வை. சிதம்பரம் அவர்களின் காலை வணக்கம்

வை. சிதம்பரம் அவர்களின் காலை வணக்கம்
0

தமிழ் ஃபிக்ஷன் வழங்கும் வை. சிதம்பரம் அவர்களின் காலை வணக்கம்

தமிழாடும் தாமிரபரணியை தன்னகத்தே கொண்ட நெல்லை மாவட்டத்தில் இயற்கை கொஞ்சும் களந்தையிலே இன்பத்தமிழை சுவாசித்து களிப்புற்ற பெண் அணங்கு தான் நான்.

பெயர் : வை. சிதம்பரம்
பணி : ஆசிரியர்
பள்ளி : முத்தையா இந்து நடுநிலைப் பள்ளி களக்காடு.

களக்காடு,பல களம் கண்ட காடு. மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று சொல்லி ஆனை கட்டி போரடித்ததாகச் சொல்லும் பெருமை உடைய நகரம்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளையும், அதன் பொருளையும் உள்வாங்கி அதை இலக்கிய மற்றும் நடைமுறை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் ஆசையோடு இதை தொடங்கினேன்.

இதைக் கேட்டு உங்கள் கருத்துகளை, குறை, நிறைகளை அளியுங்கள்.

நன்றி :pray::pray:
வை. சிதம்பரம்.

7 Likes

இன்றைய திருக்குறள் - 1

அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல் , குறள் 1122

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

விளக்கம்:

இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

8 Likes

முயற்சிக்கு வாழ்த்துகள் !!!
உங்களால் தமிழ் மேலும் அழகு பெறட்டும் !!!

5 Likes

உங்களின் விமர்சானத்திற்கு நன்றி. உங்களின் கருத்த்துக்களை கருத்து திரியில் கூறுமாறு கேட்டு கொள்கிறோம்.

2 Likes

கருத்து திரி என்றால் என்ன ???

2 Likes
1 Like

இன்றைய திருக்குறள் - 2

அதிகாரம்: அவையஞ்சாமை, குறள்: 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

விளக்கம்:
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

6 Likes

கருத்துகள் பறிமாறும் இடம்

4 Likes

நன்றி

1 Like

கருத்துகள் பறிமாறும் இடம்

2 Likes

இன்றைய குறல் விளக்கம் தங்களுக்கு பொருத்தமானதே. வீரமங்கை சிதம்பரம்…

3 Likes

நன்றி

2 Likes

மிக மிக அருமையாக இருந்தது.

4 Likes

இன்றைய திருக்குறள் - 3

அதிகாரம்: கல்வி, குறள்: 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம்:

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

6 Likes

இன்றைய திருக்குறள் - 4

குறள்:921 அதிகாரம்: கள்ளுண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

விளக்கம்:

கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

6 Likes

மது அருந்தாதோர் உயர்ந்தோர் என்பது மாறிவிட்டது…

4 Likes

உண்மை தான்

2 Likes

இன்றைய திருக்குறள் - 5

அதிகாரம்: அறன் வலியுறுத்தல் குறள்: 32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

விளக்கம்:

ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

7 Likes

விளக்கம் மிகச்சிறப்பு

5 Likes

இன்றைய குறள் : 6

குறள் : 380

அதிகாரம் : ஊழ்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

விளக்கம்:

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோ வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

5 Likes