கவிதை - உதிரப்போக்கு

கவிதை - உதிரப்போக்கு
0

:angel:தாய்மைக்கு அங்கீகாரம் என்றாலும் பெண்மையின் நிஜம் சொல்லும் பெரும்பாடு!..:princess:

:sparkles:வளர்பிறை ஈன்றெடுக்க தன்னுயிர் நிதம் தேய சம்மதிக்கும் செவ்வானம் அல்லவா பெண் என்பவள்!:heartbeat:

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என உள்ளம் நெகிழக் கூறியவரும் இங்கு ஓர் ஆண் தானே?!

பெண்மையின் வலிதனை உணர்ந்தவர்கள் தம் கவிதை வரிகளில் உருவாக்கிய இம்மையக்கருவினை உங்கள் சிந்தையில் அள்ளியணைத்து ரசித்திடுங்கள்👇

3 Likes

உதிரப்போக்கு

கருவினை சுமந்திட
கர்ப்பப்பை சிந்திடும்
கண்ணீர் துளிகள்…

3 Likes

காலத்தின் வழிகளிலே
உயிரினுள் கலந்தவளே
நித்தமும் உனைகாண
நிமிடங்களை கடத்தினேன்

பார்த்துவிட்டு நேரத்திலே
கோவிலுக்கு போக சொல்ல
வேண்டாமடா என்னவனே
விலக்கு என்றுரைத்தாய்

காரணங்கள் புரிந்தவனுக்கு
கஷ்டங்கள் அறிந்ததில்லை
கழிந்திடும் உதிரத்திற்கும்
மொழிகளுண்டுனெ தெரியவில்லை

சில தூரம் நடந்திருக்க
சிறுஇறுக்கம் என் தோளில்
சிந்தித்தே திரும்புகிறேன்
சிந்தையின் குழப்பத்திலே

உன்முக சுருக்கமும்
உந்தன் பொடிநடையும்
உணர்த்தியது மனதினிலே
உடலால் பெண்ணவளை

அடிவயிறும் வலிக்குதென
அழுதுகொண்டே சொல்லிவிட
ஆழ்மனதில் என் கண்ணீர்
அரைநொடியில் சிந்தியதே

முதுகுத்தண்டின் நடுவினிலே
முறிகின்ற வலித்திடவே
முடியாமல் நீ தவிக்க
முதல்முறை காண்கிறேன் விழிநீரை

பெரிதாக தெரியாத
பெண்மையின் வலிதனை
பெற்றவளும் உணர்ந்திருப்பாள்
பெறுகின்ற நேரத்திலே

கண்டுவிட்ட வலியதுவே
கலக்கிவிட இதயத்தை
காலதேவன் சட்டத்தில்
கஷ்டங்கள் அறிந்துகொண்டேன்

பலமடங்கு காதலுமே
படர்ந்திடுதே இதயத்தில்
படும்வேதனையை குறைத்திடவை
பயணிப்பேன் இறுதிவரை

உதிரத்தின் நேரத்தில்
ஊன்றுகோலாய் நானிருப்பேன்
என் தோளில் சாய்ந்துகொண்டு
இளைப்பாறு என்னுயிரே…

    - சேதுபதி விசுவநாதன்
3 Likes

ஒரு துளி பார்த்து
விடமாட்டோமா?
என்று ஏங்கினேன்
பருவ வயதில்…

ஏன் பார்க்கிறேன்?
என்று தவிக்கிறேன்
தாயாகும் வயதில்…

இப்படியே நின்று
விடாதா?
என்று வலிகளோடு
புலம்புகிறேன்
நடுத்தர வயதில்…

வலிகளை சுமப்பது தான்
பெண்மையோ?
விடையறிய ஏங்குகிறேன்
நான்…

3 Likes

image

சிவப்பு புள்ளிகளாய்
என் கருப்பையில் இருந்து
நீ கரைந்து போகையில்
மீண்டும் ஒரு முறை
இறக்கிறேன்
நான்.

- கௌரி முத்துகிருஷ்ணன்.:purple_heart:

2 Likes

கருவினுள் உருவானேன் உதிரத்தால், கலைக்கப்பட்டு உதிரமாய் வெளியானேன்,

உருவானபோது அடைந்த
மகிழ்ச்சியை விட ,
உதிரமாய் வெளியானபோது அளவின்றி வலியில் துடித்தாள் ,
துவண்டாள் , அழுது மடிந்தால் ,

மொட்டில் விளையாடும் பொழுது
அடிபட்டு வந்த ஒரு சொட்டு ரத்தத்தை பார்த்து பதறியவள் ,

பூவாக மலர்ந்த சுபநிகழ்ச்சியில் வீடே மகிழ்ச்சியில் மூழ்கியது
அவளோ வலியிலும் வேதனையிலும் துவண்டாள் ,

மொட்டிலேயே ரத்தத்திற்கு பயந்தவள் மலர்ந்த பின் மாதம் மாதம் மூன்று நாட்களும் உதிரம் தந்த வலி வேதனை என்ற நரகத்தில் உழன்றாள் ,

வீக்கமான மார்பு தந்த
வலியை பொறுத்து,
பிரசவ வேதனைக்கு ஈடாக
இடுப்பு வலியை பொறுத்து ,
பசி பிடுங்கினாலும்
சாப்பிட முடியாமல் தவித்து,
வெட்டி எடுத்து விடலாம் என்று தோன்றும் கால் கடுப்பையும் பொறுத்து,

பள்ளி ,அலுவலகம் என
விரைந்து ஓடிய போதும் ,
வீட்டு விசேஷங்களில்
வலியை மறைத்து
விருந்தினரை உபசரித்து போதும் ,
இடுப்பு வலியோடு குடத்தை தூக்கி இடுப்பில் சுமந்த போதும் ,
அடிவயிறு வெப்பத்தால் கொதிக்கும் அதோடு அடுப்பின் அனலோடு அருகில் நின்று சமைத்த போதும் ,

அந்தக் கடை ,
இந்த கடை,
சந்தைக் கடை ,
சொந்த கடை ,
என 8 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும்
பெண்ணவளின் உதிரப்போக்கின் வலிகளை சொல்லிக்கொண்டே
போகலாம் ,

இத்தனை வலிகளை உடலால் மட்டுமே உணர்ந்தவர்களுக்கு ,
கருவின் உதிரத்தை உடலால் மட்டுமில்லாமல் மனதாலும்
அந்த இரும்பு பெண்ணால்
தாங்க முடியவில்லை ,

உதிரத்தின் உறவை
உணர்ந்தவளும் அவள்தான் ,

உதிரத்தின் மூலம் ,உறவை தந்து
அன்பு என்னும் மகா சக்தியை வெளிக்கொணர்ந்தவளும் அவளேதான்

உதிரம் என்றாலும்
அவள் தான்
வலி என்றாலும்
அவள் தான்
சக்தி என்றாலும்
அவள் தான்
உதிரத்திற்கு உயிர் குடுப்பவளும் அவள் தான்
உதிரத்தால் உயிர் விடுவதும் அவள்தான்
உதிரம் அதுவே அவளுக்கு வரமும் சாபமும்

  - ரேணுகாதேவி

@Yaazhi_Stories சகோ ஒரு அருமையான தலைப்பில் ஒரு கவிதை சமர்ப்பிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

நன்றியுடன் ரேணுகா தேவி :orange_heart:

2 Likes

(2017ல் ஒரு பள்ளியில் நடந்த உண்மை சம்பவமே இக்கவிதை)

பத்து வயது சிறுமியவள்
பருவமதை எய்துவிட்டாள்
பள்ளிகூட செல்லும் வேளையிலே
பயணம் ஒன்றை தொடங்கிவிட்டாள்

பத்து மாதம் சுமந்தவளின்
படிப்பறியா மனதினிலே
பயமுமது தொற்றிக்கொள்ள
பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்

முளைத்திட்ட பெண்மையின்
மூன்று நாட்கள் கழித்தலையே
முறையாக தெரிந்திடாமல்
முன்னேறினால் கல்வியிலே

மாதம் சில போனபின்னும்
மாற்றங்கள் வந்திடவே
மாதவிடாய் நாட்களதை
மறந்துவிட்டாள் சிறுமியவள்

உதிரத்தின் காலத்தை
உதிர்த்தவளும் மறந்துவிட
உலகறியா பெண்ணவளின்
உதிரப்போக்கும் வகுப்பினிலே

சீருடையின் வழியினிலே
சிந்தியது ரத்தமுமே
சிரித்திட்ட மாணவர்முன்
சிறுமியும் குறுகினாலே

அடிவயிற்றில் வலியுமது
அடிதடியாய் பற்றிக்கொள்ள
ஆம்மனதில் தோன்றியது
அவமான வலிகளுமே

கற்பிக்கும் ஆசிரியையோ
கருப்பையின் செயல்மறந்து
கண்டிக்கிறாள் இளம்பிஞ்சை
காரணங்கள் புரியாமல்

இயற்கையின் வரமாக
இறைவன் கொடுத்ததடி
இயல்புநிலை தானென்று
இவரும் சொல்லவில்லை

கல்வியின் இடத்தினிலே
கலைந்திடும் கழிவுகளால்
கண்டுவிட்டாள் சிறுநேரம்
கவலையின் உச்சமதை

கழிவறையின் அருகினிலே
காத்திருக்க சொல்லிவிட
கண்ணீர் துளிகளிலே
கடத்தினாள் நேரமதை!

வீட்டிற்கு சென்றவளோ
விம்பிக்கொண்டு அழுதுவிட
விடைதெரியா பெற்றவளும்
விரைத்துநின்றாள் கண்ணீரிலே

சிலநிமிடம் சென்றபின்னே
சிந்தித்த கன்னியவள்
சிறுசப்தம் இல்லாமல்
சிறைகொண்டாள் அறையினிலே

கயிற்றின் துணையுடனே
கட்டிக்கொண்டாள் தன்கழுத்தை
கதறிக்கொண்டே பற்றிவிட்டாள்
காலனின் கரங்களையே…!!!

       - சேதுபதி விசுவநாதன்
1 Like