11. முதல் நீ.. முடிவும் நீ

11. முதல் நீ.. முடிவும் நீ
0

கவி குழப்பத்தில் தான் இருந்தாள். இது இன்று வந்தது அல்ல. அவன் அவளை புடவையில் பார்த்து அசையாது உறைந்த நின்ற போதில் இருந்தே இதே குழப்பம் தான். அந்த குழப்பம் வளர்ந்தது அவள் அஜு மீது மோதிய போது, அவளை அவனின் கண்கள் அத்து மீறி ரசிக்கும் போது, அவன் கண் பார்க்க வந்த தடுமாற்றம் எல்லாம் எதோ செய்தது அவளையும், அவளும் அவனை ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்.

அவன் ரிஷியுடன் சேர்ந்து பேசி பல் தெரிய சிரிக்கும் போது, அவன் கைகள் தலை முடிகளை கோதும் போது, அவள் வீட்டின் பக்கத்தில் அவன் கைகள் இறுக்கமாய் பேட் பிடிக்கும் தோள்களின் வலிமையை ரசித்த போது, அவன் கண்கள் அவளிடம் ஏதோ சொல்வதை போல தோன்றிய போது, டிவியில் கேட்கும் பாடல் வரிகளுக்கு மனம் அவன் முகம் காட்டிய போது என்று அவன் அழகை அவளும் ரசித்து கொண்டு தான் இருந்தாள். ஆனால் இதெல்லாம் வெறும் வயது கோளாறு என்று தான் தோன்றியது.

அவன் பிரிந்து சென்றதில் இருந்து ஆரம்பமான தவிப்பு இன்று வரை அவளுக்கு இருக்கிறது. முன்பு வந்தாள் பேசுவான். அவள் வயதுக்கு வந்த பின்பு தான் அதெல்லாம் இல்லையே சண்டை, வம்பு பேசுவது, முகம் பார்ப்பது என்று எல்லாம் குறைந்து போய் இருந்தது.

நீண்ட நாள் பழக்கம் இல்லை தான். அவன் அண்ணன் என அறிவு சொல்லியது தான். ஆனால் மனது? அவளின் வயதும் இதை காதல் என்று தான் சொல்லியது. காதல் வளர பிரிவு தேவை. முதலில் வந்த பிரிவு தானாய் நடந்தது. ஆறு மாதம் கழித்து வந்தவன் இளைத்து போய் இருந்தான் என்று ஓடி ஓடி அன்று சமைத்தால் தானே?

அவள் சமைத்து போட்ட மறுநாளே வந்து காதல் சொன்னது அவன் தானே? கவிக்கு தன் மனது அவனுக்கும் தெரிந்து விட்டதோ என்று பயம், அண்ணன் என்ன சொல்வான்? அப்பா அம்மா? என்று பயந்து போய் அன்று விலகி சென்றாள். அவனோ மொத்தமாய் ஒரு வருடம் வரவும் இல்லை, வந்த போதும் இவள் முகம் பார்க்கவும் இல்லை. அவன் விலகி செல்ல செல்ல அவள் நெருங்கி கொண்டு இருந்தாள். பிரிவு ஒரு பக்கம் குழப்பம் ஒரு பக்கம். வீடு, படிப்பு, வயது என்று இவை எல்லாம் ஒரு பக்கம் எதை பார்ப்பாள் அவள்?

இதோ இப்போது அவள் மனதின் பாரம் தீர சொல்லியும் விட்டாள். அவன் மறந்து விடு அதை என்று கூறுகிறான். மறக்க முடியுமா? இந்த காதல் தான் சும்மா விடுமா?

அஜய் வீடு,

அஜு நண்பர்களை அவன் பெற்றோர்க்கு அறிமுகம் செய்து, கல்லூரி பற்றி கதை பேசி, அவர்களின் விபரம் கேட்டு, உண்டு உறங்க சென்றனர். அஜு அவன் அறையில் மூவரும் படுக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தான்.

யாது: " காலையில் படிக்க ஆரம்பிச்சா தான் கண்ணுல மார்க் பார்க்க முடியும்"

கவின்: " நீ எங்க வீட்டில் நல்லா தானே படிச்ச?"

யாது: " என்ன நான் படிச்சனா? நீயும் பிரீத்தியும் படிக்க விட்டீங்க?"

அஜு: " மாட்டினியா? அவன் தான் சொல்லி இருக்கானே ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி தான்னு"

யாது: " அதை ஏன்டா கேக்குற, ரெண்டு பேரும் சண்டை போடுவாங்க ரித்து கடைசியில் சரண்டர் ஆகிடுவா, இவன் அவளை அழுக வெக்கறதும் இல்லாம வேலை வேற வாங்குறான்"

கவின்: " டேய் அதெல்லாம் விளையாட்டு தான், கட்டிக்கிட்டு போன அப்புறம் அண்ணன் தங்கச்சி ஸ்டோரி சொல்ல வேண்டாமா? அதுக்கு தான்"

யாது: " ஆனா பாவம் டா அவ, எப்படி அழுகுறா தெரியுமா, இவங்களை பிரிச்சு விட்டு சமாதானம் பண்ணவே நேரம் சரியா போய்டுச்சு"

அஜு: " டேய் கவின் உன் தங்கச்சி பத்திரமா பார்த்துக்கோ"

கவின்: " ஏன்டா, எதுக்கு இப்படி சொல்ற?"

அஜு: " அக்கறை, சப்போட் எல்லாம் பலமா இருக்கு அதான்"

கவின்: " ஓ அப்படி சொல்றியா? அப்படி நடந்தாலும் எனக்கு சந்தோசம் தான். ரெண்டு இம்சை ஒன்னா முடிஞ்சுது"

யாது உக்கார்ந்து இருந்த கவின் முதுகில் மிதிக்க, அவன் சிரித்து கொண்டே படுத்து கொண்டான்.

அஜு: " டேய் சும்மா விளையாட்டுக்கு டா"

யாது: " டேய் நீ தான் லூசு மாறி பேசுற, அவன் என்ன சொல்லணும், அவனும் அதே மாறி பேசிட்டு இருக்கான், எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை விடுங்க சொல்லிட்டேன்"

கவின்: " சரி மச்சான் விடு, தூங்குவோம் காலையில் படிக்கணும்."

யாது: " ஆமா, சரி அஜு எங்களை நீ தான் எழுப்பி விடணும், செம்ம டயர்ட் நான்"

அஜு: " சரி டா"

காலை எட்டு மணி

இருவரில் முதலில் எழுந்தது யாது தான்.

யாது: " கவின் எழுந்தறி, டேய், அட இவன் எரும மாதிரி தூங்குறான். இந்த அஜு எங்க?"

யாது எழுந்து வெளியில் வர,

விஜி: “நல்லா தூங்கினியா யாது? இடம் புதுசு அதான் கேட்டேன்”

யாது: " தூங்கினேன் மா, அஜு எங்க? அவனை எழுப்ப சொல்லி இருந்தேன், படிக்க நிறையா இருக்கு"

கோபி: " அவன் எழுந்தா ரிஷி வீடு தான், இங்க சார்க்கு என்ன வேலை சொல்லு, வந்துருவான். கவிக்கு பாடம் சொல்லி குடுக்க போய் இருக்கான். நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா யாது"

யாது: " சரிங்கப்பா"

கவின்: " குட் மார்னிங் அப்பா, அம்மா காபி"

யாது: " டேய் இது உங்க வீடு இல்ல, கண்ணை நல்லா திறந்து பாரு"

கவின் தலை சொரிந்து கொண்டே அவன் கண் திறந்து, “அச்சோ சாரிப்பா”

விஜி: " இந்தா காபி, இன்னிக்கி மட்டும் பல்லு விளக்கமா குடிச்சுக்கோ நாளைக்கு தர மாட்டேன்"

கவின்: " அச்சோ கியூட் மா நீங்க தாங்க்ஸ், யாது அஜு எங்க?"

யாது விவரம் சொல்ல, கவின் வாய் உள்ளே சிரிப்பை அடக்கிக் கொண்டு இருவரும் ஃப்ரெஷ் ஆகி வந்தனர்.

யாது: " நாங்க ரிஷி வீட்டுக்கு போய்ட்டு வரோம்"

விஜி: “சாப்பிட்டு போங்க ரெண்டு பேரும்”

கவின்: " அஜு கூப்பிட்டு வரோம் அம்மா"

கோபி: " அவன் அங்க இந்நேரம் ரெண்டு முறை சாப்பிட்டு இருப்பான் நீங்க இங்க சாப்பிட்டு போங்க"

யாது: " அவனை பார்த்துட்டு வந்துரோம்"

இருவரும் அஜுவை பார்க்க வர, கோபி வீட்டை காட்டி விட்டு அலுவலகம் கிளம்பி சென்று விட்டார்.

யாது கேட் திறந்து உள்ளே செல்ல, விசு அவர்களை வரவேற்க,

கவின்: " அஜு உள்ள இருக்கான அங்கிள்? அவன் ப்ரெண்ட்ஸ் நாங்க"

விசு: " நீங்க தானா? ரிஷி நேத்து சொன்னான். நல்லா இருக்கீங்களா? உள்ள இருக்கான் போய் பாருங்க"

கவின்: " நல்லா இருக்கோம் அங்கிள், நீங்க எப்படி இருக்கீங்க? உங்களை பத்தி அஜு நிறைய சொல்லி இருக்கான்"

விசு: " நல்லா இருக்கேன், உள்ள போங்க ரெண்டு பேரும் வாசலில் நின்னு பேச வேண்டாம், நான் வேலையா வெளியா போறேன், நம்ம ராத்திரி பேசுவோம், வரேன்"

பின் அவர் விடை பெற்று உள்ளே செல்ல, அஜு ஹாலில் அமர்ந்து இருந்தான்.

அஜு: " கவி சக்கரை கம்மியா இருக்கு, காபி தூள் போடு இன்னும் கொஞ்சம்"

கவி: " நான் முதல் முறை காபி போடுறேன், அட்ஜஸ்ட் பண்ண கூடாதா?"

அஜு: " என்னது காபியில் அட்ஜஸ்ட் பண்ணனுமா? ஒரு காபி போட தெரியுல வாய் பேசு. காபி எவ்ளோ முக்கியம் தெரியுமா? Coffee in one hand, confidence in the other னு ஒரு வாக்கியம் இருக்கு தெரியுமா? காபியும் கன்பிடன்சும் ஒன்னு சொல்ற வாக்கியம். காபி தான் என் உடம்பு முழுக்க ஓடுது தெரியுமா"

யாது: " அதான் அறிவு இல்லை போல"

அஜு: " வாங்க டா"

கவின்: " என்ன மாமியார் வீட்டில் நல்ல கவனிப்பு போல? பாடம் சொல்லி குடுக்க காலையிலேயே ஓடி வந்து இருக்க?"

அஜு: " டேய் சும்மா இரு டா"

காவ்யா வாய் விட்டு சிரிக்க,

யாது: " கவி எனக்கு குடு காபி இன்னும் பச்சை தண்ணி வாயில் படல"

கவி: " இதோ அண்ணா"

சசி: " நான் குளிச்சுட்டு வரேன் தானே சொல்லிட்டு போனேன், அதுக்குள்ள சண்டையா? என்னடா என் பொண்ணை வார்த்தையில் வறுத்துட்டு இருக்க?

" அட, உன் ப்ரெண்ட்சா? வாங்க நல்ல இருக்கீங்க தானே?" ரிஷி உதீப் வீட்டுக்கு போனான் பாரு இன்னும் வரல, அவனை கூப்பிட்டு வா"

அஜு: " எனக்கு காபி வேணும் அத்தை, சப்பாத்தி இன்னும் தொண்டையில் நிக்குது, குடிச்சுட்டு போறேன்"

கவின்: " டேய் துரோகி, துரோகி, நாங்க சாப்பிடாம இருக்கோம், இங்க சப்பாத்தி முழுங்கி இருக்க, இதில் காபி வேற"

கவி: " நீங்களும் சாப்பிடுங்க அண்ணா. சிக்கன் குழம்பு, சப்பாத்தி "

விஜி: " நான் அங்க மட்டன் செய்து இருக்கேன், இந்தா கவி ரிஷிக்கு குடு, அவனுக்கு தான் மட்டன் குழம்பு ஸ்பெஷலா"

பின் அனைவருக்கும் கவி காபி குடுக்க, குடித்து கிளம்பி அஜு இல்லம் சென்றனர்.

யாது முதலில் சாப்பிட்டு விட்டு தான் மறுவேலை என்று சாப்பிட்டு கொண்டு இருந்தான். இருவரும் சாப்பிட்டு முடிக்க, படிக்க சென்று விட்டனர்.

காதல் வளரும் :purple_heart: