1. முதல் நீ.. முடிவும் நீ

1. முதல் நீ.. முடிவும் நீ
0

கோவை, காலை ஏழு மணி அஜய் உடற்பயிற்சி முடித்து வீடு வந்து சேர்ந்தான். அவனின் தாய் பரபரப்பாக கிளம்பி கொண்டு இருந்தார்.

அஜய்: " எங்க மா போறீங்க?"

விஜி: " அஜு,வந்துட்டியா, சீக்கிரம் கிளம்பி ஸ்கூல் போ சரியா? நான் சசி வீட்டுக்கு போறேன். வர சாய்ந்தரம் ஆகும்."

அஜய்: " சசி அத்தை வீட்டில் சாய்ந்தரம் வர என்ன வேலை உங்களுக்கு?"

விஜி: " கவி பெரியமனுஷி ஆகி இருக்கா, இன்னிக்கி அவளுக்கு முதல் தண்ணி அதான் போறேன். இதுக்கு மேல எதும் கேட்காத, போய் கிளம்பு சாவியை எப்பவும் வைக்குற இடத்தில் வெச்சுட்டு போ, அப்பா மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவாரு"

அஜய் மனதிற்குள் இதம் அவள் பெயர் கேட்டு, 'அதுதான் நேத்து கவிக்குட்டியை பார்க்க முடியலை போல, இப்போ தான் பெரிய மனுஷி ஆகரியா டி நீ? அப்போ இவளோ நாள் குட்டி பாப்பா வா? உன்கிட்ட போய் வம்பு பண்ணிட்டு இருந்து இருக்கேன் பாரு '

அஜய் குளித்து கிளம்பி தானே தோசை சுட்டு சாப்பிட்டு, பள்ளி சென்று விட்டான்.

அஜய் கதையின் நாயகன். பதினெட்டு வயது இளைஞன். பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். பார்ப்பவர் மயங்கும் வசீகரன். விஜி - கோபியின் ஒரே மகன். விஜிக்கு மகளும் இவனே. வீட்டில் அம்மாவுக்கும் மகளாய் துணி துவைத்து, வீடு கூட்டி, சமையல் செய்து என அனைத்து உதவிகளையும் செய்து தருபவன். அப்பாவின் மொத்தம் அன்பும் பெற்ற பையன். அவனுக்கு அம்மா என்றால் உயிர். யாரை பார்த்தும் பயம் கிடையாது. தப்பு என்று தெரிந்தால் முகத்திற்கு நேராக பேசிவிடுவான். அது அவன் அம்மாவாக இருந்தாலும் சரி. வயதுக்கு மீறிய அறிவு, ஆளுமை. மனதில் எதுவும் வைக்க தெரியாது. நடித்து, மறைத்து பேச தெரியாது. யாதும் ஊரே யாவரும் நட்பே என்று வாழ்பவன்.

படிப்பில் படு சுட்டி, வகுப்பில் முதல் தரம் வாங்கும் மாணவன். கிரிக்கெட் என்றால் மிக பிடிக்கும். அவன் பேட்டிங் செய்வதை பார்த்து ரசிக்க அவன் பகுதியில் ஒரு பெண்கள் கூட்டம் உண்டு. படிப்பு, விளையாட்டு என்று இருந்தவன், மூன்று மாதத்திற்கு முன் அவளை கண்டான். கண்ட நாள் முதல் பித்து பிடித்து போனான். காதல் வரும் வயதா இது? வெறும் இன கவர்ச்சி என்று அவனுக்கே சொந்த புத்தி இருந்தும். மனம் அதை கேட்க தயாராக இல்லை. அவளின் தரிசனம் வேண்டும் அவனுக்கு காலையும் மாலையும்.

நேற்று மாலை அவள் பேருந்து நிறுத்தம் வரவில்லை. ஏன் என்று தெரியாது இருந்தவனுக்கு இன்று அவன் தாய் சொன்ன செய்தி கேட்டு சிறு இன்ப அதிர்ச்சி. அவளின் நினைவுகளை ஓரம் தள்ளிவிட்டு பள்ளிக்கு சென்றான். இன்னும் மூன்று மாதத்தில் அவனுக்கு பொது தேர்வுகள் ஆரம்பம்.

காவ்யா அஜய்யின் கவிக்குட்டி இவள் தான். வயது பதினாறு. பத்தாம் வகுப்பு படிக்கிறாள். விஸ்வநாதன் - சசிகலா தம்பதியரின் கடைக்குட்டி. விசு - சசி இருவருக்கும் மூன்று குழந்தைகள். முதலில் இரண்டு ஆண், பின் ஒரு பெண். மூத்தவன் சரண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு என்ஜினீயரின் படிக்கிறான், இரண்டாம் மகன் ரிஷி, அஜய்யின் நண்பன். இவனும் பனிரெண்டாம் வகுப்பு. மூன்றாவது காவ்யா பத்தாம் வகுப்பு.

காவ்யா வீட்டில் மட்டும் வாயாடி. வெளியில் பயந்த பெண். வீட்டில் அனைவருக்கும் செல்லம். நன்றாக படிப்பாள். சரியான புத்தக புழு, எப்போதும் எதையாவது வாசிப்பது, எழுதுவது, வரைவது என்றே இருப்பாள். பசும் பால் நிறம். அளவான உயரம். பார்த்து ரசிக்கும் அழகு தான் அவளின் உருவம் மட்டும் சற்றே பூசிய உடல்வாகு. அவளை சீண்ட வேண்டி அண்ணன்கள் இருவரும் அவளை அரிசிமூட்டை என்று கூறுவது உண்டு.

அஜய்யிக்கு பிடித்தது, அவளின் பூசிய உடல்வாகு தான். யாரையும் கடிந்து பேச தெரியாது, எல்லோரையும் நேசிக்கும் குணம், தவறே செய்து இருந்தாலும் மன்னிக்கும் பக்குவம் என்று அவளின் குணங்கள் அவனை ஈர்த்து இருந்தது. இருவரின் முதல் சந்திப்பே சண்டை தான். இருவரும் எதிரும் புதிரும் என்று இருந்தனர். அஜய் என்றால் பயம் அவளுக்கு, காவ்யா என்றால் இதம் இவனுக்கு, அவளை பார்க்கும் போது எல்லாம் வம்பு செய்வான். அவள் கடைசி வரை பேசி இவனிடம் பல்பு வாங்கிய பின் அடங்கி விடுவாள். இவனுக்கு அவள் இவனோடு வாயாடுவது மிகவும் பிடிக்கும். அவள் பயந்து பின் வாங்கும் போது எல்லாம் அமைதியாக ரசிப்பான்.

அடுத்து வர போறதை பாக்குறதுக்கு முன்னாடி மூணு மாசமா என்ன ஆச்சுன்னு பார்த்துருவோம்.

அஜய்யும் அவன் நண்பர்களும் விளையாடும் இடம் அது. அங்கு ஒன்பது மாதம் முன்பு புது வீடு கட்ட பூஜை செய்து, அடுத்த ஆறு மாதத்தில் அங்கு பெரிய வீடு வந்தது. இவர்கள் விளையாடும் இடம் வீடாய் மாறி போக அதான் பக்கம் உள்ள இடத்தை இவர்களின் கிரவுண்ட் ஆக மாற்றி இருந்தனர். சரியாய் மூன்று மாதம் முன்பு, ஞாயிறு அன்று அவன் நண்பர்களோடு விளையாடி கொண்டு இருந்தான். விசு, ரிஷி, காவ்யா, சசி நான்கு பேரும் வந்து இருந்தனர் புது இல்லத்திற்கு, அவர்கள் வீட்டை பார்த்துக் கொண்டு இருக்க, அப்போது அஜய்யின் நண்பன் உதீப் அடித்த பந்து நேராக விசு இல்லம் உள்ளே செல்ல, அனைவரும் தலையில் கை வைத்து ஒருவரை ஒருவர் பார்த்து பயத்தில் அதிர்ந்து போய் இருந்தனர். அஜய் மட்டும் பயம் இன்றி அவர்கள் வீடு செல்ல, அங்கு கவி வாசலில் அமர்ந்து அவளின் ஐஸ் கிரீம் பிரித்து மூடியில் கொஞ்சம் வைத்து அவள் இல்லத்தில் தஞ்சம் வந்து இருந்த பூனைக்குட்டிக்கு கொடுத்து கொண்டு இருந்தாள்.

அஜய்க்கு முதலில் சிரிப்பு தான் வந்தது அவளின் செய்கை பார்த்து, பின் கூர்ந்து கவனித்து பார்த்தான். அவளுக்கு வாங்கி கொடுத்ததை அவள் வெயிலில் வைத்து உருக்கி அந்த பூனைக்குட்டிக்கு கொடுத்து கொண்டு இருந்தாள். அதுவும் பசிக்கு கிடைத்த உணவு என அதை விடாமல் உண்டு கொண்டு இருந்தது. அதை கண்டவனுக்கு அவளிடம் கண்கள் சென்றது. அவளின் முகம் முழுக்க வேர்வை, இப்படி வேர்த்து போய் அதுக்கு உணவு தரும் அவளை ஏனோ அவனுக்கு பார்த்ததும் பிடித்து போனது.

இவன் கேட் முன் நிற்பதை பார்த்த உதீப், அவன் அருகில் வந்து அஜய் பார்த்ததை பார்த்துவிட்டு சிரித்து, அழைப்பு மணி அடிக்க, அஜய் “வாங்கிட்டு வா” என்று கூறி சென்று விட்டான். அழைப்பு மணி கேட்டு அவள் எழுந்து வந்தாள்.

இனி எல்லார் பெயரும் ஷார்ட்டாக வரும் .

