கௌரி முத்துகிருஷ்ணன் - குன்னூர் டூர் டைரி

கௌரி முத்துகிருஷ்ணன் - குன்னூர் டூர் டைரி
0

வணக்கம் ,

நான் கௌரி முத்துகிருஷ்ணன், இது பயணங்கள் முடிவதில்லை கட்டுரை போட்டிக்கான எனது படைப்பு.

கல்லூரி காலம் அனைவருக்கும் இனிமையானது, மறக்க முடியாதது நெஞ்சில் இனிமை சேர்க்கும் கல்லூரி சுற்றுலா பற்றிய கட்டுரை.

இங்கு சில காரணகளுக்காக என் கல்லூரி பெயரை கூறவில்லை. அது மகளிர் மட்டுமே படிக்கும் கல்லூரி. நான் இளங்கலை அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்த போது இந்த சுற்றுலா செல்ல அறிவிப்பு வந்தது. நான் பயின்ற கல்லூரி கோவையில் இருந்தது எனவே எங்களை இரு நாட்கள் குன்னூர் அழைத்து சென்றனர்.

பயணம் என்றாலே இனிமை தான், அதும் தோழிகளோடு என்றால் சொல்லவா வேண்டும்? நாங்கள் ஆறு பேர் எங்கள் நட்பு குழுவில்( பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கவி, கீதா, ரூபி, கார்த்தி, நான் மற்றும் மஞ்சு ஆறு பேரும் முதல் ஆட்களாய் பெயர் கொடுத்து வந்தோம். அனைவர் வீட்டிலும் சம்மதமும் கிடைத்தது. அப்போது தினம் கடவுளை வேண்டிக் கொண்டோம் அதெல்லாம் நினைக்கும் போது இப்போதும் சிரிப்பு வருகிறது.

பின் அனைவரும் டூர் செல்ல, துணிகளை அடுக்கி, பெற்றோர் பார்க்க வந்த போது கொடுத்த பலகாரம் எல்லாம் எடுத்து கொண்டு, டார்ச், பேட்டரி, மெழுகு, தீப்பெட்டி என்று தோன்றிய எல்லாம் எடுத்து கொண்டோம்.

பயண நாளும் வந்தது. அனைவரும் பேருந்தில் ஏறி பிடித்த இடத்தில் ஒன்றாக அமர்ந்து கொண்டோம். கல்லூரி வார்டன், எங்கள் வகுப்பு ஆசிரியை என்று அனைவரும் வந்து எல்லாம் சரி பார்த்து, எங்களுக்கு அறிவுரைகள் கூறி, ஒரு நிமிடம் கடவுளை வேண்டிக்கொண்டு பயணம் இனிதே ஆரம்பம் ஆனது. காலை 6.30 பேருந்து கிளம்பி கல்லூரி வெளியே வர, எதோ சுதந்திர காற்று போல் இருந்தது அது.

காலையில் நேரமாய் எழுந்தது என் கண்களுக்கு தூக்கத்தை தர, தோழியின் மடியில் சாய்ந்து கொண்டேன். அன்னை மடி அடுத்து உரிமையோடு கிடைக்கும் இடம் இதம் அது, அவளும் என் தலை வருடி கொண்டே உறங்கி இருந்தாள். தீடீர் என முகத்தில் குளிர் காற்று, எங்கள் பேருந்து மேட்டுப்பாளையம் தாண்டி சென்று கொண்டு இருந்தது. குளிர் காற்று அதிகம் ஆனது.

பயணம் அங்கே தான் சுவாரசியம் கூடியது, வழிகள் விரிய எங்கள் கண் முன்னே மலைகளின் அழகிய காட்சி. குன்னூர் அழகிய காட்சிகளுடன் மனதினை கொள்ளை கொள்ளும் ஒரு இடமாக, நம் மனதை அதிசயங்களால் துள்ள வைக்கும் காட்சிகள் அமைந்து இதமானதோர் உணர்வினை எந்த ஒரு எதிர்ப்பார்ப்புமின்றி நமக்கு வழங்குகிறது.

எல்லாருக்கும் ரூம் பிரிச்சு குடுத்தாங்க,நாங்க சீக்கிரம் கிளம்பினதுனால ஹோஸ்டேலில் காலை கடன் முடித்து,காபி குடிச்சசுட்டு வந்துட்டோம். ரூம் வந்து தான் குளிச்சோம். (குளிக்க பெரும் போராட்டமே நடத்தினோம் ), காலை சாப்பாடு சாப்பிட்டு நாங்க முதலில் போனது டால்பின் நோஸ் அதுக்கு பக்கத்தில் உள்ள கேத்ரின் நீர்வீழ்ச்சி

டால்பின் நோஸ் & கேத்ரின் நீர்வீழ்ச்சி:

கடல் மட்டத்தில் இருந்து இது 1000 அடி உயரம் சொன்னாங்க, அந்த 1000 அடிக்கு மேல இருக்கிற ஒரு பெரிய பாறைதான் இந்த டால்பின் நோஸ். இங்கிருந்து நம்ம பார்த்த நம்ம கண்ணுக்கு ஊசி மாதிரி வளைவும் திருப்பமும், நம்மை ஆச்சரியத்தில் விழி விரிய வைக்கும். இங்கிருந்து நம்ம தாடை மாதிரி விரியுற ரெண்டு பக்கமும் உங்க மனசை கவர்ந்து இழுக்க, கேத்ரின் நீர்வீழ்ச்சி அதோட பங்குக்கு உங்க மனசை கொள்ளை அடிக்கும். நாங்க எல்லாரும் அனகையும் ஒரு குளியல் போட்டோம் தண்ணியில் நல்ல விளையாடினோம். அது ரெண்டு பார்த்து முடியும் போதே நாங்க எல்லாரும் ரொம்ப டையார்ட்.

அடுத்து நாங்க போனது லாம்ப் ராக், பேருந்தில் ஒரே ஆட்டம் பட்டு தான் அப்போ சரோஜா படம் வந்த நேரம் அதில் தோஸ்து பட தோஸ்து பாட்டு போட்டு நாங்க எல்லாம் தோளில் கை போட்டு பாடி ஆடினோம். எங்க டீச்சர்ஸ் தான் உண்மையா பாவம் பட் எங்களை நல்லா என்ஜோய் பண்ண விட்டாங்க,

லாம்ப் ராக்/ பாறை:

இந்த இடத்துக்கு இப்படி ஒரு பெயர் ஏன் வந்துச்சுச்சு தெரியுமா? ஆட்சியர் கேப்டன் லாம்ப்க்கு இந்த இடம் ரொம்ப பிடிச்ச இடமாம் அவர்க்கு இந்த இடம் அவர் மனசை கவுரவம், ஒரு ஆர்வம் வந்து அந்த இடம் முழுக்க வளர்ச்சி வர வேலை செய்து இருக்காரு, அப்படினு நான் சொல்லல வரலாறு சொல்லுது. இந்த பாறை சில நூறு அடி கீழ கண்ணுக்கு வெறும் கரு மை மாதிரி காடு தான் தெரியும். அவ்ளோ அழகு அங்க எல்லாம் கால் வெக்கும் போதல் சிலிர்த்தது அவ்ளோ சுத்தமான காற்று, நம்ம ஊற்றும் இடமும் இது போல் தானே இருந்து இருக்கும் வளர்ச்சி சொல்லி குப்பை மேடு ஆக்கி வெச்ச்சு இருக்கோம். இங்க விஎவ் பாயிண்ட் அழகோ அழகு மொத்த கோவையோட நிலப்பரப்பு உங்க கண் முன்னே விரியும்.நான் மெய்மறந்து போய்ட்டேன்.

அப்புறம் நாங்க போனது மதியம் சாப்பிட, காய் பிரியாணி சூடாக சாப்பிட்டோம் அருமையா இருந்தது அந்த குளிர்க்கு இதமா, சாப்பிட்டு உண்ட களைப்பு பஸ்ஸில் தூங்கிட்டே போய் சேர்ந்தது சிம் பார்க் சரியான நேரம் நாங்க போனது நல்லா புல்லில் படுத்துகிட்டோம். சுத்தியும் அழகு ஏதோ பைரி டைல் போல இருந்தது அந்த இடம் கண்ணு ரெண்டு போதலை அதோட அழகை பார்க்க,

சிம் பூங்கா:

இந்த பார்க் இங்க இருக்கிற தட்ப வெப்பம் அடிப்படையில் தான் இங்க மட்டுமே வரும் சில தாவரங்கள் கொண்ட தாவரவியல் பூங்கா. இது 100 வருஷம் முன்னாடியே இயற்கையை வளர்த்த உருவாக்கினதாம். 100 வருஷம் முன்னாடி இருந்தவங்க நம்மை பற்றி நல்லா யோசிச்சு இருக்காங்க நம்ம? இதை திரு. ஜெ.டி.சிம்ஸ் என்பவரும் மேஜர் முர்ரே என்பவர் 1874 ஆம் வருஷம் உருவாக்கினதா வரலாறு சொல்லுது. இங்க இருக்கற எல்லா மரமும், புதர்செடிகளும், கொடிகளும் அழகும் இயற்க்கையும் சேர்த்து கண்ணுக்கு விருந்து தரும். இங்க பல வித்யாசமான மரங்களும் கூட இருக்கு, உலகில் வேறு எங்கும் இல்லாத மரங்கள் கூட இருக்கு. எல்லாமே பார்க்க பார்க்க ஒரே ஆச்சரியம் தான். பூ செடி பூத்து குலுங்கும், பழங்கள் பழுத்து தொங்கும் பார்க்கவே ஆசையா இருக்கும் அதெல்லாம் இன்னும் என் கண்ணை விட்டு போகாத நினைவுகள் இது.

அன்னிக்கு அவ்ளோ தான் இருட்டவும் எல்லாரும் ரூம் வந்துட்டோம். சரியான குளிர், சிம் பார்க் டீ குடிச்சது ஸ்னாக்ஸ் சாப்பிட்டது தான். இப்போ பசி அதுனால எல்லாரும் சாப்பிட போனோம். ரொட்டியும் பன்னீர் குருமாவும் பசிக்கும் சரி ருசிக்கும் சரி அவ்ளோ அருமையா இருந்துச்சசு, நல்லா சாப்பிட்டு தூங்க போனோம், படுத்த ஒடனே தூக்கம், பாதி ராத்திரியில் மழை குளிர் தாங்க முடில, போட்டு இருக்கற ஸ்வெட்டர் தாண்டி குளிர் எல்லா ஒன்னா பக்கம் பக்கமா படுத்து மூன்று பெட் சீட் போட்டு தூங்கினோம்.

அடுத்த நாள் காலையில், சீக்கிரமே கிளம்பி போனது புனித ஜார்ஜ் ஆலயம்,

அடுத்து போனது ஹிட்டென் வேலி / மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு:

மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு இது வரைபடத்தில் இல்லாத இடமாம், ஆனா அவ்ளோ பசுமை, இங்கேயே ஒரு மரமா இருந்தா போதும் தோணும் உங்களுக்கு, அவளோ சுத்தம், பசுமை. காட்டுக்கு நடுவில் சாகசம் போகணும் தோணுற எல்லாரும் இங்க வரலாம். நாங்க கொஞ்ச தூரம் தான் போனோம், அடுத்து அருவி சொன்னதும் நாங்க எல்லாரும் குளிக்க ரெடி ஆனோம். ஆனா அதெல்லாம் இல்லை சொல்லிட்டாங்க.

எங்களோட அடுத்த ஸ்பாட் இது தான் கட்டாரி அருவி,

கட்டாரி அருவி இது நீலகிரியோட மூணாவது பெரிய அருவி. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் இங்கு இருக்கு, குன்னூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் குண்டா சாலையில் 180 மீட்டர் உயரத்தோட இந்த நீர்வீழ்ச்சி அமைஞ்சு இருக்கு, இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து விழுகிற நீரின் விசை அதிகம். அதில் இருந்து இந்த மின் நிலையம் 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி பண்ணுறாங்க, இதுவும் லா நீர் வீழ்ச்சியும் அதிகமா கூட்டம் வர இடம், அடுத்தது நாங்க போனதும் அங்கே தான்.

லா நீர்வீழ்ச்சி: குன்னூரில் தொடர் சாலையை உருவாக்கிய கல் லா என்ற ஒருவரின் பெயர் தான் இந்த நீர் வீழ்ச்சிக்கு, குன்னூர் நதியால் உருவாகிற நீர் விழிச்சி இது. ரொம்ப அழகான வீழ்ச்சி, அளவில் சின்னது தான் ஆனா பார்க்க பார்க்க அழகு தான். நாங்க தண்ணியில் நல்லா விளையாடினோம். இந்த நீர்வீழ்ச்சி இருந்து விழுகுற நீர் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 180 அடி. ஆனா கீழே விழுகிற முன்னாடியே பல முறை பிரிஞ்சு கடைசியா ஆறாக ஒன்று சேர்ந்து வருது. இந்த அருவி நிலப்பரப்பில் இருப்பது தனி அழகு.

நல்லா ஆட்டம் போட்டு அன்னிக்கு சாப்பிட லேட்டா ஆகிடுச்சு, மதியம் இல்ல இல்ல சாயந்தரம் அது சப்பாத்தி சாப்பிட்டோம். துரூக் கோட்டை

பார்க்க முடியாது, எஸ்டேட் பார்த்துட்டு கிளம்புவோம் சொல்லிட்டாங்க. எங்களுக்கு அதையும் பார்க்கணும் ஆசை ஆனா நேரம் இல்ல. மாலையோட அழகு மொத்தமும் சேர்ந்த இடம் குவன்சே டீ எஸ்டேட்.

