10. முதல் நீ.. முடிவும் நீ

10. முதல் நீ.. முடிவும் நீ
0

மாலை காவ்யா, அனைவரும் பட்டாசு வைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

உதீப்: " வா கவி நீயும் வை, ஏன் உக்கார்ந்து இருக்க?"

கவி: " நான் வரல எனக்கு பட்டாசு பயம் அண்ணா, நான் வேடிக்கை பார்க்குறேன், நீங்க வைங்க"

ரிஷி: " காலையில் இருந்து ஒன்னு கூட வைக்கல வா டி ஒன்னும் ஆகாது"

கவி: " நான் வரல என்னை விடு"

அஜு அவள் அருகில் சென்று,

அஜு: “அப்போ உண்மையா உனக்கு பட்டாசுனா பயமா? என்னை பார்த்து தான் நீ வெளிய வரலன்னு காலையில் கவலையா இருந்தேன்”

காவ்யா அவனை ஒரு முறை பார்த்து விட்டு தலை குனிந்து விட்டாள்.

அஜு: " சாரி காவ்யா அன்னிக்கு உன் கை பிடிச்சது தப்பு தான். மன்னிச்சிடு, நான் என் மனசில் உள்ளதை சொன்னேன். உன்னை வற்புறுத்தி காதலை வாங்க மாட்டேன் நான். உனக்கே என் மேல வந்தா அப்போ சொல்லு"

கவி: " அப்போ இனி மாமா கூப்பிட வேண்டாம் தானே? நமக்குள்ள காதல் இல்லை தானே?"

அஜு: " அண்ணான்னு சொல்லிடதே கவி, நான் உன்னை நேசிக்கிறேன். நீ என்னை நேசிக்கும் போது சொல்லு போதும், அது வரை நான் எதும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனா லவ் யூ காவ்யா"

கவி: " எனக்கு இது பிடிக்கல, பேசாதீங்க என் கூட பிளீஸ்"

ரிஷி: " என்னடா பேசிட்டு இருக்க கவி கூட?"

கவி: " என்ன புரியல கம்ப்யூட்டர்ல கேட்டாரு அண்ணா அதான் பேசிட்டு இருந்தோம்."

அஜு அமைதியாக அவளை பார்க்க, அவள் கண்கள் கலக்கம் கொண்டது. எதும் பேசாது கிளம்பி சென்று விட்டான். பின் அஜய் வீடு வந்தது அவன் முதல் வருடம் முடிந்து தான். சில முறை வந்தும் அவளை அவன் பார்க்கவில்லை. நாட்கள் ஓடியது கவி பன்னிரெண்டாம் வகுப்பு போய் இருந்தாள். இவனும் படிப்பு, நட்பு, அவன் வீடு என்றே இருந்தான். மீண்டும் ஆறு மாதம் சென்று இருந்தது. அஜய் இரண்டாம் வருட படிப்பின் போது அவன் தாய் தந்தையின் கல்யாண நாள் கொண்டாட்டம் என்றும், பரிட்சைக்கு படிக்க விட்டு இருந்த விடுமறையில் வீடு வந்தான்.

வந்ததும் ரிஷி, உதீப் உடன் நான்கு நாட்கள் சுற்றுலா சென்று விட்டான். பின் வீடு வந்தவன் காலையில் இருந்து தூங்கி எழுந்து மாலை விஜி இல்லை என்று அவனே அவனுக்கு காபி கலக்கி கொண்டு இருந்தான்.

அப்போது அங்கு ரிஷி வந்தான்.

ரிஷி: " டேய் அஜு, எழுந்துட்டியா? ஒரு உதவி செய், கவிக்கு நாளைக்கு எக்ஸம் கொஞ்சம் கம்ப்யூட்டர் சொல்லி குடு, அவளுக்கு எதும் “சீ புரோகிராம்” புரியல போல, அவ அன்னிக்கு வேண்டாம் சொல்லி உன்னை ஹூர்ட் பண்ணிட்டேன் சொன்னா, அவ சின்னச் பொண்ணு லூசு மாறி பேசி இருப்பா சொல்லி குடு டா"

அஜு: " டேய் எருமை இவ்வளவு சொல்லனுமா? கவிக்கு நான் சொல்லி தர மாட்டேனா? வீட்டுக்கு வர சொல்லு டா, அங்க வர முடியாது அம்மா வீட்டில் இல்லை."

ரிஷி: " வர சொல்றேன். மாவு அரைக்க எங்க அம்மா கூட தான் போய் இருக்காங்க, வர நேரம் தான்."

பின் ரிஷி சென்று விட, அஜய் டிவி போட்டு விட்டு காபி அவனுக்கு என்று செய்த இருந்த முறுக்கையும் எடுத்து கொண்டு அமர்ந்தான். டிவியில் அருமையான பாடல்.

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்

கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்

ஓ பேபி கேர்ள் ஓ பேபி கேர்ள்…

காவ்யா உள்ளே வந்தாள். தயங்கி தயங்கி அவள் முகத்தில் சொல்ல முடியாத உணர்வுகள்.

அஜு: " வா கவி காபி குடி"

கவி: " வேண்டாம், நான் காபி குடிக்க மாட்டேன்"

அஜு: " நான் காபி குடுத்த கூட குடிக்க கூடாத? சரி விடு."

கவி: " இல்ல நான்… என எனக்கு… காபி குடிக்கற பழக்கமே இல்லை, எப்பவும் பால் தான்"

அஜு: " சரி பால் தரட்டா குடிப்பியா?"

கவி : " நீங்க காபி குடுத்தாலும் குடிக்கறேன்"

அஜு: " சரி இரு"

ஹேய் காபி மக்கிலே காதல் வந்ததென்ன

உன்னை பார்த்ததும் நெஞ்சுக்குள் பூக்கள் என்ன…?

மாலை பொழுதின் மயக்கம் சொல்வதென்ன?
சாரல் அனைவதென்ன…?

நேற்று நடந்ததும் நாளை மறுப்பதென்ன?

வானம் பச்சை நிறத்தில் சிரிப்பதென்ன?

எனது கனவில் கண்கள் கேட்பதென்ன?
பனிக்கு குளிர்வதென்ன?

அஜய் பாடலை பாடிக்கொண்டே காபி தயார் செய்து கொண்டு வந்தான்.

அஜு கவிக்கு காபி கொடுக்க, அவள் நடுங்கிக்கொண்டே அதை கைகளில் எடுத்தாள். அதை அவள் வாய் அருகில் கொண்டு செல்லும் முன்னே அதை அவள் கீழே போட்டு காலில் சிந்தி இருந்தாள். அவளை விட அங்கு அவன் துடித்தான்.

அஜு: " சூட இருந்தா சொல்ல வேண்டியது தானே? இரு"

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் தந்து அதில் காலை விட சொன்னான்.
பின் காலை துடைத்து கால்களுக்கு மருந்து போட்டு விட்டான்.

அஜு: " வலிக்குதா? ஹாஸ்பிடல் போவோமா?"

கவி: " வலி எல்லாம் இல்ல லேசா எரியுது அவ்ளோ தான்"

அஜு: " சரியா டம்பளர் கூட பிடிக்க தெரியாதா காவ்யா உனக்கு? எப்படி சிவந்து போய் இருக்குன்னு பாரு, எனக்கே தாங்க முடியல"

கவி: " ஏன் தாங்க முடியல?"

அஜு: " நீ ஏன் வந்ததுல இருந்து ஒரு மாறி சோகமா இருக்க?"

கவி: " என்னை ஏன் பார்க்க நீங்க வரல ஒரே வீதி ரெண்டு வீடு தள்ளி தான் வீடு ஏன் என்னை பார்க்காம ஒதுக்கி வெக்குறீங்க?"

அஜு: " யார் உன்னை ஒதுக்கி வெச்சாங்க? உன்னை நான் தொந்தரவு செய்ய விரும்பல கவி, நீ நல்லா படிக்கர பொண்ணு, உன் மனசை கெடுக்க கூடாது இல்லையா? அதான்."

