மனதை மாற்றிவிட்டாய் - கதைத் திரி

மனதை மாற்றிவிட்டாய் - கதைத் திரி
0

1 - மனதை மாற்றிவிட்டாய்

விடிய விடிய தன் அன்பை மழையாக கொட்டித் தீர்த்து காலை தென்றல் வெண்சாமரமாய் வீச மெல்ல அனைத்து உயிர்களையும் கதிரவன் தட்டி எழுப்ப மெதுவாக வந்துகொண்டிருந்த வேளையில் அதிகாலை பூத்த அழகிய மலராய் புன்னகை தவழும் முகத்தோடு கோவிலுக்கு புறப்பட்டாள் திவ்யஸ்ரீ. “திவி மா கொஞ்சம் காப்பியாவது குடிச்சிட்டு போடா” என்ற அவள் தாயிடம் “இல்லமா நான் கோவிலுக்கு போற வரைக்கும் எதும் சாப்பிடமாட்டேன்ல pls போயிட்டு வந்து சாப்டுக்கறேன்மா” என செல்லம் கொஞ்சி அவள் தாய் தலையசைத்ததும் மகிழ்வுடன் வேகமாக வெளியேறினாள்.

அன்பே உருவான அவளது தாய் எப்போதும் போல தான் பெற்ற செல்வத்தை நினைத்து பூரிப்பும், பெருமையும் ஒரு சேர அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள் . “என்ன மகா என் பொண்ண சைட் அடிக்கிறியா?, அதுக்கு வேற ஒருத்தன் வருவான் நீ என்ன தானே சைட் அடிக்கணும்” என்று கேட்டு தன்னை வம்புக்கிழுக்கும் தன் கணவரை ஓரமாக முறைத்தாள் மகாலக்ஷ்மி .

“உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே கெடையாதா…, கல்யாண வயசுல பொண்ண வெச்சிட்டு இன்னும் இப்படியா பேசுவீங்க?” என்றாள் .

"அதேதான் நானும் சொல்றேன் என் பொண்ண நீயே இப்படி பாத்து கண்ணு வெச்சுடுவ போல, என் மருமகனுக்கும் கொஞ்சம் மிச்சம் வெய் மா and உனக்கு தான் நானிருக்கேனே " என மீண்டும் அவரது முறைப்பிற்கு ஆளானார் மகாலிங்கம்.

என்ன தான் வெளியில் முறைத்தாலும் உள்ளுக்குள் அவரது இந்த சீண்டலை மகாவினாலும் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தன்னில் துளியளவும் குறையாத அன்போடு வாழும் ஜீவனிடம் எப்படித்தான் கோபம் கொள்வது என நினைத்து அவரை புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தார் மகாலக்ஷ்மி. இருப்பினும் கணவரிடம் “விளையாடாதீங்க நான் அவளுக்காக எத நினைச்சி கவலைப்படறேனு உங்களுக்கு தெரியாதா ?” என வினவியபோதே எதுக்காக என் பொண்ண நினச்சு கவலைப்படணும் என ஆஜரானார் மகாலிங்கத்தின் அண்ணன் ராஜலிங்கம் உடன் அவரது தர்மபத்தினியும், சாந்தசொரூபனியுமான ராஜலக்ஷ்மி.

“அப்படி கேளுங்க அண்ணா?” என்றவரிடம் தன் பிரதான முறைப்பையும் தனது அக்கா மாமாவிடம் இன்முகத்தையும் காட்டினாள் மகாலக்ஷ்மி …“எல்லாம் அவ கல்யாணத்த பத்திதான் அக்கா” என்றாள் . இது அவர்கள் அனைவருக்கும் புரிந்திருப்பினும் அதற்கு கவலைப்படுவது அவசியமற்றது என ராஜலிங்கம் கூறினார்.

"எதுக்குமா கவலை? நல்ல அருமையான, லக்ஷணமான பொண்ணு, பி. ஈ முடிச்சிட்டா வேலைக்கும் போறா , தங்கமான குணம், தைரியமான பொண்ணும் கூட , குறையே சொல்லமுடியாது .அவள பாக்கிற எல்லாருக்கும் எப்படியும் பிடிக்கும் என்று அவர் கூறியதை கேட்டும் இன்னும் தெளியாமல் இருப்பதை உணர்ந்த ராஜலக்ஷ்மி அவரிடம் வந்து “மகா அவ நம்ம எல்லாருக்குமே செல்ல பொண்ணு தான். நேத்து ஜோசியரை பாத்து கேட்டிட்டு வந்திட்டோம் இன்னும் ஒரு 8 மாசம் கழிச்சு அவளுக்கு வரன் பாக்க ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டாங்க போதுமா ?” என வினவியவரை அன்புடன் அணைத்துக்கொண்டார் மகாலக்ஷ்மி.

ராஜலக்ஷ்மி அறியாததா… திவியின் கல்யாணத்தில் தடை ஏற்படும், திருமணம் தள்ளிப்போகும், கண்டம் காத்திருக்கிருக்கிறது என்று கேட்டதில் இருந்து அவருக்கும் அதே கவலை தான்…இருப்பினும் தன் உடன்பிறவா தங்கையான மகா வை தேற்றும் பொறுப்பு அவரிடம் உள்ளதே…இந்த செய்தி அனைவருக்கும் தெரிந்திருப்பினும் திவியின் படிப்பு , வேலை , குணம் எதும் குறைவின்றி நிறைவையே கண்டதால் காலப்போக்கில் அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை… ஆனால் அந்த இரு தாய்மார்களின் உள்ளம் அவ்வாறு அமைதி பெறவில்லை .

2 வருடம் கழித்து தன் மொத்த குடும்பத்தையும் முக்கியமாக தன் தாய் சந்திரமதியை காணும் ஆவலில் பாரினிலிருந்து டிக்கெட் கிடைத்ததும் கிளம்பிவிட்டான் ஆதி. surprise ஆக இருக்கட்டுமென இன்று வருகிறேன் என்பதை எவரிடமும் சொல்லவில்லை . இந்த வாரத்தில் வருவதாக மட்டும் முன்கூட்டியே கூறியிருந்தான் . குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் பிடித்த அனைத்தையும் வாங்கி வந்தாலும் அம்மாவுக்கு பிடித்த எதை செய்து அவர்களை மகிழ்விக்கலாம் என யோசித்தவனுக்கு அம்மா போனில் பேசும்போது வீட்டின் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவில் பற்றி கூறியது நினைவில் வந்தது. அவர்களுக்கு பூஜை கோவில் என்றால் மிகவும் இஷ்டம் என்பது தெரியும். அங்கு சென்று விட்டு ப்ரசாதத்தோடு சென்றால் அம்மா மகிழ்வார்கள் என்பது நிச்சயம் என்று கோவிலுக்கு வண்டியை விரட்டினான். அய்யர் “அர்ச்சனைக்கு பேர் நட்சத்திரம் சொல்லுங்கோ?” என வினவ அம்மனை வழிபட்டு நின்றவனுக்கு சுத்தமாக ஞாபகம் வரவில்லை .

ஆனால் “பேரு ஆதித்யா நட்சத்திரம் அனுஷம்” என எதிர் திசையில் இருந்து குரல் வந்தது .

ஆதி, யாரிவள் என் பெயருக்கு இவள் எதற்கு அர்ச்சனை செய்கிறாள்? என நினைத்து கொண்டிருக்கும் போதே அவள் இவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். ஒரு நிமிடம் தன்னை மறந்தாலும் “இவள் என்ன லூசா எதுக்கு இப்போ சிரிக்கிறா?” என எண்ணினான் .

அவளிடம் பூஜை தட்டை தந்த அய்யர் “2 பேரும் சேமமா இருங்கோ என்றதோடு நல்லா அம்சமான ஜோடிப்பொருத்தம்” என்றார். அவள் திடுக்கிட்டு விளிக்கும் முன் அய்யர் சென்றுவிட்டார் . அவனிடம் திரும்பினால் அவனோ இவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு அவள் தந்த பூஜை தட்டை வாங்கிவிட்டு விருட்டென்று கிளம்பிவிட்டான்.“இவன் என்ன லூசா எதுக்கு இப்போ இப்படி மொறைக்கிறான்?” என எண்ணினான்.

பின்பு அவன் கார் எடுக்கவந்தபோது அவள் அங்கேயே நின்றாள்.

இவனுக்கு அருகில் இருந்த பூ விற்பவள் இவனை அழைத்து “தம்பி கொஞ்சம் பூ வாங்கிக்கோ” என்றாள் . இவனோ "இல்லைங்க நான் சாமி கும்பிட்டேன் பூஜை முடிஞ்சது " என்றான் . அதற்கு அவள் “அது சரி பூஜைக்கு மட்டும் தான் பூ வாங்குவீகளோ ? உன் பொண்டாட்டிக்கு வாங்கித்தரலாம்ல” என்றாள் .

என்ன உளறல் என்று பின்னாடி திரும்பி பார்த்தால் அந்த பெண் இவன் கார் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள்.

அவளை என்ன செய்தால் தகும் என மனதுக்குள் அர்ச்சனை செய்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இருப்பினும் நடந்தவற்றை எண்ணியவனுக்கு அவன் நண்பன் ராஜேஷிடம் இருந்து call வந்தது. வீட்டில் சென்று பேசிக்கொள்ளலாம் என எண்ணி அதை cut செய்தவனுக்கு அந்தநேரத்தில் தேவையில்லாமல் ராஜேஷ் அளித்த அறிவுரை ஞாபகம் வந்தது .

“மச்சான், நீ படிச்சது பாய்ஸ் school அதுவும் வளந்தது hostel ல, college - ug ம் boys college, foreign la mba பண்ண so அங்க girls எல்லாருமே கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே மாடர்ன் அண்ட் தாராளம் அதனால உனக்கு பிடிக்கல …அங்க பொண்ணுங்க காலச்சரே வேற. இங்க அப்படி இல்ல and உனக்கு நம்ம ஊர் பொண்ணுங்கள பத்தி தெரில… அவங்க ஆள பாத்ததும் எடைபோட்ருவாங்க . ரொம்ப ஷார்ப் மச்சான் . ஒண்ண ஆசைப்பட்டு அடையணும்னு நினைச்சிட்டா கண்டிப்பா அதுக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவாங்கடா… உன் பணத்துக்காக, உன் கரெக்ட் பண்ண எவ்ளோ வேணாலும் நடிப்பாங்க. பேசி பழகி நம்மள தெளிவா ஏமாத்தி நம்ம குடும்பத்த விட்டு பிரிச்சிடுவாங்க … காதலிக்கறேன்னு சொல்லி ஊர் சுத்திட்டு கடைசில வீட்ல ஒத்துக்கல என்ன மன்னிச்சிடுங்கன்னு சொல்லிட்டு போறவங்கள இருந்து வீட்ல பாத்து பாத்து கல்யாணம் பண்ணி வெச்ச பெரியவங்க ஒரு வார்த்தை சொன்னாங்கன்னு அது பெருசுபடுத்தி நம்மளையே நம்ம குடும்பத்துக்கு எதிரிஆக்கிறவங்க , பெத்த குழந்தைய வெச்சு பணம் சம்பாதிக்கறவங்க வரைக்கும் எல்லா பொண்ணுங்களும் இருக்காங்க . போர்க்களத்துக்கே போகாதவன எப்படி மச்சான் வீரன்னு சொல்றது ? சோ இங்க நீ உஷாரா யாருகிட்டேயும் அப்படி ஏமாறமா இருந்து காட்டுடா. அப்போ ஒத்துக்கறோம் உன்ன யாரும் ஏமாத்தவேமுடியாதுன்னு.” என்று தன் காதல் மனைவி தன்னை விட்டு சென்ற கோபத்தில் இருந்த ராஜேஷிடம், “என்னை போல எல்லாத்தையும் ஜாலியா எடுத்துகோடா and இந்த லவ் எல்லாம் இல்லாம நான் எவ்வளோ சந்தோசமா இருக்கேன் பாரு” என்ற ஆதி செய்த அறிவுரை அவனை இவ்வாறு பேசவைத்தது . ஆனால் அப்போது தெரியவில்லை அவனது இந்த அறிவுரையும் நண்பனின் வாழ்வை மாற்றப்போவது பற்றி.

இதை யோசித்துக்கொண்டே அப்படி என்றால் இவளும் அந்தமாறி fraud இல்ல ஏமாத்தற பொண்ணா இருப்பாளோ…இல்ல பாத்தா அப்படி கெட்ட பொண்ணா தெரிலையே …என நினைத்து கொண்டே

சிறிது தூரம் சென்றபின் அவள் scooty இல் இவன் காருக்கு பின்னாலையே வந்துகொண்டிருந்ததை பாத்தான் .“இவ இப்போ எதுக்கு நம்மள பாலோ பண்ணறா” என எண்ணியவன் தான் சில நொடி முன்பு அவளை பற்றி என்னையதை மறந்து அவள் கண்டிப்பாக தப்பானவள் தான் என முடிவெடுத்து அவளை சரமாரியாக மனதுக்குள் திட்டிவிட்டு வண்டியை புயலென கிளப்பி வீடு வந்து சேர்ந்தான் .

1 Like

Test

1 Like

:blush: :ok_hand:

1 Like

2 - மனதை மாற்றிவிட்டாய்

வீட்டை அடைந்ததும் அவனை அங்கு எதிர்பாராத அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவன் விரைந்து தன் தாயிடம் சென்று அவரை அணைத்துக்கொண்டு "சொன்ன மாதிரியே வந்துட்டேன் அம்மா. இனிமேல் எப்போவும் உங்ககூட தான் இருப்பேன் " என்றவனை ஆனந்த கண்ணீரோடு இமைக்காமல் பார்த்தாள் அவனது தாய்.

“என்ன சந்திரா, ஆதிய மொத தடவ பாக்கிற மாதிரி அப்படி பாக்கிற, நம்ம பையன் தான் மா, அதுதான் டெய்லியும் பேசுறீங்க, வீடியோ call அது இதுன்னு ஒன்னும் விட்றதில்ல, அப்புறம் எதுக்கு இந்த எமோஷன் எல்லாம்?” என வினவ சந்திரா தன் கணவரை முறைக்கும் பாவனையில் பார்க்க

சந்திரசேகரோ “என்ன சந்திரா என் அழகை ரசிக்கிறியா, இப்படி வெச்ச கண் வாங்காமா பாக்கிற?” என்றதும் அனைவரும் சிரித்தனர்.

பிள்ளைகளின் முன்பு தன் மானத்தை வாங்கிய கணவரிடம் "ஆதிய இத்தனை வருஷம் பிரிஞ்சதே உங்கனாலதான் அதுகே உங்களுக்கு இன்னும் தண்டனை குடுக்கணும் இதுல என் பையன பாக்கறதுக்கு கூற கொர சொல்லி கிண்டல் பண்றிங்களா இருங்க … ஆதி வந்ததும் ஸ்வீட் தரலாம்னு உங்களுக்கு இருந்தேன்… அது கட் தான் வெறும் கலியே தின்னுங்க " என்று கூறியதும் அவர் திருதிரு என விழிக்க ஆதியோ சூப்பர் மா செமையா வீக்னெஸ்ஸ புடிச்சு பழிவாங்குறீங்க என்று சிரிக்க, மகள் அமுதாவும், அணுவும் "பாவம் மா அப்பா, அவர் என்ன பண்ணாரு, பையன படிக்க அனுப்பணும்னாரு, உங்கள யாரு கூட போயி இருக்கவேண்டாம்னு சொன்னது, அது உங்களுக்கு தோணல, அதுக்கேன் அப்பாவ திட்டறிங்க ?"என சலுகையாக தந்தையின் தோளில் சாய்ந்துகொள்ள,

சந்திராவோ “ஏன் சொல்லமாட்டீங்க, 3 வயசு பையன இவங்க பேச்ச கேட்டு அம்மா வயித்துல குட்டி பாப்பா இருக்கு அது வெளில வரவைக்கும் பாட்டி , தாத்தாவோடு இரு ராஜா என்று அனுப்பி வைத்தது, அமுதா பொறந்த அப்புறம் அவன் ரொம்ப சேட்டை பண்ணறான்… எல்லாம் இந்த வயசுல இருக்கறதுதான் ஆனா அவன் இங்க வந்துட்டா உனக்கு அவன பாக்கவே டைம் சரியா இருக்கும். அதுனால அவன் கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு, அப்புறம் அனு பொறந்தா அதுக்குள்ள இவன ஸ்கூல்ல அதுவும் ஹாஸ்டல்ல சேக்கணும்னுட்டாரு, அப்போதான் அவனுக்கு தனியா எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிக்க பழகுவான் அண்ட் அங்க படிப்பும் பெஸ்ட்டா இருக்கும்னு சொல்லி ஊட்டில விட்டாரு, அதுமுடிச்சு அவன் காலேஜீக்குனு சென்னை போய்ட்டான் அப்புறம் mba க்கு லண்டன் அனுப்பிச்சிட்டாரு… இப்படியே காரணம் சொல்லி என் பையன தூரமா அனுப்பிச்சிட்டு உங்கள எல்லாம் பாத்துக்கு நான் இருந்தேன் பாத்தியா இது தேவைதான்” என மூஞ்சிய திருப்பிக்கொள்ள, அனைவரும் நமுட்டு சிரிப்பில் பார்த்துக்கொண்டனர், இதைக்கண்டதும் சந்திரா அனைவரையும் முறைக்க,

ஆதி “விடுங்க மா அப்பாதான் கிண்டல் பண்ராரு, நீங்களும் எமோஷன் ஆகிட்டு இருக்கீங்க, அதுவுமில்லாம அப்பா எனக்கு எல்லாமே பெஸ்ட்டா பாத்து பாத்துதானே செஞ்சாரு, அவரு அப்டியெல்லாம் இருந்ததால தான் இன்னைக்கு சொசைட்டில நான் இவ்ளோ பெரிய இருக்கேன் அது உங்களுக்கும் பெருமை தானே” என்று கூறிக்கொண்டே தந்தையை பார்க்க அவரும் பெருமையுடன் அவனை தழுவிக்கொண்டார். அனு “சரிம்மா உன் பையன உள்ள கூப்பிட்டு வந்து நாள் பூரா பாரு யாரு தடுக்கப்போறாங்க… அதுக்கு முன்னாடி சாப்பாட கண்ணுல காட்டு தெய்வமே” எனவும் அனைவரும் சிரித்துகொண்டே அவனை உள்ளே அழைத்துச்சென்றனர்.

அவனுடன் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு சிறிது நேரம் வம்பிழுத்து பேசிக்கொண்டிருந்தனர். அதை மனதார பார்த்துவிட்டு ஆதியிடம் வந்து “ராஜா போ பா கொஞ்ச நேரம் போயி ரெஸ்ட் எடுத்துக்கோ,” என்றார். அவனும் அவனது அறை நோக்கி சென்றான் மனநிறைவுடன் அறையில் அனைத்தையும் பார்த்தான். அவனது அறைக்குள் அனுமதிஇன்றி யார் சென்றாலும் பிடிக்காது. அவனது வேலையை அவனே செய்துகொள்ளவான் என்பதை விட மற்றவர்களை எதற்கும் எதிர்பார்க்கக்கூடாது என்பான். அந்த பழக்கமே ஒரு அடிக்க்ஷன் ஆகிவிடும் என்பான். சிறுவயது முதல் தாத்தா பாட்டி என்று வளர்ந்ததால் மிகவும் கண்டிப்பான கட்டுப்பாடுகளோடு இருப்பான். பிறகு ஹாஸ்டல் என தனி வாழ்க்கை வாழ்ந்ததாலோ என்னவோ கோபம் அதிகம் கொள்வான். குடும்பம் மற்றும் நண்பர்களிடத்தில் மிகவும் நன்றாக பழகுவான். ஆனால் வெளியாட்கள் கண்டால் தூரம் நில் என்பது போன்ற பார்வை எப்போதும் இருக்கும்… அவசியமற்று எவரிடத்தும் அதிகமாக உரையாடமாட்டான். உறவினர்களே அவனிடம் செல்ல கொஞ்சம் தயங்குவார்கள். மனதில் தோன்றியதை பட்டென்று கேட்டுவிடுவான். இருப்பினும் இந்த இளம் வயதில் இத்தனை திறமைகளை பெற்று, நேர்மையும், வேலையில் நேர்த்தியும் , தீர்க்கமான முடிவுகளை எடுப்பதும், சரியான தீர்வை கொடுப்பதும் அவன் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பு என்றுமே இருக்கும். அவன் அன்பு வைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் என என்னும் அளவிற்கு பாசமானவன். அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்கமாட்டான் . அதேபோல் தன்னை ஏமாற்றினால் , அவர்களிடத்து வைத்துள்ள நம்பிக்கையை இழக்க நேர்ந்தால் அவனது கோபத்தின் அளவே வேறு விதம். அப்போதும் அவன் எந்த எல்லைக்கும் போவான். என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்கமாட்டான் . அவனை ஓரளவிற்கு புரிந்து வைத்தவன் அவனது நெருங்கிய நண்பன் அர்ஜுன் தான்.

அவன் படுக்கையில் விழுந்து இமைகளை மூடியதும் அந்த பெண்ணின் முகம் நினைவு வந்தது. ஏதோ ஒரு வசீகரம் அவளிடம் தன்னை இழுப்பதை உணர்ந்தான் …விழித்தெழுந்தான்… யாருன்னு தெரியாம ஒருத்தர பார்த்து சிரிக்கிறது, பொது இடத்தில் அவன் அருகில் நின்று நெருக்கமானவர் போல காட்டிக்கொண்டது , தன்னை பின்தொடர்ந்தது என நினைத்து அவளை தப்பானவள் என்றே முடிவுகட்டிவிட்டு இன்னொரு தடவ என் கண்ணு முன்னாடி வரட்டும் அவளுக்கு இருக்கு என்று திட்டிக்கொண்டே படுத்தவன் “ஒருவேளை இதெலாம் எதேச்சியா கூட நடந்திருக்கலாமே என நல்ல விதமாவும் நினைக்க, சரி முடிஞ்சளவுக்கு இந்த மாறி பொண்ணுங்க கண்ணுல படமாயிருக்கணும்” என்றான். பாவம் ஆண்டவன் இவளுடைய விஷயங்களில் இவனின் வேண்டுதலை செவிசாய்த்து கேட்கவில்லை, கேட்கபோவதுமில்லை என்பதை அறியாமல் அவளை தன் நினைவில் இருந்து துரத்திவிட்டதாய் எண்ணி உறங்கியும் போனான்.

தூங்கியெழுந்தவன் மாலை அவன் பால்கனியில் இருந்து வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். தன் வீட்டின் முன்பு ஒரு பெண் நின்றுகொண்டிருப்பதை பார்த்தவன். யாரென்று கண்டுகொண்டதும் கோபமுற்றான். காலையில் பார்த்த அதே பெண். நம்ம வீட்டு வாசல்ல நின்னிட்டு என்ன பண்றா?உள்ளே வருவதும் வெளியே போவதுமாக இருந்தவளது செய்கை இவனுக்கு புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவன் வேகமா கீழே வந்து பின்பக்கமாக சென்று அவளை கவனித்தான் .

அந்த நேரத்தில் அவள் போன் அலற அதை அவசரமாக எடுத்து "இப்போ எதுக்கு கால் பண்ற? மறுமுனையில் என்ன சொன்னார்களோ இவள் “பாரு நமக்கு ஒன்னு வேணும்னா நாமதான் அதுக்கு போராடணும். முடிவு பண்ணிட்டா அதுக்காக எத செய்யவும் தயங்கக்கூடாது. நீ தைரியமா பண்ணு எதுனாலும் பாத்துக்கலாம். முடிஞ்சா பேசிப்பாரு இல்லாட்டி strong ஆ பேசி கொழப்பிவிட்டிடு. மத்தவங்கள யோசிக்க விடாம பண்ணாதான் நம்ம சொல்றதே கேப்பாங்க. இப்போ நானும் அதைத்தான் பண்ணப்போறேன் என சிரிக்க சரி நா அப்பறோம் பேசுறேன் டாடா” என்று கால் ஐ கட் செய்தாள்.

[அவள் தோழி சசி இடம் அவ்வளவு நேரமும் பேசிவிட்டு வேலை சம்மந்தமான பிரச்சனை அதுவுமில்லாம அவள லவ் பன்றேன்னு கூட ஒர்க் பண்ற விக்கி அவளை தொடர்ந்து கொண்டிருந்தான் . சசிக்கு விக்கிய பிடிக்கும் இருப்பினும் குடும்பத்தில் ஒத்துக்கமாட்டாங்க என நினைத்து கொண்டு அவள் லவ்வை விக்கியிடமும் சொல்லாமல் வீட்டில் இப்படி தான் சொல்வார்கள் எனவும் இவளே முடிவு எடுத்துக்கொண்டு புலம்பித்தள்ளிக்கொண்டிருந்தாள்…

அதற்கு தான் இவள் “உனக்கு பிடிச்சா நீதான் சொல்லணும் . பிரச்சனை வந்தாலும் பேஸ் பண்ணனும். இல்லாட்டி அத பத்தி நினைக்காம இரு. உங்க வீட்ல சொல்றவிதத்துல சொன்னா புரிஞ்சுப்பாங்கனு நினைக்கிறேன். நமக்கு ஒன்னு வேணும்னா நம்ம தான் பேசணும், நீ விக்கி தான் வேணும்னு முடிவு எடுத்திட்டா அதுல இருந்துமாறவும் கூடாது.” என்றாள்.

“சரி யோசிக்கிறேன் என்றுவிட்டு மேனேஜர் ரொம்ப திட்டாரு டி நம்ம சொல்றத கேட்டாளாவது எதுனால ஒர்க் லேட்டாகுத்துன்னு நம்ம எக்ஸ்பிளான் பண்ணலாம் ஆனா மனுஷன் எரிஞ்சு விழறான்” என்றாள் சசி . அதற்கு தான் இவள் “முடிஞ்சா பேசிப்பாரு இல்லாட்டி இத பண்ணவே முடியாதுன்னு strong ஆ பேசி கொழப்பிவிட்டிடு. மத்தவங்கள யோசிக்க விடாம பண்ணாதான் நம்ம சொல்றதே கேப்பாங்க” என்று சொல்லவிட்டு வந்தாள்.]

மறுபடியும் அவள் கால் செய்து எனக்கு மட்டும் ஏன் டி இப்டி நடக்குது விக்கிய பாக்க கஷ்டமா இருக்கு இதுல இந்த மேனேஜர் டார்ச்சர் தாங்கல டி, ரொம்ப திட்றாரு நான் சொல்ல வரத்தையே கேக்கமாட்டேன்கிறான் அந்தாளு என அதே புலம்பலை ஆரம்பிக்க இவள் திரும்பவும் விக்கி மேனேஜர் லவ் ஒர்க் இந்தமாறி விசயங்களை மட்டும் விடுத்து அவசரமாக பதிலை மட்டும் மேற்கூறியவாறு கூறினாள்.

இவள் பேசியதை மட்டும் கேட்டவன் “ச்ச… என்ன பொண்ணு இவ இப்படி எல்லாம் பேசுறா, ஒன்னு வேணும்னா என்ன வேணாலும் செய்யலாமா? அதுவும் இவ சொல்றத கேக்கலேனா மத்தவங்கள குழப்பி விட்டரலாம்னு சாதாரணமா ஏமாத்த ஐடியா தராளே?” என நினைத்துக்கொண்டு இருக்க அவள் இவன் வீட்டினுள் நுழைந்தாள்.

எதிரே ஆதியின் அம்மா வந்து “யாரு வேணும்??” என்று இவளிடம் கேட்க இவள் "அத்தை என்ன பாத்தா இப்பிடி கேக்கறீங்க என்ன மறந்திட்டீங்களா அம்னீசியாவா? " என கேட்டாள்.

சந்திராவோ "இங்க பாரு மா என்ன எதுக்கு நீ அத்தைனு கூப்பிட்ற? எதுக்கு இங்க வந்த ? யாரு நீ? " என மீண்டும் கேட்க, இவளோ கூல்லாக "எதுக்கு இத்தனை கேள்வி சரி ஒன்னு ஒண்ணா பதில் சொல்றேன் . உங்க பையன கல்யாணம் பண்ணிக்கபோறேன் அதான் அத்தைனு கூப்பிட்டேன்.

உங்க வீடு சொத்தெல்லாம் ராஜ்ஜியம் பண்ணத்தான் வந்தேன். இவளோ உரிமை இருக்குன்னா நான் உங்க மருமகத்தானே அத்த ?" என்றாள்.

சந்திரா “அப்படி எல்லாம் எனக்கு எந்த மருமகளும் இல்ல. நீ மொதல்ல வெளில போ” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அந்த பெண்ணோ “நான் ஏன் போகணும் நானே இல்லாத வீட்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. போகணும்னா வாங்க 2 பேரும் வீட்டை விட்டு வெளில போகலாம்” என்றாள். சொல்லி முடிக்கவும் திவியின் கன்னத்தில் இடியென வந்திறங்கியது ஆதியின் கரங்கள்.

ஒரு நிமிடம் தள்ளாடி நின்றவள் பின்புதான் உணர்ந்தாள் காலையில் கோவிலில் பார்த்தவன் எதிரே நிற்கிறான் இவன் தான் தன்னை அடித்துள்ளான் என்பதை.

அவனோ கண்களில் தீப்பொறியுடன் "உனக்கெல்லாம் வெக்கமா இல்ல ? இப்படி அலையிறீங்களே அசிங்கமா இல்ல? நீ எனக்கு பொண்டாட்டியா ? இன்னும் எத்தனை பேர் வீட்ல இப்படி எல்லாம் சொல்லிட்டு சுத்திருக்க ? எங்க அம்மாவையே வெளில போக சொல்றியா? கொன்றுவேன் டி உன்ன, என்றதும் அவள் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன் "பேசாத …பேச விட்டதானே குழப்பி விட்டு உங்க வழிக்கு கொண்டுவருவீங்க மொதல்ல வீட்டை விட்டு வெளில போடி " என கொலைவெறியுடன் கத்திகொன்றிருந்தான்.

அவளுக்கு முழுவதும் புரியவில்லை என்றாலும் ஏனோ உடல் நடுங்க உடனே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

இவனும் ரூமிற்கு சென்று திட்டிக்கொண்டிருந்தான் "என்ன பொண்ணு இவ அடிச்சும் அவ்வளவு தைரியமா நிக்கிறா… ரொம்ப அழுத்தம்…இல்ல திமிரு … " பொதுவாக மாட்டிக்கொண்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் மீது தவறில்லை என நடிப்பவர்கள் தான் பார்த்திருக்கான். ஆனால் இவளோ கொஞ்சம்கூட கண்கலங்காம அவள் நின்றதை நினைத்து இவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது.

‘ச்ச…இவள கொஞ்சநேரம் கூட நல்லவிதமே நினைக்கவேமுடிலை. நினைச்ச கொஞ்ச நேரத்துல கண்ணுக்கு முன்னாடி வந்து நீ நினைச்சதை விட நான் ரொம்ப மோசம்னு காட்டிட்டு போய்ட்டாளே’ என கொந்தளித்துக்கொண்டு இருந்தான்.

அங்கே அவளோ நேரே சென்று தன் அறையில் முடங்கியவள் "யாரா இருப்பான்… காலைல கோவில்ல பாத்தோமே… மதி அத்தையும் நானும் தான் பேசிட்டு இருந்தோம். அரைகுறையா கேட்டுட்டு வந்து அடிச்சுட்டான் இடியட்… என்ன சொன்னா? நீ எனக்கு பொண்டாட்டியா ? எங்க அம்மாவையே வெளில போக சொல்றியா?வா…அப்டினா

ஓ…அப்போ ராஜா வந்திட்டாரா? அத்தை ஏன் முன்னாடியே சொல்லல…

ஆனாலும் அவன் என்ன இப்படியெல்லாம் பேசுறான். இவனை பத்தி என்ன எல்லாம் சொன்னாங்க. ஆனா இவ்வளோ மோசமா பொண்ணுங்கள பத்தி நினைக்கறனே என்றவள் பொறுமையாக நடந்ததை எண்ணி பார்த்தாள். அவன் வெளியில் இருந்து வந்தான் என்றால் நான் மதி அத்தையுடன் விளையாட்டாய் பேசியதை கேட்டிருப்பான். ஓ… அதான் சார் தப்பா புரிஞ்சுகிட்டு இப்படி வல்லு வல்லுனு விழுந்தாரா…அவரோட அம்மாவை வெளில போகசொல்லிட்டேன்னு தான் அவ்வளோ கோவமா?..இருந்தாலும் என்ன அடிக்க என்ன உரிமை இருக்கு. பேச்சும் கொஞ்சம் ஓவர் தான். நாளைக்கு பாத்துக்கறேன். ஆனா ஊர்ல இருந்து எப்போ வந்தாரு ? அத்த என்கிட்ட செல்லவேயில்ல… இந்த வாரத்துல வருவான்னு சொன்னாங்க…ஆனா இவரை காலைல கோவில்ல பாத்தேனே…எப்படி என்று பாதி புரிந்தும் புரியாமலும் குழப்பிக்கொண்டுஇருந்தாள்…ச்ச… ஒண்ணுமில்லாத பிரச்சனைக்கு என்னவே எவ்வளோ நேரம் திங்க் பண்ண வெச்சுட்டான்… ராஜா அம்மா செல்லம்னு சொல்லிருக்காங்க. இருந்தாலும் இவ்வளோ செல்லமா இருந்திருக்க வேண்டாம்… அப்ப்பா …என்ன அடி… என்று கன்னத்தை தடவிக்கொண்டு வலியில் அப்டியே படுத்துவிட்டாள்.

ராஜலிங்கமும், மகாலிங்கமும் தங்களது கிராமத்தில் இருந்த 10 ஏக்கர் நிலத்தில் உழைத்து ஈட்டிய பணமும், 5 ஏக்கர் விற்று கொஞ்சம் பணம் சேர்த்து கோவையில் ஒரு சிறு தொழில் ஆரம்பித்து தங்களது கடின உழைப்பால் இன்று உயர்ந்து ஒரு பஞ்சு ஆலையை நிறுவி வெற்றிகரமாக நடத்திவருகின்றனர் . ஒருவேளை சாப்பாடு கிடைக்க கஷ்டப்பட்ட தமையர்கள் இப்போது 100 பேருக்கு வேலை தந்து அவர்களின் வயிற்று பாட்டினை போக்கி மனநிறைவுடன் வாழ்கின்றனர் . அவர்களது மனைவிமார்களும் உற்ற துணையாய் என்றும் வாழ்கின்றனர் .அவர்கள் இருவரும் குழைந்தைகள் குடும்பம் என அனைத்திலும் அனுசரித்து இத்தனை வருடமும் தங்களிடம் பிரச்சனை, பிரிவு , சண்டை என எதுவும் வராமல் வாழ்க்கையை கொண்டுபோனதால் தான் தங்களால் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்வில் உயர முடிந்தது என்பதை அண்ணன் தம்பி இருவரும் எப்போதும் மறந்ததில்லை . அவர்கள் நால்வரும் எப்போதும் பிள்ளைகளை பிரித்து பார்த்ததே இல்லை . ராஜலிங்கம் - ராஜலக்ஷ்மி தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் . மகன் சிவபிரகாஷ் - மதுரையில் தனியார் வங்கியில் வேலையில் இருக்கிறான் . அவனுக்கும் சிவரஞ்சினிக்குமான 2 வருட திருமண வாழ்வில் இப்போது 2 மாத இளந்தளிரை தன் வயிற்றில் சுமக்கிறாள். மகள் தர்ஷிணி கணினியில் முதுநிலை பட்டம் பெற்று தனக்கு ஆனால் அந்த துறையில் விருப்பமில்லை என்று பேஷன் டிசைனிங் படிக்க 1 வருடம் கோர்ஸில் சேர்ந்துவிட்டாள் . திவியை விட தர்ஷினி 9 மாதமே இளையவள். இவர்கள் இருவரையும் விட சிவா 4 வருடம் மூத்தவன் . முதல் தங்கை என அறிமுகமானதாலோ என்னவோ அவனுக்கு திவி மேல் எப்போதும் தனி பிரியம் உண்டு. திவ்யாவும் அதுபோலவே அனைவரிடத்தும் அன்போடு இருப்பினும் அண்ணனிடம் சற்று சலுகை அதிகம். என்றாலும் இருவரும் தர்ஷினியை எப்போதும் விட்டுகுடுத்ததில்லை…

பரம்பரை பணக்காரரான சந்திரசேகர் சொந்த ஊரில் நிலம் பண்ணைவீடு என இருந்தபோதிலும் பிள்ளைகளின் வருங்கால படிப்பிற்காக கோவையில் வந்து செட்டில் ஆகிவிட்டனர். சந்திரசேகர் சொந்த ஜவுளிக்கடையும் ஏற்றுமதி இறக்குமதி பிஸினஸும் செய்கிறார் . சந்திரசேகர் - சந்திரமதி இவர்களுக்கு 4 பிள்ளைகள் . முதல் பெண் அபிநயா - அரவிந்தோடு திருமணம் முடிந்து 3 வருட பையன் அபிநந்தனோடு மகிழ்ச்சியாய் இருக்கின்றனர் . இப்போது அடுத்த வாரிசின் வரவிற்காக அனைவரும் மாதங்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.

இரண்டாவது மகன் ஆதித்யா (ஆதித்ய ராஜா) - தனக்கான விருப்பம் என சிவில் என்ஜினீயர் படிப்பை முடித்து கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிக்க நினைத்தாலும் தந்தையின் பிசினஸ்சை கைவிடாமல் இருக்க வெளிநாட்டில் mba முடித்து இந்தமுறை இந்தியா வருகிறான் . அடுத்த மகள் அமுதா டிகிரி முடித்து விட்டு தற்போது திருமணத்திற்கு தயாராகும் அழகிய பதுமை . வாய் நீளத்தோடு, வாலுமான கடைக்குட்டி அணு 12 வகுப்பில் அடியெடுத்து வைக்கிறாள்.

3 - மனதை மாற்றிவிட்டாய்

இங்கே ஆதியின் வீட்டிலோ இரவு உணவிற்கு அனைவரும் அமர ராஜலிங்கம், " ஆமா எங்க திவிய இன்னைக்கு காலைல இருந்து காணோம்,நீங்க 2 பேரும் ஒரு நாள் முழுக்க பாக்காம இருந்தா உலகம் என்னாகுறது? " என்று சந்திராவிடம் கேட்டார்.

அவரோ “அவள பத்தி பேசாதீங்க நான் அவமேல கோவமா இருக்கேன்.” எனவும்

“ஏன் மா உன் பையன் வந்ததும் அவளை மறந்திட்டயா?” என்க

“நேத்து காலைல பாத்தது …இன்னைக்கு காலைல வருவான்னு பாத்தேன் வரல. ராஜா வந்திருக்கான்னு நானும் அவகிட்ட சொல்லலாம்னு பாத்து கால் பண்ணா அதுவும் எடுக்கல. சாய்ந்தரமா வந்தா ‘வராத போடின்னு’ சொல்லிட்டு அவளுக்காக நிலக்கடலை உருண்டை பிடிக்குமேன்னு எடுத்துட்டு வர உள்ள போய்ட்டு வந்து பாக்கறேன் ஆள காணோம் …கிளம்பி போய்ட்டா அவளுக்கு என்கிட்ட இவளோ கோவம் காட்டமுடியுமா? பாத்துக்கறேன் அவளை…இனிமே மதி அத்த மதி அத்தனு வருவாள்ல அப்போ இருக்கு.” என்று சந்திரா கத்திக்கொண்டிருந்தாள்.

ஆதிக்கு அம்மா யாரை சொல்ராங்கன்னு புரியாம வினவ சந்திரசேகர் கூறினார் "திவி நம்ம பக்கத்து வீட்டு பொண்ணுபா, இங்க அவங்க பேமிலி வந்து 9 வருஷம் ஆச்சு. ரொம்ப நல்ல டைப் எல்லாரும். திவி ஸ்கூல் படிக்கும் போது இங்க வந்தா, உன் அம்மாவும் அவளும் ரொம்ப குளோஸ். பெஸ்ட் ப்ரண்ட்ஸ் னு சொல்லலாம் … 2 பேரும் நல்லா சண்டை போட்டுப்பாங்க, ஆனா இவங்கள நம்பி உள்ள போகமுடியாது. உங்க அம்மாவ ஒன்னு சொல்லிட்டா போதும் அவளுக்காக சப்போர்ட் பன்ன வந்தாங்கனு மறந்திட்டு உங்க அம்மாவ திட்டுனவங்களுக்கு திட்டு விழும். எப்பவும் மதி அத்தை தான்.

நானே அப்டி அவகிட்ட 2 தடவ மாட்டிகிட்டேன்னா பாரு. உங்க அம்மா அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தா அவ கேக்கமாட்டேனு சொல்லிட்டுஇருந்தா அவள திட்டறாளேனு புள்ளைய அவ இஷ்டத்துக்கு விடுன்னு சப்போர்ட்க்கு நான் போனா "ஏன் மாமா அத்தைய திட்டறிங்க அவங்க என் நல்லதுக்கு தானே சொல்ராங்க. இந்தா மாறி இருந்தா நாளைக்கு என்ன பத்தி வேற யாராவது எதாவது சொல்லுவாங்கனு தானே எனக்கு அட்வைஸ் பண்ராங்க. நீங்க அவங்கள எப்படி தப்பு சொல்லலாம். அப்டினா நான் சொன்ன பேச்ச கேப்பேனு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா, நான் தப்பு பண்ணி எல்லார்கிட்டயும் திட்டுவாங்கணும்னு நினைக்கிறிங்களா? "னு ஒரு புடி புடிச்சிட்டா. எனக்கே என்ன சொல்றதுன்னு தெரில. அவங்க அம்மா மகா “நீதானே டி அண்ணி சொல்றத கேக்கமாட்டேனு சொன்னா இப்போ சப்போர்ட்க்கு வந்த என் அண்ணாவை கொர சொல்றியா” என வினவ திவியோ “சொல்றத கேக்கமாட்டேனு தானே சொன்னேன் …ஆனா அவங்க சொல்றத கேக்காம இதுவரைக்கும் இருந்துஇருக்கேனா? நமக்கு புடிச்சவங்ககிட்ட தானே வம்பிழுக்க முடியும். அத செய்றேன்னு பொய் சொல்லிட்டு செய்யாம இருந்ததா தப்பு. நான் சும்மா சொல்லுவேன். அதுக்காக நீங்க எல்லாரும் எனக்கும் அத்தைக்கு பஞ்சாயத்து பண்ண வந்துடுவிங்களா?” என்று திவியும் மதியும் சிரித்து கொண்டு கட்டிக்கொண்டனர்.

இவர்களை என்ன செய்வது என்று அனைவரும் சிரிப்புடனே இந்த அன்பை என்றும் இருக்க செய்யவேண்டுமென வேண்டிக்கொண்டனர். அதை சொல்லி விட்டு சிரித்து கொண்டிருந்தார். என்கிட்டேயும் பாசம் அவளுக்கு. உங்க அம்மாக்கு தெரியாம ஸ்வீட் சாப்ட்டா கரெக்டா கண்டுபுடிச்சிடுவா. ஆனா டேஸ்ட்டா எனக்கு புடிச்சமாறி ஆயில் கம்மியா செய்ய சொல்லி சண்டையும் போடுவா. எனக்காக பாத்து பாத்து செய்வா எல்லாமே. என்கிட்ட எவ்வளோ வம்பிழுத்தாலும் வெளியாளுங்க என்ன ஏதாவது சொன்னா அவளுக்கு வருமே கோவம். ஆனா அத காட்டிகாம அவங்களுக்கு சரியான பதிலடி குடுத்திடுவா. அவளோட யோசனையே வேற மாறி இருக்கும்.

நம்ம உறவுக்காரன் செல்வத்துக்கு மாசாமாசம் பணம் தருவேன் உங்க அம்மா அத பெருசா ஒத்துக்கமாட்டா ஆனா வேண்டாம்னு தடுக்கவுமில்லை எனக்கு அவளுக்கு இதில விருப்பமிலேன்னு புரிஞ்சாலும் உங்க அம்மாட்ட நான் கேட்டுக்கல.

ஒருதடவை என்கிட்ட திவி கேட்டா " நீங்க பணம் இருக்கே குடுக்கலாமேன்னு நினைக்கிறீங்க ஆனா எனக்கு என்னவோ நீங்க அவங்க வளர்ச்சியை கெடுக்கறமாதிரி தான் தெரியுது. ஒருவேளை கடைசிவரைக்கும் இப்படியே எல்லாரும் உங்ககிட்ட கை ஏந்தனும்னு நினைக்கறீங்களோ?" என்றாள். அனைவரும் அவளை அடக்க முயல ‘தப்பா சொல்லல்ல மாமா நீங்களே அவங்களுக்கு பாத்து பாத்து செஞ்சா அவங்க வாழ்க்கையை யாரு வாழறது…நாளைக்கு அவங்க புள்ளைங்க வெளில என்ன சொல்லிப்பாங்க எங்க அப்பா எனக்காக இதெல்லாம் பண்ணாங்கன்னு சொல்லி பெருமைப்படுவாங்களா இல்ல எங்க அப்பா இப்படி சொந்தத்துல உதவி கேட்டு எங்களை வளத்தாருன்னு சொல்லி பெருமைப்படுவங்களா’ என்று வினவ இவரே வாயடைத்து போய்ட்டார். இந்த விதத்தில் நான் யோசிக்கவே இல்லையே என்று நினைத்து கொண்டிருக்க அவளோ “எதுமே அளவா இருந்தா தான் மதிப்பு. மாமா நீங்க கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்ச பணம், யாருக்கு குடுக்கணும் குடுக்கக்கூடாதுனு நீங்க தான் முடிவு பண்ணனும். நிறைய இருக்குன்னு தூக்கி குடுத்து அவங்கள சோம்பேறியாக்கணுமா? அதுக்கு வேலை போட்டு குடுத்தா உதவி பண்ணனும்னு நினைக்கற உங்க ஆசையோட அவங்களும் கவுரவமா இருக்கலாமே.தோணுச்சு சொல்லிட்டேன் மாமா ஓவர்ரா பேசிருந்தா மன்னிச்சிடுங்க” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

சந்திரசேகரோ இந்தமுறை செல்வம் வரும்போது வேலையை பற்றி கூறினார். முதலில் அவன் ஏற்கும் நிலையில் இல்லை என்பதோடு அவன் சோம்பேறித்தனத்தை தான் வளத்திவிட்டதை எண்ணி வருந்தினார். இதோடு அவன் வெளியில் இவரை கஞ்சம், பணத்திமிர் என்று கூறியதை அறிந்து கவலையுற்றார்.

ஆனால் திவி அதை அறிந்ததும் முதலில் கோபம் கொண்டவள் அடுத்து செல்வத்தை பார்த்த போது என்கிட்ட பேசிய விஷயங்களை சொல்லியும் இருக்கிறாள். நீங்க சம்பாரிக்கலானே உங்க புள்ளைங்களே நாளைக்கு உங்கள மதிக்கமாட்டாங்கனு பயமுறுத்திருக்கா. பேசாம மாமா சொல்ற மாறி வேலையாவது வாங்கிக்கோங்க. மாமா சிபாரிசு பண்ண உங்களுக்கு ஒரு மரியாதையும் இருக்கும்னு சொல்லிருக்கா அவன் என்கிட்ட வந்து அப்பறோம் வேலையை பற்றி கேட்டான். இப்போ அவங்க குடும்பமே கையெடுத்து கும்பிடுது. மனசு நிறைஞ்சு இருந்தது அப்போ.

எனக்கு இதெலாம் தெரியும்போதும் அவளை கூப்பிட்டு கேட்டேன். அதுக்கு அவ “எல்லாம் அத்தைக்காக தான். அத்தைக்கு அவங்க சரிலேன்னு தோணிருக்கு பணம் குடுக்கவேணாம்னு சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்களோனு கவலை. அவங்க அம்மாட்ட சொலிட்டுஇருந்தாங்க அதுனால தான் மாமா அன்னைக்கு நான் அப்படி பேசுனேன். கொஞ்சம் அதிர்ச்சியானதால தானே நீங்க நான் சொல்லவரதையே கேட்டீங்க. இல்லாட்டி கண்டுக்கவேமாட்டீங்களே.” என்று கண்ணடித்து சிரித்தாள்.

சரிடா மா செல்வத்துக்கிட்ட போயி ஏன் பேசின என்றவரிடம் "அது அந்த அங்கிள் உங்கள பத்தி வெளில பணத்திமிரு அது இதுனு சொன்னாங்கள? அதுதான் அப்டி பயமுறுத்தற மாதிரி பேசி அதும் உங்க மூலமா வேலைக்கு போறதுதான் நல்லதுன்னு கொஞ்சம் சொல்லி உங்ககிட்டேயே வரவச்சேன். வேற யார்கிட்டேயோ வேலைக்கு போறது பெரிய விஷயமில்லை. ஆனா அப்படி போன வெளில இவரு பேசனதும் உண்மை ஆய்டும்.

கொஞ்ச நாள்ல அந்த அங்கிள்ளே வெளில “சந்திரசேகர் பணம் குடுக்கலேனாலும் நான் நல்லாத்தான் இறுக்குக்கேனு பில்டப் பண்ணுவாங்க”.

உங்களை பத்தி கடைசி வரைக்கும் புரிஞ்சுக்கமாட்டாங்க. உங்க மரியாதையும் வெளில முக்கியம்தானே மாமா. ஆனா இப்போ அவங்களுக்கு வேலை செஞ்சு சொந்த காசுல வாழற சந்தோஷமும் இருக்கும். உங்க மனசும் புரிஞ்சுஇருக்கும்ல. அதோட என் மாமவ தப்பா பேசிட்டு வெளில ஒருத்தர சும்மா போகவிட்ருவேனா, உங்கள எப்படி அவரு கொர சொல்லலாம். உங்ககிட்டேயே வரவெச்சு மன்னிப்பு கேக்கவெக்கணும்னு நினச்சேன். அதான் மாமா என்றாள். இப்போ அவரு உங்களுக்கு பிரீ மார்க்கெட்டிங் பண்ணிட்டு இருக்காரு போல. எங்க சந்திரசேகர் அண்ணா தான் நல்லவரு வல்லவரு தெய்வம்னு எல்லாம்," என்று கமெண்ட் செய்தாள்.

அவள் செய்தது என்னவோ சின்ன விசயம் தான் ஆனால் பேசியே எத்தனை காரியங்கள் சாதித்து விட்டாள் என்று அவளை நினைத்து ஆச்சிரியமாகவும், எவ்வளவு தனக்காகவும், தன் மரியாதைக்காகவும், தன் மனைவிக்காகவும் யோசித்திருக்கிறாள் என்று மகிழ்வாகவும் இருந்தது. அப்போ இருந்து அவ எது சொன்னாலும் அதில் ஒரு விஷயம் இல்லாம சொல்ல மாட்டான்னு நம்பிக்கை அவருக்கு. அந்த நினைவில் தன்னை மறந்து உதட்டோரம் புன்னகையோடு இருக்க

அமுதாவும் "ஆமா சரியான வாலுண்ணா அவ. அவள கண்ட்ரோல் பண்றதே கஷ்டம். பேசிட்டே இருப்பா. ஆனா ரொம்ப ஸ்வீட், ரொம்ப பாசம். எனக்கு பெஸ்ட் பிரண்ட் . ஒரே காலேஜ் வேற. எனக்கு ஏதாவது ப்ரோப்ளேம்னா கண்டிப்பா அவதான் ஹெல்ப் பண்ண பஸ்ட்டா நிப்பா, என்கிட்ட யாராவது சேட்டை பண்ணாங்க அவகிட்ட அவ்ளோதான். அவங்களுக்கே தெரியாம பிரச்னை பண்ணிவிட்ருவா " என்றாள் .

அனுவும் “ஆமா அண்ணா திவி செம ஜாலி அம்மு அக்கா பேசவேமாட்டா, ஆனா திவியும் நானும் சேந்தா பேசிட்டே இருப்போம். எனக்கு பிரண்ட்ஸோட வெளில போறது, ஸ்போர்ட்ஸ், டூர் இந்தமாறி நிறைய விஷயம் திவினால தான் கரெக்ட் பண்ணி வாங்கிப்பேன். பட் எல்லாத்தையும் பிராங்க்கா வீட்ல சொல்லணும் இல்லாட்டி சப்போர்ட் பண்ணமாட்டேனு சொல்லிடுவா. .பட் ரீசன் உண்மையா சொல்லிட்டா எப்படியும் அதுக்கு பெர்மிஸ்ஸின் வாங்கி குடுத்திடுவா.” என்றாள்

சந்திராவும் "இவ்வளவு ஏன் நம்ம நந்து பையன் வந்தாலே அவகிட்ட ஒட்டிப்பான். வரவே மாட்டான். திவி ஒரு நாள் கூட என்ன பாக்காம இருக்க மாட்டா, காலைல எந்திரிச்சதும் வந்திடுவா. வேலைன்னாலும் போன் பண்ணி சொல்லிடுவா. சனி ஞாயிறு இங்கேயேதான் இருப்பா. ஆனா இன்னைக்கு வரல. எங்க போனானும் என்கிட்ட சொல்லவே இல்ல அதான் கோபம் " என்று மகிழ்வில் ஆரம்பித்து குற்றப்பத்திரிக்கையோடு முடித்தாள்.

தன் மொத்த குடும்பமும் கவர்ந்த அந்த திவியை பார்க்கவேண்டுமென ஆவல் எழ, ஏதோ நினைவில் கை கழுவ எழுந்து செல்லவும் மகா வீட்டினுள் வரவும் சரியாக இருந்தது. “என்ன அண்ணி அவ மேல கோபம் உங்களுக்கு” என்று பிரசாதத்தோடு உள்ளே நுழைந்தாள்.

சந்திராவும் " வா மகா எல்லாம் உன் பொண்ணு மேல தான். காலைல வரவேயில்லை. சாய்ங்காலம் வந்தவளும் உடனே போய்ட்டா, இரு அவளுக்கு புடிச்ச உருண்டை செஞ்சு வெச்சுயிருக்கேன் கொண்டு போயி குடு. நான் குடுத்தேன்னு சொல்லாத" என்றாள்.

மகாவோ சிரித்துவிட்டு “சரி அண்ணி, அவளும் உங்ககிட்ட அம்மன் கோவில் பிரசாதத்தை குடுக்கச்சொல்லி குடுத்தா உங்ககிட்ட அவகுடுதான்னு சொல்லாம குடுக்க சொன்னா” என்று கண் சிமிட்டினாள். இதை கேட்டு அங்குள்ள அனைவரும் சிரித்தனர். 2 பேரையும் என்ன பண்றது என்று அமுதா மகாவிடம் வந்தவள் “இவங்களுக்குள்ள சண்டைன்னா நம்மள தான் டார்ச்சர் பண்ராங்க அத்த.” என்று விட்டு “என்ன விசேஷம் மேடம் கோவிலுக்கு போயிருக்கா இனிக்கு?” என்று வினவினாள்.

“இந்த வாரம் ஆதி தம்பி வராப்ல கோவிலுக்கு போகணும் பூஜை பண்ணனும்னு நீங்க சொல்லிட்டிருந்திங்களாம்” திடீர்ன்னு காலைல கோவிலுக்கு போய்ட்டு வந்து “மதி அத்தை கால் வலி கோவிலுக்கு போகமுடிலேன்ன்னாக அவங்க பையன் வரும்போது பிரசாதம் குடுக்கணும்னு சொன்னாங்க சோ நா கோவிலுக்கு போயி அவங்க பையன் பேருக்கு அர்ச்சனை பண்ணியாச்சுன்னு” சொன்னா, என்றதும் அனைவருக்கும் ஆச்சரியம்.

“எனக்கு கொஞ்சம் ஆஃபீஸ்ல் வேலை அதனால நீங்க பிரசாதத்தை குடுத்திடுங்கமா . நான் சாயந்தரம் வந்து பத்துக்கறேன்னு” சொல்லிட்டு போய்ட்டா. சாயந்தரம் பிரசாதம் குடுக்கறேன்னு எடுத்துட்டு இங்க வந்திட்டு ரூம்க்கு போயி தூங்கனவதா எந்திரிக்கவே இல்ல. இப்போதான் பாத்தேன் பிரசாதம் அங்கேயே இருக்கு, ஆதி எப்போ அண்ணி வரான் " என்றாள்.

சந்திராவோ “அட, அவன் இன்னைக்கு தான்ம்மா வந்தான்”, என்று ஆதியை அழைத்து அறிமுகம் செய்துவைத்தார். சிறிது பொதுவான விஷயங்கள் கேட்டதுக்கு அவன் பதில் மட்டும் அளித்து கொண்டிருந்தான். பிறகு மகா சந்திரா கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றுவிட்டாள். சந்திராவோ மகனிடம் வந்து விபூதியை வைத்துவிட்டு ராஜலிங்கத்திடம் சென்றாள். “பாத்திங்களா என் மனச புரிஞ்சுக்கிட்டது அவதான் நான் சொன்னத ஞாபகம செஞ்சிருக்கா” என்று மெச்சிக்கொள்ளவும்,

“ஆனா அவள தான் நீ திட்டி அனுப்பிச்சிட்டேயே” என்றவுடன் முகம் வாட அவளுக்கு கால் செய்தாள் சந்திரமதி.

திவி ஆன் செய்ததும் அனு போனை வாங்கி ஸ்பீக்கர்ரில் போட்டு “திவி நீ அம்மாட்ட பேசாத அவங்க உன்ன சாய்ங்காலம் திட்டுனதால தானே நீ கோவிச்சிட்ட? அப்போ திட்டிட்டு இப்போ உன்ன கொஞ்ச கூப்பிட்றாங்க " என்றவளிடம் திவி “ஏய் வாலு, மதி அத்தைய பத்தி என்கிட்டேயே கம்பளைண்ட் பண்றியா? மதி அத்தை எல்லாம் என்ன ஒன்னுமே சொல்லல” என்றாள் அப்பறோம் ஏன் வந்ததும் சாயந்தரம் போயிட்ட? என அமுதா கேக்க " எனக்கு வேலை இருந்தது, அதுதான் வந்ததும் போயிட்டேன்”, என்றாள்.

சந்திரசேகரும் விடாம அப்பறம் ஏன் மா பிரசாதம் கூட குடுக்காம போன, அதுக்கு தானே வந்த,அதுவுமில்லாம சொல்லாமகூட போய்ட்டியமா அவ்வளோ கோபமா ?" என அவர் பங்குங்கு கேள்வி கேட்க "அடடா இதென்ன வம்பா போச்சு காலைல கொடுக்கலாம்னு பாத்தேன் டைம் ஆயிடிச்சு ஆபீஸ் போய்ட்டேன். சாயந்தரம் வந்திட்டு எடுத்திட்டு வந்தேன். நானும் அத்தையும் பேசிட்டு அவங்க ஏதோ எடுக்க உள்ள போனதும் பிரண்ட் சொன்ன வேலையும் அவ கால் பண்ணதும் ஞாபகம் வந்தது, சரி நம்ம அத்தைகிட்ட அப்புறம் சொல்லிக்கலாம்னு வந்துட்டேன். நீங்க எல்லாம் நினைக்கிற மாறி என்ன அத்தை திட்டவும் இல்ல எனக்கு அவங்க மேல கோபமும் இல்ல. எல்லாரும் என்ன பண்றீங்க. அத்த எங்க சாப்டங்களா? " என்றாள்.

அனைவரும் சிரித்து விட்டு "அப்பா என்ன பண்ணாலும் இவ அம்மாவ விட்டுகுடுக்கமாட்டா, ஏய் திவி, அம்மாவும் கேட்டுட்டு தான் இருகாங்க நீயே கேட்டுக்கோ " என்று அமுதா சொன்னாள்.

சந்திரா “நான் சாப்பிட்டேன் டி தங்கம், என் மேல கோபமா?” என வினவியவரிடம் “அட்ச்சோ, அத்தை உங்கமேல எல்லாம் எனக்கு கோபமே வராது. நீங்க எப்போ என்ன திட்டுனீங்க நான் கோபப்பட. அவங்க பில்டப் பண்றதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க என்றாள்”

சந்திராவும் “சரிடா மா என்கிட்ட உண்மையை சொல்லு அப்புறம் ஏன் நான் வரதுக்குள்ள போயிட்ட?” என்றவுடன் திவிக்கு , என்ன சொல்வதென்றே தெரியவில்லை, உங்க மகன் தான் அடிச்சு அனுப்பிச்சிட்டாருன்னா சொல்ல முடியும் என்று நினைத்துக்கொண்டு “அட டோன்ட் ஒர்ரி அத்த நாளைக்கு கண்டிப்பா மீட் பண்றேன். புள்ளைய இவ்வளோ நேரம் கேள்வி கேட்டிங்களே நான் சாப்பிட்டேனான்னு கேட்டுக்கிங்களா?” எனவும் சந்திரா "இன்னுமா நீ சாப்பிடல ஏன் இப்படி பண்ற, உடம்ப கெடுத்துக்கப்போற… என்று பொரிய அவளோ “ஆமாமா, உங்க உருண்டைக்கு தான் வெயிட்டிங் வந்ததும் விரதத்த கலச்சிட்டேன்” என்று அங்கு அவள் சாப்பிடுவது கேட்க, சந்திரா “வாலு,சரி காலைல கண்டிப்பா எழுந்ததும் வந்திடு.” என்று போனை வைத்தாள்.

இந்த உரையாடலை கேட்டவனுக்கு ஒரு நிமிடம் அவளாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்தது . அடுத்த நொடியே “இல்லல… கண்டிப்பா அவளா இருக்காது. சாயந்தரம் அம்மாவே அவள யாரு என்னன்னு கேட்டாங்க வெளில போக சொன்னாங்க. கோபமா தான் பேசுனாங்க, ஆனா அம்மாவும் திவியும் எவ்வளோ பாசமா இருகாங்க, சோ கண்டிப்பா அவ இல்ல” என்று முடிவெடுத்துக்கொண்டு ரூமிற்கு சென்றான் .

[வெளியில்நின்று அவர்கள் பேசியதை மட்டுமே கேட்டானே தவிர அவர்களை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் இருவரும் சிரித்துக்கொண்டும் முகத்தை திருப்பிக்கொண்டும் சண்டை என்ற பெயரில் விளையாடிக்கொண்டிருந்ததை.]

4 - மனதை மாற்றிவிட்டாய்

அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து குளித்துமுடித்து ஆதியின் வீட்டிற்கு கிளம்பினாள் திவ்யா.ஒரு நிமிடம் அவரு என்ன பாத்தா என்ன சொல்லுவாரு. நேத்துமாதிரி கோபப்பட்டா என்ன பண்றது, மதி அத்தைக்கு தெரியாம பாத்துக்கணும், தெரிஞ்சா சங்கடப்படுவாங்க. எப்படியாவது இன்னைக்கு ஆதிய தனியா மீட் பண்ணி சொல்லிடனும், அவரு அம்மாகூட நான் சண்டை எல்லாம் போடல, தப்பா நினைக்கவேணாம் உங்கள மேரேஜ் பண்ற ஐடியாவும் இல்லேனு சொல்லி பிரண்ட்ஸ் ஆகணும் என்று சிரித்தவள் சரி மணி 6 தான் ஆகுது, எப்படியும் இப்போ எழுந்திரிச்சுக்க மாட்டாங்க. சோ அத்தைய பாத்திட்டு கொஞ்ச நேரத்துல வந்தடலாம்னு" நினச்சு கிளம்பினாள்.

அவள் நினைத்தது போலவே அனைத்து எதிராக நடந்தது. அவனும் அதிகாலை எழுந்து தோட்டத்தில் ஜாக்கிங் போய்க்கொண்டிருந்தான். இவள் போனதும் முதலில் சந்தித்தது அவனைத்தான். இவளை கண்டவன் இப்பவும் வந்திட்டாளா… இவ அடங்கமாட்டா போல… இவள என்று வேகமாக அவள் அருகில் வந்தான். அவள் "கொஞ்சம் நான் சொல்றத கோபப்படாம கேளுங்க, அத்த… "என்று ஆரம்பித்தவளை, “போதும்… என்ன ஜென்மம் நீயெல்லாம், பணத்துக்காக இப்படியா? கொஞ்சம்கூட கூச்சமாவே இல்லையா ?” என்றதும் அவளுக்கும் கோபம் வர இருப்பினும் பொறுமையாக “காத்தாதிங்க… யாராவது கேக்கபோறாங்க, ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க. நான் பக்கத்து வீ…” என ஆரம்பித்தவளை "என் வீட்டுக்கு வந்து என்ன காத்ததேனு சொல்ல நீ யாருடி என்று கத்தியதும் சந்திரா வெளியில் வந்தார். ஆதியோ அவளை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியில் செல்லப்பார்த்தான்.

அவள் “ப்ளீஸ், கைய விடுங்க வலிக்கிது” என்று சொல்வதை கேளாமல் இழுத்து செல்ல, சந்திரமதி “ராஜா, என்னடா இது அவள விடு” எனவும், “அம்மா நீங்க விடுங்க மா, இவ இஷ்டத்துக்கு உள்ள வரா, இவள மாதிரி பொண்ணுங்கள சும்மா விடக்கூடாது, நேத்து அடிச்சும் புத்தி வரல…எல்லாம் பணத்துக்காக …” என்றவனை சந்திரா அடிக்க கை ஓங்கியதை முதலில் பார்த்த திவி “அத்தை வேண்டாம்” எனவும் தான் அவன் பார்த்தான் அவன் அம்மா இவளுக்காக தன்னை அடிக்க வருகிறாளா என்றவன் கையை விட்டான். சந்திரா “வா திவி என்று அவளை உள்ளே அழைத்து சென்றாள்” திவி என்று பெயரை கேட்டதும் ஆதிதான் திகைத்து நின்றான். என்ன செய்வது இரவு இவர்கள் திவியை பற்றி சொன்னதையே நினைத்து படுத்தவனுக்கு அவளை பற்றியே எண்ணம் சுற்றி வந்தது. எப்படியும் காலைல வருவாள் நம்ம அவகிட்ட பேசணும். இவ்வளோ நாள் ஏன் இவங்க யாருமே அவள பத்தி சொல்லல என்றவன் சரி அதையும் அவகிட்டேயே கேப்போம் என்று ஒரு பட்டியலையே தயார் செய்து படுத்தவனுக்கு அதிகாலையில் உறக்கம் விலக தோட்டத்தில் அவள் வரவை எதிர்பார்த்து ஜாக்கிங் என்ற பெயரில் உலா வந்துகொண்டிருந்தான். அந்த நேரத்தில் இவளை கண்டதும் இவள் எங்கே திரும்ப வந்தாள். நேத்து அம்மாகிட்ட உங்க மருமகன்னு சொன்னமாதிரி இன்னைக்கு திவி முன்னாடி ஏதாவது சொல்லிட்டா திவி என்ன பத்தி என்ன நினைப்பா?" என்று எண்ணியதும் தான் அவ்வளோ கோபமும். ஆனால் இப்போது அவளுடனா நேத்திலிருந்தது சண்டையிட்டேன். இவள் தான் திவி என்று தெரியாமல் அடித்துவேறு விட்டேனே… கண்டிப்பா அவகிட்ட மன்னிப்பு கேக்கணும் என்று யோசித்தவனுக்கு தன் தவறு புரிந்தது இருப்பினும் அவன் அம்மா அவனை அடிக்கவந்ததை எண்ணி கொஞ்சம் மனக்குமுறலோடு நின்றுகொண்டிருந்தான்.

அந்தநேரத்தில் தொண்டையை செருமிக்கொண்டு திவி வந்தாள் “என்ன ராஜா கொஞ்சம்கூட பொறுமையே இல்லையா, பாரு இப்போ உனக்கு தான் கஷ்டம் அத்தை உங்க மேல கோவமா இருக்காங்க, உங்ககிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டு இருக்காங்க…இதுக்கு மேலேயாவது அடுத்தவங்க பேசறத கேட்டுட்டு எதுனாலும் பண்ணுங்க சரியா?” என்று அவள் சொன்னதும் இவனுக்கு அடங்கியிருந்த கோபம் ஆவேஷமாக வெளியில் வந்தது.

“எனக்கு தெரியும். நீ உன் வேலைய பாரு, என் அம்மா என்கிட்ட பேசுவாங்க. அவங்க கோபம் நான் பண்ண விசயத்தாலதானே தவிர என் மேல இல்ல” என்றவனை

ஆச்சிரியமாக பார்த்தாள் ஒரு நொடி தான். பின்பு சிரித்து கொண்டு திரும்பியவளை அண்ட் இன்னொரு விஷயம் “டோன்ட் கால் மீ ராஜா. அது என் அம்மா, பாட்டி மட்டும் தான் கூப்பிடுவாங்க. வேற யாரும் என்ன கூப்பிட்டா எனக்கு பிடிக்காது.” என்றதும் மீண்டும் அவள் குறும்புடன் "தாங்க் பார் யுவர் இன்போர்மசன், எப்படியும் இனிமேல் அத்தை கூப்பிடமாட்டாங்க அதனால இனிமேல் இதுக்காகவே உங்களை நான் ராஜான்னு தான் கூப்பிடப்போறேன். " என்று கண்ணடித்துவிட்டு சென்று விட்டாள்.

அவள் செல்வதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். இவகிட்ட போயா மன்னிப்பு கேக்கணும்னு நினச்சேன். சொல்றத கேக்றதுமில்லை, அதிகப்பிரசங்கி, என்னமா வாயடிக்கறா, அடுத்தவங்க பீல் பண்றங்களேன்னு கொஞ்சம்கூட எதுமில்லாம இப்படி வந்து குத்திக்காமிச்சிட்டு சீண்டிட்டு போறா. என் அம்மா இவளுக்காகத்தானே என்ன அடிக்கவந்தாங்க கொஞ்சமாவது ஒரு கில்ட்டிநெஸ் இருக்கா. ச்சா … இவளை எப்படி எல்லாருக்கும் புடிச்சதோ? என சந்தேகத்துடன் உள்ளே சென்றான்.

ஹாலில் சென்றுகொண்டு இருந்தவனை சந்திரா, “ராஜா வந்து காபி எடுத்துக்கோ டா, அப்புறம் காலைலைக்கு என்ன டிபன் செய்யட்டும்?” என்றார்.

அவர் தன்னுடன் சகஜமாக பேசியதோடு, ராஜா என்று எப்போதும் போல் அழைத்ததை கேட்டவனுக்கு மனது லேசானது. இருப்பினும் திவியை திரும்பி ஒரு ஏளன பார்வையை வீசினான். அதில் “பாத்தியா?.. என் அம்மா என்கிட்ட எப்போவும் போல பேசிட்டாங்க…உனக்கு எல்லாம் அவ்லோ ஸீன் இல்லேனு” சொல்லாமல் சொல்லியது. அந்த பார்வை.

அதை பார்த்து மெலிதாக புன்னகைத்த திவி அவனை இன்னும் வெறுப்பேற்ற எண்ணி “அத்தை, என்ன வா வா ன்னு கூப்பிட்டு உங்க பையனுக்கு உபச்சாரம் பண்ணிட்டு இருக்கிங்களா. அவரு தான் கூடவே இருக்கபோறார்ல, நீங்க எப்போ வேணாலும் செஞ்சுக்குடுத்துகோங்க அதனால எனக்கு புடிச்சது தான் இப்போ செய்யணும்” என்றாள்.

சந்திராவும்,“அதுவும் சரி தான், உனக்கு லீவே சனி. ஞாயிறு மட்டும் தான், சரி உனக்கு என்ன வேணும்னு சொல்லுடா மா, அதே செய்யறேன்” என்றார்.

திவி," எனக்கு ஆனியன் நெறைய போட்டு தோசை, பணியாரம் வேணும் கொஞ்சம் தேங்கா சட்னி, புளி சட்னி, தேங்கா சட்னில ஆனியன் போட்டு தாளிக்கணும்" என்று லிஸ்ட் கொடுத்தாள்.

சந்திராவும் திவியின் கன்னத்தில் செல்லமாக அடித்துவிட்டு, " உன்ன… எவ்வளோ ருசியா கேக்குது?," என்று விட்டு சென்றாள்.

இதை பார்த்துக்கொண்டு இருந்த ஆதியோ “என்ன இவ, நம்ம வீட்ல வந்திட்டு நம்மளையே அதிகாரம் பண்றா, இந்த அம்மாவும் அவ கேக்கறது செய்யறேன்னு சொல்லிட்டு போறாங்க. எல்லாம் இவங்க குடுக்கிற இடம். சரி, இவ்வளோ நாள் எல்லாரையும் ஒரு ஒரு ரூட்ல இவ ஏமாத்திட்டா, இனிமேல் நம்ம பாத்துக்கலாம். இவள கொஞ்சம் தூரமா நிறுத்தி வெக்கிறதுதான் நம்ம மொத வேலையா இருக்கனும்” என்று முடிவெடுத்துக்கொண்டான்.

ஆனாலும் அவ கேட்ட எல்லா ஐட்டமும் எனக்கு மிகவும் பிடித்தவை, எப்படி ஒன்னு மாறாம அதே காம்பினேஷன்ல சொன்னா என்று யோசித்துக்கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டான்.

சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க இவனும் வேகமாக சென்றான். டைனிங் டேபிளில் அனைவரும் திவியுடன் பேசிக்கொண்டு, கதை கேட்டுக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர். தன்னை பார்த்ததும் அவள் பேசுவதை நிறுத்திவிட்டு கீழே குனிந்து சிரித்துக்கொண்டு இருந்தாள். அனைவரும் அமைதியாக அதேபோல தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். இவனுக்கு பொறுமை பறக்க “என்னாச்சு, என்ன பேசிட்டுஇருந்திங்க, எதுக்கு சிரிக்கிறீங்க?” என்றான். ஒண்ணுமில்லை என்று திவி கூறவும், ஆதியோ “ஒன்னுமே இல்லத்துக்கா இவளோ நேரம் பேசிட்டு நான் வந்ததும் சிரிக்கிறீங்க ?” என்றான் அவளோ “அட, எதுவுமில்லை பா” என்றாள்.

ஆதியோ கொஞ்சம் காட்டமாக, " இப்போ என்ன பேசுனீங்கன்னு சொல்ல போறியா இல்லையா ?" என்றதும், திவியோ நன்றாக வை விட்டு சிரித்து விட்டு “நான்தான் சொன்னேன்ல” என்று அனு, அமுதாவை வம்பிழுத்துக்கொண்டிருந்தாள்.

அமுதாவோ, " போ அண்ணா, எல்லாம் உன்னால தான். நீ ஏன் இப்டி பண்ண?, இது என்ன புது பழக்கம்?" என்றாள்.

அவள் பேசியதில் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் முழித்தவனை பார்த்து சந்திரசேகர் கூறினார், “இல்ல ஆதி, நீ பொதுவா வெளியாள் கிட்ட தேவை இல்லாம பேசமாட்டான், பெருசா யார்கிட்டேயும் ஏதும் கேக்கமாட்டான் , எதிர்பாக்கமாட்டான் , அடம்பிடிக்கமாட்டான்னு,ஆனா செமையா கோபம் வரும், வந்தா எதும் கண்டுக்காம பேசிடுவான் என்று சொல்லிட்டு இருந்தாங்க… அதுக்கு நம்ம திவி சொன்னா, அப்படியெல்லாம் அந்த அளவுக்கு ஒண்ணுமில்லேனு சொல்லிட்டு இருந்தா. அதுல தான் ஆர்கியூ பண்ணிட்டு இருந்தாங்க., அதுக்கு அமுதா சொன்னா சரி என் அண்ணாவ உங்கிட்ட பேசவை பாக்கலாம்னு சொன்னா, நம்ம அனு ஜஸ்ட் உங்கள திரும்பி பாக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க. நீ வந்ததும், நேரா திவிய தான் பாத்த அண்ட் அவகிட்ட மட்டும் தான் பேசுன, ஒண்ணுமேயில்லண்ணு சொல்லியும் கேக்காம அந்த விஷயத்தை சொல்லுன்னு அடம்பிடிச்ச, அவள இன்னைக்கு தான் பஸ்ட் டைம் பாக்குற, ஆனா நல்ல சண்டைபோடற… சோ உன்ன பத்தி சொன்ன எல்லா ஸ்டேட்மெண்ட்ஸ்ம் திவி இல்லேனு ப்ரூப் பண்ணிட்டா, அதனால திவி தான் வின்னிங், திவி கேக்கிறத அமுதாவும், அனுவும் செய்யணும்” என்று தீர்ப்பு வழங்கினார்.

அமுதாவும், அனுவும், " எல்லாம் அண்ணனாலதான், உங்கள நம்புனதுக்கு நாங்க தான் தோத்துட்டோம் என்றுவிட்டு திவியிடம் அண்ணனாலதானே இப்டி ஆச்சு, சோ எதுனாலும் எங்க சார்பா அவனே வாங்கித்தருவான், இதுதான் அவனுக்கு பனிஷ்மென்ட் " என்றுவிட்டு அவனை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“ஸ்பெஷல் ஆ பாக்கணும்னு எல்லாம் பாக்கல. காலைலையே இவள பாத்துட்டேன். அம்மாகூடத்தானே இவளோ நேரமும் பேசிட்டு இருந்தா. இப்போ நீங்க எல்லாரும் வேற ரொம்ப கத்திட்டு இருந்திங்களே. அதான் யாரு குடும்பத்துல பிரச்சனை பண்ணிவிட்டதுனு பாத்தேன். அதுவும் வெளியாளா இருக்காங்களேன்னு” என்று கூறி நீ இந்த குடும்பத்தில் ஒருத்தி இல்லை என சொல்லாமல் சொன்னான் ஆதி.

அவனது நோக்கம் புரிய அதை கேட்டும் மெலிதாய் சிரித்தாள் திவி. அதுவே அவனை மேலும் சீண்டிவிட அவளை வெறுப்பேற்றவேண்டுமென நினைத்தான்.

அனைவரும் அவனை வெறித்து பார்க்க அவனோ கூலாக திவியிடம் திரும்பி " நீ உங்க வீட்டுக்கு போகமாட்டீயா?" என வினவ திவி புருவம் உயர்த்தி அவனை பார்த்தாள்.

அவனோ தன் அம்மாவிடம் திரும்பி “ஏன் மா நம்ம வீட்ல எல்லாம் பொண்ணுங்கள இப்படி எங்கேயோ போகட்டும் எவ்வளோ நேரமானாலும் இருக்கட்டும்னு விடமாட்டீங்கள? ஒருவேளை சமாளிக்க முடியாம எங்கேயோ போயிட்டு பிரச்னை பண்ணிட்டு வரட்டும்னு நிம்மதியா உக்காந்துட்டாங்களோ? ம் ம்…என்ன சொல்றது எல்லாம் வளத்தவங்க …” என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே திவி எழுந்து கை கழுவ சென்றாள்.

5 - மனதை மாற்றிவிட்டாய்

கை கழுவி விட்டு அமைதியாக வந்த திவி அனைவரிடமும் “நான் கிளம்புறேன் … கொஞ்சம் வேலை இருக்கு” என்றாள். அவளை நம்பாமல் பார்த்தவர்களிடம் " ஐயோ, நிஜமாத்தான் சொல்றேன்… அத்தை நீங்களாவது சொல்லுங்க நான் வந்ததுல இருந்தே வேலை பத்தி சொல்லிட்டு தானே இருந்தேன்." என சந்திராவையும் துணைக்கு அழைத்தாள்.

சந்திராவும், " ஆமா, அவ வந்ததுல இருந்தே சொல்லிட்டே தான் இருந்தா, நான்தான் சாப்பிட்டு தான் போகணும்னு கட்டாயப்படுத்துனேன். சரி டா நீ பாத்து போயிட்டு வா", என்றார்.

இருப்பினும் சந்திரசேகரின் தெளியாத முகம் கண்டு அவரிடம் வந்த திவி, " சேகர் மாமா, நிஜமா எனக்கு ஒர்க் இருக்கு. நான் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன். ப்ளீஸ் எனக்கு நீங்க சிரிச்சிட்டே பை சொல்லி அனுப்பனும். நீங்க இப்டி இருந்தா எனக்கு சங்கடமா இருக்கும். " என கெஞ்சி கொண்டிருந்தவளை கண்ட சந்திரசேகர்," சரி டா மா, பத்திரமா போயிட்டு முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்திடு. நாளைக்கு லீவு தானே. சோ நைட்டோ, இல்லை நாளைக்கோ நாம பேசலாம்" என்றவரிடம் தேங்க்ஸ் மாமா என்றுவிட்டு அமுதா, அனு , சந்திராவிடம் கூறிவிட்டு சென்றுவிட்டாள் .

அவள் சண்டை போடவாது செய்வாள் . அப்போது அவளை கவனித்துக்கொள்ளலாம் என்று எண்ணிய ஆதிக்கு அவள் ஏதும் பதில் கூறாமல் சென்றது முக்கியமாக தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டதை எண்ணி தன்னுள் கனன்று கொண்டிருந்தான். அவளது பார்வையும் விலகலும் அவனை என்னவோ செய்தது. அதை அவன் யோசித்து உணரும் முன்பே அமுதா " என்ன அண்ணா, உனக்கு புது ஆளுங்க அவ்வளோவா பிடிக்காதுதான் அதுக்காக இப்படியா மூஞ்சில அடிச்சமாறி பேசுவ? " என்றாள்.

அனுவோ “திவி ஒன்னும் புது ஆளோ வெளி ஆளோ இல்லை” என்றாள்.

அமுதா அண்ணனிடம் "அதுவுமில்லாம உனக்கு பழக்கமில்லாதவங்ககிட்ட இருந்து ஒதுங்கி இருப்ப, அவங்க உன்ன டிஸ்டர்ப் பண்ணா இல்லை உன் விசயத்துல தலையிட்டா தான் கோபமா நடந்துப்ப, அப்பவும் அவங்கள மரியாதை இல்லாம பேசமாட்ட… ஆனா திவி என்ன பண்ணா, அவகிட்ட நீ ஏன் அண்ணா இப்படி கோபமா நடந்துக்கிட்ட, அவள நீ வா போ னு ஒருமைல வேற சொல்ற, அதுக்கு மட்டும் உரிமை இருக்கான்னு " கேட்டுக்கொண்டே இருக்க சந்திரா தான் “சரி இந்த பேச்ச விடுங்க…அம்மு, அனு 2 பேரும் உள்ள போங்க” என்றார்.

அம்முவோ " இப்படியே அண்ணா பண்ற எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணுங்க மா, திவி என்ன நினைக்கிறான்னு கூட நம்மால கண்டுபுடிக்கமுடியாது. அவ எப்பவும் யாருகிட்டேயும் அவளோட பீலிங்ஸ்ஸ வெளில காட்டிக்கவும் மாட்டா…" என்று புலம்பிக்கொண்டே சென்றுவிட்டாள் அனுவும் பின்னோடு சென்றாள்.

இதை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்த ஆதிக்கு தன்னை திவி அவமதித்ததாகவும், தன் அண்ணன் செய்தால் எதுவும் சரியாகத்தான் இருக்கும் என கூறும் தங்கைகள் இன்று தன்னை கேள்விகேட்க சண்டையிட காரணம் இந்த திவி என்று இன்னும் அவளை திட்டித்தீர்த்தான்.

அம்மாவும், அப்பாவும் அமைதியாக சென்றுவிட ஆதிக்கு தான் என்னவோ போல் ஆயிற்று. பேசாமலே காத்திருந்த ஆதி பொறுமையற்று அம்மா அப்பாவிடம் சென்று “இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை? நான் பாக்கிறவங்க எல்லார்கிட்டயும் ரொம்ப ஜாலியா எல்லாம் பேசமாட்டேன், பழக்கமாட்டேனு தெரியும்தானே, அவளும் இந்த வீட்டு பொண்ணு இல்லேல்ல. அப்புறம் என்ன புதுசா எல்லாரும் என்ன இப்படி ட்ரீட் பண்றீங்க?” என பொருமினான்.

சந்திரா அவனை அழைத்து அருகில் அமர செய்து " ராஜா, உண்மை தான் நீ புது ஆளுங்ககிட்ட பழகமாட்ட, பேசமாட்ட…ஆனா மத்தவங்க பேசுனா அத பெருசாவும் எடுத்துக்கமாட்ட… அது அவங்களோட உரிமைன்னு சொல்லுவ… அப்படி இருக்க இங்க எல்லாருக்குமே திவிய எவ்வளோ புடிக்கும்னு நேத்துதான் சொன்னோம். இருந்தும் அவ மனச கஷ்டப்படுத்தற மாதிரி நீ பேசியிருக்க. காரணமில்லாம அடுத்தவங்கள காயப்படுத்தமாட்ட… நீ அவளை இந்த அளவுக்கு பேசுற, காலைல அந்தமாறி திட்டுறேன்னா கண்டிப்பா ஏதோ இருக்கு… உண்மைய சொல்லு, என்ன நடந்தது உங்க 2 பேருக்கும் இடையில… திவிய இதுக்கு முன்னாடி பாத்திருக்கியா ?" என்று அவள் நேரடியாக கேட்டாள்.

தாயிடம் எதையும் மறைக்க விரும்பாமல் அவளை கோவிலில் பார்த்தது முதல் அவளை பற்றி எண்ணியது அவள் வீட்டில் சந்திரமதியோடு பேசியது, தான் திட்டி அவளை அனுப்பியது என அனைத்தையும் கூறினான்.

சந்திரசேகருக்கோ ஆதியின் மீது கட்டுக்கடங்கா கோபம் “என்ன ஆதி நினைச்சிட்டு இருக்க, அந்த பொண்ண கை நீட்டி அடிக்கற அளவுக்கு உனக்கு உரிமைய யார் குடுத்தது? அவளும் எதுமே நடக்காத மாதிரி இருந்திருக்கா… அம்மு சொல்றதும் உண்மை தான், அவ கோபப்பட்டோ, அழுதோ, ஏன் புலம்பிகூட பாத்ததில்லை…எப்பவுமே சிரிச்சிட்டே எல்லாத்தையும் எடுத்துப்பா…திவிய இங்க யாருமே ஒரு சொல்லு சொல்றதுக்கே அவ்ளோ யோசிப்போம். ஆனா நீ அவளை அடிச்சருக்க… அதுவும் தேவையில்லாம நீ சந்தேகப்பட்டதுக்கு இல்லையா? என் பையன் எதுலையுமே பெஸ்ட்… அவனோட எந்த முடிவும், கணிப்பும் சரியாதான் இருக்கும்னு எனக்கு இருந்த நம்பிக்கைய நீ திவி விசயத்துல பொய்யாகிட்ட ஆதி…மொத தடவையா உன்ன தனியா அனுப்பிச்சு படிக்க வெச்சது தப்போன்னு தோணுது… எல்லாரோடையும் பழகுற சூழல் இருந்திருந்தா நீ மத்தவங்க உணர்வுகளையும், மனசையும் புரிஞ்சிட்டிருந்திருப்பியோன்னு தோணுது.” என்று மனக்குறையுடன் அந்த அறையை விட்டு சென்றுவிட்டார்.

ஆதியோ “அவளுக்காக அப்பா என்ன திட்றாரா மா? நடந்த எல்லாமே அவளுக்கு அகைன்ஸ்ட்டா தான் இருந்தது. அதுவும் உங்ககிட்ட அவ அப்படி பேசுனது எனக்கு கோபம் வந்திடுச்சு. அதான் அடிச்சிட்டேன். அவனால தானே எல்லா பிரச்சனையும் ஆனா அப்பா என்ன மட்டுமே குறை சொல்றாரு. அந்த அளவுக்கு அவ முக்கியமா போய்ட்டாளா?” என்று கத்திக்கொண்டு இருந்தான்.

சந்திரமதிக்கு ஆதியின் மேல் வருத்தம் என்றாலும் அவனுடைய எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க எண்ணினார். ஆதியை அருகில் அழைத்து அமர வைத்து “ராஜா கொஞ்சம் நீயே யோசிச்சு பாரு, கோவில்ல உன் பேருக்கு நான் வரமுடிலேன்னு அவ அர்ச்சனை பண்ணியிருக்கா. அவ வீடும் இங்க தானே அதான் உன் வண்டி பின்னாடியே வந்திருக்கா. அவளும் நானும் பேசுனத கேட்டியே எங்கள பாத்தியா… நாங்க 2 பேரும் எதோ விளையாட்டுக்கு கோவிச்சிட்டு பேசுனது. அப்பவும் நீ என் முன்னாடி கேட்டிருந்தாலோ இல்ல அப்போவே சொல்லிருந்தாலோ இவ்வளோ சங்கடம் வந்திருக்குமா, எதையும் பொறுமையா யோசிக்கிற நீ ஏன் இந்த விசயத்துல உடனே கோபப்பட்டு அவளை அடிச்ச. அதுவும் என்ன என்ன எல்லாம் பேசியிருக்க. என் பையன் இப்படி எல்லாம் பொண்ணுங்கள பத்தி தப்பா பேசமாட்டானே ராஜா…அவ மனசு எவ்வளோ வருத்தப்பட்டிருக்கும். ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டா. நைட்டும் போன்ல அவ ஏதும் சொல்லல. இப்போ நீயா சொல்றவரைக்கும் இவ்வளோ விஷயம் நடந்திருக்கறதே திவி யாருக்கும் காட்டிக்கல. அதுதான் அவளோட குணம். அதுவுமில்லாம காலைல உங்கிட்ட கோவிச்சிட்டு வந்ததுக்கு என்கிட்ட சண்டைபோட்டா தெரியுமா?” என்றதும் ஆதியின் கண்கள் ஒரு நிமிடம் பளிச்சிட்டன.

[காலையில் நடந்த உரையாடல் :

திவி சந்திராவிடம் “என்ன அத்தை என்னாச்சு உங்களுக்கு, உங்க பையன எப்படி நீங்களே தப்பா நினைக்கலாம்? எப்படி அடிக்க வரலாம்?. அவர் மேல தப்பில்ல. அவருக்கு என்ன தெரியாது…நான் வேற யாரோன்னு நினைச்சிட்டாரு, நான் திருட்டுத்தனமா வர மாறி வீட்டுக்குள்ள வந்தா புதுசா யாரு பாத்தாலும் சந்தேகம் தான் வரும். நான்தான் அவர்கிட்ட கொஞ்சம் விளையாடலாம்னு யாருன்னு சொல்லாம வம்பிழுத்திட்டிருந்தேன். அதான் அவரு அப்படி நடந்துக்கிட்டாரு. இதுக்கு போயி நீங்க ஏன் இப்டி பண்றீங்க? உங்க மகன் மேல உங்களுக்குத்தான் நம்பிக்கை இருக்கனும், காரணம் இல்லாம அப்படி நடந்துக்கமாட்டான். அட்லீஸ்ட் என்ன விஷயம்னு கேக்காவது தோணனும்ல…அவரு பாவம் ரொம்ப ஷாக் ஆயிட்டாரு. நீங்க அவருகிட்ட பஸ்ட் போய் பேசுங்க. அப்புறமா எதுனாலும் பாத்துக்கலாம்.” என்றாள்.

சந்திராவோ " நீ என்ன சொன்னாலும் எனக்கு அவன் அப்டி பேசுனது மனசு கேக்கல… ஆனா அவனையும் முழுசா தப்பு சொல்லமுடியாது. யோசிச்சு பேசுறது, மத்தவங்கள மனச புரிஞ்சுக்கறது அந்த மாதிரி சூழல்ல அவன் வளரல. அவனுக்கு என்ன தோணுதோ அப்டியே பேசிடுவான். அப்படியே வளந்திட்டான். அதனால நீ சொல்றதும் சரி தான். அவன்கிட்ட பேசுறேன்." என்றார். ]

இதை கேட்ட ஆதிக்கோ அவளா எனக்காக அம்மாவிடம் சண்டையிட்டது. இது தெறியாமல் அவளிடம் வெறுப்பேற்ற எண்ணி செய்தது சாப்பிடும்போது குத்திக்காட்டியது அனைத்தும் கண் முன் வந்து நின்றது. அவன் முகம் தெளிவடையாததை பார்த்த சந்திரமதி “ராஜா நீயும் கெட்டவன் இல்லை , திவியும் நீ நினைக்கிற மாதிரி கெட்டவ இல்லை. இன்னும் சொல்ல போனா 2 பேருமே என் பிள்ளைங்க தான். அவளோட வளர்ப்பும் பாதி என்னோடதுதான். இனிமேல் அவள பத்தி தப்பா நினச்சா அது உங்க அம்மாவுக்கும் பொருந்தும்னு நியாபகத்தில வெச்சுக்கோ” என்று அறிவுரையில் ஆரம்பித்து அதிரடியாய் முடித்தார்.

இத்தனையும் கேட்ட பிறகும் அம்மா சொல்ற எல்லா பதிலும் ஒத்துபோகுதானாலும் கோவிலில் பார்த்த நொடி அவளின் பார்வை, சிரிப்பு, வெளியில் அவனோடு கூடவே நின்றது, காலையில் அம்மா இல்லாத போது அவள் தன்னை குத்திக்காட்டி வெறுப்பேற்றுவது போல பேசியது, போனில் பேசியது எல்லாவற்றையும் எண்ணியவனுக்கு முழுதாக நல்லவள் என்று சான்று அளிக்க முடியவில்லை. அவன் ஒரு முடிவுக்கு வந்தான். யாருக்கும் சந்தேகம் வராதவாறு அவளை கண்காணித்து திவி தன் குடும்பத்தை நெருங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தான். பாவம் இறுதியில் அவனே மிகவும் நெருங்கப்போகிறான் என்பது அறியாமல்.

வீட்டிற்கு சென்ற திவியோ கோபத்தின் உச்சியில் இருந்தாள். “அங்கே அவன் மட்டும் இருந்திருந்தாள் நடப்பதே வேறு. அத்தை , மாமா, அம்மு, அனு எல்லாரும் இருந்ததால தப்பிச்சிட்டான். என்னவெல்லாம் பேசுறான். ஏதோ தெரியாம பஸ்ட் டைம் கத்திட்டான். எல்லாருக்கும் தெரிஞ்சா வருத்தத்தப்படுவாங்கனு தானும் சொல்லாம விட்டா இவன் என்ன நம்ம யாருன்னு தெரிஞ்சும் இப்படி எல்லாம் பேசுறான். இவ்வளோ பேசுறவன் நேத்து என்ன அடிச்சத பத்தி, தப்பா பேசுனத பத்தி அங்க யார்கிட்டேயாவது சொன்னானா. அத்த மாமாக்கு தெரிஞ்சா சும்மா விடமாட்டாங்க. அதுக்கெல்லாம் தைரியம் இருந்தா, யோசிக்கற அளவுக்கு புத்தியும் பொறுமையும் இருந்திருந்தா இப்படி எங்கிட்ட ஏன் புரியாம கத்தப்போறான். தான் பண்ணது தப்புன்னும் தெரிஞ்சும் மன்னிப்பும் கேக்காம இப்படி பேசுறானே. இருக்கட்டும் இதுக்கு மேல ஏதாவது இந்த மாதிரி இன்னொரு தடவ பேசட்டும். அப்புறம் அவனை இந்த திவிகிட்ட இருந்து யாரும் காப்பாத்த முடியாது. டிஸ்டர்ப் பண்ணி டார்ச்சர் பண்றேன்…” என்று ஒரு முடிவோடு இருந்தாள்.

6 - மனதை மாற்றிவிட்டாய்

மதியம் நெருங்கும் வேளையில் அபியிடம் இருந்து அழைப்பு வந்தது. போனை எடுத்த சந்திரமதியிடம் “என்ன மா உன் பையன் வந்ததும் எல்லாரையும் மறந்தாச்சா, ஒரு வார்த்தை கூட என்கிட்ட நீ சொல்லலேல்ல… நீ தான் இப்படின்னா உன் பையனும் அப்படிதான் போல ஒருவார்த்தை கூட சொல்லல. அவரு வந்து சொல்லறாரு உன் தம்பி நேத்தே வந்துட்டான்னு.” தன் பிறந்தவீட்டில் நடக்கும் விஷயம் தன் கணவருக்கு முதலில் தெரிகிறது, தன்னிடம் யாரும் பகிர்ந்துகொள்ளவில்லை என்ற ஆற்றாமையில் அவள் பொருமினாள்.

அவள் மனம் புரிந்த சந்திரா " அப்படி இல்லடா அபி, நந்துக்கு ஸ்கூல் இருக்கு. சொன்னா அவனும் வரணும்னு அடம்பண்ணுவான். அவனை சமாளிக்கிறது கஷ்டம். அதான் பரிட்சை முடியட்டும்னு இருந்தேன் என்றாள். நீயும் இந்த மாதிரி நேரத்துல சும்மா அலையக்கூடாதில்ல டா.(அபி 5 மாத கர்பிணியாய் இருந்தாள். அதை குறிப்பிட்டு அம்மா கூறவும் இவளும் ஓரளவு சமாதானம் அடைந்தாள்.)

சரி சரி நாங்க இன்னைக்கு வரோம்மா…உங்க மாப்பிளை தான் கூட்டிட்டு போறேன்னாரு. போயிட்டு நாளைக்கு வந்திடலாம். அப்புறம் நந்துக்கு எக்ஸாம் முடிஞ்சதும் கூட்டிட்டு போய் விட்றேன் என்றிருந்தான் அபியின் கணவன் அரவிந்த். என்ன காரில் சென்றால் 1 மணிநேர பயணம். அதற்கே இத்தனை பாடு என்று அவனாகவே முன் வந்து சொல்லிவிட்டான். இல்லையென்றால் அவள் அதற்கு என்று ஒரு பாட்டை ஆரம்பித்துவிடுவாள் என்பது அந்த அன்பு கணவன் அறிந்த ஒன்றே. அனைத்திற்கும் மேலே அவனுக்கும் ஆதிக்கும் என்றும் ஒரு நட்புணர்வு உள்ளது.

மாலையில் அபி, அரவிந்த் மற்றும் அவர்களின் செல்ல வாண்டு நந்து அனைவரும் வந்துவிட்டனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்க அரவிந்தும் ஆதியும் கட்டிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அக்கா மாமாவிடம் பேசிவிட்டு தாத்தா பாட்டியிடம் இருந்த குழந்தையை தூக்கினான். ஆதியிடம் வந்த நந்து மாமா ஏன் என்கிட்ட நீங்க வரதா சொல்லவேயில்லை? சொல்லிருந்தா நாங்க உங்கள கூப்பிட வந்திருப்போம்ல?" என்றதும் ஆதி அவனை அள்ளி அணைத்து முத்தமிட்டு எல்லாருக்கும் சர்பரைஸ்ஸா இருக்கட்டும்னு தான் நந்து குட்டி நான் சொல்லல." என்று விளக்கினான்.

அதற்கு அபியோ "டேய் இரு இரு என்று ஆதியிடம் கூறிவிட்டு , நந்து கண்ணா உண்மையாவே நீ மாமாவ கூப்பிடறதுக்கு தான் முன்னாடி சொல்லலைனு கேட்டியா இல்லை உனக்கு ஏதாவது வேணுமா? " என்றாள்.

நந்துவோ கள்ளச்சிரிப்புடன் " அது ஒண்ணுமில்ல மாமா நீங்க வரும் போது வாங்கிட்டு வர சொல்லலாம்னு டாய்ஸ் லிஸ்ட் போட்டு இருந்தேன். ஆனா நீங்க சொல்லாம வந்துட்டீங்க. இப்போ நான் எப்படி டாய்ஸ் வாங்கறது" என்று அந்த வாண்டு பீல் பண்ணவும், அனைவரும் சிரித்துவிட்டு “டாய்ஸ்க்காக மாமாவ தேடிட்டு எவ்வளோ உண்மையா பாசமா கேக்கறமாரி நடிக்கிற பிராடு” என்று அவனுக்காக வாங்கிய பொம்மைகளை காட்டினான் ஆதி. விழி விரித்து பார்த்த குழந்தை "மாமா எல்லாம் எனக்கு புடிச்சது, சூப்பர், ஜாலி என்று கத்திகொண்டே ஓடினான். " அவனை விடுத்து பெரியவர்கள் அனைவரும் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

மாலை சிற்றுண்டியுடன் உரையாட அரவிந்த், ஆதியிடம் " அப்புறம் மச்சான், இனி இங்கேதானே இருக்க போற, அப்படியே கல்யாணத்த பண்ணிட்டு இருந்தா மாமா நான் எல்லாம் மாமியார் மருமக சண்டை, நாத்தனார் சண்டை எல்லாம் பிரீயா வீட்ல பாப்போம்ல. எங்களுக்கும் இவங்கள மட்டுமே பாத்து போர் அடிக்கிது." என்று மாமனாரும் மருமகனும் சேர்ந்து சிரித்துக்கொண்டனர். சந்திராவும் அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “உங்க 2 பேருக்கும் பொழுது போகாட்டி நீங்க சண்டைபோட்டுக்க வேண்டியதுதானே, அதைவிட்டுட்டு எப்படி நாங்க சண்டை போடணும்னு நினைக்கலாம். வரப்போறவ இந்த வீட்டு மருமக இல்லை, மகதான், மகாலக்ஷ்மி மாதிரி இருப்பா. பாசம், பண்பு, படிப்பு, பேச்சு, திறமை எல்லாத்துலையும் என் பையனுக்கு பொருந்தமானவளா இருப்பா. நான் இல்லாத குறைய தீத்துவெக்கிற மாதிரி என் பையன சந்தோசமா பாத்துக்கரவலா தான் அவ இருப்பா. அப்படி இருக்க நான் எப்படி அவளோட சண்டை போடுவேன்.” என்றாள் சந்திரமதி.

அவளை தொடர்ந்து அபியும் " அம்மா சொல்றமாதிரி தான் ஆதியோட மனைவி எனக்கு கூட பொறக்காத தங்கச்சியா தான் இருப்பா, அதனால நானும் அவளோட சண்டைபோடமாட்டேன்." என்றாள்.

சந்திரசேகரோ சோகமாக " அப்படின்னா இவங்கள அடக்க யாரும் வரமாட்டாங்களா? நமக்கு விடிவுகாலமே பொறக்காதா ?" என்று கேட்ட பாவனையில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

மறுபடியும் அரவிந்த் “சரி ஆதி உன் ஐடியா என்ன ?” என்று மீண்டும் ஞாபகப்படுத்த அனைவரும் ஆவலோடு அவன் முகத்தை பார்க்க அவனுக்குள் ஒரு நொடி திவியின் முகம் வந்து மறைந்தது. அதை ஒதுக்கிவிட்டு “இல்ல மாமா இப்போதைக்கு எனக்கு கல்யாணத்துல இண்டெர்ஸ்ட் இல்ல. எப்போ வரும்னு தெரில. எனக்கா தோணுச்சுனா நானே சொல்றேன். அடுத்து பிசினஸ், கன்ஸ்டருக்ஷன் எல்லாம் பாக்கணும். டெவெலப் பண்ணனும். அதுவரைக்கும் இந்த பேச்சே வேண்டாம்.” என்றான்.

அவன் முடிவை மாற்றமுடியாது என்பதை அனைவரும் அறிந்ததால் ஒரு சிறு ஏமாற்றத்துடன் அமைதியாகினர்.

அரவிந்த் தான் " சரி அபி உன் நாத்தனார் எங்க?" என்றான். அனைவரும் புரியாமல் விழிக்க அவனோ" அட… இதென்ன உன் தம்பி மனைவி மட்டும் உனக்கு நாத்தனார் இல்லமா, என் தங்கச்சியும் தான். உங்கள அடக்க எங்களுக்கு சப்போர்ட் பண்ண அவதானே வரணும். திவி எங்க இன்னும் காணோம்.?" என்றான். அபியும் “ஐயோ, ஆமாங்க… நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க… நான் அவகிட்ட சொல்லவேயில்லை. சொல்லலைன்னு தெரிஞ்சா சண்டைக்கு வருவா.” என்றதும் காலையில் அபி போனில் சண்டையிட்டது ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர். அவளும் அதை புரிந்துகொண்டவளாக " என்ன விட அவ பல மடங்கு. அவகிட்ட நம்மனால பேச முடியாது. மொதல்ல அவளை கூப்பிடுங்க. வரச்சொல்லுங்க" என்றாள் . ஆனாலும் எப்படியும் அவ இவ்வளோ நேரம் வராம இருக்கமாட்டாளே. இன்னைக்கு அவளுக்கு ஆபீஸ் லீவு தானே. எப்படியும் காலைல வந்தா நைட் தானே போவா. அதுவும் மகா அத்தை ராஜி அத்தை யாராவது வந்து கூட்டிட்டுபோகணும். ஏன் அவ வீட்ல இல்லையோ வெளில எதுவும் வேலையா போயிருக்காளா ?" என்று வினவினாள்.

அதற்கு சந்திரசேகரும், சந்திரமதியும் ஆதியை முறைத்தனர். அவனுக்கோ இவர்களும் அவளை பற்றி பேச ஆரம்பித்ததும் ஐயோ என்றிருந்தது இப்பொது அம்மாவும் அப்பாவும் முறைக்க பார்த்தவன் இவங்க எதுக்கு இப்போ என்ன மொறைக்கறாங்க. எல்லாம் அந்த வாயாடினால வந்தது என தனக்குள் திட்டிக்கொண்டான். இன்னைக்கு வரட்டும் வெச்சுக்கறேன் அவள என்று அர்ச்சனை செய்தான். அவனும் ஏனோ அவள் வரவை எதிர்பார்த்தான்.

அரவிந்த் அபியின் போனில் இருந்து திவிக்கு கால் செய்தான். திவி போனை பார்த்துவிட்டு மகிழ்வுடன் அட்டென்ட் செய்து " ஹே… அப்பு எப்படி இருக்க? அண்ணா, அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க, என் பாய் ப்ரண்ட் நந்து என்ன பண்றான்? உள்ள என் செல்லக்குட்டி பாப்பு பத்திரமா இருக்காளா. நல்லா சாப்பிடறியா… அப்போதான் அவ என்ன மாறி chubby ஆ cute ஆ வருவா. உன்ன மாதிரி குச்சியா வெளில வந்தா ஹாஸ்பிடல் கூட பாக்காம உன்ன ஓடவிட்டு அடிப்பேன். ஹே அப்பு, என்ன மா நான் இவளோ கேக்கறேன். எதுமே சொல்லமாட்டேங்கிற?" எனவும் அரவிந்த் “நீ கேள்வி கேட்டியே பதில் சொல்ல எங்கம்மா இடம் விட்ட?” என்றதும் அவள் “அண்ணா நீங்களா…ஐய்ய்ய் எப்படி இருக்கீங்க, எங்க இருக்கீங்க, இவளோ நாள் என் ஞாபகமே இல்லையா, எப்பவுமே பிஸி தானா?” என்று கேள்விகளை தொடுக்க அரவிந்த் “அடடா … திவி கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு அப்டியே பக்கத்து வீட்டுக்கு வா மா, எல்லா கேள்விக்கும் பதில் நேரில சொல்றோம்.” என்றவனிடம் திவி " என்ன பக்கத்து வீட்டுக்கா ?? அப்படின்னா இங்க வந்திருக்கிங்களா, எப்போ வந்திங்க? ஏன் அண்ணா முன்னாடியே சொல்லல? அங்க எல்லாருக்கும் நீங்க வரது தெரியுமா? அப்புறம் ஏன் மதி அத்தை, சேகர் மாமாகூட சொல்லல." என்று அடுத்து கேள்விக்கணைகளை வீச "அரவிந்த் “இதுக்கும் இவ்வளவு கேள்வியா? என்று தலையில் கை வைத்தான். “நீ வீட்டுக்கு வா” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.” ஸ்பீக்கர்ரில் இருந்ததால் அனைவரும் இந்த உரையாடலை கேட்டு சிரித்தனர்.

திவிக்கு போவோமா? ஆதி இருப்பானே… மறுபடியும் ஏதாவது சொல்லுவானோ? என்று பல கேள்விகள் எழுந்தாலும்… அவன் இருந்தா எனக்கென்ன? அவன் ஒருத்தனுக்காக எல்லாரையும் பாக்காம இருக்கமுடியுமா… இன்னைக்கு இருக்கு அவனுக்கு. என்று திவியும் ஒரு முடிவோடு கிளம்பினாள்.

திவி “ராஜிமா அப்பு, அரவிந்த் அண்ணா, நந்து எல்லாரும் வந்திருக்காங்களாம், நான் அங்க போயிட்டு வரேன்” என்றாள். அருகில் இருந்த தர்ஷினி “போறேன்னு சொல்லு, உன்ன கூட்டிட்டு வர யாராவது இங்க இருந்து நைட் யாராவது வருவாங்க. நீ அங்க போனா எப்போ திரும்பி வந்திருக்க?” என்று வம்பிக்கிழுத்தாள். அவளை முறைத்த திவி “நானாவது பரவால்ல, பக்கத்து வீட்டுக்கு போறேன், கூப்பிட்ற தூரம் தான். ஆனா மேடம் ஊர் சுத்த போனா நீயா வந்தாதான் உண்டு, அப்படிருக்க நீ என்ன கொர சொல்றியா போடி” என்க,

தர்ஷினி “நீ போடி வாயாடி”

திவி “நீ போடி அடங்காபிடாரி” என்று சண்டையை துவங்க ராஜசேகர் வந்து “அடடா… ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையை?” என்றவரிடம் திவி “நாங்க சும்மா பேசிடிருந்தோம் பெரிப்பா… நீங்க ஏன் எப்பவுமே எங்களுக்குள்ள சண்டவருமனே பாக்கறீங்க… நீ பத்திரமா போயிட்டு வாடா தர்ஷிமா.”

தர்ஷினியும் “சரி திவி கா… நீயும் பாத்து போயிட்டு வா. நைட் நாம சேந்து டிவி பாக்கலாம்” என்றாள்.

ராஜசேகர் மலங்க மலங்க விழிக்க ராஜியும், மகாவும் சிரித்துவிட்டு “உங்களுக்கு இது தேவையா… நாங்கயெல்லாம் கண்டும் காணாம இருக்கோம்ல. பஞ்சாயத்து பண்ணி பன்னு வாங்கிறதே வேலையாப்போச்சு.” என்றதை கேட்டு திவி கண்ணடித்து விட்டு ஓடிவிட்டாள்.

7 - மனதை மாற்றிவிட்டாய்

ஆதியின் வீட்டுக்குள் நுழையும் போதே அரவிந்த அண்ணா எப்படி இருக்கீங்க, அப்பு என்று அபியை கட்டிக்கொண்டு "ஏன் வரத முன்னாடியே சொல்லல. நான் கோவமா இருக்கேன் என்ன ஒன்னும் நீ ஹக் பண்ண வேண்டாம். என்கிட்ட நீ பேசாத " என்றாள் திவி.

நான் எங்க டி ஹக் பண்ணேன். நீதானே பண்ண என்றதும் ஒரு நொடி விழித்து விட்டு “அது என்னோட குட்டி ஏஞ்சல்க்கு உனக்கில்லை” என்றாள். அவள் செய்கையை பார்த்து அனைவரும் சிரித்துவிட்டு அபி அவளின் காதை பிடித்து “அப்டியே மாத்திருவியே… எப்படித்தான் இப்டி சமாளிக்கிறியோ பிராடு” என்றதும் திவி “ஐயோ அப்புக்கா வலிக்கிது” என்று அலற அபியே பதறி போயி “திவி என்னாச்சு டா” என்க திவி அவளிடம் கண்ணடித்து விட்டு சந்திரசேகர் அரவிந்திடம் வந்து நின்றுகொண்டாள்.

" நீ இன்னும் வளரவேயில்லை அப்பு வேஸ்ட்." என்றதும் அரவிந்த் "நீ அவள அப்பு கூப்பிடறதால அவ வளரலையா, இல்லை அவ வளராததால நீ அப்டி கூப்பிட்டியா?"என்று சந்தேகத்தை எழுப்ப திவியோ “அச்சச்சோ அண்ணா, என்ன இருந்தாலும் அபியக்காவை நீ குள்ளம்னு சொல்லக்கூடாது” என்றாள். அபி சராசரி வளர்ச்சிக்கு கொஞ்சம் குறைவு. அதுவே அவளுக்கு அழகுதான். இருப்பினும் அபிக்கு தன்னை யாராவது குள்ளம்னு சொன்ன செம கோபம் வரும். அவள் முறைப்பதை பார்த்த அரவிந்த் "டேய் திவி நான் எப்போ அபியை குள்ளம்னு சொன்னேன். அவ வளரலைனு தானே கேட்டேன். குள்ளம்னு வார்த்தையே நான் யூஸ் பண்ணல. " திவியோ "அண்ணா அதுக்கு அதான் மீனிங், சொல்லல, கேக்கலைனு இப்போவே 2 தடவ சொல்லிட்டிங்க… மாடுலேஷன் மாத்தி கேட்டாலும் மனசுல இருக்கிறதுதானே அண்ணா வரும். உங்க மனக்கஷ்டம் தங்கச்சி எனக்கு புரியாதா? என்ன இருந்தாலும் நம்ம அபியை இனிமேல் அப்டி சொல்லாதீங்க " என்று இன்னும் அபியின் பிபி யை ஏற்றிவிட்டாள். அரவிந்த் எழுந்து வந்து அபியிடம் "செல்லம் நான் உன்ன அப்டி நினைப்பானாடா? அது உன்னோட ஸ்பெஷல் டா. அதுவே ஒரு cuteடா… நீ இப்படி இருந்தாதான் உனக்கு ஹெல்ப் பண்ண உன்ன தூக்க பல இடங்கள்ல எனக்கு வசதியா இருக்கும்னு சொல்லிருக்கேன்ல. அப்படி இருக்க நான் எப்பிடிடா அத குறைய சொல்லுவேன். " என்று சுற்றி இருப்பவர்கள் மறந்து கொஞ்சி கெஞ்சிக்கொண்டிருந்தான்.

திவியிடம் வந்த சந்திரா "ஏன் டி இப்படி அந்த மனுசனை இம்ச பண்ற. பாவம் அவருதான் உன்ன கூப்பிடவே சொன்னாரு. " என்றவரிடம் திரும்பி “அபியை கலாய்க்க தானே அண்ணா என்ன கூப்பிட்டாங்க. அபி எவ்வளோ பாத்து பாத்து செஞ்சாலும் அத ரசிச்சாலும் வெளில காட்டிக்காம அதென்ன சும்மா பொண்ணுங்கள விட்டுகுடுத்து ஜென்ட்ஸ் எப்பவும் எல்லாரும் என்ஜோய் பண்றது அதான் அவங்களே மறக்கற அளவுக்கு பிரச்னை பண்ண எப்பவுமே குறை சொல்லிட்டே இருக்கமாட்டாங்க. அபிக்கு அண்ணாவ புரிஞ்சாலும் ஏனோ விட்டுகுடுத்து பேசுறாங்களோன்னு ஒரு நெருடல் இருக்கும். ஆனா அண்ணா இப்போ எப்படி கொஞ்சறாங்க பாருங்க. இப்போ அபியும் ஹாப்பியா இருப்பாள்ள? என்ன அப்பு இப்போ ஓகே வா?” என்றதும் அபியும் சூப்பர் என்றாள்.

அரவிந்த் “வாலு உன்ன …” என்று திவிய அடிக்க வர அவளோ உள்ளே ஓடிச்சென்றாள். இதை எல்லாம் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்ஆதி. திவியை பார்த்த நந்து ஓடிவந்து கட்டிக்கொண்டான். அவனை அள்ளி எடுத்த திவியின் கன்னத்தில் முத்தமாரி பொழிந்தான் அந்த குட்டி கண்ணன். “திவி, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன். நீ ஏன் இவளோ நேரம் வரல. பேசல…நான் உங்கிட்ட சொல்லணும். அந்த மாலு என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ரா. எதாவது பண்ணனும். ஐடியா குடு. அம்மு சித்தி அனு சித்தி எல்லாரும் என்ன டிவி பக்கவிடாம இம்ச பன்றாங்க.” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தான்.

திவியோ “நீ ஏன் என்கிட்ட வரத சொல்லவே இல்ல நந்து … நானும் உன்ன எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? நீ வரும்போது நம்ம ஷாப்பிங் போகலாம் னு எல்லாம் பிளான் பண்ணேன். எதுவுமே இப்போ முடியாது. இப்பவும் அம்மு, அனு பத்தி கம்பளைண்ட் பண்ணறியே? என்கிட்ட பேசணும்னு வரலையா ?” என்று முகத்தை தூக்கிவைத்துக்கொள்ள நந்துவோ அவளை கன்னம் தொட்டு திருப்பி “நான் என்ன திவி பண்றது, எல்லாம் இந்த டாடி தான். எனக்கே கிளம்பும்போதுதான் சொன்னாங்க. இல்லாட்டி நான் உங்கிட்ட சொல்லாம இருப்பேனா… சாரி… ப்ளீஸ் திவி என்கிட்ட பேசமாட்டயா.? நான் உனக்காக தான் வெயிட் பன்னிட்டு இருந்தேன். உள்ள ரசகுல்லா இருக்கு. வா நாம போயி சாப்பிடலாம்.” என்று அவளை இழுத்துக்கொண்டு ஓடினான்.

அனைவரும் இதை பார்த்துக்கொண்டு இருந்து அபியோ “இருவரில் யாரு சின்னவங்கன்னே தெரில.” என்றதற்கு சந்திராவோ “இதை திவிகிட்ட கேட்டா, குழந்தைங்ககிட்ட நாம ஏன் எல்லா நேரத்துலையும் பெரியவங்கள இருக்கணும்… அவன் என்ன ரூல் பன்றான், மிரட்றான், சண்டைபோடறான் னு மட்டும் தான் உங்களுக்கு தெரியுது… அவன் என் மேல வெச்சுயிருக்கற நம்பிக்கை , பாசம் இப்போ உங்களுக்கு தெரியாது. பெரியவங்க நாம நெறைய பாத்திருக்கோம், தெரியும் நம்மலாளையே சின்னவங்கள புரிஞ்சுக்கிட்டு அவங்க உலகத்துக்கு போகமுடிலே, மாறமுடிலேங்கும் போது குழந்தைங்க எப்படி இப்போவே பெர்பெக்ட்ட வருவாங்க எல்லாம் ஓபன்னா சொல்லுவாங்கனு எதிர்பாக்கமுடியும் . நம்ம அவங்க உலகத்துக்கு போனா தான் அவங்க ஈஸியா பழகுவாங்க. எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லுவாங்கனு சொல்லுவா. ஆனா அவள் சொன்னது உண்மைதான் நாம இவ்வளோ பேரு இருக்கோம், அவனை நாம தூக்கினோம், கொஞ்சினோம், கேட்டதுக்கு அவன் பதில் சொல்லிட்டு விளையாட போய்ட்டான். ஆனா அவளை பாத்ததும்தான் அவனா போயி கொஞ்சுனான், அவனோட பிரச்னை, சந்தோசம், எல்லாமே ஷேர் பண்ணிக்கறான், அவன் எங்க போனாலும் அவள கூடவே வெச்சுப்பான். இதுதான் எப்பவும் நடக்குது.” என்று எப்பவும்போல திவியை மகிழ்வுடன் பார்த்தாள்.

அரவிந்தோ “உண்மை தான் அத்தை, குழைந்தைக்கூட டைம் ஸ்பென்ட் பண்றதே ஒரு பெரிய விஷயமா எல்லாரும் இப்போ சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம சொல்றத கேட்டு சமத்தா வளரணும், ஏதாவது பிரச்சனைன்னா உடனே நம்மகிட்ட சொல்லணும்னு எதிர்பாக்கிறோம், சொல்லலைனா அவங்கள திட்டறோம். நம்மில்ல எத்தனை பேரு குழைந்தைகளை அவங்க உலகத்துக்கு போயி புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறோம்?..நாமெல்லாம் கேட்டாலும் சொல்லாதவன் நந்து, அவள பார்த்ததும் எல்லாமே சொல்லுவான். இந்த புரிதல் ஒரு நாள்ல வராது. ஆனாலும் அவ அளவுக்கு பொறுமையா, எல்லாருக்கும் தகுந்த மாதிரி மாற எல்லாரலையும் முடியாது. அதனால இத அவகிட்டேயே விட்றலாம்.” என்றான்.

அனைவரும் உள்ளே செல்ல ஆதி மட்டும் குழப்பத்திலேயே இருந்தான். அவளை ஒரு ஒரு நேரமும் புதிதாய் அறிந்துகொண்டிருந்தான். அவளை பிடிக்கவும் செய்தது என்பதை அவன் மறுக்கவில்லை. இருந்தாலும் அவளின் சில செய்கைகள் அவளின் பேச்சு, முழுவதும் அவளை நம்ப முடியாமல் தடுக்கவும் செய்தது. அவகிட்ட நல்லா பேசி இந்தமாதிரி குழம்பம் எல்லாத்துக்கு ஒரு முடிவு கட்டலாம்னு பாத்தா ஏதாவது சண்டை வந்திடுது. வந்த 2 நாள்ல 5 தடவ அவளை பாத்தும், 2 தடவ அவள தப்பா நினச்சேன், 2 தடவ திட்டுனேன், 1 தடவ அடிச்சிட்டேன். இதுல எங்க அவகிட்ட நல்லா பேசுறது. சண்டைக்கு கூட அவ உன்கிட்ட பேசல என்று அவனை அவன் மனமே குத்திகாட்டியது… இத்தனை பேர்கிட்ட பேசுறா ஆனா நான் அங்கே ஒருத்தன் இருக்கறதையே தெரியாத மாதிரி போறா பாரு… பாக்கறேன் இவ கோபம் எவ்வளவு நேரத்துக்குனு… உன்ன பேசவெக்கிறேன் டி… என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு வீட்டினுள் சென்றான்.

8 - மனதை மாற்றிவிட்டாய்

வீட்டினுள் நுழைந்த ஆதி, திவி நந்துக்கு ரசகுல்லா ஊட்டிவிட, நந்து திவிக்கு ஸ்வீட் ஊட்டிவிடுவதை பார்த்து ‘குடுத்துவெச்சவன் நந்து’ என்று நினைத்துக்கொண்டு அவளை சீண்டும் விதமாக “ஏன் மேடம்க்கு இன்னும் குழந்தைன்னு நினைப்போ? ஊட்டிவிடாம அவங்களுக்கா சாப்பிட முடியாதாம்?” என்று வினவ இதற்காகவே காத்திருந்தது போல திவி வந்து “நாங்க இப்படி தான் எப்பவும் சாப்பிடுவோம். உங்களுக்கு ஏன் பொறாமை?” என்று வினவினாள்.

“ஆமா, இவளுக்கு ஊட்டிவிடவும், இவ ஊட்டிவிடறத சாப்பிடவும் 100 பேரு கியூல நிக்கிறாங்க பாரு, பொறாமைப்பட.” என்று ஏளனமாக கேக்க,

“என்ன கணக்கெடுத்திட்டு வந்த மாதிரி பேசுறீங்க, இதுதான் வேலையா?” என்று அவனை வெறுப்பேற்ற, அவன் “ஏய் … உன்ன…” என்று ஆதி அவளை நெருங்கிய வேளையில் சரியாக அவனுக்கு போன் கால் வர அவன் அவளை முறைத்தபடி அதோடு விட்டுவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான். அவளும் ஆதியை முறைத்துக்கொண்டே சென்று நந்துவிடம் மீண்டும் ஒட்டிக்கொண்டாள்.

இவர்களின் சண்டையை பார்த்த ஒவ்வொருவரின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது. அபி அரவிந்திடம் , " ஏதோ சும்மா கலாட்டா பண்ண ஆரம்பிச்ச பேச்சு, ஏனோ சண்டைல முடிஞ்சமாறி இருக்கு … " என்று அரவிந்தை பார்க்க அவனோ “ம்ம்… ஏதோ சரி இல்லை” என்றான்.

அனு அமுதாவிடம் “அம்மு காலைல திவிய அண்ணா திட்டுனாண்ல, அதுனால தான் இப்போ திவி அண்ணாகிட்ட இப்படி பேசிட்டாளா?” என்று வினவ "ஒருவேளை இருக்கலாம். அவளுக்கு அந்த கோபமா கூட இருக்கும். " என்று அமுதாவும் கூறினாள்.

சந்திரமதியோ தன் கணவரிடம் , " ஏங்க, ஆதி திவிய அடிச்சத மனசுல வெச்சுட்டு தான் இப்படி பேசுறாளோ, அவ கோபப்படமாட்டாளே? ஆனா இப்போ அவ விளையாட்டுக்கு சொன்னத கூட ஏன் இப்படி சீரியஸ்ஸ எடுத்துக்கிட்டா.?" என்று பாவமாக வினவ சந்திரசேகரோ “ஏன் மா உன் புள்ளைக்கு மட்டும் தான் கோபம் எழுதி வெச்சிருக்கா. ஆதி அவள அடிச்சி, என்னவெல்லாம் பேசிருக்கான்னு உனக்கு தெரியாதா, இல்லை உன் புள்ளைங்கறதால மறந்திட்டயா ? நாம அவ்வளோ சொன்னதுக்கப்புறமும் அவன் ஒருவார்த்தை திவிகிட்ட மன்னிப்பு கேக்கல. ஆனா அவளை சீண்டி பேசாமட்டும் தெரியுதா? அவ நமக்காக தான் இதோட விட்டிருக்கா, இதுல நீ அவமேல வேற கொரசொல்ற.” என்றதும் சந்திராவோ “நான் அவளை குறை சொல்லல. எனக்கு 2 பேருமே முக்கியம் தான். 2 பேருக்குள்ளையும் சண்டை வேண்டாம்னு நினச்சேன்.” என்றாள்.

அரவிந்த் அபிக்கு ஏதும் புரியாததால் அவர்கள் விழிப்பதை பார்த்து சந்திரசேகர் விஷயத்தை சுருக்கமாக சொன்னார், ஆதி திவியை அடித்ததை தவிர… மகனை விட்டுக்கொடுக்க அவருக்கும் மனமில்லை.

ஆனால் அரவிந்த் கூறியது "ஆதி திவிய தப்பா நினைக்குற அளவுக்கு எல்லா சூழ்நிலையும் அமைஞ்சிடுச்சு …எல்லாம் சரி மாமா, ஆனா 2 பேரோட இயல்பே மாறின மாதிரி இருக்கே… ஆதி கோபப்படுவான் தான். ஆனா அது அவன் ரூட்ல கிராஸ் பண்ணி அவனுக்கு ப்ரோப்ளேம் வந்தா மட்டும் தான், மத்தபடி பெருசா எதுக்கும் ரியாக்ட் பண்ணமாட்டான். எல்லாரையும் கரெக்ட்டா எடை போடுவான். புது ஆள் யாருகிட்டேயும் இவனா வம்பிழுத்து பேசமாட்டான். ஆனா திவிகிட்ட வம்பிழுக்கறான். அவ மேல தேவைல்லாம கோபத்த காட்றான். திவியும் எதுக்குமே ரியாக்ட் பண்ணாம எல்லாத்தையும் சிரிச்சிட்டே ஏத்துக்கற பொண்ணு, யாரானாலும் இவளா போயி பேசுவா, ஆனா அவளும் இப்போ சாதாரண கமெண்ட்கே கோபப்படறா, வந்ததுல இருந்து ஆதிகிட்ட ஒரு வார்த்தைகூட பேசாம மூஞ்சி திருப்பிக்கறா, 2 பேரும் இப்படி மொறச்சுக்கிட்டு போறாங்க.

இரண்டு பேருமே நல்லவங்கதான் …இவங்கள பாக்கிற எல்லாருமே இவங்களோட திறமை கேரக்டர்ர பாத்து 'இவங்களால மட்டும் தான் இப்படி யோசிக்கமுடியுமோன்னு நினைக்கற அளவுக்கு இருக்கறவங்க ’ அப்படிப்பட்ட 2 பேருமே இப்படி சண்டை போட்டா என்ன பண்ணறது.

சரி பாப்போம்… புரிஞ்சுப்பாங்கன்னு நம்பலாம்." என்றான்.

அதற்குள் திவியும், நந்துவும் விளையாடிக்கொண்டே வந்தனர். நந்து “பாட்டி நைட் என்னனென்ன டிஸெஸ் செய்யணும்னு நானும் திவியும் லிஸ்ட் சொல்றோம்” என்று சொல்ல அபி ,“ஏன் டா உங்க 2 பேருக்கும் எங்க அம்மாவ பாத்தா எப்படி தெரியுது, வேலை வாங்குறதுக்கு லிஸ்ட் போடற ஆளுங்கள பாரு” என்றவளை முறைத்துவிட்டு “பாட்டி நான் உங்க செல்ல பேரன் தானே. எனக்காக பண்ணித்தரமாட்டீங்களா ?” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவனிடம் “ஆமாடா தங்கம் உனக்கு செய்யாமலா?” என்று சந்திரா கூற அபி “அம்மா நீங்க செய்யாதீங்க " என்க திவி “ஆமா அத்தை செய்யாதீங்க " என்றவுடன் நந்து அவளை அதிர்ச்சியாய் பார்க்க அவளோ” நீங்க மட்டும் செய்யாதீங்க அத்தை அப்பு அம்மு எல்லாரையும் ஹெல்ப்புக்கு கூப்பிட்டு போயி செய்ங்க.” என்றதும் நந்து “திவின்னா திவி தான்” என்று கை அடித்துக்கொண்டனர் இருவரும். அரவிந்த் “டேய், திவி எனக்கு தான் தங்கச்சி உனக்கில்லை, கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம அவள பேர் சொல்லி கூப்பிட்ற ஒழுங்கா அத்தைன்னு கூப்புட்றா” என்றவனை பார்த்து நந்து " அம்மாவ அம்மு சித்தி, அனு சித்தி எல்லாரும் பேர் சொல்லித்தானே கூப்பிட்றாங்க, உங்கள ஆதி மாமாவும் பேர் சொல்லித்தானே கூப்பிட்றாங்க, ஏன் ?" என்று வினா எழுப்பினான்.

என்ன சொல்வதென்று யோசித்து பதில் சொல்லாமல் விட்டாலோ, அதட்டினாலோ அவன் அசரமாட்டான் என முடிவெடுத்து அரவிந்த் " அதில்ல நந்து கண்ணா, நான் ஆதிமாமா, அம்மா சித்தி எல்லாரும் பிரண்ட்ஸ் மாதிரி அதான் அப்படி கூபிட்டுக்கறோம்" என்றதும் நந்து “எனக்கு அப்போ திவி தான் இங்க பெஸ்ட் பிரண்ட் சோ அப்படித்தானே கூப்பிடனும்.” என்று அதே பதிலை கேள்வியாக நீட்ட அரவிந்த்க்கு தான் கடவுளே என்றானது. “இதெல்லாம் உனக்கு யாரு டா சொல்லித்தரது” என அனு வினவ நந்துவின் பார்வை திவியை நோக்கி செல்ல"திவிகிட்ட லாஸ்ட் டைம் மே இப்படி கூப்பிட சொல்றிங்க ஆனா எனக்கு அதைவிட திவி தான் ஈஸியா வருதுன்னு சொன்னேன். அப்போதான் திவி சொன்னா இனிமேல் இப்படி யாராவது சொன்னா இந்த மாதிரி கேள்வி கேளுன்னு " என்று அப்பொழுது நடந்த படத்தை மீண்டும் எடுத்தான். அம்முவோ “அதானே பாத்தேன், உங்கிட்ட ட்ரெயினிங் வேறையா, அப்போ இப்படித்தான் இருப்பான்.” என்றவளிடம் திவி “கேக்றதுல தப்பு இருந்தா சொல்லி புரியவெய்ங்க பா. அதைவிட்டுட்டு சும்மா குறைசொல்லாதிங்க, அதுமில்லாம வெளி ஆளுங்களையோ இல்ல நம்ம வீட்ல மத்தவங்களையோ நந்து மரியாதை இல்லாம கூப்பிட்டுஇருக்கனா? அப்புறம் என்ன பிரச்சனை” என்று திவி வாதிட “என்னமோ பண்ணுங்க” என்று விட்டு சமையல் அறைக்குள் சென்றாள் சந்திரமதி.

இதை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதி எப்போதும் தன்னை பார்த்து பிறர் கற்றுக்கொள்ள வேண்டும், சொல்லி கற்றுக்கொள்ளக்கூடாது, அவரகள் நம்மை மதிக்கும் அளவுக்கு முதலில் நாம் நடந்துகொள்ளவேண்டும் என எண்ணுபவன். இப்போதும் அதேபோல் ஏனோ நந்துவின் கேள்வி, அதற்கு அனைவரும் முழித்த விதம், அவனது பதில் எல்லாம் சரியென தோன்ற சிரித்து கொண்டு இருக்க, இவை அனைத்தும் திவி சொல்லிக்கொடுத்தது என அறிய ஏனோ வந்த சிரிப்பு பாதியில் நின்றது. அதன் பின் திவி கூறியதை கேட்டவனுக்கு "அதுவும் உண்மைதான், நந்து அவளை தவிர பிறரிடம் மரியாதையோடு பேசுகிறான், திவியிடம் உரிமையோடு பேசுகிறான் என்று தெளிவாக புரிந்தது, தனக்கு அவளிடம் அந்த உரிமை எப்போது வரும் என எண்ணியவனுக்கு வந்தது என்னவோ பெருமூச்சு தான். ஆனால் ஏன் தனக்கு அவளிடம் உரிமை வேண்டும் என மனம் ஏங்கியதை யோசிக்க மறந்துவிட்டான் போல.

9 - மனதை மாற்றிவிட்டாய்

ஆதியின் வீட்டிற்கு ராஜலிங்கமும், மகாலிங்கமும் வர அவர்களை அனைவரும் வரவேற்க எழுந்து சென்ற சந்திரசேகர் “ஹே வாங்கப்பா, இங்க தான் இருக்கீங்க வரதே இல்ல… இப்போவது வரணும்னு தோணுச்சே” என்று குறைபட்டு கொண்டே ஆனால் நண்பனை பார்த்த மகிழ்வுடன் வரவேற்றார். சந்திரசேகரும், ராஜலிங்கமும் ஒரே வயதுடையவர்கள், தொழில் பழக்கம், அண்டை வீடு, சொந்த ஊரும் பக்கம் பக்கம்தான், இதை அனைத்தையும் தாண்டி தங்களுக்குள் இருந்து நட்புணர்வு இருவர்களும் விரைவில் நெருங்கிய நண்பர்களானார்கள். மகாலிங்கமோ “நீங்களும் பிஸி தானே அண்ணா” எனவும்,

அதுக்காக “சொந்த பந்தம் பிரண்ட்ஸ்னு யாரையும் பாக்காம இருக்கமுடியுமா, நீங்க வரேன்னு சொல்லுங்க ஒரு நாள் முழுக்க இங்கேயே இருக்கேன்” என்ற சந்திரசேகரை பார்த்த ராஜலிங்கம் “போதும் போதும் சேகர், நீயும் எதுத்த வீடு தானே, நாங்களாவது இப்போ வந்தோம், நீ எப்போ வந்த? ஏன்மா சந்திரா நீயும் இவனோட சேந்துக்கிட்ட இங்கேயே இருக்க, வீட்டுக்கே ஏன் வரதில்லே… உங்க மேல கோபமா இருக்கோம். ஆனாலும் குழந்தைங்கள பாக்கத்தான் வந்தோம்” என்றவரை சந்திரசேகர் “என்ன ராஜா அப்போ நீ என்ன பாக்க வரல. இத நான் நம்பணுமா ?” என்றதும் மகாலிங்கம் “அட சேகர் அண்ணா நீங்க வேற, ஒரு வாரமா சேகர பாக்கணும்னு ஒரே புலம்பல், கடை வேல அது இதுனு பிஸி ஆனதால வரமுடில. எல்லாரையும் திட்டி வேலைவாங்கிட்டு இன்னைக்கே எல்லாத்தையும் முடிச்சிட்டு சாய்ந்தரமே வேகமா என்ன கூட்டிட்டு வந்துட்டாரு.” என்று போட்டு கொடுத்த தம்பியை முறைத்துக்கொண்டு நண்பனிடம் திரும்பினார் ராஜலிங்கம்.

சந்திரசேகர் சிரித்துவிட்டு ராஜாவின் தோளில் கை போட்டு “அட பரவால்ல வா ராஜா, எனக்கு உன்ன பத்தி தெரியாதா? நீ என்ன பாக்க வரல, பிள்ளைங்களை பாக்கத்தான் வந்திருக்க, என் மேல கோபமா இருக்க, இதுதானே உண்மை நான் நம்பறேன்” என்று சந்திரசேகர் சொன்ன விதத்துலையே தெரிந்தது அவர் நம்பவில்லை என்று அவரை பார்த்த ராஜலிங்கமும் இறுதியில் சிரித்துவிட்டார்.

“என்ன மா அபி எப்படி இருக்க உடம்பு பரவாயில்லையா?”

"நான் நல்லாயிருக்கேன் மாமா, நீங்க எப்படி இருக்கீங்க, அத்தைங்க எல்லாரும் எப்படி இருகாங்க. காலைல பாக்கவரலாம்னு நினச்சேன்."என்றாள்.

இருக்கட்டும்டா, " உன்ன அலையவிடுவோமா, எங்க பொண்ண பாக்க நாங்களே வந்திட்டோம், அரவிந்த எப்படிமா இருக்கார்?" என்றதும் போன் பேசி முடித்து வந்த அரவிந்த் "நான் நல்லாஇருக்கேன் பா, நீங்க எப்படி இருக்கீங்க. சிவாவும் ரஞ்சனியும் எப்போ வராங்க? என்று பதில் உரைத்து பேசிக்கொண்டு இருக்க

சந்திரமதி “அதுசரி அண்ணா, அண்ணி, மகா எல்லாரும் எங்க அவங்க வரலையா?” என வினவ

“இல்லை மா கொஞ்சம் வேலைய முடிச்சிட்டு வரேன்னு சொன்னாங்க… அப்புறமா வந்தா உக்காந்து எல்லாரும் பேசுங்க. பேசவிட்டுட்டு பாதில கூப்பிட்டா எங்களுக்குத்தான் அடி விழும். அதனால அப்புறமே பிரியவே வரட்டும்” என்றார் ராஜலிங்கம்.

அதைக்கேட்டு சிரித்த சந்திரசேகர் “என்ன வேலை சமையல் தானே, அவங்களையும் இங்கேயே வரச்சொல்லு , இங்கேயே செஞ்சு சாப்பிடலாம்.” என்றதும் அபி, அம்மு, அனு எல்லாரும் ஆமா மாமா எல்லாரும் ஒண்ணா இருந்து ரொம்ப நாள் ஆச்சு, என்றதும் நந்துவும் ஆமா தாத்தா ராஜீ பாட்டி மகா பாட்டியும் வரச்சொல்லுங்க. ப்ளீஸ் என்றதும் அவருக்கு உருகிவிட்டது. அவனை தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டு “இதுக்கு எதுக்குடா தங்கம் ப்ளீஸ் எல்லாம் சொல்றிங்க, நீங்க கூப்ட்டாலே போதும் அவங்க உடனே வந்துடுவாங்க” என்றதும் தான் உடனே அவன் அவர் மடியில் இருந்து குதித்து அப்போ சரி நானும் திவியும் போயி கூட்டிட்டு வரோம்." என்று திவியை இழுத்துக்கொண்டு ஓடினான்.

இதை சிரித்துக்கொண்டே பார்த்தவிட்டு “அப்புறம் சேகர், ஆதி வந்திருக்காப்லயாம், எங்க காட்டவேமாட்டேன்கிற” என்றபோது அவனும் கீழே வந்துகொண்டிருந்தான்.

"இதோ அவனே வந்துட்டானே, ஆதி, இவன் தான் ராஜலிங்கம் என்னோட பிரண்ட் தொழிலையும் சரி, உறவுளையும் சரி, அது மகாலிங்கம், இவனோட தம்பி, நம்ம திவியோட அப்பா, இவன் ஆதி என்னோட பையன் எப்படி என்ன மாறி இருக்கானா? " என்று அறிமுகப்படுத்த “ச்ச… ச்ச ஆதி ரொம்ப நல்லா இருக்கானே, அவன் எங்க தங்கச்சி மாதிரி” என்றுசொல்லிவிட்டு “எப்படி பா இருக்க, படிப்பெல்லாம், முடிஞ்சது, இனி எங்கேயும் போகமாட்டேல்ல?” என்று வினவ

ஆதியும் " நல்லாயிருக்கேன் மாமா, படிப்பெல்லாம் முடிஞ்சது, இனி இங்கேயே தான் இருக்கபோறேன், இங்க அப்பா பிசினஸ்க்கு ஹெல்ப் பண்ணிட்டு அப்படியே கன்ஸ்டருக்ஷன்னும் பாத்திட்டு இருக்கபோறேன்." என்றான்.

மகாலிங்கமும் “ரொம்ப சந்தோசம்ப்பா, என்னமா சந்திரா இனி உனக்கு கவலையே இல்லேல. உன் பையன் உன்கிட்டேயே பத்திரமா வந்துட்டான். இனி சேகர் அண்ணாவ திட்ட மாட்டல?” என்றதும் சந்திரசேகர் “அப்படி சொல்லு மகாலிங்கம், இனி இந்த பெரிய பிரச்னை எனக்கில்லை…” என்றவரிடம் சந்திரமதி “சிரித்துக்கொண்டே , அடுத்து அவனுக்கு கல்யாணம் பண்ணனும், அவன் ஒதுக்கலேன்னா நீங்க தான் காரணம்.” என்றதும்,

சேகர் “அடக்கடவுளே, இப்படி ஒரு சோதனையா, ஆதி அப்பா பாவம்டா” என்றவரிடம் “சாரி அப்பா, எனக்கு இப்போதைக்கு கல்யாணம் தோணவே இல்ல , தோணும் போது நானே சொல்றேன். அதுவரைக்கும் நீங்க திட்டுவாங்கிக்கோங்க…எனக்கா இப்போ பொண்ணு பாக்கிற ஐடியாவும் இல்ல, ஒருவேளை உங்க மருமக சீக்கிரம் அவளா வந்தா பாக்கலாம்.” என்றான் ஆதி.

சேகரோ "அட கல்நெஞ்சுக்காரா, அதுவரைக்கும் திட்டுவாங்குறதா, மகன் தான் கை விட்டுட்டான், மருமகளே நீயே சீக்கிரமா வந்து, என்னை இங்க இருந்து காப்பாத்து " என்று அவர் வேண்டியதை அனைவரும் பார்த்து சிரித்த வேளையில், வாசலில் திவி நந்து, அம்மாக்களுடன் “சேகர் மாமா, நான் வந்துட்டேன். உங்கள யாரு என்ன சொன்னது, நான் பாதுகாக்கிறேன் அவங்கள” என்று உள்ளே நுழைந்தாள்.

சந்திரசேகரோ “வாடா திவி நீ இல்லாம உங்க அத்த என்ன திட்ட பிளான் பண்ரா, நீ எப்பவும் எனக்கு தானே சப்போர்ட்” என்று கேட்டவரிடம் இருந்து திவி “மதி அத்த எப்படி மாமவ நான் இல்லாம நீங்க திட்ட பிளான் பண்ணலாம். நானும் இருப்பேன். எனக்கும் பிளான் தெரியணும்” என்று அவள் கண்ணடித்து கூறியதை கேட்டு அனைவரும் சிரிக்க, அவளும் சிரித்து விட்டு சந்திரசேகரிடம் வந்தவள்

“மாமா, என்ன பிளான் பண்ராங்கனு தெரிஞ்சாதானே நான் பதில் சொல்ல முடியும், உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும், அதுக்குதான் சொன்னேன். இவங்க தான் சிரிச்சு மாட்டிவிடபாக்ராங்க. ஆனா ஒன்னு, நான் எப்பவும் சேகர் மாமாக்கு சப்போர்ட் தான். எங்க மாமா எது செஞ்சாலும் அது நல்லதுக்குதான். சோ யாரும் மாமாவை ஏதும் சொல்லக்கூடாது” என்றவளை “அப்படி சொல்லு டா திவி” என்று தோளில் சாய்த்துக்கொண்டார் சேகர்.

அவள் கேட்டது சந்திரசேகரின் கடைசி வரிகள் மட்டுமே “நீயே சீக்கிரமா வந்து, என்னை இங்க இருந்து காப்பாத்து” என்றதற்கு அவள் இவ்வாறு கூறினாள்.

ஆதி அவளையே பார்த்துக்கொண்டு, இல்லை முறைத்துக்கொண்டிருந்தான். "இவ என்ன நினைச்சிட்டு இருக்கா, இவ அவங்க பேசுனத கேட்டுட்டு வந்தாளா, இல்லை எதேச்சியா வந்து அப்படி சொன்னாளா? பிராடு, எப்படியும் உள்ள ஒன்னு வெச்சுட்டு வெளில ஒன்னு சொல்லிருப்பா, இவள அப்புறமா கவனிச்சுக்கறேன். இருப்பினும், அப்பா மருமகள் பற்றி பேசியதும் அவள் முகம் தன் மனதில் வந்ததை அவன் மறுக்கவில்லை, அதை ஏன் என்று புரிந்துகொள்ளவும் இல்லை.

ஆண்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, தாய்மார்கள் அனைவரும் வேலை செய்துகொண்டிருந்தனர். அனு, நந்து, அம்மு விளையாடிக்கொண்டிருந்தனர். திவி அவ்வப்போது கிட்சன் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவி செய்துகொண்டும், நந்துவுக்கு பதில் சொல்லிக்கொண்டும், அனைவருக்கும் ஜூஸ் போட்டு எடுத்துவந்து ஆண்கள் அனைவருக்கும் தந்தாள். ஒவ்வொருவரிடம் கொடுக்கும்போதும் அவள் அவர்களிடம் பேசிட்டுவிட்டு கொடுப்பதை, பார்த்தவன் தன்னிடம் வந்து வெறுமனே ஜூஸ்ஷை நீட்டிக்கொண்டு மட்டும் நின்றாள். அவனும் சுற்றி அனைவரும் பிஸியாக அவரவர் வேலையில் இருக்க இவர்களை கவனிக்கவில்லை என்றவன் ஜூஸ் எடுக்காமல், அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். அவளுக்கு கோபம் வந்து, “ஜூஸ் வேண்டாம்ன்னு நான் போறேன்” என்று போக எத்தனித்தவளை “ஓ. .நீ எனக்கு ஜூஸ் குடுக்க வந்தியா, அப்படி ஏதும் நீ சொல்லல. சும்மா என்ன பாக்க நிக்கிறியோனு நினச்சேன்” என்று வெறுப்பேத்தினான்.

திவியும் “ஆமா, மனசுல பெரிய ஆணழகன், மன்மதன்னு நினைப்பு, ஜூஸ் கொண்டுவந்து எதுக்கு நிப்பாங்க, குடுக்கத்தான். ஏன் பாத்தா தெரியாதா? இத தனியா வேற சொல்லணுமா?.. மண்டைல ஏதாவது இருந்தா தெரிஞ்சிருக்கும்” என்று முணுமுணுத்தவளை பார்த்த ஆதி,

“அப்போ மத்தவங்ககிட்ட மட்டும் தெரியாதா, அவங்ககிட்ட மட்டும் சொல்லி தானே குடுத்த, நின்னு பேசிட்டுத்தானே வந்த அப்புறம் என்ன? ஒருவேளை அவங்க மண்டைல ஒன்னுமிலேன்னு சொல்றியா ? கேட்ருவோமா?” என்றவனை ஒரு நிமிடம் விழித்து பார்த்து “ஹே, நான் எப்போ அப்படி சொன்னேன்?” என்றவள் அவன் சிரிப்பை பார்த்து “இப்போ உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள் முகத்தை சுருக்கிக்கொண்டு.

அதை ரசித்தவன், “என்ன கேட்டாலும் தரப்போறியா ?” என்றவனை புரியாமல் திரு திருவென விழித்து பார்க்க, அவனுக்கு ஏனோ அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்க, தலையை உசுப்பிக்கொண்டு சுற்றி அனைவரையும் பார்த்துவிட்டு "எல்லாருக்கும் எப்படி ஜூஸ் எடுத்துக்கோங்கன்னு சொன்னியோ அப்படி குடு, இல்லாட்டி, எங்க அம்மா, உங்க அம்மா எல்லார்கிட்டயும் நீ எனக்கு ஜூஸ் தரமாட்டேனு சொலிட்டேனு சொல்லிடுவேன். நீ பண்ற வாலுத்தனத்துக்கு கண்டிப்பா நான் சொன்னதும் நம்புவாங்க, என்கிட்ட ஜூஸ் இல்லேனதும் கண்டிப்பா உன்னதான் கேள்வி கேப்பாங்க. " என்றவனை பார்த்த திவி, அவன் சொல்றதும் உண்மைதான், தேவையில்லாம திட்டுவாங்கணும், அதுவும் மகா அம்மா சொல்லவே வேண்டாம். கிடைச்சது சான்ஸ் னு அட்வைஸ் ஆரம்பிச்சுடுவாங்க என்று எண்ணியவள் வேண்டா வெறுப்பாக “ஜூஸ் எடுத்துக்கோங்க” என்றாள். அவளது முகபாவனையை பார்த்துக்கொண்டே வந்தவன், “இப்படியா, எல்லாருக்கும் எரிஞ்சு விழுந்த மாறி சொல்லிட்டே குடுத்த ?” என்றதும் இவளுக்கு “ஐயோ என்றானது.” இருப்பினும், ஒரு நொடியில் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு, அடுத்த நொடி சிரித்தவள், “ராஜா ப்ளீஸ், உங்களுக்கு பிடிக்கும்னு தானே ஸ்பெஷல்லா ஆப்பிள் ஜூஸ் கொண்டுவந்திருக்கேன் ஜூஸ் எடுத்துக்கோங்க” என்று அவனுக்கு முன் நீட்ட, அவனும் எதும் கூறாமல், வாங்கிக்கொண்டான். அவள் கூறியது உண்மை தான், மற்றவர்கள் லெமன் ஜூஸ் தான் குடித்துக்கொண்டிருந்தார்கள். அவளிடம் திரும்பியவன் அவள் விட்டால் போதும் என்று ஓடியதை பார்த்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்தவனின் செய்கையை அரவிந்த், அபி, அம்மு, அனு அனைவரும் கவனித்தனர்.

பின்பு இரவு உணவு தயாரா, சந்திரா, ராஜீ, மகா பரிமாற அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டனர். திவி நந்துவுக்கு ஊட்டிவிட்டு பின்பு அம்மா அத்தையோடு சாப்பிடுவதாக கூறிவிட்டாள். மகாலிங்கம் “அப்புறம் சேகர் அண்ணா, சந்தானகிருஷ்னன் தெரியும்ல உங்களுக்கு ?” என்றவனிடம் “ஓ , நல்லா தெரியுமே, நகைக்கடை ஓனர் தானே. ?” என்றதும் "ஆமா அண்ணா, நல்ல குடும்பம், ஒரே பையன், m.e முடிச்சிருக்கான். இப்போதைக்கு பாரின் ல இருக்கான். இன்னும் 6 மாசத்துல இந்தியா வந்திட்டு பிசினஸ் ஆரம்பிக்க போறானாம். அவங்க பொண்ணு இருந்தா சொல்ல சொன்னாங்க, நம்ம அம்முக்கு பாக்கலாமா… நீங்க வேற யாராவது மனசுல வெச்சுயிருக்கிங்களா எப்படி அண்ணா? " என்றதும் சந்திரசேகர் “இப்போவரைக்கும் இல்லப்பா, பாக்கலாம், அவங்களும் நல்ல குடும்பம் தான், விசாரிப்போம்.” என்றதும் அனைவரும் முகம் மலர இருக்க சந்திரசேகரோ இப்படிப்பட்ட நல்ல சம்பந்தம் வந்தும் தன் மகளே இருந்தும் அவர்களுக்கு பாக்காமல், தன் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கிறானே, இதுவே வேறு யாரேனும் இருந்தால் இந்நேரம் அவர்கள் குடும்பத்திற்கு என்று பேசி கல்யாணத்தையே முடித்திருப்பார்கள், என்று நினைக்க இவர்களின் அன்பை கண்டு ஆயாசமாக இருந்தது. மனதில் பட்டதை வெளியில் சொல்லியும் விட்டார்.

அதற்கு ராஜலிங்கம் “பாரு சேகர், எங்களுக்கு அபி, ஆதி, அமுதா, அனு இவங்களும் பிள்ளைங்க தான். ஒரே குடும்பமா நம்ம இருந்தா எப்படி பிள்ளைங்க வயசுப்படி கல்யாணம் பண்ணிருப்போமோ அப்படிதான் இப்பவும், 3 மாசம்னாலும் அமுதா தான் மூத்தவ, அதனால அமுதாக்குதான் மொத கல்யாணம், அப்புறம் திவிக்கு பாக்கலாம். ஏன் நீ அவளுக்கு பாக்கமாட்டேயா என்ன ?” என்றவனை பெருமையுடன் பாத்த சந்திரசேகர், “டேய் ராஜா, திவிக்கு நான்தான் மொதல்ல மாப்பிள பாப்பேன். அவன் ஏத்தமாதிரி அவளுக்கு பொருத்தமா ஒரு ராஜகுமாரனா கூட்டிட்டு வரப்போறேன்.” என்றவர் “திவி மா உனக்கு, எப்படிடா மாப்பிள்ளை பாக்கணும் சொல்லு” என்றவரிடம் “உங்க எல்லாரையும் மாதிரி” என்றாள்.

புரியாமல் அனைவரும் அவளை பார்க்க “ராஜப்பா மாதிரி கம்பீரமா வேலை வாங்கணும் , அப்பா மாதிரி பொறுமையா எல்லா விஷயத்தையும் ஹாண்டில் பண்ணனும் , சேகர் மாமா மாதிரி பிசினெஸ்ல ஒரு நேர்த்தி, ஆளுமை இருக்கனும், சிவா அண்ணா மாதிரி பொறுப்பா இருக்கனும், அரவிந்த் அண்ணா மாதிரி கலகலப்பா இருக்கனும், இதில்லமா ராஜீமா மாதிரி என்கிட்ட பாசமா இருக்கனும் , மகாமா மாதிரி அக்கறையா இருக்கனும், மதி அத்த மாதிரி என்ன சமாளிக்க தெரியணும், என் சேட்டைய ரசிச்சாலும், என்னோட தப்ப எனக்கு கண்டிச்சு சொல்லி புரியவைக்க தெரியணும். ரஞ்சனி அண்ணி, அப்பு, அம்மு மாதிரி எனக்கு பெஸ்ட் பிரண்ட்ஸ்ஸ இருக்கனும், தர்ஷி, அனு மாதிரி என்கிட்ட வம்பிழுத்து சண்டை போடணும். அப்புறம் நம்ம நந்து மாதிரி அப்போ அப்போ சேட்டையும் பண்ணனும், எல்லாத்துக்குமேல என்ன கண்ட்ரோல் பண்ண வழி தெரியணும். இல்லாட்டி அவன் பாடு கஷ்டம் தான். அப்புறம் உங்க எல்லாரோட அன்பும் மொத்தமா அவன்கிட்ட இருக்கனும், உங்க எல்லாருக்குமே அவனை புடிச்சிருக்கணும்.” என்றவளை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

முதலில் சுதாரித்த அரவிந்த் "மாமா உண்மையாவே இவளுக்கு மாப்பிள பாக்கிறது கஷ்டம்தான் போல, லிஸ்டே இவளோ சொல்றாளே, அவன எங்க கண்டுபுடிக்கறது. உண்மையாவே அவனுக்கு உன்ன சமாளிக்க தெரியாட்டி, அவன் பாடு திண்டாட்டம் தான்… ஆனா திவி நாங்க உனக்கு ஆல்ரெடி பொறந்திருக்கவன கண்டுபுடிக்க கேக்கறோம், புதுசா ஒருத்தன செய்றதுக்கு இல்லை " என்று சேகரிடம் ஆரம்பித்து, திவியிடம் முடித்தான். அனைவரும் இவன்

கூறியதை கேட்டு சிரிக்க, திவி சொன்னாள் “அண்ணா கண்டிப்பா இருப்பாங்க அண்ணா, தேடாம ஏதும் கிடைக்காது. சில சமயம் நமக்கு பக்கத்துலயே இருந்தாலும், புரிஞ்சுக்கமுடியாது. அதெல்லாம் மீறி கண்டுபுடிக்கறதுதான் விஷயமே. அண்ட் நான் சொன்ன கேரக்டர் எல்லாம் எல்லார்கிட்டயும் இருக்கும். என்ன அதஅத சரியான நேரத்துல வெளிப்படுத்த தெரியணும்.”

இதைக்கேட்ட அமுதா “ஹே திவி, நீ சொல்றத பாத்தா ஆல்ரெடி பாத்துட்டேயோ ? எங்ககிட்ட பில்ட்டப் பண்றியா? யாருடி உன் லவர்.?” என்றவளை இருவர் முறைத்தனர் யாருமறியாமல் ஆதியும், செல்லமாக திவியும்.

ஆதிக்கோ இந்த அம்மு வேற ஏன் இப்படி புரளியை கெளப்புறா… அப்படியெல்லாம் திவி லவ் பணமாட்டா…என்றதும் அவன் உள் மனம் அப்படின்னு அவ உன்கிட்ட சொன்னாளா? என்ற கேட்க, கொஞ்சம் சும்மா இரு அவளே சொல்லட்டும் என அவள் பதிலை ஆவலுடன் இல்ல இல்ல ஒரு பதட்டத்துடன் எதிர்பார்த்தான்.

திவியோ “ஏன் டி, உனக்கு தெரியாதா? அப்படி இருந்திருந்தா இவளோ நாள் என்னால மறக்கமுடியுமா, அண்ட் உங்க எல்லாருக்கும் அவனை புடிக்கணும்னு சொன்னேனே, அப்படி உங்களுக்கு யாரை ரொம்ப புடிச்சது, அந்தமாதிரி யாரை இதுவரைக்கும் பாத்தீங்கனு சொல்லு பாக்கலாம்.?” என வினவியவளிடம் அனு “இதுவரைக்கும் மட்டும்மில்ல, இதுக்கு மேலையும் அப்படி ஒருத்தன பாக்கமுடியுமான்னு டவுட் தான்.” என்று சிரிக்க அபியோ “பின்ன என்ன டி, இந்த வேலை, இந்தமாதிரி குடும்பம், இவ்ளோ சம்பளம், ஆள் பாக்க இப்படி இருக்கணும்னு எல்லாம் சொல்லுவேன்னு பாத்தா இப்படி 16 மார்க் எஸ்ஸேல பதில் சொன்ன மாதிரி இவளோ சொல்ற, எப்படி மாப்பிள பாக்கிறது.?” என்று அவள் பங்கிற்கு அவளும் வாரினாள்.

அனைவரையும் கண்களை சுருக்கி செல்ல கோபத்தோடு பார்த்துவிட்டு நேரே மதியிடம் வந்து "பாருங்க அத்தை, எல்லாரும் கிண்டல் பன்றாங்க, நானா கேட்டேன், நீங்க எல்லாரும் தானே எப்படி வேணும்னு சொல்லுன்னு கேட்டீங்க. என சிணுங்கிக்கொண்டே கேட்டவள்… பின் திரும்பி வேலை, சம்பளம் எப்போ வேணும்னாலும் மாறலாம், குடும்பம்னா எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க சோ அதுவும் நம்ம ப்ரீடிக்ட் பண்ணமுடியாது. ஆனா இவன் ஒருத்தன் எனக்கு புடிச்சதுனா என்ன புரிஞ்சுக்கிட்டா இவனுக்காக எத வேணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு தோணும், கண்டிப்பா இவனுக்காக எதுவேணும்னாலும் விட்டுகுடுத்திடலாம். அண்ட் ஆள் பாக்கறதுக்கு ஓகே னு பிக்ஸ் பண்றோம் சரி, ஒருவேளை ஏதாவது ப்ரோப்ளேம்ல அவங்களோட வெளித்தோற்றம் மாறவும் சான்ஸ் இருக்கு. (அடிபடறது, விபத்துன்னு னு சொல்லாம அவ ப்ரோப்லேம்னு பொதுவா சொன்னதே அவங்களுக்கு புரிந்துவிட்டது).

இப்போ சொன்ன எல்லாமே எப்ப வேணாலும் மாறலாம். ஆனா கேரக்டர் அந்தமாதிரி இல்ல. ஒருவேளை சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி சில நேரம் ரியாக்ட் பண்ணாலும், கண்டிப்பா ஒரு நாள் அது திருப்பி பாத்து திருத்தக்க தோணும். அது நம்ம குணம் இல்லையே, ஏன் அப்படி பண்ணோம்னு நினைச்சாலே கண்டிப்பா மாறிடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. என்றுவிட்டு நான் எதாவது தப்பா சொல்றேன்னா அத்த, ஏன் இப்படி கிண்டல் பண்றங்க ? அந்தமாதிரி யாரும் இருக்கமாட்டாங்களா ?" என்று அவள் கேட்டவிதமே அப்படி ஒருத்தன் வரமாட்டான்னு அவள் ஒரு எதிர்பார்ப்போடு கேட்பதை கண்டு அனைவருக்கும் உருகிவிட்டது.

சந்திரமதியோ “கண்டிப்பா நீ சொல்றதுதான் தாண்டா சரி, மத்த எல்லாத்தையும் விட குணம் தான் முக்கியம், நீ கேட்டமாதிரி தான் ஒருத்தன் உனக்கு வருவான். உன்ன நினச்சா பெருமையா இருக்கு… நீ சொன்னதுல எதிர்பாக்கிறதுல தப்பே இல்லை… நீ ஏன் பீல் பண்ற?” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள். ராஜியும், மகாவும் கூட அவள் தலையை தடவிக்கொடுத்து “நீ சொல்றத கேட்க கேட்க எங்களுக்கே அவன் யாரு எப்படி இருப்பான், எப்போ பாப்போம்னு ரொம்ப ஆவலா இருக்கு.” என்றனர். சேகரும் “நீ எப்பவும் போல சிரிச்சிட்டே சந்தோசமா இரு. உனக்கு புடிச்சமாதிரியே ஒருத்தன நாங்க கூட்டிட்டு வரோம். இவங்க கிண்டல் பண்றதெல்லம் கண்டுக்காத.” என்றதும் அனைவரும் அவளை சூழ்ந்து அவளை வம்பிழுத்து திரும்பவும் பழைய திவியாக பார்ம்க்கு கொண்டுவந்தனர்.

ஆதியும் எழுந்து கை கழுவிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.

ஆதிக்கோ முதலில் அவள் தன்னை தவிர்த்து அனைவரின் குணத்தையும் சொல்லவும், கோபம் கொண்டவன், இறுதியில் அவள் அம்மாவிடம் “அந்தமாதிரி யாரும் இருக்கமாட்டாங்களா ?” என்று ஒரு எதிர்பார்ப்போடு, குழந்தையின் ஏக்கத்தோடு பதிலை எதிர்பார்த்த பார்வை ஆதிக்கு “ஐயோ, நான் இருக்கேன் டி செல்லம் உன்ன பாத்துக்கன்னு” சொல்லி அள்ளி அணைக்க துடித்த மனதை எப்படி அடக்கினானோ தெரியவில்லை. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவளை பற்றி எத்தனை முறை தப்பாக நினைத்தாலும், திட்டினாலும், சில கேள்விகளுக்கு பதில் புரியாத புதிராகவே இருந்தாலும், அவள் தன்னுள் வருவதை அவனால் தடுக்க முடியவில்லை, அவள் முகம் ஒரு கணம் வாடினாலும் தன்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்று நினைத்தவன்

சிரித்து விட்டு, “வாயாடி, ராட்சஷி… உன்மேல அவ்ளோ கோபம் இருக்கு, உன்ன தப்பாவும் நினச்சேன், உன்ன சீண்டுறேன், சண்டைபோடறேன், இன்னும் உன்ன பத்தி புருஞ்சுக்கமுடியாம சில விஷயங்கள இருக்கேன். இருந்தும் ஒண்ணுமே பண்ணாம, அதிகம் என்கிட்ட பேசக்கூட இல்லாமல் எனக்குள்ள இவ்ளோ சீக்கிரம் வந்து உக்காந்திட்டு என்ன இம்ச பண்ற. உன்ன என்ன தாண்டி பண்றது?” என செல்லமாக திட்டிக்கொண்டு “சரி இனி எது எப்படியோ எதுமே எனக்கு புரியாம தெரியாம இருந்தாலும் ஓகே, இதுக்குமேல நீ எனக்கு மட்டும் தான், அதை நீயும் புரிஞ்சுப்ப சீக்கிரம் உன்ன என்கிட்ட வரவைக்கறேன். அப்புறம் நீ சொன்ன மாதிரி உன்ன என் காதலால குளிப்பாட்டறேன்.” என்றவன் உடனே காதலை சொல்லலாமா என்றவன் “ஆமா , அவள அடிச்சு, சந்தேகப்பட்டு, திட்டி , சண்டைபோட்டு இதுல அவ மூஞ்சிக்குடுத்தே பேசமாட்டேன்கிறா… இந்த அழகுல லவ்வ சொன்ன கன்போர்ம் பண்ணி அவளே மெண்டல் ஹாஸ்பிடல்ல சேத்திடுவா"என்ற மனதிடம் அவள திட்ட, சண்டை போட, அடிக்க எனக்கு இல்லாத உரிமையா? அதைத்தானே அவளும் கேட்டா …சரி இப்போ லவ்வ சொல்ல வேண்டாம் , கொஞ்ச நாள் அவளோடு சீண்டி விளையாடலாம்… அவளுக்கு எதிர்பார்ப்பு புரிஞ்சது, ஆனா அவளுக்கு லவ் எந்த அளவுக்கு புரியுமோ தெரிலையே சோ வெயிட் பண்ணுவோம்” என்று முடிவு எடுத்தான்.

இத்தனையும் யோசித்தவன், அவளை பற்றிய சந்தேகங்களை தீர்க்காமல் இந்த காதலை ஏற்றதுதான் தவறு. அது இவன் ஆழ்மனதில் அடைந்திருந்ததை அவனும் உணரவில்லை. உணரும் வேளையில் காலம் இவர்களுக்கான பல பாடங்களையும் பிரிவுகளையும் கற்றுகொடுத்திருக்கும்.

10 - மனதை மாற்றிவிட்டாய்

அடுத்த நாள் ஞாயிற்று கிழமையாதலால் காலை உணவு அனைவரும் ஒன்றாக உக்காந்து சாப்பிட்டனர். திவி “பிரண்ட்ஸ எல்லாரும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு, போயி இன்னைக்கு பாத்திட்டு வரலாம்னு இருக்கேன், எல்லாரும் சண்டை போட்றாங்க. மதியம் படத்துக்கு போயிட்டு ஈவினிங் மால் போயிட்டு வந்துடறேன்” என்றதும் "சரி டா பாத்து போயிட்டு வா " என ராஜீ சொல்ல,

தர்ஷி “அதானே, ஏன் சித்தி இதுவே நான் வெளில போறதுன்னா எப்போ வருவ, எங்க போறேன்னு எவ்வளோ கேள்வி, இவளுக்குன்னா மட்டும் பெர்மிஷன்ன வாரி வழங்குறாங்க இதெல்லாம் சரியா ?” என்றவளை பார்த்து சிரித்து விட்டு “நீயும், பாத்து பத்திரமா போயிட்டு வாடா” என்று மகா சொன்னதும்

திவி “ஏய், அப்படியே சொல்ற பேச்ச கேக்கறமாதிரி தான் நினைப்பு உனக்கு, நீ வெளில போறதுன்னா கேளு டி, என்ன எதுக்கு வம்பிக்கிழுக்கிற, அடங்காபிடாரி” என்றதும் அவளை முறைத்துக்கொண்டு இருந்த தர்ஷியை பார்த்த ராஜி "புள்ளைய ஏன் டி, முறைக்கற, அவளும் சரியாதானே சொல்றா, அவ எப்போவாது வெளிய போறா, அதான் ஏதும் கேக்கறதில்ல, நீ எப்பவுமே வெளில தானே சுத்தற, இதுல சப்போர்ட்க்கு உங்க சித்தி வேற " என்றதும், திவி பழிப்பு காட்ட , பாவமாக சித்திய பார்க்க மகாவோ "சும்மா இருங்க கா, புள்ள கிளாஸ் போயிட்டு அவள பாத்துகிட்டு தானே வெளில போறா, இந்த வயசுல என்ஜோய் பண்ணாம எப்போ பண்றதாம், அதுவும் அவளுக்கும் நாலும் தெரியணும்ல, அவ

பத்திரமா பாத்துப்பா" என்றதும் "அப்படி சொல்லுங்க சித்தி " என்று கட்டிக்கொண்டாள்.

திவி “அதுசரி, எப்போவும் வெளிலையே சுத்தறா, என்ன டி ஆள் ஓகே ஆயிடிச்சா, எப்போ இன்ட்ரோ குடுப்ப, இல்லை நேரா ரெஜிஸ்டர் மேரேஜ் தானா?” என்று கண்ணடித்து கேட்டவளிடம் தர்ஷி “ஹே, நல்லவளே… எனக்கு என்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு, எதுவும் தெரியாத மாதிரி இருந்துட்டு கடைசில லவ் கிவ் னு வந்து நிக்கப்போற அப்போ தெரியும், இந்த தர்ஷியே பரவால்லன்னு” என்றதும் இருவரையும் அடக்கி ராஜீ "2 பேரும் உத வாங்கப்போறிங்க, அக்கா தங்கச்சி மாதிரியா பேசுறீங்க, ஒழுங்கா சாப்பிட்டு கிளம்புங்க டி " என்க இருவரும் அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்தனர். பின்பு கூறிவிட்டு இருவரும் கிளம்பினர்.

ஆதியின் வீட்டிற்கு சென்று அங்கே ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு திவி “அம்மு எங்க அத்த, அவளும் வரேன்னு சொன்னாலே” என்று கூறிய வேளையில் வெளியில் வந்த அமுதா “இல்ல டி, ரொம்ப வயிறு வலிக்கிது, இப்போதான் டேப்லெட் போட்டேன். .நான் வரலை, நீ மட்டும் போயிட்டு வா, இன்னோரு நாள் பாத்துக்கலாம்.” என்றவளை இது எப்போவும் போலதான் என்றாலும் தலைவலி, காய்ச்சல், வயிறு வலி என்று எதற்கும் கொஞ்சம்கூட வலிதாங்காமல் டேப்லெட் உடனே எடுத்துக்கொள்கிறாளே …இப்டியே இருக்காளே என்று முறைத்து விட்டு “எப்படி அத்தை, இப்படி ஒரு நோஞ்சானா பெத்துவெச்சுஇருக்கிங்க, இப்படி எல்லாம் பாத்திட்டு இருந்தா மாசத்துக்கு எத்தனை நாள் லீவு போடறது, எத்தனை விஷயம் பண்ணாம விடறது? கொஞ்சமாவது உடம்புல தெம்பு வேணாமா? தாங்குற சக்திகூட வேண்டாமா?.. இப்படி டேப்லெட் எடுக்கவேணாம்னு நீங்களாவது சொல்லமாட்டீங்களா? இப்படியே பண்ணா நாளைக்கு வரபோற எங்க அண்ணா தான் பாவம், பேசாம பார்மசி இருக்கறவனா பாத்து புடிச்சிடலாமா ?” என்றதும் அம்மு முறைக்க, மதி “எங்க சொன்ன கேக்குறா, சரி நீ பாத்து போயிட்டு வா.” என்றார்.

திவி "சரி, எல்லாரும் என்ன பண்ராங்க, அண்ணா, அப்பு இன்னைக்கு இருப்பங்கள்ல? அனுவும், நந்துவும் இன்னும் எந்திரிக்கிளையா ? மாமா, வெளில போயிருக்காங்களா? " என வினவ

"ஆமா, அபி எல்லாரும் நாளைக்கு காலைல கிளம்புறாங்களாம், அதுங்க 2ம் நைட் விளையாடிட்டு

தூங்கவே லேட், எப்படியும் மதியம் சாப்பாட்டுக்கு தான் எந்திருப்பாங்க, உங்க மாமா ஏதோ பிசினஸ் விஷயமா ஒருத்தர மீட் பண்ணனும்னு இப்போதான் போனாங்க" என அனைத்தையும் கேட்டுவிட்டு கிளம்பினாள் .

இவள் வந்ததிலிருந்து மேலே நின்று பார்த்துக்கொண்டும் பேசியதை கேட்டுக்கொண்டும் இருந்த ஆதி அவள், அம்மு மேல் கொண்ட அக்கறையும், உரிமையோடு அம்மாவிடம் சண்டைபோட்டதும் நினைத்து சிரித்தவன், தன்னை விடுத்து அனைவரையும் விசாரித்ததை எண்ணி எப்போவும் போல தனக்குள் அர்ச்சித்து விட்டு “இரு டி, என்ன பத்தி மட்டுமே நீ நினைக்கிற மாறி கொஞ்ச நாள்ல மாத்துறேன்” என்று மகிழ்வுடன் சொல்லிக்கொண்டே வந்தவன் “அம்மா, நான் போயி அர்ஜுன்ன பாத்திட்டு வரேன்” என்றதும் சந்திரா "ஆமா ராஜா, அவனை பாத்தும் ரொம்ப நாள் ஆச்சு, கூட்டிட்டு வா டா வீட்டுக்கு " என்றார். இதை அமுதாவும் ஒரு எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“சரிமா, இன்னைக்கு எப்படினு தெரில, பிரண்ட்ஸ் எல்லாரும் மீட் பண்றோம். எப்படியும் இந்த வீக்ல ஆபீஸ் எல்லாம் போக ஆரம்பிச்சுட்டா அப்புறம் ரொட்டின் தான், சோ ரெகுலரா வருவான்”

அர்ஜுன் ஆதியும் ஹாஸ்டெலில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள், இருவருக்கும் சொந்த ஊரும் ஒன்றே. அம்பிகா-அருணாசலத்தின் மகன். அர்ஜுன் வீட்டிற்கு ஒரே பையன். ஆதி அளவிற்கு இல்லாவிடினும் ஓரளவிற்கு வசதி கொண்டவர்கள் தான். ஆதி வேகமும், விவேகமும், கூடவே கோபமும் கொண்டவன். அர்ஜுன் பொறுப்பும், பொறுமையும், திறமையும் கொண்டவன். ஆதிக்கு விளையாட்டு என்றால், அர்ஜூன்க்கு படிப்பு. ஆதி அதிகம் வெளியாள்களிடம் பழக்கமாட்டான், பழகினாலும் ஒதுக்கம் இருக்கும். அர்ஜுன் அனைவரிடமும் எளிதில் பழகிவிடுவான். மென்மையாக நடந்துகொள்வான். என்னதான் எதிர்துருவம் போல குணங்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் அப்படியொரு நட்பு, ஒருவரின் பார்வை கொண்டே மற்றவர் புரிந்துகொள்ளும் அளவிற்கு. இருவரின் பலமே அவர்கள் நட்புதான். மற்றவரின் பலத்தையும் அறிந்துகொண்டு அதுபடி நடப்பவர்கள். அதனாலே தான் அர்ஜுனை சேர்த்து பார்ட்னர் ஆக்கிவிட்டு சேர்ந்து கன்ஸ்டருக்ஷன் ஆரம்பித்து அர்ஜுனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஆதி வெளிநாட்டிற்கு படிக்க சென்றுவிட்டான். முடிந்த அளவு அர்ஜூனே பொறுமையாக அனைத்தையும் பார்த்துவிடுவான். ரொம்ப பிரச்னை பொறுமையாக பேசி எடுபடாத சமயத்தில் ஆதி அவனது அதிரடியை காட்டிவிடுவான். இருவருக்கும் தெரியும். எவரிடம் பேச்சு சரிவரும், எவரிடம் செயல் சரிவரும் என்று. அதற்கு தகுந்தாற் போல இருவரும் அனுசரித்து அடுத்தவரிடம் அதை கையாள விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பார்.

நீண்ட நாள் கழித்து நண்பனை கண்ட சந்தோஷத்தில் ஆதியும், அர்ஜுனும் ஆரத்தழுவினர்.

அர்ஜுன் “எப்பிடிடா மச்சான் இருக்க?”

ஆதி “நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்க? வீட்ல அம்மா அப்பா எல்லாரும் என்ன பண்ராங்க ?”

"எல்லாரும் நல்லா இருக்காங்க, உனைத்தான் கேட்டுட்டே இருந்தாங்க. எப்போ வர? "

"இங்கேயும் தாண்டா, காலைல அம்மாகிட்ட சொன்னதுமே அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாங்க, சரி இனி இங்கதானே 2 பேரும் இருக்க போறோம். பாத்துக்கலாம் "

"ஈவினிங் எல்லாரும் எப்போடா வரேன்னு சொல்லிருக்காங்க. "

"எப்படியும் 3 ஆகும் டா, வா நாம கொஞ்ச நேரம் அப்டியே பேசிட்டே சாப்படலாம் "

நண்பர்கள் இருவரும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர். பின்பு ஆதி “அமுதாவுக்கு அடுத்து மாப்பிளை பாக்கணும்னு சொல்ல” அர்ஜுனும் ஒரு நிமிடம் அமைதியாகி விட்டு “அதுக்கென்ன, பாத்திடலாம்.” என்றான் “சரி, 2 நாள் எப்படி போச்சு?”

அர்ஜுனை பார்த்த ஆதிக்கு தான் ஊரிலிருந்து வந்து 2 நாள் தானா என்று இருந்தது. ஏதோ திவியை பற்றி அவனது எண்ணம் சென்றது. அதன்பின் ஆதி ஊரிலிருந்து வந்த அன்று பார்த்த பெண், அவளை பற்றி தவறாக எண்ணியது, அவள் வீட்டிற்கு வெளியே போனில் கூறிய அறிவுரை, அவளை அடித்தது ராஜேஷ் கூறிய அறிவுரை என அனைத்தையும் கூறினான். அதை கேட்ட அர்ஜுன் “ஆனா நீ கைநீட்டி அடிக்கற அளவுக்கு போயிருக்கவேண்டாம்.” என்றதும் “கரெக்ட் தான், ஆனா அவ போன்ல அந்த மாதிரி அட்வைஸ் பண்ணத பாத்ததும் ஏனோ கோவத்தை கண்ட்ரோல் பண்ண முடிலடா, அவள] முழுசா தப்பாவும் நினைக்கமுடிலே” என்று தன் மனதில் தோன்றியதை நண்பனிடம் பகிர்ந்துகொண்டான். அவனையே பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன் “ராஜேஷ் சொன்னதை முழுசா ஒதுக்கவும் முடியாது, நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க. ஆனா அவன் சொன்ன மாதிரியும் பொண்ணுங்க இருக்காங்க. சோ பாத்துதான் இருக்கனும்…” என்று கூறவும் ஏனோ எதுவும் கூறாமல் தலை அசைத்து அமைதியாக கேட்டுக்கொண்டான். இத்தனை கூறியவன் அந்த பெண் திவி தான் என்பதை கூறாமல் விட்டுவிட்டான். ஏனோ அவளை பார்க்கவேண்டுமென மனம் துடிக்க தரையை பார்த்து அமைதியாக இருந்தான்.

ஆனால் அவர்கள் முன்னால் வந்த திவி “நான் வந்துட்டேன் " என்றதும் இமைக்க மறந்த ஆதி ஒரு நொடி பார்த்தவள் “ஹலோ சார், என்ன வீட்டு பக்கமே ஆள காணோம், பிரண்ட் இல்லாட்டி எங்களை எல்லாம் பாக்கவரமாட்டீங்களா?” என்று செல்லமாக கோவித்து சண்டை போட “அப்படி இல்லடா திவி, கொஞ்சம் வேலை அதுதான். நீ எப்படி இருக்க, இங்க சுத்திட்டு இருக்க?” என அவர்கள் இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள ஆதிக்கு ஒருவேளை அர்ஜுன் வீட்டிற்கு வந்த போது பழக்கமாக இருக்கலாம், இவதான் யாரப்பாத்தாலும் பேசிறாளே என்று நினைத்தவனிடம் அர்ஜுன் அவன் நினைத்தமாதிரியே கூறினான். அண்ட்” உனக்கு திவிய தெரியும்ல டா ஆதி , திவி உனக்கு …?"என்று பேசியவனை நிறுத்திவிட்டு “ஏன், இளம் தொழிலதிபர்களில் ஒருவரான தி கிரேட் மிஸ்டர். ஆதி ய தெரியாம இருக்குமா? இதுல நீங்க வேற மார்க்கெட்டிங் பண்ணனுமா?” என்றவளை "உன்ன … " என்று அடிக்க கை ஓங்க இதை பார்த்த ஆதி அவர்கள் இவ்ளோ நெருக்கமாக சண்டை போட்டு கொள்வதை நினைத்து என்னவோ மனதுக்குள் பிசைந்தது. ஆனால் அடுத்த நொடி திவி “ஐயோ … அண்ணா, ப்ளீஸ் தங்கச்சி பாவம்ல” என்றதை கேட்டவனுக்கு அண்ணா என்றதில் மனம் லேசாகி "அப்படினா அவன் அடிக்க வேண்டாம், அவன் தங்கச்சிய நான் அடிக்கறேன். வா " என்று ஆதி கூறியதும் திவி “அஷுக்கு புஷுக்கு… ரோட்ல போறவறவங்ககிட்ட எல்லாம் அடி வாங்கிக்கொள்ளப்படும்னு போர்டா போட்டிருக்கு… போவீங்களா ?” என்றவளை காதை பிடித்து கொண்டு “யாரை பார்த்து, ரோட்ல போரவன்ற, வாய் உனக்கு ஜாஸ்திடி, இப்போ பேசு” என்றவனை “ஐயோ, ப்ளீஸ், ப்ளீஸ் சும்மா சொன்னேன், விட்ருங்க… அண்ணா நீங்களாவது சொல்லுங்க” என அர்ஜுனை அழைக்க அவன் சிரித்து கொண்டே “உன் வாய்க்கு இது தேவைதான்” என கூற ஆதியிடமே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு “ஆதி ப்ளீஸ், வலிக்கிது” என்றதும் தான் மாயம், உடனே கையை எடுத்துவிட்டு “ரொம்ப வலிக்கிதா?” என்று அக்கறையாக கேட்டான். அவளும் விட்டால் போதும் என்று “அது வலிச்சதானே தெரியும்” என கண்ணடித்து விட்டு ஓடிவிட்டாள். அதை பார்த்தவன் “பிராடு” என வாய் விட்டே கூறினான். அர்ஜுனோ “திவி, இருந்தாலே இப்படித்தான், ஆனா நீயே அவகிட்ட இவ்ளோ ஜாலியா பேசுற பாரேன்.” என்றதும் தான் ஆதி சற்று தடுமாறி “அது 2 நாளா இவளும் வீட்ல தானே இருந்தா, அதான் பழகிடுச்சு போல.” என சிரித்தவனை பார்த்து ம்ம் சரி சரி…என்றான் அர்ஜுன்.

அந்த நேரத்தில் நண்பர்கள் வர அனைவரும் பேசிக்கொண்டு இருக்க இவர்களின் சத்தத்தை மீறி அந்த பக்கம் பெண்கள் சத்தம் கேட்க முதலில் சுதாரித்தவன் ஆதி “திவியோ?” என்று எட்டி பார்த்தான். அவள் தோழிகளுடன் உரையாடிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்க, அதை ரசித்தவன் அவர்களின் சத்தம் கேட்டு நண்பர்கள் அனைவரும் திரும்பி பார்த்து பெண்களை கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அதுவும் அந்த பர்பிள் கலர் சுடி என்னமா கத்துறா & கண்ணுவேற அடிச்சு சிக்னல் குடுக்கிறா ? என்றதும் ஏதோ, பர்த்டே செலெப்ரஷன் மச்சான். விடுடா, அவளுங்களே கத்தி சிக்னல் கொடுக்கறாங்க, அப்புறம் இவனுங்க தான் பிரச்சனை பண்ணாங்கன்னு பசங்கள சொல்லவேண்டியது. இருக்கறவரைக்கும் கண்ணுக்கு குளிர்ச்சியா பாத்து என்ஜோய் பண்ணுவோம் ." என்று ஆளாளுக்கு பேச ஆதி கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான். திவி பர்பிள் கலரில் தான் உடை அணிந்திருந்தாள். ஆனால் தன் நண்பர்கள் கூறிய பெண் அவளுடன் இருந்த வேறொருத்தி. இவன் அவளை மட்டுமே பார்த்ததால் வந்த வினை. சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பிவிட அங்கே பெண்கள் கூட்டமும் கிளம்பிவிட, திவியை பார்த்த அர்ஜுன்,வா டா என அவளிடம் வந்து நின்று “என்ன திவி, கெளம்பல?” என்றதும், “போகணும் அண்ணா, வண்டி கொண்டு வரல, பஸ்க்கு போறேன்.” என்றவளிடம் "நான் வேணும்னா கொண்டு வந்து விடவா, மழை வேற வரமாதிரி இருக்கு " என்றவனை பார்த்த ஆதி “வேண்டா… அர்ஜுன். நீ கிளம்பு. . நான் அவளை கூட்டிட்டு போய்க்கறேன்.” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் இவனே முடிவெடுத்தான்.

திவி ஒருவாறு அவனை பார்த்துவிட்டு என்ன இவனா கூட்டிட்டு போறேன்னு சொல்றான். ஒருவேளை அப்போ காதை புடிச்சு சரியா திருகலேன்னு இப்போ அட்டாக் பண்ண பாக்கிறானா என்று யோசித்தவள் be alert திவி என்று தனக்குள் கூறிக்கொண்டு “இல்லை அண்ணா, நானே போய்க்குவேன், கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு, அப்புறம் பஸ் ல அதுவும் காத்து அடிக்கும் போது சூப்பர்ரா இருக்கும்.” என்றவளை மதிக்காமல் "ஏன் மழை வந்து நீயா நினைஞ்சுட்டு, வீட்ல கேட்டா கிளம்பும்போது மழை வந்தது, நான் என்ன பண்றது, நினைஞ்சுட்டேனு சும்மா மூஞ்ச பாவமா வெச்சு நடிக்கவா, ஒழுங்கா என்கூட வர, இல்லை வீட்ல எல்லார்கிட்டயும் போயி சொல்லிடுவேன். " என ஆதி பயமுறுத்த எதையும் காட்டிக்கொள்ளாமல்

திவி “அப்படியெல்லாம் இல்லை, பக்கத்துல ஒரு பிரண்ட்ட பாக்கணும்னு நினச்சேன், இப்போதான் ஞாபகமே வருது. . எனக்கு டைம் ஆகும். நீங்க கிளம்புங்க ஆதி” என கூற பொறுமை இழந்த ஆதி "நான் பிரீ தான். வா உன் பிரண்ட்ட பாத்திட்டு நானே உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…நீ கிளம்பு மச்சான். " என அவள் கையை பிடித்து இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு சென்றான். அவனுக்கு அவனது நண்பர்கள் இவளை பற்றி கமெண்ட் செய்ததும் இவளிடம் பேசவேண்டும் என இருந்தவன் , இவளும் வர மறுக்கவும் இப்படி இழுத்துக்கொண்டு சென்றான்.

காரில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ததும் “ஏன் ஆதி, இப்படி பண்றீங்க, இப்படியா இழுத்துட்டு வருவீங்க, யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க. கொஞ்ச கூட …” என்றவளை “நிறுத்திரியா… யாராவது பாத்துடுவாங்கனு நீ ரொம்ப கவலைப்படற ஆள் தான் பாரு… எதுக்கு டி அங்க அப்படி கத்துறீங்க?” என அவன் கோபமாக வினவ

“ஓ. .அதுவா இன்னைக்கு ரேஷ்மிக்கு பர்த்டே… செம ஜாலி… செலிப்ரஷன் சூப்பரா இருந்தது. ரொம்ப எக்ஸைட் ஆயிட்டோம்.” என இவள் என்ஜோய் பண்ணதை பற்றி கூறவும் இவனுக்கு இவள என்னதான் பண்றதுன்னு இருந்தது. இருப்பினும் “அதுக்காக, அப்படியா… பசங்க எல்லாரும் இருக்காங்கனு கொஞ்சமாவது அடக்க ஒழுக்கம் வேண்டாம். அவனுங்க கமெண்ட் பண்ற அளவுக்கா வெச்சுக்குவாங்க?” என அவளுக்கு புரியவைக்கும் நோக்கில் பேச

திவியோ “பசங்க இருந்தா என்ன, சும்மா நாங்க எங்களுக்குள்ள பேசுறத கூட நிறுத்திக்கணுமா? பசங்க கமெண்ட் பண்ணா அவங்கள போயி கேளுங்க, என்ன ஏன் அடக்குறீங்க. சம்பந்தமே இல்லாம அடுத்தவங்க விசயத்துல தலையிடற அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவீங்க, என் பிரண்ட்ஸோட நான் பேசுனத்துக்கு திட்டுவீங்களா ஆதி? ஏன், பொண்ணுங்க நாங்களும் தான் பசங்கள கமெண்ட் பேணுவோம், ஆனா அது உங்கள நேரடியாவோ, மறைமுகமாவோ பாதிக்கிதா? இல்லை பொண்ணுங்க பசங்கள கமெண்ட் பண்றங்கனு நீங்க அட்ஜஸ்ட் பணிக்கிறீங்களா இல்லேல… அப்புறம் ஏன் பொண்ணுங்ககிட்ட மட்டும் அடங்கி போகணும்னு எதிர்பாக்கறீங்க…நீங்க இப்படி கேப்பீங்கனு நினைக்கல ஆதி” என மூஞ்சை திருப்பிக்கொள்ளவும்

ஆதிக்கு அவளது கேள்வி சரியென படவும், அவள் இறுதியாக கூறிய வரிகள், தன்னை அவள் நம்பியதை, தன்னிடம் அவள் எதிர்ப்பார்பை உணர்ந்தவனுக்கு அவளின் இந்த செய்கை சிரிப்பை வரவழைத்தது. அவன் அழைத்தும் திரும்பாமல் இருந்தவள் அவன் மெதுவாக காரை ஓரம்கட்டி நிறுத்தி அவளின் கையை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பினான்.

அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவன் “இங்க பாரு, அவனுங்க கிண்டல் பண்ணதுக்காக மாத்திக்கவேண்டாம். ஆனா பேமிலி, குழந்தைங்க, பெரியவங்கனு எல்லாரும் சுத்தி இருப்பாங்க… அவங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் ஆகும்ல. அவங்களே சொல்லுவாங்கள்ல, தப்பா நினைப்பாங்கள்ல … ஏன் இப்படி கத்துறாங்கன்னு… வயசுப்பொண்ணுங்க இப்படியா இருக்கறதுனு …அதுக்கு தான். உன்ன இப்போ நான் குறை சொல்லல… ஆனா உன்ன யாரும் அப்படி குறைசொல்லிட கூடாதுனு தான் சொல்றேன்…என்ன புரிஞ்சதா?” என ஆதி கூற "ம்ம். …"என்றாள்.

அவளை இன்னும் பார்த்துக்கொண்டே இருந்தவன் அவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பார்க்கவும் “என்னடா?” என்று காதலோடு வினவினான்.

“கை வலிக்கிது…” என்று திவி கூறியதும் இவனுக்கு தான் கூறியதை இவள் புரிந்துகொண்டாளா இல்லையா என்பதை தாண்டி அவளை பார்த்து சிரிப்புதான் வந்தது. அவனும் கையை விடுவித்தவன் காரை ஸ்டார்ட் செய்தான்.

அவள் அமைதியாக இருக்க அவளை சகஜமாக்க நினைத்தவன் “சரி, உன் பிரண்ட் எங்க வரங்களாம்?” என்று அவள் கூறியது பொய்யென்று தெரிந்தும் வினவ அவளோ ஒரு நொடி விழித்தவள் “அது, அவங்க ஊருக்கு போய்ட்டாங்க.” என்றவளை நம்பாத பார்வை பார்க்க அவளும் “ஆக்சுவலி, நாங்க பஸ்ட், மீட் பண்ணலாம்னு தான் நினைச்சோம், அப்புறம் திடிர்னு ஊருக்கு போகவேண்டியதா போச்சுன்னு நேத்து நைட் தான் சொன்னாங்க… நான் பஸ்ட் பிளான் பண்ணதையே நினைச்சிட்டு இருந்தேனா…அதான் மறந்துட்டேன்… மீட் பண்ணனும்னு அப்போ அப்படி சொன்னேன்… அப்புறம், பார்க்கிங் வரும் போதுதான் ஊர்ல இலேன்னு ஞாபகமே வந்தது. சோ இப்போ நம்ம வீட்டுக்கே போலாம்னு.” அவள் சமாளித்த விதத்தை பார்த்தவன் "ஓ. …"என்றுவிட்டு ஏதும் கூறாமலே வண்டியை செலுத்தினான்…

அவனை பார்த்தவள் ஒருவேளை பொய் சொல்றேன்னு கண்டுபுடிச்சிட்டானோ என தோன்ற இருக்காது என இவளுக்கே கூறிக்கொண்டாள். இவளை ஓரக்கண்ணால் பார்த்தவன் என்னமா கோர்வையா பொய் சொல்றா, பிராடு " என நினைத்தவன் “திவி, தூறலோடு காத்து சூப்பரா இருக்கில்ல? உனக்கு ரொம்ப பிடிக்கும்தானே…” எனவும் அவளும் ஏக்கமாக, “ஆமா, ஆனா என்ன பண்ணி என்ன பிரயோஜனம், மழைல கொஞ்சம்கூட நினையவிடாம இப்படி கார்ல் கடத்திட்டு போறிங்களே” என்று அவள் ஜன்னலை வெறித்தாள். திடீரென்று அவள் தான் உளறிவிட்டதை எண்ணி உதட்டை கடித்துக்கொண்டு அவனை பார்க்க அவனும் இவளை பார்த்து சிரித்துக்கொண்டே “அதுக்குள்ள எவ்வளோ பொய் சொல்லுது இந்த வாயி… அதுக்குதான் நீயே உதட்டை கடிச்சு தண்டனை குடுக்கிறியா? அதுக்கு இந்த தண்டனை மட்டும் போதாது.” என அவன் கூறியதை கேட்டவள் புரியாமல் விழித்து பார்க்க அவனுக்கு இவள் செய்கை தன்னை அடக்க முடியாமல் என்னவோ போல் இருந்தது. காரை நிறுத்திவிட்டு "வீடு வந்திடுச்சு. …இறங்கி போ…"என்றதும் இறங்கியவள் "ஆதி, என்ன இன்னைக்கு மழைல நினையவிடாம பண்ணதுக்கு உங்களையும் சேத்தி ஒருநாள் நினையவிடறேன் இருங்க " என்று விட்டு ஓடிவிட்டாள். அவளை பார்த்து சிரித்தவன் "வாலு, இத எப்படித்தான் சமாளிக்கபோறேனோ? " என நினைத்துக்கொண்டே வீட்டினுள் சென்றான்.

11 - மனதை மாற்றிவிட்டாய்

அன்று மாலையில் அர்ஜுன் ஆதியின் வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தான். அந்த நேரம் திவியும் வந்தாள். அபி, அரவிந்த், நந்து, அனு, திவி அனைவரிடமும் பொதுவாக பேசிவிட்டு நண்பர்கள் இருவரும் தந்தையுடன் பிசினஸ் பற்றி பேச ஆரம்பித்தனர்.

சந்திராவோ “அடடா, புள்ளைங்கள ஒரு நாள்கூட விடாம இப்படியா புடிச்சு வெச்சுப்பீங்க. எப்போப்பாரு பிசினஸ்னு” என்று அவர்களுக்கு ஸ்னாக்ஸ், காபி அனைத்தும் கொடுத்துவிட்டு குறைபட்டுக்கொண்டாள்.

சேகர் “அட நீ வேற மதி, அத இவனுங்களுக்கு சொல்லு, 2 பேரும் என்ன விடாம புடிச்சுவெச்சுருக்கானுங்க, நீயே என்ன காப்பாத்தி கூட்டிட்டு போ மா, எங்க கூப்பிட்டாலும் ஏன்னு கேக்காம வரேன்.” என்றதும்,

இளையவர்கள் அனைவரும் “ஓ…” என்று கத்த, சந்திராவிற்கே வெக்கமாக போய்விட்டது. அதைக்கண்ட திவி ஓடிவந்து மதியை கட்டிக்கொண்டு, “ஏன் மாமா, மதி அத்தை இப்பவே இப்படி அழகா வெக்கப்படறாங்களே, கல்யாணம் ஆனபோது எப்படி இருப்பாங்க? அப்பவும் இப்படி வெக்கப்படுவாங்களா?” என ஆவலாக கேட்டவளிடம் "அப்படி, வெக்கப்பட்டத பாத்துத்தானே திவிமா மாட்டிகிட்டேன். இன்னும் தப்பிக்க முடியல. " என சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சந்தோசமாக கூறினார். அதை பார்த்து சிரித்தவள் “ஆனாலும் அத்தை, எப்படி வெக்கபடவெல்லாம் உங்களுக்கு வருது?” என கேட்டவளை கண்டு “அதெல்லாம், பொண்ணுங்களுக்கு தான் தெரியும், உனக்கெல்லாம் சுட்டு போட்டாலும் வராது, உனக்கு சொல்லி புரிஞ்சிட்டாலும்…” என அடுத்த நொடி ஆளாளுக்கு அவளை வார அவள் பாவமாக முகத்தை திருப்பி மதியை நோக்க

மதி "அதெல்லாம், உனக்கு கல்யாணம் பண்ணும் போது தானா புரியும், இல்லை உன்ன தூக்கிட்டு போக ஒருத்தன் வருவான்ல, அவன் உனக்கு புரியவைப்பான். " என்றார்.

"ஓஓ…"என மெதுவாக உதட்டை குவித்து அவள் கூற அதை அணுஅணுவாக ரசித்தவன், “ரொம்ப கஷ்டம்” என்று வாய் விட்டே கூறிவிட்டான். அவன் கூறியது என்னவோ தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல். ஆனால் அனைவரும் அவனும் திவியை கிண்டல் செய்ய கூறுவதாக எண்ணி சிரிக்க, அர்ஜுன் “கரெக்ட் டா ஆதி, கஷ்டம் தான், பட் கவலை படாத திவி உனக்கு டியூஷன் வெட்ச்சாவது வெட்கப்பட சொல்லித்தறோம்” என அவனும் சீண்ட அவளை தன்னை சிலிப்பிக்கொண்டு “தேவையே இல்ல அண்ணா, எனக்கு வெக்கம் எல்லாம் வரவே வராது, நானும் ஸ்ட்ரைன் பண்ணமாட்டேன். வேணும்னா அவனுக்கு டியூஷன் வெய்ங்க.” என்றவளை பார்த்து “அதுதான், கடைசில நடக்கும் போல” என்ற அர்ஜுனை "என்ன பிரதர், பிரண்ட பாக்கத்தானே வந்தீங்க எனவும் ஆமா என்றான். ஆனால் ஒரு நொடி திவியின் பார்வை அம்முவை காட்டியதோ என நினைத்தவன், இருக்காது என முடிவெடுக்கும் முன், திவி அவன் அருகில் வந்து ரகசியம் போல “நான் உங்க பிரண்ட பத்தி கேக்கல. என் பிரண்ட தானே பாக்கவந்தீங்க?” என அம்முவை காட்டி கண்ணடித்தாள்.

அர்ஜுனுக்கோ இவளுக்கு எப்படி தெரிந்தது என குழப்பமாக பார்க்க அவளோ கண்ணடித்து விட்டு “என் பிரண்ட்கிட்ட போன் பேசிட்டு வரேன்” என கூறிவிட்டு ஓடியவளை பார்த்த அர்ஜுன், சிறிது நேரத்தில் பின்னாடியே சென்று வினவ “வாங்க அண்ணா, எவ்வளோ நேரம் வெயிட் பண்றது? எப்படியும் வருவீங்கன்னு தெரியும், சரி சொல்லுங்க எப்போ கல்யாணம் வெச்சுக்கலாம்?” என பேசியவளிடம் “கொஞ்சம் பொறுமையா இரு திவி, இன்னும் அம்முகிட்டேயே நான் பேசல. எப்படியும், அவங்க ஸ்டேட்டஸ், எங்க ஸ்டேட்டஸ் வேற. ஏதோ பிரண்டா பழகுறோம்ங்கிறதுக்காக, பேராசை பட முடியுமா? பணத்துக்காக வரோம்னு நினைச்சிட்டா? அதனால ஏதும் இதப்பத்தி பேசாத, அவளுக்கு அவங்க வீட்ல மாப்பிள்ளை பாப்பாங்க, அவளுக்கு எல்லா விதத்துலையும் பொருத்தமானவனா அவனையே கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கட்டும்.” என்றவனை பார்த்த திவி “ஏதாவது சென்டிமென்டல் ஸ்டோரிக்கு டயலாக், இல்ல ஷ்கிரிப்ட் எழுதறீங்களா அண்ணா?” என வினவியவளை முறைக்க

“பின்ன என்ன அண்ணா, எல்லாரும் நல்லவங்களும் இல்ல, எல்லாரும் கெட்டவங்களும் இல்ல, ஒருவேளை நாளைக்கு அம்முக்கு கல்யாணம் பண்ணி, அவளுக்கு வரப்போறவன் சரி இல்லே கொடுமைப்படுத்துறான்னா என்ன பண்ணுவீங்க?”

"கொலையே பண்ணிடுவேன்… அம்முவ கஷ்டப்படுத்தற யாரையும் பாத்திட்டு நான் சும்மா விட்டிட்டு இருக்கமாட்டேன். "

“அது சரி, நீ யாரு அத கேக்கன்னு? கேப்பாங்க, உனக்கு அவளுக்கு என்ன சம்பந்தம்னு கேப்பாங்க? என்ன சொல்லுவீங்க, லவர்ன்னா ? அதுக்கப்பறம் அம்முவ யாராவது மதிப்பாங்களா?” என்க அமைதியாக தலை குனிந்துகொண்டவனிடம் திவி “அண்ணா, தெரியாத ஒருத்தர் கைல புடிச்சுக்குடுத்திட்டு காவல் காக்கிறதைவிட, அவள காலம் முழுசும் கண்கலங்காம பாத்துக்கறவன் தானே அவளுக்கு வேணும். அது ஏன் அவளை நேசிச்ச நீங்களா இருக்கக்கூடாது?”

“இவ்ளோ நாள் லவ்வ சொல்லாம வேற வெச்சுஇருக்கீங்க” என்று தலையில் 'அடித்துக்கொண்டவள் “அம்முகிட்ட நான் பேசுறேன். அப்புறம் வீட்ல பேசலாம். ஓகேவா?” என்றவளிடம் ஏதோ அவன் சொல்ல வாயெடுக்க அவள் நிறுத்த சொல்லி காய் காட்டிவிட்டு “ஒண்ணும் பேசக்கூடாது அண்ணா, இட்ஸ் யுவர் சிஸ்டர் ஆர்டர்.” நான் பாத்துக்கறேன். இப்போ வாங்க போகலாம்.அவனும் உடன் நடந்தான். இரவில் அம்முவிடம் கேட்டு அவளுக்கும் விருப்பம் என்று அறிந்ததும் திவியும் மகிழ்வுடன், தன் வீட்டிற்கு சென்றாள்.

மறுநாள் அதிகாலையில் ஆதி தோட்டத்தில் ஜாக்கிங் போய்க்கொண்டிருந்தான். “குட் மார்னிங் ஆதி” என்று குரலை வைத்தே யாரென்று அறிந்தவனுக்கு உதட்டில் புன்னகையோடு மனதில் கேள்வியும் பூத்தது. காரணமில்லாம இவ்ளோ அமைதியா வந்து பேசமாட்டேளே… சரி அவளே சொல்லட்டும் என நினைத்தவன் "குட் மார்னிங் திவி, அம்மா உள்ள இருக்காங்க " என்றான்.

“நான் உங்ககிட்ட பேசவந்தேன்.”

“அப்படியா?” என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனின் செய்கையை கண்டவள் “என்ன தேடறீங்க ?” என்றாள்.

ஆதி ," இல்ல, நீயா வந்து பேசுனாலே, எனக்கு ஏதோ ஆப்பு இருக்கும். அதான் இன்னைக்கு யாரு வந்து திட்டாபோறாங்கனு பாத்தேன்." என்க அவனை கண்கள் சுருக்கி ஒரு முறை பார்த்தவள் "நமக்கு வேலை ஆகணும் திவி, கோபப்படாம வந்த விஷயத்தை பேசலாம் " என தனக்குள் சொல்லிக்கொண்டவள் “அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் இல்ல கேக்கணும்…”

“சரி, சொல்லு” என்று அவனும் நடந்துகொண்டே கேட்டான்.

“அம்முக்கு மாப்பிள்ளை பாத்துட்டீங்களா?” என்றாள். "க்கும். … எப்படியும், இங்க நடக்கற, பேசுற விஷயம் எனக்கு தெரியுதோ இல்லையோ உனக்கு தெரியாம இருக்குமா? " என்றான் ஆதி.

"அட… அதில்ல, உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா… அத்தை, மாமா, நீங்க யாருக்காவது கேட்கலாம்னு யோசிச்சு வெச்சுயிருக்கிங்களா?, உங்களுக்கு தெரிஞ்சவங்க, பழக்கமானவங்கள்ள யாரவது இருக்காங்களா? " என்று திவி கேக்க

“இப்போ வரைக்கும் அப்படி ஏதும் இல்ல…” என்றான்.

“உங்ககூட இருக்கறவங்கள்ள, பழகனவங்கள்ள யாரும் அம்முக்கு மேட்ச் ஆன மாதிரி உங்களுக்கு தோணலையா?” என்றவளை திரும்பி பார்த்தவன் இல்லை என்பது போல தலையசைத்து விட்டு நகர்ந்தான்.

“ஸ்டேட்டஸ், படிப்புன்னு எல்லாமே ஈகுவல்லா இருக்கணும்னு பாப்பிங்களா?” என்றாள்.

பொறுமையிழந்த ஆதி அவளை நேருக்கு நேர் பார்த்து “இப்போ உனக்கு என்ன தான் தெரியணும். டைரெக்டா கேளு.” என்றதும் ஒரு நிமிடம் யோசித்தவள் மூச்சை உள்ளிழுத்துவிட்டவள்

“சரி, லாஸ்ட் நீங்க அம்முவ பத்தி என்ன நினைக்கிறீங்க, அம்முக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்னு எதிர்பாக்கிறீங்க?” என்றவளை தலை சாய்த்து பார்த்து சிரித்தவன் “திரும்பவும் சுத்தி வளைச்சு தானே கேக்குற ?” என்றவனிடம் “ப்ளீஸ், ப்ளீஸ் ராஜா, இதுதான் லாஸ்ட் அப்புறம் கேள்வி கேட்கமாட்டேன்.” என்று கேட்க அவனும் மறுக்காமல் “எங்க எல்லாரையும் விட அம்மு ரொம்ப சைலன்ட் நல்ல பொண்ணு, ரொம்ப சமத்து, பாசம், என்னதான் படிச்சுயிருந்தாலும் அவளுக்கு பிரீடம் குடுத்தாலும் பெரியவங்கள மதிச்சு நடக்கணும்னே எல்லாமே கேட்டுத்தான் பண்ணுவா, பிரச்சனைன்னா கூட வெளில சொல்ல மாட்ட. யாரையும் குறை சொல்ல தெரியாது. அவளுக்கு வரப்போறவன் படிப்பு, அந்தஸ்த்த விட அவளுக்கு புடிச்சவன அவளை நல்லா புரிஞ்சுக்கிட்டு, அவளை எப்பவுமே விட்டுகுடுக்காம பத்திரமா பாத்துக்கணும்.” என்றதும் அவனை இமைக்க மறந்து பார்த்தாள் திவி.

அவளை அழைத்து நடப்புக்கு கொண்டுவந்த ஆதியிடம் கணமும் யோசிக்காமல் “அப்படின்னா, எங்க அண்ணா அர்ஜூன்க்கு நீங்க சொன்ன எல்லா குவாலிட்டிஸ்ம் இருக்கு, அவருக்கு கல்யாணம் பண்ணிகுடுங்க.” என்றதும் இப்பொது ஆதி அவளை விழித்து பார்த்தான்.

அவன் அமைதியை பார்த்தவள் "ஆதி, ஸ்டேட்டஸ் மட்டும் தான் உங்க 2 குடும்பத்துக்கும் இருக்கற ப்ரோப்லேம். அதுவும் அவங்களும் ரொம்ப எல்லாம் ஸ்டேட்டஸ் குறைஞ்சவங்க இல்ல. மத்தபடி அர்ஜுன் அண்ணா பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டாம். உங்களுக்கே தெரியும். அவங்கள மாதிரி ஒரு பையன் நம்ம அம்முக்கு வந்தா எப்படி இருக்கும்? அண்ணாகிட்ட எதாவது குறை இருக்கா சொல்லுங்க " என்று அவள் கேட்க அவனும் “ச்ச…ச்ச… அவனை குறை சொல்லவே முடியாது. நான் கூட அவசரப்படுவேன், கோபப்படுவேன். பட் அவன் பொறுமை…என்ன விட பல மடங்கு நல்லவன். ஆனா அம்மா அப்பா என்ன சொல்லுவாங்கன்னு தான் யோசிக்கிறேன். ஸ்டேட்டஸ் கூட அப்படி ஒன்னும் பிரச்னை இல்ல. ஆனா அர்ஜுன் அம்மா கொஞ்சம் படபடன்னு பேசிடுவாங்க. அதான்…” என்று அவன் இழுக்க “என்ன ஆதி நீங்க? உங்களுக்கு தெரியாதா… அர்ஜுன் அண்ணா அவங்க அம்மா நல்லவங்க தான். தனக்கு மீறி எதுவும் பெருசா ஆசைப்படமாட்டாங்க. ஆனா தனக்குண்டான உரிமையும், மரியாதையும் கண்டிப்பா இருக்கணும்னு நினைப்பாங்க. மனசுல ஏதும் வெச்சுக்காம வெளிப்படையா பேசிடுவாங்க. மத்தபடி அவங்கள புரிஞ்சுக்கிட்டவங்களுக்கு தெரியாதா அவங்களோட பாசம், அக்கறை எல்லாமே…” என்றதும் அவனும் சிரித்து விட்டு "எப்படியும் முடிவு பண்ணிட்ட. …ஆனா நீ சொல்றதும் கரெக்ட் தான்… சரி எனக்கு இதுல முழு சம்மதம் " என்றதும்

திவி “தாங்கியூ சோ மச் ஆதி” என்ற அவள் மகிழ்வை பார்த்தவன் இவனும் சிரித்துவிட்டு "சரி, நான் அர்ஜூன்கிட்ட பேசுறேன். " என்று நகர்ந்தவனிடம்

“நான் அண்ணாகிட்ட பேசிட்டேன். அவங்களுக்கு அம்முவ ரொம்ப பிடிச்சிருக்காம்.” என்று கூறியவளை திரும்பி விழித்து பார்க்க “நேத்து சாய்ந்தரமே கேட்டுட்டேன். அவங்களுக்கு விரும்பம் தான். ஆனா அவங்க தான் ஸ்டேட்டஸ், பிரண்ட்னு இத பத்தி எல்லாம் ரொம்ப யோசிச்சு கேக்கக்கூட இல்ல.” என்றாள்.

அவனும் “ஓ. .சார்க்கு இப்படி ஒரு ஐடியா இருந்ததா?” என்று சிரித்தவன் "சரி, அப்டின்னா அம்முகிட்ட கேக்கலாம். " என்று அவன் கூற “அம்முகிட்டேயும் பேசிட்டேன். ஓகே தான்.” என்றாள் மெதுவாக.

அவன் அதிர்ச்சியாய் மீண்டும் பார்க்க "நேத்து நைட் அவகிட்ட பேசுனேன் " என்றாள்.

அவளை பார்த்தவன் “இப்போ நான் என்னமா பண்ணனும்.?” என்றவனை நோக்கி “சூப்பர், நேரா போயி அத்தை, மாமாகிட்ட பேசுங்க… மேரேஜ் பிக்ஸ் பண்ணுங்க” என்றாள்.

“ஏன், அவங்கிட்டேயும் நீயே பேசவேண்டியதுதானே?”

“பேசிருப்பேன், ஆனா நீங்க ஒருத்தர சட்ஜெஸ்ட் பண்ணி சொல்றதுக்கு நான் சொல்றதுக்கு வித்தியாசம் இருக்கு. ஒருவேளை நாளைக்கு வெளில யாராவது பையன் குடும்பம், ஸ்டேட்ஸ்ன்னு பத்தி கேட்டாங்கன்னா, பிரச்னை பண்ண பாத்தாங்கன்னா “ஆதி பார்த்த சம்பந்தம் இது, கண்டிப்பா தப்பாகாதுன்னு மாமா அத்தை தைரியமா சொல்லுவாங்க.” உங்க பேரா சொன்னாலே கண்டிப்பா சிலர் வாய தொறக்கமாட்டாங்க…அதான்…” என்றவளை ஆழ பார்த்தவன் “யார் யாருக்கு எப்படி பேசனும்னு கரெக்டா தெரிஞ்சிருக்க…” என்று ஆதி கூறியதும் "ராஜதந்திரம்…ஆனா உங்கள பத்திதான் தெரில… கெஸ் பண்ணவே முடில. எப்படி எடுத்துப்பீங்களோனு இருந்தது. பட் நௌ டபுள் ஓகே " என்று கூறி கண்ணடித்து விட்டு

“அதுவுமில்லாம நாளைக்கு அம்மு அவ பாமிலியோட சந்தோசமா இருக்கறத பாக்கும் போத, மத்தவங்க பெருமையா பேசும்போது எங்க பையன் பாத்த மாப்பிளன்னு சொல்லி அத்தை மாமாவுக்கும் பெருமை தானே… அவங்களுக்கும் எவ்வளோ சந்தோசமா இருக்கும்” என்று ஆர்வமாக கேட்டவளை ரசித்து பார்த்தான்.

“ம்ம்… ஆனா மாப்பிள்ளை பாத்தது நீதானே, கிரெடிட்ஸ் உனக்கு கிடைக்காதே? பரவாயில்லையா?” என்றான் அவன் குறும்புடன்.

“அதனால என்ன, கிரெடிட்ஸ் உங்களுக்கு கிடைச்சா என்ன, எனக்கு கிடைச்சா என்ன, எல்லாமே ஒன்னு தானே.” என்றதும் ஆதிக்கு இவ புரிஞ்சுதா சொல்றாளா என பார்க்க திவியோ "நம்ம எல்லாருக்குமே அம்மு சந்தோசம்தான் முக்கியம்…அதுக்குத்தானே எல்லாமே. " என்று கூறியதை கேட்டதும் சப்பென்று ஆகிவிட்டது ஆதிக்கு.

அவளோ “எனிவே தேங்க்ஸ் ராஜா…நான் கிளம்பறேன்” என்றாள்.

அவளை நிறுத்திய ஆதி "அதென்ன ஒரு சில நேரம் ஆதின்னு கூப்பிட்ற, சில நேரம் ராஜான்னு கூப்பிட்ற " என தன் சந்தேகத்தை கேட்டான்.

திவியோ "அதுவா… உங்கள பத்தி மாமா, அபி அண்ணி, அம்மு, அனு எல்லாரும் பேசும்போது ஆதி இப்படி, அப்படினு பில்ட்டப் பண்ணுவாங்க, அண்ட் ரொம்ப கோபக்காரன், வாலு, தப்பு பண்ணா மன்னிக்கவேமாட்டான், யாரு என்னனு பாக்க மாட்டான், அவன் முடிவு பண்ணா அவ்ளோதான்னு ஒரு டெர்ரர் பத்தி சொல்றமாதிரியே சொல்லுவாங்க.

ஆனா அத்தை ராஜா நல்லவன், திறமையானவன், கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி அதுவும் பிடிச்சவங்ககிட்ட , ரொம்ப பாசமா இருப்பான், அவனுக்கு பிடிக்காத விஷயத்தை யாருக்காகவும் மாத்திக்கமாட்டான். நியாயமான விஷயத்தை மறுக்கவும்மாட்டான். அதனால எந்த பிரச்சனை வந்தாலும் கவலைப்படமாட்டான்னு மத்தவங்க உங்கள கிண்டலா கம்பளைண்ட்டா சொன்ன விஷயத்தையே அத்தை பெருமையா விட்டுகுடுக்காம, அழகா நீங்க எப்போவுமே சமத்துங்கிறமாதிரியே சொல்லுவாங்க.

அதனாலையோ என்னவோ நீங்க பொதுவா பேசும்போது, வம்பிழுக்கும் போது, சண்டைபோடறப்போ, திட்டறப்போ எனக்கு உங்கள ஆதியாதான் நினைக்கத்தோணுது.

சமத்தா நீங்க அடுத்தவங்க சொல்றத பொறுமையா கேக்கும்போது, சந்தோசமா நீங்க சிரிக்கறப்போ, பாசமா பேசும்போது எல்லாம் ராஜா தான் தோணுது. அப்படியே மைண்ட்ல பிக்ஸ் ஆயிடிச்சு… ஓகே டைம் ஆயிடுச்சு… நான் போயி ஆபிஸ் கிளம்பறேன். டுடே நீங்களும் ஆபீஸ் போறீங்கள்ல … ஆல் தி பெஸ்ட்… டாடா " என்று ஓடிவிட்டாள்.

அவனும் அவளை பேசியது அனைத்தையும் நினைத்து சிரித்துக்கொண்டே வீட்டினுள் சென்றான்.

12 - மனதை மாற்றிவிட்டாய்

சிறிது நேரத்தில் ஆபீஸ் கிளம்பி ரெடியாக சாப்பிட வந்தவன் அம்மா அப்பாவிடம், இந்த சம்பந்தத்தை பற்றி கூறினான். அவர்களுக்கு முதலில் ஆச்சரியமா அதிர்ச்சியா என பிரிக்கமுடியாத கலவையான உணர்வு. பின்பு முதலில் தெளிந்தவர் சந்திரசேகர் தான். அர்ஜுன் பத்தி குறை எல்லாம் எதுமில்லை ஆதி, குணமும் நல்ல குணம் தான். அவங்க குடும்பம் பிரச்னை இல்லை என கூறும்போதே சந்திரமதி அவங்க அம்மா கொஞ்சம் படபடன்னு பேசுவாங்களே ராஜா, ஒத்துவருமா? என கேட்க அவனும் திவியும் பேசியபோது கூறியதை கூறவும், அவர்கள் ஓரளவுக்கு தெளிவடைந்தனர்.

அர்ஜுனும் "அப்படி அம்முவ விட்டுகுடுக்கற ஆள் இல்லமா, நம்ம அம்மு பிரச்சனைன்னா கூட யார்கிட்டேயும் சொல்லமாட்டா. அவனுக்கும் சின்ன வயசுல இருந்தே அம்முவ பத்தி தெரியும். அதனால அவனும் அவளை புருஞ்சுப்பான். அவளே சொல்லலேன்னாலும் எப்படியும் அர்ஜுன் என்கிட்ட சொல்லிடுவான். வேற குடும்பத்துக்கு அனுப்பற ஒரு பீல் நமக்கும் இருக்காதில்லபா? என அவன் கேட்கவும் பெற்றோர்கள் அனைத்தையும் அவன் யோசித்திருக்கிறான் என்று பெருமையுடன் , அவன் கூறுவதும் சரி என ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு மகிழ்வுடன் பச்சை கொடி காட்டினர். அவனும் மகிழ்வுடன் “அப்புறம் இன்னொரு விஷயம், இந்த கல்யாணத்துல அம்முவுக்கும், அர்ஜூனுக்கும் கூட சம்மதம் தான்.” என அவன் கூறியதில் ஓரளவு அவர்களும் யூகித்து முழுமனதுடன் ஒப்புக்கொண்டனர்.

அந்த நேரத்தில் அர்ஜுனும் வர “வாடா மாப்பிள்ளை, சாரி வாங்க மாப்பிள்ளை…” என ஆதி கூறியதை கேட்டு அர்ஜுன் ஒரு நிமிடம் விழித்தாலும், அம்மு அங்கு வரவும் ஆதி இருவரையும் பார்த்துவிட்டு “சீக்கிரமா நல்ல நாள் பாத்து உங்க அம்மா அப்பாவோட வந்து பொண்ணு கேளுடா. அம்முவ சீக்கிரம் கல்யாணம் பண்ணி உன்கூட அனுப்பிச்ச வெக்கிறோம்.” என்றதும் அவனை தாவி சென்று அணைத்து கொண்டு "தேங்க்ஸ் மச்சான். " என்றான். அம்முவும் ஓடிவந்து அணைத்துக்கொண்டு “தேங்க்ஸ் அண்ணா” என்றாள்.

இதை பார்த்ததுமே அனைவருமே மகிழ்ந்தனர். ஆதி"போதும், போதும், கொஞ்சம் மிச்சம் வைங்க…மெயின் ஆள் நான் இல்ல…நான் ஜஸ்ட் அம்மா, அப்பாகிட்ட பேசுனது மட்டும்தான், ஸ்கிரிப்ட் பிளான் எல்லாம் வேற ஆள்" எனவும், பெற்றோர்கள் குழம்பிபோய்"யாரது?" என்க, ஆதி “இங்க ஒரு வானரம் சுத்திட்டு இருக்குமே” என்றவனை பார்த்து, "வாணரமா? "என அனைவரும் வினவ, வெளியில் திவி வருவதை அவள் கொலுசொலியில் இருந்து அறிந்த ஆதி "அதுவே வந்திடுச்சு. ."என்று திரும்ப அனைவரும் திவியை கண்டு ஒரு நொடி சிரித்தனர். அவள் அதை கண்டுகொள்ளாமல் நேராக வந்தவள் ஆதியிடம் ஓகேவா என செய்கை செய்ய அவனும் சிரித்துவிட்டு “உனக்கு தான் தேங்க்ஸ் சொல்ல வெயிட் பண்ராங்க.” என்றதும் அவளுக்கு அனைவரும் ஒப்புக்கொண்டார்கள் என்பதில் ஏக சந்தோஷம். அர்ஜுன், அம்மு என அனைவரையும் அணைத்து வாழ்த்து கூறினாள்.

சந்திரா திவியின் காதை பிடித்துக்கொண்டு “ஏன் டி இத்தனை நாள் என்கிட்டத்தானே எல்லாமே சொல்லுவ…இப்போ என்ன டி என்கிட்ட சொல்லாம என் பையன்கிட்ட சொல்லிருக்க” என பொய் கோபம் கொள்ள “ஐயோ அத்தை, அப்படியில்ல… நான் சொன்னா கேட்டு யோசிக்கறேன்னு சொல்லுவீங்க… ஆனா ஆதி சொன்னதால தானே கேட்டு ஓகேன்னு முடிவே பன்னிருக்கிங்க. அதுவுமில்லாம இதெலாம் பெரியவங்க பேசவேண்டிய விஷயம் தானே…அதான் எனக்கு உங்ககிட்ட இதப்பத்தி பேச கூச்சமா இருந்தது. எப்படி எடுத்துப்பீங்களோன்னு…” திவி கூற

"ஓய். … அப்படினா நான் மட்டும் என்ன இதுல எக்ஸ்பிரின்ஸ் ஆனவனா? " என்று ஆதி கேட்க “அட, அப்படியில்ல, பட் என்னை, அம்முவ விட பெரியவங்க, அதுவுமில்லாம அவளோட அண்ணாவா இன்னும் நெறைய அக்கறையோடு யோசிப்பீங்கள்ல அதான்… உங்க மூலமா மூவ் பண்ணேன்” என்று கண்ணடித்தாள். ஆதியும் சிரித்துவிட்டு அர்ஜுன், அம்முவிடம் திரும்பியவன் “அப்போ 2 பேருக்குமே ஐடியா இருந்திருக்கு. … என்கிட்ட இத பத்தி சொல்லல… முக்கியமா டேய் நண்பா, நல்லவனே கூடவே தானே இருந்த. .ஒருவார்த்தை கூட சொல்லலையேடா?” என குறைபடவும் அர்ஜுன் அவனை சமாதான படுத்தும் வகையில் "டேய் அப்படி இல்லடா, எனக்கு உங்க எல்லாரையும் சின்ன வயசுல இருந்தே தெரியும், இவ்வளோ நாள் நல்லா பழகிட்டு இப்போ உங்க வீட்டு பொண்ண புடிச்சிருக்கு, லவ் பன்றேன்னு சொல்ல சங்கடமா இருந்ததுடா… என்னதான் என்கூட நீங்க எல்லாரும் நல்லா பழகுனாலும் எங்க ஸ்டேட்டஸ் பாத்து அக்செப்ட் பண்ணலேன்னா, இல்ல பணத்துக்காக பழகுனாங்கன்னு நினைச்சிட்டாலோ, நீ என்னோட பெஸ்ட் பிரண்ட்… யாருக்காகவும் உன்னோட பிரண்ட்ஷிப்ப இழக்கவோ, இந்தமாதிரி பாசமான குடும்பத்துல இருக்கற அன்பை இழக்கவோ எனக்கு விருப்பமில்லடா, அது உன் தங்கச்சியும் விரும்பமாட்டா… நாங்க 2 பேரும் அதனால தான் அத

பத்தி பேசக்கூட இல்ல…" என்றவனை பார்த்து முறைத்தவன் “பைத்தியம் டா நீங்க, நாங்க ஒத்துக்குவோமா, இல்லையான்னு எங்ககிட்ட பேசுனாதானே தெரியும். ஒருவேளை, அம்முவுக்கு வேற யாரோடவாது மேரேஜ் பிக்ஸ் பண்ணிருந்தா? இங்க பாரு, மனசுக்கு புடிச்சவங்க எல்லாருக்கும் முன்னாடியே கெடைக்கறதில்ல. உனக்கு அவளை நல்லா பாத்துப்பேன்னு நம்பிக்கை இருந்திருந்தா எப்படியாவது நீ அவளை கல்யாணம் பண்ணிருக்கணும் டா… மத்தவங்களுக்காக விட்டுகுடுக்கற விஷயமா இது?” எனவும்

அர்ஜுன் " அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடா, நீ உண்மையா லவ் பண்ணி அவளுக்கு புடிக்காத ஒரு விஷயம் பண்ணிதான் உனக்கு அவ கிடைப்பான்னா அத பண்ணவே உனக்கு மனசு வராது டா" என்றதும் ஆதி வேகமாக “அவளை விட்டுகுடுக்கவும் மனசு வராதுடா… அப்படினா அது உண்மையான காதல் இல்லைங்கிரியா?” என வினவ “அப்படி இல்லடா, அந்தமாதிரி போர்ஸ் பண்ணி, யாருக்கும் இஷ்டமில்லாம கல்யாணம் பண்ணிட்டு வாழறபோது அதுல இருந்தே பிரச்னையும், விலகலும் ஆரம்பிக்கும்… ஆனா அந்த மாதிரி பண்ணியும் லவ்வ புரியவெக்கிற, புரிஞ்சுக்கற யாராவது இருப்பாங்களான்னு தெரில” என அர்ஜுன் முடிக்க

“என்னவோ அண்ணா, இந்த விஷயத்துல நான் ஆதிக்கு தான் சப்போர்ட். ஒருவேளை வேற யாராவது கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பொலம்பறதுக்கு, எப்படியாவது கல்யாணம் பண்ணிட்டு லவ்வ புரியவெக்கலாம். தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசு எவ்வளவோ பரவால்ல தானே…” என திவி கூற அவள் தலையில் கொட்டி "எக்ஸாம்பிள் சொல்றா பாரு…பேய், பிசாசுன்னு " என மதி கூற அவள் தலையை தடவிக்கொண்டாள். இருந்தும் “எப்படி உனக்கு அவங்க விஷயம் தெரிஞ்சது” என சேகர் வினவ திவி அவள் கவனித்த இவர்களின் நடவடிக்கை, அம்முவின் சோகம், அர்ஜுனின் கவலை, அம்முவின் எதிர்பார்ப்பு, அர்ஜுனை பற்றி பேசும்போது எழும் மகிழ்ச்சி, அர்ஜுனின் தேடல், பார்வை என அனைத்தையும் கூறியவள், “ஒருவேளை லவ் இருக்குமோனு தான் மாமா அர்ஜுன் அண்ணாகிட்ட பேசுனேன். அவரு ஸ்டேட்டஸ், பிரண்ட்ஷிப், தியாகம்னு என்னென்னமோ பேசி இதுவரைக்கும் நடந்த அவங்களோட லவ் னு பேர்ல இவங்க ஓட்டுன ஊமை படத்தை பத்தி கேட்டதும் முடிவு பண்ணிட்டேன் மாமா. இவங்கள நம்புனா கல்யாணம் நடக்காதுன்னு. அதான் உடனே ஆதிகிட்ட பேசிட்டேன். அவரும் ஒத்துக்கிட்டாரு சோ ஈஸியா வேலை முடிஞ்சது…”

ஆதியோ அவளை பார்த்து சிரித்துவிட்டு "திவி, உன்னோட இந்த மண்டை சைஸ் மட்டும் தான் பெருசுனு நினச்சேன்… எப்படி? " என அவன் கேட்க திவியோ அடுத்த நொடி "ஐயையோ ஆதி, நான் உங்கள மாதிரி இல்ல… ஆண்டவன் எனக்கு மண்டைக்குள்ள மூளையும் குடுத்திருக்கான். " என்று அவள் கூறியதை அனைவரும் புரிந்துகொள்ளும் முன் திவியின் காது ஆதியின் கையில் இருந்தது.

“உனக்கு எவ்வளோ சேட்டை இருந்தா, எனக்கு மூளை இல்லேனு சொல்லுவா?” என வினவ

“ஐயோ, வலிக்கிது…மாமா ப்ளீஸ் ஹெல்ப் மீ” எனவும் “டேய் விட்ரு டா ஆதி, வலிக்குதாம்…” என்ற தந்தையிடம் "அப்பா அவள் பொய் சொல்றா, எல்லாம் நடிப்பு " எனவும், சந்திரசேகரும் "ஐயோ, திவிமா அவன் நீ பொய் சொல்ற, நடிக்கறேன்னு கண்டுபுடிச்சிட்டான். ஒன்னும் பண்ணமுடியாது. " என கைவிரிக்க அவளோ அவரை முறைத்து விட்டு "மதி அத்த ப்ளீஸ் " என்றவளை “நீ, எப்படிடி என் பையனுக்கு மூளை இல்லேனு சொல்லலாம். நீயே அனுபவி” என்றவளை விடுத்து “அர்ஜுன் அண்ணா, அம்மு காப்பாத்துங்க” என அழைக்க அவர்களோ “அவனும் உன்ன மாதிரி தாண்டா, சொல் பேச்சு கேட்கமாட்டான். சோ நீயே பாத்துக்கோ என அர்ஜுனும், நீ இதுவரைக்கும் கெஞ்சி பாத்ததே இல்ல டி… அதனால கொஞ்சம் அப்டியே இரு என அம்முவும்” கூற அவள் இறுதியில் ஆதியை திரும்பி பார்க்க அவனோ “ஒழுங்கா சாரி சொல்லு அப்போ விடறேன்.” என்றான்.

திவியம் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு “ராஜா ப்ளீஸ்…” என்றதும் தான் மாயம் அப்படியே சொக்கிவிட்டான். உடனே கையை எடுக்க அவளோ விட்டதும் கொஞ்ச தூரம் ஓடிச்சென்று “எப்போப்பாரு என் காதையே புடிக்கறேல்ல…இன்னைக்கு நைட் நீ எப்படி நிம்மதியா சாபிட்றேன்னு பாக்கறேன் ஆதி…பழிவாங்குறேன் இரு…” என பழிப்பு காட்டிவிட்டு ஓடினாள். அவளை பார்த்த ஆதி “இம்சதான் இவ…” என்று கூறிக்கொண்டே மாடி பக்கம் சென்றான்.

அபி, அரவிந்த அனைவரிடமும் அம்மு அர்ஜுன் விஷயத்தை கூற அவர்களும் மிகவும் மகிழ்ந்து வாழ்த்தினர். அவர்களும் நந்துவுடன் கிளம்பிவிட ஆதியும் அர்ஜுனும் தந்தையுடன் ஆபீஸ் கிளம்பினர்.

சந்திரசேகர், “ஆதி அப்படியே வாயேன். கடைக்கு போயிட்டு ஒரு இன்ட்ரோ குடுக்கறேன்” என அழைக்க

ஆதி “டாடி ப்ளீஸ், எனக்கா தோணும்போது நான் வரேன். அதான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்னு சொல்லிட்டேனே. பட் நாட் நௌ. இப்போதைக்கு நீங்களே பாருங்க. கொஞ்ச நாள் எங்க ஆபீஸ் வேலை பாக்கவிடுங்க.” என்றதும் அவரும் மகன் மீது உள்ள நம்பிக்கையில் சரி அவன் போக்கில் நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

3 வருடம் கழித்து ஆபீஸ் வந்த ஆதியை அனைவரும் ஒரு ஒரு மனநிலையில் வரவேற்றனர். சிலர் மகிழ்வுடன், சிலர் பயத்துடன்.

"ஐயோ ஆதி சாரா, மனுஷன் பாரின்ல இருந்து பாக்கும்போதே அப்படி குறை கண்டுபிடிப்பான்… இப்போ இனிமேல் இங்கேயென்ன சொல்லவே வேண்டாம். அர்ஜுன் சார்கிட்டவாது கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும். ஆனா ஆதி சார் சுத்தம், தப்புன்னு தெரிஞ்சா எல்லாமே பறக்கும். முன்னாடி ஒருத்தன் நிக்கமுடியாது. மன்னிக்கவும் மாட்டாரு. எப்படி இருக்கப்போகுதோ இனி? ஆனா கிளைன்ட் யாரும் நம்மள கேள்விகேக்காத மாதிரி பாத்துப்பாரு. அவங்க கேட்டாங்கன்னாலும் கண்டிப்பா சொல்லிடுவாரு அவங்கள வேலை வாங்குற வேலை உங்களோடதுல்ல. சோ உங்கலோட டிமாண்ட் மட்டும் சொல்லுங்கன்னு நேருக்கு நேர் சொல்லிடுவாரு. பீல்ட் ஒர்க்ல எல்லாம் எல்லாமே பக்காவாஇருக்கும். அந்த ஷர்மாக்கு எல்லாம் ஆதி சார் தான் கரெக்ட். ஷர்மாவும் வேலைய குடுத்திட்டு படுத்தற பாடு இருக்கே… அப்பப்பா ஆனா அவரையே ஆதி சார் ஹாண்டில் பண்ணிடுவாரு. திறமையான ஆள் தான்… ஆனா கோபம் வந்தா அடக்கறதுதான் கஷ்டம். யாருகிட்ட தான் அடங்குவாரோ ? இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் வீட்லையும் இப்படித்தான் கடுகடுன்னு இருப்பாங்களோ? " என்றதும் இன்னொருவன் "என்னவோ ? ஆனா அவரை கட்டிக்க போற பொண்ணு ரொம்ப பாவம். இவரு கோவத்துக்கு தாக்குப்புடிக்குமோ என்னவோ? இவரே பாவம் பாத்து கோபத்தை குறைச்சாதான் உண்டு. சரி நம்ம போயி வேலைய பாப்போம். " என இருவர் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த அர்ஜுன் சிரித்துக்கொண்டே ஆதியின் அறையினுள் நுழைந்தான்.

ஆதி "என்னடா சிரிச்சிட்டே வர? "

அர்ஜுன் அவன் கேட்ட உரையாடலை கூறிவிட்டு “உன்ன மத்தவங்கனால குறை சொல்லாம இருக்கவும் முடியல, விட்டுகுடுக்கவும் முடியல. மொத்தத்துல இனிமேல் எல்லாமே பக்கவா இருக்கும். இருந்தாலும் எல்லாரும் உன்ன பாத்தாலே அலறானுங்கடா… அவங்க பேசுறத கேக்கும்போதுதான் எனக்கும் தோணுது உன் ஒய்ப் ரொம்ப பாவம். உன்ன, உன் கோபத்தை ஹாண்டில் பண்ண அவ என்ன பாடுபடபோறாளோ? என கேட்க ஆதி ஒரு பெருமூச்சுடன் அவளை கட்டிக்கிட்டு நான்தான் பாவமா இருக்கனும், அந்த இம்ச எப்போ என்ன என்ன பண்ணுமோனு எப்போவும் அலெர்ட்டா இருக்கனும். என மனதில் நினைத்ததாய் எண்ணி வாய்விட்டே கூறிவிட்டான்.”

அதை கேட்ட அர்ஜுன் நண்பனிடம் வந்து “டேய் உண்மையவாடா?” என கேட்க அதன் பின்பே தான் பேசியதை உணர்ந்த ஆதி “இல்லடா, பொதுவா எல்லா ஹஸ்பெண்ட்ஸ்ம் ஒய்ப்க்கு பயப்படுவாங்கள்ள அந்த மீனிங்ல சொன்னேன் டா”

அவனை நம்பாத பார்வை பார்த்த அர்ஜுன் “நம்பிட்டேன். அப்போ நீ யாரையும் நினச்சு சொல்லல” என்றதும் ஆதி “அட நீ வேற, அவ இப்போ எங்க இருக்காளோ?” என அவன் திரும்பிக்கொள்ள

அர்ஜுன் "அவ, இப்போ ஐடி ஹப் ல xyz கம்பெனில உக்காந்து ஸிஸ்டெமோட சண்டை போட்டுட்டு இருப்பா. "என அவன் கூற அது திவி வேலை செய்யும் கம்பெனி என அறிந்தவன் அர்ஜுனை வேகமா திரும்பி பார்க்க அவனோ குறும்புடன் சிரித்துக்கொண்டே “என்ன கரெக்டா சொல்லிட்டேனா? என்கிட்ட சொல்லுடா திவ்விய நீ லவ் பண்ற தானே?” என்று கேட்க

ஆதி சிரித்துக்கொண்டே “எனக்கு அவளை புடிச்சிருக்கு. லவ் பண்றேன் தான். ஆனா இன்னும் அவகிட்டேயே சொல்லல. உடனே அவகிட்ட சொல்லி அவ நம்பவும் மாட்டா. உண்மையா சொல்லனும்னா சீரியஸ்சாவே எடுத்துக்கமாட்டாளோனு கூட டவுட். எல்லாமே ரொம்ப ஜாலியா funஆ எடுத்துக்கறா. கோபத்துல எது சொன்னாலும் அகைன்ஸ்ட்டா பண்ரா…ஆனா எல்லார் மேலையும் பாசம்…சேட்டை…வாலு… சில விஷயம் ரொம்ப மெட்சூர்டா இருக்கா. சில விசயத்துல இன்னும் வளரவே இல்ல…அவளுக்கு என்ன புடிச்சிருக்குன்னு அவளா புரிஞ்சுக்கணும். அப்போதான் அவ எந்த சூழ்நிலையிலும் என்னை விடாம எந்த ஆசிலேஷனும் இல்லாம அந்த லைப்ப என்னை முழுசா ஏத்துபா…அதனால கொஞ்ச நாள் போகட்டும்னு இருக்கேன்…அதுவுமில்லாம ஆரம்பத்துல இருந்து எங்களுக்குள்ள சண்டையாவே இருந்ததால…” என ஆதி கூறிக்கொண்டே இருக்கும்போதே

அர்ஜுன் “சூப்பர் மச்சான், திவ்விய பத்தி இவ்வளோ ஷார்ட் டைமிங்கில இவ்வளோ கரெக்டா புரிஞ்சு வெச்சிருக்க. அவளுக்காக எல்லாமே யோசிச்சிருக்க பாரேன். ரியலி திவி சோ லக்கி டா. நீ சொல்றதும் உண்மைதான் அவ கேரக்டர் அந்தமாதிரிதான், அவளா புரிஞ்சுகிட்டு டிசைட் பண்ணாதான் நல்லது. மத்தவங்க சொல்லி கேக்கமாட்டா. ஆனா ரொம்ப நல்ல பொண்ணுடா… உனக்கு ஏத்த பொண்ணு… உன்ன எப்போவுமே சந்தோசமா வெச்சுப்பா…” என கட்டிக்கொண்டு மகிழ்ச்சியை தெரிவித்தான்.

[ஆதி திவி சண்டையை பற்றி கூறவந்ததை அர்ஜுன் கேட்டிருந்தாலாவது அர்ஜுனுக்கு புரிந்திருக்கும் ஆதியின் மனநிலையும் அதில் அடங்கிய கேள்வியும். ஆனால் அவன் மகிழ்ச்சியில் கேட்கும் மனநிலையில் இல்லை. உண்மையை கூறினால் அர்ஜுன் அவன் இறுதியாய் கூறியதை கவனிக்கவே இல்லை. பாவம் இதை அறிந்து பதில் கூறவரும் அர்ஜுனும் அறியாததே பின்னொரு நாளில் அவன் கூறு வரும் பதிலை ஆதியும் கேட்கும் மனநிலையை தாண்டி இருப்பான் என்று. ]

ஆதி “ஹ ஹா ஹா… சரி எப்படிடா கண்டுபிடிச்ச எனக்கு அவளை பிடிச்சிருக்குனு…?”

அர்ஜுன் “அதான் தெரியுதே…நேத்து நீ மால்ல திவ்விய பாத்து பேசுனது மொத தடவ பேசுன மாதிரியா இருந்தது. நீ கோபத்துல சண்டை போட்டு பாத்திருக்கேன். ஆனா செல்லமா காதை பிடிச்சு திருகி அதுவும் ஒரு பொண்ணுகிட்ட மொத தடவையா பாக்கறேன். ஆனா திவியோட கேரக்டர் அப்படி அவ எல்லார்கிட்டயும் ஜாலியா பழகுவா, அவகிட்ட எல்லாரும் குளோஸ் ஆய்டுவாங்க. அதனால என்னால முழுசா ஜட்ஜ் பண்ண முடில. ஆனா அதுக்கப்புறமும் நீ அவளை அப்போ அப்போ பாத்து ரசிச்சது, பசங்க அவங்கள கிண்டல் பண்ணும்போது உனக்கு வந்த கோபம், அவளை நீயே கூட்டிட்டு போறேன்னு கேர் பண்ணது, அவ வரமாட்டேன்னு சொல்லியும் கேக்காம கம்பெல் பண்ணி மிரட்டி அவளுக்கான முடிவையும் எடுத்து உன்கூடவே கூட்டிட்டு போனது, இன்னைக்கு காலைல அவ தான் எங்க மேரேஜ்க்கு காரணம்னு நீ சொல்லும்போது உன் முகத்துல வந்த பெருமை, நீயும் அவளும் போட்ட சண்டை எல்லாமே சொல்லுச்சுடா. நீ என் பிரண்ட் ஆதி இல்ல… திவியோட ஆதின்னு… சாரி ராஜான்னு…” என கூறவும் ஆதிக்கே வெக்கமாக போய்விட்டது.

“அவ்வளோ அப்பட்டமாவாடா இருந்திருக்கேன்?” என வினவ

அர்ஜுனோ சிரித்துவிட்டு “நீ ரொம்ப கண்ட்ரோல் மச்சான்… ஆனா உன்ன கொஞ்சம் கவனிச்சாலே போதும் உன்னோட இவ்வளோ நாள் பிஹேவியர்ஸ்க்கு இது டோடல் டிபரென்ட் அதனால ஈஸியா தெரிஞ்சுடும்.” எனவும்

ஆதியும் “உண்மைதான் டா, அவளை பாத்தாலே என் கண்ட்ரோல் எல்லாமே எங்க போகுதோ… நான் அமைதியா இருப்பேன்டா…அவ பண்ற ஏதாவது வேலை என்ன நல்லா டென்ஷன் பண்ணி கத்தவிடறா… அப்புறம் நான் சுத்தி இருக்கறத விட்டுட்டு அவளை திட்டிட்டு சண்டைபோட ஆரம்பிச்சடறேன்… சீரியஸ்ஸா திட்டிட்டு இருப்பேன், பாவமா முகத்தை வெச்சு கெஞ்சி கொஞ்சி ஏமாத்திட்டு ஓடிடுவா…உண்மையாவே அந்த நேரத்துல அவளோட அந்த பாவமா இருக்கற முகத்தை பாக்கணுமே நான் அப்படியே உருகிடுவேன் மச்சான்… அவளை ஏதுமே கஷ்டப்படுத்தாம கைக்குள்ள வெச்சு பாத்துக்கணும்னு தோணும்… ஆனா அந்த பிராடு அப்படி நடிச்சேனு சொல்லி ஏமாத்திட்டு ஓடிடுவா… அவள எப்படி சமாளிக்கபோறேனோ தெரில மச்சான்.” என்றவனை அணைத்துக்கொண்டு "ஆழ்ந்த அனுதாபங்கள் டா மாப்பிள்ளை… மொதல்ல அவ உன் லவ்வ புரிஞ்சுக்கிட்டும். அப்புறம் அவளை ஹாண்டில் பண்றத பத்தி ரிசெர்ச் பண்ணு. ஆனா அவ உன்கிட்ட அடங்கிடுவான்னு தோணுது… ஏன்னா இத்தனை வருஷத்துல அவ யார்கிட்டேயும் ப்ளீஸ், சாரி, எல்லாம் சொல்லி நான் பாத்ததே இல்ல. எப்படியும் ஏதாவது பண்ணி தப்பிச்சிடுவா. ஆனா உங்கிட்ட மட்டும் தான் கொஞ்சம் அடங்குற மாதிரி இருக்கு. அதனால நம்பிக்கையோட காத்திருப்போம். " என நண்பர்கள் ஆபீஸ் வேலையில் இறங்கிவிட்டனர்.

மாலையில் வீட்டிற்கு வந்த திவி தன் அண்ணா, அண்ணியிடம் போனில் உரையாடிவிட்டு ராஜீ , மகாவுடன் தந்தைக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் என கூறி தாய்மார்களை வம்பிழுத்துக்கொண்டிருந்தாள். அதை பார்த்த தந்தையர்கள் மனம்விட்டு சிரிக்க வேகமாக உள்ளே நுழைந்த அனு "திவி, இங்க என்ன பண்ணிட்டு இருக்க?? இன்னும் வீட்டுக்கு வரலயேன்னு பாத்தா இங்க நீ வெட்டியா சிரிச்சிட்டு இருக்க…"என கூறியவளை பார்த்து "ஏன் அனு, அவ எப்போவுமே உங்க வீட்ல தான் இருக்கா, எப்படியும் 2 பேரும் சண்டைதான் போடப்போறீங்க, மதி ஆண்ட்டி விலக்கிவிடனும். இதுக்கு எதுக்கு நீ இந்த ரம்பத்த கஷ்டப்பட்டு வந்து கூட்டிட்டு போற? " என தர்ஷி கேட்க,

அனுவும் "அதென்னமோ தெரிலக்கா, என்ன பண்ணாலும் திவி கூடவே இருந்து பழகிடுச்சு. எல்லாத்தையும் சொல்லி சண்டை போட்டு, அப்புறம் எல்லாரையும் கலாய்ச்சுட்டு ரொம்ப ஜாலியா இருக்கும். அம்மு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா. எனக்கு எப்போவும் திவி கூட சண்டை போட்டுட்டே இருந்தான் நல்லா இருக்கும். இல்லாட்டி பைத்தியமே புடிச்சிடும்க்கா. " என கூறியதை கேட்டு அனைவரும் சிரித்தனர்.

பின்பு திவி “அதென்னடி, தர்ஷிய மட்டும் மரியாதையா அக்கான்னு கூப்பிடறே, என்ன மட்டும் பேர் சொல்லி கூப்பிடறே? இனிமேல் ஒழுங்கா என்னையும் மரியாதையா கூப்படல அத்தைகிட்ட சொல்லிடுவேன்.” என மிரட்டியவளை பார்த்து சிரித்துவிட்டு

“அட போ திவி, அம்மா எப்போவுமே சொல்லுவாங்க ஆனா நான்தான் கேட்கமாட்டேன். ஒருதடவை உன்ன நான் எப்படி கூப்பிட்றதுன்னு பஞ்சாயத்தே நடந்தது. திவி உங்கள அத்தைனு தானே கூப்பிட்றா, அப்புறம் எப்படி நான் அக்கான்னு கூப்பிட்டா சரிவரும்னு கேக்க சரி அப்படினா அண்ணின்னு கூப்பிடுன்னு சொன்னாங்க. அதுக்கப்புறமும் பேசி ஆர்கியு பண்ணி திவி எனக்கு எப்போவுமே பிரண்டா தான் இருக்கா. அப்படி கூப்பிட்டா ரொம்ப தள்ளிவெக்கிறமாதிரி இருக்கு. உங்களுக்காக வெளி ஆளுங்க முன்னாடி வேணும்னா நான் மரியாதையா கூபிட்றேன். மத்தபடி எனக்கு திவி தான்.” என ஒரு கிளைமாக்ஸ் சொல்லிட்டு வந்துஇருக்கேன். அந்த மரியாதைய எல்லாம் அப்புறம் பாக்கலாம். இப்போ ஒழுங்கா என்கூட கிளம்பி வராட்டி, உன்ன பேர் சொல்லி கூப்பிட்ற மரியாதையும் போய்டும்" என மிரட்டிவிட்டு அனு ஓடியேவிட்டாள்…

அனுவை துரத்திக்கொண்டு வந்தவள் கார் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க போக சடன் பிரேக் போட்டு தன் அருகில் நிறுத்தியதை பார்த்தவளுக்கு ஒரு நொடி உடலே நடுங்கிவிட்டது.

13 - மனதை மாற்றிவிட்டாய்

காரிலிருந்து கோபமாக வெளிவந்த ஆதி அவளை அடிக்க போனவன் அவள் பயந்த விழிகளையும், நடுங்கிய கைகளையும் பார்த்தவன் “ச்சா…” என்றுவிட்டு காரை ஸ்டார்ட் செய்து உள்ளே கொண்டுவந்து நிறுத்தினான். பின்பு திவியிடம் சென்றவன் அவள் கை பற்றி வேகமாக வீட்டினுள் இழுத்துவந்தவன் ஹாலில் வைத்துக்கொண்டு “இடியட், அறிவில்ல? இப்படியா ரோடு கிராஸ் பண்ணுவ ?”

“நான் ரோடு கிராஸ் பண்ணல… அனுவ தொரத்திட்டு வந்தேன்.” என அவள் கூற “ரொம்ப முக்கியம், உனக்கு வீட்ல இடமா இல்ல…ரோட்டுல விளையாடிட்டு இருக்க…ஏதாவது ஆகியிருந்தா?” என ஆதி கத்திக்கொண்டிருக்க சந்திரா “என்னாச்சு ஆதி, ஏன் அவளை திட்டு இருக்க?” என கேட்டதும் “பாருங்க அத்த இவரை…” என திவி ஆரம்பிக்க “ஏய், வாய மூடுடி… பண்றதெல்லாம் பண்ணிட்டு பேசுறா” என

அவளை அடக்கிவிட்டு சந்திராவிடம் நடந்ததை கூறினான். வந்த வேகத்துக்கு அடிச்சு தூக்கிருந்தா என்ன மா ஆகுறது?கொஞ்சம் கூட கவனமே இல்லாம எப்போப்பாரு விளையாட்டுத்தனம் " என ஆதி கூற சந்திராவும் அவளை என்ன செய்வது என பார்த்துக்கொண்டிருக்க திவியோ குனிந்த தலை நிமிராமல் “அந்த அளவுக்கு யாரு வேகமா வரசொன்னாங்க அத்தை ?” என கேட்க அங்கு இருந்த அனைவரும் இவ அடிவாங்காம அடங்கமாட்டா என நினைத்து அவள் செய்கையில் தங்களுக்குள் சிரிக்க

ஆதியோ "இந்த வாய் தான், கொழுப்பு… இப்படியே பேசு, இன்னும் என்கிட்ட நல்லவாங்க போற… சொல்ற பேச்ச கேக்குற பழக்கமே இல்லையா? எல்லாரையும் மாதிரி என்கிட்ட இருக்கலாம், சமாளிச்சிடலாம்ணு நினைச்சியா… இப்போவும் திமிரா கேள்வி கேக்குற உன்ன அப்படியே ஒன்னு விட்டா என்ன…"என நெருங்க திவி சந்திராவின் பின் மறைத்துக்கொள்ள சந்திராவே “சரி விடுடா, அவ வீட்டுக்கு வெளில தானேன்னு வந்திருப்பா, நீயும் வேகமா வந்ததால தானே இடிக்கற அளவுக்கு போச்சு.” என சொல்ல ஆதி கூறினான். "அம்மா, போதும், நடந்தது என்னனு தெரியாம அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. அவர்கள் வீதி 3 வழிச்சாலை. ஆதி ஒருபுறம் வந்தான். எதிர் திசையில் மிகுந்த வேகத்தில் தகரம், ரீப்பர் வைத்திருந்த அதுவும் ஆங்காங்கே நீட்டிக்கொண்டு சுவற்றையே பதம்பார்க்கும் அளவிற்கு கட்டப்பட்ட மினி லாரி ஒன்று வந்தது. 2ம் இவர்களின் வீட்டின் வழியே செல்லும் சாலைக்குள் நுழைய வேண்டும்… என்ன நினைத்தானோ ஆதி, அந்த லாரி வருவதர்குள் வேகமாக வந்து இவன் அந்த சந்தினுள் திரும்பிவிட்டான். அங்கே ஒரு வண்டி மட்டுமே செல்லமுடியும் இப்போது அடுத்து வரும் வண்டி இவன் வண்டிக்கு பின்னாலே வரவேண்டியதாகிப்போனது. .இருந்தும் வேகம் குறைக்காமல், ஹார்ன் அடித்துக்கொண்டே அந்த லாரி வர, இவன் மிரர் வழியாக பார்த்து யாரவன், இந்த சந்துக்குள்ளேயே இவ்வளோ வேகமா போறான் என கடித்துக்கொண்டே தன் வண்டியை வேகமெடுத்து முன்னாடி பார்க்க திவி நடுரோட்டில் வருவதை கண்டவன் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். இதை கூறிமுடித்தவன், "இப்போ சொல்லுங்க, ஒருவேளை நான் முன்னாடி வராம அந்த லாரிகாரன் வந்திருந்தா அவன் வந்த ஸ்பீடுக்கு இவ வந்த வேகத்துக்கு இந்நேரம் நினைச்சுக்கூட பாக்கமுடியல…என கூற சந்திராவுமே ஆடிப்போய்விட்டார்.

ஆதி “பின்னாடி வந்த அந்த வண்டிய பாத்துத்தானே பயந்து நின்ன. கேள்வி கேட்க தெரியுதில்ல, இப்போ பேசு, அந்த வண்டி வந்தா என்ன ஆயிருக்கும்?” என கூற

திவியோ “என்ன ஆயிருக்கும், எனக்கு இந்நேரம் மில்க் ஊத்த ரெடி பண்ணிருப்பாங்க. நீங்க இம்ச ஒளிஞ்சதுனு ஜாலியா சுத்திருப்பீங்க” என அவள் கூறிமுடிக்கவும் ஆதியின் கைகள் அவள் கன்னத்தை பதம் பார்த்தது.

“உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் சந்தோசப்படுவேனா? உன்ன திருத்தவே முடியாது. இரிடேட்டிங் இடியட்… ச்சா…” என்று வேகமாக மாடிக்கு சென்றுவிட்டான்.

சந்திராவிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை… ஆதி கூறியதுபோல எதுவும் அசம்பாவிதம் நடந்திருந்தால் கடவுளே என்று இருந்தது… திவி விளையாட்டுக்கு தான் கூறினால் என அறிந்தாலும் எந்த நேரத்தில் விளையாடுவது என்றில்லையா? அவன் அப்படி கத்திக்கொண்டு இருக்க இவளுக்கு அப்படி என்ன விளையாட்டு பேச்சு, அடிச்சதும் தப்பில்லைதான். என நினைத்ததை அவளிடமும் கூறியேவிட்டாள். அதுவும் அவனை வேற சந்தோசப்படுவான்னு சொல்ற… என் பையன பாத்தா உனக்கு அப்டியா தெரியுது? என கேட்க திவியோ கன்னத்தை பிடித்துக்கொண்டே அமைதியாக இருந்தாள். அனு, அம்மு, சேகர் அனைவரும் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாக பார்க்க திவியே "சாரி அத்தை, நான் விளையாட்டுக்குனாலும் அப்படி சொல்லிருக்கக்கூடாது. என்கிட்ட பேசுங்க. ப்ளீஸ் என அவள் கொஞ்சி கெஞ்சவும் இவளுக்குமே ஒருமாதிரி ஆகிவிட்டது. இருப்பினும் சரி சரி விடு. .இனிமேல் இப்டியெல்லாம் பேசாத… ஆனா ராஜா ரொம்ப கோபமா இருக்கான். எனவும் "நான் பேசுறேன்… இல்லை திவி அவன் கோபம் அவ்வளோ சீக்கிரம் குறையாது. இப்போ வேண்டாம் விட்டிடு. அவனே வரும்போது வரட்டும். என சந்திராவே தடுக்க “அதெப்படி, நான்தானே தப்பு பண்ணேன். விடுங்க அதெல்லாம் நான் பாத்துக்குறேன். ஒண்ணும் சொல்லமாட்டார்” என அவள் மாடி நோக்கி சென்றாள்.

ஆதியே கீழே இறங்கி வந்தான். அவனிடம் வந்த திவி “சாரி ஆதி, நான் நீங்க விளையாட்டுக்கு எடுத்திட்டு சண்டை போடுவீங்கனு நினைச்சு தான் அப்படி சொன்னேன்.” அவனோ கண்டுக்காமல் அவளை தாண்டி செல்ல அவனை வழிமறித்து மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.

அவனுக்கும் சங்கடம்தான் அடித்ததில். ஆனாலும் அவள் கூறிய வார்த்தை. அவளை பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கும் அவனிடம் அவளது இழப்பை கொண்டாடுவேன் என்று அவள் கூறியது அவனுக்கு கோபம் மட்டுப்படவே இல்லை.

இன்னொரு மனமோ “அவதான் வெறுப்பேத்த, வம்பிழுக்கண்ணு லூசு மாதிரி ஒளர்றா, அதுக்காக அவளை அடிப்பியா” என இடித்துரைக்க அவனால் மேலே நிற்கமுடியவில்லை.

அவளை காணவே கீழே வந்தால் அவளோ தன் தாயிடம் கெஞ்சி கொஞ்சி பேசவைத்து விட்டு இப்பொது தன்புறம் வர “என்ன நடந்தாலும் சரி, இவளை இப்படியே உடனே உடனே மன்னிச்சு விடறதால தான் இப்படி திட்டினாலும் கண்டுக்காம இருக்கா. பேசவேகூடாது…” என முடிவெடுத்து கண்டுக்காமல் இருக்க அவள் அனைவரையும் பாவமாக பார்த்து உதவிக்கு அழைக்க அவர்களோ “இவனிடம் நம்மால் பேச இயலாது” என ஒதுங்கியே இருக்க இந்த பார்வை பரிமாற்றங்களை பார்த்தும் ஏதும் சொல்லாமல் மீண்டும் அவன் விலகி விலகி செல்ல

பொறுமை இழந்த திவி “ஹே… ஆதி, என்ன ரொம்ப ஓவரா சீன் போடுறீங்க. ஏதோ சும்மா சொல்லிட்டேன் சாரின்னு சொல்றேன்ல. அப்புறமும் என்ன மதிக்காம போறது?” என கத்த அவளை தாண்டி சென்றவன் திரும்பி அவளை பார்க்க, அவளும் சளைக்காமல் அவனை முறைக்க " தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்டா அத ஏத்துக்க தெரியணும். இவ்ளோ தூரம் வளர்ந்து என்ன பண்றது. .இதுகூட தெரியல. உங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா, ஏன் மத்தவங்களுக்கு எல்லாம் வராதா?..நான் எல்லாரையும் மாதிரி நீங்க திட்டுனதும் பயந்து போய்டுவேன்னு நினைச்சீங்களா? அதெல்லாம் என்கிட்ட ஒர்க் அவுட் ஆகாது. எனக்கு கோபம் வந்தா…" என அவள் பேசிக்கொண்டே போக அவளை நோக்கி ஆதி முன்னேற அவளோ பேசிக்கொண்டே பின்னால் நடந்துகொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் சோபாவில் இடித்து அவள் அவனை பார்த்தவாறே நிற்க நேருக்கு நேராக பார்த்தவன் சொல்லு என்பது போல பார்க்க திவியோ கெத்தை விடாமல் “எனக்கு கோபம் வந்தா அவ்வளோதான், உங்களுக்கு 10 நிமிஷம் கோபம் இருக்குமா. .எனக்கெல்லாம் 10 மணி நேரம் கூட இருக்கும். நானா அதைவிட்டு வந்தாதான் உண்டு… அந்த நேரத்துல யாரும் என்ன கண்ட்ரோல் பண்ணமுடியாது.” என்க ,

ஆதி “பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என்கிட்டேயே வாய்ஸ் ரைஸ் பண்றியா. …சொல்லு கோபம் வந்தா என்ன டி பண்ணுவ.” என்று கேட்டவனின் கேள்வியில் இருந்தது கோபமா, வெறுப்பா, தெரிந்துகொள்ளும் ஆர்வமா என அறியமுடியவில்லை. …ஆனால் அவளால் சாதாரணமாக பதில் சொல்லமுடியவில்லை. அவளை முறைத்தவனை பார்த்து அவள் வாய் தந்தியடிக்க அவனோ விடாப்பிடியாய் சொல்லுடி கோபம் வந்தா என்ன பண்ணுவ என அதிலேயே நிற்க திவி “புல்லா சாப்பிட்டு நல்லா தூங்கிடுவேன்.” என வேகமாக அவள் சொன்னதை கேட்டவன் அடுத்த நொடியில் சிரித்தேவிட்டான்.

திவியோ சீரியஸ்ஷாக "உண்மையாதான், பொதுவா கோபம் வராம பாத்துக்குவேன். கொஞ்சமா கோபம் வந்தா என் மைண்ட்ட வேற எதுக்காவது மாத்திக்குவேன், இல்ல தப்புன்னா அவங்களுக்கு புரியவைக்க பாப்பேன். பட் ரொம்ப எஸ்ட்ரீம்ல கோபம் வந்திட்டா அவ்வளோதான் அந்த இடத்துல இருக்கமாட்டேன். அங்க நான் இருந்தா என் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியாதுனு எனக்கு தெரிஞ்சுட்டா அனாவிசயமா பேசி கஷ்டப்படுத்தறத விட்டுட்டு பேசாம போயி புல்லா சாப்பிட்டு தூங்கிடுவேன்… அப்போ நான் எவ்வளோ சாப்பிட்டாலும், எவ்வளோ நேரம் தூங்கினாலும் யாரும் என்ன அசைக்க முடியாது. அப்படி ஒரு தூக்கம்…அதுதான் அவங்களுக்கு நல்லது… இல்லை அவங்க என்கிட்ட காலி என அவள் கூறியதை கேட்டு அனைவரும் சிரிக்க ஆதியோ அவள் தலையை மெல்லமாக தட்டிவிட்டு உண்மையாவே நீ லூசுதான். எப்படித்தான் இப்படி இருக்கியோ என சிரித்துக்கொண்டே கேட்க அவளும் "manufacturing defect " என கண்ணடித்துவிட்டு சென்று ஸ்வீட் கொண்டுவந்து

“சிரிச்சிட்டீங்க. …கோபம் போய்டிச்சுல…ப்ளீஸ் ஸ்வீட் கொஞ்சம்” என கொடுத்தாள்… அவனும் அதை எடுத்துக்கொண்டு “தேங்க்ஸ்” என கூற அவளோ "இல்லாட்டி அத்தை என்ன சபிச்சிடுவாங்க… உன்னால தாண்டி என் பையன் ஏதும் சாப்பிடாம போய்ட்டான்னு ஏதோ பட்டினிலே வாடினமாதிரி பில்ட்டப் பண்ணி திட்டுவாங்க. அதுக்காக தான் குடுத்தேன். மத்தபடி எனக்கெல்லாம் குடுக்கிற ஐடியா இல்லை பா " என கூற அவளை ஆதி முறைக்க, இப்பொது அடிக்கவருவது சந்திராவின் முறையாயிற்று. அவளிடம் இருந்தும் தப்பி அவள் வீட்டிற்கு ஓடியேவிட்டாள்.

14 - மனதை மாற்றிவிட்டாய்

அனைவரும் இரவு உணவு வேளையில் இருக்கும்போது சந்திரா கூறினார். "என்னங்க, நாளைக்கு ஈஸ்வரி அண்ணி, சோபனா, சுரேந்தர், சுபத்ரா எல்லாரும் வரங்களாம். அண்ணா மட்டும் ஊர்ல வேலை இருக்குன்னு அப்புறம் வரேனிருக்காங்க. சந்திரசேகரும் “ஓ. … அப்படியா, இனி மேடம நாளைல இருந்து புடிக்க முடியாது. அண்ணா பேமிலி எல்லாரும் வராங்க…” என அவரும் சிரித்துக்கொண்டே ஆமோதித்தார்.

சந்திரமதியின் பெற்றோர் மாணிக்கம் - செல்லத்தாய்க்கு 2 பிள்ளைகள் பெரியவன் பரமசிவம், அடுத்து சந்திரமதி. ஊரில் பண்ணை நிலம், தோப்பு என ஓரளவிற்கு செழிப்பாக வாழ்ந்தவர்கள் தான். சந்திரசேகரும் அதே ஊர் தான். இவரின் பெற்றோருக்கு நல்ல குணவதி மருமகளாக கிடைத்தால் போதும் என எண்ணியதால் அவர்கள் அளவிற்கு சொத்து இல்லாவிடினும் சந்திரமதியை மருமகளாக்க எண்ணினார். 2 குடும்ப பெரியவர்களும் பண்பு, பாசம் என ஒரே போல எதிர்பார்க்க அந்த வகையில் எந்த குறையும் யாருக்கும் இல்லை. சந்திரசேகர், சந்திரமதி திருமணம் சிறப்பாகவே நடந்தது. சேகரின் பெற்றோர்கள் அனு பிறந்த 2 வருடத்தில் அடுத்தடுத்து உயிர் பிரிந்தனர்.

சந்திரமதீயின் பெற்றோர்கள் தான் இனி குடும்பத்தில் மூத்தவர்கள் என்ற முறையில் சேகரும் அனைத்திற்கும் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க, மருமகன் மேல் எப்போதும் ஒரு மரியாதை, பெருமை. இப்போதும் ஊரில் மாணிக்கம் - செல்லத்தாயுடன் தான் பரமசிவமும் அவர்கள் குடும்பமும் வசித்துவருகின்றனர்.

அண்ணன் - பரமசிவம் ஒரு வாயில்லா பூச்சி. அம்மா, அப்பா, தங்கை இவர்கள் தான் உலகம். இப்பொது மனைவி மக்கள். அவராக எதையும் முடிவெடுத்து பேசமாட்டார். சண்டை வேண்டாம், பிரச்சனை வேண்டாமென ஒதுங்கியே வாழ்வார். பிறர் உடமைக்கு ஆசைப்படமாட்டார். ஏன் தன்னுடைதையே பிறருக்கு விட்டுக்கொடுத்துவிடுவார். கடிந்து பேச தெரியாது. தங்கை மீது மிகுந்த பாசம். பரமசிவத்தின் மனைவி ஈஸ்வரி அப்படியே கணவருக்கு நேர் எதிர். எப்போதும் பணம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். பிறர் உடமை என்றாலும் தனக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா? என ஆசைகொள்ளுவாள். சொற்கள் ஈட்டிகளாக பாயும். எவ்வளவு செய்தாலும் போதாது என்ற குணம். ஒருவகையில் சந்திரசேகருக்கும் தூரத்து உறவு முறைதான். கணவன் மனைவி இருவர் வகையிலும் உறவு அதோடு நல்ல பணம் செழிப்பாக வாழ்வதால் ஈஸ்வரி இவர்களிடத்தில் அதிக உரிமை என்று இங்கே வந்து , அதிகாரம் செய்வாள். அவர்களுக்கு மகன் சுரேந்தர், 2 மகள்கள், மூத்தவள் சோபனா, இளையவள் சுபத்ரா. சுரேந்தர் மென்பொருள் துறையில் 5 வருடம் வேலை பார்த்துவிட்டு, கொஞ்ச நாட்கள் கழித்து பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்ற நோக்கில் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டான். சிறு வயது முதல் தாத்தா பாட்டியுடன் வளர்ந்ததால் அம்மாவின் பணத்தாசை, அடுத்தவரை மனம் நோக பேசுவது என தவறான போதனைகள் அவனுக்கு முழுமையாக இறங்கவில்லை. அவனும் அந்த வகையில் தந்தையை போலவே இருந்தான். பிறர்க்கு விட்டுக்கொடுத்துவிடுவான். போனால் போகட்டும் என்ற ரகம்… ஆனால் தனக்கு பிடித்தவைகளை பிறர்க்கு கொடுக்கும் அளவிற்கு இல்லை. ஆனால் மகன் தன் போல இல்லை என்பதில் ஈஸ்வரிக்கும் கொஞ்சம் மனவருத்தம் தான். இப்படி இருந்தால் எப்படி பிழைப்பது என அங்கலாய்த்துக்கொள்வாள். அதனாலே அடுத்து பிறந்த மகள் சோபனாவை இவர்களுடன் இருக்கவிடாமல் அவளின் பிறந்தகம் அனுப்பி படிக்கவைத்தாள். அதற்கு மூத்தவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் சின்ன அண்ணாவிற்கு குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி அவர்கள் வளர்க்க ஆசைப்படுகிறார்கள் என கூறி அனுப்பிவிட்டாள். அவர்களிடம் இருக்கும் சொத்தும் வேண்டும் என்ற நப்பாசையில். சோபனாவும் அம்மாவிற்கு 2 மடங்காக வளர்ந்தாள். பிடிவாதம், பொய், நடிப்பு, தனக்கு வேண்டும் என்றால் எப்படியும் அடைந்தே தீருவாள். தான் அழகி என்ற கர்வமும் கூட. அவளது ஒப்பனைகளும் அதற்கு உதவின. அனைவரும் பொறாமை கொள்ளும் அளவிற்கு தான் எப்போதும் இருக்கவேண்டும் என எண்ணுவாள். பணமும் நீராய் வாரி இறைப்பாள். ஆதாயம் இல்லாமல் யாரிடமும் பேசக்கூட மாட்டாள். யாரையும் மதிக்கமாட்டாள். முதல் பேத்தியின் இந்த குணங்களை பார்த்த மூத்தோர்கள் அடுத்து பிறந்த சுபத்தராவை தங்களுடன் தான் வளர வேண்டும் என கூறிவிட்டனர். ஈஸ்வரியும் ஏதும் செய்ய முடியவில்லை. சுபத்ரா மூத்தவளுக்கு நேர் எதிராக வளர்ந்தாள், படிப்பு, விளையாட்டில் சுட்டி எப்போவும் முதல் தான். அமைதி, பொறுமை, பாசம், அதிர்ந்து பேச தெரியாதவள். இப்பொது கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கிறாள்.

இவர்கள் நால்வரில் ஈஸ்வரி திட்டம் ஆதியை எப்படியாவது சோபனாவிற்கு திருமணம் செய்துவைக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் சொத்து வெளியே போகாது என்ற எண்ணம். சோபனாவை அதற்கு தயார் செய்தாள். அவளும் தன் அழகு, பிடிவாதம், திறமை அனைத்திலும் கொண்ட கர்வத்தால் ஆதியை என்னை சுற்றி வரவைக்கிறேன். என கூறி கிளம்பிவந்துவிட்டாள். சுரேந்தர், சுபத்ராவிற்கு அத்தை மாமா அவர்கள் குடும்பத்தை பார்க்கும் ஆவல். அதே போல திவியையும். 2 முறை இங்கே வந்திருந்த போதும் நல்ல பழக்கம். சுபத்ராவிற்கு திவி போல ஒரு சகோதரி தனக்கு வேண்டும் என்ற ஆவல், பாசமாக, வம்பிழுக்க, தனக்கு அறிவுரை கூற, அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்ற ஆசை. இவை அனைத்தும் சோபனாவிடம் எதிர்பார்த்து அவளுக்கு கிடைக்காமல் போனது. சுரேந்தர்க்கும் திவியின் மேல் ஒரு ஈர்ப்பு, பெரிதாக எதையும் வேண்டும் எனும் ஆசை கொள்ளாதவனுக்கு திவியின் பேச்சு, விளையாட்டு, அக்கறை என அனைத்திலும் கவரப்பட்டான். அடுத்து முறை எல்லாம் அவளை பார்ப்பதற்காகவே இங்கே வருகிறான். அவளும் சுந்தருடன் நல்ல நட்புணர்வில் பழகினாள்.

ஆதியை விட 4 மாதம் பெரியவன் சுரேந்தர். அவனும் சுரேந்தரும் ஒரே ஊரில் பள்ளியில் தான் படித்தார்கள். 2 பாட்டி தாத்தா வீட்டிலும் இருந்து வளர்ந்தவன் ஆதி. அதனால் செல்லம் அதிகமும்கூட. பாசம், பரிவு, பண்பு எந்த அளவிற்கோ அதே அளவு கோபம், பிடிவாதம், ஆளுமை அனைத்தும் கலந்த வாரிசாக திகழ்ந்தான். படிப்பு, விளையாட்டு என அனைத்திலும் ஆதி முதலிடம். வீட்டிலும் ஏதேனும் என்றால் ஆதிக்கு தான் முதலில். அதனால் ஈஸ்வரிக்கு தான் கோபம் வரும். “அவனே அப்போப்போ தானே கண்ணு வாரான். அதனாலதான், நீ பெரியவன் தானே” என பாட்டி கேட்க சுரேந்தர் அவைகளை பெரிதாக கண்டுகொள்ள மாட்டான். ஆனால் அவன் ஆதியுடன் நெருங்கியும் பழகமாட்டான். இவனின் இந்த செய்கையோ, இல்லை இவர்களின் குணங்களோ இருவரும் ஒருவரிடம் ஒருவர் அதிக உரிமை எடுத்துக்கொண்டதில்லை, எட்டியே நின்றனர். ஆனால் இருவருக்கும் மற்ற அனைவரிடமும் அதிக அன்பு. சுரேந்தரும் சந்திரா அத்தை, சேகர் மாமா, அபி, அமுதா, அனு என அனைவரிடத்தும் ஒட்டுதலோடு இருப்பான். ஆதியும் சுபத்ரா, பரமசிவம் மாமா, தாத்தா, பாட்டி என அனைவரிடத்தும் நன்றாக பழகுவான். ஏனோ ஈஸ்வரி, சோபனா இவனை என்னதான் தங்கினாலும் இருவரிடமும் அவனால் ஒட்ட இயலவில்லை. அவர்களின் குணங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆதியையும், அவன் சொத்தையும் அடையறதுக்கு எனக்கு எதிரா யாரவது குறுக்க வந்தா அவங்கள என்ன வேணும்னாலும் பண்ணுவேன் என்ற நோக்கில் சோபனா, திவியை தன்னுடையவள் ஆக்கிக்கொள்ள என்னும் சுந்தர், திவி தனக்கு மட்டுமே என அவளோடு கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதி, இதை எதையும் அறியாமல் உறக்கத்திலும் ஒரு இன்முகத்தோடு இருக்கும் திவி. இதில் யாருக்கு ஏமாற்றம். யார் ஆசை நிறைவேறுமோ விதியிடம் தான் பதில்.

15 - மனதை மாற்றிவிட்டாய்

இரவு தூங்க செல்ல ஆதியின் அறைக்கு வந்த சந்திரா “ராஜா, தூங்கப்போறியா?” என வினவியபடி வந்தார்.

ஆதி “வாங்க மா, இல்லமா சும்மா பால்கனில நடந்திட்டு வந்தேன். ஏனோ தூக்கமே வரலை.”:

“ஆமாமா, தூக்கம் இப்போதைக்கு வரதுதான். ஆனா வேற வழி இல்லையே. கனவு வரணும்னா தூங்கித்தானே ஆகணும்.” என குறும்புடன் கேட்க ஆதி ஒரு நொடி தாயை பார்த்தவன்

“கனவா? அது யாருக்காக மா ?” என்றான் புரியாதமாதிரி ஆனால் தெரிந்துகொள்ளும் ஆவலில்.

“டேய், நான் உன்னோட அம்மாடா, எனக்கு புரியும் உன் மனசு என்னன்னு. உண்மைய சொல்லு நீ திவிய நினைக்கலைனு?” என வினவ இவனோ சிரித்தே விட்டான்.

“அம்மா, நீங்க செம ஷார்ப்… உண்மை தான்மா அவளை தான் நினைச்சிட்டுஇருந்தேன். அவளை தான் லவ் பண்றேன்.” என அவன் வாய் வார்த்தையில் கேட்டதும் சந்திராவிற்கு சந்தோஷம் நிலைகொள்ளவில்லை.

தன் மகனை உச்சிமுகர்ந்து விட்டு "ரொம்ப சந்தோசம் ராஜா. எப்போப்பாரு உங்க சண்டையை பாத்து கடவுளேனு இருந்தது… இப்போ நீயே அவளை பிடிச்சிருக்குனு சொன்னதும் தான் எனக்கு நிம்மதி …எப்போ கல்யாணத்த வெச்சுக்கலாம் சொல்லு…"என அவனை அவசரப்படுத்த

ஆதி “அம்மா, வெயிட், வெயிட்,… நான் இன்னும் அவகிட்டேயே பேசல. எனக்கும் அவளுக்கு எப்போவும் சண்டைதான். அவளும் அந்த மாதிரி எல்லாம் நினைச்சிருக்கமாட்டா. கொஞ்ச நாள் போகட்டுமா, அவளுக்கா புரியனும் அவ மனசுல நான் இருக்கேனு. அதுக்கப்புறம் தான் கல்யாணம்…நானே சொல்றேன். ஆனா திவி தான் என் வெய்ப். அத நான் டிசைடு பண்ணிட்டேன்.” என அவன் கூற

“சரி ராஜா, பொண்ணு திவிதானு தெரிஞ்சிடிச்சு. எங்க எல்லாருக்கும் எப்போவுமே திவியை பிடிக்கும். அதனால பிரச்சனை இல்ல. நீ உன் விரும்பம் போல எப்போ கல்யாணம்னு சொல்லு. உடனே பண்ணிடலாம்.” என்றார்.

“கண்டிப்பாமா, ஆனா எப்படிமா கரெக்டா கண்டுபுடிச்சீங்க… அர்ஜுனும் இன்னைக்கு இதேதான் கேட்டான். அவன்கிட்டேயும் இன்னைக்குதான் சொன்னேன்.” என அவன் கேள்வியெழுப்ப

“ஏன்னா, நீ அவ்வளோ அப்பட்டமா உன் முகத்துல, செய்கையிலே காட்டற. அவகூட சண்டைபோட்டாலும், அடிச்சாலும் எல்லாத்துலயும் ஒரு உரிமையும், அதீத அன்பும் தான் தெரியுது.” என விளக்க அவன் முறுவலித்து விட்டு

"ம்ம்ம். …அது சரிம்மா, என்கிட்ட நீங்க, அர்ஜுன், வீட்ல யாருமே அவளை பத்தி இத்தனை வருசத்துல சொன்னதே இல்லையே ஏன்? நானும் அக்கா கல்யாணத்துக்கு வந்திருந்த போது அவள பாத்தமாதிரி இல்லையே?"என கேட்டான்.

சந்திராவும் “என்னனு சொல்றது, அபி கல்யாணத்தப்போ அவங்க தாத்தா இறந்துட்டதால ஊருக்கு போய்ட்டா. அவங்க வீட்ல இருந்து யாரும் வரமுடில. அவளுக்கு ஊரு, வயல், தாத்தா, பாட்டின்னா ரொம்ப புடிக்கும். தாத்தா இல்லேனதும் புள்ளை சோந்து போய்ட்டா.”

"உன்கிட்ட அவளை பத்தி என்னனு சொல்ல சொல்ற. …நீ டெய்லியும் பேசுனாலும் என்ன ஏது, சாப்டாச்சு, தூங்கியாச்சு, வேலை இதப்பத்தி பேசிட்டு விட்ருவ. பொதுவா உன்கிட்ட சொந்தகாரங்கள பத்தி பேசுனாகூட காதுகொடுத்து கேக்கமாட்ட. இதுல திவி பத்தி என்ன சொல்ல சொல்ற.

உனக்கு அதிகமா பேசுனா பிடிக்காது. அவ பேச ஆரமபிச்சா நிறுத்தமாட்டா.

நீ பழக்கமில்லாதவங்ககிட்ட அனாவிசயமா பேசமாட்டா. அவ புதுசா யாராவது பாத்தக்கூட வருஷக்கணக்குல பழகுன மாதிரி பேசுவா.

உனக்கு விளையாட்டுக்கு கூட பொய் சொன்ன பிடிக்காது. அவ விளையாட்டுக்குனாலும் பொய் மூட்டையையே அவுத்துவிட்டு கதை சொல்லுவா.

நீ சட்டுன்னு கோபப்படுவ. அவ வம்பிழுப்பா, கொஞ்சநேரம் சண்டைபோடுவா, ஆனா கோபப்பட்டு கத்தி, பேசாம இருக்கறது எல்லாம் இதுவரைக்கும் பாத்ததேயில்லை.

உனக்கு ஒன்னு வேணும்னா எப்படியும் பிடிவாதமா இருந்து நேருக்கு நேர் சண்டை போட்டாவது அடைஞ்சிடுவ. அவ சாதாரணமான்னா விட்டுகுடுத்திடுவா, அதையும் மீறி வேணும்னா அத யாரையும் கஷ்டப்படுத்தாம, சண்டைபோடாம, அவங்கவங்களுக்கு தகுந்த மாதிரி பேசியோ, பொய் சொல்லியோ, சில உண்மையான விஷயத்தை மறைச்சோ அமைதியா அத செஞ்சிடுவா. அதுக்கப்புறம் நமக்கு உண்மை தெரியவந்தாலும் இவ மேல கோபப்பமுடியாது. கண்டிப்பா அந்த அளவுக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயம் அதுல இருந்திருக்கும். அவ பேச்சு, சொல்ற பொய்னால யாருக்கு இதுவரைக்கும் எந்த பாதிப்பும் இருந்ததில்லை.

இப்படி எல்லாமே உங்க 2 பேருக்கும் ஆப்போசிட்டா இருக்கும் போது அவளை பத்தி உன்கிட்ட என்ன சொல்லமுடியும் சொல்லு." என்க அவனும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தான்.

"ஆனா ராஜா, திவி எப்போவுமே சிரிச்ச முகம், அவ அழுது, புலம்பி நான் பாத்ததே இல்ல… அவங்க அம்மா எல்லாருக்கும் அவ கல்யாணத்த நினச்சு கொஞ்சம் கவலைதான். அவனால இதுவரைக்கும் நாங்க தல குனியரமாதிரி ஏதும் நடந்ததில்ல. எப்போவும் பெருமைதான். அவளுக்கு ஜாதகம் பாத்தபோது கூட இவளை பத்தி எல்லாமே பெருமையா சொல்லிட்டு, எப்போவுமே அவ சிரிச்சிட்டே மத்தவங்கள சிரிக்க வெச்சுட்டேதான் இருப்பா. ஆனா அவளோட கல்யாண வாழ்க்கையில எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்கோங்க, அதுக்கப்புறம் இவளோட இந்த சிரிப்பு எந்த அளவுக்கு இருக்கும் ஆண்டவனுக்கு தான் தெரியும்ன்னு சொல்லிட்டாங்களாம். அவளுக்கு அவளை புரிஞ்சுக்கிட்டமாதிரி பையன வரணும். .எல்லா சந்தோஷத்தையும் குடுத்த கடவுள் கல்யாண விசயத்துல எல்லா கஷ்டத்தையும் வெச்சுட்டாரோன்னு நானும், அப்பாவுமே அத நிறைய தடவ நினைச்சு கவலைப்பட்டிருக்கோம். "

ஆதி “ஏன்மா , நான் அவளை பத்திரமா பாத்துக்கமாட்டேன்னா ? ஒருவேளை நான் அவளை அடிச்சதால, சண்டைபோடறதால அவளை நான் கஷ்டப்படுத்துடுவேன்னு நினைக்கிறீங்களா? என்னால அவ விசயத்துல நார்மலா இருக்கவோ, எந்த விஷயத்தையும் சாதாரணமா எடுத்துக்கவோ முடிலமா. அவளை யாரும் தப்பா ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதுனு நினைக்கிறேன். அவ கொஞ்சம் முகத்தை சுழிச்சாலும் என்னால தாங்கிக்க முடியல. சாய்ந்தரம் பாத்தீங்கள்ல, அசால்ட்டா வண்டி இடிச்சிருந்தா என்ன செத்திருப்பேன், நீங்க சந்தோசப்படுவீங்கன்னு சொல்றா. எனக்கு உண்மையாவே ஒரு நிமிஷம் அடிபோய்டிச்சு. அவ இல்லாம என்னால நினச்சு பாக்கமுடிலமா…அதான் அடிச்சிட்டேன். ஆனா அடிவாங்கிட்டு அவ நிக்கறது பாக்க என்னால முடியல. ஒருவேளை இருந்தா அடிச்ச நானே அவளுக்கு ஆறுதல் சொல்ல போய்டுவேன். அவ விளையாட்டுக்கு பேசுறேனு திரும்ப உளறுவா. அதனாலதான் அங்க இருந்து நான் வந்துட்டேன். இருந்தாலும் என்னால 5 நிமிஷம் மேல என்னால இருக்கமுடியாமத்தான் கீழே வந்தேன். அந்த கொஞ்ச நேரத்துல நான் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்மா. அவ மேல எனக்கு எவ்வளோ காதல்னு. நான் எப்போவும் அவகூட இருக்கணும்னு. அவளை பிரியமா சந்தோசமா பாத்துக்கணும்னு. அவளை யாருக்கும் யாருக்காகவும் விடமாட்டேன்கிற எண்ணம் எல்லாம் எனக்கே புரிஞ்சது. கொஞ்ச நாள்மா, அவளுக்கு என்னோட காதல் புரிஞ்சிட்டா எல்லாமே சரி ஆய்டும்…” என அவன் தனக்கு அவள் மீதான நேசம் பற்றி கூற

சந்திராவும் "தெரியும் ராஜா… அவளை நீ பத்திரமா பாத்துக்குவ…உன் காதலையும், கோபத்தையும் அவ சரியா புரிஞ்சுக்கிட்டா போதும், எந்த பிரச்னையுமில்ல…அவளும் உன்ன விட்டு போகமாட்டா. நீயும் எடுத்த முடிவுல மாறமாட்ட… நீங்க 2 பேரும் எனக்கு 2 கண்ணு மாதிரி. நீங்க சந்தோசமா வாழறத நான் கண் குளிர பாக்கணும். அவ்வளோதான் என் ஆசை…சீக்கிரம் கல்யாணத்த எப்போ வெக்கலாம்னு சொல்லு… நீ ரொம்ப நாள் அவளை விட்டிட்டு தாக்குப்புடிப்பேன்னு தோணல… பாப்போம் " என அவர் சிரித்தபடி கூறி முடிக்க

அவன் பெருமூச்சுவிட்டு “என்னை எல்லாரும் கவனிச்சு அவளை நான் லவ் பண்றத கன்பார்ம் பண்ணிட்டீங்க. ஆனா அத தெரிஞ்சுக்கவேண்டியவ இன்னும் வளராம நண்டு சுண்டுகளோட விளையாடிட்டு, என்கிட்ட சண்டைபோடறது, பழிவாங்கிறதுன்னு சுத்திட்டுஇருக்கு…எப்போ அவளுக்கு என் லவ் புரிஞ்சு, கல்யாணம் பண்ணி… என இழுத்தவன் என் நிலைமைதான் பாவம். அந்த அறுந்த வாலு வெச்சுகிட்டு என்ன பண்ணப்போறேனோ?” என சொல்ல அவன் தாயோ சிரித்துவிட்டு அது உண்மைதான்…சரி நீ தூங்கு… நானும் போறேன்."என கூறிவிட்டு சென்றார்.

படுக்கையில் விழுந்த அவன் “அவளுக்கு என்ன, நல்லா தூங்கிருப்பா…நான்தான் இங்க அவளை பத்தி நினச்சு உருகிட்டுஇருக்கேன். ராட்சஸி, எப்போடி என்கிட்ட வரப்போற.” என்று அவளை நினைத்து கொண்டே உறங்கினான்.

16 - மனதை மாற்றிவிட்டாய்

பொழுது விடிய அனைவரும் தங்களது அன்றாட பணிகளை தொடர, விசிலடித்துக்கொண்டே கீழே வந்தான் ஆதி, இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் கண்கள் சிவந்திருந்தது அதையும் தாண்டி மகிழ்ச்சியுடன் இருந்த அவன் கண்களை பார்த்தனர் அவனது பெற்றோர்கள்.

சந்திரசேகர் “என்ன ஆதி, நல்லா கனவுல ரொமான்ஸ்ஸா? எந்திரிக்க மனசே வரலையா? மார்னிங் ஜாக்கிங் கூட போகல?” என குறும்புடன் வினவ இவன் தாயை பார்க்க அவள் சிரிப்பை கண்டவனுக்கு புரிந்துவிட்டது அம்மா தந்தையிடம் தன் காதலை பற்றி கூறிவிட்டார் என்பது புரிந்தது.

இவனும் சிரித்துக்கொண்டே தானும் சளைக்காமல் “ஆமப்பா, உங்க மருமக நேர்ல தான் என்ன கத்தவெக்கறான்னா கனவுல கூட இம்ச தான், சொல்ற பேச்ச காதுலையே வாங்குறது இல்ல. அவகிட்ட லவ் சொல்லி கரெக்ட் பண்ண ஐடியா குடுங்க.” என கேட்க

சந்திரசேகர் வாய் விட்டு சிரித்துவிட்டு “பாத்தியா மதி, அப்பன்கிட்டேயே ஆள கரக்ட் பண்ண ஐடியா கேக்குறான் புள்ள. உனக்கு ரொம்ப தைரியம் தாண்டா.” என கூற

“எல்லாமே உங்ககிட்ட இருந்துதானே பா கத்துக்கிட்டேன், இதுக்கும் நீங்களே எனக்கு குருவா இருங்க.” என சிரிக்க

“அப்படிங்கிற, ஆனா என் மருமக அப்படி எல்லாம் நீ பேசுனா ஒதுக்கமாட்டாடா. பேசாம நாங்களே பொண்ணுக்கேட்டு மேரேஜ் பண்ணி வெச்சடறோம்… இல்லை உனக்கு தான் கஷ்டம். ரொம்ப நாளாகும் பாத்துக்கோ.” என அவர் கூற

"அப்படியெல்லாம் இல்ல, உங்க மருமக வேணும்னா லவ் அக்ஸ்ப்ட் பண்ணாம நீங்க சொல்றத மட்டும் கேக்கிறவளா இருக்கலாம். ஆனா என் பொண்டாட்டி என் பேச்ச கேப்பா. சீக்கிரமே அவள் என்னை புரிஞ்சுகிட்டு லவ் பண்ணத்தான் போறா. அதுக்கப்புறம் தான் கல்யாணம். " என அவன் வீரமாக கூற

"ஹா ஹா ஹா, பாக்கலாம். சரி ஆதி, நீங்க கல்யாணத்தை பத்தி சொல்றதுக்காகத்தான் வெயிட் பண்றோம். ரொம்ப நாள் ஆக்காம சீக்கிரம் அவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடு…எப்போப்பாரு சண்டைபோடுக்காம அவகிட்ட உன் மொறட்டுத்தனத்தை குறைச்சு ஹாண்டில் பண்ணு. இல்லை அவ நின்னுகூட கேக்கமாட்டா. தப்பிச்சு ஓடிடுவா. இது உங்க லைப் ஆதி, உன்ன அவளும் அவளை நீயும் அப்படியே ஏத்துக்கணும். அடுத்தவங்க சொல்லி வந்தா இந்த எமோஷனல் லைப்ல நிலை இருக்காதுங்கிறது என்னோட கருத்து. ஆனா உங்க இரண்டு பேர் மேலையும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நீ அவளை பாத்துப்பேன்னு. அவளும் உன்ன சந்தோசமா வெச்சுப்பான்னு. இருந்தாலும் எப்போ எது தேவைனாலும் சொல்லு, இல்ல நேரா மேரேஜ் பண்ணணும்னாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்ல. " என கூறினார்.

ஆதியும் “தேங்க்ஸ்ப்பா, அவ சம்மதத்தோட தான் நாங்க அந்த லைப்ல இணையணும்ப்பா, காதல் இல்லாம கல்யாணத்துல கொண்டுபோய் நிறுத்தமாட்டேன். அதுக்கப்புறம் அவ என்ன கண்டிப்பா நேசிச்சாலும் அது எனக்காக முழுமையா இருக்காது. இன்னும் சொல்ல போனா அதுவும் ஒரு வகையில கட்டாயப்படுத்துறதுதான். கல்யாணம் பண்ணியாச்சு இனி இதுதான் லைப் னு என் திவி என்ன ஏதுக்கக்கூடாதுப்பா. என் காதலையும், அவ மனசுல நான் இருங்கறதையும் அவ முழுசா உணர்ந்து வரணும். அதுக்காக தான் காத்திட்டு இருக்கேன்.” என அவன் உறுதியாய் கூற

சேகரும், மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கூறினர், “உன்ன நினச்சா பெருமையா இருக்குடா ஆதி, அவளுக்கு டைம் குடுத்து அவ மனசை அடையணும் அதுதான் முக்கியம்னு நினைக்கற, கல்யாணம் பண்ணிட்டு காதல் பண்ணாலும் அதைக்கூட ஒருவகை கட்டாயம்னு நினைக்கிற பாரு, உன்ன கட்டிக்க திவி குடுத்து வெச்சிருக்கனும்டா. சோ ஹாப்பி பார் யு மை சன்.” என தழுவி கொண்டார்.

[சிறு உறுத்தலோ, கவலையோ, கட்டாயம்கூட அவளுக்கு தரக்கூடாது என நினைத்தவனே பின்னாளில் அவளை காட்டாயத்திருமணம் செய்வான் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆதி உட்பட.]

அனைவரின் சம்மதமும் நேராக கிடைத்துவிட்ட ஆதிக்கு ஏனோ திவியை பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் அவள் வராமல் இருக்க, தாயிடம் வினவினான். அவளும் சிரித்துவிட்டு “அவளுக்கு வேலை இன்னைக்கு ரொம்ப இருக்காம்டா, காலைல சீக்கிரம் கிளம்பி போய்ட்டா. நீ தூங்கிட்டு இருந்த…” என கூற

அவனோ "சும்மா சொல்லாதீங்க அம்மா, என்ன ஒரு 10 மின்ஸ் கழிச்சு கீழே வந்தான். அவ்வளோதான். ஏதோ 2 மணி நேரம் தூங்கனமாதிரி பேசுறீங்க, ஏன் அவளால ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணமுடியதா? " என கேட்டவனிடம் “எதுக்கு அவ வெயிட் பண்ணுவா, உன்கிட்ட சண்டை போடவா?” என்க அவன் தாயை முறைக்க “ராஜா, நீதாண்டா அவளை லவ் பண்ற, அவ இன்னும் அந்த ஸ்டேட்ஜ்க்கு வரல, அதுக்கு நீதான் ஏதாவது பண்ணனும், ஏதோ உன் பொண்டாட்டி உன்ன பாக்கமா போன மாதிரி இவ்வளோ உரிமையா கேக்குற?”

“ஏன் அதுதான் உண்மைன்னு உங்களுக்கு தெறியாதா? சும்மா அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க…அவளை இன்னைக்கு வரட்டும்…” என்றவனிடம் வெளிப்பட்ட உரிமை உணர்வு மதிக்கு புரிந்தது. அவள் மேல சிறுகோபம் தன்னை பார்க்கவில்லை என்று அதை உணர்ந்தவர் “ராஜா, இதுக்கெல்லாம் அவகிட்ட கோவிச்சுகிட்டா என்ன பண்றது, அவ விஷயத்துல நீ ரொம்ப எமோஷனலா இருக்க, யோசிக்கறதே இல்ல. அவளுக்கு இன்னும் நீ காதலிக்கறதே தெரியாது. அப்புறம் எப்படி நீ எதிர்பாக்கலாம்…போ போயி கிளம்பு. சாயந்தரம் வந்திடுவா. எப்படியும் வம்பிழுக்க தானே போற. . அப்புறம் அடிச்சுக்கோங்க” என்க அவனும் ஆமோதித்து சிரித்து விட்டு கிளம்பினான்.

ஆதி, அர்ஜுன் அவனது தந்தை அனைவரும் மதியஉணவு வேளையில் வீட்டிற்கு வந்துவிட்டு கிளம்ப ஈஸ்வரியும் அவர்கள் பிள்ளைகளும் அந்த நேரத்தில் வந்தனர். அவர்களை வரவேற்ற அனைவரும் நலம் விசாரிக்க, “எப்படி இருக்க சோபி?” என மதி கேட்க "ம்ம்…"என்ற பதில் மட்டுமே வந்தது…வீட்டை பார்த்துக்கொண்டு இவர்களை கண்டுக்காமல் நின்றாள். அடுத்து சுபி, சுந்தர் வரவும் மதியும் இவளை விட்டுவிட்டு அவர்களிடம் அளவளாவிக்கொண்டு இருந்தாள். ஆனால் சேகருக்கு தான் கோபம்…இதை கவனித்த ஆதி தன்னிடம் வந்து “ஹாய் ஆதி, உங்கள பாக்கணும்னு தான் வந்தேன்…எப்படி இருக்க?” என்ற சோபனாவிடம் “ம்ம்…” என்று அதே பதிலை கொடுத்துவிட்டு திரும்பிவிட்டான்.

சேகர் மனதில் தன் மகனுக்கு சபாஷ் சொல்லிக்கொண்டான். உடனே திருப்பி கொடுத்துவிட்டான். ஆதி, அர்ஜுனை கண்ட சுந்தர் அர்ஜுனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு பேருக்கு ஆதியிடம் “எப்படி இருக்க ஆதி ?” என்றான். அவனும் “நல்லா இருக்கேன்,நீ எப்படி இருக்க?” வினவ

அவனும் “நல்லா இருக்கேன்…” என்றான். அவ்வளோதான் இருவரும்… ஆதி, சுபத்ராவிடம் திரும்பி “எப்படி இருக்க சுபி, காலேஜ் எல்லாம் எப்படி போகுது … என வினவ சூப்பரா இருக்கு மாமா. நல்ல இருக்கேன். இன்னும் ஸ்டடி லீவு அதான் ஓடிவந்துட்டேன். உங்க எல்லாரையும் பாக்கணும் போலவே இருந்தது.” என்றவளை பார்த்து சிரிக்க “சரி, நீங்க எல்லாரும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நான் ஆபீஸ் போயிடு வரேன்.” என்ற ஆதியிடம் ஈஸ்வரி “என்ன ஆதி, சோபி எல்லாம் வந்திருக்கா…நீ பாட்டுக்கு ஆபீஸ் போறேன்னு சொல்ற? நம்ம ஆபீஸ் தானே. யாரு கேக்கபோறாங்க. நீ இங்கேயே இரேன்.” என்றவரிடம்

ஆதி “ஏன், சோபனா வந்தா என்ன ஸ்பெஷல்? வீட்ல எல்லாரும் இருக்காங்கல்ல, அவங்களோட இருக்கட்டும். யாருக்காகவும் என் ப்ளன்ன சாஞ்சு பன்னிக்கமுடியாது. என் ஆஃபீசினாலும் நான் ஒழுங்கா இருக்கணும்னு நினைப்பேன்.எனக்கு என் வேலை ரொம்ப முக்கியம்.” என்றவன் "நான் போயிடு வரேன்மா, பை பா, ஈவினிங் வந்து பேசலாம் சுபி என ஈஸ்வரியும், சோபனாவை

தவிர்த்து மீதி அனைவரிடமும் பொதுவாக கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அவனிடம் யாரும் உரிமை எடுத்துக்கொள்ள முடியாது. அவனாக கொடுத்தாதான் உண்டு என்பதை அறிந்த அனைவரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் ஈஸ்வரி “பாவம் வேலைபோல.” என பொதுவாகவும், மகளுக்கும் சமாதானம் கூற அவளோ “என் ரூம் எங்க?” என கேட்டு யாரிடமும் எதுவும் கூறாமல் சென்று விட்டாள். பின்னாடியே ஈஸ்வரியும் சென்றார். சுபியும், சுந்தரும் அவளை விடுங்க என்றுவிட்டு அத்தை, மாமா, அமுதாவிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

அறையில் நுழைந்த சோபிக்கு கோபம் தலைக்கேறியது… அவனின் செய்கைகள் எரிச்சலை தந்தது.தன்னை மதிக்காமல் செல்வதா? நீ எனக்கு அவ்வளோ ஸ்பெஷல் இல்ல.உனக்காக என்

பிளானிங் மதிக்கமுடியாதுன்னு எப்படி மூஞ்சில அடிச்சமாதிரி பேசுறான்.அவனுக்கு இருக்கு. எனக்காகவே அவன் வாழ்க்கையே மாத்திரமாதிரி பண்றேன். என ஈஸ்வரியிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள். ஈஸ்வரிக்கும் அதே கோபம் இருந்தாலும் "சோபி, நீ பொறுமையா அவனை கவனி. அவன்கிட்ட நம்ம ரொம்ப கோபத்தை காட்டுனா வேலைக்குஆகாது. பையன் வீம்பு, பிடிவாதம். உன்ன கல்யாணம் பண்ணமாட்டேனு சொல்லிட்டான்னா அப்புறம் மாத்துறதுகஷ்டம். அவன் பேச்சுக்கு யாரும் எதிரே நிக்கமாட்டாங்க. நான் எப்படியாவது மதி மனசுல உன்ன அவங்க வீடு மருமகளாக்க கல்யாணத்த முடிவு பண்ண பாக்கிறேன்… அவன் அம்மா பேச்ச தான் கேப்பான். "

“ஒருவேளை அத்தை ஒத்துக்கலேன்னா?” என சோபி வினவ

“கண்டிப்பா ஒத்துக்குவா, அத நான் பாத்துக்கறேன். அவளுக்கு அவங்க அண்ணா மேல பாசம்.அங்க இங்கனு நான் சண்டை போட்டுஉங்க அப்பாவுக்கு சங்கடம் வரக்கூடாதுன்னு எதையும் செய்வா. இவ்வளோ ஏன், என்னை மதி புருஷன் சேகருக்கு துளி கூட புடிக்காது. ஆனாலும் என்னை எதுவும் சொல்லமாட்டாரு. ஒருதடவை மதிய வேலை வாங்குறேன்னு என்னை அந்தாளு குறை சொன்னான். நான் உங்க அப்பாகிட்ட சண்டை போட்டு கிளம்பிப்போக ட்ராமா பண்ணி மதிகிட்ட அழுது புலம்பி நடிக்க அவளும் இதுக்கு மேல அண்ணியை எதுவும் சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கிட்டா. அதுக்கப்புறம் மனுஷன் என்னை கண்டுக்கறதே இல்ல. அவருக்கு மதி சங்கப்பட்டா மனசு தாங்காது. அதனால இவ ஒருத்திய கல்யாணத்துக்கு ஒத்துக்கவெச்சுட்டா போதும். மத்த எல்லாரும் தானா அடங்கிடுவாங்க… ஆனாலும் இந்த ஆதி பையன் வெளிநாட்டுல படிச்சிட்டு வந்திருக்கான். ஏதாவது லவ், கிவ் இருக்குமோ?” என ஈஸ்வரியின் சந்தேகம் சோபனாவிற்கு சிரிப்பை வரவழைத்தது.

“யாரு, ஆதிக்கு லவ்வா, அட போம்மா… அவனுக்கு எல்லாம் பொறுமையா ரொமான்ஸ் பேசவே வராது. எப்பவும் கோபம், அதிரடி தான். தாத்தா பாட்டிகிட்ட ரொம்ப கண்டிப்பா, ஒழுக்கமா வளந்தவன். அவனை எல்லாம் சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். பொண்ணுங்களோட எந்த எதிர்பார்ப்பும் அவனுக்கா புரியாது. இவன்கிட்ட எந்த பொண்ணும் நிக்கமாட்டா. நல்லவ, அமைதியான பொண்ணுன்னா இவனோட கோபத்தை பாத்தே ஓடிடுவா. அதையும் மீறி எவளாவது வந்தா இவன் பணத்துக்காக தான். அந்த மாதிரி இருந்தா இவன் ஒத்துக்கமாட்டான். அதனால கவலையே படாதீங்க. அவனுக்கும் லவ்க்கும் ஏக தூரம்.” என அடித்து கூறினாள் திவி அவன் மனதை ஆட்சி செய்வதை அறியாமல்.

17 - மனதை மாற்றிவிட்டாய்

மாலையில் ஆதியும் அர்ஜுனும் வந்துவிட அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆதிக்கு திவி வந்துவிட்டாளா இல்லையா என எண்ணிக்கொண்டிருக்க சுந்தர் “அத்தை திவி எப்போ வருவா?” என கேட்க “ஆமா அத்தை, திவி இருந்தா இன்னும் ஜாலியா இருக்கும்” என சுபியும் வினவினாள். மதியும் “இன்னைக்கு வேலை இருக்குன்னா… ஒருவேளை நேரமாகுமோ என்னவோ. வந்துடுவா…” என்றார்.

“போன் பண்ணி கேளுங்க அத்தை” என்றான். சுந்தர்.

“வேலைல இருந்தா… எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும். அவ வரும்போது வரட்டும்” என கொஞ்சம் காட்டமாகவே ஆதி கூறினான்.

சுபி " நோ ப்ரோப்லேம் மாமா…அப்படியே இருந்தாலும் அவ சொல்லிடுவா… டிஸ்டர்ப்னு எல்லாம் நினைக்கமாட்டா… நீங்க கேளுங்க அத்தை?" எனவும் அனு, அம்மு அனைவரும் அதை ஆமோதிக்க அவளுக்கு கால் செய்ய போனார் மதி. அவரை தடுத்த சுந்தர் "நாங்க வந்தத சொல்லாதீங்க, சர்ப்ரைஷா இருக்கட்டும். " என கூறினான். அவரும் சிரித்துக்கொண்டே திவியை அழைத்து வந்துவிட்டாளா என விசாரித்து வீட்டிற்கு வரச்சொன்னார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ஆதிக்கு ஏனோ சுந்தர் மேல் கோபம். “இவன் என்ன அவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்கிறது… ஏதோ உரிமையா பேர சுருக்கி வேற கூப்பிட்றான்.” என கருவினான். அவளை தான் உட்பட அனைவரும் அவ்வாறு தானே கூப்பிடுகிறார்கள் என்பதை மறந்து.

வீட்டினுள் நுழைந்த திவி முதலில் சுபியை பார்த்தவள் “ஹே சுபி எப்போ வந்த, எப்படி இருக்க, காலேஜ் எப்படி போகுது, லீவ்வா? தாத்தா பாட்டி எல்லாரும் ஊர்ல எப்படி இருக்காங்க " என கேட்க அவளை கட்டிக்கொண்ட சுபி” மெதுவா ஒன்னு ஒண்ணா கேளு திவிக்கா. என்று அவள் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

ஒரு 5 நிமிடம் பொறுமையாக இருந்தவன் திவியின் முன்பே வந்தான். “ஹே… சுந்தர் நீங்களும் வந்திருக்கீங்களா?” என வினவ “போதும்… இவ்வளோ நேரம் சுபிக்கிட்ட ஊரு, தாத்தா, பாட்டி, ஆடு மாடு வரைக்கும் கேட்டுட்ட என்னை பத்தி ஒருவார்த்தை கேக்கல…இப்போ மட்டும் எதுக்கு பேசுற?” என்று பொரிய அவளோ “மறந்துட்டேன்” என தலையில் கை வைத்து முழிக்க அவளை முறைத்தான் சுந்தர்.

ஆதியோ "உனக்கு நல்லா வேணும்டா… என் செல்லம்… உன்ன எதுக்கு கேக்கப்போறா…ஆசைதான்… பல்பு வாங்கிட்டேள்ல போடா …"என மனதில்

விரட்டி கொண்டிருந்தான்.

திவியோ சுந்தரின் செயலில் மனதிற்குள் சிரித்துவிட்டு “சாரி சுந்தர், உண்மையாவே மறந்துட்டேன்.” என பாவமாக சொல்ல சுந்தருக்கு அவள் தன்னை மறந்துவிட்டாள் என நினைக்க கஷ்டமாக இருந்தது. சாரி எல்லாம் ஒன்னும் வேணாம். விடு. என்றுவிட்டு நகர்ந்து சென்றவனை பார்த்து சிரித்த திவி “ஆனாலும் சுந்தர், நீங்க இவ்வளோ மக்கா இருந்திருக்க வேண்டாம். சொன்னா அப்படியே நம்பிடுவீங்களா? சுபி இருக்கான்னா கண்டிப்பா நீங்க இல்லாம வரமாட்டான்னு எனக்கு தெரியாதா? அதுவுமில்லாம சார் ஒளிஞ்சிருந்த அழகு இருக்கே. சான்சலஸ்… இதுக்கு நீங்க இத்தனை பேருக்கு நடுவுல இருந்திருந்தாகூட கண்டுபுடிச்சிருக்கமாட்டேன். தனியா நின்னு தலைய தலைய நீட்டிக்கிட்டு…” என அவள் தலையில் அடித்துக்கொள்ள அனைவரும் சிரித்தனர்.

“அப்போ மறந்துட்டேன்னு பொய்யா சொன்னியா… பாவமா மூஞ்சிய வெச்சுகிட்டு நடிக்கறது… உன்ன நம்பியே ஏமாறோம்…எனக்கு நீ மறந்துட்டேனதும் உண்மையாவே கஷ்டமா இருந்தது…” என சுந்தர் கூற

“நானா நம்ப சொன்னேன். நீங்க வரத ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல… அதான் கொஞ்சம் கஷ்டப்படட்டும்னு பழிவாங்க கண்டுக்காம விட்டேன்.” என திவி கூற இப்பொது மன்னிப்பு கேட்பது சுந்தரின் முறையாயிற்று.

அவர்கள் நன்றாக உரிமையோடு பேசியதை சண்டையிட்டதை கண்ட ஆதிக்கு கோபம் தலைக்கேறியது. இருந்தாலும் அவன் மனம் “சரி விடு… அவ எல்லார்கிட்டயும் தான் இப்டி பேசுறா.” இன்னொரு மனமோ “ஆனா இந்த சுந்தர் பையன் அப்படியெல்லாம் பேசுற ஆள் இல்லையே. ஒருவேளை இவன் ஏதாவது ட்ரை பண்ரானோ. …எதுக்கும் இவனை கவனிக்கணும்…”

“தேவையில்ல… நம்ம செல்லம்ஸ்க்கு வாய் தானே தவிர உள்ள ஒன்னும் இருக்காது… அவ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா… இவன் என்ன பண்ணாலும் அவ ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும். சோ நோ வொரிஸ் நோ டென்ஷன் ஆதி…” என தனக்கு தானே கூறிக்கொண்டான்.

இருந்தும் அவள் பிறரிடம் அவ்வளோ உரிமை இவனுக்கு எரிச்சலாகவும் இருந்தது.

திவி ஈஸ்வரியிடம் “எப்படி இருக்கீங்க ஆண்ட்டி, ட்ராவல் எல்லாம் ஓகே தானே… அங்கிள் எப்படி இருக்காங்க…” என கேட்க

ஈஸ்வரி கால்மேல் கால் போட்டுகொண்டு “ம்ம்ம். …எல்லாம் நல்லாத்தான் இருக்கோம்… இப்போவாது கண்ணு தெரிஞ்சதே? பையன்கிட்டேயே பேசிட்டு இருந்தியே கண்டுக்காமாடியோனு நினச்சேன்.” என குத்தலாக அவளை மட்டம் தட்டி பேச அனைவரும் முகம் சுளித்தனர். சுந்தருக்கும் கோபம்,

ஆதிக்கோ சொல்லவே வேண்டாம். "இப்போ எதுக்கு இவ அவங்ககிட்ட போயி பேசுனா… இதெலாம் தேவையா? எல்லாம் சுந்தர்கிட்ட பேசுனதால வந்தது… " என திட்டிக்கொண்டிருக்க

திவியே “அட… உங்கள கண்டுக்காம இருக்க முடியுமா ஆண்ட்டி…நீங்க வந்ததும்தான் இந்த சோஃபா, ஏன் இந்த வீடே நிறைஞ்சிருக்கு. உங்கள கண்டுக்காம உங்கள தாண்டி போகமுடியுமா…” என ஈஸ்வரியின் உடல் வாகை வைத்து குண்டாக இருப்பதை குறித்து திவி கூற அனைவரும் மெலிதாக சிரிக்க "அதுவுமில்லாம, நீங்க என்கிட்ட பேச இவ்வளோ ஆர்வமா இருக்கீங்க… நெறைய நேரம் பேசவேண்டியது வரும்ல…அதான் உங்க 2 பிள்ளைங்ககிட்டேயும் ஒரு 5 நிமிஷம் பேசிட்டு வந்துட்டேன். " என அவள் கூறியது உன் மகனிடம் மட்டும் நான் பேசவில்லை என்பதை உணர்த்தியது.

ஆதிக்கு “அப்படி சொல்லுடி என் தங்கம்” என மனதில் பாராட்டிக்கொண்டான்.

ஈஸ்வரி “என் முன்னாடியே இப்படி என் பையன்கிட்ட இப்படி பேசுறீயே… உன்ன எல்லாம் என்ன சொல்றது? எல்லாம் வளத்தவங்கள சொல்லணும்” என

திவி “புரியல ஆண்ட்டி… உங்க பையன்கிட்ட பேசுனது தப்பா?..இல்லை உங்க முன்னாடி பேசுறது தப்பா?. …” என கேட்க அதை தொடர்ந்த திவி

எல்லார் முன்னாடியும் பேசாம மறச்சு தனியா பேசுற அளவுக்கு எதுமில்லை ஆண்ட்டி…

அப்படி பண்றதுதான் தப்புன்னு சொல்லி குடுத்திருக்காங்க.

ஒருவேளை அவரோட அதுவும் உங்க முன்னாடி பேசுறதே தப்புன்னா உங்க பையன நீங்க நம்பலேனு அர்த்தம்… உங்க வளர்ப்ப தப்புன்னு தானே அர்த்தம் …" என்றதும் ஈஸ்வரியும் பதில் கூற முடியாமல் திணறி போக ஈஸ்வரியை விடுத்து சோபனாவிடம் திரும்பிய

திவி “ஹாய், சோபனா, எப்படி இருக்க?” என வினவ இவளிடம் நான் பேசுவதா என்ற ரீதியில் அவள் பதில் கூறாமல் அலட்சியமாக கண்டுக்காமல் முகத்தை திருப்பிக்கொள்ள தன் மகளை மெச்சுதலாக பார்த்த ஈஸ்வரி திவியை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

ஆனால் திவியோ “ஐயோ, பாவம்… என்ன சுந்தர், என்ன சம்பாரிச்சு என்ன பிரயோஜனம், தங்கச்சிக்கு இப்படி ஒரு குறை இருக்கு… அத சரிபண்ணாம விட்டுட்டீங்களே. என்ன ஆண்ட்டி நீங்க கூடவா உங்க செல்ல பொண்ண கவனிக்க மாட்டீங்க.?” என கேட்க

ஈஸ்வரி “குறையா என்ன சொல்ற…?” என சீற “ஆமா சோபனாவுக்கு காது கேக்கல தானே. அதுக்கு தான் டாக்டர்கிட்ட போக சொல்றேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே… அதான் டவுட்” என கூற சோபனா “எனக்கு காது நல்லா கேக்கும்.” என்றாள்.

திவி “ஒ… சூப்பர்… பட் செலெக்ட்டிவ் அம்னீஷியா மாதிரி செலக்ட்டிவ் டெப் அந்த மாதிரியா… அதுக்கும் டாக்டர பாக்கணும்…ஏன்னா எப்படி இருக்கேனு நான் கேட்ட கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் வரலையே…” என அதே பிடியில் நிற்க சோபனா "பைன் " என்று விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

உடனே ஈஸ்வரியிடம் திரும்பிய திவி “என்ன ஆண்ட்டி, நீங்களாவது ஒரு 2 3 கேள்விக்கு தாக்குபுடிச்சீங்க. உங்க பொண்ணு ஒரே வார்த்தை, ஒரே கேள்வியில ஓடிட்டா… பாவம் ஆண்ட்டி இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் குடுங்க” என சீண்ட ஈஸ்வரியும் கோபமாக சென்றுவிட்டாள்.

அனைவரும் இவள் செயலில் சிரித்துக்கொண்டிருந்தனர். சுபி ஓடிவந்து "எங்க அம்மாவையும், அக்காவையும் ஹாண்டில் பண்ண உங்கனாலதான் முடியும்…"என்றாள்.

சுந்தரோ “சாரி, திவி அம்மா பேசுனதுக்கு…” என தலை குனிய “அவங்களுக்கான பதில நானும் தான் குடுத்திட்டேனே. நீங்க ஏன் சாரி சொல்றிங்க சுந்தர். அவங்க பேசுனத்துக்கு நீங்க எப்படி பொறுப்பாவிங்க…லீவ் இட்…” என கூல்லாக கூறினாள்.

சந்திராவோ “இருந்தாலும் திவி, பெரியவங்ககிட்ட நீ இப்படி பேசிருக்கக்கூடாது. நான் வளர்த்த திவி இப்படி எடுத்தெறிஞ்சு பேசமாட்டா…” என குறை கொள்ள,

திவியோ " அவங்க பெரியவங்க மாதிரி பேசலையே அத்தை… அவங்க பேசுனது சரின்னா உங்க முகம் ஏன் வாடிச்சு… அவங்கள நான் எப்போ எடுத்தெறிஞ்சு பேசுனேன். திருப்பி கேள்விதானே கேட்டேன்… அவங்க தான் பதில் சொல்ல முடியாம போய்ட்டாங்க. அவங்க கேள்வி சரினு சொல்லுங்க… நான் இப்போவே போய் மன்னிப்பு கேக்குறேன்… என்றவளை அவர்கள் பேசியது தவறு தான் என்பதை உணர்ந்த மதி பாவமாக பார்க்க திவி அவளை அணைத்துக்கொண்டு "நீங்க ஏன் பீல் பண்றீங்க… உங்க வளர்ப்பு தப்பா சொல்ற மாதிரி நான் எப்பவும் நடந்துக்க மாட்டேன் அத்தை. அவங்களோட அந்த கேள்விக்கு பதில் சொல்லாம இருந்த்திருந்தாதான் தப்பா போயிருக்கும். செய்யாத தப்புக்கு பழியும், தண்டனையும் ஏத்துக்காதேன்னு நீங்கதானே சொல்லிருக்கீங்க… அதான் நானும் பாலோ பண்றேன்.

ஒருவேளை உங்க அண்ணிய கேள்வி கேட்டுட்டேன்னு கோபமா? வேணும்னா நாளைக்கு சாயந்தரம் வரைக்கும் அவங்களுக்கு லீவு விடறேன்… கேட்ட கேள்விக்கு பதில தவிர அவங்கள எதுவும் சொல்ல மாட்டேன்…" என கூற மதியும் "உன் பதில் பத்திதான் எனக்கு நல்லா தெரியுமே. இப்போ சொன்னமாதிரி தானே பதில்? " என கேட்க திவி கண்ணடிக்க மதி சிரித்துவிட்டாள். திவி திரும்பி சந்திரசேகரை பார்த்து “சக்ஸஸ்” என்பது போல காட்டினாள். அவரும் தான். இதை அனைத்தையும் கவனித்த ஆதி சிரித்துக்கொண்டே அறைக்கு சென்றான்.

1 Like