பாலைமர பேய்

பாலைமர பேய்
0

பாலைமர பேய்

என் பெயர் ஆதி. நான் கேரள மாநிலத்தில் மலைப்புரம் டிஸ்ட்ரிக்ட்டை சேர்ந்தவன். பல வருடங்களாக துபாயில் வசித்து வருகிறேன். விடுமுறைக்காக எனது உறவினர்களை சந்திக்க கேரளாவிற்கு வந்தேன்.

எனது சொந்த ஊர் மஞ்சேரிக்கு அருகில் உள்ளது. இரவு நேரத்தில் அங்கு பேய்கள் உலவுவதாக பல கதைகள் உண்டு. ஆனால் எனக்கு அந்தக் கதைகளில் நம்பிக்கை இல்லை அதனால் தைரியமாக எனது காரை ஓட்டிக்கொண்டு அந்தப் பாதையில் இரவு வழியில் சென்றேன்.

அந்த இரவு நேரத்தில் ரோட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட இரு சக்கர வண்டி களையும், கார்களையும் தவிர கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வெறுமையாகவே காட்சியளித்தது.

நான் வழியில் இருந்த பெட்டிக்கடையில் எங்கள் ஊரில் அதனைத் தட்டு கடை என்று அழைப்பது வழக்கம் ஒன்றில் நிறுத்தி சூடான லெமன் டீ பருகினேன். பின்னர் சிகரெட் ஒன்றினைப் பற்ற வைத்துக் கொண்டேன் அங்கிருந்தவர்களிடம் போகும் பாதை பாதுகாப்பானதா என்று நைசாக விசாரித்தேன். அந்த கடைக்காரர் பாதுகாப்பான பாதை தான் என்று பதில் சொன்னார் நான் அவரிடம் சில வருடங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் ரத்தம் கக்கி இறந்ததாக கேள்விப்பட்டேனே என்று கேட்டேன் அதுவுமில்லாமல் முன்பே இது போல் பலர் ரத்தம் கக்கி இறந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே என்று எனது சந்தேகத்தை கடைக்காரரிடம் சொன்னேன். அதற்கு அவர் வழியில் பார்த்தீர்கள் அல்லவா, முழுவதும் மாமரங்களும் தென்னை மரங்களும் நிறைந்த தோட்டங்கள் நிலங்கள். ரியல் எஸ்டேட் காரர்கள் சிலர் இந்த நிலத்தை மலிவு விலையில் அபகரிக்க எண்ணி அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார்கள் அவ்வளவுதான். பல வருடங்களாக நான் இந்த கடையை நடத்தி வருகிறேன் என் கண்களில் இதுவரை ஒரு பேயும் தென்பட்டதில்லை என்று சொல்லி சிரித்தார். அவர் தந்த தைரியத்தில் நான் எனது பயணத்தை தொடர்ந்தேன்.

வழியில் எங்கும் கருகும் என்று இருள் அதற்கு நடுவில் அடர்ந்து பாதியை மறைத்துக்கொண்டு நின்றிருந்த ஒரு பெரிய மரம் மட்டும். அந்த மரத்தின் நடுவே ஒரு கிளையிலிருந்து ஒரு தாவணி நடுரோட்டில் சுருக்கு முடித்து விட்டது போல் தொங்கியது. தூக்கு தண்டனை கைதிகளுக்கு சுருக்கிட்டு விட்டு இருப்பார்களே . அது போல் அந்த சுருக்கு நடுரோட்டில் காற்றில் அங்குமிங்கும் ஆடியது. அது எனது மனதில் சிறிது திகிலை எழுப்பியது இருந்தாலும் சமாளித்து கொண்டு எனது பயணத்தை தொடர்ந்தேன். ஆனால் அந்த இடத்தை நெருங்க நெருங்க அந்த சுருக்கில் ஒரு பெண் உருவம் ஒன்று பளிச் பளிச்சென்று மின்னி வந்தது . அந்தப் பெண்ணின் கால்கள் நடுரோட்டில் தொங்கிய கால்கள் அங்கும் இங்கும் ஆடின. ஒரு கண்களை இமைத்த பின்பு பார்த்தால் அங்கு அந்தப் பெண் இல்லை மறுபடியும் நோக்கும் போது அந்தப் பெண்ணின் உருவம் தெரிந்தது. இது எனக்கு இருதயத்தை நிறுத்தி விட்டது போல் ஒரு உணர்வு திகில் பயம். என் கைகள் கால்கள் செயலற்று நின்று விட்டது. இருந்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்.

சோட்டானிக்கரை பகவதி அம்மனை வேண்டியபடி எனது முழு பலத்தையும் காலில் செலுத்தி ஆக்சிலேட்டரை உச்சபட்ச வேகத்தில் செல்ல அழுத்தினேன் யாரும் இல்லாத பாதையில் அதிவேகத்தில் எனது கார் பறந்தது புயல் வேகத்தில் சென்று எனது அத்தை வீட்டை அடைந்தேன்.அவர் வீட்டிற்கு சென்று எப்படி அடைந்தேன் என்று எனக்கு தெரியவே இல்லை. உள்ளே சென்று மூச்சுவாங்கி மூச்சு வாங்கிய நின்றவனை கண்டு எண்ணத்தை ஆசுவாசப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்.

பேய் பேய் என்று நான் திணறியதை கண்டு நேரே பூஜை அறைக்கு அழைத்துச் சென்று இறைவனின் பிரசாதத்தை நெற்றியில் இட்டார் தனது மகனை அழைத்து குடிப்பதற்கு தண்ணீரும் குளிப்பதற்கு மஞ்சளும் புனித நீரும் கலந்த தண்ணீரையும் ஏற்பாடு செய்யச் சொன்னார்.

அதன் பின்னர் நான் குளித்துவிட்டு வந்தவுடன் வந்தவுடன் சூடான பாலை பருகத் தந்தார் எனது மனது சற்று தெரிந்தது பின்னர் அத்தையிடம் நடந்த சம்பவத்தை விவரித்தேன் ஒரு முறை கண்ணை இமைத்தவுடன் தோன்றிய அந்தக் கால்களும் மறுமுறை கண்ணை வைத்து போது தெரிந்த வெறும் சுருக்கும் அப்போதும் என் மனம் உடலை நடுங்கச் செய்தன. எனது அத்தை அதன் பின்னர் என்னிடம் அங்கு நடந்த கதையினை சொன்னார்

எண்பது வருடங்களுக்கு முன்பு அவ்விடத்தில் ஒரு பெரிய குடும்பம் ஒன்று வசித்து வந்ததாகவும், அவர்கள் வீட்டில் பல வேலைக்காரர்கள் வேலை செய்ததாகவும் சொன்னார். அந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு நபர் அவர்கள் வீட்டில் வேலை செய்த ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்டார் அதனை பிடிக்காத குடும்பத்து உறுப்பினர்கள் அந்தப் பெண்ணைக் கொலை செய்து விட்டதாகவும், அதிலிருந்து அந்தப் பெண் ரத்தம் குடிக்கும் பேயாக மாறி அந்தப்பக்கம் வருபவர்களை கொன்று ரத்தம் குடிப்பதாகவும் குடிப்பதாகவும் கதைகள் உலவுகிறது. அதனை ஊர்ஜிதப் படுத்துவது போல பல கொலைகள் அங்கு நடந்திருக்கிறது. அதற்கான காரணங்களை கண்டறிய படாமலேயே இன்னும் தொடர்கிறது. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இரவு நேரங்களில் அந்த பாதையினை பயன்படுத்துவது இல்லை என்று சொன்னார்.

பேய் பிசாசுகளின் மேல் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இருந்ததில்லை ஆனால் அந்த சம்பவத்திற்குப் பின்னர் என் மனதில் பல கேள்விகள்

தூக்கில் தொங்கிய பெண் யார் நான் மட்டும்தான் பார்த்தேனா அல்லது அந்த ஊர்க்காரர்கள் அந்த சம்பவத்தை பார்த்திருக்கிறார்களா

அந்தப் பாதை பேய் நடமாட்டம் இருக்கும் பாதை என்றால் அங்கு இருக்கும் கடைக்காரர் மட்டும் எப்படி இவ்வளவு நாள் உயிரோடு இருக்கிறார்

இந்தக் கேள்விகள் எல்லாம் என் மனதில் இன்னமும் விடை கண்டுபிடிக்க முடியாமலேயே இருக்கின்றன. இதற்கான பதிலை உங்களில் யாராவது தர முடியுமா

1 Like