கவி: " நான் உண்மையா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். இதை யார்க்கிட்ட சொல்றதுன்னு கூட தெரியுல, உங்க ஞாபகமே தான் அடிக்கடி, என்ன செஞ்சா பேசுவீங்க? மாமான்னு சொல்லனுமா? இல்ல காதலிக்கிறேன் சொல்லனுமா? "

அஜு: " கவி என்ன ஆச்சு? என்ன பேசுற? நீ எதுவும் சொல்ல வேண்டாம் அதை எல்லாம் மறந்துரு சரியா? வயசு பதினெட்டு ஆக போகுது இப்படி எல்லாத்துக்கும் அழுதுட்டு இருக்க? "

கவி: " இல்ல என்னோட பேசுவேன் சொல்லுங்க, எப்பவும் போல சாதாரணமா பேசுங்க, இப்போ எல்லாம் யாரும் என்னோட பேசறது கூட இல்லை. "

அஜு: " என்னாச்சு கவி? அதை சொல்லு"

கவி: " எனக்கு உங்க ஞாபகமா இருக்கு, இது காதல் மனசு சொல்லுது, வெறும் இன கவர்ச்சி அறிவு சொல்லுது. என்ன செய்றது தெரியல, சரி இதை உங்ககிட்ட சொல்வோம் பார்த்தா நீங்களும் பேசறது இல்லை"

அஜய்க்கு ஒரு பக்கம் இன்பம் இன்னொரு பக்கம் துன்பம். மனம் இருவேறு நிலையில் எதை எடுப்பது என்று தவித்து இருந்தது.

யாது: " காவ்யா, உனக்கு எது சரின்னு தோணுதோ அதை செய், யார் சொல்றதும் கேட்காதே சரியா? குழப்பம் எல்லாம் விட்டு உன் மனசையும் அறிவையும் பேசவிட்டு தெளிவான ஒரு முடிவுக்கு வா, அது வரை தைரியாம இரு"

குரல் வாசலில் இருந்து வந்தது. யாதுவும் கவினும் வாசலில் நின்று இருந்தனர். உள்ளே வந்த இருவரும் அவர்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

கவின்: " நாங்க ரெண்டு பேரும் உனக்கு ரிஷி மாதிரியே அண்ணா தான் சரியா? இவன் உன்னை மிரட்டிகிட்டு இருந்தான் தானே? விடு நாங்க பேசிக்கிறோம்"

கவி எதுவும் பேசாமல் தலை குனிந்து நிற்க,

அஜு: " விடுங்க டா டேய்"

கவின்: " டேய், தப்பிக்க பாக்குறியா?"

கவி: " இல்ல அவர் எதும் சொல்லல, நான் கிளம்புறேன் நாளைக்கு சொல்லி குடுங்க"

அஜு: " சரி பார்த்து போ, இன்னும் வலிக்குதா?"

கவி: " இல்ல, லேசா எரியுது"

அஜு: " நான் வீடு வரை வரட்டுமா?"

கவி: " வேண்டாம்"

கவி மெதுவாய் நடந்து வெளியில் செல்ல வாசல் வரை வந்து அஜு வழியனுப்பி விட்டு வந்தான்"

அஜு: " என்னடா சொல்லவே இல்ல, செம்ம சப்ரைஸ்"

கவின்: " அப்படி வந்ததும் நல்லது தான், என்ன லவ் உன் கண்ணில் அதும் காவ்யா காலை பிடிச்சு நீ துடிச்சு போய் பேசினதை எல்லாம் பார்க்கும் போது…"

அஜு: " டேய் சும்மா இரு டா"

யாது: " சும்மா நீ இருந்தியா அந்த பொண்ணை குழப்பி விட்டு இருக்க, அவ உன்னை நேசிக்க ஆரம்பிச்சு இருக்கா, ஆனால் அவ கண்ணில் நிறைய குழப்பம்."

கவின்: " சரி விடு அவளே தெளிவாகி புரிஞ்சு உங்கிட்ட வரட்டும்"

அஜு: " சரி நீங்க என்னடா வீட்டுக்கு சொல்லாம வந்து இருக்கீங்க?"

கவின்: " வா டா மச்சான் நம்ம போவோம், இவன் கூட படிக்க வந்தோம் பாரு நம்மளை செருப்பால அடிக்கணும்"

யாது: " உன்னை அடிச்சுக்க, என்னையும் நீ தானே கூப்பிட்டு வந்த?"

கவின்: " இவன் எங்க டா போனான்?"

அஜு: " இந்தா டா காபி எடுத்துக்கோங்க"

இங்கு இவர்கள் அரட்டை அடித்து பேசி சிரிக்க, ரிஷி உடன் வந்து கலந்து கொண்டான். அவளோ அங்கு குழப்பத்தில் தவித்து போய் இருந்தாள்.

கவி எப்படி காதல் வந்துச்சு? அடுத்த பாகத்தில் சொல்றேன்

காதல் வளரும் :purple_heart: