வை. சிதம்பரம் அவர்களின் கவிதைகள்

வை. சிதம்பரம் அவர்களின் கவிதைகள்
0

“காதல் சிறகு”

இளம் பறவையே
இது இறைவன் தந்த அன்பளிப்பு…
இது முழுவதும் முளைப்பதற்குள் வானம் தொட பறக்காதே…

பாதியிலே விழுந்து விட்டால்
பலமான காயம் படும்…
பக்குவமாய் பறந்து செல்…
பகலும் இனிய இரவாகும்…
காதல் எனும் சிறகு கூட சில
காரணத்தால் கனமாகும்…
கனவுகளை சுமந்து கொண்டு
கண்மூடி பறக்காதே…
நீ செல்லும் பாதையிலே சில
நிஜங்கள் கூட தடையாகும்…
தடைதாண்டி நீ பறக்க உன்
பலத்தை உயர்த்திக் கொள்…
உண்மையான காதலுக்கு
உறுதியாக அழிவில்லை…
இதனை நீயும் உணர்ந்துகொண்டு…
இனிய வானில் சிறகடி…

இவண்.
ஆசிரியை சிதம்பரம்
முத்தையா இந்து நடுநிலை பள்ளி… களக்காடு.

5 Likes

அன்று…
கௌரவ சபையில்
பீஷ்மரின் மௌனம்

பாஞ்சாலியை
மானபங்கம் செய்தது

அயோத்தியில்…
தசரதனின் மௌனம்

இராமனை
காட்டுக்கே அனுப்பியது

சிலம்பில்
பாண்டியன் அவையில்

கற்றோரின் மௌனம்
கோவலனை
கொலைக்களம்
அனுப்பியது
பெண்ணே…
இன்று உன் மௌனம்
எனை…
சுடுகாடு அனுப்புமோ…

இவண். சிதம்பரம்

3 Likes

தாயின் மௌனம்
வருத்தம்
தந்தையின் மௌனம்
சுமை…
ஆசிரியரின் மௌனம்
அழிவு…
நண்பரின் மௌனம்
தயக்கம்…
காதலே…
உன் மௌனம்
சம்மதமோ…

3 Likes

திரௌபதி
எனும் பூங்காற்று
புயலானது
கௌரவர் சபையில்

கண்ணகி
எனும் பூங்காற்று
தீயானது
பாண்டியன்
அவையில்

சீதை
எனும் பூங்காற்று
பூமியில் புதைந்தது
இராமனின்
சொல்லில்

இன்றும்
பூவையர் பூங்காற்று
அழிவது
கெட்ட ஆடவர்
செயலில்

இவண். சிதம்பரம்

3 Likes

மனிதா
அன்னிய மோகத்தில்
அன்னை தமிழ்
மறந்தாயோ
பணந்தனை நினைவில் கொண்டு
மரந்தனை மறந்தாயோ
நகர்ப்புற மோகத்தில்
விளைநிலம்
மறந்தாயோ
அன்னிய நாடு
சென்றதனால்
அன்னை, தந்தை
மறந்தாயோ
அட மூடா
இதையெல்லாம்
மறந்ததனால்
காமம் தனை
மனதேற்று
மனிதத்தையே
மறந்தாயோ
இத்தனையும்
மறந்த நீ
ஒன்றை மட்டும்
மறவாதே
பெண் என்றால்
பெருந்தெய்வம்
என்றேனும்
ஓரு நாளில்
நின்று கொல்லும்
அத்தெய்வம்
அதை மட்டும்
மறவாதே

2 Likes

காந்தி மீண்டும் பிறந்தால்…
என்னுள் ஒரு கேள்வி.?
சிந்தனையில் கிடந்தேன்…
கண்ணில் ஒரு கனவு!!
கனவிலோ காந்தி…
நான் தந்த
சுதந்திர இந்தியாவை
காண விருப்பம் என்றார்…
கிளம்பினோம் இருவரும்…
முதலில் கண்டது
கேளிக்கை விடுதி…
ஆணும், பெண்ணும்
அரைகுறை ஆடையில்
ஆட்டமும், பாட்டமும்
அதிர்ந்த காந்தி
அடுத்து கண்டது
பாராளுமன்றம்…
நான் இருந்தபோது
இருந்தவர் இன்னும்
மாறவே இல்லையா
இளைஞருக்கு இங்கு
இடமே இல்லையா…
என்றவர் அடுத்து
நுழைந்தது முதியோர் இல்லத்தில்…
கலங்கிய கண்ணுடன்
கதறினார் காந்தி…
ஐயோ! இதுவா என்
கனவு இந்தியா :exclamation:
இதற்கா வாங்கினேன்
இந்த சுதந்திரம்…
என்று ஏங்கி நடக்க…
அங்கொரு அழுகுரல்
யாரது என்றுடன்
குடிசையுள் நுழைய
பசி நீங்க பால் தேடி
பச்சிளம் குழந்தை
வற்றிய மார்பை
வலிந்து உறிஞ்ச
பசியாற்ற வழியின்றி
பாவையவள் தவிக்க
இதைக் கண்ட காந்தி
அழியவில்லை அறம்
மீண்டும் துளிர்க்கும்
என் பாரதம்…
நான் வாங்கிய சுதந்திரம் வீணாகவில்லை…
என்றபடி நடக்க
திடுக்கிட்டு விழித்தேன்
கனவு தான் என்றாலும்
இதுதானே நிஜம்… வாழ்க பாரதம்
வளர்க அதன் புகழ்

வை. சிதம்பரம்
களக்காடு

2 Likes

பனித்துளி!

விவசாயிகள் வியர்வை
கூலியின் முன்
பனித்துளி

குழந்தையின் கண்ணீர்
தாய் அன்பின் முன்
பனித்துளி

காதலனின் அழுகை
காதலி
அணைப்பின் முன்
பனித்துளி

அன்னையின்
இதழ் ஈரம்
குழந்தைக்கு என்றுமே
பனித்துளி

2 Likes

நதிக்கரையில் தான்
நாகரீகம் தோன்றியது!
பாட்டன், முப்பாட்டன்
நடந்து வந்த பாதைஅது !
நதியைத் தான்
தாய் என்றோம்
அதைத் தானே
தெய்வம் என்றோம்
அதையே பெண் என்று
பெயரிட்டோம்
அதனால் தானோ
இன்று மாசுபடுத்தி
மானம் அழித்தனர்
அடே மானிடா
நீ எனைக்
காக்கவும் வேண்டாம்!
இப்படி நீரின்றி
போக்கவும் வேண்டாம்!
இப்படியே விட்டு விடு
நான் உனைக்
காக்கின்றேன்

2 Likes

நதிகளில் நீர்
வற்றியது
விவசாயிகளிடம்
கண்ணீர்
விவசாயியே
உன் வியர்வையை
உற்பத்தி செய்
அதுவே
நதியில் நீராகட்டும்.

2 Likes

பூங்காற்றே
நீ ஏன்
புயலானாய்
ஓலமிடும் ஓநாய்களை
ஓட விடவா

பூங்காவனம் தேடி
போதையோடு
பொருக்க வரும்
புல்லர்களை
புதைத்து விடவா

புனிதமான
இம்மண்ணை
புகழ் இழக்க
செய்பவனை
புறந்தள்ளவா
பூங்காற்றே
நீ ஏன்
புயலானாய்

2 Likes

அன்பே
உன் கழுத்திற்கு
பொன் நகை எதற்கு
உன் முகத்திற்கு
புன்னகையே
போதும் என்றான்
அப்போது தெரியாது
அதையும் களவாடிச்
செல்ல வந்த
கொள்ளைக்காரன்
அவன் என்று …

2 Likes

விவசாயி புன்னகை
விளைச்சல்
வியாபாரி புன்னகை
இலாபம்
தாயின் புன்னகை
குழந்தை நலம்
தந்தையின் புன்னகை
பிள்ளையின் அறிவு
நதியின் புன்னகை
வெள்ளம்
வானத்தின் புன்னகை
வானவில்
நல்லவர் புன்னகை
நட்பு

வை. சிதம்பரம்

2 Likes

பசுமை

பள்ளித் தோழனை
கண்டிடும் போது
மனதில்
குழந்தை பருவத்தின்
பசுமை

கல்லூரி நண்பனை
கண்டிடும் போது
காதல் நினைவுகள்
பசுமை

மனைவியின் அருகில்
தோள் சாயும் போது
மனதில்
தாயின் நினைவுகள்
பசுமை

உலகியல் எண்ணங்கள்
தோன்றிய போது
மனதில்
தமிழே நீயே
பசுமை

2 Likes

வெற்றி எனும்
தலைப்பைக் கண்டவுடன்
எனக்குள் மலைப்பு

எது வெற்றி
பத்து மதிப்பெண்
எடுத்தவனை விட
ஐந்து அதிகம் எடுத்தவன் பெறுவதுதான் வெற்றியா :exclamation:
உன்னதமான அரசியலை ஓரம் கட்டி
ஓட்டுக்கு பணம் கொடுத்து பெறுவதா
வெற்றி

இலக்கு ஒன்றை
மனதில் கொண்டு
அதை அடைய
நேர்மையாக
முயற்சி செய்து
எத்தனை முறை
தோற்றாலும்
அத்தனையும்
வெற்றியன்றோ

2 Likes

தோழி

பறக்கலாம் வா
தயக்கம் ஏனடா
தங்கத்தமிழன் பாரதியும், தாசனும்
ஊட்டிய
சுதந்திர சோற்றை
உண்டதை
மறந்தாயோ
இளமைக்கிழவன்
பெரியார் தந்த
சுதந்திர காற்றை
சுவாசிக்க
மறந்தாயோ
சங்கத் தமிழச்சி
தந்த வீர மரபை
உள்வாங்க
மறந்தாயோ
எதனை மறந்தாலும்
ஏங்கி நிற்காதே
இனியும்
எடுத்துச் செருகு
சுதந்திர சிறகை
விண்ணில் பறப்போம்
விரிந்த புன்னகையோடு…

2 Likes

இயற்கையே
என்னோடு நீயிருந்தால்
என் மாநிலமே
இன்புறுமே…
அன்னையே
என்னோடு நீயிருந்தால்
உன் கை சுவையில்
என் நாவும்
இன்புறுமே…
தந்தையே
என்னோடு நீயிருந்தால்
உன் அனுபவத்தால்
என் அறிவும்
இன்புறுமே…
நண்பா
என்னோடு நீயிருந்தால்
என் மனம் முழுதும்
இன்புறுமே…
காதலியே
என்னோடு நீயிருந்தால்
இவையனைத்தும்
நான் பெறுவேன்
என் வாழ்வே
இன்புறுமே…

2 Likes

இளமையே
என்னோடு நீயிருந்தால்
எப்போதும்
இனிமைதானே…
கற்பனையே
என்னோடு நீயிருந்தால்
எப்போதும்
புதுமைதானே…
கனவுகளே
என்னோடு நீயிருந்தால்
எப்போதும்
வளமை தானே…
இனியவளே
என்னோடு நீயிருந்தால்
எப்போதும்
சுகம் தானே…

2 Likes

மன்னவனே

மழைக்கு மூலம் நீ
மரத்திற்கு
வேரும் நீ…
மண்ணுக்கு
வாழ்வும் நீ…
மனிதனுக்கா
ஆலம் ஆவாய்…
இல்லை இல்லை
எங்கள்
தோஷம் நீக்கும்
சந்தோசம் நீ…
வெயிலோனே
வீணர்களைத்தான்
சுட்டெரிப்பாய்
இம்மண்ணின்
வேந்தர்களை அல்ல

2 Likes

ஆர்ப்பாட்டமான ஓடல்
ஆழமான தேடல்
என எங்களை
நாடி வந்த
காவிரியே இன்று
நீ எங்கே
வங்கத்தில் ஓடிவரும்
நீரின் மிகையால்
மையத்து நாடுகளில்
பயிர் செய்ய
ஆசைப்பட்ட பாரதியே
நீ எங்கே
தமிழனின் மானம்
கப்பலேறாமல் இருக்க
கப்பலோட்டிய தமிழனே
இன்று நீ எங்கே
இம்மண்ணின்
கொடியை
விண்ணேற்ற
மண்சாய்ந்த
மாவீரனே இன்று
நீ எங்கே
தூக்குமேடை ஏறியும்
உன் துளி
உதிரத்தில்
உதிக்க வேண்டும்
வீரர்கள் என
ஆசைப்பட்ட தமிழனே
இன்று நீ எங்கே

2 Likes

தமிழா
இன்னுமா இந்த
வார்த்தைகளை கண்டு
ஏமாறுகிறாய்…
நட்ட நடு இரவில்
நீ உழைத்து முடிந்த
காசுகளை
செல்லாதாக்கி
உனக்கே இல்லாதாக்கி
உனை கலங்க வைத்த
வார்த்தைகளை
இன்னுமா நம்புகிறாய்

கரைபுரண்ட காவிரியை
கை சேர்ப்பார்
என எண்ணி

கால்கடுக்க நின்றவரை
வயிரெறிய வைத்த
வார்த்தைகள் அல்லவா
இது
எல்லாம் உனக்காக
என்றவுடன்
குடும்ப அட்டையை
குதூகலமாய்
கொண்டு சேர்த்து
மாற்றத்தை
எதிர்பார்த்து நாமிருக்க
எங்கிருந்தோ வந்தவன்
எல்லாமே
எடுத்துச் செல்ல
இன்னுமா நம்புகிறாய்
எல்லாம் உனக்காக
என்ற வார்த்தையை
ஏமாந்தது போதும்
இனியாவது
விழித்து விடு
தமிழா

2 Likes