குவன்சே டீ எஸ்டேட் / தேயிலை தொழிற்சாலை

நீலகிரி தேயிலை முதல் இடம் இதுக்கு தான். நான் அரை கிலோ தூள் வாங்கினேன் அங்கே, நீலகிரி போயிட்டு அங்க கிடைக்கற டீ குடிக்காம, வாங்காம வர முடியுமா? அந்த ரம்மியமான இடம், அந்த டீ சுவை எல்லாமே அந்த மாலை நேரத்தை இன்னும் அழகா புதுசா நிறைவாக உணர வைத்தது. நீங்களும் கண்டிப்பா இங்க வந்தா இந்த உலக தரம் உள்ள டீ குடிச்சு உங்க பயணத்தை அனுபவிங்க.

அடுத்தது என்ன ? திரும்பி ஹாஸ்டல் பயணம் தான். ஹோட்டல் வந்தோம் கிளம்பி உடைமைகள் எல்லாம் எடுத்துகிட்டு ஊரை பார்த்து கிளம்பினோம் எல்லாரும் ரெஸ்ட். சத்தம் இல்ல அமைதியான நெஞ்சில் நின்ற பயணம் இது. அட ரொம்ப முக்கியமா விஷயம் சொல்லவே இல்லை நான் நாங்க யாரும் கேமரா எடுத்துட்டு போகவே இல்லை. படம் எடுக்கறோம் நேரமும் போகும், எதையும் ரசிக்க முடியாது.அதனால நாங்க கண்ணால் பார்த்து மனதில் நிறுத்திய நிகழ்வுகள் இத்தனையும், புதிதாக இருந்த அனுபவமும் கூட எங்கள் அனைவருக்கும், அதை முழுதாய் அனுபவித்து ரசித்தேன் நான்.

என்ன பயணம் எப்படி இருந்தது? உங்களின் கருத்துக்கள் என்ன? தெரிந்து கொள்ள ஆவலுடன் உங்கள் கௌரி முத்துகிருஷ்ணன். நன்றி

7 Likes

வாசகர்களே! கட்டுரையைப் படித்து விட்டீர்களா…

உங்களது வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்

  • வாக்களிக்கிறேன்
  • வாக்களிக்கவில்லை

0 voters

1 Like

குன்னூர் போய் வந்த அனுபவம் ஏற்பட்டது வாசிக்கும் போது. அருமை கௌரி

1 Like

thank you akka :purple_heart:

குன்னூர் சென்று வர வேண்டுமென்ற ஆவலை தூண்டியது இந்தக் கட்டுரை <3. அருமையான விவரிப்பு .

1 Like

Naan idhuvarai pokada idam ooty konoor kothagiri areas.Eno adakana opprtunity kidaikave illa… padikumbode asaita thoonduthu

1 Like

நிச்சயம் சென்று வாருங்கள். உங்களின் கருத்துக்கு நன்றி :purple_heart:

சகோ, ஊட்டி கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம். குன்னூர் அதில் முக்கியம். குன்னூர் போகும் வழியில் கல்லாறு என்று ஒரு இடம் இருக்கு அங்கேயும் சென்று வாருங்கள். நிச்சயமாக அது மறக்க முடியா பயணமாக இருக்கும். இயற்கையோடு ஒன்றி விட்ட நொடிகள் கிடைக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி. :purple_heart:

We traveled with you through this story. Golden memories :heart_eyes: LIFE is a JOURNEY :kissing_heart:

1 Like

நன்றி :purple_heart: அன்பு

மிகவும் அருமை தோழியே… குன்னூர் எந்த திசை என்றே தெரியாது ஆனால் … பெண்கள் மட்டும் பயணிக்கவில்லை எங்களையும் கூடவே அழைத்து சென்றாய் தோழி… கட்டுரையின் தலைப்பை போல உனது படைப்பிற்கும் பயணங்கள் முடியப்போவதில்லை… நன்றி

1 Like

அருமை தோழி :+1:

1 Like

நீங்கள் படித்து ரசித்து கருத்து கூறியதில் மகிழ்ச்சி. நன்றி :purple_heart:

நன்றி அம்மா :purple_heart:

1 Like

nice Gowri

1 Like

thank you akka :purple_heart:

Nice akka. I am from Erode only. Still ooty kunoor plan is a dream one …

1 Like

செம்ம சுற்றுலா கா… school daysla pora trips eppoyume manadhil marakaadha ninaiwugal. Superb kaa…:wink::wink::+1::blush:

1 Like

Thank you da :purple_heart:

thank you sago, orumurai poittu vanga really semma place :purple_heart: