12. முதல் நீ.. முடிவும் நீ

12. முதல் நீ.. முடிவும் நீ
0

அஜு வீடு

யாது, அஜு, கவின் மூவரும் படிப்பில் கவனமாக இருந்தனர். மாலை நேரம் கவி வந்தாள்.

விஜி: " வா கவி, என்ன ஸ்கூல் இருந்து நேர வரியா?"

கவி: " ஆமா அத்தை, யாது அண்ணா எங்கே?"

விஜி: " உள்ள ரூமில் போய் பாரு மூணு பேரும் படிச்சுட்டு இருக்காங்க"

கவி சோகமாக இருந்தாள். தலை குனிந்து அவள் வாசலில் நிற்க, அங்கே முதலில் அமர்ந்து இருந்த கவின்,

கவின்: " வா கவி"

அவனின் அழைப்பில் அஜு நிமிர்ந்து பார்க்க, அவனும் அழைத்தான்.

கவி: " நான் இன்னிக்கி ஒரு c++ புரோகிராம் எழுதினேன். அதில் எதோ தப்பு, என்ன தப்புன்னு புரியல, நோட் தரேன் பார்த்து சொல்றீங்களா?"

அஜு: " குடு"

கவி குடுக்க, கவின் வாங்கி கொண்டான்.

கவி: " பார்த்து வைங்க நான் அப்புறம் வந்து வாங்கிட்டு போறேன்"

காவ்யா தலை குனித்தே அமர்ந்து இருந்தாள். தனக்கு முகம் காட்டாது இருக்கும் அவளை பார்க்க வேண்டி,

அஜு: " ஏய் கவி என்ன பாரு, (நிமிர்ந்தாள்) என்னாச்சு ஏன் உன் முகம் சரி இல்ல?"

கவி: " மிஸ் திட்டிடாங்க அதான்"

அஜு: " திட்டினதுக்கா உன் முகம் இப்படி வாடி இருக்கு? நீ குழந்தையா இதுக்கெல்லாம் போய் முகம் வாடி இருக்க?"

கவி: " அது… அது…"

கவி கண்களில் கண்ணீர் பெருக, அழுகையை அடக்கிக்கொண்டு எழுந்து சென்று விட்டாள்.

யாது: " ஏய், அவ அழுதுட்டு போற டா"

அஜு: " ஆமா, ரொம்ப முகம் வாடி போய் இருக்கு, என்னன்னு சொல்லாம போன எப்படி தெரியும்?"

கவின்: " அப்படி என்ன தப்பு பண்ணிட்டா திட்டி இருக்காங்க, இரு நோட் பார்த்தா தெரிய போகுது"

மூவரும் பார்த்தனர்,

யாது: " டேய் இது பொதுவா எல்லாருக்கும் வர சிண்டாக்ஸ் ஏறற் (syntax error) தான்."

அஜு: " இது வெறும் அன் டிக்ளேர் வெரியபில் ( un declared variable) "

கவின்: " இது சகஜம் தானே வரது? இதுக்கு போய் அழுக வெச்சு இருக்காங்க பாரு"

யாது: " கவி இதுக்கு எதுக்கு அழுகனும்?"

அஜு: " நோட் வாங்க வரணும் தானே, அப்போ பேசிப்போம்"

யாது : " சரி டா இங்க வாங்க இதை பார்ப்போம்"

கவின்: " எது பார்க்கணும்?"

யாது: " தகவல் அமைப்பு (Data structure) "

கவின்: " அதுக்குள்ள இவளோ வந்துடியா? டேய் அஜு நீ எங்க இருக்க?"

அஜு: “…”

கவின்: " டேய் உன்னை தான் சொல்லு"

யாது: " அவன் நினைப்பு இங்க இல்லை அவனை பாரு"

அஜு தலையில் கை வைத்து கண் மூடி அமர்ந்து இருந்தான்.

கவின்: " என்னாச்சு டா"

அஜு: " அவளை நான் தெரியாம அடிச்ச அப்போ கூட இப்படி முகம் சுருங்கி போகல, பந்தை தர மாட்டேன் சண்டை போட்டு இருக்கா, இன்னிக்கு முகமே வாடி போய் இருக்கு, எனக்கு ஏன்னு தெரியணும்"

யாது: " போ போய் கேட்டு வா, இல்லை நாங்களும் படிக்க முடியாது"

கவின்: " அப்போ நம்ம காபி ப்ரேக் போவோம்"

அஜு அவளின் நோட்டில் உள்ள பிழை திருத்தி எடுத்து சென்றான்.

அவன் கேட் திறக்கவும், பின்னே ரிஷியும் சரணும் உள்ளே வந்தனர்.

ரிஷி: " வா டா கையில் என்ன நோட்?"

அஜு: " கவி நோட் டா, நீ உள்ள வா"

அஜு உள்ளே சென்று, கவியை கேட்டான், அவள் அறையில் இருப்பதாய் சசி கூற, அவளை அழைக்கும் படி அஜு கூறினான்.

ரிஷி: " ஏய் குண்டூஸ் வெளிய வாடி"

சசி: " டேய் இன்னிக்கும் சண்டை கட்ட கூடாது"

சரண்: " எதுக்கு அஜய் அவளை கூப்பிட்டு இருக்க நீ?"

அஜு: " அவ அழுதுட்டு வந்துட்டா, அதான் என்னன்னு கேட்டு போக வந்தேன்"

ரிஷி: " அரிசி மூட்டை இன்னிக்கி ரொம்ப ஓவரா பண்ணுரளே"

சசி: " இரு நான் கூப்பிட்டு வரேன்"

சசி உள்ளே செல்ல, கவி மூலையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள்.
அவள் அம்மா பார்த்து அழுகை பெரிதாக,

சசி : " என்னாச்சு கண்ணு எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க?

சசியின் குரல் கேட்டு சரண் உள்ளே வர,

சரண்: " ஏன்மா அழுதுட்டு இருக்கா? அஜய் இங்க வா"

அஜய் உள்ளே வர அவள் குலுங்கி அழுது கொண்டு இருந்தாள். ரிஷியும் உள்ளே வந்து

ரிஷி: " என்ன ஆச்சு குண்டூஸ் எதுக்கு இப்போ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்க?

கவி: " ஆமா நான் குண்டு தான் என்ன இப்போ? அதையே சொல்லி சொல்லி கூப்பிட்டு என்னை அழ வைக்காத, என்கூட நீ பேச வேண்டாம், நான் தான் குண்டா இருக்கேனே எதுக்கு பேசுற? "

" சும்மா சும்மா அதே சொல்லிட்டு, என்ன இப்போ குண்டா இருக்கறது ரொம்ப பெரிய தப்பா? எதோ ஜந்து மாறி நடத்துறீங்க? ஒல்லியா இருந்தா தான் சக மனுஷியா பார்ப்பிங்க அப்படி தானே? ஒரு இட்லி சேர்த்து சாப்பிட கூடாது, எங்கையும் கொஞ்சம் நேரம் உக்கார கூடாது, சேர்த்து அரை மணி நேரம் தூங்க கூடாது, குண்டா இருந்தா முட்டாளா?"

" நீ பேட் தூக்கிட்டு போற விளையாட, நான்? உடல் உழைப்பே இல்ல, வாசல் தாண்ட கூடாது. ரோடுல நடக்க கூட விடமாட்டங்க, ஆனா என்னை மட்டும் கிண்டல் பண்றது."

கவி பேசி கதறி அழ, ரிஷியும் அழுது விட்டான்.

அஜு: " ஸ்கூலில் உங்க டீச்சர் என்ன சொன்னாங்க?"

கவி: " நான் முட்டாளம், எனக்கு எதும் வராதாம், சாப்பிட்டு நல்லா தூங்கு, எவனாவது தலையில் கட்டி வைப்பாங்க அங்க போய் இரு, இங்க வராத சொன்னாங்க"

" சோறு திண்ண மறக்கல தானே நீ? மூணு வேலையும் சரியா சாப்பிட தெரியுது, ஒரு நாலு வரி புரோகிராம் எழுத தெரியுதா?"

“தண்டம் உன்னை எல்லாம் எவனாவது பாவம் பார்த்து வாழ்க்கை குடுத்தா தான் உண்டு. எதுக்கும் திறமை இல்லாத பொண்ணு, என் கழுத்து அறுக்க வந்து இருக்கு, நல்லா சாப்பிட்டு நல்லா பெருத்து போன்னு சொன்னாங்க”

குண்டா இருக்கறது தப்பு இல்ல அவங்களும் மனுஷங்க தான். பிளீஸ் அவங்களையும் சகஜமா வாழ விடுங்க - மீ

கவி சொல்லி முடிக்க, சசி அவளை அணைத்து சமாதானம் செய்தார்.

கவி: " கிளாஸ் உள்ள எல்லாரும் என்னை ஒரு மாறி பார்த்தாங்க அம்மா, உடம்பு கூசி போய்டுச்சு, அவமானமா இருக்கு, குண்டா இருக்கறது தப்புன்னா என்னை கொன்னுடுங்க"

சரண்: " ஏய் யாரு உன் டீச்சர் சொல்லு, நான் அப்பா கூட போய் பேசிட்டு வரேன், என்ன பண்றேன் பாரு, உன் டீச்சர் சொன்னா எல்லாம் உண்மை ஆகிடுமா? கொன்னுருண்ணு சொல்லிட்டு இருக்க?"

அஜு: " அழாத நீ முதல, பார்க்கவே முடியல கவி, யார் என்ன சொன்ன என்ன நீ எங்களுக்கு அழகு தான். உன்கிட்ட எதும் குறை இல்ல, அழாத சொன்ன கேக்கணும், அம்மா அழுதுட்டு இருக்காங்க போதும் கவி"

கவி: " கூனி குறுகி போய்ட்டேன் தெரியுமா? அவ்ளோ அவமானமா இருந்துச்சு, மதியம் சாப்பிட முடியல, சாப்பிடாம இருந்தேன் என் பிரெண்ட்ஸ் கூட இன்னிக்கு என் பக்கத்துல வரல"

ரிஷி: " கவி விளையாட்டுக்கு தான் டி கூப்பிட்டேன் பிளீஸ் சாரி, சத்தியாம நீ இவளோ மனசில் காயப்பட்டு போய் இருப்பேன்னு நான் எதிர் பார்க்கல, அழாத கவி, அப்பா வரட்டும் கண்டிப்பா போவோம்"

விஜி: " கண்டிப்பா உன் டீச்சரை சும்மா விட கூடாது, சின்ன பொண்ணு கிட்ட என்ன எல்லாம் பேசுவா? சசி அண்ணா வந்தா சொல்லு, நாளைக்கு நம்ம கண்டிப்பா போறோம், என்னன்னு கேட்கிறோம்"

" கவி எழுந்தரி எழுந்து போய் முகம் கழுவு, அத்தை உனக்கு பழ பஜ்ஜி செஞ்சிட்டு வந்தேன், நீ வேண்டாம் சொன்னா அப்புறம் இவனுங்க எல்லாரும் காலி பண்ணிடுவாங்க போ"

கவி எழுந்து குளியல் அறை செல்ல,

விஜி: " சசி கொஞ்ச நாள் அவ கூட தூங்கு சரியா, போய் சாப்பாடு கொண்டு வா, மதியமும் சாப்பிடாம வந்து இருக்கா, வெறும் வயி்றில் பஜ்ஜி வேண்டாம். நான் சமாதானம் பண்றேன்"

சசி: " ஒரே பொண்ணு, அவ அப்பா இவ பிறந்ததும் அப்படி கொண்டாடினார். இதை எல்லாம் கேட்டாரு அந்த டீச்சரும் சரி ஸ்கூல் சரி ஒரு வழி பண்ணிட்டு தான் பார்ப்பாரு யாருன்னு, இவ அழுதலே ஆகாது அவருக்கு, இன்னிக்கி கொண்ணுரு சொல்லி அழுகுது, எவ்ளோ ரணப்பட்டு போய் இருக்கும் மனசு, எனக்கு அடி வயிறே வலிக்குது விஜி இவ அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ தெரில"

விஜி: " பார்க்கலாம் விடு, நான் இருக்கேன் நீங்க போங்க போய் அவங்க அவங்க வேலையை பாருங்க"

“அஜு நீ வீட்டுக்கு போ, யாது கவினும் உனக்கு தான் காத்து இருக்காங்க”

அஜு மனதில் பெரும் வலி, அவளை நெஞ்சோடு சேர்த்து ஆறுதல் செய்ய துடித்த கைகளையும் மனதையும் அடக்கி கொண்டு கிளம்பினான்.

அவன் வீடு வந்து சோர்ந்து போய் அறையின் உள்ளே சென்று கட்டிலில் விழுந்தான். அவன் கண்கள் முதல் முதலில் அவளுக்காக கண்ணீர் சிந்தியது.

காதல் வளரும் :purple_heart: