கவிதை - தேடல்

கவிதை - தேடல்
0

:cupid:தீராத காதலும் மாளாத சோகமும் தன்னுள் தேக்கி வைத்திருப்பது தேடல் எனும் ஜீவநாடியை!:heartbeat:

ஆனால் தேடலில் அயர்வடையாமல் மொழியினை சுவைத்திட வேண்டுமெனில் இங்கு காணுங்கள் எமது கவிதை வரிகளில்! :point_down:

1 Like

மனைவியின் தேடல்

புகுந்த வீட்டினிலே
புறமுதுகு காட்டாமல்
புரிகின்ற வேலைகளை
புதிதாக செய்கிறேன்

உணவும் மறந்திடவே
உடலும் சோர்ந்து விட
உள்ளத்தின் வலிகளிலே
உணர்வுகளும் வெறுக்குதடா

மகிழ்ச்சியின் மொழிகளை
மலர்ந்திடும் சொற்களால்
மருகி நிற்கும் இதயத்திற்கு
மருந்தாக கொடுத்துவிடு

சின்னஞ்சிறு வேலைகளை
சிலநேரம் நீ செய்ய
சிற்பமான காதலும்
சிந்தையிலே தோன்றிடுமே

வழிகளின் தேடல்களில்
வாழ்ந்திடும் செயல்களிலே
வாழ்க்கையின் அர்த்தத்தை
வரமாய் கொடுத்தாயே…
- சேதுபதி விசுவநாதன்

3 Likes

உயிர் தேடல்

நித்தமும் உயிர் வாழ நீ வேண்டும் என்று தேடினேன்

கல்லும் மண்ணும் உடைத்திடும் வேட்கையில் தேடினேன்

தேடலில் முடிவிலே தோல்வியின் மொழிகளையே வெற்றியாக கொண்டேன்

ஒவ்வொரு முறை தேடும் போதும் வாடியே போனேன் காணமல் உன்னை

நான் வாழ வேண்டுமென உருவாக்கியவர்களுக்கும் என் தேடல் புரியவில்லை

நான் படுகின்ற வலிகளையும் நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

வேதனையின் உச்சத்தில் வேள்விகளின் மேலே நிற்பதாய் உணர்கிறேன்

போதும் உந்தன் ஓடி பிடித்து ஒளிந்து கொள்ளும் விளையாட்டு

இறக்கும் போதாவது இரக்கம் காட்டுவாயா என்று ஏங்குகிறேன்

சக்தியற்ற நிலையிலும் போராட்டம் தீரவில்லை என்று முயன்று மடிகிறேன்

மீண்டும் ஒருமுறை மரமாக பிறந்தால் என்னை தேட வைத்து விடாதே தண்ணீரே…

              - சேதுபதி விசுவநாதன்
2 Likes

Superb :purple_heart:

1 Like

தேடுகிறேன்

உன் இதலோர புன்னகையை,

உன் கடை கண் பார்வையை,

யாரிடமோ சொல்வது போல எனக்கு நீ கூறும் செய்தியை,

உன் கைகள் என் கைகளை தீண்டிய முதல் ஸ்பரிசத்தை,

உன் கண்ணீர் சிந்திய காதலை,

முடிவும் முதலுமாக என் கன்னங்களில் நீ கொடுத்த முத்தத்தை,

உன்னை ஆரத்தழுவிய அந்த அரை நொடியை,

மீண்டும் ஒரு முறை வேண்டி
தேடுகிறேன், கிடைக்காது என்று தெரிந்தும்.

  • கௌரி முத்துகிருஷ்ணன்💜
3 Likes

கிடைக்காது என்று தெரிந்தும்.

சூப்பர் வரிகள்.

காதலை தேடும் உயிர்

1 Like

நன்றி சகோ :purple_heart:

உயிர் தேடல்

இரண்டு வருடமாய்
என் அகப்பையில்
தேடுகிறேன்
உன்னை,… நீயோ
என்னுள் வராமல் விளையாடி
கொண்டிருக்கிறாய்…
உனக்கான தேடலில்
ஒவ்வொரு மாதமும் நான்…
எப்பொழுது வருவாய் என் உயிரே?
என் வாழ்வை மேலும்
சிறப்பாக்க…

     - சஹானா
3 Likes

அருமை சகோ!

1 Like

Superb Gowri…

1 Like

Super Sis… :green_heart:

1 Like

“என் நட்பே?! நீ எங்கே?”

தொலைந்த காதலை மட்டும் தான்
தேடிட வேண்டுமா?!

தொலைத்து விட்ட நட்பைத் தேடுகிறேன் இங்கு நான்!..

அன்புத் தோழியே!
இதைப் போன்றதொரு நாளின் நடுநிசியில்
அறை முழுவதும் நிறைந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில்…

உனக்கு மிகவும் பிடித்தப் பாடலொன்றை மடிக்கணினியில் இசைக்க வைத்து…

கட்டி வைத்த உன் கண்களை விடுவித்து "வாழ்க பல்லாண்டு! " என வாழ்த்தியதை நம் கல்லூரியின் விடுதியறை வேண்டுமானால் மறந்திருக்கக் கூடும்…

உனக்கு ஞாபகம் இருந்திடுமா
இப்போதும்?!

நட்பே!
நீ எங்கே இருக்கிறாய்?
எப்படித் தொலைத்தேன் உன்னை?!

‘சுடோகு’ தோற்றுப் போகும் அளவிற்கு மனதில் தேக்கி வைத்திருந்த உன் தொலைபேசி எண்களை விரல்கள் தேய மாற்றியமைத்து அழைத்துப் பார்த்தாயிற்று!

‘எங்கே சென்றாயடி?’ என நீ வசைபாடுவாயெனக் காத்திருந்து மறுமுனையில் திட்டு வாங்கியது தான் மிச்சம்…

நட்பின் இந்தத் தேடல் கேட்போருக்கு நகைப்பைத் தந்தாலும்…
பழகுபவரிடமெல்லாம் உன்னையே நான் தேடுவதாலோ என்னவோ…
எதையோ இழந்து விட்டதாய் உணர்கிறேன் எப்போதும்!

முகநூலின் மூலை முடுக்கெல்லாம் தேடிவிட்டேனடி…
சமூகத்தின் பார்வையிலே விழாமல் எங்கே மறைந்திருக்கிறாய்…
என் முழுமதியே?!

என்றோ ஒருநாள் உன்னை சந்தித்திடுவேன்…
அன்று…
நம் பிள்ளைகள் வளர்ந்திருக்கலாம்…
நமக்கும் வயதாகி இருக்கலாம்…

நரை கூடிப் போன நாம் கடந்த காலத்தை எண்ணி விடிவது தெரியாமல் கதைத்துக் கொண்டும் இருக்கலாம்!

ஏன்…
இவை எதுவுமே நடக்காமலும் போகலாம்…
பயமாய் இருக்குதடி!..

ஒருவேளை நான் கடந்து விட்ட பிறகு…
இதை நீ படிக்க நேர்ந்தால்…

உன் இதழோரம் ஒற்றைப் புன்னகையோடு ஒரு துளி கண்ணீரை உன் விழிகளில் மலர விடு எனக்காக…
அது போதும்!

_ஏஞ்சலின் டயானா “அஞ்சலி”

2 Likes

Tq sissy

1 Like

அருமை டா, வரிகளில் வலிகள் தெரிகிறது.:purple_heart:

நெகிழ்ச்சியான வரிகள் :purple_heart:

1 Like

Thanks sissy

1 Like