14. முதல் நீ.. முடிவும் நீ

14. முதல் நீ.. முடிவும் நீ
0

அடுத்த நாள் விசு பள்ளி சென்று பேச போக உடன் யாதுவும் அஜய்யும் சென்றனர். முதலில் ரிஷியும் சரணும் செல்வதாக தான் இருந்தது, அவர்களின் கோவம் கண்டு அவர்களை வீட்டில் விட்டு, அஜு - யாது இருவரும் சென்று பேசி விட்டு வர, பிரச்சனை எதும் இல்லாது சரி செய்து வந்தனர். விசுவிற்கு அஜய்யின் மேல் ஒரு நல்ல எண்ணம் வந்து இருந்தது.

அந்த வாரம் ஞாயிறு காலை,

அஜு, ரிஷி, உதீப், கவின், மற்றும் யாது என்று அனைவரும் கிளம்பி விளையாட சென்று இருந்தனர்.

காவ்யா படிக்க, புரோகிராம் செய்து பார்க்க என்று புது லேப்டாப் வாங்க காவ்யாவும் சரணும் சென்று இருந்தனர். அவர்கள் லேப்டாப் வாங்கி வரவும். இவர்கள் விளையாடி வரவும் சரியாய் இருந்தது.

அவரவர் அவரவர் இல்லத்தில் குளித்து உணவு உண்ண, ரிஷியின் இல்லம் வந்து இருந்தனர்.

விசு: " வாங்கப்பா, நல்லா இருக்கீங்களா? ரொம்ப வேலை அதான் பார்க்க நேரம் இல்லை இன்னிக்கி ஒரு நாள் வீட்டுக்கு தான் அதான் உங்களை இங்க சாப்பிட வர சொன்னேன். அதும் இல்லாம அஜய் இந்த வீட்டு பையன் அவன் ப்ரெண்ட்ஸ் வந்து நான் பேசாம கூட அனுப்பக்கூடாது இல்லையா? "

“அப்புறம் உங்க உதவிக்கு ரொம்ப நன்றி, ரிஷியும் சரணும் இருந்த கோபத்துக்கு அன்னிக்கு என்கூட வந்து இருந்தா பிரச்சனை வேற மாதிரி மாறி இருக்கும். நீங்க தான் சரி பண்ணி இருக்கீங்க இப்போ கவி முகத்தில் தெளிவு இருக்கு அதுக்கு எல்லாம் என்ன செய்றது தெரில, நீங்களும் ரிஷி, அஜு போல தான். எப்போ வேணாலும் வரலாம் எந்த உதவினாலும் கேக்கலாம்”

யாது: " ரொம்ப தாங்க்ஸ் அப்பா, எங்களை நம்பி கூப்பிட்டு போனதும் இல்லாம பேச சொல்லி நம்பிக்கை தந்தீங்க அதான் இதுக்கெல்லாம் காரணம். எங்க மேல நீங்க வெச்ச நம்பிக்கை தான் பெருசு இங்க, உங்க எல்லாரையும் பார்த்ததே சந்தோசம் எனக்கு"

கவின்: " பசிக்குதுப்பா"

விசு: " இதோ சாப்பிடலாம் கவின்"

அஜு: " சாப்பாட்டில் சரியா இரு நீ"

கவின்: " பசிக்குது டா, நான் பசி தாங்க மாட்டேன்"

யாது: " அவர் எவ்ளோ பாசமா பேசிட்டு இருந்தாரு லூசு"

கவின்: " சரிடா சரிடா சாப்பிடுவோம் வாங்க"

அனைவரும் உணவு உண்டு விட்டு வாசலில் அமர்ந்து இருக்க, கவி உணவு உண்ண வர, சசி பரிமாறி கொண்டு இருந்தார். அஜு தண்ணி குடிக்க வந்தான். கவியின் முகமே சரி இல்லை. அவளே அமர முடியாது அமர்ந்து இருந்தாள். தட்டில் சாப்பாடு வைத்து குழம்பு விடும் போது குமட்டி கொண்டு வர வாந்தி எடுத்தாள் அஜய் நொடியில் அதை கையில் வாங்கி இருந்தான்.

சசி: " என்ன ஆச்சு கவி"

சத்தம் கேட்டு சரண் வர, கவி வாந்தி எடுப்பதை பார்த்து அவள் தலையை பிடித்து கொண்டான். அவள் வாந்தி எடுத்து முடித்ததும் அவள் அறை சென்று படுத்து விட்டாள். சசி சென்று விவரம் அறிந்து சமையல் அறை சென்று விட்டார். அனைவருக்கும் குழப்பம் அவளுக்கு என்ன என்று,

சரண்: " அம்மா என்னாச்சு?"

சசி: " அம்மாகிட்ட நேத்து எண்ணெய் வாங்கி வைக்க சொன்னேன், அதை வாங்கிட்டு வா"

ரிஷி: " என்னாச்சு மா இப்படி வாந்தி எடுத்து இருக்கா, ஹாஸ்பிடல் போலாம்"

விசு அலைபேசியில் பேசி கொண்டு இருந்தவர் வந்து சசியிடம் விவரம் கேட்டு,

விசு: " ரிஷி நீ விளையாட போகலை?"

சரண்: " நான் கார் எடுக்கிறேன் ஹாஸ்பிடல் போலாம், கூப்பிடுங்க மா"

விசு: " அட ஒன்னும் இல்லை அவளுக்கு, வீட்டுக்கு தூரம் ஆகி இருக்கா, முதல் முறை அதான் வாடி போய் இருக்கு புள்ள, போங்க போய் வேலையை பாருங்க"

அனைவரும் அவரவர் வேலை பார்க்க, அஜு முன்னே வர, விஜி பின்னே வந்தார்.

விஜி: " நான் சொன்னேன் தானே சசி, முன்னாடி வந்து வாங்கிட்டு போன்னு, இப்போ பாரு, எங்க கவி? குடிக்க நிறைய தண்ணி குடு, அடி வயிற்றில் தடவி விடு, நான் சுடு தண்ணி வெச்சு எடுத்துட்டு வரேன்"

அஜு கவின் யாதுவிடம் விவரம் கேட்டு தெரிந்து கொண்டு நிம்மதி ஆனான்.

பின் அனைவரும் விளையாட கிளம்பி விட்டனர். மாலை வரை விளையாடி வீடு வந்து சென்றனர். அவர்கள் வந்து இரண்டு மணி நேரம் கழித்து சரணிடம் இருந்து அழைப்பு வந்தது.

அஜு: " சொல்லுங்க அண்ணா"

சரண்: " எப்போ டா, வருவீங்க வீட்டுக்கு? மணி என்ன?"

அஜு: " அண்ணா நாங்க…"

சரண்: " இந்த ரிஷி எங்கே? இன்னும் வீடு வரலை அப்பாவும் நானும் வெளியில் இருக்கோம், அவன் மொபைல் ஸ்விட்ச் ஆஃப், காவ்யா சாப்பாடு வாங்கனும் இவன் விளையாட்டு முக்கியம் நிக்கிறான்"

அஜு: " சரின்னா வந்துட்டோம்"

கவின்: " ரிஷியும் உதீபும் தான் ஒன்னா போனாங்க"

அஜு: " கவி இப்போ என்ன சாப்பிடலாம், அவளுக்கு சாப்பாடு வாங்கிட்டு ரிஷி எங்க கேட்டுட்டு வரேன்"

விஜி: " இட்லி சாம்பார் வாங்கு, சட்னி வேண்டாம் சரியா?"

யாது உண்டு உறங்கி இருக்க, கவினும் அஜுவும் சென்றனர்.

அஜு உணவு வாங்கி விட்டு வர, கவின் வேடிக்கை பார்த்து கொண்டு நின்று இருந்தான். உதீப் எதிரில் உள்ள ஒயின் ஷாப் இருந்து வெளியில் வர, ரிஷியும் வந்தான்.

கவின் பார்த்துவிட்டு அஜய்யிடம் சொல்ல, அஜய் கோவம் பெருக, அவன் முன் சென்று நின்றான்.
அவனை எதிர்ப்பார்க்காத ரிஷிக்கு தூக்கி வாரி போட்டது.

அஜு: " என்ன பண்ணிட்டு இருக்க?"

ரிஷி: " அது பீர் குடிக்க வந்தோம்"

அவன் வார்த்தை முடியும் முன்னே அஜு அடித்து இருந்தான்.

உதீப்: " எதுக்கு அடிக்கிற? என்ன தப்பு இப்போ?"

அஜு: " டேய் உதீப் கொல்ல போறேன் பாரு, என்ன பழக்கம் இது? யார் சொல்லி தந்தா?"

அவனுக்கும் ஒரு அடி கொடுத்தான். உதீப் திருப்பி அடிக்க வர, அதை கவின் தடுக்க, அஜு மீண்டும் உதீப்பை அடிக்க, ரிஷியும் கவினும் தடுத்தனர் .

உதீப்: " நீ யாருடா என்னை அடிக்க, இது என் இஷ்டம், உன்னை யாரும் இங்க கூப்பிடல போ"

அஜு: " டேய் என்ன பேசிட்டு இருக்க நீ? உனக்கு அறிவு மழுங்கி போய்டுச்சா ?"

உதீப்: " எனக்கு அறிவு மழுங்கி போகல, நானும் ரிஷியும் சேர கூடாது இல்லையா? அதுக்கு தானே நீ நல்லவன் மாதிரி நாடகம் போட்டு இருக்க "

அஜு: " நீ போதையில் தேவை இல்லாம ரொம்ப பேசுறா, என்கிட்ட நல்லா வாங்கிட்டு தான் போக போற, உங்களை வீட்டில் நம்பி வெளியில் அனுப்பினா இப்படி பண்ணிட்டு இருக்கீங்க?"

பின் பேசி பேசி சண்டை பெரிதாக, பயந்து போன கவின் சரணுக்கு அழைத்தான்.

காதல் வளரும் :purple_heart: