ்வனா என்ன வேணும்னு?”

என்று புருவம் உயர்த்தி கேட்க,

"என்ன வேணும்னா…இனி என் வாழ்க்கை மொத்தம் அவ தான் வேணும்… "

என்று சொல்லும் போது அழகாய் ஓர் புன்னகை அவன் இதழில் ஒட்டிக்கொண்டது.

“நினைச்சேண்டா…”

என்று சிரித்த பத்ரி,

“அவளை பத்திரமா பார்த்துக்கடா…அவளை கஷ்டப்படுத்தினேன்னு தெரிஞ்சிது மவனே என்னோட இன்னோரு முகத்தை பார்ப்ப…”

என்றான் மிரட்டலாய்…

“அடப்பாவி…என்னோட இப்போ அந்த மேடம் முக்கியமாகிட்டாங்களோ…”

என்று அட்டகாசமாய் தமிழ் சிரிக்க,

“ஆமா…இத்தனை வருஷம் ஆளு அட்ரெஸ்ஸே இல்லாம காணாமல் போனவன் தானேடா நீ…உனக்கெல்லாம் முக்கியத்துவம் தர முடியாது…”

என்று கூறியவன் குரலில் விளையாட்டு மட்டுமே இருக்க நண்பனின் தாக்குதலில் போலியாக, “எல்லாம் என் நேரம்…”

என்று வருத்தபட்டான்.

அந்த வீட்டில் இருந்த ஒருத்தரை விடாமல் அனைவரிடமும் விடைப்பெற்ற பின்பே வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

“பைக்கில்லா வந்த…”

நிறுத்தி வைத்திருந்த தனது ராயல் என்ஃபீல்டை சாவி போட்டு இயக்கி கொண்டிருந்தவனிடம் பத்ரி கேட்டான்.

“ஆமா…”

என்று அவன் தோள் குலுக்கவும்,

“எவ்வளவு தூரம் பைக்கிலே போவ…பைக்கை இங்க விட்டுவிட்டு காரை எடுத்திட்டு போயேன்…பசங்கல அப்புறம் உன் பைக்கை கொண்டு வந்து தர சொல்றேன்…”

என்று சொல்ல

“இல்ல பத்ரி…எனக்கு என் பைக்தான் கம்ஃபட்டபுள்…அதோட என் முத பொண்டாட்டி இது…யாரு கையிலும் தர மாட்டேன்…”

என்று கண்சிமிட்டினான்.

அது சரி…நம்மூரில் பாதி பசங்களிற்கு அப்படி தானே…! நம் தமிழ் மட்டும் என்ன விதிவிலக்கா…!

இவர்கள் சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்த யவ்வனாவிற்கு இன்ஸ்டெண்டாய் ஒரு பொறாமை அவன் பைக்கின் மீது வர,

“உன் கூடலாம் போட்டி போட வைக்கிறானே…”

என்று மனதில் நொடித்துகொண்டாள்.

“ஹலோ…பார்த்துக்கொண்டே நின்றாள் எப்படி…வா வந்து ஏறு…”

அவள் ஏறியபின் தமிழ் வண்டியை கிளப்ப பத்ரி கண்ணில் இருந்து மறையும் வரையும் அவள் கையசைத்தாள்.

தமிழின் கரும்புரவி அவன் கையில் சீறி பாய மிகவும் உற்சாகமாய் காணப்பட்டான்.அவன் இங்க வரும்வரைகூட எதிர்ப்பார்க்கவில்லையேதிரும்ப செல்லும்போது அவனவள் அவனை சேர்ந்திடுவாள் என்று…!இத்தனை நாள் வெறுமையாய் இருந்த அவன் வாழ்க்கை ஒரெ நாளில் வண்ணமயமாகும் என்று…!

“முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்

பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்

வாழ்வில் ஒரு பயணம்

இது முடிந்திட விடுவேனோ”

அவள் பட்டும் படாமலும் அமர்ந்திருப்பதை உணர்ந்த தமிழ்,

“எப்போவேனாலும் குத்திச்சிடலாங்குறா மாதிரியே ஏன் உட்கார்ந்திருக்க…ஒழுங்கா தான் உட்காறேன்…”

என்று தமிழ் சொல்ல,

“ம்ம்ம்… நான் உட்கார்ந்து உங்க பொண்டாட்டிக்கு வலிச்சிட கூடாதுல…அதான்…”

என்று அவள் உதட்டை சுழித்து சொன்ன அழகை ரியர் வியூ மிரரில் ரசித்தபடி,

“ஆஹான்…கவலப்படாத என் என்ஃபீல்டிற்கு எதையும் தாங்கும் இதயம்…”

என்று சீண்டியவன் வேண்டுமென்றே வேகதடையில் ஏற்றி இறக்க இதை எதிர்ப்பார்க்காத யவ்வனா தட்டுதடுமாறி அவன் இடுப்பை சுற்றி இறுக்க பற்றிக் கொண்டான்.

“ச்சு…ச்சு…பார்த்து யவ்வனா…இதுக்கு தான் சொன்னேன்…”

சிரிப்பை ஒரு கன்னத்தில் ஓரங்கட்டிவிட்டு நல்லப்பிள்ளையாய் சொன்னாலும் அவனை உணர்ந்தவளாய்,

'யமகாதகன்… 'என்று செல்லமாய் மனதில் திட்டிவிட்டு கூச்சத்தோடு கையை விலக்கிக் கொள்ள,

“அட…பிடிச்சுக்கோம்மா நான் தப்பா நினைக்க மாட்டேன்…”

என்று அவன் பெருந்தன்மையாய் சொல்ல கண்ணாடியில் தெரிந்த அவன் பார்வையின் கள்ளதனதை கண்டு அவள் முகம் சிவக்க இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக யவ்வனா பதில் பேச திண்றி அமைதியானாள்.

அந்த பயணத்தை இருவரும் அனுபவித்து வர இருவருக்கும் அது அப்படியே தொடர்ந்துக் கொண்டே இருக்காதா என்ற ஆசை இருந்தாலும் அவர்கள் சேர வேண்டிய இடமும் வந்து விட்டது.அது தான் யவ்வனாவின் வீடு…

திடுதிப்பென்று வந்து நின்ற யவ்வனாவை கண்டு அந்த குடும்பமே இன்ப அதிர்ச்சியில் ஆள சொன்ன சொல் மாறாமல் தங்கள் மகளை கொண்டு வந்து நிறுத்திய தமிழ் அவர்கள் கண்ணுக்கு கடவுளாகவே தெரிந்தான்.

பிரிவு துயராற்றி தேறிவரவே வெகு நேரமானது.அவர்களது பாசப்பிணைப்பை காணும்போது அவன் கண்களும் கலங்கி தான் போனது.

காடு மேடெல்லாம் சுற்றி இறுதியில் தன் கடலை சேர்ந்த நதியாய் தன் வீட்டை சேர்ந்ததும் ஆசுவாசமானாள் யவ்வனா.

சற்று நேரத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்,

“சரி விடுங்க…அதான் வந்துட்டேனே… நான் அப்போவே என்ன சொன்னேன்…உங்க மகளால நாலு பேருக்கு ஆபத்துவரலாமே தவிர என்னை யாராலும் எதுவும் செய்யமுடியாதுன்னு…அதனால என்னை பத்தி கவலை படாமல் வீட்டிற்கு வந்திருக்கவங்கள கவனிங்க…”

என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு, “சாப்பிடுறியா இல்லையாம்மா…ஏன் இப்படி முகமெல்லாம் வத்தி போயிருக்கு…இரு உங்களுக்கு அப்புறம் இருக்கு…”

என்று அன்னையை மிரட்டியபடி கிட்சனில் நுழைந்தவள் தங்கையை,

“ஸ்கூல் இல்லையாடி இன்னைக்கு…வீட்டில் இருக்க…”

விசாரித்து தம்பியிடம்,

“பெரிய மனுஷா நீ தானே அக்காங்கட்ட என்னை போட்டு கொடுத்த…நீயே ஃபோன் பண்ணி நான் வந்திட்டதை சொல்லுஅப்புறம் இந்த செமெஸ்டர் ஆரம்பித்திருக்குமே ஃபீஸ் கட்டிட்டியா…”

என்று படபடப்பாய் பேசிக்கொண்டே இயல்பிற்கு அவள் திரும்பியதோடு தன் வீட்டினரையும் அடுத்ததை சிந்திக்க வைக்க அதனை கூடத்தில் அமர்ந்தபடியே கவனித்த தமிழுக்கு தன்னவள் மீது இன்னும் காதல் பொங்கியது.விளையாட்டு பெண்போல் வலம்வந்தாலும் அவளது மன முதிர்ச்சியையும் அவளது பொறுப்புணர்ச்சியை காண்கையில் பெருமையாக கூட இருந்தது.

காஃபி அருந்தியபடி யவ்வனா தந்தையோடு பேசிக்கொண்டிருந்த தமிழ் சற்று நேர்த்தில்,

“அப்போ நான் கிளம்பறேன் சர்…”

என்று அவன் எழும்பவும்,

“இருங்க தமிழ்…சாப்பிட்டு போகலாம்…ஏன் அதுக்குள்ள கிளம்பறீங்க…”
முருகானந்தம் சொல்ல அவன் கிளம்பறேன் என்று சொல்லவுமே அங்க வந்திருந்த யவ்வனா ‘ஏன் உடனே போறான்…’ என்பதுபோல் முகம் சுணங்க பார்த்தாள்.

“இல்ல சர்…இருக்கட்டும்…கொஞ்சம் வேலை இருக்கு… நான் வரேன்”

என்றவன் யவ்வனாவிடம் ஒரு தலையசைப்போடு விடைப்பெற்று வெளியேர அவன் எதுவும் சொல்லாமல் செல்லவும் அவளுக்கு கண்ணை கரித்துக்கொண்டு வந்தது.

‘வந்த வேலை முடிந்ததுன்ற மாதிரி போய்ட்டால் அவ்வளவு தானா…’

என்று மனம் சிணுங்கியது.வேறென்ன எதிர்ப்பார்க்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.அப்படியே நின்றுவிட்டாள் அவள் யவ்வனா அல்லவே…அப்பாவிடம் சொல்லிவிட்டு வேகமாய் வெளியேவர

அவள் வருவாள்… என்று அறிந்தே காத்திருந்த தமிழ் அவள் வந்ததும் கிளம்புவது போல் பாவ்லா செய்தான்.

“தமிழ்… நில்லுங்க…”

என்று வேகமாய் வர,

“என்னாச்சு யவ்வனா…”

என்றான் அறியாதவன் போல்…

“என்னை விட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் போனால் என்னங்க அர்த்தம்…”

முறைப்போடு கேட்டவளை புரியாததுபோல் பார்த்தவன்,

“என்ன சொல்லணும்…”

என்று சொல்லி அவளை மேலும் கடுப்பாக்கினான்.

“நம்மளை பத்தி கேட்கறேன்…”

என்று பல்லை கடித்தபடி அவள் கேட்டதற்கும்,

“ஏன் நமக்குள்ள என்ன…”

என்று அப்போதும் அப்படியே பேசியவனின் தலையிலே ஒன்று போட துடித்த கையை கட்டுப்படுத்திக் கொண்டு,

“ஒன்னுமே இல்லங்க… நான் தான் ஏதோ லூசு மாதிரி உளரிட்டேன்…நீங்க கிளம்புங்க சாமி…”

என்று காய்ந்தவள் திரும்பி நடக்க அவள் கோபத்தை ரசித்து சிரித்தவன் அவளை நகரவிடாமல் கையை பிடித்து நிறுத்தவும் திடுக்கிட்டாள்.

“என்ன செய்றீங்க தமிழ்…நாம தெருவில் நிற்கிறோம்…”

சுற்றும் முற்றும் பார்த்தபடி கையை உருவ அவனும் புன்னகையோடு உடனே விட்டுவிட்டான்.

“நமக்குள்ள என்னான்னு சொல்லி தான் உனக்கு தெரியனுமாடி…”

கிசுகிசுப்பாய் கேட்டவன் பார்வையில் கரைப்புரண்டோடிய காதலை கண்டு அவளுக்கு தடுமாற அவளை மேலும் சிவக்க வைப்பது போல்,

“அப்படி சொல்லி தான் ஆகணும்னா சொல்றேன்…”

என்று இழுத்தவன்,

“பத்து வருஷத்துல மூணு பிள்ளைங்கன்னு நான் கற்பனைக்கு சொன்னதை நாம ஏன் நிஜமாக்க கூடாது…”

கண்சிமிட்டலோடு சொன்னவனின் குரல் குழைந்துவர வெட்கத்தில சிவந்த முகத்தை மறைக்க முடியாமல் திண்றியவள் உள்ளே போக முனைய,

“பதில் சொல்லிட்டு போம்மா…”

என்று தடுத்தவனையும் மீறி திரும்பி நடந்தவள் பின் சட்டென்று நின்று,

“ஏன் தமிழ்…அதுக்கு உங்களுக்கு பத்தூஊஊ வருஷம் தேவையா…??ரொம்ப ஸ்லோ தமிழ் நீங்க…”

என்று கிண்டலடித்தவள் அவன் பதில் சொல்லுமுன் உள்ளே ஓடிவிட அவள் சொன்ன தோரணையில் தமிழுக்கு தான் வெட்க முறுவல் பூத்தது.

“ஆண்கள் வெக்கபடும் தருணம்

உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்”

2 Likes