கவிதை - பிரிவு

கவிதை - பிரிவு
0

:broken_heart:பிரியும் போது பிரியம் வளரும் என்றாலும்

பிரிவைப் போல் பிணி தர பிரிதொன்று மில்லையே…:broken_heart:

விழிகள் நேசிக்கும் எழுத்துருவை அதனின்று பிரித்திடாமல் கண்களால் கைது செய்யுங்கள் பின்வரும் கவிதைகளை!..

4 Likes

நினைவுகளில் கூட
நெருங்கிட மறுக்கிறாள்
என்னை நீங்கிய
பிறகு…

கனவுகளில் கூட
வெறுக்கிறாள்
என்னை நெருங்காதே
என்கிறாள்
என்னை விட்டு
சென்ற பிறகு…

    - சஹானா
5 Likes

Wowww

உயிர் வலிக்க கருவில் இருந்து பிரிந்தாய்
மகிழ்ச்சியாக அழுதேன்

ஆரம்ப கல்விக்கு பள்ளிக்கு சென்றாய்
அடிமனதில் முதல் பிரிவில் அழுதேன்

கல்லூரி படிப்புக்கு விடுதியில் தங்கினாய்
நெடுநாள் பிரிவில் நித்தமும் கலங்கினேன்

காதலித்து சொல்லாமல் திருமணமும் செய்தாய்
செல்லாதவளாக நின்று நீரும் வடித்தேன்

காசு வரும் வேலையென்று கடலையும் கடந்தாய்
முகம் காண வலிகளில் முடங்கி போனேன்

என்னவரின் பிரிவினில் உன்னிடம் நிற்கதியாய்‌ தனிமையில் நின்றேன்

முடியவில்லை என்று சொல்லி முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டாய்

மகனே!

இன்றும் அழுகிறேன் இறைவனிடம் என் உயிரை பிரிக்க சொல்லி
- சேதுபதி விசுவநாதன்

3 Likes

மற்றவர்களை பார்க்கும் எங்களால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் நீங்கா காதலுடன்
பிரிந்தே இருக்கிறோம்!!!

இப்படிக்கு கண்கள்

4 Likes

arumai sago :purple_heart:

1 Like

rombha nalla eruku da :purple_heart:

1 Like

நான் உன்னை விட்டு பிரிந்து
தொலைதூரம் வந்து இருந்தாலும்,

என்னுள் ஒவ்வொரு நொடியும் நீ தான்.!

  • கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:
2 Likes

Tq sissy :heart:

1 Like

Semma sissy

1 Like

காதலும் கடந்து போகுமா?!

மிகப் பத்திரமாய் பூட்டிவைத்த இதயமும் கூட
நேசமென்னும் வீட்டைக் கடந்திடும்போது
தாழ்திறவாதோ?..

பிரயர்த்தனப்பட்டுக் காரணங்கள்
கண்டெடுக்க முயல்கிறேன் உன்னை
அகழ்வாராய்ச்சி செய்கையில்…

கானல் நீராகிப் போனது தெரிந்தும்
உன் மனதைப் படித்திட ஓலைச்சுவடிகள்
தேடிக் களைத்துப் போகிறேன்…

காலச் சக்கரத்தின் சுழற்சியில் இழந்துவிட்ட
நாட்களை மீட்டிடத் தவிக்கிறேன்…
வருடங்கள் கடந்துவிட்டால் நெஞ்சின் ஓரம்
துளிர்த்த காதலும் சருகாகிடும்
என உணர வைத்தவன் நீ…

இப்போது என் வலிகளை மறக்க விரும்புகிறேன்…
உன் மீது கொண்ட எதிர்பார்ப்புகளைத்
தவிர்க்க விழைகிறேன்…

எனக்காக எதையுமே செய்திடாத நீ…
உன் நினைவுகளை மட்டுமாவது
அள்ளிச் சென்று விடு…

_ஏஞ்சலின் டயானா “அஞ்சலி”

1 Like