கவி: " சொல்லுங்க அண்ணா, நீங்க யாரு?"

உதீப்: " நாங்க இங்க விளையாடிட்டு இருந்தோம் பந்து உள்ள வந்துருச்சு, எடுத்து குடுங்க பிளீஸ்"

கவி: " நீங்களே உள்ள வந்து எடுங்க அண்ணா, எங்க விழுந்துச்சு தெரியல"

உதீப்: "தாங்க்ஸ்"

பின் உதீப் பந்து எடுத்து வர, அஜு விளையாடி விட்டு வீடு செல்ல, அப்போது சசி, விசு, மற்றும் ரிஷி அமர்ந்து இருந்தனர். சசியும் விஜியும் ஒரே ஊர். இருவருக்கும் நட்பாக தன் ஊரை சேர்ந்தவர் கிடைக்க சந்தோசம். ஒரே நாளில் சசி, விஜி என்று பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருங்கி இருந்தனர். இரு குடும்பமும் ஒரே சாதி, மதம், மொழி அதன் ஈர்ப்பு அவர்களின் நட்பை வளர்த்தது.

அவர்களின் புது இல்லத்தின் புதுமனை புகு விழாவிற்கு அழைத்து சென்றனர். ரிஷியும் - அஜுவும் ஒரே பள்ளி அதனால் இருவரும் பேசி நண்பர்கள் ஆகி இருந்தனர். விழா சிறப்பாய் முடிந்தது. விழாவில் விஜி அவர்கள் வீட்டினர் உடன் இன்னும் நெருங்கி இருந்தார். இவர்களும் புது வீட்டில் குடி வந்தனர். விஜியும் சரி, சசியும் சரி ஒன்றாய் வெளியில் செல்வது, கோவில் செல்வது என்று இருந்தனர். அஜய்யின் நட்பு வட்டத்தில் ரிஷி சேர்ந்து இருந்தான்.

சரண் விடுதியில் படித்து கொண்டு இருந்தான் அவனின் விஜயம் மாதத்தில் ஒரு முறை தான். வீட்டை விட்டே கவி வெளியே வரமாட்டாள் மிக கண்டிப்பு அதனால் மிக அரிது அவளை வெளியில் பார்ப்பது. அன்று வெள்ளிக்கிழமை பள்ளி சீருடையில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தவளை மாடிக்கு சென்று துணி எடுத்து வருமாறு கூற எடுக்க சென்றாள். அவள் துணி எடுத்து கொண்டு கீழே வர, அஜுவின் பந்து அவளின் பின்புறத்தில் இடுப்பின் மேல் பட, அவள் துணிகளை விட்டு கதறி அழுதபடி அமர, அங்கே வந்த அஜுவிற்கு அதை பார்த்து பதறியது.

அஜு அழைப்பு மணி அடிக்க வெளியே வந்த ரிஷி, அஜுவை உள்ளே அழைக்க, கவி கோபமாய் எழுந்து வந்தாள்.

கவி: " கண்ணு தெரியாத உங்களுக்கு? பந்தை இப்படி தான் அடிப்பீங்களா?"

அஜு: " சாரி தெரியாம அடிச்சுட்டேன், இனி பார்த்து விளையாடுரோம், பந்து கூடு"

கவி: " குடுக்க முடியாது"

ரிஷி: " குடு கவி, அவன் பந்து இல்லாம எப்படி விளையாடுவான்?"

கவி: " யாரும் விளையாட வேண்டாம் இங்க"

அஜு: " அதான் சாரி சொல்றேன்ல"

கவி: " தர முடியாது, ரொம்ப வலிக்குது எனக்கு, இரத்தம் கட்டி இருக்கும். ரிஷின்னா போக சொல்லு, உன் ப்ரெண்ட் வீட்டுக்கு போக சொல்லு"

அஜு: " ஏய் பந்து குடு டி, சும்மா. அதான் தெரியாம தான் விழுந்துச்சு இனி வராது சொல்றேன், சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்க?"

ரிஷி: " குடு கவி, நான் அம்மாகிட்ட சொல்வேன்"

கவி: " இரு அப்பா வரட்டும் உன்னையும் இவனையும் போட்டு தரேன், இனி இங்க விளையாடாத மாதிரி பண்றேன்"

அஜுக்கு கோவம் ஏற, அவளை பார்த்து,

அஜு: " ஏய், போய் சொல்லுடி என்ன பூஞ்சண்டி காட்டிட்டு இருக்கியா? எனக்கு பயம் இல்ல, இப்பவே கூப்பிட்டு சொல்லு போ, ஓங்கி ஒன்னு விட்டேன் பேச வாய் இருக்காது போடி"

கவி அவன் மீரட்டியதும் அழுது கொண்டே பந்தை எடுத்து கொடுத்தாள். அவனும் வாங்கிக்கொண்டு சென்று விட்டான்.

- காதல் வளரும் :purple_heart: