13. முதல் நீ.. முடிவும் நீ

13. முதல் நீ.. முடிவும் நீ
0

அவன் சென்றதை பார்த்து கொண்டு இருந்தா யாதுவும் கவினும் அறை உள்ளே வர அவன் முதுகு குலுங்கியது.

யாது: " டேய் அழறியா? கவின் இங்க வா, என்னாச்சு டா? கவி என்ன சொன்னா?"

கவின்: " என்னன்னு சொல்லிட்டு அழுடா"

அஜு அழுது கொண்டே விவரம் சொல்ல,

கவின்: " அதுக்கு இப்போ நீ ஏன் அழுகுற?"

அஜு: " என்னை கொன்னுடுங்க சொல்றாடா, எனக்கு உயிரே நின்னு போய்டுச்சு, எனக்கு அவளை அப்படி பார்க்கவே முடியல, எல்லாத்தையும் விட்டு குடுத்துருவா, யாரையும் காயப்படுத்த தெரியாது, எவ்ளோ நாள் குண்டூஸ் சொல்லி இருக்கேன் தெரியுமா, அவ அப்போ எல்லாம் அமைதி ஆயிடுவா டா, அவளுக்கு அது வலிச்சு இருக்கு எங்களுக்கு சொன்னதே இல்லை, இப்போ நினைச்சா கஷ்டமா இருக்கு அவளை நானும் காயப்படுத்தி இருக்கேன்"

யாது: " தெரிஞ்சா பண்ண? இல்லை தானே? விடு இப்போ கவி எங்க? அவளை இங்க கூப்பிட்டு வர சொல்லு நம்ம சிரிக்க வெப்போம், அவ எக்ஸம் எழுத வேண்டிய பொண்ணு இப்படி ஸ்ட்ரெஸ் ஆனா நல்லதுக்கு இல்லை"

கவின்: " யாது சொல்றது சரிடா, அம்மாக்கு போன் பண்ணு, கூப்பிட்டு வரட்டும்"

பின் கவியை அவர்கள் இல்லத்திற்கு அழைத்து வர, யாது சீரியஸாக பேச, கவின் சிரிப்பு காட்ட என்று நேரம் போனது. விஜி நாளை கல்யாணம் செல்ல வேண்டும் என்று அவருடைய புடவையை வாங்க சென்றுவிட்டார். தக்காளி தொக்கு செய்து விட்டு அஜுவை தோசை ஊற்றி சாப்பிட சொல்லி சென்றார்.

அஜு: " வெளிய போங்க டா, நான் கவி கூட பேசணும்"

யாது: " டேய், இப்போ தான் சமாதானம் ஆகி இருக்கா, திருப்பி அழுக வைக்காதே"

அஜு: " போ டா எனக்கு எல்லாம் தெரியும்"

கவின்: " வாடா மச்சான் போய்டுவோம், வேற எதாவது சொல்லிட போறான்."

அவர்கள் அறை விட்டு ஹால் செல்ல,

அஜு: " கவி இங்க வா"

கவி: " எதுக்கு?"

அஜு: " வாடி சொன்னா வரணும் கேள்வி கேக்க கூடாது"

கவி அவன் அறை உள்ளே வர, அஜு தலையில் கொட்டினான்.

அஜு: " லூசு என்ன விட்டு செத்து போக போறியா, இன்னொரு தடவை உன் வாயில் இப்படி வார்த்தை வந்தா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்."

கவி : " இது வேணாம் இந்த காதல் எனக்கு வேண்டாம், இப்போ நல்லா இருக்கும், கொஞ்ச நாள் போன நான் குண்டு சொல்லி உங்களுக்கு சலிப்பு வந்துடும்"

அஜு: " அடிக்க வேண்டாம் பாக்குறேன். என் பொண்டாட்டி டி நீ, இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க, உன் அழகு உன் மனசு தான். உடம்பு பார்த்து வர இது காமம் இல்ல காதல் புரியுதா? உன் உடம்பும் என் உடம்பும் ஒரு நாள் இல்லாம போய்டும், என் காதல் அது நான் செத்தாலும் உன்கூட தான் இருக்கும். லூசு மாறி எதாவது பேசின கன்னம் பளுத்துரும் சொல்லிட்டேன்."

கவி: " அப்போ நான் குண்டா இருந்தா பரவாயில்லையா? என் மேல எப்பவும் இதே காதலோட இருப்பீங்க தானே?"

அஜு: " நல்லா சாப்பிடு, யார் என்ன சொல்றாங்க பாக்குறேன். என் அம்முகுட்டி, அமுல் பேபி டி நீ உன்மேல காதல் தினம் அதிகம் தான் ஆகுது. மாமா நான் இருக்கேன். எதுக்கும் கவலை படாதே, நல்லா படி சரியா ? இப்போ படிக்க வேண்டிய தான் உனக்கும் எனக்கும் வேலை, படிக்கணும் அப்புறம் நல்ல வேலை அப்புறம் வீட்டில் சொல்லி கல்யாணம். அப்புறம் தான் இந்த காதல் எல்லாம், அதுவரை காத்து இருக்கணும் சரியா?"

கவி: " சரி மாமா "

அஜு கண் விரிய, முகம் எல்லாம் சிரிப்போடு,

அஜு: " ஹேய் என்ன சொன்ன? இன்னொரு தடவை சொல்லேன் பிளீஸ்"

கவி: " மாட்டேன், நான் கிளம்புறேன்"

அஜு அவள் கை பிடிக்க,

கவி: " விடுங்க மாமா வலிக்குது"

அஜு: " லவ் யூ டி அம்முகுட்டி"

சரியாய் கவின் அவன் அலைபேசி எடுக்க அறையின் உள்ளே வர,

கவின்: " என்னடா நடக்குது இங்க? என் தங்கச்சியா என்னடா பண்ற? டேய் யாது இங்க வா டா இவன் சேட்டை பண்றான்"

யாது: " என்ன பண்றீங்க அஜய்? கவி கையை விடுங்க இல்லை அடி விழும்"

கவி: " அண்ணா, நான் தான் தப்பு பண்ணேன், மாமா இல்ல"

அஜய் பின்னாடி நின்று கொண்டே காலர் தூக்கி விட, கவின் வாய் திறந்து பார்த்து கொண்டு நின்றான்.

யாது: " தப்பு பண்ணது நீ தானே? அப்போ இந்த தண்டனை உனக்கு தான்"

கவி: " சொல்லுங்க அண்ணா என்ன செய்யனும்"

யாது: " உன் மாமன் மண்டையில் ஒரு கொட்டு வை, அப்புறம் சன்டே உன் சமையல் தான் சரியா?"

கவி: " சமையல் சரி, கொட்டு எதுக்கு அண்ணா, தப்பு பண்ணது நான் தானே?"

யாது: " அப்போ நான் வைப்பேன்"

கவி: " இல்ல நான் வெக்குறேன்"

கவி அவன் தலையில் கொட்டினால் அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

கவின்: " கொட்டுன்னு சொன்னா தொட்டு பார்த்திட்டு வர, டேய் உனக்கு இப்படி ஒரு பொண்ணு அதிகம் தான்"

யாது: " சரி கவி, இனி உன்னை யார் எது சொன்னாலும் கவலை பட கூடாது சரியா? பேசற எல்லாருக்கும் ரியாக்ட் பண்ணனும் சொன்னா வெறும் ரியாக்ஷன்க்கு மட்டுமே வாழ்க்கை போய்டும். don’t feel low about yourself okay"

கவி: " சரி அண்ணா வரேன் நேரம் ஆச்சு"

கவி சென்று விட, யாதுவும் கவினும் அஜுவை கட்டி கொண்டனர்.

கவின்: " வாழ்த்துக்கள் மச்சி"

யாது: “கலக்கு மச்சி, ரொம்ப நல்ல பொண்ணு டா, பத்திரமா பார்த்துக்கோ, நீ சொன்னது ரொம்ப உண்மை எப்படி விட்டு தந்து போற பார், நீயும் அவளுக்கு எல்லாமே சிறப்பா தான் தரணும் சரியா?”

ரிஷி: " யாருக்கு என்ன சிறப்பா தரணும்?"

கவின்: " அதுவா, லேப் போன புரோகிராம் நல்லா செஞ்சு, சிறப்பா தரணும் யாது சொல்லிட்டு இருந்தான்."

அஜு: " என்ன டா இந்நேரம் இங்க விஜயம் பண்ணி இருக்க, என்ன விஷயம்?"

ரிஷி: " அந்த சுந்தர் சன்டே மேட்ச் வைக்கலாமா கேட்டு இருக்கான், ஒரு நாள் மேட்ச் போவோமா?"

யாது: " போவோம் ரிஷி"

கவின்: " அடேய் நீயா? நீயா இதெல்லாம் பேசுற? என் தங்கச்சி கூட விளையாடினேன் அதுக்கு என்கிட்ட சண்டை கட்டி கடைசியில் படிக்க அஜய் வீட்டுக்கு வந்தா, இப்போ நீ விளையாட போறியா? நான் விட மாட்டேன்"

அஜு: " கவின் வீட்டில் படிக்கடும் யாது, நம்ம போவோம்"

கவின்: " இல்ல நானும் வரேன்"

அஜு: " அப்போ மூடிட்டு வா, எதுக்கு இப்போ வசனம் பேசின?"

கவின்: " மதிப்பே இல்ல என் வார்த்தைக்கு, அஜு வா தோசை சுடு நான் சாப்பிட்டு கோபமா தூங்க போறேன்"

யாது: " கவின் மைண்ட் டைவர்ட் ஆக தான் டா, எதும் கோவமா?"

கவின்: " போலாம் டா, ரொம்ப நாள் ஆச்சு நான் விளையாடி, டச் இல்ல"

அஜு: " சரி ரிஷி, சுந்தர் கிட்ட சொல்லு சன்டே மேட்ச்"

ரிஷி: " சரி டா, சன்டே சாப்பிட வீட்டுக்கு வர சொன்னார் எல்லாரையும் அப்பா அதும் இருக்கு, அதுக்கும் தகுந்த மாதிரி பிளான் சொல்லு, அடுத்த வாரம் மூணு பெரும் கிளம்பி போய்டுவீங்க இல்லையா?"

அஜு: " சரி அரை நாள் மேட்ச் அப்புறம் லஞ்ச், அப்புறம் வந்து மீதி மேட்ச் சரியா?"

ரிஷி: " சரி மாப்பிளை கிளம்புறேன்"

ரிஷி தலை மறையவும் ,

யாது: " அவ மாமா சொல்றா, இவன் மாபிள்ளைனு சொல்றான், நடத்து டா நீ"

அஜு சிரித்து தோசை சுட சென்று விட்டான்.

"ரிஷிக்கு தெரியும் போது இருக்கு டி மாப்பிள்ளை உனக்கு - மீ"

காதல் வளரும் :purple_heart: