காற்றெல்லாம் உன் வாசம் 13

காற்றெல்லாம் உன் வாசம் 13
0

துளிதுளியாய் சேர்த்து வைத்த உன் நினைவுகளில்

காற்றெல்லாம் உன்வாசத்தை சமைக்கிறேன்…

சமைத்த உன் நினைவுகளை

துளி துளி தேனாய் அருந்தியே உயிர் வாழ்கிறேன்…


ஸ்வேதா இறந்து பத்து நாட்கள் முடிந்திருந்தன, ஸ்ருதி மருத்துவமனையிலிருந்து வந்து மூன்று நாட்கள் முடிந்திருந்தன. அன்று

ஸ்வேதாவிற்கு பத்தாவது நாள் பூஜை எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்ருதி இதுவரை ஸ்வேதா வீட்டிற்கு சென்றிக்கவில்லை.செல்வதற்கு துணிவிருக்கவில்லை. அவளுடைய துள்ளல் அவளை விட்டு முழுவதும் சென்றிருந்தது. ஸ்வேதாவின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று எண்ணினாலே இதயம் முழுவதும் சொல்லொண்ணா வலியால் துடித்தது.

இருப்பினும் ஸ்வேதா வீட்டிற்கு செல்லாமல் இருக்க முடியாதே. பூஜைக்கு மனதே இல்லாமல் பெற்றோருடன் கிளம்பிச் சென்றாள். வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் போது நடுங்கிய கால்களை மிக கடினப்படுத்தி நகர்த்தி வைத்து உள்ளே சென்றாள்.

வரவேற்பறையில் இருந்த ஸ்வேதாவின் ஆள் உயர புகைப்படத்தை பார்த்ததும், அவளின் கால்களுக்கு எங்கிருந்து அவ்வளவு பலம் வேகமாக ஓடி சென்றாள்.

“எப்படி டீ உனக்கு என்னை விட்டு போக மனசு வந்தது!” என்று அவள் கதறிய கதறலில் ஸ்வேதாவின் குடும்பமும் உறைந்து போய் நின்று விட்டனர்.

அழுது ஓய்ந்தவளை ஒரு வழியாக சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர்.

பூஜைக்கு பொருட்கள் வாங்க வேண்டி வெளியே சென்றிருந்த பிரணவ் அப்பொழுது தான் உள்ளே வந்தான். உள்ளே வந்தவன் ஸ்ருதியை பார்த்ததும் விரைவாக அவளின் அருகே வந்தவன் , அவளை முறைத்துப் பார்த்தான்.

அழுது கொண்டே விசும்பலுடன் உட்கார்ந்திருந்தவளை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

‘இவன் ஏன் முறைக்கிறான்?!’ என்று புரியாமல் இருக்கையிலிருந்து குழப்பத்துடன் அவனைப் பார்த்த படி எழுந்து நின்றாள்.

“எங்க வந்த?” பிரணவ் தன் உயிர் தோழியைப் பார்த்து எரிச்சலுடன் கேட்டான்.

அவன் கேட்ட வார்த்தையில் வாயிலிருந்து வார்த்தைகள் வராமல் அவனை மலங்கமலங்க பார்த்தபடி நின்றாள் ஸ்ருதி.

மஞ்சுளா, கண்டிப்பான குரலில் “வீட்டிற்கு வந்த பெண்னை பார்த்து என்ன சொல்கிறாய் நீ !”

“நீங்கள் சும்மாய் இருங்கள் அத்தை!”

“பிரணவ்!” ரூபவதி குரல் கண்டிப்புடன் வர

தன் குரலுக்கு திரும்பாமல், மஞ்சுளாவைப் பார்த்து திரும்பியவன், “அத்தை உங்களுக்கு ஸ்வாதி மகள் மட்டும் தான். மகள் போனாள் உங்களுக்கு உங்கள் மகன் சுந்தர் இருக்கிறான். ஆனால் … ஆனால் எனக்கு அவ வாழ்க்கை அத்தை! என் வாழ்க்கையே போச்சே அத்தை! அதுக்கு இவள் தான் காரணம்!” இப்பொழுது அவன் ஸ்ருதியை பார்த்து திரும்பி தெளிவாக குற்றம் சுமத்தினான்.

தவறே செய்யாமல் குற்ற உணர்வில் தவித்தாள் ஸ்ருதி. இதுவரைக்கும் பலதடவை இருவரும் வெளியே சென்றிருக்கிறார்கள் ஒருதடவையும் இது போல் ஆனது கிடையாது.

‘என்னையும் உன்னுடனே அழைத்து சென்றிருக்காமலே ஸ்ருதி. இப்பொழுது பிரணவ் உன்னை கேட்கிறானே, நான் என்ன பதில் சொல்வது?!’ அவள் தவித்தாள்.

“ஏன் டீ என் ஸ்வேதாவை கூட்டிட்டு போன? நீ கூட்டிட்டு போகாமல் இருந்திருந்தாள்… அவ இருந்திருப்பாளே டீ! கொன்னுட்டுயேடி அவளை!”

ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் செத்து பிழைத்துக் கொண்டிருந்தாள்.

ஏன்? ஏன்? இந்த கேள்வியை அவளும் தன் மனதுகுள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் விடை தான் கிடைக்கவில்லை!

இப்படி இரண்டு குடும்பங்களின் நிம்மதி தொலைவதற்கு காரணமாகிவிட்டோமே என்ற உணர்வில் அவள் தனக்குள்ளே தொலைந்து கொண்டிருந்தாள்.

பிரணவ் தொடர்ந்து அவளை திட்டி கொண்டே இருக்க, ஸ்ருதியின் பெற்றோருக்கும் கோபம் வர ஆரமித்தது.

“பிரணவ் போதும்!” மோகனசுந்தரம் கோபத்துடன் எதோ பேச ஆரமிக்க, ஸ்ருதி கைகளை உயர்த்தி அவரை தடுத்தாள்.

“அப்பா வீட்டிற்கு போகலாம்!” அழுத்தமாக அவளின் குரல் வந்தது.

பிரணவ் எதோ மீண்டும் ஆரமிக்க, அவனை நோக்கி தன் கனல் பார்வையை திருப்பினாள். அவளின் பார்வையில் இருந்த அக்னியில் அவனின் வாய் தானாக மூடிக் கொண்டது.

வீட்டிற்கு வந்த லட்சுமி புலம்பி தீர்த்துவிட்டார்.

“இந்த பையன் எப்படியெல்லாம் பேசிவிட்டான்! என் பெண் என்ன கொலைகாரியா!.. “ இதே ரீதியில் அவர் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி தன் வரவேற்பறையில் இருந்த ஸ்ருதி ஸ்வேதாவும் இணைந்திருந்த புகைபடத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

“போதும் லட்சுமி, பிள்ளை சாப்பிடவேயில்லை, அவளுக்கு எதாவது சாப்பிட ஏற்பாடு செய்!” என்று அவரின் மனதை திருப்பி அனுப்பினர் மோகனசுந்தரம்.

தளர்ந்து போய் அமர்ந்திருந்த ஸ்ருதியின் தலையை மெல்ல வருடிக் கொடுத்தார்.

அவள் மடிசாய்ந்தவளின் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை. வெறித்துப் போய் அந்த புகைபடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனதோடு ஸ்வேதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். ‘ஏன் டீ இராட்சசி என்னை விட்டு போனாய்! நான் என்ன டீ பாவம் பண்ணினேன், என் கண் முன்னாடியே என்னை விட்டு போய்விட்டாயே!’

‘நானும் சீக்கிரம் உன் கூடவே வந்திருவேன் டீ. வந்து உன்னிடம் சண்டை போடுவேன்’ மனதோடு ஸ்வேதாவிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

ஸ்ருதியின் தலையை தடவிக் கொண்டிருந்த மோகன்சுந்தரம் மெல்லிய குரலில் அவளிடம் பேச ஆரமித்தார்.

“ஸ்ருதி ம்மா மனசு இந்த நொடி தவறாக என்ன வேண்டுமானாலும் யோசிக்கலாம்!”

“…”

“ஆனால் நீ எங்களை பற்றி எப்பொழுதும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் சரியா!”

“…”

“ஏங்களை மட்டுமல்ல ஸ்வேதாவின் குடும்பத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!”

“…”

“அவர்களுக்கு ஒரு மகளாய் ஸ்வேதா செய்ய நினைத்த கடமைகளை நீ செய்ய வேண்டும்!”

“…”

“செய்வாய் என்று நம்புகிறேன்!” மோகனசுந்தரம் அழுத்தமாய் கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

மோகனசுந்தரத்தின் பேச்சு ஸ்ருதியின் மனதில் தெளிவை தோற்று வித்திருக்க, அழுத்தமாய் எழுந்து அமர்ந்தாள் ஸ்ருதி.

இப்பொழுது அவர்கள் இணைந்திருந்த புகைப்படத்தை பார்த்த போது வெறுமை எழவில்லை கூடுதலான பொறுப்புணர்வே தோன்றியது.

“உன்னுடைய இடத்தில் இனிமேல் நானிருப்பேன் ஸ்வேதா!” தெளிவான மனநிலையுடன் கூறியவள் அழுத்தமாய் எழுந்து சென்றாள்.

இனி தனக்கு ஒரு குடும்பம் இல்லை, இரு குடும்பம் என் மனதோடு சொல்லிக் கொண்டவளுக்கு , மின்னலாய் பிரணவின் ஒரு உருவம் தோன்றியது.

பிரணவின் இழந்த வாழ்க்கையை அவனுக்கு எப்படி திருப்பிக் கொடுப்பது. அவன் இன்னொரு திருமணத்திற்கு சம்மதிப்பானா? அப்படியே சம்மதித்தாலும், திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுடன் இவன் மனமொன்றி வாழ்வானா? அப்படி அவன் வாழவில்லை என்றால் இவனின் வாழ்க்கை மட்டுமல்ல, இவனை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் வாழ்க்கையும் வீணாய் போய்விடுமே!

தலை பிடித்திக் கொண்டு அமர்ந்து விட்டாள் ஸ்ருதி.

“ஆண்டவா! எனக்கொரு வழிக்காட்டேன்!” மெல்ல முணகினாள் ஸ்ருதி.

உன் வாசமாவாள்!!!