நினைவெல்லாம் நீயே கண்ணம்மா - கதை திரி

நினைவெல்லாம் நீயே கண்ணம்மா - கதை திரி
0

நினைவெல்லாம் நீயே கண்ணம்மா கதை இந்தத் திரியில் அத்தியாயங்களாகப் பதிவு செய்யப்படும். வாசகர்கள் கருத்துத் திரியில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். நன்றி

1 Like

நினைவெல்லாம் நீயே கண்ணம்மா - டீஸர்

பிள்ளையார் கோயில் தெப்பக்குளத்தின் படியில் அமர்ந்து தர்மப்பிரபுவாக தன்னை நினைத்துக் கொண்டு கற்களை தண்ணீருக்கு வாரி இறைத்துக் கொண்டு இருந்தான் மாறன்…

அவனின் செய்கையை கலைக்கும் விதமாக நண்பன் ஒருவன் விழுந்தடித்துக் கொண்டு அவனிடம் வந்தான்…

" எலேய் மாரி என்னடே இப்படி தலை தெறிக்க ஓடி வர்ற நீ சுருட்டு பிடிக்கறதை உங்க அப்பாரு பாத்துட்டாரா… என்றான்…

" அட செத்த மூதி உன் வாயில இருந்து நல்ல வார்த்தையே வராதா… நா அதுக்காக ஓடியாரல… உன் ஆளை பஸ் ஸ்டாண்ட்ல ஒரு பொறுக்கிப் பையன் வம்பிழுத்துட்டு இருக்கியான்… "

அவன் கூறியதும் தனது மீசையை நீவி விட்டபடி கோபத்தால் பற்கள் நறநறக்க எழுந்தான்…மாறன்…

" எவம்லே அது… வண்டில ஏறுல " என்று நண்பனை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றான்…

பஸ் ஸ்டாண்டில் கூட்டம் நிறைந்து வழிய அங்கு தோளில் சுமை மூட்டையை (college bag) சுமந்து கொண்டு மஞ்சள் நிற தாவணியில் ஜொலித்த தனது மஞ்சக்காட்டு மைனாவை ரசித்தபடி வண்டியில் இருந்து இறங்கினான்…

அவளிடம் வம்பு செய்து கொண்டு இருந்த ஒரு கிடா மாட்டை சாலையில் இழுத்துப் போட்டு அடிக்க ஆரம்பிக்க சுற்றி இருந்த கல்லூரிப் பெண்கள் அனைவரும் விசிலடித்து அதை ரசித்தனர்…

அடித்து தொவைத்து அந்த பொறுக்கியை தூரத்திய பின்னர் தன் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டே தன் காதலியை கண்களால் படம் பிடித்துக் கொண்டிருந்தான்…

அவளோ அவனைக் காதலுடன் நோக்கினாள்…

இவர்களது பார்வை பரிமாற்றம் நடந்து கொண்டு இருக்க

மாறனின் காலரை யாரோ வலுக்கட்டாயமாக பிடித்தார்கள்…

“யாருலே அது ?” என்று தெனாவெட்டுடன் திரும்பிப் பார்க்க மீசையின் மேலே இருக்கும் மூக்கில் கோபத்தை எல்லாம் வைத்து அவனை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டு நிற்க…

மாறனின் விழிகளும் உதடுகளும் பயத்தில் தாண்டவமாடின.

" அய்யய்யோ அப்பா" என்று கத்தி விட்டு அவரின் கையில் இருந்து தன் காலரை கண் இமைக்கும் நேரத்தில் கையோடு இழுத்துக் கொண்டு ஓடி விட்டான்…

IMG_20190616_151222

அத்தியாயம் - 1

ஆங்காங்கே பச்சை நிற போர்வை போர்த்தியவாறு கண்ணுக் கெட்டிய தூரம் வரை வயல்வெளிகளால் நிறைந்து இருக்கும் இடம் தான் பள்ளிக்கோட்டை… திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கிராமம்…

காலை சூரியன் உச்சிக்கு வரும் முன்னரே ஆண்கள் எழுந்து தங்களது மனைவிமார்களின் கைகளால் செய்து கொடுத்த கஞ்சியை குடித்து விட்டு ஏர்கலப்பையை தோளில் சாற்றிக் கொண்டு தங்களது வயல்களை நோக்கி படையெடுத்து விடுவர்…

மண்ணைப் பொன்னாக்கும் வேளையில் அவர்கள் இறங்க அவர்களது மனைவிகள் ஓடியாடி குறும்புத் தனங்கள் செய்யும் குழந்தைகளின் முதுகில் அடி போட்டு புந்தகப்பையை கொடுத்து பள்ளிக்கு அனுப்புகின்றனர்…

தன் வீட்டில் மொட்டை மாடியில் கயிற்றுக் கட்டிலில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு இருந்தவனை தாய் பார்வதி…

" அய்யா மாறா எழுந்திருப்பு உங்க அப்பாரு உன்னை ரொம்ப நேரமா தொலவிட்டு இருக்காரு?." என்று அவனை எழுப்பிக் கொண்டு இருந்தார்…

பார்வதியின் குரலைக் கேட்ட மாறன்…

போர்வைக்குள் இருந்தபடியே
" இதென்ன காலைலையே அதிசயமா இருக்கு… அவரு என்னைய தொலவுறாரா யம்மா நீ ஏதாவது கனா கினா காங்கலயே… " என்றான்…

" இல்லடே உன்னால அவியளுக்கு ஒரு சோலி பாக்கனுமாம் அதேன் உன்னை போகச் சொன்னாக… நீ வெரசா எந்திரி ராசா" என்று அவனிடம் விவரத்தைக் கூற…

மாறனோ இப்போது போர்வைக்குள் இருந்து தனது தலையை சிறியதாக வெளியே நீட்டி தாயைப் பார்த்தான்…

" என்னடே கிளம்ப சொன்னா முளிக்குறவ. "

என பார்வதி மகனின் மண்ணையில் கொட்ட
" யம்மா…வலிக்குது போ நான் கிளம்ப மாட்டேன்… "

என்று மறுபடியும் போர்வைக்குள் தன்னைப் புகுத்திக் கொள்ள

" ஏலா பார்வதி அவ எழுந்தியானா இல்லையா
ஊர்ல இருக்க மக்கா எல்லாம் வயலுக்கு சோலி பாக்கப் போயாச்சு இவருக்கு இப்போ தான் பொழுது விடியுதாக்கும்…எல்லா உன்னை சொல்லனும்டி செல்ல கொடுத்து கெடுத்து வச்சுருக்க "

மருது மகனுடன் சேர்ந்து மனைவியையும் திட்ட அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் தாயைத் திட்டியது பொறுக்காமல்

" இப்ப என்ன செல்லம் கொடுத்து கெடுத்துப் புட்டாக… ஏன் அம்மாவைத் திட்றீய… ராவுல நெல்லு மூட்டையை எடுத்துப் பண்ணை வீட்ல போட்டுப்புட்டு அசதினு கண் அசந்துட்டேன்… இப்போ எந்திரிக்க முடியல…அதுக்கு ஏதோ நெதமும் தூங்குறா மாதிரி ஏசுதீய… " என்றான் மூக்கு விடைக்க…

அவனின் வார்த்தைகளால் கோபம் தலைக்கேறியவர்
"இந்தாலே எதுத்து பேசாம வெரசா கிளம்பி சீனிக்கண்ணு அண்ணாச்சி வீட்டுக்குப் போய் ரெண்டு மூடை நெல்லு இறக்கிட்டு வா … என்று மகனுக்கு கட்டளை பிறப்பித்து விட்டு…மனைவியைப் பார்த்து

" போய்ட்டு வர்றேன் பார்வதி… " என வீட்டிலிருந்து கிளம்பினார்…

மாறன் அப்போதும் கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்த பார்வதி…

" ஏலேய் அந்த மனுஷன் அவ்ளோ நேரம் பேசிட்டுப் போறாரு நீ எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்சா மாரி படுத்துக் கெடக்கா எழுந்திரல கிறுக்குப் பயலே… "

" உனக்காகப் போய் அப்பாட்ட ஏச்சு வாங்குனேன் பாரு என்னைய அடிக்கோனும் " என்று எழுந்தான்…

" போய் வெரசா குளிச்சுப்புட்டு வாலே எங்கலே போற பாத்ரூமுக்குப் போகாம … என தாய் கேட்க

" அம்மா நான் இந்த சேகர் இருக்கியான்ல அவனோட வீட்டுக்கிட்டக இருக்க ஊத்துல குளிக்கப் போறேன்… "

" எலேய் அங்குட்டுலாம் போகாத எவனாது பாத்துப்புட்டு உஙக அப்பாருட்ட வத்தி வச்சாய்ங்கன்னா பொறவு உனக்கு முதுகு வீங்கிக்கும்…

என்று எச்சரித்தார்…

              - தொடரும்...
1 Like

வணக்கம் நண்பர்களே… இதோ நான் …ஷாலினி தங்கப்பாண்டியன்… நினைவெல்லாம் நீயே கண்ணம்மாவின் 3 வது அத்தியாயத்துடன் வந்தா விட்டேன்… படித்து விட்டு மறக்காமல் விமர்சனங்களை அளிக்கவும்…

அம்மாவின் எச்சரிப்பு அவன் காதுகளுக்கு எட்டாத தூரத்தில் நடந்து கொண்டு இருந்தான்…

சேகரின் வீட்டை அடைந்ததும்
" எலேய் சேகரு என்று கத்த
உள்ளிருந்து சேகரின் அப்பத்தா : இந்தா வந்துட்டியான் அவன் கூட்டாளி…அப்பு சிவம் வாய்யா இங்க மாறன் பய வந்துருக்கியான்…இவனையும் நாலு வாங்கு வாங்கு…

என்று தன் மகன் சிவஞானத்திடம் கூறினார்…

மாறன் பாட்டியின் பேச்சு புரியாமல் பார்க்க…

சேகர் அவசர அவசரமாக ஓடி வந்தான்…

" அப்பத்தா செத்த சும்மா இரு… "
என அதட்டி விட்டு

மாறன் : என்னடே காலங்காத்தாலயே உன் அப்பத்தா இப்படி கரிச்சு கொட்டுது என்னைய…நீ முத என்ன செஞ்ச… "என சேகரை விசாரித்தான்…

சேகர் : அது ஒன்னும் இல்லடே மாப்பிள்ளை நானு எங்க வீட்டுக்கிட்டக்க இருந்த ஊத்துல குளிக்கலாம்னு தான்டே அம்மைக்கிட்ட போய் கேட்டேன்… அதுக்கு எங்க அப்பாரும் கிழவியும் திட்டிப்புட்டாக… அய்யாடி எம்புட்டு நேரம் தெரியுமா… அவிங்க ஏசுனதுல இந்த இடக்காதே கேக்காம கிடக்குனா பாத்துக்க "

மாறன் : கேவலம் குளிக்கத்தான போறனு சொன்ன அதுக்கு எதுக்குல ஏசுனாக உன்னைய…

சேகர் : அது அந்தப் பக்கட்டு தான் தெனைக்கும் பொம்பளைப் புள்ளைங்க கோயிலுக்கு போதுகளாம்… அதேன் எங்க அப்பாரு மூடிகிட்டு வீட்டு பாத்ரூம்லயே குளினு சொல்லிப்புட்டாரு…

என சற்று முன்னால் தான் தகப்பனிடம் அசிங்கப்பட்ட கதையை மெடல் வாங்கியது போல் பெருமையடிக்க ஏற்கனவே பாட்டியின் வார்த்தையால் கோபமான மாறன் இவனுடைய விளக்கத்தைக் கேட்டு மேலும் கடுப்பானான்…

மாறன் : நீங்களும் மூடிக்கிட்டு வீட்டு பாத்ரூம்ல குளிச்சுப்புட்டீக… அப்படித்தான…

சேகர் : ஆமாடே …

மாறன் : தூதூ உன்னியல்லாம் ஒரு ஆளுன்னுட்டு உங்கூட பழகுதேன் பாரு… என்னைய என சொல்ல வந்த வார்த்தையை சொல்லி முடிக்காமல்

" போடே நான் எ வூட்டுலயே குளிச்சுக்கிடுதேன்…

என சேகர் கூவியும் அதை திரும்பிப் பார்க்காமல் தன் வீட்டிற்கே சென்றான்…

அவன் வருவதைக் கண்ட மாறனின் அம்மா வீட்டு வாசலில் நின்று கொண்டு

" வாலே நல்லா அழுக்கு தேய்ச்சு குளிச்சியா… என நக்கல் செய்ய அதை காதில் வாங்காமல்
குளித்து முடித்து வெளியே வந்தான்…

பார்வதி : வயசுப் புள்ளைக கோயிலுக்கு போற நேரத்துல அங்குட்டு போய் குளிக்கிறியானாம்… கூறுகெட்டப்பய… என அவனுக்கு உணவு எடுத்து வைக்க

மாறன் : சேகரோட அப்பாரும் இதைத்தேன் சொன்னாராம் நீயும் இதையே சொல்லுற… என்ன நினைச்சுட்டு இருக்கீக அந்த குமரிக கோயிலுக்கு போகயில நாங்க அவளுகளோட கைய்யப் பிடிச்சு இழுத்துடுவோமோ… ரொம்பத்தேன் பண்றீய… என்று தாயைக் கடிந்து கொள்ள…

பார்வதி : எடு அந்த விலக்கமாத்த… ஏன்டா கிறுக்குப்பயலே… என்ன வார்த்தைப் பேசுறவ.என் முன்னாடியே இப்புடி பேச எம்புட்டு தகிரியம் இருக்கோனும் உனக்கு…எனக் கோபத்தில் பொரிந்தார்…

மாறன் : போ ஆத்தா இன்னைக்கு காலைல இருந்து எல்லாரும் என்னிய திட்டிட்டே இருக்குறீய எனக்கு சோறும் வேணாம் ஒன்னும் வேணாம்…
என எழுந்தான்…

பார்வதி பதறிக் கொண்டு

" அய்யா ராசா தப்புத்தேன் கோபத்தை சாப்பாட்டு மேல காட்டாதய்யா சாப்பிட்டுப் போய்யா…

மாறன் விடுவிடுவென நடந்து ஊற்றின் அருகில் சென்று அமர்ந்தான்…

( பாவம்யா அந்த பைய எல்லாரும் ரவுண்டு கட்டி அவனையே திட்டுனா என்ன பண்ணுவான் பாவம்… பையனும் சரியான கோபக்காரனா இருப்பான் போலயே… வாங்க மாறன் யாருனுப் பாத்துருவோம்… )

மாறன்…நெடிய உயரமும், நேர் பார்வையும் முறுக்கி விட்ட மீசையும் கொண்டு…
வாடிவாசலில் இருந்து மூர்க்கத்தனமாக வரும் காளையைப் போல எப்போதும் திமிராகவும் மிடுக்காகவும் இருக்கும் …
MSc Chemistry படித்த இளவயது பட்டதாரி…

படிப்பு முடித்து இரு வருடங்கள் ஆகி விட்டன…

பட்டணத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் வந்தாலும் அவனால் பெற்றோரைப் பிரிய மனமில்லாமல் சொந்த ஊரிலேயே இருந்து விட்டான்…

என்ன தான் சற்று திமிராக இருந்தாலும் பெற்றோரிடமும் நண்பர்களிடமும் குணத்தில் இறங்கி தான் போவான்… ஏனெனில் அவர்கள் தான் அவனுடைய பிரியமானவர்கள். அவர்களிடம் மறந்தும் கூட நிஜமான கோபத்தைக் காட்ட மாட்டான் …

ஆனால் பொய்யாக கோபப்பட்டு நண்பர்களை ஏமாற்றி விளையாடுவான்…

மற்றவர்கள் அவனை சீண்டினால் அவ்வளவு தான்… மாறனை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது மிக மிக கடினம்…

மாறனின் தந்தை பெரிய மருது வீட்டிற்கு ஒரே மகன்… அவருடைய தாய் தந்தை இருவரும் மாறனின் இரண்டாம் அகவிலேயே மரணித்து விட்டனர்…

பெரிய மருது பேருக்கு ஏற்றார் போல் அந்த கிராமத்தின் பெரிய தலைக்கட்டு தான்… ஆனால் அதை எல்லாம் அவர் காட்டிக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்…

மாறன் அவரிடம் வேலை கிடைத்தும் கிடைக்கவில்லை என பொய் கூறி உள்ளான்…
அதனால் ஊரில் இருக்கும் சில பேர் மாறனை வேலை வெட்டி இல்லாதவன் என கூறுவதை கேட்டு அவ்வப்போது அந்த கோபத்தை அவன் மேல் காட்டுவார்…

மகனைத் திட்டுவதிலேயே குறியாக இருப்பார்…
தனது பெரிய மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு தோளில் இருக்கும் துண்டை உதறிப் போட்டுக் கொண்டால் அவர் திட்ட ஆரம்பிக்க போகிறார் என்று அர்த்தம்…

பார்வதி மாறனின் தாயார்…
திருமணம் நடந்து இன்று வரை கணவனை எதிர்த்து பேசாதவர்…சில சமயங்களில் மாறன் செய்யும் கிறுக்குத்தனங்களை அவரிடம் இருந்து மறைப்பதில் பார்வதி மிகவும் கெட்டிக்காரர்…

எல்லா ஆண் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய அம்மாவிடம் அதிகமாகவே பாசமும் செல்லமும் தந்தையிடம் இருப்பதை விட தாயிடமே அதிக அன்பு இருப்பதாய் உணர்வர்…

அதே போல் தான் மாறனும் தனது தாய் பார்வதியை அம்மா என்று மட்டும் கருதாமல் ஒரு சிறந்த தோழி போல அவருடன் வம்பு பேசி மகிழ்வான்…

பெரிய மருதுவைப் போல மாறனுக்கும் கூட பிறந்தவர்கள் எவரும் இல்லாமல் போயினர்…

அதனால் யார் அவனை அண்ணா என்றோ தம்பி என்றோ உரிமை எடுத்துப் பேசினால் அவனுக்கு அவர்கள் மேல் கூடுதல் அக்கறை வந்து விடும்…

மாரி : எலேய் மாறா என்னடே இங்கன வந்து உக்காந்துருக்கவ என்னடே முகம் சுனங்கி போய் இருக்கு என நண்பனைப் பாசமாக கேட்டான்…

மாறன் : இன்னைக்கு காலைல கண்ணு முழிச்சதுல இருந்தே எனக்கு நேரம் சரி இல்லலே… எங்க அப்பாரு தொடங்கி வச்சது இன்னும் போய்க்கிட்டு இருக்கு… என நண்பனிடம் காலையில் இருந்து நடந்தவற்றை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி கூறினான்…

மாரி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்…

மாறன் : ஏலே நானே எல்லாரும் என்னிட்டயே ஒரண்டை இழுக்குதாங்கனு கடுப்புல இருக்குதேன்…நீ சிரிச்சு இன்னும் கடுப்பு ஏத்துதியா… என்று அவனை எட்டி மிதித்தான்…

மாரி : யப்பே… என்னடே இப்படி எத்திப்புட்ட…வலிக்குதுல… என தட்டுத் தடுமாறி எழுந்தான்…

மாரி : சரிலே… இப்ப திட்டு வாங்கிட்டோம்னு மனசு கஷ்டத்துல இங்க வந்து உக்காந்து இருக்கியால… என அணுசரனையாக கேட்க…

மாறன் : அய்ய சீச்சி அப்படிலாம் தப்பா நினைக்காத மாப்ளே… எங்க ஆத்தாவும் சேகரும் சொன்னாங்கள்ல பொம்பளைப் புள்ளைங்க இந்தப்பக்கந்தேன் கோயிலுக்கு போவாளுகனு… அதுகள சைட் அடிக்கத்தேன் வந்தேன்…

பாரி : அதானேப் பாத்தேன் நீயாவது ரோஷப்பட்டு வர்றதாவது… என நண்பனை நக்கல் செய்து அவனுடன் தானும் சேர்ந்து கொண்டான்…

இருவரும் தங்களை மறந்து ஊர்கதை உலகம் கதையை பேசிக் கொண்டு இருக்க… ஜல் ஜல் என கொலுசொலி காதுகளை எட்ட மாரியும் மாறனும் அந்தப் பக்கம் திரும்பினர்…

வண்ண மயமான தாவணி அணிந்து பெண்கள் ஐவர் கையில் பூஜைப் பொருட்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தனர்…

அதில் இறுதியாக ஆகாய நீல வண்ணத் தாவணியில் கால் கொலுசு சத்தமிட

"பிரம்மன் கொஞ்சம் அதிகமாகவே சிரத்தை எடுத்து இவளது அழகை கருத்தில் கொண்டு படைத்திருப்பார் போல…

வெண்மதி முகத்தில் வில் போன்ற புருவங்களும்.
மை தீட்டப்பட்ட விழிகளும்…
புருவங்களுக்கு இடையில் சிகப்பாய் சின்னதாய் ஒரு பொட்டும்…
சற்று சிறிய நாசியும்…
ரோஜா நிற இதழ்களும்…
கழுத்தில் தங்கச்செயின் மின்ன
கூந்தலை ஒற்றைப் பின்னலிட்டு அதில் மல்லிச் சரம் சூடி…

ஜிமிக்கிகள் காதுடன் கதை பேச…
இதழ்களில் நான் அவளை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்பது போல் குடி கொண்டு இருந்த புன்னகையில் மாறன் சகலமும் மறந்து நிற்க
அச்சமயம் அவனின் பார்வையை இவள் எதிர்கொள்ள தன்னை விழுங்குவது போல் பார்த்தவனை கண்டு இதழ் சுளித்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்…

அவளது செயலால் புன்னகைத்தான் மாறன்…

               - தொடரும்...

IMG_20190618_010213

2 Likes

வணக்கம் நண்பர்களே…
நினைவெல்லாம் நீயே கண்ணம்மாவின் மூன்றாவது அத்தியாயம்…

மாறன் தனது பார்வையை அவளை விட்டு விலக்காதது தெரிந்ததும் அந்த பெண்ணிற்கு கோபம் வந்தது…

அருகில் இருந்த தோழியிடம்
" ஏட்டி எவன் அது என்னை இப்படி பாக்குதான்…

என அவளது காதைக் கடிக்க…

தோழியோ மாறனைப் பார்த்து விட்டு
" அவுகளா மாறன் அண்ணா ல ரொம்ப நல்ல டைப்பு… பொம்பளைப் புள்ளைங்கள ஏறெடுத்தும் பாக்க மாட்டாவ… ஆனா உன்னிய மட்டும் ஏன் இப்புடி பாக்குறாவ…"

" பாருடி அவன் இன்னும் பாத்துட்டே இருக்கியான் அவன… "

என மாறனின் அருகில் சென்றாள்…

ஏய் என்னடே நானும் அப்போ இருந்து என்னை அப்படியே முழுங்கி ஏப்பம் விடுதா மாதிரி பாக்குறவ…

மாறன்: அழகா இருந்தா பாக்கத்தேன் செய்வோம் உனக்குப் பிடிக்கலனா என்னால ஒன்னும் செய்ய முடியாது… நீ வேனும்ன்டா வீட்லயே இருந்துக்கோ…"

அவன் பேசப்பேச அவளது கண்கள் ரத்தச் சிவப்பாக மாறியது…
" என்னலே நினைச்சுட்டு இருக்குத என்ற அய்யன்ட்ட சொன்னேன்னு
வச்சுக்க நீ அம்புட்டுதேன்… "

அவளது கோபப்பார்வையும்,கண்களில் இருந்து வரும் கதிர்வீச்சும் இவனை என்னவோ செய்ய அமைதியாக அவளை ரசித்தபடி நின்றிருந்தான் மாறன்…

அவள் கழுவி ஊத்தியதை கானக்குயில்
காதில் இனிமையாக கூவுவது போல் தலையாட்டிக் கொண்டே கேட்டான்…

அவள் திட்டி முடித்து மூச்சு வாங்கிக் கொண்டே
" இங்க பாருலே… இனிமேல் என்னையப் பாத்துப் பல்ல காட்டிட்டே இருந்த ஒரே குத்து பூரா பல்லும் உடைஞ்சுரும்… சாக்கிரதை…

என்று அவனை கோபத்துடன் எச்சரித்து விட்டு தோழிகளிடம் சென்று
" வாங்கலே போலாம் நேரம் ஆகிருச்சு என அவர்களை அழைத்துக் கொண்டு கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்…

கார்த்திகா : அடியேய் காவ்யா அந்த அண்ணே பொம்பளைப் புள்ளைகளை நிமிர்ந்து பாக்காது… ஆனா இவளை ஏன் அப்படி ஒரு பார்வை பாத்துச்சு… என ஆச்சர்யம் விலகாமல் கேட்டாள்…

கார்த்திகா : அதேன்டி எனக்கும் விளங்கல…

" அடி என்ன நக்கலா… என்னியப் பாத்தா பொம்பளைப் புள்ள மாதிரி தெரியலியோ…

காவ்யா : உன்னைலாம் பொண்ணுனு எப்படிடி நம்பச் சொல்லுறவ… நீதேன் பாவாடை தாவணி போட்ட ரௌடியாச்சே…

" அப்படியே தேங்காயை மண்டைலப் போட்டேன்னு வச்சுக்கோ… பொளந்துக்கும்… வாயை மூடிட்டு வாங்கடி… என தோழிகளைக் கடிந்தாள்…

மாரி : ஏலேய் மாப்ளே… என்ன அப்படியே சிலையாட்டம் ஆகிட்ட…
என நண்பனை உலுக்க

மாறன் : ஒன்னும் இல்லலே அவளப் பாத்ததுல இருந்து மனசுக்குள்ள ஒரே பட்டாம்பூச்சி பறக்குதுல…

மாரி : பறக்கும்ல நல்லா பறக்கும்… அவ அப்பாரு யாருனு தெரிஞ்சா என்ன பறக்கும்னு தெரியுமா…

மாறன் : உனக்கு தெரியுமால அவ யாருனு… சொல்லுல…

மாறனோட சண்டைக்காரியோட பேர் மதியழகி…
M.A English படித்துக் கொண்டு இருக்கும் மதியின் அப்பா ரங்கநாதன்…
அவ்வூரின் பஞ்சாயத்துத் தலைவர்…

சாதி சண்டை… சொத்துப்பிரச்சனை… என ஊரில் நடக்கும் எல்லா வழக்குகளுக்கும் நீதி வழங்குவார்… அவர் கூறுவதே இறுதி முடிவு… அதை மறுத்து யாரும் ஒரு சொல் கூட சொல்லக் கூடாது…

தாய் ராஜலட்சுமி… கணவனைப் போலவே குடும்பத்தை கண்டிப்புடனும் கட்டுக் கோப்புடனும் நடத்தி வருகிறார்…

அக்கா செவ்வழகி… தற்போது தான் திருமணம் ஆகி பக்கத்து ஊரில் குடி பெயர்ந்து உள்ளாள்…
இளையவள் மதியழகி… எளிதில் அனைவருடனும் நன்றாக பழகும் வெகுளிப்
பெண்…

ஆனால் அவளுக்கு யாராவது கோபமூட்டினால் சாமியாடி விடுவால் மலை இறங்க வெகு நேரம் ஆகி விடும்…

அந்த ஊருக்கு சற்று அருகில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறாள்…
மாறன் : சண்டைக்காரியா… ம்ம் எனக்கு ஏத்த ஆளுதேன்… என சிரிக்க அவனது சிரிப்பில் மாரியின் முகம் கலவரமானது…

                     - தொடரும்..
2 Likes

வணக்கம் நண்பர்களே… நினைவெல்லாம் நீயே கண்ணம்மாவின் 4வது அத்தியாயம் இதோ…

IMG_20190627_131823

மாறன் தனது மனம் கவர்ந்தவளை எப்படி
கவர்வது என திட்டம் போட்டுக் கொண்டு இருக்க…
அவனது முதுகில் சுளீரென்று அடி விழுந்தது…

மாறன் : ஆஆஆஆ… எவம்லே அது…
என கோபத்தோடு திரும்பிப் பார்க்க…
அவனது அப்பா முறைத்துக் கொண்டு நிற்க தூக்கி வாரிப் போட்டவாறு விழித்தான்…

" ஒருவேளை அப்பா மதியழகியிடம் வம்பிழுத்ததைப் பார்த்து விட்டாரோ… என அவரை விழி பிதுங்க பார்க்க…

பெரியமருது : ஏலேய் எடுபட்டபயலே… கொஞ்சமாச்சும் கூறு இருக்கால உனக்கு… என்ன சொன்னாலும் செய்ய கூடாதுனு கருப்பசாமி கிட்ட சத்தியம் பண்ணி இருக்கியால…

அவர் பாட்டுக்கு வாயில் வந்ததை சொல்லி அவனை திட்டிக் கொண்டு இருக்க…

மாறனும் மாரியும் எதற்காக திட்டுகிறார் எனத் தெரியாமல் அவரையே பார்த்தனர்…

ஒரு வழியாக திட்டி முடித்ததும்
" சீனிக்கண்ணு அய்யா வீட்டுக்கு நெல்லு மூடைய கொண்டுட்டு போனு சொன்னேன்டா இல்லையா… இங்கன நின்னுக்கிட்டு என்னலே பண்ணிட்டு இருக்குத… என் மானத்தை வீதியில போடனும்னே கங்கணம் கட்டிட்டு அலையுதியால… வெளங்காதவனே…

இத்தனை திட்டுகளையும் அவமானங்களையும் வாங்கிக் கொண்டு ஊமையாக நின்றவனைப் பார்த்து மாரிக்கு பாவமாக இருந்தது…

மாரி" இடையில் புகுந்து தடுக்கலாம் என்றால் மாறனுக்காவது அடி விழுந்தது தான் தலையிட்டால் அருவா வெட்டு தான் என கால்கள் வெடவெடக்க நின்றிருந்தான்…
பெரியமருது : போலே போய் நெல்லு மூடையப் போட்டுட்டு வா… என முடித்து அங்கிருந்து கிளம்பினார்…

மாரி : மாப்ளே என்னடே இது அவரு அப்படி திட்டுதாரு… நீ என்னடான்னா
அப்படியே மரம் மாதிரி நிக்குறவ… எனக்கு காது பஞ்சர் ஆகிருச்சுல…

மாறன் : ஆமால மரம் மாதிரிதேன் நின்னேன்… என்னலே பண்ண சொல்றவ… அப்பாவை அடிக்கவா முடியும்… தப்பு செஞ்சேன் அடிச்சாவ திட்டுனாவ… அவருக்கு உரிமை இருக்குல…
மாரி : நல்ல அப்பா நல்ல பிள்ளைல… என இருவரும் நெல்லா மூட்டையை எடுத்துக் கொண்டு சீனிக்கண்ணு அய்யா வீட்டிற்கு சென்றனர்…

பெரியமருதுவைப் பொறுத்தவரை சீனிக்கண்ணு கூறுவது தான் வேதவாக்கு… அவருடைய தாய் தகப்பனுக்கு அடுத்தபடி சீனிக்கண்ணுக்கு தான் மரியாதை கொடுப்பார்…

சிறு வயது முதலே அவர் பெரியமருதுவிற்கு ஆலோசனைகளும் உதவிகளும் செய்துள்ளார்…

அவருக்கு நெல்லு மூட்டை எடுத்துச் செல்லவில்லை என்பதால் தான் கோபம் எரிமலை என வந்தது…
மாறனை அவனை வாசலில் அமர்ந்திருந்த சீனிக்கண்ணு அடையாளம் கண்டு விட்டார்…

சீனிக்கண்ணு : வாய்யா மாறா நீயும் வந்துருக்கியால மாரி உள்ள வாங்க…
என உள்ளே அழைத்துச் சென்று நாற்காலியை இழுத்துப் போட்டார்…

சீனிக்கண்ணு : எலா சுமதி இங்கன வந்துப் பாருல நம்ம மாறன் வந்துருக்கியான்… கூட மாரிப்பயலும் வந்துருக்கியான்…
சுமதி : இதே வந்துட்டேங்க… என உள்ளிருந்து அவரின் குரல் கேட்டது…

மாரி வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தான்…
அதைக் கவனித்த சீனிக்கண்ணு
" என்னலே வீட்டை ஒரு தினுசா பாக்குறவ கண்ணம் வச்சு திருடப் பாக்குறியால…

மாரி : ஆமா திருட நினைக்குறாவ… ஏன் தாத்தா நீ வேற…

இவர்களின் சம்பாஷனையை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த மாறனை கைகளில் மோருடன் வரவேற்றார் சுமதி…
" வாய்யா மாறா… எப்படிய்யா இருக்க அப்பா அம்மா சவுக்கியமா… எலேய் மாரி நீயும் வந்துருக்கியால ரொம்ப சந்தோஷம்… என இருவருக்கும் மோரைக் கொடுத்தார்…
மாறன் : நல்லா இருக்கேன் அப்பத்தா… அம்மா அப்பா அவுகளும் சவுக்கியமா இருக்காவ… என அவரிடம் பேச்சுக் கொடுத்தான்…
சுமதி : எங்களுக்கு என்னய்யா நாங்க நல்லா இருக்கோம்… என அவரும் அவனுக்கு பதில் கூற…

மாரி தனது மோரைக் குடித்து முடித்து விட்டு மாறனுடையதையும் எடுத்துக் கொள்ள
சீனிக்கண்ணு : எலேய் உன்னோடதை குடிச்சு முடிச்சுட்டு என் பேரனோடதையும் குடிக்குற… கூறு கெட்டவனே…

மாரி அவரை முறைத்தான்…
மாறன் : விடு அப்பத்தா… குடிச்சுட்டு போகட்டும்…
சுமதி : இருய்யா நான் உனக்கு இன்னோரு கிளாசுல கொண்டு வாரேன்…
என அவனுக்கு மோரைக் குடுக்க… அதைய
தன் கழுகுக் கண்களால் பார்த்தான் மாரி…

சீனிக்கண்ணு : உங்கொள்ளிக் கண்ணை வச்சுப் பாக்காதல என் பேரனை…

சுமதி : அய்யா மாறா உனக்கு சுத்திப் போடானும்யா… இந்த வெலங்காதவனே உன்னை கண் வச்சுருவான்…

மாறன் அட்டகாசமாய் சிரிக்க…
மாரி : நீங்க என்னிய கிண்டல் பண்ணாலும் நான் அசர மாட்டோம்ல…

மாறன் : அது தெரிஞ்ச விஷயம் தாம்ல… நாங்க கிளம்புதோம் அப்பத்தா, தாத்தா…என கூறி விட்டு கிளாசை சுமதியிடம் கொடுத்தான்…

சுமதி : என்னய்யா கால்ல வெண்ணித்தண்ணி ஊத்துனா மாதிரி உடனே கிளம்பறவ… ஒரு வாய் சாப்புட்டுப் போய்யா…

மாறன் : இருக்கட்டும் அப்பத்தா இன்னோரு நாள் வந்து சாப்பட்றேன்…

என இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு நடந்தனர்…
மாரி : என்னடே யோசனை பண்றவ…?

மாறன் : மறுபடியும் அந்த சண்டைக்காரியை பாக்கனும் போல இருக்குல…

மாரி : அடேய் ஏம்லே இப்படி பண்ணுத…
என அவன் மாறனை திட்ட…

மாறன் : மாப்ளே அவளே வந்துட்டால…
என காதலியின் தரிசனத்திற்காக காத்திருந்த மாறனை ஏமாற்றாமல் மதியழகி கோயிலில் இருந்து வந்து கொண்டிருந்தாள்…

அவளை கண் எடுக்காமல் பார்த்த மாறனை
" இவனை… என அவனிடம் அவள் வர…

அதற்குள் மாறனை நோக்கி ஒருவன் பதட்டத்துடன் ஓடி வர… அவனுக்குப் பின்னால் நான்கு பேர் அருவாள்களுடன் துரத்தி வந்தனர்…

அவர்களின் அரிவாள் கைத்தடுமாறி மாறனின் மேல் படப்போக… மாறன் அதை லாவகமாகத் தடுத்து அதை தன் கையால் தடுத்தான்…

திடீரென்று நிகழ்ந்த இந்த காட்சியைப் பார்த்த மதியழகி அதிர்ச்சி அடைய கையில் அரிவாளைப் பிடித்துக் கொண்டே அவளை நோக்கி கண்ணடித்தான் மாறன்…

                    - தொடரும்...
2 Likes

நினைவெல்லாம் நீயே கண்ணம்மாவின் ஐந்தாவது அத்தியாயம்.

குறிப்பு :

இக்கதையில் வரும் ஊர் பெயர் தவிர மற்றவை அனைத்தும் கற்பனையே…

                🌻🌻🌻 

" இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிலுகிலுப்பு கேக்குதால… என அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள் மதியழகி…

மாறன் தன் கையை அரிவாளில் இருந்து எடுக்காமலேயே அதனைப் பிடித்து இருந்தவனிடம்

" யாருலே நீ எதுக்கு அவரை வெட்டத் துரத்திரீரு… எனக் கேட்டான்…

" அதைக் கேக்க நீ யாருலே ஒழுங்கு மருவாதையா அருவாளை விட்டுடு… இல்லைனா உன்னையும் வெட்டிச் சாய்ச்சுட்டு போய்ட்டே இருப்போம்… " என தெனாவெட்டாகக் கூற…

அவர்கள் யாரை வெட்ட வந்தார்களோ அவன் மாறனின் முதுகின் பின்னால் மறைந்து நின்றிருந்தான்…

மற்ற அடியாட்கள் அவனை பிடிக்கப் பாய…
மாறன் : எலேய் மாரி அவரைப் பத்தரமா பாத்துக்கல நான் இவனுங்களை கவனிச்சுட்டு வந்துடறேன்… என
வெட்ட வந்தவர்களை வெளுக்க ஆரம்பித்தான்…

இதை கண்களில் முறைப்புடன் பார்த்துக்
கொண்டிருந்தால் மதியழகி…

மாறன் தனது வேட்டியை மடித்து விட்டுக் கொண்டு அவர்களை துவம்சம் செய்ய அந்த சண்டையை சுவாரசியமாக பார்த்துக் கொண்டு நின்றாள் மதியழகி…

ஒரு வழியாய் சண்டை நிறைவுக்கு வர அனைவரும் ஓடி விட கையில் சிக்கியவனைப் பிடித்து " சொல்லுல யாரு உங்களை அனுப்புனது" என மூக்கில் குத்தியவாறு கேட்டான்.

இரத்தம் வழிய அது முகமெங்கும் குங்குமம் பூசியது போல் ஆக… வலி பொறுக்காமல்

" ரங்கநாதன் அய்யா தான் அனுப்புனாருல… " என அவனும் உண்மையை கூறி விட…

மாறன் அவனிடமிருந்து பார்வையை விலக்கி மதியழகியைப் பார்த்தான்…

அவளது முகத்தில் அதிர்ச்சி பரவி இருந்தது…
அருகிலிருந்த கார்த்திகா : ஏட்டி மதி உங்க அப்பாரா ஒருத்தரை கொல்ல ஆள் அனுப்பி இருக்காரு… என்னால நம்பவே முடியலடி… "

மதியழகி : என்னாலயும் தான்டி… அப்பா என்னத்துக்கு இம்புட்டு பெரிய காரியம் பண்ணி இருக்காருனு தெரியலையே… என தோழியிடம் தனது மனதில் நினைத்ததைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்

மாறனின் கைப்பிடியில் இருந்தவன் அவனிடம் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு ஓடி விட்டான்…

மாரியின் பாதுகாப்பில் இருந்தவரை நோக்கி சென்ற மாறன்
" ஏன் அண்ணாச்சி எதுக்கு ரங்கநாதன் அய்யா உங்களை வெட்ட ஆளனுப்பனும் நீரு என்ன செஞ்சீரு… ??"

அவர் தொண்டையை செருமிக் கொண்டு
" அது அவருக்கும் எனக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம் அது தான் தம்பி இப்படி பண்ணிட்டாரு…

மாறன் : எது சின்ன மனஸ்தாபமா… ஏய் மாரி கேட்டியா இத… நா மட்டும் வரலைன்டு வைங்க உங்களுக்கு இன்னேரம் பாடை கட்டி இருப்பானுவ… உண்மையை சொல்லுங்க…

" ஒரு நிலம் விய்க்குற விஷயத்துல அவர ஏய்ச்சுப்புட்டேன் அதுக்குத்தேன் என்னை கொல்ல நினைச்சுருக்காரு… "

மாரி : ஆத்தி திருட்டுப் பயலை காப்பாத்தத்தேன் heroism பண்ணி அந்த புள்ள முன்னாடி சீன் போட்டியால… அதுவும் அது அப்பா கொல்ல சொன்னவனையே காப்பாத்தி இருக்க…
சனி பகவான் உனக்குப் பக்கத்துலயே பாய் போட்டு படுத்து இருக்குல… சாக்கிரதை…

மாறன் : ஆமா லே… இப்போ என்னப் பண்றதுனு தெரிலயே… என மதியழகியின் பக்கம் தனது பார்வையை திருப்பினான்…
அவ வேற என்னை கொல பண்ணப் போற மாதிரியேப் பாக்குறா…

மாறனிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம் வந்து
மதியழகி : ஏன் அண்ணாச்சி நெசமாலுமே எங்க அய்யனா தான் உங்களை வெட்டச் சொன்னாரா…

" ஆமா தாயி…" என்க மதியழகியின் முகம் வாடியது…
அதை கண்டு தாங்க முடியாமல்

" நீ feel பண்ணுறதுக்கு லாம் இவன் worth இல்ல…
இவனே ஒரு களவானிப் பய… உங்க அப்பாவ ஏமாத்திப்புட்டியான்… அதேன் அவரு இவனோட உசிரை எடுக்க சொல்லிட்டாரு… " என விளக்கினான்…
மதியழகி அவனை நிமிர்ந்து பார்த்து " அவன் களவானிப் பயலாவே இருந்தாலும் என் அப்பா செய்யப் பாத்தது தப்புத்தேன்… அதை மாத்த முடியாதுல… என மீண்டும் வருத்தம் கொண்டாள்…

மாறன் " சோகமா இருந்தாலும் சோக்கா ( அழகா) இருக்காளே… என அவளைப் பார்வையால் விழுங்கிக் கொண்டு இருந்தான்.

கார்த்திகா : மதி எம்புட்டு நேரம்தேன் பேசிட்டு இருப்ப வா வீட்டுக்குப் போகலாம் என அவளை இழுத்துக் கொண்டு போனாள் அவளுடைய தோழி…

கண்களால் அவளுக்கு போய்ட்டு வா என சைகை காட்டினான் மாறன்…

" தம்பி அப்பறம் என்ன காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி நா வரட்டுமா… " என நழுவப் பார்க்க…

மாறனும் , மாரியும் அவனை கிடுக்கிப்பிடியாக பிடித்துக் கொண்டார்கள்…

மாறன் : என்ன அண்ணாச்சி அதுக்குள்ளப் மோறிய இன்னும் எம்புட்டு சோலி இருக்கு… நட ல போலீஸ் ஸ்டேஷனுக்கு… " என அவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்…

மாறனின் வீட்டில்

பெரியமருது : ஏட்டி பார்வதி எங்க உம்மவன் சீனிக்கண்ணு அய்யா வீட்டுக்கு நெல்லு மூட்டையைப் போட்டுட்டு வர இம்புட்டு நேரம் ஆகுதா துரைக்கு… என உள்ளே வந்தார்…

அவருக்கு சொம்பில் நீர் எடுத்து வந்து கொடுத்த பார்வதி
" அவனை எந்நேரமும் திட்டிட்டே இருப்பியலா…அதெல்லாம் நீங்க சொன்ன வேலையை சரியா செஞ்சுருப்பியான்…என மகனைப் பற்றிப் பெருமையாகப் பேச…

பெரியமருது : கிழிச்சியான்… சொன்ன வேலையை செய்யாம சேகரு வீட்டுக்கிட்டக இருக்க கம்மாய் பக்கத்துல நின்னு அந்த வெட்டிப்பய மாரி கூட கதை பேசிட்டு இருக்கியான்… என்னத்தேன் அன்பா சொன்னாலும் அடிச்சு சொன்னாலும் உம்மவன் திருந்தப் போறதில்லை… என சலிப்புடன் கூறினார்…

இங்கு மதியழகியோ தன் தந்தையின் மேல் அளவு கடந்த கோபத்துடன் வீடு நோக்கி நடந்து கொண்டு இருந்தாள்…

அவளை வழியிலேயே மடக்கிய அவளது தோழி செங்கமலம் கூறிய விஷயத்தைக் கேட்டு ஆடிப் போய் விட்டாள் மதியழகி…

                     - தொடரும்...!

[IMG_20190709_193815|489x500 (upload://aMB4YwrARpqWnUJbTE3WoxSnZlL.jpeg)

1 Like

நினைவெல்லாம் நீயே கண்ணம்மாவின் ஐந்தாவது அத்தியாயம்…

" ஏட்டி மதி…

செங்கமலம் மூச்சிரைக்க மதியழகியை கூவி அழைத்த படி ஓடி வந்தாள்…

மதியும் மற்ற தோழியரும் அவளது அழைப்பில் திரும்பிப் பார்க்க அவர்களது அருகில் வந்துஆள் செங்கமலம்…

மதியழகி : ஏய் ஏட்டி எம்பேர ஏலம் போட்டுட்டு வாரவ…

கார்த்திகா : பதில் சொல்லுடி… ஏன்டி இழவு விழுந்தா மாதிரி கத்திட்டு வர…

செங்கமலம் : இழவு தான்டி விழுந்து போச்சு… நம்ம பர்வதம் செத்துப் போய்ட்டாடி…

என கூறும் போதே அவளுக்கு அழைக்கை வந்து விட்டது…

மதியழகி : அடியேய் நீ சொல்லுறது நெசம் தானாடி… ?
என அவளை உலுக்க அருகில் இருந்த தோழிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்…

கார்த்திகா : செங்கமலம் நீ விளையாட்டுக்கு தானடி சொல்லுற…

செங்கமலம் : இல்லடி கார்த்தி நம்ம பர்வதம் நம்மள விட்டுப் போய்ட்டாடி…

என அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். .

மதியழகி : எப்படிடி ஆச்சுது… அவள யாரும் தடுக்கலியா…

செங்கமலம் : அவ லவ் மேட்டர் வீட்லத் தெரிஞ்சு போச்சுடி அடிச்சு பயமுறுத்தி மறக்கச் சொன்னாவ . அதேன் அவ முடியாதுனு விஷம் குடிச்சு நாண்டுக்கிட்டா

மதியழகி அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.

பள்ளியில் இருந்தே தன்னுடன் இருந்து சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு அன்பாக பழகிய தோழிகளில் இவளும் ஒருத்தி…அவளை இனி காண முடியாமல் போனதே… என்ற துக்கத்தில் தேம்பி அழத் தொடங்கினாள்…

அவளது தோழியரும் அழ ஆரம்பிக்க செங்கமலம் அவர்களது அருகில் அமர்ந்து கொண்டு

" சாயந்திரம் தான் அவ சவத்தை எடுக்குறதுக்குள்ளயும் கடைசியா ஒரு தடவை அவளைப் பாத்துடலாம் வாங்கடி…

கார்த்திகா : அவ சொல்லுறதும் சரி தான் வாடி மதி என அவளை அழைத்துக் கொண்டு பர்வதத்தின் வீட்டிற்கு சென்றனர்…

அங்கு கூடியிருந்தவர்களின் அழுகையும் புலம்பல்களும் அவர்களை வரவேற்றது…

பர்வதத்தின் தந்தை நாற்காலியில் அமர்ந்து வாயில் தூண்டை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்க…

அவளது தாய் மகளின் உடலிற்கு அருகில் அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டு இருந்தார்…

மதியழகியைப் பார்த்ததும்

" மதி எம்பொண்ணைப் பாத்தியா எப்படி வளத்தேன் இவள… பாவி மவ இந்த ஆத்தாவை கூட நினைச்சுப் பாக்காம போய் சேந்துட்டாளே… ஒத்தைப் புள்ளைய காவு குடுத்துட்டு நிக்குறேனே…

மதியழகி அவர்களை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் தோழியின் அருகில் உட்கார்ந்து கொண்டு கண்களில் நீரை சொரிந்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள்…

மாறனும் , மாரியும் காவல் நிலையத்தில் இருந்து வந்து கொண்டு இருந்தனர்…

அப்போது அவர்களின் நண்பன் சேகர்

" எலேய் மாறா மாரி இங்கனதே இருக்கியலா… உங்கள எங்கனலாம் தேடுனேன் தெரியாமால…

மாறன் : எங்கள நீ தேடுனியா அதிசயமால்ல இருக்கு…

மாரி : ஆமாடே மாறா… எலேய் சேகரு சேதி என்னனு சொல்லுல…

சேகர் : அடேய் உங்களுக்கு விஷயமேத் தெரியாதால பர்வதம் இருக்குதுல… அவ நாண்டுக்கிட்டால…

மாறனின் முகம் நொடியில் சுணங்கியது…
மனது கனத்தது…

தன்னை அண்ணா என அழைக்கும் பாசமிகு தங்கைகளில் அவளும் ஒருத்தி…

மாரி : என்னடே சொல்லுறவ… அந்தப் புள்ள ஏன்டே அப்படி ஒரு காரியம் பண்ணுச்சு…

சேகர் : அந்தப்புள்ள லவ் விவகாரம் அவ அப்பா காதுக்கு போயிருச்சு அதேன் அவங்க வீட்டாளுக தொல்லை தாங்காம போய் சேந்துட்டா…

மாறன் : மனசு வலிக்குதுல… அண்ணே அண்ணேன்டு பாசமா கூப்புடும்… வாலே ஒரு எட்டு வீட்டுக்குப் போய் பாத்துட்டு வருவோம்…

என்று கூறிய மாறனைப் பின் தொடர்ந்து மாரியும் , சேகரும் பர்வதத்தின் வீட்டை அடைந்தனர்…

மாறனின் கண்ணிற்கு முதலில் தெரிந்தது…

பர்வதத்தின் பிணத்தின் அருகில் அழுது கொண்டிருந்த மதியழகி தான்…

மாரி : மதியழகியும் பர்வதமும் ப்ரண்ட்ஸ்ல… அதேன் அந்த புள்ள வந்துருக்கு… என மாறனின் காதில் சொல்ல

அந்த நேரம் பார்த்து மதியழகியும் மாறனை நிமிர்ந்து பார்த்தாள்…

அவளது கண்களில் கண்ணீர் அருவியாக கொட்ட அவள் எதுவும் பேசாமல் மறுபடியும் பர்வதத்தைப் பார்த்தாள்…

மாறனும் விழிகளில் கண்ணீரை நிரப்பிக் கொண்டு பர்வதத்தின் இறப்பை ஜீரணிக்க முடியாமல் தவித்தான்…

நேற்று கூட தன்னைப் பாசமாக வீட்டிற்கு சாப்பிட அழைத்த அன்புத் தங்கை இப்போது அவள் வீட்டிற்கு வந்தது தெரியாமல் கண் மூடி படுத்திருக்கிறாள்…

என நினைக்கும் போதே அவனுக்கு தொண்டை அடைத்தது…

அங்கு கூட்டத்தில் இருந்த ஒருவர்

" இப்படியே அழுதுகிட்டே இருந்தா எப்புடிப்பா…ஆகுற காரியத்தைப் பாருங்க…

என்க… பர்வதத்தின் பெற்றோரும் மதியழகியும் வெடித்து அழுதனர்…

அப்போது பர்வதத்தின் காதலன் அங்கு வந்து சேர்ந்தான்…

                🌺🌺🌺🌺

சாதி,மதம் பார்த்து தான் காதலிக்க வேண்டுமா…?

கடந்தகால நினைவுகளை மனதில் சுமந்து கொண்டே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தான் மாறன்…

                       - தொடரும்...

1 Like

பர்வதத்தின் காதலன் அங்கு வந்து சேர…
அவனை பிணத்தின் அருகில் கூட செல்ல விடாமல் தடுத்தனர்…

"எலேய் என்ன தகிரியம் இருந்தா என் பொண்ணு மனசக் கெடுத்து
காதலிக்க வச்சு அவளை இப்படி பொடமா பாக்காற கொடுமைய எங்களுக்கு குடுத்துட்டு
இப்போ வந்து அழுது நாடகமாடுறியா… ஈனப்பயலே. "

என பர்வதத்தின் அப்பா அவனின் சட்டையைப் பிடிக்க அருகிலிருந்தவர்கள்
" அவனைக் கொன்னுடுங்கய்யா என அவரை ஏற்றி விட…

ஆனால் அவனோ அவர்கள் பேசியதை எல்லாம் காதில் வாங்காமல் பர்வதத்தையேப் பார்த்துக் கொண்டு இருந்தான்…

கண்களில் இருந்து வரும் நீரின் வழியாக அவனின் காதலின் வலி தெரிய…

தன் உயிருக்குயிரானவள் பிரிந்து விட்ட துக்கத்தில் நான் மட்டும் இருந்து என்ன பயன் என்பது போல் அவர்கள் தன்னைக் கொன்றாலும் பரவாயில்லை என
கல்லுளிமங்கனாக நின்றிருந்தான்…

மதியழகி அதை வேதனையுடனும் அழுகையுடனும் பார்த்துக் கொண்டே மாறனைப் பார்த்தாள்…

அந்த நிமிடத்தில் அவனுக்கும் கோபம் துளிர்த்தது…

அவன் மேல் எந்த தப்பும் இல்லாதிருக்க காதலித்த எரே காரணத்திற்காக அவனை
சித்ரவதை செய்வது பொறுக்க மாட்டாமல் மாறன் எழுந்து அவர்களை தள்ளி விட்டான்…

" விலகுல… ஏம்லே அவங்க காதலை ஏத்துக்கிட்டு இருந்தா இன்னியேரம் அவங்க சந்தோஷமா வாழ்ந்து இருப்பாங்க… ஆனா உங்க உருப்படாத சாதி வெறினால ஒரு உயிரை கொன்னுப்புட்டு . இன்னொரு உயிரை எடுக்கப் பாக்கீக… நீங்கள்லாம் மனுசனா வேற என்னமுமால " மாறன் பேசப்பேச கூடி இருந்த கூட்டம் அவனை கொன்று விடுவது போல் பார்த்தனர்…

அதற்கு அசராமல் அவனோ
" அந்த புள்ள என்னைப் பாசமா அண்ணே அண்ணேனு கூப்புடும்… என் தங்கச்சிய அநியாயமா கொன்னுப்புட்டியலே… இந்த பாவத்தை எங்க போய் தீக்கப் போறீரு…"

" எலேய் என்ன விட்டா ஓவராப் பேசுறவ… நீயே வேத்து சாதிக்காரன்… உன்னிய உள்ள விட்டதேத் தப்பு… இதுல இந்த நாய்க்கு வக்காலத்து வாங்குதியோ… என அவனை அடிக்க முற்பட

மாறன் : நிறுத்துங்கல… சாதி சாதினு இப்படி கூப்பாடு போட்டுத்தேன் ஒரு உசிரு போயிருக்கு இன்னமும் அதையே கட்டிட்டு அழுவுதீய… கொஞ்சமாச்சும் திருந்துங்கலே…"

" நீ மொத வெளியப் போல… இவனை அடிச்சு தொரத்துங்கல…
என அவனை அடித்து வெளி அனுப்பினர்…
மாறனின் பின்னாலேயே சேகரும் , மாரியும் வர மாறனின் அழுகை வெடித்தது…

" எடேய் மாரி என் தங்கச்சிய இப்படி பாக்க முடியலல… என்னால… என அவனது தோளில் சாய்ந்து குலுங்கி அழுதான்…

பர்வதத்தின்அருகில் அமர்ந்து இருந்த மதியழகி தேழியின் முகம் பார்த்து
" ஏட்டி கூறுகெட்டவளே… யாரக்கேட்டுடி இந்த முடிவு எடுத்த… எங்களை விட்டுப் போவ உனக்கு எப்புடிடி மனசு வந்துச்சு… "

பர்வதத்தின் உடல் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது…

மதியழகி தன் வீட்டை அடைய அவளின் அழுத முகத்தைக் கண்ட தாய் ராஜலட்சுமி
" மதி அந்த புள்ள பர்வதத்தைப் பாக்கப் போனியோ .
மதியழகி எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்ட …

" இழவு வீட்டுக்கு போய்ட்டு வந்துருக்க குளிச்சுட்டு வா பொறவு பேசலாம்…
என அவளை குளியலறைக்குள் அனுப்பி விட்டு அவளுக்காக
காபி கலக்கினார்…

குளித்து முடித்து வெளியே வந்த மதியின் கைகளில் காபியை திணித்த ராஜலட்சுமி
" ஏட்டி மதி பர்வதத்தை நினைச்சா பாவமாத்தேன் இருக்கு… நீ வெசனப்படாத…பெத்தவங்க பேச்ச கேக்காம இஷ்டத்துக்கு பண்ணா இதுதேன் முடிவு புரிஞ்சுக்கிடு… அவள மாதிரி நீயும் இப்புடி ஏதாச்சும் செஞ்சுப்புடாத… சரியா… என மகளுக்கு அறிவுரை வழங்க

தாயை எந்த வித சலனமும் இன்றி தாயின் முகத்தை நோக்க
ராஜலட்சுமி : என்ன அப்படி பாக்குறவ… நா சொன்னது மண்டையில ஏறுச்சா… புரிஞ்சு நடந்துக்க… " என ஒரு தடவைக்கு பல தடவை கூறி விட்டு சமையல் வேலையைப் பார்க்கச் சென்றார்…

ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டே தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருந்தாள்…
பிறகு தாயிடம்
" அப்பா எங்கம்மா…

" அவரு டவுனுக்கு போயிருக்காரு… " என பதில் மொழிந்து விட்டு வேலையைப் பார்க்க…

" எப்பவும் என்னிட்ட சொல்லாம போவ மாட்டாரு… இன்னைக்கு என்னிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல… "

" ஆமா இவகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டுத்தேன் செம்யனுமாக்கும் அந்த மனுஷனுக்கு ஏதோ முக்கியமான சோலியாம் அதேன் வெரசா கிளம்பிட்டாவ… நீ போய் படி…

மதியழகி தனது அறைக்குள் வந்து தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்தாள்…

அழகான புன்னகையுடன் நின்றிருந்த பர்வதம் அவளது கண்களை கண்ணீரால் நிறைத்தது…

" ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லி இருக்கலாம்ல பர்வதம் என மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டு இருந்தாள் .
சோர்வில் உறங்கி விட்டாள் மதியழகி…

நாட்கள் கடிகார முள்ளாய் வேகமாக ஓடிக் கொண்டு இருந்தது…

பர்வதத்தின் நினைவு மதியழகியை வாட்ட அவள் இல்லை என்று மனதை திடப்படுத்திக் கொண்டு வளைய வர ஆரம்பித்தாள்…

கல்லூரி முடிந்து கார்த்திகாவின் வீட்டில் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு வீடு திரும்பினாள்…

அப்போது அவள் மட்டுமே அந்த பாதையில் செல்ல ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பாதையாதலால்… ஒரு வித பயம் அவளை ஆட்கொண்டது…

தான் தைரியசாலி என தன்னை சமாதானப்படுத்திக் கொண்டே வேக நடைப் போட்டாள்…

அப்போது அருகில் இருந்த புதரில் சல சல என சத்தம் கேட்க…

               - தொடரும்...![33|586x500](upload://hE1JStIivsARk91hiNgOBqDn6s5.jpeg)
1 Like

எட்டாவது அத்தியாயத்துடன் வந்து விட்டேன் நண்பர்களே… தாமதத்திற்கு மன்னிக்கவும்…

 1. நினைவெல்லாம் நீயே கண்ணம்மா…

மதியழகிக்கோ கால்கள் வெடவெடக்க ஆரம்பித்தது…

சல சல சத்தம் இன்னும் அதிகமாக கேட்க…
" ஆத்தி… என்ன இப்படி சத்தம் கேக்குது… என்னாவா இருக்கும்… ஒருவேளை காத்து கருப்பா இருக்குமோ… ??? பொம்பளைப்புள்ளைய ஈசியா பேய் புடிச்சுக்குரும்னு சொல்லுவாவலே…
என்று பயத்தில் தனது குலசாமியின் பெயரை உச்சரிக்க தொடங்கினாள்…

முனியப்பசாமி… காப்பாத்துப்பா… இங்க இருந்து நா வீட்டுக்கு பத்தரமா போய் சேந்துட்டேன்னா உனக்கு கெடா வெட்டுறேம்ப்பா… காப்பாத்துப்பா…
என நடந்து கொண்டு இருக்கு சலசலப்பு சத்தம் கேட்காமல் நின்று விட…

மதியழகி " அப்பாடா… முனியப்பசாமி… உன் மகிமையே மகிமைப்பா… சொன்னா மாதிரியே கெடா வெட்டிப்புடுதேன்… " என அவள் சந்தோஷத்தில் கைகளை வீசிக் கொண்டு நடக்க…

எதிர்பாராத விதமாக ஒரு ஒரு கை அவளின் இடுப்பைப் பிடித்து முரட்டுத்தனமாக இழுக்க…
மதியழகி நிலைத்தடுமாறி அந்த கைகளுக்கு சொந்தக்காரனின் நெஞ்சில் விழுந்தாள்…

இடுப்பில் இருந்து கரம் எடுக்கப்படாமல் இன்னும் இடுப்பை அழுத்தி பிடித்து இருக்க…
கன்னம் சிவந்து… கண்கள் மூடி நின்றாள் மதி…

ஒரு கண்ணை லேசாக திறந்து பார்க்க மோகனப் புன்னகையுடன் மாறன் அவளை புருவம் உயர்த்தப் பார்த்தான்…

அவனது கண்களில் தன் நிலை மறந்தவள் சுதாரித்துக் கொண்டு கைப்பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் பார்க்க… இடுப்பில் வைத்த கை இன்னும் அழுத்தமாக…

மதியழகி : எலேய் என்னலே கொழுப்பா என் இடுப்ப விடு…

என அவனிடமிருந்து போராட அவனோ அனாயசமாக
மாறன் : முடியாது என்னடி பண்ணுவ…

மதியழகி : வாடி போடி ன்ன வாயக் கிழிச்சுடுவேன்… பாத்துக்க…
என முறைப்புடன் கூற…

அவனோ " அப்படித்தேன் கூப்புடுவேன்… நீ ஏன்டி இவ்ளோ அழகா இருக்க… அத மொத சொல்லு…

மதியழகி மூக்கு விடைக்க

" அட கூறுகேட்டவனே… என்னலே உளறிட்டு இருக்கவ… என்னைய விடுலே…

மாறன் : நீ பதில் சொல்லு நா உன்னிய விடுதேன்…
என அவளை இடையோடு கை வைத்து அணைக்க…

அவனது இடைத் தழுவலில் அவளுக்கு என்னனென்னவோ ஆக…

மதியழகி : கையை எடு…
பலவீனமான குரலில் கூற…
மாறன் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே இடுப்பில் இருந்த கையை எடுத்து
அவளை அணைத்துக் கொண்டான்…
அவனது இந்த திடிர் செயலால் அதிர்ந்தாள்…

மதியழகி : மாறா என்னலே பண்ற…
என அவனது கையணைப்பில் இருந்து விடுபட நினைத்தாள்…

அவனது அணைப்பு இறுக இறுக அவள் பலவீனம் அடைய ஆரம்பித்தாள்…

மதியழகி அவனை நிமிர்ந்து பார்த்து
" ப்ளீஸ்டா மூச்சு முட்றா மாதிரி இருக்கு…
என இறைஞ்ச…
மாறன் அவளை விடுவித்தான்…

மதியழகி : ஏன்டா உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என்னிய கட்டிப்பிடிதப்ப…
என தனது கையில் இருந்த புத்தகத்தாலேயே அவனை அடித்தாள்…

அவன் சிரித்துக் கொண்டே " ஏய் சண்டைக்காரி போதும்டி… மாமனுக்கு வலிக்குது…

மதி : எது மாமனா… ? அடேய் உன்ன இந்த ஒரு தடவை மன்னிக்கிறேன் இனிமேல் இந்த வேலை வச்சுட்டுத் திரிஞ்ச அம்புட்டுத்தேன்…
என ஆள்காட்டி விரலால் மிரட்டினாள்…

மாறன் அந்த விரல்களுக்கு முத்தம் கொடுத்தான்…
மதியழகி : டேய்ய்ய் என்னடே தனியா போற புள்ளைக்கிட்ட வம்பிழுக்குறவ… என்ர அப்பாகிட்ட சொன்னாதேன் நீ சரிப்பட்டு வருவ போல…

மாறன் : மாமனாருட்ட தான சொல்லிக்க…
மதி : இவன… போடா… என தள்ளி விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தாள்…

மாறன் : மதி நில்லுடி…

மதி : செருப்பு வேற புதுசா போட்ருக்கேன் அடிச்சுடப் போறேன் போயிரு மருவாதையா…

மாறன் : ஏய் என்னடி செருப்பால அடிப்பேங்குற திமிரா…
என கோபமாய்க் கேட்டான் …

கொஞ்சம் அதிகமாக பேசி விட்டோமோ என அவனைத் திரும்பிப் பார்த்தாள்…

அவன் புன்னகையோடு கண்ணடிக்க…

மதியழகி : இவன் திருந்த மாட்டியான்.
என நடையைக் கட்டினாள்…

மாறன் : ஐ லவ் யூ டி சண்டைக்காரி…

மதியழகி பின்னால் திரும்பி கொன்றுவேன் என கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றாள்…

மாறனும் வீடு நோக்கி நடக்க அப்போது அவனது நண்பன் மாரி அங்கு வந்தான்…

" மாறா நான் சொல்லப்போற சேதியக் கேட்டு கோபப்படாதல…

                 - தொடரும்...
1 Like

தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியே வெளியே தெரியும் காட்சிகளை வெறித்துப் பார்த்தான்…

சில நிமிடங்களில் அவனது இதழ்களின் ஓரத்தில் புன்னகை தவழ்ந்தது…
மனதில் தன் காதலியின் நினைவுகள் எழ அதை தடுக்காமல் அவளது நினைவுகளில் தன்னை புகுத்திக் கொண்டான்…

மதியழகியிடம் காதலை கூறிய தினமும்,முதல் இதழ் தழுவலும் மாறனின் மனதை குளிர்வித்தது…

ஏய் சண்டைக்காரி உன்னிய எப்படிடி நான் இவ்
ளோ லவ் பண்ணுதேன்…என அவன் அவளிடம் பதில் தேட. .
" அட கூறுகெட்டப்பயலே எனக்கு எப்படிடே அது தெரியும்…இந்த கேள்வியையே கேட்டு உசிரை வாங்காதல…

மதியழகி தற்போது அவனுடன் இருந்திருந்தால் நிச்சயம் இப்படி ஒரு பதிலை தான் தந்திருப்பாள்…

இதழ்கள் தீண்டும் நேரம்
உன் கண்கள் என்னை காணும் நேரம்
என் காதலின் அளவு எல்லை மீறுகிறதடி…

இன்றும் அவனால் நம்ப முடியவில்லை…
தான் எவ்வாறு பார்த்தவுடன் அவள் மேல் காதல் கொண்டோம் என்று…
காதலுக்கு இப்படி ஒரு சக்தி உள்ளதா…

சில நேரங்களில் இந்த கேள்விகள் அவனுடைய மூளையில் உதித்தாலும் அவனது மனம்
பதிலளித்து விடுகிறது… ஏனென்றால் அவள் தான் அவனின் சரிபாதி… என்று தெரிந்த மனதிற்கு இக்கேள்வி சாதாரணம் அல்லவா…

ஆனால் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகள் தான் அவனை கலங்கடித்தது…
:rosette::rosette::rosette:
மாரி தலைதெறிக்க ஓடி வருவதும், வார்த்தையால் புதிர் போடுவதும் மாறனுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்தது போல் ஆழ்மனம் கூற…

மாறன் : என்னடே நடந்துச்சு ஏன் இப்படி ஓடி வரவ…

மாரி : நம்ம பர்வதத்தோட லவ்வர் இருக்கியான்ல அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்க தோப்புல செத்துக் கிடக்குறியான்ல…

மாறன் செவிகளில் விழுந்த அந்த செய்தியைக் கேட்டு மனம் சுக்குநூறாக உடைந்தது…

பர்வதத்தின் இறப்பையே தாங்கிக்கொள்ள முடியாத அவனால் இந்த இறப்பு மேலும் நோகடித்தது…
என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியாக மாரியை ஏறிட்டான்…

மாரி : மாறா வாடா போய் என்னன்டு பாக்கலாம்… என மாறனை இழுத்துக் கொண்டு சென்றான்…
:hibiscus::hibiscus::hibiscus:
மதியழகி வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் மாறன் அவளுக்கு கொடுத்த முதல் முத்தமும், அவளின் மீதான மாறனின் அளவற்ற காதலும் இதழ் மூலம் தெரிந்து கொண்டால் இருந்தாலும் முதல் பார்வையிலேயே தன் மேல் அவன் கொண்ட காதலை இன்னும் அவளால் உண்மை என ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை…

அவனுடைய காதலை ஏற்பதா? வேண்டாமா? என குழம்பித் தவித்த மனதை
தற்காலிகமாக அமைதிப்படுத்தினாள்…

" ஆசையாய் நீ வெளிப்படுத்திய காதலை
ஒப்புக் கொள்வதா ? மறுத்து விடுவதா ?
என பரிதவிக்கும் பேதையாய் நான்…"…

முதல் இதழ் தீண்டலால் அவளுள் நடுக்கம் பரவ ஒருவித பயத்துடனேயே வீட்டை நோக்கி நடந்தாள்…

வீட்டின் உள்ளே நுழைந்ததும் அவளது தமக்கையின் குரல் கேட்க மகிழ்ச்சி பொங்க புத்தகத்தையும்,பையையும் வைத்து விட்டு அக்காவைப் பார்க்க ஓடினாள்…
ஆனால் உள் அறையில் செவ்வழகியும் , தாயும் பேசியதைக் கேட்டு தடுமாறி நின்றாள்…

                             - தொடரும்..

Late update ku sorry pa… Adha compensate panra madhiri sunday and monday length ah episodes post pandren😊

1 Like

மாறனும்,மாரியும் பர்வதத்தின் காதலன் குணா இறந்து கிடந்த இடத்திற்கு சென்றனர்…
அந்த தோப்பிற்குள் ஒரு மரத்தின் கீழ்
இதைப் பார்த்து அதிர்ந்த மாறன்
குணாவின் அருகில் அமர்ந்து அவனது உடலை கண்ணீரோடு நோக்கினான்…

" என்னலே தப்பு பண்ணுன நீயு உனக்கு இப்படி ஒரு வந்துருச்சே…
என கதறி அழுதான்…
மாரிக்கும் கண்களில் இருந்து கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது…

மாறன் " ஏம்லே தம்பி இப்படி பண்ணுனவ… என அழுக…
அப்போது கூடி இருந்த ஊர் சனங்கள் எல்லோரும்
" சாகுற வயசாப்பா இந்த பயலுக்கு… இப்படி விஷம் குடிச்சு நாண்டுக்கிட்டியான்…
அவியன் குடும்பம் எப்புடித்தேன் இத தாங்கிக்கப் போகுதோ…
என ஊர்மக்கள் பலவாறு பேசிக் கொண்டு இருக்க அப்போது தான் மாறனுக்கு ஒரு விஷயம் புரிந்தது…

குணா இறந்து இவ்வளவு நேரம் ஆகியும் ஏன் அவர்கள் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை…
என மாரியிடம் சென்று
மாறன் : எலேய் மாரி இது தற்கொலை இல்லல… கொலை…என கூற மாரியின் கண்கள் பெரிதாகியது…

மாரி : மாறா என்னடே சொல்றவ… எப்புடில கண்டுபிடிச்ச…

மாறன் : குணா செத்துக் கிடக்கியான் அவனோடப் பொணத்தைப் பாக்கக்கூட அவன் குடும்பம் வரலல… ஊர விட்டு ஓடிட்டாங்களோனு சந்தேகமா இருக்குல…
என மாரியிடம் தனது ஐயத்தைப் பரிமாற…

" ஏப்பா இங்க இவன் செத்துக் கிடக்கியான் அங்க அவன் வீட்ல யாருமே இல்லப்பா… வீடே பூட்டிக் கெடக்குப்பா…
என அவனது யூகத்தை உண்மையாக்கினார்… ஒருவர்…

மாரி : எவம்லே இதுக்கு காரணம்…?
மாறன் : வேற யாரு பர்வத்ததோட அப்பா சீமையன்தேன்…

மாரி : …அந்த ஆளுக்கு அவன் மவ செத்த பின்னாடியும் சாதி வெறி அடங்கல போலல… மாறா…

மாறன் : வால அந்தாளு வீட்டுக்கே போய் கேப்போம் வேத்து சாதினா கேவலமா போச்சா அவனுக்கு…
என மாரியுடன் பர்வதத்தின் வீட்டிற்கு சென்றான்…
:hibiscus::hibiscus::hibiscus::hibiscus:

செவ்வழகியும் தனது தாயும் பேசுவதை கேட்க நேர்ந்ததால் அறையின் வாசலிலேயே நின்று விட்டாள்… மதியழகி…
அவர்களின் உரையாடல் இதுதான்…

செவ்வழகி : என்னம்மா சொல்றவ… பர்வதம் மருந்த குடிச்சு செத்துட்டாளா…

தாய் : ஆமாடி என்ன பண்ண சொல்றவ…அவ தலையெழுத்து போய் சேந்துட்டா அய்யனும்,அம்மையும் எத்தனை தரம் புத்திமதி சொல்லி இருப்பாவ… கேட்டாளா… அதேன் போய் சேந்துட்டா…

செவ்வழகி : அந்த பையன் என்னப் பண்றியானாம்…
தாய் : அவனா அந்த தருதலையை உங்க அய்யா ஆளுகளை அனுப்பி மருந்து
ஊத்தி விட்டு கொல்லச் சொல்லிட்டாவ… இந்நேரம் அவன் செத்துருப்பியான்…

செவ்வழகி அவள் பங்குக்கு…
" செத்துத் தொலையட்டும்… வேத்து சாதியில பொறந்துட்டு நம்ம சாதிப் பொண்ணுக் கேக்குதோ… அந்த ஈத்தரைப் பயலுக்கு… என வசை பாட…

ஏதும் அறியா காதலை மட்டும் உள்ளத்தில் கொண்டு இருந்த அந்த இரு உன்னதமான உயிர்களை கொலை செய்ததை கேள்விப்பட்ட இருவரும் இத்துனை சாதாரணமாக பேசிக் கொள்வதையும் அதை ஆமோதிப்பதையும் மதியழதிக்கு இதயம் வலித்தது…

                 - தொடரும்...![39|690x422](upload://hbTVzAtZpxZxAXWAY3TcVHKQA9d.jpeg)
1 Like

மதியழகி அறையின் வெளியே இருந்து கொண்டு தன் சகோதரி மற்றும் தாயார் பேசியதை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டு இருந்தாள்…

அப்போது செவ்வழகி : என்னம்மா இன்னும் மதியைக் காங்கலல… இந்நேரம் காலேஜ் விட்ருப்பாங்களே…

தாய் : அவ கார்த்திகா வீட்டுக்கு போய்ட்டு அப்பறம் வர்றேன்னு சொன்னா வந்துருவா…

செவ்வழகி : ஓஓ எதுக்கும் அவ மேலயும் ஒரு கண் இருக்கட்டும்மோவ்… அவ ஏதாவது இந்த மாதிரி பண்ணணிடப் போறா சூதானமா இருங்க…
என தாய்க்கு உபதேசம் அளித்துக் கொண்டு இருந்தாள்…

சுதாரித்த மதியழகி தற்போது தான் வீட்டிற்கு வருவது போல்
" அம்மா… எங்கன இருக்க பசிக்குது எனக்கு சோறு போடு…
என கத்தினாள்…

" இந்தா வந்துட்டா… வா என இருவரும் மதியழகியிடம் வந்தனர்…

மதியழகி : அக்கா எப்போ வந்தவ…
என அவளிடம் பேச்சுக் கொடுத்தாள்…

செவ்வழகி : இப்பத்தேன்… வந்தேன் உன்னைக் கேட்டா நெ கார்த்திகா வீட்டுக்கு போயிருக்கனு அம்மா சொன்னாவ.எப்புடி படிக்குற…

மதியழகி : நான் நல்லாத்தேன் படிக்கிறேன்… நீ சாப்பிட்டியா…

செவ்வழகி : இல்லட்டி… நீ வந்தவுடனே சாப்பிட்டுகலாம்ன்னு இருந்தேன்…

மதியழகி : சரி இரு… அம்மா… ஏன்டி கத்துறவ… இரு சாப்பாடுத்தேன் எடுத்துட்டு வந்துட்டு இருக்கேன்…
என இரண்டு தட்டுகளில் சாப்பாட்டுடன் வந்தார்…

மதியழகி வெளியில் தாய் மற்றும் செவ்வழகியுடன் இயல்பாக நடந்து கொண்டாலும் உள்ளூர அவர்களின் மேல் கோபம் கொளுந்து விட்டெரிந்து கொண்டு தான் இருந்தது…

இவர்கள் பேசிய வார்த்தைகள் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்க…
சாப்பிடாமல் தட்டில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தவளது கையில் ஓங்கி அடித்தார் ராஜலட்சுமி…

மதியழகி : ஆஆஆ அம்மா…

ராஜலட்சுமி : சாப்பிடாம தட்டுல என்ன கோலம் போட்றவ… விரல ஒடிச்சுடுவேன்…
அதைப் பார்த்து செவ்வழகி வாய் விட்டு சிரித்தாள்…

மதியழகி சற்று முன்னால் அவர்களின் சம்பாஷணைகளைக் கேட்டு ஏற்கனவே கோபத்தில் இருக்க இதை சாக்காக வைத்து…
" போம்மா எனக்கு சாப்பாடு வேணாம்…என தட்டைத் தூக்கி எறிய…

அது பறந்து சுவற்றில் மோதி கீழே உருண்டது…
ராஜலட்சுமியும் , செவ்வழகியும் அவளது இக்கோபத்தின் உண்மை அறியாமல் அவர் அடித்ததால் தான் தட்டை விசிறி அடித்து இருக்கிறாள் என நினைத்து

ராஜலட்சுமி : அடியேய் ராங்கிக்காரி… வந்தேன் வச்சுக்க கையை ஒடச்சுப்புடுவேன்…
என்னாண்டு நினைச்சுட்டு இருக்கறவ… கொழுப்போ… உனக்கு… சோத்த தூக்கி எறிஞ்சுட்டுப் போறவ… இதெல்லாம் உன் அப்பன் குடுக்கற தைரியம் வரட்டும் அந்த மனுஷன்… உனக்கு இருக்கு இன்னைக்கு…
என அவர் பாட்டுக்கு அவளைத் திட்டிக் கொண்டு இருக்க…

மதியழகி எதுவும் சொல்லாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்…

தாய் : ஏதாவது பேசுறாளா பாரு… என்ன நெஞ்சழுத்தம் இருக்கனும் உனக்கு…
என மீண்டும் தொடர…

செவ்வழகி : விடும்மா அவ அப்படித்தான்னு தெரியும்ல உனக்கு… ஏன் இப்படி கத்துற…
என கீழே விழுந்து கிடந்த தட்டை எடுத்து அதில் இருந்து சிதறிய சோற்றையும் சுத்தம் செய்து சமையலறையில் வைத்து விட்டு வந்தாள்…

ராஜலட்சுமி : இவளுக்கு திடிரென என்ன ஆச்சுனு தெரிலடி… அந்த பர்வதம் செத்ததுல இருந்தே ஒரு மாதிரி நடந்துக்குறா… ஒரு வேளை அவளோண ஆவி ஏதாச்சும் இவளுக்குள்ள புகுந்துருக்குமோ…
என செவ்வழகியிடம் பயந்த குரலில் கூறிக் கொண்டு இருந்தார்…

அதை அறைக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டு இருந்த மதியழகி
" எனக்கு பேய் புடிக்கல… உங்களுக்கு தான் சாதின்ற பேய் புடிச்சு ஆட்டுது… கூடிய சீக்கிரம் அந்த பேய ஓட்டுறேன்…
என மனதில் கருவிக் கொண்டாள்…

மாறனும்,மாரியும் பர்வதத்தின் வீட்டை அடைந்தனர்…
மாறன் : யோவ் சீமையா… வெளிய வாயா…
என மாறன் கத்த…

உள்ளிருந்து வந்த வேலைக்காரன்
" யார்ரா அது அய்யாவ மரியாதை இல்லாம கூப்புட்றது… வாயத் தைச்சுப்புடுவேன்…

மாறன் : ஏய் நீ சும்மா இருல… உன் அய்யாவோட யோக்கியதைக்கு மரியாதை ஒன்னுதேன் கேடு…

                            - தொடரும்...

1 Like