கர்கர்டூமா நிதிமன்றம்

கர்கர்டூமா நிதிமன்றம்
0

image

இன்று நாம் பார்க்கப் போவது டெல்லியின் கர்கர்டூமா நிதிமன்றம் பற்றியது.

இந்த நீதி மன்றத்தில் அமானுஷ்ய நிகழ்வுகள் பல நடைபெற்று வருவதாகப் பல நாட்கள் அங்கு பணி புரிவார்கள் சொல்லி வந்தனர். ஆனால் நீதிமன்றத்திற்கு சாட்சியம் முக்கியமாயிற்றே. அதனால் செல்லாது என்று சொல்லி ஊழியர்களின் புகாரை நிராகரித்து வந்தனர் அதிகாரிகள்.
அடுத்தகட்டமாக ஊழியர்கள் அங்கிருந்த சைபர் துறையின் கணினிகள் இரவுகளில் தானாகவே ஆன் ஆவதை காணொளி சாட்சியுடன் சுட்டிக் காட்டினர். அதை வாசகர்களின் பார்வைக்கு கீழே தந்துள்ளோம்.

“இதெல்லாம் ஒரு சாட்சியாக்கும் … என் மச்சான் அமெரிக்காவிலிருந்து என்ர கம்பியுட்டர நோண்டி சாப்ட்வேரப் போட்டுத்தருவானாக்கும். இதைப் போயி ஒரு சாட்சின்னு சொல்லிக்கிட்டு” என்று பாப்பநாயக்கம்பாளையத்திலிருந்து ஒலிக்கும் குரல் எங்கள் காதுகளிலும் விழுந்தது. அவருக்காகவே கீழே இன்னொரு காணொளியும் தந்துள்ளோம்.

இப்படி நீதி மன்றத்தில் இரவு நேரங்களில் வந்து சடுகுடு விளையாடிவிட்டுப் போகும் அந்த சக்தி யார் என்ற வாதம் இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது. வாசகர்கள் படித்துவிட்டு உங்களது தீர்ப்பை கீழே இருக்கும் கமெண்ட்டில் தெரிவித்துவிட்டுப் போகுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

1 Like

2012 la irunthu intha problem iruka…ithai epdi media vitu vetchathu…but anyhow something mystery

1 Like