கவிதை - நிலா

கவிதை - நிலா
0

“நிலவை வர்ணிக்க வார்த்தைகள் போதுமோ?!”

:purple_heart:கவிதை மழையினில் நனைந்து நிலவை ரசித்திடுங்கள்

3 Likes

கண்ட கனவுகள் ஆயிரம்
தாண்ட தடைகள் ஏராளம்

தேய்ந்தாலும் வளரும்
உன் முகம் பார்த்து
நம்பிக்கையோடு வாழ்கிறேன்.

யாழ் சத்யா

5 Likes

என்றோ ஒரு நாள் உன்னை
தொட்டு விடும் நாளை எண்ணி
ஒவ்வொரு வாழ்க்கைப் படியாய்
ஏறி கொண்டிருக்கிறேன்
வெண்ணிலவே…

யாழ் சத்யா.

3 Likes

பௌர்ணமி நிலவில்
உன் முகம் பார்த்து
என் ஏக்கங்கள்
தாபங்கள் தீர்க்கிறேன்
கண்மணி…

யாழ் சத்யா.

3 Likes

என்னை போலவே வீண்மீன்களும்,
தொட்டுவிடவா? எட்டிவிடவா?
என்று ஏக்கமாய்
பார்த்து கொண்டு இருக்கிறது,
வெள்ளி நிலவை.

அந்த நிலவை பார்ப்பது
போலவே,
இன்றும் ஏக்கமாய் பார்த்து
கொண்டிருக்கிறேன்,
உன்னை என் வெண்ணிலாவை…

-சஹானா

5 Likes

Super

2 Likes

நிலவுக்கும் நம்பிக்கைக்கும் இத்தனை நெருங்கிய பந்தம் இருப்பது அருமை! அதைத் தெரிவித்த விதம் அழகு! :blue_heart:

2 Likes

“ஏக்கம் என்பது தான் தேடலின் பொருளோ?!”
அருமை சகோ… :purple_heart:

3 Likes

நன்றி சகோ

3 Likes

நிலவே! என் காதல் தீ(நீ)யே!

ஆதவன் அவளைப் பெண் பார்க்கச் செல்கையில்
முகிலின் பின்னே ஒளிந்து கொள்பவள்…
அவன் தொலைதூரம் சென்ற பின்னே
மெதுவாய் நாணம் கலைத்து மிளிர்கிறாள் – தினமும்!

தன் காதலை அவனிடம் உரைத்திட எண்ணி
ஜென்மங்களாய்க் காத்திருப்பவள்…
கிலியென்னும் கரைசூடி மலைகளின் பின்னே
தன்னை மறைத்துக் கொள்கிறாள் - எப்போதும்!

கடல் அலைகளைத் தூதுவிட்டும் அவனைச் சேர
இயலாமல் காதலின் ஏக்கத்தில் தேய்பவள்…
அவனது ஒளிக்கதிர்கள் போதுமே ஆசைகள்
ஈடேறவென்று எண்ணி மீண்டும் மெல்ல வளர்ந்திடுவாள் – காலமெல்லாம்!

தன் வானென்னும் வீட்டிற்கு வெளிச்சம் தருபவள்…
பால்வெளிக்கு ஒளிரும் வித்தை கற்றுத் தந்திடுவாள் – எந்நாளும்!
யார் அவள்?!

பிள்ளைக்கு அமுதூட்டுகையில் அன்னையாகிறாள்
தனிமையில் தவித்திடுகையில் நல்ல தோழியாகிறாள்
காதலில் கசிந்துருகிடுகையில் உற்ற துணையுமாகிறாள்!

யார் இவள்?!
இவளின்றி இருளுக்குப் பொருளுமில்லை
இவளில்லா கவிதை வரிகளுக்கு அழகுமில்லை!

கைக்கெட்டா உயரத்தில் இருந்தும்
மனதின் அணுக்கள் மொத்தமும்
கொள்ளையிட்டுச் செல்லும் நிலவே…
நீயின்றி நான் ஏதடி?!

_நிலா_சந்தோஷ்

4 Likes

அருமை சஹானா… நல்லாருக்கு. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

2 Likes

ஆரம்பமே அசத்தல். மிகவும் ரசித்து வாசித்தேன். நிலவில்லாமல் நாம் இல்லை… வாழ்த்துகள் அக்கா.

2 Likes

மிக்க நன்றி @Yaaz_Sathya :blush::purple_heart:

1 Like

Tq sissy

1 Like

எப்பொழுதும் போல்
உன்னை
எதிர்பார்த்து காத்திருந்தேன்.

நீயோ என்னை
கண்டுபிடி என்று
ஒளிந்து கொண்டாய்
மேகத்தினுள்,
நிலா.

2 Likes

its really superb இது ரொம்ப அருமையா இருக்கு அக்கா, அவள் முகம் கண்டால் தாபமும் ஏக்கமும் தீருமா? arumai :purple_heart:

விலகி செல்லுங்கள்
வளர்பிறை காணாத
தேய்பிறை நான்,

என் வானில்
நிலவு இல்லை.

  • கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:
2 Likes

superb words arumaiya eruku :purple_heart:

சொல்ல வார்த்தைகளே இல்லை நிலா சந்தோஷ் , நிலா பெண்ணை பற்றி உணர்வு பூர்வமாய் எழுதி இருக்கீங்க. :purple_heart:

1 Like

Tq sissy

1 Like