மொழி பொய்த்த உணர்வுகள் – 17

மொழி பொய்த்த உணர்வுகள் – 17
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 17

மறுநாள் வழக்கம்போல சுடிதார் மட்டுமே அணிந்து பணிக்கு வந்த சௌபிக்கு சற்று தைரியம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அவளுக்குள் உதறல் இருந்து கொண்டே தான் இருந்தது. காலையிருந்து ஒருவித படபடப்போடே பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ருத்ரனிடமிருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. அதில் அவளுக்குள் மேலும் கலவரம் உண்டானது. அவளது கல்லூரி பிராஜெக்ட் தொடர்பாக எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதால், டீம்மில் இருக்கும் மற்றவர்கள் கூறிய சிறுசிறு வேலைகளை தான் செய்து கொண்டிருந்தாள்.

உணவு இடைவேளையில் நண்பர்கள் பட்டாளம் கூறிய பிறகு தான் கைப்பேசியின் மூலம் அவளது மின்னஞ்சல்களையே சரி பார்த்தாள். அவள் எதிர்பாராத விதமாக, அவளுக்கு ‘கோவை ஹூண்டாய்’ சார்பாக பணி நியமன உத்திரவு கடிதம் வந்திருந்தது. மற்ற மூவருக்கும் கூட வந்திருந்ததாக கூறினார்கள். இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மற்ற மூவருக்கும் மகிழ்ச்சி தந்த விஷயம், அவளுக்கு அச்சத்தை தந்தது. அவளது கலங்கிய முகத்தை பார்த்த நண்பர்கள் அதை தவறாக கணித்து, “என்னாச்சு? எங்க மூணு பேருக்கும் ஜாப் கன்பர்மேஷன் லெட்டர் வந்திருக்கே? உனக்கு வரலையா? ஏன் டல்லா தெரியுற?” என கேள்விகளை எழுப்ப,

“அது… வந்து… இல்லை வந்திருக்கு, வந்திருக்கு” என்றாள். சௌபியின் தடுமாற்றத்தை இன்ப அதிர்ச்சி என நினைத்தவர்களோ, “எங்களுக்கும் பாத்தப்ப செம ஷாக் தான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா பாரேன் டூ மந்த்ஸ் டைம் எப்போ வேணும்னா ஜாயின் பண்ணிக்கலாமாம். நாம எல்லாரும் இன்னைக்கே அக்னாலெட்ஜ் பண்ணிடலாம். சோ நமக்கு நோ பேஃர் வெல்” என மகிழ்ச்சியோடு செந்தில் கூற, வந்தனாவும் அப்துலும் ஆமோதித்தனர்.

சௌபியால் இவர்களோடு இணைந்து கொள்ள முடியவில்லை. இந்த இரண்டு நாட்களை எப்படி கடத்தலாம் என உருப்போடுபவளுக்கு, நிரந்தரமாய் ருத்ரனோடு வேலை பார்க்கும் வாய்ப்பு. கண்டிப்பாக அவளால் ஒப்புக்கொள்ளவே முடியாது. ஆனால், அதை இப்பொழுது இவர்கள் மூவரிடமும் கூறமுடியாது. ஆகவே, அமைதியாகவே இருந்தாள்.

மற்ற மூவரும் அன்றே வேலையில் இணைய விரும்புவதாக பதில் மின்னஞ்சல் அனுப்ப, சௌபி மட்டும் எப்படியாவது வேறு வேலை வாங்கி விட வேண்டும் என தீவிரமாக யோசித்தாள். இல்லையேல் அன்னையை சமாளிக்க முடியாதே!

மாலை வேலை முடியும் நேரத்திற்கு சற்று முன்பு ருத்ரனிடமிருந்து அழைப்பு வர, வேலை நியமனமான விஷயத்தில் புடவை விஷயத்தை மறந்திருந்தவளுக்கு, மீண்டும் அந்த எண்ணம் நினைவில் எழ பயம் கூடியது. ‘என்ன நினைத்துக் கொள்வான்? அவன் சொல்லியதை செய்யாமல் விட்டதற்கு கோபம் கொள்வானோ?’ என மனம் அடித்துக் கொள்ள மெதுவாய் அவனது அறை நோக்கி நடந்தாள்.

சௌபி ருத்ரனின் அறைக் கதவை ஒருமுறை தட்டியதுமே, “எஸ் கம் இன்” என பதில் வர, தயங்கி தயங்கி உள்ளே சென்றாள். காலையிலேயே அவள் புடவை அணியவில்லை என ருத்ரன் பார்த்துவிட்டான். அந்த கோபம் கொஞ்சம் குறையட்டும் என்றுதான் மாலை வரை அவளை அழைக்கவேயில்லை. கோபத்தில் அவளை எதுவும் நோகடித்து விடுவோமோ என்று பயந்தான் என சொல்லலாம்.

இப்பொழுதும் கோபம் முழுதாக குறையவில்லை என்றாலும் கொஞ்சம் முணுமுணுத்துக் கொண்டுதான் இருந்தது. அமைதியாக அவளது கோப்புகளை அவளிடம் தந்தவன், “பைனல் வெரிபிகேசன் பண்ணிட்டேன். உங்க பிராஜெக்ட்டை ஹெட்ச்.ஆர் டீமுக்கு அசோக் அனுப்பிடுவாங்க. மீதியை அவங்க பாத்துப்பாங்க. குட் ஒர்க். ஆல் தி பெஸ்ட்” என இயந்திரகதியில் கூறிவிட்டு அவ்வளவுதான் என்பதுபோல அவன் வேலையில் கவனம் செலுத்தி அவன் ஒரு ‘இன்டர்நேஷனல் உம்மணாமூஞ்சி’ என செயலில் நிரூபித்தான்.

முகம் விழுந்தே விட்டது சௌபிக்கு. கோபமாக எதையும் கேட்கவில்லை. ஏன் என்று விளக்கமும் கேட்கவில்லை. ‘நேற்று இவன்தான் அலைப்பேசியில் அழைத்தானா? இல்லை நானாக கனவு எதுவும் கண்டேனா?’ என புதிதாய் சந்தேகம் வேறு முளைத்தது.

மீண்டும் அவனோடு சுமூகமாக பேசாமல் அவளுக்கு அங்கிருந்து செல்ல பிடிக்கவேயில்லை. இன்னும் ஒரே ஒரு நாள் தான் இங்கு வர முடியும். அவனின் சாதாரண பார்வைக்கும், பேச்சுக்கும் மனம் வெகுவாக ஏங்கியது. இதென்னடா புது தொல்லை, இந்த மனதோடு? வேண்டாம் என்றால் விலகி செல்ல மாட்டாயா? சிறு பிள்ளை போல அடம் செய்து கொண்டு… மனம் அவளை என்ன சாடியும் பயன் இல்லை. அவளுக்குள் மலையளவு வருத்தம் மட்டுமே, அவனின் பாராமுகத்தால்.

அங்கேயே நின்றாள். அவனாக பார்க்கட்டும், அவனாக பேசட்டும் என்பதுபோல. ம்ம்ம் ஹ்ம்ம் அவன் சற்று அழுத்தக்காரனாகவே இருந்தான். அசைந்தே கொடுக்கவில்லை. வீட்டிற்கு செல்ல தாமதம் ஆகவும் வேறு வழியில்லாமல் கிளம்பி விட்டாள். அவன்மீது எல்லையற்ற கோபமும் தான்.

மறுதினம் இன்றாவது புடவை கட்டி சென்று அவனை சாமாதானம் செய் என சௌபியின் மனம் சப்தமிட, ‘இல்லை இல்லை அது சரியா வராது. நான் அவன்கிட்ட விலகிதான் இருக்கணும்’ என அடமாய் சுடிதாரே அணிந்தாள்.

‘அப்போ அவன் நல்லா பேசணும்ன்னு எதிர்பார்க்காத!’ என அவளின் மனம் கடிய, ‘அது வேற இது வேற… அவரை பிடிக்கும். அவரோட சேர தான் முடியாது. அதுக்காக சண்டையோடயா விலக முடியும். அது எனக்கு எப்பவும் உறுத்தும். அவர் எப்பவும் போல பேசுனா கொஞ்சம் ஆறுதலாவாவது இருக்கும்’ என எந்தவித லாஜிக்கும் இல்லாமல் அவள் பதில் கூற, அவள் மனதிற்கே அவள் கூறும் விஷயம் புரியாமல் குழம்பியது.

‘என்னவோ பண்ணு போ’ என அவளின் மனம் இவளை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட, இவள் இவளது ஜாஸ்மினோடு அலுவலகம் வந்தடைந்தாள். அன்றையதினம் சற்று சோகம் தாக்கியது. ‘இனி இங்கு வர முடியாதே!’ அதை எண்ணி மிகவும் வருந்தினாள்.

அப்துல், வந்தனா, செல்வம் மூவரும் வழக்கம்போல திங்கட்கிழமையிலிருந்து பணிக்கு வரவிருப்பதால் அவர்கள் சாதாரணமாகவே இருந்தார்கள். அவர்களிடம் கூட இவள் சொல்லிக்கொள்ளவில்லை, நான் வேலையில் இணைய மாட்டேன் என்பது போல. ஆக, அவர்களுக்கும் இவளின் முடிவு குறித்து எதுவும் தெரியவில்லை.

சிறிது நேரத்தில் அவளது சீனியர் வசந்த்திடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. இவள்தான் நேற்று இரவு அவனோடு பேசி வேலை வேண்டும் என்று கேட்டிருந்தாள். அவனும் இவளுடைய ரெஸ்யூம் வாங்கியிருந்தான்.

இன்று வசந்த் இவளிற்கு, ஹெட்ச் ஆர் டீம்மிற்கு ரெஸ்யூம் அனுப்பியாகி விட்டது என்றும், என்னென்ன படிக்க வேண்டியிருக்கும் என்பது குறித்தும், எப்பொழுது இன்டெர்வியூ இருக்கும் என்பது குறித்தும் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். அவனுக்கு பதிலை அனுப்பியவள் மீண்டும் வேலையில் மூழ்கினாள். என்ன மூழ்கியும் ருத்ரனின் முகம் மட்டுமே மனதில்.

அன்றையதினம் மாலை நேரம் போல ருத்ரனின் தந்தை சரவணவேல் அவரது மனைவி காவேரியிடம் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். “என்ன பண்ணறானோ? பண்ணட்டும் போ” என அவர் விட்டேத்தியாக சொல்லிக் கொண்டிருக்க,

“நிஜமாலுமே அந்த பொண்ணு மட்டும் வேலைக்கு வரேன்னு பதில் அனுப்பலையாங்க” என ஸ்ருதி இறங்கி காவேரி கேட்டார்.

“நான் இவ்வளவு நேரம் பாத்துட்டு தானே சொல்லறேன். இன்னும் அந்த பொண்ணுகிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸ்ஸும் இல்லை காவேரி. இவன் சொன்னான்னு தான் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவங்களுக்கு வேலை போட்டு தந்திருக்கோம். சரி பாப்போம்” என அவர் கூற,

“சும்மா நாலு பேருக்கு வேலை தந்துட்டு சொல்லி வேற காட்டுவீங்களா?” என காவேரி கேட்க, “அம்மாவும், மகனும் என்கிட்ட நல்லா பேசுங்க… அந்த பொண்ணு கிட்ட உங்க வேலை நடக்கலை பாரு” என சரவணவேல் கூற,

“அச்சோ பேசாம இருங்க. எதுக்கு ரெண்டு மாசம் ஜாயின் பண்ண டைம் கொடுக்க சொன்னான்னு கேட்டீங்களே… ஒருவேளை மருமக ஒத்துக்காதுன்னு தெரிஞ்சு தான் கொடுத்தானோ என்னவோ” என காவேரி மகனை சரியாக கணித்து கூற, “அம்மாவும், மகனும் என்னவோ பண்ணுங்க” என வழக்கம்போல இந்த விஷயத்தை அவர்கள் கையிலேயே தந்துவிட்டு அழைப்பை துண்டித்தார்.

ருத்ரனுக்கும் தெரிந்திருந்தது சௌபி மட்டும் பணியில் இணைய ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்பவில்லை என. ஏற்கனவே இருந்த கோபத்தோடு இதுவும் இணைந்து கொண்டது. இன்றும் சௌபி வீட்டிற்கு செல்லும் முன்னே, அவனது செல்ல பூனைக்குட்டியாய் கதவை மெல்ல தட்டிவிட்டு தலையை மட்டும் எட்டிப்பார்த்தாள்.

‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. பொம்மை மாதிரி தேவையில்லாம மத்த விஷயத்துக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு, இப்போ நான் கேக்கிற எதுக்கும் ஒத்துக்கறது இல்லை’ என கடுப்போடு எண்ணியவன், அவளை கண்டுகொள்ளாமல் வேலையில் ஆழ்ந்தான்.

அவளும் அவனது அனுமதியை கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்தாள். இன்றும் இந்த அழத்தக்கார உம்மணாமூஞ்சியிடம் அமைதியாக நின்றால் வேலைக்கே ஆகாது என புரிபட, அவன் அருகில் சென்றவள், “ சார்…” என அழைக்க,

“என்ன?” என்றான் அதட்டலாக. அதில் பயந்தவளோ ஒன்றும் இல்லை என்பதாய் தலையசைத்தாள். அது போதாதா ருத்ரனுக்கு, வீழ்ந்தே விட்டான் அவள் தலை அசையும் அழகில். அவளையே ஆழ்ந்து பார்த்தவனின் மனதில் சிறு உறுத்தல் இருக்கத்தான் செய்தது.

‘எங்க அப்பா தான் என்னை நம்பி தொழிலை தர மாட்டீறாங்கன்னு பாத்தா. இவளுக்கும் என்மேல நம்பிக்கை இல்லை. இவளை நான் தனியாவா விட்டுடுவேன். எத்தனை பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்க மாட்டேன். அந்த நம்பிக்கை இவளுக்கு இருக்க வேணாமா?’ என்னும் கோபமும், உறுத்தலும் ருத்ரனுக்குள் உழன்று கொண்டேதான் இருந்தது.

‘ஒருவேளை காதலையே கூறாமல், அவளிடம் உரிமையை கேட்கிறேனோ?’ என ருத்ரனுக்குள் புதிதாய் சந்தேகம் வர, அவளையே மீண்டும் ஆழ்ந்து பார்த்தான்.

அவனை சாமாதானம் செய்யும் வழி தெரியாமல் சற்று பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தவளை பார்க்க சிரிப்பாய் வந்தது. ‘காதலை சொல்லி விடு?’ என ருத்ரனின் மனம் ஆர்ப்பரிக்க,

எதுவும் பேசாமல் அவளருகே எழுந்து நடந்து வந்தான். ‘என்ன?’ என்பதாய் அவள் பார்க்க, அதற்குள் அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. அவனது திடீர் செய்கையில் அவளுக்குள் பதற்றம் வந்தது. அனிச்சை செயலாக அவள் பின்னோக்கி நடக்க, விஷமமாய் சிரித்தபடி அவளை மேலும் மேலும் நிதானமாக நெருங்கிக் கொண்டிருந்தான்.

அவள் என்ன, ஏதுவென கிறக்கப்பதற்குள் ருதரன் அவளுக்கு வெகு அருகாமையில். கேரள செண்டைமேளம் என்ன சிறப்பு? சௌபியின் இதய மேளம் அதைவிட அழகாய் தாளம் தட்ட தொடங்கிவிட்டது.

ருத்ரன் அதையும் உணர்ந்தானோ என்னவோ அவன் இதழ்களில் இளநகை தவழ்ந்தது. இவள் இமைகள் படபடக்க சுவற்றில் மோதி நிற்க, அவன் இன்னும் நெருங்கினான். சட்டென்று தனது வலது கையினால் அவனது மார்பில் வைத்து அழுத்தி அவனை நெருங்க விடாமல் இவள் தடுக்க பார்க்க,

அவள் செய்கை… அதன் நோக்கம்… அவளின் பாவம்… என அனைத்தும் அவனை பித்து கொள்ள செய்தது.

என்ன நினைக்கிறாய் பெண்ணே!
என்னை தடுக்க உன் மலர் கரங்கள் போதுமென்றா?
தவாறாக கணிக்கிறாயே!
இந்த மலர் கரங்கள் கூட அவசியமில்லை…
உனது ஓரவிழிப் பார்வை போதும்…
என்னை கட்டுக்குள் வைத்திட!!!

ருத்ரனின் மனம் பிதற்ற, விழிகள் அவளை உள்வாங்க, இதழ்கள் எதையோ கூறிட தவித்தது.

3 Likes

semma akka apppaaaaaaa mudila imagine pannavae odambhu pul arikuthu… poonai kutty, thalai atturadhu… so sweet akka… i love sowbi and ruthran vry much… :purple_heart::purple_heart::purple_heart::purple_heart::purple_heart:

1 Like

thanks a lot gowri :slight_smile:

1 Like