நாவல் - நமது பார்வை

நாவல் - நமது பார்வை
0

வாசகர்கள் தாங்கள் படித்த நாவல்களைப் பற்றிய தகவல்களையும் உங்கள் எண்ணங்களையும் இந்தத் திரியில் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு படைப்பையும் எத்தனையோ வேலைப்பளுவிற்கிடையே எழுத்தாளர்கள் படைக்கிறார்கள். அவர்களது முயற்சிக்கு மதிப்பளித்து எதிர்மறை விமர்சனங்களைத் தவிர்க்கவும். எந்த இடத்தில் மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை குணமாக தெரிவித்தல் நலம்.

3 Likes

கௌரியின் “கவிதையே சொல்லடி” - யாழ் சத்யாவின் பார்வையில்

அவுஸ்ரேலியாவில் பிறந்து வளர்ந்த நாயகன் ஆதித்யா, தனது கட்டிடக்கலை அலுவலகத்தில் தனக்குக் கீழே பணி புரியவென இந்தியாவிலிருந்து வந்த பெண் ஷிவானியிடம் மனதைப் பறி கொடுத்து அவளிடம் காதலைச் சொல்லி விட்டுக் காத்திருக்கிறான்.

ஆதித்யாவின் மனதைப் புரிந்து கொண்ட அன்பான பெற்றோர்கள் ரவியும் ஜோதியும் அவன் ஆசைகளை நிறைவேற்ற உறுதுணையாக நிற்கிறார்கள்.

ஆதித்யாவின் நண்பர்கள் ஜெய்யும் குருவும் சேர்ந்து ஆதித்யாவோடு அடிக்கும் லூட்டிகள் அவர்கள் திரீ இடியட்ஸ் தான் என்பதை நிரூபிக்கிறார்கள்.

பத்மாவின் கதாபாத்திரம் மிக அருமை. பெற்ற குழந்தைகளையே குப்பைத் தொட்டியில் வீசிச் செல்லும் காலத்தில், தனது வறுமையிலும் ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவது என்பது எல்லோராலும் முடிந்த செயல் அல்ல.

விக்கி, ரியா போன்ற நட்புகள் கிடைப்பது வரம்.

“கவிதையே சொல்லடி…!” என்று மொத்தத்தில் கவிதையாய் ஒரு காதலைச் சொல்லிச் சென்றிருக்கிறார் எழுத்தாளர் கௌரி முத்துகிருஷ்ணன்.

தொடர்ந்து பல படைப்புகளைத் தர மனமார்ந்த வாழ்த்துகள் கௌரி.

என்றும் அன்புடன்
யாழ் சத்யா.

4 Likes

நானும் படித்துவிட்டேன் சத்யா. கௌரி மிக அழகாக கதையினை நடத்தி சென்றிருக்கிறீர்கள். ஆஸ்த்ரேலியாவில் ஆரம்பித்து அப்படியே மெதுவாக எங்களைக் கதைக்குள் அழைத்து சென்றீர்கள். முன்னரே சொன்னதுபோல கதை நாயகன், நாயகி இருவரின் பெயரும் எனக்குப் பிடித்த பெயர். மற்றபடி கதை பற்றி சத்யாவை விட அழகாக என்னால் விவரிக்க இயலுமா என்று தெரியவில்லை. காசினோ பற்றிய விவரங்கள், லாஸ் வேகாஸ் எம்ஜிஎம் கேஸினோ முதலியவற்றைக் கதையின் போக்கில் இணைத்திருப்பது. ஆஸ்திரேலியா பீச் பற்றிய விவரங்களை இணைத்திருப்பது அனைத்தும் அருமை. கடைசி அத்தியாயங்கள் விறுவிறுப்பு. தொடர்ந்து இது போன்ற நல்ல படைப்புக்களைத் தர வாழ்த்துக்கள் கெளரி.

3 Likes

நன்றி அக்கா. மிக்க மகிழ்ச்சி :purple_heart:

நன்றி அக்கா. மிக்க மகிழ்ச்சி :purple_heart: :heart_eyes:

யாழ் சத்யா அக்காவின்
கல்யாண கனவுகள் - விமர்சனம் :heart_eyes:

கல்யாண கனவுகள் எனக்கு ரொம்ப பிடித்த கதை. ஆண் - பெண் நட்பு பற்றி இதை விட சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது. சஞ்சு போல ஒரு நண்பன் கிடைக்க அதிர்ஷ்டம் செய்து இருக்க வேண்டும். யாழ் அக்காவின் இலங்கை தமிழ் படிக்க படிக்க இன்பம் தான். ரொம்ப நல்ல கதை. நட்பை பற்றி அழகா சொல்லி இருப்பாங்க, சஞ்சு என் ஃபேவரைட் கேரக்டர். :kissing_heart: வைஷாலி சஞ்சு வரும் இடங்கள் எல்லாம் அருமை. கதை படிக்கும் அனைவரையும் ஒருமுறை பள்ளி வயதுக்கு அழைத்து சென்று விடுவார் நிச்சயம். நானும் மீண்டும் பள்ளி வயதுக்கு சென்று வந்தேன்.

வாழ்க்கையில் நாம் எல்லாரும் தப்பா ஒரு முடிவு எடுத்து இருப்போம், அது நம்மோட வாழ்க்கையை பாதிக்கும் போது நாம் தேடுறது நட்பையும் நண்பனையும் நண்பியையும் தான். இந்த கதை ஆண் - பெண் நட்புக்கு பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

யாழ் அக்கா கதையின் உள்ளே நம்மையும் அழைத்து, பல இடங்களை சுற்றி காட்டி, மலையகத்தில் நம்மை வாழ வைத்து, சுவையான உணவு கொடுத்து, (இந்த கதையில் மரகறி விருந்தே இருக்கு, சஞ்சு மேல எனக்கு பொறாமையாக இருந்தது அப்போ) திகட்ட திகட்ட நட்பை சொல்லி இருக்காங்க அதுவும் வைஷாலி மேல நமக்கு பொறாமை வர அளவுக்கு…

கதையில் சொல்ல நிறைய இருக்கு, எனக்கு தான் எதை சொல்றதுன்னு தெரியல, கதையின் முடிவு மனதிற்கு இதம். தன் மனைவியின் நண்பனை எத்தனை கணவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்? கடம்பன் போல கணவன் அமைந்தால் அவள் பாக்கியசாலி. சஞ்சு போல நண்பன் இருந்தால் எல்லாமே சாத்தியம் தான். அவ்வளவு தூய்மையான நட்பு.

உங்களுக்கு அக்காவின் முந்தைய கதையான " உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா" கதை பிடிக்குமா? அப்போ இன்ப அதிர்ச்சி காத்து இருக்கு, போய் கண்டிப்பா படிங்க.

உங்களின் வாசகி என்று கூறி கொள்ள எனக்கு எப்பவும் பெருமை தான் அக்கா. அந்த பெருமையை இந்த கதையிலும் எனக்கு குடுத்து இருக்கீங்க நன்றி அக்கா.
உங்களின் எழுத்து மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:

வணக்கம் சகோஸ்

யாழ் வெண்பா சகோவின்
“வெண்ணிற நிழல்கள்” நாவல் விமர்சனம்.

வெண்ணிற நிழல்கள் அருமையான கதை. ஆன்ம லோகம் இப்படி தான் இருக்குமா? இறந்து போனவங்க என்ன எல்லாம் செய்வாங்க?

இறந்து போன அப்புறம் என்ன செய்ய முடியும் நீங்க கேக்கறது புரியுது. நானும் அப்படி தான் கேட்டு இருப்பேன் இந்த நாவலை வாசிக்காம விட்டு இருந்தா, இப்போ சொல்றேன் கேளுங்க, குழு உண்டு, அங்கு அரட்டை உண்டு, சினிமா, ஷாப்பிங் கூட உண்டு. அதை விட காதல் உண்டு. இதெல்லாம் எப்படி ஆவி ஆகி ஆன்ம லோகத்தில்? உங்க கேள்வி இது தானே? ஓடனே போய் கதையை படிங்க புரிஞ்சு போய்டும்.

அழகான கதை சகோ, அதில் நுணுக்கமான உணர்வுகள் என் மனம் உள் வரை சென்று என்னை அசைத்து பார்த்து அழுக வைத்தது. செழியன் அன்பான காதலன். நிஹா சுட்டி பெண். செழியனின் அழகான காதலி. முதல் பகுதி முடியும் வரை கதை புரியாதது போல் இருந்தது. முதல் பாகத்தின் இறுதி வரியில் கதையின் உள்ளே அழைத்து சென்று விட்டீர்கள். அடுத்து அடுத்து என்று சென்று கொண்டே இருந்தது. உணர்வுகளின் மொத்த குவியல் உங்களின் இந்த கதை. உங்கள் கதைகளில் நான் படிக்கும் முதல் நாவல் இது, எத்தனை மென்மை உங்கள் வரிகளில்? உணர்ந்து அனுபவித்து படித்தேன் சகோ. இறுதியில் ஒரு விண்ணப்பம் செடி கொடி - நிஹா குட்டி இருவருக்கும் மறு ஜென்மம் தாருங்கள். அவர்களின் காதலை பார்க்க வேண்டும், நிஹாவின் குறும்பு, சந்தேகம் எல்லாம் பார்க்க ஆசை. அவளின் கனவை நிறைவேற்றி வையுங்கள். ராமமூர்த்தி தாத்தா, சுந்தரேசன் தாத்தா இருவரையும் கூட பார்க்க வேண்டும். கீர்த்தனா - ஸ்ரீநிதி நட்பை பார்க்க வேண்டும். அவர்களின் கணித புலமை கூட பார்க்க ஆசை சகோ பிளீஸ். களவியலுக்கு கூட உடல் தேவை இல்லை என்று கூறி காதலில் எழும் காமத்தில் கூட மென்மை சேர்த்து இருக்கிறீர்கள். இன்னும் எத்தனை முறை படித்தாலும் என் மனதை விட்டு நீங்காத கதை இது. உங்களின் எழுத்து மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:

கதை திரி

3 Likes

thanks a lot gowri dear :slight_smile:

1 Like