சஹானாவின் 'எல்லாம் அவனாக' - கதைத் திரி

சஹானாவின் 'எல்லாம் அவனாக' - கதைத் திரி
0

(ஹாய் நட்புகளே, இது என் முதல் படைப்பு வாசித்து விட்டு கருத்துக்களை பகிரவும்)

ஒரு இனிய காலை பொழுது, தன் கதிர்களை பிரகாசமாய் வீசி கொண்டு இருந்தான் அதை பொருட்படுத்தாமல் உறங்கி கொண்டு இருந்தாள் நம் நாயகி, ஆமாங்க நீங்க நினைக்கிறது சரி ஹீரோயின் அறிமுகம் தான் காலையில் அம்மாவின் அர்ச்சனைகளை வாங்கி கொண்டு துயில் களைந்தால் நம் நாயகி நிபுநிகா அழகான வாலு ஆமாங்க நம்ம ஹீரோயின் கொஞ்சம் சுட்டி.

ஏய் நிபு இப்போ எழுந்துகப்போறியா இல்லையா டைம் என்ன ஆச்சு தெரியுமா நீ இங்க வரல நான் அங்க வந்து தண்ணீர் ஊற்றி எழுப்ப வேண்டி வரும்.

அய்யோ ஏன் அம்மா காலைல இப்பிடி கத்திக்கிட்டு இருக்க இரு வரேன்.

என்டி பொண்ண லக்ஷணமா காலைல எழுந்து எனக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கலாம்ல நீ எல்லாம் மாமியார் வீட்டுக்கு போய் தான் அடங்க போற பாரு என்று சொல்லி கொண்டு இருக்கும் போது அங்கே வந்தார் வாசன் நம் நாயகியின் தந்தை.

என்ன வாசுகி காலங்காத்தால உன் அர்ச்சனைகளை ஆரம்பிச்சிட்டியா.

பின்ன என்னங்க வயசு 23 ஆகுது இன்னும் பாதி வேல கத்துகல இவள கல்யாணம் பண்ணிக்க போறவன் பாவம் தான்.

அதெல்லாம் பாதி வேலை என்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் செய்வான் என்றால் நம் நாயகி.

ரொம்ப கனவு கண்டு கொண்டு இருக்காதே…நீ அடிவாங்க போற மரியாதையாக ஓடி போய் ரெடி ஆகு ஆபீஸ் போக டைம் ஆகுது பாரு.

அப்போ தான் நம் நிபு டைம் பாத்தா அய்யோ 8.30 ஆ அம்மா பைவ் மினிட்ஸ் இதோ வரேன் என்று ஓடிவிட்டாள்.

என்னங்க இவ இன்னும் சின்ன பொண்ணு மாதிரியே இருக்கா கல்யாணம் பண்ற வயசு ஆகுது நாம வேற தரகர் கிட்ட சொல்லி இருக்கோம் என்று கவலையுடன் சொல்லி கொண்டு இருந்தாள்.

அதெல்லாம் அவ புத்திசாலி பொண்ணு அவளுக்கு உலகம் தெரியும் நீ வேணும்னா பாரு என் பொண்ணு போற இடத்துல எல்லாருடைய செல்லமாக இங்க இருக்கா மாதிரி இருக்கத் தான் போறா நீயும் பாக்கத்தான் போற.

ஏங்க எனக்கு அவ சந்தோஷம் தானே முக்கியம் நீங்க சொல்ற மாதிரி ஒரு நல்ல இடம் அவளுக்கு கிடைச்சா இந்த உலகத்துல என்ன விட சந்தோஷமா யாருமே இருக்க மாட்டாங்க.

நீ நினைக்கிறது கூடிய சிக்கிரம் நடக்கும் கவலை படாதே வாசுகி.

ஆனால் இவர்கள் நினைப்பது நடக்குமா என்று பார்ப்போம்.

இப்பொழுது நம் ஹீரோ அறிமுகம் நிஷாந்த் இன்னும் என்ன பண்ற.

நிஷாந்த் ஆறடிக்கு குறையாமல் இருக்கும் 28 வயது இளைஞன் பார்க்கும் யாரும் ஒரு நிமிடம் நின்று ரசிக்க தூண்டும் ஆண் அழகன்.

இதோ வரேன் அம்மா என்று சொல்லி கொண்டு ஓடி வந்தான்.

ஏண்டா இப்பிடி ஓடி வர நம்ம ஆபீஸ் தானே லேட் அ போக கூடாதா.

அப்படி இல்லமா நம்ம ஆபீஸ் தானே னு லேட் a போனா என்கிட்ட வேலைக்கு வந்து கொண்டு இருப்பவர்களும் அப்படி தானே யோசிக்க தோன்றும்.

என்னவோ போடா சாப்பிட கூட நேரமில்லாமல் இப்படி பணம் சேர்த்து என்ன பண்ண போற நம்ம கிட்ட இருக்கிற சொத்து இன்னும் பல தலைமுறைகளுக்கு வருமே என்று சொல்லி கொண்டு இருக்கும் போது அப்படி சொல்லுங்க அம்மா என்று அங்கு வந்தான் லக்ஷண்.

நிஷாந்தின் ஆருயிர் நண்பன் அவனுக்கு உதவியாக ஆபிஸில் இருக்கிறான் அந்த கம்பெனிகளின் பார்ட்னரும் கூட.

வாடா நல்லவனே இன்னும் வரலேன்னு பாத்தேன் என்றான் நிஷாந்த்.

நீ நெனச்சா நான் வருவேன்டா நாமகுள்ள வெவ் லெந்த் அப்படி என்றான் லக்ஷண்.

சரி சரி வா டைம் ஆச்சி மீட்டிங் இருக்கு என்று அவசரமாக லக்ஷணனை கூட்டி கொண்டு ஓடினான் நிஷாந்த்.

ஆனால் இந்த அவசரம் அவன் வாழ்வை மாற்ற போக போவதை அறியாமல்.

3 Likes
 1. எல்லாம் அவனாக

நிஷாந்த் அவசர அவசரமாக லக்ஷனை கூட்டி கொண்டு வந்தான் ஆனால் காலத்தின் கட்டாயம் அவன் கார் மக்கர் செய்ய ஆரம்பித்து விட்டது கோவமாக ஸ்டியரிங்யை அடித்து விட்டு இறங்கி அதனை சரி செய்து கிளம்புவதற்கு அரை மணி நேரம் ஆகிவிட்டது.

அதற்குமேல் பொறுமை இழந்தவன் காரை சடுதியில் கிளம்பி கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.

இந்த மின்னல் வேகம் அவர்கள் இருவரின் வாழ்க்கையை மா‌ற்ற போவதை அறியாமல் சென்று கொண்டு இருந்தனர்.

ஆனால் இவர்கள் டைம்க்கு மீட்டிங்க்கு போக போறது இல்லை.

மின்னல் வேகத்தில் போய் கொண்டு இருந்த கார் ஏதன் மீதோ மோதி நின்ற நினைவு நிஷாந்த்திற்கு.

நினைவு வந்ததும் அவன் தேடிய முதல் நபர் அவன் நண்பன் தான்.

லக்ஷண் எங்க டா இருக்க என்று தேடி கொண்டு இருந்தவன் கண்ணில் அவன் தென்பட சடுதியில் அவனை அணைத்து கொண்டான்.

ஹே என்ன ஆச்சு டா இது லக்ஷண்.எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒரு பொண்ணு தான் நம்ம கார்ல அடி பட்டு இருக்காங்க.

என்னடா சொல்ற இப்ப எங்க அவங்க என்று லக்ஷணிடம் கேட்டு கொண்டு இருந்தான் நிஷாந்த்.

அவர்கள் இருவரும் ஒர் அறையில் சென்று பாத்தப்பொழுது அங்கே அழகான ஓவியம் போல் துயில் கொண்டு இருந்தாள் நம் இரண்டாவது நாயகி சம்யுக்தா.ஆம் நம் ஹீரோ இடித்தது லக்ஷண் காதலிக்க போகும் பெண்.

டேய் இவளுக்குத் எப்பிடி டா நம்ம வண்டில அடிபட்டது உன்ன தானே கேக்குறேன் சொல்லு டா.

ஒரு பதிலும் வராததால் லக்ஷனை திரும்பி பார்த்தால் அவன் வேறு உலகத்தில் அல்லவா இருக்கிறான்.
தொடரும்…

1 Like

விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே…
இரவு பகலாக இதயம்; கிளியாகிப் பறந்ததே…
ஏ… காதல் நெஞ்சே… யாரோடு சொல்வேன்…
வந்து போன தேவதை…
நெஞ்சை அள்ளிப் போனதே…நெஞ்சை அள்ளிப் போனதே…

என்று விஜய் நடித்த படத்தின் பாடலில் திளைத்து இருந்தான் லக்ஷண். (நீங்க திட்டுரது எனக்கு கேட்குது கண்டதும் காதலாணு)

என்னங்க பண்றது நம்ப சம்மு அவ்வளவு அழகு. டேய் இங்க பாருடா என்று லக்ஷணை உலுக்கினான்.

அப்போ தான் நம்ம தம்பிக்கு சுய நினைவு வந்தது.

என்னடா ஏன் இப்பிடி பண்ணிட்டு இருக்க என்ன கூப்பிட வேண்டிய தானே.

நிஷாந்த் க்கு வந்ததுதே கோவம் அவன் தலையில் ஒரு குட்டு வைத்தான்.

ஏன்டா இப்படி…லக்ஷண்
பின்ன என்னடா நான் கத்தினது மயக்கத்தில் இருக்க அந்த பொண்ணுக்கே கேட்டு இருக்கும்.

ஹி ஹி ஹி அது ஒண்ணும் இல்லை டா இவள பாக்கும் பொது எனக்குள் ஏதோ பண்ணுது டா.

என்ன சர் இங்க நடக்குது கண்டதும் காதலா.

ஆமா டா என்னவோ இவள பாக்கும் பொது என்னவள் னு தோணுது.

அவ யாருன்னு தெரியம இந்த அளவிற்கு நெனைக்க தோணுது அ, அப்போ அவ்ளோ முத்திப்போச்சா என்னவோ பண்ணித்தொல. ஏதோ நல்ல இருந்தா சரி.

இவ்வாறு பேசி கொண்டு இருக்கும் போது கா‌ற்றை கிழித்து கொண்டு வந்தது ஒரு சத்தம்(நீங்க யோசிக்கிறது சரி தான் அது நம்ம ஹீரோயின் தாங்க)

அழகான புள்ளி மான் போல நடந்து வந்து கொண்டு இருப்பவளை கண் இமைக்காமல் பார்த்தான் நிஷாந்த்.

என்ன நினைச்சிட்டு இருக்கிங்க கார் வச்சி இருந்தா கண்ணு தெரியாதா. கார் ஓட்டுறிங்களா இல்லை விமானம் ஓட்டுறிங்களா நான் மட்டும் கொஞ்சம் லேட்டா வந்து இருந்தா என்ன ஆகி இருக்கும். இவ்வளவு பேசிகிட்டு இருக்கேன் ஒரு வார்த்தை பேசுறிங்களா இவ்வாறு பேசி கொண்டு இருக்கும் போது
லக்ஷண் நிஷாந்த்தை பார்த்தால் அவன் இருக்கும் அனைத்து பற்களையும் காட்டி சிரித்து கொண்டு இருந்தான்.

அட கடவுளே இந்த பையனுக்கு என்ன ஆச்சு இப்பிடி பேய் பிடிச்சா மாதிரி நிக்கிறான்.

ஒரு வேல இவ திட்றத கேட்டு இப்பிடி ஆகிட்டாநோ. இந்த பையனுக்கு இப்பிடி சைலன்டா இருக்கிறது பிடிக்காதே ஏதோ இருக்கு என்று யோசித்து கொண்டு இருந்தான்.

லக்ஷண் நிபு வை பார்த்து நீங்க யாரு ஏன் இங்கே வந்து இப்படி சத்தம் போட்டு கொண்டு இருக்கிங்க.

நான் இவளின் தோழி ஒழுங்கா ஆபீஸ் போய்டு இருந்தவல வண்டி எடுத்து வந்து இடிச்சி இப்பிடி கைல கட்டு போட வெச்சிட்டிங்களே என்று தன் கைய காட்டினாள்(ஆமாங்க அடிபட்டது நம்ம நிபுக்கு தான்)

அப்போ தான் நம்ம ஹீரோ கவனிச்சான். அந்த அழகிய வாழைத்தண்டு கையில் பெரிய சிராய்ப்பு. ஐய்யோ என்று அலறியபடி உங்களுக்குத் தான் அடிப்பட்டு இருக்கா அப்புறம் ஏன் இவங்களை அட்மிட் பண்ணி இருக்காங்க என்று கேட்டான்.

அதற்கு நம்ம நிபு அத ஏன் கேக்கிறிங்க இந்த லூசு சம்மு இருக்காளே ஒரு பயந்தாகோளி என் கையில இரத்தம் வந்தத பார்த்து மயக்கம் போட்டு விழுந்துடா. நிங்க வேற தலைல அடிப்பட்டு மயங்கி இருந்திங்களா அதான் இவ்வளவு நேரம் சைலன்டா இருக்க வேண்டியதா போச்சு. சரி சரி பில் பே பண்ணிட்டு போங்க,மிஸ்டர் என்று இழுத்தாள். ஐயம் நிஷாந்த் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான் இவன் என் நண்பன் லக்ஷண் என்று அவனைக் கூப்பிட்டான். அவன் எங்கே இவர்கள் பேசுவதை கவனித்தான்.

சம்மு சம்மு என்று ஒரு நூறு தடவையாவது சொல்லி பார்த்து இருப்பான் நம்ம லக்ஷண்.

எப்பவும் போல அவன் தலையில் ஒரு குட்டு வைத்தான். அம்மா என்று அலறியபடி பார்த்தான்.

அப்போ தான் அவனுக்கு எல்லாமே தெரிஞ்சது.

அதற்குள் சம்மு வுக்கு மயக்கம் தெளிந்து எழுந்தாள். அவளுக்கும் லக்ஷணை பார்த்தவுடன் தன் வாழ்நாள் முழுவதும் கூட வரப்போறவன் இவர் தான் என்று தோன்ற ஆரம்பித்தது.

ஆனால் நிபுநிகா அவளை இழுத்து கொண்டு வெளியே சென்றாள்.

போகும் போது நிபுநிகா நிஷாந்திடம் இனிமேலாவது வண்டிய ரோட்டல ஒட்டுங்க என்று மாதுளம் இதழை வெட்டி பழிப்பு காட்டி சென்று விட்டாள்.

நிஷாந்திற்கு அந்த செவ்விதழை தனக்கே சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசை தோன்றியது. ஆசையை அடக்கி வைக்க அவன் மனது பெரும் அவஸ்தைப்பட வேண்டி இருந்தது.
(இவன் எப்போ லவ்வ சொல்றானு பார்ப்போம்)

அன்று இரவு நித்திரா தேவிக்கு என்ன கோவமோ தெரியவில்லை இங்கே நிஷாந்த், லக்ஷண், சம்யுக்தா இவர்கள் மூவரையும் ஆட்கொள்ளாமல் சிரித்து கொண்டு இருந்தாள்.இவர்கள் மூவரும் பகலில் நடந்ததை எண்ணி தூக்கமில்லாமல் உழன்று கொண்டு இருக்க இனி வரும் நாட்களில் தூக்கத்தை தொலைக்கப் போவதை அறியாமல் நம் நாயகியோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
தொடரும்.

1 Like
 1. எல்லாம் அவனாக

இப்படியே நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்க நிஷாந்த்தும், லக்ஷணும் அவர்கள் வேலையில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தனர். அவ்வப்போது அவர்களின் கண்ணிகள் வந்து தூக்கத்தை கெடுத்து கொண்டு தான் இருந்தனர்.

இப்போ நம்ம வில்லன் அறிமுகம்.
(ஹீரோ ஒருத்தர் இருந்த வில்லன் னு ஒருத்தர் வேணும்ல)

சர் இந்த டெண்டரை கூட அந்த எ. என்(A. N)குரூப் ஆஃப் கம்பெனி எடுத்துட்டாங்க என்று சொல்லி கொண்டு இருக்கும் போது அங்கே பொருட்களை எல்லாம் உடைத்து சிதற விட்டு கொண்டு இருந்தான் செழியன்.

இப்போ செழியனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

செழியன் 30 வயது இளம் காளை, அவனது ஒவ்வொரு செயலிலும் ஒரு கர்வம் இருக்கும். அவன் பாசமான முகத்தை பார்பவர்கள் இருவர் ஒன்று அவன் தாய், மற்றொன்று அவனது ஆசை காதலி மஹிமா.

செழியன், மஹிமா இருவரும் நான்கு வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆபீஸ் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவர்கள் இருவருடனும் செலவிடுவது அவன் இயல்பு.

அந்த நிஷாந்த் பய என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கான் அவனை ஏதாவது பண்ணணும்.அவநோட பலவீனம் என்னனு சொல்லுங்கடா என்று கர்ஜித்தான்

அவனுக்கு அம்மா மட்டும் தான் அப்பா இல்லை ஆனால் எதிரிகள் அதிகம் என்பதால் அவன் வீட்டில் பாதுகாப்பு அதிகம். வெளியே செல்லும் போது கூட பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.

வேற யாராவது அவனுக்கு நெருக்கமானவர்கள் இருக்காங்களா சொல்லுங்க. அப்பிடி யாரும் இல்ல சர்.

ஏதோ யோசனையில் இருந்தவன் சர் அவனுக்கு ஒரு நண்பன் இருக்கான். அவன் தொழிலில் உதவியாக இருக்கிறான். அப்போ அவனை ஏதாவது பண்ணுவோமா என்று கொடுரமாக சிரித்தான்.

அவனுக்கு ஒரு ஸ்பீட் பிரேக்கர் சேட் பண்ணுங்கடா(அப்டினா ஆக்சிடென்ட் மாதிரி, கோட் வேர்ட்)

மறுநாள், வழக்கம் போல ஆபீஸ் கிளம்பி கொண்டு இருந்தவன் உள்ளுக்குள் ஏதோ நிகழப்போவது போல் தோன்றியது. ஆனால் அது யாருக்கு என்று விளங்கவில்லை.

கார் கிளம்பி கொண்டு சென்றவன் வழி எங்கும் யோசித்து கொண்டு இருந்தான் ஆனால் விடை தான் கிடைக்கவில்லை.யோசித்து கொண்டு சென்றவன் எதிரில் வந்து கொண்டு இருந்த லாரியை கவனிக்க தவறிவிட்டான்.

வந்த வேகத்தில் அந்த லாரி நிஷாந்த்தின் காரில் இடித்து சென்றது.

அருகில் வந்த லாரி டிரைவர் அவன் இறந்து விட்டான் என்று செழியனுக்கு தகவல் அனுப்பினான்.அதைக்கேட்டு அவனுக்கு ஆலாதி இன்பம் உண்டாயிற்று.

கைபேசி எடுத்து யாருக்கோ கால் செய்து வஞ்சக சிரிப்பு சிரித்து கொண்டு இருந்தான்.

ஆனால் அதே நேரத்தில் நிஷாந்த் அடிப்பட்ட இடத்திற்கு வந்த ஒரு உருவம் அவனை கூட்டி கொண்டு சென்று விட்டது.

அங்கே லக்ஷண் நிஷாந்த்தை காணாமல் தவித்து இருந்தான்.டேய் எங்கடா என் புள்ள இவ்ளோ நேரம் அவன் வராம இருக்க மாட்டான் என்று லக்ஷணை உலுக்கி கொண்டு இருந்தாள் அவன் தாய் வைதேகி.

அம்மா அவன் போன் ரீச் ஆகல அவன் இங்க தான் வந்துடு இருப்பான் கவலைப்படாமல் இருங்க என்று அவனுக்கும் சேர்த்து சமாதனம் செய்து கொண்டு இருந்தவனுக்கு ஒரு கால் வந்தது.

அதனை உயிர்ப்பித்து காதில் வைத்தவன் அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.

                        தொடரும்.
 1. எல்லாம் அவனாக

அலைபேசியை உயிர்ப்பித்து அங்கே அவன் கேட்ட செய்தியால் உறைந்து விட்டுருந்தான் லக்ஷண்.

அவனுக்கு வந்த போன் நிஷாந்த் நம்பரிலிருந்து. ஆர்வமாக அட்டென்ட் செய்தவன் எதிர்புறம் கேட்ட குரலால் அதிர்ச்சி அடைந்தான்.

ஆம் பேசியது ஒரு பெண் குரல். அந்த குரல் சொன்ன செய்தியை கேட்டு தான் உறைந்து நின்றான்.

அவள், ஹலோ மிஸ்டர் லக்ஷண் இந்த ஃபோன் வெச்சி இருந்தவருக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சு நான்… இந்த ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் பிரிவில் இருக்கார்.

இதோ வரேன் என்று அடுத்த நிமிடமே கிளம்பினான். அங்கே சென்று அவன் இருந்த நிலைமையை கண்டு அவன் இதயமே நொறுங்கிவிடும் போல உணர்ந்தான்.

அங்கே இருந்த பெண்ணை இவனுக்கு ஏற்கனேவே பார்த்தது போல இருந்தது. அதை பற்றி யோசிக்க நேரம் இன்றி நிஷாந்த் எப்பிடி இருக்கான் என்ற எண்ணமே தலை தூக்கி நின்றது.

அந்த பெண்ணிடம் நான் தான் லக்ஷண் நீங்க எனக்கு தான் கால் பண்ணீங்க அவன் என் ப்ரண்ட் தான் இப்போ அவன் எப்படி இருக்கான் டாக்டர் என்ன சொன்னாங்க அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லயே என்று கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தான்.

அதற்கு அவள் மிஸ்டர். லக்ஷண் ஹி இஸ் அவுட் ஆஃப் டேன்ஜர் பிளீஸ் பி காம். இப்போ தான் டாக்டர் சொல்லிட்டு போனார். இன்னும் 4-5 மணி நேரத்தில் அவருக்கு நினைவு திரும்பும் என்று சொன்னார்.

அவனுக்கு வேற எதாவது பிரச்னைனு ஏதாவது சொன்னாங்களா மிஸ். என்று இழுத்தான். ஐ ஆம் நிகிதா நானும் உங்க காலேஜ் தான் எனும் போது தான் லஷனுக்கு பல நினைவுகள் வர ஆரம்பித்தது.

கல்லூரி மாணவர்கள் மத்தியில் ராகிங் சாதாரண விஷயம் அந்த கல்லூரியிலும் முதல் வருட மாணவர்களை வரவேற்பதற்காக காத்து கொண்டு இருந்தார்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.(நம் நாயகன் நல்ல பையன் தான் அவன் காலேஜ் சேர்மன் )

விழா நடந்த முடிந்த பிறகு மற்ற மாணவர்கள் ராகிங் செய்ய ஆயத்த நிலையில் இருந்தனர் அவர்கள் கையில் யாராவது சிக்கினால் பாவம் தான்(சும்மா நார்மல் ராகிங் தான்)

அப்படி தான் மாட்டி கொண்டு இருந்தாள் நம் நிகிதா. சீனியர் மாணவர்கள் அவளுக்கு கொடுத்த டாஸ்க் காலேஜ் சேர்மனுக்கு பரோப்போஸ் செய்ய வேண்டும் என்பதே.

அவனை பார்த்தால் நிகிதாவுக்கு கை, கால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது. இதுல இவன் கிட்ட எப்படி நான் போய் பரோப்போஸ் பண்றது (இது மைண்ட் வாயிஸ் தான். வெளியே சொன்னால் வேற ஏதாவது இதை விட மோசமா சொல்லிடா அதன் அடக்கி வாசிச்சா)

ஒரு வழியாக அவனின் பக்கத்தில் சென்று விட்டாள்.

நிஷாந்த் அண்ணா(அட லூசு பொண்ணு பரோப்போஸ் பண்ண போற பையன அண்ணாணு கூப்பிடறா)

அவன் என்ன என்பது போல பார்த்தான்.

அண்ணா அவங்க உங்க கிட்ட பரோப்போஸ் பண்ண சொன்னாங்க ஆனா எனக்கு உங்கள பார்த்தா அண்ணாணு தான் கூப்பிட்ட தோணுது பிளீஸ் நான் உங்களுக்கு கண்டிப்பா பரோப்போஸ் பண்ணனுமா சொல்லுங்க அண்ணா.

அவன் சிரித்து விட்டு என்ன அண்ணாணு கூப்பிடற அப்புறம் எப்படி
பரோப்போஸ் பண்ணுவ நீ போ தங்கச்சி நான் அவங்கள பார்த்துக்கிறேன்.

தாங்க்ஸ் அண்ணா என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

அது முதல் அவர்கள் இருவரும் அண்ணன் தங்கையாக பழகி வந்தனர்.

நிஷாந்த்தும் கல்லூரி முடிந்து சென்று விட்டான். இப்படியே சென்று கொண்டு இருக்க ஒரு நாள் நிகிதாவிடமிருந்து கால் வந்தது.

சொல்லு தங்கச்சி எப்பிடி இருக்க என்ன செல்லுமா என்றான் எதிர் பக்கம் அழுகை சத்தம் மட்டுமே வந்தது. ஹலோ நிகிதா ஏன் அழற ஏதாவது பிரச்சனையா என்கிட்ட செல்லுமா பிளீஸ் அழாத.

அவள் அண்ணா என்று பெரும் குரலேடுத்து அழுதாள். நான் சொல்றத கேளு நீ அழாமல் என்ன பிரச்சனைனு சொன்னா தானே எனக்கு தெரியும்.

அண்ணா நான் எங்க மாமா பையன் நிதினை லவ் பண்றேன் ஆனால் எங்க ரெண்டு குடும்பத்துக்கும் நடுவுல இருக்கும் பிரச்சனையில் எங்கள் காதல ஏத்துக்க மறுக்கிறாங்க எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைங்க பிளீஸ் என்று அழுது கொண்டு இருந்தாள்.

நம்ம நிஷாந்த் அதற்கு நிகிதா நான் சொல்றத கேளு அப்பா அம்மாவை எதிர்த்து கல்யாணம் பண்ணக்கூடாது அதுவும் அவர் உங்க மாமா பையன் தானே நான் பேசி பாக்கறேன்.

அவளோ இல்லை அண்ணா அவங்க ஓத்துப்பாங்கணு எனக்கு நம்பிக்கை இல்லை.

என்ன நீ உன் அண்ணணா நெனைச்சா நான் சொல்றத கேளு இல்லனா உன் இஷ்டம் நீ சொல்றா மாதிரி செஞ்சிட்டு இன்னும் உன் குடும்பத்தில் உள்ள பிரச்சனையை அதிகமாக மாற்று என்ன ஓகேவா.

சிறிது அமைதிக்கு பிறகு சரி என்றாள்.

தட்ஸ் மை குட் கேர்ள், நான் நாளைக்கே ஏன் இப்பவே போய் பேசலாமா குட்டிமா.

சரி அண்ணா என்றாள்.

அதன் பிறகு அவளிடம் விலாசத்தை வாங்கி கொண்டு அங்கு சென்றான்.

அங்கே முதலில் நிஷாந்த்தை அடிக்க வந்தவர்கள் பிறகு இவன் பேசுவதில் இருந்த உண்மையில் சரி என்றார் நிகிதாவின் மாமா.

நிஷாந்த் என்ன சொன்னான்ணு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது. நம்ம நிகிதாவுக்கு அம்மா இல்ல அப்பா மட்டும் தான் கூட பிறந்தவன் என்று யாரும் இல்லை. இவளின் அப்பாவிற்கு பொங்கல் சீர் சரியாக செய்யவில்லையே என்ற குறை இருந்து கொண்ட இருந்தது. இதுவே ஒவ்வொரு பண்டிகைக்கும் தொடர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் குழந்தைக்கு தாய் மாமன் சீர் செய்ய அண்ணன் தம்பிக்கு இடையில் பிரச்சனை எழுந்தது( ஆமாங்க நம்ம நிகிதாவுக்கு இரண்டு மாமா அதுல பெரிய மாமா பையன தான் அவ லவ் பண்றது).

அதில் உறவினர்கள் சிலர் நிகிதாவின் அப்பாவிடம் குழந்தைக்கு தாய் மாமன் சீர் கூடவா ஒழுங்கா செய்ய மாட்டாங்கணு கேட்கவும் அவரக்கு கோவம் வந்தது.

அவர் நேராக நிகிதாவின் மாமாவிடம் சென்று ஏம்பா இந்த மாதிரி பண்றிங்க இது வரைக்கும் உங்க கிட்ட ஏதாவது குறை சொல்லி இருக்கேனா. தாய் மாமன் சீர் கூடவா ஒழுங்கா செய்ய மாட்டீங்க என்று கேட்க பிரச்சனை ஆரம்பித்து விட்டது.

(இது முக்கால்வாசி எல்லா விழாக்களிலும் நடக்கும் நிகழ்வு தான்)

இப்படியே வாய் சண்டையாக ஆரம்பித்து பின்னர் கை கலப்பாக முடிந்தது.

அதில் இருந்து நிகிதாவின் அம்மாவிடம் அவரின் அண்ணன்கள் பேசுவது கிடையாது. இதனால் நிகிதாவுக்கு நடைபெற்ற எந்த ஒரு விழாவுக்கும் வரவில்லை. ஆனால் சிறியவர்கள் மட்டும் நல்லவிதமாக பழகி வந்தார்கள்.

இந்த கவலையில் நிகிதாவின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது அதில் அவர் இறந்து விட்டார்.

அப்போழுது கூட அவரின் அண்ணன்கள் கடமைக்கு அங்கு வந்தார்கள்.அதில் இன்னும் கோவம் கொண்டவர் எக்காரணம் கொண்டும் அவர்களிடம் எந்த ஒரு தொடர்பும் வைக்க கூடாது என்று ஒரு முடிவுக்கு வந்தார் நிகிதாவிடமும் சொல்லி விட்டார்.

(இதாங்க அவங்க குடும்ப பிரச்சனை)

இத நம்ம ஹீரோ எப்படி தீர்த்து வச்சான் தெரியுமா முதலில் அவர்களிடம் பேசி பார்த்தான் பின்னர் நிகிதாவின் அப்பாவிடமும் நிதினின் அப்பாவிடமும் உங்களுக்கு இன்னும் இரண்டு நாள் டைம் தரேன் அதுக்குள் நீங்களே சமாதனம் ஆகி கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணுங்க இல்லனா, இல்லனா என்ன பண்ணுவ என்று கர்ஜனை செய்தார் நிதினின் அப்பா.

அது இரண்டு நாட்களுக்குள் நீங்க எடுக்கற முடிவுல இருக்கு என்றான் நிஷாந்த்.

இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் சமாதானம் அடையவில்லை என்ற செய்தியை நிஷாந்த் அறிந்ததும் அவன் மூளை ஒரு விஷம சிரிப்பு சிரித்து வைத்தது.

அதன் பலனாக நிகிதாவையும், நிதினையும் ஒர் இடத்திற்கு வரவழைத்தான்.

அங்கே அவர்கள் வீட்டில் இருவரையும் காணமல் தவித்து கொண்டு இருந்தனர். அவர்களின் தந்தையர்களோ ஒருவரை ஒருவர் சாடி கொண்டு இருந்தனர்.

தனி தனியே அவர்களின் பிள்ளைகளை தேடி கொண்டு இருந்தனர்.

அனைத்து கோவில்கள், மண்டபங்கள், ரிஜிஸ்டர் ஆபீஸ், தெரிந்த இடம், நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு ஒரே பதில் தான் கிடைத்தது,இங்கே அப்படி யாரும் வரவில்லை என்று.

ஒரு வாரம் அவர்களை தேடி பார்த்தும் கிடைக்காமல் இருவர் வீட்டிலும் போலீஸில் புகார் கொடுத்து இருந்தனர்.

பத்து நாட்கள் கழித்து நிதினின் தந்தைக்கு ஒரு கால் வந்தது. நீங்கள் சொன்ன அங்க அடையாளங்கள் உள்ள ஒரு பெண்ணும் ஆணும் கடற்கரை ஓரத்தில் இருப்பதாக செய்தி வந்துள்ளது நீங்கள் ம‌ற்று‌ம் உங்கள் உறவினர் ஒருவர் வந்தார் இல்லையா அவரையும் உடன் அழைத்து வாருங்கள் என்று துண்டித்தார்.

அலறியபடி அவர் நிகிதாவின் தந்தைக்கு கால் செய்து, மாப்பிள்ளை பிள்ளைகள் கடற்கரை ஓரத்தில் இருப்பதாக சொல்லி இருக்காங்க உங்களையும் கூட கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க நீங்க சீக்கரம் வந்துடுங்க நாம அங்க போகலாம். நம்ம சண்டையில் நம்ம பிள்ளைகளை இழந்து விடுவோமோ பயமா இருக்கு நீங்க கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா என்று கால் கட் செய்தார்.

அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தார் நிகிதாவின் தந்தை.

காரில் போய் கொண்டு இருக்கும் போது மாப்பிள்ளை என்னை மன்னிச்சிடுங்க.

இவர் என்ன என்பதை போல பார்த்தார். அதற்கு நாங்க பண்ணது தப்பு தான் சீர் முறையாக செஞ்சி இருக்கனும் அப்போ இருந்த பணத்துல அவ்வளவு தான் வாங்க முடிஞ்சிது நீங்க முதல்ல தங்கச்சி கிட்டயாவது சொல்லி இருந்தா நாங்க எப்பிடியாவது முறையாக செஞ்சி இருப்போம் என்று இருகரம் கூப்பி மன்னிப்பு வேண்டினார்.

அதன் பின்பும் அவர் கோவம் கொள்ளாமல் சரி விடுங்க மச்சான் பழைய விஷயம் பற்றி பேச வேண்டாம்.

நம்ம பிள்ளைகள் நம்ம கிட்ட பத்திரமாக கிடைச்சா இல்லை இல்லை கிடைப்பாங்க என் பொண்ண உங்க வீட்டுக்கு மருமகளா ஏத்துப்பிங்களா?

அதற்கு அவர் புன்முறுவலுடன் கண்டிப்பாக மாப்பிள்ளை என்றார்.

பேசியபடியே கடற்கரையை அடைந்தவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

தொடரும்…

பேசியபடியே கடற்கரையை அடைந்தவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அங்கே நிதினும், நிகிதாவும் மணமக்கள் கோலத்தில் இருந்ததை பார்த்தவர்கள் இதுவரை பேசியது அனைத்தும் காற்றில் கரைந்து போனது.

அவர்களிடம் கோவமாக சென்றவர்களை வலிய கரம் ஒன்று தடுத்து நிறுத்தியது.(நீங்க நெனக்கிறது சரி தான் அது நம்ம ஹீரோ)

அனைத்து கோவமும் நிஷாந்த்திடம் திரும்பியது. ஏண்டா இதலாம் உன்நோட வேலையா. ஏதுக்கு இப்பிடி பண்ற உனக்கு என்ன தான் வேணும். எங்க பசங்க எப்பிடி இங்க வந்தாங்க. போலீஸ் எதுக்கு எங்களுக்கு அந்த மாதிரி சொன்னாங்க சொல்லுடா.

அதற்குள் நிகிதாவின் அப்பா இங்க அவங்க கல்யாண கோலத்தில் இருக்காங்க எ‌ன்ன நடக்குது. யார கேட்டு இந்த கல்யாணத்த முடிவு பண்ண பெத்தவங்க நாங்க இருக்கும் போது நீ எப்பிடி இதையெல்லாம் செய்யலாம். இந்த கல்யாணத்தை நான் ஏத்துக்க மாட்டேன் என்றார்.

ஒரு கோப கனலை விசியவன் நீங்க எப்பிடி ஏத்துக்கம போறீங்கணு நானும் பார்க்க ஆவலாக உள்ளேன்.

நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க அவங்க ரெண்டு பேரும் குழந்தை இல்லை வேலைக்கு போறாங்க தனியா அவங்களால வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் ஆனா அவங்க ரெண்டு பேரும் எங்க அப்பா சம்மதமததோட தான் கல்யாணம் நடக்கணும்ணு சொல்லிடாங்க…ஆனா நீங்க இன்னும் அவங்கள பிரிக்க பார்க்கறீங்க… பிள்ளைகளை விட உங்க சண்டை தான் முக்கியமா உங்களுக்கு… அவங்களுக்கு இருக்க பக்குவம் கூட இந்த வயசுல உங்களுக்கு இல்லாததைக் கண்டு கஷ்டமாக இருக்கு…

ஆமா எனக்கு ஒரு டவுட் என்றான் நிஷாந்த். என்ன என்பதை போல் இருவரும் அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள். இப்போ நீங்க வண்டில வரும் போது என்ன பேசிட்டு வந்தீங்கனு நியாபகம் இருக்கா என்றான்.

நாங்கள் எதுவும் பேசவில்லை உனக்கென்ன அதபத்தி.

அது ஒண்ணும் இல்லை இது நீங்க தானா கொஞ்சம் பாத்து சொல்லுங்க என்று அவன் மொபைலை காட்டினான்.

அதில் அவர்கள் இருவரும் பேசி கொண்டு வந்த அந்த காட்சி இருந்தது. ஏன் சர் இப்பிடி கொஞ்ச நேரம் முன்னாடி கல்யாணம் பண்ணலாம் அப்பிடி இப்படின்னு பேசிட்டு இப்போ இங்க வந்து அப்பிடியே மாத்தி பேசுறிங்க.

அவங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு நிக்கிறாங்கல அப்புறம் என்ன. இதுல எங்க சம்மதம் வேற வேணுமனு சொல்ற. எங்களுக்கு மரியாதை இல்ல இவ்ளோ நாள் இருந்தவங்க இன்னும் கொஞ்ச நேரம் பொறுமை காத்து இருக்க கூடாதா நீயே சொல்லு.

அட கடவுளே இது தான் உங்க பிரச்சனையா இத முன்னாடியே சொல்லி இருக்கலாமே.

சர் உங்க பசங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. நீங்களே பாருங்க என்றான்.

ஆம் அவர்களுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இது எல்லாம் நிஷாந்த்தின் வேலை தான்.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக் போய் பார்ப்போமா( இதுவே ப்ளாஷ்பேக் அதுல இன்னொரு ப்ளாஷ்பேகானு நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது ஆனா அவங்க ரெண்டு பேரும் எப்பிடி இங்க வந்தாங்கன்னு நான் சொல்லணும்ல)

அன்று,
கால் செய்து வரவைத்தது நிஷாந்த்தின் வீடு. எதுக்கு அண்ணா இங்க வர சொன்னீங்க. வீட்டில் தேடுவாங்க சீக்கிரம் போகனும் என்றாள் நிகிதா.

நிகிதா நான் சொல்றத நல்லா கே‌ட்டுகோ, நீ இன்னும் சில நாட்கள் இங்க தான் இருக்க போற நிதின் நீங்க கூட தான்.

எதுக்கு அண்ணா நாங்க இங்க இருக்கனும் ஏதாவது பிரச்சினையா?

பிரச்சனை முடிவுக்கு வரணும் தான் நான் இங்க இருக்க சொல்றேன்.

புரியலை சர் என்றான் நிதின். சொல்றேன் நிதின் நீங்க இரண்டு பேரும் இங்க இருக்க போறது எனக்கும் உங்க சித்தப்பா மற்றும் உங்க வீட்டுல இருக்க லேடீஸ்க்கு மட்டும் தான் தெரியும்.

நீங்க இங்க இருக்கறது உங்க அப்பாவுக்கும் நிகிதாவின் அப்பாவுக்கும் தெரியாது.

புரியல, அவங்களுக்கு தெரியாதுன்னா அப்போ அவங்க எங்களை காணோமும் தேடுவாங்களே.

அது தானே என் பிளான். அவங்கள கொஞ்ச நாள் பார்ப்போம் அவங்களோட ரியாக்ஷன் எப்பிடி இருக்குன்னு பார்த்துட்டு அப்புறம் என்நோட நெக்ஸ்ட் பிளான எக்ஸிகியூட் பண்ணலாம்.

அய்யோ அண்ணா என் அப்பா பாவம் அவர யாரு பார்த்துப்பா நானும் அங்க இல்லன்னா அவர் தனியா இருப்பார் என்றாள் நிகிதா.

செல்லமாக ஒரு முறைப்பை விடுத்து, அட என் பாசமலரே உங்க அப்பாவை பார்த்துக்கிறது முக்கியமா இல்ல உங்க குடும்பம் ஒண்ணா சேர்ந்து உங்க கல்யாணத்த நடத்துறது முக்கியமா நீயே சொல்லு என்றான் நிஷாந்த்.

ரெண்டுமே தான் அண்ணா என்றாள் அவள்.

உங்க அப்பாவை பார்த்துக்கிறது என் பொறுப்பு அதே மாதிரி உங்க கல்யாணத்த எந்த பிரச்சனையும் இல்லம நடத்துவதும் என் பொறுப்பு.

அதன் பின்பு அவன் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் மூலம் அங்கு நடப்பதை அறிந்து கொண்டு இருந்தான்.

அப்பாக்கள் இருவரும் ஒன்றாக போலீஸில் புகார் கொடுக்க சென்று இருக்கிறார்கள் என்று தெரிய அதுவே பெரிய முன்னேற்றம் தான் என்று எண்ணியவன் அந்த ஏரியாவில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நட‌க்கு‌ம் அனைத்தையும் சொல்லி கம்ப்ளைன்ட் எடுக்கவேண்டாம் எனவும் கேட்டு கொண்டான்.

நிஷாந்த் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவர் என்பதால் அது அவனுக்கு பெரிய விஷயமில்லை.

அதன் பின்பு நடந்தது அனைத்தும் உங்களுக்கு தெரியும்.

எங்கள ஏமாற்றி கூட்டிக்கிட்டு வந்தா மாதிரி என் தம்பிய உன்னால கூட்டிக்கிட்டு வரமுடியாது அவன் ரொம்ப கோவக்காரன் என்றார்( நிகிதாவின் சித்தப்பா).

ஏளனப்புன்னகை வீசியவன் அந்த கோவக்கார தம்பி அவரா என்று ஒரு இடத்தை சுட்டி காட்டினான்.

அவன் கை காட்டிய திசையில் பார்த்தால் மண மக்களுடன் அவர்கள் மொத்த குடும்பமும் மகிழுந்து கொண்டு இருந்தது(மொக்கையா பேச்சே).

இவங்கல்லாம் எப்பிடி இங்க நாங்க வரும் போது வீட்டுல தானே இருந்தாங்க அது இல்லமா என் தம்பி எப்பிடி இதற்கு சம்மதம் சொன்னான். என்ன விட அவன் தானே கோவமா இருந்தான்.

அவன என்ன சொல்லி சம்மதிக்க வைச்ச சொல்லுப்பா.

அதற்கு நிஷாந்த் அது ஒண்ணுமில்லை அங்கிள்( அவர் உனக்கு மாமா ஆக போறவர் தான்) நான் உங்க வீட்டுல ஒரு சின்ன பொருள் ஒன்னு வெச்சேனா அத அங்க இருந்து எடுக்க சொன்னார் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னால் தான் அதை எடுத்துக் கொண்டு போவனு சொன்னேன் வைப்நலி இஹி செட்டு ஓகே தட்சால்.

நிதினின் அப்பா ஆமா அவன சம்மதம் சொல்ல வேக்கிற அளவுக்கு அப்படி என்ன பொருள் அது.

அது ஒண்ணும் பெரிய பொருள் இல்லை அங்கிள் ஓரே ஒரு சின்ன பாம் தான்(அடப்பாவி என்ன இவன் இப்பிடி இருக்கான்)இப்போ கூட என்கிட்ட இருக்கு ஒருவேளை நீங்க சம்மதம் சொல்லலநா கூட
உங்கிட்ட கொடுத்திட்டு போய்டுவேன் என்று ஒன்றும் அறியா பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.(அது என்ன கிப்டா)

நாங்க தான் அப்பவே சம்மதம் சொல்லிட்டோம்ல என்று கோரஸாக சொன்னார்கள்.

அப்புறம் என்ன திருமணம் இனிதே நிறைவுற்றது.

நடந்ததை எண்ணி கொண்டு இருந்த லஷணை அண்ணி என்ற குரல் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது.

அண்ணி என்ற குரல் கேட்டு திரும்பியவன் அங்கு இருந்தவளை பார்த்து திகைத்து நின்றான்.

தொடரும்.!

7 எல்லாம் அவனாக
அண்ணி என்ற குரலை கேட்டு திகைத்து நின்றவன் இவ இங்க என்ன பண்றா கடவுளே இவ கிட்ட மாட்டினால் பேசியே கொல்லுவா.

ஆமா இந்த பொண்ணு எப்பிடி இங்க என்று லஷண் தான் இருக்கும் இடம் மருத்துவமனை என்பதை மறந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவளோ இவன் இருக்கும் இடத்திற்கு வந்து அண்ணி எங்க என்றாள் இப்ப தான் இங்கே இருந்தாங்க அது குள்ள எங்க போனாங்க.

இவ யார அண்ணிணு சொல்லறா என்று எண்ணி கொண்டே உங்களுக்கு யார் வேணும் இங்க என் பிரண்ட் தான் அட்மிட் ஆகி இருக்கான் என்றான்.

அது எனக்குத் தெரியும் நிகிதா அண்ணி எங்க?

என்ன நிகிதா உனக்கு அண்ணியா? நிதின் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லயே? அப்புறம் எப்பிடி அண்ணிணு என்று இழுத்தான்.

ஆமா எங்க அண்ணாவை கல்யாணம் பண்ணா அண்ணி தானே… நிதின் என் பெரியப்பா மகன் நான் அவரோட சித்தப்பா மகள் இப்போ புரியுதா நான் ஏன் அவங்கள அண்ணிணு கூப்பிடறன்னு.

அப்போ நீங்க வாசன் அங்கிள் பொண்ணா?

உங்களுக்கு அப்பாவ தெரியுமா எப்படி? அவரோட பிரண்டா நீங்க?

ஏம்மா உனக்கு இது ஓவரா தெரியல என்ன பாத்தா உங்க அப்பாவுக்கு பிரண்ட் மாதிரியா தெரியுது என்றான் லக்ஷண்.

இல்லை ஒரு வேளை இந்த டை, பேசியல் இப்படி ஏதாவது பண்ணி யங்கா தெரியரிங்கணு நினைச்சேன்.

ஒரு முறைப்பை பரிசாக வாங்கி கொண்டு, அங்க போ உங்க அண்ணி வராங்க நீ அவ கிட்டயே போய் பேசு தாயே.

ஹி ஹி ஹி என்று சிரித்தபடி ஓடி விட்டாள்.

இவள கல்யாணம் பண்ணிக்க போறவன் பாவம் தான் என்று நினைத்துக் கொண்டான்.

அதற்குள் நர்ஸ் வந்து பேஷண்ட் கண் முழிச்சிட்டார் என்றவுடன் விரைந்து அறைக்கு சென்றான்.

டேய் என்னடா இது யாரு இப்பிடி பண்ணாணு தெரியுமா ஏதாவது பேசுடா லூசு.

என்ன ரொம்ப பயந்துட்டியா என்றான் சிரித்து கொண்டான் நிஷாந்த்.

தெரியலடா நாம ஒருத்தரைக்கூட விட்டு வெச்சது இல்ல எல்லாரையும் சீண்டி பார்த்துட்டு இருந்தோம். அதுல யாராவது ஒருத்தரா தான் இருக்கும்.

ஆனா எனக்கு என்னவோ அந்த செழியன் பார்த்த வேலையா இருக்குமோணு தோணுது என்றான் லக்ஷண்.

ஆமாடா எனக்கும் அவன் மேல டவுட்டு இருக்கு என்று சொல்லி கொண்டு இருக்கும் போது நிகிதா உள்ளே வந்தாள்.

அண்ணா எப்பிடி இருக்கிங்க என்று அழுது கொண்டு இருந்தாள்.

அழாத தங்கச்சி நான் நல்லா தான் இருக்கேன்.

அவர் நல்லா தான் இருப்பார் எதிர்ல வர்றவங்க தான் பாத்து வரணும் எப்போ வண்டிய நம்ம மேல இடிப்பாருணு தெரியாது என்று பேசி கொண்டே அங்கு வந்தாள் நம் நிபுநிகா.

அவள் பேசுவதை இமைக்கவும் மறந்து பார்த்து கொண்டு இருந்தான் நிஷாந்த்.இதை இரு ஜோடி கண்கள் கவனிக்க தவறவில்லை…

பேசி கொண்ட அவன் அருகில் வந்தவள் உங்களுக்கு கார் டிரைவ் பண்ண தெரியுமா தெரியாதா மிஸ்டர் நிஷாந்த் என்றாள்.

ஏன் அப்படி கேக்கிறிங்க எனக்கு நல்லா ட்ரைவ் பண்ண தெரியும் மிஸ் நிபுநிகா.

இல்லை ஏன் கேக்கிறேனா எப்போதும் ஏதாவது ஒரு மரத்தடியில் கொண்டு போய் வண்டிய பார்க் பண்றீங்களே அதான் கேட்டேன்.

அதற்குள் நிகிதா நிபு வாயமூடு என்ன பேச்சு இது அவர் எவ்வளவு பெரிய இடத்து பையன் தெரியுமா உன் கிட்ட பேச்சு வாங்கணும்ணு அவருக்கு என்ன தலைஎழுத்தா என்று திட்டியவுடன் நம்ம ஹீரோ உடனே நிபுவை திரும்பி பார்த்தான் வாடிய மலரைப் போல முகம் மாறியிருந்தது.

அதை கண்ட நம் நிஷாந்திற்கு மனம் என்னவோ போல் ஆனது. அவள் முகம் வாடுவதை அவனால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.

அவன் உடனே நிகிதாவிடம் விடு குட்டிமா பரவாயில்லை விளையாட்டுக்கு தானே பேசினா திட்டாதே அவள பார்க்க பாவமா இருக்கு.

அவளோ நீங்க ஒண்ணும் எனக்காக பாவம் பார்க்க வேணாம் என்று பழிப்பு காட்டி சென்று விட்டாள்.

வெளியே வந்தவள் நிஷாந்த் நிகிதாவை குட்டிமா என்று அழைத்தது பிடிக்கவில்லை.

குட்டிமாவாம் ஏன் எங்களை எல்லாம் பார்த்தால் அப்படி கூப்பிட முடியாதா(பொறாமை ஸ்டார்ட் ஆகுது) ஆளப்பாரு நல்லா லாம்ப்போஸ்ட் மாதிரி என்று நிஷாந்த்தை அர்ச்சித்து கொண்டு இருந்தாள்.

ஐய்யோ நான் ஏன் இப்பிடி பேசிட்டு இருக்கேன் அவர் யார எப்பிடி கூப்பிடா எனக்கு என்ன, எனக்கு ஏன் அவர் மத்தவங்கள செல்லமாக கூப்பிடறது பிடிக்கல. கடவுளே எனக்கு என்ன ஆச்சு நான் ஏன் இப்பிடி பொலம்பிட்டு இருக்கேன் என்று தனக்குள் பேசிக்கொண்டு இருந்தாள்.

அங்கே நம் நிஷாந்தோ கோபம் ரொம்ப வரும் போல இவள நான் எப்படி சமாளிக்கப் போறேனு தெரியலையே என்று எண்ணி கொண்டான். ஆனால் நான் ஏன் அவள சமாளிக்கணும் கடவுளே எனக்கு என்ன ஆச்சு என்று அவனும் தனக்குள் பேசிக்கொண்டு இருந்தான்.

அவர்களுக்கு தெரியவில்லை அந்த கடவுள் எதையும் காரணமாக தான் நடத்தி கொண்டு இருக்கிறார் என்று.

வீட்டிற்கு சென்ற நிபுவிற்கு நிஷாந்த் பற்றிய நினைவு வந்து கொண்டு இருந்தது. அய்யோ இந்த நிஷாந்த் ஏன் என்ன தூங்கவே விட மாட்டேன்றார். அவர்கிட்ட நான் அதிகமாக பேசினாது கூட இல்லை அப்புறம் ஏன் இப்பிடி அவரோட நினைப்பு வந்துகிட்டே இருக்கு கடவுளே முடியல.

அங்கே நம் நிஷாந்திற்கும் அதே நிலைதான். என்ன தான் நடக்குது இங்க நிபுநிகாவை பார்த்தால் மட்டும் நம் மனது ஏனோ அலைப்பாய்கிறது. அவள் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருத தோணுது ஏன் இப்பிடி எதுவும் புரியவில்லையே ஒரு வேல கடவுள் நமக்கு இவதாணு எழுதி வெச்சி இருக்காரோ என்னவோ என்று புலம்பியபடி தூங்கி போனான்.

இவர்கள் இருவருக்கும் தெரியவில்லை கடவுள் இவர்களை அவ்வளவு எளிதாக சேர்த்து வைக்க போறதில்லை என்று…

                         தொடரும்...

IMG_20190202_223210

Part 8
இத்தனை நாளும் சிறிய பறவையாய் சிறகை விரித்து பறந்து கொண்டு இருந்த என் மனம் ஏனோ அலைப்பாய்கிறது.

அந்த மாயவனின் விழிகளிலிருந்து வந்த காந்த சக்தி ஏனோ என் தூக்கத்தை, என் இயல்பை களவாடி விட்டு சென்றது.

இது காதலா இல்லை அவன் மேல் வந்த ஒர் ஈர்ப்பா ஏதும் விளங்காமல் புலம்பியபடி அவள் அறைக்குள் மராத்தான் ஓட்டம் நடந்து முடித்து விட்டு இருந்தாள் நிபு.

நிகிதா நிஷாந்தைப் பற்றி சொன்னதிலிருந்து அவள் மனம் அவன்பால் சென்று கொண்டிருந்தது.

தன் குடும்ப ஒன்று சேர்ந்து இருப்பது அவனால் தான் என்று தெரிந்தபின் நிஷாந்த் மேல் மதிப்பு அதிகமாக தொடங்கியது.

ஆனால் எவ்வளவு முயன்றாலும் அவளால் அது வேறும் மதிப்பு மட்டும் தானா இல்லை அவன் மேல் வந்த ஈர்ப்பா என்று குழம்பி தவித்தாள் அப்பேதை.

அங்கே மருத்துவமனையில் அப்பேதையின் மனதை கலைத்த கள்வனோ மருந்தின் உதவியால் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

மறுநாள் அவனை பார்க்க வேண்டும் என்பதற்காகவே நிதின் மற்றும் நிகிதாவுடன் கிளம்பினாள்.

வேண்டாம் என்று மறுத்தும் நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் அப்புறம் சாரி கேட்க வேண்டும் என்று எப்படியோ சமாளித்து அவர்களுடன் கிளம்பி வந்து விட்டாள்.

அவனை காண வேண்டும் என்று கிளம்பியவள் அறைக்கு அருகே வந்ததும் தடுமாறி நின்றாள். உள்ளே போக எத்தனிக்கையில் அவள் மூளை அதை மறுத்தது ஆனால் மனமோ அவனை கண்டால் மட்டுமே நான் அமைதி அடைவேன் என்றது.

ஒரு முடிவுடன் அறைக்குள் நுழைந்தவள் நேற்றைய வேகம் போய் அடிமேல் அடி வைத்து மெதுவாக நடந்து சென்றாள்.

இதை கண்ட லஷனோ ஏம்மா பாத்து மெல்ல மெல்ல ஏன்னா தரைக்கு வலிக்கும்ல என்று வடிவேலு பாணியில் சொல்ல அனைவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

அவர்கள் சிரித்தப்போது தான் சுய நினைவிற்கு வந்தாள். அட கடவுளே என்ன ஸ்லோ மோஷன்ல நடந்துகிட்டு இருக்கேன். அதன் பிறகு அவள் இயல்பை கொண்டு வந்து நிஷாந்திடம் நன்றி சொல்லி விட்டு மன்னிப்பும் கூறினாள்.

அவன் சிரித்தபடி என் தங்கச்சி ஆசையை நிறைவேற்றி வைத்தேன் அவ்வளவு தான். இதுக்கு போய் தாங்க்ஸ், சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு.

அப்போ நான் யோசிச்சது எல்லாம் ஒரு விசியம் மட்டும்தான் இவங்க கல்யாணம் நடந்தால் இரண்டு குடும்பங்கள் ஒன்று சேருமா என்பது தான். எப்படியோ சமாளித்து அவங்க கல்யாணம் முடிஞ்சி போச்சு. உங்க குடும்பம் ஒண்ணா இருக்கு அது போதும் எனக்கு.

அதை கேட்டு நெகிழ்ந்தவள் நீங்க கூட கொஞ்சம் நல்லவர் தான் என்று கண் அடித்தால்.

யேய் என்று அடிக்க கை ஓங்கியவன் பின்னர் அவள் குழந்தை தனமான செய்கையில் தன்னை மறந்து கிடந்தான்.

இப்படியே நாட்கள் செல்கையில் நிஷாந்திற்கு அவன் வேலையில் மும்முரமாக இருந்தான் நிபுநிகாவின் ஞாபகம் மட்டும் அவ்வப்போது வரும் ஆனால் அதை ஒதுக்கி வைத்து விட்டு மற்ற வேலைகளை கவனித்து கொண்டு இருந்தான்.

ஒரு நாள் நிபுவை அவள் ஒரு கட்டத்தில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்தாள். அவள் வருவதை பார்த்து கொண்டே சென்றவன் சாலையில் வரும் வண்டியை கவனிக்க தவறி விட்டான்.

அவனை நோக்கி வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது அது அவன் மேல் இடிக்கும் சமயத்தில் ஒரு மெல்லிய கரம் அவனை பற்றி இழுத்தது.

யார் என்று பார்க்கையில் நம்ம நிபு தான். இவன் அவளை பார்த்து சிரிக்கையில் அவளுக்கு வந்ததே கோபம் சிரிக்காதீங்க உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா எப்பபாரு ஏதாவது ஒரு வண்டியில அடி பட்டு ஹாஸ்பிடல் போனா தான் உங்களுக்கு பிடிக்குமா. வீட்டில இருக்கவங்கலாம் உங்கள என்னனு கேக்கமாட்டாங்களா அப்படியே மாடு மாதிரி ஏனோ தானோனு போறீங்க.

அது வரையில் பொறுமையாய் இருந்தவன் அவனை மாடு என்று சொன்னவுடன் கோபம் வந்துவிட்டது.

ஏய் நிறுத்து விட்டா நீ பாட்டு பேசிகிட்டே இருக்க ஒரு மரியாதை வேணாம் நீ எல்லாம் என்ன படிச்சி கிழிச்ச நான் எப்படி போனா உனக்கு என்ன நீ எதற்கு என்ன புடிச்சி இழுத்த அப்புறம் எதுக்கு இப்பிடி கத்திக்கிட்டு இருக்க. அப்பறம் என்ன சொன்ன மாடு மாதிரி ஏனோ தானோனு போறேனா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் நீ அந்த மாதிரி சொல்லுவ.

ஷட்டப் நிஷாந்த் என்ன கேட்டீங்க உங்கள ஏன் காப்பாத்தினேன் அதான நீங்க இல்ல வேற யாரா இருந்தாலும் நான் அப்படி தான் பண்ணி இருப்பேன். மாடு சொன்னத்துக்கு சாரி அந்த மாடுல கூட இப்போ ஒழுங்கா டிராபிக் ரூல்ஸ் பாலோ பண்ணி போகுது அது கூட உங்கள கம்பேர் பண்றது தப்புதான்.

இப்படியே சண்டை நீண்டு கொண்டே இருந்தது தான் யார் என்பதை மறந்து இருக்கும் இடம் மறந்து இருவரும் பேசி கொண்ட இருந்தவர்கள் எதேச்சையாக திரும்பி பார்க்கையில் அவர்களை சுற்றி பெரும் கூட்டமே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இதை கவனித்தவர்கள் அமைதியாக சென்று விட ஏத்தனிக்கையில் ஒரு பெரியவர் ஏம்பா புருஷன் பொண்டாட்டி சண்டைய வீட்டுக்குள்ளேயே பேசி முடிச்சிடனும் இப்படி வெளியே வரைக்கும் கொண்டு வரலாமா என்றார்.

இதை கேட்ட நிஷாந்த் அய்யோ ஐயா இவ என் பொண்டாட்டி இல்லை நீங்க தப்பா புரிந்து பேசிக்கிட்டு இருக்கீங்க. அதுவும் இல்லாம இந்த வாயாடிய நான் கல்யாணம் பண்ணா அவ்வளவு தான்.

இதை கேட்ட நிபுவிற்கு கோபம் வராமல் இருந்தால் தான் அதிசயம் ஆமா இவர கல்யாணம் பண்ணிக்க நான் தவம் பண்ணிட்டு இருக்கேன் பாரு இவரு வேணாம்னு சொன்ன உடனே நான் அப்படியே தலைகீழாக நிக்கப்போறேன் பொவீயா நீயே தலைகீழா நின்னு என்ன கல்யாணம் பண்ணிக்கணு கேட்டா கூட நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.

ஏய் மரியாதையாக பேசுடீ அப்புறம் அவ்வளவு தான் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.

என்னது டீயா, இரு உன்னை அதான் உனக்கே தெரியாதுல அப்புறம் ஏன்டா இங்க நின்னுட்டு சவுண்ட் விட்டுட்டு இருக்க போ போய் ஏதாவது வேலை இருந்தா பாரு என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

அவள் செல்வதை பார்த்து கொண்டு இருந்தவன் நான் என்ன பேச வந்தேன் இவ என்னடான்னா என் கிட்ட சண்டைக்கு வரா.

நான் தலைகீழாக நின்று கேட்டாலும் இவ என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டாளா இவளே வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிங்கணு கேக்க வைக்கிறேன்.

எவ்வளவு தான் லக்ஷண் உடன் பேசி சிரித்தாலும் நிபு சொன்னது அவனுக்கு அடிக்கடி நினைவு வந்தது அவளை எப்படி அவன் வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்து கொண்டு இருக்கையில்,

லக்ஷண் டேய் மச்சான் அந்த yz கம்பனி விலைக்கு வருதுடா நாம அத வாங்கலாமா என்றான்.

முதலில் மறுத்தவன் பின்னர் எந்த கம்பனினு சொன்ன அவன் சொன்னதும் டேய் அந்த கம்பெனிய உடனடியாக பேசி முடி என்று துரிதப்படுத்தினான்.

அவனது செய்கையில் ஏதோ விபரிதம் உணர்ந்தவன் யேய் என்ன ஆச்சு நீ இவ்வளவு தீவிரமாக இந்த கம்பெனிய வாங்கறதுல இருக்க ஏதாவது பிளான் பண்ணி இருக்கியா எதுவும் மறைக்காம சொல்லுடா நீயா போய் வம்புல மாட்டீக்கத.

அதல்லாம் ஒண்ணுமில்லை நீ போய் அந்த கம்பெனிய வாங்கறத்துக்கான ஏற்பாட்டை பாரு என்று சிரித்தான். அந்த கம்பெனிய வாங்குனா ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் அதான் சொல்றேன் போ வேலையை பாருடா.

இந்த சிரிப்பில் ஏதோ உள் அர்த்தம் இருக்கு சொல்லாம எங்க போகப்போற அப்ப பார்த்துக்கிறேன் உன்ன என்று சொல்லி சென்று விட்டான் லக்ஷண்.

வெளியே வந்த பிறகும் லக்ஷணுக்கு குழப்பம் தீரவில்லை கம்பெனி பற்றிய தகவல்களை மறுபடியும் பார்த்தான் அதிலும் எதுவும் புலப்படவில்லை இந்த ஃபீல்டுல நம்மலுக்கு ஏக்ஸ்பிரியன்ஸ் இல்ல அப்புறம் எதுக்கு இவன் இவ்வளவு அவசரமா அத வாங்க சொல்றான் எதுவும் புரியவில்லையே.

அந்த கம்பெனில நமக்கு எதிரி ஏன் புடிக்காதவங்க கூட யாரும் இல்லயே.

இவன் என்ன பண்ண காத்து இருக்கான்னு தெரியலையே கடவுளே யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம நீ தான் பாத்துக்கணும்.

யோசித்து கொண்டு இருந்தவன் ஒரு வேல புடிச்சவங்க யாராவது இருப்பாங்கலா என்று ஸ்டாப் லிஸ்ட்டை தேடி பார்த்தான் அதிலும் எதுவும் புலப்படாமல் போகவே சரி அவன் சொன்ன வேலையை முதல்ல செய்வோம் அப்புறம் அவனை ஏதுக்கு இப்படி எல்லாம் பண்றான்னு கேட்டு தெரிஞ்சிகலாம் என்று புலம்பியபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

உள்ளே நிஷாந்தோ வேட்டையாட காத்திருக்கும் மிருகம் போல அந்த கம்பெனிக்கு செல்லும் நாளை ஆவலோடு எதிரப்பார்த்து காத்திருந்தான்.

அவனுக்கு தெரியவில்லை இவன் வேட்டையாட போகிறான இல்லை வேட்டையாடப்பட போகிறானா என்று.

   தொடரும்...

9 எல்லாம் அவனாக
கம்பெனி நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பவன் நிஷாந்த் மற்றும் லக்ஷண். (கம்பெனி வாங்கியாச்சு) தேர்வுக்கு வந்திருக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரர்களும் ஒரு வித கலக்கத்துடன் அமர்ந்திருந்தனர் ஏனெனில் உள்ளே கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது என்று நேர்முகத் தேர்வு முடித்து வந்தவர்கள் மற்றவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள்.

அங்கே அமைதியாக வந்து கொண்டு இருந்தாள் ஒருத்தி பார்ப்பவர் யாவரையும் கவர்ந்துவிடும் பாவை. அவள் அங்கிருந்தவர்களை தீர்க்கமான ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்.

மற்றவர்கள் இவளை கண்டவுடன் இந்த பொண்ண பார்த்த உடனேயே வேலை குடுத்திட போறாங்க நம்மள கூப்பிட கூட போறது இல்லேன்னு நினைக்கிறேன் என்றனர் ஒருசேர.

ஆனால் அங்கு நடந்தததோ வேறு நிஷாந்த் வேறு ஒருவரிடம் அந்த பொண்ண எப்படியாவது நீங்க செலக்ட் பண்ணி ஆகணும் என்று உத்தரவிட்டு சென்றான்.

அங்கே நடப்பது எதுவும் புரியாமல் லக்ஷண் அவன் பின்னாடியே சென்றான்.

இவன் என்ன பண்றான் யார கண்டிப்பா செலக்ட் பண்ணணும்னு சொல்றான் டேய் ஏதாவது சொல்லிட்டு போடா இந்த கம்பெனிய வாங்கறதுல அவ்ளோ ஆர்வம் காட்டின இப்ப யாருன்னே தெரியாத ஒரு பொண்ண செலக்ட் பண்ணணும்னு சொல்ற இப்போ நீ சொல்லப்போறீயா இல்லையா என கோப பார்வை வீசினான்.

நிஷாந்த் ஏன்டா இப்படி முறைக்கிற சொல்றேன் இரு இந்த கம்பெனிய வாங்கினதுல ஒரு காரணம் இருக்கு.

ஏய் எறும ஏதோ காரணத்தோட தான் வாங்கின விளக்கெண்ணை லா எனக்கு தெரியும் ஆனா இது யாருக்கான டார்கெட்னு தான் எனக்கு புரியவில்லை.

நிஷாந்தோ சிரித்து கொண்டே உனக்கு இன்னுமா புரியல என் டார்கெட் யாருன்னு என கூறி சென்று விட்டான்.

அப்போழுது தான் லக்ஷணுக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது. ஒரு பொண்ண கண்டிப்பா செலக்ட் பண்ண சொன்னானே இப்ப செலக்ஷன் ப்ராஸஸ் முடிஞ்சி இருக்குமே நான் போய் அது யாருன்னு பார்த்துட்டு வரேன்.

அங்கே சென்று பார்க்கையில் பத்து பேர் இருந்தார்கள் அதில் இவர்கள் இருவரும் சேர்ந்து செலக்ட் செய்தவர்கள் ஆறு பேர் அப்போ அந்த மீதி நான்கு பேர் தானே ஈஸியா கண்டு புடிச்சிடலாம் என்று நினைத்தவனுக்கு அதிலும் குழப்பம் ஆரம்பித்தது.

ஏன்னு கேக்கிறிங்கள அங்கே மீதி இருந்த நால்வரும் பெண்களே.

அட கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கிற ஒரே ஒரு பொண்ணு இருக்கும் கண்டு புடிச்சிடலாம் னு வந்தா நாலுமே பொண்ணா இருக்காங்க எனக்கு ஏதாவது க்ளு குடுப்பா என்று வேண்டி கொண்டு இருந்தான்.

அங்கே லக்ஷண் அண்ணா என்று ஒரு குரல்.

என்ன யாரு அண்ணாணு கூப்பிடறது என்று கடுப்புடன் திரும்பியவன் அட நீயா என்ன ரொம்ப மரியாதையாக வார்த்தைலாம் வருது என்னால ஏதாவது உனக்கு வேலை ஆகனுமா என்றான்.

அதெல்லாம் ஒண்ணும் இல்லை அண்ணா நான் இங்க தான் ஜாயின் பண்ணி இருக்கேன் நீங்க இங்க என்ன பண்றீங்க இது நீங்க வேலை செய்யுற இடமா ஏதாவது பதில் சொல்லுங்க அண்ணா.

ஏம்மா நீ கொஞ்சம் கேப் விட்டா தானே நான் உனக்கு பதில் சொல்ல முடியும் என்றான்.

சாரி, நீங்க சொல்லுங்க நான் பேசாம கேக்குறேன்.

நான் வந்து இந்த கம்பெனி என்று ஆரம்பிக்கும் போதே ஆபிஸ் கிளார்க் வந்து சர் உங்கள சர் கூப்பிட்டு வரச்சொன்னார் என்றான்.

சரி போ நான் வரேன் என்று அவனை அனுப்பி விட்டு நான் போய்டு வரேன் அப்பறம் பேசலாம் என்று சொல்லி விட்டு சென்று விட்டான் லக்ஷண்.

நடந்து செல்கையில் இந்த பொண்ணும் இங்க தானே சேர்ந்து இருக்கேன்னு சொல்றா ஒரு வேளை இவளா இருக்குமோ என்று நினைக்கும் போதே ச்சே ச்சே இவளா இருக்காது இவ நல்ல பொண்ணு தான்.

யோசித்து கொண்டே நிஷாந்த் இருக்கும் அறைக்கு சென்று விட்டான்.

என்ன மச்சான் தீவீர யோசனை போல வர வழியெல்லாம் யோசிக்கிட்டே வர.

கேப்படா இதையும் கேட்ப இதுக்குமேலயும் கேட்ப அந்த பொண்ண இதுவரைக்கும் என்னால கண்டே புடிக்கமுடியல நீ என்னடான்னா நக்கல் பண்ணிட்டு இருக்க.

நீ முன்னாடி மாதிரி இல்லைடா நீ மாறிட்ட என்கிட்ட எதையுமே சொல்ல மாட்டேன்ற என்று அவனையும் அறியாமல் புலம்பி கொண்டு இருந்தான் லக்ஷண்.

நிஷாந்தோ டேய் இங்க என் பிரண்ட் ஒருத்தன் இருந்தான் நீ பாத்தியா என்றான்.

லக்ஷண் முறைத்துக் கொண்டே என்ன கொழுப்பா எழுந்து வந்தேன்னா மவனே நீ காலி.

பின்ன என்னடா என்னவோ என் பொண்டாட்டி மாதிரி நீ முன்னாடி மாதிரி இல்லைடா நீ மாறிட்ட என்கிட்ட எதையுமே சொல்ல மாட்டேன்ற அப்படி புலம்புற என்று லக்ஷணை போல் நிஷாந்த் சொன்னவுடன் அந்த அறை முழுவதும் சிரிப்பு சத்தம் எதிரொலித்தது.

பேசிக் கொண்டே திரும்பி பார்த்த லக்ஷண் அவளை பார்த்த உடனே பேச்சற்று போனான்.

பேசி கொண்டு இருந்தவனின் சத்தம் இல்லாமல் போகவே நிஷாந்த் அவனை திரும்பி பார்த்தான் அங்கே பார்த்தால் வாயில் ஈ போவது கூட தெரியாமல் அங்கே வந்த பெண்ணை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான்.

இந்த பொண்ண இதுக்கு முன்னாடி ஏங்கயோ பார்த்தா மாதிரி இருக்கே என்று யோசித்தவனுக்கு சில மாதங்களுக்கு முன்னால் இவளை தானே ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருந்தோம் இவ பெயர் ஞாபகம் வரலயே.

டேய் லக்ஷண் அந்த பொண்ணு பேரு என்னடா என்றான்.

அவளை விட்டு கண் எடுக்காமலையே அவ பெயர் சம்யுக்தா எனும் போதே அவன் கண்களில் ஒரு ஆயிரம் மின்னல்கள் வெட்டியது.

ரொம்ப வழியுதுடா துடைச்சிக்கோ. அந்த சம்யுக்தா கூட இங்க தான் இருக்க போறா பொறுமையாய் பார்க்கலாம் இப்போ வேலைய பாருடா என்றான் நிஷாந்த்.

என் கவல எனக்கு உனக்கு எங்க இதல்லாம் புரிய போகுது என்று ஒரு பெரு மூச்சு விடுத்து வேலைய தொடர்ந்தான்.

ஆனால் நிஷாந்திற்கோ லக்ஷண் சொன்ன உடனே நிபுநிகாவின் நியாபகம் வந்தது.

சில மணி நேரம் கழித்து செலக்ட் ஆனவர்களுக்கு அவர்களின் சம்பளம் மற்றும் இதர விவரங்களையும் முடித்து விட்டு அக்ரிமெண்ட் பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கிய நொடி அனைவரையும் மீட்டிங் ஹாலுக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த அனைத்து அங்கு இருந்தனர் அக்கம்பெனியின் மேனேஜர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

கம்பெனி சட்ட, திட்டங்கள் மற்றும் வேலை நேரம் மற்றும் இதர விஷயங்கள் பற்றியும் விளக்கி கொண்டிருந்தார்.

அப்போழுது தீடீரென குட் ஈவ்னிங் எவ்ரிஓன் என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பினர்.

குரல் வந்த திசையில் நிஷாந்த்தும் லக்ஷணும் வந்து கொண்டு இருந்தனர்.

அனைத்து பெண்களும் அவர்களை கண்டு மெய் மறந்து இருக்கையில் ஒருத்தி மட்டும் பயத்தில் அமர்ந்திருந்தாள்.

நிஷாந்த் கம்பெனி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசி கொண்டு இருந்தான் அவனையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள் அந்த பெண்.

தீடீரென ஹலோ மிஸ் இங்க கவனிங்க சேர்ந்த அன்னிக்கே இப்படியா என்ன சர் இது என்று மேனேஜரை கடுகடுத்தான்.

அவனோ சர் நீங்க தானே என்று சொல்லி முடிக்கும் முன்னரே ஸ்டாப் இட் வேலைக்கு சேரும் போதே அவங்களுக்கு அதுல இன்டிரெஸ்ட் இருக்கா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கானு பார்த்து வேலைக்கு சேர்க்கனும் இவங்க இப்பவே இப்படி தூங்கி வழிந்து கொண்டு இருக்காங்க என்று சொல்லி முடிக்கும் முன்பே நிறுத்துங்க சர் என்று அவன் பேச்சை நிறுத்தினாள் நிபுநிகா.

(ஆமாங்க இவ்ளோ நேரமா நான் சொன்ன பொண்ணு நம்ம நிபு தாங்க இத சொல்ல ஏன் இவ்ளோ பில்டப்னு கேட்டீங்கனா வேற என்ன பண்றது கொஞ்சம் ட்விஸ்டா இருக்கும்னு நினைக்கிறேன் நீங்க தான் சொல்லனும்)

என்ன சர் நினைச்சிட்டு இருக்கிங்க என்னோட எக்ஸ்பீரியன்ஸ் அப்புறம் என்னோட ஸ்கில்ஸ் இப்பிடி எல்லாத்தையும் பார்த்து தான் என்ன வேலைக்கு சேர்த்தாங்க நான் என்னவோ ரெக்கமண்டேஷன்ல உள்ள என்டர் ஆனா மாதிரி சொல்றீங்க.

மேனேஜர் மைண்ட் வாயிஸ் அட கடவுளே இந்த பொண்ண கண்டிப்பா செலக்ட் பண்ணணும்னு சொல்லிட்டு அப்பறம் ஏன் இவரே இப்படி பேசிகிட்டு இருக்காரு ஓரே குழப்பமா இருக்கே.

சர் எனக்கு இங்க வேல செய்ய இஷ்டம் இல்லை என்ன ரீலிவ் பண்ணுங்க என்றாள் நிபு.

ஓகே அப்ப மிஸ் நிபுநிகா நீங்க அக்ரிமெண்ட்ல போட்டு இருக்கா மாதிரி ஒரு ஆறு லட்சத்த கொடுத்துட்டு கிளம்புங்க அதுவும் டென் டேஸ்ல இஸ் இட் கிளியர்.

வாட் அக்ரிமெண்டல அப்படி இருக்கா என்று சம்யுக்தாவை திரும்பி கேட்டாள்.

அவள் ஆம் என்று சொல்லவும் செய்வதறியாமல் நின்றாள்.

அவள் வீட்டில் பணம் இல்லாமல் இல்லை இவள் அடம்பிடித்து உண்ணாமல் இருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.

முதலில் வேலை செய்து வந்த கம்பெனி இவளை வெளிநாட்டில் பணிபுரியுமாறு சொல்ல இவள் வீட்டில் நீ வேலைக்கே போக வேண்டாம் என்றனர்.

பின்னர் வீட்டில் சமாளித்து விட்டு முதலில் வேலை செய்த கம்பெனிக்கு முழுக்கு போட்டுவிட்டு சம்யுக்தாவுடன் இங்கே அப்ளை செய்தாள்.

என்ன மேடம் ரொம்ப நேரமா ஏதோ பலமான யோசனையில் இருக்கீங்க போல என்ற குரல் கேட்டு நினைவிற்கு வந்தாள்.

நீங்க என்ன டிசைடு பண்ணி இருக்கீங்க சீக்கிரமா சொன்னா நல்லா இருக்கும் என்றான் நிஷாந்த்.

அவனை முறைத்து விட்டு ஐ நீடு டென் மினிட்ஸ் டைம் சர் என்றாள் நிபு.

யெஸ் டேக் யுவர் டைம் மிஸ். நிஷாந்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு வேலையில் தொடர்வாளா இல்லை பணத்தை கொடுத்து விட்டு சென்று விடுவாளா என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தொடரும்…

1 Like

பெயர்களே அருமை.
எந்த வாசகம் யார் சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தால் அனைவரும் இன்னும் எளிதாக புரிந்து கொள்வார்கள்

Thanks bro… Ini thiruthi kolkiren

 1. எல்லாம் அவனாக
  அவசரத்தில் எடுக்கும் முடிவு எதுவுமே பல நேரங்களில் சரியாக இருப்பதில்லை முடிவு எடுத்து விட்டு பின்னர் புலம்புவதே மனித இயல்பு.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான் இருந்தான் நிஷாந்த். அவளை பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்பதற்காக தான் இந்த கம்பெனியை வாங்கினான் அதுவும் அவளை பற்றிய முழு விவரங்களையும் நிகிதாவிடமிருந்து தெரிந்து கொண்ட போது தான் முதலில் வேலை பார்த்து வந்த கம்பெனிய விட்டு அவள் விலகப்போவதாகவும் yz கம்பெனியில் சேர விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிந்தது அதை பற்றி யோசித்து கொண்டு இருந்தப்போது தான் லக்ஷண் yz விலைக்கு வருவதாக சொன்னான் அதன் பின்னர் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே.

நிஷாந்த் அவன் அறையில் தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்து இருந்தான்.

என்ன தான் அவ திட்டினாலும் நிபு மேல கோவமே வரமாட்ங்கிடு(என்ன இவன் இப்பிடி ட்விஸ்ட் குடுக்குறான்) அவள என்கூடயே காலம் முழுவதும் வச்சு பத்திரமா பார்த்துக்கணும் அவளுக்கு வேண்டியது எல்லாம் நானே செய்யனும்.

ச்சே நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் அவள பார்த்துகிட்டே இருக்கனும்னு தான் அவள நான் இன்டர்வியூ பண்ணமா இன்னொருத்தர எடுக்க சொன்னேன் நானே அவள கம்பெனிய விட்டு போனு சொல்ற அளவுக்கு ஆகி போச்சே.

இப்பிடி புலம்பி கொண்டு இருக்கையில்

டேய் லூசு பயலே அதுக்கு அவ முதல இந்த கம்பெனில இருக்கனும் என்று சொல்லி கொண்டு உள்ளே வந்தான் லக்ஷண்.

நீ பாட்டுக்கு அவள போகறதா இருந்தா ஆறு லட்சத்த குடுத்துட்டு போனு சொல்லிட்ட ஒரு வேல அவ அந்த காச குடுத்துட்டு போய்டா என்ன பண்ணுவ.

அவ போகமாட்டா ஏன்னா அவளுக்கு இந்த வேலை ரொம்ப புடிக்கும்.

அது உனக்கு எப்படி தெரியும் என்று சந்தேக பார்வை பாத்தான் லக்ஷண்.

ஹி ஹி ஹி அதுவா நான் நிகிதா கிட்ட கேட்டு தெரிஞ்சிகட்டேன் என்றான் நிஷாந்த்.

என்னடா உனக்கு நிபுநிகாவை புடிச்சு இருக்கா. அப்பிடின்னா அம்மா கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே தலய சுத்தி மூக்க தொட்டுகிட்டு இருக்க. நீ பண்ண அலப்பறைய பார்த்து நான் வேற அந்த பொண்ணு தான் உன் டார்கெட்னு தப்பா நினைச்சிட்டேன்.

நீ நினைச்சது கரெக்ட் தான் மச்சான் அவ தான் என்நோட டார்கெட் என்று அவன் தலையில் இடி இறக்கியது போல சொன்னான்.

என்னடா இப்படி குழப்புற இப்ப தான் அவள புடிச்சா மாதிரி பேசுன இப்ப மாத்தி பேசற என்ன தான் பிரச்சனை உனக்கு அத முதல்ல சொல்லு.

அது வந்துடா என்று அன்று நடந்த சண்டையை பற்றி கூறினான். இவன் தனக்குத்தானே எடுத்த சபதத்தை பற்றியும் கூறினான்.

ஆக சர்க்கு அவள புடிச்சு இருக்கு அவகிட்ட சொல்ல போகும் போது உன்ன திட்டிடா அப்புறம் உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டா அதானே.

ஆமாடா அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் அத்தனை பேர் முன்னாடி அந்த மாதிரி சொல்லுவா அதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிங்கணு அவ வாயாலேயே கேக்க வைக்கனும் னு இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்கேன்.

ஏன்டா அறிவு கெட்ட முண்டம் இந்த மாதிரி அவள வெறுப்புற்றி கொண்டு இருந்தனா அவ இந்த ஜென்மத்தில உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டா.

லக்ஷண் ஏன்டா இப்படி அபசகுனமா பேசுற அவளுக்கு எப்படியாவது என் காதல புரிய வெச்சு என் வாழ்க்கை துணையாக மாத்துவேன்.

நிஷாந்த் நான் சொல்றத கேளு காதல் கட்டாயப்படுத்தியோ இல்லை மிரட்டியோ வராது. உன்நோட அன்பை நீ விரும்புறவங்களுக்கு உண்மையான காதலோட புரியவை அது தான் கடைசி வரைக்கும் நிலைச்சி இருக்கும்.

இப்ப கூட ஒண்ணும் ஆகல நான் போய்ட்டு நிபுநிகாவை இங்க அனுப்பி வைக்கிறேன் இல்ல நீ என் கூட வா அவ எங்க இருக்கான்னு பார்ப்போம் அவள கண்டு பிடித்து உன் மனசுல இருக்கறத சொல்லிடு எந்த பிரச்சனையும் இல்லாமல் அம்மா உங்க கல்யாணத்த நல்லபடியா நடத்தி வைப்பாங்க.

நான் இவ்ளோ பேசிட்டு இருக்கேன் ஏதாவது வாய திறந்து சொல்றீயா.

நிஷாந்த்தோ நீ போய் அப்படி உட்காரு நிபுநிகா இங்க தான் வந்துடு இருக்கா என்றான் கணிணியில் இருந்து கண்களை எடுக்காமல்.

சரி போறேன் சர் நீங்க ஏதாவது செயுங்க நான் சொல்றத கேட்டா நீ உருப்பட்டுவ. அதான்ல கொஞ்சம் பார்த்து ஹாண்டில் பண்ணுங்க என்று சொல்லி விட்டு அவன் ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தான் லக்ஷண்.

எக்ஸ்க்யூஸ் மீ என்று கேட்டு கொண்டு உள்ளே வந்தாள் நிபுநிகா.

உள்ளே வந்தவளை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான் நிஷாந்த்.

நிஷாந்த் என்று பெயர் சொல்லி அழைத்ததும் சுய நினைவுக்கு வந்தவன்.

லுக் நிபுநிகா உங்கள எனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருக்கலாம் பட் இது ஆபீஸ் இங்க நான் உங்களுக்கு பாஸ் சோ கால் மீ பாஸ் ஆர் சர் ஐ ஹோப் யு அண்டர்ஸ்ண்டு.

சாரி சர், ஏதோ பழக்க தோஷத்துல கூப்டுட்டேன் இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன்.

இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேனா வாட் யு மீன் நீ இங்க வேலையை கண்டிநியு பண்ணப்போறியா என்றான்.

அதற்கு அவளோ ஆமாம் ஆனா என்னால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்க இருந்து ரீலீவ் ஆயிடுவேன்.

ஓ ரியலி நீ அக்ரிமெண்ட்ல மேன்ஷன் பண்ணி இருக்க காச ரீடர்ன் பண்ணணும்னா யு ஷுட் வோவர்க் ஹியர் ப்பார் டூ இயர்ஸ் மிஸ்.

எஸ் ஐ நோ டட் சர் உங்களுக்கு நான் ரீலீவ் ஆகணும்னா ஐ ஷுட் பே சிக்ஸ் லேக்ஸ் பட் அத இந்த கம்பெனில மட்டும் தான் வேல செஞ்சு குடுக்கணும்னு இல்லையே சோ ஐ கன் ரீடர்ன் மணி ஆஸ் சூன் ஆஸ் பாசிபல்.

டட் மீன்ஸ் நீ பார்ட் டைம் ஜாப் பாக்கப்போற அப்படி தானே.

நான் என்னவோ பண்ணிட்டு போறேன் உங்களுக்கு என்ன என்று சீறினாள் நிபுநிகா.

தென் பைன் யு மே லீவ் நவ் என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் நிஷாந்த்.

அவள் சென்றவுடன் லக்ஷண் நிஷாந்திடம் வந்தான்.

நிஷாந்த்தோ என்ன என்பதே போல பார்த்தான்.

நான் ஒண்ணு கேக்குறேன் அதுக்கு மறைக்காம உண்மைய சொல்லு.

சரி கேளுடா என்னால முடிஞ்ச அளவுக்கு உண்மைய சொல்றேன்.

நீ நிபுவை லவ் பண்ணுறீயா? என்றான் லக்ஷண்.

இந்த தீடீர் கேள்வியை நிஷாந்த் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏன்டா மச்சான் இப்படி கேக்குற என்ன பார்த்தா அவள லவ் பண்ணுறா மாதிரியா தெரியுது.

இதுவரைக்கும் ஒரு டவுட் இருந்தது இப்ப கிளியர் ஆகிடுச்சு. நீ அந்த பொண்ண பாக்குற பார்வையே சொல்லுது என்னவோ அவள அப்படியே முழுங்குறா மாதிரி பார்ககுற. முதல நீ சொன்னத வெச்சு அபக்ஷண்னு நினைச்சேன் ஆனா நீ பண்ற வேலைய பார்த்தா இப்பவே தாலி கட்டுனு சொன்னா கூட கட்டிடுவ போலையே.

இல்ல அவ வாயால என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லிக்க கேட்டா மட்டும் தான் அவள நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா பார்த்துப்பேன்.அட்லீஸ்ட் அவ என்ன லவ் பண்றேன் னு சொன்னா தான் என் மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். (இவன் என்ன இப்பிடி இருக்கான்:confused::confused:)

பைத்தியமா நீ எதுக்கு இப்பிடி பண்ணிட்டு இருக்க ஒழுங்கா அவ கிட்ட லவ்வ சொல்லி ரொமேன்ஸ் பண்ணுவியா அத விட்டுட்டு டார்கெட் அது இதுன்னு என்னவோ கொஞ்ச நாள் தான் உனக்கு டைம் நீ அதுக்குள்ள உன் லவ்வ அவளுக்கு புரிய வைக்குற இல்ல நான் போய் எல்லாத்தையும் சொல்லிடுவேன்.

சரி டா எவ்ளோ சீக்கரம் அவ கிட்ட லவ் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்லிடுறேன்.

இ‌ங்கே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்க அங்கே நிபு நிஷாந்த்தை திட்டி கொண்டு இருந்தாள்.

அவனுக்கு என்ன பெரிய அழகுன்னு நினைப்பா அந்த பார்வை பாக்குறான் அப்படியே முழுங்குறா மாதிரி இந்த நிகிதா அண்ணி இவன போய் ரொம்ப நல்லவன் னு வேற சொன்னாங்க சரியான சிடுமூஞ்சி என்று புலம்பி கொண்டு இருந்தவளை

சம்யுக்தா, ஏன்டீ எதுக்கு இப்பிடி தனியா லூசு மாதிரி புலம்பிட்டு இருக்க யார இப்படி திட்டி தீர்க்கற யாரு அந்த அப்பாவி.

அவனா அப்பாவி இல்லடீ நம்ம தான் அப்பாவி எவ்வளவு கேடி வேல பார்த்து இருக்கான் பார்த்தியா இவன் தான் ஓனர்னு தெரிஞ்சா நான் எங்க அப்படியே வேலையே வேணானு போய்ட போறேனு வேற ஒருத்தர கிட்ட சொல்லி இன்டர்வியூ பண்ண சொல்லி இருக்கான் அந்த பனைமரம்.

ஏய் நீ நிஷாந்த் சர்யா இவ்வளவு நேரம் திட்டிட்டு இருந்த என்றாள் சம்மு.

ஆமா உங்க சோர தான் திட்டினேன் இப்ப அதுக்கு என்ன இது மட்டும் இல்ல இதுக்கு மேலேயும் திட்டுவேன் பார்க்குறீயா என்றாள் நிபு.

நான் பார்க்கறது இருக்கட்டும் நீ கொஞ்சம் பின்னாடி பாரு என் தங்கம் என்றாள்.

என்னடீ பின்னாடி என்று கேட்டு கொண்டே திரும்பினால் அங்கே கண்களில் அனல் பறக்க நிபுநிகாவை எரித்து விடுவதை போல பார்த்து கொண்டு இருந்தான் நிஷாந்த்:rage::rage::rage:

                        தொடரும்...
1 Like
 1. எல்லாம் அவனாக

பின்னாடி பார்த்தவளுக்கு அவனது கோப பார்வையை கண்டு ஆடி தான் போனாள் நிபு.

ஐய்யோ இவன் எப்போ வந்தான் இவன் பாக்குற பார்வையே பயங்கரமா இருக்கே இப்ப எனக்கு லேக்சர் எடுத்தே கொல்லுவானே என்று நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு நிஷாந்த் இவளை கூப்பிட்டு கொண்டிருந்ததை கவனிக்கவில்லை நிபுநிகா என்று உலுக்கிய போது தான் நினைவிலிருந்து மீண்டாள்.

ஏய் கூப்பிட்டே இருக்கேன் நீ என்ன எங்கயோ பார்த்து கனவு கண்டு இருக்க இல்லை காதுல ஏதாவது புதுசா ப்ராப்ளமா என்றான் நிஷாந்த்.

ஹலோ எனக்கு காதுலாம் நல்லா தான் கேக்குது நீங்க எதுக்கு என்ன இப்பிடி முறைச்சிக்கிட்டு இருக்கீங்க அத சொல்லுங்க முதல்ல.

நீ பேசின பேச்சுக்கு உன்ன முறைக்காம கட்டி புடிச்சு முத்தமா குடுக்க முடியும் என்று நிஷாந்த் கேட்டவுடன் நிபுநிகாவிற்கு வெட்கம் வந்து விட்டது.

பேச்சற்று நின்றவளை ஏய் கேட்டுக்கிட்டே இருக்கேன் ஏதாவது வாய திறந்து சொல்றீயா. அவன் சொன்ன வார்த்தைகள் பேச்சு வாக்கில் அவள் மேலுள்ள காதலில் தான்.

எவ்வளவு தான் மறைக்க முயன்றாலும்…

என் கண்கள் உன்னை பார்த்ததும்…

என் பேச்சை கேட்க மறுக்கிறது…

கண்கள் மட்டுமா என் உதடுகளும்…

என்னை மீறி என் காதலை…

உன்னிடம் சொல்ல துடிக்குதடி என் செல்லமே…

நிபுநிகா என்று அந்த இடமே அதிரும்படி கத்தினான்.

நிபுநிகா அலறியபடி அவனை பார்த்தாள்.

ஏய் நீ என்ன சொன்ன நான் சிடுமூஞ்சா அப்பறம் நான் அழகான்னு கேட்டல நான் அழகா இருந்தா உனக்கு என்ன இல்லன்னா உனக்கு என்ன என்றான்.

நான் உங்கள பத்தி பேசலயே நான் ஏன் உங்கள பத்தி பேசப்போறேன்.

அது இல்லாம இது உங்க ஆபீஸ் இல்லை பொது இடம் இங்க யாரு வேணும்னாலும் யார பத்தி வேணும்னாலும் பேசலாம் இத நீங்க எப்படி கேக்க முடியும் ஆபீஸ்ல தான் நீங்க என் பாஸ் இங்க நீங்களும் நானும் சக மனுஷங்க தான் புரியுதா.

எனக்கு வேலை இருக்கு பாய் டாடா நிஷாந்த் என்று ஓடி விட்டாள்.

சம்யுக்தாவோ சாரி சர் அவளுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி அவளுக்காக நான் சாரி கேக்குறேன் அவள தப்பா நினைச்சிக்காதீங்க ப்ளீஸ்.

தட்ஸ் ஓகே சம்யுக்தா யு கேரியான் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே ஏய் சம்மு அவங்க கிட்ட என்ன மொக்க போட்டுகிட்டு இருக்க வா அவங்களுக்கு வேல இல்ல நம்மளுக்கு என்ன அப்படியா என்றாள். சம்யுக்தாவோ என்ன சொல்வது என்று தெரியாமல் சாரி சர் அவள மன்னிச்சிடுங்க என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

அவள் செல்வதை பார்த்து கொண்டே வந்த லஷண் என்ன மச்சான் உன் ஆளு கூட ரொமேன்ஸ் தான் போல கலக்கற போ என்றவனை முறைத்தான் நிஷாந்த்.

இப்ப எதுக்கு இப்பிடி முறைப்பா நிக்கற நான் ஏதும் தப்பா சொல்லலேயே. நீங்க இரண்டு பேரும் ஒண்ணா பேசுகிட்டு தானே இருந்தீங்க.

டேய் எறும நாங்க பேசினாத நீ கேட்டியா.

அதற்கு லஷண் இல்லடா நீங்க பேசிட்டு இருந்ததை பார்த்தேன் அவ்வளவு தான்.

நாங்க பேசினதை சொல்றேன் கொஞ்சம் ஆபீஸ் உள்ள போகலாம் வாடா.

ஏன்டா இங்கயே சொல்லேன் ஏதுக்காக உள்ள போகணும்.

இப்ப நீ உள்ள வருவியா மாட்டியா என்று அவனை முறைத்தான்.

இரு வந்து தொலைக்கிறேன் என்று அலுத்துக் கொண்டு ஓடினான்.

உள்ளே சென்றவன் இப்பவாவது சொல்லுடா.

சுற்றும் முற்றும் பார்த்தவன் மச்சான் என்று லக்ஷணை கட்டி பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தான்.

ஏய் என்ன ஆச்சுடா எதுக்கு இப்பிடி அழற ஏதாவது பிரச்சினையா சொன்னா தானே தெரியும்.அடச்சே முதல்ல அழறத நிறுத்திட்டு சொல்லு இல்ல நான் இங்க இருந்து கிளம்பி போய்டுவேன்.

மச்சான் அவ என்ன கண்டபடி திட்டிடா இப்பவே இப்பிடி பண்றாளே கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் எப்படி திட்டுவா அத நினைச்சா தான் மச்சான் தாங்கவே முடியல எனக்கு ஓரே அழுகையா வருதுடா.எங்க அம்மா கூட என்ன இப்படி எல்லாம் திட்டினது இல்லை தெரியுமா என்று சிறு பிள்ளை போல லஷணை கட்டி கொண்டு அழுதான்.

லஷணோ அட கருமமே ஏன்டா உன்ன பார்த்து இந்த சிட்டியில முக்கால்வாசி பேர் பயப்படுறாங்க நீ என்னடான்னா அவ திட்டுறதுக்கா இப்படி அழுவ முதல்ல கண்ண துடைடா கேவலமா இருக்கு யாரவது வந்துடப்போறாங்க.

யாரும் பாக்ககூடாதுன்னு தானே உன்ன இங்க கூட்டிக்கிட்டு வந்தேன் எப்படி என் சாமர்த்தியம் என்றான் நிஷாந்த்.(இவன் என்ன இப்படி பண்றான் இவனுக்கு வேற பீல்டப் கொடுத்துட்டேனே)

அதாவது சர்க்கு கிழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல அப்படி தானே.

செம மச்சான் ககப்போ நீ என் நண்பேண்டா.

கடவுளே இந்த பையன நீங்க தான் காப்பாத்தனும். வந்து தொல டைம் ஆச்சு வீட்டுக்கு போகலாம் அம்மா தேடப்போறாங்க போலமா மிஸ்டர். சிடுமூஞ்சி.

டேய் ஏன்டா இப்படி அவ தான் என்ன அப்படி சொல்றான்னா நீயுமா மச்சான்.

வீட்டிற்கு சென்றவர்களை நிஷாந்தின் அம்மா வைதேகி புன்முறுவலுடன் வரவேற்றார்.

ஏன்டா இது தான் ஆபீஸ் விட்டு வர டைம்மா ஆமா லக்ஷண் இவன் ஏன்டா சிடு சிடுன்னு மூஞ்சிய வெச்சிருக்கான் சிடுமூஞ்சி மாதிரி என்று சொன்னவுடன் அம்மா அந்த மாதிரி மட்டும் சொல்லாதீங்க என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

நிஷாந்த் நில்லுடா சாப்பிட்டு போடா என்று சொல்வதை கூட காதில் வாங்காமல் அவன் அறைக்கு சென்று விட்டான்.

லக்ஷண் ஏதாவது பிரச்சினையா ஏன் இன்னிக்கு இப்படி நடந்துக்குறான்.

ஆமாமா உங்க பையனுக்கு காதல்ல பிரச்சனை.

என்னடா சொல்ற என் பையனுக்கு லவ்லா பண்ண தெரியுமா ஒரு பொண்ணு பின்னாடி போற அளவுக்கு இவனுக்கு டைம் இருக்கா.

அட நீங்க வேற அம்மா அவன் எங்க அந்த பொண்ணு பின்னாடி போனான் அவள இவன் இருக்க இடத்திற்கு வர வச்சிருக்கான் என்று ஆரம்பம் முதல் சொல்லி முடித்தான்.

அனைத்தையும் கேட்ட பிறகு என் பையன் சந்தோஷம் தானே எனக்கு முக்கியம் சரி அந்த பொண்ணு பேரு என்ன.

நிபுநிகா அம்மா.

அங்கே நிஷாந்திற்கோ நிபுநிகாவை நினைத்து தூக்கம் மறந்து பசி மறந்து அவளையே நினைத்து கொண்டு இருந்தான்.

காதல் வந்தால் ஊன் உறக்கம் தொலைந்து விடும் என்பது உண்மை தான் போல இருக்கு என்று தனக்குதானே பேசி கொண்டு இருந்தான்.

ஆனால் நம் நாயகியும் நிஷாந்தை தான் நினைத்துக் கொண்டு தான் இருந்தாள் ஒரு விஷயம் அவனோ இவளை பற்றி நல்லவிதமாக நினைத்து கொண்டு இருந்தான் நம்ம நிபு நிஷாந்தை திட்டி தீர்த்து கொண்டு இருந்தாள்.

அவனும் அவன் மூஞ்சியும் ஆனா அவன் ஒண்ணும் அவ்வளவு மோசமா இல்லை நல்லா தான் இருக்கான்(இந்த பொண்ணு என்ன அவனுக்கு மேல கன்பியூஸ் பண்றா)

இங்கே நிஷாந்த் வீட்டிலோ,

நிபுநிகா என்ற பெயரை கேட்டவுடனே வைதேகிக்கு புன்முறுவலுடன் பழைய நினைவுகள் வந்தது.

அது என்ன என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

                        தொடரும்......
 1. எல்லாம் அவனாக

என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும் சண்டை போட்ட பத்து நிமிடங்களில் பேசாவிடல் அது உண்மையான நேசம் இல்லை.

இங்கயேயும் அதே நிலையில் தான் இருந்தாள் நிபு.

நிஷாந்த்தை கண்டபடி திட்டி விட்டேனே பாவம் அவனுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்து இருக்கும் அதுவும் அவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கான் ஒரு கால் பண்ணி சாரி கேப்போமா.

ஆனால் பெண் மனதாயிற்றே அவ்வளவு சுலபத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிடாது.

ஒரு வேல நாம கால் பண்ணி அடன்ட் பண்ணலன்னா என்ன பண்றது அப்படியே விடாம ட்ரை பண்ணி அடன்ட் பண்ணாலும் என் மேல இருக்குற கோவத்துல மறுபடியும் சண்ட போட்டா என்ன பண்ணுவேன் வேணாம் நாளைக்கு நேர்ல பாக்கும் போது இனிமே இப்படி பேச மாட்டேன்னு சாரி சொல்லிடுவோம் என்று தனக்குள் பேசிக்கொண்டு இருந்தாள்.

ஒரு வேளை அவள் கால் செய்து பேசி இருந்தால் பின்னால் வரப்போகும் பிரச்சனைகளை எளிதில் சமாளித்து இருக்க கூடும்.

இங்கே நிஷாந்திற்கும் அதே நிலைதான் ச்சே சின்ன பொண்ணு அவள போய் ஓவரா மிரட்டிக்கிட்டு இருக்கேனே நான் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா லஷண் சொன்னா மாதிரி அவ என்ன லவ் பண்ணாமேயே போய்டா என்ன பண்றது சரி அவளுக்கு கால் பண்ணி பார்ப்போம் என்று அலைபேசியை எடுத்தவன் நான் எதுக்கு கால் பண்ணணும் அவ தானே என்ன திட்டிக்கிட்டு இருந்தா அவளே பேசட்டும்.

இவர்கள் இருவருக்கும் தெரியவில்லை இந்த நிலை சில நாட்களுக்கு பின்னர் பெரிய பிரச்சினையாக போவது என்று.

சரி கொஞ்சம் ப்ளாஷ்பேக் போய் பார்ப்போமா. அதாங்க நிஷாந்தின் அம்மாவுக்கு நிபுவை தெரியும்னு சொன்னாங்கல அத பத்தி அவங்க நினைவுகள் உள்ள போய் பார்ப்போம்.

லக்ஷண் சொன்னதை கேட்டு மனது சந்தோஷத்தில் வயதிற்கு மீறி துள்ளியது.

தன் உயிரை காப்பற்றியவள் தன் மகனையும் காப்பாற்றியதை தெரிந்தால் மனது துள்ளி குதிக்காமல் வேற என்ன செய்யும்.

ஒரு வருடத்திற்கு முன்பு வைதேகி கோவிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்து இருந்தார் எல்லாம் நிஷாந்திற்காக தான் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எதிரிகளிடமிருந்து தன் மகனை பாதுகாக்க வேண்டியபடி அடி பிரதட்சணம் செய்து கொண்டு இருந்தார்.

மகனுக்காக விரதமிருந்தவர் தன் வயதை மறந்தார். வயதின் காரணமாக இலவச இணைப்பாக வந்த ரத்த அழுத்தம் தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.

மயங்கி விழும் நிலையில் யாரோ தாங்கி பிடிப்பது தெரிந்தாலும் அவர்களை யாரென்று பார்க்க முடியவில்லை.

கண் விழித்து பார்த்த பொழுது அழகான இளம் பெண் ஒருத்தி தன் மடிமீது படுக்க வைத்து இருந்தாள்.

மெல்ல எழுந்து அமர்ந்தவர் சாரிம்மா இந்த வெயில் ஓத்துக்கல அதான் இப்படி மயங்கி விழுந்துட்டேன்.

மெல்ல சிரித்தவாறு அம்மா வெயில் அதிகமாக இருக்கறதால தான் நீங்க மயங்கி விழுந்திங்களா உண்மைய சொல்லுங்க எப்போதிலிருந்து சாப்பிடாம விரதம் இருக்கீங்க.

உனக்கு எப்படி இது தெரிஞ்சது நான் சாப்பிடாம தான் இந்த வேண்டுதல பண்ணிக்கிட்டு இருக்கன்னு என்று தெம்பை வரவழைத்து கொண்டு கேட்டார் வைதேகி.

ஒரு நிமிஷம் இருங்க இதோ வந்துடறேன் என்று போனவள் ஒரு சிறிய கேரி பேக் உடன் வந்தாள்.

வந்தவள் இந்தாங்க ஆன்டி இத முதல்ல சாப்பிடுங்க அப்பறம் உங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றேன்.

இல்லமா நான் இன்னும் வேண்டுதல முடிக்கல அப்பறம் எப்படி சாப்பிட முடியும் அத இல்லாம இது என் புள்ளைக்காக பண்றது.

உங்க பையன் நல்லா இருக்கணும்னு நினைக்கறது சரி தான் ஆனா இதையே தான உங்க பையனும் நினைப்பாறு நீங்க இப்படி அவருக்காக கஷ்டப்படுறத பார்த்துக்கிட்டு சும்மா இருப்பாரா சொல்லுங்க அம்மா.

எல்லாம் சரி தான் ஆனா வேண்டுதல் இன்னும் முடியலையே பாதியிலேயே விட்டுட கூடாது அப்பறம் என் பையனுக்கு ஏதாவது சின்ன அடி பட்டா கூட இதனால தான் ஒரு கலக்கம் வந்துக்கிட்டே இருக்கும். அதானால நான் இந்த வேண்டுதல முடிச்சிட்டு கண்டிப்பா சாப்பிடறேன்.

நீங்க இப்படி சொன்னா கேக்க மாட்டீங்க போல இருக்கே உங்களுக்கு என்ன இப்ப வேண்டுதல் முடிக்கணும் அதானே.

வைதேகி ஆம் என்பது போல தலையாட்டினார்.

ஓகே அப்போ உங்களுக்காக நான் எல்லா வேண்டுதலயும் பண்றேன் நீங்க சாப்பிடுங்க.

அய்யோ நீ எப்படிம்மா இத பண்ண முடியும் பிள்ளைக்காக அம்மாவொ இல்ல புருஷனுக்காக பொண்டாட்டியோ செய்யுறது தங்கம் இது நீ எப்படி பண்ண முடியும் அதுவும் தீ மிதிக்கற்துலாம் உன்னால முடியாதும்மா சொன்னா கேளு நீ வீட்டுக்கு போ இதெல்லாம் எனக்கு பழக்கம் தான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்திட்டு
போனா சரி ஆகிடும் அது இல்லாம உங்க வீட்டுல உன்ன இந்நேரம் தேடிக்கிட்டு இருப்பாங்கல நீ வீட்டுக்கு போமா.

சிறிது நேரம் யோசித்தவள் நீங்க கவலைப்படாமல் இருங்க நான் எங்க வீட்ல இருக்கவங்களுக்கு கால் பண்ணு லேட்டா வருவேன்னு சொல்லிட்டேன் அப்பறம் நீங்க என்ன சொன்னீங்க பிள்ளைக்காக அம்மாவொ இல்ல புருஷனுக்காக பொண்டாட்டியோ செய்றது அப்படி தானே சரி அப்போ ஒண்ணு செய்யலாம் கொஞ்ச நேரத்திற்கு உங்க மருமகளா என்ன நினைச்சிக்கோங்க என்ன டீல் ஓகே வா அம்மா.

இதை கேட்ட வைதேகிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அந்த மெளனத்தை கலைக்கும் வகையில் அம்மா கவலைப்படாமல் இருங்க என்னடா இவளா வந்து வேண்டுதலை பண்றேன்னு சொல்றாளே ஏதாவது பிளான் பண்ணி இருக்காலான்னு யோசிக்கிறீங்க அதானே நீங்க யாருன்னு எனக்கு தெரியாது நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது.

நான் இந்த வேண்டுதல உங்களுக்காக செய்யறேன் சொன்னதுக்கு காரணம் என் அத்தை அவங்க தான் வயசுல பெரியவங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா நம்மளால முடிஞ்ச அளவுக்கு செய்து கொடுக்கனும் பெரியவங்க ஆசிர்வாதம் ரொம்ப முக்கியம்னு சொல்லி இருக்காங்க அதான் நான் அப்படி சொன்னேன்.

இந்த வேண்டுதல் முடிஞ்சவுடன் உங்ககூடயே வந்துடமாட்டேன்
கொஞ்ச நேரம் கழித்து உங்க வேண்டுதல முடிச்ச அப்பறம் உங்க கண்ணுல பட மாட்டேன் இப்ப சொல்லுங்க ஓகே வா.

அப்பவும் மெளனமே பதிலாக கிடைத்து கொண்டு இருந்தது. சரிம்மா உங்களுக்கு இஷ்டம் இல்லன்னா பரவாயில்லை நான் வரேன் நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க பாய் என்று கிளம்ப ஏத்தனிக்கையில் இரும்மா சரி நீயே பண்ணு என்று வைதேகி சொன்னவுடன் புள்ளி மானாய் ஓடியவளை பார்த்தவர் நல்ல பொண்ணு இந்த மாதிரி ஒரு பொண்ணு நிஷாந்த்துக்கு அமைஞ்சா நல்ல இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்தார்.

அவருக்கு தெரியவில்லை கடவுள் காரணமில்லாமல் எந்த ஒரு சூழ்நிலையையும் உருவாக்குவது இல்லை என்று.

எல்லா வேண்டுதலையும் அவள் கஷ்டப்பட்டு செய்வதை பார்த்தவருக்கு கண்கள் குளமாக ஆரம்பித்தது.

அனைத்து வேண்டுதலும் முடிந்த பிறகு வைதேகியிடம் வந்தவள் சரிம்மா நான் கிளம்பறேன் என்று சொல்லவளை தடுத்து நிறுத்தினார்.

என்னம்மா இன்னும் ஏதாவது பேலன்ஸ் இருக்கா சொல்லுங்க அதையும் பண்ணிடுவோம்(இவ என்ன இவ்ளோ நல்லவளா இருக்கா)

அதெல்லாம் ஒன்னும் இல்ல என் வீட்டுக்கு வந்துட்டு போ அது இல்லாம உன்னை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போகணும் வாம்மா.

வேணாம்மா நான் தான் அப்பவே சொன்னேனே வேண்டுதல் முடிஞ்சவுடன் நான் உங்க கண்ணுல பட மாட்டேன்னு சோ நான் கிளம்பறேன் கடவுள் அருள் இருந்தா மீண்டும் சந்திப்போம் என்று கிளம்பினாள்.

இரு தங்கம் இவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்க உன் பெயர் கூட தெரியாமல் இருக்கேன் உன் பேர் என்ன என்றார்.

நிபுநிகா அம்மா என்றாள் அவள்.

நல்ல பேரு நீ ரொம்ப சந்தோஷமா இருப்ப ஆயிசோட நல்ல இரும்மா.

நினைவிலிருந்து மீண்ட வைதேகி நாளைக்கு முதல் வேலையா லக்ஷண் கிட்ட சொல்லி நிபுநிகா வீட்ட கண்டுபிடிக்க சொல்லனும் என் பையனுக்கு அந்த மாதிரி பொண்ணு குடுங்கன்னு தான் வேண்டுனேன் ஆனா கடவுள் அவளையே என் மருமகளா குடுப்பாருன்னு நான் நினைக்கவில்லை.

முதலில் அவளை சந்தித்த கோவிலுக்கு போய் பார்ப்பேன் நான் நாளைக்கு எந்த தடங்களும் இல்லாம நிபுவ பார்த்துட்டேன்னா இவங்க இரண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கல்யாணம் நடக்கும் அப்படி நான் பாக்கலன்னா இந்த கல்யாணம் பிரச்சனையோட நடந்து முடியும்.

இன்னொரு பக்கம் மனதோ இத்தன நாளா அவள பத்தி தெரிஞ்சிக எவ்வளவு முயற்சி பண்ணேன் ஆனா அவள பத்தின தகவல் எனக்கு கிடைக்கவேயில்லை, ஆனா இப்போ இத்தன நாள் கழிச்சி அவள பத்தின விஷயம் எனக்கு தெரிய வருதுன்னா அப்போ ஏதோ நல்லது நடக்கப் போகுதுன்னு தானே அர்த்தம்.

கடவுளே எந்த பிரச்சனையும் இல்லாம நான் என் மருமகள பார்க்குறா மாதிரி பண்ணுப்பா என்று வேண்டிக் கொண்டு படுத்தார்.

மறுநாள் காலையில் முதல் வேலையாக லக்ஷணுக்கு கால் பண்ணி நிபுநிகா வீட்டை கண்டுபிடிக்க சொன்னார்.

அம்மா அது ரொம்ப ஈஸி அவ எங்க ஆபீஸ் தானே இருக்கா அவளோட ரேஸியூம் பாத்தா தெரிஞ்சிட போகுது. ஆமா இந்த அட்ரஸ் கேக்குற விஷயம் உங்க அரும பிள்ளைக்கு தெரியுமா என்பது தான் தாமதம், டேய் நல்லவனே அவனுக்கு இது தெரியாது நீ எதுவும் சொல்லிடாத சரியா.

சரி சரி சொல்ல மாட்டேன் ஆமா அந்த பொண்ண பார்த்து நீங்க என்ன பண்ணப் போறீங்க அவனே இன்னும் லவ் பண்றத சொல்லல என்றான் லக்ஷண்.

அதெல்லாம் அங்க போனா தான் சொல்லுவேன் இப்ப முதல்ல என்ன பக்கத்தல இருக்க அம்மன் கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போ அப்பறம் நிபு வீட்டுக்கு போகலாம்.

உத்தரவு மகாராணி தங்கள் ஆணைப்படியே நடப்பேன் என்று கிண்டல் பண்ணிக் கொண்டே காரை கிளப்பினான்.

அதே நேரத்தில் நிபுநிகா, அம்மா நான் பக்கத்தல இருக்க அம்மன் கோவிலுக்கு போய்ட்டு வரேன் என்றாள்.

இவர்கள் இருவரும் சந்திப்பார்களா என்று பார்ப்போம் ஆனால் அடுத்த அத்தியாயத்தில்…

                      தொடரும்..
 1. எல்லாம் அவனாக

கோவிலுக்கு சென்றவர்கள் செய்த முதல் வேலை நிபு வை தேடுவதே அனைத்து இடங்களிலும் தேடியவர்கள் எங்கும் அவள் இல்லாமல் போகவே கவலையில் ஆழ்ந்தனர்.

ஏம்மா அவ இந்த கோவிலுக்கு அதுவும் இந்த டைம்முக்கு வருவான்றது என்ன நிச்சியம் இந்த நேரத்திற்கு அவ ஆபீஸ் கிளம்பிட்டு இருப்பா எனக்கு என்னவோ நீங்க இங்க இருந்து டைம் வேஸ்ட் பண்ணீறீங்கன்னு தொணுது வாங்க நம்ம அவங்க வீட்டுக்கு போய் பாத்துட்டு வரலாம் என்றான் லக்ஷண்.

நீ அடி வாங்க போற நான் செய்யறதல ஒரு காரணம் இருக்கும்னு நீ நம்பறீயா இல்லையா முதல்ல அத சொல்லு என்று லக்ஷணிடம் கேட்டார் வைதேகி.

அம்மா உங்களை நம்பாம நான் வேற யார நம்புவேன்.அது சரி இப்ப எதுக்கு இந்த கேள்வி அத சொல்லுங்க.

அது வந்துடா எனறு அவர் நிஷாந்தின் திருமண டெஸ்ட் பற்றி அவனிடம் சொல்லி முடித்தார் வைதேகி.

இதை கேட்டு அதிர்ந்த லக்ஷண் அம்மா என்னம்மா இது இந்த மாதிரி வில்லங்கமான டெஸ்ட்ல ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க அவ தான் மருமகன்னு முடிவு பண்ணிட்டு அப்பறம் ஏன் இந்த மாதிரி வேல வேணாம்மா நாம இங்க இருந்து போகலாம்.

லக்ஷண் அதெல்லாம் தப்பா எதுவும் நடக்காது நீ பயப்படாம இரு எனக்கு நம்பிக்கை இருக்கு அதுவும் நாம இருக்கறது அந்த கடவுள் சந்நிதியில கவலைப்படாமல் இரு ஓகே.

எனக்கு என்னவோ சரியா படல க‌ட‌வுள் மேல பாரத்தைப் போட்டுட்டு இங்க நிக்கறேன்.

அவன் சொல்லு முடிப்பதற்கும் நிபுநிகா அந்த கோவிலில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

லக்ஷண் தான் முதலில் அவளை பார்த்தான் அம்மா உங்க மருமக வந்தாச்சு.

அவன் சொன்ன திசையில் பார்த்தவர் கண் இமைக்காமல் நின்றார். அளவான ஓப்பனையில் அழகாக வருபவளை பார்த்து கொண்டு இருந்த நேரம் அம்மா என்ற கூக்குரல் கேட்டு பதறியபடி திரும்பினார்.

அங்கே லக்ஷண் தலையில் கை வைத்து அலறி கொண்டு இருந்தான்.

லக்ஷண் என்னப்பா ஆச்சு தலையில எப்படி இந்த காயம் என்று கேட்டு கொண்ட அவன் காயத்தை தண்ணீர் கொண்டு துடைத்து விட்டிருந்தார்.

எழுந்து வா நாம ஹாஸ்பிடல் போகலாம் என்றார் வைதேகி.

அம்மா இது சின்ன காயம் தான் தேங்காய் உடைக்கும் போது நான் இங்க இருந்தது என் கவன குறைவு தான் அதெல்லாம் தான சரியாகிடும் ஆமா உங்க மருமக எங்க போனா நான் பண்ண அளப்பறைல அவள மறந்துட்டீங்க பாருங்க.

வாங்க அவள தேடி பார்த்து பேசலாம் என்று பேசி கொண்டு இருந்தவன் பதில் ஏதும் வராமல் போகவே வைதேகியை திரும்பி பார்த்தான்.

அதில் குழப்ப ரேகைகள் அனேகம் இருந்தன. அம்மா என்ன ஆச்சு வாங்க அவ கிட்ட பேசணும்னு சொல்லிட்டு இங்கயே நிக்கீறீங்க என்றான்.

இல்ல வேண்டாம் லக்ஷண் நாம கிளம்பலாம் இன்னொரு நாள் பேசலாம்.

நான் இந்த மாதிரி ஏதாவது குழப்பம் வரும்ன்னு தான் அப்பவே போகலாம்னு சொன்னேன் கேட்டா தானே நீங்க தான் பெரிய சயின்டிஸ்ட் மாதிரி டெஸ்ட் பண்ணி பார்க்குறேன் ட்ரையில் பார்க்குறேன்னு இப்ப மூஞ்ச தூக்கி வைச்சி இருக்கீங்க.

டேய் வாய மூடுடா நானே என் பையன் கல்யாணம் பிரச்சனையோட நடந்துட போகுதுனு கவலையா இருக்கேன் நீ இங்க குத்தம் சொல்லிட்டு இருக்க.

அம்மா கடவுள் ஒரு கணக்கு போட்டு வெச்சி இருப்பார் அத யாராலையும் மாத்த முடியாது நீங்க அப்பவே என் கூட வந்து இருந்தா இந்த தடங்கல் வந்து இருக்காது எனக்கும் இந்த அடி பட்டு இருக்காது.

வீட்டிற்கு போய்ட்டு உங்க அருமை புத்திரன் ஆபீஸ் விட்டு வந்தவுடனே நிபுநிகாவை பற்றி சொல்லி புரிய வைங்க அவன் அவள பத்தி தப்பா புரிஞ்சி இருக்கான் ஆனா அதே நேரம் அவளை ரொம்பவே லவ் பண்ணறான்.

லூசு பயலே எதுக்கு இப்படி குழப்பற தப்பா புரிஞ்சி இருக்கான்னு சொல்ற அதே சமயம் லவ் பண்றான்னு சொல்ற எனக்கு புரியல.

ஆமா உங்க புள்ள என்ன பண்றான்னு உங்களுக்கே புரியலன்னா எனக்கு மட்டும் எப்படி புரியும் அவன ஏதாவது கேட்ட பெருசா லேக்சர் எடுக்க ஸ்டார்ட் பண்ணிடுறான்.

சும்மா அவனேயே குறை சொல்லிட்டு இருக்காத நீ அவங்கூட எவ்வளவு வருஷமா இருக்க அவனும் நீயும் ப்ரண்ட்ஸ் மாதிரியா பழக்கிட்டு இருக்கீங்க அண்ணன் தம்பி மாதிரி தானா இருக்கீங்க அவன் கிட்ட அந்த பொண்ண ரொம்ப படுத்தம சீக்கிரம் லவ்வ சொல்ல சொல்லு சரியா.

அப்படியே நான் சொல்லி உங்க புள்ள கேட்டுடாலும் சூரியன் உதிக்கிற திசை மாறியிருக்கும்.

சரி சரி வா ஹாஸ்பிடல் போய்ட்டு என்ன வீட்டல விட்டுட்டு நீ போய் வேலைய பாரு அப்படியே அப்பப்ப என் மருமகள பத்தின அப்டேட் வந்து சேரணும் ஓகேவா.

அம்மா நான் ஆபீஸ்ல பார்ட்னர் என் ஸ்டேடஸ்சே மாத்திடுவீங்க போலையே.

ரொம்ப சீன் போடாம சொல்றத செய் உன் கூட பொறக்காத அண்ணனுக்காக செய்டா.

என்னவோ போங்க என்னால முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்குறேன்.

சொல்லி விட்டு ஆபீஸ் கிளம்பினான் நாட்கள் அமைதியாக நகர்ந்து கொண்டு இருந்தது.

சில நாட்களுக்கு பிறகு லஷண் அவன் வீட்டிலிருந்து ஆபிஸ் கிளம்பி கொண்டு இருந்தான் நிஷாந்திற்கு கால் பண்ணி பார்ப்போம் என்று மொபைலை தேடியவனுக் அப்பொழுது தான் முன்னாள் இரவு அவனுடைய மொபைலை சைலண்டில் வைத்தது ஞாபகம் வந்தது.

கடவுளே யாரெல்லாம் கால் பண்ணி இருக்காங்களோ என்று தேடி எடுத்து பார்த்தவனுக்கு நிஷாந்திடமிருந்து 15 மிஸ்டு கால் வந்து இருந்தது.

ஐய்யய்யோ இவன் எதுக்கு இத்தனை தடவை கால் பண்ணி இருகான் ஒரு தடவை கால் பண்ணி அட்டென்ட் பண்ணலனாலே கண்டபடி திட்டுவான் இவ்வளவு கால் பண்ணி இருக்கான் சாமியாட போறான்.

சரி என்னனு கால் பண்ணி பார்ப்போம் என்று நினைத்து கொண்டு இருக்கையில் நிஷாந்தே கால் செய்தான் வில்லங்கம் கால் பண்ணுதே கடவுளே நீங்க தான் காப்பாத்தனும்.

கால் அட்டென்ட் செய்ததும் நீ உடனே ஆபீஸ் வா என்று கட் பண்ணி விட்டான். ஏதோ பிரச்சனை என்று யூகித்தவன் சில நிமிடங்களில் ஆபீஸ் க்குள் நுழைந்தான்.

உள்ளே சென்றவன் அனைவரின் முகத்தை வைத்தே பெரிய பிரச்சினை என்பதை கண்டுபிடித்தான் லக்ஷண்.

அங்கிருந்தவர்களை அவரவர் வேலையை செய்ய சொல்லி உத்தரவிட்டு நிஷாந்தின் அறைக்குள் நுழைந்தான்.

கதவை திறந்து சென்றவன் உள்ளே நிஷாந்த் ருத்ர மூர்த்தியாய் நின்றதையும் நிபுநிகா அழுது கொண்டு இருப்பதையும் பார்த்து டேய் நிஷாந்த் என்ன ஆச்சு ஏதுக்கு இந்த பொண்ணு அழுதுகிட்டு இருக்கா ஆமா எனக்கு ஏதுக்கு அத்தனை தடவை கால் பண்ணி இருக்க என்ன பிரச்சினை என்றான்.

நிஷாந்தோ ஏய் உனக்கு எத்தனை தடவை கால் பண்றது ஒரு தடவையாவது அட்டென்ட் பண்ணியா இங்க எவ்வளவு பெரிய பிரச்சினை தெரியுமா இதோ இங்க இருக்காங்களே இந்த மேடம் நாளைக்கு சப்ளையர்ஸுக்கு அனுப்ப வேண்டிய கோட்டேஷன்லாம் கரொப்ட் ஆயிடுச்சுனு கூலா வந்து சொல்றாங்க ஒரு கம்பெனிக்குன்னா பரவாயில்லை ரெடி பண்ணி அனுப்பிடலாம் நாம இருபத்தி ஐந்து கம்பெனிக்கு அனுப்பனும் இதுல நம்ம டார்கெடுக்கு செட் ஆகுறவங்களுக்கு தான் ஆர்டர் கொடுக்க முடியும்.இது என்ன அவங்க அப்பா பண்றா மாதிரி தேங்காய் பிஸினஸா என்றவுடன் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவளுக்கு தன் தந்தையை சொன்னவுடன் கோபம் வந்து விட்டது.

சர் உங்களுக்கு என்ன திட்டுறதுக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு தப்பு பண்ணது நான் அந்த கோட்டேஷன்லாம் ஒரு சாப்ட் காபி எடுத்து வைக்காதது என் தப்பு தான் அதுக்காக என் அப்பாவை பத்தியோ அவர் செய்யுற தொழிலை பற்றியோ பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

அந்த கோட்டேஷன்லாம் நாளைக்கு சப்ளையர்ஸுக்கு போயிருக்கும் நான் அனுப்பி வைச்சிட்டு தான் வீட்டுக்கே போவேன் என்று சொல்லி விட்டு அவன் பதிலுக்கு கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டாள்.

அவள் சென்ற பிறகும் கோபம் குறையாமல் அவ நான் திட்றதலாம் மனசுல வச்சிக்கிட்டு தான் இந்த மாதிரியெல்லாம் பண்ணிட்டு இருக்கா என்ன தான் அவள எனக்கு புடிச்சாலும் கம்பெனி விஷயத்தில இந்த மாதிரி பண்றதுலாம் எனக்கு புடிக்கல என்று புலம்பி கொண்டு இருந்தவனை பார்த்து கொண்டு இருந்தான் லக்ஷண் அந்த நிபுநிகா வேணும்னே இதெல்லாம் பண்ணலன்னு சொன்னாலும் கத்துவான் சொல்லனாலும் கத்துவான் இப்ப என்ன பண்றது சரி எதாவது பேசி பார்ப்போம்.

மச்சான் என கூப்பிட்ட அதுத்த நொடி பேப்பர் வெயிட் அவன் கைகளில் இருந்தது அட கொலகாரா நான் என்னடா பண்ணேன் உன் ஆளு தப்பு பண்ணா அவ மண்டல எதையாவது தூக்கி போடு என்ன நம்பி ஒரு ஜிவன் இருக்குடா படுபாவி உன்ன சமாதானம் படுத்த வந்தா எனக்கு சாமாதி கட்டிடுவ போலையே என்று கத்தி கொண்டிருந்தவனை இடைமறித்தான் நிஷாந்த்.

சரி சரி நான் பண்ணது தப்பு தான் ஆனா பேசும் போது நடுவுல ஏதோ சொன்னீயே அது என்ன தான் ஞாபகம் வரமாட்ங்கிடு இரு யோசிக்கிறேன்.

ஐய்யயோ நான் கோவத்தல என்ன சொல்லி தொலைச்சேன் இந்த வில்லங்கம் வேற யோசிக்கிதே கடவுளே அவனுக்கு நான் சொன்னது ஞாபகம் வராம பாத்துக்கப்பா உனக்கு 101 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டி முடிப்பதற்குள் ஞாபகம் வந்திரிச்சி என்றான் நிஷாந்த்.

போ கடவுளே என்ன ஏமாத்திடியே தேங்காய் கேன்சல்.

ஆமா பேச்சு வாக்கில என்ன நம்பி ஒரு ஜிவன் இருக்குன்னு சொன்னீயே அது யாரு மிஸ்டர் லக்ஷண்.

(பி. கு:
லக்ஷணுக்கு அப்பா அம்மா இல்லை சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் காலமானார்கள். லக்ஷணின் அப்பாவும் நிஷாந்தின் அப்பாவும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் அவர்கள் இருவரும் பல தொழில்களை வெற்றிகரமாக செய்து வந்தனர் தொழில் வளர வளர எதிரிகளும் கூடவே வளர்ந்தார்கள். அப்படி சில எதிரிகள் ஓன்றினைந்து ஏற்படுத்தியது தான் அந்த விபத்து.

அப்பொழுது அவர்கள் பள்ளி இறுதி வகுப்பு படித்து கொண்டு இருந்தனர் ஆதலால் கம்பெனி சம்மந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் நிஷாந்தின் அப்பாவும் அவனின் அம்மாவும் பார்த்து கொண்டு இருந்தனர் கூடவே நிஷாந்த் மற்றும் லக்ஷண் இருவருக்கும் தேவையானதையும் பாரபட்சமின்றி செய்தனர். ஆனால் லஷண் மட்டும் எவ்வளவு எடுத்து சொல்லியும் தன் வீட்டை விட்டு வரமாட்டேன் என்று கூறி விட்டான்.

பகலேலாம் கல்லூரி முடித்து இரவு உணவு வரை நிஷாந்த் வீட்டில் இருப்பவன் இரவு அவன் வீட்டிற்கு சென்று விடுவான்.சில நேரங்களில் மட்டும் வைதேகியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர்களுடன் இருப்பான்.

இவர்கள் இருவரும் கல்லூரி முடித்தவுடன் கம்பெனி பொறுப்பு அனைத்தையும் இவர்களிடம் ஒப்படைத்தார் நிஷாந்தின் தந்தை அதன் பின்பு சில காலங்களில் இவர்களின் திறமையால் கம்பெனி பன்மடங்கு பெருகியது.

அதன் பின்பு சில வருடங்களில் நிஷாந்தின் தந்தையும் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.

நிஷாந்தின் தாய் எவ்வளவு எடுத்து கூறியும் அவன் தந்தையின் மரணத்திற்கு பிறகு அவன் இயல்பான புன்னகையை மறைத்து செயற்கையான கோபத்தை ஆபீஸில் இருப்பவர்களிடமும் கம்பெனியில் டீலிங் வைத்திருப்பவர்களிடமும் காட்டினான் இதனால் ஆபிஸில் இவன் மீது பயம் கலந்த மரியாதை இருக்கும்.

ஆனால் லஷண் அவனுக்கு நேர்மாறாக மாறினான் அவன் கஷ்டங்களை யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ள சிரித்த முகத்துடன் வலம் வருவான். இதாங்க இவங்க இரண்டு பேருக்கும் உள்ள ப்ளாஷ்பேக்)

(இதனால தான் நிஷாந்த் ஒரு ஜீவன் இருக்குன்னு சொன்னவுடனே யாருன்னு கேட்டான்)

அதுவா மச்சான் இவன் வேற சடன்னா கேட்டுட்டானே இப்ப எப்படி சமாளிக்கற்து என்று யோசித்து கொண்டு இருக்கும் போது என்ன சர் பதிலையே காணோம் என்ன சொல்லி எஸ்கேப் ஆகலாம்னு திங்க் பண்றீயா என்று கேட்டான் நிஷாந்த்.

யோசனையில் இருந்தவன் இவன் கேட்கவும் ஆமாம் மச்சான் என்று உளறி விட்டான்.

என்னது அப்ப என் கிட்ட ஏதோ மறைக்கிற அப்படி தானே. அய்யயோ பய புள்ள கரெக்டா கெஸ் பண்ணுதே சரி சமாளிப்போம் என்று மனதிற்குள் எண்ணி கொண்டு ஏன்டா எனக்காக மட்டும் இல்லை உனக்காகவும் ஒரு ஜீவன் காத்துகிட்டு இருக்கு.

என்னடா இப்பிடி உளறிகிட்டு இருக்க யார சொல்ற எனக்கு புரியல.

டேய் அம்மாடா நம்ம அம்மா அவங்க நம்மளுக்காக காத்திருக்க ஜீவன் தானே அதனால தான் அப்பிடி சொன்னேன்.

சரி போ என்று சொன்னாலும் அவனை நம்பாத பார்வை பார்த்து விட்டு அவன் வேலையில் ழுழ்கினான் நிஷாந்த்.

இந்த பய நான் சொன்னத நம்பாத மாதிரி தெரியுதே பார்த்த பார்வையே சரியில்லையே.

லக்ஷண் என்ன அங்க புலம்பிட்டு இருக்க மவனே நீ எதையோ மறைக்குற மாட்டுன அன்னைக்கு இருக்கு உனக்கு தீபாவளி.

ஹி ஹி அதெல்லாம் ஒண்ணு இல்ல மச்சான் நீ வேலைய பாரு நான் என் கேபின்னுக்கு போறேன் என்று ஓடி விட்டான்.

லக்ஷண் எதை மறைக்கிறான் அதுவும் என்கிட்டயே என்று யோசித்து கொண்டு இருந்தவன் அப்போழுது தான் மணி என்னவென்று பார்த்தான் அட கடவுளே டைம் 7 ஆக போது இவ்வளவு நேரமா இப்படியே இருந்தோம் நாளைக்கு வேற கோட்டேஷன்லாம் அனுப்பி வைக்கனும் நான் வேற நிபுவை கண்டபடி திட்டிடேன் நாமலே அதெல்லாம் முடிச்சிட்டு போகலாம் பாவம் அவளாள இவ்வளவு ப்ரஷர் தாங்க முடியாது என்று அவன் கேபினை விட்டு வெளியே நிபுநிகாவின் இடத்திற்கு வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

                        தொடரும்.....
 1. எல்லாம் அவனாக

நிபுவின் இடத்திற்கு சென்று பார்த்தவன் அதிர்ச்சியில் நின்றான் ஏனெனில் நிபு அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்தாள்.

அருகில் சென்று ஹலோ என்றான் சில நொடிகள் பொறுத்தவன் நிபுநிகா என்று அழைத்தான்.

என்ன என்பது போல நிமிர்ந்து பார்த்தவள், இவளுக்கு கொழும்பு தான் வாய திறந்து பேசினா முத்து கொட்டிடும் போல என்று நினைத்து கொண்டான் நிஷாந்த்.

நீ இன்னும் தனியா என்ன பண்ற எல்லாரும் ஆபீஸ் டைம் முடிஞ்சு வீட்டுக்கு போயாச்சி இங்க உனக்கு என்ன வேல கேட்டுக்கிட்டே இருக்கேன் ஏதாவது வாய திறந்து சொல்றீயா என்று கத்தியதும் பயந்து தான் போனாள் நிபு.

நீங்க தானே அந்த கோட்டேஷன்லாம் நாளைக்கு கண்டிப்பா அனுப்பனும்னு சொன்னிங்க அதான் இங்க இருந்து முடிச்சிட்டு போகலாம்னு இருக்கேன் என்றவுடன்,

உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா நிபுநிகா இந்த நேரத்துல இங்க தனியா வேல பார்க்குறேன்னு சொல்ற ஏதோ எதேச்சையா நான் இங்க இருந்தேன் இப்ப இருக்க சொசைடில இங்க வேலைய முடிச்சிட்டு உன்னால பாதுகாப்பா வீடு போய் சேர முடியும்ன்றதுக்கு என்ன உத்திரவாதம் இருக்கு வா நான் உன்ன டராப் பண்ணிட்டு வீட்டுக்கு போறேன் சப்ளையர்ஸ் கிட்ட பேசி நாளைக்கு ஒரு நாள் டைம் வாங்கிக்கலாம் சோ கேட் அப் பர்ட்ஸ்ட் ஹரிஅப் என்று பேசி கொண்டு இருந்தவனுக்கு முன்னால் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.

ஏய் என்னடீ இப்ப நான் உன்கிட்ட தண்ணி வேணும்னு கேட்டேனா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பண்ணிட்டு இருக்க என்று கத்தி கொண்டிருந்தவனை நிறுத்தும்படி கையை உயர்த்தி காட்டிவிட்டு அவள் பேச ஆரம்பித்தாள்.

அதுவரை அவளைகத்தி கொண்டு இருந்தவன் அவன் செய்த ஒற்றை சைகையில் அப்படியே அடங்கினான் இதை இரு ஜோடி கண்கள் கவனித்து கொண்டு தான் இருந்தன.

என்ன ஏதாவது பேச விட்ட தானே நான் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியும் நீங்க பாட்டுக்கு மூச்சு விடாம கேள்வியா கேட்டுக்கிட்டே இருந்தா என்ன பண்ண முடியும் அதான் தண்ணி குடிக்க குடுத்தேன்.

பர்ட்ஸ்ட் நான் இங்க தனியா இருக்கேன்னு உங்களுக்கு யார் சொன்னது அங்க பாருங்க என்று ஒரு இடத்தை சுட்டி காட்டினாள்.

சுட்டி காட்டிய இடத்தை பார்த்தவன் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான்.

ஏன்னு கேக்கிறிங்களா அவள் காட்டிய திசையில் லக்ஷணும் சம்யுக்தாவும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அதாங்க அவர்கள் இருவரும் மிக நெருக்கமான அமர்ந்து இருந்ததை பார்த்தவுடனேயே சொல்லி விடுவார்கள் அவர்கள் காதலிக்கிறார்கள் என்று.

இவங்க இரண்டு பேரும் இங்க என்ன பண்றாங்க நீதான் அவங்கள இங்க வெயிட் பண்ண சொன்னீயா நிபுநிகா என்றான் நிஷாந்த்.

நான் எங்க அதுங்கள இருக்க சொன்னேன் இந்த பிசாசுங்க இரண்டும் தான் வீட்டுக்கு போனா பேச முடியல அதனால நீ உன் வேலைய பாரு நாங்க இங்க பேசிட்டு இருக்கோம் வேல முடிஞ்சதும் சொல்லு நாம கிளம்பி போலாம்னு சொல்லிட்டு அங்க போய் உட்கார்ந்து மொக்க போட்டுகிட்டு இருக்குகாங்க இது நடுவுல அப்பப்ப லூசு மாதிரி இளிச்சிக்கிட்டு இருக்குகாங்க என்னால இங்க கான்சென்டிரேட் பண்ண முடியல ஏன்டா இவங்கள இங்க இருக்க சொன்னேன் னு தோணுது சர்.

அவர்களையே பார்த்து கொண்டு இருந்த நிஷாந்த் ஒன்றை யோசிக்கலானான் அப்ப அவன் சொன்ன அந்த ஜீவன் சம்யுக்தா தான் பட் அத ஏன் இவன் என்கிட்ட மறைக்கனும் நான் என்ன இவன் நல்லா இருந்தா பொறாமை படப்போறேனா நிபு நீ வேலைய பாரு நான் கொஞ்சம நேரத்தில வரேன். அவளும் சரி என்று தலையை ஆட்டி விட்டு வேலையில் ழுழ்கினாள்.

இன்னைக்கு இவன விடறதா இல்ல என்று திட்டி கொண்டே அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றான்.

பின்னாடி இருந்து லஷணின் தோளில் தட்டினான். அவனை தட்டவும் சம்யுக்தாவோ பேந்த பேந்த முழித்து கொண்டு எழுந்து நின்றாள்.

ஏய் சம்மு டார்லிங் நம்ம நிபு தானே அதுக்கு ஏன் இந்த முழி முழிக்குற அவள பாத்தா என்ன அவ்ளோ பயங்கரமாவா இருக்கா எங்க இரு நானும் பார்க்குறேன் என்று பார்த்தவனுக்கு தெரிந்ததோ நிஷாந்தின் உக்ரமான கண்கள் தான்.

பேசுவதற்கு வார்த்தைகள் எழாமல் சதி செய்தது லக்ஷணுக்கு.

நண்பர்கள் இடையே ஒளிவு மறைவு இருக்க கூடாது அப்படி இருந்தால் அது நண்பர்களாக இருக்க முடியாது இது லக்ஷண் அடிக்கடி நிஷாந்திடம் கூறும் வார்த்தைகள் அப்படி கூறுபவன் இன்று தன்னிடமே அவன் விரும்பும் பெண்ணை பற்றி கூறாமல் இருப்பதை நிஷாந்தால் தாங்கி கொள்ள முடியவில்லை.

நிஷாந்த் லக்ஷணை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவ்விடத்தை விட்டு சென்று விட்டான்.

கடவுளே நிஷாந்த் எப்பிடி இங்க அவன் வீட்டுக்கு போய்ட்டான் சரி இந்த இரண்டு பொண்ணுங்க தனியா இருக்காங்க வேல முடிஞ்ச பிறகு அவங்கள விட்டுட்டு போகலாம்னு இருந்தா இவன் ஏன் நம்மள இப்படி பார்த்துட்டு போறான் ஒண்ணும் புரியலியே சரி போய் பார்ப்போம் என்று நிஷாந்தின் அறைக்கு சென்றான் லக்ஷண்.

உள்ளே சென்றவன் நிஷாந்த் அதித கோபத்தில் இருப்பதை அவன் முகத்தை வைத்தே புரிந்து கொண்டான்.

அவனருகில் சென்றவன் மச்சான் என்று தோளை தொட்டான். அவன் தொட்ட அடுத்த நொடி லக்ஷணின் கண்ணத்தை பதம் பார்த்தது நிஷாந்தின் கை.

கண்ணத்தை பிடித்து கொண்டு எதுவும் புரியாமல் என்னடா எதுக்கு இப்ப என்ன அடிச்சா நான் என்ன தப்பு பண்ணேன் என்று கத்தினான் லக்ஷண்.

செய்யறதலாம் செஞ்சிட்டு இப்ப எதுவும் புரியாத மாதிரி என்னையே கேக்குறீயா.

மச்சான் நான் என்ன செஞ்சசேன் நீ இந்த அளவுக்கு எதுக்கு கோப படுற சுத்தி வளைக்காம நேரா விஷயத்திற்கு வா.

நீயும் சம்முவும் லவ் பண்றதை எதுக்கு என்கிட்ட மறைச்ச நான் உனக்கு அந்த அளவுக்கு வேண்டாதவனா போய்ட்டேனா எனும் போதே நிஷாந்தின் குரல் உடைந்தது.

இதை தாங்க முடியாமல் லக்ஷணோ டேய் மச்சான் என் வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விஷியமும் உன்கிட்ட சொல்லாமல் நடந்தது இல்லை அப்படி இருக்கும்போது சம்முவ லவ் பண்ணா உன்கிட்ட சொல்லாமா நான் வேற யார் கிட்ட போய் சொல்ல முடியும் எனக்குன்னு உன்னையும் அம்மாவையும் தவிர வேற யார் இருக்கா.

பொய் செல்லாத டா லக்ஷண் நீங்க இரண்டு பேரும் பேசிகிட்டு இருந்ததை பார்த்தால் அப்படி தான் தெரிஞ்சது அதுவும் இல்லாம நிபுநிகா வேற உங்க இரண்டு பேருக்கும் வீட்டுக்கு போனா பேச டைம் இல்ல அது இதுன்னு சொன்னா நீ சம்யுக்தாவ டார்லிங்னு கூப்பிட்டல அதானல தான் எனக்கு அப்படி தோணுச்சி உனக்கும் அவள பிடிக்கும்ல சோ ஐ டிசைட் தட் யு லவ் ஹர் என்றான் நிஷாந்த்.

கட கடவென சிரித்தான் லக்ஷண் டேய் லூசு பயலே இதுதான் உன் பிரச்சனையா எனக்கு அவள ரொம்ப பிடிக்கும் இன்பேக்ட் அவள கல்யாணம் பண்ணிக்க கூட ஆசை தான் ஆனா நான் அவகிட்ட இன்னும் லவ்வா சொல்லலடா என்றான் லக்ஷண்.

டேய் என்ன குழப்புற, அவள டார்லிங்கலாம் கூப்பிட்ட அவ கூட உன்கிட்ட நல்லாதானே பேசிட்டு இருந்தா லவ் பண்ணாம யாராவது டார்லிங்னு கூப்பிட்ட சும்மா இருப்பாங்களா என்று குழந்தையாய் கேட்பவனிடம் என்ன சொல்வது என்று சிரித்து கொண்டே அவன் முகம் பார்த்து அமர்ந்து இருந்தான் லக்ஷண்.

டேய் எனக்கு புடிச்சவங்கள டார்லிங்னு தான் கூப்பிடுவேன் நம்ம அம்மாவ அப்பறம் இறந்த போன என் அம்மாவ கூட அப்பிடி தான் கூப்பிடுவேன். சம்யுக்தாவ முதல்ல நான் டார்லிங்னு கூப்பிடும் போது என்ன திட்டினா ஆனா நான் எப்பவும் அப்படியே கூப்பிட்டு கிட்ட இருந்ததனால அவளே வெறுத்துப்போய் திட்றத விட்டுட்டா. அது இல்லாம இப்ப தான் என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சி இருக்கா என்றான் லக்ஷண்.

ஆனா நீ அம்மாவ டார்லிங்னு கூப்பிட்டு நான் பார்த்ததே இல்லையே.

டேய் என் மனசுக்கு ரொம்ப சந்தோஷம இருக்கும் போது தான் அப்பிடி கூப்பிடுவேன் என்றான் லக்ஷண்.

அப்போ நீ சம்யுக்தா கூட இருக்கும் போது சந்தோஷமா இருக்கீயா.

நிஷாந்த் இங்க வந்து உட்காரு என்றதும் லக்ஷணின் அருகில் சென்று அமர்ந்தான்.

ஏன்டா உனக்கு பிசினஸ் தவிர வேற யார பத்தி தெரியும் அவங்கள பத்தி என்னலாம் தெரியும் கொஞ்சம் சொல்லு பார்க்கலாம் என்றான் லக்ஷண்.

நான் உன்ன கேள்வி கேட்ட சம்மந்தமில்லாத கேள்வி கேட்டுகிட்டு இருக்க என்ன ஏதாவது பிராப்ளமா இல்ல எப்பவும் போல எஸ்கேப் ஆக பார்க்குறீயா என்றான் நிஷாந்த்.

பர்ட்ஸ்ட் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு அப்பறமா நான் உன் கேள்விக்கு பதில் சொல்றேன்.

சரி சொல்றேன், எனக்கு தெரிஞ்சது இரண்டு பேர் ஒண்ணு நீ இன்னொருத்தர் அம்மா. இதுல அம்மா பத்தி சொல்லனும்னா நான் தான் அவங்க முதல் உலகம் இரண்டாவது நீ. புடிச்சது கோவில் போறது, சமையல் பண்றது அப்பறம் புக்ஸ் படிப்பாங்க அப்பறம் என்று யோசிக்கலானான் நிஷாந்த்.

என்ன யோசிக்குற நிஷாந்த் அம்மாவ பத்தி உனக்கு அவ்வளவுதான் தெரியுமா நான் சொல்லவா அம்மாக்கு ஊதா கலர் பிடிக்கும், சினிமாவில் வரும் சண்டைக் காட்சிகள் பிடிக்காது, ஊஞ்சல் பிடிக்கும், ராட்டினம் பிடிக்காது ஏன்னா பயம், கதைகள் படிப்பது பிடிக்கும் முக்கியமா சப்பன்ஸ் ஸ்டோரிஸ் பிடிக்கும், வித்தியாசமான சமையல் செய்து பாராட்டினால் பிடிக்கும், பொய் சொன்னா பிடிக்காது இன்னும் எவ்வளவோ இருக்கு என்றதும் லக்ஷணின் முகத்தை ஏறிட முடியாமல் அமர்ந்து இருந்தான் நிஷாந்த்.

நிஷாந்த் இங்க பாரு இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு நீ யோசிக்கலாம் வேலைய முடிச்சிட்டு போனதும் கொஞ்ச நேரம் அம்மாகிட்ட உட்கார்ந்து பேசினாலே இதெல்லாம் தெரியும் நாம வேலைல இருக்கோம் நாலு பேர் கூட பழகுறோம் ஆனால் வீட்டுல இருக்க அம்மா அப்பறம் கல்யாணம் ஆகி இருந்தா வைப் இவங்களுக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா அவங்க கிட்ட மனசு விட்ட பேசினா தான் அவங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் சந்தோஷம் வந்தாலும் எனக்கு என் பையன் இருக்கான், என் புருஷன் இருக்கான்னு நினைக்க தோணும் ஷேர் பண்ண தோணும். மனசு விட்ட பேசாம போறாதுனால தான் பல குடும்பங்களில் பிரச்சனையே உருவாகுது சோ இனிமேல் நீ வீட்டுக்கு போய் கொஞ்சம நேரமாவது அம்மாவிற்காக செலவு பண்ணு என்று நீண்ட உரையை பேசி முடித்தான் லக்ஷண்.

அப்புறம் என்ன பத்தி உனக்கு என்ன தெரியும் அத சொல்லுடா கேட்போம்.

என்னடா இப்படி கேக்குற அம்மாவ பத்தி வேணும்னா எனக்கு கொஞ்சம் தெரியாம போகலாம் ஆனா நீ சின்ன வயசுல இருந்தே என் கூட இருக்க உன்ன பத்தி சொல்றேன் கேளு என்று ஆரம்பித்தான்.

உனக்கு உங்க அப்பா அம்மா தான் உலகம் அவங்க உன்னவிட்டு போன பிறகு உனக்கு வாழுறதே வெறுத்துப்போச்சின்னு சொன்ன நான் உன்ன சமாதானம் பண்ணிட்டு வீட்டுக்கு போன போது எனக்கு ஜுரம் வந்து நான் பிழைக்கறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க அத கேட்ட உடனே நீ என்ன பண்ணேன்னு ஞாபகம் இருக்கா என்கிட்ட வந்து நீயாவது என்ன விட்டுட்டு போயிடாதடா நான் இனிமேல் வாழ பிடிக்கலன்னு சொல்ல மாட்டேன் உங்கள விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன் ப்ராமிஸ் பிளிஸ் டா எழுந்திரிடா என்று அன்னைக்கு நைட் புல்லா அழுதியே ஞாபகம் இருக்கா என்றான் நிஷாந்த்.

ஆமா அதுக்கு என்ன இப்ப என்ன சொல்லிட்டு நீ தான் சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசிகிட்டு இருக்க நான் என்ன பத்தி சொல்லுடானு சொன்னா நீ பழைய கதையெல்லாம் பேசிகிட்டு இருக்க என்றான் லக்ஷண்.

சொல்றேன் உனக்கு எங்களுக்கு அப்பறம் புடிச்சது இரண்டு பேர் ஒண்ணு அம்மா இன்னொருத்தர் சம்யுக்தா உனக்கு இந்தியன் புட்டவிட மெக்சிகன் பிடிக்கும், ப்ளாக் கலர் பிடிக்கும், போட்டொஸ் எடுக்கறது பிடிக்கும், பேட் அனிமல் பிடிக்கும், சோகமா இருக்கறது பிடிக்காது, நீ வேல செய்யும் போது உன்கிட்ட யாரும் பேசி டிஸ்டர்ப் பண்ணா பிடிக்காது எனக்கு ஒண்ணுன்னா உன்னால பொறுத்துக்க முடியாது என்ன எதிரியா நினைச்சாலே நீ அவங்கள ஒரு வழி பண்ணிடுவ இப்ப ரிசென்ட்டா கூட அந்த செழியனோட பாதி சாம்ராஜ்யத்தையே காணாம பண்ணிட்டீயே என்று கண்அடித்தான்.

(செழியன் பற்றி பின்னால் வரும் அத்தியாயத்தில் பார்ப்போம் நட்புகளே)

இது எப்பிடி உனக்கு தெரியும் என்றான் லக்ஷண்.

எனக்கு தெரியாம எப்படிடா உன்நோட ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும் ஆனா சம்யுக்தா விஷயத்தில நான் எப்படி கவனிக்காம விட்டுடேன்னு தெரியல என்றான் நிஷாந்த்.

சர்க்கு நிபுநிகாவ பார்க்கறதே வேலயா இருந்தா என்ன எல்லாம் எப்படி கவனிப்ப, சரி பழைய கதைக்கு வருவோம் நீ ஹாஸ்பிடல நடந்நதை பத்தி இப்ப எதுக்கு சொன்ன அது முதல்ல சொல்லு என்றான் லக்ஷண்.

அது ஒண்ணும் இல்லை டா அப்ப ஹாஸ்பிடல நீ வந்து அழுதல அந்த சமயம் எனக்கு உடம்புக்கு எதுவும் இல்ல நான் சாதாரணமாக சொன்னா உன் வாயில இருந்து அந்த மாதிரி வார்த்தை வந்து இருக்காது அதான் நானும் என் அப்பாவும் ஒரு சின்ன ட்ராமா பண்ணி உங்கிட்ட எங்கள விட்டுட்டு போமாட்டேன்னு சத்தியம் பண்ண வெச்சோம் என்றதும் நிஷாந்தின் கண்ணத்தில் லக்ஷணின் ஐவிரலும் ஆழமாக பதிந்திருந்தது.

ஏன்டா அறிவு கேட்டவனே நான் ஏதோ அப்ப அப்பா அம்மா போன தூக்கத்துல அந்த மாதிரி ஒலறிட்டு இருந்தேன் அதுக்காக நீ அந்த மாதிரி தான் ட்ராமா பண்ணணும்னு என்ன அவசியம் இருக்கு உன்கிட்ட புலம்பிட்டு வந்த அப்பறம் எனக்கு என்ன விட உன்ன நினைச்சு தான் கவலையா இருந்தது நீ என்ன நினைச்சு கவலபட்டுக்கு இருப்பனு யோசிக்கிட்டு இருக்கும் போது தான் உன் வீட்டில இருந்து கால் வந்தது. கால் வந்த அடுத்த நொடி என் உயிர் என்கிட்ட இல்ல அவசர அவசரமாக உன்ன பாக்க வந்தேன். அங்க வந்தா நீ பிழைக்கறது கஷ்டம் அவன் ஏதோ புலம்பிட்டு இருக்கான்னு லக்ஷண் போகத எனனவிட்டு போகாதேனு டாக்டர் சொன்னாங்க. எனக்கு என்ன பண்றதுனே புரியல என்னால தான் நீ இப்படி இருக்கீயோனு எனக்கு பயம் வர ஆரம்பிச்சது. அப்பா அம்மாவ இழந்தா மாதிரி எங்க உன்னையும் இழந்துட போறேனோன்னு பயத்துலேயே உன்னை வந்து பார்த்தேன் நீ கண் விழித்து பார்த்த பொழுது தான் எனக்கு உயிரே வந்தது. நான் உன்ன ஒரு ப்ரெண்டா மட்டும் பாக்கலாடா என் அண்ணணா பார்க்குறேன். என்னையே நீ டெஸ்ட் பண்ணி பாத்து இருக்கியே டா என்று சொல்லும் போதே கண்களில் இருந்து கண்ணீர் வந்தது லக்ஷணுக்கு.

இத பார்த்த நிஷாந்த் உடனே லக்ஷணிடம் மன்னிப்பு வேண்டினான். லக்ஷண் என்ன மன்னிச்சிடுடா எங்க நீ என்ன விட்டுட்டு போய்டுவியோனு தான் அப்படி பண்ணேன் மத்தப்படி உன்ன ஏமாத்தனும்னு எனக்கு எண்ணம் இல்லை டா ப்ளீஸ் என்று நிற்பவனை பார்த்து மனம் இறங்கினான் லக்ஷண்.நிஷாந்திடம் இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த மாதிரி உயிரை வைத்து விளையாட கூடாது என சத்தியம் வாங்கி கொண்ட பிறகு அவனை ஆரதழுவி கொண்டான்.

இங்கே இருவரும் பேசி கொண்டே இருக்கும் போது சம்யுக்தா அவசரமாக ஓடி வருவதைப் பார்த்த நிஷாந்த் ஏன்டா உன் சம்மு ஏன் இப்பிடி ஓடி வரா ஏதாவது ரேஸில கலந்துக்க போறாளா ஆபிஸிலேயே ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கா.

அதெல்லாம் ஒண்ணும் இல்லை டா அவளுக்கு என்ன வேல கரப்பான் பூச்சி பாத்தேன், பல்லிய பாத்தேன்னு அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு இருப்பா இப்ப கூட அந்த மாதிரி ஏதாவது தான் இருக்கும் என்று அவர்கள் இருவரும் சிரித்து பேசி கொண்டிருக்கவும் சம்யுக்தா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

வாம்மா மின்னல் ஏதுக்கு இந்த ஓட்டம் ஓடி வரா என்ன கரப்பான் பூச்சியை பார்த்து பயந்துட்டியா எனறு கிண்டல் பண்ணிக் கொண்டு இருந்தான் லக்ஷண்.

அதெல்லாம் ஒண்ணும் இல்லை நான் சொல்ல வந்ததே வேற என்று அவள் சொன்னதே கேட்டு இருவருக்கும் ஒரு நிமிடம் செய்வதறியாது நின்றனர்.

ஏன் அப்படி நின்றார்கள், சம்யுக்தா அப்படி என்ன சொன்னாள் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…

                        தொடரும்...
 1. எல்லாம் அவனாக

சம்யுக்தா சொன்னதை கேட்டவர்கள் என்ன செய்வதறியாது நின்றிருந்தனர்.

ஐய்யோ இரண்டு பேரும் மண்ணு மாதிரி நிக்குறீங்களே ஏதாவது செய்ங்க கத்தியதும் தான் இருவரும் தன்னிலை அடைந்தனர்.

தன்னிலை அடைந்ததும் காலில் ராக்கெட் கட்டி கொண்டார் போல் ஓடினார்கள் மூவரும்.

நிபுநிகாவின் இடத்தை அடைந்தவர்கள் அவள் இருந்த நிலை கண்டு கலங்கினர் இதில் நிஷாந்தின் நிலை தான் அவர்களை இன்னும் கலக்கமடைய செய்தது.

நிபுநிகாவை மடியில் கிடத்து அந்த ஆபிஸ் அதிரும்படி கத்தினான் நிஷாந்த்.லக்ஷண் கார ஸ்டார்ட் பண்ணு உடனே ஹாஸ்பிடல் போகணும் என்றவன் நிபுநிகாவை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான்.

லக்ஷணுக்கு நிஷாந்த் கலங்குவது சாதாரணமாக தெரிந்தது ஆனால் சம்யுக்தாவுக்கு தான் விளங்கவில்லை ஏனெனில் நிஷாந்த்தை அவள் பார்த்த வரை திமிராகவும், கம்பீரமாகவும், செய்யும் செயலில் ஒரு தெளிவுடனும் இருப்பவன் இன்று நிபுநிகா மயக்க நிலையில் இருப்பதற்கு ஏன் இந்த மாதிரி கலங்க வேண்டும் என்று தன்னை தானே கேட்டு கொண்டு இருந்தாள் சம்யுக்தா.

அதற்குள் லக்ஷண் கால் செய்துவிட நிபுநிகாவை தூக்கி கொண்டு ஓடினான் நிஷாந்த்.

வரும் வழியெல்லாம் நிபுநிகாவை மடியில் கிடத்தி பேசி கொண்டே வந்தான் நிஷாந்த் அவன் செய்கையில் சம்யுக்தாவிற்கு ஒரு விஷயம் தெளிவாயிற்று.

ஹாஸ்பிடலை அடைந்தவர்கள் இரவு நேரம் என்பதால் டாக்டரை தேடி அலைந்தனர் ஒரு வழியாக டாக்டரை கண்டுபிடித்தவுடன் நிஷாந்த் அவரை ஒரு வழி பண்ணி விட்டான்.

டாக்டர் நிபுவுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க அவ ஏன் இப்பிடி இருக்கா எவ்வளவு கூப்பிட்டும் எழுந்துக்கவே மாட்டேன்றா ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ் என்று அவரின் கைகளை பிடித்து கொண்டு இருந்தான்.

டாக்டரோ மிஸ்டர் நீங்க என் கைய விட்டா தானே அவங்களுக்கு டிரிட்மெண்ட் குடுக்க முடியும் சோ ப்ளீஸ் என்று அவர் கைகளை விடுவித்து சென்று விட்டார்.

சற்று நேரத்திற்கு முன்பு,

வேலை செய்து கொண்டிருந்த நிபுநிகாவிற்கு தீடீரென மயக்கம் வருவதை போல் இருந்தது சம்யுக்தாவை கூப்பிடலாம் என்றால் அவள் படுத்து உறங்கி கொண்டு இருந்தாள் அவளை எழுப்ப மனமின்றி தானே சமாளிப்போம் எனறு எண்ணியவள் வேலை செய்வதை தொடர்ந்தாள்.

தீடீரென பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு சம்யுக்தா விழித்து பார்த்தாள். அங்கே அவள் நிபு சரிந்திருப்பதை பார்த்தவுடன் செய்வதறியாது ஓடினாள்.

(அதன் பிறகு நடந்தவை உங்களுக்கு தெரியுமே)

டாக்டர் உள்ளே சென்றதும் சம்யுக்தா லக்ஷணிடம் சென்றாள், லக்ஷண் நான் உங்க கிட்ட ஒண்ணு கேக்கனும் என்றாள்.

என்ன சம்மு கேளு.

நிஷாந்த் சர் நிபுவ லவ் பண்றாரா என்றாள்.

திடிரென்று கேட்கவும் சற்றே தடுமாறி தான் போனான் லக்ஷண். ஏன் அப்படி கேக்குற சம்மு என்றான்.

எனக்கு அப்படி தான் தெரிஞ்சது அவர் பார்க்கற பார்வ செய்யுற செயல்ல நிபுக்கு ஒரு தனி இடம் இருப்பத நான் கவனிச்சி இருக்கேன் ஆனா அப்ப எல்லாம் தெரிஞ்ச பொண்ணுனு அப்படி நடந்துக்கிறாருன்னு நான் பெருசா எடுத்துகல ஆனா இன்னைக்கு நடந்தது அந்த மாதிரி என்னால எடுத்துக்க முடியல அவர் அவளுக்காக துடிச்சத பார்த்தா ஒரு தாய் தன் பிள்ளைக்காகவும் ஒரு கணவன் மனைவிக்காக துடிப்பதை போல இருந்தது. சின்ன வயசுல இருந்தே அவ கூட நான் இருக்கேன் எனக்கு பயம் இருந்தாலும் அவர் அளவுக்கு இல்ல என்று தான் உணர்ந்ததை கூறி முடித்தாள் சம்யுக்தா.

நீ சொல்றது கரெக்ட் தான் நிஷாந்த் நிபுநிகாவை லவ் பண்றான் அவள கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறான் ஆனால் அதுல ஒரு சிக்கல்.

என்ன சிக்கல் அவர் லவ் பண்றார்னு சொன்னீங்க கல்யாணம் பண்ணிக்க ஆசைனு கூட சொன்னீங்க எனக்கு தெரிஞ்சி நிபுக்கு கூட அவர் மேல ஒரு ஈர்ப்பு இருக்கு ஆனா அவ அத வெளியே காண்பிச்சது இல்ல ஏன்னு தெரியல என்றாள் சம்யுக்தா.

அங்க தான் ஒரு ட்விஸ்ட் இருக்கு இவங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் ரொம்ப பிடிக்கும் ஆனா இவங்களுக்குள்ள ஈகோ தான் பிரச்சனை. ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனா ஒரு நாள் நிஷாந்த் உன் பிரண்ட் கிட்ட லவ்வ சொல்ல போயிருக்கான் இப்ப என்று ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை சொல்லி முடித்தான் லக்ஷண்.

இதுக்கு எல்லாம் போயா லவ்வ சொல்லாம சண்டை போட்டுகிட்டு இருப்பாங்களா லவ் பண்ணா உடனே சொல்லிடனும்.காதல் வந்தவுடனே சொன்னா தான் என்ன பொறுத்த வரைக்கும் நல்லது. காதல் காத்து இருக்கும் ஆனா காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்றதும், அப்ப சம்யுக்தா ஐ லவ் யூ என்றான் லக்ஷண்.

(என்ன பயபுள்ள போசுகின்னு சொல்லிட்டான் இவன நம்பி நான் வேற எபிசோடுலாம் பிளான் பண்ணணே இந்த லவ் பண்றவங்கள நம்ப கூடாது போல எப்ப என்ன பண்ணுவாங்கனே புரிய மாட்டேன்து)

அவன் சொன்னதை தான் தவறாக புரிந்து கொண்டதாக நினைத்து லக்ஷண் என்ன சொன்னீங்க எனக்கு சரியா கேக்கல மறுபடியும் சொல்ல முடியுமா என்றால் சம்யுக்தா.

அவளிடம் கள்ள சிரிப்பை வீசியவன் சம்யுக்தாவை இழுத்து அவன் பக்கத்தில் நிற்க வைத்து கண்ணோடு கண் பார்த்தவன், ஐ லவ் யூ சம்யுக்தா நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன் என் லைப் புல்லா உன்ன நல்லா பாத்துப்பேன் எனக்கு அப்பா அம்மா இல்ல நீ என் அம்மா மாதிரி நீ என்ன பாத்துப்பீயா என்றான் லக்ஷண்.

சம்யுக்தாவோ என்ன சொல்வது எனறு தெரியாமல் பேந்த பேந்த விழித்தாள்.

லக்ஷண் என்ன தீடீரென இப்படி சொல்றீங்க என்றாள்.

உன்ன முதன்முதல்ல ஹாஸ்பிடல பார்க்கும் போதே சொல்லி இருப்பேன் நீ என்ன நினைப்பியோன்னு தான் சொல்லாம இருந்தேன்.

நீ தான சொன்ன காதல் வந்தா உடனே சொல்லிடனும் வெயிட் பண்ண கூடாதுன்னு அதான் சொன்னேன்.

நான் நிஷாந்த் சர்காக சொன்னேன் நீங்க என்னடான்னா, என் கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க என்றாள்.

டார்லிங் உன்ன லவ் பண்ணிட்டு உன் அக்காவுக்கா சொல்ல முடியும் என்றதும் தன் குண்டு கண்களை உருட்டியவளை பார்க்க பார்க்க லக்ஷணுக்கு சிரிப்பு தான் வந்தது.

உனக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதா உண்மைய சொல்லு என்றான்.

மறுபடியும் ஏதும் பேசாமல் விழித்தவளை இப்ப மட்டும் நீ பதில் சொல்லல நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றான்.

சம்யுக்தாவிறகு லக்ஷணை மிகவும் பிடிக்கும் அதிலும் அவன் தன்னை தன் தாயை போல எண்ணுகிறான் என்றதுமே அப்பவே அவனை கட்டிபிடித்து நானும் உங்கள லவ் பண்றேன் வாழ்க்கை முழுவதும் ஒரு தாயைப்போல பார்துதுகிறேன் என்று சொல்ல எண்ணியவள் அவனிடம் விளையாடி பார்க்க எண்ணம் வந்தது.

பதில் சொல்லலன்னா என்ன பண்ணுவீங்க என்றாள்.

கடைசியா கேக்குறேன் பதில் சொல்லுவியா மாட்டியா என்றான்.

சொல்ல முடியாது உங்களால என்ன பண்ண முடியுன்னு பார்க்கறேன் என்றாள் அவள்.

அவள் சொல்லி முடிக்கவும் லக்ஷண் அவள் இதழை சிறை பிடித்து இருந்தான் அவனிடம் இருந்து விலக முயற்சித்தவளுக்கு தோல்வியே கிடைத்தது.

அவள் மூச்சு விட சிரமபடவும் நிஷாந்த் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. (நிஷாந்த் டாக்டர் அழைத்ததால் அவர் அறைக்கு சென்றிருந்தவன் அப்பொழுது தான் வெளியே வந்தான்)

லக்ஷண் என்ற குரலை கேட்டு சம்யுக்தாவை விடுவித்தவன் ஐய்யயோ இவன் எப்ப வந்தான் இவன் இருக்குற கோவத்துல என்ன பண்ண போறான்னு தெரியலையே என்று மனதிற்குள் நினைத்தவன் சம்யுக்தாவை திரும்பி பார்த்தான், அவள் அங்கே இருந்தா தானே நிஷாந்த்தின் குரலை கேட்ட அடுத்த நொடி அவ்விடத்தை விட்டு ஓடி விட்டாள்.

இவ எப்ப போனா என்கிட்ட பதிலே சொல்லாம போய்டாளே இவன் மட்டும் கரடி மாதிரி வராம இருந்தா இந்நேரம் அவ கிட்ட உண்மைய வாங்கி இருப்பேன் என்று நினைத்து கொண்டு இருந்தவனை ஓங்கி ஒரு அடி வைத்தான் நிஷாந்த்.

ஏன்டா எப்ப பார்த்தாலும் இந்த பச்சபுள்ளய போட்டு அடிக்குற என்றான் லக்ஷண் பாவமாக முகத்தை வைத்து கொண்டு.

அதை பார்த்த நிஷாந்த் நிபுநிகாவின் மேல் இருந்த கோபம் மறைந்து சிரிக்க ஆரம்பித்தான்.

ஹப்பாடா இப்பவாது சிரிச்சானே என்று மனதிற்குள் சந்தோஷம் அடைந்தான் லக்ஷண்.

ஏன் மச்சான் சிரிக்குற என்ன பாத்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா என்றான்.

அடபாவி நீயா காமெடி பீஸ் உன்ன கம்பேர் பண்ண இப்ப நான் தான் அப்பிடி இருக்கேன். ஹாஸ்பிடலுன்னு கூட பாக்காமா நீ என்னடான்னா அந்த புள்ளக்கு கிஸ் அடிச்சிட்டு இருக்க அதுவும் லிப் லாக். ஆனா உனக்கே இது அநியாயமா தெரியல இன்னும் அந்த பொண்ணு கிட்ட லவ்வ சொல்லவே இல்ல நீ லவ்வ சொல்லி அதுக்கு அவ ஓத்துகிட்டு அப்பறம் தானே இதெல்லாம் அதுகுள்ள ஏன்டா இப்படி பண்ண என்றான் நிஷாந்த்.

நான் தான் அவகிட்ட என் லவ்வ சொல்லிட்டேனே என்றதும் நிஷாந்த் டேய் நான் இவ்ளோ நேரம் இங்க தானே இருந்தேன் எப்படிடா.

மச்சான் நீ டாக்டர் கூப்பிட்டாருன்னு போனல அப்ப தான்.

உனக்கே இது ஓவரா இல்ல நான் ஒரு ஐஞ்சு நிமிஷம் தானடா போனேன் அதுகுள்ள லவ்வ சொல்லி அத ஓகே பண்ணி கிஸ் அடிக்குற லெவலுக்கு வந்துட்டா.

டேய் இரு மச்சான் நான் லவ்வ சொன்னேன் கிஸ் பண்ணேன் இதெல்லாம் கரெக்ட் ஆனா அவ ஓகே மட்டும் சொல்லல என்றான் லக்ஷண்.

நிஷாந்த் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான் கடவுளே இவன் பண்றத பார்த்த இன்னும் ஆறு மாசத்தில இது தான் மச்சான் என் பையன்னு காட்டுவான் போலையே. என் லவ்லயும் ஏதாவது மீராகல் பண்ணி எங்கள சேர்த்து வச்சருங்க ப்ளீஸ் என்று கடவுளிடம் புலம்பிகொண்டும் வேண்டி கொண்டும் இருந்தான்.

ஏய் உன் லவ்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது டாக்டர் என்ன சொன்னார் என்றதும் நிஷாந்த், இருடா அத மறந்து போயிட்டேன் பாரு இன்னிக்கு அவளுக்கு இருக்கு என்று கறுவி கொண்ட சென்றான்.

இப்ப தான நல்லா பேசிட்டு இருந்தான் அதுகுள்ள என்ன ஆச்சு டாக்டர் என்ன சொன்னாருன்னு தெரியலையே இவன் வேற கோபமா போறான் என்று நிபுநிகா அட்மிட் ஆகி இருக்கும் அறைக்கு சென்றான் லக்ஷண்.

அங்கே நிஷாந்தின் அர்ச்சனைகளை வாங்கி கொண்டு இருப்பவளை பார்க்க பாவமாகி போனது லக்ஷணுக்கு.

நிஷாந்த் அவ ஏற்கனவே உடம்பு சரியில்லாம தான் இங்க வந்து படுத்து இருக்கா நீ வேற ஏன்டா அவள இப்படி திட்டிக்கிட்டு இருக்க என்றான் லக்ஷண்.

அவளை முறைத்து விட்டு லக்ஷணிடம் எங்கிட்ட டாக்டர் என்ன சொன்னாருன்னு கேட்டியே இப்ப நான் இவள எப்படியெல்லாம் திட்டிட்டு இருக்கேனோ அப்படியெல்லாம் கூப்பிட்டு வச்சு துட்டி தீர்த்துட்டார்.

ஏன் அப்படி என்ன பிரச்சினை இவளுக்கு என்றான் லக்ஷண்.

ஏன்டா நீ வேற இதோ இருக்கா பாரு இந்த மகாராணி காலையில இருந்து எதுவுமே சாப்பிடாம இருந்து இருக்காங்க அதானால தான் மயக்கம். இவளுக்கு என்ன பிரச்சினையோன்னு பதறி போய் உள்ள டாக்டர் கிட்ட போனா அவரோ ஏம்பா உன் பொண்டாட்டிக்கு சாப்பிட எதுவும் குடுக்காம கொடுமை படுத்திட்டு இங்க வந்து நடிக்கிறீயான்னு கேக்குறாரு.

நான், சர் அவ என் ஆபீஸ் ஸ்டாப் நைட் ஹவர்ஸ்ல வோர்க் பண்ணிட்டு இருக்கும் போது மயங்கி விழுந்தவளை இரங்க கூட்டிட்டு வந்தேன்னு சொன்னா அப்ப நீங்க உங்க ஸ்டாப் க்கு சாப்பிட்ட கூட விடாம வோர்க் பிரஷர் ஓவரா குடுக்கற்துனால மயங்கி விழுந்தாங்களான்னு கேக்குறாருடா என்றதும் லக்ஷணுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இவனிடம் நடந்ததை சொல்லி விட்டு, லக்ஷண் ஒரு பிரட் பாக்கெட்டும் ஒரு டம்ளர் பால் வாங்கிட்டு வா மேடம் சாப்பிடணும் என்றான்.

சரி நான் வாங்கிட்டு வரேன் ஆனா அவள மறுபடியும் திட்டாம இருப்பேன்னு சொல்லு இப்ப தான் நான் போவேன் இல்ல நீ போய் வாங்கிட்டு வா நான் வெயிட் பண்றேன் என்றான் லக்ஷண்.

நான் திட்ட மாட்டேன் நீயே வாங்கிட்டு வா என்றான் நிஷாந்த்.

வெளியே சென்ற லஷணோ சம்யுக்தாவை தேட ஆரம்பித்தான். என் டார்லிங் எங்க போனான்னு தெரியலையே என்று நாலாபுறமும் பார்வையை சூழல விட்டான். கான்டீன் பக்கம் அவள் அமர்ந்திருந்தது தெரிய அங்கே சென்றான்.

டார்லிங் என்றதும் அலறியடித்து கொண்டு எழுந்தாள் சம்யுக்தா.

ஏய் என்ன ஆச்சுடா ஏன் இப்படி அலறா அக்ஷுவலி நான் உன் கிட்ட சாரி கேட்க தீன் வந்தேன் உன் அனுமதி இல்லாம நான் அப்படி நடந்துகிட்டது தப்பு, என்ன மன்னிச்சு என் லவ்ல ஏத்துக்கோ சம்மு என்றான் லக்ஷண்.

அவள் அப்பொழுதும் அமைதியாக இருப்பதை பார்த்தவன் சம்மு உனக்கு என் மேல கோவம் இருக்கும் அதுக்கீக பேசாம இருக்காத வேணும்ன்னா நான் பண்ண தப்புக்கு என்ன உன் கோபம் போற வனரக்கும் அடிச்சிக்கோ என்றது தான் தாமதம் அவன் கண்ணத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது.

ஏன்டீ ஒரு பேச்சுக்கு அடிச்சிக்கோன்னு சொன்ன உடனே அடிச்சிட்ட சரி அடிக்கற்த கொஞ்சம் ஸ்லோவா அடிச்சி இருக்கலாம்ல வலிக்கிதுடீ என்றதும் இலவச இணைப்பாக இவன் அறை வாங்கிய இடத்தில் ஒரு முத்தமும் கிடைத்தது.

பேதை அவள் உதடுப்பட்டதும் அதுவரை வலித்து கொண்டு இருந்த இடமும் சுகமாய் இருந்தது. அவளை பார்த்தவன் டார்லிங் மீ பாவம் ஒரே நாளில் இத்தனை ஸாக் குடுத்தா நான் அவ்வளவு தான் என்றதும் அவள் தலை நாணத்தால் குனிந்து இருந்தது அவள் அருகில் சென்று சம்மு நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல என்ன உனக்கு பிடிச்சிருக்கா என்றான் லக்ஷண்.

அவளோ ரொம்ப பிடிச்சிருக்கு என்று அவன் நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள்.

லக்ஷணுக்கு அவன் வாழ்வில் இழந்து விட்ட அனைத்தும் கிடைத்தது போல சுகமாய் உணர்ந்தான்.

சிறது நேரம் கழித்து ஐய்யயோ என்று கத்தினான் லக்ஷண்.

லக்ஷண் என்ன ஆச்சு ஏதாவது பிரச்சினையா உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி கத்தினீங்க என்றாள் சம்யுக்தா.

இரு டார்லிங் வரேன்னு கான்டீன் சென்றவன் நிஷாந்த் சொன்னதை வாங்கி வந்தான்.

அதை பார்த்ததும் யாருக்கு இது என்றாள்.

எல்லாம் உன் பிரண்ட்க்கு தான் அவ சாப்பிடாம தான் மயங்கி இருக்கா என்று சொல்லும் போதே நிஷாந்திடமிருந்து அழைப்பு வர இரு சம்மு நான் போய் குடுத்திட்டு வரேன் என்றான்.

லக்ஷண் நான் சொல்லறத ஒரு நிமிடம் கேளுங்க அது வந்து நிபுக்கு என்று ஆரம்பித்தவளை இரு சம்மு நான் உன்கிட்ட வந்து பேசறேன் எனறு ஓட்டமும் நடையுமாக சென்று விட்டான்.

சம்யுக்தா சொல்ல வந்ததை கேட்டு இருந்தாள் லக்ஷண் நிபுநிகாவிடம் இருந்து தப்பித்து இருப்பான்.

அது ஏன் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

                       தொடரும்......
 1. எல்லாம் அவனாக

சம்யுக்தா சொன்னதை காதில் வாங்காமல் நிபுவின் அறைக்கு வந்தான் லக்ஷண்.

உள்ளே சென்றவன் நிஷாந்த் எங்க எனறான், அவர் டாக்டர் கிட்ட எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கனு கேக்க போயிருக்கார் அண்ணா என்றாள்.

அண்ணா என்றழைத்ததும் அகம் குளிர்ந்தவன் தன் கையில் இருந்த பிரட்டயும் பாலையும் அவளிடம் நீட்டினான்.

யாருக்கு அண்ணா இது என்றாள் நிபு.

ஏம்மா உனக்கு முன்னாடி காமிச்சி இந்தான்னு சொன்னா உனக்கு தானே என்னவோ பச்ச புள்ள மாதிரி கேக்குற அது இல்லாம நீ தான் காலையில் இருந்து சாப்பிடாம இருக்க அதனால தான் வாங்கிட்டு வந்தேன் என்றான் லக்ஷண்.

தயவு செஞ்சி இதெல்லாம் அந்த பக்கம் எடுத்திட்டு போங்க எனக்கு இத கண்டாலே பிடிக்காது.

அது எப்புடி பிடிக்காம போகும் காலம் காலமா உடம்பு சரி இல்லாதவங்க இத தானே சாப்பிடுவாங்க என்றான்.

உடம்பு சரியில்லை என்ற வார்த்தையை கேட்ட உடனே கோபம் தலைக்கு ஏறுயது நிபுவிற்கு.

அண்ணா நான் ஒண்ணும் படுத்த படுக்கையா இல்ல நல்லா குத்து கல்லு மாதிரி தானே இருக்கேன்.

சொன்னா கேளு நிபுநிகா இப்ப இத கொஞ்சமா சாப்பிடு விடிஞ்சதும் உனக்கு பிடிச்சதை சாப்பிடலாம் என்று பிரட்டை பாலில் தோய்த்து அவளிடம் நீட்ட அவளோ ஐய்யோ என்ன கொடுமபடுத்துறானே காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று ஹாஸ்பிடலே அதிரும்படி கத்தி கொண்டு இருந்தாள்.

ஏய் லூசு எதுக்கு இப்படி கத்திகிட்டு இருக்க யார் உன்ன கொடுமபடுதறது நிஷாந்தா அவன் வந்தவுடனே நான் கேக்குறேன் கத்தாம இரு என்றான்.

நிஷாந்த் பத்தி தப்பா சொல்லாத நீ தான் என்ன கொடும பண்ற அவர் பாவம்.

ஏம்மா அவ்வளவு நேரம் உன்ன காதுல இருந்து இரத்தம் வர அளவுக்கு திட்டினவன் பாவம் உனக்கு பசிக்குமேன்னு பிரட் வாங்கிட்டு வந்தா என்ன கொடுமகாரன்னு சொல்லுவீயா.

ஆமா சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்த பிரட்டயும் பாலையும் கண்டாலே அலர்ஜி அதை எடுதிட்டு வந்து சாப்பிட சொன்னா என்ன அர்த்தம்.

உன்ன போனா போகுதுன்ன விட்டா ரொம்ப பேசற இரு என்று அவள பிடிக்க ஓடினான். மவளே காலையில இருந்து எதுவும் சாப்பிடல இப்ப நீ வாய தொறக்கல அவ்வளவு தான் என்று அவள் வாயருகில் பிரட்டை எடுத்து கொண்டு போனான்.

வாயதிற நிபுநிகா என்றான் திறக்காமல் இருந்தவள் தலையில் ஒரு குட்டு வைத்தான் ஆ என வலியில் கத்தியவளின் வாயில் உணவை திணித்தான் அவள் வாயில் அதன் சுவை பட்டவுடன் என்னவோ போல் ஆகி விட்டது நிபுநிகாவிற்கு.

வாஷ் ரூம் சென்றவள் வாந்தி எடுத்து விட்டு தான் வந்தாள்.

என்ன மேடம் வாந்தி எடுத்தீங்களா இந்தாங்க இன்னொரு வாய் சாப்பிட்டா சரியா போய்டும் என்றான் லக்ஷண்…

லக்ஷண் வேணாம்டா சொன்னா கேளு என்றாள்.

அடிங் இப்ப தான் அண்ணான்னு சொன்ன அதுகுள்ள பேர் சொல்லி கூப்படடுற இதுக்காகவே உனக்கு இத குடுத்திட்டு தான் போவேன் என்றவனின் தலைமுடியை பிடித்து உலுக்கி கொண்டு இருந்தாள் நிபுநிகா.

ஏய் லூசு என்ன பண்ற எனும் போதே அவன் வாயில் ஒரு குத்து ஏய் என்று கையை நீட்டியவன் அலற ஆரம்பித்தான் ஏனெனில் அவள் தான் கையை பிடித்து கடித்து கொண்டு இருந்தாலே.

ஏய் மென்டல் நீ சாப்பிடவே வேணாம் ஆள விடு என்றதும் தான் அவள் அடங்கினாள்.

லக்ஷண் வெளியே வருவதற்கும் நிஷாந்த் வருவதற்கும் சரியாக இருந்தது.

ஏய் லக்ஷண் என்னடா ஆச்சு ஏன் இப்படி தலையெல்லீம் கலைஞ்சி இருக்கு அங்கங்க அடி வேறபட்டு இருக்கு எங்கயாவது விழுந்தியா இல்ல யார் கூடயாவது சண்ட போட்டியா என்னடா நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ எதுவும் பேசாம இருக்க.

மச்சான் என்று கதறியவனை பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை நிஷாந்திற்கு.

லக்ஷணே தொடர்ந்தான், மச்சான் அந்த நிபுநிகா உனக்கு வேணாம்டா பொண்ணா அவ சாப்பிட சொன்னதுக்கு பேய் மாதிரி அடிக்கிறாடா பொண்ணுன்னு பார்த்தேன் அதுவும் இல்லாம நீ வேற அவள லவ் பண்ணிட்டு இருக்கியா அதானால தான் எதுவும் பண்ணாமா சும்மா வந்துதிட்டேன் இல்ல எனக்கு இருக்க கோவத்துல ஓங்கி ஒரு அறை விட்டு இருப்பேன் என்ன அண்ணாணு கூப்பிட்டா அதுவும் ஒரு காரணம் அடிக்காம விட்டத்திற்கு என்று சொல்லி கொண்டு இருக்கும் போது சம்யுக்தா வந்தாள்.

லக்ஷணுக்கு தான் தர்ம சங்கடமாகி போனது.

ஏன்டீ உன்கிட்ட லவ்வ சொன்னதுக்கு இப்படியா பழி வாங்குவ என்ன பாத்தா பாவமா இல்லயா உனக்கு. என்னா அடி இன்னும் வாய் வலிக்குதுடீ ஏன் அவ அப்படி நடந்துக்கிறா ஏதாவது கோளாறா என்றான்.

அதை கேட்டு நிஷாந்த், சம்யுக்தா இருவருமே லக்ஷணை முறைத்தனர். ஏன்டா எனக்கு தெரிஞ்சி நீ ஏதோ ஏடாகூடாம பேசி தான் அடி வாங்கிட்டு வந்திருக்கீயோன்னு தோணுது.

ஆமாடா என்னையே குத்தம் சொல்லு நான் அவள சாப்பிட தான்டா சொன்னேன் அதுக்கு போய் அந்த மென்டல் அந்த அடி அடிக்கிறாடா உன் உயிர் நண்பன அடிச்சி இருக்கா நீ ஏன் இப்படி பண்ணேன்னு ஒரு வார்த்தையாவது கேட்டீயா பாவி, துரோகி நீ யெல்லாம் என்று புலம்பி கொண்டு இருந்தவனை லக்ஷண் ஒரு நிமிடம் அமைதியா இரு.

சம்யுக்தா நீ சொல்லு அவ ஏன் இப்பிடி ரியாக்ட் பண்றா அவளுக்கு ஏதாவது ப்ராப்ளமா என்றான் நிஷாந்த்.

அய்யோ சர் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவளுக்கு அந்த பிரட்டை கண்டாலே பிடிக்காது நிபு அம்மாக்கு சமையல் அவ்வளவா வராது அவ அப்பா தான் அவங்க வீட்ல சமைப்பாரு இவ சின்ன வயசா இருக்கும் போது லோடு எடுக்குற விசியமா அடிக்கடி வெளியூர் போய்ட்டு வருவார் அப்ப எல்லாம் அவ அம்மா இந்த பிரட்டையும் பாலையும் குடுத்தே பாதி நாட்கள் இவள சாப்பிட வச்சி இருக்காங்க.

ஏன் சம்மு பாம்புக்கு மூட்டையும் பாலையும் குடுக்கிறா மாதிரி நிபுவ பிரட்டையும் பாலையும் குடுத்தே வளர்த்து இருக்காங்க போல எனறான் லக்ஷண்.

லக்ஷண் கேட்ட கேள்விக்கு இவள் முறைப்பை பரிசாக தந்துவிட்டு தொடர்ந்தாள்

லக்ஷண் மைன்ட் வாயிஸ் இவ என்ன இந்த முறை முறைக்குறா கண்ணு மூழி வெளிய வந்துடும் போலையே லக்ஷண் இதுக்கு மேல பேசின உன் லவ் இன்னைக்கே சமாதி தான் என்று தனக்குதானே பேசி கொண்டு இருந்தான். சம்யுக்தா நிபுநிகாவை பற்றி சொல்லி கொண்டு இருந்தாள்.

இவளும் அம்மாவுக்காக அதையே சாப்பிட்டா ஒரு கட்டத்தில் அது அவளுக்கு எரிச்சலை தர ஆரம்பித்தது. நாளடைவில அவளுக்கு அந்த பேர கேட்டா கூட கோபம் வர அளவுக்கு புள்ளைக்கு அந்த பிரட்டையே குடுத்து வச்சி இருக்காங்க.

ஐந்தாவது படிக்கும் போது இவளுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சி அப்ப அவங்க அப்பா டிபன் பண்ணிட்டு வரத்துக்குள்ள இவங்க இத கம்பல் பண்ணி சாப்பிட சொல்லி இருக்காங்க அப்ப அவ அம்மானு கூட பாக்காம அடி பின்னிடா இப்ப லக்ஷண அடிச்சா மாதிரி.

இதை கேட்டவுடன் லக்ஷண் சம்யுக்தாவை முறைத்தான். ஏன்டீ எக்ஸம்பில்க்கு நான் தான் கிடைச்சேனா உனக்கு இருக்கு நீ நல்லா அனுப்பவிப்ப எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் அப்ப இருக்கு இது என் சாபம் என்றான்.

டேய் உன் சாபத்தை அப்பறம் பொறுமையா கண்டிநியு பண்ணு சம்யுக்தா அப்பறம் என்ன ஆச்சு என்றான் நிஷாந்த்.

அவ அவங்க அம்மாவ அடிச்சிட்டு அப்படியே மயங்கி விழுந்துட்டா. பயந்து போய் அவள டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறியிருக்காங்க அவர் மனசாலையும் மென்டலி ரொம்ப டிஸ்டர்பா இருந்து இருக்காங்க பிளஸ் இனிமே உணவு அவங்களுக்கு பிடிச்சா மாதிரி குடுங்க நீங்க அவங்களுக்கு புடிச்சா மாதிரி கொஞ்சம் சமையல் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதுல இருந்து அவ என்ன கேக்குறாளோ அத எப்படியாவது செஞ்சி குடுத்துவாங்க அவ சாப்பாடு வேணாம்னு சொன்னா கூட கம்பல் பண்ணி எதையும் குடுக்க மாட்டாங்க.

சோத்துக்கு இவ்வளவு அக்கபோறா நிஷாந்த் பாவம்டா நீ சீக்கிரம் அவளுக்கு புடிச்சதை நீயும் அம்மாவும் கத்துகோங்க என்றான் லக்ஷண்.

அனைத்தையும் கேட்டவன் அவள எப்படி சாப்பிட வைக்கற்துன்னு எனக்கு தெரியும் என்று உள்ளே சென்றான் நிஷாந்த்.

டேய் வேணாம் அவ உன்னையும் ஏதாவது பண்ணப்போறா இப்ப தானே சம்மு விவரமா சொன்னா டேய் வாடா போய்டலாம்.

லக்ஷண் இரு வரேன் அவள சாப்பிட வச்சிட்டு போலாம் என்று சொல்லி விட்டு அவளருகில் சென்றான் நிஷாந்த்.

நிபுநிகா என்ற அழைப்பில் கண் விழித்தவள் ஏன் சாப்பிடாம உன் உடம்ப கெடுத்துக்கிற சாப்பிட சொன்ன லக்ஷண அடிச்சிருக்க என்ன ஆச்சு எனறான்.

இல்ல நிஷாந்த், நிஷாந்த்னு கூப்பிடவா என கேட்டாள் அவன் சரி என தலை அசைத்ததும் எனக்கு அத கண்டாலே பிடிக்காது அப்பறம் எப்படி சாப்பிட முடியும்.

நிபுநிகா இப்ப இந்த டைம்ல இது தான் கிடைக்கும் அதனால தான் லக்ஷண் உனக்கு வாங்கிட்டு வந்தான் சரி வாய திற நான் தரேன் என்றான்.

நிஷாந்த் தான் சொல்றேன்ல எனக்கு வேண்டாம் என கத்தினாள் அவளருகில் அமர்ந்த நிஷாந்த் நிபுநிகாவை பக்கத்தில் இழுத்து கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்தான்.

இதை சற்றும் எதிர் பார்க்காத நிபுநிகா மலங்க மலங்க விழித்தாள்.

நிபுநிகா என்ன பாரு நீ சாப்பிட்டு நல்லா இருந்தா தானே நான் நல்லா இருக்க முடியும் நான் நல்லா இல்லன்னா உனக்கு ஓகேவா என்றான் நிஷாந்த்.

மறுப்பாக தலையசைத்தவள் அவனையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

நிபுநிகா நீ என்னை என் கண்ண தவிர வேறு எங்கயும் பார்க்க கூடாது சரியா.

சரி என சொல்ல வந்தவளுக்கு வேறும் காற்று மட்டும் வரவே தலையை மட்டும் சரி என அசைத்தாள்.

தட்ஸ் குட் என் கண்ணையே பாரு ஆ சொல்லு எனறான் நிஷாந்த்.

ரோபோட் போல அவன் சொல்வதை கேட்டாள் அவன் அப்படியே அவளுக்கு பிரட்டையும் பாலையும் குடுத்து முடித்திருந்தான்

இதை பார்த்த லக்ஷணுக்கும் சம்யுக்தாவிற்கும் ஒன்றுமே விளங்கவில்லை சற்று முன்னர் தன்னை இத குடுத்ததற்கு தானே அடித்தாள் இப்ப பச்சபுள்ள மாதிரி குடுக்கறத வாங்கி சாப்பிடறா என்று நினைத்தவன் அதை உளறியும் விட்டான் லக்ஷண்.

லக்ஷண் சொன்னதை கேட்டு சுய உணர்வுக்கு வந்தவள் லக்ஷண் அண்ணா ஏதாவது சொன்னீங்களா என்றாள் நிபு.

ஆமா சுரைக்காய்க்கு உப்பில்லன்னு நீயும் வரியா போய் போட்டுட்டு வருவோம்.

ஏம்மா நானும் இதே பிரட்டையும் பாலையும் தான் குடுத்தேன் என்ன அந்த அடி அடிச்ச ஆனா இவன் குடுத்தா மட்டும் வாங்கி சாப்பிட்டு முடிக்கிற என்றான்.

என்னது நான் சாப்பிட்டேனா எனக்கு தான் இத கண்டாலே பிடிக்காதே அப்பறம் எப்படி இது நடந்தது ஒண்ணுமே புரியலையே என்றாள் நிபுநிகா.

ஏம்மா மெமரி லாஸ் வேறாயா கொடுமடா அவன் குடுக்கும் போது நல்லா வாய உலகமே போற அளவுக்கு தொறந்த இப்ப என்னவோ ஒண்ணுமே நடக்காத மாதிரி கேக்குற எனறான் லக்ஷண்.

அப்பொழுது தான் நிபுநிகாவிற்கு நிஷாந்த் முத்தம் கொடுத்ததும் இவள் திகைத்திருந்ததும் நினைவு வந்தது.

என்னம்மா எல்லாம் ஞாபகம் வருது போலையே என்று அவளின் யோசனையை கலைத்தான் லக்ஷண்.

ஆமா வந்திருச்சு என்று நிஷாந்திடம் திரும்பினால் அவள் பார்த்த பார்வையில் ஆயிரம் மின்னல் ஒன்று சேர்ந்து வந்த சக்தி இருந்தது நிஷாந்த் என்ன வேல இது யார கேட்டு எனக்கு இத சாப்பிட குடுத்தீங்க என்றதும் லக்ஷண் ஏன் நிபு அப்ப அவன் முத்தம் குடுத்தது பிரச்சனை இல்ல அப்படி தான என்றதும் லக்ஷணையும் முறைத்தாள்.

எதுக்கு நீ இப்ப பத்திரகாளி மாதிரி முறைக்குற உண்மைய சொன்னா முறைப்பியா நல்லா இருக்கே இதுவும் என்றான் லக்ஷண்.

நிஷாந்திடம் திரும்பியவள் உங்கள நான் ரொம்ப மரியாதையான இடத்துல வச்சி இருந்தேன் ஆனா நீங்க எனக்கு புடிக்காத விசயத்தை தேடி கண்டுபிடிச்சி பண்றீங்க நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன் உங்க இஷ்டத்துக்கு என்ன ஆட்டி வைக்கிறீங்க நான் என்ன கைப்பாவையா நீங்க சொல்லறா மாதிரியெல்லாம் கேட்டு நடக்க உங்க இஷ்டத்துக்கு கிஸ் பண்றீங்க உங்க இஷ்டத்துக்கு சாப்பிட கொடுக்கிறீங்க எல்லாம் உங்க இஷ்டத்துக்கு தான் நடக்கனுமா எனக்குன்னு ஆசைகள் இருக்காதா என்று கத்தி விட்டு அழ தொடங்கினாள் நிபுநிகா.

அனைத்தையும் பொறுமையாக கேட்டவன் அவள் அழ தொடங்கியதும் சூரியனை கண்ட பனி போல் உருக ஆரம்பித்தான் நிஷாந்த், லக்ஷணிடம் திரும்பி சம்யுக்தாவை கூட்டி கொண்டு வெளியே செல்லுமாறு செய்கையில் சொல்லிவிட்டு நிபுநிகாவின் அருகில் வந்தான் நிஷாந்த்.

ஆனால் அவளை அழைக்கும் முன்பு மானசீகமாய் மன்னிப்பு வேண்டியவன். நிபுநிகா என்று அழைத்தான்.

என்ன என்று நிமிர்தவளை அவளின் கையை மடக்கி தன்னருகில் வருமாறு செய்தான் இழுத்ததும் அவன் நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள் தனக்கான இடத்தை இடைந்ததை போல உணர்ந்தாள் தாயின் அருகாமையை உணர்ந்தாள் தந்தையின் பாதுகாப்பை உணர்ந்தாள் நான் ஏன் இந்த மாதிரி யோசிக்கிறேன் என்று அவனை நிமிர்ந்து பாத்து கண்களை நோக்கியவளுக்கு காதல் மட்டுமே தெரிந்தது. இருப்பினும் சுதாரித்தவள் அவனிடமிருந்து விலக முற்பட்டாள் அது முடிந்தால் தானே அவனின் இரும்பு பிடியை அவளால் அசைக்க கூட முடியவில்லை இவளின் மெல்லிடை வலிக்க ஆரம்பித்தது அந்த வலியை உணர்ந்தானோ என்னவோ அவனது பிடியை தளர்த்தினான்.

பிடியை தளர்த்தியதும் அவனிடமிருந்து விலகி சுவற்றை ஒட்டி நின்றாள்.

அதை கண்டு ஒரு விஷம சிரிப்பை உதிர்த்தவன் இவளின் அருகே மிக அருகே சென்றவன் அவளை நகர விடாமல் சுவற்றின் இருபுறமும் கைகளை கொண்டு வழிமறித்தான். அவள் குண்டு விழிகளை உருட்டி மலங்க மலங்க விழித்தவளை பார்த்தவன் ஒரு மந்தாகாச புன்னகையை சிந்தினான்.

நிஷாந்த் என்ன பண்றீங்க ஏன் இப்படி வந்து நிக்கறீங்க எனக்கு வழி விடுங்க நான் போகணும் என்றாள் நிபு.

வழிவிடுறேன் ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்றதை கேளு இங்க எல்லாம் என் இஷ்டபடி தான் நடக்கும் உனக்கு பிடிச்சாலும் சரி பிடிக்கலன்னாலும் சரி என்ன புரியுதா என்றான்.

ஏதோ பேச வாயெடுத்தவளின் வார்த்தைகள் வெளியே வராமல் இருக்க தன் இதழை கொண்டு அவள் இதழை மூடினான் நிஷாந்த்.

                        தொடரும்...

17.எல்லாம் அவனாக

என்னை அடிக்காமல் அழ வைப்பது நீ மட்டும்தான்!!!

என்னை காயப்படுத்தாமல் வலிகள் தருவது நீ மட்டும்தான்!!!

என்னை வெறுக்காமல் வேதனை படுத்துவது நீ மட்டும்தான்!!!

என்னை சிதைக்காமல் சித்திரவதை செய்வது நீ மட்டும்தான்!!!

நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்னோடு இருப்பது நீ மட்டும்தான்!!!

காதல் கொண்ட மனதால் அவனின் இதழ் மூலம் அவளுக்கு உணர செய்வதற்கு போராடி கொண்டு இருந்தான் நிஷாந்த். ஆனால் பேதையவள் நெஞ்சிமோ தீயாய் கொதித்து கொண்டு இருந்தது என்ன தான் தனக்கு விருப்பமான ஆண்மகன் என்றாலும் தன்னை தன் அனுமதி இன்றி தொட முடிகிறது எப்படி இவ்வாறெல்லாம் செய்ய துணிக்கின்றான் என்று அனலாய் கொதித்தவள் தன் பலங்கொண்டு அவனை தள்ளினாள்.

அவளை விட்டு நகர்ந்தவன் ஒரு மந்தாகாச புன்னகையை சிந்தினான் அவனுக்கு அவனின் காதலை முத்ததின் மூலமாக உணர்ந்திருப்பாள் என்று எண்ணி கொண்டு இருந்தான் ஆனால் நிபுநிகாவின் மனதை அவன் அரிய வாய்ப்பில்லை பெண்ணின் மனதை அறிவது அவ்வளவு எளிதல்லவே.

சிரித்து கொண்டு இருந்தவனின் அருகில் சென்று நின்றாள் அவன் இவளையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான் அவளும் தான் ஆனால் பார்வைகள் வேறு வேறு அர்த்தங்கள் பரிமாறி கொண்டன.காதல் வந்தால் சுற்றிலும் நடப்பது தனக்கு சாதகமாக மட்டுமே இருக்கிறது என்ற எண்ணம் வந்துவிடுகிறது அந்த நிலையில் தான் நிஷாந்த் இருந்தான்.

காதலோடு பார்த்து கொண்டு இருந்தவனின் கன்னத்தில் இடியென விழுந்தது அறை.

அவன் சுதாரித்து யார் என்று பார்ப்பதற்குள் மற்றொரு கன்னத்திலும் ஒரு அடி விழுந்தது. கன்னத்தில் கை வைத்து கொண்டு எதிரில் இருப்பவரை பார்த்தால் பத்திரகாளியாய் நின்றிருந்தாள் நிபுநிகா.

ஹவ் டேர் யூ நிஷாந்த் என்ன எப்படி என் அனுமதி இல்லாமல் தொடலாம் இவ்வளவு பெரிய போஷிஷன்ல இருக்கீங்க சக்சஸ்புல் பிசினஸ் மேன் ஆனா கொஞ்சம் கூட காமன்சென்ஸ் இல்ல ஒரு பொண்ண அவ அனுமதி இல்லாம தொட அவ புருஷனுக்கே உரிமை இல்லேன்னும் போது நீங்க எப்படி இந்த மாதிரி பண்ணலாம் பொண்ணுங்கன்னா உங்களுக்கெல்லாம் அவ்வளவு கேவலமா போச்சில அந்த மாதிரி சொசைடில தானே நாங்க வாழ்ந்திட்டு இருக்கோம் சின்ன கொழந்தைகள கூட விட்டு வைக்கிறது இல்லையே தப்பு பண்ணா தண்டனை கிடைக்கும் அதுவும் உயிர் இருக்க வரைக்கும் பிணமா வாழறா மாதிரின்னு இருந்தா தான் உங்கள மாதிரி ஆம்பளைங்க திருந்துவாங்க.ஆனா உங்கள மட்டும் குத்தம் சொல்லி பிரயோஜனம் இல்ல சின்ன வாயசுலேயே ஒருத்த தப்பா நடக்கிறான்னு சொன்ன பாதி பேரண்ட்ஸ் அவங்க சொல்ல வரர்த்த கேட்டா பிரச்சனையே இல்லையே பொண்ணுங்கன்னா ஆம்பளைக்கு அடங்கி போனுன்னு எழுதப்படாத விதியாய் இருக்கு இந்த நாட்ல கருமம் சட்டத்த மாத்த யாருக்கும் தைரியமில்லை சட்டத்தை மீறீனா மட்டும் தண்டனையாம் ச்சே.

பேசி கொண்டிருந்தவளை இடைமறித்தான் நிஷாந்த். ஸ்டாப் இட் நிபுநிகா என்ன பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க ஐயம் நாட் எ ரோட் செயிடு ரவுடி நான் உன்ன லவ் பண்றேன் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன் உன் கண்ணுலேயும் நான் எனக்கான காதல பார்த்தேன் அதனால தான் நான் அந்த மாதிரி நடந்துக்கிட்டேன் போற வர பொண்ணுங்க கிட்ட எல்லாம் தப்பா நடந்துக்கிற ஆள் நான் இல்ல உன்ன பார்த்த அன்னைக்கே என் மனசுல எனக்கானவ நீ தான்னு முடிவு பண்ணிட்டேன் உன்கிட்ட ஒரு நாள் ரோட்ல சண்டை போட்டேன் ஞாபகம் இருக்கா அன்னைக்கு உன்கிட்ட லவ் சொல்ல தான்டீ வந்தேன் நீ தான் தேவை இல்லாம என்னென்வோ பேசி பிரச்சனை பண்ண உன்கிட்ட லவ்வ சொல்லும் போது இப்படி இருக்கனும் அப்படி இருக்கன்னு எவ்வளவோ கற்பனை பண்ணி வச்சு இருந்தேன்டீ ஆனா நீ இந்த ஒரு சுசிவேஷன்ல சொல்ல வச்சிடியே ச்சே என்றான் நிஷாந்த்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டவள் நீ என்ன லவ் பண்றேன்னு சொன்னா நான் உடனே உங்கிட்ட வா நிஷாந்த் நாம கல்யாணம் பண்ணி புள்ள குட்டியெல்லாம் பெத்துக்கலாம்ன்னு சொல்லனுமா இப்ப சொல்றேன் இந்த உலகத்துல உன்ன தவிர வேற யார வேணும்ன்னாலும் கல்யாணம் பண்ணிப்பேன் உன்ன மட்டும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் என்றாள் நிபுநிகா.

(இது எ‌ன்ன சண்டை பெரிசாகிட்டே போகுது எப்ப சமாதானம் ஆவங்கன்னு தெரியலையே)

அப்படியா மேடம் நீ என்ன தான் கல்யாணம் பண்ணிப்ப நீயே வந்து இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம்ன்னு சொல்ல வெக்குறேன் பாரு என்றான்.

அது இந்த ஜென்மத்தில நடக்காது உன்னால முடிஞ்சத பாத்துக்கோ என்றாள் நிபு.

செலன்ஞ்ஜா என்றான் நிஷாந்த் செலன்ஞ் ஆக்ஸேப்ட் பண்ணிக்கிறேன் எனறாள் நிபுநிகா.

அந்த சமயம் லக்ஷணும் சம்யுக்தாவும் உள்ளே வர அவர்களின் சண்டை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைத்தார்கள்.

என்ன மச்சான் தங்கச்சிய ஒருவழியா சமாதானம் பண்ணிட்ட போல ரொம்ப அமைதியா இருக்கா.

நிஷாந்த் மைன்ட் வாயிஸ் அடபாவி கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி வந்திருந்தன்னா இவ எவ்வளவு பெரிய பத்ரகாளின்னு தெரிஞ்சி இருக்கும் என்று நினைத்தவன் அவளை ஓர கண்ணால் பார்த்தப்படி ஆமா ஆமா ரொம்ப அமைதியா தான் இருக்கா என்றான்.

சரி மச்சான் டைம் ஆச்சி இவங்களை வீட்டில விட்டுட்டு நான் வரேன் நீ வீட்டுக்கு போ என்றான் லக்ஷண்.

இல்ல நான் வீட்டுக்கு போல நேரா ஆபீஸ் போய்ட்டு இந்த மேடம் வச்ச பென்டிங் வொர்க்க முடிச்சிட்டு வீட்டுக்கு போய்கிறேன் என்றான் நிஷாந்த்.

சரிடா வாங்க போகலாம் என்று சொலெலி விட்டு சம்யுக்தாவை அழைத்து கொண்டு சென்று விட்டான் லக்ஷண்…

நிஷாந்த்தை முறைத்தப்படியே நகர்ந்தவள் ஒரு நிமிஷம் என்ற நிஷாந்தின் குரல் கேட்டு நினறாள்.

இங்க நமக்குள்ள நடந்த கன்வர்ஷேஷன் உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரிஞ்சி இருக்கனும் நீ யார்கிட்டயும் ஷேர் பண்ண கூடாது சம்யுக்தா கிட்ட கூட அதே மாதிரி நானும் இருப்பேன் நமக்குள்ள இருக்க இந்த செலன்ஞ் விசியம் நமக்குள்ள மட்டும் தான் இருக்கனும் என்ன புரியுதா என் செல்ல குட்டச்சி என்றான்( நம்ம நிபு அவன் உயரத்த கம்பேர் பண்ணா கொஞ்சம் கம்மி தான்).

டேய் என்ன குட்டச்சின்னு சொல்லாதடா நான் நார்மல் ஐயிட் தான் இன்னொரு தடவ என்ன இப்படி கூப்பிட்ட நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றாள் நிபுநிகா.

இப்படியே நாட்கள் கார சாரமாக சென்று கொண்டு இருக்க ஒரு நாள் நிபுநிகா நிஷாந்தின் அறைக்கு வந்தாள்.

மே ஐ கம் இன் சர் என்று அனுமதி கேட்டு நின்றிருந்தாள் அவனும் இவள் தான் வருகிறாள் என்று தெரிந்தும் தனது பி. ஏ மூலம் தான் பிசியாக இருப்பதாகவும் இப்பொழுது யாரையும் சந்திக்க முடியாது என்றும் சொல்ல சொன்னான் நிஷாந்த்.

பி. ஏ இதை கூறியவுடன் அங்கிருந்து நகர்வதற்கு முன்னாள் ஒரு முறைப்பை பரிசாக கொடுத்து விட்டு சென்றாள்.

சும்மா தானே இருக்கான் இந்த விஷயத்த சொல்லி அவன் ரியாக்ஷன பாக்கலாம்ன்னு பாத்தா பயபுள்ள காலைல இருந்து சிக்க மாட்டேன்றான்.இருக்கட்டும் வீட்டுக்கு போறத்துக்குள்ள அவன வெறுப்பேத்தி பாக்கனும் என்று நினைத்து கொண்டு இருந்தாள் நிபுநிகா.

என்றும் இல்லாமல் அன்று நிஷாந்த் சீக்கிரமே ஆபீஸ் விட்டு கிளம்பி விட்டான் இவளோ இவன் எதுக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்புறான் நம்ம இவனோட ரியாக்ஷன இன்னைக்கு பார்க்க முடியாது போலையே மாட்டாமையா போக போறான் பாத்துக்கலாம் என்று தனக்குதானே பேசி கொண்டு இருந்தாள் நிபுநிகா.

மாலை அந்தி சூரியன் மறையும் நேரம் இரவுக்கும் பகலுக்கும் நடுவில் அழகாய் இருந்தது வானம் தன்னுள் எத்தனை அழகினை கொண்டுள்ளது இந்த இயற்கை ஆனால் இயற்கை அன்னைக்கு கோபம் வந்தால் தாங்கி கொள்ள முடிவதில்லை என்று தன் அறையில் நின்று ரசித்து கொண்டு இருந்தவளுக்கு தீடீரென நிஷாந்த்தின் மதிமுகம் வந்து போயிற்று.

அடச்சே இவன் முகம் ஏன் என் மனசுல வந்து போகுது அவன வெறுப்பேத்தி பாக்கனும் னு நினைச்சிட்டு இருந்ததுனால தான் அவன் முகம் வந்தது அவ்வளவு தான் நிபுநிகா பீ கூல் என்று தனக்குள் சமாதானம் செய்து கொண்டாள் நிபுநிகா.

சிறிது நேரம் கழித்து அளவான ஓப்பனையில் தேவதையென இருந்தாள் நிபுநிகா.

நிபு ரெடியா மாப்பிள்ளை வீட்டார் எல்லாம் வந்துட்டாங்க என்று கேட்டு கொண்ட உள்ளே வந்தார் வாசுகி
(நிபுநிகாவை பெண் பார்க்க வந்துள்ளனர்).

அவளை கண்டு திருஷ்டி சுத்தியவர் இன்னைக்கு மாப்பிள்ளை பையன் உன்ன பாத்து மயங்கிட போறாறு பாரு என்றவுடன் நிபுநிகா வெட்கத்தில் சிவந்தாள்.

பெண்ணை கூட்டி கிட்டு வர சொன்னாங்க என்று சம்யுக்தா சொல்லவும் அடிமேல் அடி வைத்து அன்னமென நடந்து வருபவளை பாத்தவர்கள் மயங்கி விழாத குறை தான்.

மாப்பிள்ளைய கூட்டிட்டு ஒண்ணாவே வந்து இருக்கலாமே என்று நிபுநிகாவின் தந்தை மாப்பிள்ளையின் தாயை கேட்டார்.

அவனுக்கு ஏதோ முக்கியமான வேலையாம் அதனால நீங்க முன்னாடி போங்க நான் ஒரு அரை மணி நேரத்தில வந்துடுறேன்னு சொன்னான் எனறார் அவர்.

கூறி விட்டு தன் மகனுக்கு கால் செய்தவர் டேய் எங்கடா இருக்க உனக்காக தான் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க சீக்கிரம் வா என்று காலை கட் செய்து விட்டார்.

இதோ வந்துட்டானாம் என்று நிபுநிகா அப்பாவிற்கு சொல்லி விட்டு திரும்பியவர் அம்மா என்ற குரலை கேட்டு அனைவரும் சந்தோஷம் தொற்றி கொள்ள ஒருத்தருக்கு மட்டும் இந்த குரலை கேட்டதும் கிலி தொற்றி கொண்டது.

                    தொடரும்.....
 1. எல்லாம் அவனாக

அம்மா என்ற குரல் வந்த திசை நோக்கி திரும்பியவள் அப்படியே உறைந்து நின்றாள் நிபுநிகா மட்டுமல்ல சம்யுக்தா கூட தான்.

ஏன்னு கேக்குறீங்களா அங்க வந்தது நம்ம லக்ஷண் சுற்றும் முற்றும் பார்த்தான் சம்யுக்தா கண்ணில் படவும் அவளை பார்த்து கண்ணடித்தான் சம்யுக்தாவோ எரிமலையாய் கொதித்து கொண்டு இருந்தாள்.

நிபுநிகாவோ என்ன செய்வது தோழியின் வாழ்க்கை ஆயிற்றே அதுவும் தான் அண்ணணாக நினைப்பவன் இங்கு தன் வீட்டில் அதுவும் தன்னை பெண் பார்க்க வந்துள்ளானே இவனுக்கு எங்க போச்சி புத்தி பொண்ணு பார்க்க வான்னு கூப்பிட்ட இல்லமா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் அவள தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல தெரியாது என்ன மாதிரியான பையன் இவன் சம்யுக்தாதவ உருகி உருகி லவ் பண்ணான் நேத்து நைட் கூட அவ கிட்ட பேசிட்டு தானே வீட்டுக்கு போனான் அப்பறம் எப்படி இங்க வந்தான் என தனக்குள் பேசிக்கொண்டு இருந்தவளுக்கு தீடீரென நிஷாந்த்தின் நினைவு வந்தது இவன் எங்க போனான் எப்பவும் இந்த லூசுங்க ஒண்ணா தானே சுத்திகிட்டு இருக்கும் அவன் பிரண்ட் அதுவு‌ம் குளோஸ் பிரண்ட் வாழ்க்கையில நடக்குற முக்கியமான நிகழ்வு அதுக்கு கூட வராலனா எப்படி என எண்ணியவள் தீடீரென யோசனை வந்தவளாய் ஏய் எல்லாரும் சொல்றா மாதிரி நீ கொஞ்சம் மென்டல் மாதிரி ரியாக்ட் பண்ற இப்ப அவன் வராததா முக்கியம் இந்த பிரச்சினையை எப்படி சாமாளிக்கறது இந்த லஷண் கிட்ட பேசனுமே நான் பேசறதுக்கு முன்னாடி சம்யுக்தாவ பேச சொல்லனும் ஆனா எப்படி என அவளை திரும்பி பார்த்தால் லக்ஷணை பார்த்த நொடியில் இருந்து சிலையேன நின்றிருந்தாள். அவளின் அருகில் சென்றவள் சம்யுக்தாவின் தோளை தொட்டவுடன் நிபுநிகாவின் தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள் பேதையவள். கோபம் கொண்டு அவளை நிமிர்த்தியவள் ஏய் எதுக்கு இப்ப அழற நீ அழற அளவுக்கு இங்க எதுவும் நடக்கல முதல்ல லக்ஷண் ஏன் இங்க வந்தான்னு கேளு உன்ன லவ் பண்ணிக்கிட்டு என்ன பொண்ணு பார்க்க வந்து இருக்கான் வெக்கமே இல்லாம இவன்லாம் என்ன ஜென்மம்னு தெரியல என லக்ஷணை வசைபாடி கொண்டு இருந்தாள் நிபுநிகா.

லக்ஷணனை திட்டுவதை பொறுத்து கொள்ள முடியாதவள் நிபுநிகா ப்ளீஸ் அவர திட்டாத அவர் இங்க வந்திருக்கற்துக்கு ஏதாவது காரணம் இருக்கும் அவர் என்ன தான் லவ் பண்றார் என்னை ஏமாத்தமாட்டார் என்று தனக்கும் சேர்த்து சமாதானம் செய்து கொண்டாள் சம்யுக்தா.

ஆமா பொல்லாத காரணம் அத உன்கிட்ட ஏன் சொல்லல அத யோசிச்சியா போ சும்மா என்ன சமாதானம் பண்றத விட்டுட்டு அவனை போய் என்னனு கேளு என்றாள் நிபுநிகா.

வெளியே வந்து லக்ஷணிடம் பேச தயாரனவள் அவன் மிகவு‌ம் யதார்த்தமாக நிபுநிகாவின் பெற்றோர்களிடம் பழகி கொண்டிருப்பதை பார்த்த அந்த நொடி அவள் அவன் மேல் வைத்த நம்பிக்கை அசைய ஆரம்பித்தது. ஆனாலும் சிறிது நம்பிக்கையுடன் யாரும் பார்க்காத சமயம் லக்ஷணை அழைத்தாள் அவனோ என்ன என்று அங்கிருந்தபடியே கேட்டான் அவனை முறைத்தவள் ஒரு கத்தியை எடுத்து இப்ப நீ வரலன்னா மவனே நீ காலி என்று கண்களை உருட்டினாள்.

என்ன இவ இந்த மாதிரி சொல்றா இருக்க கோபத்த பார்த்த குத்தினாலௌம் குத்துவா பேசாம போய் என்னனு கேட்டுட்டு வருவோம் என்று வைதேகியிடம் போன் பேசி விட்டு வருவதாய் சொல்லி சென்றான் லக்ஷண்.

அவளின் அருகே சென்றவன் என்ன டார்லிங் என்றதும் அவள் முறைத்தை வைத்தே அவளின் கோவத்தை பற்றி அறிந்தான்.

நீங்க எதுக்கு இங்க நிபுநிகாவை பொண்ணு பார்க்க வந்தீங்க அப்ப என்ன லவ் பண்ணது எல்லாம் பொய்யா அதுவும் நிபுநிகா உங்க பிரண்ட் லவ் பண்றாருன்னு தெரிஞ்சும் எப்படி இங்க வர முடிஞ்சிடு என்று அவள் கேட்ட விதத்தை பார்த்து அவனுக்கு ஏதோ போல் ஆனது.

இங்க பாரு சம்மு நான் உன்ன லவ் பண்ணேன் பண்ணிட்டு இருக்கேன் இனிமேலும் பண்ணுவேன் என்றதும் சம்யுக்தாவிற்கு மகிழ்ச்சிக்கு எல்லையில்லை அவனை அனணத்தவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

லக்ஷண் உங்கள போய் தப்பா நினைச்சிட்டேனே என் தப்பு தான் நீங்க என்ன தான் கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு தெரியும் இந்த நிபு தான் என்ன கன்பியூஸ் பண்ணிட்டா சாரி என்று சொல்லி கொண்டு இருந்தீள் சம்யுக்தா.

சம்மு டார்லிங் நான் உன்ன லவ் பண்றேன் தான் ஆனா கல்யாணம் என் அம்மா யார சொல்றாங்களோ அவள தான் பண்ணிப்பேன் என்றான் லக்ஷண்.

அவன் சொன்னதை தான் தவறாக புரிந்து கொண்டதாக நினைத்து என்ன சொன்னீங்க எனக்கு சரியா புரியல என்றாள்.

அவளை இழுத்து அணைத்தவன் என் அம்மா யார கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்களோ அவள தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னேன் என்றான் லக்ஷண்.

லக்ஷண் என்று அவள் கத்தியதை பார்த்து அவனுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் உண்டானது ஆனால் அதை வெளி காட்டாமல் இருந்தவன் ஏன் சம்மு இப்படி கத்துற என்ன ஆச்சு உனக்கு நான் என்ன தப்பா சொன்னேன் என்றான் லக்ஷண்.

டேய் இன்னும் என்னடா நீ தப்பா சொல்லனும் நீ எங்கிட்ட லவ்வ சொல்லும் போது என்னடா சொன்ன என்ன கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்னு தானே சொன்ன எங்கிட்ட பேசி என் மனசுல ஆசைய வளர்த்துட்டு இப்ப என் பிரண்ட்டயே பொண்ணு பார்க்க வந்து நிக்கற அதுவும் உன்ன அவ அண்ணாணு கூப்பிடறா ச்சே என்ன மாதிரியான ஆள் நீயெல்லாம் உன்ன போய் லவ் பண்ணேன் பாரு என்ன செருப்பால அடிச்சிகணும் என்று சொல்லி சென்றவள் திரும்பி வந்து லஷணின் கன்னத்தில் பளார் என அறைந்தாள்.

அவள் செல்லும் திசையையே பார்த்து கொண்டு இருந்தவன் வைதேகி கூப்பிடவும் கன்னத்தை தேய்த்து கொண்டே சென்றான்.

பொண்ணு மாப்பிள்ளை கிட்ட தனியா பேசனும்னு சொல்றா என வாசுகி சொன்னதும் லக்ஷணுக்கு வயற்றில் எலி உருள ஆரம்பித்தது.

ஐய்யயோ இப்ப தான் ஒரு பேய சமாளிச்சேன் இப்ப பிசாச வேற சமாளிக்கனுமா என்று நினைத்தவன் நிபுநிகாவின் அறைக்கு சென்றான்.

உள்ளே சென்றவன் நிபுநிகா எங்க இருக்க என கேட்டுக்கொண்டே திரும்பியவன் கையில் உருட்டு கட்டையுடன் நின்றிருந்தாள்.

அதை பார்த்தவன் அவளாவது கையால தான் அடிச்சா இவ என்ன கட்டைய வச்சி இருக்கா லக்ஷண் உன் உடம்பு தாளாது போலையே செத்தடா நீ என நினைத்து கொண்டு இருந்தப்போதே கட்டையை சுழற்றி கொண்டு அவன் அருகில் வந்தாள்.

ஏய் நான் உன்ன என்னன்னு கூப்பிடுறேன் என்றாள்.

அமைதியாக இருந்தவன் இப்ப சொல்ல போறியா இல்லையா என கத்தியவுடன் அண்ணாணு கூப்பிடுவ என்றான்.

அண்ணாணு கூப்பிடுறவள போய் பொண்ணு பாக்க வந்து இருக்க வெக்கமே இல்லாம அவள லவ் பண்ணிட்டு இங்க என்ன பார்க்க வந்து இருக்க உன்ன எல்லாம் என கட்டையை வைத்து அவனின் காலில் ஒரு அடி வைத்தாள்.

அம்மா என அலறியவன் இப்ப எதுக்கு என்ன அடிக்கிற என கையை ஓங்கினான் அவன் கை ஓங்கியதை பார்த்தும் பயந்தவள் போல் நடத்திவள் ஐய்யோ ரொம்ப பயமா இருக்கு என்ன அடிக்காதீங்க என்றாள்.

ஏய் என்ன கொழுப்பா என்றவனை ஒரு பார்வை பார்த்து இல்ல நக்கல் நான் என்ன சம்யுக்தாவா நீ பேசறாத எல்லாம் கேட்டுகிட்டு அழுதுட்டு இருக்க நான் ஒண்ணும் பயந்தாகோளி இல்ல மவனே நீ இப்ப வெளியே போய் என்ன புடிக்கலன்னு சொல்ற மாத்தி ஏதாவது சொன்ன என் கையால தான் உனக்கு சங்கு பாத்து நடந்துக்கோ இப்ப போ என்று கதவை திறந்து விட்டு ஏதுவுமே அறியாத சிறு பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு அவளும் அவனுடன் வந்தாள்.

அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த பெரியவர்கள் ஒர் அர்த்த பார்வை வீசி கொண்டனர்.

அமைதியாக வைதேகி அருகில் அமர்ந்தவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பாத்தான்.

என்னடா பேச வேண்டியது எல்லாம் பேசிட்டியா என்றார். அம்மா அவ தான்மா பேசிகிட்டு இருந்தா நான் எங்க பேசினேன் என்றான் மெதுவாக.

வாசன் வைதேகியிடம் என்ன சொல்றார் என்றார்.

ஒண்ணு இல்லை சும்மா தான் பேசிக்கிட்டு இருக்கோம்.

உங்களுக்கு என் பொண்ண புடிச்சிருக்கா என்றார் அவர்களிடம்.

இந்த கேள்வியை கேட்டவுடன் நிபுநிகாவை திரும்பி பார்த்தவன் அவளின் முறைப்பை கண்டவன் உடனே அவன் அன்னையின் பக்கம் திரும்பி கொண்டான் லக்ஷண்.

என்ன இரண்டு பேரும் எதுவுமே சொல்லாமல் இருக்கீங்க என்றதும் வைதேகி அவரின் முடிவை சொல்ல ஆயத்தமானார்.

அவர் என்ன சொல்ல போகிறார் என ஆவலுடன் வாசனும் வாசுகியும் காத்து கொண்டிருந்தார்கள்.

நிபுநிகாவுக்கு மட்டும் ஒரு சிறு நம்பிக்கை லக்ஷண் அவளை பிடிக்கவில்லை என சொல்லி விடுவான் என்று.

ஆனால் நிகழ்ந்ததோ வேறு வைதேகி எங்களுக்கு உங்க பொண்ண எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்றார்.

இந்த முடிவை கேட்டு பெரியவர்கள் சந்தோஷம் அடைய நிபுநிகா அதிர்ச்சியில் உறைந்தாள்.

சம்யுக்தாவின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது அவர்களின் முடிவை கேட்டதுமே அதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள்.

சம்யுக்தாவை பார்த்தவள் கலங்கி நின்றாள் அவளை தண்ணீர் தெளித்து எழுப்பினாள்.

எழுந்தவள் நிபுநிகாவை கட்டி கொண்டு அழுதாள்.

அவளின் நிலையை கண்டு வருந்தியவள் சம்மு நான் சொல்றத கேளு அவங்க என்ன புடிச்சி இருக்குன்னு தானே சொன்னாங்க அதுவும் லக்ஷண் சொல்லலேயே என்று தனக்கும் சேர்த்து சொல்லி கொண்டாள்.

அவர்களை மகிழ்ச்சியாக வழி அனுப்பிவிட்டு வந்தவர்கள் சம்யுக்தா அழுவதையும் தன் மகள் கலங்கி இருப்பதையும் பார்த்தவர்கள் ஒரு நிமிடம் பயந்து தான் போனார்கள் பெற்றவர்கள்.

நிபுநிகா என்ன ஆச்சுடா ஏன் இவ அழறா நீ ஏன் இப்படி இருக்க என்ன ஏதாவது பிரச்சினையா என்றார் வாசன்.

அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டே அமைதியாக இருப்பதை பார்த்த வாசுகி ஏய் இப்ப வாய திறந்து சொல்ல போறீங்களா இல்லையா என கத்தியதும் நிபுநிகா எனக்கு இந்த கல்யாணம் வேணாம் என்றாள்.

அதை கேட்டவர்கள் அதிர்ச்சியில் நிற்க சிறிது நேரம் கழித்து எதுக்கு இப்படி சொல்ற நல்ல இடம் நல்ல மனுஷங்க இன்னும் வேற என்ன வேணும் அவங்களோட அந்தஸ்துக்கு நம்ம கிட்ட வந்து பொண்ணு கேட்டதே பெரிய விஷயம் நீ என்ன ன்னா இந்த மாதிரி சொல்லிட்டு இருக்க என்ன கொழுப்பா என்றனர்.

அம்மா நான் சொல்றத பொறுமையா கேளு இப்ப வந்தாரே ஒருத்தர் அவர நம்ம சம்யுக்தா லவ் பண்றா அவர நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும் என்றாள் நிபுநிகா.

அதக் கேட்டு வாசனும் வாசுகியும் ஒரு விஷயத்தை சம்யுக்தாவிற்கும் நிபுநிகாவிற்கும் சொன்னார்கள்.

அதை கேட்டவுடன் மயங்கி விழுவது நிபுநிகாவின் முறையாயிற்று.

தொடரும்…