ராஜி பிரேமாவின் 'காதலாகி கசிந்துருகி ❤️'

ராஜி பிரேமாவின் 'காதலாகி கசிந்துருகி ❤️'
0

இன்னும் பத்து நாளில கல்யாணம்…

வீட்டுக்கு அத்தன அத்தைமார்களும் வந்துருக்கவோ!!!..எல்லாரும் மீனாக்ஷிய தாங்கு தாங்குன்னு தாங்க…கொஞ்ச நேரத்திலயே அவ போன் அடிக்க,“யேட்டி போ உனக்குத்தான்…ஓடியேபோய்டுவளே இப்ப… யேட்டி இப்போவே கண்டுக்கமாட்டங்கே கல்யாணம் ஆயிடுத்துனா அவ்ளோதான் போ கையிலேயே பிடிக்க முடியாது”…!!!

"யேத்தே என்ன இப்டி சொல்லுதீக…அப்படிலாம் இல்லத்தே…என அத்தையின் கன்னத்தை செல்லமா கிள்ளிட்டே ஓடிட்டா…!!!

“ஹலோ சாரி அத்தை பேசிட்டிருந்தாங்க அதான் கட் பண்ணிட்டு கூப்டேன்”

“பரவாயில்லமா”

“செரி நீ லேட்டா கூப்டதுக்கு ஒரு பனிஷ்மெண்ட்”

“என்னது”

“மாமா னு கூப்டு ஒருவாட்டி”

“என்னது மாமாவா”

“ஹேய் இதுல என்ன இருக்கு!!!அந்த காலத்துலே லாம் அப்படித்தான் வீட்டுக்காரங்கள கூப்பிடுவாங்க”

“ஆஹான் அது அந்த காலம் இப்போ யாரு அப்படி கூப்டுதாகிங்க”

“ம்ம்க்கும் சரி போ பிடிக்கல்லாட்டி விடு”

“ஹா ஹா”

“ம்ம்ம் செரி என்னமாசெய்யுத”

“ஹலோ”

என்னாச்சு இவளுக்கு அப்பப்போ இப்டி தான் ஏதும் ஆயிடுமோ என யோசிச்சுட்டே…

“ஓய் இப்போ பேசுவியா மாட்டியா”

“முடியாது” போ

"ஹேய் என்ன ஆச்சு உனக்கு…நானும் பாத்துட்டே இருக்கேன் வர வர சரியாவே பேசமாட்டேங்குற…

என்னாச்சு சொல்லு நான் பாத்துக்கிறேன்…"

மறுமுனையில் பேச்சே இல்லை…

“ஹலோ லைன்ல இருக்கியா இல்லையா”!!!..

“ம்ம்ம் சொல்லு”…

“ஹேய் சொல்லு என்னாச்சு”…

“ம்ம்ம் ஒண்ணுமில்ல எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு”

“எதுக்குடி பயம்…அதும் நா இருக்கப்போ!!!”

“ஓய்”

“சேரி சொல்லு”

“இல்லமா இன்னும் ஒரு பத்து நாளில நமக்கு கல்யாணம் எனக்கு அதான் பயம்”

“அதில என்னமா பயம்”…

ம்ம்ம் என் வீடு,அப்பா,அம்மா,அண்ணா,இந்த வீட்ல உணர்வுப்பூர்வமா என்னோட இத்தன்ன வருஷம் பயணிச்ச பல உயிரற்ற பொருள்கள்ன்னு இன்னும் நிறைய எல்லாத்தயும் விட்டுட்டு உங்கூட உன் வீட்டுக்கு வரணும் அதான் பயம்"

"ஹேய் எனக்கு புரியுது உன் கஷ்டம்… ஆனா என்னமா செய்ய…!!!இந்த சமுதாயம் கட்டுப்பாடுகளால் நிறைந்தது ஏதாச்சும் நாம பேச போய் நம்மல பின்ன “ஆண்டி இண்டியன்"னு சொல்லிடுவாங்க”…!!!..

“மெல்லிய சிரிப்புடன் ம்ம்ம் கொட்டினாள்”

நான் ஏதோ உன் கஷ்டம் புரியாம விளையாட்டுக்கு ஏதோ பேசுறேன்னு நினைக்காத…நிச்சயமா எந்த ஒரு பொண்ணுக்கும் தன் வீட்ட விட்டு வரது எவ்ளோ கஷ்டம்னு எனக்கும் புரியும்…!!!ஏன்னா எங்க அக்கா வீட்டவிட்டு போனப்போ எல்லாத்தையும் விட அதிகமா அழுதது நாந்தான்…!!! அதனால எனக்கு வர போற பொண்ண எப்படி பாத்துக்கணும்னு நிறைய யோசிப்பேன்…!!!

“ம்ம்ம் அப்புறம்…”

ஆசைதீர அவளை காதலிக்கனும்…!!!அவ முகத்தில சந்தோசத்தை கொண்டுவர நிறைய முயற்சி பண்ணனும்னு…!!!இப்படி நிறைய யோசிப்பேன் பாத்துக்கோ…!!!சினிமால வார மாறி டயலாக்லாம் அடிக்கல ஆனா உன்ன அவ்ளோ நேசத்தோட பாத்துப்பேன்…என்ன நீ நம்பி எங்க வீட்டுக்குவரலாம்…

“நாணத்துடன் ம்ம்ம் சொல்லு என்றாள்”

“இந்த ம்ம்ம் தவிர ஒன்னும் தெரியாதா”

“ஹா ஹா என் சிரித்தாள்”

“அப்புறம் ஒரு விஷயம்”

“ம்ம்ம் என்ன சொல்லு” என்றாள்…

“திரும்பியும் ம்ம்ம்ஆ”

“அச்சோ சாரி இனி சொல்லல நீ சொல்லு”

"நீ வந்தப்புறம் மாமியார் மருமக சண்டலாம் வருமா இல்லையானுலாம் எனக்கு சொல்ல தெரியல…!!! ஆனா நிச்சயம் ஒன்னு சொல்லுவேன்…!!!உன் அப்பா அம்மாவ ரொம்பவே நேசிக்கிற நீ உன் அத்தை மாமாவயும் நல்லா பாத்துப்பேன்னு மட்டும் எனக்கும் நம்பிக்கை இருக்குமா!!!.

“நல்லா பேசுற என்னையும் பாத்துப்பேன்னு சொல்லிட்டு நீயும் உங்க மாமனார் மாமியர நல்லா பாத்துக்கோனு சொல்லி உன் ஆசையையும் சொல்லிட்ட…!!! i too promise u i will takecare of your mom and dad like my parents…even they are my parents too…!!!”

“லவ் யூ”…

“லவ் யூ டூ”

“செரி டைம் ஆச்சு bye”

“ஓகேமா எதை நினைச்சும் மனசை போட்டு குழப்பிக்காத…நிம்மதியா போய் தூங்கு”…!!!குட் நைட்…

“குட் நைட்”

கைப்பேசி வைக்கப்படடாலும் பேசியதின் நினைவுகள் மனதை ஆழமாய்…அழகாய்…பயம் சற்று அகன்று மனம் முழுக்க சந்தோசம் நிரம்ப தூங்கச்சென்றாள்…!!!

பத்து நாள் நிமடத்துல போய்ட்டு பாருங்களேன் இருவரும் திருமணத்துக்கு முந்தைய நாள் கூற !!!..

மறுநாள் திருமணம்இனிதே ஆரம்பித்தது!!!..மங்கள ஒலி முழங்க இரு குடுப்பதினரின் வாழ்த்தொலியில் மங்கள நாண் தன் கழுத்தில் ஏற,நிமிடத்தில் விழிகள் கலங்கியது தன்னையறியாமல் மீனாட்சிக்கு!!!..அவள் நெற்றியில் திலகமிட்டு,அழுத்தமாய் அவள் கைபிடித்து நான் இருக்கிறேன் என உணர்த்தாமல் உணர்த்தினான் சிவா…!!!

“அவள் அப்பா,அம்மாவை அவள் விழிகள் நோக்கின…வார்த்தைகள் அத்துணையும் தோற்றுப்போகும் அந்த விழிகளின் உரையாடலில்”…!!!சட்டென கனத்தது மனது…!!!அக்னி வலம் சுற்றினார்கள்…!!! காலில் மெட்டியிடும் தருணம் வருத்தம் மீறி ரசித்தாள்…!!!

அத்துணை வைபவங்களும் இனிதே நிறைவேற!!!..பிரிவின் வலி கொடியதுதான்!!!..காரில் பயணப்படும் போது திரும்பி திரும்பி தன் அருமை அப்பா!!!..திட்டும் வார்த்தையிலும் கூட தன் அன்பை மட்டுமே கொட்டிய அம்மா!!!..பாசத்தை வெளிப்படுத்த தெரியாவிட்டாலும்,சமயத்தில் தன்னையே அறியாமல் வெளிப்படுத்தும் அண்ணன்…!!!அத்துனையும் அவள் பார்த்த அந்த ஒற்றை பார்வையில் வந்து மறைந்தது!!!..டாடா காட்டிக்கொண்டே சிறுபிள்ளை பள்ளி செல்கையில் விடைபெறுவதை போல விடைபெற்றாள்…!!!

காரினுள் அவள் கணவனின் கைகளை அழுத்தமாய் பிடித்துக்கொண்டாள்!!!..அன்பின் அடையாளமாய்!!!..மரியாதையின் பிரதிபலிப்பாய்!!!..காதல் பார்வையில் அவளை நோக்கிய படியே அவள் நெற்றியில் முத்தமிட்டான்…!!!..

ராஜிபிரேமா :heart:

2 Likes

ஒரு பெண்ணின் திருமணத்தோடான உணர்வுகளை அழகாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் ராஜிபிரேமா