கவிதை - விழிகள்

கவிதை - விழிகள்
0

"அழகினை ரசித்திட விழிகளில் ஈரம் வேண்டுமே!

அவ்விழிகளில் மாயாஜாலங்கள் அறிந்திட இங்கு கவிதைகளும் வேண்டுமே!"

:green_heart:உயிர்ப்பான விழி அணுக்கள் கொண்டு பின்வரும் கவிதைகளை ரசித்திடுங்கள்!:blue_heart:

5 Likes

#விழிகளின் யுத்தத்தில்#

எத்தனை முறைகள்
என்னவளின் முகத்தை கண்டாலும்
ஒவ்வொரு முறையும் தோற்கிறேன்

காரணங்கள் தேடியபோது
எந்தன் மூளை சொன்னது
சற்றே யோசித்து பாரேன்று!

தேடிவந்து காதலை சொன்னவளின்
நேத்திரத்தின் வலைகளால்
இதயத்தை தொலைத்தாயே

முதல் பார்வையிலே
மொத்தத்தையும் மறந்தவனே
இதையும் கூட மறந்தாயோ?

விழியிரண்டில் கைது செய்தவளே
வியப்புடனே‌ பார்க்கிறேனடி
எந்தன் களவாடிய பொழுதுகளை

நித்தமும் தவிக்கிறேன்
உந்தன் கூரிய பார்வையில்
முள்ளில் சிக்கிய ஆடைபோல்

உன் கண்களை பார்த்து
சொல்லவிட தவிக்கிறேன்
அவசர விசயமொன்றை

கண்களில் வழிகளிலே
காதலை புகுத்திவிட்டாய்
காரணங்கள் வேண்டாமடி

களவாடிய என்னிதயத்தை
உன்னிடம் வைத்துக்கொண்டு
உன்னிதயத்தை கொடுத்துவிடு

உயிராய் நானிருப்பேன்
விழிப்பார்வையின் இமைபோல
உன்னுடனே உயிருள்ளவரை

சொல்லிட வந்தவனின்
சொற்களையும் எடுத்தாயே
கருமை கண்களிலே

போர்களத்தில் பூகம்பமாய்
வெடித்திடும் இதயத்துடிப்பு
உன் ஓர கண்பார்வையில்

போதுமடி பெண்ணே!

விழிகளிடம் சொல்லிவிடு
விழிச்சிறையில் சிக்கியவனுக்கு
விடுதலை தந்துவிட…

       - சேதுபதி விசுவநாதன்
5 Likes

மிக அருமை சகோ

1 Like

என்னை
இரவில் தூங்கவிடாது
காதல் பேசுகிறது
என்னவளின்
விழிகள்.

 • கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:
5 Likes

என்னை உறைய வைக்கும்
உன் கண் பார்வை போதும்மடி
காதல் உணர்த்த…

மொழிகள் பேசும்,
உன் கண்ணசைவு வேண்டுமடி,
எனக்குள் புது கவிதைகள் பிறக்க…

அழகு கூட்டும்
உன் கண் மை வேண்டுமடி
கவிதைகளை எழுத…

 • கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:
4 Likes

விழி ஈர்ப்பு விசை

விழுந்து விட்டேன்
உன் விழி ஈர்ப்பு விசையால்
காதலில்…

 • கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:
5 Likes

எனைப் பார்த்ததும்
பலமுறை சிறகடித்தும்
பறக்க இயலாமல்
பட்டாம்பூச்சியாய்
உன் விழிகள்…

 - சஹானா
6 Likes

really superb… aval imaigalum siragadikuthae…:purple_heart:

1 Like

Tq sissy

1 Like

Super sissy

1 Like

‘காதலுக்குக் கண்ணில்லையாம்’
உன் கண்களைப் பார்த்துத் தான்
உன் மேல் காதல் கொண்டேனடி
என் கண்மணி…!

~ யாழ் சத்யா ~

5 Likes

அருமை சகோ… :+1:

1 Like

அருமை @Gowri_Muthukrishnan:blue_heart:

அருமை @sahana_ganesh :purple_heart:

1 Like

அருமை @Yaaz_Sathya :heartpulse:

1 Like

Tq sissy

2 Likes

என் வாழ்வின் பொருளே!

கண் இல்லையேல் பார்ப்பதில் அர்த்தம் இல்லை…
இதயம் துடிக்காவிடில் வாழவே பொருளும் இல்லை…

பார்க்கும் விழிகளையும் நேசிக்கிறோம்…
பார்க்காத இதயத்தையும் நேசிக்கிறோம்…

இதில் அளவீடு என்பது எதற்கு?!
நீ கண்ணாய் இருந்தால் நான் இதயமாய் இருந்துவிட்டு போகிறேன்…

பாராட்டுவதில் கிடைப்பது மகிழ்ச்சி என்றால்…
விட்டுக்கொடுப்பதில் கிடைப்பது இதயத்தில் மயிலிறகின் ஸ்பரிசம்! …

ஐம்புலன்களிலும் இதுதான் வேண்டும்…
அறுசுவையிலும் இதுமட்டும் போதும் என்று எப்படி தீர்மானிப்பது?!..

அவனும் அவளும் சேர்ந்தது தானே வாழ்க்கை!..
மன்னிப்போம்…
நேசிப்போம்…
அன்பை சுவாசிப்போம்…
வாழ்வை ரசிப்போம்!..

_ஏஞ்சலின் டயானா “அஞ்சலி”

3 Likes

Beautiful!!

1 Like

Thanks sissy

எல்லாக் கவிதைகளும் அருமை

1 Like