கவிதையே சொல்லடி

கவிதையே சொல்லடி
0

வணக்கம் சகோக்களே

இது என் முதல் கதை, முதல் கதை முயற்சி. கதைகளின் மீது கொண்ட ஆசையில் நானும் கதை சொல்ல வந்துள்ளேன். இது என் கல்லூரி தோழி ஒருத்தியின் காதல் கதை. பாதி அவள் காதல் கதையும் பாதி என் கற்பனையும் கலந்து கதையாக இங்கு தந்து இருக்கிறேன். சரியோ பிழையோ எது இருப்பினும் விமர்சனம் செய்யுங்கள்.

கதை பற்றி: தன் காதலை சொல்லிவிட்டு காத்து இருக்கும் காதலன். காதல் இருந்தும் அதை சொல்லாத காதலி, இந்த இருவரின் கதை தான் கவிதையே சொல்லடி.

என் கதைக்கும் முயற்சிக்கும் உங்கள் அன்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நன்றிகளுடன்,

  • கௌரி முத்துகிருஷ்ணன்.
3 Likes

பாகம் 1

சிட்னியில் அது பரபரப்பான காலை நேரம், ஜூன் மாதத்தின் முதல் திங்கள் கிழமை ரவி கிளம்பி கொண்டே ஆதியை அழைத்தார்.

“ஆதி இன்னும் கிளம்பல” என்று சொல்லி கொண்டே வந்தார் ஜோதி.

“இன்னுமா கிளம்பாம இருக்கான்? இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, சீக்கிரம் வர சொல்லுமா” என்று சொல்லி கொண்டே கிளம்பினார்.

“ஆதி… ஆதி லேட் பண்ணாம சீக்கிரம் வா… அப்பா கிளம்பியாச்சு உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கார்” என அழைக்க

அதற்கு ஆதி, “இருபது நிமிஷம்மா” என்றான்.

“என்ன இன்னும் இருபது நிமிஷமா? உன் பையனை பொறுமையா வர சொல்லு நான் கிளம்புறேன்” என்று கூறி விட்டு ரவி சென்று விட்டார்.

ஆம் ஆதித்யா நம் கதையின் நாயகன். ஆதி 26 வயது, சிட்னியில் பிறந்து வளர்ந்த தமிழ் பையன். ரவிச்சந்திரன் - ஜோதியின் காதலுக்கு இரு இல்லத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அவர்களை பிரிந்து, நண்பனின் உதவியோடு வெளிநாடு வந்து வேலை செய்து, பின் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்கி இங்கேயே அவர்களின் குடியுரிமையும் பெற்று இருந்தனர். ஆதித்யா இவர்களின் ஒரே மகன்.

ஆதி அறிவும் அன்பும் அழகும் சேர்ந்து செய்த கலவை, கட்டான உடம்பு, இதழ் ஓரம் எப்போதும் இருக்கும் குறும்பு சிரிப்பு, அத்தனை உணர்வுகளையும் காட்டும் கண், தாடி இல்லாத முகத்தில் டிரிம் செய்யப்பட்ட மீசை, வெள்ளாவி வைத்து வெளுத்தது போல வெள்ளை நிறம்…

தன் கட்டுமான தொழிலுக்கு உதவியாய் இருக்க வேண்டும் என ஆசை கொண்டு இருந்த ரவியின் ஆசைக்கு எதிராய் இருந்தது ஆதியின் எண்ணம். ஆம், அவன் வேலைக்கு செல்ல வேண்டும் தனக்கான தனி அடையாளம் வேண்டும் என வேறு கம்பெனிகளில் வேலைக்கு விண்ணப்பிக்க, ரவி அவரது கம்பனியில் ஆதிக்கு புராஜக்ட் மேனேஜர் (project Manager) என்ற பொறுப்பை தர, முதலில் மறுத்தாலும் பின் தந்தையின் நற்பெயரை காப்பாற்ற அந்த வேலையை ஏற்று கொண்டான். ஆதியை பொறுத்த வரை அவனும் கம்பனியில் ஒரு வேலை ஆள் தான். ஆனால் ரவியோ ஒரு நாள் மகன் இதை முழுவதும் அவன் பொறுப்பேற்று கொள்வான் என நம்பி அவனின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அனைத்தையும் ஏற்று கொண்டார்.

ஆதியும் ரவியும் தினமும் ஒன்றாக அலுவலகம் செல்வது வழக்கம், இன்று அவர்கள் நீண்ட நாட்களாக காத்து இருந்த “ட்ரீம் புராஜக்ட்” மீட்டிங். அதற்கு தான் வேகமாக கிளம்பி கொண்டு இருக்கிறான் ஆதி.

அறையை விட்டு வெளியே வந்த அவனை ஜோதி சாப்பிட அழைத்தார், அவன் சாப்பாடு வேண்டாம் எனக் கூறி விட்டு கிளம்பினான். அவன் கம்பெனியின் உள்ளே வரவும், அங்கே
மீட்டிங்க்கிற்காக அனைவரும் அறைக்குள் நுழைந்து கொண்டு இருந்தனர், ஆதி வேகமாக அவன் அறையின் உள்ளே சென்று தேவையான கோப்புகளை எடுத்து கொண்டு இருந்தான்.

"அவன் பின்னே வந்து என்ன டா ஆபீஸுக்கு சீக்கிரம் வந்து இருக்க? " என்று நக்கலாக கேட்டான் ஜெய்.

கேப்டெரியாவில் பேசி ஓய்ந்து அலுவலகத்தின் கடைசி நேரத்தில் இருக்கைக்கு வரும் பழக்கம் உள்ளவர்கள் இந்த மூவரும். அதனால் பல முறை ஆதி, குரு, ஜெய்க்கும் ரவி பாடம் எடுப்பது போல் பல அறிவுரைகள் சொல்லி இருக்கிறார். எனவே தான் ஜெய் இப்படி கேட்டுக்கொண்டு இருக்கிறான்.

ஆதி: “எல்லாம் என் நேரம் டா, இன்னிக்கு நீ என்ன கிண்டல் பண்ற… சார் எப்போ வந்தீங்க?”

ஜெய்: “நாங்க சீக்கிரமா வந்துட்டோம், நீ இன்னிக்கு சீக்கிரம் வர மாட்டனு நினைச்சேன், ஆன கிரேட் எஸ்கேப் டா,”

குரு: “என்ன நாங்க ஆசையா எதிர் பார்த்த மாதிரி சீன் எல்லாம் இன்னிக்கு நடக்கபோறது இல்ல அதான் சோகமா இருக்கு”

அதி : "என்ன சீன் "

குரு: சிரித்துக்கொண்டே " உனக்கு உங்க அப்பாக்கிட்ட கிளாஸ் இருக்கும் நினைச்சோம்"

அவனின் பதிலை கேட்டு ஆதி,

ஆதி : ! சூப்பர் சூப்பர் என்ன பாசம் என்மேல உனக்கு என்று கூறி விட்டு ஆதி குருவின் முதுகில் ஒரு அடி வைத்தான்.

யாரு இவங்க சொல்ல தேவையே இல்ல… கடவுள் ஒருத்தன் உருப்பட கூடாதுன்னு நம்ம எல்லாருக்கும் ஸ்பெஷலா டிசைன் பண்ணி அனுப்பி வைத்த பிறவிகள், நட்பு. நாமளும் உருப்பட மாட்டோம் அவனையும் உருப்பட விடுவோமா?? ஜெய், குரு ஆதியோட நட்புகள். ஸ்கூல் இருந்து ஆபீஸ் வர விடாது கருப்பு போல கூடவே இருக்கும் நண்பன் குரு.

(குருவின் தந்தை கிருஷ்ணனும், ஆதியின் தந்தை ரவியும் கல்லூரி நண்பர்கள், கிருஷ்ணனின் உதவியில் தான் ரவி வெளிநாடு வந்து வேலை செய்ததும், பின் இங்கு தொழில் தொடங்கியதும்.)

குரு மும்பை மண்ணுக்கும் (அப்பா) தமிழ் மண்ணுக்கும் (அம்மா) சொந்தக்காரன் குருவோட அம்மா (கீதா) டாக்டர், குருவின் தந்தையான கிருஷ்ணன் ஒரு விபத்தில் இறந்து விட, தனியாக விடப்பட்ட நண்பனின் குடும்பத்தை கவனித்து கொள்ள முடிவு செய்து இருவரையும் ஆஸ்திரேலியா அழைத்து வந்து விட்டார், சம வயது பிள்ளைகளான குருவும் ஆதியும் நண்பர்கள் ஆகி விட, கீதாவுக்கு சிட்னியில் டாக்டர் வேலையும் அமைய அவரை பக்கத்து வீட்டிலேயே தாங்க வைத்து கொண்டார்கள் ரவியும் ஜோதியும், ஜோதியும் கீதாவும் உயிர் தோழிகள் ஆக, ஜோதியின் இன்னொரு மகனாக குரு அவர்கள் வீட்டில் வளர்ந்தான். இன்றும் அந்த நட்பும் பாசமும் மாறாது இருக்க, குருவே ஆதியின் உயிர் நண்பன் ஆனான்.

ஜெய், இவர்களோடு எட்டு மாதமாக நட்பு வட்டத்திற்குள் இருக்கிறான். ஜெய்யும் தமிழ் பையன் தான், அதனின் ஈர்ப்பு தான் போல ஆறு மாதத்திற்குள் முவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி இருந்தனர். த்ரீ இடியட்ஸ்

குருவை ஆதி அடிப்பதை கண்ட ஜெய் அடுத்து தனக்கு தான் அந்த அடி என உணர்ந்து, “அப்புறம் வந்து விளையாடலாம், இப்போ மீட்டிங் போவோம்” என்று கூறி சிரித்து விட்டு ஜெய் தப்பிக்க,

“உனக்கு மீட்டிங் முடிஞ்சு இருக்கு டா” என்றான் ஆதி, பேசி கொண்டே அவர்கள் அறைக்குள் சென்றனர்.

அதன் முன்பே அந்த மீட்டிங் அறையில் சிலர் உள்ளே இருந்தனர். சிரித்த முகத்துடன் உள்ளே வந்த ஆதியின் முகம் இப்போது சுருங்கியது. அதைப் பார்த்த ஜெய் “வந்துருவா டா, உக்காரு” என்றான்… அனைவரும் வர, மீட்டிங்க்கான நேரம் நெருங்க ஆதி அறை கதவை பார்த்து தவிப்போடு காத்து கொண்டு இருந்தான். ஆம் ! உங்கள் யூகம் சரியே நம் கதையின் நாயகி, அவனின் காதலிக்காக தான் காத்துகொண்டு இருக்கிறான்.

ஷிவானி, கோவை மண்ணுக்கு சொந்தக்காரி, அவளின் துறு துறு கண்களும், சிரிப்பும் அவளின் தனி அழகு, புத்திசாலி, வாயாடி, அலங்காரம் இல்லாத பேரழகி, அலங்காரம் செய்தால்? நீங்கள் அவளை திரும்பி பார்த்து ரசிப்பதை உங்களால் தடுக்க இயலாது. ஷிவானி, ஆதியின் நிறுவனத்தில் உள்துறை வடிவமைப்பாளர் (இன்டீரியர் டிசைனர்) ஜெய் உடன் வேலையில் சேர்ந்தவள். அவளை கண்ட நொடியே ஆதி காதலில் விழ அதை அவளிடமும் கூறி விட்டு அவளின் பதிலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறான்.

ஷிவானி வேகமாக உள்ளே வந்தாள், வந்தவள் அவளின் நீண்ட பெருமூச்சையும் , அவள் வசம் பிடித்து வைத்து இருந்த ஆதியின் உயிரையும் விட்டாள். பழைய சிரிப்பு ஆதியின் முகத்தில் அப்ளை ஆனது… குரு பல்பு எரியுது என்று ஜெய்யிடம் கூறி கிண்டல் செய்து கொண்டு இருந்தான்… ஷிவானி ஆதி அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லி அவள் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்.

ரவி, எட்வர்டு, மற்றும் பிராஜக்டின் உரிமையாளர் என பெரும் குழுவுடன் உடன் உள்ளே வர அறிமுகத்திற்கு பின் மீட்டிங் ஆரம்பம் ஆனது. இது கம்பனியின் கனவு புராஜக்ட். ஆம், இது ஆஸ்திரேலியாவின் முதல் கேசினோ, பல கோடி ரூபாய் செலவில், மிக பிரம்மாண்டமாக வர போகும் பெரிய உயர்ரக கேசினோ, ஆஸ்திரேலியாவின் முதல் கேசினோ இது தான், அதை வடிவமைத்து கொடுத்து கட்டிய பெருமை ரவியின் நிறுவனமான AGA வை வந்து சேரும். இதற்காக தான் நான்கு மாதமாக ஆதியும் அவனது குழுவும் திட்ட வரைபடம் வரைந்து உள்ளனர்.

பல தடைகளுக்கு பிறகு எட்வர்டின் பெறும் முயற்சியும், ஆதியின் புராஜக்ட் டிசைன்னும் ஒருசேர உதவி இப்போது தான் அவர்களுது வடிவமைப்பை பற்றி காண வந்து உள்ளனர். அதற்கான கலந்தாய்வு என்பதால் அனைவருக்கும் நேரம் போனது தெரியாத அளவுக்கு அந்த சந்திப்பு நடை பெற்றது. ஆதியின் வடிவமைப்பு பிடித்து இருப்பதாகவும், இன்னும் இரு தினங்களில் இதன் முடிவை கூறுவதாகவும் நிர்வாகிகள் கூறி சென்றனர்.

:purple_heart:

2 Likes

பாகம் 2

அந்த மீட்டிங் முடியவும் மதிய உணவுக்கான நேரம் ஆனது. ரவி வந்து இருந்த குழு நிர்வாகிகள் உடன் உணவு உண்ண செல்ல, ஆதி அவன் நட்புகளோடு உணவு உண்ண வந்தான். அங்கே ஷிவானியும் அவளது ஆபீஸ் தோழியும், உயிர் தோழியும் ஆகிவிட்ட ரியாவுடன் உணவு உண்டு கொண்டு இருந்தாள். ஆதி ஷிவானியையும் சேர்த்து கண்களால் அருந்தி கொண்டு இருந்தான். அதை கண்ட ஜெய்,

ஜெய் : “தினம் இப்படி எங்க கூட உட்காந்து என் தங்கச்சி பார்த்துட்டே சாப்பிடறத்துக்கு நீ பேசாம அவ கூடவே சாப்பிடு மச்சான் நாங்க ஃபீல் பண்ண மாட்டோம்” என்று கொஞ்சம் கடுப்பாக,

குரு : “நான் லவ் பிர்டு டா, நட்புக்காக என் ரியா செல்லதை தனியா விட்டு உங்களோட சேர்ந்து சாப்பிட்டு இருக்கேன் இவன் மட்டும் கண்ணுலயே காதல் பண்ணிட்டு இருக்கான்”

ஜெய் : “அப்போ நீ தினம் கார் பார்க்கிங் ல ஷிவாவை காவலுக்கு வெச்சுட்டு என்ன பண்ற?”

குரு: "டேய், என்ன டா? இப்படி அசிங்கமா சொல்ற? ரீடர்ஸ் என்ன தப்பா நினைக்க மாட்டங்க? நாங்க லவ்வர்ஸ் டா, அதும் ரெண்டு வீட்டுளையும் தெரியும். நாங்க காதல் பறவைகள் டா, நான் காதல் வளர்க்குறேன், என் தங்கச்சி எனக்கு ஹெல்ப் பண்ற, உன் நண்பனை இப்படி பேசலாமா டா நீ? "

ஜெய்: “இப்போ இதுவா பிரச்சனை? நம்ம உயிர் போக பக்கத்துல கத்திக்கிட்டு இருக்கோம், இவனுக்கு காது கேக்குகுதா? இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியணும். அப்புறம் மச்சான், நான் இதை சும்மா விட மாட்டேன், உனக்கு நீதி வாங்கி தரேன்”

குரு : “என்னது? நீதியா? எதுக்கு?”

ஜெய் : “என் தங்கச்சி ரியா கூட சாப்பிட முடியல ஃபீல் பண்ணில? அதுக்கு தான்.”

குரு : “வாங்கு மச்சி பிளீஸ், நான் அவனோட சேர்த்து உன் தொல்லையும் இல்லாம சாப்பிடுவேன்.”

ஜெய் : “என்ன சொன்ன? உன்ன அப்புறம் பேசிக்கிறேன்.”

ஆதி இன்னுமும் ஷிவாவை பார்த்து கொண்டு இருந்தான். ஜெய் அவனை அழைக்க ஆதியின் கவனம் இவர்களிடம் வந்தது என்ன என்பது போல் பார்த்தான்.

ஜெய்: "நான் என்ன சொன்னேன்? இங்க என்ன நடந்துச்சு எதுமே உனக்கு கேட்கவே இல்லையா? "

அவனை பார்த்து சிரித்த ஆதி, “ஆமா சரி தான் நீ சொல்றதும்” என எழுந்து ஷிவானியின் டேபிளை நோக்கிச் சென்றான் அதை பார்த்து அதிர்ந்து போய் ஜெய் இருக்க, குரு அவனை முறைத்த படி அமர்ந்து இருந்தான்.

குரு : எனக்கு நீதி வாங்கி தராத சொல்லிட்டு அவனுக்கு ஐடியா குடுத்து அனுப்பி இருக்க என்ன ஆக போகுதோ ?

ஜெய்யும் குருவும் நடப்பதை கவனித்தனர்.

ஷிவாவும் ரியாவும் பேசி சிரித்து கொண்டு இருந்தனர், ஆதி அவர்களை நெருங்கி வருவதை கவனித்த ஷிவானி தான் கைப்பேசி எடுத்து எதோ பார்ப்பது போல் இருக்க, அவர்கள் அருகில் சென்ற ஆதி,

ஆதி: "ரியா நானும் உங்களோட சாப்பிட வரலாமா?

ரியா: “கண்டிப்பா அண்ணா, இது என்ன கேள்வி? நீங்க என் அண்ணா, என் டீம் லீட் உங்களுக்கு இல்லாத உரிமையா?”

ஆதி அமர்ந்து கொண்டான்.

ரியா : “என்ன சாப்பாடு? ஷேர் பண்ணுங்க”

ஆதி : " இன்னிக்கு நம்ம கேப்டெரிய (cafeteria)"

ரியா: “அப்போ என்னோட சாப்பாடு எடுத்துக்கோங்க அண்ணா, பருப்பு சாதம் உருளை கிழங்கு வறுவல்” என கூறி ஆதிக்கு எடுத்து கொடுத்தாள்.

அதை சாப்பிட்டு விட்டு ஆதி,

ஆதி: இமை தூக்கி உண்மையா குரு லக்கி மா, அருமையா இருக்கு"

ரியா: “நான் சமைக்கல அண்ணா, இன்னிக்கு ஷிவா டர்ன், அவளோட சமையல்”

ஆதி ஷிவானியின் பக்கம் பார்க்க தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அவள் அவளது கைப்பேசியை வைத்து பார்த்து கொண்டு இருந்தாள்.

அவள் உணவு உண்ணாமல் இருப்பது புரிய, ஆதி “ஷிவானி” என்று அழைத்தான், உடனே,

ஷிவா : “சொல்லுங்க சார்” என்று அவள் ஆதியை பார்க்க,

ஆதி: "மூணு மணிக்கு நம்ம டீம் புராஜக்ட் மீட்டிங், உங்க ரெண்டு பேருக்கும் சொல்லத்தான் வந்தேன். அப்புறம் சில டிசைன்ஸ் போட சொல்லி இருந்தேன், அதெல்லாம் ரெடியா? "

ஷிவா: “ரெடி சார், நேத்து சாயந்தரமே அதை உங்க ரூம்ல சப்மிட் பண்ணிட்டேன். நீங்க பார்த்து உங்களோட ஐடியாஸ் சொல்லுங்க சார்”

ஆதி: " ஓ! சரி நான் காலைல மீட்டிங் அவசரத்துல அதை பார்க்கல, பார்த்த அப்புறம் சொல்றேன். சாரி, டிஸ்ட்ரப் பண்ணிட்டேன். சாப்பிடுங்க , பை ஷிவா, பை ரியா" என்று எழுந்து குரு, ஜெய் இருந்த டேபிள்க்கு போனான்.

ஆதி திரும்பி பார்த்தான், ஷிவானி சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.

ஷிவானி ஆதியை பார்த்தாள். குரு, ஜெய் உடன் சிரித்து பேசி கொண்டு இருந்தான். அவனின் குறும்பு சிரிப்பை பார்த்து மென்னகை இவள் இதழ்களில்.

நேரம் மூன்று ஆனது, மீண்டும் கலந்தாய்வுக்கு அனைவரும் வந்தமர்ந்து இருந்தனர். நம்ம த்ரீ இடியட்ஸ் பேசி கொண்டே அறையின் உள்ளே வர எதிரில் வந்த எட்வர்டை கவனிக்காத ஜெய் அவர் மீது மோதி விட, ஜெய்யின் மன்னிப்பை கூட சரியாக கேட்காமல், ஆதியின் மீது அனல் பார்வை ஒன்றை வீசி சென்றார்.

குரு :“சுடுதண்ணி ஏன் இப்போ இப்படி பார்த்துட்டு போகுது?”

ஆதி: “நீ சாரி சொன்னதை கவனிக்காம பார்த்து இருப்பாரு”

ஜெய்: “இன்னிக்கு என்ன பிரச்சனையா கிளப்பா போராரோ யாருக்கு தெரியும்? வாங்க உள்ள போய் பார்ப்போம்.”

ஜெய் முன்னே போக இருவரும் பின் தொடர்ந்தனர்.

எட்வர்டு பணியில் சேர்ந்த பின் AGA’வில் நல்ல வளர்ச்சி என்றே சொல்லலாம், அவரின் உழைப்பு கம்பனியின் வளர்ச்சியில் பெறும் பங்கு வகித்தது, ஆதி வரும் வரை. எட்வர்டு தலைமையில் ஒரு குழு இயங்கி வந்தது, திறம்பட அனைவரையும் வைத்து மிக துரிதமாக வேலைகளை வாங்கி வந்தார் எட்வர்டு, ஆதி பொறுப்பு ஏற்ற பின் ரவியின் ஆசைப்படி கம்பெனி விரிவாக்கம் செய்ய புதிய குழு ஒன்றை உருவாக்கினர். அதில் வேலைக்கு வந்தவர்கள் தான் ரியா, ஷிவா, ஜெய், ஆதி, குரு, மற்றும் இன்னும் சிலர். ஆதிக்கு அதன் குழு தலைமையை கொடுத்தார் ரவி, கிடைத்த வாய்ப்பை ஆதி ஏற்று வழி நடத்த நிறுவனம் இரு வேறு புராஜக்ட் ஒரே நேரத்தில் செய்யும் வாய்ப்பு அமைந்தது.

ஆதியின் ஒரு புராஜக்ட் நிறுவனத்தின் லாபத்தை இது வரை இல்லாத அளவுக்கு பெற செய்து விட, எட்வர்டின் புகழ் இறங்கி, ஆதியின் புகழ் கொடி பறக்க அதுவே எட்வர்டு, ஆதியின் மீது வன்மம் வளர்த்து கொள்ள வைத்துவிட்டது. அவனின் மீது குறை கூறுவதும், அவனின் குழுவில் உள்ள அனைவரையும் மட்டம் தட்டுவதே அவரின் வேலை ஆனது. எட்வர்டு குழு சீனியர் டீம் ஆக, ஆதியின் குழு ஜூனியர் டீம் ஆனது, எப்போதும் இரு குழுக்களுக்கும் முகசுளிப்புகளும், சின்ன சின்ன சண்டைகளும் கூட உண்டு. ஆனால் வேலை என்று வந்து விட்டால் இரு குழுவும் குழுவின் நற்பெயருக்காவே வேலையை திறமையாக செய்தனர்.

எட்வர்டு நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் (Product Manager) அவர் தலைமையில் தான் புராஜக்ட் ஒன்று உள்ளே வருவது சாத்தியம், அவரின்றி இப்போது வந்த கேசினோ வாய்ப்பும் வந்து இருக்காது, ஆறு மாதமாக கேசினோ உரிமையாளர் உடன் பேசி அவரிடம் இந்த வாய்ப்பை வாங்கியது எட்வர்டு, ஆனால் அதன் வடிவமைப்பு சென்றது ஆதியிடம்.

அவனின் திட்ட வடிவமைப்பு கண்டு எட்வர்டு பேச இயலாது போனார். ஆதியின் திறமை கண்டு வாய் அடைத்தும் போனார். அவன் அவனின் குழுவோடு கலந்து பேசி, அந்த கேசினோவின் திட்டவடிவமைப்பை பிரமாண்டமாக வரைந்து இருந்தான். ஆதி வரைவது கண்டிப்பாக தான் வடிவமைப்பு போல இருக்காது அதை நிராகரிக்க வேண்டும், தன் குழுவின் வடிவமைப்பு தான் இடம் பெற வேண்டும் என்று எல்லாம் என்று எண்ணி கொண்டு இருந்த எட்வர்டின் ஏமாற்றம் மிக பெரிது.

ஆனால் ஆதிக்கு, எட்வர்டு என்றால் நிறைய மரியாதை உண்டு. அவரை அவனின் ஆசிரியர் போல பார்த்தான். வேலைகளில் தனது ரோல் மாடல் இவர் தான் என எண்ணி கொண்டவன்.

தெரிந்து கொள்க :
கேசினோ பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்கை பார்க்கவும் .

https://en.m.wikipedia.org/wiki/Casino

ஆதியின் வரைப்படம் அனைவரையும் வியக்க வைத்தது, இது வரை இருந்த கேசினோ அமைப்புகள் அனைத்தும் விடுத்து, இது தனித்துவமாக தெரிந்தது. சூரியக்கதிர் மூலம் மின்சாரம், கேசினோவின் வெளிப்புறத்தில் பூங்கா என பசுமை கொஞ்சியது. கேசினோ பாதுகாப்பு என அனைத்தும் புதுமை புகுத்த திட்ட வரைபடம் AGA நிறுவனத்தின் பெயரையும், ஆஸ்திரேலியா சுற்றுலா இடங்களில் ஒன்றாக போவதும், இதன் வருவாய் நாட்டின் பொருளாதாரத்தில் பங்கு வகிக்க போகிறது என்பதால் அதற்கான நேர்த்தியும்,பார்க்க பிராமாண்டமானதாகவும் அந்த வரைபடம் இருக்க அதில் குறை சொல்ல முடியாத எட்வர்டு, கம்பனிக்கு நற்பெயர் தன்னால் தான் வரபோகிறது என்ற பெருமையில் இருக்கிறார்.

ஆனால் இதன் சம பங்கு ஆதியை சேர்ந்தது. இதுவரை இவர்கள் இந்த கேசினோவிர்க்கு பார்த்த எந்த திட்ட வரைபடம் இந்த அளவு பெரிதும் இல்லை, சிறுப்பும் இல்லை. இது ரவி, எட்வர்டு என இருவரும் அறிந்ததே, இன்னும் இரு தினங்களில் இந்த புராஜக்ட் அவர்களையே சேரும் என்பதில் பெரிய ஐய்யமும் இல்லை.இது AGA நிறுவனமே அறிந்ததே, இதன் முக்கியத்துவம் பற்றி பேசவே இந்த கலந்தாய்வு இப்பொழுது, இன்னும் இரு தினங்களில் இதன் முடிவு தெரிந்து விடும். அந்த முடிவு சாதகமாக வந்தாலும் வராவிடினும் ஆதியை கலங்க செய்யும் திட்டத்தோடு எட்வர்டு காத்து இருந்தார்.

" சுடுதண்ணி என்ன பண்ண போகுதோ" - மீ

:purple_heart:

2 Likes

பாகம் 3

அடுத்து வந்த இரு நாட்களும், முடிவை அறிய பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டாம் நாள் மாலையில் ரவியின் அவசர கலந்தாய்வு அழைப்பு அனைவருக்கும் பாதி தவிப்பையும், மீதி எதோ சந்தோசத்தையும் எதிர் நோக்கி இருந்தது. ரவி அறையின் உள்ளே வந்தார். அனைவரும் அவர் கூற போகும் செய்திக்காக அவர் முகம் பார்த்து காத்து இருந்தனர்.

ஆம்.!! ஆஸ்திரேலியா மண்ணின் பெருமை பேச போகும் அந்த கட்டிடம் ஆதியின் திட்ட வரை படம் தான். எவருக்கும் எளிதில் கிடைக்காத வாய்ப்பு இவர்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது.

அந்த புராஜக்ட் அதன் முழு பொறுப்புகளும் அவர்களுக்கு கையெழுத்தானது. ஆஸ்திரேலியா செய்தி சேனல் அந்த செய்தியை பெருமையாய் கூறி கொண்டது. AGA நிறுவனத்தின் பெயர் வலைதளத்தில்
மணிக்கு ஒரு முறை அதிக டிரெண்டிங் ஆகியது.

செய்தி அறிந்தவுடன் எட்வர்டு, ஆதியை மிக பாராட்டி பேசினார். ரவியோ எட்வர்டின் இந்த முயற்சிக்கு பாராட்டும், நன்றியும் கூறினார். ஆதிக்கு அத்தனை மகிழ்ச்சி, எட்வர்டுக்கு நன்றியை கூறினான், தனது ரோல் மாடல் எட்வர்டு தான் என கூறி ஆனந்தம் கொண்டான்.

சிறிய அமைதி பின் எட்வர்டு எழுந்து ரவியிடம் ஒரு கேள்வி கேட்ட, ஆதியின் முகத்தில் எட்வர்டு எதிர் பார்த்த கலக்கம் தெரிந்தது, அவரின் கேள்வி அனைவரையும் மீண்டும் ரவியின் பதிலை ஆவலோடு
எதிர்பார்க்க வைத்தது.

ஜெய்:“இந்த மனுஷனுக்கு மட்டும் எப்படி டா இப்படி எல்லாம் தோணுது?”

குரு:“சரியான டென்ஷன் இவரோட”

எட்வர்டு கேட்ட கேள்வி : “இந்த புராஜக்ட் நாம் நிறுவனம் வந்ததில் அனைவரை போல் எனக்கும் மகிழ்ச்சியே, ஆனால் இதை வழிநடத்த போவது யார்? எந்த குழுவிற்கு இதன் வாய்ப்பு? அதையும் நீங்களே சொல்லி விடுங்கள் என கேட்க, ஆதி கலக்கம் கொண்டான், அவனோடு அவன் குழுவும் கலங்க ரவியின் முகம் சுருங்கியது.”

இந்த புராஜக்ட் எட்வர்டு குழுவிற்கு சென்றால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கவலை கொண்டான் ஆதி. திட்ட வரைபடம் வரைந்தும் வாய்ப்பு தங்களுக்கு வராதோ என சிறு அச்சம். ஆனால் மறுபக்கம் எட்வர்டின் மீது ஆதி வைத்துள்ள மரியாதை, அவரின் திறமை, அவர் இது வரை நிறுவனத்திற்கு செய்து உள்ள அனைத்தும் நினைக்க தன்னை விட இதற்கு எட்வர்டு சிறந்தவர் என ஆதி நினைத்தான், அவனின் தொழில் முறை ஆசிரியர் அவர்தானே அவனுக்கு நம்பிக்கை போகுமா? எட்வர்டின் முயற்சி இன்றி இந்த வாய்ப்பு கூட தனக்கு கிடைத்து இருக்காதே என எண்ணிய ஆதி ரவியின் முடிவுக்கு காத்து இருந்தான் அனைவருடனும்…

பத்து நிமிட அமைதிக்கு பின் ரவி முடிவு சொல்லி வெளியில் எழுந்து செல்ல, எட்வர்டு செய்வது அறியாது கோவத்தொடு வெளியில் செல்லவும், அவரின் குழுவும் வெளியில் சென்றது.

ஆதியின் குழுவுக்கு நிறைய மகிழ்ச்சி, குருவும், ஜெய்யும் ஆதியை கட்டிடத்தழுவி வாழ்த்து சொன்னார்கள், பார்டி வேண்டும் என்று கேட்டு கொண்டனர். ஆதிக்கு வாழ்த்துக்கள் நிறைய வந்தது. அனைத்து ஆஸ்திரேலியா பத்திரிக்கையின் தலைப்பு செய்தி ஆனது.

ரியா : “அண்ணா சூப்பர், அந்த சிடுமூஞ்சி அறிவு மாறி அப்பாகிட்ட கேள்வி கேட்டு நோஸ் கட் வாங்கி நின்னாரு, செம்மா டுவிஸ்ட் இல்லையா அண்ணா? புராஜக்ட் நம்ம ஜூனியர் டீம்க்கு வராது கொஞ்சம் நேரம் பயமே வந்துருச்சு, சீனியர் டீம்க்கு சொல்லி இருந்தா அப்செட் ஆகி இருக்கும், ஆன அப்பா சூப்பரா சொன்னாரு, நான் ஹேப்பி அண்ணா.”

ஆனால் இங்கே ஆதியோ, ரியாவிற்குகாக காத்து இருந்த ஷிவானியை பார்த்து அவனையே மறந்து நின்று கொண்டு இருந்தான். (ரியாக்கு பல்ப் )

அதை கவனித்த ஜெய், ரியாவிடம்"அங்கே பார்" என சொல்ல, அதை பார்த்த ரியா,"அப்போ இவளோ நேரம் நான் பேசுனது வேஸ்ட்"என்று கூற, ஜெய் வாய் விட்டு சிரித்தான்.

இதை எல்லாம் பார்த்த குரு ரியாவிடம் “வாடி போலாம் நின்னா நம்ம எல்லாரையும் கிறுக்கு ஆக்கி விட்டுருவன்” என கூறி ரியாவை அழைத்து சென்றான்.

ஜெய், ஆதி இங்க பாரு என உலுக்க, கவனம் வந்த ஆதி ஜெய்யை பார்த்து அசட்டு சிரிப்பு சிரிக்க, ஜெய் செல்லமாக அடித்தான். இருவரும் சிரித்து கொண்டு விடைபெற ஜெய் கிளம்பினான். ஆதி ஜெய்யிடம் விடை பெற்று விட்டு அவனுடைய அப்பாவை பார்க்க சென்றான்.

ஆதி : "அப்பா நேரம் ஆச்சு, அம்மா தனியா இருப்பாங்க, அப்புறம் லவ்வர்ஸ்குள்ள சண்டை வந்தா நான் பொறுப்பு இல்ல "

ரவி: “வாய் அதிகம் ஆயிருச்சு உனக்கு, எல்லாம் உங்க அம்மா தர செல்லம் தான்.”

ஆதி: “அப்பா இது வீடு இல்ல ஆபீஸ், வாங்க வீட்டுக்கு போய் திட்டலாம்” என சொல்லிவிட்டு முன்னே சென்று கார் எடுத்தான்.

அப்போது பார்க்கிங்கில் ஷிவானி நின்று கொண்டு இருந்தாள். அதை பார்த்து

ரவி: “என்ன ஷிவானி இங்கே நின்னுட்டு இருக்க? ரியா கூடத்தான போவே? ரியா எங்க?”

ஷிவா: “சார், ரியா குருவோட பேசிட்டு இருக்க, அதான் அவங்களுக்கு தனிமை தந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”

ரவி சிரித்துவிட்டு "சரிமா பார்த்து பத்திரமா கிளம்புங்க "என்று கூறி விட்டு காரினில் ஏறினார். ஆதி அதற்குள் குருவுடன் பேசி அவர்களையும் கிளம்ப செய்து இருந்தான்.

காரில் அமர்ந்த பின் ஆதி,ரவியிடம் “ஏன் அப்பா இப்படி பண்ணிங்க? எட்வர்டு சார் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு வந்தா புராஜக்ட் அவரையே லீட் பண்ண சொல்லி இருக்கலாம். இன்னிக்கி உங்க முடிவு எனக்கே புரியல்லா, எதோ யோசிச்சு முடிவு பண்ணி இருக்கீங்க, ஆனா என்ன முடிவு?”

பெரிதாக சிரித்தார் ரவி, ஆதி புரியாமல் பார்க்க,

ரவி : “டேய், நான் உன் அப்பா, இந்த கம்பனி எதிர் காலம் உன் கையில் இருக்கு, பிளான் அவ்ளோ அருமை, என் பையன் போட்டு இருக்கான் எவ்ளோ பெருமை தெரியுமா? நாலு மாசம் எவ்ளோ உழைப்பு கொட்டி இருக்க எனக்கு தெரியாத? எட்வர்டு அவன் கடமையா செய்து இருக்கான், அவனும் திறமையான ஆளு தான். அவனோட திறமைக்கு தான் சம்பளம் அதிகம் பண்ணி இருக்கேன்.”

“அவனுக்கு ஆபீஸில் சில சலுகைகள் கூட செய்து கொடுத்து இருக்கேன். ஆனா இப்போ எடுத்த முடிவு கம்பனிக்காக, ஆமா ஆதி எவ்ளோ நாள் ரெண்டு டீம் இப்படி சண்டை போட்டுகிட்டு இருக்க போரிங்க? எப்படியும் ஒரு நாள் இதோட மொத்த பொறுப்பும் உன் கையுல தான் வர போது, அப்போ?? இப்படியே முகம் பார்க்காம, ஒரு ஒற்றுமை இல்லாம கம்பனி நடத்துவியா? கம்பனி என்ன ஆகும்? இந்த புராஜக்ட் தனியா ஒரு டீம்லாம் செய்ய முடியாது, எட்வர்டு அவன் டீம் செய்தாலும் சரி உங்க உதவி வேணும், நீ தனியா செய்தாலும் உனக்கு அனுபவம் உள்ள ஒருத்தர் வழிகாட்டுதல் வேணும். நீ தான் இந்த கம்பெனியோட எதிர்காலம். உனக்கு நான் இந்த லீட் பொறுப்பை கொடுத்ததே நீ பிசினஸ் என்னனு தெரிஞ்சுக்கணும் தான், உனக்கு இன்னும் பொறுப்புகள் வர, இனிமேலும் எதும் தெரியாம நீ இருக்க கூடாது, உன்னை எல்லாரும் இந்த கம்பனியில் மரியாதையா பாக்கணும்.”

“நாளைக்கு எட்வர்டு உன்னை தன் சிஇஓ பார்க்கணும், இந்த வெறுப்பு அவனுக்கும் நல்லது இல்ல, அவனும் திறமையான பையன் எவ்ளோ செய்து இருக்கான் கம்பனிக்கு, அவனையும் என்னால் விட்டு தர முடியாது, எனக்கு இந்த புராஜக்ட் நடக்கணும், அதோட இந்த கம்பனியில் ஒற்றுமை வரணும். சோ, ஒரு புராஜக்ட் ரெண்டு கோல். இந்த புராஜக்ட் முடியும் போது நீயும் எட்வர்டு ப்ரெண்ட்ஸ் ஆகி இருப்பீங்க, ஏன்னா எட்வர்டு அடிப்படையில ரொம்ப நல்லவன், எதோ உன்மேல சின்ன கோவம். அது சரி ஆகிரும். அப்புறம் உன் புதுமையோட எட்வர்டு அனுபவம் சேர்ந்து இந்த புராஜக்ட் புது மாதிரி வரணும். எனக்கு தெரியும் நீ அதை செய்வேன்னு அதான் இப்படி ஒரு முடிவு.”

“ரவியின் பதில் கேட்டு ஆதியின் முகத்தில், தந்தை தன் மீது கொண்ட நம்பிக்கையை பார்த்து ஒரு பெருமிதம் பொங்கியது.”

( ரவி கூறிய முடிவு இது தான், இந்த புராஜக்ட் சீனியர் மற்றும் ஜூனியர் குழுக்கள் இணைந்து செய்ய போவதாகவும், அதான் தலைமை பொறுப்பு ஆதியும் எட்வர்டும் தான், இறுதி கட்ட முடிவு எடுக்கும் உரிமை ஆதிக்கு என்றும் கூற மறுத்து பேச முடியாது சரியான முடிவு என கூறி எட்வர்டு வெளியேறினார். )

“அப்புறம் வேறு எதும் கேட்கனுமா?” என்று ரவி கேட்க, ஆதி எதும் கேட்க இல்லை சொல்ல இருக்கு என்று மதியம் உணவு உண்ணும் போது நடந்த நிகழ்வுகளை சொல்லி கொண்டு வந்தான். அதை கேட்க கேட்க ரவியின் முகம் வருத்தத்தில் சுருங்கியது. அதற்குள் ரவியும் ஆதியும் வீடு வந்து சேர்ந்தனர்.

:purple_heart:

2 Likes

பாகம் 4

ஜோதி கோவமாக காத்து கொண்டு இருந்தார், வீட்டிற்குள் சென்ற ரவியும் ஆதியும் ஒருவரை ஒருவர் கேள்வியாய் பார்த்துக்கொண்டனர்.

ஆதி: “அம்மா பசிக்குது”

ஜோதி : " உங்க ரெண்டு பேருக்கும் சோறு ஆக்கி போட நான் ஒன்னும் கூக்கர் இல்ல, ஆபீஸ் மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா? தனியா ஒருத்தி வீட்டுல இருக்கா, சீக்கிரம் போவோம், நமக்காக வெயிட் பண்ணுவா எதாவது அக்கறை இருக்க?" என்று பொறித்து எடுத்தார்.

ஆதி (சரண்டர் ) "அம்மா சரியா சொன்னீங்க, அப்பா ஆபீஸே போதும்னு இருக்கார், நான் தான் வம்பு பண்ணி கூட்டிட்டு வந்தேன், நானும் ஆவரலே லேட், பசிக்குது மா, சாப்பாடு வை மா, " என்று பாவமாக கூறினான்.

ரவி: “மை சன், இப்படியா அப்பாவா கோர்த்து விடுறது?”

ஆதி சிரிக்க, ஜோதி முறைத்து கொண்டே,

ஜோதி : “அப்படியே ஆபீசலையே விட்டு வந்துரு ஆதி, அவருக்கு ஆபீஸ் போதும். நம்ம எல்லாம் எதுக்கு?”

ரவி: " போதும் போதும், அக்கறை இல்லாம தான் டின்னர் போலாம் சொன்னேனா? எவ்ளோ நாள் கனவு நினைவு ஆகி இருக்கு? நான் ஆபீஸ்லையே இருக்கேன் யாருக்காக? சும்மா என்னையே திட்டமா, உன் பையான ஆபீஸ் பிஸ்னஸ் எல்லாத்தையும் பொறுப்பு எடுத்துக்க சொல்லு, நான் வீட்டுல உன் கூடவே இருக்கேன். "

ஆதி: “என்ன டின்னரா? இது எப்போ?”

ஜோதி : " டேய், ஆதி அப்பா சொல்றதும்… "

ஆதி : “அம்மா பிளீஸ் நீங்களும் புரிஞ்சுக்காம பேசாதீங்க, எனக்கு இன்னும் அவ்ளோ பக்குவம், அனுபவம், வியாபார நுணுக்கம் வரல, இப்போ தான் நான் கொஞ்சம் கத்துக்கிட்டு இருக்கேன், இன்னும் கொஞ்சம் நாள் போட்டுமே பிளீஸ்.”

“அப்பா எல்லாம் தெரிஞ்சும் நீங்க இப்படி சொல்லலாமா? நீங்க தப்பிக்க எங்கிட்ட திருப்பி விட்டீங்க”

ரவி: " என் மனைவிகிட்ட என்ன மாட்டிவிட நீ பிளான் பண்ண, நான் ஆபீஸ் பொறுப்பு உன்கிட்ட தர கிடைச்சா சான்ஸ் உபயோக படுத்தினேன்".

ஆதி: " யாரும் லைலா மஜூனு பிரிக்க பிளான் போடல இங்க"

ஜோதி ஆதியிடம் அதை விடு ஆதி," உன் லைலா என்ன சொன்ன? " என்று ஆர்வமாக கேட்டார்.

ஆதி: “ஆல் தி பெஸ்ட்” சொன்ன புராஜக்ட் சைன் ஆனதுக்கு, காலைல “குட் மார்னிங்” சொன்ன, கிளம்பி வர அப்போ “பை” சொன்ன என்று சலிப்பாக கூறினான்.

ஜோதியின் முகம் ஆர்வம் இழந்து போனது.

ரவி: "பார்த்து, பார்த்து டார்ச்சர் பண்ண எப்படி பேசுவா? " என்று ரவி நக்கலாக கேட்க, ஆதியின் முகம் சுருங்கியது.

ஆதி : " நான் அவளை பார்க்க கூடாத? இப்போ இதுவும் தப்பு சொல்றீங்களா அப்பா? என்னால அவள பார்க்காம எல்லாம் இருக்க முடியாது. "

ரவி: " ஆதி தப்புன்னு சொல்லல, ஆனா நீ பார்த்து ஷிவா கஷ்டப்பட கூடாது, உன்னோட சின்ன அசைவு ஷிவாக்கு கஷ்டம் குடுத்தாலும் அது தப்பு ஆதி, நீ ஷிவா மேல வெச்சு இருக்க அன்பு, அக்கறையும் தன் தெரியணும் உன்னோட எல்லா செயலையும், நீ செய்ற விஷ்யங்கள் இன கவர்ச்சியா, சிறு பிள்ளைத்தனமா இருக்கு."

" உன்னை ஷிவா தன் மேலதிகாரியா, அவளுடைய வேலைக்காக மௌனமா கடந்து போறது போல தான் இருக்கு, அவளுக்கும் உன்மேல விருப்பம் இருக்கணும் ஆதி. ரொம்ப நல்ல பொண்ணு ஷிவானி, அவ உண்டு அவ வேலையுண்டு இருக்கற பொண்ணு, யார் கூடவும் அதிகமாக பேசி கூட பார்த்தது இல்ல, உன் காதலுக்கு எப்படி வேணாலும் பதில் குடுத்து இருக்கலாம், ஆனா உன்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை."

" உன்ன தன் மேலதிகாரியா தான் நடத்துற அதுவும் மரியாதை குறையாமல், அதான் ஆதி கஷ்டமா இருக்கு, நீ ரொம்ப ஆசையை வளர விடாத பிளீஸ், நாங்க உன் காதலுக்கு எதிரி இல்ல ஆனா அந்த பொண்ணும் உன்ன விரும்பணுமே" என்று கவலையாக ரவி கூறி முடிக்க ஆதி மௌனமாக எழுந்து அவன் அறைக்கு சென்றான்.

ஜோதி கேள்வியாக ரவியை பார்க்க, இன்று உணவு இடைவேளையின் போது நடந்ததை பற்றி ஆதி கூரிய அனைத்தையும் ஜோதியிடம் கூறினார்.

ரவி: “ஆதி பக்கத்துல அந்த பொண்ணு இயல்பா இருக்க கஷ்டப்படற, அவன் வேலை விஷயமா பேசினா பதில் தந்த பொண்ணு, ஏன் சாப்பிடும் போதும், பேசும் போதும் இயல்பா இல்ல? அவன் பெருசா இதை எடுதுக்கல, ஆனா எனக்கு பயமா இருக்கு ஜோதி, அவன் நாளைக்கு கஷ்டப்பட கூடாது தான் இப்படி பேசினேன். எல்லாத்தையும் ஏதுக்க அவன் தயாரா இருக்கணும்.”

ஜோதி: “நீங்க சொல்றது சரி தான், நான் ஆதி பார்க்க போறேன், நீங்க ஃப்ரெஷ் ஆகுங்க, இன்னிக்கு டின்னர் போக வேண்டாம். ஆனா என் மனசு சொல்லுது அவ தான் என் மருமகள்.”

ஷிவானி அறையில்

ஆதியின் புகைப்படம் வைத்து கொண்டு எதோ யோசனையில் இருந்தவளை ரியா பின்னே இருந்து கத்தி பயப்படுத்தினால்.

ஷிவா முறைக்க,

ரியா: " சாரி செல்லம், பசிக்குது இன்னிக்கி நீ தான் சமையல் அதான் நைட் என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்க வந்தேன் " என பாவமாக கூற,

ஷிவானி: " எப்போ பாரு சாப்பாடு தான ரியா? "

ரியா: " சாரி டீ, எதாவது யோசிச்சுக்கிட்டு இருந்தியா? தொந்தரவு பண்ணிடனா? "

ஷிவானி: “ச்ச இல்ல டீ, அம்மா கூட பேச முடில அதான், சரி வா, உனக்கு பிடிச்ச ரவா தோசை செஞ்சு தரேன்”

ரியா தயங்கிய படி கேட்டால், " யாரு ஃபோட்டோ ஷிவா அது? "

ஷிவானி அதிர்ந்து பின் இயல்புக்கு வந்து ரியாவிடம்

ஷிவானி: " நான் யார் ஃபோட்டோ பார்க்க போறேன் ரியா? அம்மா ஃபோட்டோ தான் " என்று கூறிவிட்டு ரியா பேசும் முன்னே அங்கிருந்து கிச்சனை நோக்கி நடந்தாள்.

ரியா : " சில நேரம் இவள புரிஞ்சுக்க முடியுல" என்று தன்னக்குளே பேசி கொண்டு அவளும் உதவி செய்ய கிச்சனுக்கு சென்றாள்.

ஷிவானியின் மனம் எதையோ நினைத்து கலங்கி கொண்டு இருந்தது.

(காதல் வந்ததும் கன்னியின் உள்ளம், காதலை யாருக்கும் சொல்வதில்லை)

:purple_heart:

2 Likes

பாகம் 5

ஆதியின் இல்லத்தில்

ஆதி உடை கூட மாற்ற மனம் இன்றி கட்டிலில் படுத்து விட்டதை பார்த்து கொண்டு இருந்தான், ஜோதி அவன் அறைக்குள் வருவது கூட தெரியவில்லை, ஜோதியின் கை ஆதியின் தலை வருடிவிட தாயை கண்டவன் எதுவும் பேசாமல் அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.

ஜோதி : " ஆதி எனக்கு உன் கஷ்டம் புரியாம இல்ல பா, ஆனா அப்பா சொன்னதும் சரி தானே? "

ஆதி : " அப்பா சொன்னது எல்லாமே சரி தான் மா, ஆனா ஷிவானி பார்க்காம எப்படி மா? நான் அவள பார்த்துகிட்டு இருக்கற நிம்மதியில் இருக்கேன், இப்போ பார்க்ககூடாது சொல்ற அப்போ முடியலமா, ஆனா அவ எனக்கு இல்லைனு ஒரு நாள் தெரிய வந்தா அப்போ அப்பா சொல்ற மாதிரி அவளை பார்க்காம தானே இருக்கணும். அதான் எனக்கு இடி விழுந்த மாதிரி இருக்குமா, உண்மையா அப்பா சொல்ற வர அவள பார்க்காம இருக்க வேண்டிய நிலைமை வரும்னு நான் யோசிச்சதே இல்ல மா, அவ என் கூடவே எப்பவும் இருப்பான்னு தான் நான் நினைச்சுட்டு இருக்கேன்."

" ஷிவானி கிட்ட நான் சொந்த விஷயம் எதுவும் பேசறது இல்ல, அவள என் காதலுக்கு பதில் சொல்லுனு கூட கேட்டது இல்ல மா, நான் அவள காதலியா எனக்குள்ள நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கேன். அப்பா இது வர இப்படி பேசுனது இல்ல அவ என்ன நேசிக்க மாட்ட, பின்னாடி கஷ்டம்னு எல்லாம் சொன்னதே இல்ல, அப்பா சொன்ன மாறி எதும் ஆகிருமோ பயமா இருக்கு மா என்று குழந்தை போல அழுதான்."

ஜோதி : " சரி ஆதி உன் நிலை புரியுது, ஆனா அப்பா பயம் எல்லாம் உனக்கு ஷிவானி இல்லன்னு ஆனா, ஒருவேளை ஆனா, நீ அவள மறந்து இயல்பா பழைய ஆதியா இருக்கணும், நீ தான் ஆதி எங்களுக்கு எல்லாம், உனக்கு இது ஏமாற்றம் ஆக கூடாதுனு அப்பா கவலையில் அப்படி பேசிட்டாரு, அதை மட்டும் புரிஞ்சுக்க, அப்புறம் நீ நினைக்கிற மாதிரி எதும் ஆகாதுன்னு என் மனசு சொல்லுது, ஷிவானி அன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்த அப்போ நான் பார்த்தான் ஆதி அவளுக்கு உன்மேல காதல் இருக்கு, அத சொல்ல அவளுக்கு இன்னும் நேரம் வரல, அது வர பொறுமையா இரு போதும் ."

ஆதி: " இப்போ என்ன தான் சொல்ல வரீங்க ஒன்னும் புரியல, நீங்க அவ கண்ணுல காதல் சொல்றீங்க, அப்பா பார்க்க கூட கூடாது சொல்றாரு" என்று நொந்து கொண்டான்.

ஜோதி சின்ன சிரிப்புடன் பொறுமையாய் சொன்னார்,

ஜோதி : " காதல்ல உனக்கு கண்டிப்பா வெற்றி உண்டு, என் மனசு சொல்லுது. ஒருவேளை அப்படி எதும் நடக்கமா போய்ட்டா, என் மகன் ஆதி அதை நினைச்சு கவலைப்பட்டு அவன் எதிர்காலத்தை கெடுத்துக்ககூடாது இது எங்க ரெண்டு பேர் எண்ணமும். "

ஆதி இப்போது எதுவும் பேசாமல் இருக்க,

ஜோதி : " போதும் ஆதி யோசிக்காத நாளைய பொழுது நல்லதா அமையும், இப்போ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா, நான் உனக்கு பிடிச்ச சப்பாத்தியும் உருளை கிழங்கு குருமாவும் செய்யறேன். "

ஆதி: " அப்போ டின்னர் ? "

ஜோதி : " இல்ல வேண்டாம் சொல்லிட்டேன்"

ஆதி: " அப்போ இன்னிக்கும் நல்ல சோறு இல்லையா " என்று பொய் சோகத்துடன் கேட்க,

ஜோதி ஆதியை அடிக்க வர, ஆதி நழுவி பாத்ரூம் உள்ளே சென்று விட்டான், ஜோதி வெளியே செல்ல திரும்ப, ஆதி பாத்ரூம் கதவை திறந்து

ஆதி: " அம்மா, டின்னர் போலாம் அப்பா ரெடி ஆகா சொல்லுங்க, குரு, கீதாம்மா, ஜெய், எல்லாரையும் வர சொல்றேன் எல்லாரும் சேர்ந்து போலாம், நம்ம ஒன்னா வெளியே போய் ரொம்ப நாள் ஆச்சு மா "

ஜோதியும் “சரி” ஆதி என கூறி வெளியேறினர்.

பின் அனைவரும் இரவு உணவில் சந்தித்து கொண்டனர்.

கீதா: " அண்ணா குரு கல்யாணம் பத்தி பேசணும் என்று ஆரம்பித்தார்",

ரவி : " அது தான் அவன் பொண்ணு பார்த்து வெச்சுடனே, ரியா வீட்டுலயும் சம்மதம் அப்புறம் என்ன மா? கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருவோம் "

கீதா: " அண்ணா குரு தன் இப்போ இந்த கல்யாணத்துக்கு தடையா இருக்கான், ரியாகிட்டயும் பேசி வெச்சுட்டு, இவன் முடிவுக்கு சரி சொல்ல வெச்சு , நான் கல்யாண விஷயமா பேசினா அந்த பொண்ணும் இவனுக்கு துணையா பேசிட்டு இருக்கா, ஆதியோட காதலுக்கு ஷிவானி பதில் சொல்லட்டும் அப்புறம் பண்ணலாம் , இல்ல அவனுக்கும் எனக்கும் கல்யாணம் ஒரே நாள் நடக்கணும் சொல்லிட்டு இருக்கான். எனக்கு என்ன செய்றது தெரியல " என்று கோபமாக ஆரம்பித்து சோகமாக முடித்தார்.

இதை கேட்ட ஆதி, அதிர்ச்சியும் கோவமும் ஒருசேர ஒரு உணர்வோடு குருவை பார்த்தான்.

ரவி: “என்னடா பண்ணிட்டு இருக்க? என்ன பிடிவாதம் இது? எல்லாம் உன் இஸ்டம்தானா? ரியாக்கிட்ட ஏன் இப்படி எல்லாம் சொல்லி வெச்சு இருக்க?”

குரு: " அப்பா, அவன் என் ப்ரெண்ட். ஆதிக்கு ஷிவானி முடிவு சொன்ன அப்புறம் பண்ணிக்கலாம் இருந்தேன். ஆனா இன்னும் ஷிவா முடிவு சொல்லல, அதான் இப்படி ஒரு முடிவு, அது மட்டும் இல்லாம நான் வேற அவன் வேற இல்லைலப்பா நம்ம வீட்டுல. அவனும் சந்தோசமா இருக்கணும் அதான், எனக்கு வேற வழி தெரியுல, எப்படிப்பா நான் மட்டும் சந்தோசமா இருந்தா போதும்னு சுயல்நலமா என்னால நினைக்க முடியும்? நான் தப்பா எதும் பேசி இருந்தா சாரிப்பா எனக்கு ஆதியோட சந்தோசம் முக்கியம்."

ரவி: " டேய், நீ என் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேன் புரியுது, அதுக்காக? ஆதிக்கு இப்போ எப்படி இருக்கும் சொல்லு, அவன் முகத்தை பாரு எப்படி இருக்கான்னு, உனக்கு புரியல குரு ஆதிக்கு ஷிவா முடிவே சொல்லாம விட்டு இந்தியா போய்ட்டா என்ன பண்ண முடியும்? அவனுக்கு முடிவு என்னவோ அது காலத்தோடு கையுல இருக்கு, நீயோ நானோ அத தடுக்கவோ, மாத்தவோ முடியாது. ரியாவை யோசிச்சுப்பாரு குரு, அவ உனக்காக தான் காத்து இருக்கா, காதல், கல்யாணம், அதும் குடும்ப எல்லாம் சம்மதம் சொல்லி சந்தோசமா சிலர்க்கு தான்டா நடக்கும், உனக்கு நடக்குது அத என் இப்படி தடுத்து நிறுத்துற? இனி நீ எதுவும் இந்த கல்யாணத்தை பத்தி பேச கூடாது சரியா? பெரியவங்க சொல்றத கேளு, கீதா நீ சம்மந்திக்கிட்ட பேசுமா, சீக்கரம் கல்யாணத்தை நடத்திருவோம். "

கீதா:“சரிங்க அண்ணா,”

கீதா : " அண்ணா, என்னடா இவ, ஆதியை யோசிக்காம இப்படி சுயநலமா இருக்கான்னு நினைக்காதீங்க, என்னமோ தெரியல இவன் கல்யாணத்தை முடிச்சு வெச்சுரணும் தோணுது, மனசு நிம்மதி இல்ல இவன் கல்யாணம் இப்போ வேண்டாம் அப்போ வேண்டாம் சொல்லும் போது… ஆதியும் என் பையன் தான் அண்ணி, அவன் மனசு போல வாழ்க்கை அமைய தான் போது பாருங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு" என ரவியிடம் ஆரம்பித்து ஜோதியிடம் முடித்தார்.

ஜோதி: " கீதா என்ன பேசுற நீ? அதெல்லாம் ஒன்னும் இல்ல. குரு, ஆதி, ஜெய் மூணு பேரும் நம்ம பசங்க தான், எல்லாம் நல்லதவே நடக்கும், தேவை இல்லாம எதும் யோசிக்காத"

“டேய், உன்னால தான் டா எல்லாம், சரி சம்மதம் சொல்லு டா, உன் அம்மா முஞ்சிய பாரு, எவ்ளோ கலங்கி போய் இருக்கான்னு, சொல்லு குரு”

குரு: " சரிம்மா, சம்மதம் எல்லாம் உங்க இஷ்டம் "

ஆதி: " தாங்க்ஸ் டா " என்று கூறி கட்டிகொண்டான்.

ஜெய்: " இன்னிக்கு புராஜக்ட் நமக்கு சைன் ஆனதுக்கு டிரீட் சொன்னிங்க, இங்க என்னடான்னா குருக்கு கல்யாணத்துக்கு மீட்டிங், இதெல்லாம் சொல்லவே இல்லயே ஆதி போன்ல, சரி, எது எப்படியோ இனி குரு கார் பார்க்கிங் லா லவ் பண்ண மாட்டான். ஆதி, ஆங்கிள் நம்ம தப்பிசோம் " என்று கூறி சிரிக்க, குரு முறைத்து வைத்தான்.

ஆதியும் ஜெய்யும் ஹை ஃபை அடித்து கொள்ள அங்கு சூழ்நிலை இயல்பு ஆனது, பின் அனைவரும் ஆர்டர் செய்த உணவு வரவும், புராஜக்ட் பற்றி பேசி ஜெய் அனைவரின் மனநிலையை மாற்றவும், அனைவரும் இரவு உணவு உண்டு இல்லம் திரும்பினர்.

ஆதியின் அறையில், ஷிவானியின் புகைப்படம் பார்த்து பேசி கொண்டு இருந்தான், " ஏன் ஷிவா இப்படி ஒரு மௌனம்? என் குரு, அப்பா, அம்மா, கீதாம்மா எல்லாரும் பாவம் என்னால, எனக்காக கவலைப்பட்டு இருக்காங்க, என்ன பிடிக்கலையா? உன் கண்ணுல நான் அன்னிக்கு பார்த்தனே அந்த காதல் அது பொய்யா? என்ன நம்பிக்கை இப்படி உனக்காக என்ன காத்து இருக்க சொல்லுது? காதலா? உன் பதிலை எப்போ சொல்லுவா ஷிவா? இன்னும் எவ்ளோ நாள்…? என தனக்குள்ளயே பேசி அழுது, உறங்காத இரவு ஆனது அவனுக்கு.

:purple_heart:

2 Likes

பாகம் 6

அடுத்த நாள் காலை,

குருவின் இண்டர்காம் அலற, ஆதி குருவை அவன் அறைக்கு வர சொன்னான்.

குரு ஆதியின் அறையின் உள்ளே செல்ல, கண் இமைக்கும் நொடிக்குள் அவன் தலை சுற்றியது, கன்னத்தில் கை வைத்துகொண்டு குரு ஆதியை பார்க்க,

ஆதி: " எப்படி சார் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, எனக்காக நீங்க வெயிட் பண்ண போறீங்க, எனக்கு கல்யாணமே நடக்கதுன்னா என்ன பண்ண போறீங்க? ரியாவை காதல் பண்ணிகிட்டே இருப்பிங்களா சார் கடைசிவரை? ரியாக்கு தங்கச்சி இருக்கா, கொஞ்சமாது பொறுப்பு இருக்க உனக்கு? ரியாவே பாவம், இந்த முடிவு அவ தங்கச்சியையும் சேர்ந்து தான பாதிக்கும்? என் மேல பாசம் சரி, அதுக்காக ரியாவோட தங்கச்சி என்னடா பண்ணா, ரியா வீட்டுல கல்யாணம் வைக்க சொல்லி ரெண்டு மாசமா கேட்டு இருக்காங்க இதையும் என்கிட்ட சொல்லவே இல்ல, இன்னும் என்ன எல்லாம் சொல்லாம மறைச்சு வெச்சு இருக்க? "

" என் இப்படி ஒரு முடிவு பண்ணிங்க ரியாகிட்ட கேட்டேன், என்ன சொன்ன தெரியுமா? ஆதிண்ணா நீங்க என் அண்ணன் தான? உங்களுக்கு எப்படியோ, எனக்கு நீங்க அண்ணன் தான். உங்களுக்காக நான், நம்ம தங்கச்சி எல்லாரும் காத்து இருப்போம் சொல்ற, ஒரு நிமிஷம் உயிர் இல்ல, என்னால எதும் பேச முடியல, இன்னும் கல்யாணத்துக்கு நீ சரின்னு சொன்னதை கூட ரியாக்கிட்ட சொல்லலையா நீ? என்னடா பண்ணலாம் இருக்கா? நேத்து சரின்னு சொல்லிட்டு வீட்டுல போய் எதும் பண்ணிய? சொல்லு டா" என்று ஆதி கத்த குரு பயந்து போனான்.

" அவ அம்மா இல்லாத பொண்ணுடா, அவங்க அப்பா ரெண்டு பொண்ணுங்கள தாய் இல்லாம வளர்த்து இருக்காரு, கல்யாணம் அப்போ இப்பொன்னு தள்ளி போன அவருக்கு எப்படி இருக்கும் யோசி, ரியாவை ஆஸ்திரேலியா வரைக்கும் வேலைக்கும் அனுப்பி, உன்னை லவ் பண்றது தெரிஞ்சதும் ரியா சந்தோசம் முக்கியம்ன்னு சம்மதம் சொல்லி இருக்காரு. என் விதி எனக்கு என்ன நடக்கணுமோ அது நடக்கட்டும், எனக்காக உன் ஆதிக்காக தயவு செஞ்சு சரின்னு சொல்லு டா" என கோவமா ஆரம்பித்து கண்ணீராக முடித்தான்.

குரு அமைதியாக இருக்க, பொறுமை இழந்த ஆதி," இப்போ என்ன தான் டா உன் பிரச்சினை, நான் ஷிவானி காதலிக்கல போதுமா? அவ எனக்கு வேண்டாம். நான் வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிகறேன். உன் இஷ்டம் போல ஒரே மேடையில செஞ்சுபோம். சரினு சொல்லிரு குரு, உன் சந்தோசம் தான் டா எனக்கு வேணும். என் ஒருத்தன் காதல் எல்லாருக்கும் தொந்தரவா இருக்க வேண்டாம் டா," என்று கத்த, குரு ஆதியின் கன்னத்தில் ஒரு அரை விட்டான். ஆதியை பார்க்க வந்த ஜெய் இதை பார்த்து, அவசரமாக உள்ளே வந்து குருவை தடுத்தான்.

ஜெய்: " குரு, என்னடா ஆதியை அடிச்சுட்டு இருக்க? இப்போ என்னாச்சு எதுக்கு இவளோ கோவம்? "

என்று கேட்டுக்கொண்டே குருவை உற்றுப்பார்க்க அவனின் கன்னத்திலும் அடித்ததின் தடயம் இருக்க, இப்போது ஆதியை கேள்வியாக பார்த்தான் ஜெய்.

" ஆமா இப்போ எதுக்கு ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் அடிச்சுக்கிட்டு இருக்கீங்க? அதும் ஆபீஸ் லா? இன்னிக்கி புராஜக்ட் ஆரம்பிக்க மீட்டிங் இருக்கு, லீட் நீ, அத பார்க்காம என்னடா சண்டை?" என்று ஜெய் ஆதியை கேட்க,

இருவரும் அமைதியாய் இருந்தனர்.

ஜெய்: " தொந்தரவு பண்ணி இருந்தா சாரி சார். மீட்டிங்க்கு நீங்க கேட்ட டிசைன் இதுல இருக்கு டேபிள் வெச்சுறேன். தாங்க்ஸ் என்று சொல்லி நகர,

ஆதி : " உனக்கும் அரை வேணுமா? வா தரேன் " என்று கூறி கைகளை காட்டி அழைத்தான்.

ஜெய்: "இல்ல மச்சி நீ டென்ஷனா இருக்க, நான் அப்புறம் வரேன் சொன்னேன். நீங்க பேசுங்க " என்று கூறினான்.

ஆதி: " டேய் நில்லு, ஓ சாரி, சொல்லுங்க சார், என்ன சொன்னீங்க? சரியா கேக்கல பக்கத்துல வந்து சொல்லுங்க"என்று அழைத்தான்.

ஜெய்: "ஒன்னும் இல்ல மச்சி சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன், ஆமா என்னாச்சு? "

ஆதி: " மூடிட்டு போ, நான் இவனா கொல்லற கோபத்துல இருக்கேன். நடுவுல வந்து தலையை விட்டு வாங்கிக்காத" என்று கோவத்தில் ஆதி கூற,

ஜெய்: "என்னதான் ஆச்சு ரெண்டு பேருக்கும்? கேப்டெரியா போவோம் வாங்க, அங்க போய் பேசிப்போம். இங்க எதும் வேண்டாம், யாரும் வந்தா வேற மாறி போகும் வாங்க டா ரெண்டு பேரும் என்று ஜெய் சற்று கோவமாக அழைக்க,

இருவரும் பேசாது பின் சென்றனர். மூவருக்கும் கோல்டு காஃபி ஆர்டர் செய்து வாங்கி வந்து கொடுத்த ஜெய், ஒரு வாய் குடித்து விட்டு பார்க்க இருவரும் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தனர்.

ஜெய்: " குரு, என்னாச்சு சீரியஸா எதோ பிராப்ளம்னு தெரியுது, ஆனா அத ரெண்டு பேரும் சொல்லாம இருந்த எனக்கு எப்படி தெரியும்? எதுக்கு அடிச்சா ஆதியை? அவன் என் அடிச்சான்? சொல்லு குரு"

ஆதி: " சொல்ல மாட்டான், அவன் எதுக்கு சொல்லணும்? சார் எல்லாத்தையும் அவரே முடிவு பண்ணி இருக்கார், நாம எதுக்கு? உயிர் போக கத்திட்டு இருக்கேன், வாயே திறக்காம இருக்கான். கோவம் மண்டைக்கு ஏறி எதாவது பண்ண போறேன் பாரு"

குரு: " ஓ, என்ன பண்ண போற? உனக்கு கல்யாணமே ஆகலைன்ன என்ன பண்ண போறே கேக்குற, என்ன நடக்கணுமோ நடக்கட்டும்னு சொல்ற, ஷிவானியா லவ் பண்ணல சொல்ற, வேற பொண்ணா அதும் எனக்காக கல்யாணம் பண்ணிக்க போறத சொல்ற, இதுல ஒரே மேடையில, உன்ன அடிச்சதோட விட்டு இருக்க கூடாது. "

" நான் வேற ஒன்னு நினைச்சு இந்த முடிவு எடுத்தேன். அது வேற மாறி போகுது, டேய், என் சந்தோசம் முக்கியம்னு நீ நினைக்கலாம் நான் நினைக்க கூடாத? ஷிவானி உனக்கு இல்லைன்னு ஆனா நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்ட, அதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். ஷிவானி சரி சொன்ன, நீ சந்தோசமா பண்ணிப்பா, இல்ல எங்க சந்தோசத்துகாகவாது கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சு முடிவு பண்ணேன்."

"ரவி அப்பாகும் ஜோதிம்மாக்கும் இது தான் பயம். அவங்க கீதாம்மா கிட்ட சொல்லி அழுதாங்க, அதான் நான இப்படி ஒரு முடிவு பண்ணேன். எத்தன வருஷம் ஆனாலும் ரியாக்கு நான் தான், எனக்கு அவ தான். நீ தனி மரமா போய்ட்டா நாங்க யாரும் தாங்க மாட்டோம், கதவு சாத்திக்கிட்டு அழுத எனக்கு தெரியாதா? ராத்திரி முழுக்க துங்காத உன் கண்ணு சொல்லுதே எல்லாம் போ டா "

ஜெய்: " குரு சாரி டா, நேத்து என்கிட்ட கூட சொல்லாம இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்க கோவமா இருந்தேன், ஆன இப்போ உன் இடத்துல நான் இருந்தாலும் இதான் செய்து இருப்பேன்."

ஆதி: " ஓஹோ, ரெண்டு பேருக்கும் மனசுல தியாகின்னு நினைப்பா? "

" குரு, அம்மா அழுதாங்களா? எல்லாம் என்னால தான? உங்க பயம் நியாயம் தான். நம்ம நட்பு மேல சத்தியம் பண்ணி சொல்றேன். கண்டிப்பா நான் ஷிவானி இல்லைனா உங்க விருப்பம் போல கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருப்பேன். ஷிவானி மறந்து இருப்பேன் சொல்ல முடியாது, ஆனா இந்த காதல் என் லைஃப் எதும் செய்யாது, அதுக்கு நான் இடம் குடுக்க மாட்டேன், நான் தனி மரமா நிக்கா மாட்டேன், என் மனைவியா எந்த பொண்ணு வந்தாலும் அவளோட வாழ்வேன். போதுமா? பிளீஸ் சம்மதம் சொல்லு, கல்யாணம் பண்ணிக்கோ, இந்த புராஜக்ட் முடிஞ்சதும் ஷிவானி சரி சொன்ன அவளோட இல்ல உங்க எல்லார் விருப்பம் போல கல்யாணம் பண்ணிக்கறேன். சத்தியமா டா பிளீஸ்"

குரு: " மன்னிச்சுரு ஆதி வேற வழி தெரியுல"

ஜெய்: " சரி குரு, அதான் ஆதி சத்தியமே பண்ணிட்டான், இப்போவது சரின்னு சொல்லு"

குரு: “அதான் நேத்தே சம்மதம் சொல்லியாச்சே அப்புறம் என்ன?”

ஆதி: “அப்போ உனக்கு ஓகே வா? அப்புறம் ஏன் ரியாக்கு சொல்லல நீ?”

குரு: "ஆபீஸ் வந்த உடனே உன் ரூம்க்கு வந்துட்டேன், உள்ள வந்தவனா அடிச்சுட்டு, நீயே கேள்வி கேட்டு பதில் சொல்லி, என்னையும் கோபப்பட வைச்சது நீ… நான் தான் ரியாவை பார்க்கவே இல்லயே, இனி தான் பார்த்து சொல்லணும். "

ஆதி: " லூசு, அத முன்னாடியே சொல்ல வேண்டியது தானே, வாயில என்ன உனக்கு? "

குரு: " வந்ததும் அடிச்சது யாரு? கன்னம் வீங்கி போய்ருச்சு பேசுறான், பதில் சொல்ல விடாம பத்தி பத்திய பேசிட்டு இப்போ கேள்வி கேக்குறான்"

ஆதி: " நீ மறைச்சு வைச்சா விஷயம் தெரிஞ்சு கோவம், ரியா கூட பேசுனதும் ரொம்ப கோவம் உன்மேல, அதான் கண்ட்ரோல் பண்ண முடியல அடிச்சிட்டேன்,சாரி டா."

ஜெய்: " அப்பாடி, ஒரு வழியா பிராப்ளம் முடிஞ்சுது."

:purple_heart:

1 Like

பாகம் 7

குரு: “நாளைக்கு நல்ல நாள் கல்யாணம் விஷயம் பேசுவோம் அம்மா காலையிலா சொல்லிட்டாங்க, நான் சரின்னு சொல்லிட்டேன். அத சொல்ல தான் வந்தேன்.”

ஜெய்: “வாழ்த்துக்கள் டா, நம்ம காங்லா ஃபர்ஸ்ட் கல்யாணம் உனக்கு, சூப்பர்டா”

குரு: “டேய், ஃபர்ஸ்ட் கல்யாணமா? உண்மையாவே இதுதான் டா எனக்கு ஃபர்ஸ்ட் கல்யாணம்.”

ஜெய்: “ஐயோ அறிவு! முதல் ஆளா கல்யாணம் பண்ணிக்க போற அத சொன்னேன், மொக்காய காமெடி பண்ணிட்டு இருக்க?”

ஆதி: “ரியாக்கிட்ட போய் பேசு, அவளும் சந்தோசமா இருக்கட்டும், அவங்க வீட்டுலயும் சொல்லணும் அவளும்”

குரு : “ஆதி இன்னிக்கி நான் லீவ் போட்டுக்கவா? ரியாக்கிட்ட பேச?”

ஜெய்: “இதுக்கு எதுக்கு இப்போ உனக்கு லீவ்? எப்பவும் கார் பார்க்கிங் லா தான காதல் வளர்ப்பா? இன்னிக்கி என்ன லீவ் போட்டு போய் வளர்க்க போறியா? அப்போ ரியாக்கும் லீவ் கேக்குற?”

குரு: “ஆமா”

ஆதி: “எடுத்துகோடா, நானே வீட்டுக்கு போக போறேன், அப்செட் இருக்கேன். ஜெய் பார்த்துக்கோ, மீட்டிங் நாளைக்கு வெச்சுபோம், எட்வர்டு சார் எதாவது கேட்டா நானும் குரு லீவ் சொல்லு, வேற எதும்னா கால் பண்ணு.”

ஜெய்: “சரிங்க பாஸ்”

ஆதி : “கை பர பர இருக்கு, அடி வேணுமா?” என்று கேட்க,

குரு சிரிக்க, கிண்டல், கலாட்டா என அந்த இடம் மாறி போனது. அவர்கள் சிரித்து பேசி கொண்டு இருக்க, அங்கே வந்த ரியாவை பார்த்த ஜெய்,

ஜெய்: “ரியா வரா, அட அட கூட ஷிவாவும் வரா”

ஆதி அவர்களை பார்த்து விட்டு, ஜெய்யிடம் “வா டா, நாம போலாம், இவன் பேசிட்டு வரட்டும்.” என்று கூற, இருவரும் எழுந்து சென்றனர்.

ஜெய்: “ஆதி அவனுக்காக பொய் சத்தியம் தான செஞ்சா?”

ஆதி: "பின்ன, ஷிவாவை மறந்து வேற ஒரு பொண்ணை, நான் பேசாம செத்துருவேன் அதுக்கு பதில் "

ஜெய்: “வாய மூடு, நானே கொல்ல போறேன் பாரு”

ஆதி: "அவனாவது சந்தோசமா இருக்கட்டும் ஜெய், அவனுக்கு ஒரு வேளை சந்தேகம் வந்தாலும் சமாளி டா, அவன்கிட்ட எதுவும் சொல்லி வைக்காத "

ரியா அருகில் வந்து குருவை பார்த்து சிரிக்க, ஷிவா " என்ன டீ சொல்லி வெச்சு வந்து இருக்கீங்க போல" என்று கிண்டலடிக்க,

ரியா: “என்னடா இது கன்னத்துல?”

குரு: “ரியா, லீவ் போடு ஆதிக்கிட்ட சொல்லிட்டேன், வா வெளிய போலாம் கொஞ்சம் பேசணும்.”

ஷிவா: "அண்ணா சாரி, எதும் பிராப்ளம்? "

ரியா: “சொல்லு டா, எங்க போறோம்? என்னாச்சு? உன் முகமே சரி இல்ல, என்ன பார்த்ததும் சீரியஸ் ஆகிட்ட, என் அண்ணாங்க ஏன் எழுந்து போய்ட்டாங்க? லீவ் போட சொல்ற? எதுக்கு?”

குரு: “இன்னும் எவ்வளவோ கேள்வி இருக்கு? லிஸ்ட் போட்டு குடு பதில் சொல்றேன் பொறுமையா, நான் உன் லவ்வர், நான் கூப்பிட்டாலும் எங்க? என்னன்னு கேட்டு தான் வருவியா?”

ரியா: “அச்சோ இல்ல டா, அப்படி இல்ல. சரி கார் எடு, நான் பேக் எடுத்துட்டு வரேன் என்று கூறி சென்றாள்.”

குரு: “ஷிவா, சாரி மா, அப்புறம் பேசலாம்.”

ஷிவா : “சரி அண்ணா, பை.”

அனைவரும் விடை பெற்று அவரவர் வேலையில் மூழ்கினர்.

தெரிந்து கொள்ள :

https://en.m.wikipedia.org/wiki/Manly_Beach

ஆபிஸ்லிருந்து கிளம்பிய இருவரும் மௌனமாய் ஒரு மணி நேரம் பயணித்து மன்லி பீச் வந்து இருந்தனர். கார் பார்க்கிங் அடுத்து குரு - ரியா இருவரின் காதல் அதிகம் வளர்ந்தது இங்கு தான், குரு அமைதியாய் ஒரு உணவகம் நுழைந்து அமர்ந்து கொள்ள பின்னே வந்த ரியாவும் அவனுடன் அமர்ந்தாள். சிறு அமைதி அந்த அமைதி உணவு விடுதி பணியாளர் வர கலைந்தது. இரண்டு ஒயிட் ஹாட் சாக்லேட் என்று ஆர்டர் செய்து விட்டு ரியாவை பார்க்க,

குரு: "வேறு எதும் வேணுமா டா ? சாப்பிட்டியா காலையில? "

ரியா: “எனக்கு எதும் வேணாம், என்னாச்சு? உன் கன்னத்துல என்ன? யார் அடிச்சா? அண்ணாக்கு எப்படி தெரிஞ்சுது நம்ம முடிவு? எதும் பேசாம போன் வெச்சுட்டாரு, எதும் பிரச்சனையா?”

குரு: “கன்னத்துல என்னவா? பரிசு அதும் கல்யாண பரிசு, உன் ஆதி அண்ணன் ஆசையா குடுத்தது.”

ரியா: “அச்சோ, அப்போ உனக்கும் அண்ணாக்கும் சண்டையா? அதான் என்கூட பேசாம போய்ட்டார் போல, நான் தான காரணம், தப்பா எதும் பேசிட்டனா? ஆனா நான் எதும் சொல்லலை குரு, எப்படி தெரிஞ்சுது அவருக்கு தெரில.”

குரு: “ரியா கொஞ்சம் நிறுத்து,”

ஆர்டர் செய்த ஹாட் சாக்லேட் வர அதை குடித்தான்,

குரு: “எவ்ளோ கேள்வி கேக்குற ரியா நீ? உன் அண்ணன் அடிச்சான் அப்போ கூட லேசா தலை தான் சுத்துன மாறி இருந்துச்சு, இப்போ மயக்கம் வந்துரும் போல, போதும் மா, கொஞ்சம் ஹாட் சாக்லேட் குடி மா, நான் எல்லாம் சொல்றேன்.”

இருவரும் பருகி விட்டு எழுந்து நடந்தனர்.

குரு: “நான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன், நாளைக்கு நல்ல நாள் அம்மா, மாமாக்கு போன் பண்றதா சொல்லி இருக்காங்க, சீக்கரமே நம்ம கல்யாணம்.”

ரியா: “குரு? என்ன சொல்ற, எனக்கு ஒன்னுமே புரியல, அப்புறம் நாம தான் இப்போ கல்யாணம் வேண்டாம் முடிவு பண்ணி இருந்தோம், நீ சீக்கரம் கல்யாணம்னு சொல்ற?”

குரு: “இரு நான் சொல்றத முழுசா கேட்டு, கேள்வி கேளு”

குரு நேற்று இரவு அவர்கள் உணவகத்தில் நடந்ததில் இருந்து, இன்று காலை கேப்டெரியாவில் நடந்தது வரை அனைத்தும் சொல்லி முடித்தான்.

ரியா: “அண்ணாவா எதுக்கு நீ அடிச்சா? அவரு பாவம் டா, இந்த ஷிவானி எதோ திருட்டுத்தனம் பண்ணிட்டு இருக்கா, ஒரு நாள் மாட்டிப்பா அப்போ இருக்கு அவளுக்கு”

குரு: “ஷிவாக்கிட்ட பேசி பாரு ரியா, கடைசி ஒரு முறை ஆதிக்கு தெரியாம கேளு. ஆமா, இங்க ஒருத்தன் அடி வாங்கி இருக்கேன் உனக்காக அது தெரியுதா? அண்ணன் பெரிய அண்ணன் அவன், உன் அண்ணன் தான் என் தல சுத்துற அளவுக்கு அடிச்சு இருக்கான், அவன் மட்டும் அடிக்கலாம்? ரொம்ப பாசம் தான் உனக்கு உன் அண்ணன் மேல, அதுல கொஞ்சம் என் மேலயும் இருக்கட்டும், ஹெய், சொல்லு ரியா, கல்யாணம் பண்ணிக்கலாம் லா?”

ரியா: “அண்ணா கல்யாணத்துக்கு அப்புறம் மாத்தி பேசின? என்ன செய்ய அப்போ?”

குரு: “அவனுக்கும் கல்யாண பரிசு தான். கன்னம் வீங்கி போற அளவுக்கு”

ரியா: “உனக்கு சம்மதமா?”

குரு: “முழு சம்மதம், என் தப்பு எல்லாமே, இன்னிக்கி என் தப்பு என்னனு ஆதி சொல்லிட்டான், அவன் பேசும் போது தான் தெரிஞ்சுது, நான் எவ்ளோ சுயநலமா இருந்து இருக்கேன், மன்னிச்சுரு மா, இவளோ நாள் யோசிக்கவே இல்ல, அஞ்சலி ( அஞ்சலி ரியாவின் தங்கை ) இருக்கா, அவளுக்கும் கல்யாணம் வயசு ஆகுது, மாமா கஷ்டம் எல்லாம் நான் புரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டேன். இனி அப்படி இருக்க மாட்டேன்.”

“ரியா மாமா கிட்ட பேசு பிளீஸ், அஞ்சலிக்கு படிப்பு முடிய போது தான? ரெண்டு பேரும் நம்ம கூடவே இருக்கட்டும், அஞ்சலிக்கு கல்யாணம் ஆகிட்டா தனியா தான இருப்பாரு? கேளுமா, அவர் மாட்டேன் சொன்ன சொல்லு அம்மா, நான் எல்லாரும் பேசுறோம், எல்லாரும் ஒன்னவே இருப்போமே, நீயும் அப்பாவை மிஸ் பண்ண மாட்ட, உனக்கு சந்தோசமா இருக்கும், அஞ்சலி கல்யாணம் என் செலவு சரியா? அஞ்சலிக்கு அப்பா அம்மாவா நின்னு நம்ம கல்யாணம் பண்ணி வெப்போம், எந்த கவலையும் இல்லாம எல்லாரையும் பார்த்துக்கணும் சரியா? உங்க அத்தை இருக்காங்க இல்லையா? அவங்களையும் கூட கூட்டிட்டு வந்துருவோம். நீ, நான், அஞ்சலி, கீதாம்மா, மாமா, பெரியம்மான்னு வீடே நிறஞ்சு இருக்கும்.”

“ஹேய், என்னாச்சு நான் பேசிகிட்டே இருக்கேன். ஆமா, என் மூஞ்சில என்ன இருக்கு இப்படி பார்த்துக்கிட்டு இருக்க?”

ரியா: “ஒன்னும் இல்ல டா”

ரியா எதுவும் பேசாது அவனை கட்டிக்கொண்டாள். குருவும் கட்டிக்கொள்ள அமைதியாய் சில நிமிடம் காதலோடு போனது.

ரியா: “என்னா இவ்வளோ லவ் பண்றிய குரு?”

குரு: “உன்னா விட கம்மி தான், நீ எனக்காக பண்ணது, பண்ணிட்டு இருக்கறது இப்படி எல்லாம் வெச்சு பார்த்தா நான் கம்மினு தான் தோணுது மா, கல்யாணம் பண்ணிக்க சமம் பண்ணிறேன்”

பின் சர்ஃபிங் போர்டு எடுத்து கொண்டு குரு கடலுக்கு செல்ல ரியா அதை பார்த்து கொண்டு இருந்தாள், பின் இருவரும் கடலில் விளையாடி, உணவு உண்டு, பொழுது போக்கி வீடு திரும்ப இரவு ஆனது.

:purple_heart:

1 Like

பாகம் 8

ரியாவை அவள் இல்லத்தில் இறக்கி விட்டு குரு செல்ல, ரியா வீட்டினுள் செல்ல, ஷிவானி சமையல் செய்து கொண்டு இருந்தாள், ரியா அவளை பார்த்து சிரிக்க, ஷிவா முறைத்தாள். ரியா அவள் அப்பாவிடம் கல்யாணம் பத்தி பேசிவிட்டு வர, ஷிவா பாஸ்டா செய்து வர இருவரும் உணவு உண்டனர். உணவு உண்ணும் போது ரியா கல்யாண செய்தி பற்றி சொல்ல ஷிவானி சந்தோசமாக கட்டி கொண்டாள்.

ஷிவா: “செம்ம டீ, எப்போ ஒருவழியா கல்யாணம் பண்ண ஓகே சொல்லிட்ட, எனக்கு ரொம்ப சந்தோஷம் டீ செல்லம், நீ ரொம்ப லக்கி ரியா இந்த காதல் கல்யாணம் இதெல்லாம் சில பேருக்கு தான் கிடைக்கும், அதும் எல்லாரோட சம்மதமும் கிடைச்சு பெரியவங்க செஞ்சு வெக்கறது எல்லாம் ஈஸி இல்ல. லக்கி செல்லம் நீ, சந்தோசமா இருக்கணும் நீ, எனக்கு தெரியும் அண்ணா உன்ன நல்ல பார்த்துப்பாரு.”

ரியா: “ஆமா, ஷிவா என்ன விட லக்கி யாரும் இல்ல, காதல் சொல்லிட்டு அதுகாக காத்து இருக்கிறவங்க, உயிருக்கு உயிரா காதல் பண்ணியும் அத சொல்ல முடியாம எல்லாத்தையும் மறைச்சு வெச்சு இருக்கறவங்க, காதல் சொல்லியும் பதில் என்னனு கூட தெரியாம இன்னும் உயிரா காதல் பண்ணிட்டு இருக்கவரவங்க, ஆமா காதலிக்கிறேன் சொல்லிட்டா சொர்கமே காலுக்கு கீழ வெக்க காதலன் இருந்தும் அத சொல்லாம நடிகரவங்க, இப்படி இருக்கிறவங்க நடுவுல நான் ரொம்ப லக்கி தான் ஷிவா”

ஷிவா : " …"

ரியா : “ஏன் ஷிவா உனக்கு ஆதி அண்ணாவை பிடிக்கல? நீ சரி சொல்லி இருந்தா என் கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் ஆகி இருக்கும், நாங்க தள்ளி போட்டதே உன் பதிலுக்காக தான். இப்போவது பதில் சொல்லு ஷிவா ஏன் காதல் மறைக்குற?”

“சரி உனக்கு ஒன்னு சொல்றேன், கேளு அப்புறம் சொல்லு உன் முடிவு என்னனு இன்னிக்கி இத பேசிருவோம்.”

நேற்று இரவு முதல் இன்று காலை கேப்டெரியாவில் நடந்த அனைத்தும் ரியா சொல்லி முடிக்க… ஷிவா உணவு உண்ணாமல் கை கழுவி விட்டு எழுந்து கொண்டாள்.

ரியா : “சொல்லு ஷிவா உன் மனசுல என்ன இருக்கு சொல்லு, ஆதி அண்ணா வாழ்க்கை உன் வார்த்தையில் தான் இருக்கு.”

ஷிவா: “எனக்கு ஆதியை பிடிக்கும், ரொம்ப நல்லவர், திறமையான அற்சிதெக்ட், என் டீம் லீட், அவரை வெறுக்க எனக்கு காரணம் இல்ல, அதே மாறி விரும்பவும் காரணம் இல்ல. அவருக்கு பிடிச்சு இருக்கு சொன்னாரு, நான் அத மறந்து ரொம்ப நாள் ஆகுது. இன்னுமா எனக்காக காத்து இருக்காரு? நான் எதிர்பார்க்கவே இல்ல இத, நான் விரும்பி இருந்த உனக்கு சொல்லி இருக்க மாட்டன? என்ன ரியா பேசுற? என் காலுக்கு கீழ சொர்கம் வருமா? நான் நடிக்கரனா? நான் லவ் பண்றேன் சொன்னில? எப்போ உன்கிட்ட நான் ஆதி பத்தி பேசி இருக்கேன்? அவர பார்த்து எவ்ளோ முறை பேசி இருக்கேன்? ஒரு சின்ன கண் அசைவு? ஒரு சிரிப்பு? இப்படி எது செஞ்சேன்? எது சொல்லுது நான் அவரை காதல் செய்றன்னு? சொல்லு,”

“விரும்பாத ஒருத்தன் சொர்கமே குடுத்தாலும் அது எப்படி சந்தோசம் குடுக்கும் அந்த பொண்ணுக்கு? உன் அண்ணன் கிட்ட போய் சொல்லு என் மனசுல அவர் இல்லைன்னு இல்ல நானே சொல்றேன்.”

ரியா: “ஷிவா… என்னடி இப்படி பேசுற? நைட் போன் பார்த்து தூங்காம இருப்பியே அது?”

ஷிவா: "அது என் அம்மா ஃபோட்டோ, போதும் ரியா, எனக்கு ஆதி மேல லவ் இல்ல போதுமா? இனிமேல் இத பேசாத நாளைக்கு மீட்டிங் இருக்கு, தூங்கலாம். குட் நைட்.

ரியாவின் அலைபேசி அலற, அதை எடுத்து கொண்டு அவள் அறைக்குள் நுழைந்து விட, ஷிவா அவளின் அறை சென்று கட்டிலில் விழுந்து அவளின் அலைபேசியில் உள்ள ஆதியின் புகைப்படம் கண்டு அழுது கொண்டு இருந்தாள். ரியாவின் தங்கை அஞ்சலி ஷிவாவுடன் பேச வேண்டும் என கூற, ஷிவாவிடம் குடுக்க தன் அலைபேசியை எடுத்து கொண்டு ரியா ஷிவாவின் அறைக்கு வர, அறை கதவு திறந்து இருந்தது. ஷிவானி ஆதியின் புகைப்படம் வைத்து கொண்டு அழுவதை பார்த்தா ரியா மௌனமாக திரும்பி அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.

அடுத்து நாள் காலை, ரியா ஷிவானிக்கு சாண்ட்விச் செய்து கொண்டு இருந்தாள், ஷிவானி குளித்து வரவும், அவளுக்கு காபியும் சாண்ட்விச் தர,

ஷிவானி சிரித்து கொண்டே, “ஹாய் செல்லம் செம்ம சாண்ட்விச் லா செஞ்சு அசத்துற, என்ன விஷயம்?”

ரியா எதுவும் பேசாது அவளின் உணவை உண்டால்.

ஷிவானி: “ரியா காஃபி சக்கரை கம்மியா இருக்கு , கொஞ்சம் கலக்கி வை மீட்டிங் இருக்குல இன்னிக்கி, அதுக்கான ஃபையில் எடுத்துட்டு வரேன்” என அவள் சென்று எடுத்து வந்து பின் காஃபி அருந்த அதில் இப்போதும் சக்கரை இல்லை.

ரியா அவள் அறையின் உள்ளே இருக்க, ஷிவா கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை, அவளின் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாது போக, தன் கேள்விகளை எல்லாம் கவனம் செலுத்தாத ரியாவை பார்த்தா ஷிவானி கோபத்தோடு அவளை கொஞ்சம் சத்தமாக பெயர் சொல்லி அழைக்க, அறையை விட்டு வெளியே வந்த ரியா,

ரியா: “ஷிவா நீ என்ன கேக்க போறேன்னு தெரியும், பட் பிளீஸ் வேண்டாம், நான் உன்னோட பேச விரும்பல, உனக்கு விருப்பம் இல்லைனா சொல்லிரு குரு வீட்டுக்கே போய் தங்கிக்கிறேன், அப்புறம் பொய் பேசின எனக்கு பிடிக்காது. நடிச்சாலும் தான்.”

ஷிவா: “ஹெய் லூசு, சும்மா சும்மா என்னடி, நடிக்கறேன் நடிக்கறேன் சொல்லிட்டு இருக்க?”

ரியா: “ஆமா, என்கிட்ட அப்படி ஒரு வசனம் பேசுட்டு ஒன்னும் இல்லாம தான் நேத்து அப்படி அழுதியோ? என்கிட்ட எதையோ மறைக்குற, பொய் சொல்ற, எதும் இல்லைனு நடிக்கர, உன் கூட என்னால பேச முடியாது, அவ்ளோ தான ஷிவா நான் வெறும் ரூம் மேட் இல்லையா உனக்கு? உன் சொந்த விஷயம் எதுலையும் நான் தலையிட்டு இருக்கேன்? நீ எதும் என்கிட்ட சொல்லவே வேண்டாம் ஷிவா, அண்ணாக்கிட்ட சொல்லிரு பிளீஸ் அவருக்கு உன்ன ரொம்ப புடிக்கும், உன் மேல பைத்தியமா இருக்காரு, அவர் ஃபோட்டோ வெச்சுக்கிட்டு அழுகமா இருந்து இருந்த நான் இதை கூட உன்கிட்ட கேட்டு இருக்க மாட்டேன்.”

“உன் பதிலுக்காக காத்து இருக்காரு. நீ ஏன் இப்படி அமைதியா இருக்கன்னு யாருக்கும் தெரியல. ஆனா, நல்லா தெரிஞ்சுக்கோ ஷிவா, ரவி அங்கிள் அண்ணாக்கிட்ட உன்ன தொந்தரவு செய்ய கூடாது சொல்லி இருக்காரு, உனக்கும் விருப்பம் இருந்த தான், பேச கூட செய்யணும் சொல்லி இருக்கார். அண்ணா உன் உணர்வுக்கும், அவர் அப்பாவோட வார்த்தைக்கும் மரியாதை குடுத்து விலகி இருக்காரு, அவர் காதல் புரியல இல்லையா ஷிவா? தயவு செஞ்சு உன் காதலை சொல்லிரு”

ஷிவா: “புரியுது, ஒதுங்கி ஒதுங்கி நின்னு அவர் அவருகுள்ளாயே என்ன உருகி உருகி காதலிக்கறது தெரியாம இல்ல, எனக்கு எல்லாம் தெரியும். என்னால அவர நேசிக்க முடியும், ஆன கல்யாணம் முடியாது. காதலிச்சு அவரை விட்டு போக சொல்றியா? காதல் தோல்வியில் முடியும்ன்னு தெரிஞ்சும் எப்படி ரியா நான் என் காதலை சொல்வேன்? கண்டிப்பா யாராலும் இதை சரி செய்ய முடியாது. இதை என்னால சொல்லி புரிய வைக்கவும் முடியாது.”

“ஆதிக்கிட்ட போய் உன்ன நான் விரும்பலனு சொல்ல எனக்கு தைரியமும் இல்ல. என்ன செய்வேன் ரியா நான்? அதான் எனக்கு நானே மௌனத்தை பூட்டா போட்டுக்கிட்டு இருக்கேன். என் அம்மாக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன். எனக்காக ஊருல ஒருத்தர் காத்துகிட்டு இருக்கார், அம்மா இதை என் நன்றிக்கடன் சொல்லி கேட்டாங்க, நானும் சம்மதம் சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா இங்க வந்து ஆதியா பார்த்தது, பேசினது, என் மனசை அடக்க முடியாம அவர் மேல காதல் வந்தது எல்லாம் என் தப்பு. நான் அவரை முழுசா நேசிக்கறேன் அவரும் என்னை காதலிக்கரது தெரிஞ்சா அப்போ அவ்ளோ சந்தோசம், அவர் என்கிட்ட காதல் சொன்னதும் நானும் தான் உங்களை காதலிக்கிறேன் சொல்ல ஆசை, தவிப்பு, அவர் தோள் சாய ஏக்கம் எல்லாம் இருந்துச்சு. ஆன, செய்த சத்தியம் என்னை பேசவிடமா தடுத்தது. அவர் முகம் பார்க்கற நிம்மதிக்காக மட்டும் தான் ரியா நான் இன்னும் வேலையில் இருக்கேன். என்னால அவருக்கு பதில் சொல்ல முடியாது, நீயும் சொல்லாத ரியா இந்த உண்மை உனக்கு மட்டும் தெரிஞ்சுதா இருக்கட்டும். நான் அவர கொஞ்ச நாள் பார்த்துக்கறேன். உங்க எல்லாரையும் விட்டு போக போற நாள் வரும் வரை, உன்கிட்ட இந்த உதவியை பிச்சையா கேக்குறேன், உன்கிட்ட நடிக்கல ரியா நான். என்ன எனக்குள்ளேயே போதைக்குறேன்.”

“தெரிஞ்சே நான் அவருக்கு வலியை குடுக்க போறேன். எனக்கு வேற வழியும் தெரியல, இது அவர பொறுத்த வரை ஒருதலை காதல் அப்படியே இருந்துட்டு போகட்டும், அவர் அழகுகும், திறமைக்கும், அன்புக்கும் என்ன விட நல்ல பொண்ணு கிடைப்பா. நான் எதுக்கும் அதிரிஷ்டம் இல்லாதவ, பிளீஸ் ரியா தயவு செஞ்சு எனக்காக இதை மறைச்சுரு, அவருக்கு நான் அவரை நேசிக்கறது தெரிய வேண்டாம், ரொம்ப கஷ்டப்படுவாரு என கூறி அழுதாள். உனக்கு தெரிஞ்சா எங்க ஆதி மேல உள்ள பாசத்துல சொல்லிருவியோ பயம். அதான் உன்கிட்ட சொல்லாம இருந்தேன். என் நட்பும் காதலும் உண்மை ரியா, பிளீஸ் என்னை மன்னிச்சிடு.”

ரியாவை அணைத்துக் கொண்டு ஷிவா அழுது கரைய, ரியா சமாதானம் செய்தால். ஷிவா அழுது முடியும் வரை அமைதியாக ரியா அவள் தலை வருடிக்கொண்டு இருந்தாள்.

ரியா: “ஷிவா, உன் நிலைமை தெரியாம பேசிட்டேன், மன்னிசுரு. உன் மேல சத்தியமா சொல்ல மாட்டேன். ஒரு தலை காதலவே இது முடிஞ்சு போகட்டும். அண்ணா மேல எனக்கும் அக்கறை இருக்கு, நிச்சயம் ஆன உன்ன வற்புறுத்தி இருக்க கூடாது ஷிவா நான். யாருக்கு யாருனு அந்த கடவுளை தவிர வேற யாருக்கும் தெரியாது. ரெண்டு பேருக்கும் குடுத்து வைக்கல வேற என்ன செய்ய? நீ எவ்ளோ தவிச்சு இருப்பா? நான் லூசு தான். சாரி சாரி டீ… பிளஸ் போதும் ஷிவா அழுகாத விடு.”

“நேத்து குரு கேக்க சொன்னாரு, கடைசி முறையா இருக்கட்டும் கேட்டேன். இனி இதை பேசமாட்டேன். போ போய் முகம் கழுவிட்டு வா, ஆபீஸ் போவோம். இன்னிக்கி புராஜக்ட் மீட்டிங் இருக்கு சீக்கரம் போகல அவ்ளோ தான், நான் காபி சக்கரை போட்டு எடுத்துட்டு வரேன்.”

பின் இருவரும் கிளம்பி ஆபீஸ் வந்து சேர்ந்தனர்.

:purple_heart:

1 Like

பாகம் 9

மீட்டிங் அறையினுள் அனைவரும் நுழைய ஆதி இறுதியாய் உள்ளே வந்தான். அனைவரும் எழுந்து நிற்க, எட்வர்டு எழாமல் அவர் இருக்கையில் அமர்ந்து இருந்தார். அனைவரையும் பார்த்து புன்னகை தந்து, காலை வணக்கம் சொல்லி அவன் இருக்கையில் அமர்ந்தான்.

ஆதி: “இந்த மீட்டிங் எதுக்காகன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். நம்ம செய்ய போற புராஜக்ட் ஆஸ்திரேலியா பெயரை மட்டும் இல்ல, உங்க எல்லாரோட பெயரையும் புகழ் உச்சிக்கு கொண்டு போக போது, நான் ஆல்ரெடி டிசைன் விளக்கம் குடுத்து இருக்கேன். பிளான் பிரிண்ட் உங்க எல்லார்க்கிட்டயும் இருக்கும். இன்னிக்கி ஒருநாள் எல்லாருக்கும் டைம் பிளான் நல்ல பாருங்க, டவுட்டு இருந்த நேரடியா எங்கிட்டயே கேளுங்க”

“நான் உங்க டீம் லீட். சோ, எது செய்தாலும் என்னை கேட்காம செய்ய கூடாது, சின்ன அசைவா இருந்தாலும் எனக்கு சொல்லணும், பெர்மிஷன் மெயில் போடணும், அதுக்கு என் அப்ரூவல் மெயில் வராமல் எதையும் செய்ய கூடாது, பிளான் எங்கேயும் மாறக்கூடாது, நான் யாருக்கும் என்ன வேலை, யார் யார் எல்லாம் எந்தெந்த வேலை செய்யணும் சொல்றேன் அது போல செய்தால் போதும். டெய்லி ரிப்போட் என் மெயிலுக்கு வரணும், அதை நான் பார்த்து சரி சொன்ன பிறகு தான் அடுத்த வேலையை செய்ய போகனும். எனக்கு இங்க வேற்றுமை இல்லாம ஒற்றுமை வேணும். வேலை முழுசா நடக்கணும். இந்த புராஜக்ட் சிறப்பா செய்ய உதவுற எல்லாருக்கும் சம்பள உயர்வு உண்டு. அதே எதாவது தப்பா போன கேள்வி கேட்காமல் டெர்மினேட் பண்ணிருவேன். நீங்க எல்லாரும் எனக்கு ஒத்துழைப்பு தருவிங்கன்னு நம்புறேன்.”

“அப்புறம் இங்க வயசு, போஸ்டிங், சீனியர், ஜூனியர், எதும் இல்லை எல்லாரும் ஒரே டீம். நான் நண்பனா தான் உங்க கூட இருக்க விரும்புறேன். சோ, என்னை உங்க டீம் லீட மட்டும் பார்க்காம நண்பனாவும் பாருங்க, அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள்.”

எட்வர்டு: “தாங்க்ஸ் சார், உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி. அப்புறம் நீங்க வெறும் டீம் லீட் அவ்ளோ தான். எப்படி எங்களை எல்லாம் வேலையை விட்டு எடுத்துருவேன் சொல்றீங்க? நீங்க சிஇஓ இல்லை. உங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை. உங்க கையில பெரிய புராஜக்ட் பொறுப்பு இருக்கு, உண்மை தான். அதுக்காக எல்லாமே நீங்க தான்னு பேசக்கூடாது, இது எங்க எல்லாரையும் வர்ன் பண்ற மாறி இருக்கு, எங்களுக்கும் இந்த கம்பெனி முக்கியம் தான் சார். நாங்க யாரும் இங்கே விளையாட வரலை. சோ ரொம்ப வர்ன் பண்ணாதீங்க பிளீஸ். நான் உங்களுக்கு புரோடக் மேனேஜர் என்னையும் சேர்த்து வர்ன் பண்ணிரிங்களா?”

சிறுநகை ஒன்றை சிந்திக் கொண்டே எட்வர்டு கேட்க, ஆதியின் கண்கள் குறும்புகளை ஏற்று கொண்டது.

எட்வர்டு: “சரி சார் இந்த புராஜக்ட் உங்க எண்ணம் போல சிறப்பா செய்து முடிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பின் அனைவரையும் பார்த்து, ஓகே டீம் ஆதி சார் சொன்னது போல எல்லாரும் ஒற்றுமையா இதை செய்து முடிக்கணும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.”

“ஆதி, புராஜக்ட் ஆரம்பிக்க போற இடத்துக்கு நான் இன்னிக்கி சைட் விசிட் போணும், இப் யூ டோண்ட் மைண்ட், மே ஐ லீவ்?”

ஆதி குறும்பு புன்னகையோடு,

ஆதி: “எட்வர்டு சார் நான் இஷ்டப்பட்டா இப்போ கூட சி இ ஓ ஆக முடியும், ஆன நான் விரும்புல, நான் வழக்கமா என் ஜூனியர் டீம்க்கு இதை சொல்வது வழக்கம், இப்போ உங்களோட சேர்த்து எல்லாரும் என் டீம், நான் சொன்னதை செய்தால் போதும்.” உங்களோடு சேர்த்து என்பதில் ஆதி அழுத்தம் கொடுக்க எட்வர்டு முகம் கலவரம் ஆனது.

“மீட்டிங் இன்னிக்கி தெரியும் தானே? என்ன அவசரம்? நாளைக்கு போலாம் சைட் பார்க்க, இன்னிக்கி பிளான் ஸ்டடி பண்ணுங்க. இதான் எல்லாருக்கும் இன்னிக்கி வேலை. பிளான் விவரம் எல்லாம் தெரியணும் எல்லாருக்கும்.” ஆதியின் வார்த்தைகளில் எட்வர்டு மிரண்டு அமர்ந்து இருக்க,

புன்னகை மாறாத முகத்தோடு, அனைவரையும் பார்த்து, " மீட்டிங் ஓவர். தாங்க்ஸ் டூ அல் ஃபார் யூர் கோ ஆபரேஷன்" என்று கூறி எழுந்து சென்றான்.

ஆதி அவன் அறைக்குள் செல்லும் முன் ரியாவை தன் அறைக்கு வருமாறு கூறி சென்றான்.

ரியா ஆதியின் அறையினுள் செல்ல,

ஆதி: “வா ரியா, ஆமா ஷிவாக்கு என்னமா ஆச்சு, இன்னிக்கி மீட்டிங் முழுக்க ஷிவா கவனம் இங்கேயே இல்ல, என் முகம் பார்க்கவே இல்ல, அதான் உன்கிட்ட கேக்கலம்ன்னு கூப்பிட்டேன்.”

ரியா: “ஒன்னும் இல்லை அண்ணா, அவ அவங்க அம்மா கூட எதோ சண்டை. நான் கூட கேட்டேன் அப்செட் சொன்ன, வேற எதும் பேசல அண்ணா, மீட்டிங் இல்லைனா லீவ் போட்டு இருப்பா”

ஆதி: “அப்போ லீவ் எடுத்துக்க சொல்லு ரியா, ரிலாஸ் ஆன அப்புறம் வொர்க் பண்ணட்டும். இது முக்கியமான புராஜக்ட்”

ரியா: “சரி அண்ணா சொல்றேன்”

ஆதி: “ஆங்கிள் போன் பண்ணாற? நிச்சய தேதி சொன்னாரா?”

ரியா: “இல்ல அண்ணா இன்னும் எதும் சொல்லலை, கீதாம்மா பேசிட்டாங்க, அப்பா இனி மேல் சொல்வாரு அண்ணா”

ஆதி: “சரி மா, போ போய் வேலையா பாரு. பிரேக்ல பேசுவோம்.”

ஆதி அளித்த விளக்கங்களும், அவன் அனைவரிடமும் கேட்டுக்கொண்ட அறிவுரைகளும், அவனின் வழி நடத்தும் திறனும், அனைத்து வேலைகளிலும் தன்னையும் இணைத்துக் கொண்டு உடன் உதவி செய்யும் குணமும், தவறே செய்தாலும் அதை பொறுமையாய் எடுத்து சொல்லும் பண்பும், எப்போதும் சிரித்த முகமும், சின்ன சின்ன குறும்புகளும், அனைவரின் மீதும் அவன் காட்டிய அக்கறையும், மரியாதையும் சீனியர் டீமில் உள்ள அனைவரையும் அசந்து போக செய்தது.

புராஜக்ட் ஆரம்பித்து நாற்பது நாட்களை மிக எளிதாக கடந்து இருந்தனர். இது வரை இல்லாத
உத்வேகத்துடன் அனைவரும் வேலையில் மூழ்கி இருந்தனர் எட்வர்டுடையும் சேர்த்து. ஆனால்
ஆதியின் முன் அனுமதி கேட்டு நிற்க எட்வர்டுக்கு கோபமாக வந்தது. அவன் அனைவரிடமும் நற்பெயர் எடுப்பதும், தன்னுடைய டீம்மும் அவனின் கீழ் இயங்குவதும் அவருக்கு அவமானம் என எண்ணினார். நேரம் பார்த்து ஆதியை பழி வாங்க காத்து கொண்டு இருந்தார்.

ரியாவின் அறையில்

ரியா அவளின் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.

ரியா: “ஷிவா பத்திரமா இரு, நான் குருக்கிட்ட சொல்லிட்டு தான் போறேன். அவர் பார்த்துப்பார் உன்னை, தனியா எங்கேயும் போகாதே ஷிவா, நேரத்துக்கு சாப்பிடு, எதையும் நினைச்சு கவலை படாதே, அப்புறம் மறக்காம அம்மாவையும் கல்யாணத்துக்கு வர சொல்லிரு, நான் சொல்லி இருக்கேன் ஆனாலும் நீ சொன்ன தான் அம்மா வருவாங்க”

ஷிவா: “அடியே, லூசு ரியா. ஏன் இப்போ வாய் மூடமா பேசியே கொன்னுட்டு இருக்க என்னை? உனக்கு நிச்சியம் தான் இப்போ, கல்யாணம் வர இங்க தான இருக்க போற? இப்போவே எல்லாத்தையும் சொல்லிகிட்டு இருக்க?”

ரியா: “யாரு சொன்னா? நான் கல்யாணம் ஆகி நேர குரு வீட்டுக்கு தான் இனி வருவேன். நிச்சயம் முடிஞ்ச கையோட கல்யாணம் நடுவுல இருபது நாள் தான் கேப். இப்போவே தயார் ஆகிகோங்க ஷிவானி, மூனு நாள் கல்யாணம், ரெண்டு நாள் நிச்சயம் நீ தான் என் கூடவே இருக்க போற, நான் இப்போ முன்னாடி போறதே மும்பையுல இருக்கற என் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் சொல்ல தான். நீ ஒரு மாசம் லீவ் போடணும். அப்புறம் நான் உன்னோட இங்க வர மாட்டேன், நீ தான் என்னோட அங்க வர போற பத்து நாள் தான் இருக்கு பேக் பண்ணிக்க”

ஷிவா: “ஏய் எருமை, என்ன ஒரு மாசம் லீவா? மேடம்க்கு அப்படி ஒரு நினைப்பு வேற இருக்கா? சாரி நான் ரொம்ப பிஸி, என் டார்லிங் இங்க தனியா புராஜக்ட் செய்வாரு, அவருக்கு உதவி செய்ய வேணாமா நான்? எனக்கு கடமை தான் முக்கியம்.”

(ஷிவாவின் காதல் ரியாவிற்கு தெரிந்த பின்பு இப்படி தான் தோழிகள் இருவரும் காதலையும் காதலர்கள் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து, ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்கின்றனர்.)

ரியா: “என் அண்ணனை பார்த்தே கரைய வெச்சுறதா டீ, உன் கடமை உணர்ச்சியா பார்த்தா உனக்கு என் நிச்சயதார்த்தம் எல்லாம் கண்ணுக்கு தெரியாது போல, குருவை நீ தான் தங்கச்சியா இருந்து கூப்பிட்டு வரணும் ஷிவா, அப்புறம் அம்மாக்கு சொல்லிரு பிளீஸ்.”

(ரியாக்கு கரு நாக்கு போல…)

ஷிவா: “உன் அண்ணன் என்ன ஐஸ்கிரீமா? பார்த்து கரைய? போடி. நான் வரமா போய்ட்டா, ஆதியை நிச்சயதார்த்தம் அப்போ யார் சைட் அடிப்பா?”

ரியா: “அடி பாவி அப்போ நீ எனக்காக வரல”

ஷிவா: “கிளம்புங்க ரியா, காத்து வரட்டும்”

ரியா: “சரி, பார்த்து இரு. நான் இந்தியா போய் கால் பண்றேன்.”

ஷிவா: “சரி, குரு அண்ணா வந்தாச்சு, ஹாப்பி அண்ட் செஃப் ஜேர்னி, என்று கூற, லவ் யூ” என்று கட்டி தழுவி தோழிகள் இருவரும் விடை பெற்று கொண்டனர்.

:purple_heart:

1 Like

பாகம் 10

அடுத்த நாள் காலை, ஷிவானி அலுவலகம் உள்ளே நுழைய அவளை எட்வர்டு அவரின் அறைக்கு அழைத்து இருந்தார்.

அவரின் அறையில்

ஷிவானி: “குட் மார்னிங் சார்”

எட்வர்டு: “குட் மார்னிங் ஷிவானி, உங்க டீம் மெம்பர்ஸ் எல்லாரையும் மீட்டிங் ஹால் வர சொல்லுங்க ஒரு முக்கியமான மீட்டிங் அதுதான்”

ஷிவானி: “சரிங்க சார், டென் மினிட்ஸ் சார், 9.30 க்கு மீட்டிங் வெச்சுப்போம் நான் எல்லாருக்கும் இன்பர்ம் பண்ணிறேன்”

எட்வர்டு: “ஓகே ஷிவா, கேரி ஆன்”

ஷிவானி அறையை விட்டு செல்லவும் , எட்வர்டு முகத்தில் ஒரு வெற்றி புன்னகை,

கலந்தாய்வு அறையின் உள்ளே, எட்வர்டு வருகைக்காக பதினேழு பேர் கொண்ட இன்டீரியர் டிசைன் டீமும், அதன் லீட்டான ஷிவானியும் காத்து இருந்தனர்.

எட்வர்டு உள்ளே வந்து வணக்கம் சொல்லி உரையை ஆரம்பித்தார்.

எட்வர்டு : “வெல், எல்லாரும் கேசினோக்கான, டிசைன் வேலைகளை ஆரம்பிச்சு இருப்பீங்க, அதற்கு உதவியாக இப்போ உங்களுக்கு எல்லாம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சு இருக்கு, நாம எல்லாரும் லாஸ் வேகாஸ் இருக்கிற MGM Grand போக போறோம், ஒரு வாரம் அங்க தான் தங்கி, அதை பற்றி தெரிஞ்சுக்க போறோம், நம்ம லக், அதோட டிசைனர்ஸ் நம்மோடு ஒருநாள் இருந்து இன்டீரியர் பற்றி பகிர்ந்து கொள்ள சம்மதம் சொல்லி இருக்காங்க, சோ எல்லாரும் நாளைக்கு கிளம்பணும் தயார் ஆகி சிட்னி ஏர்போர்ட்க்கு நாளைக்கு மாலை ஆறு மணிக்குள் வந்துருங்க, 7 மணிக்கு ஃப்ளைட்”

அனைவரும் சந்தோசமாக சத்தம் எழுப்பிக் கொண்டு இருக்க, ஷிவானி என்ன செய்ய என இடிந்து போய் அமர்ந்து இருந்தாள்.

(ஷிவானி இப்போ நீ என்ன செய்ய போற? , இந்த ரியாக்கு கரு நாக்குன்னு சொன்னேன்ல… )

குரு : ஷிவானி… ஷிவானி… ஐயோ ஷிவா… “பிளீஸ் அப்புறமா கனவு காணுமா, டிக்கெட் புக் பண்ணிட்டியா? இல்லையா? ரியா உன்னையும் எங்களோட கூப்பிட்டு வரணும் ஆர்டர் போட்டு இருக்கா, பதில் சொல்லு மா”

ஷிவா: “அது… அது வந்து… நான்… லாஸ் வேகாஸ் போக போறேன், நிச்சயத்துக்கு வர முடியாது அண்ணா, இன்டீரியர் டிசைனிங் டூர் இது, நான் டீம் லீட், கண்டிப்பா போகணும். இது பெரிய வாய்ப்பு. நான் ரியா கிட்ட பேசி புரிய வெக்கறேன் அண்ணா, தாங்க்ஸ் .”

குரு : "என்ன ஷிவானி சொல்ற? அப்போ நீ வர போறது இல்லையா? எங்க நிச்சயதர்த்தம் விட உனக்கு இந்த டூர் தான் முக்கியமா? "

ஷிவா: “அண்ணா புரிஞ்சு தான் பேசுறீங்களா? எவ்ளோ பெரிய வாய்ப்பு, எப்படி தவற விட முடியும்? அதும் நம்ம இப்போ செய்யறது சாதாரண புராஜக்ட் இல்லை”

குரு : “அப்போ என் தங்கச்சி என் நிச்சயத்துக்கு வர போறது இல்ல அப்படி தான?”

ஷிவா : "அண்ணா பிளீஸ், இல்ல ஷிவா, நான் எங்க பேசணும்னு தெரியும், உன்னை வர வைக்கவும் தெரியும். கிளம்பு நீ இந்தியாக்கு "

விவரங்கள் முதலில் ஆதியின் காதுகளுக்கு எட்டி, பின் ரவியின் காதுகளுக்கும் எட்டியது, ஆனால் நிலைமை குருவிற்கு எதிராக இருந்தது. ஆம், ஆதி எவ்வளவு முயன்றும் டூரை அடுத்த வாரம் மாற்ற முடியும், ஆனால் MGM Grand இன்டீரியர் டிசைனர்கள் உடனான சந்திப்பை மாற்ற முடியாது என்று கூறி விட , இனி என்ன செய்வது என்று அறியாது ஆதி எட்வர்டின் உதவியை கேட்க எண்ணி இருந்த நேரம் ஷிவானி ஆதியை காண அவன் அறைக்கு வந்து , இருந்தாள்.

ஆதி: “சொல்லுங்க ஷிவா, எதும் பிராப்ளம்? ஆர் எனி ஹெல்ப்?”

ஷிவா: “சார், நான் டீம் கூட லாஸ் வேகாஸ் போக பெர்மிஷன் அப்ரூவல் பண்ணுங்க, நாங்க போய்ட்டு வரோம்.”

ஆதி: “இல்ல, ஷிவா. இப்போ வேண்டாம், என்கேஜ்மெண்ட் அப்புறம் போங்க இன்னும் எட்டு நாள் தான் இருக்கு”

ஷிவா: “சார், இதுவரை நம்ம செய்யாத புராஜக்ட் இது, யாருக்கு ஈசியா கிடைக்காத வாய்ப்பு கிடைச்சு இருக்கு இப்போ போய் பெர்சனல் தான் முக்கியம் இருந்தா அது பெரிய தப்பு, வாய்ப்பு கிடைக்காது இந்த மாறி திரும்ப, எனக்கு என் கடமை முக்கியம், நானும் இந்த புராஜக்ட் நல்ல வர எதாவது செய்யணும் சார், இதுல உங்க பேர், கம்பெனி பேர் எல்லாம் அடங்கி இருக்கு, என் கடைமையும் இது தான் அப்ரூவல் குடுங்க சார் பிளீஸ்”

ஆதி: “பிளீஸ் ல சொல்லாத ஷிவா, நீ சொன்ன சரி.”

ஷிவா: “சார்…?”

(நாலு வார்த்தை கூட பேசாத நீ, இப்படி பத்தி பத்தியா பேசினா பையன் இப்படி தான் குழம்பி போவான். இதுல பிளீஸ் வேற சொல்ற…)

ஆதி: “சாரி, சாரி… நான் அப்ரூவல் பண்ணி மெயில் சென்ட் பண்ணிறேன், யூ ஜஸ்ட் கேரி ஆன்.”

ஷிவா: “தாங்க் யூ சார்”

( எட்வர்டு, அதிக வற்புறுத்தலில் அந்த நாளை சந்திப்புக்காக வாங்கி இருந்தார். அதும் சரியாய் குருவின் நிச்சய தேதி அறிந்து, இப்போது தேதியை மாற்ற ஆதியின் வார்த்தைகள் உதவாது போனது, எட்வர்டு ஆதியின் கவலையான முகம் கண்டு… மகிழ்ந்தார். அவரால் அவனுக்கு எற்படும் சிறு சலனம் என்றாலும் இன்பமே அவருக்கு இப்பொழுது.)

நிலைமையின் சிக்கல் புரிந்த பின் குருவால் எதுவும் பேச முடியவில்லை, ரவியின் நிலையும் அதுவே வந்த வாய்ப்பை விட முடியாது. இது மிக முக்கியமான தருணம் என உணர்ந்த ஷிவானி, ரியாவிடம் நிலைமையை கூற, அவள் சோர்ந்து போனால், பின் ரியாவிற்கு சமாதானம் பல சொல்லி ஷிவானி லாஸ் வேகாஸ் கிளம்பினாள். ஆதிக்கோ இது பெரும் வருத்தத்தை தந்தது.

நாட்கள் வேகமாக சென்றது, அனைவரும் இந்தியா பயணம் ஆகி இருந்தனர்.

ரியாவின் நிச்சயம் இன்று, இன்டீரியர் டிசைனர்கள் உடனான சந்திப்பும் இன்று, அவரவர் கடமைகள் சரியாய் நடந்தது.

அழகிய ஓவியமாய், குருவின் விரல் பற்றி மோதிரமிட்டு ரியாவும், குருவோ அவள் விரல்கள் வருடி மோதிரமிட, அவள் வெக்கம் சிந்த, கேலிகளும் கிண்டல்களும் என அவர்கள் வாழ்வின் புதிய தொடக்கம் அரங்கேற, நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது.

இங்கே இவளோ கடமையே கண் என செய்ய, மனம் எல்லாம் ரியாவுடன் இருந்தது.

அவளை இவளும், இவளை அவனும் நினைத்து ஏக்கத்துடன் இருக்க, இன்னும் இருபது நாளில் திருமணம் என முடிவு ஆனது. நிச்சயம் முடிந்து அனைவரும் ஆஸ்திரேலியா திரும்பி வரவும், ஷிவானி முன்னரே வந்து இருந்தால். ஆதியின் அறையில் குருவும் ஜெய்யும் வேலை நேரம் முடிந்து பேசி கொண்டு இருக்க, கதவு தட்டும் ஓசை கேட்க ஆதி கம் இன், என கூறினான், ஷிவானி உள்ளே வர ,

ஜெய்:“வாங்க மேடம், டூர் லா எப்படி இருந்தது, லாஸ் வேகாஸ் போய்ட்டு வந்து இருக்கீங்க”

ஷிவா :“அண்ணா, பிளீஸ் ஆல்ரெடி நான் அப்செட், ரியா முகத்துல எப்படி முழிக்க போறேன் தெரியல, நீங்க வேற கிண்டல் பண்ணாதீங்க, கடமையா? நட்பா? கேட்ட எனக்கு கடமை தான் முக்கியம். என் தப்பு இதுல என்ன?”

ஜெய் :"ஷிவா, கூல். நான் சும்மா வம்புக்கு இளுக்க கிண்டல் பண்ண நீ இப்படி ஃபீல் பண்ற, விடு மா, ரொம்ப நல்லா நிச்சியம் முடிஞ்சுது. நீ இல்லாதது குறை தான், அதுதான் கல்யாணம் இருக்கே, ஒரு கை பார்துருவோம் "

ஷிவா:"ஆமா அண்ணா, அதுதான் லீவ் சொல்ல வந்தேன். ஆதி சார், “என் லீவ் மெயில் அப்ரூவல் பண்ணுங்க, நான் கல்யாணத்துக்கு பத்து நாள் முன்னாடியே போக போறேன். இந்த முறை எந்த புராஜக்ட் வொர்க் இல்லாம பார்த்துக்கோங்க சார் பிளீஸ், கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துறேன் சொல்லி தான் அவளை நான் சமாதானம் பண்ணினேன், லீவ் அப்ரூவல் பண்ணுங்க சார் பிளீஸ்”

ஆதி " லீவ் அப்ரூவல் பண்ண முடியாது ஷிவானி, என்ன சார்ன்னு கூப்பிட்டா, கண்டிப்பா கிடைக்காது.
குரு, ஜெய் எல்லாரும் அண்ணா, நான் மட்டும் சார் உங்களுக்கு? இல்லையா?"

ஷிவா:“ரியா பார்ட்னர் எனக்கு அண்ணா முறை, அவரோட ப்ரெண்ட் ஜெய் அண்ணா அவளுக்கு அண்ணா, அப்போ அவர் எனக்கும் அண்ணா தானே அதான்.”

(அய்யோ ஷிவா, இப்படி ஒளாராத டீ, மாட்டிக்குவ)

குரு :“ஆதியும் என் பிரென்ட் தான், என் உயிர் நட்பு, அவனும் ரியாக்கு அண்ணா தான். சோ, நீயும் ஆதியை அண்ணனே கூப்பிடு.”

(த்ரீ இடியட்ஸ் மைண்ட் வாய்ஸ் " மாட்டிக்கிட்ட ஷிவானி")

ஷிவா : " இல்ல அண்ணா ஆதி சாரை, சார், சார் கூப்பிட்டு பழகி, அண்ணானு கூப்பிட வரல… இனி மேல் கூப்பிட டிரை பண்றேன் அண்ணா."

" சார் என் லீவ் அப்ரூவல் பண்ணுங்க பிளீஸ், எனக்கு ஒரு கால் பேசணும் நான் கிளம்பறேன், தாங்க்ஸ்"

ஜெய்:" வாய் திறந்து சொல்றள பாரு, என் தங்கச்சி, ஆனாலும் உன் லவ்வர்க்கு ரொம்ப அழுத்தம் டா ஆதி."

குரு:" விடு டா, என் கல்யாண அப்போ, ஷிவா அம்மா வருவாங்க, அவங்க கிட்டயே நேருல பொண்ணு கேட்டுருவோம்"

ஆதி:" அவ சொல்லணும் டா என் காதலுக்கு பதில் அதுக்கு அப்புறம் தான்"

:purple_heart:

1 Like

பாகம் 11

ஒரு புறம் முதல்கட்ட வேலைகள் தொடங்கி இருக்க, புராஜக்ட் மொத்த பொறுப்பும் ஆதியின் தலையில் சுமையாய் விழுந்தது. ரவி, ஜோதி, கீதா என காலை பொழுது முழுதும் கல்யாண அழைப்பு, பரிசு பொருள், ஆடை என வாங்க சென்று விடுவர். மாலை பொழுதுகள் குரு, ஜெய், ஆதிக்கும் என ஒதுக்க பட, கல்யாண வேலைகள் துரிதமாக நடந்தது. கீதாவும், ரவியும் இந்தியா - ஆஸ்திரேலியா என சென்று வர , ஜோதி இங்கு ஜெய், ஆதியின் உதவியோடு வரவேற்புக்கு செய்ய வேண்டிய வேலைகளை செய்து கொண்டு இருந்தார், குருவின் வீட்டை விட ஆதியின் வீட்டில் தான் கல்யாண கலை கட்டி இருந்தது.

ஷிவானி, அதற்குள் அவளுக்கும் ரியாவிற்கு புடவைகள், பரிசு பொருள்கள் என வாங்கி கொண்டு இருந்தாள். அவளின் அம்மாவிற்கு ரியாவின் திருமணம் பற்றியும், அவள் அதற்காக இந்தியா வர போவதையும் அறிவித்து இருந்தாள். தன்னை வந்து பார்க்க வருமாறும் துணைக்கு அவளின் நண்பன் விக்கி உடன் அழைத்து வருமாறு கூறினாள்.

சொன்னது போல ஷிவா திருமணத்திற்கு பத்து நாள் முன்னரே சென்று விட, ரியா அவளை கட்டிக்கொண்டு மகிழ்ந்தாள். ரியாவின் அப்பா, அத்தை என அனைவரும் ஷிவானியுடன் சேர்ந்து கொள்ள, கல்யாண வேலைகளில் நேரம் வேகமாக போனது.

ரியாவின் நண்பர்கள் குழு வர, அவர்களோடும் ஷிவானி ஓட்டி கொள்ள கேலி, கிண்டல், வெக்கம், புன்னகை என சந்தோசத்தின் மனமே வீடு எங்கும் நிரம்பி வழிந்தது.

கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில், ஷிவானியின் அம்மாவும், அவளின் ஆருயிர் நண்பனும் வர, ஷிவாவின் ஆனந்தம் இரட்டிப்பு ஆனது, அவளின் அம்மாவும் அனைவரிடமும் ஒட்டி கொண்டார். விக்கியின் உதவியும் கிடைக்க, ரியாவின் தந்தைக்கு, பெரும் உதவியாக இருந்தது.

திருமணத்திற்கு ஐந்து நாள் முன்னர், ரவி, ஜோதி, குரு, கீதா, ஆதி, ஜெய் மற்றும் அவர்களுது ஜூனியர் டீம் நட்புகள் என அனைவரும் வந்து சேர்ந்தனர். அவர்களை ரியாவின் தந்தை அழைத்து சென்று அவர்களுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஹோட்டல் அறைகளில் தாங்க வைத்து விட்டு ஓய்வு எடுத்து பின் மாலை அனைவரும் இரவு உணவுக்கு வீட்டிற்க்கு வந்து விடுமாறு சொல்லி சென்றார். அனைவரும் ஓய்வு எடுக்க அவரவர் அறைக்கு சென்றனர், ஆதி, குரு, ஜெய் மூவருக்கும் ஒரு அறையே போதும் என வாங்கி கொண்டனர். குரு சோகமாக அறையினுள் வர, ஆதி சலிப்பாக உள்ளே சென்று கட்டிலில் அமர, ஜெய் இருவரையும் கேள்வியாக பார்த்தான்.

ஆதி: “ஃப்ரெஷ் ஆகி ஷிவாவை பார்க்க போலாம் இருந்தேன் டா, இவன் மாமா சாய்ந்தரம் வாங்கானு சொல்லிட்டு போய்ட்டார், அதான் ஃபீலிங்.”

குரு : “டேய், இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா? நான் பார்த்து 1 மாசம் ஆச்சு டா, பத்து நாளுக்கு ரொம்ப பண்ணாத”

ஆதி : “உண்மை தான், ஆன நீ ரியா கூட வீடியோ கால் பேசற, எப்பா வேணுனாலும் பேசலாம், எனக்கு அப்படியா? அவ முகம் தான் பார்க்க முடியும், அதும் பத்து நாள் ஆச்சு மச்சி புரிஞ்சுக்க”

ஜெய்: “சரி டா, சாய்ந்தரம் சீக்கரமே போவோம் இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, இல்ல என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் பாவம், உங்க முகத்தை பார்த்து எதாவது ஆகிற போது” என அவன் கூறி சிரிக்க, ஆதி அவனை அடிக்க துரத்தினான்.

அந்தி மாலை நேரம்,

ஜெய் குளித்து வெளியே வர, குருவும் ஆதியும் தயாராகி கொண்டு இருந்தனர், அதை கண்ட ஜெய் ஒரு நிமிடம் வாய் அடைத்து போனான்.

அத்தனை கம்பிரமாகவும், அழகாகவும் இருவரும் நின்று இருக்க, அவனால் பேச கூட முடியா நிலை.

ஜெய்: “பையன் என்னாலேயே கண்ணு எடுக்க முடியலடா உங்க மேல இருந்து, அவ்ளோ அழகு டா மச்சி நீங்க ரெண்டு பேரும். ச்சா, எங்க அம்மா என்னையும் பொண்ணா பெத்து இருக்கலாம் என கூறி கொண்டு இருக்க”

ஆதி: "அட ச்சே… நீ இப்போ பேசுறதை விட்டு கிளம்பல, இருக்குடா உனக்கு "

ஜெய் உடை மாற்றி கொண்டே,

ஜெய் : “பாஸ் இன்று மணமகன், ஹீரோ, விழா நாயகன் எல்லாம் குரு தான். மாப்பிள்ளை அவனே பொறுமையா இருக்கான் நீ ஏன்டா இப்போ டென்ஷன் ஆகிட்டு இருக்க?”

ஆதி: “அவன், ரியா கூட சாட் பண்ணிட்டு இருக்கான் அதுனால பொறுமையா இருக்கான், என் கவலை எனக்கு, நீ சீக்கிரம் கிளம்பு”

ஜெய்: “அஞ்சு நிமிஷம் மச்சி, ரெண்டு பேரும் இவளோ அழகா, ஸ்மார்ட்டா இருக்கீங்க. நான் அதே மாறி ரெடி ஆக வேண்டாமா? உங்க பக்கத்துல நின்னு நான் மொக்க வாங்கனும் அப்புறம்,”

ஆதி: “பேசாம சீக்கிரம் கிளம்பு”

சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் ஜெய் கிளம்பி விட, அறை விட்டு வெளியே வந்த மூவருக்கும் அனைவரின் முறைப்புகளும் இலவசமாக கிடைத்தது.

ஆதியும் குருவும் ஜெய்யை முறைக்க…

ஜெய்: “என் சிஸ்டர்ஸ் பாக்க போறோம், ஜாலியா வாங்க டா”

கார் புறப்பட்டது. அமைதியான முப்பது நிமிட பயணத்தின் பின் ரியாவின் வீடு வர, அனைவருக்கும் இன்முகத்துடன் ரியாவின் உறவுகள் வரவேற்பு தர, அனைவரும் உள்ளே சென்றனர். “கேமரா ஆன்” என ஜெய் நக்கலாக ஆதியின் காதுகளில் கூற, அவனை முறைத்து வைத்தான் ஆதி. அனைவருக்கும் மாலை நேர டீயும், பல சுவையுள்ள பலகாரங்களும் இனிப்பும் கொடுத்து கவனித்தனர். ரியாவை அழைத்து வந்து குருவின் பக்கத்தில் அமர்த்தினர். பெண்ணுக்கே உரித்தான வெக்கம் சூடி கொண்டு ரியா தவிக்க, புது வித கூச்சம் கொண்டு குருவும் தவிக்க, பல கேலி, கிண்டல்களின் நடுவில் அவர்களை ஜெய் பலவித கோணங்களில் கிளிக் செய்து கொண்டு இருந்தான்.

(நம்ம ஹீரோ என்ன பண்ணிட்டு இருக்காருனு நீங்க கேக்கறது கேட்குது, ஆன நான் டீ, சமோசவோட பிஸியா இருக்கேன். ம்ம் பொறுங்க பா பார்த்திட்டு வரேன்.)

ஆதி அவன் அன்னையின் பக்கத்தில் அமர்ந்து ஜெய் கூறியது போல அவன் கேமராவை சுழற்றி கொண்டு இருந்தான் ஷிவாவின் பிம்பம் பெற, ஆனால் மிஞ்சியது எல்லாம் ஏமாற்றமே வந்து அரைமணி நேரம் ஆன பின் கூட அவளின் தரிசனம் கிடைக்காமல் போக அவன் முகம் சோகம் பூசியது.

அதை கவனித்த ரவி, ரியாவின் தந்தை செல்வத்திடம்: ஷிவானி எங்க? அவளை பார்க்கவே இல்ல என கேட்க,

செல்வம் : “ஷிவா, அவ அம்மா, ரியாவோட அத்தை எல்லாரும் கடைக்கு போய் இருக்காங்க, இப்போ வந்துருவாங்க கொஞ்சா நேரத்துல, ஷிவா ரொம்ப நல்ல பொண்ணு, ஓடி ஓடி வேலை செய்யுற” என ஷிவா பற்றி அவர் கூறி கொண்டு இருக்க, அதை கேட்டு கொண்டு இருந்த ஆதியின் கைப்பேசி சிணுங்க, அதை எடுத்து கொண்டு வாசல் வரவும் கால் கட் ஆகியது. அந்த வாசலில் ஒரு கார் வந்து நின்றது, அதில் இருந்து ஷிவாவுடன் இறங்கிய இளைஞன்.

:purple_heart:

2 Likes

பாகம் 12

அந்த வாசலில் ஒரு கார் வந்து நின்றது, அதில் இருந்து ஷிவாவுடன் இறங்கிய இளைஞன்.
(வேற யாரு நம்மா விக்கி தான், இது என்னடா இவன் வில்லான வருவனோ நினைக்காதீங்க மக்களே)

கையில் பல பைகளை கொண்டு வந்து வாசலில் வைத்து விட்டு திரும்ப, ஷிவானி, அவள் அம்மா, ரியாவின் அத்தை என அனைவரும் இறங்கி வர ஷிவானி தூக்க முடியாமல் பைகளை தூக்கி வந்ததை கண்ட விக்கி, அவளை முறைக்க அதை கண்டு ஷிவானி பைகளை அவனிடம் கொடுத்து விட்டு சிரித்து பேசி நடந்து வந்தாள்.

அதற்குள் முன்னே வந்த ரியாவின் அத்தை (லக்ஷ்மி) ஆதியை பார்த்து

லக்ஷ்மி : “வாங்க தம்பி, ரொம்ப நேரம் ஆச்சா? ஏன் இங்க நின்னுட்டு இருக்கீங்க?”

ஆதி : “இப்போ தான் பெரியம்மா வந்தோம், ஃபோன் கால் வந்தது, அதுதான்”

ஷிவாவின் அம்மாவை (பத்மா) பார்த்து வணக்கம் சொன்னான், அவர் சிரிக்க இவன் தன்னை ஆதி எனவும் ஷிவா உடன் வேலை செய்வதாகவும் அறிமுகம் செய்து கொண்டான். அவர் இவனை நலம் விசாரிக்க, இவனும் விசாரித்து கொண்டான்.

கால் பேசிவிட்டு வருவதாக கூறி நகர்ந்தான். வாசலில் அவன் நிற்பதை கவனிக்காத ஷிவாவோ, விக்கியுடன் பேசிக்கொண்டே வர, ஆதியை தேடி வந்த ஜெய் அவனை பெயர் சொல்லி அழைக்க அந்த சத்தத்தில் அவர்கள் பேசுவது தடை பெற அந்த சூழலுக்குள் வந்தனர் ஷிவாவும் விக்கியும்.

ஷிவா ஆதியை கண்டு புன்னகை பூத்து அருகில் வந்தாள் அதற்குள் ஜெய் அவனை நெருங்கி வர, ஷிவானி ஜெய்யை பார்த்து, அண்ணா எப்படி இருக்கீங்க? சார் எப்போ வந்தீங்க என கேட்க,

ஜெய்: " இப்போ தான் வந்தோம், நாங்க நல்ல இருக்கோம் ஷிவா" என கூற ஆதி லேசாக சிரித்து வைத்தான். ஆதியின் விழிகள் விக்கியை கேள்வியாய் பார்க்க, ஷிவானி விக்கியை நோக்கி,

ஷிவா : “விக்கி, இவங்க தான் என் டீம் லீட், குரு அண்ணவோட க்ளோஸ் ப்ரெண்ட், பேர் ஆதித்யா. அப்புறம் இவர் தான் ஜெய் அண்ணா, கட்டுமான கட்டிடக்கலைஞர் (structural Architect)” என அறிமுகம் செய்து வைத்தாள்.

ஜெய் : “சரி, ஷிவானி இவரு யாருன்னு சொல்லவே இல்ல”

ஷிவா: “ஓஹோ ஆமா அண்ணா, இவன் விக்னேஷ், எனக்கு மட்டும் விக்கி, என் உயிர் நட்பு”

விக்கி: “அவ்ளோ தான டீ?”

ஷிவா: "அவனை பார்த்து, புன்னகையோடு எனக்கு “எல்லாமே” இவன் தான் "

ஆதி ஷிவாவின் கண்களை குழப்பமாக பார்க்க,

ஷிவா: “விக்கியை பார்த்து சிரித்து போதுமா சொல்லியாச்சு, அப்புறம் பெரிய டாக்டர் கூட, அதும் அமெரிக்கா போய் படிச்சுட்டு வந்து இருக்கார்” என அடுக்கி கொண்டே போக

விக்கி அவளின் வாயை அவன் கைக்கொண்டு மூடி, “போதும் போதும் விடு டீ வாலு” என கூறி சிரித்தான். ஷிவாவை அவள் அம்மா அழைக்க, சா அப்புறம் பார்க்கலாம் என கூறி இருவரிடமும் விடை பெற்று சென்றாள். விக்கியும் சிரித்துவிட்டு அவள் பின் தொடர இருவரும் மீண்டும் சிரித்து பேசி கொண்டே செல்ல,

ஆதி இங்கு கொஞ்ச கொஞ்சமாக உடைந்து கொண்டு இருந்தான். அவன் காதுகளில் “எல்லாமே” என்ற சொல் மீண்டும் மீண்டும் கேட்க அதான் அர்த்தம் என்ன என அவனையே வினாவி கொண்டான்.

ஜெய் நான்காம் முறை அழைக்க சுயநினைவு வர, அவனின் வாடிய முகமே ஜெய்யுக்கு அத்தனையையும் கூறியது. ஜெய் எதோ சொல்ல வாய் எடுக்க, ஆதி தடுத்தான்.

ஆதி : “ஜெய் பிளீஸ் டா, வீட்டுல யாருக்கும் இது தெரியா வேண்டாம். அப்புறம் முக்கியமா குருக்கு, நான் ரூம் போறேன். தலை வலி சொல்லி கிளம்பி போனதா சொல்லிரு டா, இங்க இருந்தா நான் ரொம்ப ஃபீல் ஆகி அது அவன் சந்தோசத்தையும் சேர்த்து நாசம் பண்ணிரும்”

ஜெய் : “டேய், தப்பா யோசிக்காத ஆதி, அப்படிலாம் இருக்காது டா, அவரு ஷிவா ப்ரெண்ட் அவ்ளோ தான், நீ நினைக்கிற மாதிரி எதும் இருக்காது” என சமாதானம் கூறினான்.

ஆதி: “வெறுமையாக சிரித்தான். நான் நினைக்கற மாதிரின்னா? நான் என்ன நினைக்கிறேன் உனக்கும் புரியுது இல்லையா? நான் சொல்லவே இல்லையே டா என்ன நினைக்குறேன்னு உன்கிட்ட, அப்புறம் எப்படி சொல்ற ஜெய்? விடு இதுதான் முடிவு போல”

ஜெய்: “இல்ல டா, மனசு விடாத, நான் ஷிவா கிட்ட பேசி…”

ஆதி: “வேண்டாம் மச்சி, அப்பாக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாரு, அதும் இல்லாம பேசி வாங்க இது புராஜக்ட் இல்ல, காதல்.”

ஜெய்: “சரி நீ கிளம்பு, நான் எல்லாரையும் சமாதானம் பண்ணிக்கறேன்.”

இதை எல்லாம் மீதம் உள்ள பைகளை எடுக்க வந்த விக்கி அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான்.

ஆதி சென்று விட, உள்ளே ஜெய் வருவதை பார்த்து மறைந்து இருந்த விக்கி, சுதாரித்துக் கொண்டு பைகளை எடுப்பது போல இயல்பாக இருக்க, ஜெய் உடன் வந்து பைகளை எடுத்து கொண்டான். இருவரும் சிநேகா புன்னகை சிந்த, உள்ளே சென்றனர்.

ஜெய் மட்டும் உள்ளே வருவதை பார்த்த ரவி, ஆதி எங்கே என வினவா? ஜெய், அவனுக்கு தலைவலி என்று கூறி, அவரை சமாளித்து விட்டான். பின், ஜோதி, கீதா என அனைவரும் அதே கேள்விகளை கேட்க ஜெய்க்கு அனைவரையும் சாமளிப்பதே வேலையாகி போனது… அன்று இரவு அங்கேயே உணவு உண்டு, கல்யாண வேலைகளை பற்றி பேசி கிளம்பி வந்தனர்.

இங்கே ஆதி, அவளின் மௌனத்திற்கு விடை கிடைத்து விட்டதாக நினைத்து அழுது கரைந்தான். விக்கியை பார்த்த போது அவள் கண்களில் இருந்த ஒளியே அவனை இன்னும் பைத்தியமாக செய்தது. ஷிவா நீ இல்லாம நான் எப்படி? சிறு பிள்ளை போல் அழுது துடித்தான்.

(ஷிவா இதெல்லாம் உன்னால தான் ஆதியை பார்த்த களிப்பு உன் கண்ணுல, அது தெரியாம பாவம் அழுகிறான் பாரு… அது என்ன எல்லாமே? )

குருவும் ஜெய்யும் அறையின் உள்ளே வந்தனர். ஆதி குளியலறையில் இருப்பது தெரிந்தது. குளித்து வெளியில் வந்த ஆதி சிரிக்க, குரு முறைத்தான்.

குரு : “உன் வேலை முடிஞ்சதும் கிளம்பி வந்துட்டா இல்லையா? எங்கிட்ட சொல்லாம வர அளவுக்கு தல வலியா? கவல படாத இனி உனக்கு தல வலியே வராது”

ஜெய்: “அட, சூப்பர், அப்படி என்ன டிரேட்மெண்ட்டு அவனுக்கு மட்டும் ஸ்பெஷலா?”

குரு: “ஏன் உனக்கும் வேணுமா?”

ஜெய்: "வேண்டாம் வேண்டாம் "

ஆதி: “அப்புடி என்னடா செய்ய போற சொல்லு எனக்கே எக்ஸிட்மென்ட் தாங்கல” ️

குரு: “உன் தலையா ஒடைக்க போறேன்.”

ஆதி: “அய்யோ டேய், ஷிவா பார்க்கவே அரை மணி நேரம் வெயிட் பண்ணேன், அப்புறம் போன் கால் பேசிட்டு இருக்கும் போதே கால் கட் ஆகி, பின்ன திருப்பி பேசி, தல வலி. அத வெச்சுக்கிட்டு ஷிவாவை எப்படி பார்க்க முடியும்? அதான் அவளை பார்த்ததும் கிளம்பிட்டேன். ஆமா நீ இங்க வந்து எதுக்கு இப்போ சீன் போடுற? ரியா முன்னாடி நான் உனக்கு தெரியவே இல்லைதானே? கார் ஏறி உக்காந்துட்டு மெசேஜ் பண்ணுற? நான் தான் உன் தலையா ஒடைக்கணும்.”

குரு: “சரி தான் டா, சாப்பிட வர வரை நான் யாரையும் கவனிக்கவே இல்லை, இன்னிக்கி சொல்ல முடியாத கூச்சம் எனக்கு, ஆம்பளைக்கும் வெக்கம் வரும்ன்னு இன்னிக்கி தான் தெரிஞ்சுக்கிட்டேன். அவ கண்ணை கூட பார்க்க முடியலை, விக்கியும், ஜெய்யும் இல்லாம போய் இருந்தா என் நிலைமை மோசாகி போய் இருக்கும்.”

சரி, நான் ஃப்ரெஷ் அகிட்டு வரேன். குரு சொல்லிவிட்டு குளியலறை சென்றான்.

ஜெய்: "ஆதியை கட்டிக்கொண்டு நான் ரொம்ப பயந்து போய் இருந்தேன், ஆர் யூ அல்ரைட்? "

ஆதி எதுவும் பேசாது அவன் அணைப்பில் இருந்தான். சில நிமிடங்களுக்கு பிறகு விலகி,

ஆதி : “அழுதேன் எவ்வளவு நேரம் தெரியுல, குரு போன் பண்ணி, ஏன் டா விட்டு வந்த? இன்னும் தலை வலிக்குதா? எதாவது சாப்பிட்டியானு கேட்டான். நான் இனி தான் டா, நீ வா பேசிப்போம் சொல்லி வெச்சுட்டேன். ஓடனே எழுந்து ரூம் க்ளீன் சொல்லிட்டு, குளிக்க போய்ட்டேன். பசிக்குது, சாப்பிடணும்.”

“நான் சரி ஆகிருவேன் டா, இப்போதைக்கு எல்லாத்தையும் மறைச்சு, மறந்து, குருக்காக வர போற பத்து நாளும் சிரிப்பு, கொண்டாட்டம் தான். அவன் எவ்வளவு சந்தோசமா இருக்கான் பார்த்தியா? சோ சொல்லாத, யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ”

“தாங்க்ஸ் டா, நீ வந்ததும் உன்ன கட்டிக்கணும் நினைச்சுட்டு இருந்தேன். நீயே கட்டிக்கிட்டா”

ஜெய்: “டேய் நான் உன் ப்ரெண்ட் டா, நீ சொன்னதெல்லாம் சரி ஆதி, மறந்துரு டா எல்லாத்தையும்”

ஆதி: “பசிக்குது டா சாப்பிட போலாமா?”

குரு: “வா போகலாம், ஜெய், நீ ஃப்ரெஷ் ஆயுட்டு ரெஸ்டாரன்ட் வந்துரு”

ஜெய்: "சரி டா "

இருவரும் வெளியில் வர,

ஜோதி: “என்கிட்ட கூட சொல்லாம வந்து இருக்க, என்னாச்சு ஆதி? முகம் எல்லாம் ஏன் வாடி போய் இருக்கு? எதும் பண்ணுதா உடம்புக்கு?”

ஆதி: “அம்மா, பிளீஸ் தல வலி அவ்ளோ தான். ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிருவேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க போங்க”

ஜோதி: “என்னமோ போ டா, உன் முகம் சரியில்லை, சாப்பிட்டியா?”

ஆதி: “ரொம்ப பசிக்குது, சாப்பிட தான் மா போறேன்.”

ஜோதி: "சரி சரி சீக்கிரம் சாப்பிட்டு தூங்கு, உனக்கும் தான் குரு. குட் நைட்.

:purple_heart:

1 Like

பாகம் 13

இருவரும் ரெஸ்டாரன்ட் உள்ளே வந்து அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்து உணவு ஆர்டர் கொடுத்து விட்டு,

குரு: “டேய், இன்னிக்கி ஷிவா கூட ஒரு பையன் டா, ரியா சொன்ன அவன் தான் ஷிவாக்கு பேஸ்ட் ப்ரெண்ட்ன்னு, நல்ல அழகா இருக்கான், டாக்டர்னு சொன்ன ஷிவா, நல்ல பேசினான், எனக்கு அவனை ரொம்ப பிடிச்சு இருக்கு, நீ பேசினியா? நம்மள மாறி அவனும் ஷிவாவும் சின்ன வயசுல இருந்து ப்ரெண்ட்ஸ் சொன்னான், இன்னிக்கி நீ இல்லாத குறைக்கு அவன் தான் இருந்து என்னை பார்த்துக்கிட்டான், ஜெய் பாவம் எல்லாரும் அவனை புடிச்சு ஆதி எங்க, ஆதி எங்கனு கேட்டு வறுத்தாங்க”

குரு பேசுவதையும் அதை கேட்டு ஆதியின் முகம் மாறுவதையும் கவனித்து கொண்டே வந்த ஜெய்,

ஜெய்: “குரு, அவனுக்கு தல வலின்னு சொன்னான். பேசி பேசி அதிகம் பண்ணாம, கொஞ்சம் நேரம் வாயிக்கு ரெஸ்ட் குடு அவன் சாப்பிடட்டும்”

ஆதியின் உணவு வரவும், குருவின் அலைபேசி சிணுங்க அதை எடுத்து கொண்டு வெளியில் சென்றான். ஆதி கண்களை துடைத்து கொண்டான். ஜெய் அமைதியாய் அவன் இடக்கையை அழுத்த,
ஆதி பாதி உண்டும் உண்ணாமலும் வந்து, தூக்கம் வருவதாக சொல்லி கட்டிலில் படுத்துகொண்டான்.
அசதியில் ஜெய்யும் குருவும் தூங்கி விட, ஆதியோ துக்கத்தால் தூக்கம் இன்றி தவித்தான்.

இங்கே ஷிவானி மொட்டை மாடியில் விக்கியுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

விக்கி: “ஷிவா, உன்கிட்ட ஒன்னு கேக்கணும்”

ஷிவா: “என்னடா என்ன விஷயம்?”

விக்கி: “லவ் பண்றிய டீ? ஆதி தான? ரொம்ப அழகா இருக்காரு, அவர் கண்ணுல அப்படி ஒரு காதல் உன்மேல, உனக்கும் தான? ச்சா, உன் கண்ணு எப்படி விரிஞ்சுது தெரியுமா? அவரை பார்த்து உனக்குள்ள அப்படி ஒரு சந்தோசம் பேசும் போது அவர் கண்ணு பார்த்தே பேசின, அவர் கண்ணால என்ன பார்த்து எதோ கேட்டாரு, நீயும் என்ன அறிமுகம் பண்ண ஆரம்பிச்சுட்டா, காதலா சொல்லு டீ, உனக்கு சரியான பையன் தான் அவரு”

ஷிவா: “விக்கி”

விக்கி: “இங்க பாரு, நான் பேசுறேன், வீட்டுல சம்மதம் நான் வாங்கி தரேன். நீ சாதாரண பையனையா லவ் பண்ற? எவ்ளோ பெரிய இடம், யாரது வேண்டாம் சொல்வாங்க? நீ இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் எல்லாம் உன்ன விட்டு போக போது என்ன நாங்க தான் உன்னை அடிக்கடி பார்க்க முடியாது.”

ஷிவா: “விக்கி கொஞ்சம் நான் சொல்றதை கேளு, நான் அவரை காதலிக்கறது உண்மை தான் ஆனா இதுவரை அவர்கிட்ட நான் என் விருப்பத்தை சொன்னதே இல்லை. அப்புறம் நீயே சொன்னியே அவர் எவ்ளோ பெரிய இடம்னு அவருக்கும் எனக்கும் என்ன வெச்சாலும் எட்டாது, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு பண்ணி இப்போ புராஜக்ட் செய்யறாங்க, நான் அங்க சாதாரண ஒரு டிசைனர் அவ்ளோ தான். அவர்கிட்ட சம்பளத்துக்கு வேலை பார்க்கறேன். அவர் ஸ்டேட்டஸ் என்ன? என் ஸ்டேட்டஸ் என்ன? விக்கி நடக்காத எதையும் யோசிக்க கூடாது. அப்புறம் அம்மா எனக்கு மாப்பிளை பார்த்து வெச்சு இருக்காங்க, நான் அதை மீறி எதுவும் செய்ய முடியாது.”

விக்கி: “ஷிவா யாரு டீ அது? எனக்கு கூட சொல்லவே இல்ல ?”

ஷிவா: “இல்ல விக்கி எனக்கே யாருன்னு தெரியாது, அம்மா ஆஸ்திரேலியா வரதுக்கு முன்னாடியே சொல்லி தான் அனுப்பினாங்க”

விக்கி: “சரி அப்போ நீ இது வரை சொல்லவே இல்லையா ஆதிக்கிட்ட? ஷிவா, அவர் இப்போ நீயும் நானும் லவ்வர்ஸ் நினைக்குறாரு”

ஷிவா: “விக்கி… இல்ல இன்னும் நான் என் விருப்பத்தை சொல்லவே இல்ல, சொல்ல போறதும் இல்லை. அவர் ஏன் உன்னையும் என்னையும் அப்படி நினைக்கணும்?”

விக்கி இன்று மாலை வேளையில் அவன் மறைந்து இருந்து கேட்ட அனைத்தும் சொல்ல… ஷிவானி உடைந்து போனாள்.

விக்கி: “இங்க பாரு என்ன வேணாலும் நடக்கட்டும். நான் இருக்கேன் பிளீஸ் அவர்க்கிட்ட உன் காதலை சொல்லிரு, நான் நம்ம வீட்டுல பேசி சம்மதம் வாங்கிறேன்.”

ஷிவா: “…”

விக்கி: "ஷிவா… ஷிவா… பேசு தயவு செஞ்சு… "

ஷிவா: “இல்லை விக்கி, அதெல்லாம் வேண்டாம். நான் அம்மாக்கிட்ட சம்மதம் சொல்லி இருக்கேன், இதெல்லாம் சரி வராது விக்கி, காசை பார்த்ததும் எங்களை எல்லாம் மறந்துட்டியான்னு அம்மா கேள்வி கேட்ட நான் என்ன செய்வேன்? இதை இப்படியே விட்டுறு விக்கி பிளீஸ்”

விக்கி: “சரி அவர உன்னால மறக்க முடியுமா?”

ஷிவா: “முடியாது”

விக்கி: “சரி அதெல்லாம் விடு. ஆதியும், அவர் ப்ரெண்ட் ஜெய்யும் உன்னையும் என்னையும் லவ்வர்ஸ் நினைச்சுட்டு இருக்காங்க அதும் பரவாயில்லையா?”

ஷிவா: “விக்கி, நீயும் நானும் யாரு, நமக்குள்ள என்னன்னு நமக்கு தெரியும். நம்மள பெத்தவங்களுக்கு தெரியும். வேற யாருக்கும் நம்மள பத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆதியை பொருத்த வரை இது அவர் மட்டுமே செய்த ஒரு தலை காதலா போகட்டும். தப்பு தான் எனக்கு அவர விட்டு விலக வேற வழி தெரியுல. பிளீஸ் பத்து நாள் பொருத்துகோ, எனக்காக”

விக்கி: "எல்லாம் சரி. ஒரே ஒரு முறை யோசி ஷிவா, உனக்கு நல்ல வாழ்க்கை அமைய போது, இவ்வளவு நாள் நீ பட்ட கஷ்டம் எல்லாம் போதாத? நான் பேசுறேன் ஷிவா வீட்டுல, ஆதிக்கிட்ட காதல் சொல்றதை பத்தி யோசி, நான் அதுக்குள்ள அம்மா கிட்ட பேசி உனக்கு பார்த்த மாப்பிளை யாரு, என்னன்னு தெரிஞ்சிக்க முயற்சி செய்றேன். முடிஞ்சா அவர்க்கிட்ட கூட பேசி பார்ப்போம். அம்மா எதாவது பேசினா நான் பார்த்துபேன். கவலை விட்டு யோசி ஆதிக்கிட்ட சொல்லிரு "

ஷிவா: “விக்கி, சொல்லனுமா? அது முடியாது… ஆன யோசிக்கிறேன்.”

விக்கி: “சரி கீழ போ, ரியா காத்துகிட்டு இருப்பா”

ஷிவா: “குட் நைட்”

விக்கி: "குட் நைட் ஷிவா, எதையும் நெகடிவ் யோசிக்காம முடிவு எடு. "

அடுத்த வந்த நாட்கள் எல்லாம் கல்யாண பரபரப்பும் பதட்டமும் சூழ பேசிக் கொள்ள கூட நேரம் இல்லாது சென்றது. அனைவரும் கல்யாண வேலையில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டு இருந்தனர். விடிந்தால் திருமணம்.

ஜோதி: “அப்புறம் அஞ்சலிக்கு எதும் வரன் வருதா? இனி அவளுக்கும் முடிஞ்சா உங்க கடமை முடிஞ்சுது இல்லையா?”

லக்ஷ்மி: “ஆமா, அவ படிப்பு முடிஞ்சதும் கையோட பண்ணிருவோம் தான் இருக்கோம். அவளுக்கும் அதுல எந்த எதிர்ப்பும் இல்ல, என் தம்பியும் கொஞ்சம் நிம்மதியா ஓய்வுல இருப்பான்.”

கீதா: "சரி தான், அக்கா நீங்க சொல்றதும். "

லக்ஷ்மி: “சரி, பத்மா எப்போ ஷிவாக்கு கல்யாணம்?”

பத்மா: “மாப்பிள்ளை இப்போ தான் படிச்சு முடிச்சு வேலைக்கு போக போறாரு, ஒரு ஆறு மாசம் போகட்டும் இருக்கோம்”

கீதா: “ஷிவாக்கு மாப்பிள்ளை பார்த்து வெச்சுட்டிங்களா?”

பத்மா: “அவ ஆஸ்திரேலியா வர முன்னாடியே பார்த்துட்டேன்.”

லக்ஷ்மி: “அட, ஷிவா சொல்லவே இல்லையே, யாரு பையன்? என்ன பண்ணிட்டு இருக்கான்.”

பத்மா: “அண்ணி, அவ்ளோ ஆர்வமா? இருங்க இப்போவே எல்லாருக்கும் மாப்பிள்ளை காட்டுறேன்.”
என கூறி கொண்டே அவர் விக்கியை காட்ட, ஒரு நொடி ஜோதியின் இதயம் நின்று துடித்தது.

லக்ஷ்மி: “அட, அட ஷிவாக்கு சரியான ஜோடி தான். விக்கி தான் சொல்லி இருந்தா, என் பையனை இன்னும் கொஞ்சம் நல்ல கவனிச்சு இருப்பேனே, நம்ம வீட்டுக்கு ரெண்டு மாப்பிள்ளை கிடைச்சாச்சு இன்னும் ஒருத்தன் எங்க இருக்கான் தெரியல”

பத்மா: “அஞ்சலிக்கும் நல்லபடி ஒரு பையன் சீக்கிரம் வருவான். அப்புறம் அண்ணி, உங்க மருமக மேல கோவப்படதீங்க இன்னும் அவளுக்கே விக்கி தான் அவளுக்கு பார்த்தா மாப்பிள்ளைனு தெரியாது. அப்போ விக்கி படிச்சுட்டு இருந்தான். அவன் படிப்பு போய்ரும் சொல்லாம விட்டோம். விக்கி வீட்டுல அவன் அப்பாவும் அம்மாவும் சம்மதம் சொல்லிட்டாங்க, சீக்கிரமே கல்யாணம் தான். எல்லாரும் வந்து இருந்து வாழ்த்திட்டு தான் போகணும்.”

கீதா: “அதெல்லாம் செஞ்சுருவோம் அக்கா, கவலை விடுங்க, ஷிவாக்கு சம்மதம் தானே?”

பத்மா: “அதெல்லாம் நான் சொன்ன தட்ட மாட்ட, அவளுக்கு விக்கினு தெரிஞ்சா கண்டிப்பா சந்தோஷம் தான் படுவா”

ஜோதி: “ம்ம், ஷிவாக்கு விக்கிகும் நல்ல ஜோடி பொருத்தம்.”

அங்கே அப்போது ஜெய்யின் தாய் சுகந்தியும் அவனின் தங்கை ஸ்வாதியும் வந்தனர். அவர்களோடு அறிமுகம் எல்லாம் முடித்து, அனைவரும் உணவு உண்ண அமர்ந்தனர். விக்கி சாப்பிட அமராது இருக்க, அவனை அமர சொல்லி குரு சொல்ல, விக்கி பிறகு சாப்பிடுவதாக சொல்ல,

லக்ஷ்மி: “உக்காரு விக்கி, சாப்பிட்டு அப்புறம் போ, என்ன வேலை இருந்தாலும்”

விக்கி: “இல்ல அத்தை, ஷிவா ரியாக்கு துணையா இருக்க, அவளும் நானும் ஒன்னா சாப்பிடுறோம். அவ தனியா சாப்பிட மாட்ட, அப்படியே சாப்பிட்டாலும் சரியா சாப்பிட மாட்ட, அதான் அத்தை”

லக்ஷ்மி: “அதுசரி, விக்கி வர போற பொண்டாட்டி மேல என்ன பாசம்”

விக்கி: “அத்தை…”

லக்ஷ்மி: “சும்மா, கிண்டலுக்கு சொன்னேன் டா, போ போய் சாம்பார் எடுத்துட்டு வா”

ஆதி முதல் ஆளாக சாப்பிட்டு எழுந்து கொள்ள, அவன் போலவே ரவியும், ஜோதியும் எழுந்து கொண்டனர். இதை எல்லாம் கவனித்த விக்கி, பத்மாவிடம் பேச அவரை மாடிக்கு அழைத்து சென்றான்.

:purple_heart:

1 Like

பாகம் 14

பத்மா: “என்ன விக்கி எதுக்கு இப்போ தனியா பேசணும் கூட்டிகிட்டு வந்த?”

விக்கி: “அம்மா, ஷிவானிக்கு நீங்க மாப்பிள்ளை பார்த்துட்டிங்களா? யாரு அவரு?”

பத்மா: “ம்ம் ஆமா பார்த்துட்டேன். கண்டிப்பா சொல்லனுமா? சரி யாரு சொன்னா நான் மாப்பிள்ளை பார்த்ததை?”

விக்கி: “ஷிவா, யாருனு சொல்லுங்க அம்மா”

பத்மா: “பொறுமையா இரு சொல்றேன். என் மாப்பிள்ளையே வந்து யாருன்னு கேட்ட, நான் என்ன பதில் சொல்றது?”

விக்கி: “அம்மா, நான்னா? இல்லை”

பத்மா: “ஆமா விக்கி, ஷிவாக்கும் உனக்கும் சம்மதம் பேசி ஒரு வருஷம் ஆகுது, அவ ஆஸ்திரேலியா போக போறதா சொன்ன அப்போவே முடிவு பண்ணது இது. உன் அப்பா - அம்மாக்கு கூட சம்மதம் தான். உன்னை தவிர வேற யாரு விக்கி அவளை இவ்வளவு நல்ல பார்த்துப்பாங்க? ஆறு மாசத்துல உங்களுக்கும் கல்யாணம் வைக்கணும். அப்போ தான் எனக்கும் நிம்மதி. லக்ஷ்மி அக்காக்கு அவ்வளவு சந்தோசம் தெரியுமா?”

பத்மா பேசிக்கொண்டே போக விக்கி பேசாது சிலையாகி இருந்தான்.

விக்கி: “ஷிவாக்கு தெரியுமா? நான் தான் அவளுக்கு…”

பத்மா: “இல்ல இல்ல உன்ன மாறி தான் அவளுக்கும் தெரியாது.”

பத்மா: “விக்கி இப்போ எதும் அவளுக்கு சொல்ல வேண்டாம், ஆறு மாசம் போகட்டும்.”

விக்கி: “சரி மா. இப்போ நீங்களும் அவளுக்கு சொல்ல வேண்டாம்.”

பத்மா சிரித்துக்கொண்டே இறங்க, ஜெய் விக்கியை தேடி வரவும் அனைத்தும் கேட்டு இருந்தான்.

ஜெய்: “விக்கி சாப்பிட வாங்க, உங்களை லக்ஷ்மி அம்மா வர சொன்னாங்க”

விக்கி: “ஜெய் எல்லாத்தையும் கேட்டீங்க தான?”

ஜெய்: “ஆமா” (தலை குனிந்து கொண்டான்)

விக்கி: “ஜெய் இதில் உங்க தப்பு எதுவும் இல்லை, வருத்தப்பட வேண்டாம். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? சத்தியமா எனக்கு ஷிவா மேல காதல் இல்லை.”

ஜெய்: “தெரியும். அன்னிக்கு ஷிவா சொல்லும் போதே உங்களை அவளோட ப்ரெண்ட் தான் சொன்ன, ஏன் ஆணும் பெண்ணும் உயிர் நண்பர்களா இருக்க முடியாத? நானும் முதல் முறை கேட்ட அப்போ தப்பா தான் நினைச்சேன். அப்புறம் நான் உங்களை கவனிக்க ஆரம்பிச்சுட்டேன், எனக்கு தெரியும் உங்களுக்குள்ள ஒரு தூய்மையான நட்பு மட்டும் தான் இருக்குன்னு, எனக்கு ஒரு உதவி வேணும், தயவு செஞ்சு இதை மறுக்காம செய்யணும் விக்கி நீங்க, பிளீஸ்”

விக்கி: “கண்டிப்பா என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதெல்லாம் செய்றேன். எனக்கு ஷிவானி வாழ்க்கை ரொம்ப முக்கியம். அய்யோ பாவம் அவளுக்கு இதெல்லாம் தெரியாது, தெரிஞ்சா கண்டிப்பா தாங்க மாட்டா”

ஜெய் விக்கியை சமாதானம் சொல்லி விட்டு, அவனிடம் உதவி கேட்க, விக்கி ஜெய்யை அணைத்து கொண்டான். அவன் நினைத்ததும் இதுவே, அவன் ஜெய்யிடம் கேக்க நினைத்த உதவியும் இதுவே. இருவரும் ஒரு முடிவு எடுத்து கீழே வந்தனர்.

ஆதி குருவின் முன் அனைத்தும் மறைத்து, சிரித்து, நடித்து கொண்டு இருந்தான். ரவியும் ஜோதியும் அதை கண்டு கலங்கி கொண்டு இருந்தனர். ஜெய்யும் விக்கியும் இனி நடக்க வேண்டியதை எண்ணிக்கொண்டு இருந்தனர்.

காலை

பட்டு வேட்டி கட்டி, இனம் புரியா சந்தோச உணர்வோடு குரு அக்னியின் முன் அமர்ந்து இருக்க, பச்சை காஞ்சிப் பட்டு சேலை கட்டி ரியா வெக்கத்தோடு அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

ஜெய்: “தங்கச்சியா அப்புறம் பாக்கலாம், முன்னாடி அக்னி இருக்கு டா, கையை உள்ள விட்டுறதா”

ஆதி: “இல்ல ஜெய் ஜொள்ளு விட்டே அதை அணைக்க போறான்.”

இருவரும் மாற்றி மாற்றி கிண்டல் செய்ய, ரியா கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டாள்.
சொந்தமும் பந்தமும் வாழ்த்து சொல்ல, ரியாவின் கழுத்தில் குரு மஞ்சள் பொன் தாலி கட்டினான்.
திருமணம் இனிதே முடிந்தது. அத்தனை மகிழ்ச்சி அங்கே, அனைவரும் மற்றவை அனைத்தும் மறந்து, மணமக்களை வாழ்த்தி கொண்டு இருந்தனர். ஷிவாவின் மனக்கண்ணில் ஆதியும் அவளும் இந்த நொடியில் இருப்பதை போல் நினைத்து கொண்டாள். சில நொடி ஆதியின் மீது அவள் பார்வை பட்டு விலகியது, அதில் ஒரு ஏக்கமும், சொல்ல முடியா சோகமும் இருந்தது. விருந்து முடிந்து, நெருங்கிய சொந்தங்கள் தவிர மற்றவர் எல்லாம் கிளம்பி விட, குருவும் கிளம்பி வந்தான்.

ஷிவா: “எங்க கிளம்பி நிக்குற இப்போவே நாளைக்கு போலாம் விக்கி”

விக்கி: “இல்ல ஷிவா, இதுவரை இருந்ததே உனக்காக தான். நான் இப்போ கிளம்பனும் பிளீஸ் புரிஞ்சுக்க”

ஷிவா: “சரி விக்கி”

விக்கியும் பத்மாவும் கிளம்பி நிற்க லக்ஷ்மியும், செல்வமும் அவர்களை நாளை கிளம்புமாறு கேட்டுக்கொண்டு இருந்தனர். விக்கி ரியா குருவுக்கு வாழ்த்து கூற, குரு கட்டி கொண்டான்.

குரு: “விக்கி நீங்க கண்டிப்பா அடுத்த வாரம் என் ரிசப்ஷன் வரணும். ரொம்ப உதவிய இருந்து இருக்கீங்க எனக்கு, நீங்க என்கூட இருந்தது எனக்கு சந்தோஷம் தெரியுமா”

ரியா: “ஆமா விக்கி, ஷிவா மாறி நீங்களும் என் ப்ரெண்ட் தான். நாங்க உங்களுக்காக காத்து இருப்போம்.”

விக்கி: “கண்டிப்பா வரேன். நான் இல்லமையா? ஆதி எங்கே.?”

குரு: “ஜெய் கூட இருக்கான்”

அவர்களை தேடி சென்ற விக்கி, ஆதியை பார்த்து அவர்கள் கிளம்புவது பற்றி கூறிவிட்டு, ஜெய்யை தனியே அழைத்து சென்றான்.

ஜெய்: “ரிசப்ஷன் எப்போ காத்து இருக்கேன் விக்கி, எல்லாம் சரியா நடந்துரும் இல்ல?”

விக்கி: “கவலை விடு. எல்லாமே சரியா நடக்கும். என்னை நம்பு ஜெய்.”

ஜெய்: “டேய், ஒரு வாரத்தில் உன்னை நான் முழுசா தெரிஞ்சுகிட்டேன்.”

விக்கி: “சரி உன் காதலை சொல்லிரு, இப்படி பார்த்துட்டே இருந்தா, காலம் போய்ரும். கண்ணுலையே காதல் செய்யுறதை விட்டு பேசு போ”

ஜெய் சிரித்து விட்டு எனக்கு இப்போ அவசரம் இல்ல, என் தங்கச்சி கல்யாணத்துக்கு அப்புறம் தான். அதுவரை எனக்கு நேரம் இருக்கு,

விக்கி: “சரி ஜெய். நான் கிளம்புறேன், ரிசப்ஷன் பார்ப்போம்.”

விக்கியும், பத்மாவும் அனைவரிடமும் கூறிவிட்டு கிளம்ப அவர்கள் மண்டபம் விட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தனர். அடுத்த நாள் ரவி, ஜோதி, ஆதி, ஜெய், ஷிவானி மற்றும் அவர்களுடன் வந்த அலுவலக நட்புகளும் கிளம்பி ஆஸ்திரேலியா வந்து இருந்தனர்.

ஆதி: “ஜெய், நீ ஷிவாவை அவ வீட்டில விட்டுரு”

ஜெய்: “நான் அப்பா அம்மா கூட போறேன். நீ விட்டு வா, நான் இருக்கற மனநிலைக்கு ஷிவாக்கிட்ட எதாவது பேசி அது பிரச்சனை ஆகிரும். பிளீஸ் நீயே போ, எனக்கு அவ கூட பேசவோ, ஏன் பார்க்க கூட விருப்பம் இல்ல.”

ரவி, ஜோதி, ஜெய் அனைவரும் டாக்ஸி பிடித்து வீட்டுக்கு செல்ல, அவர்களுக்காக வந்த காரில் ஆதி ஷிவாவை அழைத்து கொண்டு சென்றான். அமைதியான பயணம் அவன் இவளின் பக்கமோ, அவள் இவனின் பக்கமோ திரும்பவே இல்லை. அரைமணி நேர பயணம், ஷிவாவின் இல்லம். ஷிவானி கீழே இறங்கி அவளின் சூட்கேஸ் எடுத்து கொண்டு தூக்க முடியாமல் தூக்கி செல்ல ஆதி அதை எடுத்து கொண்டு அவளின் வீட்டில் வைத்தான். ஷிவானி அவனை வீட்டின் உள்ளே அழைத்தாள், உள்ளே வந்த ஆதி அவள் சூட்கேஸ் வைத்து விட்டு தண்ணீர் கேட்க, எடுத்து வந்து தந்தாள். அவன் தண்ணீர் குடித்து விட்டு, எதுவும் பேசாது வெளியில் செல்ல திரும்பி பின் அவளிடம்,

ஆதி: “ஏன் ஷிவா, எனக்கு பதில் சொல்லவே மாட்டியா? என்ன விரும்பாவே இல்லையா? உன் கண்ணுல நான் பார்த்தேன் ஷிவா, என்னை எப்பவும் உன் கண்ணு காதலோட தான் பார்க்கும், எதோ தயக்கம், உனக்குள்ளே குழப்பம், நீயே சொல்ற வரை காத்து இருப்போம் தான் இருந்தேன். அப்பா, உன்னை தொந்தரவு செய்ய கூடாது சொல்லி இருந்தார், அதான் நான் எதுவும் பேசல, ஒருவேளை தினம் கெஞ்சி இருந்த பதில் சொல்லி இருப்பியா? நீ என்ன காதலிக்கவே இல்லையா? நான் சாப்பிடும் போது மறைஞ்சு நின்னு பார்த்தியே ஏன்? என் பெயர்க்கு கலங்கம் வர கூடாதுன்னு ரியா நிச்சயத்துக்கு கூட வரமா அமெரிக்கா போனியே அது ஏன்? காதல் இல்லையா ? இல்லைன்னு சொல்லு, உன் பதில் உன் வாயில இருந்து ஒரு முறை சொல்லு, புடிக்கலனு சொல்லு”

ஷிவா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

ஆதி: “சரி அதான் எனக்கு பதில் தெரியுமே” கண்களை துடைத்துக் கொண்டான். “ஷிவா இது தான் கடைசி என்னை மன்னிச்சிடு, ஐ லவ் யூ ஷிவா” சொல்லிவிட்டு மீண்டும் மண்டி இட்டு அழுதான்.

அதை கண்டு ஷிவானியும் அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.

ஷிவா: “அழுகாத ஆதி, பிளீஸ். என்னால உன்னை இப்படி பார்க்க முடியாது. என்ன சொல்வேன்? எப்படி சொல்வேன்? என்னை மன்னிச்சிடு. நான் பாவி, நான் உனக்கு வேண்டாம். மன்னிச்சிடு… மன்னிச்சிடு…” என கதறி அழுதாள். அவள் அழுகை பெரிது ஆனது, அழுகை ஓய்ந்து அவன் நெஞ்சினில் சாய்ந்து இருந்தாள்.

இருவரும் சுயஉணர்வுக்கு வர அவர்கள் நிலை புரிந்து ஆதி விலகி, எழுந்து அவளை திரும்பி கூட பார்க்காது கிளம்பி சென்றான்.

ரவி: “ஜோதி பிளீஸ் ஆதிக்கிட்ட எதும் கேட்காத”

ஜோதி: “இனி என்ன கேட்க இருக்கு? நான் எதுவும் கேட்க போறது இல்லை, ஆன என் மனசு சொல்லுதுங்க அவ தான் என் மருமக”

ரவி: “இதையே சொல்லிட்டு இருக்காதா”

ஜெய்: “அப்பா, அம்மா சொல்றது எல்லாம் உண்மை, கூடிய சீக்கிரம் அதெல்லாம் நடக்க போது”

ரவி: “என்ன ஜெய் சொல்ற?”

ஜெய்: “எதும் இப்போ சொல்றதுக்கு இல்லை, குரு ரிசப்ஷன் வேலையை பார்ப்போம் அப்பா, என்ன நம்புங்க ஆதியும் ஷிவாவும் ஒன்னா சேர போறாங்க”

ஜோதி: “எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?”

ஜெய்: “அம்மா ஷிவா ஆதியை தான் நேசிக்கிற, அவங்க தனியா பேச தான் அவனை அனுப்பினேன். கவலையா விடுங்க, சிரிங்க. இந்த பத்து நாள் நடந்த எதுவும் மனசுல வெக்காதீங்க”

ரவி: “சரி, ஆதி சந்தோசம் தான் எங்க சந்தோசம். அது நடந்த போதும்.”

ஜெய்: “நடக்கும்ப்பா”

:purple_heart:

1 Like

பாகம் 15

கோவை, விக்கியின் இல்லம்.

விக்கி வீட்டின்னுள் நுழைந்த அடுத்த நிமிடம் அவன் அப்பாவின் முன் நின்று இருந்தான்.

விக்கி: "அப்பா உங்ககிட்ட பேசணும், அதும் ரொம்ப முக்கியமான விஷயம்.

விக்கியின் தந்தை (சுந்தரம்) : “சரி டா, குளிச்சுட்டு வா சாப்பிட்டு பேசுவோம்.”

விக்கி: “அதெல்லாம் இப்போ முக்கியம் இல்லை பிளீஸ் நான் பேசணும்”

விக்கி அவனின் தாயையும், பத்மாவையும் உடன் அழைத்து வந்தான்.

பத்மா: "என்னாச்சு விக்கி? "

விக்கி: “எல்லாரும் கேட்டுகுங்க நானும் ஷிவாவும் நல்ல ப்ரெண்ட்ஸ் அவ்ளோ தான். அவளுக்கும் எனக்கும் யார கேட்டு கல்யாணம் முடிவு பண்ணீங்க? எங்க நட்பை இப்படி கேவலப்படுத்த எப்படி முடிஞ்சுது? அவ என் தங்கச்சி மாதிரி… அவளை போய் எனக்கு ஏன்? முதல்ல இந்த கல்யாணம் பேச்சை விட்டுருங்க, அப்புறம் ஷிவா ஒருத்தரை காதலிக்கிற, அதை அந்த பையன் கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டு இருக்கா அவரும் அவளை காதலிக்கராரு”

பத்மா: "விக்கி என்ன சொல்ற? அவ யாரை லவ் பண்ற? "

விக்கி: “ஆமா அம்மா, ஆதியை ஷிவானி நேசிக்கிற, அவரும் நேசிக்கறாரு. அவர் அவரோட காதல் சொல்லியும் ஷிவா சொல்லவே இல்ல, அதுனால அவ காதலிச்சும் அதை சொல்லாம மறைச்சுட்டா”

“என்னால ஷிவா வாழ்க்கை அழிஞ்சு போறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. தயவு செஞ்சு எங்களை ஒன்னு சேர்த்து வைக்கிற யோசனையை விட்டுருங்க”

“இது தான் என் கடைசி முடிவு, இதுல இனி பேச எதுவும் இல்லை. எனக்கும் ஷிவாக்கும் இருக்கறது நட்பு, அதை அசிங்க படுத்த நான் விட மாட்டேன். இனி எனக்கும் ஷிவாக்கும் கல்யாணம் பண்ணலாம் பேசிக்கிட்டு இருக்காதீங்க”

சுந்தரம்: “விக்கி, நாங்க தப்பா எதுவும் முடிவு எடுக்கல, நீயும் ஷிவாவும் ஒரே வீட்டுக்குள்ள இருக்கீங்க ஊருக்குள்ள கண்ணு மூக்கு வெச்சு ஷிவாவை பேசக்கிட்டு இருக்காங்க… அவளுக்கு பார்த்த சம்பந்தம் எல்லாம் அவங்க நம்ம கூட இருக்கறது ஏன்னு கேட்டு தட்டி போகுது… ஷிவாவோட வாழ்க்கை உனக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் முக்கியம் தான். அதை விட அவ மானம் ரொம்ப முக்கியம். இது அமெரிக்கா இல்லப்பா… கோயம்புத்தூர்.”

விக்கி: “அப்பா புரியுது, ஆன நாங்க அப்படி இல்லப்பா. இதே ஷிவா காதலிக்காம இருந்து, எனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்து இருந்தாலும் நான் கண்டிப்பா இதை ஏத்துக்க மாட்டேன். ஷிவானி எனக்கு எப்பவும் உயிர் தோழி தான். அவளுக்கு அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, ப்ரெண்ட் எல்லாம் நான் தான். ஆன, புருஷனா சத்தியமா நான் நினைச்சது இல்ல அப்பா அது அசிங்கம் பிளீஸ் உங்க எல்லர்க்கிடையும் கெஞ்சி கேக்குறேன். அவ காதலை ஏத்துக்குங்க ஷிவா நம்ம வீட்டு பொண்ணுப்பா அவ சந்தோசம் முக்கியம் இல்லையா?”

விக்கியின் அம்மா (சங்கரி) : “விக்கி, சரிப்பா சரி அழுகாத” இங்க பாரு பத்மா, கல்யாணம் பண்ணிக்க போற இவனுக்கும், ஷிவாக்கும் விருப்பம் இல்ல, இவங்கள சேர்த்து வைக்கறதும் நியாயம் இல்ல, நாளைக்கு அவளுக்கு தெரிய வரும் போது அவளும் இப்படி தான் அழுக போற, இப்போ முடிவு உன் கையுல இருக்கு நீ தான் சொல்லணும்."

பத்மா: “அண்ணி, நான் என்ன சொல்றது, அவங்க எவ்ளோ பெரிய இடம். அங்க போய் நம்ம சம்மதம் வெக்க முடியுமா? தரம் தெரியாம இவ ஆசைப்பட்டா அண்ணா நீங்களே சொல்லுங்க நான் என்ன செய்யறது இப்போ”

சுந்தரம்:" பத்மா, நீ சொல்றது சரி தான். ஆன, யோசி அவ சந்தோசம் முக்கியம், நாளைக்கு விக்கியோட சம்பாத்தியம் எல்லாம் ஷிவானிக்கு தான். அவ இல்லாம விக்கி படிச்சு இருப்பானா? "

“நாங்க உங்களுக்கு செய்த உதவியை விட நீங்க செஞ்சது தான் அதிகம். என்ன ஆனாலும் சரி நம்ம ஷிவாக்காக முயற்சி செய்வோம். அவளுக்கு நீ எதாவது செய்யணும் நினைச்சா, சரின்னு சொல்லு”

பத்மா: “சரி அண்ணா சம்மதம். உங்களுக்கும் சம்மதம் தான?”

சுந்தரம்: “எங்க எல்லாருக்கும் சம்மதம்.”

விக்கி அனைவரிடமும் பேசி விட்டு சம்மதம் வாங்கி கொண்டு ஜெய்யிடம் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு, அவன் செய்ய வேண்டியதை எல்லாம் ஒரு முறை முடிவு செய்து விட்டு
ஆஸ்திரேலியா கிளம்பினான்.

ஆஸ்திரேலியாவில்…

குரு, ரியா, செல்வம், அஞ்சலி, லக்ஷ்மி மற்றும் சில உறவினர்களும் அவர்களோடு ஆஸ்திரேலியா வந்து இருந்தனர். ஆதி ஷிவாவை பார்த்து வந்த அடுத்த நாள், ஷிவானி ஆபீஸ்யில் இருந்தால், எட்வர்டு ஏற்பாடு செய்து இருந்த குழு கலந்தாய்வுக்கு சென்று இருந்தாள்.விக்கி ஆஸ்திரேலியா வந்து இறங்கி ஜெய்யுடன் அவன் இல்லத்தில் இருந்தான். குரு - ரியாவின் வரவேற்புக்கு தேவையான அனைத்து வேலைகளும் ஜெய்யின் தலைமையில் நடைபெற்று கொண்டு இருந்தது. இப்போது உடன் விக்கியும் வர, ஜெய் அவனுடன் சேர்ந்து வேலையில் மூழ்கி இருந்தான்.

மாலை வரவேற்பில், குருவும் - ரியாவும் மகிழ்ச்சி பொங்க நின்று இருந்தனர். அவர்களின் அலுவலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து சொல்ல வந்தது இருந்தனர். இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது.

ஷிவானி தனியாக வந்து ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தாள், அவளின் அருகில் விக்கி அமர்ந்தான்.

விக்கி: “ஷிவா, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.”

ஷிவா: “சொல்லு விக்கி, என்ன ?”

விக்கி: “அம்மா உன்னை ரெண்டு மாசம் வேலையை விட்டு வர சொன்னாங்க, கிளம்பி வா”

ஷிவா: “என்ன டா விளையடுறியா? ரெண்டு மாசம் எதுக்கு?”

விக்கி: “உனக்கு கல்யாணம் அதுக்கு”

மாப்பிள்ளை ஆஸ்திரேலியா தான், கல்யாணம் முடிஞ்சு நீ இங்கேயே வேலை பார்க்கலாம். சோ, ரெண்டு மாசம் லீவ் போட்டு வா,

விக்கி: “பிளீஸ் உண்மையாவே நான் இந்தியா வரணுமா?”

விக்கி: “ஆமா ஷிவா. உண்மையா தான் அம்மாக்கு ரியா கல்யாணம் பார்த்து ஒரே ஆசை அதான்.
சொல்லிகிட்டே இருந்தாங்க அப்பா ஆசைப்படி இப்போவே பண்ணிருவோம் சொல்லிட்டாங்க”

ஷிவா: “மாப்பிள்ளை யாரு?”

விக்கி: "தெரியாது… "

ஷிவா: “…”

விக்கி: “என்ன யோசனை?”

ஷிவா: " இல்ல இப்போ நான் கல்யாணம் பண்ற மனநிலையில் இல்ல விக்கி உனக்கு தான் எல்லாம் தெரியுமே அப்புறம் என்ன கேள்வி? "

விக்கி: “ஷிவா எனக்கும் வீட்டுக்கு போற வரை இதெல்லாம் தெரியாது. நீயே யோசி ஆதிக்கு நீ உன் காதலை சொல்லல, அம்மா சொன்ன பையன் கட்டிக்க நீ சரின்னு தான் சொல்லிட்டு வந்து இருக்க, இப்போ அது உன் கழுத்துக்கு கத்தியா நிக்குது. நான் எதும் சொல்லுற நிலைமையில் இல்லை. உனக்கு விருப்பம் இல்லைன்னா இல்லைன்னு வந்து சொல்லிட்டு போ. எனக்கு எதும் இல்லை. நானும் எதும் பேச முடியாம தான் இங்க வந்து இருக்கேன்.”

ஷிவா: “சரி, வா என்னோட தான் நீ இருக்கியே, நானும் நீயும் போய் இந்த கல்யாணத்தை நிறுத்துவோம். இது நடக்காது”

விக்கி: "சரி எல்லாருக்கும் சொல்லிட்டு கிளம்பு, கல்யாணம் சொல்லிட்டு வா, அப்போ தான் சரி வரும். "

ஷிவா: “ரிசப்ஷன் முடிஞ்சா அப்புறம் பேசணும். ஆன ஆதிக்கிட்ட எப்படி…?”

விக்கி: “நான் பேசவா?”

ஷிவா: “வேண்டாம் இது ஆபீஷியல்”

விக்கி: “அப்போ சரி. நான் நாளைக்கு நைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன்.”

ஷிவா: “அறிவு இருக்கா எருமை எப்படி நாளைக்கு போக முடியும் மெயில் போடணும், அப்ரூவல் வரணும். ரெண்டு நாள் ஆகும். பொறுமையா இரு. என் ரூம்க்கு வந்துரு இன்னில இருந்து ஜெய் அண்ணா வீட்டுல ஏன் தங்கி இருக்க?”

விக்கி: “வேலையா இருந்தோம் அதுதான். ரியாக்கு செய்ய வேண்டியது என் கடமை, உன்னை பத்திரமா பார்த்துக்கிட்டு இருக்களே”

ஷிவா: “யாரு அவ? அவளுக்கு பார்க்கிங் நின்னு பாதி நாள் போனது எனக்கு தான் தெரியும். இப்போ பாரு முகம் முழுக்க சிரிப்போட குரு அண்ணா பக்கத்துல நிக்கறதை”

விக்கி எதோ நினைத்து சிரித்து கொண்டான். ரிசப்ஷன் முடிந்தது. அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வந்து இருந்தனர். விக்கி லக்கேஜ் எடுத்துவிட்டு வருவதாக சொல்லி ஜெய்யுடன் இருந்து கொள்ள, ஷிவானி அவள் இல்லத்திற்கு சென்று இருந்தாள்.

:purple_heart:

1 Like

பாகம் 16

விக்கியும் ஷிவாவும் கோவை வந்து இருந்தனர்.

ஷிவா: “அம்மா, அம்மா…”

பத்மா: “என்ன?”

ஷிவா: “கல்யாணம் எல்லாம் இப்போ எதுக்கு? அதும் இல்லாம விக்கி வேலைக்கு போய் வீட்டை பார்த்துக்க ஆரம்பிக்க வேண்டாமா?”

பத்மா: "ஷிவா இதை பத்தி எல்லாம் பேசாத வெள்ளிக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க வரும் போது காப்பி கூடுத்துட்டு வா போதும். "

ஷிவா: “கல்யாணம் வேண்டாம் மா இப்போ”

பத்மா: "யாரையும் லவ் பண்றிய? "

ஷிவா: “இல்லை இல்ல”

சங்கரி: “அப்புறம் என்ன, பையன் தங்கம். கட்டிகிட்டு சந்தோசமா இரு.”

ஷிவா: “சரி அம்மா”

எழுந்து அவள் அறைக்கு செல்ல,

சங்கரி: “சரியான அழுத்தம் புடிச்சா பொண்ணு”

பத்மா: “வெள்ளிக்கிழமை எல்லாத்தையும் சொல்ல தான போற அதுவரை கொஞ்சம் இவளோட விளையாடுவோம்.”

விக்கி: " பாவம் அவ, நான் சொல்லிரட்டுமா? எதையாவது நினைச்சு கவலை பட போற அம்மா"

சங்கரி: “அட இன்னும் ஒரு நாள். இனி அவ வாழ்க்கை முழுக்க சந்தோசம் தான்.”

வெள்ளிக்கிழமை காலை பத்து மணி, ஷிவானி சோர்ந்த முகத்தோடு அமர்ந்து இருந்தாள்.

விக்கி: “என்னாச்சு? பொண்ணு பார்க்க தான் வாரங்க பார்த்ததும் உன்கிட்ட கேப்பாங்க, நீ புடிக்கலன்னு சொல்லிரு, அவ்ளோ தான். இதுக்கு போய் ஏன் சோகம் ?”

ஷிவா: “அது எப்படி சொல்ல தெரியுல, எதோ பயமா இருக்கு”

வெளியில் கார் நிற்கும் சத்தம் கேட்க, விக்கி சென்று அனைவரையும் உள்ளே அழைத்து வந்தான்.
அவர்களை சுந்தரம் வரவேற்று, அனைவரும் அறிமுகம் செய்து கொண்டனர்.

சங்கரி: “மாப்பிள்ளை ரொம்ப அழகு, குணமா பேசுறாரு. எனக்கு பிடிச்ச இருக்கு.”

பத்மா: “எனக்கும் சரி ஷிவானி கூப்பிட்டு காஃபி குடுக்க சொல்லுங்க”

சங்கரி: "ஷிவா, போ போய் மாப்பிள்ளைக்கு காஃபி குடு "

ஷிவா: “அத்தை எனக்கு கல்யாணம் வேணாம், பிளீஸ் இதெல்லாம் வேண்டாமே”

சங்கரி: “சரி கல்யாணம் வேண்டாம். இப்போ வந்து iஇருக்கறவங்களை என்ன சொல்லி அனுப்புறது?”

ஷிவானி எழுந்து வந்து காஃபி வாங்கி கொண்டு, அவர்களை நோக்கி வந்தாள். சோபாவின் முதலிலேயே அமர்ந்து இருந்த ஆதி முதலில் காஃபி எடுத்து கொள்ள,

விக்கி: “ஷிவா தலை நிமிர்ந்து பாரு மாப்பிள்ளையை”

ஷிவா எதுவும் பேசாது காஃபி கொடுத்து கொண்டு இருந்தாள்.

ஜெய்: “என்னமா என் நண்பனை உனக்கு பிடிக்கலையா? பாவம் நீ அவன பார்க்கலானதும் முகம் வாடி போய்ட்டான்”

ஷிவா: “அண்ணா, நீங்க…”

ஜெய்: “கொஞ்சம் தலை நிமிர்ந்து எல்லாரையும் பாருமா நீ, கழுத்து புடிச்சுக்க போது”

ஷிவானி அனைவரையும் பார்த்து விட்டு அவள் அறையின் உள்ளே சென்று அழுக துவங்கி இருந்தாள்.

பத்மா: “ஷிவா என்னாச்சு, என்ன பாரு எனக்கு எல்லாம் தெரியும், விக்கி சொன்னான். ஏன் நீ உன் காதலை சொல்லவே இல்லைன்னு யாருக்கும் தெரியவே இல்லை. ஆனா எனக்கு தெரியும். என் சத்தியம் தான, அதை விடு. இப்போ அம்மா சொல்றேன். எனக்கு, எங்க எல்லாருக்கும் உன் விருப்பத்தில் சந்தோசம், சம்மதம். நீ என் அழுக கூடாது, ஷிவா அழாத”

பத்மா: “விக்கி போய் பேசு, அவ அழுது கரையுறா”

விக்கி: “நான் பேச எதுவும் இல்லை. இனி பேச வேண்டியது ஆதியும் ஷிவானியும் தான். அவர உள்ள அனுப்பி விடுங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்.”

சுந்தரம்: “உள்ள போங்க மாப்பிள்ளை போய் பேசுங்க, சின்னதுல இருந்தே மனசுல உள்ளதா சொல்ல மாட்டா தப்பா நினைக்காதீங்க”

ஆதி ரவியை பார்க்க,

ரவி: “போ போய் பேசு”

ஆதி அவள் அறையின் உள்ளே சென்றான். ஷிவா, இன்னும் முகத்தை கைகளில் புதைத்து அழுது கொண்டு இருந்தாள்.

ஆதி: “ஷிவா, இப்போ ஏன் அழுகுற? என்னாச்சு, உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு என்மேல விருப்பம் இருக்குன்னு நீ தான் ரியா, விக்கின்னு எல்லார்க்கிட்டையும் சொல்லி இருக்க, அதை நம்பி தான் இவ்வளவு தூரம் நான் வந்து இருக்கேன். உன் முடிவு என்னவோ அதே தான் எனக்கும், உனக்கு விருப்பம் இல்லைனா நான் வந்த வழியே போறேன். ஷிவா போதும் அழுதது. பேசு எதாவது, இல்ல நான் போறேன், இனி உன் லைஃப் லா வர மாட்டேன்.”

ஷிவா: “ஆதி, நில்லுங்க. என்னை மன்னிச்சுருங்க”

ஆதி: “எதுக்கு?”

ஷிவா: “ஏன் மேல கோவம் இல்லையா?”

ஆதி: “கோவம் இல்லை வருத்தம் எல்லார்க்கிட்டையும் சொல்லி இருக்க ஏன்கிட்ட ஏன் சொல்லல நீ? எது ஷிவா உன்னை என்னோட பேச விடாம செய்தது ?”

ஷிவா: “ஆதி அது அம்மாக்கு செய்த சத்தியம் அப்புறம் உங்க பணம்.”

ஆதி: “ஷிவா”

ஷிவா: “தப்பா நினைக்காதீங்க ஆதி, நீங்களும் சாதாரண வீட்டு பையன்னு காதலிக்க ஆரம்பிச்சு இருந்தேன். ரியா காதல் தெரிஞ்சு போய் நீங்க உங்க வீட்டுக்கு ரியா வர சொன்ன அவளுக்காக உங்க வீட்டுக்கு வந்த அப்போ தான் தெரியும். நீங்க பணக்காரர், உங்களை போய் நான் எப்படி? என் தரம் தெரியுமே எனக்கு, நான் எதிர் பார்க்கவே இல்லை நீங்க எனக்கு ப்ரொபோஸ் பண்ணின அப்போ ரொம்ப அழுதேன். என்னால தாங்கவே முடியல, அம்மா சத்தியம் வாங்கி இருந்தாங்க எனக்கு மாப்பிள்ளை பார்த்து வெச்சு இருந்ததா அதான்”

ஆதி: “அந்த மாப்பிள்ளை விக்கி தான்”

ஷிவா: “என்ன?”

ஆதி இதுவரை நடந்த அனைத்தும் ஷிவாவிடம் கூறினான். ஷிவானி மீண்டும் அழ,

ஆதி: “ஷிவா இப்போ எதுக்கு இப்படி அழுகுற? கண்ணுல கிணறு வெச்சு இருக்கியா? தண்ணி வந்துட்டே இருக்கு, ஷிவா பணம் முக்கியமா? உனக்கு முன்னாடி எனக்கு எதுமே முக்கியம் இல்ல, நான் என் நிழல் கூட உன்னை காயப்படுத்த கூடாதுன்னு ஒதுங்கி இருந்தேன். உன்னை விட்டு விலகி போகவே இல்லை என்ன ஒதுக்கி வெச்சு இருந்தது நீ தான். பணத்தை பார்த்து எதுக்கு பயம், இதெல்லாம் வேண்டாம் விட்டு வா சொல்லு வந்துறேன். நாளைக்கு நானே இதை விட நிறைய சம்பாதிக்க தான் போறேன். இதுக்காகவே என்னை ஒதுக்கி வெச்சா?”

ஷிவா: “என்னை பத்தி உங்களுக்கு ஒன்னும் தெரியாது ஆதி. என் வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.”

ஆதி: “இனி எதும் உன்னோடது இல்லை எல்லாமே நம்ம ரெண்டு பேருக்கும் தான். உன் வலி எல்லாம் போகட்டும் சொல்லு என்னை நம்பி சொல்லு நான் உன் ஆதி.”

:purple_heart:

1 Like

பாகம் 17

ஷிவா: “என்னோட அப்பா மாதவன், ரொம்ப பெரிய பணக்காரர். SP MILLS சொன்ன தெரியாதவங்க யாரும் இல்லை. ரொம்ப செல்வாக்கு அப்பாக்கு, நான் ஒரே பொண்ணு தங்க தட்டுல வெச்சு தங்கினாங்க என்னை, எனக்கு விக்கியை எல் கே ஜியில் இருந்து தெரியும் நாலு வயசுல இருந்து, நான் ரொம்ப நல்ல படிப்பேன், சரியான வாயாடி, மனசுல என்ன இருந்தாலும் சொல்லிடுவேன், எதையும் மறைக்க தெரியாது. ஒரே பொண்ணு ரொம்ப செல்லம். எனக்கு எழு வயசு இருக்கும் அம்மா எதிர்பாரா விதமா இறந்துட்டாங்க.”

ஆதி: "என்ன அப்போ இவங்க யாரு? "

ஷிவா: “அவங்க எங்க வீட்டில் வேலை பார்த்தவங்க, பத்மா அம்மா தான் அதுக்கு அப்புறம் வளர்த்தாங்க, என் அப்பா அதுக்கு அப்புறம் வேற கல்யாணம் பண்ணல, நான் ஸ்கூல்ல அம்மா அம்மா அழும் போது எல்லாம் விக்கி தான் நான் இருக்கேன் சொல்லி சொல்லி என்னை சமாதானம் செய்வான். எனக்கு அவன் மேல நட்பும் தாண்டி ஒரு அன்பு இருந்தது. இன்னும் இருக்கு, எப்பவும் இருக்கும். அம்மா இல்லாத குறை தவிர, என் வாழ்க்கை நல்லா போய்ட்டு இருந்தது, அது ஒரே நாளிலேயே தலைகீழா மாறி போகும் யாரும் நினைக்கவே இல்லை. அப்பாக்கு ஆக்ஸிடென்ட், ஸ்பாட் உயிர் போக ஒன்பதாவது படிக்கிற பொண்ணு என்ன செய்ய முடியும்? அழுது அழுது மயங்கி விழுந்தேன்.”

“எல்லாம் முடிஞ்சு ஒரு வாரம் ஆன நிலைமையில் எல்லாரும் சொல்லாம கூட கிளம்பி போனாங்க, எங்க என்னை வளர்க்கிற பொறுப்பு அவங்க மேல விழுந்துரும் பயம். விக்கி, நான், பத்மா அம்மா தான் இருந்தோம்.”

“அப்போ என் மாமா வந்தாரு எங்க அப்பா மில் வெச்சு அவர்க்கிட்ட கடன் வாங்கினதா சொல்லி வீட்டை விட்டே போக சொன்னாரு, அப்போ அவரை எதிர்க்க எங்க மூணு பேருக்கும் தைரியம் இல்ல, பத்மா அம்மா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க”

“நான் மனசே இல்லாம அவங்க வீட்டுக்கு போனேன். அடிப்படை வசதி மட்டுமே இருந்த வீடு, தூங்க கூட முடியாது. ஒரு வாரம் களிச்சு ஸ்கூல் போனேன். வறுமை, டெர்ம் ஃபீஸ் கட்ட கூட பத்மா அம்மா சம்பளம் பத்தாது. அந்த கஷ்டத்தோட தான் படிச்சேன். பத்மா அம்மா என்னை படிக்க வைக்க ரொம்ப கடன் பட்டாங்க, நானும் விக்கியும் பத்தாவது முடிச்சோம். நான் அங்க இருந்த எரியா பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி குடுத்துட்டே படிக்கவும் செஞ்சேன், பத்மா அம்மா மில்லுக்கு வேலைக்கு போனாங்க”

“ஒருநாள் பத்மா அம்மா மில்லு வேலை முடிச்சு வர நேரம் ஆகிருச்சு, அன்னிக்கி எனக்கு பிறந்த நாள், எனக்கு ரவை பாயசம் ரொம்ப பிடிக்கும், விக்கி வீட்டில் செஞ்சு எனக்கு எடுத்து வராத சொல்லிட்டு போய் இருந்தான். நான் படிச்சுட்டே தூங்கிட்டேன், யாரோ என்னை தொடர மாறி இருந்தது, அது விக்கி அப்பா, எனக்கு பாயசம் குடுத்தார். உண்மையா ஆதி அப்போ எல்லாம் பாயசம் கூட பொக்கிஷம் மாறி இருக்கும் எனக்கு, பாயசம் குடிச்சு அழுதேன். பத்மா அம்மா வர வரைக்கும் விக்கியும், அப்பாவும் கூட இருந்தாங்க. அம்மா வந்ததும் என்ன சொன்னாரோ தெரில எங்களை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டாரு. இப்போ வரை நாங்க எல்லாரும் ஒரே குடும்பம் தான். என்னை அப்பா அவரோட பொண்ணு மாதிரி தான் பார்த்தார். நான் இன்டீரியர் டிசைன் படிக்க, ஆசைப்பட விக்கியும் டாக்டர் படிக்கணும் சொல்லவும் ஆன செலவுக்கு எங்க வீட்டை வித்து தான் படிக்க வைச்சாரு, விக்கி படிக்க சென்னை போனான். நான் படிச்சு மும்பை போனேன். விக்கி படிக்க நான் சம்பாத்தியம் பண்ணேன், அவ்ளோ வறுமை வீட்டுல, எப்படியாவது நல்ல நிலைமைக்கு வரணும் வெறி. விக்கி சுமை எல்லாம் நான் என் மேல போட்டுகிட்டு அவனை நல்ல படிக்க சொன்னேன். விக்கி மட்டும் இல்லைனா நான் என்ன ஆகி இருப்பேன் தெரியாது, என்னை அழுது அடம் பண்ணி இங்க வர வெச்சதே அவன் தான், இப்போ அப்பா அடமானம் வைச்சா வீட்டையும் திருப்பிட்டோம். அம்மா நன்றி கடன் சொல்லி தான் சத்தியம் வாங்கினாங்க, இப்போ தான் புரியுது எனக்கு”

“அதே சமயம் தான் உங்க கம்பெனியில் வேலை கிடைக்க, எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கறதா சொல்ல, நான் சரின்னு சம்மதம் சொல்லி சத்தியம் பண்ணிட்டு வந்தேன். அப்போ எனக்கு தெரியாது அது விக்கி தான்னு, ஒருவேளை தெரிஞ்சு இருந்த அப்போவே கல்யாணத்தை நிறுத்தி இருப்போம்.
நான் உங்களை பார்த்ததும் காதலிக்க ஆரம்பிச்சு இருந்தேன், அம்மாகிட்ட சொல்லி பேசி எதாவது செஞ்சு சம்மதம் வாங்கலாம் நினைச்சு இருந்த நேரம் தான், நீங்க பெரிய பணக்காரர் தெரிஞ்சுது. ஆசையா மூடி போதச்சுட்டேன், என் டைரி முழுக்க உங்க பெயர் தான். என் போன் வால்பேப்பர் நீங்க தான். உங்களை பார்க்க மட்டுமே தான் இங்க இருக்கறதா ரியாக்கிட்ட சொல்லி அழுது இருக்கேன்.”

"ரியாக்கும் ரெண்டு மாசம் முன்னாடி தான் தெரியும். சத்தியம் வாங்கி ரியாவையும் வாய் பேச விடாம செய்ததும் நான் தான். என்ன சொல்லுறது நான், நான் காதலிக்கிற உங்களை இல்லைனு எப்படி சொல்ல? பணத்துல பொறந்து வளர்ந்த உங்களை பார்த்து, உன் பணம் தான் என் பயம் எப்படி சொல்வேன்? யாருனே தெரியாத ஒருத்தரை கட்டிக்க சம்மதம் சொன்ன அப்புறம் உங்களை காதலிக்கறேன் எப்படி வந்து என் வீட்டில் சொல்வேன்? பணத்தை பார்த்து நன்றி மறந்து போக சொல்றீங்களா? எல்லாம் என் தப்பு ஆதி, இதுல உங்களையும் தவிக்க விட்டேன். என் மனபோரட்டம் உங்களையும் காயப்படுதிருச்சு, நான் நேசிச்சது உங்களை தான் ஆதி.

ஆதி அவளை கட்டி கொண்டான்.

"சில நேரம் நமக்கு பிடித்தவர்கள் அருகில் இருந்தும், நாம் காதலை சொல்வது இல்லை. நாம் சொல்ல நினைக்கும் போது அவர்கள் நம்முடன் இல்லாமலும் போகலாம். காதல் வந்தா சரியோ தவறோ சொல்லிருங்க, விளைவுகள் எதுவாக இருந்தாலும் நம்ம விரும்புறோம் அவங்களுக்கு தெரிஞ்சா போதும்."

:purple_heart:

1 Like

பாகம் 18

இரண்டு வருடங்களுக்கு பிறகு,

ஷிவா: “ஆதி… ஆதி… நேரம் ஆகிட்டே இருக்கு, ஆஃபீஸ் போக வேண்டாமா?”

ஆதி: “வந்துட்டேன், சரி சீக்கிரம் சொல்லு நான் ஆஃபீஸ் போணும்”

ஷிவா: “என்ன சொல்லணும்?”

ஆதி: “சொல்லு டீ, நேரம் ஆச்சு”

ஷிவா: “இம்சை உன்னோட சரி சொல்றேன் ஐ லவ் யூ ஆதி”

குரு: “இன்னுமா ஷிவா சொல்லிட்டு இருக்க? டேய், இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு கேசினோ ஓபனிங்க்கு, உன் ரொமான்ஸ் கொஞ்சம் தள்ளி வெக்க கூடாத”

ஆதி: “ரொமான்ஸ் எல்லாம் இல்ல, எவ்ளோ நாள் காத்து இருந்தேன் பதிலுக்கு அதான் தண்டனை அவளுக்கு தினமும் ஐ லவ் யூ சொல்ல சொல்லி”

குரு: “உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு, ஒரு குழந்தையும் பொறக்க போது இன்னும் தண்டனையா?”

ஆதி: “அவ சொல்லும் போதும் மனசுல ஒரு சந்தோசம், தினமும் கேக்கமா இருக்க முடியல என் பொண்டாட்டி எனக்கு சொல்றா”

குரு: “என்ஜாய்”

ஆதி: “ஜெய் கிட்ட பேசினியா? அவன் கல்யாண வேலையில், என்கிட்ட கூட பேசறது இல்லை.”

குரு: “என் சகளை அஞ்சலியோட பிஸி, கேசினோ ஓபனிங் இருக்கு சொன்ன, பாருங்கன்னு சொல்றான்”

ஆதி:" நமக்காக நெறைய செஞ்சு இருக்கான், அவனும் என்ஜாய் பண்ணவேண்டாமா?"

குரு: “அவன் பண்ண நான் தானே பதில் சொல்லணும். எல்லாத்துக்கும் ரெண்டு பேரும் என்னை கை காட்டிட்டு போராங்க, முடியல”

ஆதி: “அது சகளைஸ் உங்களுக்குள்ள பெர்சனல் டா”

பேசிக்கொண்டே ஆஃபீஸ் வந்து இருந்தனர்.

எட்வர்டு: “வாங்க சார், உங்களுக்கு தான் வெயிட்டிங்”

குரு: “எப்படி இருந்த மனுஷன், இப்போ வேற மாதிரி ஆகிட்டாரு”

ஆதி: “அவரும் மனுஷன் தானே, அவருக்கு என்னை புரியலை, புரிஞ்சா அப்புறம் மாறிட்டாரு”

இன்று

ஆஸ்திரேலியாவின் முதல் கேசினோ திறப்பு விழா, விழா இனிதே நடந்தது. இரண்டு வருடம் இரவு பகல் பாராது உழைத்த உழைப்புக்கு இன்று பதில் கிடைத்த உள்ளது. உலக தொலைக்காட்சி அனைத்தும் இதை ஒளிபரப்பியது.

கோவையில், விக்கி, சுந்தரம், பத்மா, சங்கரி, விக்கியின் மனைவி கீர்த்திகா என அனைவரும் பார்த்து மகிழ்ந்து கொண்டு இருந்தனர்.

ஆஸ்திரேலியாவில், நிறை மாத வயிற்றோடு ஷிவா, அவள் மடியில் குட்டி ரியா (தன்ஷிகா), அருகில் ஜோதி, கீதா, அஞ்சலி, லக்ஷ்மி, செல்வம், என அனைவரும் வீட்டில் இருந்து அதை பார்த்து மகிழ்ந்து கொண்டு இருந்தனர்.

விழா அரங்கில், ரவி, குரு, ரியா, ஜெய்,எட்வர்டு மற்றும் ஆதியும் அவன் குழுவும். விழா முடியும் முன் நன்றியுரை பேச எட்வர்டு அழைக்கப்பட்டார்,

எட்வர்டு: "வணக்கம், எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், ரெண்டு வருட உழைப்பு இது. இனி எப்பவும் ஆஸ்திரேலியாவில் எங்க நிறுவனத்தின் பெயர் எல்லாருக்கும் நினைவு இருக்கும்.
எவ்வளவு பெரிய புராஜக்ட், எங்களை நம்பி இதை எங்களுக்கு கொடுத்த கேசினோ நிறுவனத்திற்கு நன்றி ஆஸ்திரேலியாவில் இந்த கேஷினோ வர உதவிய ஆஸ்திரேலியா அரசாங்கத்திற்கு நன்றி,
இத்தனை பெரிய செயல் திட்டத்தை செய்ய ஊக்கம் அளித்த அத்தனை நட்புகளுகும் நன்றி, செயல் திட்டத்திற்கான ஆலோசனை அளித்த வல்லுனர்களுக்கும் நன்றி, எங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்டு உள்ள மக்களுக்கு நன்றி, இந்த செயல் திட்டத்தில் என்னையும் இணைத்துகொண்ட என் நிறுவனத்திற்கு நன்றி, இரவு பகல் பாராது என்னோடு தோல் கொடுத்து உதவிய என் நண்பர்களுக்கும், என் சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இன்னும் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது என் டீம் லீடர் ஆதித்யாவிற்கு, விழாவிற்கு வந்து இருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் வாழ்த்தும், அன்பும் என்றும் வேண்டும் என கேட்டு கொண்டு நன்றி கூறி உரையை முடிக்கிறேன்.

விழா முடிந்து வீட்டுக்கு செல்லும் போது காரில்,

ரவி: “நான் சொன்னேன் இல்லையா ஆதி எட்வர்டு நல்லவன்.”

ஆதி: “ஆமா அப்பா. அவர் பொண்ணுக்கு நான் இரத்தம் குடுத்த அப்போ, அவர் வேலைகளை எல்லாம் நான் பார்த்து அவருக்கு அவர் பொண்ணோட இருக்க நேரம் குடுத்தேன். இதெல்லாம் சின்ன விஷயம் தான் எனக்கு ஆனா அன்னிக்கு சொன்னாரு, உன்கூட தொழில் முறை போட்டி தான் ஆதி எனக்கு, அதுவே நீ சின்னதா கவலை பட்டாலும் போதும்ன்னு நிறைய முறை உன் மனசு கஷ்டப்பட, நான் யாருன்னு உனக்கு புரிய வைக்கரதா நினைச்சு உன்னை காயப்படுத்தி இருக்கேன். ஆன, நீ புரிய வெச்சுட்ட நன்றி மறந்து போய் இருந்தேன் இவ்வளவு நாள் இப்போ தான் புரியுது என் தப்புன்னு சொல்லி வருத்தப்பட்டார்.”

“அவர் சொல்ற வரை எனக்கு அவர் செய்த எதும் தப்பவே தெரியுல, அவர் மனசு மாறி என்னை புரிஞ்சுகிட்டதே போதும்”

இரவு ஆதியின் அறையில்,

ஷிவா: “தூங்கு ஆதி”

ஆதி: “தூக்கமா? மனசு நெரைஞ்சு இருக்கு, நான் ரொம்ப குடுத்து வெச்சவன், எனக்கு எல்லாமே ஸ்பெஷல். நீ என் வரம் , உன் காதல் அது போதும் வாழ்க்கை மொத்ததுக்கும்”

ஷிவா ரொம்ப ஆசையா இருக்கு, ஒரு முறை சொல்லேன்

ஷிவா: “ஐ லவ் யூ ஆதி”

ஆதி அவனின் கவிதை சொல்லிய மொழியில் அவளை கட்டிக்கொண்டு உறங்கினான்.

முற்றும்.

:purple_heart:

3 Likes

முடிவுரை

வணக்கம்,

"கவிதையே சொல்லடி" கதையில் வரும் கேரக்டர்களின் உறவு முறையில் சிறிது குழப்பமாக இருப்பதாக விமர்சனம் வந்து இருந்தது. எனவே அதை தெளிவு செய்ய இந்த பதிவு.

ஆதித்தியா (ஆதி) - கதையின் நாயகன்

ரவி - ஜோதி - ஆதியின் பெற்றோர்

குரு, ஜெய் - ஆதியின் நண்பர்கள்

கீதா - குருவின் அம்மா

ரியா - குருவின் காதலி , ஷிவானியின் தோழி

செல்வம் - ரியாவின் அப்பா

லக்ஷ்மி - ரியாவின் அத்தை

அஞ்சலி - ரியாவின் தங்கை

எட்வர்ட் - ஆதியின் அலுவலகத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர்

ஷிவானி - கதையின் நாயகி

பத்மா - ஷிவானியின் அம்மா

விக்கி - ஷிவானியின் நண்பன்

சுந்தரம் - சங்கரி - விக்கியின் பெற்றோர்

என் முயற்சிக்கு உங்களின் ஆதரவு கண்டு மிக்க மகிழ்ச்சி . உங்களின் விமர்சனமும், ஆதரவும் தான் என் முயற்சிக்கு பரிசு. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் . என் கதைக்கும் முயற்சிக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,

நன்றிகளுடன்,
கௌரி முத்துகிருஷ்ணன். :purple_heart:

1 Like