கவிதை பக்கம்

கவிதை பக்கம்
0

வாசகர்களை சர்க்கரைப் பந்தலில் தேன்மாரியாய்ப் பொழியும் கவிதையால் மகிழ்விக்க வாருங்கள் கவிஞர்களே

2 Likes

வணக்கம் தோழமைகளே…

இன்றைய பொழுதினை நேற்றைய கனவோடு துவங்கலாமா?

“கனவு மெய்ப்படுமா?!”

பனித்துளியின் துகள்களில் ஆதவனின் இளங்கதிர்கள் சூடேற்றும் அதிகாலைப் பொழுதில்…

பனிக்கட்டி மாளிகையின் வெம்பா படர்ந்த கண்ணாடிச் சுவற்றை விரல்களால் தெளிவுபடுத்தி நான் பார்க்கையில்…

தூரத்தில் தெரிந்திட்ட அவனது பிம்பத்தை என்னருகில் கொண்டு சேர்த்துத் திரும்பியது பனி வாடைக்காற்று!..

மந்தாரம் நிறைந்த அறையின் ஒற்றை மெழுகுவர்த்தி மட்டுமல்ல - அங்கே விழிகளின் வெப்பத்தில் உருகியது மனதும் கூடத்தான்…

செம்பழுப்பு மேப்பல் இலைகள் பாதையில் அடர்ந்திருக்க…
விரல் கோர்த்துத் தோள் சாய்ந்து வெகுதூரம் நடந்திட்டோம் அவனும் நானும்!..

அந்திவானம் மஞ்சள் பூசுகையில் வெண்பனி கவிழ்ந்த மலைமுகட்டின் பள்ளத்தாக்கில் எமது தலைகள் மெல்ல மறையத் தொடங்குகையில்…

திடுக்கிட்டு விழித்துக் கனவென்று அறிந்திட்டேன்…
அதிகாலைக் கனவு பலித்திடுமாமே!..

அவன் முகம் தேடித்தான் நிதமும் கண் விழிக்கிறேன்…
என் கனவு மெய்ப்படும் வேளை வந்திடுமா?!..

_ஏஞ்சலின் டயானா

2 Likes

superb sissy :heart_eyes::heart_eyes::heart_eyes::heart_eyes::heart_eyes::heart_eyes::heart_eyes:

2 Likes

Thank you so much Sis… :blush::pray::purple_heart:

2 Likes

அவனுக்கான வெந்நிலவே::::
@@@@@@@@@@@@@@@

உன் வெந்நிற கூட்டிற்குள்
ஒருமுறையேனும் குடியேறி
என்னவனோடு கதைத்திட
பால்வெளி வீதியாய்
உன் பௌர்ணமி நாளில்
ஏங்குகிறேன் எனக்கே
எனக்கானவனின் வரவை எண்ணி
என்னவனை என்னிடம் காட்டிட
வருவாயா வெந்நிலவே!
_காயத்ரி ராஜ்குமார்.

2 Likes

arumai sago