கவிதை - மழை

கவிதை - மழை
0

"நாசிதனில் நுழைந்திடும் வாசப் பூந்தூரல் துவங்கி…

நடுங்கிடும் பாதங்களை வெப்பம் தேடி அலையச் செய்யும் அடை மழை வரை…

மழையானவளுக்குத் தான் எத்தனை பரிணாமங்கள்!":heart_eyes:

:blue_heart:கவிதைச் சாரலில் இணைந்து சிலிர்த்திட வாருங்கள்…

4 Likes

amazing lines :purple_heart:

1 Like

ஒரு மழை நாளின் மதியப் பொழுதும் சில நினைவுகளும்

கறுத்த வானம்! கொட்டும் மழை!
மதியம் என்றாலும் அந்தி மாலையாய் இருட்டு!

யன்னலைத் திறந்து திரையை
விலக்கி மெதுவாய்
வெளியே பார்க்கிறேன்!

இன்னும் அவர்கள்
அங்கேயே தான் நிற்கிறார்கள்!
பனை மரங்களின் கீழிருந்து முன்னேறி
வேப்ப மர நிழலில் ஒதுங்கி நிற்கிறார்கள்!

கைகளின் நிலை மட்டும் மாறவே இல்லை
இப்போதும் அதே பிடி!
தூக்கத்தில் கூட அப்படியே தான்
ஏந்தி இருப்பார்களோ?

வேப்ப மரம் மட்டும் என்ன கூடாரமா?
அந்த கனத்த மழையில் தெப்பமாய் அவர்கள்!

சொட்டச் சொட்ட நீர்,
இரும்புச் சட்டியாய்
தலையில் கவிழ்த்ததில் இருந்து வழிய
கடமையே கண்ணாய்
இன்னும் கைகளில் அதே பிடி!

‘நன்றாக நனைந்து ஜன்னி கண்டு மரணிக்கட்டும்’
என் மனம் குரோதமாய் எண்ணமிட்டுக் கொண்டிருக்க,
கதவைத் திறந்த என் பாட்டி
வேப்ப மர நிழலில் ஒதுங்கியோர் பார்த்து,
“யார் பெத்த புள்ளையோ இப்படி நனையாதே ராசா
மழை நிற்கும் வரை இந்த தாழ்வாரத்தில் வந்து ஒதுங்கு”
துடைக்க துண்டும்
சூடாய் தேநீரும் கொடுத்தாள்!

“நன்றி பாட்டி” தேநீரைப் பருகிய ஒருவன்
விழிகளில் இருந்து தெறித்த நீர்த்துளி
ஆயிரம் கதை சொன்னது!

எங்கோ தூரத்தில் வசிக்கும்
தன் குடும்பத்தை எண்ணியிருப்பானா?
அல்லது உயிரை எடுக்க வந்திருக்கும்
என்னை அன்பாக கவனிக்கிறாளே
என்று குற்றவுணர்வில் வெந்திருப்பானா?
எதிரிக்கும் விருந்தோம்பும் தமிழர் மரபு
பார்த்து மெய்சிலிர்த்திருப்பானா?

அவன் கண்ணீரின் அர்த்தம் எதுவாயினும்
மழைக்கால பொழுதுகளில்
பச்சை சீருடைகளை காணும் போதெல்லாம்
இன்றும் அவன் கலங்கிய கண்கள்
என் கண் முன் நிழலாடுவதைத்
தடுக்க முடியவில்லை…!

  • யாழ் சத்யா .
3 Likes

உனக்காய் ஏங்கித் தவித்து

நான் வடித்த கண்ணீரில்

சுரப்பிகள் வற்றி விட்டதால்

எனக்காய் அழ மழையே

நீயும் வந்தாயோ…!

  • யாழ் சத்யா.
4 Likes

மழையே …!

மறைக்கும் தேவையற்று

உன் முன்னே நான்

சுயமாய் அழ முடியும்

என்பதாலோ என்னவோ

உன் மீது அத்தனை காதல் எனக்கு…!

  • யாழ் சத்யா
4 Likes

சாரல் கொண்டு சத்தமின்றி என் தேகம் தீண்டி…
நித்தமும் நீ வருவாயா என்ற ஏக்கத்தில் என்னை
வதைத்து செல்லும்
அழகிய கொலைகாரி மழை

  • லதா கணேஷ்
2 Likes

முதல் துளி கொண்டு
என்னை முத்தமிட்டு,

நான் அனுமதிக்கும் முன்
முழுதாய் என்னை நனைத்து
களவாட துடிக்கும்
செல்லக் கொள்ளைக்காரன்
மழை.

  • லதா கணேஷ்
3 Likes

அனுமதி இன்றி
என்னை தொட்டு,

காதலில் நனைக்கும்
உரிமை கொண்டவர்கள்
மழையும் நீயும்.

  • கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:
5 Likes

Super sissy

1 Like

Wow super

1 Like

Super sissy :heart:

1 Like

Semma

1 Like

மழையே
பொறாமை வருகிறது
உன்மேல்,
என் அனுமதியின்றி
என்னவளை
தீண்டுவதினால்…

-சஹானா

4 Likes

மிக அழுத்தமான பதிவு! அருமை சகோ…:green_heart:

1 Like

மேகம் சிந்தும் கண்ணீர்த் துளிகளுக்கு அர்த்தம் தந்தமைக்கு நன்றி சகோ… :ok_hand:

1 Like

அருமையான வரிகள் சகோ @Latha_ganesh:heart_eyes:

1 Like

:umbrella:காதல் மழை… தங்கள் வரிகளில் அருமை @Gowri_Muthukrishnan

1 Like

அருமை @sahana_ganesh:heart_eyes::heartbeat:

1 Like

Tq sissy

2 Likes

என் காதல் மழையே!..

அந்த அடர்வனத்தினூடேயான எனது பயணம்
அத்தனை எளிதாய் இருக்கவில்லை…
நம்பிக்கையற்று மறந்தும் மனிதத் தலைகளற்று
மழையிலும் வெயிலிலும் துன்புற்று நகர்கையில்…
தூரத்தில் தெரிந்திட்டது உன் முகம்!..

என் கைவிரல் பற்றியேனும் உடன்வர உன்னை அழைத்தேன்
ஆனால் மார்போடு அள்ளி இருகரங்களில் ஏந்திக் கொண்டாய்!..
மேகங்களின் பின்னே தேய்ந்திடும் நிலவாய் அல்லாமல்
மலைகளின் பின்னே ஒளிந்திடும் ஆதவனாயும் அல்லாமல்
ஒற்றைச் சொல்லில் அவற்றைச் சுழற்றிடும் இறைவனாய் என் முன்னே
நீ உதித்தாய்!..

உன் காதல் மழையில் என் பாதையின் கடினம் மறைந்துபோக
பேரன்பின் ஆதி ஊற்று நீயே என்றுன்னைச் சரணடைந்தேன்!..
வந்த வேகத்தில் மின்னலெனத் தொலைந்து போவாய்
என அப்போது நான் அறியவில்லையே!..
மன்னித்தலுக்கும் மறத்தலுக்கும் இடையேயான உடைந்த பாலத்தில் என் மனமோ ஊசலாட…

இப்போது என் பாதையின் இருள் முன்னைக் காட்டிலும்
தன் கூரிய பற்களால் காயப்படுத்துகிறதே…
கேட்டுப் பழகிய கானகத்து மிருகங்களின் இரைச்சல் கூட
இப்போது என் மயிரிழைகளையும் நடுங்கச் செய்கிறதே!..

முன்பு உன் புன்னகை ததும்பிய முகத்தை உயிரோவியமாய்
என் உதிரம் கொண்டு இதயக்கல்வெட்டில் சித்திரமெனத் தீட்டி வைத்திருந்தேன்!
இப்போது உன் நிராகரிப்பின் அமில அலைகள்
புரையேறிப் போன என் இதயத்தை மேலும் ரணமாக்குகிறதே – என் செய்வேன்?!

இறுதி யாசகமாய் உன்னிடம் ஒன்றைக் கேட்கிறேன்…
என்றேனும் ஓர் நாள் நீ விலகிச் சென்ற பாதையின்
சுவடுகளை உன் ஞாபகப் பக்கங்கள் திருப்ப முயன்றால்
தயவுகூர்ந்து திரும்பிப் பார்க்காதே…

ஏனெனில் – ஒருவேளை…
ஒருவேளை என் கடைசி நொடிகளின் அல்லல்களை
நீ அறிய நேர்ந்தால்…
முன்பு என்னைக் கண்டு லயித்த உன் பொன்விழிகள்
உன்னையறியாமல் கண்ணீர் சிந்தும் அவ்வேளையில்…

பாதையின் ஓரம் கருகிக் கிடக்கும் என் குருதியின் துகள்கள்
உயிர்பெற்று உன்னை அடையத் துடித்திடும் அந்த வேதனையை மட்டுமாவது
எனக்கு மிச்சம் வைத்து விடு!
ஏன் தெரியுமா?

நீ நினைப்பதைக் காட்டிலும் உன் இதயம் அத்தனை மென்மையானது!
என் இறுதி மூச்சின் கோரிக்கை எல்லாம்
நீ திரும்பிவிட வேண்டாம் என்பது மட்டுமே எப்போதும்…

_ஏஞ்சலின் டயானா

4 Likes